All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனுஜேயின் “பிரியாத வரம் வேண்டும்” - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

AnuJey

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
மிக்க நன்றி மாம்🙏 உங்களுடைய பேஜில் எழுதுவது ஆனந்தமாக இருக்கிறது. கண்டிப்பாக என்னுடைய முழு அற்பணிப்பு இதில் இருக்கும்
 

AnuJey

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாருக்கும் என் இனிய மாலை வணக்கம்🙏
நான் என்னுடைய கதையை இங்கு பதிவிடுவதில் எனக்கு ஆர்வமாகவும் சந்தோஷமாக வும் இருக்கிறது.

பிரியாத வரம் வேண்டும்
அத்தியாயம் 1
மார்கழி மாதம் என்பதனால் அந்தக் குளிரில் தாமதமாகவே எழுந்தாள் பிரியா என்னும் பிரியதர்ஷிணி. காலையில் எழுந்தவள் தன்னுடைய வேலைகள் எல்லாவற்றையும் ஆரம்பித்தாள் முதலில் பண்டு விற்கு பள்ளி செல்ல தேவையான உடை அப்புறம் தான் அலுவலகம் செல்வதற்கு தேவையான உடை பின் மதியம் எடுத்துச் செல்ல லஞ்ச் மற்றும் காலை சிற்றுண்டி அனைத்தையும் செய்து முடிக்க மணி 7.30 ஆனது.

தான் குளித்து விட்டு வந்தவுடன் பண்டு வையும் எழுப்பினாள். "பண்டு எழுந்திரு குட்டி பள்ளி செல்ல டைம் ஆச்சு" என்றாள். மம்மி ப்ளீஸ் எனக்கு தூக்கம் வருது நாளைக்கு போகலாம் பள்ளிக்கு" என்று கண்ணை விளிக்காமல் மறுபடியும் தூங்கினான்.அவனை எழுப்பி கிளப்புவதற்குள் பிரியா விற்கு ஆபிஸ் கிளம்பும் நேரமே வந்துவிட்டது. பண்டு என்பது ஆர்யா வின் செல்லப் பெயர்.ஆர்யாவிற்கு தற்போது ஐந்து வயது ஆகிறது. 26 வயதான பிரியா தன் தந்தை மற்றும் தாயுடன் கோயம்புத்தூரில் வசிக்கிறாள். தற்போது பிரியா வுடைய பெற்றோர் தங்கள் சொந்த ஊரில் நிலத்தை விற்பதற்காக அம்பாசமுத்திரம் போயிருந்தனர்.

ஒருவழியாக தன் இருசக்கர வாகனத்தில் ஆர்யாவை அவன் பள்ளியில் விட்டுச் சென்று அவளும் தன் பணிக்குச் சென்றாள். பிரியா ஒரு ப்ரைவேட் வங்கியில் கிளார்க் காக பணிபுரிகிறார். அவள் வேலை பார்க்கும் வங்கி இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கிளைகளைக் கொண்டுள்ளது. மாதம் கணிசமாக சம்பளம் வாங்கும் பிரியா தன் குடும்பத்தை நன்கு கவனித்தாள்.

தன்னுடைய பிண்ணணி யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காகவே குழந்தை உண்டானவுடன் தான் இருபத்தி மூன்று வருடங்களாக வாழ்ந்த சென்னையை விட்டு கோயம்புத்தூரில் குடிபெயர்ந்து தான் இதற்கு முன் பணிபுரிந்த வங்கியில் வேலையை விட்டு இங்கு வேறு வங்கியில் பணிபுரிய ஆரம்பித்தாள்.

யாராவது ஆர்யாவின் தந்தை பற்றிக் கேட்டால் வெளிநாட்டில் பணிபுரிகிறார் என்று கூறுவாள் ஆர்யாவிற்கே இதான் பதில். இந்த ரகசியம் அவளுக்கும் அவள் பெற்றோர்க்கும் மட்டும் தெரிந்த ஒன்றாகும்.


எப்போதும் போல் தன் வேலையை முடித்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்தாள் பிரியா தயரில் காத்து இல்லாததால் பக்கத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு காத்து அடைக்க சென்றாள். அங்கு நிறைய கார்கள் பெட்ரோல் அடைப்பதற்கு நின்றதால் தன் வாகனத்தை மெதுவாக தள்ளி மறுபுறம் இருக்கும் இடத்தில் காட்டடிக்க சென்றாள்.

அங்கு ஒரு காரில் இருந்த வயதான பெண்மணிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது அக்காரின் டிரைவர் என்ன செய்வதென்று தெரியாமல் வெளியே இறங்கி உதவிக் கேட்டார் அதைக் கவனித்த பிரியா "அண்ணா கார் எடுங்க பக்கத்துல மருத்துவமனை இருக்கு போலாம்" என்று தன் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு அங்கு பெட்ரோல் பங்கின் உரிமையாளரிடம் தான் இங்கு வண்டியை நிறுத்திக் கொண்டு செல்வதாகவும் பிறகு வந்து எடுத்துச் செல்வதாகவும் கூறினாள்.

