All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "பகலவ நிலவே" கதை திரி 🌕🌝

Status
Not open for further replies.

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 20:



அடுத்த நாள் வெண்ணிலாவிற்கு உடல் நிலை சரியாகி விட்டது..



ஒரு நாள் மட்டும் ஓய்வெடுத்துக்கொண்டு அவள் ட்ரைனிங் கிளம்பிவிட்டாள்..



பகலவன் தான் அவளை காலையில் சென்று இறக்கி விட்டான்..



அவளை விட்டுவிட்டு தன் அலுவலக வேலையை பார்க்க செல்பவன், மாலை அவளையும் அழைத்துக்கொண்டு தான் வீட்டிற்கு வருவான்..



சில நாட்கள் அவனுக்கு வேலை அதிகமாக இருந்தாலும், அவளை கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டே செல்வான்.



"நான் ஒரு கேப் புக் பண்ணி வந்துக்கறேன் வர்மா.. நீங்க அலையாதீங்க.." என வெண்ணிலா கூறியதை எல்லாம் அவன் காதில் வாங்குவதே இல்லை.



அதே போல் சமையலும் இருவரும் மாறி மாறி தான் செய்தனர்..



பொதுவாக பகலவன் இருந்தால் அவளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, அவனே செய்வான்..



அவன் வர தாமாதமானால் மட்டுமே சமையலறை பொறுப்பை அவள் எடுத்துக்கொள்வது..



வார இறுதி நாள் என்றால் இருவரும் சேர்ந்தே செய்வார்கள்..



அன்றும் அப்படி தான் ஞாயிற்று கிழமை என்று இருவரும் எழுந்ததே தாமதமாக தான்..



முதலில் எழுந்து வெளியே வந்த வெண்ணிலா, ஹால் சோபாவில் படுத்து உறங்கி கொண்டிருந்த பகலவனை ஆசையாக பார்த்து கொண்டே சிறிது நேரம் நின்று விட்டாள்..



வந்த முதல் நாள் அவள் உடல் நலம் கருதி அவன் அவள் அருகில் படுத்ததோடு சரி, மறுநாளே, "வெளியில் தான் படுப்பேன்" என அடமாக கூறி விட்டான்.



"நான் உங்களை ஒன்னும் பண்ணிட மாட்டேன் வர்மா.. பேசாமல் இங்கேயே படுங்களேன்.." என அவள் கிண்டல் செய்த போதும்,



"வேண்டாம் பேபி.. எல்லாத்துக்கும் அடம் பிடிக்கக்கூடாது.." என அவளை அடக்கி விட்டவன், அவள் கெஞ்சியபோதும் ஒத்துக்கொள்ளவில்லை.



அவன் மேல் அவளுக்கு அலாதி நம்பிக்கை இருந்தது..



அவனுக்கும் நம்பிக்கை இருந்தாலும், "இது தப்பு பேபி" என்றுவிட்டு சென்றுவிட்டான்.



அவளும் அதிகம் வற்புறுத்தாமல் இதில் விட்டு விட்டாள்..



அவனை நினைத்து நெகிழ்வுடன் சிரித்துக்கொண்டவள், தன் தினப்படி வழக்கம் போல் அவன் முகத்தில் மென்மையாக ஊதி எழுப்ப, அவனும் மென்புன்னகையுடன் எழுந்து அமர்ந்தான்..



"வரேன் பேபி" என்றுவிட்டு சென்று ப்ரெஷ் ஆகி வந்தவன், நேரத்தை பார்க்க மணி பத்தாகி இருந்தது..



"ரொம்ப நேரம் தூங்கி விட்டேன் போலையே பேபி.. எழுப்பி இருக்கலாமே.." என கேட்டுக்கொண்டே பால்கனியில் அவள் கொடுத்த காபியுடன் அவன் அமர,



"ஆமா இங்கே வேலை பாலை போகுது பாருங்க.. பேசாம ரெஸ்ட் எடுங்க வர்மா.." என்றாள் வெண்ணிலா.



"ஹேய் நான் இத்தனை நேரமெல்லாம் தூங்கியதே இல்லை டி.. நீ என்னை சோம்பேறி ஆக்குகிறாய் பேபி.." சலிப்புடன் கூறியவனை பார்த்தவள்,



"சந்தோசமா வாழ வழி செய்கிறேன் என்று சொல்ல கூடாதா?" என்றாள் சீரியஸாக.



அவள் குரலின் வித்தியாசத்தில் தான் அவள் முகத்தை கவனித்தவன், "அஃப்கோர்ஸ் அஃப்கோர்ஸ் பேபி.. நான் இது போல் டென்ஷன் இல்லாமல் வாழ்ந்து பல வருடம் ஆச்சு டா.. நிஜமாவே ரொம்பவும் நிம்மதியா இருக்கேன்.. எல்லாம் என் பேபியால் தான்.." மனதார கூறிக்கொண்டே எழுந்தவன், அவளை மென்மையாக அணைத்துக்கொள்ள, அவன் தோளில் சாய்ந்துகொண்டவளுக்கு நிம்மதியாக இருந்தது..



"மதியத்துக்கு ஏதாவது செய்யவா பேபி?" என பகலவன் கேட்க,



"வெளியே போகலாமே வர்மா" என்றாள் வெண்ணிலா.



"சரி டா.. கிளம்பு.." என்றுவிட்டு அவனும் குளிக்க சென்றுவிட, அவன் குளித்து வந்ததும் அவளும் குளித்து கிளம்பி வந்தாள்..



இருவரும் சேர்ந்து பக்கத்தில் இருந்த பார்பிக்யூ ஹோட்டலுக்கு சென்றனர்..



பாணி பூரி ஸ்டாலிலேயே பத்து நிமிடத்திற்கு மேல் நின்றவளை, கடைசியில் பகலவன் தான் பிடித்து இழுத்து வந்து அமர வைத்தான்..



அவள் முறைத்ததில், "மத்ததெல்லாம் ட்ரை பண்ணனும் இல்லையா பேபி! இதிலேயே வயிறு நிரம்பி விட்டால் என்ன செய்வாய்?" என்று சொல்லி சமாளித்து வைத்தான்.



ஒருவாரு அங்கு உணவு முடிந்ததும், இருவரும் கிளம்பி வீட்டிற்கே வந்துவிட்டனர்..



வேலையாள் யாரும் வைக்காததால், இருவரும் தான் வீட்டை சுத்தம் செய்தனர்.



முக்கால் வாசி பகலவன் தான் செய்தான்..



அவள் ஏதோ சின்ன சின்ன உதவிகள் தான் செய்து கொண்டிருந்தாள்.



சாதா நைட் பேண்டும், டி ஷர்ட்டுமாக தலையில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு ஒட்டடை அடித்து கொண்டிருந்தவனை, சோபாவில் அமர்ந்துகொண்டு லேஸ் கொறித்து கொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள் வெண்ணிலா..



தன் போனில் அவன் செய்துகொண்டிருந்த வேலையை வீடியோ எடுத்துக்கொண்டவள், "தி கிரேட் பகலவ வர்மன் எம். எல். எ செய்யும் வேலையை பாருங்கள் என்று, யு டியூபில் போட்டால் வீடியோ செம ட்ரெண்ட் ஆகும் வர்மா" என அவள் கிண்டல் செய்ய,



"போடேன்.. இந்த பகலவ வர்மன் மட்டுமில்லை, எப்படி பட்டவனும் வீட்டில் இந்த வேலை எல்லாம் செய்து தான் ஆக வேண்டும்.. ஐயாக்கு அதிக மரியாதை தான் கிடைக்கும்.." சுவரில் ஒரு கண்ணும், அவள் மீது ஒரு கண்ணுமாய் அவன் சிரித்துக்கொண்டே கூற,



"அப்போ போட மாட்டேன் போங்க" என முறுக்கி கொண்டாள் அவள்.



கையில் இருந்த ஒட்டடை குச்சியை கீழே வைத்துவிட்டு, தலையிலும் மூக்கிலும் கட்டி இருந்த துண்டை கழட்டி கொண்டே அவள் அருகில் வந்தவன், "நான் வேலை செய்வதை மட்டும் போட்டால் போதுமா பேபி? ரொமான்ஸ் செய்வதை எல்லாம் போட வேண்டாமா?" என கேட்டுகொண்டே அவள் அருகில் அமர,



"அதுக்கு நீங்க ஏதாவது பண்ணனும்!" என்றாள் அவள் நக்கலாக.



"ஒரு மனிதன் நல்லவனா இருக்க கூடாதா டி?"



ஒரு மாதிரி ஆழமான குரலில் கேட்டுக்கொண்டே அவன் அவள் முகத்தருகில் நெருங்க, அதுவரை வாயடித்து கொண்டிருந்தவள், அதற்கு மேல் பேச்சு வராமல் படபடப்புடன் அவனை பார்த்தாள்..



மெதுவாக அவள் அருகில் நெருங்கியவன், மென்மையாக அவள் நெற்றியில் இதழ் பதித்தான்..



ஒற்றை விரலால் அவன் அவள் முகத்தில் கோலம் போட்டு கொண்டிருந்ததில், அவள் விழிகள் தானாக மூடி கொண்டது..



அடுத்து அவள் இரண்டு கண்களிலும் அவன் இதழ் பதிக்க, அவள் உடல் மென்மையாக சிலிர்த்தது.



அவன் உதடுகள் அவள் கன்னத்தில் அழுத்தமாக பதிந்த போது, அவள் இமைகள் மேலும் அழுத்தத்துடன் மூடி கொண்டது..



உதடு துடிக்க ஒரு வித படபடப்புடன் அவள் அமர்ந்திருக்க, அது வரை ஒரு வித மோன நிலையில் இருந்த பகலவனும் சட்டென விலகி விட்டான்.



அவன் விலகியதில் அவள் மெதுவாக கண் திறக்க, "இதற்கு தான் ஒரே வீடு வேண்டாம் என்றேன் பேபி" என்றான் அவன் அவள் முகத்தையே பார்க்காமல்.



"ம்ஹ்ம்.. இத்தனை நல்லவராக இருந்தால் நீங்க தேருவது ரொம்பவும் கஷ்டம் மிஸ்டர் வர்மா" நக்கலாக கூறியவளை ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து பார்த்தவன்,



"உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சு பேபி.." சீரியஸாக அவன் கூறியதில், அவனை நெருங்கி அமர்ந்தவள்,



"என்னிடம் ஏன் இந்த சங்கடம் வர்மா?" என மெதுவாக கேட்க, அவளை ஒருமாதிரி பார்த்தவன்,



"ஒன்னும் இல்லை பேபி.. நான் துணி காய போட போறேன்" என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.



அவன் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத பயம் உறுத்தி கொண்டே தான் இருந்தது.



அவன் காதலை சொன்ன போதே அவள் ஏற்று கொண்டிருந்தால் அவனும் இயல்பாக இருந்திருப்பான்.



ஆனால் அவளோ முதலில் மறுத்துவிட்டு, பின் திடீரென்று அல்லவா ஏற்று கொண்டாள்..



மனதில் ஏதேனும் நினைக்கிறாளோ என்ற சந்தேகம் இருந்தாலும், அது என்னவாக இருக்கும் என்று அவனால் கணிக்க முடியவில்லை.



அதனாலேயே சற்று எச்சரிக்கியுடனே இருந்தான்..



அவன் எழுந்து சென்றதும் வெண்ணிலா முகமும் வேதனையுடன் கசங்கி தான் போயிற்று..



தன்னால் அவன் இயல்பாக இருக்க முடியாமல் தவிக்கிறான் என புரியாத அளவு அவள் முட்டாள் இல்லையே!.



"சாரி வர்மா" என மனதார அவனிடம் மன்னிப்பு கேட்டு கொண்டவள் தன் கையில் இருந்த போனை பார்த்தாள்..



அது இத்தனை நேரம் கட் ஆகாமல், அவன் கொடுத்த இதழ் ஒற்றல்கள் வரை அழகாய் சேவ் ஆகி இருந்தது..



மேலும் சில நாட்கள் அமைதியாக ஓட, அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு சரியாக வெண்ணிலாவை எழுப்பினான் பகலவன்.



"பேபி.. பேபி.." என அவன் அவளை உலுக்க, தூக்கத்தில் இருந்து விழிக்கும் எண்ணமே இல்லாமல் அவன் மடியில் சாய்ந்து படுத்தவள்,



"பர்த்டே தானே கொண்டாட போறீங்க வர்மா.. நாளை காலை கொண்டாடிப்போம்.. இப்போ தூக்கம் வருது.." என்றாள் கண்களையே திறக்காமல்.



அவள் கூற்றில் ஒரு நொடி அதிர்ந்து விழித்தவனுக்கு, அடுத்த நொடி சிரிப்பு வந்துவிட்டது.



"உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த என்னை தான் பேபி அடிச்சுக்கணும்" என அவன் புலம்ப,



"நீங்க அடித்தால் வலிக்கும்.. நான் வேணும்னா அடிக்கவா?" என அவன் கன்னத்தில் தட்டினாள் வெண்ணிலா.



"தூக்கத்திலும் நக்கல் குறைகிறதா பார்?" என சிரித்துக்கொண்டவன்,



"ஹேய் பேபி, ஆசையா கேக் எல்லாம் வாங்கிட்டேன் டி.. கொஞ்சம் வாயேன்.." என மீண்டும் கெஞ்ச,



"எழுந்தே ஆகணுமா?" என கேட்டுக்கொண்டே மேலும் அவனுடன் ஒன்றினாள் வெண்ணிலா.



"பேபி ப்ளீஸ் டி.." மேலும் மேலும் அவன் கெஞ்சவும் அவனை கஷ்டப்படுத்த விரும்பாமல் கண்ணை கசக்கி கொண்டு எழுந்துவிட்டாள்..



நன்றாக சிவந்திருந்த அவள் கண்களை பார்த்தவன், "நல்லா தூங்கி விட்டாயா பேபி? சாரி டா... கண்ணெல்லாம் சிவந்து போச்சே.." என வருத்தப்பட,



"எழுப்பிவிட்டுட்டு உங்களுக்கு என்ன பீலிங்.. எனக்கு தான் பீலிங்.. வாங்க போய் கேக் சாப்பிடுவோம்.." என்று கூறிக்கொண்டே அவள் முன்னால் இறங்கிவிட, அவனும் அவளை தொடர்ந்து இறங்கினான்.



வெண்ணிலா முதல் வேலையாக சென்று முகத்தை அலம்பி கொண்டு தான் வந்தாள்..



மேலும் அவன் ஏதாவது கேட்டு வைத்தால் வம்பில்லையா..!



அழுதேன் என்று உண்மையையா சொல்ல முடியும்..!



தூக்கம் என்று அவன் நம்பும் வரை தான் அவளுக்கு நல்லது..



இருவரும் ஹாலுக்கு வர, அங்கு இதயவடிவ மெழுகுவர்த்திகளுக்கு நடுவில் அழகான கேக் வாங்கி வைத்திருந்தான் பகலவன்..



"இங்கே பெரிதா ஒன்றும் செய்ய முடியவில்லை பேபி" கவலையுடன் அவன் கூற,



"இதுவே பெரிது வர்மா" என அவனை தேற்றிவிட்டு கேக்கை வெட்டினாள் வெண்ணிலா.



சிறு துண்டெடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொள்ள, "ஹாப்பி பர்த்டே மை டியர் மூன் பேபி.. அடுத்த வருஷம் நம்ம குழந்தையுடன் இதே போல் நீ பர்த்டே கொண்டாட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" குறும்புடன் அவன் கூற, அதில் மென்மையாக சிரித்துக்கொண்டவள்,



"என் ஆசையும் அதே தான் வர்மா" என்றாள் சீரியஸாக.



"இரு பேபி வரேன்" என்றுவிட்டு சமையல் அறைக்குள் சென்றவன், சிறிய கப்பில் ஏதோ எடுத்து வந்தான்.



"பேபி ஆ காட்டு" என பகலவன் கூற, அவளும் என்ன ஏதென்று கேட்காமல் வாயை திறந்தாள்.



ஒரு சின்ன ஸ்பூனில் எடுத்து அவளுக்கு ஊட்டியவன், "எப்படி இருக்கு பேபி?" என்று கேட்க,



"ம்ம் சூப்பர் வர்மா.. பாஸந்தி எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எங்கே வாங்கினீங்க.." என்று கேட்டுக்கொண்டே அமர்ந்தாள் வெண்ணிலா.



அவள் அருகில் அமர்ந்து அவளுக்கு தொடர்ந்து ஊட்டியவன், "நானே தான் செய்தேன் பேபி" என்றான்.



"இப்படி எல்லாம் சமைக்க தெரிந்த ஒருவர் கிடைக்க நான் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் வர்மா.." குறும்பாக கூறியவளை பார்த்து சிரித்தவன்,



"நீ தான் பேபி எனக்கு முதல்.. மற்ற எல்லாமே அப்புறம் தான்.. உனக்கு செய்யாமல் யாருக்கு செய்ய போகிறேன்.." மனதார தான் அவன் கூறினான்.



"நிஜமாவா வர்மா?" சந்தேகம் போல் கேட்டவளை முகம் சுருங்க பார்த்தவன்,



"என் மேல் நம்பிக்கை இல்லையா பேபி?" என்றான்.



"நிறையவே இருக்கு வர்மா" என சிரித்துக்கொண்டே அவள் கூறியதில் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.



"சின்ன கிபிட் பேபி" என அவன் ஒரு சிறிய கிபிட் டப்பாவை நீட்ட,அதை வாங்கி பிரித்து பார்த்தாள் வெண்ணிலா..



அதில் அழகிய வைர தோடு இருந்தது..



ஒற்றை கல் காதிலும், ஒற்றை ட்ராப்ஸ் கீழும் தொங்குவது போல் கச்சிதமாக அத்தனை அழகாக இருந்தது.



"ரொம்ப அழகா இருக்கு வர்மா.. ஆனால் வைரமா..?" என அவள் தயங்க,



"பேபி ப்ளீஸ்..." என்றான் அவன் கோபப்பட முடியாமல்.



அதில் அவளும் சட்டென முகத்தை மாற்றி கொண்டாள்..



"போட்டுக்கவா?" என அவள் கேட்க,



"அஃப்கோர்ஸ் பேபி" என்றவன் குரலில் உற்சாகம் மீண்டிருந்தது..



தன் காதில் இருந்த தங்கத்தை கழட்டிவிட்டு, அவன் கொடுத்த தோடை போட்டுக்கொண்டவள், "நல்லா இருக்கா வர்மா?" என இருபக்கமும் திருப்பி திருப்பி காட்ட,



"அழகு டி" என அவளை அணைத்துக்கொண்டான் பகலவன்..



"வர்மா இந்த கிபிட் இருக்கட்டும்.. நாளை நான் ஒரு கிபிட் கேட்பேன்.. அதுவும் வாங்கி தரணும்.." அவன் அணைப்பில் வாகாய் ஒன்றிக்கொண்டு அவள் கேட்க,



"உனக்கு இல்லாததா பேபி? வாங்கிட்டா போச்சு.. என்ன வேணும் என் பேபிக்கு?" என்றான் அவன்.



"அது நாளைக்கு தான் கேட்பேன்.. இப்போ தூக்கம் வருது" என்றவள் அப்படியே அவன் மீதே தூங்கியும் போனாள்.



அவனும் எப்போதும் போல் அவளை தூக்கி சென்று உள்ளே விட்டுவிட்டு அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு படுத்துவிட்டான்..



மறுநாள் அவள் பிறந்த நாள் பரிசு கேட்கிறேன் பேர்வழி என அவனுக்கு மற்றொரு பெரிய அதிர்ச்சியாக கொடுத்தாள்..



