All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உங்களது கருத்துக்கள்..☺☺

Puneet

Bronze Winner
சஞ்சுவோட குறும்ப துறுதுறுப்ப ரொம்பவே மிஸ் பண்ணோம் சிஸ்.. அவனுக்காக ஒரு டீசர குடுத்து எங்கள ஹாப்பி ஆக்கிட்டீங்க..:love::love::love:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஞ்சுவை நினைவிருக்கா..😁😁
அவர்களுக்காக என்சாய்..😋

############

அந்த ஆற்றைக் கடக்க மரக்கட்டைகளால் ஆன தற்காலிக பாலம் அமைப்பதற்கான வேலைகளை மரதச்சர்கள் செய்துக் கொண்டு இருந்தனர். பைபாஸ் சாலை போடுவதால் சாலையோரம் இருந்த மரங்களை அரசாங்கம் வெட்டி விடவும், அதைத் தடுக்க முயலாத சஞ்சய்.. அந்த மரத்துண்டுகளை அந்த அதிகாரிகளிடம் கேட்டு இலவசமாக எடுத்து வந்தான். மரம் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவன்.. ஏன் அந்த மரத்துண்டுகளை அரசாங்கத்திடம் இருந்து இலவசமாக வாங்கினான் என்று தெரியவில்லை.. மித்ராவிற்கு முதலில் புரியவில்லை. அரசாங்கம் வெட்டிய மரத்துண்டுகளைக் கொண்டு அரசாங்கத்தின் செலவில் இந்த பாலம் அமைக்க ஏற்பாடு செய்ய அவன் ஏற்பாடு செய்த பின்பே அவனது நண்பர்களுக்கு விசயம் புரிந்தது. வழக்கம் போல் தலையில் அடித்துக் கொண்டு சிரிக்க தான் முடிந்தது.

மரத்தச்சர்கள் மும்மரமாய் பாலம் கட்டுவதற்காக மரத்துண்டுகளைச் செதுக்கிக் கொண்டு இருந்தனர்.

சிறிய அளவு நீராக சலசலத்து ஓடிக் கொண்டிருக்கும்.. அந்த நீரோடை சிறு மழைப் பெய்தாலும் இராட்ச பலத்துடன் பெருக்கெடுத்து ஓடும்.. அந்த நீரோடையை இரசித்துக் கொண்டிருந்த மித்ரா.. சற்று தொலைவி்ல் வேலைகளைச் சரிப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷிடம் பார்வையால் அலசியபடி..

“கிருஷ்… வேர் இஸ் சஞ்சு..” என்றுக் கேட்டாள்.

கிருஷ்.. “இங்கே தான் நின்னுட்டு இருந்தான்.. இப்போ எங்கே போனான்னு தெரியலையே..!” என்று அவனும் சுற்றும் முற்றும் பார்த்தான்.

மித்ரா.. “ஓகே.. நானே தேடிப் பார்க்கிறேன்..” என்று பார்வையால் அலசியபடி அங்கு தெரிந்த ஒற்றையடி பாதையில் நடந்தாள். சிறிது தூரத்திலேயே குடிசை ஒன்று தென்படவும், திரும்பி செல்ல எதானித்தாள்.

அப்பொழுது இருமல் சத்தத்துடன்.. “ஆன்டி… பெரிசாவே எரிய மாட்டேன்குது.. ஓரே புகை கண் எரியுது ஆன்டி..” என்ற சஞ்சயின் குரல் கேட்டது.

மித்ரா.. ‘என்ன சொல்கிறான்.. இவன்..!’ என்றுத் திகைத்தவாறு சென்றுப் பார்த்தவளுக்கு சிரிப்பு பிறீட்டு வந்தது. முயன்று அடக்கியபடி.. சஞ்சயைப் பார்த்தாள்.

அங்கே அந்த குடிசை வீட்டின் முன் இருந்த அடுப்பின் மேல் பாத்திரம் இருக்க அந்த அடுப்பிற்கு முன் குத்துக்காலிட்டு அமர்ந்துக் கொண்டு ஊதுக்குழலால் ஊதிக் கொண்டு இருந்தான். பழக்கமில்லாத இந்த வேலையில் விறகு அடுப்பில் இருந்து வரும் புகையில் கண் எரிச்சலில் இருகண்களும் சிவந்து நீர் வழிய.. மூக்கிலும் புகுந்து எரிச்சல் தர.. அந்த எரிச்சல் தாங்காமல் கண்ணை மூடிப் பின் ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து.. ஊதியவாறு இருந்தான்.

