All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

தாமரை

தாமரை
ஹாய் friends....... நான் Mrida Mohan

இன்றைய குழந்தைகள் கெட்டு போவதற்கு பெற்றோர் காரணமா? சமூகம் காரணமா? என்னை கேட்டா ரெண்டுமே தான் நான் சொல்லுவேன்....

First one பெற்றோர் ~ எந்த குழந்தையும் அவங்களா வந்து மொபைல் குடுங்க, டிவில கார்ட்டூன் போடுங்க பாக்கணும்னு கேக்கறது இல்லை...... பெற்றோர் தான் குழந்தைகளுக்கு இதை பழக்குவதே, ஏன்னா அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம இருக்கணும்னா குழந்தைங்க கவனத்தை வேற பக்கம் திருப்பனும் அதுக்காக மொபைல்ல கேம்ஸ் கொடுக்கறாங்க, டிவில கார்ட்டூன் பாக்க சொல்றாங்க......... அதே மாதிரி பெற்றோர் தான் குழந்தை வளர வளர நீ நல்லா படிச்சி first மார்க் எடுத்தாலோ இல்லை குறிப்பிட்ட சதவிகிதம் சொல்லி அந்த அளவு மார்க் எடுத்தாலோ நான் உனக்கு கம்ப்யூட்டர் வாங்கி தரேன், நீ கேக்கற மாடல் மொபைல் வாங்கி தரேன்னு சொல்றது....... அப்போ இதில் தவறு பெற்றோரோடது குழந்தைங்க மனசுல ஆசைய விதைக்கறோம், முதல் தடவை தான் பெற்றோர் இதை சொல்லுவாங்க, ஆனா குழந்தைங்க அடுத்தடுத்து இதை எதிர்பாக்கறாங்க அடுத்த முறை பெற்றோர் சொல்ல வேண்டியது இல்லை குழந்தைங்க நான் இவ்ளோ மார்க் எடுக்கறேன் நீங்க எனக்கு இதை வாங்கி குடுத்தே ஆகணும்னு டிமாண்ட் பண்ணுவாங்க so முதல் தவறு பெற்றோரோடது....... அதே மாதிரி அவங்க என்ன பன்றாங்க யாரோட பழகறாங்க இதை எதையும் கவனிக்க நெறைய பெற்றோர் தவறிடறாங்க இதனால சைல்ட் abuse நடக்குது.........குழந்தைங்ககிட்ட பேசறதுக்கே டைம் இல்லைன்னு சொல்ற நெறய parents இருக்காங்க....... பணம் சம்பாதிக்கணும் yeah ரைட் சம்பாதிக்கணும், ஆனா யாருக்காக சம்பாதிக்கறோமோ அவங்களையே கவனிக்க முடியாட்டி அவங்களோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாட்டி எவ்வளவு சம்பாதிச்சாலும் என்னை பொறுத்தவரை வேஸ்ட்.......

செகண்ட் one சமூகம் ~ மீடியா, நியூஸ் பேப்பர் எல்லா இடங்கள்லயும் தேவை இல்லாத விளம்பரங்கள்.... உதாரணத்துக்கு நான் youtube ல குக்கிங் ரெஸிபி பாப்பேன் ஆனா அந்த வீடியோ ஸ்டார்ட் ஆகறதுக்கு முன்ன musically app promo போகும் இல்லாட்டி zomato(இது ஒரு உதாரணம் தான் ஆனா condom ad கூட வரும்) இதோட advertisement போட்டுட்டு தான் நாம பாக்க வேண்டிய வீடியோ வரும், இது இன்டர்நெட்ல.......ஆனா இப்போல்லாம் டிவில வர்ற விளம்பரங்களையே குடும்பத்தோட உக்காந்து டிவி பாக்கும் போது பாக்க முடியல அவ்ளோ மோசமா எடுக்கறாங்க....... இதெல்லாம் யாரோட தவறு?? பெற்றோர் தவறா? இல்லை சமுதாயத்தின் தவறா?

நல்லதொரு மாற்றம் வீட்டில் இருந்து தான் ஆரம்பிக்கணும்........
தனி ஒரு மனிதன் ஒழுக்கமா இருந்தா சமூகம் சரியாவே இருக்கும் எதிர்கால குழந்தைக்களோட வளர்ச்சியும் ஆரோக்கியமா இருக்கும்
மிக அருமையான...ஆழமான அலசல் ம்ருதா மா.....சூப்பர்😍👌😍👌😍👌
 

தாமரை

தாமரை
அனைத்திலும் நன்மையும் உண்டு தீமையும்
உண்டு சரியாக இருக்கும் என்று நினைத்து ம்தான் வேறு வழியில்லை எனவும்
அவர்களுக்குகிடைக்கட்டுமேஎனவும் சில வஷயங்களை ஆதரிக்கின்றனர் ஆனால்
சில தவறுகள் நடக்கும் போது அதைஆதரிக்க அதையும் சரி செய்ய விரும்பினாலும் அதை சய்ய சமூகம் தடை பல உருவாக்குகிறது

பெற்றோர் குழந்தை இருவரையும்தவறுவதும்
தவறவைப்பதும் சமூகமே
வாவ்😍😍👌👌
இது வித்யாசமான பார்வை
 

Vidhyasuresh

Bronze Winner
நாட்டு நடப்புகளை...நம்
பிள்ளைகளுக்கு...சரியான தெரிவிப்பது பெற்றோரின் கடமை தானே...

