All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின்" இதயம் மறவா இன்னுயிர்"- கருத்து திரி

naiyaa

Active member
??? wow next story yodaa vanthuthigaa I m very happy mam teaser super mam. All the best for this story mam ????
 

Yalini

Active member
Teaser:

' வரதா...' என்ற ராணியின் குரல் அவனை மீட்டெடுக்க தன் மனைவியை திரும்பி பார்த்தான்...



அங்க பாரு வரதா சூரியன் எவ்வளவு அழகா இருக்கு என்று கண்களை உருட்டி சிறு பிள்ளையாய் ஆர்ப்பரித்தாள் ராணி ...


அவள் கூறிய திசையில் வரதனும் பார்க்க அங்கு அவன் கண்ட காட்சி அத்தனை அழகாக இருந்தது ....


சூரியன் உதிக்கும் வேலையில் வானம் செவ்வானமாய் சிவந்திருக்க கதிரவன் தன் ஒளியை மெதுவாக பரப்பி கொண்டிருந்தான் ....



ராணி அவன் தோளில் சாய்ந்திருக்க இருவரும் அந்த காட்சியை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த வேலையில் அவர்கள் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீர்ரென்று பயங்கரமாக குலுங்கியது...



என்னவென்று அனைவரும் சுதாரிக்கும் முன் பக்கத்தில் இருந்த பாதாளத்தில் விழுந்து புரண்டது அந்த பேருந்து.... கீழே விழுந்த அடுத்த நொடி பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது அந்த பேருந்து....



அந்த பேருந்தில் இருந்த ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை... பேருந்தின் அருகில் கவலை தோய்ந்த முகத்திடன் நின்றுகொண்டிருந்தனர் வரதனும் ராணியும்...


"நீங்கள் இருவரும் மேலே வர வேண்டிய நேரம்...." என்று ஒரு அசரீரி ஒலிக்க தங்கள் கருகிய உடலை பார்த்துக்கொண்டிருந்த வரதனின் ஆவி கோபத்துடன் நிமிர்ந்தது ...


"நாங்க வர முடியாது ...நாங்கள் இருவர் சேர்ந்து வாழ வேண்டும் என்பது எத்தனை வருட ஏக்கம்... ஒரே ஒரு நாள் சேர்ந்து வாழ்ந்திருந்தால் கூட நிம்மதியாக வந்திருப்பேன்... ஏன் இப்படி எங்களை தண்டிச்ச...." என்று ஆதங்கத்துடன் இரைந்தான்...



அவன் பக்கத்தில் அவர்களது இறந்த உடலையே வெரித்துகொண்டு நின்று கொண்டிருந்தது ராணியின் ஆவி...


அந்த தெய்வ குரலுக்கும் இவர்கள் நிலை பாவமாக தான் இருந்தது....


அதனால் "கவலை படாதே வராதா... இந்த பிறவியில் உங்கள் ஆயுள் முடிந்திருந்தாலும் அடுத்த பிறவியில் நீங்கள் இருவரும் சேர்ந்து நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்... அதற்கு நான் பொறுப்பு... இப்பொழுது வாருங்கள்...." என்றது ....



வேறு வழி இல்லாமல் இருவரும் அந்த குரலுக்கு அடி பணிந்து சென்றனர்....
I
 
Top