‘இவனுக்கு எதற்கு இந்த வேலை..!’ என்று நினைத்த மித்ராவினால் அதற்கு மேல் பொங்கிய சிரிப்பை அடக்கமுடியவில்லை.. சத்தமாக சிரித்தாள்.

இரண்டு கண்களையும் கசக்கி கொண்டு இருந்த.. சஞ்சய் அவளின் சிரிப்பு கேட்டு.. சிரமப்பட்டு ஒற்றைக் கண்ணைத் திறந்துப் பார்த்தான். அங்கு மித்ரா நின்றுக் கொண்டு இருப்பதைப் பார்த்ததும்.. தன் இருகையால் அந்த பாத்திரத்தை மறைத்தால் போன்று நீட்டி விரித்து வைத்துக் கொண்டு..

“நோ...மித்ரு.. பெட்டர் ஆஃப் என்பதால் என்னால் இதில் எல்லாம் ஆஃப் தர முடியாது..” என்றான்.

“வாட்… என்னடா.. உளர்கிற..!” என்றாள்.

“உளறலா.. மீன் குழம்பு மித்ரு.. அந்த ஆத்துல ஃபீஷ் பிடித்து, அந்த வுட்பீஸஸ்ல கொஞ்சம் சூட் போட்டுட்டு வந்து இந்த வீட்டு ஆன்டி கிட்ட கொடுத்தேன். அவங்க மீன் குழம்பு வைத்து தரேன் சாப்பிட்டு போகச் சொன்னாங்க அதுதான் இங்கேயே செட்டில் ஆகிட்டேன். அதுக்குள்ள இந்த ஆன்டியோட க்ரேன்ட் சைல்ட் முழிச்சுருச்சு, அதுதான் என்னை அடுப்பைப் பார்த்துக்க சொல்லிட்டு ஆட்டி தூங்க வச்சுட்டு இருக்காங்க..” என்றுவிட்டு அடக்கமாட்டாமல் அச்சூ.. என்று பெரியதாக தும்மினான்.

மித்ரா.. “சரி கொடு நான் கொஞ்சம் ட்ரை செய்துப் பார்க்கிறேன்..” என்கவும்.. “நோ.. நோ… நீ தனியா ஃபீஷ் பிடித்திட்டு வந்து செய்..” என்றான். ஆனால் அவளின் உள்ளத்திற்கு தெரியும் ஏன் மறுக்கிறான் என்று..! ஆனாலும் வம்பிழுக்க ஆசைப்பட்டு.. “நீயெல்லாம் ஹஸ்பென்ட்டா.. யார் கிட்டயும் சொல்லிராதே நம்ப மாட்டாங்க..” என்றாள்.

ஆனால் சஞ்சயோ நொடித்துக் கொண்டான். “க்கூம்.. எல்லோரும் நம்பிராங்க… யங் கேர்ள்ஸ் என்னை அங்கிளைப் பார்க்கிற மாதிரி பார்க்கிறாங்க.. ரொம்ப அவசரப்பட்டுடேனோன்னு இருக்கு..” என்று கன்னத்தில் சோகமாய் கை வைத்துக் கொண்டான். மித்ரா கோபத்தில் அவனது கழுத்தை நெறிப்பது போல் சைகை செய்துவிட்டு.. சற்று தள்ளியிருந்த பாறை மேல் அமர்ந்துக் கொண்டு அவன் அடுப்பை எரிக்கும் அழகைப் பார்த்தாள்.

அவளிடம் பேசிக் கொண்டே ஊதியவன்.. ஊதுவதற்கு பதில் உறிஞ்சு விடவும் பலமாக இரும ஆரம்பித்தான்.

உள்ளே இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது.. “என்ன தம்பி.. என்னாச்சு..!”

சஞ்சய்.. “முடியல.. ஆன்டி..”

“நல்லா ஊதுங்க, புளித்தண்ணீ நல்லா கொதிச்சு புளி வாசனை போகணும்..” என்றாள்.

உடனே அந்த அடுப்பை எதிரியைப் பார்ப்பது போல் பார்த்தவன்.. தன் முழுபலத்தையும் ஒன்று திரட்டி.. ஊஃப் என்று ஊதினான். அதில் அந்த அடுப்பு அணைந்துவிட்டது.

“அச்சச்சோ..!” என்று சஞ்சய் தலையை சொறிய… மித்ரா சிரிப்பு தாங்கமுடியாமல் அந்த சின்ன பாறையில் இருந்து சரிந்து தரையில் அமர்ந்துவிட்டாள்.

