All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆராவின் ‘என்னில் தஞ்சம் கொள்ள வாராயோ!’ - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

ஆரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
Thank you so much mam
 

ஆரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே!
நான் ஆரா. இப்போதைக்கு என்னை பற்றி சொல்றதுக்கு இவ்வளவு தாங்க இருக்கு. ஏதோ சுமாரா கதை, கவிதை எழுதுவேன் அவ்வளவே. இது என்னோட முதல் தொடர்க்கதை. நிறைய பிழைகள் இருக்கும், குறைகள் இருக்கும். அந்த பிழைகளை சுட்டிக் காட்டி தட்டிக் கொடுங்க நண்பர்களே!.

தஞ்சம் 01

சூரியத்தலைவன் கிழக்கு வானில் தன் பொன் தோகை விரித்து விகசித்து உதிக்க தலைவன் முகம் கண்ட தலைவியாய் சூரியகாந்திச் செடிகள் அவன் பக்கம் தலை சாய்த்துச் சிரிக்கும் இளங்காலை நேரம் அது.
தளிரிலை தொடங்கி புல் நுனிவரை சயனித்திருந்த பனித்துளி எல்லாம் தன் மனதின் மன்னவன் வருகையில் நாணிக் கரைந்து போக வீட்டு முற்றங்கள் யாவும் கண்கவரும் வண்ண கோலம் கண்டிருந்தது.
ஆனால் அந்த வீட்டில் மட்டும் வீட்டரசியின் குரல் மதில்த் தாண்டிடுவதாய்...

"மது ஏய் மது ... எந்திரிக்க போரியா இல்லயாடி... உன்னைய எவ்வளவு நேரம் தான் எழுப்புறது. இப்போ நீ எழுந்துக்கல்ல என்று வைய்யேன் தண்ணிய தான் கொண்டுவந்து ஊத்துவேன் பார்த்துக்க " என்ற காயத்ரியின் கத்தலில் வரவேற்பறையில் காபி குடித்துக் கொண்டிருந்த சரவணன் காதுகளை அடைத்துக் கொண்டான்.

"அம்மா எதுக்கும்மா இப்போ அவ பேர ஏழு ஊருக்கு ஏழம் போடுற போல கத்துர... என் காது சவ்வு கிழிஞ்சிருச்சி போ. மைக்கை முழுங்கிட்டியா என்ன. " என்று தன் தாய்க்கு மேலால் கத்திய சரவணன் “யப்பா என்ன சத்தம்” என்று அங்கலாய்த்துக் கொண்டான்.

திரும்பி தான் பெற்ற மகனை முறைத்த அவன் அம்மா
"ஆமாண்டா யேன் சொல்ல மாட்ட....காலைல 7 மணி தாண்டி போச்சி பொம்பள புள்ள எழுந்துக்க வேணாம்.. இவ்ளோ கத்தியும் அசைறாளா பாரு. அப்டியே கும்பகர்ணன் தங்கச்சி போல. அண்ணனும் அப்பாவும் குடுக்குற செல்லம் தாண்டா எல்லாம். அவளுக்கு எதாச்சும் சொன்னா அண்ணனும் அப்பாவும் கொடி பிடிச்சிகிட்டு வந்துருவிங்கல்ல. அந்த தைரியம் தான் அவளுக்கு" என்று இவனுக்கும் சேர்த்து திட்டத்தொடங்க வாயை கொடுத்து கெடுத்துக்கொண்ட கதையாகிப்போனது சரவணனுக்கு.

தன் மனையாட்டி காலையிலேயே மகளையும் மகனையும் தாளிப்பதை கேட்டவாரே வீட்டின் உள்ளே வந்தார் அந்த குடும்ப தலைவன் மகேந்திர ராஜன்.

"யேண்டி இப்போ என் பொண்ணை தூங்க விடாம கத்துற.... அவ தான் தூங்கட்டுமே... நீ தான் சேவல் கூவ முதல்லயே எழும்பி என்னையும் எழுப்பிவிட்டு தூங்க விடாம பண்றன்னா அவளையும் யேன் எழுப்புற. அவ இங்க இருக்கும் வரை தானே நிம்மதியா இப்படி தூங்க முடியும். அங்க அங்க சூரியன் முதுகுக்கு படும் வரை தூங்கறாங்க இவ இத சொல்லிகிட்டு. போடி போடி போய் காபி கொண்டுவா...” என்க அவரையும் முறைத்து விட்டு “இந்தா வந்துட்டாரு நாட்டாமை. இனி என்னை ஒரு வார்த்தை புள்ளைகளை அதட்டி பேச விட மாட்டாரு” என்று தனக்குள் புழம்பியபடி சமையலறைக்குள் நுழைந்தாள் அவள்." தன் மனையாளின் புழம்பல் கேட்டுவிட்டதோ அவருக்கு. போகும் அவளை பார்த்து மென்மையாய் சிரித்துக்கொண்டவர் அன்றைய நாளிதழை புரட்ட தொடங்கினார்.

"அப்பா" விழித்துத் தான் இருந்தாலும் சோம்பலின் கையணைப்பை உதறித்தள்ள மனமின்றி போர்வைக்குள் சுருண்டு கிடந்தவள் தந்தையின் குரல் கேட்கவும் எழுந்து வந்தாள்.

தந்தைக்கு அருகில் அமர்ந்து அவரின் தோளில் தலை சாய்த்தவளை வாஞ்சையாய் பார்த்தபடி அவளின் தலையை தடவிய இவர் தான் மகேந்திர ராஜன். ஒரு கிராமத்து விவசாயி. நரை கண்டிருந்த அவர் முடிகள் அவரின் ஐம்பத்தைந்து வயதை அப்பட்டமாய் காட்டியது. ஆனால் விவசாயத்தில் கடின உழைப்பால் வழுவேறியிருந்த உடல் வயதை நாற்பத்தி ஐந்து என கணிக்க சொன்னது.

தன் மக்களின் மேல் உயிரையே வைத்திருந்த இவரின் தர்ம பத்தினி தான் காயத்ரி தேவி. காயத்திரியை பொருத்த வரை அவள் குடும்பம் தான் அவள் உலகம். சராசரி குடும்ப பெண்களை போல் தன் குடும்பத்தை சுற்றிய உலகத்தை மட்டுமே அறிந்தவளவள். கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழுபவர்.

இவர்களுக்கு இரண்டு செல்வங்கள். சரவனண் மூத்தவன். Bsc.agri முடித்து விட்டு தந்தைக்கு துணையாய் விவசாயத்தில் இறங்கி விட்டான். ஆஸ்திக்கு ஆண்பிள்ளை அவன்.

விவசாயத்தின் இலட்சனையாய் முருக்கேறிய தேகம் கொண்டவன். பார்க்க அவன் முரடனாய் தெரிந்தாலும் மனதளவில் மென்மையானவன். தங்கை மேல் அன்பை கொட்டி வைத்திருப்பவன். இவனின் அந்த அன்பு தங்கை, அருமை தங்கை, அழகுத்தங்கை அந்த வீட்டின் செல்லப் பெண் தான் நம் நாயகி மதுரவாணி.

மதுரவாணி பத்தொன்பது வயது இளம் சிட்டு. ஆசைக்கு ஒற்றைப் பெண்பிள்ளையாய் பிறந்தவள். கல்வியில் பெரிதாய் நாட்டம் இல்லை என்றாலும் தத்தி இல்லை. எதையும் சொன்னவுடன் பிடித்துக்கொள்ளும் கற்பூர புத்திக்காரி. ஆனாலும் ஐயோ போர் அடிக்குதே என்று பள்ளிக்கூட மேஜையிலே தூங்கி கணக்கு வாத்தியாரிடம் குட்டு வாங்கிய குறும்புக்காரி.
இப்போது காலேஜ் போய் கொண்டிருந்தாலும் மட்டம் அடிக்க காரணம் தேடி தாய் காயத்திரியிடம் அடி வாங்கும் சேட்டைக்காரி. பின்ன தாயின் கத்தல் தாங்காமல், தந்தையின் ஆசைக்காய் ஏனோ தானோ என்று ஏதோ கொஞ்சம் கல்லூரி பக்கம் எட்டிப் பார்க்கிறாள். அதிலும் தினமும் போகச்சொன்னால் எப்படி. அதுவும் இவர்களின் ஊருக்கு வரும் பாதை வேறு குன்றும் குழியும் என்று இருக்க பஸ்ஸில் வரும் போது மதுவிற்கு குடல் வாயிற்கு வராத குறை தான். அதற்காகவே அடிக்கடி கல்லூரிக்கு மட்டம் அடிக்க தோன்றும்.

ஆனாலும் அழகி. அப்படியே அவள் அம்மா வழி பாட்டி கமலியோட பார்க்க பார்க்க அழுக்காத செந்தாமரை நிறம். செந்தாமரை நிறம் என்ன அந்த செந்தாமரையே தான் மதுரவாணி. நீண்ட குண்டு கண்களுக்குள் குரு குரு என்று ஓடும் கருமணிகள். அதற்கு கொஞ்சம் மையும் இட்டால் காந்தமோ என வியக்க தோன்றும். அளவான உடற்கட்டுடன் ஐந்தடி நான்கங்குல உயரமுடையவள். கூர் மூக்கும் எடுப்பான இதழ்களும் கொண்டவள் கன்னத்தில் இருக்கும் பருக்கள் கூட அவளுக்கு தனி அழகையே சேர்த்தது. சுருட்டையும் இல்லாத நீளமும் இல்லாத கூந்தல் இடைத்தாண்டி வளர்ந்திருக்க அதையும் பின்னலிட்டு இவள் நடக்கையில் அது மதுவுக்கு தனி அழகை கொடுத்தது.

கணவருடன் சேர்த்து மகளுக்கும் காபி கொண்டு வந்திருந்தார் அந்த பாசக்கார தாய். திட்டினாலும் அடித்தாலும் தன் மகள் தனதுயிரன்றோ. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ஆயிற்றே.

