All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம், நான் உதயா,

இந்த தளத்தில் எனக்கு எழுத வாய்ப்பளித்த ஸ்ரீ அவர்களுக்கு நன்றி,


நான் இந்த தளத்தில் எழுதும் கதையின் பெயர் பழிக்குப்பழி,

இது ரொமான்ஸை சற்றே ஊறுகாய் போல் தொட்டுச் செல்லும் கதை. கதையின் முதல் பாகத்தை வரும் வியாழன் வெளியிடுகிறேன்.

நன்றி..
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹய் பிரண்ஸ், எனது கதையி டீசர் இதோ, உங்கள் சுவாரஸ்யத்திற்காக,

அழகிய ஊட்டி தனது அழகை மறைத்திருக்கும் இருள் பொழுதில், வெண் மேனியவள், கயிற்றின் இருக்கத்தாலும் பனியின் தாக்கத்தாலும் செம்மேனியானாள், பார்பவரை உரையவைக்கும் இந்நிகழ்வின் காரணகர்த்தாவோ நித்திரையில் ஆழ்ந்திருந்தான்.

வீசும் புயலை சூறாவளியாய் மாற்றியதை அறியவில்லை அவன், சூறாவளியின் தாக்கம் சில சமயம் மழை யாகும் கடலைச் சேரும் போது, இங்கே மழையாகுமோ அல்லது சுற்றியவர்களை தூக்கிவீசிச்செல்லுமா பார்ப்போம்...,



நன்றி
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பழிக்குப் பழி



பவித்ரனின் உள்ளம் கவலையில் செயல்பட முடியாமல் தவித்திருந்தது. அவன் தனது அறையில், கையில் நண்பனின் கடைசி கடிதத்துடன் அமர்ந்திருந்தான்.

பவித்ரனின் நண்பன் ஆனந்த், அவனின் சிரிப்பும், எல்லோரையும் கேலிபேசும் வார்த்தைகளும் இப்போதும் காதுகளில் எதிரொலித்தது. அப்படி எதற்க்காக தற்கொலை செய்துகொண்டான் என இரண்டு நாட்களாக மனம் தவித்தான். இன்று அதற்க்கான விடையாக கடிதம் பவித்ரனின் கையில் திடமாக இருந்தது.

கதவு தட்டப்பட்டது. பவித்ரனின் லீவ் மீ அலோன் என்ற கத்தல் பதிலளித்தது. ஒரு சில வினாடி தயங்கி மீண்டும் கதவு தட்டப்பட கோபமாய் கதவை திறந்தவன். என்ன? என்று பல்லைக் கடித்தான்.

பவித்ரனின் சிவந்த கண்களும் கதவு நிலையை முட்ட நிற்க்கும் உயரமும், அவனது அதட்டலில் நடுங்கிய வள்ளி, அம் அம்மா வந்திருக்காங்க, க். கூஊ கூப்பிட்டாங்க சின்னய்யா என திக்கி திணறி சொல்லிவிட்டு மடமடவென ஓட்டம் பிடித்தாள்.

சத்யாதேவி சோபாவில் அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருந்தார். அவர்கள் முன் சோபாவில் எரிச்சலுடன் அமர்ந்தான் பவித்ரன். மகனிடத்தில் பார்வையை வீசியவர், என்ன தீரா இப்படியே இருக்குறதுன்னு முடிவு பண்ணீட்டியா? அடுத்து எந்த வேலையும் பாக்க வேண்டாம். அப்படித்தான?

அம்மா, ஆனந்த் தற்கொலை பண்ணிக்கிட்டான். என்னால எப்படிமா என நண்பனின் சாவை வார்த்தைகளில் கொண்டுவர முடியாது விம்மினான்.

மகனின் நிலைகண்டு அதரவாய் அருகில் அமர்ந்தவர். எனக்கு தெரியும்பா, அதுக்காக நீ இப்படியே இருந்துட்டா அவன் வந்துடப்போறானா?. இறப்பவர்களுக்கு விதிமுடிஞ்சது. இருக்குறவங்க அதோட விளையாட்டுல இருக்கோம், நாம நிக்காம ஓட வேண்டிய அவசியமிருக்கு தீரா என்றார்.

அவன் ஒண்ணும் விதிமுடிஞ்சி போகல, தற்கொலை பண்ணிக்கிட்டான் மா? எவ்வளவு கஸ்டப்பட்டிருந்தா எங்கிட்டக்கூட ஒருவார்த்தை சொல்லாம என பவித்ரன் ஆனந்தின் நினைவுகளிலே உளண்றான்.

எதுக்காக தற்கொலைன்னு ஏதாவது தெரிஞ்சதா? என வினவியவரிடம், பையிலிருந்த கடிதத்தை மறைத்து தெரியாது என்றான் அழுத்தமாக.

தீரா நீ இரண்டு நாளா ஸ்விம்மிங் பிராக்டீஸ் போகலையாம், கோச் போன் பண்ணார். இங்க வள்ளிகிட்ட போசினதுக்கு அவ நீ ரூமை விட்டே வெளிய வரலைன்னு சொல்றா..இப்படி இருக்கக்கூடாது, நீ ஊட்டீல இருந்து பிராக்டீஸ் பண்ணதெல்லாம் போதும், வா கோயம்புத்துர் போகலாம் என்றார் சத்யாதேவி.

பிளீஸ் மாம் லீவ் மீ , லீவ் மீ அலோன் என பவித்ரனின் வார்த்தைகள் அறையில் எதிரொலித்தது.

சத்யாதேவிக்கு மகனின் துக்கம் கஷ்டத்தை தந்தாலும், இப்படியே விட்டால் சரிபடாது என நினைத்தவர், அதட்டலாக, நீ இன்னும் 2 ஹவர்ல கிளம்புற, நாளையிலிருந்து என்னோட மில்லை பாத்துக்க வர்ற என இறுதியாக கூறினார்.

நோ மா, ஐ கான்ட் என்றவனை முறைத்தவர்.

ஒரு நண்பன் இறந்துட்டான் இடி விழுந்த மாதிரி இரண்டு நாளா தூங்காம, சாப்பிடாம இருக்கியே, நீ என்ன சின்ன பிள்ளையா? எல்லாத்தையும் கடந்து வந்தாத்தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். வெற்றியைக்கூட விடு நீ நிகழ் காலத்தில் வாழ அப்போதுதான் முடியும், வருத்தப்படுபவன் இறந்தகாலத்திலேயே தங்கிவிடுவான். யூ ஆர் ஆன் பிரசன்ட் அட் பிரசன்ட் என காட்டமாக கேட்டார்.

யூ கான்ட் கேட்ச் மை ஃபீலிங் என்றவன் சோபாவில் தலைசாய்த்து விட்டத்தை வெறித்தான்.

அப்ப சரி நானும் இதே சோபால உட்கார்ந்து வருத்தப்படுறேன் என சத்யாதேவி சட்டமாக அமரந்து கொண்டார்.

நீங்க எதுக்காக வருத்தப்படனும் என அன்னையை நோக்கினான்.

உங்கப்பா இறந்ததுக்குதான், ஐந்து வருடம் முடிஞ்சது, இப்பத்தான் நான் ரொம்ப ஃபீல் பண்றேன். நீ நண்பனுக்காக வருத்தப்படும் அளவுக்குக்கூட நான் உங்கப்பாக்காக ஃபீல் பண்ணல, அவர் இறந்த மறுநாள் ஆடிட்டர் மீட்டிங்கு போனேன். அப்ப அந்த சமயத்துல காலேஜ் படிச்ச நீயும், நம்ம கம்பெனியுந்தான் கண்ணுக்கு தெரிஞ்சது என அவனை கூர்ந்து நோக்கினார்.

இப்ப என்ன என்னதான் பண்ண சொல்றீங்க என்றான் தீரன்.

கம்பெனிய நாளைல இருந்து கவனி என்றவர், கிளம்பு என்றவர் சட்டமாக தீரனை பார்த்தார்.

இப்போது அந்த வீட்டை ஒருமுறை பார்வையால் சுழற்றியவன், அவளுக்கு சாவைவிட கொடுமையான தண்டனை அழிக்கிறேன் அதுவும் இதே இடத்தில் என மனதில் சபதம் எடுத்தவன், அன்னையோடு கிளம்பினான்.



ரஜ்ஜனி காலை 6 மணியளவில் சோம்பல் முறித்தவாறு தனது பால்கனியில் பார்வை திருப்பினாள். அவளது கடையில் வேலை செய்பவர்கள் கேட்டின்உள்ளே நுழைந்தனர்.

யோசனையாய் வந்த இருவரையும் பார்வையில் துளைத்தவள், நிதானமாய் தனது அன்றாட வேளைகளை கவனிக்க சென்றுவிட்டாள். குளித்து நிதானமாய் அலங்கரித்துக் கொண்டிருக்கும் பொழுது தாயின் குரல் அவசரமாய் அவளை அழைத்தது.

நிதானமாக ரஜ்ஜனி ஜீன்ஸூம் டாப்புமாக படி இறங்கினாள்.

படிகட்டின் கீழ்படியில் நின்றிருந்த லதா ரஜ்ஜனியின் தாய், வேகமா வாம்மா , வாயும் வயிருமா ஒரு பொன்னும் பையனும் வந்திருக்காங்க, அவங்க நம்ம கடைலதான் வேல பாக்குறாங்களாம் , பாவமா இருக்கு, பாத்து உதவி செய் என மொழிந்துவிட்டு உள்ளே நகர்ந்தார்.

நீ எங்க மா போற என்ற கேள்விக்கு, உக்கார சொல்லும்மா, நா போய் ஜூஸ் எடுத்துட்டு வரேன், பாவம்..... ரொம்ப நேரமா நிக்கிது என மடமடவென கூறியவாரே அடுப்படியை நோக்கிச் சென்றார்.
லதா சென்ற திசையை கண்ணைத்தான்டாத புன்னகையில் கடந்தவள், உணவு மேசையில் இருந்த தந்தையை நோக்கிச்சென்றாள்.

