All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆர் ஜே -யின் 'உயிர் கொன்ற காதல் உறவகுமா!' கதை திரி....

Status
Not open for further replies.

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்...

எல்லாரும் எப்பிடி இருக்கீங்க...
நான் நல்ல சூப்பரா இருக்கேன்...
என்னுடைய முதல் கதைக்கு தந்த ஆதரவைப் போல இந்த கதைக்கும் நீங்கள் ஆதரவு வழங்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மக்களே..

இந்த கதையை விரைவில் ஆரம்பிக்கிறேன்...
கதையை பற்றி கதையின் போக்கிலே தெரிந்து கொள்ளுங்கள்.
யுத்கார்ஷ் மலரை போல இதில் வரும் மாந்தர்களையும் உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன்...

முதல் யூடியுடன் இன்று மாலை வரப்பார்க்கிறேன்....

உங்கள் கருத்துக்காக
ஆவலுடன்

RJ
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் ௦1


இக்கதை பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மூவரின் பூர்வ ஜென்ம காதல் கதையாக தொடங்கி மீண்டும் தற்காலத்திற்கு வந்து சேரும்...
காதல் என்ற மூன்றெழுத்து சொல்லில் தான் எத்தனை எத்தனை மாயங்கள்.



ஒரு ஆணிற்கு ஓர் பெண்ணின் மேல் தோன்றும் உணர்ச்சி பிழம்பான காதல். ஒரு பெண்ணிற்கு ஆண் மீது தோன்றும் தனித்தன்மையான காதல்.



ஒரு குழந்தை தன் பெற்றோர் மீது கொள்ளும் அளவற்ற அன்பு கூட உறவுப்பிணைப்பில் உருவாகும் காதல் தான். ஒரு பெற்றோர் தன் குழந்தை மீது கொண்டுள்ள தன்னலமற்ற அன்பு கூட ஒருவகை காதல் தான்.



இப்படிப்பட்ட இந்த காதல் தான் ஒரு மனிதனை எப்படி எப்படி எல்லாம் சிந்திக்கவும் செயல்படவும் தூண்டுகிறது..


அப்படிப்பட்ட சக்திவாய்ந்த காதல் தான் இக்கதையின் கரு..



வடக்கில் சேர்வராயன் மலைக்கும் தெற்கு- தென்மேற்கில் பழனி மலைக்கும் இடைப்பட்ட பரபரப்பில் அமைந்திருந்தது அந்த இயற்கை எழில் கொஞ்சும் பசுமைமிக்க காவேரியின் கழிமுகமும் கொண்ட பழமையான திருச்சிராப்பள்ளி நகரம்...



தென்னாட்டு கைலை மலை என புகழப்படும் திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் ‘சிரா’ எனும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினெட்டாம் நூற்றாண்டு கல்வெட்டில் குறிப்பிட்டிருந்தமையால் சிரா துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்கு பெயராக மாறியதாக குறிப்பிடப்படுகிறது..



அப்படிப்பட்ட பழமையான நகரத்தில் அமைந்திருந்தது மணப்பாறை எனும் சிறு ஊர்.. விவசாயம் பெருமளவில் இருந்தாலும் மாட்டுச்சந்தைக்கு புகழ் பெற்ற அந்த ஊரில் வீட்டிற்கு ஒரு மாடு வளர்ப்பர்... அவர்களின் குலசாமிக்கு அடுத்தபடியாக அவர்கள் கும்மிடுவது அவர்களின் வீட்டி மாட்டினைத் தான். செய்யும் தொழிலே அனைத்தும் என எண்ணும் எண்ணம் கொண்டவரகள் அந்த ஊர் வாசிகள்.



அப்படிப்பட்ட அந்த ஊரில் பிறந்து வளர்ந்தவள் தான் நம் கதையின் கதாநாயகி.



அந்த சிறிய ஊரில் ஊரிற்கு ஒதுக்கு புறமாய் அமைந்திருந்தது அந்த சிறிய ஒட்டு வீடு. வீடு ஒட்டு வீடாயினும் மனசு மாளிகை அளவு. அந்த வீட்டின் பின்பக்க மாட்டுக் கொட்டகையில் நின்று கொண்டிருந்த அந்த உருவத்தின் முகத்தில் கோபத்தின் சாயல்.



“நீ என்னை ரொம்ப சிரமப்படுத்துற லட்சுமி... சொன்னா கேளு... ஏய் உன்னத்தான்ல நான் சொல்றத கேக்க போறீயா இல்லையா.... இல்லன்னு வச்சுக்கோ அரிவாள எடுத்து ஒரே சீவா சீவிப்புடுவேன்ல.... நான் யார்னு நினைக்குத.... என்ன பத்தி உமக்கு தெரியுமால... மணப்பாற மதல.... உமக்கு தெரியல்லன்னா உம்ம இனத்தாளுககிட்ட கேட்டுப்பாருல.... கதைகதையா சொல்லுவாக... நான் இம்புட்டு பேசுதேன் அப்பிரமும் எதுக்குல லந்து பண்ணுற....” என்ற குரலுக்கு சொந்தக்கார உருவத்தை இடைமறித்தது பின்னிருந்து ஒலித்த குரல்...
“இன்னும் அங்கன என்ன பண்ணுற புள்ள.... லட்சுமிய கோபப்படுத்தாம பால கறந்து சட்டுபுட்டுன்னு எடுத்துட்டு வராம அதுக்கூட என்ன வீண் பேச்சு.... சீக்கிரம் வாலே... உன்ர அப்பத்தா வந்தா உன்ன ஒரு அப்பு அப்பிடும்....” என தன் வயதின் தளர்ச்சி சிறிதும் வெளிப்படாமல் அந்த வயதிலும் சற்று கம்பீரமாய் தன் பேத்தியை அதட்டிக் கொண்டிருந்தார் எதார்த்தபிள்ளை..



அதை கேட்டு இடுப்பில் இருகையையும் வைத்துக் கொண்டு அவரை திரும்பி முறைத்து வைத்தாள் அவரின் செல்ல பேத்தி மதை...
பெயருக்கேற்றார் போல் அவளின் மெல்லிய தளிர் மேனியும் அத்தனை வனப்பாகவே இருந்தது...



வெண்ணிலா போன்ற முகத்திரையில் பிறைநிலா நெற்றி... அப்பிறையின் கீழ் போரிடும் வில்லும் அதன் கீழ் அதிர்வை உண்டாக்கும் வலிமைமிக்க நளினத்தை தெறிக்கும் கயல் விழிகளும் வாளிப்பான கூர் நாசியும் அதில் வீற்றிருக்கும் சிறு வளையம் போன்ற மூக்குத்தியும் அமுதை கடைந்தெடுத்து அதன் சுவைக்கு மேலும் சுவையேற்றுவதை போல் அமைந்திருந்த தேன் சிந்தும் செப்பு இதழ்களும் சங்கு கழுத்தும் அதில் எந்நேரமும் வீற்றிருக்கும் பாசிமணி மாலையும் அதன் கீழே பெண்ணைமையின் இலக்கணத்துடன் மின்னும் அவளின் பெண்மையும் சிறுத்த இடையும் மூங்கில் தோள்களும் வாழைத்தண்டு கால்களும் வலது காலில் அவள் அணிந்திருக்கும் சிறு கயிறும் என ஏழைத்தோற்றத்தில் இருந்தாலும் அவள் வனப்பும் எழிலும் அவளை அழகோவியமாய் காட்டியது...



அவளின் அழகை வர்ணிக்கவே புதிதாய் ஒரு வள்ளுவன் பிறக்க வேண்டும் என்றளவு அத்தனை அழகாய் முழுநிலவாய் ஜொலித்தவளை பார்த்து தன் பெண்ணின் அழகை எண்ணி அவளது தாய் வியந்தாலும் அழகிலிருக்கும் ஆபத்தை எண்ணி அவளின் தாய் பொன்னி கவலை கொண்டதும் உண்டு..



அழகுக்குள் மறைந்திருக்கும் ஆபத்தோ இல்லை... அழகை சூறையாட பிறந்த ஆபத்தோ அவளின் வாழ்வையும் சூறையாட நாள் குறித்திருக்கின்றது என்பதை அறியா பாவையவளாய் தன் அப்புச்சியை முறைத்தவள்.....



“என்ன அப்புச்சி... உமக்கு உம்ம பொஞ்சாதிய மேல் இருக்கிற பயம் இன்னும் தெளியலையா...” எனக் கேட்டு சிரித்தவள் “நீங்க இப்பிடி பயந்து போகிறத பார்க்க எனக்கு பாவமா இருக்கு அப்புச்சி... அதனால நீர் என்ன செய்யணும்னா... இந்த வச பாடுற அப்பத்தாவை விலக்கி வச்சிப்புட்டு வேற பொண்ண பார்த்து கல்யாணம் கட்டிக்கோங்களேன்....” என கலகலவென முத்துப்பல் தெரிய சிரித்தவளை கொஞ்சநேரம் ரசித்த அவளின் அப்பத்தா வள்ளிக்கன்னுவும் அவளின் தாய் பொன்னியும் சற்று நேரத்தின் முன்பு தான் வெளியில் போய்விட்டு வந்திருந்தனர்.



அதை அறியாதவளாய் கலகலவென பேசிக்கொண்டிருந்த மதையை தங்கள் முகத்தில் தோன்றிய இளக்கத்தை மறைத்து விட்டு முகத்தை கடினமாக்கிக் கொண்டு அவளை முறைத்தவாறு அந்த ஓட்டு வீட்டினுள் நுழைந்தார்கள் அவர்கள் இருவரும்.



