All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Very useful information. Thanksகருப்பை வாய்ப் புற்றுநோய் (Cervical Cancer)
கருப்பை வாய் புற்றுநோயானது கருப்பையை பிறப்புப் பாதையுடன் (யோனி) இணைக்கும் கருப்பையின் அடிப்பகுதியான கருப்பை வாயில் தொடங்குகிறது. கருப்பை வாயின் மேல்பகுதி எண்டோசெர்விக்ஸ் என்று அழைக்கப்படுகிறது, இது சுரக்கும் தன்மையுடைய செல்களைக் கொண்டுள்ளது.கருப்பை வாயின் கீழ்பகுதி எக்டோசெர்விக்ஸ் என்று அழைக்கப்படுகிறது, இது செதிள் செல்களைக் கொண்டுள்ளது.
உருமாற்ற மண்டலம் எனும் பகுதியில் தான் இந்த இரண்டு செல்களும் (சுரக்கும் செல்கள் மற்றும் செதிள் செல்கள்) ஒன்றுக்கொன்று சந்திக்கின்றன. கருப்பை வாய் புற்றுநோய், பெரும்பாலும் உருமாற்ற மண்டலத்தில் உள்ள செல்களில் தான் உருவாகிறது.
கருப்பை வாய் புற்றுநோயின் மிகப் பொதுவான வகை ஸ்க்வேமஸ் செல் புற்றுநோய் (10 இல் 9) ஆகும். இது எக்டோசெர்விக்ஸில் உள்ள செதிள் செல்களிலிருந்து தொடங்குகிறது, பெரும்பாலும் உருமாற்ற மண்டலத்தில் தான் உருவாகிறது.
மீதமுள்ள 10% கருப்பை வாய் புற்றுநோய்கள் அடினோ புற்றுநோயாகும். இது எண்டோசெர்விக்ஸில் உள்ள சுரப்பி செல்களிலிருந்து அபிவிருத்தியடைகிறது.கருப்பை வாய் புற்றுநோயில் அடினோஸ்க்வேமஸ் புற்றுநோய் என்பது அரிய வகையாகும்.ஆரம்பத்தில் செல்கள் புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்களை ஏற்படுத்தும், இந்த மாற்றங்களை PAP சோதனை மூலம் கண்டறியலாம்.
அனைத்து கருப்பை வாய் புற்றுநோய்களும் மனித பாப்பிலோமாவைரஸ் (HPV) உடன் தொட்ரபுடையது. இருப்பினும், HPV வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதில்லை. ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற இடங்களில் கருப்பை வாய் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. வளர்ச்சி குன்றிய நாடுகளில் 84% இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மனித பாப்பிலோமாவைரஸ் (HPV) ஆகும். பாலியல் செயல்பாடுகளின் மூலமாகவே HPV பரவுகிறது, 75% பெரியவர்களுக்கு HPV வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த எண்ணிக்கையில் ஒரு சிறிய சதவீத மக்களுக்கு மட்டுமே கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழக்கைமுறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிற காரணிகளாலும் புற்றுநோய் ஏற்படலாம்.
கருப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் சில பின்வருமாறு:
அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்
- ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் கூட்டாளிகள் – ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டாளிகளுடன் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதால் HPV மற்றும் பிற பால்வினை நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
- ஆரம்ப பாலியல் செயல்பாடு – இளம் வயதில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதால் கூட HPV மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து ஏற்படலாம்.
- பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம் – உங்களுக்கு HPV மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம் இருந்தால் பிற உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- புகைப்பிடித்தல் – புகைப்பிடித்தல் செதிள் செல் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.
மற்ற புற்றுநோய்கள் போன்றே கருப்பை வாய் புற்றுநோய்க்கும் ஆரம்ப அறிகுறிகள் என்று எதுவும் இல்லை. முன்னேறிய கட்டத்தில் பின்வரும் அறிகுறிகள் காணப்படும்:
நோய் கண்டறிதல்
- உடலுறவுக்குப் பின் பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் கசிதல், அல்லது மாதவிடாய் சுழற்சிக்கு இடையில் இரத்தப்போக்கு, அல்லது மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு இரத்தப்போக்கு.
- பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் போன்ற துர்நாற்றம் வீசக்கூடிய திரவம் வெளியேறுதல்
- விவரிக்கமுடியாத இடுப்பு வலி அல்லது பாலுறவின்போது வலி ஏற்படுதல்.