தனக்குத்தானே உணவு பரிமாரிக்கொண்டு உண்ண ஆரம்பித்தாள். ஜூசுடன் வெளியில் வந்த லதா கண்களில் மகள் உணவு உண்பதும், வெளியில் மேடிட்ட வயிற்றுடன் இளம்பெண் சுவற்றில் சாய்ந்து காத்திருப்பதும் விழ, மகளை முறைத்தவர், அப்பெண்ணிடம் விறைந்தார்.

மறுக்க மறுக்க அப்பெண்ணின் கையில் டம்ளரை திணித்தவர், ஒழுங்காக் குடி அப்பத்தான் ரஜ்ஜனீட்ட உதவி செய்யச்சொல்லுவேன் , இல்லாட்டி என தொடங்க அப்பெண் பதறி அடித்து குடிக்க ஆரம்பித்தாள், பக்கத்திலிருந்த இளைஞன் ரொம்ப நன்றி மா என்றான்.

ரஜ்ஜனி தன் தந்தையிடம், என்னப்பா வந்திருக்கவங்களுக்கு என்ன பதில் சொல்ல என கேட்க, ராஜாராமனோ, கடையில என்ன நடைமுறைல இருக்கோ அதச் செய், இல்ல உனக்கு என்ன தோனுதோ அதப் பண்ணு என முடித்தார்.
அவர்களின் வார்த்தைகளை கேட்டுக்கொண்டே அருகில் வந்த லதா மகளை முறைத்தபடி அடுத்த இருக்கையில் அமர்ந்தார்.

ரஜ்ஜனி நா சொல்றத என லதா ஆரம்பிக்க, நா சாப்பிட்டேம் மா இட்லி சூப்பர் என்னப்பா என தந்தையை துணைக்கழைத்தாள், அவர் ஆம் என்று சொல்லும் கேப்பில் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

ம்ச்சூ என சலித்த லதா, என்னங்க இவ திருந்தவே மாட்டாளா? பாவங்க அவங்க, நாம தான கெல்ப் பண்ணனும் , எல்லா அப்படியே உங்கம்மா குணம், என புகைபடமாகிய தன் மாமியாரை ஒருமுறை முறைத்துவிட்டு தன் கணவனிடம் திரும்பினார். நீங்களாச்சும் சொன்னீங்களா? என ராஜாவிடம் கேட்டார்.

டோண்ட் வொரி, அவ எல்லாம் பாத்துப்பா நீ சாப்பிடு மா என எழுந்து கொண்டார். இப்படி சொல்லியே அவள ஏத்தி விடுங்க, இரக்கமே இல்லாம வர்றா அப்படியே உங்கள மாதிரி என முணுமுணுக்க, அவர் மென்சிரிப்பில் லதாவை கடந்து சென்றார்.

ரஜ்ஜனி வெளியில் வர அவர்கள் தங்களின் யோசனையை தள்ளி வைத்துவிட்டு, மேடம் என்றனர் இருவரும், அதில் நின்று அவர்களை குற்றம் சாட்டும் விழிகளில் துளைத்தாள்.

நீங்க யார்? என்ன வேணும் என்றவளிடம், அடுத்து பேச அந்த இளைஞன் தயங்கி நின்றான். அப்பெண் நான் செல்வீங்க, கடைல ஆறு வருசமா வேலை பாக்குறேன், இவருமணி இவரு ஒரு வருசமா வேலை பாக்குறாரு, நாங்க வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம், இப்ப கணவன் மனைவி ஒரே இடத்துல வேல பாக்கக்கூடாதுன்னு சொல்லி நேத்து வேலைய விட்டு தூக்கீட்டாங்க, இப்படி செஞ்சா எப்படி மேடம் என அவள் தொடர, கைநீட்டிதடுத்தவள்,

செல்வி இத கொஞ்சம் பாரு என கைபேசியை அவள் முன் நீட்டினாள். அதில் இரண்டு நாட்களுக்கு முன் குடௌனில் யாருமில்லை என நினைத்து இருந்த ஒரே சாட்சியான கேமராவிற்கு முக்காடு போட்டுவிட்டு அவர்கள் உறவாடியது கண் கூசும் அளவிற்கு தெளிவாக பதிந்திருந்தது.
என்ன சொன்ன இப்படி செஞ்சா எப்படி மோடமா, அத நா கேக்கணும் இப்படி செஞ்சா எப்படிமா வேலைல வச்சிருப்போம் என கோலிபோன்ற கடுமையில் கேட்க செல்வி வாயடைத்து நின்றாள்.

டோண்ட் பிளே வித் யுவர் சீப் சிம்பதி டெக்னிக்ஸ், நான் அதற்கான ஆள் இல்லை, கௌவ் டேர் யூ லை டூ மீ, தைரியம் ரொம்பவே ஜாஸ்திதான், எதற்கு உங்களை என்னை பாக்க அனுமதிச்சேன் தெரியுமா? என கூர்ந்து செல்வியை பார்ந்தாள்.

செல்விக்கு இதயம் படபடத்தது, அடுத்து ரஞ்சனியின் நாவின் சாட்டையின் அடுத்த சுழற்ச்சியை நினைத்து, தொண்டை வறண்டு நின்றாள்.

டெல் மீ , கேர்ட் யூ எனி கெஸ்ஸஸ் என கேட்க, இருவரின் தலையும் இடமும் வலமுமாக நிதானமாய் அசைந்து நின்றது, ரஞ்ஜனியின் மேலிருந்த பயத்தில்.

அவர்களின் பயத்தை பொய்யாக்காமல் அடுத்த குண்டை வீசினாள், இதை போலீசில் கொடுத்து என் கடையின் பெயரை கெடுக்க நினைத்த உங்களின் மேல் மான நஷ்ட வழக்கு பதிவு செய் .......என முடிக்கவில்லை மேடம் பிளீஸ் மேடம் என அழ ஆரம்பித்தாள் செல்வி.

உன்னோட மானம் பெரிசு, அதுவே கடையோடதுனா சின்னது, ரைட்? என பேசிபவரிடம் திணறி நின்றனர். ஐம் கிவ்விங் ஒன் சான்ஸ் டு யூ, உண்மை ...என கையை கட்டிக்கொண்டு சட்டமாக நின்றாள்.

செல்வி அவள் அருகிலிருந்த மணியை பார்த்தாள். ஓ உண்மைனா அவர் சொல்லுவாரா? என மணியை கூர்ந்தாள் ரஞ்சனி..

அம்மா நா வேலைக்கு சேர்ந்ததே இவள லவ் பன்னதாலதான், நாங்க லவ் பண்றது வீட்டுக்கு சொல்லி கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறப்பதான் இப்படி வேலை போயிடுச்சு என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே லதா வெளியில் வந்தார்.

அங்கே அந்த பெண்ணை நிற்க வைத்தே பேசிக்கொண்டிருக்கும் மகளின் மேல் கடுப்பானவர் அவளை கடிய மடமடவென அருகில் வந்தார்.
அப்போ உங்களுக்கு இன்னும் கல்யாணமாகல, லவ் கருமம் கண்றாவி, சீமந்தம் வரை எல்லாமே என்னோட கடைலதான் என ரஞ்சனி கூறவும் லதா அவர்களிடம் வந்து சேர்ந்தார்.

வெறும் மஞ்சள் கயிற்றை போட்டிருந்த செல்வியை பார்த்து இது என்ன ஏமாத்தவா? இல்ல ஊரையா என்றாள் ரஞ்ஜனி.

தலைகுனிந்து பதில் பேச முடியாமல் நின்ற செல்வியைப் பார்த்து , பாவம் மா இந்த பொண்ணு என லதா பரிந்து பேச, அடக்கப்பட்ட கோபத்தில் அவள் தாயைப் பார்த்த பார்வையில் அவர் வாய் தானாய் மூடிக்கொண்டது.

கெட் லாஸ்ட் என்றாள் அவர்களைப் பார்த்து.

பதறிப்போனவர்கள், அம்மா அப்பாவும் ஒத்துக்கலை, நீங்களும் என முடிப்பதற்க்குள்., தட்ஸ் நாட் மை பிராப்ளம் என்றாள் ரஞ்சனி,

லதாவிற்கோ அவர்கள் தப்பே செய்திருந்தாலும், அவர்களை இந்த இக்கட்டான சூழ்நிலையில் தண்டிக்கும் மகள் மேல்தான் கோபம் வந்தது. எப்படியும் இவர்களை காப்பாற்ற வேண்டும் என முயண்றவர், மகளின் கோபத்தை திசை திருப்ப, இவங்கள ஏம்மா திட்ற? இவங்கள இந்தளவுக்கு போக அனுமதிச்சதே கடையோட சூழ்நில தான என ஆரம்பிக்க, ரஞ்சனி கடுப்பானாள்.

கடைல என்ன டிஸ்கோ டினான்ஸா நடத்துறோம் என்றாள்.

லதா, அது இல்லம்மா முதல்லையே லேசா கண்டிச்சிருந்தா இந்தளவுக்கு வந்திருக்காதே, அத சொன்னேன் என்றவரிடம், அவரது மகள் அடுத்த குண்டை வீசினாள்.

குடௌன் இன்சார்ஸ், இவங்களோட சுப்பீரியர் எல்லாரையும் பாயிண்ட் பண்ணியாச்சு. இன்னும் ஒரே மாசத்துல அவங்களே டார்ச்சர் தாங்காம ரிசைண் பண்ணீடுவாங்க. என்ன ஏதுன்னு அவங்களுக்கே தெரியாது என ரஞ்சனி கூறினாள்.