பின் காரில் ஏறிக்கொண்டு டிரைவரிடம் மருத்துவமனை செல்லும் வழி சொல்லிக்கொண்டிருந்தாள். "அம்மா உங்களுக்கு ஒன்னும் ஆகாது கவலைப்படாதீங்க இங்க பக்கத்துல தான் மருத்துவமனை இருக்கு உங்களுக்கு ஒன்னும் ஆகாது" என்று கூறிவிட்டு டிரைவரிடம் திரும்பினாள். அண்ணா உங்களுக்கு வலப்புறத்துல இருக்கு பாருங்க அந்த மருத்துவமனையில் நிறுத்துங்க என்றாள் கோயம்புத்தூரிலியே இருக்கும் மிகப் பெரிய மருத்துவமனையில் ஒன்றாகும். அங்கு அட்மிஷன் போட்டு அந்த வயதான பெண்மணிக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர்.

"ரொம்ப நன்றி அம்மா நீ நல்லாயிருப்ப" என்றார். ஒரு புன்முறுவலுடன் இவங்க வீட்ல சொல்லிட்டீங்களா என்று டிரைவரிடம் கேட்டாள். ஆமாம்மா சின்னம்மா வந்துட்டு இருக்காங்க என்று கூறினார்.

"முத்தய்யா அம்மாக்கு என்ன ஆச்சு" என்று அலறியடித்து கொண்டு வந்தாள் ஒரு பெண். "மஞ்சும்மா அம்மா நல்லா தான் இருந்தாங்க பெங்களூரில் இருந்து வரும் போது என்கிட்ட நல்லா பேசிட்டு தான் வந்தாங்க ஆனா இங்க திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது அப்போ இந்த அம்மா தான் தெய்வம் மாதிரி வந்து காப்பாற்றினாங்க" என்றார். மஞ்சளா பிரியாவை அலசினாள் பார்க்க மாநிறத்தில் இருக்கும் பிரியா விற்கு லட்சனமான முகம் கட்டுக்கோப்பான உடல் நிமிர்ந்த நேர்மையான பார்வை இருந்தது. பெண்களின் உயரத்திற்கு சற்று உயரமாகவெ இருக்கும் பிரியா மற்றவர்களின் பார்வையை தன் பக்கம் திருப்புவாள்.

" நீங்க யாரு. முத்தய்யா சொன்னாரு நீங்க சரியான நேரத்துல உதவி செஞ்சிருக்க நால தான் நேரத்துல மருத்துவமனை வர முடிஞ்சுதுனு ரொம்ப நன்றிங்க" என்றாள்.

அப்போது எமெர்ஜென்சி வார்டில் இருந்து டாக்டர் வெளியே வந்தார் "பேசன்ட் இப்போ நார்மல் ஆகிட்டாங்க அவங்களுக்கு பிரஷர் அதிகம் ஆகிறிச்சு இப்போ கன்ட்ரோல் ஆகிடுச்சு ஒரு இரண்டு நாள் அப்சர்வேஷன்ல பார்த்துட்டு வீட்டுக்கு போகலாம் என்றார்.

"சேரி ங்க ரொம்ப நிம்மதி உங்க அம்மாவ நல்லா பார்த்துக்குங்க நான் கிளம்பறேன் நைட் ஆகிடுச்சு வீட்ல தேடுவாங்க" என்றாள். உங்க பெயர் என்ன என்று மஞ்சு கேட்டாள். என்னோட பெயர் பிரியதர்ஷிணி என்றாள். பிரியா அம்மா உங்கல பார்த்தா ரொம்ப சந்தோஷம் படுவாங்க நீங்க முடிஞ்சா நாளைக்கு வாங்களேன் என்றாள். ஒரு மெல்லிய புன்னகை யோடு சேரி ங்க என்று கிளம்பினாள்.


தன்னுடைய வீட்டை அடைய பிரியா விற்கு ஒன்பது மணி ஆனது. "ஏய் பிரியா ஏன் இவ்வளவு நேரம் கால் பண்ணி லேட் ஆகும்னு சொன்ன அப்புறம் உடனே கட் பண்ணிட்ட" என்று தன் அன்னை சரஸ்வதி கேட்டாள். சாரி அம்மி நான் அப்போ மருத்துவமனைல இருந்த அதான் செரியா பேச முடியல நான் ஆபிஸ்ல இருந்து வர வழியில் ஒரு வயசான அம்மாக்கு மூச்சுத்திணறல் வந்திருச்சு மா அவங்கள மருத்துவமனைல செர்த்து அவங்க பொண்ணு வரதுக்கு டைம் ஆகிடுச்சு இப்போ நல்லா இருக்காங்க நாளைக்கு ஆபிஸ் முடிஞ்ச அப்பறம் ஒரு தடவை பாத்துட்டு வரனும். ஆர்யா தூங்கிட்டானா? அப்பா என்ன பண்றாங்க" என்று இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தன் தந்தை சோமசுந்தரத்தை பார்க்கச் சென்றாள் அவர் அங்கு தூங்கிக் கொண்டிருந்ததால் ஒரு பெருமூச்சு விட்டு தானும் படுக்கச் சென்றாள்.