காபியை எடுத்துக் கொண்டவளிடம்
"காபியை குடிச்சிட்டு குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு கிளம்பு டி வெளிய போகணும். அதை விட்டுட்டு அப்பாகிட்ட கொஞ்சிக்கிட்டும் அண்ணனோட வம்பிழுத்துக்கொண்டும் இருக்காத என்ன..."
என்று முறைத்தபடி சொன்னவர் மீண்டும் தன் சாம்ராஜியதிற்குள் நுழைந்து கொண்டார்.
பின்னோடு வந்த மதுரவாணி அகப்பையை கையால் வழித்து ருசி பார்த்தவள்
"எங்கேமா கிளம்ப" என்று கேட்டாள். தாயின் சமையல் சுவை நாவின் அத்தனை சுவை நரம்புகளையும் தூண்டிவிட்டாலும் குளிக்காமல் சாப்பிட்டால் அடி நிச்சயம் என்பதால் நாவையும் கையையையும் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

"நம்ம டீச்சர் பொண்ணு கல்யாண வீட்டுக்கு ஒரு எட்டு போய் வருவோம்." என்ற காயத்ரிக்கு தலையை ஆட்டியவள்

"ஓஓஓகே...உன் சாப்பாட்டுக்கு கட்டு..... அங்க போய் மொத்தமா வெச்சுடுவோம் வெட்டு. இன்னைக்காவது உன் சாப்பாட்டிலிருந்து விடுதலை கிடைக்குதே. குமுதா ஹாப்பி" என்று சொல்ல திரும்பி முறைத்த காயத்திரியின் முறைப்பில் "நா ரெடி ஆகிட்டு வரேன்"
என்றவாரு தன் அறைக்கு ஓடியே விட்டாள் மதுரவாணி.

இவள் தந்தைக்கு வாணிம்மா
அண்ணனுக்கு குட்டிம்மா

அரை மணி நேரத்தில் தலைக்கு குளித்து புத்தம் புது பூ என்று வந்து நின்ற மகளை கண்டு காயத்ரிக்கு பூரித்து தான் போனது இவள் என் மகள் என்று.


விரித்து விட்டிருந்த கூந்தல் மயில் தோகை என விரிந்திருக்க அந்த கரு நீல பாவாடை தாவணியில் வன தேவதை தான் வழி மாறி வந்தாளோ என்று எண்ணத்தான் தோன்றியது. தன் மகள் மேல் தன் கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது காயத்ரிக்கு. வீட்டுக்கு வந்ததும் சுத்தி போட வேண்டும் என்றவளின் உள்ளுக்குள் சிறு கர்வம் தான். இவள் என் மகள் என்பதில் வந்ததோ அது...

"என்னம்மா எவ்ளோ நேரம் இப்டியே நிப்ப. போக வேணாமா பசிக்குதுல்ல.... நா வேற அங்க போய் பலகாரத்தை ஒரு வெட்டு வெட்டலாம்னு இருக்கேன். நீ இப்படி என்னையே பார்த்துக்கிட்டு நின்னா எனக்கு அங்க ஒரு காபி தண்ணி கூட கெடைக்காது" தன் குரலால் தாயின் மௌனம் கலைத்தாள் மது.

"அடிங் என் சாப்பாட்டை குறை சொல்லிட்டு போறீல்ல பாப்போம்டி பகலுக்கு உனக்கு யாரு சோறு தருவானு.... இவ்ளோ நாள் என்னமோ அங்க தான் சாப்புட்டு வளர்த்த போல ரொம்பத்தாண்டி பண்ற. உன் கைப்பக்குவமே தனிம்மா என்று சொல்லிக்கிட்டு வருவல்ல அப்போ இருக்கு உனக்கு." என்ற காயத்ரியின் பொய்யான அதட்டலுக்கு மதுரவாணியோ
"அம்மா எல்லா நாளும் உன் சமையலை சாப்பிடறதால தான் இன்னைக்காச்சும் நல்லதா கொஞ்சம் சாப்பிடலாம்னு பாத்தேன். நீ விட மாட்ட போலயே " என்க
அவளை முறைத்துக்கொண்டே

"ஆமாடி ஏன் சொல்ல மாட்ட.. உங்களுக்காக காலைல சேவலுக்கு முன்னமே எந்திரிச்சி பாத்து பாத்து சமைக்கிறேன்ல எனக்கு இது தேவைதான். " என்ற காயத்ரியை தாஜா பண்ணி கொஞ்சி கெஞ்சி கூட்டிச் சென்றாள் மதுரவாணி. ஆயிரம் தான் தாயை கலாய்த்தாலும் போன இடத்தில் வற்புறுத்தி தந்த ஒரு கப் காபியை தவிர அவள் வேறெதையும் தொடக்கூட இல்லை.
இன்றைய தன் பயணத்தால் தன் வாழ்வே மாறப்போவதும், தான் எதுவேண்டவே வேண்டாம் என்று நினைத்திருக்கிறாளோ அது நடக்கவே போகிறது என்றும் அறியாமல் தாயுடன் வாயடித்தபடி சென்றாள் மதுரவாணி.
அதே நேரம் இவளின் வாழ்க்கையையே புரட்டிப்போட காத்திருப்பவன் தன் தாயிடமும் தங்கையிடமும் ஏதோ ஒன்றை முடியாது என்று மறுத்துக்கொண்டு இருந்தான்.

கீழுள்ள லின்க்கில் போய் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.

 
Last edited:

ஆரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தஞ்சம் 02

அலாரத்தின் சத்தத்தில் தன் உறக்கம் கலைந்தான் அவன். தன் நீளக் கைகளை தூக்கி சோம்பல் முறித்தவாரே எழுந்தவன் நேரே போய் நின்ற இடம் அவனறை பால்கனி. சிவப்பும் செம்மஞ்சளும் நீலமும் என்று வானமெங்கும் ஒவியம் தீட்டியிருக்கும் சூரியோதயத்தின் அழகை காண்பதிலும் இன்னமும் கலப்படம் கண்டிராத காற்றை ஆழ்ந்து சுவாசிப்பதிலும் அலாதி பிரியம் அவனுக்கு.
பொன் மஞ்சள் நிறத்தில் சூரியன் அவனின் ஓவியம் வானம் எங்கும் விரிந்து கிடக்க தன் குஞ்சுகளுக்கு இறை தேடி அணியணியாய் பறவைகளின் ஊர்வலம். இரவெங்கும் பனியில் குளித்தெழும்பியதில் இன்னமும் ஈரம் காயா குளிர்ச்சியுடன் இருந்த பச்சை தாவரங்கள் கண்ணுக்கு இதமளித்தன. இவற்றை கொஞ்சம் நேரம் பார்த்திருந்தவன் பின் தன் உடற்பயிற்சி அறைக்கு சென்றான். உள ஆரோக்கியத்துடன் உடல் ஆரோக்கியமும் பார்க்க வேண்டாமா?

உடற்பயிற்சிகள் முடிய குளித்து தயாராகி கீழே வந்தவனுக்கு காபி கலந்து கொடுத்தார் பத்மா. அந்த சாந்தம் நிறைந்த முகத்தை கண்டதும் தன்னால் ஒரு புன்னகை உருவானது இவனது முகத்தில்
"ஜெய் நீ ஆபீஸ் போகும் வழியில் .............. அருகில் என்னையும் கொஞ்சம் இறக்கி விட்றியாப்பா...?" என்ற பத்மாவின் கேள்விக்கு
"யேன்மா அங்க என்ன வேல டீச்சரம்மாக்கு" தன் தாயின் பாடசாலை கூட அந்த வழியில் இல்லை என்பதால் இப்படி கேட்டான் அவன்.

"ஏன்பா ஆம்பளைங்களுக்கு மட்டும் தான் வெளியில் வேலை இருக்குமோ பொம்பளைங்களுக்கு இருக்காதோ " என்ற தாயின் கேள்விக்கு சிரித்தபடியே " அப்படி இல்லம்மா பொதுவா நீங்க வெளியே போறீங்கன்னா அப்பா கூட போவீங்க இப்போ என்னை கேக்கறீங்க அதுவும் இந்தக் காலையிலேயே அது மட்டும் இல்லாம நீங்க சொன்ன ஏரியாவில் அவ்வளவா கடைகள் ஷாப்பிங் மோல்ஸ் கூட கிடையாதே என்று கேட்டேன்." என்றான் அவன் .
"உங்க அப்பாவை கூப்பிடல்ல என்றா நினைக்கிற. அவருக்கு என்னை விட அவரு பிரண்ட்ஸ் தான் முக்கியமா போய்ட்டாங்க. இன்னைக்கு அவரு பிரண்ட்ஸ் கூட பட்மின்டன் விளையாட போறாராம். என்னையெல்லாம் கூட்டிட்டு போயி கூட்டிட்டுவரதுன்னு ட்ரைவர் வேலை பார்க்க முடியாதாம். கிழவருக்கு லொள்ளை பார்த்தியா." என்று நொடித்துக்கொண்டவர்
"என்னோட ஸ்டாப் பொண்ணுக்கு கல்யாணம்ப்பா. போகல்லனா சரி இல்லைல்ல அதான் நீ அங்கவர வர வேண்டாம்டா ******* தெரு கிட்ட இறக்கி விடு. மண்டபம் அங்கின கிட்ட தான். நடந்தே போய்க்கிறோம்." என்றாள் பத்மா. மண்டபத்திற்க்கே கொண்டு போய் விடு என்றால் முடியாது அப்பா கூடவே போய்க்கோங்க என்று சொல்வான் என்று தெரியும் அவளுக்கு.

"தனியாவா போறிங்க" என்ற ஜெய்யின் கேள்விக்கு

"இல்லைப்பா. மகி கூடத்தான். ஆனா இந்த மகி இன்னும் ரெடி ஆகி வரல. ரெண்டு பெரும் இன்னும் சண்டை போட்டுகிட்டு இருக்காங்களா இருக்கும். ஏழு கழுத வயசாகுது. இன்னும் சின்ன குழந்தைகளைப்போல சண்டைப் போட்டுக்கறதே வேலையாய் போய்டிச்சி இதுங்க ரெண்டுக்கும். இவன் விட்டுக்கொடுக்றதாவும் இல்லை. அவ விட்டுக் கொடுக்கறதாவும் இல்லை." என்று அங்கலாய்த்தவள் தான் நம் நாயகனின் தாய்.