அதை பற்றி விளக்கமாக சொல்லவேண்டும்டியதாகத் தான உள்ளது..இல்லாவிடில் பாடப்புத்தகம்...வீடியோகேம் என ...காகிதமும்...காணொளியுமா வளர்ந்து விடுவார்கள்...உண்மை உலகம் அறியாமலே..

மிக அழகா தெளிவா உங்க கருத்துக்களை சொன்னீங்க வித்யா மா😍😍👌👌👌👌👏👏👏👏👏👏
thank u sis...happy to read ur comment for my post:love::love:.
 

Priyam

Well-known member
மிக அருமையான...ஆழமான அலசல் ம்ருதா மா.....சூப்பர்😍👌😍👌😍👌
Thanks லோட்டஸ்..... இந்த விவாதம் எப்பவுமே எனக்கும் என் கணவருக்கும் இடையில் அடிக்கடி நடக்கும்
 

தாமரை

தாமரை
அனைவரது கருத்துகளும் மிக அருமை... இத்துடன் விவாத நேரம் முடிவடைகிறது....


இனி பார்வையாளர்கள் நேரம்...

கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி....


இன்று இரவு தாமரை சகோதரி உங்களது கருத்துக்கு பாராட்டு மற்றும் முற்று கருத்து வைப்பார்.....

நன்றி நன்றி நன்றி மக்களே... !!!!!!

நிச்சயமாக இத்தகைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கவில்லை.


முதல் முயற்சி என்பதால் ஆரம்பம் முதலே பதற்றம் மட்டும் தான் எங்களிடம்...
எனினும் தொடர்ந்து முயற்சித்தோம்.. அதன் பலனை இங்கு கண் கூடாகக் காண்கிறோம்...


தாமரை மா.. @தாமரை எங்களை நம்பி தலைமை பொறுப்புக்கு வந்தமைக்கு மிக்க நன்றி..
இது தான் எங்களுக்கான முதல் உந்துதலாக அமைந்தது...

அடுத்தது தயங்காமல் கலந்து கொண்டு விவாதம் செய்தவர்களை பாராட்டியே ஆக வேண்டும்
@Tamil novel lover
@RamyaRaj
@meenakshi27
@Amudhakannan
@Samvaithi007
@preti
@Deepagovind
@Vidhyasuresh

ரொம்ப நன்றிகள்

இவை அனைத்திற்கும் முழு முதன் காரணமாக எங்களை இணைத்த sms site மற்றும் எங்களது கருத்துகளுக்கு எப்பொழுதும் மதிப்பளிக்கும் ஸ்ரீ மேமிற்கு @Sasimukesh நன்றிகள்

குறிப்பு - இந்த முறை எங்களால், நேரம் இன்மையால் பல பேரை தொடர்பு கொள்ள முடிய வில்லை அடுத்த முறை நிச்சயம் இன்னும் சிறப்பான விவாதத்துக்கு வழி வகுப்போம்....


மீண்டும் ஒரு முறை அணைவருக்கும் நன்றிகள்...

இப்படிக்கு,
கிருதிஷா😍
@வாசுகி
@Varu thulasi
@fathima nuhasa
@Srisha
மிக அருமையான தலைப்பை தேர்வு செய்து..முதல் அடி எடுதது வைத்து.....அதனை விவாதம் செய்யலாம்....என அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி...அதற்காக பல ஏற்பாடுகளை செய்து ஒருங்கிணைத்து..


என மிக அழகா கொண்டு போயிருக்கீங்க....வாழ்த்துக்கள்... 💖💖💐💐💐💐💐
@வாசுகி
@fathima nuhasa
@Varu thulasi
@Srisha


@Srisha தொடர்பு கொண்டபோது..மிகவும் மகிழ்ச்சியாக..பெருமையாக...உணர்ந்தேன்...மிகுந்த ஆர்வமாகவும்...

என ஆர்வம் எதிர்பார்ப்பு...அனைத்தையும் முழுமை செய்வதாக இங்கே ...விவாதம் நடந்தது ..

