ஹாய் மக்களே,
வசந்தனின் இரண்டாம் அத்தியாயம் இதே….!!!!
வசந்த(ன்)ம் தரும் கா(தல்)தம்
வசந்தம் 2:
"இனி ஒரு பிறவி உன்னோடு…….
வாழ்ந்திட வா…………..!!!!!!
அதுவரை என்னை காற்றோடு…….
சேர்ந்திடவா…………….!!!!!!!!! "
காலை ஆறு டூ ஏழு டியுசன் முடித்து விட்டு வீட்டுக்கு வருபவள் அதன் பிறகு குளித்து தயாராகி பள்ளி செல்வாள்.
அது போல் இன்றும் வந்தவள் அவளது அன்னை கொடுத்த டீயை குடித்து விட்டு பரபரவென்று குளிக்க சென்றாள். குளித்து முடித்து வந்தவள் அன்னையிடம் தலைவாரி உணவு உண்ண அமர்ந்த நேரம் மணி எட்டு பத்து.
வேகவேகமாக அந்த இரண்டு இட்லிகளை அவசரகதியில் வாயில் நுழைத்தவள் மதிய உணவினை எடுத்து கொண்டு எதிர்ப்பட்ட தந்தையிடம் வருகிறேன் என்பது போல் தலையசைத்து விட்டு சைக்கிளில் ஏறி அமர்ந்த நேரம் மணி எட்டு இருபது.
"அய்யோ போச்சு இன்னைக்கு லேட்டா போயி பி.டி டீச்சர் கிட்ட மாட்டுனா செத்தேன் இன்னைக்குன்னு பார்த்து இந்த கெளசி வேற லீவ் போட்டுட்டா..???" என புலம்பியவள் புயல் வேகத்தில் சைக்கிளை மிதித்து கொண்டு கிளம்பினாள்.
அவள் இருக்கும் தெருவினை கடந்து மெயின் ரோட்டை தாண்டி பள்ளி இருந்த கிளை தெருவில் நுழைந்த சமயம் 'எங்க இந்த கீரிப்பிள்ளைய காணோம்' என அனிச்சை செயலாக அவன் வழக்கமாக நிற்கும் இடத்தினை அவளது கண்கள் தேடி அலைந்தது.
அவளின் தேடலின் விளைவு அங்கிருந்த சந்தில் இருந்து தனது சைக்கிளுடன் வெளிவந்தவன் சிறிது இடைவெளி விட்டு அவளை பின்தொடர்ந்தான்.
"இந்தா வந்துட்டான்ல" என முணுமுணுத்தவள் பள்ளியினில் நுழைந்தாள்.
ஆண்களுக்கு பெண்களுக்கு என தனிதனியாக வாயில் அப்பள்ளியில் இருந்ததால் அவனால் அதற்கு மேல் அவளை பின் தொடர முடியாமல் போய் விட தங்களுக்கென இருந்த வாயில் பக்கம் நுழைந்தவன் அங்கே தனக்காக காத்திருந்த நண்பர்களிடம் சென்றான்.
"என்ன மச்சி இன்னைக்கும் பின் தொடரும் படலம் முடிஞ்சதா" என ஒருவன் கேட்க…..
"ம்ம்ம்" என மெல்லிய சிரிப்பையே பதிலாக தந்தான் அவளின் கீரிப்பிள்ளை.
"ஏண்டா நீயும் இரண்டு மாசமா பாலோ பண்ணிட்டு மட்டும் தான் இருக்க அந்த பிள்ளை உன்ன திரும்பி கூட பாக்கல நீயும் அவ பின்னாடியே அலையிறியே தவிர பேசுற வழிய காணோம் இன்னேரம் நானா இருந்தா இரண்டு மாசமே அதிகம்டா லவ்வ சொல்ல வைக்கலனாலும் நான் பாக்குற பிள்ளைய திரும்பியாச்சும் பாக்க வச்சிருப்பேன்" என பருவ வயதிற்கேற்ப அசட்டு தனத்துடன் அவன் பெருமை அடித்து கொள்ள,
அதனை கேட்டவனின் முகம் நொடியில் சுருங்கி விட அதனை மறைந்தவன் "சரி சரி வாங்கடா கிளாஸ்க்கு போகலாம்" என நண்பர்களை அழைக்க….
