All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

தாமரை

தாமரை
Petrorgal evlokandippaga irundhalum pillaigalin indha matrathirkku karanam samugam. School laye eduthukkonga matra pillaigalai parthu ivanukkum aasai varum.Adhu avargal vazhkai maruvadharku paadhai amaikkum.pillaigal thavaru seidhu petroridam Matti kondal solli thirutha vendum.sol pechu kettkum kuzhaindhagal endral ok illai endral ?..good touch ,bad touch pen pillaigalai Vida aan pillaigalukku solli kudukka vendum...
அருமையான கருத்து பதிவு👌👌
 

தாமரை

தாமரை
இன்றைய குழந்தைகளின் மனமுதிர்ச்சிக்கு காரணம் என்று எடுத்து கொண்டால் சமூகம்,பெற்றோர் இருவருக்கும் பங்கு இருக்கிறது..ஆனால் முக்கிய பிரச்சனை அதுவல்ல!!குழந்தைகளின் இந்த மனமுதிர்ச்சியை சரியான வழியில் எப்படி கொண்டு செல்வது என்பதே ஆகும்..குழந்தைகளின் மனமுதிர்ச்சி நாணயத்தின் இருபக்கங்களை போன்றது..அதில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு...இன்றைய உலகம் போட்டி நிறைந்தது...அதில் சமாளித்து வெற்றி அடைய இத்தகைய மனமுதிர்ச்சி தேவையான ஒன்றே...அதே போல் குழந்தைகளுக்கு ஏதிரான பாலியல் வன்கொடுமை ஏராளாம்!!அவற்றை சமாளிக்க மனமுதிர்ச்சி தேவை...மனமுதிர்ச்சியை சரியான முறையில் பண் செய்வதே பெற்றோர் சமூகத்தின் கடமை..
super👏👏👏👏👏👏💐💐💐💐
 

Priyam

Well-known member
ஹாய் friends....... நான் Mrida Mohan

இன்றைய குழந்தைகள் கெட்டு போவதற்கு பெற்றோர் காரணமா? சமூகம் காரணமா? என்னை கேட்டா ரெண்டுமே தான் நான் சொல்லுவேன்....

First one பெற்றோர் ~ எந்த குழந்தையும் அவங்களா வந்து மொபைல் குடுங்க, டிவில கார்ட்டூன் போடுங்க பாக்கணும்னு கேக்கறது இல்லை...... பெற்றோர் தான் குழந்தைகளுக்கு இதை பழக்குவதே, ஏன்னா அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம இருக்கணும்னா குழந்தைங்க கவனத்தை வேற பக்கம் திருப்பனும் அதுக்காக மொபைல்ல கேம்ஸ் கொடுக்கறாங்க, டிவில கார்ட்டூன் பாக்க சொல்றாங்க......... அதே மாதிரி பெற்றோர் தான் குழந்தை வளர வளர நீ நல்லா படிச்சி first மார்க் எடுத்தாலோ இல்லை குறிப்பிட்ட சதவிகிதம் சொல்லி அந்த அளவு மார்க் எடுத்தாலோ நான் உனக்கு கம்ப்யூட்டர் வாங்கி தரேன், நீ கேக்கற மாடல் மொபைல் வாங்கி தரேன்னு சொல்றது....... அப்போ இதில் தவறு பெற்றோரோடது குழந்தைங்க மனசுல ஆசைய விதைக்கறோம், முதல் தடவை தான் பெற்றோர் இதை சொல்லுவாங்க, ஆனா குழந்தைங்க அடுத்தடுத்து இதை எதிர்பாக்கறாங்க அடுத்த முறை பெற்றோர் சொல்ல வேண்டியது இல்லை குழந்தைங்க நான் இவ்ளோ மார்க் எடுக்கறேன் நீங்க எனக்கு இதை வாங்கி குடுத்தே ஆகணும்னு டிமாண்ட் பண்ணுவாங்க so முதல் தவறு பெற்றோரோடது....... அதே மாதிரி அவங்க என்ன பன்றாங்க யாரோட பழகறாங்க இதை எதையும் கவனிக்க நெறைய பெற்றோர் தவறிடறாங்க இதனால சைல்ட் abuse நடக்குது.........குழந்தைங்ககிட்ட பேசறதுக்கே டைம் இல்லைன்னு சொல்ற நெறய parents இருக்காங்க....... பணம் சம்பாதிக்கணும் yeah ரைட் சம்பாதிக்கணும், ஆனா யாருக்காக சம்பாதிக்கறோமோ அவங்களையே கவனிக்க முடியாட்டி அவங்களோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாட்டி எவ்வளவு சம்பாதிச்சாலும் என்னை பொறுத்தவரை வேஸ்ட்.......