இதழில் புன்னகை ஓட தாயின் புலம்பலை கேட்டபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் தான் நம்ம நாயகன்.

பெயர் ஜெயவேந்தன். பெயருக்கு ஏற்றார் போல ஜெயிக்கப் பிறந்தவன். நெருக்கமானவர்களுக்கு ஜெய். இருபத்தி ஏழு வயது ஆண்மகன். ஆறு அடிக்கும் கூடிய உயரத்தில் சிவப்புமில்லா கருப்புமில்லா நிறத்தில் கூர் நாசிகளோடு அழுத்தமான உதடுகளோடு தலை நிறைய அடர்ந்து வளர்ந்து அவனுக்கே அடங்காத முடிகளோடு இருப்பவன். ஆனால் என்ன கொஞ்சமே கொஞ்சம் கோபக்காரன். அதற்காக முரடன் இல்லை.

இவன் தாய் பத்மா. புகோள ஆசிரியை. கணவரும் பிள்ளையும் சேர்த்த சொத்து கொட்டிக்கிடந்தாலும் அவரின் ஆசைக்காய் ஆசிரியையாய் பணி புரிகிறார். கணவரும்
தடை சொல்லவில்லை.

தந்தை யசோதரன். பரம்பரை பணக்காரன். தன் தாத்தா அப்பா நடத்திய வியாபாரங்களை கட்டிக்காதவர் இப்பொழுது தொழிலை மூத்தவன் தலையில் கட்டி விட்டு ஓய்வாய் வீட்டிலிருக்கிறார்.

ஜெய்யிற்கு ஒரு தம்பி ஒரு தங்கை. தம்பி கிருஷ்ணவேந்தன். பிஎஸ்சி கடைசி வருடம் படித்துக்கொண்டு இருக்கிறான்.

கிருஷ் யாருடனும் இலகுவில் பழகி விடுவான். தகுதி தராதரம் தாண்டி மனித நேயத்தை நம்புபவன். குடும்பத்தினர் மேல் மிகுந்த அன்புடையவன். ஜெய் போலல்லாது மிகுந்த கலகலப்பானவன். இவனும் எந்த விதத்திலும் அண்ணனிற்கு குறைந்தவன் அல்ல. பெயரிற்கு ஏற்றாற் போல் பெண்களை கவர்ந்திலுக்கும் கிருஷ்ணனே தானிவன். தங்கையை வம்பிழுப்பதில் அளாதி பிரியம் இவனுக்கு.

தங்கை மகிழினி. கல்லூரி முதலாம் வருடம். பத்தொன்பது வயதில் இருக்கும் பெண். முகத்தில் என்னேரமும் குறும்புப் புன்னகை உடன் இருப்பவளின் புன்னகையே அவளுக்கு தனி அழகை கொடுத்தது.

இன்னும் பாட்டி, தாத்தா இது தான் அவன் வீடு.

ஒரு வழியாய் கிருஷ்ஷுடன் சண்டையை சுபம் போட்டு முடித்து மகிழினி தயாராகி வர ஜெய்யுடன் பயணமானார்கள் அந்த தாயும் மகளும்.

காரில் பாடல் கசிந்து கொண்டிருக்க தாளமிட்டவாரே காரை ஓட்டிக்கொண்டிருந்தான் ஜெய்.

அவன் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த பத்மா இடைக்கிடை அவன் முகத்தை திரும்பி திரும்பி பார்த்த படியே வந்தாள்.

அவர் தடுமாற்றத்திற்கும் காரணமிருந்தது. விடாமல் துரத்தும் மழைக் காதலனின் தொடுகையில் பூமிக் காதலி உருகி நெகிழ்ந்து போயிருந்தாள்.

இதில் அந்த கல்யாண மண்டபம் செல்லும் தெரு, மண் பாதை வேறு. அதில் இறங்கி நடந்து சென்றால் தான் ஒரு வழியாகி விடுவோம் என நினைத்தவள்.
'ஐயோ இதை அவனிடம் சொன்னால் கல்யாணமே வேண்டாம் என்று காரை திருப்பி விடுவானே”
என நினைத்தவராய் மெதுவாய் பின்னால் திரும்பி பார்த்தால் யாருக்கு வந்த விருந்தோ என வெளியே வேடிக்கை பார்த்த வண்ணம் வந்தாள் மகிழினி.

“மகிழ், அடியே மகிழ்ழ்" என கிசு கிசுப்பில் கேள்வியாய் திரும்பியவள் தாயின் உதட்டசைவு சொன்ன சேதியில் முறைக்க தொடங்கி விட்டாள். பின்ன தாய் சொன்னதை அண்ணன் கேட்டால் கல்யாணமாவது கச்சேரி ஆவது வீட்டை பார்த்துக் கொண்டு போக வேண்டியது தான்.

தாயின் பிளீஸ்டியில் முறைப்பை கைவிட்டவள் நான் பார்த்துக் கொள்வதாக சொன்னதில் கொஞ்சம் திடம் வந்தவர் கொஞ்சம் மகன் புறம் திரும்பி பார்த்தார்.
நல்ல வேளை அவன் கண்டு விடவில்லை.

அவனெங்கே இங்கே பார்ப்பது அவன் கவனமெல்லாம் இன்று நடக்கப் போகும் டீலை முடிப்பதில் சுற்றிக் கொண்டிருந்தது.

தெரு முனை வந்ததும் காரை நிறுத்தியவன் தாயும் தங்கையும் இறங்கும் வரை காத்திருந்தவன் அவர்கள் இறங்காமல் போகவே கேள்வியாய் தாயை பார்த்தான்.

'ஐயய்யோ பார்த்துட்டானே பார்த்துட்டானே... அடியே நான் பெத்த தெய்வமே ஏதாச்சி செய்டி'

காரை நிறுத்தியவுடனே அந்த தெருவை பார்த்த மகிழ்க்கு தெரிந்து போனது தன் அண்ணா எப்படியும் அந்த தெருவில் காரை விடப்போவதில்லை என்று.

அந்த பாதையின் அழகு அப்படி. அவ்வளவு குழி அதிலும் மழையின் கை வண்ணத்தில் தண்ணீர் வேறு தேங்கியிருந்தது. இதில் நடந்து போவதே கஷ்டம்.
பிறகு எப்படி அண்ணா தன் காரை செலுத்துவான். ஜெய்யிற்கு இந்த கார் மிகவும் பிடிக்கும். தான் சம்பாதிக்க தொடங்கிய பின் அவன் காசில் சொந்தமாய் வாங்கிய கார் என்கிற பெருமையும், பிரியமும் அவனுக்கு இருந்தது. அதனாலேயே அவன் காரை அவன் குழந்தையை போல் பராமரிக்கிறான். அதை இந்த ரோட்டில் விட்டால் நாளைக்கு காரை பாகம் பாகமாய் பேரீச்சம்பழ கடையில் தான் பார்க்கக்கிடைக்கும்.
மாதாஜி கல்யாணத்த மறந்துடுஜீ

அண்ணணின் பார்வையில் கூர்மை கூடுவதை கண்டவள் "அண்ணா கொஞ்சம் மண்டபம் வரை கொண்டு போய் விட்டுடேன். இந்த மழைல நடந்து வேற போனா குளிச்சு தான் போவோம். குடை வேற எடுக்கல்ல. அம்மா நீ குடை எடுத்தியாம்மா" என்றவள் தலையை இடம் வலமாக ஆட்ட பத்மா அதை பின்பற்றினார்.

கொஞ்சம் திரும்பி பாதையை பார்த்தவன் திடுக்கிட்டு விட்டான்.
இதில் காரை செலுத்துவதா?
"என்ன இந்த தெருல கார்லயா? நோ வேய். கல்யாணம்லாம் வேண்டாம். போன்ல உங்க விஷ்ஷை சொல்லிடுங்க." என்றவன் காரை திருப்ப போக தாயை முறைத்த மகிழின் ப்ளீஸ் அண்ணா உடன் தானும் ப்ளீஸ் கண்ணா என இணைந்து கொண்டார் பத்மா.

ஜெய்யின் முறைப்பில் "கண்ணா அவங்க வீட்டு கடைசி கல்யாணம்பா. முதல் இரண்டு கல்யாணத்துக்குமே போகல்ல. இதுக்கு சரி போகனும்மில்லப்பா. இப்படி நான் ஒவ்வொரு வீட்டு கல்யாணத்திற்கும் போகலை என்றால் நம்ம வீட்டு கல்யாணங்களுக்கு ஈ எறும்பு கூட வராதுப்பா" என்று முகத்தை பாவமாய் வைத்த படி சொன்னார் பத்மா.

தாயின் கெஞ்சலில் மீண்டும் பாதையை பார்த்தவனுக்கு எரிச்சல் மண்டியது.
'இங்கல்லாம் கல்யாணம் வைக்கல்ல என்று யார் அழுதா... வேற மண்டபமே கிடைக்கல்லயா. இதல்லாம் ஒரு ரோடு... இதுக்கு ஒரு காரு வேற !!!”
அந்தப் பாதையில் காரை செலுத்தியவன் முகம் கல்லாய் இருகிப் போனது.

விதி அவனை நோக்கி தன் காதல் எனும் கைகளை நீட்டியதை அறியாமல் காரை செலுத்திக் கொண்டிருந்தான் ஜெயவேந்தன்.

'கண்ணா"
ஜெய் திரும்பி முறைத்த முறைப்பில் சட்டென அடங்கி விட்டார் பத்மா.