"என்ன அதுக்குள்ள உன் ஆள பார்க்க அவ்ளோ அவசரமா ஒரே கிளாஸ் தான பொறுமையா போய்க்கலாம் இப்ப இரு " என அவனை நிறுத்தி வைத்தவர்கள் அவர்களுக்கு நேர் எதிரே சிறிது இடைவெளி விட்டு இருந்த பெண்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்தினை நோட்டம் விட்டு கொண்டிருந்தனர்.
ஆண் பெண் இருவருக்கும் வெவ்வேறு வாயில் இருந்தாலும் அவர்கள் பள்ளயின் முன்னிருந்த அந்த பெரிய போர்டிக்கோவை தாண்டி தான் அனைவருமே அவரவர் வகுப்புகளுக்கு செல்ல முடியும்.
ஆக வாயிலும் சைக்கிள் நிறுத்தும் இடம் மட்டும் தான் வேறு அதுவும் இருபாலரும் சைக்கிள்களை நிறுத்தும் இடத்திற்கே நடுவே இரண்டு பெரிய மரங்கள் மட்டுமே. மற்றப்படி அவர்கள் அந்த பேர்டிகோ வழி தான் சென்றாக வேண்டும்.
நண்பர்களின் பேச்சிற்கு கட்டுப்பட்டு அவன் அங்கே நின்று விட்டாலும் அவனால் சிறிது நேரம் கூட நிற்க முடியவில்லை. ஏனோ மற்ற பெண்களை பார்ப்பதற்கு மனம் ஒப்பவில்லை.
அதற்காக அவன் ஒன்றும் நல்லவன் வல்லவன் எல்லாம் கிடையாது அந்த வயதிற்குரிய அழகிய சேட்டைகளை எல்லாம் கடந்தவன் தான் ஆனால் அவனின் அவளை பார்த்த பிற நாளிலிருந்து மற்ற பெண்களை பார்ப்பதை தவிர்த்திருந்தான்.
அவனின் பொடி பட்டாசின் ரகசிய பார்வையையும் ரகசிய முறைப்பையும் தான் பார்க்க மனம் விரும்பியதே……
"எவன்டா அது இன்னும் சைக்கிள் ஸ்டேண்ட்ல நிக்கிறவன்..???" என பீ.டி டீச்சர் விசில் அடித்ததில் அரண்டு அடித்து பிடித்து கொண்டு தங்களது வகுப்பிற்கு ஓட்டம் எடுத்தனர்.
இன்று முதல் வகுப்பே கணிதம் ஆக இருந்ததில் மாணவர்கள் அனைவருக்கும் தானாகவே ஒரு சோர்வு வந்து ஒட்டி கொண்டது.
அதுவும் முதல் பெஞ்சில் அமர்ந்திருந்தவளுக்கோ தூக்கம் கண்ணை சுழற்றியதில் அவளின் கணக்கு ஆசிரியையை முறைத்து வண்ணம் இருந்தாள்.
பின்னே அவர் தானே அவள் முதல் பெஞ்சில் அமர்ந்திருப்பதற்கு முழு முதல் காரணம்….!!!!!!
சற்று நன்றாக படிக்க கூடிய மாணவியாக இருப்பினும் அவளின் இருக்கை எப்போதும் கடைசி பெஞ்ச் தான். வாயடித்தாலும் தங்களின் பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறாள் என்ற காரண்த்திற்காக அவளை அந்த இடத்திலே அமர விட்டிருந்தனர் மற்ற ஆசிரியர்கள்.
ஆனால் அதனை உடைந்து நடந்து முடிந்த வகுப்பு டெஸ்ட்டில் அவள் முட்டை மதிப்பெண்கள் பெற்ற ஒரே காரணத்திற்காக அவளை தர தர வென வம்படியாக முதல் பெஞ்ச்சில் அமர வைந்திருந்தார் கணித ஆசிரியர்.
இனி அது தான் அவள் இடம் என அவர் உத்தரவு பிறப்பிக்க அப்போதைக்கு சரியென தலையாட்டியவள் கணித வகுப்பிற்கு மட்டுமே முதல் பெஞ்ச்சில் அமருபவள் மற்ற வகுப்புகளில் தன்னுடைய இடத்திற்கு சென்றமர்ந்து கொள்வாள்.
இதை அனைத்து மாணவர்களும் செய்யும் வழக்கம் தான். இவளுக்கு கணிதம் என்றால் மற்றவர்களுக்கு ஆங்கிலம், கெமிஸ்ட்ரி, தமிழ், என மற்ற பாடங்கள்.
