All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உன்னை நான் யாசிக்கின்றேன் - நிறைந்தது

Status
Not open for further replies.

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாசகம் -01

அவள் கண்களினை கூர்ந்து நோக்கியவன் "எனக்கு என்ன வேண்டும் என்று எனக்கு நன்றாகவே தெரியும் மிஸ் சன்விதா சர்மா, உன்னுடைய பதில் என்ன என்று மட்டும் சொல்லு"



சன்விதா அமைதியாக அவனை நோக்கியவள் "அம்மாவின் பதில்தான் என்னுடைய பதிலும் மிஸ்டர் அச்சுத கேசவன், நோ. ஹா... இன்னுமொன்று மீண்டும் இது போல் வேலை நேரத்தில் தொந்தரவு செய்யாதீர்கள்"



மெல்ல தலையசைத்தவன் கூறினான் "இதற்காக நீ வருத்தப்படுவாய்".



அவனை அலட்சியமாய் நோக்கியவள் நிமிந்தவாறே அந்த எம்டியின் அறையினை விட்டு சென்றாள்.



அவன் மூஞ்சியும் முகரையும் ஒரு கோட்டு சூட்ட போட்டுட்டு கார்ல வந்த எல்லோரும் பின்னல் வருவாங்க என்று நினைப்பு கணனியில் கைகள் வேகமாக வேலை செய்ய மனதினுள் அச்சுதனை தாளித்து கொட்டினாள்.



எம்டியின் அறையிலிருந்து வெளியே வந்தவனுக்கு தன்னைத்தான் மனதினுள் தாளிக்கிறாள் என்பது தெளிவாகவே புரிய அவளருகே வந்து குனிந்து காதருகே அழைத்தான் "ஹாய் சன்விதா" அவன் உதடுகள் கன்னத்தினருகே அபாயமான தூரத்தில் தொடவா வேண்டாமா என பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தது. அவனை இவ்வளவு அருகில் கண்டதும் பயத்துடன் பின்புறமாக சரிந்து பார்த்தவளை பார்த்து "நான் வெளியே காத்திருக்கின்றேன் அலுவலக நேரம் முடிந்ததும் நாம் பேசலாம் சரியா" என்றவாறே நெற்றியில் முட்டினான். அவனின் அழிச்சாட்டியத்தில் சன்விதா ஆவென வாயை திறக்க அதை ஒரு விரலால் முடியவன் சிறு சிரிப்புடன் வெளியேறினானான்.



எரிச்சலுடன் அவளது எம்டியின் அறையில் நுழைந்தவள் "இந்த மாதிரி வெளியாட்கள் எல்லோரும் வந்து உங்கள் அலுவலகர்களிடம் பேசுவது போலவே நடந்து கொள்வீர்கள், இங்கு நீங்கள் முதலாளிய இல்லை அவனா?, இதுவே உங்கள் சகோதரிகளில் ஒருவராக இருந்தால் இப்படி செய்வீர்களா" சரவணன் பதில் கூறுவதற்குள் பொறிந்து தள்ளினாள்.



சரவணன் அமைதியாக பார்த்தவாறே அமரும்படி சைகை செய்தான். மிஸ் சர்மா நான் இந்த தொழிலுக்கு புதிது, என்ன மாதிரி சிறிய தொழிலதிபர்கள் எல்லாம் அவனை போல் ஒரு பிசினெஸ் டைக்கூனை எதிர்த்து நிற்க முடியாது அத்துடன் இந்த கம்பெனியின் மெயின் பாட்னர். அவனை எதிர்த்து உங்களுக்கு உதவ முடியாது மிஸ் சர்மா, என்னை நம்பி இந்த கம்பெனியில் வேலை செய்பவர்களையும் நான் யோசிக்கனும் இல்லையா? அவன் கேசவன் அச்சுத கேசவன் AK எனக்கு தெரிந்து அவனை எதிர்த்தது ஜெயித்தவர் கிடையாது".