ஒரு குழியிலிருந்து தப்பினால் அடுத்த குழி அதிலிருந்து மீண்டால் அடுத்த பள்ளம்
ஜெய்யின் கோபம் இருகியிருந்த அவன் முகத்திலேயே தெரிந்தது. காரின் ஒவ்வொரு குலுங்களுக்கும் தூக்கி தூக்கி போட்டது. முன்னால் இருந்தவர்களாவது சீட் பெல்ட்டை மாட்டியிருந்தனர். ஆனால் மகிழினியின் தலை தான் ஒன்றுக்கு மூன்று முறை காரின் கூரையை முத்தமிட்டது.

ஒரு வழியாய் மண்டபம் வந்துவிட தனக்கிருந்த கோபத்திற்கும் கொஞ்சம் வேகமாவே காரை நிறுத்தினான் ஜெய். உண்மையில் ஜெய்யின் கார் சேராபிஷேகத்தில் குளித்து தான் போயிருந்தது.

"ஏய் முட்டாள். கண்ண என்ன பின்னாடி வெச்சிகிட்டா கார் ஓட்ற. கார் ஓட்றதுன்னா ஏரோபிளான் ஓட்றதா நினைப்போ. ரோட்ல வேற மனுஷங்க போக வேணாம்.
ஒழுங்கா ஓட்ட தெரியாதவன்க்கு எல்லாம் எதுக்கு தேவையில்லாத வேலை... கைய விடுமா... என் டிரஸ் எல்லாம் அழுக்கா போச்சி பாரு..." என்றவள் நம் நாயகி மதுரவாணியே தான். ஜெய் காரை நிப்பாட்டிய வேகத்தில் அப்போது தான் அங்கே வந்திருந்த மதுரவாணியின் தாவணியில் தெறித்திருந்தது சகதி. அப்படியே அந்த குரல் தேய்ந்தும் போனது.


அவள் கத்த ஆரம்பிக்கும் போதே காரில் இருந்து இறங்க தொடங்கிய ஜெய் கண்டது எல்லாம் தாய் கையில் இருந்து தன் கையை உருவ முயன்று கொண்டே சென்ற அந்த நீல தாவனியின் பின் அழகுதான்.

கோபமாய் அவளின் பின்னால் செல்ல முயன்றவனின் கையை பற்றியிருந்த தாயின் கண்களின் கெஞ்சலில் அந்த நீல தாவணிக்காரியின் கண்ணத்தில் அறைய தோன்றிய கோபத்தை அடக்கியவன் காரை கிளப்பிய வேகத்தில் பத்மாவே பயந்து போனாள்.

மகன் போனதும் திரும்பியவர்கோ கிடைத்தது மகிழினியின் முறைப்பே.
"நீ ஏண்டி முறைக்கிற இப்போ"

"ஆஆஆஆஆ ஆசைக்கி... யேன்மா இப்படி எல்லாம் ஒரு கல்யாண வீடு உனக்கு தேவையாம்மா.... இப்போ உன் பெரிய பையன் முகத்தை கொஞ்சம் பாரு... நாலு கடுகை போட்ருந்தா பட படன்னு வெடிச்சிருக்கும்."

"கடுகென்ன கடுகு வீட்டுல போய் அப்பளமே பொரிச்சிக்கலாம் இப்போ வா லேட்டா ஆகுது " மகளை கையை பிடித்து இழுத்தபடி உள்ளே நுழைந்தாள் அந்தத்தாய்.

கீழே உள்ள லின்க் மூலமா உங்க கருத்துக்களை பகிர்ந்து கவள்ளுங்கள் நண்பர்களே


 

ஆரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தஞ்சம் 03
இரா முழுதும் ஓய்வெடுத்த சூரியன், தாய் தன் மகவை அணைத்துக் கொள்வது போல உலகை தன் பொற் கரங்கள் கொண்டு அணைத்திட, கூடு தங்கிய பறவை எல்லாம் தன் வேளைக்கு புறப்பட்டுக்கொண்டு இருக்க ஆர்ப்பாட்டமில்லாமல் விடிந்தது அந்த காலைப்பொழுது.

அன்றைய காலை உணவை தயார் செய்து கொண்டு இருந்த காயத்ரி மீண்டும் ஒரு முறை தன் மகளின் அறை நோக்கி கத்தினார். "சாப்பாடு ரெடிடீ வந்து சாப்பிடு... இன்னும் என்ன தான் பண்ணுற ... கத்தி கத்தி எனக்கு தான் தொண்டை வலி வரப்போகுது " இத்தோடு ஒன்றுக்கு மூன்று முறை அவளை கூப்பிட்டாகிற்று. இன்னும் அவள் வந்தபாடில்லை என்ற எரிச்சல் அப்பட்டமாகவே தெரிந்தது அவள் பேச்சில்.
"ஆஆ அம்மா டிபன் பாக்ஸ் ரெடி பண்ணு இதோ வந்துட்டேன்." என்று தன் அறையில் இருந்து கத்தியவள் பத்து நிமிடத்தில் மஞ்சள் சுடிதாரில் தாயின் முன் வந்து நின்றாள்.

"அம்மா என் டிபன் பாக்ஸ் ரெடியா லேட் ஆகுதும்மா.." தாயை அவசரப்படுத்தினாள் இத்தனை நேரம் தான் தாமதப்படுத்தியதை மறந்து.

"அதுக்கு தான் பொண்ணா லட்சணமா காலைலயே எழுந்துக்கனும் என்றது. லேட்டா எழுந்தா இப்படி தான். காலுல சூடு தண்ணி ஊத்தினது போல ஓடணும்... நானும் தான் தெனமும் சொல்றேன். திருந்திருயா நீ... டிபன் பாக்ஸ் அதோ இருக்கு. எடுத்துகிட்டு போ" என்று கடிந்து கொண்டவர் இவள் இப்படி தான் பதறுவாள் என்று அறிந்தவராய் கொஞ்சம் ஊட்டியும் விட்டார்.

"ஐய்யோ காயு நீ வேற காலைலயே ஆரம்பிக்கதே, சரி சரி நா போய் வரேன்" கடைசி பிடியை மென்றபடியே சொன்னவள் காயத்ரியின் கண்ணத்தில் ஒரு முத்தம் வைத்தாள் அத்தனை அவசரத்திலும்.

"நீயும் இதத்தான் நான் பள்ளிக்கு போகிற காலத்தில் இருந்து சொல்ற. நானும் மாறுறதாய் இல்லை. நீயும் விட்றதாயில்லை. டைம் வேஸ்ட் என்ட் எனர்ஜி வேஸ்ட் காயு. " என்க அவள் காயு என்றதில் காயத்ரி திட்ட வாய் திறக்கும் முன்
"அப்போ சரிம்மா நான் போய் வரேன்" என ஓடியே விட்டாள் அவள்.

"ஏய் ஏய் பாத்துப்போடி... விழுந்துகிழுந்து வைக்க போற... ஓடாத" என்ற காயத்ரியின் கத்தல் காற்றோடு போனது.

காலேஜ் முடிந்து வந்த மாணவிகள் கூட்டம் அந்த பஸ் தரிப்பிடத்தை நிறைத்திருந்தனர். பாதைக்கு மறுபுறம் இருந்த சில்லறைக் கடையில் ஸ்னாக்ஸ் வாங்க சென்றிருந்தாள் மது.

"இவள் ஸ்னாக்ஸ் வாங்க வேற டைமே கிடைக்கல்லையாடி பஸ் வந்துட போகுது… இந்த கூட்டத்துல எடமே கிடைக்காது." என்ற ரேவதி மது நின்றிருந்த கடையைப் பார்த்து "மது ஏய் மதுவராணி சீக்கிரம் வாடி பஸ் வர டைம் ஆகுது" எனக் கத்த யார் இப்படி கத்துவது என பார்த்த ஜெய் அவள் கத்திய திசையைப்பார்க்க அங்கு ஒரு பெண் ஸ்னாக்ஸ் வாங்க போராடிக் கொண்டிருந்தாள். கல்லூரி பக்கத்தில் இருக்கும் ஒரே கடை என்பதால் கூட்டம் நிறைந்திருந்தது. அதற்க்கு மேல் அவன் அங்கு பார்க்கவுமில்லை. அது அவன் கருத்தில் பதியவும் இல்லை.

வழமையாக காலேஜ் முடிந்து கிருஷ் உடன் வீடு சென்று விடுவாள் மகிழினி. ஆனால் இன்று அவனுக்கு மேலதிக வகுப்பு இருந்ததால் அவளை அழைத்துச் செல்ல ஜெய் வந்திருந்தான்.

ஆமாம். மது, மகிழினி, கிருஷ்ண வேந்தன் எல்லோரும் ஒரே கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கின்றனர். மது, நித்யஸ்ரீ, ரேவதி, மகிழினி எல்லோரும் முதல் வருடம் ஆனால் மகிழினி மட்டும் வேறு கற்கை நெறி. அதனால் அவர்களுக்குள் பரீட்சயமாகி இருக்கவில்லை. கிருஷும் இதே கல்லூரி தான் ஆனால் கடைசி வருடம் கற்றுக்கொண்டு இருக்கிறான்.

இப்படி இருக்க இதோ பஸ் வந்தே விட்டது. "ஏய் ஏய் கொஞ்சம் இருங்கடி இதோ வந்துட்டேன்" என்ற குரலில் சடக் என்று திரும்பி பார்த்தான் ஜெய வேந்தன். இந்தக் குரல் அந்த மண்டபத்தில் கேட்ட குரலுக்கு செந்தக்காரியினது ஆயிற்றே என நினைத்தவனுக்கு இன்றும் காண கிடைத்தது அவள் பின் தோற்றமே.. ஒரு நாளில் எத்தனையோ பேரோடு பேசுபவன் என்றோ ஒரு நாள் அதுவும் அவனை திட்டியவள் குரலை மறக்காமல் இருந்தது தான் அதிசயம்.
அவள் பஸ் ஏறிய பின்னாவது அவளைப் பார்க்க எட்டியவனை "அண்ணா போலாமா" என்ற மகிழினியின் குரல் இங்கே இழுத்து வர ' ச்சை.... இன்னைக்கும் அந்த ராங்கிக்காரியின் முகத்தை காண கிடைக்கல்லயே.... அந்த ராங்கிக்காரி கூட இந்த காலேஜில தான் படிக்கிறா போல. அன்னைக்கு என்ன பேச்சி பேசினாள். சரியான வாயாடி போல. பேர் கூட மதுரா மதுரவாணின்னு அந்த பொன்னு கூப்டால்ல ' என்று எண்ணியவன் உதடுகள் தானாக அவள் பெயரை உச்சரித்தது. காரணம் அறியாமல் அவள் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தினான் அந்த ஆண்மகன்.