அடுத்தடுத்த பாட வேளைகள் நொடியில் கரைந்து விட…..பள்ளியும் முடிந்திற்று.
அடுத்து அவள் நேராக சென்று இடம் கெமிஸ்ட்ரி டியுசனிற்கு தான் ஐந்து டூ ஆறு மணி வரை கிளாஸ் நடக்கும்.
மெல்ல சைக்கிளை உருட்டியபடி அவன் பின் வருகிறானா??? என் அவள் திரும்ப ம்ஹும்!!!! இல்லை.
காலையில் இருந்து தன்னை பின் தொடர்பவன் மாலை மட்டும் வராமல் இருப்பதற்கான் காரணம் தான் அவளிற்கு தெரியவில்லை.
மனம் எங்கும் அவனின் நினைவுகளே அவளிற்கு. அவனை கடந்த ஒரு மாதமாக தான் அவளிற்கு தெரிகிறது…..ஒருவேளை அவன் அதற்கு முன்னிருந்தே அவளை தொடர்கிறானா என்றால்????? பதிலில்லை!!!!!!!
அவளிற்கு தெரிந்தது அவன் அவளை தான் தொடர்கிறான்…!!!! என் அவள் உறுதிப்படுத்தி கொண்டது கடந்த ஒரு மாதமாக தான்.
நேற்று பெய்த மழையில் முளைத்த காளானை போல் தீடிரென அவளின் வாழ்வில் குறுக்கிட்டவனை பற்றி அவள் ஏதும் அறியால் ஏன் அவன் பெயர் கூட வகுப்பில் தெரிந்து கொண்டது தான்.
முதலில் அவனை கண்டு அவளிற்கு பயம் தான் ஏற்பட்டது. ஏதேனும் பிரச்சினை செய்வானோ என்று!!!!!!
ஆனால் அப்படி ஏதும் இல்லாததில் நிம்மதி அடைந்தவள் பிரச்சனை என்றால் வீட்டில் சொல்லி கொள்ளலாம் என கண்டும் காணாமல் இருந்து விட்டாள்.
"சில ரகசிய பார்வைகள்…..!!!!!!!! ரகசிய உணர்வுகள்………!!!!!!!அவனிற்காக அவளிடம் இருக்க தான் செய்ததில் மறுப்பேதும் இல்லை.
*******************************
"ம்மா தண்ணி கொடு ம்மா…!!!!!"
"ம்மா டிபன் எடுத்து வையி ம்மா!!!!!"
"ம்மா பேக் எங்கேம்ம….????"
"ம்மா சேலை கட்டுறதுக்கு சேஃப்டி பின் எடுத்து வச்சியாம்மா…..?????" என காலையில் இருந்து வத்சலாவை படுத்தி எடுத்து கொண்டிருந்தாள் ராகவி.
"அடியேய்…...இனி ஒரு தரம் ம்மான்னு கத்துன தோசை கரண்டிய வச்சு வாயில இழுத்து விட்டுடுவேன்" என அவள் கத்தலில் கடுப்பாகி வத்சலா சமையலறையில் இருந்து அரட்டியதில் அடங்கி தனதறைக்கு சென்றவள் புடவையை உடுத்த ஆரம்பித்திருந்தாள்.
இன்று அவளின் அலுவலகத்தில் "ப்ரஷ்ஷர்" பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தனர்.
அவளின் குழுவில் உள்ளவர்கள் எல்லாம் பேசி வைத்து ஒரே மாதிரியான புடவையை எடுத்திருந்தனர்.
புடவை கட்டி முடித்து வெளிவந்தவளை உணவுடன் எதிர்க் கொண்டார் வத்சலா.
எல்லாவற்றையும் எடுத்து கொண்டு வெளியேறியவளை பரமசிவம் தனது பைக்கில் ஏற்றி கொண்டு அவளின் அலுவலக பேருந்து வரும் நிறுத்தத்திற்கு அழைத்து சென்றார்.
அவர்களின் வீடு தெருவில் கடைசியில் உள்ளது. அவர்கள் இருக்கும் தெருவினை கடந்து வலப்பக்கம் திரும்பினாள் ரோடு வந்து விடும்.
வழக்கமாக அவள் நடந்து தான் செல்வது. இன்று புடவை அணிந்து சென்றால் நிச்சயம் தெருவை கடப்பதற்குள் அனைவரும் என்ன ஏது எதற்கு புடவை என விசாரிக்க ஆரம்பித்து விடுவர்.