இவளிடம் அவசரப்பட்டு வாங்கி தருவதாக கூறி இருக்க கூடாது என பகலவன் தன்னை தானே தான் நொந்துகொள்ள வேண்டி இருந்தது..

குளிரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 21:



மறுநாள் காலை இருவரும் எழுந்ததும் வெண்ணிலாவை மீண்டும் ஒரு முறை பகலவன் வாழ்த்த, அதே நேரம் அவள் அன்னை, தங்கை, செழியன், மது என அனைவரும் போனில் வாழ்த்தினர்..



செழியன் மதுவிற்கு பகலவன் தான் கூறி இருந்தான்..



செழியனிடம் பேசியதும் பகலவனிடம் போனை கொடுத்துவிட்டு வெண்ணிலா குளிக்க சென்று விட, பகலவன் சமைத்துக்கொண்டே செழியனிடம் பேசினான்.



"ஒன்னும் பிரச்சனை இல்லையே ண்ணா? எல்லாம் ஸ்மூத்தா போகிறது தானே?" என பகலவன் கேட்க, ஒரு நொடி தொடர்ந்து ப்ரெஸ்ஸர் கொடுக்க முயற்சிக்கும் ரக்ஷனின் முகம் அவன் கண் முன் தோன்ற தான் செய்தது..



இருந்தும் இத்தனை மென்மையாக மாறி இருக்கும் பகலவனை எதற்காகவும் கெடுக்க அவன் விரும்பவில்லை..



"ஒன்னும் இல்லை பகலவா.. எல்லாம் ஓகே தான்.." என அவன் தெளிவாகவே கூறியதில், பகலவனும் போனை வைத்துவிட்டான்.



அன்று வீட்டிலேயே சமைக்கலாம் என முடிவெடுத்திருக்க, பகலவன் தான் சமைத்து கொண்டிருந்தான்..



பொதுவாக வெண்ணிலா பிறந்தநாளன்று அவள் வீட்டில் விருந்து போல் அன்னை எல்லாம் செய்வார்கள் என அவள் கூறி இருக்க, தானும் அதையே செய்கிறேன் என களத்தில் இறங்கி இருந்தான் பகலவன்.



சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், வடை, பாயசம் என எல்லாம் செய்தான்..



வெண்ணிலா அவனுடனே இருந்து காய்கறிகள் நறுக்கி கொடுப்பது, தேங்காய் துருவி கொடுப்பது போல் செய்து கொண்டிருந்தாள்..



இடை இடையில் இருவரும் ஒருவருக்கொருவர் சீண்டிக்கொள்ளவும் தவறவில்லை..



அவன் சமைத்து முடித்துவிட்டு, "ஆச்சு பேபி" என கைகளை உதறி கொண்டு நிமிர,



"நீங்க வேற லெவல் வர்மா" என அவன் கழுத்தை கட்டி கொண்டு பாராட்டினாள் வெண்ணிலா..



"பாராட்டெல்லாம் இருக்கட்டும் பேபி.. நான் குளித்துவிட்டு வரும் வரை வெயிட் பண்ணு.. நீயே காலி பண்ணி விடாதே மா.. மீ பாவம்.." வேண்டுமென்றே அவன் கிண்டலடிக்க,



"என் வர்மா செய்ததை நான் முழுசா கூட சாப்பிடுவேன்.. உங்களுக்கு என்னவாம்?" என நொடித்துக்கொண்டவள், ஒரு வடையை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு செல்ல, அவனும் சிரித்து கொண்டே குளிக்க சென்றான்..



அவன் வந்ததும் இருவரும் ஒன்றாக அமர்ந்தே உணவை முடித்தனர்.



"என் அம்மா செய்தது போலவே இருக்கு வர்மா" என சாப்பிட்டு முடித்ததும் அவள் நெகிழ்வுடன் கூற,



"நான் உனக்கு அம்மாவும் தான் பேபி" என மென்மையாக அவள் நெற்றியில் இதழ் ஒற்றினான் பகலவன்.



கையில் பாயசத்துடன் இருவரும் பால்கனியில் வந்து அமர, ஒரு பக்கம் பகலவன் எப்போதும் போல் பாடலை ஒலிக்க விட்டான்..



"சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல தேதி



என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக



நான் உனை நீங்க மாட்டேன்

நீங்கினால் தூங்க மாட்டேன்

சேர்ந்ததே நம் ஜீவனே



சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல தேதி



என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக



வாய் மொழிந்த வார்த்தை யாவும்

காற்றில் போனால் நியாயமா

பாய் விரித்து பாவை பார்த்த

காதல் இன்பம் மாயமா



வாள் பிடித்து நின்றால் கூட

நெஞ்சில் உந்தன் ஊர்வலம்

போர்க்களத்தில் சாய்ந்தால் கூட

ஜீவன் உன்னை சேர்ந்திடும்



தேனிலவு நான் வாட

ஏனிந்த சோதனை



வானிலவை நீ கேளு

கூறும் என் வேதனை



எனைத்தான் அன்பே மறந்தாயோ



மறப்பேன் என்றே நினைத்தாயோ



என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக



சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல தேதி"



நடக்கப்போவதை முன்பே சொல்லுவது போல் ஒலித்த பாடலை கேட்டு வெண்ணிலாவின் மனம் நெகிழ்ந்து தான் விட்டது..



பகலவன் அருகில் சென்று அவன் தோளில் சாய்ந்து நின்றுகொண்டவள், அமைதியாக பாட்டை ரசித்து கொண்டிருந்தாள்..



சிறிது நேரத்தில், "ஏதோ கேட்டாயே பேபி.. வெளியில் போவோமா?" என பகலவன் கேட்க,



"ம்ம் போகலாம் வர்மா.. கண்டிப்பா வாங்கி தரணும்.." என அவள் விளையாட்டு போல் மீண்டும் கூற,



"நீ எதை கேட்டாலும் நான் வாங்கி தருவேன் பேபி.. வா.." என அவளை அழைத்து சென்றான் பகலவன்.



அவள் அவனை அழைத்து சென்றது ஒரு நகை கடைக்கு..



'நகைக்கெல்லாம் இவள் ஆசைப்பட மாட்டாளே!' என அப்போதே அவனுக்குள் ஒரு அபாய மணி ஒலித்தது.



உள்ளே சென்று அவள் தேர்ந்தெடுத்த நகையை பார்த்து உண்மையாகவே அவனுக்கு அதிர்ச்சி தான்.



"பேபி இது என்னவென்று தெரிந்து தான் கேட்கிறாயா?" என அவன் அதிர்ச்சியுடன் கேட்க,



"தெரியுமே" என்றாள் அவள் சாதாரணமாக.



"ப்ச் பேபி, இது இந்த ஊரில் தாலியாக கட்டுவது.. அழகாக இருக்கிறது என்று இதற்கெல்லாம் ஆசைப்படாதே! இதே போல் கொஞ்சம் வேறு டிசைனில் ஏதாவது வாங்கி தரேன்.. வா பேபி.." தன்மையான குரலில் பகலவன் கெஞ்ச,



"எனக்கு தெரியும் வர்மா.. எனக்கு இது வேண்டும்.. என் பிறந்தநாள் பரிசா எது கேட்டாலும் வாங்கி தரேன்னு சொல்லி இருக்கீங்க.. வாங்கி கொடுங்க.." என்றாள் அடமாக.



"இப்போது இது எதுக்கு பேபி உனக்கு?" குழப்பத்துடன் அவன் கேட்க,



"சொல்லுறேன் வர்மா.. முதலில் வாங்குங்க.." என்றவள் அதற்கு மேல் அவன் பேச்சை கேட்காமல், அதை பில் போடவும் எடுத்து கொடுத்துவிட்டாள்.



அவள் கூறியதை தட்ட முடியாமல் வேறு வழி இன்றி பணத்தை கட்டி அதை வாங்கி வந்தான் பகலவன்..



பக்கத்தில் இருந்த கோவிலுக்கு அவள் அவனை நடத்தியே அழைத்துச்செல்ல, அவனும் அமைதியாக அவளுடன் நடந்தான்..



கோவிலில் சாமியை கும்பிட்டுவிட்டு ஒரு பக்கம் வந்து இருவரும் நின்றுகொள்ள, "எனக்கு போட்டு விடுங்க வர்மா" என தன் கையில் இருந்த செயினை நீட்டினாள் வெண்ணிலா..



இதை அவன் எதிர்ப்பார்த்தே இருந்ததால் பெரிதாக ஒன்றும் அதிர்ந்து விடவில்லை..



"திருட்டு கல்யாணம் பண்ணும் அளவு நமக்கு எந்த தேவையும் இல்லை பேபி.. ஊரறிய மகாராணி போல் உன்னை நான் கல்யாணம் பண்ணிப்பேன்.. இதெல்லாம் வேண்டாம்.." கைகளை கட்டிக்கொண்டு அழுத்தமாக அவன் மறுக்க,



"அந்த திருமணம் பகலவன் கூட தானே நடக்கும் வர்மா.. என் வர்மனுடன் நடக்காதே..! எனக்கு என் வர்மன் தான் வேண்டும்.. இந்த வர்மனை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறேன்.. இப்படியே கொஞ்ச நாளாவது வாழணும்னு ஆசையா இருக்கு.. ப்ளீஸ் வர்மா.. மறுக்காமல் என்னை ஏத்துக்கோங்க.." கெஞ்சலாக அவள் கேட்க, அவள் பால் அவன் மனம் இளகினாலும், அவள் நிதர்சனத்தை புரிந்துகொள்ளவில்லையே என அவனுக்கு கவலையாக தான் இருந்தது.



"பகலவனும் வர்மனும் சேர்ந்தது தான் பேபி நான்.. என்னில் ஒருவனை மட்டும் நீ பிரிக்க முடியாது டா.. இரண்டையும் சேர்த்து தான் நீ ஏற்றுக்கொள்ளனும்.." அவன் கூற்றில் அவள் முகம் சுருங்க ஒரு நிமிடம் அமைதியாக நின்றிருந்தாள்..



பின் என்ன யோசித்தாளோ, தன்னை தானே தேற்றி கொண்டு நிமிர்ந்தாள்..



"நானும் மறுக்கவில்லையே வர்மா.. எனக்கு கிடைத்திருக்கும் கொஞ்ச நாளில் மட்டுமாவது என் வர்மனுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.. அது கூட தப்பா.. என்னை நெருங்க நீங்க ஒவ்வொரு முறையும் தயங்குறீங்க வர்மா.. நான் முழுவதும் உங்களுக்கு உரிமையுடையவளா இருக்கணும்.. அவ்வளவு தான்.. அதுவும் நாம் மட்டுமேயான இந்த அழகான உலகில், எந்த தயக்கமும் இல்லாமல் இருக்கணும்.. இது என் ஆசை வர்மா.. மீண்டும் இது போல் அமையுமா தெரியவில்லை.. அதான் இப்போது ஆசை படுகிறேன்.. ப்ளீஸ் வர்மா.." கெஞ்சலாக அவள் கேட்க, அதற்கு மேல் அழுத்தமாக பேச முடியாமல் அவள் கைகளை பிடித்து கொண்டவன்,



"பேபி நாம் வருடத்திற்கு ஒன்றிரெண்டு முறை இது போல் வருவோம் டா.. இதில் என்ன இருக்கு..!" என்றான் மென்மையாக.



"நாளைக்கே நான் செத்துட்டா யாருடன் வருவீங்க?” பட்டென அவள் கேட்டுவிட,



"அறைந்து விடுவேன் ராஸ்கல்..! என்ன பேசுகிறாய்!" என கோபத்துடன் கையை உயர்த்தி விட்டான் பகலவன்.



"நெருப்பென்று சொன்னாலே வாய் வெந்து விடாது வர்மா.. இருக்கும் நாளில் வாழ ஆசைப்படுகிறேன்.. தப்பா..?" அவன் கோபத்தை பொருட்படுத்தாமல் அவள் கேட்டதில், அவன் கைகளை தானாக இறங்கி விட்டது.



"இதை தான் இத்தனை நாள் போட்டு உளப்பிக்கொண்டிருந்தாயாக்கும்?" சலிப்புடன் அவன் கேட்க, ஒரு நொடி உள்ளுக்குள் திடுக்கிட்டாலும் வெளியில், "ம்ம்" என்று முனகி வைத்தாள் வெண்ணிலா.



ஏனோ அதற்கு மேல் அவள் ஆசையை அவனால் தட்ட முடியவில்லை..



அவள் கடைசி வரிகள் அவனையும் உலுக்கி விட்டிருந்தது.



இப்போது அவள் ஆசையை மறுத்து நாளை ஏதேனும் ஆகிவிட்டால் அவனாலும் தாங்க முடியாதே..



"கொடு பேபி" என அவன் கைநீட்ட, அவனை ஆச்சர்யமாக பார்த்தாலும், எதிர் கேள்வி கேட்காமல் தன்னிடம் இருந்த செயினை அவனிடம் நீட்டினாள் வெண்ணிலா.



அவளை அழைத்து கொண்டு கடவுள் சன்னதி எதிரில் சென்றவன், "இந்த பிறவியில் என் வாழ்க்கை துணை நீ தான் பேபி.. இதில் என்றுமே எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை.. உனக்கு இது தான் சந்தோஷம் என்றால், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை டா.." என்றவன் அவள் கண்களை பார்த்து கொண்டே அந்த கருகுமணிகள் கோர்த்த தாலியை அவள் கழுத்தில் அணிவித்து விட்டான்..



அங்கிருந்த குங்குமம் எடுத்து அவள் வகிட்டில் வைத்துவிட்டவன், அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து, "லவ் யு மூன் பேபி" என கூறி நகர, "லவ் யு வர்மா" என்றாள் அவளும் மனதார..



கழுத்தில் இருந்த தாலியை பார்த்தவளுக்கு லேசாக கண்கள் கலங்க, அதை துடைத்துவிட்ட பகலவன், "போலாமா பேபி" என கேட்க, "ம்ம்" என தலையை உருட்டினாள் அவள்..



அவள் தோளில் அழுத்தமாக கைபோட்டு அழைத்துபோனவனுக்கு, இப்போது உண்மையாகவே பல தயக்கங்கள் விலகி தான் இருந்தது..



இன்னுமும் தன்னவள் மனம் சரியாக தெரியாவிட்டாலும், தன்னை மீறி எதுவும் நடந்து விடாது என்னும் நம்பிக்கை அவனுக்கு இருந்தது..



சில சமயம் ஆள் கடல் போலான பெண் மனதிற்கு முன், புத்திசாலியான ஆண்களும் தோற்று தான் விடுகின்றனர் போல்..!



"எங்கே போலாம் பேபி?" என கேட்டுக்கொண்டே அவன் காரை எடுக்க,



"எங்கே என்றாலும் சரி தான் வர்மா.. உங்கள் இஷ்டம்.." என்று விட்டு அவன் தோளில் மனநிறைவுடன் சாய்ந்து கொண்டாள் அவள்...



பகலவன் அவளை நேராக ஒரு பீச்சிற்க்கு தான் அழைத்து சென்றான்..



அங்கிருந்த பிச் சென்னை பீச் போல் இல்லாமல், சற்றே வித்தியாசமாக இருந்தது..



மண்திடலில் இருந்து படிகளில் இறங்கி தான் பீச்சிற்கு செல்ல வேண்டும்..



அதிக வேகமான அலையாக இல்லாமல், பொறுமையாய் நின்று அனுபவிப்பது போல் அலைகள் காலை மட்டும் தான் நனைத்தது..



மக்கள் உள்ளே வரை சுலபமாக சென்றனர்..



பகலவனும் வெண்ணிலாவும் உள்ளே செல்ல மனமில்லாமல், முன்பாகவே நின்று கொண்டனர்..



அவன் கைகளை விடாமல் அழுத்தமாக பிடித்துக்கொண்டிருந்தவள், "ரொம்ப அழகா இருக்கு வர்மா" என்று கூற,



"எஸ் பேபி" என்றவன் தொடர்ந்து,



"இங்கே ஒட்டக சவாரி உண்டு பேபி.. போவோமா?" என்றான்.



அவன் காட்டிய திசையில் அவள் பார்த்தபோது, ஒரு மிக பெரிய ஒட்டகத்தில் ஏதோ குடும்பம் சவாரி போய் கொண்டிருந்தது..



"ரொம்ப பெருசா இருக்கே!" சிறு பயத்துடன் அவள் கூற,



"நான் இருக்கும் போது என் பேபிக்கு என்ன பயம்?" என்றான் பகலவன் மென்மையாக.



அதில் அவள் பயமும் கலைந்து விட, "அதானே அந்த பயத்துக்கு எத்தனை தைரியம் இருக்க வேண்டும்!" என வெண்ணிலா கிண்டல் செய்ய, சிரித்துக்கொண்டே அவளை அழைத்து சென்றான் பகலவன்.



ஒரு ஒட்டகக்காரனிடம் பேசி பணம் கொடுத்தவன், "போலாம் பேபி" என்றுவிட்டு அவளுக்கு கை நீட்டினான்..



பெரிய படிக்கட்டுகள் போல் தனியாக வைத்திருந்தனர்.. அதில் ஏறி தான் ஒட்டகத்தில் ஏற வேண்டும்..



முன்னால் ஏறி கொண்ட பகலவன், கைபிடித்து அவளை மெதுவாக அழைத்து சென்றான்.



அவளும் படி ஏறி முடித்ததும், முதலில் அவளை தூக்கி அமர வைத்தவன், அவள் கையை விடாமல் தானும் பின்னால் ஏறி கொண்டான்..



அந்த பீச் மணலில் ஆடி ஆடி ஒட்டகம் நடந்ததில், பயத்துடன் கண்களை மூடி கொண்டவள், தன்னை சுற்றி வளைந்திருந்த பகலவனின் கையை அழுத்தமாக பிடித்து கொண்டாள்..



"பயமா இருக்கு வர்மா" என அவள் அழுத்தமாக கண்களை மூடி கொள்ள,



"ஷ்ஷ் பேபி.. நீ என் கைகளுக்குள் இருக்கிறாய்.. என்ன பயம் உனக்கு? கண்ணை திறந்து பாரு பேபி.." என அவள் காதோரம் அவன் ஆழமான குரலில் கூற, அந்த குரலுக்கு கட்டுப்பட்டு அவள் கண்கள் தானாக திறந்து கொண்டது..



சிறு வயதில் தந்தையுடன் ஒரே ஒரு முறை யானை சவாரி போய் இருக்கிறாள்..



இப்போது அவளுக்கு அது தான் நினைவு வந்தது..



ஆடி ஆடி மெதுவாக ஒட்டகம் நடக்க நடக்க, தன்னை விட நான்கு மடங்கு உயரத்தில் இருந்து பீச்சை பார்ப்பது தனி அழகாக இருந்தது..



ஒரு முறை சுற்றியதும் இருவரும் இறங்கி விட்டனர்..



"நல்லா இருந்ததா பேபி?" என கேட்டுக்கொண்டே பகலவன் நடக்க,



"ம்ம் சூப்பர் வர்மா" என்றாள் அவள் சிறுபிள்ளை போல்.



"பயந்த பெண்ணா இது?” என அவளை நக்கலடித்துகொண்டே வந்தவன், அவள் கேட்ட ஐஸ் க்ரீமும் வாங்கிக்கொடுத்தே அவளை மீண்டும் அழைத்து வந்தான்..



இருவரும் வீட்டிற்கு வந்ததுமே குளித்துவிட்டு தான் வந்தனர்..



வரும் வழியிலேயே சாப்பிட்டு வந்திருந்ததால், சமைக்கும் வேலை இருக்கவில்லை..



பகலவன் அவள் பிறந்தநாளுக்கென்று இரண்டு சுடிதார், இரண்டு புடவை என எடுத்திருந்தான்..



காலையில் சுடிதாரில் சென்றிருந்தவள், இப்போது புடவை கட்டிக்கொண்டு வந்தாள்..