அவளின் போச்சை கேட்ட லதா மனதில் மிகவும் வருந்தினார். இரக்கமற்ற பெண் தன்மகள் என்ற மற்றவர் எண்ணம் எந்தத்தாய்க்குத்தான் இனிக்கும்.
சுதாரித்த செல்வி, மேடம் அந்த வீடியோ என மெல்ல ஆரம்பிக்க, ம்.. ஐம் இம்பிரஸ்டு என்றவள், கவலைப் படாத போலீசுல குடுக்க மாட்டேன், மணி உண்மைய சொன்ன ஒரே காரணத்துக்காக, அதர்தென் நத்திங், கெட் லாஸ்ட், எங்கிட்ட வேற எந்த சலுகையோ, உதவியோ கிடைக்காது என்றவள் ரமோட் கீயால் காரை ஓபன் செய்து ஒய்யார நடையில் அவர்களை கடந்தாள்.


ஆனந்தோடு நீச்சல் பிராக்டீஸ் செய்தவனால், அவன் இல்லாமல் செய்ய ,பவித்திரனுக்கு விருப்பம் இல்லை. தண்ணீரைக் கண்டாலே அவனுடன் போட்டி போட்டதும், அரட்டை அடித்ததும் நினைவில் எழ நீச்சலை வெறுத்தான். தகுதி பெற்ற காமண்வெல்த் போட்டிகளுக்குக்கூட குட்பாய் சொல்லிவிட்டான்.

சத்யாதேவிக்கு மகன் போக்கு கவலையளித்தது. கோயம்புத்தூர் வந்து ஒரு வாரம் அவன் போக்கில் விட்டுவிட்டார். எதையோ பறிகொடுத்ததுபோல் இருந்த அவனை என்ன செய்ய என யோசித்தார்.

தீரன் டீவியில் ஏதோ சண்டைக்காட்சி ஓட அதை வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தான். சத்யாதேவி அருகில் அமரவும், அவரை நிமிர்ந்து பார்த்தவன் திரும்பவும் டீவியை வெறித்தான்.

சத்யாதேவி, சாப்டயா தீரா, எனவும், ஒரு ம்.. மோடு முடித்துக்கொண்டான். தீரா நாளைக்கி என்னோட கேபினுக்கு பக்கத்துல இன்னோன்னு ரெடி பண்ண சொல்லீருக்கேன், உனக்கு எனவும்,., மாம் லீவ் மீ பிளீஸ், எனக்கான ஷெட்யூலை நீங்க ரெடி பண்ண வேணாம், நா எப்போ எதைச் செய்யனூன்னு, ஐ நோ, என்றான் சிறிது காட்டமாக..

சத்யாதேவியும் விடவில்லை, உனக்கு அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்ற உதயம் இருந்தால் நான் எதற்காக அதில் தலையிடப் போகிறேன். நான் ஓடிக்கொண்டிருப்பவனை தடம் மாற்ற முயற்சிக்கவில்லை, முடவனுக்கு கால் கொடுக்க முயற்ச்சிக்கிறேன்.

தீரன், ம்ச்சூ டோண்ட் டிரை டூ போரிங் மீ,

அவனை பார்வையில் எரித்த சத்யதேவி, ஓகே, ஐம் லீவிங் தட் , டெல் மீ திஸ், ஐம் த ஓன்லி லேடி மேனேஜிங் 500 பீப்பிள்ஸ் இன் பேக்டரி. கிட்டத்தட்ட ஆறு வருடங்கள், ஆறுவருடங்கள் பெரிதல்ல உன்னை பொறுத்தவரை ஆனால் எனக்கு பொறுப்பற்றபிள்ளையான உன்னையும், சிதறிக்கிடந்த லேபரை ஒரு கணவனற்ற பெண்ணான தனி மனிஷியாய் கையாண்ட எனக்கு அது மிகப் பெரிது.
நானா பொறுப்பற்றவன் என பவித்ரன் தீரனாக பார்த்தான்.
கல்லுரி முடித்த உடன் உனது அடுத்த முடிவு என்னவாக இருந்நிருக்க வேண்டும், நீ ஒரு பொறுப்பான மகனாக இருக்கும் பட்சத்தில் மறு நாள் மில்லிற்கு வந்திருக்கனும், ஆனாநீ காலேஜ் முடித்து நான்கு வருடங்கள் ஆகியும், நானா கூப்பிட்டும் வர மறுத்து சட்டம் பேசிக்கொண்டு இருக்கிறாய்.

பாரினில் சென்று பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்தாய், வந்தவன் அடுத்து கம்பெனியை என்னைக் கேட்காமலே டேக் கேர் பண்ணுவனு நினச்சேன், பட் உன்னோட சைல்ஹூட் பிரண் டோட ஸ்விம்மிங்ன, நானும் உன்னோட ட்ரீம்ல தலையிடல, இரண்டே வருசத்துல காமன் வெல்த் செலக்சன் அளவுக்கு முன்னேறின, நான் பெருமப்பட்டேன்.

நிறைய பேர் வெற்றிக்காக போராடிட்டு இருக்கும் போது, கிடைத்த வெற்றியை பன்படுத்தாம, அடுத்து உனக்கான வெற்றிகளை பார்க்காம, இப்படி வெட்டியா உக்காந்திருக்க,

ஒன்று தெரிஞ்சிக்க தீரா, இறந்தவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அவர்கள் இறப்பிற்கு வருத்தப்படுவது, வருத்தந்தை சிலர் கண்ணீராக வெளிப்படுத்துவர், சிலர் அடக்கப்பட்ட துக்கமாக உணர்த்துவர், ஆனால் எல்லாவற்றிற்க்கும் ஒரு கால அளவு உண்டு, இப்படி வேலையை புறக்கணித்து வாரக்கணக்கில் இருப்பவன் துக்கப்படுகிறவனாக மாட்டான், சோம்பேறியாக பார்க்கப்படுவான்.

ஸ்டாப்பிட் மாம், ஆல் ஹேவ் லிமிட், என சீறினான் தீரன்.

சத்யதேவி, ஓ.. அப்போ செயல்ல காட்டு, பிராக்டீஸ் போ, ஆபீஸ் வா என்றார்.

தீரன் தண்ணீரை வெறுத்தவனாக, உங்களுக்கு என்ன வேணும் உங்க வேலைக்கு ஆள், வரேன், டிஸ்கஷன் ஓவர் என சத்யதேவியிடம் கத்திவிட்டு சென்று விட்டான்

உலகமெல்லாம் சுற்றிய பிள்ளை, இன்னும் தனக்கு வேண்டியது என்ன என்று கூடத் தெரியாத சிறுபிள்ளையாய் இருக்கிறானே என சத்யதேவி வருந்திச் சென்றார்.



அறைக்குள் நுழைந்த பவித்ரன் கூட்டுப் புலியாய், நடந்தான், தாயின் பேச்சு அவனுக்குள் ரீங்காரமிட்டது, செயலில் காட்டு என்ற வார்த்தை அவனது செவிகளில் பறையடித்தது

போனை கையிலெடுத்தான். துப்பறியும் டீ—ஆக்ட் என்ற நிறுவனத்திற்கு அழைத்தான்.

சென்னையிலுள்ள பிரபள நிறுவனம் அது, தீரன் அவர்களிடம் எனக்கு ஒருவரின் குணநலன், பழக்கம் தகுதி நடவடிக்கை பற்றிய விவரம் வேண்டும் என்றான்.

அதில் பதிவு செய்யப்பட்ட குரலோ போலீஸ் கேசா? என்றது.

இல்லை எனவும் நேராக இன்பார்மருக்கு லைன் தரப்பட்டது.

அவரிடம் டீம்ஸ் என்ற கடையின் பெண் அதிபரின் விவரங்களைக் கேட்டான்.

அது சென்னையின் குண்டூசி முதல் சோபாவரை , கைக்குட்டையிலிருந்து சூட் வரை வீட்டு பலசரக்கிலிருந்து, பலநாட்டு சரக்கும் கிடைக்கும் விற்பனை உலகம், அது அதற்கென தனிப்பிரிவுடனும், தனிதளத்திலும் விற்பனை செய்யப்படும்.

இன்பார்மர், ஜெய், யெஸ் சார், நீங்க சொல்றது மிஸ் ரஞ்சனி, எதற்கு சார் கல்யானமாகாத பெண்ணை பற்றிய விவரம், திருமணத்திற்கா? என்றான்.

இவளையா என மனம் குமைந்தவன், நோ பார் பிஸ்னஸ் டீலிங் என்றான் தீரன் அதுதான் மெய் போலவே,

ஸெஸ் சார் ஒரு மாதத்திற்குள் விவரமளிக்கிறேன் முடித்தார்.

போனை கட்செய்து கட்டிலில் துக்கிப்போட்டவன், இன்னும் ஒரே மாதம் என மனதில் சபதமெடுத்துக் கொண்டான்.

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரண்டாம் பாகம்

பவித்ரன் ஒருவாரமாக அலுவலகம் சென்று கொண்டிருக்கிறான்.

சத்யாதேவிக்கு மகனின் மாற்றம் திருப்திகரமாக இருந்தது. வேண்டா வெறுப்பாக அலுவலகம் வந்தவன், இப்போதெல்லாம் அலுவலகத்தைவிட நூற்பாலையில் தான் அதிகம் செலவிடுகிறான் என தகவல் வந்தது.

அலுவலகத்தில் வேலைநேரம் போக மில்லின் ஒவ்வொரு துறைக்கும் தனியே சென்று மோற்பார்வையிடுவது, தெரியாத விஷயங்களை கற்றுத் தெரிந்து கொள்வதுமாக பிசியாகிப்போனான் பவித்ரன்.

சத்யாதேவிக்கு இது நம் பிள்ளைதானா என்ற சந்தேகமே முளைத்தது, உங்களுக்கு என்ன வேண்டும் உங்கள் வேலையைச் செய்ய ஒரு ஆள் அதுதானே? வருகிறேன் என்று கோபமாக சொன்னவன் இன்று இழுத்து போட்டுக் கொண்டு செய்கிறான் என மனதில் நகைத்தார், மகன் மேலுள்ள பெருமையில்.

அந்நேரம் கதவு தட்டப்பட்டது, உள்ளே நுழைந்தார் அலுவலக மேளாளர்.