அடுத்த நாள் காலை வழக்கம் போல் கிளம்பி பண்டு வையும் கிளப்பி பள்ளியில் விட்டுவிட்டு தன்னுடைய வேலைக்குச் சென்றாள். மாலை மருத்துவமனை சென்றவள் அந்த வயதான அம்மாவைக் காண அவள் இருந்த அறைக்குச் சென்றாள். அங்கு அவள் தன் மகள் மஞ்சுவுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். "அம்மா நல்லா இருக்கீங்களா உங்க பொண்ணு தான் ரொம்ப கவலைப்பட்டாங்க" என்று கூறினாள். "வாம்மா நீ தான் என்ன காப்பாத்துனனு என் பொண்ணு சொன்னா ரொம்ப நன்றி அம்மா இங்க என் பொண்ணோட வீடு இருக்கு எனக்கு பெங்களூர் மா என் மகன் கூட இருக்கேன் என் பையன் மொபைல் கம்பெனி ஓனர்மா" என்று சொல்லிக் கொண்டிருந்தார்."ஓ சரிம்மா நீங்க உடம்ப பார்த்துக்கோங்க நல்லா சாப்பிடுங்க" என்றார்." இந்தாம்மா இதான் என்னோட முகவரி இதுல என்னோட போன் நம்பர்லாம் இருக்கு உனக்கு எதாவது உதவி வேணும்னா கேளுமா" என்றார். ரொம்ப நன்றி அம்மா நான் கிளம்புறேன் என்று அதை வாங்கிச் சென்றாள்.

ஒரு மாதம் கழிந்தது பிரியா வின் அம்மாவிற்கு மஞ்சக்காமாலை வந்தது அதனால் அவளின் அம்மா மிகவும் சோர்வடைந்தார். ஆர்யா விற்கு ஐந்து வயதில் சேட்டை அதிகம் அதனால் அவர்களால் அவனை சமாளிக்கமுடியவில்லை அவளின் தந்தைக்கு குழந்தைகளை சமாளிக்க தெரியாததால் மிகவும் சிரமப்பட்டனர். ஒரு நாள் பிரியா வேலையை விட்டு வரும்போது தன் தன்னை சரஸ்வதி உறங்கிக்கொண்டிருந்தாள் தந்தை சோமசுந்தரம் சமைத்துக் கொண்டிருந்தார் அப்போது பண்டு தனியாக பொம்மைகளோடு விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் தேழ் ஒன்று ஆர்யாவின் அருகில் சென்று க் கொண்டிருந்ததைப் பார்த்த பிரியா துடிதுடித்துப் போனாள் ஓடிப்போய் ஆர்யாவை தூக்கியவள் தன் செருப்பை வைத்து தேழை வெளியே தள்ளிவிட்டாள்.
அப்போது தான் வேலையை விட வேண்டும் என்று முடிவு செய்தாள். சோமசுந்தரம் ஒரு பிரைவேட் கம்பெனியில் தான் வேலைப் பார்த்து தன்னுடைய மகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். அவருக்கு பென்ஷன் என்று எதுவும் இல்லை செட்டில்மென்ட் மற்றும் இடத்தை விற்று வந்த பணத்தை சேமிப்பு திட்டத்தில் போட்டு அதனுடைய வட்டியை மாதா மாதம் பெற்றுக்கொண்டு இருந்தார். பிரியா வின் வருமானம் கணிசமாக இருந்ததால் அவர்கள் சந்தோஷமாகவே இருந்தனர். இப்போது பிரியா வேலையை விட்டால் பணத்தட்டுப்பாடு ஏற்படும் இதனால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு சட்டென்று நியாபகம் வந்தது அந்த வயதான பெண்மணி சொன்ன வார்த்தை. அவர் குடுத்த கார்டை எடுத்துப் பார்த்தாள். அதில் சகுந்தலா என்று பெயர் மொபைல் எண் குறிப்பிட்டு இருந்தது மற்றும் அதில் முகவரியும் இருந்தது.

சகுந்தலா அம்மா விற்கு கால் செய்த பிரியா "அம்மா நான் பிரியா பேசறேன் கோயம்புத்தூரில் இருந்து கால் பண்றேன் அன்னிக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்ணேன்ல" என்று தயக்கமாக கூறினாள்.

"ஆ.. பிரியா சொல்லுமா நல்லா இருக்கியா வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க" என்று கேட்டார். "அது வந்துமா அம்மாக்கு ரொம்ப உடம்பு முடியல மஞ்சக்காமாலை வந்து ரொம்ப கஷ்டப்படுறாங்க அதனால ஆர்யாவை என் பையனைப் பார்க்க என்னோட வேலையை விட்டுட்டேன். இப்போ அப்பா க்கு பென்ஷன் னு எதுவும் இல்லை மாசம் மாசம் எஃப்டி இல இருந்து பதினைந்து ஆயிரம் கிட்ட வரும் அது அவங்க வாழ்றதுக்கே சரியா இருக்கும்மா. இப்போ எனக்கு ஒரு வேலை கிடைச்சா நல்லா இருக்கும்மா அதுவும் வீட்ல இருந்தே எதாவது வேலை இருந்தா நல்லது ஆர்யாக்கு ஐந்து வயசு ஆகுது அவனை என் கண் பார்வையிலேயே வெச்சிட்டா நிம்மதியா இருக்கும் என்றாள்.
 

AnuJey

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சேரி மா நான் யோசிச்சிட்டு சொல்றேன் என்றாள் சகுந்தலா. சேரி என்று காலை கட் செய்தவளுக்கு ஏனோ இருந்த ஒரே நம்பிக்கையும் போனது. வங்கியில் இருந்து வீட்டிற்கு வரவே ஏழு மணி ஆகிறது அதற்காகவே வேலையை விட்டாள் இப்போது வீட்டோடு இருக்கிற வேலை என்றால் அவன் பள்ளி விட்டு வந்தவுடன் வேலை முடியும் வரை அவளோடவே வைத்துக் கொள்ளலாம் இப்படி இருந்தாள் தான் அவள் வாழ்க்கை முறைக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தாள்.