அவளுக்கு முன்பே குளித்திருந்த பகலவன் பால்கனியில் நின்று கொண்டிருந்தான்..



சீகைக்காய் நறுமணத்துடன், தலையை துவட்டி கொண்டே புடவையில் வந்தவளை பார்த்தவனுக்கு ஒரு நொடி மூச்சே நின்று போயிற்று.



"நல்லா இருக்கா வர்மா? நான் அதிகம் புடவையே கட்டியதில்லை.. சரியா கட்டி இருக்கேனா?" என அவள் சாதாரணமாக கேட்க, எந்த பதிலும் கூறாமல் அவளை நெருங்கியவன், அவள் வெற்றிடையுடன் சேர்த்து அவளை அணைத்துக்கொள்ள, அவளாலும் அதற்கு மேல் பேச முடியாமல் போயிற்று..



"சரியாவே இல்லை பேபி.. நான் வேண்டுமானால் கழட்டிட்டு மீண்டும் கட்டிவிடவா?"



அவள் காதருகில் அவன் மீசை ரோமங்கள் உரசியதில், அவளுக்கு உடல் முழுவதும் சிலிர்த்து போயிற்று..



அவள் கழுத்தில் அழுத்தமாக அவன் உதடுகள் படிய, அவன் மீதே கொடி போல் படர்ந்து போனாள் பெண்ணவள்..



"பேபி உனக்கு சம்மதமா? இல்லை ஊரில் போய் எல்லாருக்கும் சொல்லி திருமணம் செய்த கொண்டு வாழ்க்கையை தொடங்குவோமா?" அணைப்பை விலக்காமலே அவன் கேட்க,



"நீங்க தேறவே மாட்டீங்க மிஸ்டர் வர்மா.." என்றாள் அவளும் மென் குரலில் கிண்டலாக..



"ஆஹா அப்படியா? வா.. தேறுவேனா இல்லையா என்று பார்த்து விடுவோம்.." என அவளை கையில் தூக்கி விட்டவன், உள்ளே வந்து கட்டிலில் தான் அவளை விட்டான்..



முறையான அங்கீகாரம் இல்லாமல் பெண்ணவளை தீண்ட கூடாது என ஒதுங்கி இருந்த அவன் ஒத்துமொத்த காதலும், இன்று தான் வெளிப்பட்டது...



அவள் இதழ் தீண்ட கூட யோசித்தவன் காண்பித்த வேகத்தில், அவள் தான் தவித்து போனாள்..



இருந்தும் விரும்பியே கணவனுக்கு தன்னை ஒப்பு கொடுத்தாள்..



மீண்டும் மீண்டும் வேண்டிய அவன் தேடலுக்கு எந்த மறுப்பும் கூறாமல் கணவனுடன் அழகாய் வாழ்க்கையை தொடங்கினாள் வெண்ணிலா..



நள்ளிரவிற்கு மேல் அவளை விட்டு விலகியவன், "ரொம்ப படுத்தறேனா பேபி?" என மெதுவாக கேட்க,



"இல்லை வர்மா" என்றவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்..



"பேபி நமக்கு திருமணம் முடிந்து விட்டது.. எந்த காலத்திலும் மறுத்துவிட மாட்டாய் தானே..!"



ஏதோ இனம் புரியாத பயத்துடன் அவன் கேட்க, "இப்படியெல்லாமா சந்தேகம் வரும்..? உங்களை என்ன செய்யலாம்!" என அவள் அவன் கையை அழுத்தமாக கடித்து வைக்க, அங்கும் மீண்டும் ஒரு கூடல் அழகாய் ஆரம்பமானது..

குளிரும்.

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 22:



அடுத்து வந்த நாட்கள் வெகு அழகாய் சென்றது..



வெண்ணிலாவை பகலவன் கையில் வைத்து தாங்கினான் என்று தான் சொல்ல வேண்டும்..



சும்மாவே அவளுக்காக பார்த்து பார்த்து செய்பவன், திருமணம் என்று ஆனபின் மேலும் மேலும் அவளை தலையில் வைத்து தாங்கினான்..



அதே நேரம் அவன் காதலும் எப்போதும் அவளால் தாங்க முடியாத அளவு தான் வெளிப்படும்..



காலையில் நீண்ட இதழ் யுத்தத்தில் ஆரம்பிக்கும் நாள், அதே போல் முடியும் போது, திகட்ட திகட்ட கிடைத்துக்கொண்டிருக்கும் அவன் காதலில் அவள் மொத்தமாக மூழ்கி தான் போனாள்..



இருவருமே வெளி உலகையே மறந்துவிட்டனர்..



இருவர் மட்டுமே உலகம் என்னும் நிலையில் சென்றுகொண்டிருந்தது அவர்கள் நாட்கள்..



அன்று மாலை மனைவியை அழைத்துச்செல்ல கோர்ட்டுக்கு வந்திருந்தான் பகலவன்.



அவனை பார்த்ததும் ஒருவித துள்ளலுடன் வந்து அவள் காரில் ஏறிக்கொள்ள, அவள் நெற்றியில் மென்மையாக இதழ் ஒற்றிவிட்டு காரை எடுத்தான் பகலவன்..



"ட்ரைனிங் எல்லாம் எப்படி போகுது பேபி? என் வேலை கிட்டத்தட்ட முடிய போகிறது.. உனக்கு எப்போது ட்ரைனிங் முடியும் டா?" என பகலவன் கேட்க, ஒரு நொடி இங்கிருந்து போக வேண்டும் என்று நினைத்தாலே வெண்ணிலாவிற்கு பெரும் வேதனையாக இருந்தது..



"ட்ரைனிங்கும் முடிய தான் போகுது வர்மா.. இன்னும் ஒரு ஒரு மாதம் வேணா இருக்கும்.." என அவளும் தாழ்ந்த குரலில் கூற,



"டன் பேபி.. ட்ரைனிங் முடிச்சுட்டு கிளம்புவோம்.. நீ சென்னை போய் ப்ராக்ட்டிஸ் கண்டின்யு பண்ணிக்கோ.. ஓகே தானே..?" சாதாரணமாக பகலவன் கேட்க,



"இல்லை என்றால் இங்கேயே இருப்பீர்களா?" என்றாள் அவள் ஒரு மாதிரி குரலில்.



அவள் குரலில் தெரிந்த வித்தியாசத்தில் திரும்பி பார்த்தவன், "பேபி" என அழைக்க, அதில் அவளும் நொடியில் சுதாரித்து கொண்டாள்.



"எனக்கு மாசால் தோசை வேணும்" என அவள் சட்டென பேச்சை மாத்த, அவள் தலையை மென்மையாக கோதி கொடுத்தவன்,



"பண்ணி தரேன் பேபி.. இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு போக எனக்கும் மனம் இல்லை தான்.. ஆனால் நம் வாழ்க்கை அங்கே தான் இருக்கு பேபி.. என்னை நம்பி நிறைய பேர் இருக்காங்க டா.. நான் பார்த்துக்கொள்ள தொடங்கிய நாளில் இருந்து இத்தனை வருடங்களில், நான் வெளியில் வந்திருப்பதே இது தான் முதல் முறை.. போய் தான் ஆகணும்.. எங்கு போனாலும் உனக்கு வர்மன் காதல் கணவன் தான் பேபி.. அது மாறவே மாறாது.."



அவள் மனதின் பயத்தை போக்க தான் அவன் முயன்றான்..



அவன் கூற்றில் அவளும் மெலிதாக சிரித்ததில், புரிந்துகொண்டாள் என்று தான் அவனும் நினைத்தான்.



அவள் பயத்தின் காரணம் அந்த நொடி அவனுக்கு புரியாமல் போனது பரிதாபமே..!



வரும் வழியிலேயே உருளை கிழங்கு, வெங்காயம் எல்லாம் வாங்கி வந்து விட்டனர்..



வீட்டிற்கு வந்து ப்ரெஷ் ஆனதும் பகலவன் சமையலில் இறங்கிவிட்டான்..



ஒரு பக்கம் உருளைக்கிழங்கை வேக போட்டுவிட்டு அவன் வெங்காயத்தை நறுக்க, அவன் அருகிலேயே சமையல் திண்டில் ஏறி அமர்ந்து கொண்டாள் வெண்ணிலா..



"நான் ஏதாவது கட் பண்ணனுமா வர்மா?" என அவள் கேட்க,



"இல்லை பேபி.. நான் பார்த்துக்கறேன்.. நீ இதை சாப்பிடு.." என ஒரு ஆப்பிளை எடுத்து கொடுத்தான் பகலவன்.



வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்ததில் அவன் கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வந்து கொண்டிருந்தது..



"எதற்குமே கலங்காத என் வர்மனை கலங்க வைக்கும் சக்தி கொண்ட ஒரே ஆயுதம் என்ன தெரியுமா வர்மா?" ஆப்பிளை கொறித்து கொண்டே அவள் கேட்க,



"நீ தான் பேபி" என்றான் அவன் பட்டென.



அதில் நெகிழ்ந்த மனதை கட்டுப்படுத்தி கொண்டு சிரித்தவள், "தவறான பதில் மிஸ்டர் வர்மா" என்று கூற, அவளை புரியாமல் பார்த்தான் பகலவன்.



"அந்த அறிய பெரிய ஆயுதம் இந்த வெங்காயம் தான்" என சிரித்து, அவனிடம் ஒரு கொட்டையும் பரிசாக வாங்கி கொண்டாள்..



"இப்படி நீங்களே சமைக்கறீங்களே வர்மா, என்னை செய்ய சொல்லும் ஐடியாவே இல்லையா?"



"உனக்கு தோணும் போது நீ செய் பேபி.. மற்றபடி நான் பார்த்துக்கொள்வேன்.. சமையல் ஒன்றும் பெண்களுக்கு என்று விதிக்கப்பட்ட வேலை இல்லை.."



சமைத்துக்கொண்டே அவன் சாதாரணமாக கூற, அவளுக்கோ என்னவன் போல் உண்டா என பெருமையாக இருந்தது..



எல்லாவற்றிலும் உயர்ந்து நிற்பவன், ஒன்றில் மட்டும் தவறாக அடம் பிடிக்கிறான்..



அது மட்டும் மாறினால் அவன் சொக்க தங்கமே தான்..



மாறும் என்றும் அந்த நொடி அவள் நம்பினாள்..



அவள் காதலன் பகலவனை மட்டுமே பார்த்தவளுக்கு, பகலவன் என்னும் தனி மனிதனை பற்றி தெரியாமல் தான் போனது..



மசாலா செய்து முடித்து இருவருக்கும் சேர்த்து தோசையும் வார்த்து பகலவன் எடுத்து வர, "நான் கையில் சாப்பிட மாட்டேன்" என்றாள் வெண்ணிலா.



அவள் கூற்றில் மெலிதாக சிரித்துக்கொண்டவன், "நானே போடுகிறேன் வா பேபி" என்றுவிட்டு இருவருக்கும் ஒரே தட்டில் போட்டு கொண்டான்..



டிவி பார்த்துக்கொண்டே காலை மடக்கி வசதியாக வெண்ணிலா சோபாவில் அமர்ந்து விட, அவள் அருகில் அமர்ந்து கொண்டு அவளுக்கும் ஊட்டி கொண்டே, தானும் உண்டான் பகலவன்..



சிறிது நேரம் டிவி பார்த்துக்கொண்டிருந்தவள் , அதற்க்கு மேல் கணவனை தான் பார்த்தாள்.



லேசாக கலங்கிய கண்களுடன் தன்னை பார்த்துக்கொண்டிருந்த மனைவி கண்களை இடது கையால் துடைத்துவிட்டவன், "என்ன பேபி" என கேட்க,



"என் அப்பாக்கு பின் நீங்க தான் என்னை ராணி மாதிரி உணர வைக்கறீங்க வர்மா.." என்றாள் அவள் மென்மையாக.



"கடைசியாக அப்பா இருந்த போது தான் என்னையும் வர்ஷாவையும் இப்படி உட்கார வச்சு ஊட்டுவார்.. அப்பாவிற்கு பிறகு அதெல்லாம் இல்லாமலே போயிற்று.. அம்மா பாவம், ரொம்ப நொந்துடாங்க.. நாங்களும் நல்லா படிக்கணும்னு அதிலேயே கவனமா இருந்துட்டோம்.. இப்போ மீண்டும் சின்ன குழந்தையா மாறின மாதிரி இருக்கு வர்மா.." அவனையே பார்த்துக்கொண்டு கூறியவளை மென்புன்னகையுடன் அணைத்துக்கொண்டவன்,



"உனக்கு எந்த ஏக்கமும் வேண்டாம் பேபி.. நீ என்ன என்ன ஆசைப்படுகிறாயோ, எல்லாமுமாக நானே இருப்பேன்.. உனக்கு மட்டும் இல்லை, உன் குடும்பத்திற்கும் கடைசி வரை நான் இருப்பேன்.. இனி எதுவும் நினைச்சு அழ கூடாது.." மேலும் அழுத்தமாக அவள் கண்களை துடைத்துவிட்டு அவன் ஊட்ட, அவளும் அமைதியாக உண்டு முடித்தாள்..



உணவு முடிந்ததும் அவன் எழுந்துவிட, அவளும் அவனுடனே எழுந்தாள்..



"நீ எங்கே வர பேபி?" என அவன் கேட்க,



"எல்லாம் ஒழிக்க உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன் வர்மா.." என்றாள் வெண்ணிலா.



"ஒன்னும் வேண்டாம்.. நீ இன்று சரி இல்லை.. அமைதியா ரெஸ்ட் எடு.. இந்த படத்தை முடி.. நான் வந்துறேன்.." என்றவன் அவளை பிடித்து அமரவைத்துவிட்டே சென்றான்.



அவன் மீண்டும் வந்த போது சோபாவிலேயே படுத்து உறங்கி இருந்தாள் வெண்ணிலா.



சிறு பிள்ளை போல் அமர்ந்துகொண்டே தூங்கும் மனைவியை பார்த்து சிரித்துக்கொண்டவன், அவள் தூக்கம் கலையாதவாறு அவளை தங்கள் அறைக்குள் தூக்கி வந்தான்.



அவன் கட்டிலில் விட்டதும் அவன் பனியனை அழுத்தமாக பிடித்துக்கொண்டு அவள் தூக்கத்தை தொடர, அவனும் அவளுக்கு வாகாய் குனிந்து அவள் அருகிலேயே படுத்து கொண்டான்..



அவன் படுத்ததும் அவள் அவன் நெஞ்சில் தலைசாய்த்து படுத்துக்கொள்ள, அவளை நன்றாக அணைத்து அவள் தலையை மென்மையாக கோதி கொடுத்தான்..



தூங்கும் மனைவியை பார்த்து கொண்டிருந்தவன் உதடுகள் தன்னை அறியாமல் புன்னகைத்தது..



எங்கிருந்து வந்தாள் அவன் வாழ்க்கையில்? அரசியல், பிஸ்னஸ் என்பதை தவிர பெண்கள் பக்கம் கூட அவன் திரும்பியதில்லை..



ஒற்றை பார்வையில் அவனை மொத்தமாக ஆட்கொண்டுவிட்டாளே..!



தகிக்கும் சூரியனாக இருந்தவனை குளிர் நிலவு போல் மாற்றி வைத்திருக்கிறாள்..



வாழ்க்கையின் மற்றொரு பரிமாணத்தை அவனுக்கு அழகாய் காண்பித்து கொண்டிருக்கிறாள்..



அவனுக்கு இதெல்லாம் பிடித்திருந்தது தான்.. ஆனால் அவள் ஆசைப்படுவது போல் இப்படியே இருக்க முடியாதே! அவனை நம்பி இருக்கும் மக்களை என்றுமே அவனால் விட்டு கொடுக்க முடியாது..



பொறுமையாக அவளுக்கு புரியவைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான் பகலவன்..



அந்த பொறுமை தனக்கு இல்லை என சில நாட்களிலேயே அவன் மனைவி அவனுக்கு நிரூபித்தாள்..



******************



நாட்கள் அதன் போக்கில் வேகமாக நகர, இரண்டு நாளில் அவர்கள் மீண்டும் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்ற நிலையில் வந்து நின்றது..



அன்று கோர்ட்டில் இருந்து பகவலனுக்கு அழைத்தவள், "எனக்கு வேலை முடிஞ்சது வர்மா.. நான் ஒரு கேப் புக் பண்ணி வீட்டுக்கு போய்டறேன்.." என்று கூற,



"நான் வேண்டுமானால் வரவா பேபி?" என்றான் அவன்.



அவனுக்கு இருக்கும் வேலை பளு அவளுக்கு நன்றாகவே தெரியும்..



முக்கியமாக இப்போது அவளுக்கு தனிமை தேவைப்பட்டதே..



"இல்லை வர்மா.. நானே போய் விடுகிறேன்.. நீங்க வேலையை முடிச்சுட்டு வாங்க.." என்றுவிட்டு வைத்தவள், நேராக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்..



வரும் போதே ஒரு மெடிக்கல் ஷாப்பில் நிறுத்தி, கர்ப்பத்தை உறுதி செய்யும் கருவி வாங்கி கொண்டு தான் வந்திருந்தாள்..



ஆம் அவளுக்கு நாட்கள் தள்ளி போய் இருந்தது..



அதை உறுதி செய்து கொள்ள தான் வாங்கி வந்திருந்தாள்..



குளியல் அறைக்குள் சென்று சோதித்து பார்த்தவளுக்கு, அந்த கருவி எடுத்துக்கொண்ட ஐந்து நிமிடம் கூட பல யுகங்களாக தெரிந்தது..



சிறிது நேரத்தில் இரு கோடுகள் வந்து அவள் கருவுற்றிருப்பதை உறுதி செய்ய, அந்த நொடி மகிழ்ச்சியில் அவள் கண்கள் கலங்கி தான் போயிற்று..



அவர்கள் உயிர்.. அவளும் அவள் வர்மனும் சேர்ந்த உயிர், அவள் மணிவயிற்றில்.. இது போதும் அவளுக்கு.. இதற்காக தான் அவள் ஆசைப்பட்டது..



அவள் வாழ்க்கையே நிறைவடைந்துவிட்ட மகிழ்ச்சி அந்த நொடி அவளிடம்..



பெரும் மகிழ்ச்சியுடன் கண்களை துடைக்க கூட தோன்றாமல் பால்கனியில் அமர்ந்திருந்தாள் வெண்ணிலா..



முதற்கட்ட மகிழ்ச்சி குறைந்ததும், அடுத்து என்ன நடக்குமோ என அவள் மனம் அடித்துக்கொள்ள தொடங்கிவிட்டது..



அவளுக்கு காலம் முழுக்க இந்த வாழ்க்கை வேண்டுமென்று ஆசை தான்.



பகலவன் ஒத்துக்கொள்வானா? குழந்தைக்காகவேனும் இறங்கி வருவானா? தன்னால் ஆன எல்லா முயற்சியும் செய்ய வேண்டும் என் உறுதியாக நினைத்துக்கொண்டாள் வெண்ணிலா.



அவள் குரலில் இருந்து என்ன புரிந்ததோ, அன்று பகலவனும் வழக்கத்திற்கு மாறாய் சீக்கிரமே வந்து விட்டான்.



"பேபி" என உள்ளே வரும் போதே அவன் அழைத்துக்கொண்டு வர, அவன் படுக்கையறைக்குள் வரும் போதே, அவனிடம் ஓடிவிட்டாள் வெண்ணிலா.



வேகமாக வந்து தன்னை அணைத்துக்கொண்ட மனைவியை பார்த்து முதலில் அவனுக்கு சற்று பயமாக தான் இருந்தது.