அதற்கு @RamyaRaj @Andal Arugan @Tamil novel lover @Samvaithi007 @Deepagovind @preti @Amudhakannan @Vidhyasuresh @meenakshi27 இவர்களின்..அருமையான..ஆழமான..தெளிவான கருத்து பகிர்வுகளே காரணம்..👌👌👌👏👏👏👏👏👏

பத்து மணிக்கு..அனைவரின் கருத்துக்களை தொகுப்பாக எடுத்து வருகிறேன்😍😍👍👍👍👍
 

Tamil novel lover

Bronze Winner
நன்றி..

ப்ளீஸ்.. எனக்கு பெரிய பில்டப்பு கொடுக்காதீங்க.. நானும் உங்களைப் போல் இந்த தளத்தில் இருக்கும் உங்கள் தோழமை தான்..
S pa. This our machi😉😉😉 she doesn’t like ma’am all
 

தாமரை

தாமரை
ஆறு பேருமே உங்கள் கருத்துக்களை நல்லா ஆழமா பதிவு பண்ணியிருக்காங்க. முதலில் வாழ்த்துக்கள் சகோதரிகளே அறுவருக்கும். சமூகம் என்பது குழந்தைகள் பெற்றோர்கள் உறவினர்கள் சேர்ந்தது தான். ஒரு ஆரோக்கியமான சமூகம் உருவாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தான் காரணம். இதில் பெற்றோருக்கு தான் முதல் முற்று கடமை இருக்கிறது மற்றும் தன் மக்களை நல்லவர்களாக சமூக பொறுப்பு உள்ளவர்களாக மாற்றுவது அவர்களின் கடமை மற்றும் உரிமையும் கூட. ஒரு குழந்தை பிறக்கும் பொழுதில் இருந்து விவரம், வெளி உலகம் தெரியும் வரை இருப்பது பெற்றோரிடம் முக்கியமாக தாயிடம். சிறு வயதில் பார்க்கும் கேட்கும் விசயங்கள் தாம் அவர்கள் வளரும் பொழுது சிற்சில தவறுகள் செய்யும் பொழுது அரணாக அவர்களை காக்கும். சிறு வயதிலேயே ஒரு குழந்தைக்கு நல்லவனாக வளர வேண்டிய அவசியத்தை சொல்லி தர வேண்டியது பெற்றோரின் கடமை. நற்பண்புகள் ஓட்டி வளர்க்க வேண்டியதும் அவர்கள் தாம். அப்படி வளர்த்தால் மட்டும் போதுமா? போதாது, அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நம் கண்காணிப்பு இருக்க வேண்டும். அவன்/அவள் தவறு செய்யும் போது திருத்த வேண்டும். அடிமையாக நடத்தாமல் நண்பனாக நடத்தினால் அவர்கள் அனைத்தையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வார்கள். என்ன நடந்தாலும் பெற்றோரிடம் மறைக்காமல் சொல்லுவது போல் ஒரு சுமூகமான உறவு நிலை இருக்க வேண்டியது மிக அவசியம். பிள்ளைகளுக்கு வசதியை கொடுக்கலாம் தப்பில்லை அது எப்படி எவ்வளவு உழைப்பு அப்பறம் வருதுண்ணும் சொல்லணும் அது ரொம்ப அவசியம். சொகுசு வாழ்க்கை என்பது விட ஆரோக்கியமான வாழ்க்கை அமைத்து கொடுத்தால் நலம். பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு எதுக்கு smartphone, அதுவும் பள்ளிக்கு கொண்டு செல்ல அனுமதிப்பது ரொம்பவே தவறு. 90களில் பள்ளி சென்றவர்கள் mobile இல்லாமல் படிக்கவில்லையா? இல்லை சாதிக்கதான் இல்லையா?. இப்பொழுது இருக்கும் கல்வி முறைக்கு தேவைப்பட்டாலும் அதை வீட்டில் ஒரு கணிணி வைத்து அவர்கள் தேவையை நிறைவேற்றலாம் அல்லது பெற்றோரின் அலைபேசியை உபயோகிக்கலாம் அவர்களின் மேற்பார்வையில். ஒவ்வொரு பெற்றோரும் அலைபேசியின் நன்மை தீமையத் தெரிந்து இருக்க வேண்டும். பகட்டுக்காக வாங்கி கொடுக்க கூடாது. படிக்காத பாமரர்களும் கூட பிள்ளையின் ஆசைக்காக வாங்கி தருகின்றனர். அவனின்/அவளின் ஆசை எங்கே தொடங்குகிறது சக தோழமைகளிடம் இருப்பதை பார்த்து தானே. என்னதான் தொலைக்காட்சி மூலமாக அலைபேசி பற்றி அறிந்தாலும் குடும்ப நிலை தெரிந்த பிள்ளை கேட்காது. அதையும் மீறி கேட்கிறது என்றால் கூட இருப்போரிடம் கெத்து காட்ட, அவர்களுக்கு ஈடாக தானும் வைத்திருக்க விரும்புவது தாம் முக்கிய காரணம். ஒரு மாணவனிடம் இருப்பது அவனுக்கு மட்டும் தீமை அல்ல கூட இருப்போருக்கும் தான். யாரிடமும் இல்லாத (தோழமைகளிடம்) ஒன்றை அவ்வளவு ஆர்வமாக பார்க்காது.
வாவ் மிக தெளிவா...விரிவா..அதே நேரம் நச் என தைக்கும் வண்ணமா சொல்லியிருக்கிறீர்கள் மா👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
 