அவர்களை பார்த்ததும் அவசரமாய் ஓடி ஒளிய ஆரம்பித்தவளை அந்த தள்ளாத வயதிலும் ஓட விடாமல் தடுத்தி நிறுத்திய அவளின் அப்பத்தா “என்ர புருசனுக்கு நீயி கலியாணம் பண்ணி வைக்க போறீயாக்கும்... சீவிடுவேன்ல சிறுக்கி... முதல்ல உனக்கொரு கலியாணத்தை பண்ணி வச்சு உன்ர வாயை அடைக்க ஒருத்தன கூட்டி வரணும்... அப்போத்தான் நானும் என்ர புருசனும் சந்தோசமா இருக்கலாம்...” என தோள் பட்டையில் முகத்தை இடித்துக் கொண்டு கூற..... அதை கேட்டு வாய் பிளப்பதை தவிர வேறு வழியிருக்கவில்லை மதைக்கு..



இருந்தாலும் ‘காலம் போன கடைசியில இதுக்கு சந்தோசம் வேணுமாம்ல சந்தோசம்...’ என மனதுக்குள் முனகாமலும் இல்லை...




அவளது இயல்பான குணமே இந்த துடுக்குத்தனம் தான். யார், எவர் என்றெல்லாம் பாராது சட்டென பேசுபவள் அதன் பின் தான் அவர்களை பற்றி அறிந்து கொள்வாள். அதற்காய் அவள் தாய் எவ்வளவு கண்டித்தும் அதை சட்டையே செய்யாமல் கிடப்பில் போட்டு மூடுபவள் மறுநொடி அன்னை அப்படியொன்றை பத்தி பேசவேயில்லை இல்லையெனும் அளவில் மீண்டும் தன் துடுக்குத்தனத்தை ஆரம்பித்து விடுவாள்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எத்தனை துடுக்குத்தனமாய் பேசினாலும் இதுவரையிலும் யார் மனதையும் புன்படுத்தியிறாத அவளை அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் ரொம்பவும் பிடிக்கும்... ஆனால் ஊரிலிருந்து தள்ளியிருப்பததால் பெரிதாய் போக்குவரத்து எதுவும் கிடையாது..



அன்னை, அப்பத்தா, அப்புச்சி என அனைவரும் அவளுக்கு தந்தை இல்லாத குறை தெரியாமல் அருமையாய் வளர்த்திருந்தனர். அவளின் சிறு வயதிலே அவளின் தந்தை உயிரை துறந்திருந்தார். இருந்தாலும் தந்தையில்லாத குறை அவளுக்கு என்றும் உண்டு. அவளது சிறுவயதில் இருந்தே இப்படித்தான். தன் தோழிகள் தங்கள் தந்தையை பற்றி கூறும் போதெல்லாம் அவளுக்குள் சிறு ஏக்கம் நீறு பூத்த பூவாய் எரிந்து கொண்டே இருக்கும்.



அதை தடுக்கும் முறையரியாது சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்துவிடுவாள். ஆனால் மீண்டும் இரண்டு நிமிடங்களில் சகஜநிலைக்கு வந்து விடுவாள்.



எத்தனை மனப்பாரம் இருந்தாலும் அதை தன்னுள் அமிழ்த்திக் கொண்டு தன்னுடன் உள்ளோரை சந்தோசமாய் வைத்திருக்கும் அளவு நல்லவள்.. அதேயளவு எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை எதிர்த்து போராடுமளவு தைரியசாலி கூட... ஆனால் இதுவரை அதை வெளிக்காட்டுவதற்கு அவள் வாய்ப்பு கிட்டவில்லை.



ஒருவேளை இந்த ஜென்மத்தில் அந்த வாய்ப்பு அவளுக்கு கிட்டாமல் கூட போகலாம்.. விதியின் வர்ணஜால விளையாட்டை பற்றி கடவுளை அன்றி வேறுயாரால் அறியமுடியும்.



உடலால் வரும் துன்பத்தை எதிர்க்கும் அளவு தைரியம் கொண்டவளுக்கு மனதால் வரும் துன்பத்தை தாங்கத்தான் மனதைரியமில்லை. மனதைரியம் கொண்டவர்கள் தான் உடல் வலிமைமிக்கவர்கள் என்பது இவளுக்கு சற்றும் பொருத்தமற்றது.. காரணம் இவளுக்கு எந்தளவு வலிமை இருக்கின்றதோ அதைவிட பல படிகள் கீழே தான் மனதைரியம் இருக்கின்றது.. அவளது இந்த புரியமுடியா குணம் தான் அவளின் சிறப்பே...



புரியாத புதிர் போன்ற இவளை ஒருவன் புரியாமலே புதிராக்கி போவதற்காய் காத்திருகின்றான் என்பதை பேதையவள் எக்கணம் அறியப்போகிறாளோ....



தன் அப்பத்தாவின் பேச்சில் அவரை முறைத்து வைத்தவள் தலையை சிலுப்பிக் கொண்டு தன் ஓட்டு வீட்டினுள் நுழைந்தாள்.
ஒற்றை சமையலறை படுக்கை அறை வெளித்திண்ணை கொண்ட மிகவும் எளிமையான வீடு. பின்பக்கம் குளிப்பதற்கு துணி துவைப்பதற்கு சமையல் பத்திரங்களை கழுவுவதற்கு ஒரு கிணத்தடி. அதன் அருகில் ஒரு மாடும் ஆடும் வளர்க்கும் அளவிற்கு ஒரு சிறு கொட்டகை. கிணத்தின் மறுபக்கம் காய்கறிகள் சிறிய அளவில் வளர்த்து அதை உணவிற்காகவும் சில வேளைகளில் சந்தையில் போட்டு விற்பதற்காகவும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.



அந்த வீட்டின் புழக்கடைக்குள் நுழைந்து சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து ஆத்தாவிடம் நீட்ட அதில் கால்கைகளை அழும்பிக் கொண்டு முகத்தில் பூத்த வியர்வையை சேலை முந்தானையால் துடைத்த பொன்னி “புள்ள சமையலுக்கு தேவையான காயை ஆய்ஞ்சு வச்சிருக்கியா இல்ல என்னைக்கும் போல இன்னைக்கும் மறந்திட்டியாலே...” என்றபடி தன் கையில் இருந்த வெற்று கூடையை சமையலறையின் கட்டில் வைத்தவள் அங்கு மூடியிருந்த சட்டியை திறந்து பார்த்தாள்.



வெண்டிக்காய் கூட்டும் வெண்டிக்காய் பொரியலும் ஒரு சிறு தட்டினுள் பழைய சோறும் பச்சமிளகாயும் இருந்தது.
அதில் தன் மகளை ஆச்சரியமும் பெருமையுமாய் பார்த்து சிரித்த பொன்னி தன் தாய் வள்ளிக்கண்ணை அழைத்து “ஆத்தா... உம்ம பேத்தி எப்புடி சமைச்சி வச்சிருக்கா பாத்தீகளா...” என அவளை புகழ மதையோ வள்ளிக்கண்ணுவின் வாயையே உற்று நோக்கியவளாய் ஆவலுடன் காத்திருந்தாள்.



அவளின் ஆத்தா எத்தனை பாராட்டினாலும் அவளுக்கு தன் அப்பத்தாவின் வாயால் இருந்து ஒரு சிறு பாராட்டு வந்தால் போதும் உலகையே வென்றுவிட்டது போல் மகிழ்ந்து போவாள்.



வள்ளிக்கண்ணுவோ தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் பேத்தியின் முகத்தை பார்த்தவர் அதில் இருக்கும் ஆவலை எண்ணி அவளை வாஞ்சையுடன் சிரித்தவருக்கு ஏனோ எப்போதும் போல் இன்றும் அவளை சீண்ட வேண்டும் போலவே தோன்றியது.
எத்தனை கஷ்டகாலமாய் இருந்தாலும் வள்ளிக்கண்ணுவிற்கு மதையை சீண்டாமல் அவளுடன் வம்பு வளர்க்காமல் இருக்கவே முடியாது. அந்த காலம்போன கடைசியிலும் அவர் தன் உயிரை இழுத்து பிடித்துக் கொண்டு வாழ்வதற்கு காரணமே அவரின் பேத்தி மதை தான்.
எவ்வளவு தான் அவர் தன் பேத்தியை சீண்டி சிணுங்க வைத்தாலும் அவருக்கு ஏதாவது ஒன்றென்றால் முதலில் ஓடி வந்து நிற்பது மதை தான்.



அவளுக்கு அத்தனை பாசம் அவர் மீது. அவளின் பொழுதுபோக்கே அவர் தான். தன் அப்புச்சியிடமும் அப்பத்தாவிடமும் வம்பு வளர்த்துக் கொண்டு அவர்களிடம் செல்லமாய் திட்டு வாங்கிக் கொண்டு அவர்களின் பாசமான காது திருகளையும் தலையில் கொட்டும் கொட்டையும் வாங்காமல் அவளால் உயிர் வாழ முடியாது என்றளவு அவளுக்கு தன் ஆத்தா, அப்பத்தா, அப்புச்சியின் மீதும் அதீத பாசம்.
பாசத்தால் பகையையும் வெல்வார்கள் உலகையும் வெல்வார்கள். அதனால் தானோ என்னவோ பகையாளி என்ற ஒருத்தர் கூட அவர்களுக்கு இல்லை. அனைவரும் பங்காளிகளே.



பாசத்தில் முதலிடம் பிடிக்கும் வள்ளிக்கண்ணு தன் பேத்தியை சீண்டுவதற்காய் வெண்டிக்காய் கூட்டை எடுத்து வாயில் வைத்து ருசி பார்த்தவர் முகத்தை அஷ்டகோணலாக்கி கொண்டு “ஏய் பிள்ள பொன்னி... உன்ர மகள் என்னலே இப்பிடி சமையல் பண்ணி வச்சிருக்கு.. வாயில வைக்க முடியல... இத எப்பிடி புள்ள திங்கிறது...” என்றவாறு தண்ணீரை எடுத்து அருந்தியவர் ஓய்வாய் போய் திண்ணையில் அமர்ந்து கொண்டு வெற்றிலையை கொதுப்ப ஆரம்பித்தார்.



