ஒன்றுபட்ட இதயமே - 4
...... வேண்டியவர் பார்வையில் வேண்டாமல் போக வேண்டியே சிக்கினாள்….
ராமனை நெருங்கியவள் அவன் காதில் "நாம நம்ம ப்ளேஸ்க்கு போனா சொல்றேன்…." என்றாள்;
கண்டிக்கும் விதமாக "குட்டிமா… வா வீட்டுக்கு போகலாம்" என்றவனை கிஞ்சித்தும் மதியாமல்
அவன் கையில் இருந்த பைக் சாவியை பிடிங்கிக் கொண்டு, "உடு ஜுட்…. என்று கத்திக் கொண்டே ஓடினாள்".
அவள் அலப்பறைகளை எல்லாம் இதுவரையில் பொறுத்தவனை அவனது மனசாட்சி சின்னு, ‘இவ
கெஞ்சினால் மிஞ்சுவாள் மிஞ்சினால் கெஞ்சுவாள்’ என எடுத்து கொடுக்க;
நின்ற இடத்திலிருந்தே கடினப்பட்டு போன குரலில் "ராணி…" எனவும், அவன் தொனியில் அடுத்த
நொடி முகத்தை முழ நீளத்திற்கு நீட்டிக் கொண்டு, இரண்டு காலையும் தொம் தொம் என்று உயர்த்தி இறக்கி அடி மேல் அடி வைத்து வந்து தன் கையில் இருக்கும் சாவியை நீட்டினாள்.
நீண்ட சாவியை கைப்பற்றியவன், பைக்கை ஸ்டார்ட் செய்து, உறும விட, அமைதியாக வண்டியில்
ஏறி பிடிமானம் அற்று அமர்ந்தாள்.
அவள் அமர்ந்த அடுத்த நொடி, பின்னால் கை உயர்த்தி தன் அன்பு குட்டிமாவின் தலை பற்றி “உற்ற
தோழி உயிர்ப்பற்று இருக்க உடையாதோ எந்தன் இதயம்” – என்றான் அன்புள்ளம் கொண்டவன்.
சிறிது நேரம் உயிர்ப்பற்று இருபதையே தாங்க இயலாதவன், தானே அவளை உயிர் பற்றுஅற்று
போகச் செய்வான் என்று நினைத்திருப்பானோ!!!
-ராமனின் நிலை அறிந்தமையால், 'அவன் முதிகில் நாலு அடி போட்டு கொண்டே', "சாரதியே என்
சரிபாதியை சரி பார்க்க நீவிர் வேண்டும் என்பதால் உம்மை மன்னித்தோம், மறந்தோம்" என்று சிரித்தாள்.
எளிதாய் மன்னித்தோம்; மறந்தோம் என்றவள், மன்னிக்கவும் முடியாமல், மறக்கவும் முடியாமல்,
ஏன் மரிக்கவும் கூட முடியாமல் மருகும் நாள் தொலைவில் இல்லை என்பதை அறிவாளோ!!!
விழியெடுக்காமல், குரோதம் பொங்க அங்கு நடந்ததையே பார்த்துக் கொண்டிருந்த இருவிழிகள்;
அருவெறுப்பில் முகம் சுளித்தது.
சினுங்களாய், "குட்டிமா வலிக்குது" என்றவனும் 'சமாதானம் ஆகிவிட்டாள்' என்று வண்டியை
கிளப்பி வீட்டை நோக்கி விரட்டினான்.
********-------*******------
வீட்டின் தெரு முனையிலேயே வண்டியை நிறுத்தியவன், குட்டிமாவுடன் வண்டியை
தள்ளிக்கொண்டு வீட்டை அடைந்தான்.
உறக்கம் பிடிக்காமல் வீட்டினர் அனைவரும் சின்னுவின் வீட்டில் அமர்ந்திருக்க, அவர்கள் மத்தியில்
சந்தடி செய்யாமல், யாருக்கும் சந்தேகமும் வராமல், குட்டிமாவின் வீட்டில் நுழைந்தவன்;
முன் ஜாக்கிரதை முத்தன்னாவாய் ஃபோன்ஐ சைலேண்ட் மோடில் இட்டு விட்டு, சின்னுவின் வீட்டை
அடைந்தனர் தங்களது பிரத்தியேக ரகசிய வழியில்.