அவர்களுக்கு நின்று பதில் அளித்து செல்லும் வரையிலும் பேருந்து இவளுக்காக காத்திருக்காது.
எனவே தான் இன்று தந்தையை அழைத்து செல்வது.
"ப்ரஷ்ஷர் பார்ட்டி" என்றாலும் வழக்கமான வேலைகளை காலையில் இருந்து பார்த்து கொண்டிருந்தனர். மாலையில் தான் அவர்கள் வழக்கமாக கூடும் மீட்டிங் ஹாலில் சின்னதாக மேடை அமைத்து அங்காங்கே பலூன்களையும் கலர் பேப்பர்ஸ்களையும் வைத்து அலங்கரித்திருந்தனர்.
மாலை ஆறு மணியளவில் பார்ட்டி தொடங்கி விட எம்.டி யில் தொடங்கி அவர்களின் டீம் லீடர் மற்றும் கூட பணியாற்றும் சக பணியாளர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு சிறு சிறு ஆலோசனைகளையும் அள்ளி தெறித்து தங்களின் உரைகளை முடித்து கொண்டனர்.
அதன் பிறகு பார்ட்டி சிறு சிறு விளையாட்டுகளோடும் குறும்புகளோடும் கலை கட்ட ஆரம்பித்திருந்தது.
இறுதியில் அவர்வர் டீம் லீடருடன் புகைப்படம் எடுப்பதுடன் பார்ட்டி நிறைவடைந்து விட அனைவருக்கும் மேனேஜ்மென்ட் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தது.
ராகவி தனது குழுவுடன் அமர்ந்திருந்தாள். அவர்களின் குழுவில் சீனியர்ஸ்ஸீம் இருந்தனர்.
"ம்ம்ம் கைடய்ஸ் வசந்த் ஜி நாளையில இருந்து இங்க சார்ஜ் எடுத்துக்கப் போராறாம்" என மதன் கூற
"என்ன மறுபடியுமா?????" என ஹரி வாய் பிளக்க….
"ஆமா ஹரி மறுபடியும் இங்க இருந்து ரிப்போர்ட் போயிருக்கு நம்ம குரு ஜி சொல்லிட்டு இருந்தாரு" என்றான் மதன்.
"என்னாச்சு சீனியர் யாரு அது வசந்த்" புதியதாக வந்த ஒருத்தி ஆர்வம் தாங்காமல் கேள்வி எழுப்ப??
"ஹோ உங்களுக்கு தெரியாதுல வசந்த் மெயின் ப்ரான்ஞ்ச்ல் வேலை பாக்குற டி.எல்(டீம் லீடர்) நம்ம ப்ரான்ஞ்ல இருந்து மன்த்லி மார்க்கேஸ் ரிப்போர்ட் கொடுப்போம்ல அது மேனஜ்மென்ட்க்கு திருப்தியா இல்லன்னா இவர டிரையினிங் குடுக்க அனுப்புவாங்க அவர் வந்தாருன்னா நம்மளுக்கும் டார்க்கேட் நிறைய புடிப்போம் அப்பறம் அவர் போனதும் டல்லாயிடும் இது அடிக்கடி நடக்குது தான் இங்க பாதி நாள் அங்க பாதி நாளுன்னு தான் இருப்பாரு…
இப்ப நீங்க ப்ரஷ்ஷர்ஸ் வந்துருக்கீங்கள ஷோ எக்ஸ்ட்ரா டிரையினிங் கொடுக்கவும் வருவாரு" என்றாள் அனிதா.
பேச்சினுடே சில சலசலப்புகள் கேட்க அனைவரின் கவனமும் அங்கு திரும்பியது.
"ஓ...வசந்த் ஜி வந்துருக்காரு போல வாங்க கைய்ஸ் போய் ஒரு ஹாய் சொல்லிட்டு வந்துட்டலாம்" என அனைவரும் அங்கே சென்றனர்.
பார்ட்டியில் பார்த்தவர்கள் எல்லாம் பிடித்து கொள்ள நின்று பேச ஆரம்பித்தான் வசந்தன்.
ஆள் பார்க்க நன்றாகவே இருந்தான் பார்ட்டிக்கு வருவதால் பார்மலில் அல்லாமல் கேஷீவலாக வந்திருந்தான். க்ரே கலர் முழுக் கை சட்டையும் சந்தன நிற பேண்ட்டும் அணிந்திருந்தான்.