அதை பார்த்து கோபத்தில் மூச்சு வாங்க முறைத்த மதை “ஆத்தா... உன்ர ஆத்தாகிட்ட சொல்லி வையு... இனிமே என்னைய சீண்டி பார்க்குத வேலைய வச்சிக்காதீன்னு.. சொல்லிப்புட்டேன்... என்ர கோபத்த பத்தி உமக்கு தெரியுமில்ல... பாவம் பார்த்து நான் அதுக்கு சமச்சு வச்சா அந்த கிழவி என்ர சமையல நல்லா இல்லன்னு சொல்லுது... இனிமே பாரு கிழவி நீர் என்ர கால்ல விழுந்தாலும் நான் உமக்கு சமச்சு போட மாட்டேனாக்கும்...” என்று வள்ளிக்கண்ணுவை முறைத்துக் கொண்டு தன் ஆத்தாவிடம் பேசியவள் “நான் ஆத்துக்கு போய்ட்டு மத்தியானம் வந்துப்புடுறேன்... இது மூஞ்ச பார்க்க எனக்கு பிடிக்கல... எனக்காக சாப்பிடாம காத்து கிடக்காம தின்னுங்க... நான் வந்து சாப்பிட்டிகிறேன் ஆத்தா” என்றவள் வள்ளிக்கண்ணுக்கு பளிப்பு காட்டியவளாய் ஆற்றிற்கு புறப்பாட்டாள்.



ஒரு தோழி அப்பத்தா என்றால் அவளின் மற்ற தோழி இந்த காவேரி ஆறு தான். அவளின் வீட்டில் இருந்து சிறு தொலைவு தான் என்பதால் அவள் அடிக்கடி இங்கு வருவாள். அதுவும் அவளின் கோமுவுடன் தான்.



கோமு அவள் வளர்க்கும் ஆட்டுக் குட்டி. மூன்று வயது நிரம்பிய கோமு தான் அவளின் வழித்துணை. எங்கு சென்றாலும் கோமு இல்லாமல் அவள் எங்கும் செல்வதில்லை. கோமுவுடன் அத்தனை நெருக்கம்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாசம் வைப்பதற்கு ஒரு உயிர் இருந்தால் போதும் அவளுக்கு. அது எது என்ற கவலை என்றும் அவளுக்கு இருந்ததில்லை. அதேபோல் தான் அவளுக்கு கோமு. அவளின் தாய் செண்பகம் கோமு பிறந்த சில நாட்களிலே நோய்வாய்ப்பட்டு இறந்து விட அன்றிலிருந்து தன் மகவை போல் அதை பராமரித்து பெயர் வைத்து உணவூட்டி குளிப்பாட்டி அதை பாதுகாப்பது அனைத்தும் மதை தான்.



அதுவும் வெளியில் செல்லும் போது அவளுக்கு வாயை அசைபோட்டே ஆகவேண்டும். அது எப்போதேன்றாலும் பரவாயில்லை. இல்லையென்றால் அவளின் மூளை சூடாகி வெந்து போய்விடும். அதனால் தான் அவள் எங்கு சென்றாலும் கோமுவை அழைத்துக் கொண்டு செல்வது. அதனுடன் வாயோயாமல் எதையாவது பேசிக் கொண்டே போவாள். என்ன பேசுகிறோம் என அவளுக்கும் தெரியாது. இவள் என்ன பேசுகிறாள் என கோமுவுக்கும் புரியாது.



ஆனால் இருவருமே அதை மற்றவர்களிடம் வெளிப்படுத்தாமல் இருப்பதில் மகா கெட்டிக்காரர்கள். மதை பேச ஆரம்பித்தாள் போதும் கோமு தன் தலையை அவள் புறம் திருப்பி அவள் பேசுவது புரிகிறது என்பது போலவே தலையை அசைப்பதும் அவளுக்கு பதில் கூறுவது போல் கத்துவதும் என அவர்கள் அட்டகாசத்தை தாங்க இயலாது.



இன்றும் அது போலவே தன்னுடன் வந்து கொண்டிருந்த கோமுவை பார்த்து சிரித்தபடி “ஏலே கோமு... இந்த அப்பத்தா நிசமாலுமே என்ர சமையலு கூடாதுன்னு சொல்லுதா...இல்ல வழமை போல என்ன சீண்டுதாலே... ஒன்னும் புரியலலே... நான் உப்பு புளியெல்லாம் சரியதான்லே போட்டேன்... அப்றோம் எதுக்குலே அங்கன சொல்லிச்சு...” என்று தலையை தட்டி யோசித்தபடி கோமுவிடம் கேட்டாள்.
இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாத கோமு எதற்கும் இருக்கட்டுமேன லேசாய் தொண்டையை செருமி வைத்தது.




அவளோ கோமு தனக்கு விடை அளிப்பது போல் பாவித்து “ஓஹோ... அப்போ கிழவி என் கூட விளையாடித்தான் பாத்திருக்கா... அந்த குந்தாணி கிழவிக்கு இருக்கிலே என்ர கையால..” என்று தன் அப்பத்தாவை கறுவியவள் ஆற்றின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு கால்களை தண்ணீரின் உள்ளே விட்டு விளையாடியவள் கோமுவையும் உள்ளே இறக்கி விட்டாள்.



அதுவும் வழமை போல் ஆழமற்ற அந்த இடத்தில் நனைந்து விளையாட ஆரம்பித்தது. ஆனால் மதையோ இத்தனை நேரம் இருந்த சிறுபிள்ளை தனம் மறைந்து ஆற்றில் தெரிந்த தன் பளீர் முகத்தையே உற்று அவதானிக்க ஆரம்பித்தாள்.



என்றும் அவளுக்கு தன் அழகின் மீது கர்வம் வந்ததில்லை. இந்த நொடி கூட இந்த பரிசுத்தமான ஆற்றின் தண்ணீரில் ஓவியமாய் தெரியும் தன் முகத்தை துளி கர்வமும் இன்றி ஏறிட்டவளின் மனதில் சிறு தடுமாற்றம். அதுவும் அதிகாலையில் வந்த கனவினை நினைத்து.



அது ஏதோ நிழலோவியமாய் மங்கலாய் என்னவென்று சரியாய் புரியாத மாதிரி ஓர் கனவு. அதன் காட்சிகள் எதுவும் அவளின் நினைவுகளில் இல்லை. ஆனால் இடையிடையே ரத்தம் தோய்ந்த கரம் போல் ஏதோவொன்று தோன்றிக் கொண்டே இருக்க அது தான் ஏனென்று அவளுக்கு புரிபடவில்லை.



பத்தொன்பது வயது நிரம்பிய அந்த பாவைக்கு அதை யோசித்து அறியும் பருவமும் இல்லை அதை மற்றவர்களிடம் சொல்லி விசாரித்து அறிய விருப்பமும் இல்லை.



தன் தலையை கைகளால் பிடித்துக் கொண்டு ‘எதுக்கு புள்ள உனக்கு இப்பிடியொரு கனவு வந்து தொலச்சது... விட கிடைக்காம உம்மால நிம்மதியா இருக்க முடியாதேலே...’ என அவளின் மனசாட்சி அவளுக்காய் பரிதாப்பட்டு கொண்டிருந்தது.



அவளோ ‘பேசாம போய்டுலே... நானே வேசனப்பட்டுக்கிட்டு கிடக்குத்தேன் நீ வேற...’ என்று அதை அடக்கி வைத்தவள் மனதை சரிபடுத்துவதற்காக ஆத்தினுள் குதித்து நீச்சல் அடிக்க ஆரம்பித்தாள்.



இங்கயே பிறந்து வளர்ந்த அவளுக்கு நீச்சல் கைதேர்ந்த கலையாகி விட்டிருந்தது. மனது பாரமாய் இருக்கும் பொழுதுகளில் இங்கு வந்தால் வீட்டிற்கு போகும் வரையிலும் இதில் தான் நீந்திக் கொண்டிருப்பாள். சுழன்றடிக்கும் சுழலை போலவே இக்கரையில் இருந்து அக்கரையை தொட்டு விட்டு வருவாள். அப்படி ஒரு வேகம்.



இன்றும் அது போல் நீந்திக் கொண்டிருந்தவள் நீருக்குள் இறங்கியதும் பசிப்பது போல் இருக்க மெதுவாய் நீரினுள் இருந்து எழுந்து கரைக்கு வந்து தன் தாவணி முந்தானையை கழற்றி காற்றில் உலர்த்த ஆரம்பித்தாள்.



அந்த பக்கம் பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாததால் எப்போதும் குளித்து விட்டு முந்தானையை காயவைப்பது போல் காய வைத்தவள் அதை விரித்து உலர்த்தும் போது அந்த நண்பகல் நேர வெயிலுக்கு சிறிதும் சம்பந்தமின்றி காற்று பலமாய் வீசியது.



அதில் அவளின் முந்தானை அவளை மீறி காற்று வீசிய பக்கம் பறந்து செல்ல அதை பார்த்து காற்றின் மேல் கோபம் கொண்டவள் இப்போது குறும்பு நிறைந்த சிறுபிள்ளையாய் மாறியிருந்தாள்.



இத்தனை நேரம் இருந்த மனச்சுணுக்கம் ஆற்று நீரில் நீந்தியதில் கரைந்து போனது போலிருக்க “கோமு என்கூட வாலே...” என்றபடி முந்தானை பறக்கும் பக்கம் வேகமெடுத்து ஓடினாள். அவளுடன் கோமுவும் ஓடியது.