வணக்கம் மேடம், பெங்களூரிலிருந்து ஆர். கே இன்டஸ்ரிஸ் ஒப்பந்தத்தை நீட்டிக்க அழைத்திருக்கிறார்கள், உங்கள் முடிவு என்றார்.

சற்றே சிந்தித்த சத்யாதேவி, நீங்க என்ன நினைக்கிறீங்க செல்வம், நம்மளாள ஆர்டரை எடுத்து செய்யமுடியுமா? ஒப்பந்தத்த நீட்டிச்சா கஸ்டமர் டிமாண்ட பூர்த்தி பண்ணணுமே, புரடைக்சன் சைடு எப்படி? என்றார்.

மகிழ்ந்த புன்னகையில் செல்வம், நிச்சயமாக பண்ணீருவோம் மேடம், பேக்டரி மேனேஜர், இப்பத்தா இன்பார்ம் பண்ணாரு, புரக்ஷென்ல வேஸ்டேஜ் குறஞ்சு, தரம் கூடியிருக்காம்.

எப்படி செல்வம், மெசின் ரிப்பேர் பாத்தீங்களா? எந்த டீடல்சும் வரலையே?.

நோ மேடம், மெசின சுத்தம் பண்ணது உண்மைதான், பவித்ரன் சார் அந்த சைடு லேபர்ச கூட்டி ஏதோ செய்முறை விளக்கம் காமிச்சார், என் காதுக்கு எட்டியது இவ்வளவுதான் மேடம், அவருடைய புரிதலும், தொழில்ளர்களுடன் பேசி சிறு மாற்றத்தை மேம்பாடாக நடத்துவதும் இந்த முன்னேற்றத்திற்கு காரணம்னு தொழிலாளர்கள் மத்தியி போச்சு அடிபடுது மேடம், தொழிலாளர்களுக்கு அவர் ரவுண்ஸ் போற மாலைநேரம் உற்சாக பானம் மேடம், எல்லாரும் அவர் பேக்டரிக்குள்ள இருக்குற 2 மணி நேரமும் தீயா வேல செய்றாங்க, இப்ப புதுசா வேலைக்கு சேந்தவங்களுக்கு ஒரே குறிக்கோள் பவித்ரன் சார்ட நல்ல பேர் வாங்குறதுதான்

ஏன் அப்படி, என்ன காரணம்?

தெரில மேடம், அவர் பார்த்து சிரித்து பாராட்டுறதுக்காக, பயங்கரமா உழைக்கிறாங்க, அவருக்கு மெசின பத்தியோ , டெக்னிக் பத்தியோ டவுட் கேட்டு வந்தார்ன, அப்படி விளக்குறாங்க

செல்வம், நீங்க சொல்றத பார்த்தா, பவித்ரன சினிமா நட்சத்திரம் மாதிரில தெரியுது,

நீங்க சாயந்தரம் டீ பிரேக் டைம் போய் பாத்தீங்கன்ன, நா சொல்றது கம்மீனு புரியும் மேடம்,

சத்யதேவி சிரித்துவிட்டார், ஓகே, டிஸ்கஷன் மாறி வேற எங்கேயோ போயிடுச்சு , நீங்க ஓகே சொன்னா நான் பேக்டரி மேனேஜர்ட பேசிட்டு சொல்றோன் என்றார் சத்யதேவி.

சரி மேடம், எதுக்கும் பவித்ரன் சார்ட ஒருவார்த்தை கேட்போம் மேடம், அவர் சொன்னா சரியா இருக்கும் என்றார் செல்வம்,

செல்வம் அவன் வந்து கொஞ்சநாள் தான் ஆகுது, நீங்க அவன்ட கேக்க சொல்றீங்க, குட் இப்போ நீங்க தான் பவித்ரனுக்கு பெரிய விசிறி போலவே,

நோ மேடம், கொஞ்சநாளா இருந்தாலும், அவர் கிரகித்துக் கொள்ளும் திறமையும், செயலும் பிரமாதம் மேடம், அதனாலதான் என்றவரை ஓகே என செல்லுமாறு பணித்தார் சத்யதேவி.

ரஞ்சனி காபிக் கோப்பையுடன் பால்கனியிலிருந்து தோட்டத்தை வேடிக்கை பார்த்தவாறு நின்றிருந்தாள்.

இரவுஉடையுடன் விரிந்த கூந்தல் பின் முதுகை முழுவதும் மறைக்க , முன்னுச்சி முடிகள் செவிவழி தேளைத்தொட்டு முத்தமிட அழகிய ஓவியம், ரம்மியமான காலை பொழுதில் தோட்டத்தை ரசிப்பதை, கவிஞர் பார்த்தல் பாடல் புனைவர், ஓவியனானால், தூரிகை தேடுவான், புகைப்படக்கலைஞன், நிச்சயம் இந்த மோனலிசாவை கண்காட்சியில் வைத்திருப்பான்.

ரசையான விழிகளில் காபி அருந்திக்கொண்டிருப்பவளின் கண்கள் ஓரிடத்தில் நிலைபெற்றது, யோசனையில் கண்கள் இடுக்கியவள், தாயின் மீது கோபம் கொண்டாள்.

லதா, ராஜன், ரஞ்சனி மூவரும் அமைதியாய் அவர்களே அவர்களுக்கு பரிமாறிக்கொண்டு உணவருந்தினர். அமைதியாய அன்னையை கண்களால் துளைத்தெடுத்து உணவருந்திக் கொண்டிருந்தாள் ரஞ்சனி.

மகளின் கோபவிழிகளை ஓரக்கண்ணால் கண்டவர், ஏதும் தெரியாதது போல் முகத்தை மாற்றிக்கொண்டு உண்டார் லதா. ஒரு ஓரத்தில் மகளின் விழி படமாய் மனதில் வர, எப்போது வெடிபாளோ, எப்படி அணைப்பதோ என எண்ணம் வர, எனக்கு இன்னொரு மாமியார் என முணுமுணுத்துக் கொண்டார்.

மகளின் கோபத்தையும், மனைவி தைரியமாக பயப்படுவதையும், கண்டுகொண்டாலும், எதுவும் பேசாமல் மனதில் சுவாரஸ்யத்துடன், இளபுன்னகையில் உண்டுகொண்டிருந்தார் ராஜன்.

அம்மா, எதற்காக மணியை தோட்டவேலைய செய்யச் சொல்லி இருக்கீங்க? என்றார் சற்றே அமர்ந்த குரலில் ரஞ்சனி

லதா, புலி வந்துடுச்சு என மனதில் நினைத்தவர், ஏதும் அறியாதது போல் யாரும்மா மணி? என்றார்.

அவரை முறைத்தவள், தெரியாது? ..

இல்லையே ரஞ்சனி, யாரு என்றார் உண்மைபோலவே,
ஓகே , உங்களுக்கு மணின்னா தெரியாது, நேத்து ஓடிப்போய் ஜூஸ் குடுத்தீங்களே , அவளோட லவ்வர்னா தெரியுமா?

மகள், மனைவியின் போச்சுக்களில் சுவாரஸ்யமாக, புன்னகைத்தார் ராஜன்.

அவரது சிரிப்பு லதாவிற்கு கடுப்பை அளிக்க, நா திட்டு வாங்குனா சிரிப்பா வரும், ஏ வரது, ஒருவார்த்த அம்மாட்ட இப்படியா பேசுறதுன்னு கேக்க வேண்டியது தானா என மனதில் கணவனை அர்ச்சித்துக்கொண்டிருந்தார்.

சொல்லுங்க இப்ப தெரியுதா மா? என மகள் எதிரில் அமர்ந்து கேள்வி கேட்க, கணவருடன் மனதில் சண்டையிட்டுக் கூண்டிருந்தவர், ஒரு சமாளிப்பு சிரிப்புடன்,அது ரஞ்சும்மா தோட்ட வேலைக்கு ஆள் கேட்டேன்ல, இவன் பாவமா இருந்தானா , சரி பாருப்பானு சொல்லீட்டேன், பொண்ணுவேற மாசமா இருக்கா, வேலையில்லாம பாவம் என்ன பண்ணுவான் என கொஞ்சலாக மகளைப்பார்க்க, அவளோ சளிக்காமல் முறைத்தாள்.

இனி கொஞ்சல் வேலைக்கு ஆகாது என உணர்ந்த லதா, இப்படி கோபப்பட்டு அவங்கள கஷ்டப்படுத்தினா பாவம் உனக்குத்தாண்டி வரும், அதனாலதான் வேல குடுத்தேன் என்றார்.

யார் கஷ்டப்படுத்தினா? நானா என்ன செஞ்சன்? சொல்லுங்க,

கர்பிணி பொண்ண நாலுமணிநேரம் நிக்க வச்சு காக்கவச்சிருக்க, இதெல்லாம் தப்பில்லையா?

நானா வீட்டுக்கு வர சொன்னேன், இல்ல, நா வர்ற வரை நிக்க சொன்னேனா, அவங்களுக்கு காரியம் ஆகனூன்னு பாவமா சீன் போட்டா நானா பொறுப்பு,

சரி அதவிடு, வேலையாச்சும் கொடுக்கலாமில்ல, பாவமில்லையா?

பாருங்கம்மா, இப்படி பட்டவங்களையும், தப்பையும் மண்ணிச்சா கடையோட பேர் கெட்டுடும், உள்ள இருக்குறவங்களுக்கு தப்பு எது ஒழுக்கம் எதுன்னு தெரியாது, போக வெளில லவ்பன்னி வேலையில்லாம சுத்திகிட்டு இருக்கிறவங்க இதுதான் சாக்குன்னு லவ்வரோட உள்ள வந்துடுவாங்க, புரியுதா?
லதாவிற்கு அடுத்து பேச வார்த்தை எழவில்லை, மகள் செய்தது சரியே, ஆனால் கர்பிணியிடமும் இரக்கம் காட்டாத தன்மைதான் ...

ரஞ்சனி, நான் வேலையில்ல னு சொல்லி அனுப்புனவனுக்கு யாரக்கேட்டு வேல குடுத்தீங்க? நான் சொன்னதுக்கு என்ன மரியாதை என்று லதாவை துளைத்தாள்.