ஒரு வாரம் சென்றது சகுந்தலா அம்மா விடம் இருந்து கால் வந்தது. "மா பிரியா நல்லா இருக்கியா" என்று விசாரித்த பின்னர் "நீ என்னமா படிச்சிருக்க" என்று கேட்டாள். "நான் பிஎஸ்சி படிச்சிரிக்கேன்மா ஆனா எந்த வேலைனாலும் பரவாயில்லை" என்றாள்.
அது வந்துமா என் பேத்திக்கு கேர் டேக்கர் பார்த்துட்டு இருக்கோம் அவளுக்கு வயசு இரண்டு ஆகுது என்றாள்.

எனக்கு என்ன வேலைனாலும் ஒகே தான் மா மனப்பூர்வ சம்மதம் என்றாள்." இந்த வேலையைப் பொறுத்த வரைக்கும் நீ இங்க நம்ம வீட்டிலேயே தங்குற மாதிரி தான் இருக்கும்மா ஏனா நீ தான் சார்விய ஃபுல்லா பார்த்துக்கணும் என்றாள். சேரி அம்மா நான் யோசிச்சிட்டு கால் பண்றேன் என்றாள்.

தன் தாய் தந்தை யிடம் இதைப் பற்றி சொன்னவளுக்கு குழப்பமாக இருந்தது. "எனக்கு ஆர்யாவை பார்க்கனும்பா என் கண் முன்னாடி அவன் இருக்கனும் ஆனா நீங்களும் அம்மாவும் இல்லாம எப்படிபா" என்று யோசித்தாள். "நீ எங்களுக்காக யோசிக்காத பிரியா ஆனா இரவு அங்கயே தங்கனும்னா இந்த மாதிரி வேலை லாம் வேண்டாம்மா பழைய மாதிரி நாங்களே ஆர்யாவை பார்த்து க்கிறோம் நீ வேற வேலைக்கு முயற்சி பண்ணு" என்றாள் பிரியாவின் தாய்.

" முடியாதுமா ஆறு வருஷம் முன்னாடி நான் பண்ணிட்டு வந்த வேலைக்கு நீங்க என்னையும் என் குழந்தையும் வெச்சி பாத்துருகீங்க என்னால நீங்க பட்ட அவமானம் அசிங்கம் வேதனை இதெல்லாம் என்னால மறக்கவே முடியாதுமா. சகுந்தலா அம்மா ரொம்ப நல்லவங்கமா அவங்க கூட இருந்தா சேஃபா தான் இருப்ப அப்படி எனக்கு எதாவது பிரச்சனை வந்தா என்னால என்ன காப்பாத்திக்க முடியும் அதையும் மீறி என் கைய மீறி பொய்டுச்சுனா வேலையும் வேண்டாம்னு வந்திடுவேன் அதனால நீங்க கவலைப்படாதீங்க. ஆர்யாக்கு இப்போ ஐந்து வயசாகுது அவனுக்கு எட்டு வயசு ஆகிடுச்சுனா கொஞ்சம் மெட்சூரிட்டி வரும் அது வரைக்கும் இந்த மாதிரி வேலை தான்மா நல்லது இங்க வீட்டு வேலைக்கு வரும் பட்டம்மாள் அம்மாவே சமையலுக்கும் பேசிடலாம் மாசம் ஐந்து ஆயிரம் அது நான் தரேன்மா. நீங்களும் அப்பாவும் நிம்மதியா இருங்க" என்று முடிவெடுத்தவளாக சகுந்தலா அம்மாவிற்கு கால் செய்தாள் " சகுந்தலா அம்மா எனக்கு சம்மதம்" என்றாள்." அப்புறம் உன்னோட வீட்டுக்காரருக்கு இதுல பிரச்சனை இல்லையாம்மா? " என்று கேட்டார்." அம்மா அவர் துபாய்ல இருக்காரு ஒன்னும் பிரச்சினை இல்லை" என்று பொய் சொன்னாள்.

நமக்கு மட்டும் மத்த பொண்ணுங்களுக்கு இருக்கிற மாதிரி வாழ்க்கை அமைஞ்சிருந்தா இவ்வளவு கஷ்டம் தேவையா இவ்வளவு பொய்கள் தேவையா என்று தன்னையே கேள்வி கேட்டவளுக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை.