ஒருவழியாய் முந்தானையை அண்மிக்கும் நேரத்தில் அவளின் பெண்மையின் வாசம் கமிழ்ந்த அந்த முந்தனையோ புரியாத புதிரான இவளை புரியாமலே புதிராக்கி போவதற்காய் காத்திருந்தவனின் முகத்தில் போய் ஓய்வெடுத்தது.



உச்சி வானத்தில் சூரியன் தீப்பந்தம் போல் ஜொலிக்க அந்த மதிய வெயிலில் ஓடி வந்தவளுக்கு உச்சி வெயில் மண்டையை தாக்கியதில் தன் முந்தானை மரக்கம்பத்தில் சுற்றி கொண்டிருப்பது போல் தோற்றமளிக்க அதை நோக்கி விரைந்தவள் “ஏலே செகப்பி... உமக்கு எம்புட்டு தகிரியம் இருந்த நீ இப்படி பறந்து வருவ.. உன்ன சீவிப்புடுவேண்டி.. சிறிக்கி மவளே...” தன் முந்தானையுடன் உரையாடியவாறு அதை எடுக்க முற்பட அந்தோ பரிதாபம் அவளால் அவளின் முந்தானையை எடுக்க முடியவில்லை.



கோபத்தில் அதை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணவளின் பிறை முகத்தின் முன்பு சூரியனின் ஒளியில் அழகாய் கவர்சியாய் தோன்றியது ஒரு ஆணின் முகம்.



ஆடவனின் முகம் பெண்ணவளின் மனதினுள் நுழைந்து தனக்கென ஒரு இடத்தை ஆக்கிரமித்து கொள்ள அதை புரியாத இளம் பாவையவளோ ஆடவனின் முன்பு தான் நிற்கும் நிலையறிந்து நெஞ்சம் வெட்கமும் பயமும் தயக்கமும் கலந்து அதிர மறுபுறம் திரும்பியவள் தன் பெண்மையை கைகளால் மறைத்துக் கொண்டாள்.



அவள் மறுபுறம் திரும்பியதில் அத்தனை நேரம் அவளின் மேனியின் வனப்பையும் அவளின் முக எழிலையும் பருகிக் கொண்டிருந்த அந்த ஆடவனின் முகத்தில் சிறு ஆட்சேபம்.



பெண்ணவளின் முன்னழகை ரசிக்க முடியாது போய்விட்டதில் சிறு சுணக்கத்தில் இருந்தவனுக்கு அவளின் பின்னழகு போதையூட்டியது.
அதையே ரசனை பார்வையுடன் வருடியவனின் செயலை கலைத்தது பெண்ணவளின் தேன் சொட்டும் குரல். மதுவில் முக்கி எடுத்தது போல் இருந்த அவள் குரலின் கானத்தில் தன் நாடி நரம்புகள் சிலிர்க்க அவளின் முக வாமத்தை ரசிக்க ஆவல் கொண்டான் அந்த ஆடவன்.




அவனின் ஆசை பற்றி அறியாத மதை “என்ர முந்தானையை தாரும்..” என்று அவன் புறம் தன் கையை நீட்ட ஆடவனோ அவளின் வெண்டக்காய் விரல்களை நீவிப் பார்க்க ஆசை கொண்டான்.



அதில் மெதுவாய் தன் ஆண்மையின் கம்பீரத்துடன் மிளிர்ந்த கரங்களை அவள் கரத்தின் மீது அழுந்த பதிக்க பெண்ணவளின் வதனத்தில் மின்சாரம் பாய்ந்தது போல் விதிர்விதிர்த்து போனாள்.



அச்சத்தில் அவள் பூவுடல் நடுங்கியது. விசுக்கென தன் கரத்தை இழுத்துக் கொண்டாள். முகம் இருண்டது. அவள் ஆடவர்களுடன் இதுவரை பழகியதுமில்லை அவர்களின் தொடுகையை பற்றி அறிந்ததுமில்லை.



மதையின் முகத்தில் கோபத்தின் சாயல். அந்நிய ஆடவனின் கரம் பட்ட தன் கைகளை வெறித்து பார்த்தவள் தான் நிற்கும் கோலம் மறந்து அவனின் புறம் சீற்றத்துடன் திரும்பியவளின் முகம் செந்தணலாய் ஜொலித்தது.



“எத்தன தகிரியம் இருந்தா என்ர கைய தொடுவலே... சீவிப்புடுவேன் சீவி... நான் யாருன்னு நெனக்குதவே மணப்பாற மதலே... என்ர கைய தொட்ட உம்ம சும்மா விடுவேன்னு கனா காணதேலே... எடுப்பட பயபுள்ள... ஆளையும் மொகரையும் பாரு... இஞ்சி தின்ன கொரங்காட்டம்...” அவனுக்கு வசை மழை பொழிந்தும் கூட அவன் அவள் மேல் இருந்த பார்வையை சற்றும் விலக்கமில்லை.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதில் உள்ளம் குறுகுறுக்க அவனை முறைத்தவளின் தேன் சிந்தும் செம்பவள இதழ்கள் அவனை வசைமாரி பொழிந்தது. ஆடவனோ அவளின் இதழ் அசையும் விதத்தை மெய்மறந்து ரசிக்க அதில் இன்னமும் சினம் துளிர்க்க அவனை வெட்டவா குத்தவா எனும் ரீதியில் காட்டத்துடன் பார்த்தவள் “முழிய பாரு முழிய... கண்ணு ரெண்டையும் நோண்டி எடுக்கணும்வே..” என்றவாறு அவனின் கரங்களில் தவழ்ந்து கொண்டிருந்த தன் முந்தானையை பிடுங்கி எடுத்தவள் “ஒழுங்கு மரியாதையா ஊரு போய் சேருவே...” என்றவாறு தன் கோமுவையை கைகளில் அள்ளிக் கொண்டு அங்கிருந்து ஓடினாள்.



மூச்சு வாங்கியது. அவனின் பார்வையை நினைத்து அப்போது வராத பதற்றம் இப்போது வந்து தொலைத்தது. கன்னங்கள் அவள் அனுமதியின்றி செவ்வானமாய் சிவந்தது. நெஞ்சத்தில் ஒருவகையான உணர்வின் இடம்மாற்றம்.



பக்குபக்கு என நெஞ்சு அடித்துக் கொள்ள படபட வென இமைகள் பட்டாம்பூச்சியாய் துடிக்க அவளுள் ஏதேதோ மாற்றங்கள்.
அந்த ஆடவனும் அவளின் நிலையில் தான் இருந்தான். அவளின் முந்தானை வாசம் இப்போதும் அவனின் நாசியை தீண்டி சிலிர்க்க வைத்தது. கள் குடித்த வண்டானான். மீண்டும் அந்த வாசனையை நுகர வேண்டும் போல் ஒரு வெறி.




பால் நிலா முகமும் முழு நிலா வதனமும் உடையவளை தன் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் போல் அவா. காலம் காலமாய் பழகியது போல் ஓர் மாயை.



தனக்குள் சிரித்துக் கொண்டான் பார்த்திபன். மதையவளின் மனதை வெல்லப்போகும் ஆடவன்.
மனதை வெல்லப்போகும் இவன் அவளையும் வெல்வானா இல்லை இழந்து விடுவானா.... காலனின் கரங்களில் விடை...
அந்த பெதும்பை வசியம் செய்து காலம் முழுவதும் அவள் கூட வாழ வேண்டும் எனும் ஆசை.




அவா அல்லது ஆவல் என்பது ஒரு நபரின் மனதில் உண்டாகும் எதிர்பார்ப்பினால் உருவாகும். ஆசை என்பது தான் ஒன்றை அடைய வேண்டும் என்ற உணர்வு. ஆவல் என்பது ஒரு வியாதி போன்று. தோன்றி விட்டால் தான் நினைத்ததை அடையாமல் விட மாட்டார்கள்.
ஆனால் தன் ஆசை நிறைவேறுமா என்பதில் தான் அவனுக்கு சந்தேகம். பார்த்திபன் தான் நினைப்பதை நடத்தியே தீருவான் தான். ஆனால் பெற்றோர் பாசம் சற்று அளவுக்கு அதிகம்.




ஆனாலும் கூட மனதினுள் சிறு எதிர்பார்ப்பு தன்னவர்கள் தன் ஆசைக்கு தடைவிதிக்க மாட்டார்கள் என.



இதுவரையிலும் எந்த பெண்டியர்களை பார்த்தும் தோன்றாத சில்லென்று உணர்வு. அவளின் பஞ்சு போன்ற கரங்களை தொட்ட போது ஏதோ உள்ளுக்குள் தாக்கிய அனுமானம். அவளின் சீற்றத்தை ரசிக்கும் மனோபாவம். அவளின் பெயரை கேட்டதும் ஏற்பட்ட பரவசம். அவளின் கருந்திராட்சை நயனங்களில் மூழ்கிப் போகும் எண்ணம். அவளின் உடல் வடிவின் மீது தோன்றிய மோகம்.



ஆனால் இது காமமா காதலா என அவனால் பிரித்தறிய முடியவில்லை. காமம் என்றால் அது தன் சரிபதியிடத்தில் மட்டும். காதல் என்றால் இனி காலம் முழுவதும் இவளே. யார் தடுத்தாலும்.



அவளை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தவன் அப்போது தான் சுட்டெரிக்கும் சூரியனின் கீழ் தான் நிற்பதையும் தன் உடலில் வியர்வையின் ஊற்று என்பதையும் கண்டு கொண்டவனாய் தன் தலையில் தட்டியவனுக்கு தன்னையே வசியம் செய்த அந்த காரிகையின் நினைவே அதிகமாய் வந்தது. யாரிடத்திலும் மயங்காதவனையே மயங்க வைத்து விட்டாளே.