செகண்ட் one சமூகம் ~ மீடியா, நியூஸ் பேப்பர் எல்லா இடங்கள்லயும் தேவை இல்லாத விளம்பரங்கள்.... உதாரணத்துக்கு நான் youtube ல குக்கிங் ரெஸிபி பாப்பேன் ஆனா அந்த வீடியோ ஸ்டார்ட் ஆகறதுக்கு முன்ன musically app promo போகும் இல்லாட்டி zomato(இது ஒரு உதாரணம் தான் ஆனா condom ad கூட வரும்) இதோட advertisement போட்டுட்டு தான் நாம பாக்க வேண்டிய வீடியோ வரும், இது இன்டர்நெட்ல.......ஆனா இப்போல்லாம் டிவில வர்ற விளம்பரங்களையே குடும்பத்தோட உக்காந்து டிவி பாக்கும் போது பாக்க முடியல அவ்ளோ மோசமா எடுக்கறாங்க....... இதெல்லாம் யாரோட தவறு?? பெற்றோர் தவறா? இல்லை சமுதாயத்தின் தவறா?

நல்லதொரு மாற்றம் வீட்டில் இருந்து தான் ஆரம்பிக்கணும்........
தனி ஒரு மனிதன் ஒழுக்கமா இருந்தா சமூகம் சரியாவே இருக்கும் எதிர்கால குழந்தைக்களோட வளர்ச்சியும் ஆரோக்கியமா இருக்கும்
 

தாமரை

தாமரை
தனி மனித ஒழுக்கமும் ஒழுங்கும் தேவை .... யார் அறிவுருத்தினாலும் சரியானதை அறிவுருத்த...பெரியவர்கள் தெளிவாக இருந்தால் பிழைகள் பல குறையும்... போகும் வழி தெரிந்து பயணிக்க வேண்டும்...வழிகாட்டியாய் வருபவன்... இந்த சமுகமே வழி காட்டி... ஆரோக்கியமான் சமுதாயத்திற்கு அறிவான வாழிகாட்டி தேவை...
நாளை சமுதாயம் நல் சமுதாயமாக அமைய அஸ்திவாரம் ஆழமாக இருக்க வேண்டும் .... ஆட்ட கண்ட கட்டிடம் கட்டி அதில் குடியிருப்பவர்களை சொல்லி பயனில்லை...
தோன்றியதை கூறினேன் தோழமைகளே ... கண்ணோட்டங்களும் கருத்துகளும் மாறலாம்...வாழ்க்கை பாதை செம்மையாக அமைய சிறந்த சமுதாயம் தேவை என் கருத்தை நான் பலமாக பதிவிடுகின்றேன்...
ஹா ஹா வாசும்மா...