"ஹேய் பேபி, என்ன ஆச்சு டி? ஏதாவது பிரச்சனையா? அழுகிறாயா பேபி?" தன் நெஞ்சில் உணர்ந்த ஈரத்தில் பதட்டத்துடன் கேட்டவன், வலுக்கட்டாயமாக அவளை பிடித்து நிமிர்த்தினான்..



சிவந்திருந்த அவள் கண்களை பார்த்தவனுக்கு, மேலும் பயமாக போய் விட்டது..



"பேபி என்ன டா?" என அவள் முகத்தை நிமிர்த்தி அவன் கேட்க, தன் கையில் இருந்த கிட்டை அமைதியாக அவனிடம் கொடுத்தாள் வெண்ணிலா.



அதை முதலில் முகம் சுருங்க வாங்கியவனுக்கு, மெதுவாக விஷயம் புரிய, "பேபி நிஜமாவா?" என்றவனுக்கு முதல் முறை கண்கள் கலங்கி போயிற்று..



அவளும் பல்லை கடித்து கொண்டு தலையை மட்டும் ஆட்ட, "தேங்க்ஸ் பேபி.. தேங்க்ஸ்.. ரொம்ப சந்தோசமா இருக்கு டி.." என அவளை அழுத்தமாக அணைத்துக்கொண்டான் பகலவன்.



இருவரும் அந்த நிமிட மகிழ்ச்சியை அனுபவித்து கொண்டு, சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்தனர்..



முதலில் பகலவன் தான் சுதாரித்தான்..



"பேபி ஊருக்கு போனதும் முதலில் உன் வீட்டிலும் பேசிவிட்டு, ஊரறிய கல்யாணம் பண்ணனும்.. உன் அடத்தால் இது வரை வந்தாச்சு.. இனியாவது எல்லாம் ஒழுங்கா செய்யனும் பேபி.. குழந்தை வேறு வர போகிறது.. இனியும் வெளியில் தெரியாமல் இருந்தால் தப்பாகிடும்.. குழந்தைக்கு ஒரு கெட்ட பெயரும் வர கூடாது பேபி.."



"ஒரு கொலைகாரனின் குழந்தை என்பது நல்ல பெயரா இருக்குமா வர்மா?" பட்டென அவள் கேட்டுவிட, அவன் தான் ஒரு நொடி அதிர்ந்து போனான்.



"நான் வர்மனை தான் திருமணம் செய்து, அவருடன் தான் வாழ்வேன் என்று ஏற்கனவே சொன்னேனே..!" அசால்டாக அவள் அடுத்த குண்டை போட, அவனுக்கோ அதை ஜீரணித்து கொள்ளவே அவகாசம் பிடித்தது.



"எ.. என்ன சொல்கிறாய் பேபி..?" சட்டென சுதாரிக்க முடியாமல் திக்கி திணறி அவன் கேட்க,



"நீங்க இனி ஒரு குழந்தைக்கு அப்பா வர்மா.. இனியும் இந்த கொலை அரசியல் எல்லாம் வேண்டுமா? எனக்காக இல்லாவிட்டாலும், நம் குழந்தைக்காகவேனும் இதெல்லாம் விட்டுவிட முடியாதா வர்மா? ப்ளீஸ்.. இதற்கிடையில் என் குழந்தை வளர்வதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை வர்மா.." தெளிவாக அவள் பேச பேச, அவன் முகத்தில் இருந்த இலகு தன்மை குறைந்து, அது கொஞ்சம் கொஞ்சமாக விகாரமாக மாறியது..



நிதானமாக சுவரில் சாய்ந்து கைகட்டி நின்றுகொண்டவன், "ப்ளாக் மெயில் செய்கிறாயா?" என கேட்க,



"ஐயோ அப்படி இல்லை வர்மா" என்றாள் அவள் அவசரமாக.



"சோ எல்லாம் பிளான் பண்ணி, பண்ணி இருக்க ரைட்..? குழந்தை என்றாகிவிட்டால் நான் மாறிவிடுவேன் என்று நினைத்து, என்னை கூட்டிவந்து, கல்யாணம் பண்ணி, வாழ வைத்து, இதுக்கு பேர் என்ன தெரியுமா?"



"ஐயோ வர்மா ப்ளீஸ்..! பேசாதீங்க.." என காதை மூடிக்கொண்டு கதறிவிட்டாள் வெண்ணிலா..



தாங்கமாட்டாமல் கட்டிலில் அமர்ந்துவிட்டவள், அழுகையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..



"ஆமா வர்மா.. எல்லாம் யோசித்து தான் செய்தேன்.. அதுக்காக அசிங்கமா பேசுவீங்களா? நான் விரும்பும் உங்களுடன் வாழ ஆசைப்பட்டேன்.. அது அசிங்கமா? அன்று செழியன் அண்ணாக்கு சூடு பட்டபோது, ஒரு நொடி, ஒரே ஒரு நொடி அண்ணா கவனிக்காமல் இருந்து இருந்தால், இன்று உங்கள் உயிர்...? இதோ இப்போது கூட, எதையும் விட முடியாது என்று அடமா நிக்கறீங்களே! இப்போதும் உங்கள் உயிர் ஆபத்தில் தானே இருக்கு? இது வேண்டாமென்று கூட நான் சொல்ல கூடாதா?"



"என் உயிரை எனக்கு பார்த்துக்க தெரியும் பேபி.. அன்று நான் உன் நினைவில் இருந்த ஒரே காரணத்தால் தான் கொஞ்சம் கேர்லெஸ்ஸா இருந்தேன்.. மற்றப்படி என் பாதுகாப்பை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும்.. இதை உனக்கு எத்தனை முறை, எத்தனை விதமா சொல்வது?"



கொஞ்சமும் இலகாமல் அழுத்தமாக அவன் கேட்க, மெதுவாக எழுந்து அவன் முன் நின்றாள் வெண்ணிலா..



"எப்போதுமே அப்படி இருக்க முடியாது வர்மா.. உங்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் என்ன ஆகும் என்று பயந்தே நான் செத்துடுவேன்.. கொலை எல்லாம் ரொம்ப தப்பு வர்மா.. எல்லா பாவமும் நம் குழந்தைக்கு தான் வரும்.."



"நான் செய்யும் கொலைகளில் புண்ணியம் தான் கிடைக்கும்.."



"பின்னாடியே எதிரியும் வருவான்" அழுதுகொண்டே கூறியவளை பார்த்தவனுக்கு பாவமாக தான் இருந்தது..



என்ன செய்ய! அவள் கேட்பதை அவனால் செய்ய முடியாதே.



"பேபி இங்கே பார்" என அவன் அவள் முகத்தை அழுத்தமாக பிடித்து நிமிர்த்த, அவளும் அவன் முகத்தை பார்த்தாள்.



"அரசியல் என் ரத்தத்தில் ஊறி போனது பேபி.. அதை சமாளிக்க எனக்கு தெரியும்.. சின்ன வயதில் நான் பசியில் சாகாமல் காப்பாற்றிய மக்களுக்கு மீண்டும் செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்.. பல நூறாவது முறையாக சொல்கிறேன் பேபி, இது எல்லாம் சேர்ந்தது தான் நான்.. என்னால் எதையும் விட முடியாது.. விடவும் மாட்டேன்.. அதே நேரம் எனக்கு நீயும் வேண்டும்.. இப்போது நம் குழந்தையும்.. என்னால் எதையும் விட முடியாது பேபி.. புரிஞ்சுக்கோ.."



சிறு குழந்தைக்கு கூறுவது போல் மென்மையாக அவன் கூற, அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள், "குழந்தைக்காக கூட மாற மாட்டீங்களா?" என்று கேட்டு அவன் கோபத்தை கிளறினாள்..



அதில் மீண்டும் அவன் முகம் இறுகி விட, "நெவெர் பேபி" என்றான் அவன் தெளிவாக..



"நீங்க என்ன சொன்னாலும் கொலையை என்னால் நியாயமா ஏத்துக்க முடியவில்லை வர்மா.. அந்த பாவமெல்லாம் நம்ம குழந்தைக்கு தான் வரும்.. அதே நேரம், உங்களுக்கும் ஒவ்வொரு நொடியும் என்ன ஆகுமோ என்று பயந்து பயந்து என்னால் வாழ முடியாது.. அதனால்..."



"அதனால்..." என அவனே எடுத்துக்கொடுக்க,



"நான் என் வீட்டுக்கே போறேன்.. எனக்கு நம்ம குழந்தையே போதும்.. நீங்க மனம் மாறினால் வாங்க.. நான் என்றைக்கானாலும் காத்திருப்பேன்.." தலை குனிந்து கொண்டே ஒப்பிப்பது போல் அவள் கூற, அவள் முகத்தை அழுத்தமாக பிடித்து நிமிர்த்தினான் பகலவன்.



"நான் வேண்டாமாடி உனக்கு..?" அவள் கண்களை பார்த்து கூர்மையாக அவன் கேட்க,



"என் வர்மன் தான் வேண்டும்" என்றாள் அவள் தெளிவாக.



அதில் எரிச்சலுடன் அவள் முகத்தை உதறியவன், "என்னால் உன்னை கடத்தி வந்து குடும்பம் நடத்த முடியும் பேபி.. என்னிடம் இருந்து உன்னால் தப்பிக்கவே முடியாது.. பழைய பகலவனை மறந்திருக்க மாட்டாய் என்று நினைக்கிறன்.." திடீரென அழுத்தமாக ஒலித்த அவன் குரல், அவளுக்குள் பெரும் பயத்தை ஏற்படுத்த, மெதுவாக பின்னால் நகர்ந்தாள் வெண்ணிலா..



கட்டிலில் இடிக்க போனவளை சட்டென பகலவன் பிடித்திழுக்க, அவன் மீதே மோதி நின்றாள்..



"நான் உன்னை கஷ்டப்படுத்துவேனா டி? முட்டாள்.. பயம் வேறு..! என்னை பிரிவது தான் உனக்கு சந்தோசம் என்றால், போ.. தாராளமா போ.. மரணவலி பட வேண்டும் என்று ஆகிவிட்டது.. முழுதாக நானே பட்டுக்கொள்கிறேன்.. நீயாவது நிம்மதியா இரு.."



அவளை அணைத்து அவள் காதருகில் நிதனமாக கூறியவன், அதற்கு மேல் அவள் அருகில் நிற்காமல், அவளை விட்டுவிட்டு பால்கனிக்கு சென்று விட்டான்...

குளிரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


அத்தியாயம் 23:



அடுத்த வந்த இரண்டு நாட்கள் எப்படி ஓடியது என்று கேட்டால் வெண்ணிலாவிற்கு சுத்தமாக தெரியாது..



அவள் பிரிந்து போகிறேன் என்று சொன்ன அன்று தனக்குள் இறுகி போனவன் தான், அதற்கு மேல் பகலவன் அவளிடம் அதிகம் எதுவும் பேசவில்லை..



மறுநாள் காலை வழக்கம் போல் அவளுக்கு தோசை வார்த்துவைத்து விட்டு போனவன், இரவு தாமாதமாக தான் வந்தான்..



அவள் கொடுத்த உணவை மறுக்காமல் உண்டவன், "நாளை ஈவினிங் பிளைட்டுக்கு டிக்கெட் புக் பண்ணிச்சியாச்சு பேபி.. ரெடி ஆகிக்கோ.." என்றதுடன் படுக்க சென்றுவிட, முழுதாக வேற்று ஆள் போல் நடந்துகொண்டவனிடம் பேச அவள் தான் பயந்து போனாள்..



அவள் மனதின் பயத்தை போக்கிக்கொள்ள இரவு அவனையே அணைத்துக்கொண்டு அவள் படுத்துக்கொள்ள, அவனும் பதிலுக்கு அணைத்துக்கொண்டானே ஒழிய, ஒரு வார்த்தை கூட பேசவில்லை..



மறுநாள் கிளம்பும் வரை இதே நிலை தான்..



சென்னை வந்து சேரும் வரை அவளுக்கு தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து செய்தான் தான்..



ஆனால் பேச்சும் உணர்ச்சியும் தான் சுத்தமாக இல்லாமல் போயிற்று.



இரண்டு நாள் முன்பு வரை 'பேபி.. பேபி..' என பிதற்றிக்கொண்டிருந்தவன் இவன் தான் என்றால், யாரும் நம்ப கூட மாட்டார்கள்.. அத்தனை இறுகி போய் இருந்தான்..



சென்னை வந்ததும் அவன் நேராக வண்டியை அவள் வீட்டிற்க்கு தான் செலுத்தினான்..



இறக்கி விட்டுவிட்டு போவான் போல் என கனத்த மனதுடன் நினைத்துக்கொண்டவள், வீட்டின் முன் கார் நின்றதும் கண்கள் கலங்காமல் மிகவும் கடினப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டு, அவனை பார்த்தாள்..



"இறங்கு" என அவள் பக்கம் திரும்பாமலே அவன் கூற,



"வர்மா.." என ஏதோ சொல்ல வந்தாள் வெண்ணிலா..



"இறங்கு" என மீண்டும் அழுத்தமாக ஒலித்த அவன் குரலில், அதற்கு மேல் அவனை எதிர்த்து பேசும் தைரியம் வராமல் அமைதியாக அவள் இறங்க, அவளை தொடர்ந்து அவனும் இறங்கினான்..



அவள் பையை எடுக்க போகும் போது, அவளை தடுத்துவிட்டு தானே எடுத்துக்கொண்டவன், முதல் ஆளாக வீட்டிற்குள் செல்ல, அவனை புரியாமல் பார்த்துக்கொண்டே தொடர்ந்தாள் வெண்ணிலா..



வீட்டிற்குள் நுழைந்ததும் தான் அங்கிருந்த அசாத்திய அமைதியும், செழியனும், மதுவும் இன்னும் வேறு யாரோ அங்கு அமர்ந்திருப்பதும் அவளுக்கு தெரிந்தது..



அதில் ஒன்றுமே புரியாமல் அவள் நின்றுவிட, அவள் பையை ஒருபக்கம் வைத்த பகலவன், நேராக காமாட்சி முன் தான் சென்று நின்றான்..



"வணக்கம் மா.. நான் பகலவன்.. அண்ணா சொன்னாரா?" என அவன் கேட்க, பதிலுக்கு தானாக கைகூப்பியவர், "சொன்னாரு பா.. ஆனால் எனக்கு... நிலா..." சரியாக பேச முடியாமல் அவர் திணற, அவரை சமாதானப்படுத்தும் வகையில் மெலிதாக புன்னகைத்தவன், செழியன் அருகில் அமர்ந்துகொண்டான்..



"அண்ணா எல்லாமே சொல்லி இருப்பார்.. இருந்தும் நானும் ஒரு முறை சொல்கிறேன்.. நான் இங்கே எம். எல். எவாக இருக்கிறேன்.." என்றவன் தன் கட்சி, தொகுதி எல்லாம் கூறி விட்டு தொடர்ந்தான்..



"அண்ட் வர்மா சொல்யூஷன்ஸ் எங்களுடையாது தான்.. வேலை விஷயமா மும்பை போய் இருந்த போது வெண்ணிலாவை பார்த்தேன்.. இங்கேயே அவளை சில முறை பார்த்திருக்கிறேன்.. பார்த்ததும் பிடித்துவிட்டது.. மும்பையில் என் காதலை சொன்ன போது, அவளும் ஏற்றுக்கொண்டாள்.. எனக்கு நிலாவை ரொம்பவும் பிடிக்கும்.. எதற்காகவும் அவளை இழந்து விட கூடாது என்று தான், அங்கு கட்டும் தாலி அவளுக்கு கட்டிவிட்டேன்.. இப்போது அவளுக்கு என் மேல் ஒரு சின்ன கோபம்... சரியாகி விடும் என்று நம்புகிறேன்.." பேசிக்கொண்டே வந்தவன் கண்கள் ஒரு முறை வெண்ணிலா மீது அழுத்தத்துடன் படிந்தது.



"சரியாகும் வரை அவள் இங்கே இருக்கட்டும்.. ஆனால் உங்களுக்கு மகள் வாழ்க்கை நினைத்து பயம் இருக்க கூடாது.. அதற்கு தான் இந்த ஏற்பாடு.. உங்கள் எல்லார் சாட்சியாக இங்கேயே இப்போது எங்கள் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்து விடலாம் என்று தான் அண்ணாவை ஏற்பாடு பண்ண சொன்னேன். அவசரமா செய்வது ரொம்பவும் தப்பு தான்.. மன்னிச்சுடுங்க மா.."



அத்தனை பழியையும் தன் மீதே போட்டுகொண்டு அவன் மன்னிப்பும் கேட்க, இப்போது காமாட்சி வர்ஷாவுடன் சேர்ந்து நிலாவும் விழித்தாள்.



இதெல்லாம் அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லையே..!



சொல்லப்போனால் அவனை பிரிய வேண்டும் என்ற எண்ணத்தில், குடும்பத்தை பற்றி அவள் சுத்தமாக யோசிக்கவில்லை..



அவனோ இந்த சூழலிலும் அவளுக்காக தான் யோசித்திருக்கிறேன்..



அவனுக்கென்ன தலையெழுத்தா..! நியாயப்படி பார்த்தால் அவள் முகத்தில் கூட விழிக்காமல் அல்லவா அவன் கிளம்பி இருக்க வேண்டும்.



"நிலா மா" அவள் நினைவுகளை காமாட்சியின் குரல் கலைத்தது.



"இவங்க சொல்றதெல்லாம் உண்மையா டா? என்ன நடக்குது மா இங்கே?" என அவர் தவிப்புடன் கேட்க, அப்போது தான் அவர்கள் தவிப்பே அவளுக்கு புரிந்தது..



தன் கவலையை தற்காலிகமாக ஒத்தி வைத்தவள், "உள்ளே வாங்க மா.. சொல்லுறேன்.." என்றவள் மற்றவர்களை பார்த்து, "ஒரு நிமிஷம்" என்றுவிட்டு அன்னையை தொடர்ந்தாள்..



காமாட்சியும் வர்ஷாவும் முன்னால் சென்று விட, வெண்ணிலா அறை அருகில் செல்லும் முன் அவளுக்கு முன் வந்து நின்றான் பகலவன்..



"இந்த பிறவியில் நீ தான் என் மனைவி.. என்னை பொறுத்தவரை அதில் மாற்றமில்லை.. உனக்கு ஏதாவது மாற்று கருத்து இருந்தால் மட்டும் இந்த பதிவு திருமணத்திற்கு மறுப்பு சொல்.. ஒருவேளை இப்போது நீ மறுத்துவிட்டாள், இனி உன் வாழ்நாள் முழுக்க நான் உன் முகத்தில் விழிக்க மாட்டேன்.." என அழுத்தமாக கூறியவன், முடிவு நீதான் எடுக்க வேண்டும் என்பது போல் அவளை பார்த்துவிட்டு மீண்டும் சென்று அமர்ந்து விட்டான்..



குனிந்த தலையுடன் நிலா அறைக்குள் சென்று விட, அதற்கு பின் தான் செழியன் பகலவனிடமே பேசினான்.



"என்ன நடக்குது பகலவா? நீ சொன்னதை நானும் அப்படியே அவங்களிடம் சொல்லிட்டேன்.. இப்போது நீயும் அதையே தான் சொல்கிறாய்.. பிரிய வேண்டிய கட்டாயம் என்ன வந்தது?"



அவன் கேள்வியில் ஒரு நொடி ஆழ்ந்த மூச்செடுத்துக்கொண்டவன், நடந்ததை மறைக்காமல் செழியனிடன் கூறிவிட்டான்..



"ப்ச் எனக்கு ஏற்கனவே சந்தேகம் வந்தது.. பார்த்தால் ரொம்பவும் மென்மையாக தெரிகிறாளே, நம்முடன் ஒத்துபோவாளா என்று யோசித்தேன்.."