மகளிடம் மனைவி படும் திண்டாட்டத்தை கண்ட ராஜன், லதாவிற்கு உதவினார், ரஞ்சனி நீ அவன வேலையில இருந்து எடுத்தது நம்ம கடைல, லதா ஒன்னும் உன்னோட நிர்வாகத்துல தலையிடல, அவ நிர்வகிக்கிற வீட்லதான் வேல குடுத்துருக்கா, சோ, நீ ரெண்டையும் ஒன்னா பாக்காத, இன்னும் சொல்லப்போனா? நீ ஏன் நீ வேலையவிட்டு எடுத்த ஆளும், அம்மா வேல குடுத்தவனும் ஒரே ஆள்னு நினைக்கிற, வேற வேற ஆள்னு நினச்சுக்க பிராப்ளம் சால்வ்டு என்றார்.

மகளின் பேச்சிற்கு திணறிய லதா, இதுதான் சாக்கென்று, ம் .ம்.. அப்படி நினச்சுக்கோயேன் டா என மகளிடம் பேசி அவளின் முறைப்பை பரிசாய் பெற்றார்.

ம்.. ம்.. புரியுது, ஆனா நீ வேலைக்கு சேத்த புதுப் பையன், இன்னும் பத்து நிமிசத்துல வேலைய விட்டுட்டு ஓடீருவான்,சோ நீ நல்ல ஆளா வேலைக்கு சேத்துக்கோ, அப்பவாவது பாவம் பாக்காம, ஒழுக்கத்தையும், திறமையும் பார்த்து வேல குடும்மா என கேலிபோல உறைத்துவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்.

ராஜனோ, நமட்டுச் சிரிப்புடன் மனைவிடம், என்ன செய்யப்போற என்றார்.

லதா, நீங்க வேற அவ நீங்க எனக்கு சப்போட் பண்ண கடுப்புல எதையோ சொல்லீட்டு போறா, அவனுக்கு இருக்குற கஷ்டத்துக்கு இவ அடுச்சாலும் போக மாட்டான் என்றார். நீங்க இருங்க காபி எடுத்துட்டு வரேன், பேசி கலச்சுருப்பீங்க என கணவனை தாங்கினார்.

ராஜனோ மனைவியின் சிறுபிள்ளைத் தனமான தடுமாற்றத்தையும், தாங்கிப் பேசியவுடன், வேண்டி வேண்டி பணிவிடை செய்வதையும் நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

காபியுடன் வந்த லதா, ஆமா எப்பையுமே அவ என்ன திட்றத வேடிக்கதான பாப்பீங்க, என்ன புதுசா சப்போட்டு என அடக்கப்பட்ட சிரிப்பில் கேட்டார்,

ராஜனோ, சின்னப்பிள்ள மிஸ்ட மாட்டீட்டு முழிக்கிறமாதிரி முழிச்சையா, சோ பாவம் பாத்து கெல்ப் பண்ணேன் என்று கோப்பையை வாங்கிக் கொண்டார்.

யாரு நானா முழிச்சேன், எதுக்கு ? அந்த கோபக்காரிகிட்ட எனக்கென்ன பயம்? என லதா மிடுக்காய் கேட்க ராஜன் புன்னகைக்கும் போது, அம்மா என்ற ஓங்கிய அழைப்பு அனைத்தையும் கலைத்தது.

வாசலில் மணி நின்றிருந்தான் வியர்வை வழிய,

லதா , மணியிடம் என்னப்பா என்னாச்சு எனவும் அவன் மனப்பாடமாக கற்ற பாடத்தை ஓப்பித்தான், அம்மா, எனக்கு இந்த வேல தெரியாதும்மா, அதனால நா நின்னுக்கிறேங்க, என்றான்.

என்னாச்சுப்பா, செடிய பராமரிக்கிறது தான, காலைல இருந்து வேல செஞ்ச திடீர்னு என்னாச்சு? என்றார் லதா.

மணியோ, மனப்பாடமாக கற்ற பாடத்தை மீண்டும் ஓப்பித்தான், அம்மா, எனக்கு இந்த வேல தெரியாதும்மா, அதனால நா நின்னுக்கிறேங்க, என்றான்.

சரி இரு இப்ப வேல செஞ்சதுக்கு காசாவது வாங்கீட்டு போ என்ற லதாவிடம், வேணாம்மா நா கிளம்பறேன் என்றவன் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டான்.

அவன் சென்ற திசையை யோசனையாய் பார்த்துக் கொண்டிருந்த மனைவிடம் வந்த ராஜன், முழிச்சேனா? நானான்னு கேட்டியே அப்பவும் இப்படித்தான் முழிச்ச மை டார்லிங் என்று விட்டு, முறைத்த மனைவிடம் காலியான கோப்பையை கொடுத்துவிட்டு அலுவலகம் சென்றுவிட்டார்.



பவித்ரனின் திறமையை உணர்ந்த சத்யவதி, உள்ளுக்குள், பெருமை பட்டாலும் மகனிடம் எதையும் நேரடியாக காட்டிக்கொள்ளவில்லை.

தன் வேலைகளை சிறிது சிறிதாக மகன் வசம் ஒப்படைத்தார். கம்பெனியின் பேச்சுவார்த்தைக்கு மகனுக்கு அழைப்புதரப்பட்டது, அவனது தீர்மானங்களும் கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பவித்ரன் மெதுமெதுவாய் தனது காலடித் தடத்தை நிறுவனத்தில் அழுத்தப் பதித்தான்.

பவித்ரனின் வேலைப் பளு காரணமாக மது பி,ஏ வாக நியமிக்கப்பட்டாள்.

பவித்ரன் தொழிலிலேயே முழு கவனமும் பதிக்க, அவனின் பழி உணர்ச்சி உறங்கிக் கொண்டிருந்தது, அதை தட்டி எழுப்ப வந்தது அந்த கடிதம்.

துப்பறியும் நிறுவனத்திலிருந்து வந்த கடிதத்தை பிரித்துப் பார்த்தவன், முதலில் சுகமாய் அதிர்ந்தான், ரஞ்சனியின் ஒயிலான புகைப்படம் கண்டு, உள்ளே அவளின் குணநலன்களை படிக்கப் படிக்க இறுகிப் போனான்.

அவளின் கடின சித்தமும், அஞ்சாமல் எந்த எல்லைக்கும் சென்று நினைத்ததை முடிக்கும் திறன் பற்றியும், பிரச்சனைகள் சிலவற்றை அவள் அடித்துக் கையாளும் முறையும் விவரிக்கப்பட்டிருந்தது, சாட்சியங்களுடன்.

புகைப்படத்தில் ரஞ்சனியின் கண்கள் யோசனையா? திமிரா? கோபமா? நகையா? யாதொன்றும் பிரிக்கமுடியாத மோனலிசாவின் பாவனையில் இருந்தது,

பவித்ரன் கோபமான மனநிலையில் அதைக்காண, அதுவும் அந்த பாவனையைக் காட்ட, திமிர், பணக்கொழுப்பு, இருடி ஒவ்வொன்னா அடக்குறேன், முதல்ல உன்க்கு திமிர தர்ற பணக்கொழுப்புக்கு ஒரு அடி குடுக்குறேன் என மனதில் கர்சித்தவன், அதற்க்கான திட்டத்தை வகுக்கலானான்.

ரஞ்சனி வீடு திரும்பியதும், அதற்க்காகவே காத்திருந்த லதா , ரஞ்சனி உக்காரு கொஞ்சம் பேசணும் என்றார்.

ரஞ்சனி இதழை எட்டாத சிரிப்புடன், வந்து அன்னையின் அருகில் அமர்ந்தாள்.

லதா, ரஞ்சு நீ பண்ணது சரியில்ல, என்றார்.

அவர் காலையில் நடந்த விசயத்தைப்பற்றித் தான் கேட்கிறார் என தெரிந்தும், என்னாச்சும்மா? எப்பவும் போலத்தான கடைக்கி போயிட்டு வந்திருக்கேன், இதுல என்ன இருக்கு நீங்க கண்ண கண்ண முழிக்கிற அளவுக்கு என்றாள் ரஞ்சனி.

தெரிஞ்சிட்டே கேக்கிற நீ

என்னம்மா சொன்னாத்தான தெரியும், என்றாள் உண்மை போலவே,

மகளை ஒரு பார்வை பார்த்த லதா, சரி நானே சொல்றேன். இன்னிக்கு காலேல மணிட்ட என்ன சொன்ன வேலைய விட்டுட்டு அவசரமா ஓடுறான், என்ன பண்ண? என்றார் ரஞ்சனியிடம்.

ஒன்னுமில்லம்மா, நீங்க கடைல அடிச்ச லுட்டிய நெட்ல ஏத்தீடவான்னு ஒரு கேள்விதான் கேட்டேன், வேற ஒன்னுமே சொல்லல மா, ஒரு சின்ன மிரட்டு கூட போடல, பிராமிஸ் என்று நக்கலாக கூறியவள், அதிர்ந்த லதாவை தாண்டிச் சென்றாள்.

ஏம்மா இப்படி ஓட ஓட விரட்டுற, பாவமா இல்லையா? அவங்க பட்டிணி கிடந்த நமக்கு பாவம் பிடிக்கும் என்றார் லதா மகளின் செயலில் அதிர்ந்தவராய்,

மா , யாரும் பட்டிணி இருக்கப் போறது இல்ல, நமக்கு எப்படி நிறைய பேர் வேலைக்கு வருவாங்களோ, அதே மாதிரிதான் அவனுக்கும் இதவிட்டா வேறவேல, ஓகே, இதையே நினைக்காம அடுத்து வேலைய பாருங்க என்றவள், அடுத்த வார்த்தைக்கு நிற்காமல் சென்றுவிட்டாள்.