மனது எட்டு வருடங்கள் பின்னோக்கி சென்றது. பிரியதர்ஷிணி ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண். ப்ளஸ் டூ வில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றவளுக்கு இன்ஜினியரிங் சேரனும் என்பது தான் அவளின் குறிக்கோள். ஆனால் அவள் மதிப்பெண் அதிகம் என்றாலுமே அவளுக்கு அரசு இன்ஜினியரிங் காலேஜில் கட் ஆஃப் கம்மியானதால் கிடைக்கவில்லை "சேரிப்பா நான் பிஎஸ்சி படிக்கிறேன்" என்றாள். "இல்லம்மா எங்களுக்கு இருக்கிறது நீ ஒரே பொண்ணு நீ இன்ஜினியரிங் படிக்கணும்னு ஆசைப்பட்ட அதை நிறைவேற்றலனா எனக்கு மனசு நிம்மதியாக இருக்காதுமா" என்றார். இல்லப்பா இன்ஜினியரிங் மட்டும் தான் படிப்புனு இல்லை நான் பிஎஸ்சி கணிதம் எடுக்தக்குறேன்பா" என்றாள்

பெற்றவர்கள் எவ்வளவு சொல்லிப் பார்த்தும் பிரியா பிஎஸ்சியே சேர்கிறேன் என்று பிடிவாதமாக இருந்தாள். சென்னையில் உள்ள அந்த பிரபலமான ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் கல்லூரியில் சேர்ந்தாள் பிரியதர்ஷிணி.

பிரியதர்ஷிணி சேர்ந்த முதல் நாள் ரொம்ப பதற்றமாக இருந்தாள் பணக்கார பெண்கள் பெரும்பாலும் படிக்கும் அந்த கல்லூரியில் முதல் நாள் சென்ற போது ராகிங் எதாவது இருக்குமா என்று பயந்தாள் ஆனால் அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை என்பதால் நிம்மதியாக படித்தாள் அவளுக்கு கீதா விமலா என்று இரு பெண்கள் உயிர்த் தோழி ஆனார்கள் அவர்களும் இவளைப் போல நடுத்தர குடும்பத்து பெண்கள் தான். சரஸ்வதி இவளைக் கல்லூரிக்கு அனுப்பும் போதே பணக்காரர்கள் கூட சகவாசம் வைக்காதே என்று தான் அறிவுரைத்து அனுப்பினார். அதன்படி இவளும் யாரோடும் ஒன்ற மாட்டாள் அப்படி பட்ட சமயத்தில் தான் ஏழை மாணவிகளுக்கான மற்றும் மதிப்பெண் அதிகமாய் வைத்து இருக்கும் மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டம் கொண்டு வந்தார்கள் அந்த பட்டியலில் அவளோடு கீதாவும் விமலாவும் பங்குபெற்றனர் அதுவரை ஒரே வகுப்பில் பயனித்தாலும் மூன்று பேர் படித்தோமா போனோமா என்று தான் இருப்பார்கள். ஸ்காலர்ஷிப் மூவருக்கும் கிடைத்தது அதன்பின் மூன்று பேரும் சேர்ந்தே படித்தார்கள் அரட்டையும் அடிப்பார்கள்.

இப்படியே மூன்று வருடங்கள் முடியும் தருவாயில் வந்தது. பிரியதர்ஷிணி க்கு ஒரு பெரிய பிரைவேட் வங்கியில் காம்பஸில் வேலை கிடைத்தது. வீட்டிலே அனைவருக்கும் சந்தோஷம். அவளுக்கும் பாங்க் வேலை நல்ல வேலை என்று நிம்மதி ஆனாள். செமஸ்டர் எக்ஸ்சாம்ஸ் எல்லாம் முடியும் போது தான் அவளுடைய க்ளாஸ்மேட் ரியா திருமணம் என்று பத்திரிகை யோடு வந்தாள்.

கொடைக்கானலைப் பூர்வீகமாகக் கொண்டுள்ள ரியா சென்னையில் இவர்களோடு பிஎஸ்சி பிடித்தாள் காலேஜ் ஹாஸ்டலில் தங்கி மூன்று வருடங்கள் படித்தவள் பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள். கொடைக்கானலில் இருக்கும் பெரும்பாலான எஸ்டேட்ஸ் இவளுடைய குடும்பத்துடையது தான்.

ரியா பிரியா விற்கு நெருக்கமில்லை ஆனால் ரியா ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் பார்க்காமல் நன்றாக பழகுவாள் அதற்கே ரியாவின் மீது அவளுக்கு மிகுந்த மதிப்பு உண்டு.

ரியா அவளுடைய வகுப்புத் தோழிகள் அனைவருக்கும் பத்திரிகை கொடுத்து விட்டு அனைவரையும் கண்டிப்பாக வருமாறு அழைத்தாள். மொத்தம் முப்பது பேர் கொண்ட பெண்கள் வகுப்பையே திருமணத்திற்கு அழைத்தாள். அனைவருக்கும் அவளே ரூம் அரேன்ஜ் பண்ணுவதாகவும் கூறினாள்.

முதலில் வரமறுத்த பிரியாவை கீதா மற்றும் விமலா போலாம் போலாம் என்று நச்சரித்துக் கொண்டிருந்தனர். வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் பிரியாவை பொத்தி பொத்தி வளர்த்தனர் அவளுடைய பெற்றோர்கள் பள்ளியில் படிக்கும் போது சுற்றுலாக்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள் பிரியாவும் படிப்பு வீடு என்றே இருந்ததால் அவளுக்கு சுற்றுலாவிற்கு செல்வதெல்லாம் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. காலேஜில் கூட அனைவரும் சுற்றுலா சென்ற சமயம் இவள் செல்லவில்லை அதற்கே கீதா மற்றும் விமலா இவளோடு கோவித்துக்கொண்டு ஒரு வாரம் பேசவில்லை.