வேதனையுடன் மது கூற, "உனக்கு தோன்றி இருக்கும் போது எனக்கு தோணாதா மது? எல்லாம் தெரிந்து தான் திருமணம் செய்தேன்.. என்ன ஒரேடியாக பிரிவு என்று நின்று விடுவாள் என்று எதிர்பார்க்கவில்லை.. எங்கே டி போய்விட போகிறாள்..! என்னை தாண்டி அவளால் அசைய கூட முடியாது.. அவள் என் சொத்து.."



பெரும் அழுத்தத்துடன் பகலவன் கூற, அவன் குரலில் தெரிந்த தீவிரத்தில், இதில் தாங்கள் தலையிட ஒன்றும் இல்லை என செழியனுக்கும் மதுவிற்க்கும் புரிந்தது..



அன்னை தங்கையுடன் உள்ளே வந்த வெண்ணிலா, பகலவன் கூறியதையே மீண்டும் ஒரு முறை கூறி, அத்துடன் சேர்த்து, "நான் இப்போது கர்ப்பமா இருக்கேன் மா" என தலை குனிந்து கொண்டே கூற, அத்தனை நேரம் குழப்பத்தில் இருந்தவர் இப்போது தெளிந்து கோபத்துடன் மகளை பார்த்தார்..



"ஏன் டி நான் ஒருத்தி உயிருடன் இருக்கேன்.. நியாபகம் இருக்கா? இல்லையா? நீ பாட்டுக்கு வந்து கல்யாணம் ஆகிடுச்சு, கர்ப்பமா இருக்கேன், பிரிய போறேன் என கதை கட்டிட்டு இருக்க.. நானும் இவளும் செத்துட்டோம் என்றே முடிவு பண்ணிட்டயா?"



அடிக்குரலில் பெரும் கோபத்துடன் அவர் பொரிய, "அப்படி இல்லை மா" என அவள் தொடங்கும் போதே,



"பேசி தொலையாதே.. ஒரே விஷயத்தை மூன்று முறை கேட்டு நல்லாவே மனப்பாடம் ஆகிவிட்டது.." என காய்ந்தவர் தலையில் கைவைத்து சில நொடிகள் அமைதியாக அமர்ந்து விட,



"என்ன கா இது?" என்றாள் வர்ஷா ஒன்றும் புரியாமல்.



"சொல்லுறேன் வர்ஷா மா.. கொஞ்சம் இரு டா.." என தங்கையை சமாதானம் செய்தவள்,



"அம்மா" என மெதுவாக அழைக்க, அவளை முறைத்துக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் எழுந்தவர்,



"எங்களுக்கு தெரியாமல் எல்லாம் செய்தாய், விட்டு தொலை, அந்த வாழ்க்கையையும் ஏன் டி பாதியிலேயே விடுகிறாய்? பதிவு திருமணம் செய்துவிட்டு பிரிய போறீங்களா? என்ன கொடுமை டி இது?" ஒன்றும் புரியாத குழப்பத்திலும் ஆற்றாமையிலும் அவர் புலம்ப, வெண்ணிலா தான் பதில் சொல்ல தெரியாமல் விழித்தாள்..



அன்னையே ஆனாலும் அவரிடம் கணவனை விட்டுக்கொடுக்க அவளுக்கு மனம் வரவில்லை..



"பதில் சொல்லேன் டி" என கோபத்துடன் கத்தியவர் அதற்கு மேல் தாங்கமாட்டாமல் அவளை ஓங்கி அறைந்து விட, அது வெளியில் அமர்ந்திருந்த பகலவன் காதிலும் விழுந்தது..



அடுத்த நொடி வேகமாக எழுந்தவன், காமாட்சி அடுத்த அடி அடிக்கும் முன் அவருக்கும் வெண்ணிலாவிற்க்கும் இடையில் சென்று நின்றுவிட்டான்..



அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை அவன் சரியாகவே யூகித்திருந்தான்.



"அம்மா உங்கள் நிலை எனக்கு புரியுது.. அதற்காக என் மனைவியை அடிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை.. அவள் வாழ்க்கையை பற்றிய பயம் உங்களுக்கு வேண்டாம்.. அவள் மனதிற்க்கு மரியாதை கொடுத்து தான் இந்த பிரிவு.. மற்றபடி என் மனைவி குழந்தையை என்னிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது.. அவள் என்னிடம் வரும் வரை அவளை பத்திரமா பார்த்துக்கோங்க.. அது போதும்.."



தெளிவாக அவன் பேச மகளிடம் கோபத்தை காட்டியவரால், அவனிடம் அதை காட்ட முடியவில்லை.



"நீங்களே சொல்லுங்க தம்பி, திடீர்னு வந்து கல்யாணம் ஆகிருச்சு, கர்ப்பமா இருக்கேன் என்று சொன்னால் நான் கொஞ்சவா முடியும்?" ஆற்றாமையுடன் கேட்டவருக்கு இன்னுமும் அவனை மருமகனாக எல்லாம் பார்க்க முடியவில்லை..



அவனை பார்த்தால் அவருக்கு ஒரு வித பயம் தான் வந்தது..



அதை தவிர்க்க தான் செழியன், மதுவை வர சொன்னான்.. அதுவும் பலிக்கவில்லை என அவனுக்கு இப்போது புரிந்தது.



"எல்லா தப்பும் என்னுடையது தான் மா.. என்னை வேண்டுமானால் அடிச்சுக்கோங்க.. அவளை அடிக்க கூடாது..." தெளிவாக பேசியவனை நிமிர்ந்து பார்த்தவருக்கு,



'இவனை எங்கிருந்து அடிக்க!' என்று தான் முதலில் தோன்றியது.



அவர் மனம் புரிந்ததோ என்னவோ அங்கு சுற்றி பார்த்தவன் கண்களில், ஒரு ஓரமாக இருந்த வர்ஷாவின் ஸ்டீல் ஸ்கேல் விழுந்தது..



அதை எடுத்து வந்து அவர் கையில் கொடுத்தவன், அவர் முன் கை நீட்டினான்..



"அதிகம் வலிக்காது தான்.. பட் உங்கள் கோபம் போகும் வரை அடிச்சுக்கோங்க.." என நிதானமாக அவன் கூற,



அவரோ பதறி, "என்ன தம்பி நீங்க..!" என்று பட்டென ஸ்கேலை கீழே போட்டுவிட்டார்..



அவன் மகள் மீது வைத்திருக்கும் அன்பை காட்ட அவனது இந்த சாதாரண செயலே போதுமானதாக இருந்தது..



அவர் கோபம் கொஞ்சம் குறைய, "என்ன பிரச்சனை என்றாவது சொல்ல கூடாதா பா?" என்றார் அவர் மெதுவாக.



அவர் கேள்வியில் மனைவியை ஒரு முறை பார்த்துக்கொண்டவன், "பேபி சொன்னால் கேட்டுக்கோங்க.. எனக்கு ஒன்றும் இல்லை.. இப்போது பதிவாளர் ரொம்ப நேரமா காத்திருக்கிறார்.. வர்றீங்களா? ஒரே ஒரு சைன் போட்டுவிட்டால், நான் கிளம்பி விடுவேன்.. நீங்க பொறுமையா பேசலாம்.. அடிக்காமல்...." கடைசி வார்த்தையை அவன் அழுத்தமாக சொல்ல, அவரும் தன்னை அறியாமல் தோன்றிய புன்னகையுடன் அமைதியாக தலையாட்டினார்.



"வா பேபி" என்றுவிட்டு அவன் சென்றுவிட, மூவரும் அமைதியாக அவனை தொடர்ந்தனர்.



பதிவாளர் கொடுத்த புத்தகத்தில் தான் கையெழுத்திட்டவன், பேனாவை வெண்ணிலாவிடம் நீட்ட, அவளும் அமைதியாக கையெழுத்திட்டாள்..



பதிவு முடிந்ததும் அவரை அனுப்ப செழியன் வெளியே சென்றுவிட, மற்றவர்கள் புறம் திரும்பினான் பகலவன்.



"முறைப்படி கல்யாணம் இவள் தெளிந்ததும் கண்டிப்பா செய்வோம்.. இப்போதைக்கு சட்டப்படி இவள் என் மனைவி தான்.. என்னால் எங்கும் தப்பிக்க முடியாது.. வக்கீல் அம்மாவிற்கு எல்லா சட்டமும் தெரியும்.. ஓகே மா, நான் கிளம்பறேன்.." என்றுவிட்டு அவன் திரும்ப, வெண்ணிலா தான் தவித்து போனாள்..



இத்தனை நேரமும் நன்றாக தான் பேசி கொண்டிருந்தான்.. அவள் அன்னை கோபத்தை கூட குறைந்துவிட்டான் தான்..



ஆனால் அவளிடம் அவன் பேசவே இல்லையே..



ஏன் அதிகம் அவள் பக்கம் திரும்பக்கூட இல்லை..



மற்றவர்கள் கண்களுக்கு அது தெரியவில்லை போல்..



ஆனால் சம்மந்தப்பட்டவள் கண்ணுக்கு தெரியாமல் போகாதே!



அவன் நகர்ந்த நொடி மனம் கேட்காமல், அவள், "வர்மா" என வேகமாக அழைக்க, அவனோ நிதானமாக திரும்பி, "என்ன?" என்றான் எந்த உணர்வும் காட்டாமல்.



"எ.. எனக்கு உங்களுடன் தனியா பேசணும்" என அவள் பயத்தை விழுங்கி கொண்டு திக்கி திணறி கூற,



"வா" என்றுவிட்டு அவள் அறை நோக்கி சென்றுவிட்டான்.



அவளும் வேகமான அவனை தொடர்ந்து உள்ளே சென்றாள்.



வீராப்பாக வந்து விட்டாளே ஒழிய, என்ன பேசவேண்டும் என்று கூட அவளுக்கு புரியவில்லை..



ஒருவாறு மரத்திருந்திருந்த மூளையை மிகவும் கடினப்பட்டு தான் தட்டி எழுப்பினாள்.



"ஏன் என்னுடன் மட்டும் பேச மாட்டேங்கறீங்க?"



"என்ன பேசணும்? பேசினால் என் பக்க நியாயத்தை சொல்லி உன்னை கூப்பிடுவேன்.. வருவாயா..?" பட்டென அவனிடம் இருந்து வந்த பதிலில் அவளுக்கு தான் தொண்டை அடைத்தது..



"ஏன் யாரோ போல் ஆகிட்டிங்க வர்மா?" தாங்கமாட்டாமல் கண்ணீருடன் பேசியவளை எந்த உணர்வுமற்று வெறித்தவன்,



"உன்னை விரும்பியவனை தான் நீ கொன்று விட்டாயே!" என்றான் இப்போது பொறுமையாக.



"ஐயோ வர்மா அப்படி எல்லாம் பேசாதீங்க ப்ளீஸ்" கதறலுடன் அவள் அவன் வாயை மூட, அவள் கைகளை அழுத்தமாக பிடித்து நகற்றி விட்டவன்,



"அது தான் உண்மை பேபி.. நீ என் உயிரை குடித்துவிட்டாய்.. நீ சொல்வது போல் அரசியலை விட்டுவிட்டு வந்தாலும், நான் செத்ததற்கு சமம் தான்.. உன்னை பிரிவதும் அதே போல் தான்.. மொத்தத்தில் என்னை பிணமாக்கி தான் இதை உனக்கு தந்திருக்கிறேன்.. பிணத்திடம் உணர்ச்சிகள் எதிர்பார்க்காதே..! பார்த்து பாத்திரமாய் இரு.." வெறுமையான குரலிலேயே முடித்துக்கொண்டு அவன் வேகமாக வெளியேறி விட, அவன் வார்த்தைகளின் வீரியம் தாங்காமல் அவள் தான் அங்கேயே மடிந்து அமர்ந்து கதறி கொண்டிருந்தாள்..



வேகமாக வெளியே வந்த பகலவன், நேராக காமாட்சி வர்ஷாவிடம் தான் வந்தான்..



"எதுக்கும் பயப்படாதீங்க.. இனி இது என் குடும்பம்.. பேபி என்று மனம் மாறினாலும் சரி, நான் தான் உங்கள் மருமகன்.." என காமாட்சியிடம் கூறியவன்,



"என் நம்பர் நோட் பண்ணிக்கோ வர்ஷா.. உன் மாமாவிடம் எந்த நேரத்தில் எந்த உதவி என்றாலும் நீ கேட்கலாம்.. மாமாவா நினைக்க கஷ்டமா இருந்தா, அப்பாவா நினைச்சிக்கோ.. நீ எனக்கு பெண் தான்.. புரிந்ததா?" அழுத்தமாக அவன் கேட்டதில், அவள் தலை தானாக சம்மதமாக ஆடியது.



இந்த அன்பை தானே அவள் மனோகரிடம் எதிர்பார்த்து ஏமாந்தது..



அதை இவன் கொடுத்த போது, நொடியில் அவளுக்கு அவனை பிடித்து போனது..



"பார்த்துக்கோங்க மா.. வரேன்.." என்றவன் செழியன் மதுவுடன் வெளியேறி விட்டான்..



காரில் ஏறும் முன் கடைசியாக அவன் திரும்பி பார்த்த போது, ரூம் ஜன்னலில் நின்று அவனையே தான் வெண்ணிலா பார்த்துக்கொண்டிருந்தாள்.



கலங்கி தவித்து கொண்டிருந்த அவள் கண்களை எந்த உணர்வுமற்று வெறித்தவன், அமைதியாக காரில் ஏறி விட்டான்..



ஒரு புன்னகைக்கு கூட பஞ்சமாகி போகும் கணவனை பார்த்து அவளுக்கு பெரும் வேதனையாக இருந்தது தான்..



அதே நேரம் இந்த பிரிவேனும் அவனை மாற்றி தன் கை சேர்த்து விடாதா என்ற நப்பாசை அவளுக்கு..



எல்லாவற்றையும் விட அவன் உயிர் முக்கியமில்லையா!



இன்னுமும் கண் முன் நடந்த துப்பாக்கி சூட்டின் காட்சியில் இருந்து அவளால் மீள முடியவில்லையே..!



மெதுவாக தன் வயிற்றில் கை வைத்து கொண்டவள், "அப்பாவை நல்லபடியா நம்மிடம் அழைத்து வந்து விடு குட்டி" என அதனிடம் தான் வேண்டி கொண்டாள்.



வீட்டிற்கு வரும் வரை அமைதியாக வந்த பகலவன், வந்ததும் யாரையும் கண்டுகொள்ளாமல் நேராக தன் அறைக்கு சென்றுவிட்டான்.



கதவை அடைத்து விட்டு சோபாவில் வந்து அமர்ந்தவனுக்கு, அந்த வெற்று அறையை பார்த்து அத்தனை ஆத்திரம் வந்தது..



இதே அறையில் மனைவியுடன் வாழ்வது போல் அவன் கண்ட கனவெல்லாம் அவனை பார்த்து கேலியாக சிரிப்பது போல் இருக்க, கோபத்திலும் ஆதங்கத்திலும் முகம் எல்லாம் சிவந்து பல்லை கடித்துக்கொண்டு, அழுந்த தலை முடியை பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தான்..



மனைவி மன நிலை அவனுக்கு புரியாமல் இல்லை..



அதை நிறைவேற்றவும் முடியாமல், ஒதுக்கவும் முடியாமல் இடையில் சிக்கி கொண்டு அவன் தான் தவித்தான்..



அவன் உயிரின் ஒவ்வொரு அணுவும் இந்த நொடியே மனைவி கைககளுக்குள் வேண்டும் என்று துடிக்க, அதை கட்டுப்படுத்தும் வழி தெரியாது தவித்து போனான்..



"ஏன் டி என்னை விட்டுட்டு போன? ஐ காண்ட் பேபி.. ஐ காண்ட்..." என மெல்லிய குரலில் முனகிக்கொண்டவன், பெரும் எரிச்சலுடன் பக்கவாட்டு சுவற்றில் வேகமாக குத்தினான்.



கை வலிக்கும் வரை குத்தி ஓய்ந்தவனுக்கு, மனவலியோடு கைவலியும் சேர்ந்து கொண்டது தான் மிச்சமாக இருந்தது..



ஒரு பக்கம் அவன் உயிருக்காக வெண்ணிலா அவனிடமே போராட, அவனோ தன் வாழ்வின் நிதர்சனத்தை அவளுக்கு புரிய வைக்க முடியமால் தவித்து போனான்..



இடையில் பரிதாபமாக அவர்கள் காதல் தான் சிக்கி கொண்டது..



மனதால் மாறுபட்டிருந்த இருவரையும் இணைக்கும் ஒரே பாலம் காதல் தான்..



காதல் வென்றிடுமா...?

குளிரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 24:



ஒன்றரை வருடம் கண் மூடி திறப்பதற்குள் ஓடி விட்டது.....



"போராடுவோம்.. போராடுவோம்.."



"பாக்டரி மூடும் வரை போராடுவோம்"



"சுற்று சூழலை மாசு படுத்தும் இந்த பாக்டரி இங்கு வர கூடாது"



"மூட வேண்டும் மூட வேண்டும்"



"பாக்டரியை மூட வேண்டும்"



சத்தமாக அடித்தொண்டையில் இருந்து ஒரு சிலர் கத்திக்கொண்டிருக்க, அவர்களுடன் சேர்ந்து கையில் பெரிய பெரிய போர்டுடன் ரோட்டின் ஒரு பக்கம் கூடாரம் போல் போட்டு மக்கள் அமர்ந்திருந்தனர்..



சரியாக அவர்களுக்கு எதிரில் கெமிக்கல் பாக்டரி கட்டுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்க, அதை எதிர்த்து தான் அவர்கள் போராடி கொண்டிருந்தனர்..



அதே கூட்டத்தில் ஒரு பக்கம் வெண்ணிலாவும் அவர்களுக்கு ஆதரவாக அமைதியாக அமர்ந்திருந்தாள்..



மக்களுக்கு ஆதரவாக அமர்ந்திருந்தவள் கண்கள் என்னவோ, சற்று தள்ளி மறைவாக ஒரு பக்கம் காருக்குள் அமர்ந்திருந்த பகலவனை பார்க்க தான் முயற்சித்து கொண்டிருந்தது..



மூடி இருந்த கண்ணாடியை தாண்டி அவன் முகம் கூட சரியாக தெரியாமல் போக, அவனை பார்க்க முடியாமல் தவித்து போனாள் அவள்..



அதே நேரம் அனைவருக்கும் டீ வந்து சேர, அங்கு சிறிது அமைதி நிலவியது..



அந்த போராட்டத்தை தலைமை தாங்கும் நடுத்தவர வயதினர் நேராக எழுந்து பகலவன் கார் அருகில் சென்றார்..



அதுவரை காருக்குள் இருந்து மனைவியை பார்த்துக்கொண்டிருந்தவன், அவர் தன்னை நோக்கி திரும்பியதும் பார்வையை திருப்பி கொண்டு கார் கதவை திறந்து விட்டான்..



"என்ன தம்பி நீங்களே வந்துடீங்க? பாதுகாப்புக்கு வேற யாராவது அனுப்பினா பத்தாதா பா?"



கார் அருகில் குனிந்து அவர் கேட்க, "இந்த பக்கம் வேலை இருந்தது ண்ணா.. அதான் முடிச்சுட்டு, அப்படியே இங்கே கொஞ்ச நேரம் இருக்கலாம்னு வந்தேன்.. உள்ளே ஏறுங்க.." என அவன் கூற, அவரும் உள்ளே ஏறிக்கொண்டார்.