பலியாவாளா? பலிகொடுப்பாளா பார்ப்போம்..
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மூன்றாம் பாகம்

ரஞ்சனியின் கடை ட்ரீம்ஸ் நகரத்தின் மையத்திலிருக்கும் எட்டு மாடிக்கட்டிடம், எட்டாவது மாடியில்அலுவலக அறை பாதிப்பகுதியையும், மீதிப் பகுதி ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பர்னீச்சர் பகுதி உடையது.

மற்ற பகுதிகளில் அது அதற்கான தளத்தில் பொருட்கள் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ரஞ்சனியின் அலுவலக அறையின் உள்ளறை கேமரா கண்காணிப்பு, இதில் சுவரோடு சுவராக இருக்கும் ரகசிய கேமராக்களின் பதிவும் ஒருகுழுமம் 24 மணி நேரமும் தீவிரமாக கவனிக்கப்படுகிறது.

இப்படி 24 மணி நேரமும் கவனிக்கப்படுவது அங்கு வேலை பார்பவர்களுக்கே தெரியாத ரகசியம். அனைத்து இடங்களையும் போல் காட்சிகள் பதிவு செய்யப்படும் , தேவைப்பட்டால், பதியப்பட்ட காட்சிகள் எடுத்து பார்க்கப்பட்டு பிரச்சனை தீர்க்கப்படும் என்றே நினைத்தனர். இதற்க்கு மற்றொரு காரணம் அந்த அறையில் வேலை செய்பவர்கள் வந்நு செல்ல கார் செட்டிலிருந்து தனி லிப்ட் பயன் படுத்தப்பட்டது.

சூப்பர்வைசர் டிபாட்மண்டுக்கு கடையின் நடைமுறைகள் கவனிக்கப்படுவது , சில பல நிகழ்வுகளால் தெரிந்தாலும், அதை யாரிடமும் பகிர்ந்ததில்லை காரணம் பெரிய இடத்து விசயம் நமக்கெதுக்கு என்ற பயம்,

கடை ராஜன் கையிலிருந்து ரஞ்சனி கைக்கு மாறியது முதல் அவர்கள் அனாவசிய பேச்சுக்களை குறைத்துக் கொண்டனர், ரஞ்சனி யாரை எப்போது வேலையில் அலைக்கழிப்பாளோ, திடீ ரென வேலையை விட்டு எடுத்து விடுவாளோ என்ற பயம் அதிகம் இருப்பதனால், யாரும் வாயே திறப்பதில்லை.

ஆனால் மேலாளர் அணிக்கே முற்றிலும் தெரியாத ரகசியம் இந்த ரகசிய கேமரா, சுவற்றில் உள்ள டிசைன் போலவே ஆங்காங்கு பெறுத்தப்பட்டுள்ளதை அறியாமல், அதில் மாட்டியவர்கள் தான் செல்வியும் மணியும்.

ரஞ்சனி அலுவலக அறையில் அமர்ந்திருக்க கேமரா அறையில் குயில் கூவியது, அவள் தனது கணினியில் கனைக்சன் கொடுக்க, அதில் தற்போது தண்டனையறைக்கு ஒரு முதியவர் செக்யூரிட்டியால் அழைத்து செல்லும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.

திருடு பவர்களுக்கும், ஏமாற்றுபவர்களுக்கும் அங்கே இருட்டறையில் ஒருநாள் முழுவதும் அடைத்துவிடுவர், அது அந்த கடையின் நடைமுறை, அங்கே கஸ்டமரின் கவனத்தை திருப்பாமல் இருக்கவும், அதே சமயம் ஏமாற்ற வருபவர்களை கண்டிக்கவும் இந்த நடைமுறை இருந்தது.

ரஞ்சனி அந்த முதியவரை அழைத்துச் செல்லும் செக்யூரிட்டியிடம் வயர்லெஸ்ஸிஸ் பேசியவள், தனது அறைக்கு அவரை அழைத்து வரும்படி கூறினாள்.

செக்யூரிட்டி அந்த முதியவரிடம், என்னையா பேசி பேசி மண்ட காய விடுற, இரு, உனக்கு இருக்கு டி, எங்கிட்ட சொன்ன மாதிரி பையன் வருவான் சாப்பிட்டதுக்கு பில் பே பண்ணுவான் ஆனா பையனோட போன் நம்பர் கூட தெரியாதுன்னு சொல்லிப் பாரு, பெண்புலி வேட்டைய பாப்ப டி என மிரட்டிய வாறு அழைத்து வந்தார்.

ரஞ்சனி அறையில் கதவு தட்டப்பட்டது, யெஸ்.. கம் என்ற குரலையடுத்து, பயந்தவாரே அந்த சீனியர் சிட்டிசனும், செக்யூரிட்டியும் நுழைந்தனர்,

செக்யூரிட்டி, பில் பே பண்ணல மேம், என்றார்.

ரஞ்சனி, ம். .. ஐ நோ, நீங்க போலாம், நான் பாத்துக்கிறேன் என்றவள், கணினியை விட்டு, பார்வையை திருப்பவும் இல்லை, அந்த பெரியவரை கவனிக்கவும் இல்லை, கணினியில் கவனமாக இருந்தாள்.

அந்த பெரியவருக்கு அந்த அறையின் அமைதியே, மனதில் பீதியை கிளப்பியது, கதவோடு கதவாக ஒட்டி நின்றவர், ரஞ்சனி என்ன சொல்வாளோ என அவளை கவனித்தவாறு பயந்து நின்றார்.

கேமரா கதவின் வழியாக ஒரு பெண் உள்ளே நுழைந்தாள், மேம் ஒரு எமர்ஜென்சி பிளீஸ் கம் என்றாள்.

பெரியவர் அப்போதுதான் அந்த அறையை கவனித்தார், அய்யையோ அந்த ரூம்ல வச்சுத்தா அடிப்பாங்களோ,, என நினைத்தவர், பயப்பந்து தொண்டையை அடைக்க, அந்த அறையை பார்த்தார்.

ரஞ்சனி பேர் என்ன என்று கேட்க அவளை திரும்பி பார்த்தவர், ராமசாமி என்றார் எழும்பாத குரலில்,

யெஸ், ராமசாமி, சிட் என தன் முன்னிருந்த இருக்கையை சுட்டியவள், பேப்பர் பேடை அவர்புறம் நீட்டினாள்,

அதை வாங்கி அவர் இருக்கையில் அமர்ந்து, கேள்வியாய் பார்த்தார். சாப்பாட்டு நேரமாச்சு, உங்களுக்கு தேவையானத ஆர்டர் பண்ணுங்க நா இப்ப வர்றேன் என்றவள், அந்த பெண்ணுடன் கண்காணிப்பு அறைக்குள் சென்றாள்,

அந்த மங்கிய வெளிச்சமுள்ள அறை அவர்கள் சென்றவுடன் மூடிக்கொண்டது,

பெரியவருக்கு ஒன்றுமே புரியவில்லை, காலை உணவிற்கு காசு கட்டாதவனை தண்டனைக்காக அழைத்துவந்து, மதிய உணவுக்கு ஆர்டர் எழுத சொல்கிறார்களே என குழம்பினார். சாப்பிட்டு தெம்பானவுடன் அடிப்பாங்களோ, என நினைத்தவுடன் பகீரென்றது அவருக்கு.

ரஞ்சனியின் குரல் அந்த நிலையின் நிசப்தத்தை குலைத்தது, சி-40, சைலண்டா எல்- 17 ன வாட்ச் பண்ணுங்க, அவன் கையில லைட்டர் இருக்கு, அவனோட முழிசரியில்ல, குடௌன கொழுத்தீரப் போறான், இப் இட், கேட்ச் கிம், இம்மீடியட்லி என்றாள்,

அறையிலிருந்து வெளியே வந்த ரஞ்சனி, கணினியில் கண்காணிப்பு செட் செய்து அதை கவனித்தாள். ராமசாமி, அவளின் சிவந்த விழிகளை கண்டு திக் திக் என அமர்ந்திருந்தார்.

அந்த ஆளை கையும் லைட்டருமாக, அசம்பாவிதம் நடப்பதற்கு சில வினாடிகள் முன் பிடித்துவிட்டனர். உதட்டில் சிறு சிரிப்பு தோன்றி மறைய, நிமிர்ந்தவள், போயடித்த மாதிரி விழித்த ராமசாமியைப் பார்த்து, வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, என்ன? என்றாள்.

ராமசாமி ஒன்றுமில்லை என பயந்த வாறு தலையசைத்தார், ஆர்டர் எழுதியாச்சா என ரஞ்சனி கேட்ட பின் தான், அவருக்கு அவள் கையில் கொடுத்த போப்பர் பேட் ஞாபகம் வந்தது,

எனக்கு ஒரு பிரைடு ரைஸ் சேத்து எழுதுங்க, என்றவள், அதை சொல்லி முடிக்கும் முன் கதவு தட்டப்பட்டது,

யெஸ், கம் ..என்றாள் ரஞ்சனி. அறைக்குள் நான்கு பேர் ஒரு தொழிலாளியை இழுத்து வந்தனர். அவன் கண்ணத்தில் கை ரேகைத்தடம் இருந்தது, அதை கவனித்துக் கொண்டிருந்த பெரியவர் பயந்து எழுந்தார்.

அவரை கை நீட்டி அமருமாறு சைகை செய்தவள், முகம் கடுமையை தத் தெடுத்தது, அதைக் கண்டு பயந்த பெரியவர், மடமடவென ஆர்டரை எழுத ஆரம்பித்தார்.

செக்யூரிட்டி, லைட்டரை டேபிள் மேல் வைத்தார், அது ஒரு பேனா போன்று இருந்தது, உற்று நோக்கினால் அன்றி அதை லைட்டர் என்றே கண்டுபிடிப்பது கடினம், மிகவும் விலைமதிப்பான கண்ணாடியால் தயாரிக்கப்பட்டு இருந்தது.

