All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Chit Chat And Forum Games

priyachris

Active member
வணக்கம் மக்களே 🙏🙏🙏

பொங்கலோ பொங்கல்.. பொங்கலுக்கெல்லாம் பொங்கல்.. நம்ம தள பொங்கல்.... (ஹி ஹி மீ shinchan விசிறி பா 😍😍)

நிகழ்ச்சி 6:


கும்முறு டப்பரு.. கும்முறு டப்பரு... கும்முறு கும்முறு குமுறு கும்மாளா.. (இது தாங்க தண்டோராவோட version 2.o😁😁🙈🙈)


📢📢📢📢இதனால் சுத்துப்பட்டி ஊர் ஜனங்களுக்கு அறிவிக்கிறது என்னன்னா... நம்ம பொங்கல் கொண்டாட்டத்தோட நிறைவு பகுதியா தேங்க்ஸ் சொல்லிங் கவிதை போட்டி நடக்க இருக்குது.

யாருக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு கேக்குறீங்களா....



எனக்குதான்....... 🙈🙈



ஹி ஹி😁😁😁 அப்படி சொன்னா கட்டய தூக்குவீங்கன்னு தெரியும். அதனால தேங்க்ஸ நம்மளோட இந்த லைப் க்கு சொல்லுவோம்.

என்னமா நீ.. வாழ்க்கை பூரா வச்சி செஞ்சிருக்கு அதுக்கு போய் தேங்க்ஸ் சொல்லனுமா கேக்கறது எனக்கு கேக்குது 🙃🙃இருந்தாலும் பரவால்ல ஒரு தேங்க்ஸ் தானே.. நாம சொல்லி வைப்போம் 🙃🙃

அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் நிகழ்வுகள் பல, அதை தாண்டி நம் மனதில் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள்...

என்ன பிரெண்ட்ஸ், கொண்டாட்டம் னு சொல்லிட்டு பிரச்சினை பற்றி பேசுறேன் என்று நினைக்கறீங்களா...

கூல் டவுன்.. கூல் டவுன்.. கூல் டவுன்... 😊😊


இது பிரச்சனைய பத்தி இல்லைங்க...நம்மளோட பாசிட்டிவிட்டி பற்றியது. ❣❣


தினந்தோறும் எத்தனை எத்தனையோ கஷ்டங்கள் பலர் அனுபவிக்கிறார்கள், சிலர் மன ரீதியாக, சிலர் பண ரீதியாக, சிலர் உடல் ரீதியாக

ஹா.. ஹா... டாப்பிக்கை மாத்த சொல்லி நீங்க சொல்லுறது கேட்குது...

அதனால் நாங்கள் கூற வருவது என்னவென்றால்...


நமக்கு கிடைத்த வாழ்க்கை ஏதோ ஒரு வகையில் மற்றவரை விட சிறந்தது தான்...


அந்த ஆசீர்வதிக்க பட்ட வாழ்க்கையை போற்றும் வகையில் உங்களது கவிதை இருக்க வேண்டும்...full of positivity. Spread postivity😍😍❣❣❣❣❣


கவிதை போட்டில கலந்துக்க விருப்பம் இருக்கிறவங்க இங்க ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு எந்த நிகழ்ச்சில கலந்துக்க போறிங்கனு சொல்லனும். 🙏🙏🙏

இந்த போட்டியின் முடிவு வாசகர்கள் தேர்வு செய்வாங்க 😍😍😍மற்ற விவரங்கள் விரைவில்.

இப்படிக்கு,
வர்ஷா. 🌹
Unmaiyavae sema topic sis🤩🤩
 
Top