கருப்பை வாய் புற்றுநோய்க்கான சோதனையை பெண்கள் தங்களது 21 வயதிலிருந்தே தொடங்க வேண்டுமென்று பெரும்பாலான மருத்துவ வழிமுறைகள் பரிந்துரைக்கின்றன. பயன்படுத்தப்படும் சோதனைகளில் சில பின்வருமாறு:
மேலே கூறப்பட்ட சோதனைகளின் முடிவுகள் நேர்மறையாக இருந்தால், நோயை உறுதிசெய்ய மற்றும் புற்றுநோயின் நிலையை அறிய விரிவான ஆய்வுகள் நடத்தப்படும். கண்டறியும் சோதனைகள் பின்வருமாறு:
- பேப் ஸ்மியர் – அசாதாரண மாற்றங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய கருப்பை வாயில் உள்ள செல்கள் உரசி தேய்க்கப்படும் மற்றும் துலக்கப்படும். இந்த சோதனை மூலம் புற்றுநோய் மற்றும் புற்றுநோய்க்கு முந்தைய செல்களை கண்டறியலாம்.
- HPV DNA சோதனை – HPV ஸ்பெக்ட்ரம் உள்ளதா என்பதை சோதிக்க கருப்பை வாயிலிருந்து செல்கள் சேகரிக்கப்படும்.
நோய் கண்டறியப்பட்டு உறுதிசெய்யப்பட்ட பின்னர், சிகிச்சை அட்டவணையை திட்டமிட நோயின் நிலையை அறிவதற்கான சோதனை நடத்தப்படும். புற்றுநோய் நிலையை அறிய, மருத்துவர் பின்வருபவற்றை கேட்கலாம்:
- கோல்போஸ்கோப்பி – இது ஒரு சிறப்பான உருப்பெருக்கி கருவியாகும். அசாதாரண செல்களை சோதிக்கப் பயன்படுகிறது.
- பன்ச் பயாப்ஸி – ஒரு கூர்மையான கருவி கருப்பை வாய் திசுவின் மாதிரியை எடுக்கப் பயன்படுகிறது.
- கருப்பவாயுள் சுரண்டல் – கருப்பை வாயிலிருந்து திசு மாதிரியை சுரண்ட ஸ்பூன் போன்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
- எலெக்ட்ரிக்கல் வயர்-லூப் – திசு மாதிரியை எடுக்க ஒரு மெல்லிய குறைந்த மின்னழுத்த மின்சார கம்பி பயன்படுத்தப்படுகிறது. இந்த சோதனையின்போது உள்ளூர் மயக்கமருந்து வழங்கப்படும்.
- கோன் பயாப்ஸி – கருப்பை செல்களின் ஆழமான அடுக்குகளை எடுக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த சோதனையின்போது பொதுவான மயக்கமருந்து வழங்கப்படும்.
கருப்பை வாய் புற்றுநோயின் நிலைகள் பின்வருமாறு:
- படமாக்கல் – எக்ஸ்-ரே, CT ஸ்கேன், எம்.ஆர்.ஐ, மற்றும் பாசிட்ரான் உமிழ்வு ஸ்கேன் (PET ஸ்கேன்) ஆகியவை செய்யப்படுகின்றன
- விஷுவல் பரிசோதனை – சிறந்த நுண்ணோக்கிகளைப் பயன்படுத்தி நீர்ப்பை மற்றும் கருப்பையின் உள்பகுதி பார்வையிடப்படுகிறது.
சிகிச்சை மற்றும் தடுப்பு
- நிலை I – புற்றுநோய் கருப்பை வாயில் மட்டும் உள்ளது.
- நிலை II – கருப்பை வாய் மற்றும் யோனியின் மேல் பகுதி பாதிக்கப்பட்டுள்ளன.
- நிலை III – புற்றுநோய் யோனியின் கீழ் பகுதி அல்லது இடுப்புக்கூட்டின் உட்சுவர்களில் பரவிவிட்டது.
- நிலை IV – புற்றுநோயானது சிறுநீர்ப்பை, மலக்குடல் போன்ற அருகில் உள்ள உறுப்புகளுக்கு இடமாறிவிட்டது அல்லது நுரையீரல், கல்லீரல் அல்லது எலும்பு போன்ற பிற பாகங்களில் பரவிவிட்டது.