கல்லூரி மாணவர்கள் எல்லோரும் கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
நகர இடமின்றி ஆடிட்டோரியம் முழுவதும் நிரம்பியிருந்த மாணவர்கள் தமக்குள் கதைத்துக் கொள்ளும் சத்தம் அந்த ஆடிட்டோரியம் முழுதும் எதிரொழித்தது.

"சைலன்ட் கைஸ் சைலன்ட் ப்ளீஸ்" எனும் அந்த குரலில் தமது கதைகளை மறந்து அமைதியை தத்தெடுத்த மாணவர்கள் அந்த குரல் வந்த திக்கில் பார்த்தார்கள்.

அங்கு மைக்கை ஒரு கையில் பிடித்த படி மற்ற கையை காட்சட்டை பாக்கெட்டில் விட்டு இதழில் சின்ன சிரிப்போடு நின்றிருந்தான் கிருஷ்.

அவனைப் பார்த்த பல பெண்கள் "வாவ் வாட்ட ஹாண்ட்ஸாம் "என்று தங்கள் இதழ்களுக்குள் முணுமுணுத்துக் கொள்ள அதையே சொல்ல வாயெடுத்த ரேவதியின் வாயை தன் கைகளால் அடைத்திருந்தாள் நித்யஸ்ரீ.
"ச்ச் வாயை திறக்க கூடாது. அவன் உங்க ரெண்டு பேர்க்குமே அண்ணன். யேன்னா அவன் என் ஆளு. வேர கதைக்கே இடமில்ல ஒகே.. எவளாவது சைட் அடிச்சீங்க செத்தீங்க. என்ன புரிஞ்சதா?? காலேஜ்ல இருக்க பாதி பையனை எனக்கு அண்ணனாக்கி சைட் கூட அடிக்க விடாம செய்றதே இவளுங்க வேலை" என இவர்களை மிரட்டிய படி திரும்பி பார்த்தால் கிருஷ் இவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன்னையே பார்த்ததில் அதிர்ச்சி ஆனவள்
"ஏய் யேண்டி இவன் நம்மளையே பாக்கறான்" என்று ரேவதியின் காதுக்குள் முனுமுனுத்தாள்
"நம்மளையே இல்லடி தங்கமே உன்னை" என்ற மதுவின் பதிலில் கொஞ்சம் அதிர்ந்தவள்.
"என்னையா யேண்டி நான் என்ன செய்தேன்"
"பின்ன மொத்த. ஹாலும் சைலன்ட் ஆ இருக்க மேடம் மட்டும் கராத்தே வித்தை காட்னீங்களே அதான்." நித்திக்கு பேசும்போது கைகளை ஆட்டி ஆட்டி பேசும் பழக்கம் இருந்தது.
நேரம் காலம் தெரியாமல் தன்னை பழிவாங்கி சகுனி வேலை பார்த்த அந்த பழக்கத்தை சபித்தவளாக தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ஷை பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தவள் மதுவின் பின்னால் ஒளிந்து கொண்டாள். அத்தோடு கிருஷ் பேச ஆரம்பிக்க நித்திக்கு நடந்த சம்பவமே மறந்து விட்டது. ஆனால் அவளையே பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்க்கு தான் கண்களை உருட்டி கைகளை ஆட்டி ஆட்டி கிருஷை சுட்டிக் காட்டிய படி தன் நண்பிகளை மிரட்டிய நித்யஸ்ரீயின் குறும்புத் தோற்றம் மறக்காமல் நெஞ்சில் பதிந்து கொண்டது.

அவள் இதழசைவை வைத்து ஊகித்திருந்த அவள் சொன்ன இவன் என் ஆளு என்பதும் மறக்கவில்லை.
"ஓகே கைஸ் நம்ம கல்லூரி ஆண்டு விழா வருது. அதனால் காலேஜ் இறுதி வருட மாணவர்கள் நாங்க என்பதாலும் இது நாம கடைசியா கலந்துக் கொள்ளும் ஆண்டு விழா என்பதாலும் இதை உங்க ஆதரவோட நம்ம பாட்ச் செய்யனும் என்று ஆசப்படுறோம். அதுக்கு உங்களோட ஃபுல் சப்போர்ட் எங்களுக்கு தேவைப்படுது. உங்களோட ஃபுல் சப்போர்ட் தருவீங்கன்னு எதிர்ப்பார்க்குறோம். சோ கைஸ் நாம உங்கள குழுக்களாக பிரிச்சிருக்கோம். உங்களுக்கே தெரியும் வருடா வருடம் நம்ம கல்லூரி ஆண்டு விழாவின் போது நம்ம கல்லூரி சார்பாக நம்ம கல்லூரி பக்கத்தில் உள்ள அன்னை அநாதை இல்லத்திற்கு ஒரு தொகை கொடுப்பது வழக்கம். அதற்கான பண்ட் சேர்ப்பதற்காகவும் ஒரு குழு இருக்கு." கிருஷ் இப்படி பேசி முடிக்க மாணவர்களின் ஆரவார கரகோசத்தோடு பல மாணவிகளின் நான் கிருஷ் குழுக்கு போய்டனும் என்ற அவாவோடு மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
இப்படி குழுக்களாக பிரிக்கப்பட்டதில் மது மகிழினி இருவரும் நிதி சேகரிக்கும் குழுவிலும் கிருஷ் நித்ய ஸ்ரீ ரேவதி ஆகியோர் விழா தொடர்ப்பான ஏனைய விடயங்களுக்கு உரிய குழுவிற்கும் பிரிக்கப்பட்டனர்.

மறக்காமல் உங்க கருத்துக்களையும் கீழ குடுத்து இருக்க லிங்க் மூலமா போய் பகிர்ந்துக்கொங்க நண்பர்களே…
 

ஆரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தஞ்சம் 04

பருவ காலங்கள் மாறி மழைக்காலம் அதில் வெயில் சுட்டெரிக்க வெயில் காலம் தன்னில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டித்தீர்க்க ஆங்காங்கே கொடூரமாய் வெள்ளத்தில் கொஞ்சம் பூகம்பத்தில் மிச்சமாய் உயிர்களை காவு வாங்குகிறான் கால தேவன்.

இவை இப்படி இருக்க தன் வாழ்வை நிலைப்படுத்த பணத்தின் பின்னாலும் வேலையின் பின்னாலும் ஓடிக்கொண்டிருக்கிறான் மனிதன். இப்படி பணத்தை தேடி ஓடியதில் வாழ்வின் சில அழகான ஆனால் குறைவான சந்தோசங்கள் அரிதாகிப் போகின்றன சிலருக்கு. அப்படி ஒரு அழகான சந்தோசம் தான் காதல். ஆனால் காதல் தான் வாழ்க்கை என்று இல்லை. ஆனால் காதலில்லாமல் வாழ்வும் இல்லை. வாழ்க்கை புத்தகத்தில் ஒரு பக்கம் தான் காதல் ஆனால் அந்தப்பக்கம் இல்லாமல் புத்தகம் சுவைப்பதில்லை.


"ப்ப்பா....என்ன வெயில்டி. தலை சுடுது. குடையை கூட எடுக்கல்ல. இன்னும் எவ்ளோ தூரம் போக போகணுமோ...கால் ரெண்டும் செம்மத்தியா வலிக்குது மகிழ்.. கொஞ்ச நேரம் எங்கினயாச்சும் நிண்டுட்டு போலாம். என்னாலன்னா வேற நடக்க முடியாது" என்று சொன்ன மதுவின் முகத்தில் களைப்பு அப்பட்டமாய் தெரிந்தது.

"ஆமாடி என்னாலையும் முடியல்ல. இந்த வெயில்லயும் எத்துன வீட்டு கதவ தட்டியாச்சு, எத்துன கடைக்கு ஏறியாச்சு. எதோ கொஞ்சம் பேர் மனசெறங்கினதால இவ்வளவாச்சும் சேர்ந்திச்சி. அதுலயும் சில எச்சில் கையால காக்கா தொரத்தாத பயலுங்க ஏதோ அவனுங்க தர அந்த காசுல அவன் பரம்பரை சொத்தே குடி முழுகி போக போறதை போல பாக்குறானுங்க. அந்த கொழந்தைங்களுக்காகன்னு சொல்லியும் மனசெழகுதா பாரேன். ஆனா அந்த கொழந்தைங்க ரொம்ப பாவம்ல"என்ற மகிழிடம்

"ஹ்ம்ம் ஆமாடி ரொம்ப பாவம் தான். நம்மளுக்கு அம்மா அப்பான்னு அழகான குடும்பம் இருக்கதால நம்மளுக்கு அவங்க கஷ்டம் தெரியறது இல்லல்ல. ப்ச் எத்தன பேப்பர்ஸ்ல டீவியில காட்றாங்க அங்க குப்பதொட்டியில கொழந்த கெடச்சது ஆத்துல அம்மாவே கொழந்தய தூக்கி போட்டுட்டா அப்டி இப்டின்னு எப்டிதான் மனசு வருதோ அந்த பிஞ்சை போய் ரோட்டுல வீசிட்டு போறதுக்கும் அம்மாவா இருந்துக்கிட்டே தன்னோட ரத்தத்துல உருவான ஒரு உசுரை கொல்றதுக்கும். அந்த கொழந்தயோட சருமத்தை தொட்டு பாத்தாலே உட்டு போக மனசு வருமா. கல்நெஞ்சக்காரிங்க" என்றாள் மது.