வீட்டை அடைந்தாலும் உடனே வெளியில் வராமல், அரங்கேற்ற பட இருக்கும் நாடகத்திற்கு
தன்னை தானே தயார் செய்து கொண்டு வெளியில் வந்தான் சின்னு.
அவன் வெளியில் வந்தது தான் தாமதம், என்னும் விதமாக
"ராமு குட்டிமா எங்க?" - பாரதி
"ராமு வாலு எங்க?" - அரசி
"ராமு மங்காத்தா எங்க?"- சரசு
தன்னை சுற்றி எட்டுத்திக்கும் ஒலிக்கும் 'எங்கே!!!!? எங்கே!!!!? எங்கே!!!!?' எனும் சத்தம் கேட்டு
ஒன்றும் புரியாதவனை போல் முக பாவத்தை மாற்றி,
"கு… ட்…. டி…. மா! எங்க! யா!!!?" என்றான் குழப்பத்தில்….
'எப்பா இது உலக மகா நடிப்பு டா சாமி!!!!' - அவன் மனசாட்சி அவனை காறி துப்ப அதை உடப்பில்
போட்டு விட்டு நடப்புக்கு வந்தான்
அப்பொழுதும் கடுப்புடன் "உன் ஃபோன் எங்கே?" என்றார் மணி
"ரூம்ல இருக்கு ப்பா" என்றவனை எரிப்பது போல் பார்த்து "ஃபோன் அடிச்சா எடுக்க மாட்டியா?" எனவும்
அவர்கள் வீட்டின் ட்ராயிங்க் ரூம் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.
இதுக்கு மேல போனா சேதாரம் ஜாஸ்தி என்று பாவம் பார்த்த ராணி தான் சின்னுவின் ஃபோனை
கையில் எடுத்து, சோம்பல் முறித்துக் கொண்டே ரூமில் இருந்து வெளியில் வந்தாள்.
வந்தவள் வெளியில் இருப்பவர்களை பார்த்தவுடன் “என்ன விட்டுட்டு என்ன பண்றீங்க"
என்றவாறே… "சின்னு உன் ஃபோன் அடிச்சு என் தூக்கத்தை கெடுத்துடுச்சு” என்று நீட்டினாள்.
அவளை பார்த்ததும் பதற்றம் குறைந்தவர்கள், ஆசுவாச பட்டுக்க;
சரசு மட்டும் "எல்லாரும் தூக்கத்தை உட்டுபுட்டு, வயத்துல நெருப்ப கட்டிக்கிட்டு, நாம இங்க
பதச்சிக்கிட்டு இருந்தா; தூங்கி எழுந்து சாவதானமா வந்ததும் இல்லாம, நட்டநடு ராத்திரில என்ன பண்றீங்கனு ஒரு கேள்வி வேற", நொடித்துக் கொண்டார்.
ஆம் அவர் நொடித்து கொள்ள மட்டும் தான் முடியும், அதையும் மீறி அவர் அவளை அடிக்க கையை
ஓங்கினாலே தீர்த்துக் கட்ட படுவார்.
தவறுகள் கண்டிக்க மட்டும் தானே தவிற தண்டிக்க கூடாது எனும் குடும்பத்தவர்கள்.
பாவம் அவர் அறிந்த மட்டும் ‘அடியா மாடு படியாது’ என்பதே
பற்பல பழமொழி கேட்டும், இம் என்றாலும், உம் என்றாலும் அடி பட்டும், இடி பட்டும் வளர்ந்தவர். எனவே அவர் அதை பிரயோகிக்க நினைக்க முதல் முறை எனும் போதே கடைசி முறை ஆக்கிவிட்டனர் அன்பு வழியில் நம்பிக்கை கொண்ட அக்குடும்பத்து பெரியவர்கள்
யாரும் அறியா வண்ணம் “ஹ்ம்ம்ம்ம்” என்று பெருமூச்சு விட்ட சின்னுவை பார்த்துக் கொண்டே,
ராணி "பசிக்குது" எனவும் சாப்பாட்டுக் கடையை மாடிக்கு மாற்றினர்.