"ஒன்னும் பிரச்சனை இல்லையே ண்ணா? ஏதாவது சின்ன பிரச்சனை என்றாலும் சொல்லுங்க.. நான் பார்த்துக்கறேன்.. இந்த போராட்டமெல்லாம் வேண்டாம்" என அவன் அழுத்தமாக கூற,



"அதெல்லாம் ஒன்னும் இல்லை தம்பி.. உங்க புண்ணியத்தில் போலீஸ் எங்களை தடுக்கவில்லை.. எப்படியும் கேஸ் நம்ம பக்கம் தான் தீர்ப்பாகும் தம்பி.. அதுவரை தானே..! எங்களுக்காக நாங்களும் கொஞ்சம் போராடறோம்.. மொத்த சுமையும் எப்போதும் நீங்களே சுமக்கணுமா..?" சிறு புன்னகையுடன் அவர் கேட்க,



"எனக்கு இது கடமை ண்ணா.. உங்கள் ஆசைக்கு தான் நான் அமைதியா இருக்கேன்.. நம்ம பக்கம் எந்த சேதாரமும் இருக்க கூடாது.. பார்த்துக்கோங்க.." தெளிவாக அவன் கூற,



"கண்டிப்பா தம்பி.. நாங்க பார்த்துக்கறோம்.." என்றுவிட்டு மேலும் சில விஷயங்கள் பேசிவிட்டு கிளம்பினார் அவர்..



அதே நேரம் கட்டிட வேலை தொடங்க வேண்டிய நேரத்தில், தானும் இருக்க வேண்டும் என வந்திருந்த ரக்ஷன் பெரும் கொதிப்புடன் அமர்ந்திருந்தான்..



அவர்கள் நிலத்தில் போடப்பட்டிருந்த ஒரு டெண்டுக்குள் அமர்ந்திருந்தவன் தன் பி. ஏ விடம் தான் காய்ந்து கொண்டிருந்தான்..



"இவனுங்களுக்கு என்ன தான் யா பிரச்சனை? முறையா அனுமதி வாங்கி தானே கட்டப்போகிறோம்.. அப்புறம் ஏன் கோசம் போடறானுங்க? போலீசையும் அந்த பகலவன் கைக்குள் போட்டு வச்சிருக்கான்.. போதாத குறைக்கு, அந்த வெண்ணிலா தொல்லை வேற.. ச்சை.." எரிச்சலுடன் அவன் மேசையில் குத்த, அதில் இருந்த பொருள் எல்லாம் சிதறி விழுந்தது..



"பணம் கொடுக்கிறேன் என்று சொல்லி பார்த்தாயா? இல்லையா?" என அவன் மேலும் காய,



"எவ்வளவோ பேசி பார்த்துட்டேன் சார்.. பத்து பைசா கூட வாங்க மாட்டேன்னு அடமா இருக்காங்க.." என்றார் அவர் மெதுவாக.



"கேஸ் எந்த நிலையில் இருக்கு?"



"முடிஞ்ச வரை இழுத்துட்டு இருக்கோம் சார்.. அப்படியே ஹியரிங் வந்தாலும், சேப்டி தான் என்ற பொய் ஆதாரம் இருக்கு.. அவங்களிடமும் ஆதாரம் இருக்கும்.. சோ முடிஞ்சவரை இழுக்கலாம் சார்.. நமக்கு மேலிடத்து சப்போர்ட் இருப்பதால், கண்டிப்பா ஜெய்ச்சுடலாம்.. ஆனால்..."



ஒரு நொடி தயக்கத்துடன் அவர் நிறுத்த, "முழுசா சொல்லேன் யா" என்றான் ரக்ஷன் எரிச்சலுடன்.



"வெண்ணிலாவின் சீனியர் சத்யாதேவி அம்மா பத்தி உங்களுக்கே தெரியும்.. அவங்க கொஞ்சம் ரிஸ்க்.. பொய் சாட்சிகளை சுலபமா கண்டுபிடிச்சுருவாங்க.. அவங்களை சமாளிக்கனும்" தயங்கி தயங்கி அவர் கூற,



"அம்மா..." என எரிச்சலுடன் முணுமுணுத்துக்கொண்டவன் முகம், மேலும் கோபத்துடன் இறுகி போயிற்று.



போராட்ட கூட்டம் களையும் வரை பகலவனும் அங்கு தான் இருந்தான்..



அனைவரும் அவரவர் வீட்டிற்கு கிளம்பி விட, வெண்ணிலாவும் ஆட்டோ பிடிப்பதற்காக நடந்தாள்..



பகலவன் காரை கடந்த செல்ல வேண்டும் என்ற நிலையில், அவனை பார்க்கும் ஆசையுடன் அவள் காரையே பார்த்துக்கொண்டே வர, அவள் பக்கத்தில் வந்த போது சட்டென கார் கதவை திறந்து கொண்டு இறங்கினான் பகலவன்.



அவன் இறங்கிவிடுவான் என எதிர்பார்க்காத வெண்ணிலா தான், திகைத்து நின்றுவிட்டாள்..



இப்போதெல்லாம் அவனை அவளால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை..



மனம் இருந்தால் அவளுக்கு எதிரில் வருவான்.. இல்லை என்றால் அவள் கண்களிலேயே பட மாட்டன்.. பட்டாலும் பெரிதாக ஒன்றும் பேச மாட்டான் என்பது வேறு விஷயம்..



"ஏறு.. நான் டிராப் பண்ணுறேன்.." என்ற பகலவன் குரலில் நிமிர்ந்தவள்,



"சத்யா அம்மா வீட்டுக்கு போகணும்.. நாளை ஆஜர் ஆக போகும் கேஸ் டிஸ்கஷனுக்கு வர சொல்லி இருந்தாங்க.." மெதுவாக அவள் கூற,



"ம்ம் ஏறு" என்றான் அவன் மீண்டும்.



அதற்கு மேல் மறுக்காமல் அவளும் ஏறிக்கொண்டாள்..



காரை எடுத்தவன் அதற்க்கு மேல் அவள் புறம் திரும்பவே இல்லை..



"கொஞ்சம் கவனமா இரு" என திடீரென பகலவன் கூற, அதுவரை அவனை ஓரக்கண்ணால் சைட் அடித்து கொண்டிருந்தவள், "ஆ..." என்றாள் ஒன்றும் புரியாமல்.



"கொஞ்சம் கவனமா இரு என்று சொன்னேன்.." மீண்டும் அவன் பொறுமையாக கூற,



"ஏன்..?" என்றாள் அவள் சரியாக புரியாமல்.



"ரக்ஷன் லோக்கல் ரவுடிகளை பார்க்க போனதாக கேள்விப்பட்டேன்.. சோ ஆபத்து வரலாம்.. எல்லாரும் நேர்மையின் சிகரமா இருக்க முடியாது" அவளை பார்க்காமலே அவன் குத்தலாக கூற,



"நேர்மையா இருப்பது ஒன்னும் தப்பில்லை" என்றாள் அவள் வேகமாக.



அவள் தயக்கமெல்லாம் கணவனிடம் மட்டும் தானே.. எம். எல். எ பகலவனிடம் இல்லையே..!



"தப்பில்லை தான்.. அதுக்கு நாம் உயிருடன் இருக்கணுமே..!" நக்கலாக அவன் கூறியதில், இப்போது அவளுக்கு தான் பதில் தெரியாமல் போனது..



"என்னை என் கணவர் பார்த்துப்பார்.." வேண்டுமென்றே அவள் கூற,



"உன் வழியில் தான் போக வேண்டும் என்றால், அவராலும் முடியாமல் போகலாம்.."



இந்த முறை திரும்பி அவள் கண்களை பார்த்து அவன் கூற, அவளோ அவன் பார்வையில் கட்டுண்டு அமைதியாகி போனாள்..



பதில் தெரியாதது கூட காரணமாக இருக்கலாம்..



அவனை பக்கத்தில் பார்க்க அமையும் நாட்களே அறிதென்பதால், அதற்கு மேல் வாக்குவாதம் செய்யாமல் அமைதியாக அவனை சைட் அடிக்கும் வேலையை தொடர்ந்தாள்..



கடந்த போன ஒன்றரை வருடங்களில் அவள் கணவனிடம் பெரிதாக ஒன்றும் மாற்றம் இல்லை..



சற்றே இழைத்திருக்கிறானோ என்று மட்டும் சில சமயம் தோன்றும்..



ஒரு முறை, "நல்லா சாப்பிடறீங்களா வர்மா?" என அவள் கேட்ட போது,



"உனக்கு இதெல்லாம் கேட்கும் உரிமை இல்லை" என பட்டென திருப்பி கொடுத்து விட்டான்.



அதற்கு மேல் எதுவும் கேட்கும் தைரியம் அவளுக்கு இருக்கவில்லை..



சத்யாதேவி வீட்டில் வெண்ணிலாவை இறக்கி விட்டவன், "இங்கிருந்து எப்படி போவாய்?" என கேட்க,



"மேம் அவங்க காரில் அனுப்பிடுவாங்க" என்றாள் வெண்ணிலா.



"ஓகே" என்றவன் அவள் இறங்குவதற்காக காத்திருந்தான்.



தன்னை திரும்பி பார்க்க மாட்டானா என சில நொடி ஏக்கமாக அவனை பார்த்துக்கொண்டிருந்தவள், அவன் திரும்பும் வழி தெரியாததால் ஒரு பெருமூச்சுடன் இறங்கி சென்றுவிட்டாள்.



அவள் சென்றதும், அவள் உள்ளே போகும் வரை அவளை பார்த்து கொண்டவன், கண்களை ஒரு முறை அழுந்த மூடி திறந்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டு கிளம்பினான்.



அங்கிருந்து அவன் நேராக வந்தது வெண்ணிலாவின் வீட்டிற்கு தான்..



காரை நிறுத்தி விட்டு வெளியிலேயே இருந்த குளியல் அறையில் கை, கால்கள் எல்லாம் அலம்பிக்கொண்டு அவன் உள்ளே வர, அவன் வந்தது தெரிந்ததோ என்னவோ, அது வரை நேராக படுத்து கை கால்களை உதைத்து கொண்டிருந்த அவன் மகன், குப்புற விழுந்து வாசலை பார்த்தான்..



"அட டா நிலவன் குட்டிக்கு, அப்பா வந்தது தெரிஞ்சுடுச்சா?" குதூகலமாக கேட்டுக்கொண்டே அவன் வர, அதற்கு என்ன புரிந்ததோ, தன் பொக்கை வாயை காட்டி சிரித்தது..



குழந்தையிடம் சென்றதும் அதை தூக்கி அவன் மடியில் வைத்துக்கொள்ள, சரியாக அதே நேரம் கையில் பால் பாட்டிலுடன் வந்தார் காமாட்சி..



"வாங்க தம்பி" என அவனை பார்த்ததும் அவர் வரவேற்க,



"கொடுங்க மா.. நான் தரேன்.." என அவர் கையில் இருந்த டப்பாவை வாங்கி கொண்டவன், குழந்தையை வாகாக வைத்து கொண்டு அதற்கு பாலை கொடுத்தான்..



அவனிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றவர், மீண்டும் வரும் போது அவனுக்கு காபி, முறுக்கு எல்லாம் எடுத்து வந்தார்..



"குடிச்சுட்டானா தம்பி? உங்களிடம் மட்டும் தான் இத்தனை சமத்தா இருக்கான்.. நாங்க யாரு கொடுத்தாலும், ஒரே கலாட்டா தான்.." சிரித்துக்கொண்டே அவர் கூறியதில், தானும் புன்னகைத்தவன்,



"உங்கள் பெண் தான் என்னை மதிக்கவே மாட்டேன் என்கிறாள்.. இவனாவது மதிக்கட்டுமே..! என்ன டா..?" காமாட்சியிடம் ஆரம்பித்து அவன் மகனிடம் முடிக்க, சிரியவன் அதற்கும் சிரித்தான்.



தந்தையை பார்த்தாலே அவனுக்கு உற்சாகம் தான்.



"இத்தனை நாள் ஓடி போச்சு.. ரெண்டு பேரும் அத்தனை அன்பு வச்சிருக்கீங்க.. அப்புறம் எதுக்கு தான் பா இந்த பிரிவு..?"



"பேபிக்காக தான் மா.. அவள் என்னுடன் முழு மனதோடு வாழனும்.. அதுக்காக தான் காத்திருக்கேன்.." மென்மையாக அவன் கூற,



"அதுக்காக எத்தனை நாள் பா?" என்றார் அவர் ஆற்றாமையுடன்.



"ஒரேடியா இப்படியே விட்டுவிடுவேனோ என்று பயப்படாதீங்க மா.. எல்லாம் கொஞ்ச நாள் தான்.. அவளாக தெளியும் வழி தெரியாவிட்டால், கடத்திட வேண்டியது தான்.." விளையாட்டாக அவன் கூற,



"அப்படியாவது சேர்ந்தாள் சரி தான்" என்றார் அவர்.



வர்ஷாவும் ஸ்கூலில் இருந்து வர, அவளும் ப்ரெஷ் ஆகி வந்து அன்னை கொடுத்த காபி டிபனுடன் இவர்களுடன் இணைந்து கொண்டாள்..



"இது ஓகே வா பாரு வர்ஷா மா.. நீ கேட்ட கைட் இது தானே..?" என பகலவன் ஒரு புத்தகத்தை நீட்ட,



அதை வாங்கி பார்த்தவள், "இதே தான் மாமா.. தேங்க்ஸ்.." என்றுவிட்டு அதை புரட்டினாள்.



நிலவன் அவள் புக்கை பிடிக்க தாவ, அதை வேகமாக பின்னால் வைத்தவள், "டேய் கண்ணா இது உன் பொம்மை இல்லை.. சித்தி பாவம்.." என அவனை தூக்கிக்கொள்ள, அவனோ அதை பிடிக்க முயன்று தோற்று, உதட்டை பிதிக்கினான்..



அவன் அழ போகிறான் என புரிந்து மகனை கையில் வாங்கிக்கொண்டே எழுந்தான் பகலவன்.



"வெளியே போலாமா குட்டி" என அவன் கவனத்தை மாற்றிக்கொண்டே பகலவன் வெளியில் வர, அங்கிருந்த சிறிய தோட்டத்தை பார்த்ததும் சிறியவன் கவனமும் அதில் திரும்பியது..



தந்தை தோளில் வாகாய் புதைந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவன், வர்ஷா கொஞ்சியதற்கெல்லாம் சிரித்துக்கொண்டிருந்தான்..



ஒரு கட்டத்தில் அவன் கண்கள் தன்னை அறியாமல் சொருக ஆரம்பிக்க, பகலவன் கழுத்தை கட்டிக்கொண்டு தன் சிரிய முகத்தை, அவன் பறந்து விரிந்திருந்த தோளில் வசதியாக பொருத்தி கொண்டு அமைதியாக தூங்கி போனான் நிலவன்..



குழந்தை தூங்கவும், சிறிது நேரம் அதை தூக்கி கொண்டு வாசலிலேயே நடந்தவன், அவன் நன்றாக உறங்கியதும் அவனை கொண்டு வந்து தூளியில் விட்டுவிட்டான்..



"அக்கா வரும் நேரம் ஆச்சே மாமா! நீங்க பொதுவா இந்த நேரம் வர மாட்டேங்களே?" விளையாட்டாக வர்ஷா கேட்டதில் சிரித்து கொண்டவன்,



"அவளை சத்யா மேம் வீட்டில் விட்டுவிட்டு தான் வரேன்" என்றான்.



"விவரம் மாமா நீங்க" என அவள் சிரித்ததில், தானும் சிரித்துக்கொண்டவன்,



"இப்போ கிளம்பறேன் வர்ஷா.. உங்க அக்காவை நல்லா பார்த்துக்கோ.. ஒரே சோக கீதமா வாசிக்கறா.."



பாதி விளையாடும் மீதி உண்மையான அக்கறையாக தான் பகலவன் கூறினான்..



அது அவளுக்கும் புரிந்தது..



"விடுங்க மாமா.. அவளா தேடிக்கொண்டது தானே..! உங்களுடன் வர சொல்லி எத்தனையோ சொல்லி சலித்து விட்டேன்.. நீலி கண்ணீர் மட்டும் விடுவாள்.." சலிப்புடன் கூறியவள் தலையை மென்மையாக கோதி கொடுத்துவன்,



"அவள் மேல் ஒரு தப்பும் இல்லை வர்ஷா.. என் நல்லதை மட்டும் தான் அவள் யோசிப்பாள்.. அதுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள்.. உன்னிடம் சிலது சொல்ல முடியாது டா.. ஆனால் என் அன்பை விட அவளுடையது தான் பெரியது.. அதை மட்டும் புரிந்துகொள்.." என்றான் பகலவன் நிதானமாக.



"நீங்க உங்க பேபியை விட்டே கொடுக்க மாட்டேங்களே!" விளையாட்டு போல் கேட்டாலும், அவள் குரலில் பெருமிதமே அதிகம் இருந்தது.



"கண்டிப்பா" என வெட்கமே இல்லாமல் ஒத்துக்கொண்டவன்,



"வரேன் டா" என்றுவிட்டு



"வரேன் மா" என சமையல் அறை பார்த்து குரல் கொடுக்க, அதே நேரம் வெளியில் வந்த காமாட்சி,



"இதில் பலகாரம் இருக்கு தம்பி.. வீட்டில் எல்லாருக்கும் கொடுங்க.. மது, பாப்பாக்கு எப்படி கஞ்சி போடணும்ன்னு கேட்டு இருந்தா, இதில் எழுதி இருக்கேன்.. இதுவும் கொடுத்துடுங்க.."



ஒரு பேப்பரும் டப்பாவும் அவர் கொடுக்க, அதை வாங்கி கொண்டவன், "சரி மா.. வரேன்.." என்றுவிட்டு கிளம்பி விட்டான்..

குளிரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 25:



சத்யாதேவியை பார்க்க வந்த வெண்ணிலா அவருடன் அமர்ந்து அவருக்கு தேவையான அணைத்து உதவிகளும் செய்து கொடுத்தாள்..



எல்லாம் முடித்துவிட்டு, "கிளம்பவா மேம்..?" என அவள் கேட்க,



"இரு டா, டீயும் வடையும் போட சொல்லி இருந்தேன்.. சாப்பிட்டுவிட்டு போவாயாம்.. வா.." என்றவர் அவளை அழைத்துக்கொண்டு உணவு மேசைக்கு வந்தார்.



பெற்ற மகள் போல் தன்னை பார்த்துக்கொள்ளும் அந்த கம்பீர பெண்மணியை கஷ்டப்படுத்த என்றுமே வெண்ணிலாவிற்கு மனம் வந்ததில்லை..



"சரி மேம்" என அவருடன் நடந்தாள்..



வேலையாள் கொடுத்த டிபனை இருவரும் ஓய்வாக அமர்ந்து உண்டனர்..



"இன்று உன்னை பகலவனா டிராப் பண்ணினான்?" என சத்யாதேவி திடீரென கேட்க,



"ஆமா மேம்" என்றாள் அவள்.



"ஏன் உள்ளே வரமால் போய்விட்டான்?"



"தெரியலையே"



"ம்ம் அவன் எப்போதும் புரியாத புதிர் தான்.. இன்னும் எத்தனை நாள் அவனை இப்படி காய விட போகிறாய்?"



"மேம்" என அவள் விழிக்க,



"சொல்லு நிலா மா, உன் பக்கம் நியாயம் இருந்தாலும், அவன் பக்கமும் நான் உனக்கு எத்தனையோ முறை எடுத்து சொல்லிட்டேன்.. நீ இப்படி அடம் பிடித்தால் என்ன அர்த்தம் நிலா?" கேள்வியுடன் நிறுத்தியவரை பாவமாக நிமிர்ந்து பார்த்தவள்,



"என்ன இருந்தாலும் அவரும் இனியாவது தவறுகள் செய்ய மாட்டேன் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே மேம்.. நீங்களே இப்படி சொன்னால் எப்படி மேம்?"



அவர் கூட தன்னை புரிந்துகொள்ளவில்லையே என்ற ஆற்றாமை தான் அவளுக்கு அதிகம் இருந்தது..