சொல்லு, எதுக்கு குடௌன இருக்குற பொருள்ல தீ வைக்கப் பாத்த, யார் சென்னது என அவனிடம் கேள்வி கேட்டார் மேலாளர், அவன் மௌனமாக இருக்கவும் சரமாரியாக அடி விழுந்தது,

வலியால் சத்தம் வந்ததே ஒழிய வேறு எந்த விதமான பதிலும் அவனிடத்தில் இல்லை. ரஞ்சனி அடித்துக் கொண்டிருந்த செக்யூரிட்டியை கைநீட்டி தடுத்தாள், அவனிடம் பேர் என்ன? என்றாள்.

அவன் ரவி என முணுமுணுத்தான்.

சிட் என தன் முன்னிருந்த இருக்கையை சுட்டினாள்.

அவன் நடந்து வந்து, பெரியவருக்கு பக்கத்து இருக்கையில் அமர்தான்.

பெரியவருக்கு பகீரென்றது. இதே போல்தான் தனக்கும் நடந்தது என நினைத்தவர், அவன் உதட்டிலிருந்து வழிந்த இரத்தத்தை கண்டவர், பிடித்திருந்த பேனாவை இருக்கப் பற்றி பயத்தை குறைக்க முயன்றார்.

அப்போது சில வினாடிகள் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு ரஞ்சனியின் குரல் வெளிப்பட்டது.

ரொம்ப காஸ்லியான லைட்டர், யார் கொடுத்தது?

...

வாய் திறந்து பதில் செல்லமாட்ட, சரி இத நான் ஒருமுறை பயன்படுத்த வேண்டி இருக்கு, எடுத்துக்கவா?என லைட்டரை கையில் எடுத்தாள் ரஞ்சனி.
ரவிக்கு மனதில் திகில் சூழ நிமிர்ந்து பார்த்தான்.

வேற ஒன்னுமில்ல ஒரு சின்ன டெஸ்டுக்கு, மிஸ்ஸஸ் கல்யாணின்னு ஒருத்தங்க, அவங்க நினைக்கிறாங்க, என் குடோன்ல உள்ளது மட்டுந்தா பத்திக்கும், எரியும் னு, நான் சொல்றேன், அவங்க புடவையும் எரியும், அவங்களையும் சேத்து எரிக்கும்னு, நீங்க சொல்லுங்க ரவி எரியுமா ? எரியாதா? உண்மையத்தான் சொல்லல, அட்லீஸ்ட் இதையாவது சொல்லுங்க,

ரவிக்கு, கண்கள் கலங்கியது, பதற்றமானான்.

ரஞ்சனி தொடந்தாள், உங்களுக்கும் தெரியலையா? நோ பிராப்ளம், டெஸ்ட் பண்ணியே பாப்போமா? எரியுதா? அணையுதான்னு?

பிளீஸ் மேடம், எங்கம்மாவுக்கும் இதுக்கு எந்த சம்பந்தமும் இல்லை, என்ன என்னவேனா பண்ணுங்க என்றான் பதறிய குரலில்.

சரி அவங்களுக்கு சம்பந்தம் இல்ல, வேற யாரு இத செய்யச் சொன்னது? ம்.. சொல்லு இல்ல இந்த லைட்டர நான் பயன்படுத்த வேண்டி வரும், நீ நினைக்கிறத விட சேதாரம் அதிகமா இருக்கும், ஆதாரம் தான் கிடைக்காது என்றாள்.

மேடம் நாங்க மிடில் கிளாஸ், நான் வெறும் உயிரற்ற பொருளத்தான் எரிக்க முயன்றேன், நீங்க என்னோட அம்மாவ கொல்ல நினைக்கிறீங்க . அந்த பாவம் உங்கள சும்மா விடாது,

நானும் புடவைய மட்டுந்தான எரிக்க யூஸ் பண்ணுவேன், நீதான ஆளக்கொன்னா பாவம்ன, சோ ஒன்லி சோரி நாட் அ பியூபிள் என்றாள் சற்று எகத்தாளமாய்.

சற்றே கடுமையை தத்தெடுத்தவள், ஓ நீ குடௌன கொழுத்தினா அது சின்னது, கடை எரிஞ்சு நான் கஷ்டப்பட்டா அது சின்னது, அதே உங்க வீட்டோட ஒரே ஒரு சேரின்னாலும் அது பெரிசு, ஏன்னா நீ மிடில் கிளாஸ்,

புடவையோட உங்கம்மா இறந்தா அது பெரிசு, என்ன நம்பி வேலைக்கு வந்த என்னோட வொர்கர் உயிர்னா உனக்கு ஒன்னுமில்ல, அது எத்தன உயிரா இருந்தாலும் ரைட்? என்றாள்,

முட்டாள் அது எவ்வளவு சீக்கிரம் பத்திக்கும்னு தெரியுமா, நீயும் சேந்து புணமாயிருப்படா பரதேசி. எதையும் பத்தி தெரியாத முட்டாள், உன்ன ஏவினவனுக்கு எல்லாம் தெரிஞ்சுதான், எனக்கும் சேதாரம் பன்னி உன்னையும் கொன்னு , அவன் எல்லா குற்றங்களிலிருந்தும் தப்பிக்க நினைச்சுருக்கான். இது தெரியாம உன்ன கொல்ல நினச்சவனையே காப்பாத்துறதக்கு அடிவாங்கீட்டு இருக்க, அதுவும் உன் உயிர காப்பாத்தின எங்கிட்ட உண்மைய மறைக்கிறதுக்கு, அடிமுட்டாள் டா நீ.

ரவியின் கண்கள் இப்போது யோசனையை தத்தெடுத்தது, அதைக் கண்ட ரஞ்சனி தனக்குள் சிரித்துக்கொண்டு, அவனின் யோசனைக்கு தூபம் போட்டாள்.

எப்படி நான் சாவேன்னு யோசிக்கிறயா? இந்த லைட்டர்ல உள்ள கெமிக்கல் அப்படி, மத்த லைட்டர் மாதிரி கிடையாது, இது நெருப்பு பட்டவுடன், வெடிக்கும் தன்மையுடையது, இது லிட்டில் பாம் போல செயல்பட்டு, சுத்தி இருக்கிற இடத்துல சிதறி, எல்லா இடங்களையும் தனித்தனியா கொள்ளி வைக்கும், அப்படி கொளுத்தும் போது, யூ ஆர் த ஃபஸ்ட்டு ப்ர்சன் டு டை, அடுத்துதான் பொருட்கள்.

நிஜமா மேடம் என்றான் பதறிய குரலில், நீ என்னோட வொர்க்கர், சோ சொன்னேன், நம்புறதும் நம்பாததும் யூவர் விஷ்,என்றாள்.

உன்ன போலீஸ்ல பிடிச்சுக் குடுக்க ஆதாரம் கேக்கல, உன்ன காப்பாத்தத்தான் கேக்கிறேன். அவனுக்கு நீ மாட்டிகிட்டது தெரிஞ்சுருக்கும், நீ இங்க உண்மைய சொன்னாலும், இல்லாம போனாலும், அவன் நீ மாட்டிக்கிட்டதால உன்ன நிச்சியம் கொன்னுடுவான், சோ அவன் கிட்ட இருந்து உன்னையும் உன்னோட பேமிலியையும் காப்பாத்தத்தான் நான் இவ்வளவு பொறுமையா இருக்கேன்.

ரவி, நிசம்மாவா மேடம், இவ்வளவு பெரிய கடைய நஷ்டப்படுத்த உன்ன தேர்ந்தெடுத்த மாதிரி, உன்ன உளவு பாக்க ஒருத்தன செலக்ட் பண்ணீருக்க மாட்டானா? நீயே யேசி...

எனக்கு பயமா இருக்கு மேடம், பயப்படாத அவன அரெஸ்ட் பண்ணீரலாம், உனக்கு தெரிஞ்சத சொல்லு.

இது ஒரு கொரியர் ல வந்தது, எங்கிருந்து வந்ததுன்னு எழுதல, அதோட ஒரு லெட்டரும், இந்தமாதிரி உங்க கடைல செய்யச் சொன்னாங்க,

கொரியர் கவர் எங்க,

ரூம்ல...

எவ்வளவு பணம் கொடுத்தான்?

அது...

சொல்லு , அவன பத்தி தெரிஞ்சுக்கத்தான், ம்..

ஐம்பதாயிரம் அக்கவுன்ட்ல போட்டாங்க, வேல முடிஞ்சதும் அதே மாதிரி, இரண்டு லட்சம் போடுறதா சொன்னாங்க, என்றான் தயங்கியவாறே..

ரஞ்சனி உறுத்து விழிக்கவும், சாரி மேடம், என்னோட தங்கச்சி கல்யாணத்துக்கு பணம் பிரட்ட முடியல அதனால தான் இத செஞ்சுட்டேன். மண்ணிச்சுடுங்க மேடம்,

சி- 20, இவனோட இவன் ரூமுக்கு போய் கவர், லெட்டர், அக்கவுண்ட் பாஸ் புக் எல்லாத்தையும் கலைட் பண்ணுங்க, எனவும் அவனை இழுத்துக்கொண்டு அவர் வெளியேறினார்.

பெரியவர் நடந்த விசாரணையை ஒரு திகில் மனதோடு பார்த்துக் கொண்டிருந்தார். அனைவரும் சென்ற பின்னும் அவர் அசையவில்லை.

ரஞ்சனி, ராமசாமி எழுதூட்டூங்களா? எனவும், ம்.. மேடம் என எழுதியதை நீட்டினார்.

அவரின் படபடப்பை கண்டவள், தனக்குள் சிரித்துக் கொண்டு, முதல்ல சாப்புடுவோம், அடுத்து உங்க கேச கவன்..னிக்கிறேன் எனவும்,

அவர் பயத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தார்.

அவர்களுக்கான உணவும், சி-20 யும் ஒரே சமயத்தில் நுழைந்தனர்.

உணவை ராமசாமியிடம் நீட்டியவள், ம்.. சாப்புடுங்க என மிரட்ட , கீ கொடுத்த பொம்மை போல வோகவோகமாய் செயல்பட்டார்.

மேடம் என கைப்பற்றியதை டேபிளில் வைத்தார் சி-20 , மேடம் அவன என்ன செய்ய, என்றார்.