கவலை நீங்கி கலகலத்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள் தம் தம் அறைக்கு தூங்க
சென்றனர்.
எல்லோரும் கலைந்து செல்லவும் வழமை போல் ட்ராயிங்க் ரூம் சென்றனர் ராணியும் ராமனும்.
ராமன் அறையினுள் நுழைந்தவள் கரம் பற்ற, அவன் கரத்தை அவள் பற்றி பின் வழியாய் மாடி
ஏறினர்.
மாடி ஏறிய அடுத்த நொடி "உன் பொறுமையை சோதிச்சது போதும்",
"சோ ஹியர் கம்ஸ் ராணிஸ் கிரியேஷன்ஸில் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்து வழங்கும்
'சிதறியது சிதறு தேங்காய்'", என்று புதுப்பட அறிவிப்பாளர் போல் அறிவித்தாள்.
மேற்கூறியவற்றை சொன்னவள் அதனை தெடர்ந்து "நம்ம ரட்சன்யாக்கு பேய் னா பயம்னு தெரிஞ்சிகிட்டு அவள பயப்படுத்தி இந்த காலேஜிலிருந்தே போக வைக்க, கெமிஸ்ட்ரி லேப்ல தூக்கு போட்டு செத்துபோன சாந்தியோட ஆத்மா சாந்தி அடையாம அங்க அலையறதாவும்; அப்பாவி பொண்ணுங்கள காவு வாங்கிறதாவும்… சொல்லி இருக்கானுங்க…"
"அத அவ எங்கிட்ட கேட்டா",
"நானும் இதெல்லாம் சகஜம், சீனியர்ஸ் சும்மா விளையாடுறாங்க… அப்பிடி எதுவும் இல்லனு சொல்லி சமாதானம் பண்ணி அனுப்பிட்டேன்".
"ஆனா அந்த லூசு இதையே நினைச்சுகிட்டு படுத்திருக்கும் போல கனவெல்லாம் யாரோ ஒரு சாந்தி - சாந்தி கேட்டு வந்துச்சுனு அடுத்த நாள் புலம்புனா";
"அப்பவும் இது ஒன்னும் இல்லனு தைரியம் சொன்னேன்".
"இன்னைக்கு பார்த்தா பெட்டி படுக்கையோட கண் சிவந்து முகம் வீங்கி நடுநடுங்கி போனவளா
வீட்டுக்கு போறேன்னு நிக்குறா!!"
"அவள பார்க்க பாவமா இருந்துச்சா, அதான் அவள கூட்டிக்கிட்டு யார் உனக்கு இந்த சங்கதிய சொன்னதுன்னு விசாரிச்சு அவங்க வாயலேயே இல்லனு நிருபிக்கிறேனும், நிருபிச்சா உனக்கு சந்தோஷமானும் கேட்டு கூட்டிட்டு போனேன்."
"ஆனா அவங்க எல்லாம் ரொம்ப மோசம் சின்னு, ஒரு புள்ள இவ்ளோ பயந்திருக்கே, அவள
சமாதானம் பண்ணலாம் னு நினைக்காம கலாய்க்கிறாங்க." என வருந்தினாள்.
"இவ மட்டும் தான் இப்படினு நெனைச்சா, இது இவளோட மட்டும் முடியாம நிறைய பேர மிரட்டி
வெச்சிருக்கானுங்க…."
"ஒருத்தி என்னடான்னா அவனுங்களுக்கு சலாம் போடுறா, இன்னொருத்தி என்னடான்னா
வக்கனையா சாப்பாடு கொடுக்குறா, இதுல ஹைலைட்டு என்னன்னா ஒரு பையனும் சேர்த்தி!! அவன் என்னடான்னா இவனுங்களுக்கு தம்மு வாங்கி வந்திருக்கான்".