"என் கதையும் உன் கதையும் போட்டு குழப்பிக்கொள்ளாதே நிலா மா.. அழிப்பதற்கும் காப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.. என் கணவர் அழிக்கும் சக்தி.. உன் கணவன் காக்கும் சக்தி.."



"ஆனால் வழிமுறை என்னவோ தவறு தானே..!"



இடையிலேயே புகுந்து வெண்ணிலா கூற, "கொஞ்சம் கொஞ்சமாக மாறலாம் நிலா.. அதுக்கு உங்கள் பிரிவு தீர்வில்லை மா.." என்றார் அவர் மென்மையாக.



"எனக்கு பயமா இருக்கு மேம்.. அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் நான் என்ன செய்வேன்..? எனக்கு எல்லாவற்றையும் விட அவர் உயிர் தான் முக்கியமா தெரியுது மேம்.." என வெண்ணிலா கூறிய போது, அதற்கு அவரால் பதில் கூற முடியாமல் போனது.



"கொஞ்சம் யோசி நிலா.. உன் பிரிவு அவனை ரொம்வும் பாதிப்பதாக தோணுது மா.. அப்புறம் உன் இஷ்டம்.." என அவரும் முடித்துவிட்டார்.



அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்த வெண்ணிலாவிற்கு மனம் முழுவதும் கணவன் நினைவு தான்..



இரவு அன்னை கொடுத்ததை கொரித்துவிட்டு குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்தவள், அவனையே பார்த்து கொண்டு படுத்திருந்தாள்...



அப்படியே தகப்பனை உரித்து வைத்து பிறந்திருந்தான்..



குழந்தையை சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தவளுக்கு, கணவன் நினைவாகவே போய்விட, தன் போனை எடுத்து ஒரு வீடியோவை ஓட விட்டாள் வெண்ணிலா..



அது பகலவனும் அவளும் மும்பையில் இருந்த போது அவள் எடுத்தது..



திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என எல்லாமே இருந்தது..



ஒவ்வொன்றிலும் திகட்ட திகட்ட தெரிந்ததென்னவோ அவளவன் அன்பு தான்..



இப்போதெல்லாம் அந்த காதலை அவன் கண்களில் காணவே முடிவதில்லையே..!



அதே நேரம் தன் அறையில் படுத்து கொண்டிருந்த பகலவனும், அந்த வீடியோக்களை தான் பார்த்து கொண்டிருந்தான்..



அனைத்தையும் அவள் போனில் இருந்து, மும்பையில் இருந்து கிளம்பும் முன்பே எடுத்திருந்தான்..



'நீ எதற்கு பயந்து என்னை பிரிந்திருக்கிறாயோ, அது உன் பிரிவாலேயே நடந்து விடும் போல் பேபி! சீக்கிரம் வந்துவிடு டி... பகலவன் தான் உறுதியானவன்.. உன் வர்மனின் இதயம் ரொம்பவும் பலவீனமானது பேபி..'



மானசீகமாக தன்னவளுடன் பேசிகொண்டவன் மனம், கடந்த ஒன்றரை வருடத்தில் நடந்தவைகளை வலியுடன் மீட்டி பார்த்தது..



வெண்ணிலாவும் அதையே நினைத்து கொண்டு தான் படுத்திருந்தாள்..



அன்று பதிவு திருமணம் முடித்துவிட்டு வந்த பகலவன், சும்மா இருக்கவில்லை.



அவன் தான் சத்யாதேவியை பிடித்தது..



அவரை அவனுக்கு முன்பே தெரியும்..



சில பொதுநல வழக்குகளுக்கு அவனே அவருக்கு உதவி இருக்கிறான்..



அதன் அடிப்படியில் அவன் வெண்ணிலாவை ஜூனியராக சேர்த்துக்கொள்ள சொல்லி கேட்க, அவன் மனைவி என்றதும் அவரும் முழு மனதுடன் ஒத்துக்கொண்டார்..



செழியன் மூலமாக வெண்ணிலாவிடம் விஷயத்தை தெரியப்படுத்தி, அவளை சோர்ந்து அமராமல் கோர்ட்டிற்கு போக வைத்தான்..



அவள் இல்லாத நேரங்களில் வீட்டிற்கு வருபவன், அந்த வீட்டில் ஆண் துணை இல்லை என்பதையே மறக்க வைத்துவிட்டான்..



அவர்களுக்கு தேவையான ஒவ்வொன்று வீட்டு பையனாக இருந்து அவன் பார்த்து பார்த்து செய்ததில், அவர்களும் அவனை மனதார ஏற்றுக்கொண்டனர்.



சில சமயம் வெண்ணிலாவையும் பார்க்க வருவான்.



ஆனால் அவளிடம் எதுவும் பேச மாட்டன்..



அமைதியாக அவள் இடையை அணைத்துக்கொண்டு குழந்தை அசைவுகளை மட்டும் அனுபவித்து கொண்டு எழுந்து விடுவான்..



வெண்ணிலாவும் சில முறை மனம் கேட்காமல், "உங்கள் குழந்தை மட்டும் தான் வேண்டுமா? அதை சுமக்கும் நான் பகையா?" என கேட்டுவிடுவாள்.



கொஞ்சமும் சலிக்காமல், "நீயும் குழந்தை போதும் நான் வேண்டாம் என்று தானே இருக்கிறாய்!" என திருப்பி கொடுத்துவிடுவான்..



மருத்துவனைக்கும் செக் அப் செல்லும் போது உடன் சென்று, அவள் நலனை எல்லாம் விசாரித்துவிட்டு தான் வருவான்..



பிரசவ வலி என காமாட்சி போன் செய்த போது, அவன் தான் சென்று மருத்துவமனை அழைத்து சென்றான்..



அப்போது மட்டும் இருவர் கோபமும் வேலை செய்யவில்லை.



"வலிக்குது வர்மா.. பயமா இருக்கு.." என அவள் கதறியபோதெல்லாம்,



"நான் இருக்கேன் பேபி.. ஒன்னும் இல்லை.. நம் குழந்த உன்னை கஷ்டப்படுத்த மாட்டான்.. சீக்கிரம் பிறந்துவிடுவான்.. கொஞ்சம் பொறுத்துக்கோ பேபி.. ஒன்னும் இல்லை டா.." என ஆறுதல் சொல்லி கொண்டு அருகிலேயே தான் இருந்தான்.



நிலவனை முதலில் கையில் ஏந்தியதும் அவன் தான்..



"அப்படியே நீங்க தான் வர்மா" என சிறு புன்னகையுடன் கூறிக்கொண்டே தான் வெண்ணிலா மயங்கினாள்..



மீண்டும் அவள் கண்விழித்த போது இருவருமே சிறிது நேரம் அனைத்தும் மறந்து தான் இருந்தனர்.



"பேபி இந்த பிரிவு போதாதா?" என மனம் கேட்காமல் பகலவன் கேட்க,



"குழந்தைக்காகவேனும் நீங்க கொஞ்சம் மாற கூடாதா வர்மா?" என்றாள் வெண்ணிலா.



மொத்தத்தில் இருவரும் மாற தயாராக இல்லாததால், சூழல் மாறாமலே போனது.



மீண்டும் பகலவன் தான் அவளிடம் இருந்து ஒதுங்கி கொண்டான்..



மற்றபடி வீட்டிற்கு வருவதையோ, குழந்தையை பார்ப்பதையோ அவன் மாற்றிக்கொள்ளவில்லை..



இந்த நிலையில் தான் ரக்ஷன் பாக்டரி பிரெச்சனை வந்தது..



இவர்கள் அனுமதி மறுத்ததால், மேலும் பெரிய இடத்தில் சென்று அனுமதி பெற்று விட்டான் ரக்ஷன்..



அவன் பாட்டிற்கு கட்டிடம் கட்டும் வேலையை தொடங்கிய போது, அவனை அடித்து துரத்தி விடும் ஆத்திரம் தான் பகலவனுக்கு வந்தது.



அதை பகலவன் உடனடியாக செய்யாமல் இருந்ததற்கு பல காரணங்கள் இருந்தது..



முதல் முக்கிய காரணம் அந்த பகுதி மக்கள் தான்..



அங்கிருந்த இளைஞன் ஒருவன் உடனடியாக ரக்ஷன் பாக்டரி எதிர்த்து கேஸ் பதிவு செய்துவிட்டான்.



அவனுக்கு ஆதரவாக கேஸ் எடுத்து நடத்தவிருந்தது வெண்ணிலா தான்.



அவனின் தந்தை தான் பகலவனிடம் வந்து பேசினார்.



இது போல், தாங்களே இந்த முறை அவனை எதிர்த்து போராடப்போவதாக அவர் கூற, பகலவனோ அப்போதும் உடனடியாக சம்மதிக்காமல், அவர் மகன் கதிரவனை அழைத்து பேசினான்.



"கல்லூரி போகும் பையன் கதிர் நீ.. இதெல்லாம் தேவையா?" என அவன் கேட்க,



"இல்லை சார், கோபத்தில் கேஸ் கொடுத்துட்டேன்.. இந்த முறை போராடி பார்க்கணும்னு தோணுது.. மக்கள் எல்லாரும் அதுக்கு தயாரா இருக்காங்க.. நீங்க அனுமதி கொடுத்தால் மட்டுமே செய்கிறோம் சார்.. உங்களை மீறி செய்ய நினைக்கவில்லை.." என அவன் பவ்யமாக கூற, சிறிது நேரம் யோசித்தான் பகலவன்.



எப்படியும் அவனை மீறி அவன் பகுதியில் ஒன்றும் நடந்துவிடாது.. தங்கள் உரிமைக்காக மக்கள் போராட நினைக்கும் போது, அதை மறுக்க அவனுக்கு மனம் வரவில்லை..



"சரி கதிர்.. செய்யுங்க.. நானும் பார்த்துக்கறேன்.. ஏதாவது பிரச்சனை என்றால் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் என்னிடம் சொல்லிவிட வேண்டும்.." என்று கூறியே அனுப்பி வைத்தான்.



மற்றொரு பக்கம் வெண்ணிலா எடுத்திருந்த முதல் பெரிய வழக்கு இது..



அவளையும் கட்டிப்போட மனம் வராமல், அவளுக்கு பின்னால் இருந்து பகலவன் தான் எல்லாம் செய்து கொண்டிருந்தான்..



அவள் திரட்ட நினைக்கும் ஆதாரம் அனைத்தும் உடனுக்குடன் அவள் கைகளுக்கு கிடைத்து கொண்டிருந்தது..



இது இரண்டையும் மீறி அவன் ரக்ஷன் மீது கை வைக்க யோசிப்பதற்கு மற்றொரு காரணமும் இருந்தது..



எப்படியும் யார் எது செய்தாலும், அனைத்தையும் பகலவன் தன் கண்காணிப்பின் கீழ் தான் வைத்திருந்தான்.



அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போன ஒரே விஷயம் அவன் மனம் தான்..



மனைவி வேண்டும் என நொடிக்கு நொடி அடம் பிடித்து அவன் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக்கொண்டிருக்கும் அந்த வலிக்கும் மட்டும், அவனால் ஒரு மருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை..



அவன் கண்டுபிடிக்க முயற்சிக்கவுமில்லை என்பது தான் உண்மை..



*******************



இரவு முழுவதும் சரியான உறக்கம் இல்லாமல் பகலவன் அன்று காலை சீக்கிரமே எழுந்துவிட்டான்..



தலை வலித்ததில் ஒரு காபி குடித்துக்கொண்டே தோட்டத்தில் நடப்போம் என்று எண்ணத்தில் அவன் இறங்கி வர, அந்த நேரத்திற்கு செழியனும் முதல் தள வரவேற்பறையில் தன் மகளுடன் போராடி கொண்டிருந்த்தான்..



செழியன் மகள் தியானாவிற்கு ஐந்து மாதங்கள் ஆகிறது..



நிலவனை விட ஒரு மாதமே சிறியவள்..



"என்ன ண்ணா, காலையிலேயே எழுந்துட்டாளா?" என கேட்டுக்கொண்டே பகலவன் வர,



"ஆமா டா.. நைட் தூங்கியதே லேட்.. அதற்குள் எழுந்தாயிற்று.. பாவம் மது நைட் முழுவதும் தூங்கலை.. அதான் வெளியில் தூக்கிட்டு வந்துட்டேன்.." என்றான் செழியன்.



"மது தூங்காவிட்டால் நீங்களும் தூங்கி இருக்க மாட்டேங்களே! இந்த குட்டி வாண்டை இங்கே கொடுங்க.. நான் பார்த்துக்கறேன்.. நீங்களும் ரெஸ்ட் எடுங்க.." பேசிக்கொண்டே அவன் தியாவை வாங்கிக்கொள்ள, அவனை பார்த்ததும் குழந்தை அவன் முகத்தில் தட்டி கொண்டே சிரித்தது..



"நீ தூங்கவில்லையா டா? இப்போதெல்லம் ரொம்ப சீக்கிரம் எழுந்துவிடுகிறாயே!" கவலையுடன் செழியன் கேட்க,



"நைட் சீக்கிரம் தூங்கிட்டேன் ண்ணா.. அதான்.." என வாய்கூசாமல் பொய் சொல்லிவிட்டு இறங்கி சென்றான் பகலவன்..



அவனை பற்றி செழியனுக்கு தெரியாதா..!



அவன் பொய்யை சுலபமாக கண்டுகொண்டவனுக்கு, வேதனை தான் மிஞ்சியது..



கீழே பார்த்தி அப்போது தான் தனக்கு காபி கலந்து கொண்டிருந்தார்..



"எனக்கு ஒரு காபியும், பேபிக்கு பாலும் கிடைக்குமா ண்ணா?" என பகலவன் கேட்க,



"எழுந்தாச்சா தம்பி? இதோ வரேன்.." என வேகமாக அவர் தன் காபியை வைத்துவிட்டு அவனுக்கு கலக்க தொடங்கினார்..



"அட! பார்த்தி ண்ணா, முதலில் நீங்க குடிச்சுட்டு அப்புறம் கலந்துட்டு வாங்க போதும்.. அதுவரை நானும் இந்த வாண்டும் தோட்டத்தில் இருக்கோம்.." என்றுவிட்டு பின்பக்கம் வந்துவிட்டான்.



பனி விழும் நேரம் என்பதால், தோட்டத்தில் நடக்க அவன் செல்லவில்லை.



கதவருகிலேயே மேல சுவர் இருக்கும் இடத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டவன், தியாவை மடியில் வைத்துக்கொண்டு மெதுவாக ஆட்ட, குழந்தை கைதட்டி ரசித்தது..



"அடியே வாண்டு, காலை நேரத்தில் இப்படி ஆட்டிவிட்டால், தூங்கணும்.. நீ என்னடாவென்றால் இன்னும் விளையாடுகிறாயே! சரியான வாலு குட்டி நீ..!" என அவளை தூக்கி அவன் கொஞ்ச, அதுக்கு என்ன புரிந்ததோ தன் போக்கை வாயை திறந்து சிரித்தது.



"மதுவை சின்ன வயதில் பார்த்தது போலவே இருக்க டி குட்டி.. அவளுக்கு இருந்த குறும்பு தனம் கொஞ்சமும் குறையாமல் இருக்கு.." என அவள் குண்டு கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தவன், மீண்டும் ஊஞ்சலை ஆட்டினான்..



அதற்குள் பார்த்தி காபி, பாலுடன் வந்துவிட, குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு காபியை குடித்தவன், பின் குழந்தையை வாங்கி அதற்கும் பாலை கொடுத்தான்.



பசி அடங்கியதும் மேலும் சிறிது நேரம் தியா விளையாட தான் செய்தது..



"நிலா அம்மாவும் பாப்பாவும் நல்லா இருக்காங்களா தம்பி?" என பார்த்தி கேட்க,



"நல்லா இருக்காங்க ண்ணா.." என்றான் பகலவன்.



"ஒரு நாளாவது இங்கே கூட்டி வர கூடாதா பா?"



"நிரந்தரமாகவே வருவா ண்ணா" எப்போதும் கூறும் பதிலை அதே அழுத்தத்துடன் அவன் கூறியதில், அவரும், "சரி பா" என்றுவிட்டு சென்றுவிட்டார்.



பார்த்திக்கு மட்டும் தான் அவனுக்கு வெண்ணிலாவிற்கும் திருமணமானதை பகலவன் கூறி இருந்தான்.



பிரிவிற்கான காரணத்தை கூறாமல், கொஞ்ச நாளில் அவள் வந்துவிடுவாள் என்று மட்டும் அவன் கூறி இருக்க, அவரும் அதற்கு மேல் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை..



தியா தூங்கும் வழியே தெரியாததால், அவளை உள்ளே தூக்கி வந்தவன், அவளை நேராக தன் அறைக்கு தூக்கி வந்து விட்டான்.



குழந்தைகள் பார்க்கும் ரைம்ஸ் அவன் டிவியில் போட்டுவிட, அதை அவன் மடியில் அமர்ந்து சிறிது நேரம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தவள், மீண்டும் அவன் மேல் ஏறி அவனை தான் வம்பிழுத்தாள்.



சிறிது நேரம் ட்ரெயின், பஸ், பால் என ஏதேதோ விளையாட்டு பொருட்கள் வைத்து இருவரும் விளையாண்டனர்.



இடையில் அவன் மீது யானை சவாரியும் ஏறி மஹாராணி போல் வளம் வந்து தான் தியா இறங்கினாள்..



நிலவன், தியா இருவருக்கும் பகலவன் மீது யானை சவாரி போவது என்றால் மிகவும் இஷ்டம்..



அவன் உயரமும் உடற்கட்டும் வாகாக அமர்ந்துகொள்ள வசதியாக இருந்ததால், இருவரும் அவனை விடமால் ஏறி கொள்வார்கள்..



ஒருவாறு நன்றாக விடிந்ததும் தியா கண் அசர, அவளை தன் அறையிலேயே இருந்த தொட்டிலில் பாதுகாப்பாக விட்டுவிட்டு குளிக்க சென்றான் பகலவன்..



மது எழுந்து அவனை தேடி வர, "தூங்கிட்டா மது.. இங்கேயே தூங்கட்டும்.. நான் கிளம்பிட்டேன்.. நீ பார்த்துக்கோ.." என்றுவிட்டு கிளம்பி விட்டான் பகலவன்..

குளிரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 26:



காலையில் சத்யாதேவி கிளம்பி வீட்டை விட்டு வெளியே வந்த போது, சரியாக ரக்ஷன் கார் அவர் வீட்டு வாசலில் வந்து நின்றது..



அதில் இருந்து இறங்கி வேகமாக வந்தவன், ஒரு நொடி அவர் தீர்க்கமான பார்வையில் தயங்கி நின்றான்.



"உட்காரு" என அவர் வாசலில் போடப்பட்டிருந்த இருக்கையை காட்ட,



"நோ தேங்க்ஸ்" என்றவன், ஒரு பெருமூச்செடுத்துக்கொண்டு பேசினான்.



"என் பாக்டரி கேசில் அந்த வெண்ணிலாவிற்கு ஹெல்ப் பண்ணாதீங்க.. ஒரு வக்கீலா இல்லாவிட்டாலும், ஒரு அம்மாவா என் முன்னேற்றத்தை கெடுக்காதீங்க.."



"அம்மாவா..? அந்த நினைப்பெல்லாம் உனக்கு இருக்கா என்ன?" நக்கலாக அவர் கேட்டதில், அவன் தலை தானாக தாழ்ந்து போனது.



"நான் வீட்டை விட்டு வந்த போது, உன் அப்பாவுடன் சேர்ந்து என்னை அலட்சிய படுத்திய போது நான் அம்மாவென்று தெரியவில்லையா பா..?" நிதானமாக அவர் கேட்க, அதற்கு பதில் சொல்ல தெரியாமல் விழித்தவன், ஒரு தலை சிலுப்பலுடன் நிமிர்ந்தான்.