அழுத்தமான பதிவு...அனைத்தும் முக்கியம் என சொல்வதாக👌👌👌
 

preti

Well-known member
இன்றைய பெற்றோருக்கு தான் கடமையையும் பொறுப்பும் அதிகம் இருக்கிறது.
சமுகம் என்பது நாம் தான் நம்மால் இந்த சமூகம் பாதிக்க பட கூடாது.
நல்லதோ கெட்டதோ குழந்தைகள் அதை வீட்டிற்கு வெளியே தெரிந்து கொள்ளுவது தான் ஆபத்தை விளைவிக்கும்.
அதனால் அது சொல்லித் தரும் இடம் முதலில் வருவது வீடு தான்.....
அவங்க நம்மிடம் கேட்கும் எந்த அபத்தமான கேள்வியாக இருந்தாலும் நாம் பொறுமையாக அதை பற்றிய தெளிவை அவங்களுக்கு புரிய வைத்தால் போதும்.
அதே போல் நல்ல விஷயங்களை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும்.
குழந்தைகள் தங்கள் கடமையை செய்ய ஊக்கிவிக்க வேண்டும் அல்லாது இதை செய்தால் இது வாங்கி தருவேன் என அவர்கள் கடமையை முடிக்க நாமே பேரம் பேசுதல் கூடாது.
அதே மாதிரி பணிந்து போக கற்றுக் கொடுக்க வேண்டும்.
பெரியவர் சிறியவர் என அனைவரிடமும் அன்பாக இருக்க நாம் நம் உறவுகளை பலப்படுத்த வேண்டும்.
இன்றைய குழந்தை என்றுமே நம்மை விட அறிவும் சிந்திக்கும் திறனும் அதிகம் எனவே அவர்களை பேச விட்டு அவர்களுடன் நட்பாக இருந்தாலே அவர்கள் தவறினை நாம் அடையாள படுத்தி திருத்த முடியும்.
அவர்கள் அதிகம் இருக்கும் நட்பு வட்டத்தில் நாமும் நட்பாக தொடரலாம் அது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.
என்றென்றால் நம்மை விட வயது சிறிய பிள்ளைகளிடம் விளையாட்டாக பேசும் போது சில நேரங்களில் நமக்கே என்னடா எனத் தோன்றும் ஆனால் பிள்ளைகளின் எதிர்காலம் என வரும் போது நாம ரிஸ்க் எடுக்க தயங்க மாட்டோம் அதே போல் அந்த பிள்ளைகளும் நம்மிடம் நெருங்க அவர்களுக்கு நம்மால் பாதுகாப்பு தர முடியும்.
இப்போ இருக்கும் அதிவேக உலகில் தீமைகள் நம்மை பல வழிகளில் வந்தடையும் நம்மை சுற்றியுள்ள பல இடங்களில் இருக்கும் தவறுகள் எல்லாமே நாம் சரி செய்ய முடியாது இப்படி பட்ட உலகிற்கு கால் பதிக்கும் நம் பிள்ளைகளிடம் எது செய்யலாம் எது செய்யக்கூடாது என்பதும் நாம் சொல்லி புரிய வைக்க வேண்டும்.
இது தான் சரி என்று தினிக்காமல் நீ செய்தது சரியா,செய்யவிருக்கும் செயல் சரிதானா என கேள்வி கேட்கும் போது அவர்கள் கண்டிப்பாக சிந்திப்பார்கள்.
இது செய் என்பதை விட இது செய்தால் நல்லா இருக்கும் என்றும் நல்லா யோசிச்சு முடிவு செய் எனவும் அறிவுரை இல்லாமல் ஐடியா தரலாம். "அறிவுரை தரவங்களை விட ஐடியா தரவங்களத்தான் பிள்ளைகளுக்கு பிடிக்கும்"
இதெல்லாம் சொல்ல நாம யோசித்தோம் என்றால் இந்த சமூகம் அதை யோசிக்காமல் கற்றுக் கொடுக்கும் ஆனால் அது நன்மையாக இருக்குமா என்பது தான் கேள்விக்குறி.
அதே போல் படிப்பு என்பது மார்க் என்று சொல்லாமல் அது உன் தகுதி மற்றும் உன் திறமை அறிவு இப்படி எது சொன்னால் அவங்க கவணம் அதில் திரும்புமோ அந்த டைமென்சனில் சொல்லி புரிய வைக்கலாம்.....