அதன் பின்பு அங்கிருந்து அகன்றவனுக்கு தன் சிநேகிதனை சந்திக்க முற்பட்டோம் என்ற எண்ணமே நினைவில் இல்லாது போயிற்று.



யாரின் நினைவில் மற்ற அனைத்தும் மறக்க தடம் புரண்டு கிடந்தானோ அவளுக்குமே அந்த பெயரறியா ஆடவனின் நினைவே.



இருந்தும் நேரம் பறந்து கொண்டிருப்பதில் தன் முந்தானையை சரியாய் அணிந்தவள் கோமுவுடன் வீடு போய் சேர்ந்தாள்.
வீட்டு வெளி வாசலில் கணவனுடன் தன் மகளுடன் தங்கள் பேத்தியின் கல்யாணம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்த வள்ளிக்கண்ணு மதையின் சோர்ந்த தோற்றத்தை பார்த்து மகளிடம் கண்ஜாடை காட்ட அதை புரிந்துகொண்ட பொன்னி “புள்ள... என்னவே இம்புட்டு நேரம்... ஆத்துல நீச்சல் போட்டியாலே...” என்றபடி அவளின் கருங்கூந்தலை விரித்து விட அது அவளின் முட்டியின் கீழ் வரை நீளமாய் தொங்கி வழிந்தது.




அவளின் முடியில் ஈரம் காய்ந்திருப்பதை பார்த்தும் சமயல் கட்டினுள் நுழைந்து அவள் செய்து வைத்த சாப்பாட்டை ஒரு தட்டி இட்டு எடுத்து வந்து அவளின் பசி உணர்ந்து ஒவ்வொரு கவளமாய் ஊட்டி விட ஆரம்பிக்க அதை பார்த்து தோள்பட்டையில் இடித்தார் வள்ளிக்கண்ணு.
“அடியே பொன்னி... உன்ர மவளுக்கு கை இல்லையோ... நீ எதுக்குவே ஊட்டி விடுற... அது கைல கொடு...” என மகளை அதட்டுவது போல் பாசாங்கு செய்ய அதை கேட்டு கோபத்துடன் அப்பத்தாவை முறைத்தாள் மதை.




“ஏய்.. கிழவி... உமக்கு எதுக்குவே இம்புட்டு பொறாம... என்ர ஆத்தா எனக்கு ஊட்டி விட்டா உமக்கு என்னவே... உமக்கு வேணும்னா உம்ம புருஷன் கிட்ட கேட்டு சாப்பிடுவே... என்ர சாப்பாட்டில கண்ணு வைக்காம... இது கண்ணு பட்டா நான் நாளு முழுக்க வயித்து வலில தான் கெடந்து கஷ்டப்படனும்... நீ இங்கன திரும்பு ஆத்தா...” என்றவள் தன் ஆத்தாவை மறுபுறம் திருப்பி அவளின் கையால் உணவை உண்ட பின் தான் அங்கிருந்து எழுந்தாள்.



அதன் பின்பு துவைத்த வைத்த துணியை மடிப்பதும் துவைக்க வேண்டிய அனைத்து துணிகளையும் அலசுவதும் லட்சுமியிடம் சிறிது நேரம் வம்பு வளர்ப்பதும் கோமுவுடன் ஓடிப்பிடித்து விளையாடுவதும் என அவளின் நேரம் பறக்க அத்தனை நேரம் எதை மறைக்க செய்யாத வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாலோ கடைசிவரை அவளால் அவன் தன்னை பார்த்ததையும் மறக்கமுடியவில்லை தான் அவனை அத்தனை அருகில் பார்த்ததையும் மறக்கமுடியவில்லை.



அதற்கு மேல் அவனின் நினைவுகளில் சஞ்சரிக்க விருப்பப்படாமல் தூங்கியாவது பார்க்கலாம் என பாயை விரித்து கண்களை மூடி உறங்க முயன்றவளுக்கு என்ன செய்தும் அவனின் முகத்தை தன் மனதில் இருந்து அகற்றமுடியாமலே போய்விட்டிருந்தது.



இதுவரையிலும் யாரைப் பார்த்தும் சலனப்படாத மதையின் மனது இன்று யாரென்றே தெரியாத ஒரு ஆடவனிடத்தில் சிக்கித்தவித்தது.
அது தான் விதி எனும் போது அதை யாரால் மாற்றி அமைக்க முடியும்.




இங்கு தன் ஓட்டு வீட்டில் தரையில் பாய் விரித்து யாரின் நினைவில் பெண்ணவள் தவித்துக் கொண்டிருந்தாலோ அவன் தன் வீட்டின் திண்ணையில் குழப்பத்துடன் நடைபயின்று கொண்டிருந்தான்.



‘நாளை காலை உனக்கும் அங்கவைக்கும் நிச்சயம்’ என்ற தாயின் குரலே அவனின் செவியில் ஒலித்து அவனை தவிப்பிற்குள்ளாக்கியது.
இன்று காலை வரையிலும் அவன் அவனாய் தான் இருந்தான். ஆனால் மதையை சந்தித்த பொழுதில் இருந்து அவன் அவனாய் இல்லை. தன் எண்ணங்களும் செயல்பாடுகளும் சரியா என்று யோசிக்கும் திறன் மழுங்கியது போய் இருந்தது.




அங்கவையை அவனின் மாமன் மகள். அழகிய பெண் தான். அமைதியானவள் தான். ஆனால் அவளிடம் அவனுக்கு எந்த உணர்வுமே தோன்றவில்லையே.. இதை வீட்டினரிடம் உரைத்தால் திருமணம் செய்த பின் சரியாகிவிடும் என்றனர். ஆனால் அவனுக்கு அது சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அறவே இல்லை.



அவனால் மதையை மறக்க முடியும் என்று தோன்றவில்லை. இன்று தான் அதுவும் நண்பகல் வேளையில் தான் அவளை முதல் தடவை பார்த்திருந்தாலும் அதுவும் முந்தானையின்ரி அவள் பெண்மையின் இலக்கணத்துடன் மின்னுவதை பார்த்திருந்தாலும் ஏனோ அவளுடன் காலம் காலமாய் வாழ்ந்தது போல் இருந்தது அவனுக்கு. ஏனென்று புரியவில்லை.



ஒருவேளை அது தான் விதியின் விளையாடலோ...



உன்னை சூறையாட விதியும்
விதியின் ரூபத்தில் மனிதனும்
காத்திருக்க அதை தாண்டி நீ மீள்வாயா?

இல்லை மண்ணோடு மண்ணாய் ஆவாயா?


உறவாகும்....


தொடரும்....
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்....

முதல் அத்தியாத்தை பதிவு பண்ணி விட்டேன்..
எப்பிடி வந்திருக்கு என்று சரியாய் தெரியவில்லை.
லேசான தடுமாற்றம்...
அதனால் படித்து பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை தயவு செய்து என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்த அத்தியாயம் எப்போது என்று சரியாய் சொல்ல முடியாது.
எழுதி முடித்ததும் பதிவு செய்து விடுவேன்...
அதனால் பொறுமையுடன் காத்திருங்கள் டியர்ஸ்...

உங்கள் கருத்துகளுக்காக
ஆவலுடன்....
RJ


http://srikalatamilnovel.com/community/index.php?threads/ஆர்-ஜே-யின்-உயிர்-கொன்ற-காதல்-உறவாகுமா-கருத்து-திரி.122/
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்...

உங்களுக்கு கதை பிடிச்சிருக்கா இல்லையான்னு சொல்லுங்க பா...
அப்போ தான் என்னாலையும் தொடர்ச்சியா எழுத முடியும்...
இது ரெண்டாவது கதை தான் என்றாலும் ஏதோ முதல் கதை எழுதுவது போலவே இருக்கு...
உங்க எல்லோருடைய சப்போர்ட்டும் எனக்கு வேண்டும் டியர்ஸ்...
அப்போ நான் இன்னும் கொஞ்சம் பெட்டர் ஆ எழுதுவேன்...

அப்பிடியில்லன்னா உங்களுக்கு இந்த ஸ்டோரி பிடிக்கலையா....
நான் முதல்ல ஒரு த்ரில்லர் ஸ்டோரி தான் எழுத நினைத்தேன்...
பட் 'கள்வனே காதலனாக' வும் ட்விஸ்ட் அப்பிடின்னு வந்ததால இதை இப்போ எழுதுவோம் அதை இதுக்கு அடுத்ததா எழுதுவோம்னு நினைத்தேன்...

உங்களுக்கு இந்த ஸ்டோரி பிடிக்கலைன்னா சொல்லுங்க another ஸ்டோரி ஸ்டார்ட் பண்ணுகிறேன்...
இல்ல இந்த ஸ்டோரி பிடிச்சிருக்கின்னா ப்ளீஸ் மை டியர்ஸ் உங்களோட கருத்துகள் மூலம் எனக்கு ஆதரவு கொடுங்க ...
நான் கதையை சீக்கிரம் முடித்து விடுவேன்...

1524369162960.png

உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குதுப்பா...
இருந்தாலும் என்னைய தப்பா நினைக்காதீங்கப்பா...

சோ ப்ளீஸ் எல்லோரும் இனிமே உங்க கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
எது பிடிச்சிருக்கு பிடிக்கலைன்னு சொல்லுங்க...
நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்...

ஆவலுடன்
RJ

 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் 02



பார்த்திபனின் முகத்தில் குழப்பத்தின் சாயல். சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்களே என்பதில் வந்த லேசான கோபத்துடன் கூடிய முகச் சிவப்பு.