உள்ளே இருந்து அந்த பெண்மணியின் குரல் மறுபடியும் கேட்டது..

“என்னாச்சு தம்பி..!”

“ஒன்றுமில்லை… ஆன்டி..” என்று விட்டு ஊதுக்குழலை எடுத்தவன்.. சிறிது சிறிதாக ஊதினான். உடனே விறகும் எரியத் தொடங்கியது ஆனால் சாம்பல் பொறி பறந்து சஞ்சயின் கண்களில் பட்டுவிட்டது.

“ஷ்ஷ்…” என்று ஊதுக்குழலைக் கீழே போட்டிவிட்டு சஞ்சய் எழுந்துவிட்டான். மித்ரா தான் பதறிப் போனாள்.

சட்டென்று அடுப்பிற்கு அருகில் இருந்த பாத்திரத்தில் இருந்த நீரை எடுத்து அவனது முகம் பற்றி கண்களைக் கழுவி விட்டாள். மித்ரா உடனே செய்ததால்.. சரியான விழிகளைத் தட்டி தட்டி விழித்த சஞ்சய்..

“என்ன மித்ரு.. அதுதான் லைசென்ஸ் கிடைச்சாச்சே.. முகத்தைப் பற்றி ஊதிவிட வேண்டியது தானே.. நானும் சைட் கேப்பில் கொஞ்சம் ரொமென்ஸ் செய்திருப்பேன்.. அதை விட்டுட்டு நர்ஸ் மாதிரி கண்ணை கழுவிட்டு இருக்கிற..” என்று கண்களில் குறும்பு மின்ன சிரித்தான்.

அதைக் கேட்டு.. கையில் வைத்திருந்த மீதி நீரையும் அவன் தலைக்கு மேல் கவிழ்த்தாள்.. “ஏ…” என்று சிரித்தவாறு அவன் நகர்வதற்குள்.. அவன் மேல் கவிழ்த்துவிட.. திரும்பியவன் அவளது இடுப்பைப் பற்றி தூக்கி சுழற்றியவாறு மறைவாக இருக்கும்.. பக்கத்து சுவற்றில் அவளைச் சாய்த்தவன்.. “நீ கண்ணை ஊதாமலும் எனக்கு ரொமென்ஸ் செய்ய தெரியுமே..!” என்று கிசுகிசுத்தவன்.. தொடர்ந்து.. “ஆனால் மீன் குழம்பு எனக்கு மட்டும் தான்..” என்றான்.

“ஐய்யே…!” என்று நொடிந்துக் கொண்ட மித்ரா.. “டேய்.. எனக்கு மீன் குழம்பே பிடிக்காது.. அந்த ஸ்மல்லே பிடிக்காது போதுமா.. நீ முழுசையும் சாப்பிட்டுக்கோ..” என்றாள்.

அதைக் கேட்டவனின் உதட்டிலும் கண்களிலும் குறும்பு பரவியது..

மித்ரா.. வெட்கம் கலந்த எச்சரிக்கையுடன்.. “வாட்.. சஞ்சு..” என்று கேட்க…

சஞ்சய்… கண்களில் குறும்பு மின்ன.. “வேற வழியில்லை.. டூடே யூ ஆர் கோன டெஸ்ட் அன்ட் ஸ்மெல் தட் அரோமா டியர்..” என்று சிரித்தான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ithu entha storyota epilogue sis
புத்தகமாக வெளி வந்த என்னோட நான்காவது கதை..

காதலர் தின ஸ்பெஷலாக அந்த கதையின் எபிலாக் கொடுத்தேன்..😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஞ்சுவோட குறும்ப துறுதுறுப்ப ரொம்பவே மிஸ் பண்ணோம் சிஸ்.. அவனுக்காக ஒரு டீசர குடுத்து எங்கள ஹாப்பி ஆக்கிட்டீங்க..:love::love::love:
நன்றி.. புனிதா..

நல்லவேளை நினைவுப்படுத்தினீங்க.. இங்கேயும் போட்டுட்டேன்..

அவனுக்கு இங்கேயும் ஃபேன்ஸ் உண்டு...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sanju and mithra varadhu?
ஓ... அந்த கதை கேட்கறீங்களா..

அது "சிறகை விரித்தாடும் காதல்.." நவம்பர் மாதம் தான் முடித்தேன்..

இன்னும் புத்தகமாக வெளிவரவில்லை..
 
Top