இது எனக்கு நடந்த சம்பவத்தை சொல்லி முடிக்கிறேன்"நானும் என் பையனும் அவனுக்கு கண் டெஸ்ட் ஹாஸ்பிடல் சென்று அங்கே மருத்துவரை காண காத்திருக்கும் போது என் இடப்பக்கம் நிறைமாத கற்பிணி பெண் என் வலப்பக்கம் இருபத்தி இரண்டு அல்லத மூனோ நாலோ வயதுடைய இளைஞனும் இருக்க இவன் ரொம்ப நேரமாக அந்த பெண்ணை பார்திருந்தான் கொஞ்ச நேரத்தில் என் ஆதிக்கு வந்ததே ஒரு டவுட்"அம்மா குழந்தை எப்படி பிறக்கும் "என கேட்க அடுத்திருந்தவனோஅதிர்ந்து ஆதியை பார்க்க நான் அவனை திட்டுவேன் என்ற மனநிலையில் என்னை யும் பார்க்க எனக்கு தெளிவாக புரிந்தது இவனுக்கு ஏன் இந்த டவுட் என்று
நான் சிசேரியன் முறையை மட்டும் கொஞ்சம் அவனுக்கு புரியும் படி சொல்ல ஆதியின் கண்ணில் ஒரு வேதனை சிறு மௌனம் பின் நான் பிறக்கும் போது உங்களுக்கும் வலித்ததா என்ற அவன் வார்த்தையில் வலியை என்னால் உணர்வும் முடிந்தது.
இப்படி அவன் குழந்தை பிறப்பின் இன்றைய சிசேரியன் முறை தெரிந்து கொண்டான் அதே நேரம் தாயின் வலியும் அவன் உணர்நது கொண்டான்.
சட்டென்று எனக்கு அந்த இளைஞன் நினைவு வந்து அவனை பார்க்கும் போது அவன் கண்ணில் சிறு புன்னகையுடன் அவன் வேலை செய்ய தொடங்கிட்டான் அது தாங்க மொபைல் நோண்டறது.
இந்த கேள்விக்கு நான் பதில் மலுப்பி இது தப்பு இப்படி கேட்க கூடாது என பல மாதிரி அவனை சமாளிச்சுருக்கலாம்.
ஆனால் இந்த அவன் டவுட் வேற யாரிடம் போய் கேட்டாலும் அது அவனுக்கு தான் கஷ்டமா போகும் கரைக்டான எந்த பதிலும் கிடைக்காமல் தேவையில்லாத பல தகவல்களை தெரிஞ்சுக்குவான் நாம என்ன தெரிஞ்சக்கூடாது என்று மறைக்கறோமோ அது தான் அவங்க முதலில் தெரியும் வாய்ப்பை இந்த சமூகம் மீடியா சினிமா இப்படி எல்லாமே கத்துக் கொடுக்கும்.
நான் சொன்னது டிபைட்டா என்று எனக்கு தெரியலை எனக்கு தெரிந்த சில விஷயங்கள் இஙகே நான் பகிர்ந்து கொண்டேன் என்னிடம் இந்த பகுதியில் வந்து கலந்து கொள்ள கேட்ட என் பிரண்ட்ஸ் எல்லோருக்கும் ரொம்ப நன்றி.
ஸ்ரீ மா உங்களுக்கு தான் என் லவ் அண்ட் லவ் எல்லாமே
இந்த மாதிரி ஒரு தளம் என் வீடு மாதிரி எனக்கு தோனுன எல்லாம் சொல்ல எனக்கு ஒரு மேடை நன்றி என்ற வார்த்தை ரொம்ப சிறியது தான் ஐ லவ் யூ ஸ்ரீ மா😍😍😍😍😍😍😍😍😍😍
Crct ah point ah puttu puttu vachuteenga sissy🤗sema👍
 

தாமரை

தாமரை
Inraikku tv la news channel la oru scrol vandhuchu.actor viveI solraru illaingargal aruvalukku padhil Mara kandrugalai kayil eduthal nanraga irukkumnu.adhu ennakku romba pudichirundhadhu.indha madhiri thiruttu,kolai idhu pola seidhigal varum podhu adhai patri pillaigalidam vivadhipadhil thappu illai endru naan ninaikiren adhu avargalukku idhu ellam thappu appadinu manadhil padhiya vaikkum.ennoda karuthu .
I'm done.
நாட்டு நடப்புகளை...நம்
பிள்ளைகளுக்கு...சரியான தெரிவிப்பது பெற்றோரின் கடமை தானே...

அதை பற்றி விளக்கமாக சொல்லவேண்டும்டியதாகத் தான உள்ளது..இல்லாவிடில் பாடப்புத்தகம்...வீடியோகேம் என ...காகிதமும்...காணொளியுமா வளர்ந்து விடுவார்கள்...உண்மை உலகம் அறியாமலே..

மிக அழகா தெளிவா உங்க கருத்துக்களை சொன்னீங்க வித்யா மா😍😍👌👌👌👌👏👏👏👏👏👏
 
Top