இன்னும் இரண்டு எக்ஸ்சாம் முடிந்தால் கல்லூரி வாழ்க்கையே முடிந்துவிடும் என்ற சமயத்தில் தான் அடுத்த மாதம் கல்யாணம் என்று அழைத்தாள் ரியா. கீதா விற்கும் விமலா விற்கும் பெங்களூரில் வேலை கிடைத்தது அவர்களுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் டிரைனிங் தொடங்க உள்ளது. பிரியா விற்கும் பெங்களூரில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை கிடைத்தது ஆனால் அவளின் பெற்றோர்கள் அனுமதிக்க வில்லை. அதனால் சென்னையிலேயே ஒரு பெரிய வங்கியில் வேலை கிடைத்ததை நினைத்து சந்தோஷமாக இருந்தாள்.

தான் வரவில்லை என்று எவ்வளவு சொல்லியும் பரிட்சை முடிஞ்ச கையோடு கீதா மற்றும் விமலா பிரியாவின் வீட்டிற்குச் சென்றனர். அவளுடைய பெற்றோர்களிடம் இருவரும் பிரியாவை கொடைக்கானலுக்கு அனுப்புமாறு கெஞ்சினார்கள்.

ஆனால் அவளுடைய அம்மா அசரவே இல்லை பின் சோமசுந்தரத்திற்கு தன் மகளை நினைத்து பாவமாக இருந்தது இதுவரை பிரியா படிப்பை தவிர எதுவும் அனுபவிக்கவில்லை அவள் தோழிகளும் கெஞ்சிக் கொண்டே இருந்ததால் கொடைக்கானல் செல்ல அனுமதித்தார்.
 

AnuJey

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆனால் பிரியா விற்கு ஏனொ செல்ல விருப்பம் இல்லை. "பரவாயில்லை அப்பா நான் இங்கயே இருக்கேன் எனக்கு போனும் னு லாம் இல்லை" என்றாள். "அதான் அப்பா சொல்லிட்டாருல பாத்து பத்திரமா பொய்ட்டு வாங்க எல்லாரும்" என்றாள் சரஸ்வதி.

"ரொம்ப தாங்க்ஸ் மா அடுத்த மாசம் தான் கல்யாணம் கொடைக்கானல்ல மொத்தம் நாலு நாள் மா" என்றாள் கீதா. "சேரி நல்லா சுத்தி பார்த்துட்டு வாங்க" என்று கூறினார் சோமசுந்தரம்.

ரியா வின் கல்யாணத்திற்காக கிளம்பிக் கொண்டிருந்த பிரியாவிடம் சரஸ்வதி அறிவுரை கூற ஆரம்பித்தார். "எங்கேயும் தனியா போகாத பசங்க பக்கம் போகாத பசங்க பேசுனா லும் திரும்பி பேசாத" என்று. எல்லாத்துக்கும் சேரி என்று ஒத்துக்கொண்டவள் கீதா மற்றும் விமலா வுடன் கொடைக்கானல் பேருந்தில் ஏறினாள். பின் மூவரும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு சென்றனர்.

கொடைக்கானலில் இறங்கிய பின் விமலா அவர்களுடைய கிளாஸ்மேட் தாருணி க்கு கால் செய்தாள். அவர்களை அங்கயே இருக்க சொல்லி விட்டு அவளுடைய காரை எடுத்துக்கொண்டு வந்தாள் தாருணி. மூவரையும் அழைத்துக் கொண்டு தாருணி ஒரு ரிசார்ட் க்கு சென்றாள் அதைப் பார்த்த மூவரும் ஆச்சரியப்பட்டனர் அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது. இது ரியா புக் செய்த ரிசார்ட். இதே ரிசார்ட்டின் பக்கத்தில் இருக்கும் ஒரு பெரிய மண்டபத்தில் தான் கல்யாணமும் ரிசப்ஷனும் நடைபெறவிறுந்தது.அந்த ரிசார்ட் பார்க்க காட்டேஜ் போல் இருப்பதனால் இருவருக்கு ஒன்று என்கிற கணக்கில் மொத்தம் பதினைந்து ரிசார்ட் களை புக் செய்தாள் ரியா முதல் நாள் கொடைக்கானலை அவர்களின் நண்பர்கள் பட்டாளத்தோடு காரில் சென்று சுற்றிப் பார்ப்பது தான் அன்றைய பிளானாக இருந்தது.

"இல்லை டி நான் வரலை நீங்க பொய்ட்டு வாங்க எனக்கு அவங்களோட கார்ல லாம் வர பிடிக்கல" என்றாள் பிரியா. "யேய் லூசு மாதிரி பேசாத பிரியா இந்த மாதிரி தெரியாத இடத்துல நம்ம கூட்டத்தோட கோவிந்தா போட்டா தான் சேஃப் தனியா போனா வம்பு" என்றார்கள் விமலாவும் கீதாவும்.