"அதான் வந்த கோபத்துக்கு அங்க அப்படி ஒன்னும் இல்லனு ப்புருவ் பண்ணா இங்க இருக்கிறதிற்கு
உனக்கு ஒன்னும் இல்லையேனு கேட்டேன்?"
"கேட்டதும் அந்த குருவி கூட்டு தலையன் என்ன பார்த்து கைய காமிச்சுக்கிட்டே சாந்தி… சாந்தி தற
சமர்பணம் செய்யிறோம் னு பில்டப்பு குடுக்குறான்…"
அப்போ தான் அந்த சரவணன், ஓ! அவ்வளவு தைரியசாலியா நீ!! ஜான்சிக்கு ராணி வந்திருக்காங்க
பாருங்கனு!!! சொல்லி கிண்டல் பண்ணான்…
"அது மட்டுமில்லாமல் என் கையிலிருந்த வாட்ச கழட்டிக்கிட்டே தைரியசாலினா சாந்திக்கு ரொம்ப
பிடிக்கும்…; சோ நீ என்ன பண்ற நட்டநடு நிசில சுடுகாட்டு மண்ண எடுத்துகிட்டு வந்து கெமிஸ்ட்ரி லேப்ல இருக்க பத்தாம் நம்பர் டேபிள்ல வச்சிட்டு, உன் வாட்ச எடுத்துட்டு வந்தா நாளைல இருந்து நோ ரேகிங்க்; இல்லனா தினமும் இவ வந்து எங்க கால்ல விழுந்து மண்ணிப்பு கேட்டுட்டு தான் படிக்க போகனும்னு சொன்னான்."
இப்படி சொன்னவளை யோசனையுடன் பார்த்த ராமனை கண்டு, "எனக்கும் அதே சந்தேகம்
தான், அதனால நானும் அவன பார்த்தேன்",
உடனே அந்த குருவி கூட்டு தலையன் - பாண்டி ஏளனமாய் சிரிச்சிக்கிட்டே "இவள ஏன் வந்து மண்ணிப்பு கேட்க வரச் சொன்னான்னு பாக்கிறியா; நீதான் சமாதி அடைய போறியே அதான்…. அப்படிங்குறான்…"
"எனக்கு வந்ததே கோபம்… என்று குரலை உயர்த்தியவள், நாம யாருன்னு அவனுங்களுக்கு காட்ட வேண்டாம்; அதான் நானா நீயானு ஒரு கை பார்த்துடலாம்னு," சொல்லும் போதே அவன் முகம் கடுகடுத்ததில் "களத்துல குதிச்சிட்டேன்…. "என்றவளின் குரல் ஆழ் கிணற்றுக்குள் இருந்து வருவது போல் வந்தது.
நம்ம வீரத்த பார் போற்ற வேண்டுமே, தரணி போற்ற வேண்டுமே என்றெல்லாம் நினைக்கல
சின்னு… ரட்சண்யா படிப்பு ரட்சிக்க படணும்கிற மேலான நோக்கத்திற்கு தான் சின்னு", என்று வக்கியத்திற்கு ஒரு சின்னு போட்டாள்.
"ம்ம்ம்ம்" என்று மட்டும் ஒலி எழுப்பியவன், மேலே சொல்லுமாறு சைகை செய்ய; அவளும் விட்ட
இடத்தில் இருந்து தொடங்கினாள்.
"அக்ட்சுவலா நான் என் வாட்ஸ் ஆப்ல லொக்கேஷன் ஷேர் பண்ண ஆன் பண்ணிட்டு அந்த
சுடுகாட்டுக்கு போனேன்… பயப்படுற அளவுக்கு அந்த இடம் பயமா எல்லாம் இல்ல சின்னு, அங்கிருந்து கைப்பிடி மண் எடுத்துகிட்டு வெளிய வந்தா இரண்டு தடித்தாண்டவராயனுங்க!!! தடியோட நிக்குறானுங்க"
"இட் வாஸ் சோ ஃபிஷி… அதனால நான் லொக்கேஷன் ஷேரிங்கை சுடுகாட்டுக் உள்ள போனவுடனே ஸ்டாப் பண்ணிட்டு, பின் வழியா வெளிய வந்துட்டேன்."