அக்கவுண்ட் டிபாட்மெட்ல சொல்லி கணக்கு முடிங்க, கடைலையோ, இல்ல வெளியிலேயோ மேட்டர் லீக் ஆகக் கூடாது ஓகே,

அவன அப்படியே விட்டுடவா?

ஏன் அவனோட காயத்துக்கு மருந்து தடவி விடனுமா...

சி-20 வாயை மூடிக்கொண்டார். அவன நான் பாத்துக்கிறேன், இப்போதைக்கு அமைதியா இருப்போம், ஓகே...
யெஸ் மேடம்.

யூ கேன் கோ...
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன் கூண்டுப்புலியாய் தவித்தான். தனது முதல் அடி தோற்க்கும் என அவன் கனவிலும் நினைக்கவில்லை.

இதுவரை வெற்றிகளை காலடியில் போட்டு மிதித்தவன், முதல் தோல்வியை சகிக்க முடியவில்லை,

தெரியாத ஒன்றை கற்று தேர்ந்தும், அதில் வெற்றியை பதித்து, வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் எதிர் காற்றிலே தூடுப்பு போட்டு பழகியவனுக்கு, இப்படி தோல்வியை ஏற்க மனம் முண்டியது.

மனம் அமைதியடைய மறுத்தது, ரஞ்சனியின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். அவளின் கண்கள் இவனை கேளி செய்வது போலவே இருந்தது.

டேபிளில் வரைவதற்கு வைக்கப்பட்டிருந்த காம்பசை எடுத்து அவள் கண்களை குத்திக்கிளித்தான்.

உனக்கு அடுத்து மரண அடிதான்டி, தப்பாது என்றான். தனக்குள் சபதமெடுத்தது போல்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி தனது வீட்டன் பால்கனியில் யோசனையில் அமர்ந்தாள். யார் இந்த ஆனந்த்? அவளுக்கு என்ன யோசித்தும் ஒன்றும் விளங்கவில்லை.

அன்று கிடைத்த எல்லா ஆதாரங்களும் ஆனந்த் என்ற பெயரை நோக்கியே முடிகிறது. எனக்கு யாரென்றே தெரியாத நபர் தன்னை அழிக்க முயல்வாரா? அம்மா, அப்பாவிற்கு தெரிந்திருக்குமோ என நினைத்தாள், ஊகூம் அவர்களுக்கும் தெரியவில்லை.

யார் ஆனந்த் அப்படி என்ன செய்தான் என்ற அவர்களின் கேள்விக்கு ஒன்றுமில்லை, ஒரு கொரியர் வந்தது, ஆனந்த் என்ற நபர்ட இருந்து, ராங் அட்ரஸ் போல, ரிட்டன் பண்றதுக்குதான் கேட்டேன் என எப்படியோ சமாளித்தாகி விட்டது

ஆனந்த் என்ற நபர் பணத்தை அவனுடைய அக்கவுண்டுக்கு நேரடியாக போட்டுள்ளார். அவர் பெயரிலிருந்துதான் கடிதமும் வந்துள்ளது,

ஆனால் ஆனந்த் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது, எப்படி சாத்தியம்? அவன் போனுக்கு வந்த பூத் காலும், கொரியர் ஸ்டாம்பும் கோயம்புத்தூர் என கண்டுபிடித்தாகிவிட்டது,

இதைத் தவிர வேற எதுவுமே தெரியவில்லை, இறந்தவன் பெயரைப் பயன்படுத்தி விளையாடுபவன் யார்? அவனோட அடுத்த மூவ் என்னவா இருக்கும்? அவனின் குறி கடைதானா? இல்லை நானா என மனதில் யோசித்தவள் அனைத்து ஆதாரங்களையும் டிராவில் வைத்து பூட்டியவள், மாட்டுவ டா, அப்ப இருக்கு உனக்கு என பல்லை கடித்தாள்.

பலிகொடுப்பாளா? பலியாவாளா? .
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான்காம் பாகம்..

ராமசாமி பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை, சாப்பிட்டு முடித்தவுடன், என்னாச்சு? உங்க கேஸ் என்ன? என்றாள் ரஞ்சனி கூலாக,

சற்றுமுன்னர் ஒருவன் வாங்கிய அடியும், ரஞ்சனியின் மிரட்டலும் மனதில் எழ, மடமடவென உண்மையைக்கூறினார்.

அம்மா நான் கடலூருமா, எம்மகன் வீட்ல இங்க சென்னையில ஒரு ஆறு மாசமா இருக்கேன், எனக்கு அங்க எம் மருமக என்ன நடத்துற விதம்பிடிக்காம, ஏதாவது முதியோர் இல்லத்துல சேத்துவிட சொன்னேன்.

அவன் பொட்டாட்டியையும் அடக்க முடியாம, எங்கிட்டையும் பேச முடியாம கஷ்டப்பட்டான், பாவம்மா அவன், அதனாலதான் அப்படி சொன்னேன்.

அவனுக்கு விருப்பமே இல்லாமதா சரின்னு சொன்னான். அப்பறமா அப்பா அங்க போனா போட்டுக்க டிரஸ் வேணும், உங்ககிட்ட இருக்குறது பழசாயிருச்சு, புதுசா நாலு செட் எடுப்போம்னு கூட்டீட்டு வந்தான். நமக்கு இந்த ஊரு பழக்கமில்லையா,..

அவன் அப்பா நீ இந்த கடைல துணி எடுத்துட்டு சாப்பிட்டுட்டு இரு, நா வந்து கூப்பிட்டுபேன். அப்போ உனக்கு பில் கட்டி கூப்பிட்டு போறேன், எனக்கு உங்கூட இருக்க ஆசதான், ஆனா மீட்டிங் இருக்குன்னு கெளம்பீட்டான், சாயங்காலத்துக்குள்ள வந்துடுவாம்மா என்றார், அனைத்தையும் சொல்லிவிடும் பதட்டத்தில்

ரஞ்சனி அவரின் சிறிது பதட்டமான பேச்சை இதழை எட்டாத சிரிப்பில் கேட்டுக் கொண்டிருந்தாள்.

சரி நீங்க கீழ பர்சேஸ் பண்ணீட்டே உங்க பையன் வராரான்னு பாருங்க, வந்தா பில் பே பண்ணீட்டு போங்க என்றாள்,

எம்மேல எந்த தப்பும் இல்லமா, நீயாச்சும் நம்பும்மா என அப்பாவியாய் அவர் மொழிய, ரஞ்சனி சிரித்தே விட்டாள்.

மகன் வரவில்லை அவர்தான் திரும்ப ரஞ்சனி அறைக்கு அழைத்துச்செல்லப் பட்டார்.

திகில் சூழ்ந்த மனதில் அறையைத் திறந்தால், அங்கே ரஞ்சனி இல்லை அவருக்கான இரவு உணவு இருந்தது.

கூட்டிச்சென்ற மேளாளர் சாப்பிட்டுவிட்டு இங்கேயே தங்கும் படியும் நாளை மேடம் வந்து பார்ப்பார்கள் என்றும் சொல்லி கதவை இழுத்து பூட்டிவிட்டு சென்றார்.

இப்படியே இந்த கடையை சுற்றுவதும் சாப்பிடுவதும், ரஞ்சனியின் அறைக்குச் செல்வதுமாக இரண்டுநாட்கள் முடிந்துவிட்டது.

ராமசாமிக்கு மகன் வந்து தன்னை கூட்டிச்செல்வான் என்ற நம்பிக்கை போய்விட்டது.

ஆனால் ரஞ்சனியோ, ஒன்றும் சொல்லாமல், வந்தா கூட போங்க, பில் பே பண்ணீட்டு என்ற பாட்டை திரும்பத்திரும்ப படித்தாள்.

திட்டவும் இல்லை, எதுவும் செய்யவில்லை, நீங்கள் சொல்வது உண்மையா என்றுகூட கேட்கவில்லை.

ஆனால், ராமசாமிக்குத்தான் காசுகொடுக்காமல் மூன்றுவேலையும் சாப்பிடுவது, பிடிக்கவில்லை.

ரஞ்சனியிடம் சென்றவர், எம்பையன் வரமாட்டான் மா, என்னத் தொலைக்குறதுக்குத்தான் இங்க வந்து விட்டுட்டு போயிருப்பான் போல, வீட்ட வித்த காசு எம்பேர்ல போடுப்பா, அந்த வட்டீலயே முதியோர் இல்லத்துக்கு காசு கட்டீருவேன்னு சொன்னேன். அது பிடிக்காமத்தான் இப்படி பண்ணீட்டாம் போல என புலம்ப ஆரம்பித்தார்.

அவர் முன் கைநீட்டி அவர் பேச்சை தடுத்தவள், வருவார், அனேகமா பேமிலியோட உங்கள வந்து கூட்டீட்டு போவார், என்றாள் திடமாக அவரைப் பார்த்து.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழுப்புறத்தில் ரவி அவன் வீட்டிற்கு வரும்போது தெருவே அங்கு கூடி நின்றது.

கூட்டத்தை விளக்கிவிட்டு பார்த்தால், வீடு முழுவதும் எரிந்திருந்தது,

பக்கத்துவீட்டுக்காரன் கேஸ் வெடிச்சிருச்சுப்பா, நாங்க தான் அணச்சோம், நல்ல வேல வீட்ல யாருமில்ல என சொல்லிவிட்டு சென்றான்.

கருப்பாய் சாம்பலான வீட்டை பார்வையிட்ட ரவிக்கு ரஞ்சனியின் வார்த்தை ரீங்காரமிட்டது, சேதாரம் அதிகமிருக்கும், ஆதாரம் தான் கிடைக்காது

எல்லாம் தெரிந்தும், எதையும் வெளியில் சொல்ல முடியாமல், இருக்கமாய் அமர்ந்திருந்தான்.

சிறிது நேரத்தில் பதற்றமாக வந்த அவன் குடும்பத்தினர், வீட்டின் நிலை கண்டு கலங்கித்தவித்தனர்.
 
Top