சரவணன் சொல்வதிலிருந்த நியாயம் புரிந்தாலும் வாய்க்குள் முணுமுணுத்தாள், ஆடியோ ரீலீஸ்ல ஹீரோவ புகழுர மாதிரி புளுகிறானே. வேறு எதுவும் பேசாமல் திரும்பியவளைக் காண சரவணனுக்கு பாவமாகவும் இருந்தது அவள் குழந்தைத்தனத்தை பார்க்க சிரிப்பும் வந்தது சொல்வதை புரிந்து கொள்கிறாள் இல்லையே என்று கோபமும் வந்தது. அனைத்தையும் உடைப்பில் போட்டவன் அவளை பார்த்து கேட்டான். "ஒரு நிமிடம், அவன் உங்களை திருமணம் செய்துகொள்ள தானே கேட்கிறான், வேறு எந்த தப்பான உறவுக்கும் இல்லையே, ஆணழகன் பணக்காரன், அவனை மறுக்க எந்த காரணமும் இல்லையே"



சன்விதா திரும்பி பார்க்காமலே பதிலளித்தாள் "பணத்தை விட முக்கியமானவை நிறைய இருக்கு சார், உதாரணமா குணம், ஒழுக்கம் "



*************

அலுவலகத்தினை விட்டு வெளியேறியவள் நீண்ட மூச்சினை விட்டாள். அவளது ஸ்கூட்டி மெக்கானிக் ஷெட்டில் சர்வீஸ் போட கொடுத்தபடி நிற்கிறது. குறைந்தது ஒரு வாரமாகும் என கூறிவிட்டான் மெக்கானிக் படுபாவி. பஸ் நிறுத்தத்தில் நின்ற சன்விதாவின் கண்கள் அந்த தெருவினை ஒரு அலசு அலசியது அவனது SUV எங்காவது தென்படுகின்றதா என்று அதே நேரம் மனம் அவன் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தன்னை சுற்றி வருவதனை நினைத்தது முதலில் யாரோ பணக்கார ரோக்கின் பொழுது போக்கு கண்டுகொள்ளாமல் விட்டால் தானே விலகி போய்விடுவான் என்று தான் நினைத்தாள். கடைசியில் பார்த்தால் அவள் அலுவலகத்தின் முதலாளியாக வந்து நிற்கிறான். போதாகுறைக்கு சக ஊழியர்கள் எல்லாம் அவன் காரை கண்டாலே உன் ஆள் வருகின்றார் என கூறி விலகத் தொடங்கினார்கள் மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டாள். உனக்கென்று வந்து வாய்க்கிறதே விதா வைரவருக்கு டாக் வாய்த்தது போல். கடுப்பாகி இந்த பஸ் வருமா வராத என யோசித்தவாறே திரும்பி பார்க்க அவனின் SUV அவள் முகத்தை உரசினால் போல் வந்து நின்றது.



காரின் கருப்பு கண்ணாடியை பார்த்து முறைக்கவே, கண்ணாடியை இறங்கியவன் கூலரை கழட்டியவாறே "ஹாய் சன்விதா" அவளைப் பார்த்து புன்னகைத்தான். மூஞ்சியும் முகரக்கட்டையும் பார் பல்லை கழட்டி கைல குடுக்கணும். நினைக்க மட்டும் தான் செய்தாள். ஏனென்றால் அவனின் ப்ளாக் ப்ளாசாரினையும் வைட் ஷிர்டினையும் மீறி தெரிந்த உடல்கட்டு அவனை அப்படியெல்லாம் அடித்துவிட முடியாது என எச்சரித்தது.



முழங்கையினை காரில் ஊன்றி விரல்களில் கூலரை வைத்து சுழற்றியவாறே கேட்டான் "வாவேன் வீட்டில் இறக்கி விடுகின்றேன்".



பெரிய்ய்ய காதல் மன்னன் அவனிடம் பொரிந்து தள்ள வாயெடுத்தவள் சுற்றி இருப்பவர்களின் சுவாரசியமான பார்வையில் தன்னை நிதானித்தவளாக பல்லை கடித்தவாறே "நாம் கொஞ்சம் பேசவவேண்டும் மிஸ்டர் அச்சுத கேசவன்".