"நீ சொல்றதும் சரி தான் ஆனா பொத்தாம் பொதுவா எல்லாரையும் அப்படியும் சொல்லிட முடியாது இல்லயாடி. மனசாட்சிக்கு பயப்படாம தன்னோட வரைமுறைய மீறி தப்பு பண்ணிட்டு அந்த தப்போட பலனா கெடைக்கிற கொழந்தய இரக்கமே இல்லாம வீசிவிட்றவங்களும் கொலை பண்றவங்களும் இருக்க தான் செய்றாங்க. அவங்க பண்றதை என்ன சொன்னாலும் நியாயப்படுத்த முடியாது. இப்படி வாழவே தகுதி இல்லாத சிலரும் இருக்க தான் செய்றாங்க. ஆனா எல்லா அனாதை கொழந்தைங்களும் அசுத்தத்தின் மிச்சம் இல்லங்குறேன் யேன்னா சில சந்தர்ப்பங்கள்ல சில சூழ்நிலைகளில் யேன் சில பேர் கட்டாயத்தின் பேரில் கூட இப்படி செஞ்சிருக்கலாம். வன்முறைக்கு ஆளான ஒரு பொண்ணா இருந்தா அந்த குழந்தையை பெத்து எடுத்த பின்னால இந்த சமூகத்தை அவள் எப்படி முகம் கொடுப்பாள் சொல்லு. இல்ல இந்த சமூகம் தான் அவளையும் அந்த கொழந்தையையும் வாழ விட்றுமா சொல்லு. அவள் பாதிக்கப்பட்டே இருந்தாலும் அவளை இந்த சமூகம் வாழ விடாது. அவளையே வாழ விடாத சமூகம் அந்த குழந்தையை வாழ விடுமா. சொல்லிக்காட்டி சொல்லிக்காட்டியே உயிரோட ரெண்டு பேரையும் கொன்றும். இல்லை வன்முறையாலும் பலாத்காரத்தாலையும் வந்த கொழந்த மேல அவளுக்கும் தான் பாசம் வந்துடுமா. அந்த கொழந்தையை பார்க்கும் போது எல்லாம் அவளோட அந்த கொடூர அனுபவம் தான் யாபகம் வரும் இல்லையா. இல்லை வறுமையா கூட இருக்கலாமில்லையா. அதனால தான் அனாதை ஆசிரமத்திலாவது மற்ற குழந்தைகளோடு ஒன்றாக பாரபட்சம் இல்லாம மூனு வேளை உண்டு வாழட்டும் என்று விட்டு விடுறாங்க போல. தன்னோட வயுத்துக்கே அடுத்த வேளை ஆகாரம் இல்லாத நேரம் தன்னோட புள்ளைங்களுக்கு எங்கால சோறு போடுவா அந்த அம்மா. சும்மாவா சொன்னாங்க தாயும் சேயும் ஒன்றானாலும் வாயும் வயிரும் வேற என்று " என்ற மகிழுக்கு

"நீ சொல்றதும் சரிதான் மகிழ்..ஆனால் ஒன்னு மட்டும் நெஜம் மகிழ் இந்த உலகம் ரொம்ப ரொம்ப மோசமானது"என்ற மதுவிடம்

"ம்ம்ம் ஆமா பாரு இன்னைக்கு கூட எத்தனைப் பேர் அந்த கொழந்தைங்களுக்காக ஒரு சின்ன தொகைய கூட தர யோசிச்சவங்க. சமூகம் பணத்தை சேர்க்க உயிரையும் கொடுக்கும் ஆனா அதே ஒரு உயிருக்காக ஒரு ரூபாய் கொடுக்குறதுன்னாலும் மணிக் கணக்காய் யோசிக்கும்" என்றாள் மகிழ்.


" நெஜம் தான். நம்மளில் எத்தன பேர் அந்த அனாதை கொழந்தைங்கள பத்தி யோசிக்கிறோம். வீண் கேளிக்கைகளுக்காக அநியாய செலவுகளுக்காக பணத்த கணக்கில்லாம செலவழிக்கற நாங்க அவங்கள பத்திலாம் யோசிக்கிறதே இல்ல. கொறஞ்சது ஒரு வேள உணவுக்காவது உதவ முடியுமே. என்னால ஒரு குழந்தை ஒரு வேளை சாப்ட்டதேங்குற சந்தோசமாவது மிஞ்சுமே... ஆனா அதப்பத்தி எல்லாம் யாரு இப்ப யோசிக்கிறா. ஆடம்பர செலவுகளுக்கும் அடுத்தவனுக்கு போட்டியாவும், அடுத்தவனுக்காக காட்றதுக்காகவும்ன்னு வாழவே எல்லாம் சரி ஆகிடுது. விடு அதையெல்லாம் நம்மளால மாத்தவா முடியும்" என்ற மது எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

இன்றுடன் இவர்கள் நிதி சேர்க்க ஆரம்பித்து நான்கு நாட்கள் ஆகின்றது. ஆனால் இவர்கள் நினைத்து வந்ததன் பாதி கூட சேரவில்லை. அந்த மா பெரும் நகரத்தில் இரண்டு அல்லது மூவரால் மட்டுமே முழுமையாக சேர்த்து விட முடியாது என்பதால் பகுதிகளாய் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் இவ்விருவராய் பிரிக்கப்பட்டனர். அதில் மகிழினி, மதுரவாணி ஆகியோர் இருவரும் ஒரு பகுதிக்காய் பிரிக்கப்பட்டனர்.


இது நடந்து பத்து நாட்களாகின்றது. இந்த பத்து நாட்களில் இருவரும் நல்ல தோழிகள் ஆகியிருந்தனர். இருவரினதும் விருப்பு வெறுப்புக்கள் கருத்துக்கள் என்பன பற்றியும் தெரிந்து பகிர்ந்து கொண்டாயிற்று.


மகிழினியிற்க்கும் மதுவையும் நித்யஸ்ரீ ரேவதியையும் முதலிலேயே பிடித்து விட்டது. அவள் வகுப்பிலும் எல்லோரோடும் பேசுவாள் என்றாலும் இவர்களோடு நன்றாக ஒட்டிக் கொண்டாள்.

"ஹே அங்கே பாருடி...குல்பி ஐஸ் வா வா போய் வாங்குவோம்." என்று என்று துள்ளிக் குதிக்கா குறையாய் சிறு பிள்ளையாய் கூச்சலிட்டாள் மது.
"கத்தாதடீ. எல்லாரும் எங்களையே பார்க்கறாங்க. உன்ன வெச்சிக்கிட்டு" என்ற மகிழ் "போடி போ போய் எனக்கும் சேர்த்து ஒன்று வாங்கிட்டு வா" என்றாள்.


இரண்டு குல்பிக்களை வாங்கி வந்து ஒன்றை தானும் இன்னொன்றை மகிழிடமும் நீட்டிய மது
"இன்னைக்கு நித்தி ரேவதிக்கு பிராக்டிஸ் இருக்கு. சோ நான் தனியா தான் வீட்டுக்கு போகணும். இப்பவே காலேஜ்க்கு போனா தான் என் திங்க்ஸ்ஸை எடுத்துக்கொண்டு போக நேரம் சரியாய் இருக்கும்." என்றாள்.


கல்லூரி வாசலிலே காத்திருந்தான் ஜெய். கிருஷ் விழா தொடர்ப்பான வேலைகளில் இருக்க மகிழை கூட்டிச்செல்ல அவன் வர வேண்டியதாயிற்று.

என்ன தான் வீட்டில் கார் இருந்தாலும் ஜெய் ஸ்கூட்டி வாங்கி தருவதாக சொன்னாலும் ஏனோ மகிழினிக்கு வாகனம் ஓட்ட பயமாகவே இருந்தது. கிருஷின் வற்புறுத்தலுக்காக ஏதோ கொஞ்சம் பழக முயற்சி செய்கிறாள். ஆனால் இன்னும் தனியாக ஓட்டி விட முடியவில்லை.


"ஹாய் அண்ணா வந்து நேரமாச்சா." என்றபடி வந்தாள் மகிழ். மகிழின் பின்னால் ஒரு பெண் இவனைப் பார்த்தபடி இருந்ததை காணவில்லை ஜெய்.

"ஹாய் சார் நீங்க தான் மகிழ் ஓட மரியாதைக்குரிய பெரிய அண்ணாவா..." என்ற குரலில் அதிர்ந்து நிமிர்ந்தான் ஜெய். இது அந்த மதுவின் குரலாயிற்றே என்று அவளைப்பார்த்தவன் மீண்டும் ஒரு முறை அதிர்ந்தான். கண்களில் குறும்போடு உதட்டில் சிரிப்போடு ஆளை அசரடிக்கும் அழகோடு அவள் இவனையே பார்த்திருந்தாள்.


ஆனால் அவனின் அதிர்வுக்கு என்ன காரணம் என்று மதுவுக்கு தான் புரியவில்லை.

மதுவை யோசனையாக பார்த்தபடி ஆம் என்று தலையாட்டிய தன் அண்ணனிடம் திரும்பிய மகிழ் " அண்ணா இவள் மதுரவாணி. நம்ம காலேஜ்ல தான் படிக்கிறா. பண்ட் சேர்ப்பதில் இவளும் நானும் தான் பார்ட்னர்ஸ்."

என்ற மகிழின் பேச்சைக்கேட்டுக் கொண்டிருந்த ஜெய்யின் பார்வை மதுவை விட்டு அகழவில்லை. ஆனால் மதுவின் பார்வையோ இவர்கள் நிற்கும் இடத்திற்கு சற்று தள்ளி இருந்த காரிலேயே இருந்தது. 'இது அந்த காராயிற்றே' என்று எண்ணியவள் அந்த கார் அருகே சென்று காரை நோட்டமிட்டாள்.