"லுக் மா, இதெல்லாம் எத்தனையோ முறை பேசியாச்சு.. இது நான் எடுத்திருக்கும் முதல் ப்ராஜெக்ட்.. ஏற்கனவே நிறைய பிரச்சனை.. இதில் நீங்களும் படுத்தாதீங்க.. கொஞ்சம் ஒதுங்கி இருந்தீங்கனா, அந்த வெண்ணிலாவை நான் ஹேண்டில் பண்ணிப்பேன்.." அடக்கப்பட்ட கோபத்துடன் கூறியவனை அமைதியாக பார்த்தவர்,



"முதல் ப்ராஜெக்ட் ஒரு ஊரையே அழிப்பது போல் எடுத்திருக்கிறாய் ரக்ஷா.. கிரேட்.. வாழ்த்துக்கள்.. ஆனால் அதற்கு என்னால் துணை போக முடியாது.. முடிந்தால் இந்த கெமிக்கல் பாக்டரி ஐடியாவை விட்டுவிட்டு, உருப்படியா ஏதாவது கட்டப்பார்.. இல்லை என்றால் கோர்ட்டில் பேஸ் பண்ணிக்கலாம்.." என்றவர் அதற்கு மேல் நிற்காமல் வேகமாக சென்று காரில் ஏறிவிட்டார்.



காரை எடுத்ததும் கண்ணாடி வழியாக அவனை பார்த்தவர் கண்கள் லேசாக கலங்கி போயிற்று..



ஒரு வக்கீலாக அவரால் திடமாக நிற்க முடியும்.. ஒரு அன்னையாக முடியாதே..!



இதற்கு மேல் நின்றால் தன்னை அறியாமல் மகனை அணைத்து பாசத்தை காட்டி அவமானப்பட்டு விடுவோமோ என பயந்து தான் ஓடி வந்து விட்டார்.



'நீ என் மகனும் தானே டா..! ஏன் என்னை போல் கொஞ்சமும் இல்லாமல் போனாய்?' ஆற்றாமையுடன் கேட்டுக்கொண்டனர் விழி மூடி சீட்டில் சாய்ந்து கொண்டார்..



சத்யாதேவியின் கணவர் மிக பெரிய பணக்காரர்..



ஆனால் அனைத்து பணமும் தவறான வழியில் சேர்ந்தது..



பணத்திற்காக நாட்டின் வளத்தை அழிப்பதில் முதல் இடம் பிடிக்க கூடியவர்..



தனக்கு தேவை என்றால் அப்பாவி மக்கள் என்று கூட பார்க்காமல் கொல்லவும் தயங்க மாட்டார்..



எத்தனையோ சொல்லி பார்த்து முடியாமல் தான் ஒரு கட்டத்தில் சத்யாதேவி விவாகரத்து கொடுத்துவிட்டு தனியாக வந்துவிட்டார்.



மகனும் தந்தை வழியிலேயே செல்வது கஷ்டமாக இருந்தாலும், அவர் பேச்சை அவனும் மதிக்கவில்லையே..! அவரால் என்ன செய்ய முடியும்..!



இதை சொல்லி தான் வெண்ணிலாவும் அவரை மடக்குவாள்..



"உங்களை போலவே தான் எனக்கும் கொலை எல்லாம் பிடிக்கவில்லை" என அவள் கூறும் போதெல்லாம்,



"சுயநலத்திற்காக யாராக இருந்தாலும் கொல்வதற்கும், தவறுக்கு தண்டனை கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது" என்று தான் அவரும் கூறுவார்.



அது அவளுக்கு புரிந்ததா இல்லையா என்று தான் அவருக்கு தெரியவில்லை.



சத்யாதேவி கோர்ட்டிற்கு வந்து சேர்ந்த போது, வெண்ணிலா ஏற்கனவே வந்திருந்தாள்..



அன்றைய கேஸிற்கான கோப்பை இருவரும் சிறிது நேரம் தங்கள் அறையில் அமர்ந்து பார்த்துவிட்டு கிளம்பினர்.



சத்யாதேவி முன்னால் சென்றுவிட, கையில் ஒரு கோப்புடன் அதையே பார்த்துக்கொண்டு, எதிரில் சரியாக பார்க்காமல் நடந்து வந்து கொண்டிருந்தாள் வெண்ணிலா..



திடீரென எதிரில் ஒருவர் நிற்பது போல் இருக்கவும், அவள் சட்டென நின்றுவிட, "பரவாயில்லையே கவனமாக தான் இருக்கிறாய்.. நான் கூட இடித்துவிடுவாய் என்று எதிர்பார்த்தேனே..!" திடீரென கேட்ட கணவன் குரலிலும், அவனை எதிர்பாராமல் அங்கு பார்த்ததிலும் அவளால் திகைத்து விழிக்க தான் முடிந்தது..



"எதிரிலும் கொஞ்சம் பார்த்து நட" என்றுவிட்டு அவன் சென்று விட, அவளும் தலையை சிலுப்பி தன்னை நிலைப்படுத்தி கொண்டு கணவனை திரும்பி பார்த்தாள்..



உள்ளே வந்து சத்யாதேவி அருகில் அவள் அமர்ந்துகொள்ள, முதல் கேஸே பகலவன் கேஸ் தான் எடுக்கப்பட்டது..



மிக பெரிய தொழிலதிபர் ஒருவர் தன் தங்கை மகனை காணவில்லை என்றும், பகலவன் மேல் சந்தேகம் இருப்பதாகவும் கேஸ் கொடுத்திருந்தார்..



அவனை விசாரிக்க அழைத்த போது அசால்ட்டாக வந்து நின்றவன், தனக்கும் அந்த பையனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என சுலபமாக நிரூபித்துவிட்டான்..



எதிரில் இருந்தவர்கள் சொன்ன யூகத்தை எல்லாம் அவனால் நொடியில் தகர்க்க முடிந்தது..



அந்த ஹியரிங் முடியும் வரை அவன் முகத்தில் ஒரு நக்கல் புன்னகை ஒட்டி கொண்டே தான் இருந்தது..



அவன் திறமையை விட, அந்த நக்கல் புன்னகை தான் வெண்ணிலாவிற்கு ஒருவித பயத்தை கொடுத்து மீண்டும் மீண்டும் அவன் உயரத்தை அவள் மனதில் பதிய வைத்தது..



அவன் ஹியரிங் முடிந்ததும் வெண்ணிலாவை ஒரு முறை அதே புன்னகையுடன் பார்த்து கண்ணடித்துவிட்டு அவன் சென்றுவிட, இதனால் அவனுக்கு எதுவும் ஆபத்து வந்துவிட கூடாதே என அவள் தான் தவித்து அமர்ந்திருந்தாள்..



அவர்கள் கேஸ்ஸும் முடிந்ததும் இருவரும் வெளியே வர, பகலவன் அங்கே தான் நின்று தன் வக்கீலுடன் பேசி கொண்டிருந்தான்..



அவன் அருகில் சென்ற சத்யாதேவி, "என்ன பகலவா, என்னை எல்லாம் மறந்துவிட்டாயா? வீட்டு வாசல் வரை வந்துவிட்டு சென்றுவிட்டாயாமே!" என கேட்க,



"அன்னிக்கு கொஞ்சம் வேலை மேம்.. மற்றபடி உங்கள் கையால் கொடுக்கும் பில்டர் காபியை மிஸ் பண்ணுவேனா? நீங்க போங்க.. ஒரு பைவ் மிண்ட்ஸில் வரேன்.. ஒரு காபி மட்டும் சொல்லி வைங்க மேம்.. கொஞ்சம் தலைவலி.." என்றான் பகலவன்.



"சொல்லுறேன்.. வா" என்றுவிட்டு அவர் நகர்ந்துவிட, அவனை பார்த்துக்கொண்டே வெண்ணிலாவும் சென்றுவிட்டாள்.



பகலவன் சத்யாதேவியின் அறைக்கு வந்த போது, வெண்ணிலா சற்று தள்ளி அமர்ந்து ஏதோ வேலை பார்த்து கொண்டிருந்தாள்..



அவன் வந்ததும் அவன் கேட்டிருந்த காபியை கொடுத்துட்டே சத்யாதேவி பேசினார்.



"இந்த சின்ன கேஸுக்கெல்லாம் நீ வர மாட்டாயே பகலவா! உன் காற்று அத்தனை சுலபமா இங்கே வீசாதே..?" கிண்டலாக அவர் கேட்க,



"ஒரு முக்கிய வேலையாக வந்தேன் மேம்" என்றவன் கண்கள் கணினியில் தலையை விட்டு கொண்டிருந்த மனைவி மீது தான் படிந்திருந்தது..



"ரொம்ப முக்கியமான வேலை போல்..!" மேலும் அவர் கிண்டலடிக்க,



"ம்ம்.. உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய வேலை.." சிரித்துக்கொண்டே கூறினாலும், அவன் குரலில் இருந்த வேதனை அவருக்கு புரிந்தது.



"நானும் சொல்லி பார்த்துட்டேன் பகலவா.. உன் மனைவி உன்னை விட அடம்.."



"என் பேபியாச்சே..! இருக்கட்டும் விடுங்க..." என்றான் பகலவன்.



"மேடம் இது ஜெராக்ஸ் எடுக்கனும்" என கூறிக்கொண்டே வந்த வெண்ணிலா, அப்போது தான் பகலவனை கவனித்தாள்..



"எடுத்துட்டு வா நிலா மா" என அவர் கூற, அவனை பார்த்துக்கொண்டே மெதுவாக நடந்தாள் வெண்ணிலா..



"வரேன் மேம்" என தானும் விடைபெற்று கொண்டவன், மனைவியை தான் தொடர்ந்தான்..



சாதாரணமாக அவளுடன் இணைந்து அவன் நடக்க, அதை உணர்ந்தவள், "இன்றும் பொய் சொல்லி தான் தப்பிச்சிருக்கீங்க இல்லையா? அந்த பையன் இருக்கானா? இல்லை கொன்னுட்டிங்களா?" மனம் கேட்காமல் அவள் கேட்க, ஒரு மரத்தடி வரை வந்திருந்தவளை பிடித்து நிறுத்தினான் பகலவன்..



"அவன் என்ன செய்தான் என்று சொல்கிறேன், அவனை என்ன செய்யலாம் என்று நீயே சொல்லு.." என்றுவிட்டு தொடர்ந்தன்



"அந்த பொருக்கி பணத்தை வாங்கிக்கொண்டு சரியா கட்டிட வேலை முடியாத ஸ்கூலுக்கு பெர்மிஸன் கொடுத்திருக்கான்.. திடீரென்று கட்டிடம் சரிந்து, கிட்டத்தட்ட நாலு குழந்தைகள் அங்கேயே....!"



"ஐயோ..!" என அவன் முடிக்கும் முன்பே அவள் பதறி விட,



"என்ன செய்யணும் சொல்லு?" என்றான் பகலவன் மீண்டும்.



"தூக்கு தண்டனை தான் வாங்கி தரணும்" என்றாள் வெண்ணிலா காட்டமாக.



"கிடைக்காவிட்டால்...?"



இந்த முறை பதில் தெரியாமல் போக, "அதுக்காக கோர்டில் இத்தனை பொய்யா?" என்றாள் அவள் ஆற்றாமையுடன்.



அவளை அழுத்தமாக பிடித்து தன்னை பார்க்க வைத்தவன், "உனக்கு உண்மையை சொல்லி நான் தண்டனை அனுபவிக்கணுமா? கண்டவனுக்காக எல்லாம் அதை என்னால் செய்ய முடியாது.. வேண்டுமானால் உன்னை கடத்தினேன் என்று கேஸ் கொடு, ஒத்துக்கொண்டு உள்ளே போறேன்.. செய்கிறாயா..?" அவள் முகத்தை நிமிர்த்தி அவன் கேட்க, அவனுக்கு பதில் கூற முடியாமல்,

"விடுங்க" என திமிறினாள் வெண்ணிலா.

சூழ்நிலை உணர்ந்து அவளை விட்டவன், "என்னை கொல்ல போகும் எதிரி வெளியில் எல்லாம் இல்லை டி.. இதோ இங்கே தான் வைத்திருக்கிறேன்.." என தன் நெஞ்சை சுட்டிக்காட்டியவன், அதற்கு மேல் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டான்..

****************

இரவு பத்து மணி ஆகியும் பகலவன் வீட்டிற்கு வராமல் போக, அவன் போனிற்கு அழைத்து பார்த்தான் செழியன்..



அவன் எடுக்காமலே போக, மீண்டும் மீண்டும் அழைத்து சோர்ந்து போன செழியனுக்கு அவன் எங்கே இருப்பான் என புரிந்து போயிற்று..



தியாவை தூங்க வைத்துவிட்டு செழியனிடம் வந்த மாதங்கி, "பகலவன் இன்னும் வரவில்லை போலையே செழியா..! வேலையா என்ன..?" என கேட்க,



"ம்ம் கொஞ்சம் அதிகம் வேலை தான் மது மா.. போன் ஆப் ஆகிடுச்சு போல்.. நான் நேரிலேயே போய் கூட்டிட்டு வரேன்.. நீ தூங்கு டா.." என்றுவிட்டு சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான் செழியன்..



வீட்டை விட்டு சற்று தள்ளி வந்ததும், ஒரு ஆள் அரவமற்ற தெருவில் பகலவனின் கார் நின்றிருந்தது..



அதை பார்த்ததும் டிரைவரை காரை நிறுத்த சொன்னவன், "நீங்க வீட்டுக்கு போய்டுங்க.. நான் பகலவனுடன் வந்து கொள்கிறேன்.." என்று கூறி இறங்கிவிட, டிரைவரும் காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்..



நேராக பகலவன் கார் அருகில் வந்தவன், முன்பக்க கதவை திறந்துகொண்டு உள்ளே ஏறி அமர்ந்தான்..



ஓட்டுநர் இருக்கையில் கண்மூடி சாய்ந்திருந்த பகலவன், செழியன் உள்ளே ஏறி அமர்ந்ததை கூட உணரவில்லை.



"பகலவா.. பகலவா..." என செழியன் சத்தமாக அழைத்துக்கொண்டு அவனை பிடித்து உலுக்க, அதில் தான் பகலவன் லேசாக சுயநினைவிற்கே வந்தான்..



"ண்ணா.." என குளறலாக அழைத்தவன்,



"ரொம்ப லேட் ஆகிடுச்சா?" என டைம் பார்க்க, அதுவோ அவன் கண்களுக்கு சரியாக தெரியாமல் சதி செய்தது..



"இந்த கண்றாவி பழக்கத்தை பழகிக்கொள்ளதே என எத்தனை முறை சொல்வது பகலவா? என் பேச்சை கேட்கவே கூடாது என்று வைத்திருக்கிறாயா?" கோபமாக செழியன் காய்ந்ததில் சிவந்திருந்த கண்களுடன் அவனை திரும்பி பார்த்தவன்,



"லேசா தான் ண்ணா.. நிறைய குடிக்கவில்லை.." என்றான் மெதுவாக.



"குடிக்கவே குடிக்காதே என்று சொல்லி கொண்டிருக்கிறேன் பகலவா.. அதில் என்ன கொஞ்சம் அதிகம் என்று பிரித்துக்கொண்டு..! இனி ஒரு முறை இப்படி செய்தால், வெண்ணிலா மது எல்லாரிடமும் சொல்லிடுவேன்.. இந்த கருமம் வேண்டாம் டா.." மிரட்டலும் ஆற்றாமையுமாக கூறியவனை வெறுமையாக பார்த்தவன்,



"வேண்டி இருக்கே ண்ணா" என்றான் பாவமாக.



"ரொம்ப தப்பு பகலவா.." அவனுக்கு தண்ணீர் எடுத்து கொடுத்து கொண்டே செழியன் கூற,



"தெரியும் ண்ணா.. நான் என்ன செய்யட்டும்..! சில நாட்கள் சுத்தமாக முடிவதில்லை ண்ணா.. அப்படியே இதயம் நின்று செத்து போவேனோ என்று பயமா இருக்கு ண்ணா.. அதான்.. ப்ளீஸ் ண்ணா.." கெஞ்சலாக கேட்டவனை பார்க்க செழியனுக்கு பாவமாக தான் இருந்தது..



பகலவன் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன்..



இந்த சில நாட்களாக தான் இந்த குடியை பழகிகொண்டான்..



அவன் குடிப்பது செழியனை தவிர யாருக்கும் தெரியாது..



என்ன தான் அவன் கவலை புரிந்தாலும், இதை ஆதரிக்க செழியனும் தயாராக இல்லை..



"உன் நிலையில் நான் இருந்த போது, நானும் இப்படி போய் இருக்கலாம் பகலவா.. கட்டுப்பாடு நம்மிடம் தான் இருக்க வேண்டும்.. கொஞ்ச நாள் பொருத்துக்கோ டா.. எல்லாம் சரியாகும்.. அதற்காக இதெல்லாம் வேண்டாம் பகலவா.. தியா உன்னை தேடி கொண்டே இருந்தால் தெரியுமா..! இப்படியே அவளிடம் போக முடியுமா..?" தெளிவாக செழியன் பேச்சை மாற்ற, அது கொஞ்சம் வேலை செய்தது..



"சாரி ண்ணா.. விட்டுவிட கண்டிப்பா முயற்சிக்கிறேன்" என உறுதியாக பகலவன் கூற, அவன் அதை மீற மாட்டான் என்பதால் செழியனுக்கும் நிம்மதியாக இருந்தது.



"இந்த பக்கம் வா.. நான் காரை எடுக்கிறேன்.." என செழியன் கூற, அதற்குள் முகத்தை அலம்பி இருந்தவன், "தெளிவா தான் இருக்கேன் ண்ணா.. நானே ஓட்டுகிறேன்.." என்றுவிட்டு காரை எடுத்தான்..



வீட்டிற்கு வந்ததும் செழியன் அவனை அறைக்கு அழைத்து செல்ல முயல, " நீங்க போங்க ண்ணா, நான் கொஞ்ச நேரம் பாட்டு கேட்டுட்டு அப்புறம் போய் படுக்கறேன்" என்றவன் செழியனின் பதிலை எதிர்பார்க்காமல் ஹெட் செட்டை காதில் மாட்டிக்கொண்டு தோட்டத்திற்கு சென்றுவிட்டான்..



எத்தனையோ இரவுகள் அங்கு அவன் தனியாக நிம்மதியாக பாடலுடன் நடந்திருக்கிறான்..



இன்றோ தோட்டத்தில் வீசிய காற்று கூட அவனுக்கு மனைவியை தான் நினைவு படுத்தியது.



அவன் மேல் அத்தனை பயம் இருந்த போதே அவனை ரசித்து காதலித்தவள், இப்போது அவன் அவளிடம் அடிமையாக இருக்க தயாராக இருக்கும் போது விட்டு சென்று விட்டாளே..!



அவன் மனதை உணர்த்துவது போல் அவன் காதில் பாடலும் ஒளித்து கொண்டிருந்தது..



"நிலாவே வா.. செல்லாதே வா..

என்னாளும் உன் பொன்வானம் நான்

எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்



நிலாவே வா.. செல்லாதே வா..



காவேரியா கானல் நீரா

பெண்மை என்ன உண்மை?



முள்வேலியா முல்லைப்பூவா

சொல்லு கொஞ்சம் நில்லு



அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு் பிள்ளை

தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை

பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை ..



நிலாவே வா.. செல்லாதே வா..



பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட சந்தம் பாட

கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது



ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே .

ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே

ஆகாயம் ஆகாத மேகம் ஏது கண்ணே

நிலாவே வா.. செல்லாதே வா.."


குளிரும்..
 
Last edited:
Status
Not open for further replies.
Top