All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

ஹாய் பேபிஸ்

என் பெயர், தீபா சுந்தர்..
எழுத்துலகத்தில் நான் தீபஷ்வினி...

என் ஊர் திருநெல்வேலி.. ஆனா
நான் பிறந்து வளர்ந்தது கல்யாணம் முடிந்தது எல்லாம் மும்பையில்

நாவல் படிக்க ரொம்ப பிடிக்கும்.. நிறைய நாவல்கள் படிச்சிருக்கேன்..

எழுத ஆசை வந்தது, யார் கிட்ட ஹெல்ப் கேட்க என்று முழிச்சிட்டு இருந்தேன்.


அப்போதான் ஸ்ரீமேம் "சப்தமில்லா ஸ்வரங்கள்" நாவல் போய்ட்டு இருந்து...

அந்த நாவலுக்கு fbயில் கமெண்ட்ஸ் பண்ணும் போது தான்,
என் டார்லி மோகனா கார்த்திக், ப்ரியா ராஜன் எனக்கு அறிமுகம் கிடைத்தது, அவங்க கிட்ட என் ஆசையை, கனவை சொன்னேன்,

எழுத சொன்னாங்க, ஹி ஹி ரெண்டு சோதனை எலி கிடைச்சா விடுவேனா எழுதிட்டோம்ல... அதுதான்
"உன் சுவாசத்தில் நான்"


இப்போ நான்கு கதை முடிச்சிட்டேன், மூன்று நாவல்கள் வெளி வந்து விட்டது..

இப்போ நானும் ஒரு எழுத்தாளர் ஆகிட்டேனுங்கோ...


உங்கள்
தீபஷ்வினி???
U r an awesome writer babe.... Waiting for ur next novel eagerly
 

Rathi

New member
Hi im rathi
I love to read books..but it must b a positive one..i like all novels..ipo sri mam novels romba pudichuruku..unga novels silathu padika mudiyama pouruchu..hope u upload it here soon...and all other writers ungaloda novels padichenn..all r well good..hope u all shine like stars..and all d best fr ur future story wrks...
And dis new site s totally awsome..congrats sri mam and team.
 

SN Venkat

New member
என்னப்பா இது Self intro லாம் கேக்குறீங்க? ???
சரி சொல்றேன்.
S.N. Venkatesh தான் பேரு. சொந்த ஊரு இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பக்கத்தில ஒரு கிராமம்.
படிச்சது டிப்ளமோ எலக்ட்ரிக்கல்.
இப்போ வேலை பாக்குறது விஜயவாடா , ஆந்திர பிரதேஷ்.

முன்னாடி சென்னைல வேலை பாத்தப்போ பிரெண்ட் ஒருத்தன் இந்த மாதிரி புக்ஸ் படிக்க குடுத்தான்.
அருணா நந்தினி, அமுதவல்லி கல்யாணசுந்தரம், முத்துலட்சுமி ராகவன், ரமணிச்சந்திரன், சீதாலட்சுமி இப்புடி புக்ஸா படிக்க ஆரம்பிச்சி அப்பறமா தான் ஸ்ரீ மேமோட " கணங்கள் கணமாய் கரைவதேனோ " படிச்சேன். எனக்கு வித்தியாசமா பட்டது அந்த கதை. அப்பறமா தான் இந்த மாதிரி புக்ஸ் படிக்க ஆரம்பிச்சி அப்புடியே அவுங்க சைட், ஃபேஸ்புக் னு பாலோ பண்றேன்.
மத்தபடி பெருசா ஒண்ணுமில்லை...
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ் ....

என்னோட பெயர் வாணிப்பிரியா ..... கதைக்காக ஸ்ரீவாணி...

என்னோட ஊர் திண்டுக்கல்ல ஒரு சின்ன கிராமம் . எக்ஸாம்லாம் முடிச்சிட்டு வெட்டியா இருந்தப்ப பொழுதுபோகாம கதை படிக்க தேடினப்போ எனக்கு கிடைச்சது நம்ம ஸ்ரீ மேம் "உயிர் உருகும் ஓசை " நாவல். அதற்கு முன்னாடியும் நிறைய கதைகள் படிச்சிருக்கேன். ஆனால் இந்த அளவு சத்தியமா எதுவும் புடிக்கலை.. அப்படியே நம்ம சைட்டைப் பிடிச்சு வந்து இப்போ நிறைய அக்காஸ் பிரெண்ட்ஸ் ஆய்ட்டாங்க. ஸ்டோரிக்கு கமெண்ட்ஸ் போட்டு எங்களுக்குள்ள பல இனிமையான வாக்குவாதங்கல்ன்னு அழகா நகர்ந்திட்டிருன்தது.. நல்லா போய்கிட்டு இருக்கப்ப திடீர்னு ஒரு ஆசை பேராசை கதை எழுத. ஒரு வழியா ஒரு கதையும் எழுதி முடித்தாகிவிட்டது. தோன்றதை எழுதறேன். சத்தியமா எழுத்தாளர்லாம் இல்லை.