அதுவும் சரி தான் என்று தாருணி யோடு வெளியே சுற்ற சென்றனர். ரியா வின் வருங்கால கணவன் ஆரவ் தன்னுடைய நண்பர்களுக்கும் ரியா வீட்டில் அதே ரிசார்ட்டில் தான் ரூம் போட்டார்கள். ஆரவ் விற்கு மொத்தம் மூன்று நண்பர்கள் வந்தார்கள். அந்த மூவரும் ரியாவின் தோழிகளோடு நண்பர்களாக பழகினர். இதில் இரண்டு பேர் ரியாவின் தோழிகளோடு கண்டதுமே காதலாகி விட்டனர். ஒருவன் மட்டும் காதல் கத்திரிக்காய் என்று விழாமல் அவனிடம் வழியும் பெண்களிடம் முடிந்த வரை நாசுக்காக பேசிவிட்டு காதல் கீதல் என்றால் தங்கச்சி என்று சொல்லிக் கொண்டு வருவான் ஆம் அவன் தான் குருநாத் தீபன் இவன் பார்க்க பேரழகன் போல் இருப்பான் அந்த கர்வம் அவனிடத்தில் எப்போதும் இருக்கும் ஆறடி இரண்டு அங்குலம் உயரத்தில் இருப்பவன் மாநிறத்தில் மேச்சோ மேன் என்று சொல்கிற அளவுக்கு மேன்லி யாக இருப்பான்.அவனாக சென்று பெண்களிடம் பேச மாட்டான். பெண்கள் மரியாதையாக நடந்து கொண்டால் அவனும் மரியாதை யாக பேசுவான். அவர்கள் வழிந்தால் அவர்களை கண்டுகொள்ள மாட்டான். இவன் வந்தால் பெண்கள் அவனை சூழ்ந்து கொள்வர்.


குரு மற்றும் அவனுடைய நண்பர்கள் தனிக்காரில் வந்து கொண்டிருந்தனர். ரியாவின் தோழிகள் ஏழு கார்களில் இருந்தனர். இதில் பிரியா விற்கு பசங்களும் கூட வராங்க என்பது தெரியாது கீதா மற்றும் விமலா டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் போட்டிருந்தனர். ஆனால் பிரியா மட்டும் தன் தலையைப் பின்னி எப்பயும் போல காட்டன் சல்வார் போட்டுவிட்டு அமைதியாக அடக்கமாக இருந்தாள்.

அனைத்து கார்களும் ஒரு எஸ்டேட்டில் நின்றது அது மாலை நேரம் என்பதால் நன்றாகவே குளிர ஆரம்பித்தது. பிரியா முதலில் யாரையும் கவனிக்கவில்லை. பின் திடீரென ஆண்களின் சத்தம் கேட்டு திரும்பினாள். அங்கு குரு வும் அவனுடைய நண்பர்கள் இருவரும் கேக் வெட்டி கத்திக் கொண்டிருந்தனர். அதில் ரியா வுடைய தோழிகள் அந்த இரண்டு நண்பர்களின் காதலிகள் தாருணி விக்னா அந்த இருவரோடு சேர்ந்து கேக் வெட்டினார்கள்.இது என்ன என்பதைப் போல் அவளின் நண்பர்களைப் பார்த்தாள் பிரியா அவர்களுக்கும் இந்த ஆண்களைத் தெரியாது. "ஹே கேர்ள்ஸ்! ய பிக் அநௌன்ஸ்மென்ட் என்னோட நண்பர்கள் பிரதீப், விஷ்னு இவர்கள் உங்க பிரண்ட்ஸ் தாருணி மற்றும் விக்னா இவங்க எல்லாருமே விரும்புறாங்க என்றான் இவங்க எல்லாருக்கும் சீக்கிரமே கல்யாணம் நடக்க போகுது அதனால இந்த தருணத்தை என்ஜாய் பண்ணலாம்" என்று கத்தினான்.

மற்ற பெண்கள் அனைவரும் கைதட்டினர்.பிரியா மட்டும் கைதட்டாமல் அந்த இடத்தில் இருக்காமல் விலகிக்கொண்டாள். " ஏய் பிரியா நீ எதுக்கு இங்க வந்த எல்லாரும் அங்க இருக்காங்க தப்பா எடுத்துட்டுக்கப்போறாங்க" என்றாள் கீதா." இல்லடி எனக்கு இதெல்லாம் பார்க்க இன்ட்ரெஸ்ட் இல்லை இவங்களாம் யாரு டி இப்படி பசங்களும் இருப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்ட" என்றாள் பிரியா." பிரியா நாங்க ஒன்னு சொல்லுறோம்னு தப்பா எடுத்துக்காத சிலநேரம் நம்ம இப்படி தணிச்சு வந்துட்டோம்னா அது நமக்கு ஆபத்தா போய் முடிஞ்சிடும் கூட்டத்தோட ஆமா சாமி போட்டா கொஞ்சம் எஸ்கேப் ஆயிடலாம் புரிஞ்சிக்கோ" என்றாள் விமலா.

" எங்கம்மா பசங்க இருக்கிற இடம் பக்கமே இருக்க கூடாதுன்னு சொல்லிருக்காங்க டீ அதனால தான் இப்படி விலகி வந்திட்ட"என்றாள் பிரியா." சேரி அவளை விடு டி நம்ம போலாம் இல்ல தப்பா எடுத்துக்கப்போறாங்க" என்று கீதா விமலாவை அழைத்துச் சென்று விட்டாள்.