சிகிச்சை
கண்டறியப்பட்ட புற்றுநோய் நிலையின் அடிப்படையிலே சிகிச்சை திட்டம் மற்றும் முன்கணிப்பு தீர்மானிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையிலே கண்டறியப்பட்ட புற்றுநோயை எளிய கருப்பை நீக்க அறுவை சிகிச்சை (கருப்பை மற்றும் கருப்பை வாயை மட்டும் அகற்றல்) அல்லது முழுமையான கருப்பை நீக்க அறுவை சிகிச்சை (கருப்பை, கருப்பை வாய், பிறப்புறுப்பின் பகுதி மற்றும் நிணநீர் முனைகள் ஆகியவற்றை அகற்றல்) மூலம் கட்டுப்படுத்தலாம். அறுவை சிகிச்சைக்கு முன் அல்லது பின் மீதமுள்ள புற்றுநோய் செல்களை கொள்வதற்கு கீமோதெரபியுடன் இணைந்து கதிர்வீச்சு சிகிச்சையும் பயன்படுத்தப்படலாம். நோய் முற்றிய நிலையில் கீமோதெரபி மருந்துகள் அதிக அளவில் தேவைப்படலாம்.
தடுப்பு
கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க பின்வரும் வழிமுறைகளை மேற்கொள்ளலாம்:
சிக்கல்கள்
- HPV-க்கு எதிரான தடுப்பூசி – தடுப்பூசி மூலம் HPV நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கலாம், 9 முதல் 26 வயதுடைய பெண்களுக்கு இந்த தடுப்பூசியை போடலாம். நபர் பாலியல் செயல்பாடுகளில் நாட்டம் அதிகரிப்பதற்கு முன்பு இந்த தடுப்பூசியை போட்டால் தடுப்பூசி நன்கு வேலை செய்யும்.
- வழக்கமான பேப் பரிசோதனைகள் – வழக்கமான பேப் பரிசோதனைகளை 21 வயதில் தொடங்கி சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் சோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையின் மூலம் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதில் உதவும் புற்றுநோய் செல்கள் மற்றும் புற்றுநோய்க்கு முந்தைய செல்களை கண்டறிய முடியும்.
- பாதுகாப்பான பாலுறவு – ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் உடலுறவு வைத்துகொள்வதை தவிர்க்க வேண்டும், உடலுறவின்போது பாதுகாப்பை பயன்படுத்த வேண்டும் மற்றும் உடலுறவு வைத்துகொள்ளும் வயதை தாமதப்படுத்த வேண்டும்.
- புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்.
கருப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் சிக்கல்கள் நிறைய உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு:
அடுத்த நிலைகள்
- புற்றுநோய் உடலில் பரவுதல், உடலின் மற்ற பாகங்களுக்கு புற்றுநோய் பரவுதல்.
- சூதகநிற்புக்குமுன் பெண்களின் மாதவிடாய் நிற்கக்கூடும்.
- உடலுறவின் போது வலி ஏற்படுதல் மற்றும் புறப்புறுப்பு வறட்சி.
- இடைவிடாது முதுகு வலி.
- சிறுநீர் அல்லது மலம் கசிதல்.
- கால் வலி.
- பசியின்மை மற்றும் எடை இழப்பு.
- குமட்டல் மற்றும் வாந்தி.
- முடி கொட்டுதல்.
- வாய் புண்கள்.
- தொற்று ஏற்படும் அபாயம் அதிகரித்தல்.
- சிராய்ப்புப் புண் அல்லது இரத்தப்போக்கு அதிகரித்தல்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும்:
உங்கள் நோய் மற்றும் சிகிச்சை திட்டத்தைப் புரிந்துகொள்ள மற்றும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க மருத்துவருடன் கலந்தாலோசிக்கவும். நோய் பற்றிய செய்திகள் மற்றும் சிகிச்சை சிக்கல்களை சமாளிக்க குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவு குழுக்களின் ஆதரவை நாடவும்.
- பிறப்புறுப்பிலிருந்து எதிர்பாராத அல்லது விவரிக்க முடியாத இரத்தப்போக்கு
- காரணமற்ற எடை இழப்பு
- தொடர்ந்து முதுகு வலி
- உடலுறவின் போது வலி
அபாய நிலைகள்
பின்வரும் அறிகுறிகள் இருப்பின் அவற்றை புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியைப் பெற வேண்டும்:
- பிறப்புறுப்பில் அசாதாரண இரத்தப்போக்கு.
- பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசக்கூடிய நீர்த்த, இரத்தம் போன்ற திரவம் கசிதல்.
- காரணமற்ற சிறுநீரக பிரச்சனை.
- சிறுநீர் கழிக்கும்போது வலி.
- தொடர்ந்து லேசான முதுகுவலி மற்றும் கால்களில் வீக்கம்.
- வயிற்றுப்போக்கு அல்லது மலக்குடல் இரத்தப்போக்கு.
- காரணமற்ற எடை இழப்பு, சோர்வு மற்றும் பசியின்மை.