அவனின் முகத்தை அந்த கோபச்சிவப்பு கூட அத்தனை அழகாய் காட்டியது. சுற்றியிருந்தவர்கள் மாப்பிளைக்கு வெட்கம் வந்து விட்டது என ஏதேதோ பேசினர். அதை கேட்கக் கூட அவனுக்கு பிடிக்கவில்லை. ஏதோ உள்ளுக்குள் எரிச்சல் போல.



ஆனால் ஒன்றும் பேசாது அமர்ந்திருந்தான். பேசக்கூட தோன்றவில்லை. பேசினால் ஏதாவது மாறும் என்றால் பேசலாம். ஆனால் எதுமே மாறபோவதில்லை எனும் போது எதற்காக பேச வேண்டும் என்ற சலிப்பு.



ஆத்தாவை நிமிர்ந்து பார்த்தான். அங்கவையின் முகத்தை வழித்து திருஷ்டி சுற்றி கொண்டிருந்தார். அவரருகில் முகம்கொள்ளா புன்னகையுடனும் வெட்கச் சிரிப்புடனும் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் அங்கவை.



அழகி தான். வெண்ணிலா முகவடிவு பிறைநிலா நுதல் அஞ்சனம் பூசிய கருவிழிகள் அதன் மேல் பாலமாய் அமைந்த புருவங்கள் கனிகளின் சுவை மிஞ்சும் இதழ்கள் அதனுள் ஒளிந்திருக்கும் முத்துப் பல் வரிசைகள் காரிருள் நீள் குந்தல் வலம்புரி சங்காய் கழுத்து நளினத்துடன் மிளிரும் பெண்மையும் கொடியோ இடையோ என எண்ணுமளவு மெல்லிடையும் கொண்ட அழகுப் பதுமை.



வெள்ளைமுத்து மற்றும் செல்லியம்மாளின் ஒரே வாரிசு தான் அங்கவை.



எப்போதும் ஒற்றுமையாக இருக்கும் அந்த ஊரில் சிலவேளைகளில் ஜாதிக்கலவரங்களும் நடப்பதுமுண்டு.. அதில் பலரின் தலைகள் உருளுவதும் உண்டு... அதை எல்லாம் தீர்த்து வைப்பதற்காக அவ்வூர் மக்களின் வேண்டுகோளின் படி பஞ்சாயத்து கழகம் ஒன்றை ஆரம்பித்து அதில் வெள்ளைமுத்துவை பஞ்சாயத்து தலைவராவும் ஆக்கியிருந்தனர் அவ்வூர் மக்கள்.



அந்த ஊரிலே வசதி படைத்த குடும்பம் அவர்களுடையது தான். தலைமுறை தலைமுறையாக தங்கள் ஊரிற்கு நல்லது செய்யும் குடும்பம்.
வெள்ளைமுத்துவும் அவரின் பெயருக்கு ஏற்றார்போல் வெள்ளை மனது கொண்டவர் தான்... எப்போதும் ஊர் மக்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என துடிதுடிப்பாய் இயங்கும் அவருக்கு எதிர்மறையாய் அமைந்திருந்தார் அவரின் மனைவி செல்லியம்மாள்.



எப்போதும் பணம் பணம் என பேயாய் அலையும் அவருக்கு கணவன் ஊர் மக்களுக்காக பாடுபடுவதை பார்க்க அத்தனை வெறுப்பாய் இருக்கும்... ஆனால் அதை அவரிடம் காட்ட முடியாத இயலாமையால் தன் மனக்கவலைக்கெல்லாம் வடிகாலாய் தன் மகளை துவைத்து எடுத்து விடுவார்.



ஆண் பிள்ளைக்காய் ஏங்கி தவித்தவளுக்கு பெண் பிள்ளை பிறக்கவும் அதை தாங்க முடியாதவளாய் அந்த பிஞ்சுக் குழந்தையை கொல்ல துடித்தவளை கட்டுப்படுத்தும் வழியறியாது அவளை அடித்து தன் மகவை காப்பாற்றிய வெள்ளைமுத்துவை அன்றிலிருந்து அவளுக்கு பிடிக்காது போய்விட்டது..



ஆனால் அதை அவரிடம் காட்டாது தன் மகளிடம் காட்ட துவங்கியவருக்கு தெரியவில்லை அவளும் ஒரு உயிருள்ள ஜீவனென்று.
தான் பெற்ற மகளை உயிரற்ற பொருளாய் எண்ணி அவளை துவம்சம் செய்யும் செல்லியம்மாள் அதை தன் கணவனுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வதிலும் கை தேர்ந்தவளாய் இருந்தாள்.



ஒரு நாள் இப்படித்தான் தன் தாய் தன்னை அடித்து புரட்டவும் தான் என்ன தவறு செய்தோம் என காரணம் புரியாமல் பேந்த பேந்த விழித்த அந்த சிறு பிஞ்சு அதை தன் தந்தையிடம் கூற விளைய அதை கண்டு கொண்ட செல்லியம்மாளோ நெருப்பில் கம்பியை காய்த்து அதை அவளின் இடுப்பில் வைத்து விட்டார்.



அன்று முழுக்க வலி தாங்கமுடியாமல் கதறி கதறி அழுத அந்த இளம் மொட்டு தான் செய்த தவறினை கேட்க தாயிடம் சென்ற பொழுது அவரோ “ஒன் அப்பன் மேல இருக்குற கோபத்த தான்ல நான் உம்மேல காட்டுதுறேன்...” எனவும் அந்த ஐந்து வயது சிறுமிக்கு அது தெளிவாய் புரியவில்லை..



அது புரியும் அளவு அவளுக்கு வயதுமில்லை என்பதால் தன் தாய் ஏதோ தனக்கு புரியாத ஒன்றை சொல்கின்றாள் என எண்ணிக் கொண்டு இருந்தவளுக்கு வயது ஏற ஏறத்தான் அவர் அன்று சொன்னதன் அர்த்தம் புரிந்தது..



அன்றிலிருந்து தன் தாயிடம் நெருங்கி பழகாவிட்டாலும் தன் தாயின் மனக்கவலையை புரிந்து அவரின் துன்பத்திற்கு வடிகாலாய் தன்னை அவரிடம் முழுமனதாய் ஒப்படைத்து அவர் எவ்வளவு அடித்தாலும் ஒன்றும் பேசாது வாங்கிக் கொள்பவள் அதை தன் தந்தையிடமும் சொல்லாது மறைத்து விடுவாள்.



அந்த வயதிலே அவளிடமிருந்த பொறுமையையும் சகிப்புத்தன்மைமையையும் உணராத செல்லியம்மாளோ “இதுக்கு இம்புட்டு அடி அடிக்கிதேன்... ஒன்னும் பேசாம எரும மேல மழ பொழிஞ்ச கணக்கா அசையாம நின்னுக்கிட்டு கிடக்குது...” என அதற்கும் வசைமழை பொழிந்து விட்டுத்தான் விடுவார்.. அந்தளவு கணவன் மேல் அவளுக்கு வெஞ்சினம்..



ஆனால் வெள்ளைமுத்துவோ தன் மகளை கண்ணுக்குள் வைத்து தாங்கினார். ஏகப்பட்ட சொத்துக்கு அவள் வாரிசு என்ற எண்ணம் அவளுக்கு வராதபடி செய்து ஊர் மக்களுக்காய் அவளை வளர்த்தார்.



அதனாலேயே கொடை கொடுக்கும் பாரி மன்னனின் மகளின் பெயரான அங்கவை என்ற பெயரை தன் மகளுக்கு சூட்டினார். அது செல்லியம்மாளுக்கு பிடிக்காவிடிலும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை... அவர் தான் அவளை பெயர் சொல்லி அழைப்பதே இல்லையே...
‘சனியனே... மூதேவி... அடியே சிறுக்கி...’ என ஒவ்வொரு நேரத்துக்கும் பல பேர் கொண்டு அழைக்கும் அவருக்கு , (அதுவும் கணவன் இல்லா நேரங்களில் மட்டுமே...) இவளுக்கு என்ன பெயர் வைத்தால் எனக்கென்ன என்ற நினைப்பு..



இப்படிப்பட்ட சற்றும் பாசமில்லா தாய்க்கும் பாசமுள்ள தந்தைக்கும் மகளாய் பிறந்தவள் தான் அங்கவை.. சிறுவயதிலிருந்து தாயன்பிற்காய் ஏங்குபவள்.. தந்தை எவ்வளவு தான் பாசத்தை கொட்டினாலும் அது தாயன்பிற்கு ஈடாகுமா என்ன... அப்படிப்பட்ட அந்த இளம் பேதைக்கு இருக்கும் ஒரே ஒரு கனவு தன் மாணாளன் தனக்கு தாயுமானவாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான்.
அது நிறைவேறுமா என்பது கடவுளின் கைகளில்.



பரிசம் போட்டு பூ முடிப்பதற்காய் அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்க அங்கு வந்த வெள்ளைமுத்து தன் மகளின் தலையை வாஞ்சையாய் கோதிக் கொடுத்தவர் “என்ர மவள் எப்போதும் சந்தோசமா இருக்கனும்வே...” என்றார் தன் தங்கை முத்துகுமாரியை பார்த்து. பார்த்திபனின் அன்னை.



தன் உடன் பிறந்தவனின் கைகளை பற்றி தன் கைகளுக்குள் ஆறுதலுடன் முற்றுகையிட்டவர் “அவ என்ர மருமவ... அவ கண்ல இருந்து தண்ணீ வராம நான் பார்த்துக்கிதே அண்ணே... என்ர மவன் அவள தங்கமா தாங்குவான்லே...” என்றார் கண்களில் துளிர்த்த கண்ணீருடன்.