தலை முடி அடங்குவேனா என சிலுப்பி கொண்டு முன் நெற்றியில் வந்து விழுந்து கொண்டிருக்க அதனை ஒரு கையால் ஒதுக்குவதை வேலையாக வைத்திருந்தான்.
நெற்றியில் வைத்திருந்த மெல்லிய சந்தன கோடு அவனை அழகாக காட்டியது போலும் அத்தனை அம்சமாக இருந்தது.
ஒரு வழியாக பேச்சு படலத்தில் கரையேறி வந்தவன் இவர்கள் குழு நின்றிருந்த இடத்திற்கு வர,
"ஹாய் வசந்த் சார்…...ஹாலோ ஜி…..நமஸ்தே பாஸ்…." என் பல குரல்களில் அவனை வரவேற்றனர் ராகவி குழுவினர்.
அனைவருக்கும் சிரித்தப்படியே பொதுவான "வணக்கத்தை" தெரிவித்தவன்,
"அப்பறம் பார்ட்டி எல்லாம் எப்புடி போகுது" என
"வழக்கம் போல தான் ஜி நீங்கள் தான் இந்த நிறுவனத்தின் தூண்கள்னு…!!!! தான் பேச்சை ஆரம்பிக்ககறாங்க வருஷம் மாறுனாலும் இவுங்க இந்த டையலாக்க மாற்ற மாட்டாங்க போல…..நான் வந்தப்போ சொன்ன அதே உருட்டு…" என,
மற்றவரகள் "கொல்" என சிரித்து வைத்தனர்.
"அடேய்…!!!!!" என வசந்தன் மிரட்ட,
"என்ன எல்லாரும் இன்ட்ரோ ஆகியாச்சா..???" என்றபடி அவர்களின் டி.எல் குரு வர,
" பொறுப்பான டி.எல் லா நீங்க தான் எங்கள இன்ட்ரோ கொடுத்துருக்கனும் எங்கே உங்களுக்கு அந்தா இருக்குற கேசரி சட்டியில இருந்தே தலைய எடுக்க இவ்வளோ நேரமாச்சு...எப்புடியும் சட்டி தீர்த்த பிறகு தான் வருவீங்க அதான் அதுக்குள்ள நாங்களே இன்ட்ரோ ஆகிடலாம்னு நெனச்சோம்…….
ஆனா பரவாயில்ல சட்டி சீக்கிரம் காலியாகிடுச்சு போல அதான் நீங்க வந்துட்டிங்களே…!!!!!!" என மறுபடியும் அங்கே ஒரு சிரிப்பலை.
பின் குரு ஒருவராக வசந்தனிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் ராகவியையும் அறிமுகம் செய்து வைக்க…..
இருவரும் சிறு சிரிப்புடன் கை குலுக்கி கொண்டனர்.
அதன் பிறகு வசந்தன் உண்ண சென்று விட்டான்.
ஒரு வழியாக பார்ட்டி நிறைவடைய இரவு மணி ஒன்பதுக்கு மேல் ஆகிற்று. அடுத்த நாள் ஞாயிற்று கிழமை என்பதால் யாரும் கிளம்புவதற்கு அவசரம் காட்டவில்லை.
பெண்களுக்கு அலுவலக பேருந்து இருந்ததால் பிரச்சனை இல்லை. சிறிது நேரத்தில் பஸ் கிளம்பி விட தனது குழுவிடம் விடை பெற்று கொண்டு ராகவியும் அவளது தோழியும் கிளம்பினர்.
பேருந்தின் அருகே சென்றவள் மெல்ல தனது கருவிழிகளை பக்க வாட்டில் சுழல விட அங்கே வசந்தன் உணவு உண்டு கொண்டிருந்தான். அவனை பார்த்தப் படி இவள் நின்று விட இவளின் பார்வையை உணர்ந்தானோ…!!!!!இல்லை எதேச்சையாக நிமிர்ந்தனோ…..!!!!!!!!
நின்று கொண்டிருந்தவளை பார்த்தவன் அவனையும் அறியாது மெல்ல தலையசைத்து போய் வருமாறு கூற…!!!! பதிலுக்கு தானும் தலையசைத்து விடை பெற்று பஸ்சில் ஏறி கொண்டாள் ராகவி.
வசந்தம் வரும்……..!!!!!!!
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்