"பட் அந்த வழி கொஞ்சம் தூரம் அதனால தான் நான் லேட்"
"‘ராணி… கம்மிங்க் பிட் லேட் இஸ் நாட் அ ப்ராப்ளம் பட் பிகமிங்க் லேட். ராணி ஒன்ஸ் ஃபார் ஆல் இஸ் அ பிராப்ளம்’ "என்னும் விதத்தில் முறைக்க;
அவனை பார்த்து கெஞ்சுவது போல் முகத்தை வைத்து கொண்டு,
"கெமிஸ்ட்ரி லேப்ல இருக்க பத்தாம் நம்பர் டேபிளுக்கு வந்து மண் வைக்க வந்தா அந்த இடதுல ஒரு
பொம்மைய கட்டி தொங்க விட்டிருந்தானுங்க பைத்தியக் காரனுங்க. அந்த பொம்மை கையில் இருந்து என் வாட்ச் ச கழற்றி எடுத்து கொண்டு,"
"இங்க வந்து பாத்தா, இந்த கொசு தொல்லைய தாங்க முடில…" என்று அந்த பாண்டி பண்ண கூத்தை
நினைவு கூர்ந்தாள்;
"அதான் அவனையும் சரி அவன் தலையையும் சரி விட கூடாதுனு அவங்கள சந்தோஷத்துல மிதக்க
விட்டு என்பதை சொல்லும் போது தலையை பின் புறமாக சாய்த்து கையை குடிப்பது போல் அபிநயம் பிடித்து காண்பித்தவள், அவன் வீட்டுக்கு போய் பேய் வேஷங்கட்டி வேர்த்து விறுவிறுக்க வெச்சிட்டோம்…" என்று ஆர்ப்பரித்தாள்.
"சும்மா சொல்லக் கூடாது சின்னு அந்த பாண்டி பயல் இருக்கான் பாரு, ஊள உதார் விட்டுகிட்டு,
உதயமே நாங்க தான்னு" சீன போட்டுக்கிட்டு சுத்துது என சிரித்தாள்.
"சிரித்துக் கொண்டிருந்தவள் திடீர் என்று அங்கிருந்த பாட்டிலில் இருந்து தண்ணீர் எடுத்து முகம்
முழுவதும் தெளித்து கொண்டு தள்ளாடிய வண்ணம் நின்றவள் தலையை சிலுப்பிக் கொண்டு ஹாஹ் ஹாஹ் ஹா ஹாஹா என்று சிரித்தவாறே, சொன்னா கேட்டா தானே… இந்த சரவணன் கிட்ட மோதினா சும்மா விடுவானா… இப்ப பாரு அல்பாயுசுல போயிட்டியே னு சொன்னானா"
நானும் "நானே வருவேன் இங்கும் அங்கும் னுது தான் தாமதம் கல்லெறிய பட்ட காக்காய் கூட்டமாய்
சிதறி ஓடிட்டான் அந்த பாண்டி… இந்த லூசு அப்படியே நீ… நீ… நீ… னு மயங்கிட்டான் இடியட்." என்று உடையல் பாதி வருத்தம் மீதியாய் பகிர்ந்தாள்.
"அதுக்கு அப்புறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே" என்றவள் கை மறைவில் ஒரு கொட்டாவியை
வெளியேற்றி தன் அசதியை பறைசாற்றினால். 'கேடி உனக்கு கிடைக்க போகும் திட்டிலிருந்து தப்பிக்க என்ன எல்லாம் திட்டம் போடுற என இடித்துரைத்தது'.
"கதை கதையாய் காரணமாம் என்ற நீண்ட கதையை கேட்டவன் ஒரு வார்த்தையையும் பேசாமல் வலியுடன் கூடிய பார்வை ஒன்றை அவள் மீது வீசி சென்றான்…"
இணக்கமாக சென்றானா? இறுக்கமாக சென்றானா?
ரெண்டுபடும்….