அவருக்கு நன்றாய் தெரியுமே. செல்லியிடம் அவள் படும் இன்னல்கள். ஆகையால் தான் தன் மருமவளை தன்னுடன் இட்டு செல்ல முயன்றார். அதற்கு எது தடையாய் இருந்தாலும் அதை முறியடித்து விடும் வெறி. தன் மவனாய் இருந்தாலும்...
அந்த பெதும்பின் மனவேதனையை அறிந்தவராயிற்றே...



அதற்குள் நல்ல நேரத்தில் சாஸ்திரி வந்திருக்க சுற்றத்தார் அனைவரின் முன்பும் இருவருக்கும் பரிசம் போட்டு பூ முடித்துக் கொள்ள அத்துடன் சேர்ந்து கல்யாணத்திற்கான நாளும் குறிக்கப்பட்டது.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வைகாசி மாதம் பத்தாம் நாள் இருவீட்டாரின் விருப்பத்தின் பேரிலும் சங்கரலிங்கம்-முத்துகுமாரியின் இளைய மகனான பார்த்திபனுக்கும் வெள்ளைமுத்து-செல்லியம்மாளின் ஒரே மகளான அங்கவைக்கும் பெரியோர் முன்னிலையில் நிச்சயிக்கப்படுகிறது...



என்ற சாஸ்திரியின் கூற்றில் பார்த்திபனின் உடல் ஒரு கணம் விறைத்து மீண்டும் சமநிலைக்கு வந்ததது.



அங்கவை ஆனந்தத்தின் பிடியில் சிக்கி முகம் எல்லாம் சிவந்து செங்கொழுந்தானது. கடைக்கண்ணால் தன் மாமனை பார்த்தாள்.
அவன் இவள் புறம் திரும்பாது இறுகிப் போய் அமர்ந்திருந்தான். அதில் வாடிப்போனது அப்பெதும்பின் முகம். அதை பார்த்து தன் மகனின் காலை சுரண்டி அவன் திரும்பியதும் அவனை முறைத்து வைத்தார் முத்துகுமாரி.




தன் மருமவளின் முகவாட்டத்தை அந்த மாமியாரினால் தாங்க இயலவில்லை. அவளின் சரிபாதியோ அவளை கண்டு கொள்ளும் நிலையில் இல்லை.



ஆத்தாவின் சுரண்டலில் அவர் புறம் திரும்பியவன் அவரின் முறைப்பை கேள்வியை நோக்கினான்.
கலியாணம் வேண்டாம் என்றவனை இம்புட்டு தூரம் இழுத்து வந்துவிட்டு இன்னமும் எதற்கிந்த முறைப்பு என்று அவர்பால் அவனின் வெஞ்சினம் அதிகரித்தது.




“என்னவே உன்ர பொஞ்சாதிய பார்க்கமாத்தியா... பாரு புள்ள முகமே வாடி போய்டிச்சிவே...” மருமவளுக்கு பரிந்து பேச அந்த க்ஷணமே அவள் மேல் இனம்புரியா வெறுப்பொபோன்று உருவானது அவனுக்கு.



பார்த்திபன் எதற்கும் அஞ்சாதவன் தான்.. துணிந்தவன் தான்.. ஆனால் தன் குடும்பம் மேல் கொண்ட அதீத அன்பினால் அவர்கள் பேச்சை என்றும் தட்ட விரும்புவதில்லை.



இன்றும் அது போலவே... அவன் தட்ட விரும்பவில்லையா.. இல்ல தோன்றவில்லையா என்பது அவனே அறியா ஒன்று.



அவன் நினைத்திருந்தால் தாம்பூல தட்டுகள் மாற்றும் முன்பே எழுந்து சென்றிருக்கலாம். ஆனால் அவன் போகவில்லை. காரணம் அவன் அறிய விரும்பவில்லை. ஒருவேளை அறிய முற்பட்டிருக்கலாமோ...



ஆத்தா அத்தனை தடவைகள் எடுத்து சொல்லியும் அவன் அவள் புறம் திரும்பி பார்த்தானில்லை...



அதில் மெல்லிய கோடாய் அவளின் நெஞ்சத்தில் சிறு வலி. கனியமுதை ஒத்த அவளின் அருண இதழ்கள் துக்கத்தில் மடிந்தது. கண்களில் வைரம் போல் பளபளத்த கண்ணீரின் கரை.



ஆனால் அழவில்லை. அழவும் பிடிக்கவில்லை பெண்ணவளுக்கு. அழுகையை மிகவும் வெறுத்தாள். இத்தனை நாளாய் தனிமையில் அழுது கரைந்தது போதும் என்று எண்ணினாளோ...



தனக்குள் உழன்றவளையே கண்களில் தோன்றிய இகழ்ச்சியுடன் பார்த்தவாறு ஓரமாய் நின்று கொண்டிருந்தாள் செல்லியம்மாள்.
பிடிக்காத மகவிற்கு வந்த சுகபோக வாழ்க்கையை எண்ணி உள்ளுக்குள் காந்தினார். ஆனால் வெளியில் கமுக்கமாய் புருசனுடன் சேர்ந்து வந்தவர்களை இனிமையாய் வரவேற்றுக் கொண்டிருந்தார்.




சிலர் வெளியில் கரடுமுரடாய் இருப்பர் ஆனால் இனிமையானவர்கள் இன்னுமொரு சிலர் பார்ப்பதற்கு இனிமையாய் தெரிவார்கள் ஆனால் விஷம் போன்றவர்கள். அந்த வகை தான் செல்லியம்மாள்.



தாங்கள் பத்து மாதங்கள் சுமந்து பெற்ற மகவினை எண்ணி பெருமைப்படும் இவ்வுலகில் மகவிற்கு கிடைக்கவிருக்கும் வாழ்க்கையை எண்ணி உள்ளுக்குள் புழுங்குபவர்களும் இருக்கின்றனர். அதில் ஒருத்தி தான் செல்லியம்மாள்.



தன்னை பெற்றெடுத்த தாயின் பார்வையை உணராதவளாய் தன் மாமனையே விழியகற்றாமல் பார்த்து வைத்தாள் அங்கவை.
அவர் பார்க்கவில்லை என்றால் என்ன தான் பார்ப்போமே என்ற எண்ணம். இதுவரையிலும் இருவரும் அரிதாய் தான் பேசிப்பழகி இருந்தனர்.




அவர்களின் ஊரில் சொந்த அத்தை பையன் என்றாலும் சரி மாமன் மகனென்றாலும் சரி யாரும் வயது வந்த பெண்களுடன் பேசிப்பழகக் கூடாது.



அவர்கள் கட்டிக்கொள்ளும் மணவாளனை கூட திருமணத்தின் போது தான் பார்க்க வைப்பார்கள். ஆனால் இங்கு நிச்சயம் செய்ததால் மட்டுமே அங்கவைக்கு இந்த வாய்ப்பு கிட்டியது.



தேய்பிறையாய் இன்றி முழுநிலவாய் ஜொலிக்கும் முகம் எந்த கெட்ட பழக்கமும் இல்லையென்பதற்கு எடுத்துக்காட்டாய் புது ரோஜாவை மிளிரும் இதழ்கள் வெள்ளி நட்சத்திரமாய் ஜொலிக்கும் பார்வைகளும் அதனுள் இருக்கும் கூரிய அம்பு போன்ற கருவிழியும் அரிதாய் இதழ் பிரிக்கும் போது தோன்றும் கவர்ச்சியான புன்னகையும் வேலை செய்து முறுக்கேறிய உடல்வாகும் வெயிலில் சுற்றி திரிவதால் சிவந்த அவனின் மேனியின் ஆதீத சிவப்பு... ஆகமொத்ததில் ஆணழகன்... ஆண்சிங்கமும் கூட...
வில்லாய் வளைந்திருக்கும் புருவங்கள் இன்று லேசாய் சுருங்கி வளைந்ததிலே அவன் ஏதோ யோசனை செய்கிறான் என்பதை புரிந்து கொண்டாள் அங்கவை.




இதுவரையிலும் பேசிப்பழகாத தன் மாமனின் முகத்தை வைத்தே எப்படி அவனின் செயலை கணித்தோம் என்பது அவளுக்கு புரியவில்லை. சிரிப்பாய் வந்தது. சிரித்தால் சுற்றியிருப்போர் என்ன நினைப்பார்களோ என்று வாயை இறுக மூடிக் கொண்டாள்.
ஆனாலும் அடக்கமுடியாமல் தன்னை எண்ணியே சிரித்தவளின் இதழ்கடை அழகாய் துடித்தது. வெட்கத்தில் முகம் தகதகத்தது வைரம் போல்.




பெண்டுகளுக்கு இயல்பாய் தோன்றும் உணர்வுகள்.. தன் ஆடவனை எண்ணும் போது. அவர்களை பற்றி அறிய முயலும் போது. அவர்களை ரசிக்கும் போது. அதுவும் கள்ளத்தனமாய். அங்கவையின் நிலையும் அது தான்.



சுற்றியுள்ளோரை வைத்துக் கொண்டு அவளால் அவனை நேரடியாய் பார்வையிட முடியாது. அதனால் கடைக்கண்ணால் அவனை நோக்கினாள்.



அதேசமயம் எதற்கோ திரும்பிய அவனின் பார்வையும் அவளையே நோக்கியது.



பார்வைகள் பின்னியது. ஆனால் மனது நிர்மலமாய் இருந்தது. அதனால் திரும்பிக் கொண்டான்.



நேற்றைய மதியத்தை நினைத்துக் கொண்டான். அவளின் கடைக்கண் பார்வையுடன் கலந்த தன் விழிகள் அவளிடம் முழுமனதாய் சிக்கியதை எண்ணிக் கொண்டான். ஏக்கமாய் இருந்தது.