அவளிடம் மகி என்ன என்று கேட்க "இல்ல அன்னைக்கு ஒரு நாள் இந்தக் கார் தான் என் புது தாவணியில சேற்ற இறைச்சது. புத்தம் புது தாவணி தெரியுமா. அந்த சகதியை கழுக நான் பட்ட பாடு எனக்கு தான் தெர்யும். ஆனா அந்த கார்க்காரன் நல்ல சொகம்மா ஏறி போய்ட்டான்ல. அவனுக்கு ஒரு பாடம் புகட்ட வேணாம்" என்றவள் தன் தலையில் குத்தியிருந்த ஹேர் பின்னை கலட்டியபடி " இதை வெச்சு சர்ருன்னு ஒரு இழு" எனும் போது அவள் சொல்லப்போவதை ஊகித்த மகிழ் அவள் வாயை அடைத்திருந்தாள். "நீ அடங்க மாட்டியாடி. இது அண்ணா கார்டி." என்க

அப்போது தான் கவனித்தாள் ஜெய் அவளை முறைப்பதை. 'ஆத்தி... இவ அண்ணா காரா இது. இது தெரியாம ஒவரா வாய் விட்டுட்டேனே. அம்மாடியோ என்ன இப்டி முறைக்கிறாரு. முறைச்சே என்னை பஸ்பமாக்கிருவாரு போலயே எஸ்கேப் ஆகிடு மது' என்று நினைத்தவள் அசட்டு சிரிப்புடன் " ஈஈஈ சொரி சார்" என்றாள் ஜெய்யிடம்.

பின் மகிழிடம் திரும்பியவள் " ஆனாலும் என் பாவாடையில் சேற்றை இரைச்சதெல்லாம் ரொம்ப ஓவர்..."என்று மகிழினியின் காதில் முணுமுணுத்து விட்டு "அப்போ மகி பாய்டி" என்றவள் மீண்டும் ஜெய் இடம் அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு ஓடியே விட்டாள் அங்கிருந்து.


அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜெய்யின் இதழ்களில் அழகாய் ஒரு புன்னகை ஒட்டிக் கொண்டது. அவன் நெஞ்சிலும் அவள் ஒட்டிக் கொண்டாள் நீங்காமலே.


வணக்கம் நண்பர்களே!!!
அத்தியாயம் நான்கு போஸ்ட் பண்ணியாச்சு. வாசிச்சிட்டு கருத்துக்களை கீழ உள்ள லிங்க் மூலமா பகிர்ந்துகோங்க நண்பர்களே. குறைகள், லோஜிகல் மிஸ்டேக்ஸ் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.

 
Last edited:

ஆரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தஞ்சம் 05


தனது ஆபீஸ் அறையினுள் லாப்டோப்பின் முன் அமர்ந்திருந்த ஜெய்யின் முகமோ ஏகத்திற்கும் வாடியிருந்தது. தலையில் பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல வலிக்க அடிக்கடி தன் ஆட்காட்டி விரலும் பெருவிரலும் கொண்டு நெற்றியின் இரு ஓரங்களையும் அழுத்திக்கொண்டான் ஜெய்.

இதற்கு மேல் தாங்காது என்றவனாய் தலையை மேஜை மேல் வைத்தவன் களைப்பில் கொஞ்சமாய் உறங்கியும் தான் போனான். அவனின் பி.எ ஏதோ கேட்க அவனின் அறையினுள் நுழைந்தவள் ஜெய்யின் இந்தக்கோலத்தில் கொஞ்சம் அதிர்ந்தும் தான் போனாள்.

'சாருக்கு என்னாச்சு. இப்படி எல்லாம் ஆபீஸ் நேரத்துல தூங்குறவரு இல்லையே. ' எப்போதும் கடமை கண்ணியம் என்று சின்சியர் சிகாமணியாக, ஆபீஸ் நேரத்தில் வேலை நேரத்தில் வேறு எதைப்பற்றியும் யோசிக்காது இருப்பவனுக்கு என்ன ஆனது என்று தனக்குள் எண்ணியவள்
"சார் சார் " என்று அழைத்துப்பார்க்க அவனில் சத்தமேதும் இல்லாமல் போக அவனருகில் போய் "தம்பி தம்பி " என்று அழைத்துப்பார்த்தாள்.

ஆம் அவள் ஜெய்யை விடவும் வயது கூடியவள்.(பி. எ என்றால் சின்ன வயசா மேலதிகாரி இம்ன்னா எண்ணையாய் இருக்க சொட்டி விட்டா ரத்தம் கொட்டுற கலர்ல இருக்க பொண்ணா தான் இருக்கணுமா என்ன. அப்படியே இருந்துட்டா நம்ம ஹீரோயிங்க்கு என்ன மதிப்பு. இல்ல அவ்ளோ அழகா இருக்க பி.எக்கு தான் என்ன மதிப்பு )
வந்த புதிதில் சார், தம்பி என்று அவர் குழம்பியதில் பொறுக்காது ஜெய் தான் "இப்படி சார், தம்பி என்று ஏலம் போடறதுக்கு பதிலா நீங்க தம்பி என்றே கூப்பிடுங்க" என்றுவிட்டான். ஆனாலும் அவன் வயது குறைந்தவனாகவே இருந்த போதிலும், அவனே தம்பி என்று கூப்பிட சொன்ன போதிலும் அவனை ஒரெயடியாய் தம்பி என்று அழைத்திட மனது வரவில்லை அவருக்கு. ஆயிரம் தான் இருப்பினும் தான் தொழில் செய்யும் இடத்தின் உரிமையாளன் அவனில்லையா என்ற எண்ணம் மட்டுமன்றி மரியாதையாக இருக்காது என்றும் தான் அவர் சார் என்பதை பழக்கமாக்கிக்கொண்டார்.
'என்னாச்சு ஏன் இப்படி இருக்காரு' என்று எண்ணியவர் அவன் அருகில் போய் தோளை தட்டிப்பார்க்க ம்ம் என்று முனங்கியவனில் வேறெந்த அசைவும் இல்லை. நெற்றியில் கை வைத்துப்பார்த்தவர் ஒரு நிமிடம் ஆடித்தான் போனார். அவன் உடம்பு அப்படிக்கொதித்தது.

'ஐயோ என்ன இப்படி சுடுது. இந்த தம்பி காய்ச்சலை வெச்சிக்கிட்டா ஆபீஸ் வந்து இருக்கு. அப்படி என்னதான் ஒடம்ப பாத்துக்காம உழைக்குறாங்களோ.. ஒடம்பு நல்லா இருந்தா தானே ஒழுங்கா வேலை பார்க்க முடியும்… வேலை வேலைன்னு ஓடறதில்லாம ஒடம்பை கவனிச்சிக்கறதெ இல்லை... உடம்பை நல்லா பாத்துக்காம என்னத்த உழைத்து என்னத்த செய்றது"' என்று தனக்குள் அங்கலாய்த்து முனங்கியவர் அவசரமாக வெளியே சென்று ஒரு ஆண் ஊழியரை அழைத்து வந்து அவனை காரில் ஏற்றச்சொன்னார். பின் சாரதியின் உதவியோடு அவனை வீட்டிற்க்கு அனுப்பியவர் மறக்காமல் பத்மாவுக்கும் அழைப்பெடுத்து கூறிவிட்டார்.

மகனை அப்படிப் பார்த்த பத்மாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது காலையில் நன்றாக கிளம்பிச் சென்றவனுக்கு என்னானது என்று. அவர் வைத்தியரை அழைத்து சொல்ல உடனே வீட்டுக்கு வந்தவர் அவனை பரிசோதித்து விட்டு

"பெரிதாய் ஒன்னும் இல்ல.. சாதாரண காய்ச்சல் தான். நான் டேப்லெட்ஸ் எழுதி தரேன். அதை கொடுங்க. அண்ட் கொஞ்சம் ஸ்ட்ரெஸ் குறைச்சுக்க சொல்லுங்க. " என்று விட்டு கொஞ்சம் மாத்திரைகளை எழுதிக்கொடுத்து விட்டு சென்றார். பத்மா சோர்ந்து போய் அயர்வாய் சாய்ந்திருந்த மகனின் தலையை தடவியவர் பின் மகனுக்கு மருந்து கொடுக்க வேண்டி ஆனால் அவன் எதுவும் சாப்பிட்டு இருக்காத காரணத்தினால் சமையலறைக்கு சென்று பால் கொண்டுவந்தார்.

" ஜெய் கொஞ்சம் இந்த பாலையும் மாத்திரையையும் மட்டும் குடிச்சிட்டு படுப்பா" என்று பாலை புகட்டி மாத்திரையை கொடுக்க மாத்திரையின் உபயத்தில் நன்கு தூங்கத்தொடங்கினான் ஜெய்.

மாலை வரை அயர்ந்து தன்னை மறந்து தூங்கியவன் விழிப்பு தட்ட எழுந்து பார்க்க கடிகாரம் மணி நான்கை காட்டியது.
எத்தனை நேரம் தான் தூங்கிக்கொண்டே இருப்பது. மெத்தையில் வெறுமனே சாய்ந்திருக்க மனமின்றி எழுந்தவன் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு கார் சாவியை கையில் எடுத்துக்கொண்டு கீழே வர அவனை கண்ட பத்மா "ஜெய் எழுந்திட்டியாப்பா இப்போ காய்ச்சல் எப்படி இருக்கு " என்ற படி அவன் நெற்றியில் கை வைக்க வந்தவர் அவன் கையில் இருந்த கார் சாவியை கண்டு அவனை முறைத்தவாறு "எங்க ஜெய் கிளம்பிட்ட இன்னும் உடம்பு சரியா குணமாக்கலை. கொஞ்சம் குறைந்ததும் மறுபடியும் ஆபிஸ்க்கு ஓடணுமா. வேலை வேலைனு உடம்பை பார்த்துக்கறது இல்லை. நோயை தானா கூப்பிட்டு எடுக்க வேண்டியது. அப்படி ஒடம்ப கெடுத்து சம்பாதிச்சு என்னத்த கிழிக்க போறீங்க. இப்படியே இருந்தா அந்த ஆபீஸ்க்கு நானே குண்டு வெச்சிடுவேன் பாத்துக்க. குடு சாவியை இங்கே. எங்கேயும் போக கூடாது " என்று அதட்டியவராக அதை பறிக்க வர கையை தலைக்கு மேல் தூக்கி அவரை தடுத்தவன் "ஓகே ஓகே அம்மா இப்போ நான் ஆபீஸ் போகல. அதுக்காக நீ தீவிரவாதி லெவெல்க்கு குண்டு எல்லாம் வைக்குறேன்னு சொல்லாத அம்மா. என் அம்மா தேவதை. அப்டி எல்லாம் சொல்லலாமா. சொன்னாலும் தான் இந்த மூஞ்சிக்கு அது செட்டாகுதா " என்றவன் அவர் தோளை பிடித்து தள்ளி கூட்டிவந்து சோபாவில் அமர வைத்தவன் அவனும் அவர் அருகில் அமர்ந்து