அடுத்த கதைக்கு தயார்படுத்திட்டு இருக்கேன் இப்போதைக்கு. பாப்போம் ....என்ன ஆகுதுன்னு.


இப்போதைக்கு சொல்லிக்கிற அளவு பெருசா எதுவும் பண்ணலை. பின்னாடி பண்ணா பாப்போம்....

நன்றி.
 

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நான் சைனுஜா ,....
இலங்கை வாசி,....
சாப்ட் வேர் இன்ஜினிரியங் படிக்க ஆரம்பித்திருக்கேன்.
என்னோட டியரஸ்ட் செல்லகுட்டி தங்கம் எங்க வீட்டு குழந்தை நான் பெறா (அக்கா மகன்)என் மகன் ஆதவ் வச்ச பெயர்....shaash + எங்கம்மாப்பா பேர் Sri சேத்து தான் என் எழுத்துகள் ஆரம்பமானது ..


(பேர்சனலா என் பயோகிராபி சொல்லுற அளவுக்கு நான் என்னும் வளரலேங்க)

குட்டியா இருக்கும் போது அம்புலிமாமா கதையில ஆரம்பிச்சு , ரமணியம்மா நாவல்கள் அறிமுகத்தால நாவல் ஆசைபிறந்து அதற்கு பிறகு....
எத்தனையோ கதைகளின் அழகியல் நாவல்கள் மேல ஆர்வத்தை தூண்டியது.. ஸ்ரீ மேம் கதைகளால இந்த சைட்பக்கம் வந்தேன் நிறைய நாவல்களை படிச்சு ரியல் ஏது ரீல் எது னூ தெரியா டிரீமில காரெக்டர்ஸை பீலப் பன்னி சீரியல் பாட்டி மாதிரி கதைகளோட நிரைய தடவை மெய்மறந்த அனுபவங்கள் உண்டு..


என் பிரயினில பூத்த சிலபல கதைகளை... ஓட வழியில்லாம என் கூட சுத்துர சில நல்ல உள்ளங்களுக்கு (சோதனை எலிகளுக்கு)மட்டும் வாயல சொல்லி காதுல ரத்தம் வரவச்சன் ...

ஒரு கட்டத்துல ஷப்பா டேய் போமா தாயேனு .. அவங்க பாடுபடுறத பாக்க சரி புலச்சு போங்கனு... டயரில ஆரம்பிச்ச கதை பாதியில நின்னிடும்... மனசுல தோனுற அளவு அதிகம் இருந்தாலும் எழுத ஊக்கம் இல்லாம எப்படி எழுத முடியும்...

ஆனாலும் அடிச்சுபிடிச்சு வாட்பேட் னூ ஆப் தேடி கண்டுபிடிச்சு அதுல சில பல நல்ல ரீடர்ஸ் கொடுத்த எனர்ஜுல ரெண்டு கதைகளை எழுதிமுடிச்சு ,...ஒரு கதைய மைண்ட் ஸ்டக்காகி பாதியில நிக்கிது.... பட் சீக்கிரம் எழுதி முடிச்சிடுவன்..
(நம்பிக்கை அதுதானே எல்லாம்?)


இப்ப ஸ்ரீ மேம் புண்ணியத்துல என் கதைய பையோட இந்ந வந்திருக்கேனுங்க கொஞ்சம் பெரிய மனசு பன்னி கத்தி பொல்லு தூக்காம நல்லா நாலுவரி சொல்லி என் கதை பயணத்த வழத்துவிடுங்கனூ தாழ்வன்போடு கேட்டுக் கொள்ளுரேன்..

பாட்டுனா மெல்லிசை.. ஏர் ரகுமான் வைரமுத்து பாட்டுனா நான் அப்படியை கனவு உலகம் தான்.... தாமரை வரிகள்,... பாரதி கவிதை... விவேகானந்தர் சிந்தனை அதிக ஈடுபாடு உண்டு

பாசிட்டிவ் திங்கிங் பத்தி எந்த qoute வந்தாலும் அப்படி இஷ்டம்..

:eek:என் ஹெஸ்டீடி உங்களை மொக்க போட்டிருந்தா... ....???? ஐ யம் சட்டப் பன்னிக்கிறேன்...:unsure::whistle:
 
Top