இங்கிருந்து செல்லத்துடித்தன அவனின் கால்கள். உள்ளம் அவளை பார்ப்பதற்காய் பரபரத்தது. ஆனால் இன்று அவளை காணமுடியுமா என்று தெரியவில்லை. ஆதலால் ஏக்கத்தில் வாடியது அவனின் மனது.



அவளுக்கு தன்னை நினைவிருக்குமா... இல்லை மறந்து விடுவாளா... நேற்றே அத்தனை கோபம் கொண்டாள்.. தன்னை மறந்திருப்பாளோ... அவளின் நினைவில் மூழ்கினான்.



அவனுக்காய் உறுதியாக்கப்பட்டவளோ மாமனின் பார்வையில் படக்கென தலை கவிழ்ந்தாள். நாணத்தில் இமைகள் படபடவென அடித்துக் கொண்டது. மேனியிலுள்ள உதிரம் முகத்தில் பாய்ந்ததை போல் முகம் ரத்த நிறத்திற்கு மாறியது.



ஆனால் அவன் கண்டுகொள்ளவில்லை. அவன் மனதில் தன் மனதை கொள்ளை கொண்ட மதையவளின் நினைவுகள். அவளின் நினைவு தன்னை முழுங்கும் போது அவளின் பெயரை மெதுவாய் உச்சரித்துக் கொள்வான். ஏதோ அவளே உடன் இருப்பதை போல் தோன்றும் ஓர் மாயை. அது அவனுக்கு பிடித்தமாய் இருந்தது.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பார்த்திபனின் தவிப்பை உணர்ந்தோ என்னவோ அந்த சபை கலைய ஆரம்பித்தது. அதை பார்த்து நிம்மதி பெருமூச்சொன்றை யாருமறியாமல் ரகசியமாய் வெளியிட்டான்.



முத்துகுமாரியும் சங்கரலிங்கமும் விடைபெற்று கிளம்ப பார்த்திபனின் உடன்பிறந்த தமையன் வைரமுத்துவும் அவனின் மனையாள் சீதையும் அவர்களுடன் விடைபெற்று கிளம்ப சம்பிரதாயத்திற்காக அவனும் அனைவரிடமும் விடை பெற்று வெளியேறினான். அவனின் நடையில் அத்தனை அவசரம்.


தன்னை வசியம் செய்த வசியக்காரியை காண விரும்பினான்...



ஆத்தாவின் அருகில் சென்று “ஆத்தா... ஒரு சோலி கெடக்கு முடிச்சிட்டு வந்துபுடுதேன்...நீங்க வீட்டுக்கு போய்க்கோங்...” என்றவன் அங்கிருந்து விரைந்தான்.



அவனின் நடையையும் அவனின் அவசரத்தையும் கண்டு அவனை கூர்மையாய் பார்த்து வைத்தார் முத்துகுமாரி.
மவனை பற்றி சகலமும் அறிந்தவர். இதுவரையிலும் அவரிடம் கேட்காமல் எதுவும் செய்தது கிடையாது. பெற்றவளின் மீது அளவுகடந்த பாசமும் மரியாதையும்.




ஆனால் இன்று தன்னை நேருக்கு நேர் பார்க்காது முகம் திருப்பியபடி பேசிய பார்த்திபனின் முகத்தில் இருந்தே அவனின் மனதை கணித்து கொண்டார்.



ஆனால் அவனிடம் எதுவும் கேட்டு இதை ஊதிபெரிதாக்க முயலவில்லை. இன்னும் கொஞ்ச நாட்களில் அவனே பழையபடி மாறிவிடுவான் என்ற நம்பிக்கை.



அது தன் வளர்ப்பின் மேல் அவர் கொண்ட நம்பிக்கை. அந்த நம்பிக்கையை காப்பானா?...



நேற்று போல் இன்றும் அவன் வருவானா எனும் சிறு எதிர்பார்ப்பில் காவேரி ஆற்றில் தான் வழக்கமாய் அமரும் இடத்தில் தன் கோமுவுடன் அமர்ந்திருந்தாள் மதை.



வந்து வெகு நேரமாகி விட்டிருந்தது. அவனை காணாமல் கண்களில் ஏக்கத்தின் சாயல். ராத்திரி முழுவதும் தூக்கம் வராமல் புரண்டதில் இன்று அவனை பார்த்தே ஆகவேண்டும் போல் உள்ளுக்குள் ஆவல்.



பாயை விரித்து படுத்த மறுகணமே தூங்கிப் போகும் மதைக்கு இது எல்லாம் விசித்திரமாய் தோன்றியது.



இந்த திடீர் மாற்றத்தின் காரணம் அந்த பெதும்பிற்கு புரிபடவில்லை.



ஏனோ அவஸ்தையை இருந்தது. குற்றம் செய்வது போல் உள்ளம் குறுகுறுத்து. ஆனால் என்ன பிழை செய்தோம் செய்கிறோம்... என அவளால் பிரித்தறியமுடியவில்லை.



இன்று காலை கூட அப்பத்தா எவ்வளவு வம்பளந்தும் கூட பதில் பேச தோன்றாது அமர்ந்திருந்தாள். தன்னை சுற்றியுள்ள அனைத்தும் வண்ணமயமாய் காட்சி அளிப்பது போல் ஒரு விசித்திர தோற்றம்.



அதே போல் அவர்களும் தன்னை விசித்திரமாய் பார்ப்பதை அறியவில்லை அவள்..



அப்போது பேசிய அப்புச்சியின் வார்த்தைகள் கூட நினைவில இல்லை. ஆனாலும் இப்போது நியாபகப்படுத்திக் கொண்டாள்.



‘நாட்டாமையின் மகள் அங்கவைக்கு இன்று பரிசம் போட வந்திருக்கினறாம்’ என்ற அப்புச்சியின் பேச்சு இப்போது தான் நினைவில் வந்தவளாய் அங்கவையை எண்ணி அவள் இதழ்களில் மெல்லிய புன்னகை படர்ந்தது.



அவள் அங்கவையை பற்றி கேள்விப் பட்டிருக்கிறாள்... ஆனால் இதுவரை பார்த்ததில்லை. ஊர் திருவிழாக்களின் போது சில சமயம் பார்க்கவும் முயற்சித்திருக்கிறாள் ஆனால் பயன் என்னவோ பூஜ்யம் தான்.



ஊரை விட்டு ஒதுக்குபுறமாய் இருப்பதாலோ என்னவோ அவளுக்கு பெரிதாய் யாரை பற்றியும் தெரியாது. ஊரிற்குள் இருந்த பாளர் பள்ளிக்கும் கூட அவள் போகவில்லை. படிக்கவும் விருப்பமில்லை.



அந்த காலத்தில் படிப்பு என்பது அத்தியவசிமற்றதாய் காணப்பட்டது. அதுவும் பெண்களுக்கு படிப்பதெற்கு என கேட்கும் காலம்.
அடுப்படியில் இருக்கப் போகிறவளுக்கு எதற்கு படிப்பு என்ற அடிமட்ட தனம். அந்த பொழுதுகளில் அனைவரினதும் எண்ணங்களும் கூட அதுவாகவே இருந்தது.




ஊரிற்குள் செல்லாததால் அவளுக்கு அங்கவையை பற்றி எதுவும் தெரியாது. ஆனால் மற்றவர்களின் பேச்சில் இருந்து அவள் அறிந்து கொண்டது அவள் பாசமான பெண் என்றும் பாசத்திற்கு கட்டுபடுபவள் என்றும்...



அது உண்மை தான். சிலரை அதட்டி, உருட்டி, அடித்து, மிதித்து, கட்டுக்குள் கொண்டு வரலாம்.. இன்னும் ஒரு சிலரை பாசத்தால் மட்டுமே கட்டிற்குள் கொண்டு வரலாம்.



அந்த வகை தான் அங்கவை. அவளிற்கு தாயின் மேல் பாசம் அதிகம் அதனால் தான் அவள் தன்னையே அவரிடம் ஒப்படைத்தாள். அவரின் வெஞ்சினத்தை போக்கிக் கொல்வதற்காக...



அங்கவை பற்றி எண்ணியவள் ‘அவுக தங்கமான மனசுக்கு எப்போதும் நல்லாவே இருப்பாக... இருக்க வைய்யு கடவுளே...’ என வேண்டிக் கொண்டாள்.



இரு பெண்டுகளும் குணத்தில் தங்கமானவர்கள் தான். காதல் என்று வந்து விட்டால் அப்போதும் இந்த குணம் மாறாது இருக்குமா என்பது ஆண்டவனின் விளையாடலில்...



அங்கவை பற்றிய யோசனையில் மூழ்கியவள் நேரம் கடந்து கொண்டிருக்கவும் “கோமு... போவம்வே... நாளியாவுது..” என்றபடி கோமுவை இடையில் ஏற்றியவள் அதனுடன் பேசியபடி நகர்ந்தாள்.



“ஏய்... புள்ள... ஏய்... உன்னத்தான்வே... நில்லுலே...” அதட்டியது ஒரு கணீர் குரல்.



“யாருவே இது.. இப்படி கூப்பாடு போறது...” முணுமுணுத்தவாறு திரும்பியவளின் முன்பு கம்பீரமாய் நின்றிருந்தான் பார்த்திபன்.



அவனை எதிர்பாராமல் பார்த்ததில் அவளின் கண்கள் அவனை ஆசையுடன் உள்வாங்கிக் கொண்டது.


இருந்தாலும் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.


அவள் முகத்தில் இருந்து எதையும் படிக்க முடியாது போனதில் அவனுள் சிறு கடுகடுப்பு.
 
Status
Not open for further replies.
Top