"அந்த ஆபீஸ் எங்களுக்கு மட்டும் இல்லைம்மா. எத்தனையோ பேர்ரோட வயித்த நிரப்பும் இடம் மா. எங்க ஆபீஸ் என்று நாங்க சொல்லிக்கிட்டாலும் அதோட ஒவ்வொரு முன்னேற்றத்திலும் அவங்க பங்களிப்பு இருக்கு. அப்போ அதுக்காக நம்ம முயற்சியும் குடுக்கணும் தானே அம்மா. நான் தான் இங்க எம் டி. நான் இப்படி தான் இருப்பேன் என்று கால் மேல கால் போட்டு உக்காந்து இருந்து சீட் சூடாக்கி விட்டு வேலையெல்லாம் அவங்க தலையில் போடறது நல்ல இருக்கா இல்ல வரும் வருமானத்தில் சும்மா உக்காந்து சாப்பிடுறது நல்லா இருக்கா. எம் டி, ஓனர் என்றதை தாண்டி நாங்களும் அந்த கம்பெனியின் சக ஊழியன் அம்மா. எனக்குன்னு ஒரு பொறுப்பு, கடமை இருக்கு அதையெல்லாம் நாங்க செய்து தானே ஆகணும். "என்று சொல்ல

"போடா சும்மா ஏதேதோ சொல்லி என்னை கன்வின்ஸ் பண்ணிட்டு ஆபீஸ் போக பார்க்காதே. நீ எவ்வளவு தான் பக்கம் பக்கமா கடமை கண்ணியம் என்று கிளாஸ் எடுத்தாலும் நான் உன்னை வெளியே விடப்போறது இல்லை." என்று சொல்ல
"சரி சரி.. அம்மா பாரு இப்போ இந்த கேசுவல் டிரஸ்ல என்னால ஆபீஸ் போக முடியுமா. பட் வீட்ல போர் அடிக்குதும்மா. கொஞ்சம் வெளிய போய் காத்தாட இருந்துட்டு வரேன் ப்ளீஸ்..... ஐ அம் சூர் நான் ஆபீஸ் பக்கமே போகல "என்க "சரி... ஆனா ஏழு மணிக்கு நீ வீட்டுல இருக்கனும். பனிக்காத்துல நின்னு மறுபடியும் எதுவும் தேடிக்காதே" என்ற பத்மா ஜெய் வாசலை அடையவும் "ஜெய்... அப்டியே மகியவும் கூட்டிட்டு வந்துடு. கிருஷ் முன்னமே வந்துட்டு பிரின்ட்ஸ் கூட எங்கயோ வெளிய போய்ட்டான். அப்பாவை தான் மகிய கூட்டிட்டு வர அனுப்பணும் என்று நினைத்தேன். இப்போ தான் நீ போறல்ல. கூட்டிட்டு வந்துடுப்பா " என்றார்.

அவருக்கு சரி என்று தலை ஆட்டியவன் நேரே காரை கடற்கரையை நோக்கி செலுத்தினான். கடற்கரையில் சற்று நேரம் காற்றாட நின்றவன் நேரம் ஐந்தை தொட மகிழினி யின் கல்லூரிக்கு சென்றான்.

காரை நிறுத்தி விட்டு இறங்கியவன் தன் மொபைலை பார்த்துக்கொண்டு இருக்க அவன் மாரில் மோதி நின்றாள் ஒருத்தி. இவன் நிமிர்ந்து பார்க்க அங்கே நின்றிருந்தாள் நம் நாயகி.

ஷ்ஷ் ஷ் என்றபடி நெற்றியை தடவியபடி நிமிர்தவள் ஜெய்யை பார்த்துவிட்டு "சார் இப்டி தான் நடு ரோட்ல மொபைல் பாத்துகிட்டு இருப்பிங்களா. ஓரமா இருக்க கூடாது. என் நெற்றி பொடச்சிருச்சி. " என்று சண்டை கோழியாய் சிலிப்பிக்கொண்டு கேட்டவள் மனதில் 'உடம்பா இது இரும்பு போல இருக்கு....என்னத்த சாப்பிட்டுடா வளருறாங்க இவங்கல்லாம்' என்ற எண்ணம் ஓடாமலில்லை.

"ஹே என்ன கிண்டலா... கண்ணு மண்ணு தெரயாம ஓடி வந்ததும் இல்லாம என்ன திட்ட வேற செய்யுற. வேற என்ன சொன்ன... உனக்கு இது ரோடா... இது பார்க்கிங் இங்க நான் எங்க வேணும்னாலும் நின்னு மொபைல் பார்ப்பேன். " என்றான் ஜெய்

"சரி சரி சார் ஒருத்தி ஓடி வராலே ஒதுங்கி நிக்க தெரியாது. " என்றவளுக்கு "ஏன் ஓடி வரவளுக்கு பார்த்து ஓடி வர தெரியாதா... " என்று பதிலளித்தான் அவன்.

ஆஆ என்று தடுமாறியவள் "அது ஓடி வரும் போது அதெல்லாம் கவனிக்கல... அதையெல்லாம் பார்த்துட்டா ஓடி வருவாங்க " மழுப்பலாய் பதில் சொன்னாள் அவள்.

"ஆமா... நான் மட்டும் நீ எப்போ ஓடி வருவன்னா பாத்துட்டு இருந்தேன் பாரு " நக்கலாய் சொன்ன அவனை "சார் என்ன நீங்க கூட கூட பேசுறீங்க " என்று கேட்டவள் குரலில் சே இப்படியாயிடிச்சே ஆதங்கமும் கூட.

"நீ தான் ரொம்ப வாயடிக்குற " என்றான் ஜெய். "ஆமா பின்ன என் வாய் நான் பேசுறேன்.உங்க காசா பணமா போகுது " என்று இவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அங்கு மூச்சி வாங்க ஓடி வந்த மகிழினி அவளை குனிய வைத்து முதுகில் நான்கு அடி போட்டாள்.

அதை கண்ட ஜெய்யோ "ஏய் ஏய் மகி என்ன இது"
என்று கேட்க "பாரு அண்ணா என்னை" என்று நிமிர்ந்து நின்றவள் தொப்பலாய் நனைத்திருந்தாள்

"என்னம்மா ஆச்சி" என்ற ஜெய்யிற்க்கு

"இவ தான் தண்ணீரை தலையில் கொட்டிட்டு ஓடி வந்துட்டா அண்ணா" என்க மதுவை முறைத்த ஜெய்யிற்கு "ஐயோ சார் சும்மா சும்மா ஆனா ஊனா னா எல்லாம் உங்க நெற்றிக்கண்ணை தெறக்காதிங்க இங்க ஏற்கனவே அனல் தாங்கல. இவ என் சமோசாவை ஆட்டைய போட்டா பதிலுக்கு நான் தண்ணிய ஊத்தினேன் அவ்ளோ தான். " என்றாள் மது இது வெகு சாதாரணம் என்பதை போல்.

'ஒரு சமோசாவுக்கு இப்படி ஒரு அக்கப் போறா' என்று நினைத்தவன் " ஒரு சமோசாகாக இப்படி தான் தொப்பலா நனைய தண்ணி ஊத்துவியா அறிவு வேணாம். "என்று கோபமாய் ஆரம்பித்தவனின் பேச்சில் இடை செருகலாய் "உங்க கிட்ட நெறைய இருந்தா கொஞ்சம் கொடுங்க சார் " என்று மது கேட்க கொஞ்சம் குழம்பியவன் "எதை " என்றான்

"அதான் அந்த அறிவு " என்று கண்ணில் நக்கல் இழையோட கேட்டவளை ஆயாசமாய் பார்த்தவன் இவளோடு பேசி தப்ப முடியாது என்று எண்ணிக்கொண்டு மகிழை காரில் ஏறச்சொல்லி விட்டு அவனும் காரிலேறினான். அவனின் மனமோ ஏனோ அவளுடன் வாய்ச்சமர் செய்வதை விரும்பவும் தான் செய்தது. காய்ச்சலின் தாக்கத்தில் மனம் சோர்வாய் உணர்தவன் மனம் இப்போதோ கொஞ்சம் உற்சாகத்தை தத்தெடுத்திருந்தது. அவளை ரெவியூ மிர்ரர் மூலம் பார்த்தவன்

"ஏய் வாயாடி. வீட்டுக்கு பாத்து போம்மா" என்க அவளும் ஏதோ அக்கறையில் சொல்கிறான் என்று கொஞ்சம் விளையாட்டு தனத்தை விட்டு பொறுப்பாய்

"சரி சார்" என்க
"ஏன்னா ரோட்ல உள்ளவங்க பாவம் பாரு நீ உன் திருவாயை மூடிக்கிட்டு போனா தான் அவங்க உயிருக்கு உத்தரவாதம். இல்லைனா அவன் என்னோட அதை எடுத்துட்டான். இவன் அதை சொல்லிட்டான்னு சண்டைக்கு கிளம்பி பேசியே அவங்க உயிரை எடுத்துடுவ" என்றவன் காரை கிளப்ப

பனைமரத்தை விழுங்கினவனுக்கு கொழுப்பை பாரேன் என்று முணுமுணுத்தாள் போகும் காரை முறைத்துக்கொண்டிருந்த மதுரவாணி.

உங்க கருத்துக்களை பகிர கீழே லின்க்

 
Status
Not open for further replies.
Top