" ஹேய்! ஹாண்ட்சம் ஆர் யு சிங்கிள் உங்கள் வயசு என்ன" என்று மற்ற அனைத்து பெண்களும் கத்தினர்." ஹா ஹா!நான் கமிட் ஆகி இருபது வருடங்கள் ஆகுது எனக்கு நெக்ஸ்ட் மன்த் மெரேஜ் என் வயசு இருபத்தி ஐந்து" என்றான் குரு. இதைக் கேட்டு அனைவரும் ஷாக் ஆனார்கள் கீதா விமலா உட்பட. குரு எப்போதும் பொய் சொல்ல மாட்டான் பெண்கள் அவனிடம் பேசினால் நன்றாக பேசுவான் ஆனால் அவன் அவர்களிடம் எல்லை மீறியதில்லை.கேக்கை அனைவருக்கும் கொடுத்தனர் பெண்கள்.ஆனால் பிரியா வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த இடத்திற்கும் வராமல் தனியே நின்றாள். " இந்த பொண்ணு ஏன் இப்படி இருக்கா அவ கிட்ட யாரும் தப்பா வும் நடந்துக்கல ஏதோ அட்டென்சன் சீக்கீங் மாதிரி தோணுது" என்றாள் அவளுடைய வகுப்பில் படித்த சந்தியா.ரியா வின் உயிர்த்தோழி யான சந்தியா ரியாவிற்கு எதிர்மறையான குணத்தைக் கொண்டவள் பணக்காரி என்ற கர்வமும் மற்றவர்களை மட்டம் தட்டுவதிலும் ஆர்வமாக இருப்பாள். மற்றவர்களும் சந்தியா சொல்லிய கருத்திற்கு ஆமாம் என்று தான் சொன்னார்கள்.

கீதாவுக்கும் விமலா வுக்கும் தான் சங்கடமாக போனது. அவர்களுக்கு தெரியும் பிரியா விற்கு இதெல்லாம் பிடிக்காது பிறந்ததிலிருந்து ஆண் வாடையே இல்லாமல் வளர்ந்த பெண்னென்று ஆனால் ஊர் வாயை அடக்க முடியாது.அனைவரும் திரும்பி ரிசார்ட் ற்கு சென்றனர் பின் இரவு நேரம் டின்னர் க்கு அனைவரும் பஃபே உணவு முறை என்பதால் ஒரே நேரத்தில் அழைக்கப்பட்டனர். அனைவரும் நைட் டிரெஸ் போட்டு சாப்பிட வந்தனர். ஆனால் பிரியா மட்டும் அதே சல்வாரை அணிந்து வந்தாள். அதற்கே அனைத்து பெண்களும் கிண்டலடித்தனர். கீதாவும் விமலாவும் கூட நைட் டிரெஸ்ஸை மாத்தினர். அவர்கள் கிண்டலடித்தது பிரியா வின் காதில் விழுந்தாலும் அமைதியாக இருந்தாள்.

"டி பிரியா நீயும் தான் நைட் டிரெஸ் போட்டு வந்துருக்கலாமே ஏன் டீ அதே டிரெஸ் போட்டுருக்க" என்றாள் கீதா. "என்கிட்ட நைட்டி தான் டி இருக்கு அதை இங்க போட முடியாதுல அதான் இதையே போட்டுட்ட" என்று சாப்பிட்டுக்கொண்டே சாதாரணமாக சொன்னாள். "உனக்கு வயசு இருபது தான் ஆகுது பிரியா பார்க்க அவ்வளவு அழகா இருக்க தெரியுமா ரொம்ப கலராவும் இல்லாம உன்னைப் பார்த்தால் மாநிறத்தை விட அதிக கலரா உன்னோட உயரத்திற்கு உன்னோட சிக்கான உடம்புக்கு கலையான முகத்திற்கு கிளாஸ்ல எல்லாருமே ரசிகைகள் பசங்களுக்கும் உன்னை மாதிரி பொண்ணை தான் ரொம்ப பிடிக்கும் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் மாரி இருக்க" என்றாள் விமலா ஆனா உன் அழகுக்கு நீ மெனக்கிட மாட்டிங்குற." என்றாள் விமலா.

"எனக்கு அதுலலாம் விருப்பம் இல்லை டி. நீங்க என்னை பத்தி சொல்லுற மாதிரி லாம் நான் யோசிச்சதே இல்லை" என்று எழுந்த போது அந்த நாற்காலியின் முனையில் கூர்மையாக இருந்த நுனியில் பட்டு பிரியாவின் சல்வார் டாப் கிழிந்து அவளுடைய உள்ளாடை லேசாக தெரிந்தது இதை பிரியா அறியவில்லை. யார் பார்த்தாலும் தெரியும் மாதிரி கிழிந்திருப்பது முதலில் குரு வின் கண்ணில் தான் பட்டது.

"அச்சோ இந்த பொண்ணுக்கு பின்னாடி கிழிஞ்சு உள்ளலாம் தெரியுதே" என்று நினைத்தவன் உடனே "எக்ஸ்க்யூஸ்மி ரெட் சல்வார்" என்றான்.தன்னை யார் கூப்பிடபோரார்கள் என்று சாப்பாட்டை எடுத்துக்கொண்டு இருந்தாள் பிரியா.

அவளின் முன்னே வந்த குரு "உங்க சல்வார் பின்னாடி கிழிஞ்சிருக்கு மறைச்சிக்கோங்க" என்றான். தன் சல்வாரில் கிழிந்ததை விட ஒரு ஆண் தன்னிடம் இப்படி சொன்னதை அவள் மிகவும் அசிங்கமாக உணர்ந்தாள். அவளுக்கு கண்ணில் தண்ணீர் மடமடவென வந்தது.
 
Status
Not open for further replies.
Top