தாமரை

தாமரை
எந்த அணிக்கும் ஆதரவாக பேசவில்லை.. இது எனது பொதுவான கருத்து..😊😊



பெற்றோர்களின் வளர்ப்பிலேயே குழந்தைகள் எதிர்காலம் நல்லதாகவோ கெட்டதாகவோ அமைகிறது. நம் பழக்கவழக்கங்கள் குணங்களையே குழந்தைகள் பார்த்து வளர்கின்றனர். அவர்களுக்கு நாமே ஆசான், உலகம்..!


வெளியுலகத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் பிறக்கும் வயதில் நாம் வழிநடத்தி பின் அவர்களை முன்னே விட்டு நாம் பின்னே இருக்க வேண்டும்.


அது நமக்கு கவனம்..! அவர்களுக்கு அது கண்காணிப்பாக இருக்க கூடாது. பின்புலமாக தெரிய வேண்டும். அடக்குவதாக தெரிந்தால் நம்மைவிட்டு வெகுதூரம் முன்னே சென்றுவிடுவார்கள். நம்மால் பிடிக்க முடியாது.


நாம் நமது குழந்தையை வெளியுலகத்திற்கு விடவில்லை, ஒரு சமூக உறுப்பினரை விடுகிறோம். அதனால் அவள்(ன்) மற்றவர்களால் நல்ல சமூகமாக பார்க்கும்படி செய்ய வேண்டும். பிறர் போற்ற வாழ வேண்டும் என்ற கருத்தைத் திணிக்க கூடாது, போதிக்க வேண்டும்.


பெருமைக்காக சொல்லவில்லை.. மேலும் எனது கருத்தை நான் எழுதிய கதையின் மூலம் சொல்ல விரும்புகிறேன்.


"உருகும் இதயம் உனைத் தேடி..!" எத்தனை பேர் படித்திருப்பீங்க என்றுத் தெரியவில்லை.. அதில் இந்த கருத்தைப் பற்றி தான் சொல்லி்ருப்பேன். (படித்திராதவர்கள் குழம்ப வேண்டாம்..😁 skip செய்திருங்க..)


அசோக் பெற்றோர் அவனை சரியாக புரிந்துக் கொண்டிருக்கவில்லை. அவன் பைக் சாகசம் செய்த பொழுது, அவனது திறமையைப் பாராட்டி ஆனால் அதில் உள்ள ஆபத்தை எடுத்து சொல்லியிருக்க வேண்டும். விளையாட்டு பொருட்களை பிரித்து வைத்திருக்கும் பொழுது, விசாரித்திருக்க வேண்டும். பள்ளியில் ஓழுங்கின நடவடிக்கை எடுத்த பொழுது அசோக் தரப்பு நியாயத்தைக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் குழந்தையை கண்டிப்பும், கவனமாகவும் பார்த்துக் கொள்வதாய் நினைத்து தவறுச் செய்திருப்பார்கள்.. அதனால் விளைந்த விளைவு கெட்ட சமூகத்தினுடன் பழக்கம். அதாவது சரியான பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் கெட்ட எண்ணங்கள் கொண்ட கூடா நட்பான வருணுடன் பழக்கம் ஏற்பட்டது. வருணின் பாராட்டுதல்கள் அவனை தீய வழிக்கு அழைத்துச் சென்றது.


ஆனாலும் இவ்வனைத்துக்கு பின்பும் அவனது நல்ல பண்பு ஆழ்மனதில் இருந்திருக்கிறது என்றால் அதற்கும் காரணம் அவனது பெற்றோர்களின் பழக்கவழக்கம் மற்றும் குணங்களே..! அது வருணுக்கு கிடைக்காதது அவனது துரதிர்ஷ்டம்..!


சோ பெற்றோர்களின் கையில் தான் எல்லாம் இருக்கிிறது

ரொம்ப ரம்பம் போட்டிருந்தால்.. மீ எஸ்கேப்..🏃🏃🏃
:smile1::smile1::smiley7::smiley7:
 
Top