All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உருக்கி கோர்த்தாய் உன் உயிரில்..." கதையின் கருத்து திரி

Vidhushi

Active member
மிருதன்-மிருதியுடைய வாய்ப்பைதான் தடுக்குறார்னு பார்த்தா, இவங்களைப் பிரிக்கிற அளவுக்குக் கீழான யோசனையா மகேந்திரனுக்கு 😠😠😠

மிருதிக்குத் தெரியவந்தது ஒருவேளை, மிருதன் அப்பா பத்தின விஷயமா?

Interesting epi @RamyaRaj sis
 

Vidhushi

Active member
மகேந்திரனுக்குக் கடைசியில் குற்றவுணர்வே தண்டனையாக மாறப்போகிறது‌.

மிருணாளினி-ம்யூசிக் கம்போசர் இடையிலயும் மகேந்திரன் எதுவும் பிரிக்கிற மாதிரி செஞ்சதுனாலாதான், அவனும் மிருணாவைத் தவிர்க்கிறானோ?

இருந்தாலும் மிருதி ஆசையை நிறைவேற்றியே தீருவான் மிருதன்.

Interesting @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
வாவ்.

மிருத்தஞ்சயன் - மிருதி

தன்னையும் உயர்த்தித் தன் இணையையும் உயர்த்தும் தூய நேசம்; சின்ன ஏக்கங்கள் கூட இல்லாமல் நிறைவாக்குதல்னு ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிட்டாங்க.

எந்த அங்கீகாரமும் மிருதனுக்குக் கிடைக்கக்கூடாதுனு தடுத்த மகேந்திரன், இனி தனக்குரிய உரிமையைக்கூட கேட்க முடியாத இடத்தில்... சபாஷ் மிருதா👍

லவ்லி எபி @RamyaRaj sis.
 
மிகவும் சுவாரஸ்யமான கதை....இன்னும் இன்னும் வேண்டும் என்று மனம் கேட்கிறது...மிருதன் - மிருதி இடையே உள்ள பிணைப்பு மிகவும் அருமை...ஒவ்வொரு கதை மாந்தருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அமைத்த விதம் அருமை...
விரிவாக கொடுக்காவிட்டாலும் சம்பூர்ணவதி மிருதன் இடையே உள்ள பாசம் நெஞ்சில் நீங்காமல் நிற்கிறது...

இந்த கதை மனதுக்கு நெருக்கமாக அமைய மற்றொரு காரணமாக நான் பார்ப்பது நீங்கள் இடைவிடாமல் கொடுத்த அத்தியாயங்கள்...பதிவுகள் தொடர்ந்து எழுத எந்தளவு கடின உழைப்பு தேவை என்பது புரிந்து கொள்ள முடிகிறது...உங்கள் கடின உழைப்புக்கு பலன் தரும் வகையில் மிகவும் நன்றாக இந்த கதை அமைந்துள்ளதாக எண்ணுகிறேன்...
மென்மேலும் வளர்க
 

Vidhushi

Active member
'மிருதனின் மிருதி' இந்த ஒற்றைக் குறிப்பிலேயே அனைத்தையும் நிறைத்த மாதிரி உண்ர்த்திட்டீங்க சிஸ்.

மகேந்திரன் - சம்பூர்ணவதி இதுக்கு மேல மாறினாலும் ஏதும் தாக்கம் மிருதன்-மிருதி கிட்ட இருக்குறமாதிரி வரும்னு தோணலை; மிருதியிடம் உறவுமுறைக்கான மரியாதை வேண்டுமானால் இருக்கலாம். இது என்னுடைய கருத்து/அனுமானம்.

ஆனால், உங்க எழுத்து நடையில் எப்படி தரப்போறீங்கன்றதை வாசிக்க வெயிட்டிங் @RamyaRaj sis.

மேன்மேலும் எழுத வாழ்த்துகள் 👍
 

Sanatony

Member
அழகான அருமையான கதை. மிருதனின் சொல்லாத காதலும் அழகு. மிருதியின் எல்லையில்லா காதலும் அழகு.
 
Top