ஒரு கணம் கண்களில் மின்னல் மின்னி மறைய "ஷுயர் எங்கே போவோம் ஸ்டார் ஹோட்டல், கஃபே டிரைவ் இன்ஸ் சாய்ஸ் இஸ் யுவர்ஸ்"



பல்லை கடித்தவள் இவன் போவதற்குள் என் பல்லெல்லாம் போயிரும் போல இருக்கே கோபத்தினை அடக்கி "இதோ பாருங்கள் மிஸ்டர் அச்சுத கேசவன் நாமிருவரும் டேட்டிங் போகல, உங்களோட கொஞ்சம் பேசணும் அவ்வளவுதான், காரிலேயே பேசுவோம்"



நெஞ்சில் கைவைத்து லேசாக தலைசாய்த்து "அப்படியே ஆகட்டும் மஹாராணி" என்றவனுக்கு ஏனோ எல்லாம் விளையாட்டாகவே இருந்தது. அவனுக்கு அவள் தன்னோடு வர சம்மதித்ததே தித்திக்க கூலரை ஷிர்டில் மாட்டியவன் ஒரு புறமாக சரிந்து காரின் கதவை திறந்துவிட்டான்.



காரினை போக்குவரத்து குறைந்த சாலையில் செலுத்தியவன், முகங்கொள்ள புன்னகையுடன் "சோ..." என்றான்.



"மிஸ்டர் அச்சுத கேசவன்...."



"அச்சுதன்"



"ஹான்..."



"என் பெயர் அச்சுதன், அச்சு, சுதன் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்"



"அப்ப கேசவன் அப்பாவின் பெயரா " எரிச்சலுடன் கேட்டாள்.



"இல்லை அதுவும் என் பெயர் தான்" புன்னகையுடன் பதிலளித்தான்.



"இரண்டு பெயரா"



"ம் அம்மாவுக்கு அச்சுதன் என்ற பெயர் வைக்கணும் என்ற ஆசை அப்பாவுக்கு கேசவன், அதன் இரண்டு பெயரையும் ஒன்றாக்கி வைத்துவிட்டார்கள் எப்படி..."



"ஐடியா நல்லாத்தான் இருக்கு"



அவளை ஒரு கணம் பார்த்தவன் "சோ உன் பெயருக்கு என்ன அர்த்தம்" தெரிந்திருந்ததும் கேட்டான்.



"அமைதி.... என் பெயரை பற்றி பேசவா என்னை அழைத்து வந்தீர்கள்" எரிச்சலுடன் கேட்டாள். அவனோ புன்னகை மன்னனாக இருந்தான்.



"அமைதியை விரும்புவாள் இல்லையா" கார் கல்யாண ஊர்வலம் போல் ஊர்ந்து கொண்டிருந்தது.



"அதோடு நம் திருமணத்தினைப் பற்றியும் பேச, எப்போது வைத்துக்கொள்ளலாம், ஹால் திருமண வேலையெல்லாம் நானே பார்த்துக்கொள்கின்றேன் எப்போது என்பதை மட்டும் சொல்லு" கண்களில் கவனத்தோடு கேட்டான்.



அவன் அழிச்சாட்டியத்தில் கண்களை முடிதிறந்து பார்த்தவள் ஒரு கணம் காரில் ஏறியதிலிருந்து இருவருக்குமான சம்பாஷணையினை அசைபோட்டவள் எங்காவது தன் சம்மதத்தினை சொன்னேனா என்று. அவனை பார்த்தவளுக்கு அவன் கண்களில் இருந்த கவனம் புரிய உள்ளூர ஒரு குரல் எச்சரித்தது இவன் அபாயமானவன் கவனமாய் இரு என்று. அத்துடன் இவ்வளவு திறமை இல்லாமல் தொழிலில் கொடி கட்டி பறக்கவும் முடியாது என பாராட்டு பத்திரத்தினையும் சேர்த்து வழங்கியது. அதை உடைப்பில் போட்டவள்



"அடப்பாவி..... நான் எப்போது திருமணத்திற்கு சம்மதம் சொன்னேன்."



"இல்லையா... பெயர் விபரம் எல்லாம் கேட்க நான் நினைத்தேன் உனக்கு சம்மதமோ என்று" கள்ள சிரிப்புடன் பதிலளித்தான்.



"இதோ பாருங்கள் மிஸ்டர் அச்சுத கேசவன்..."



இடையிட்டவன் "அத்தான்.." அழுத்தமாக சொன்னான்.



"ஹான்...." குழப்பத்துடன் பார்க்கவே



"இல்ல என் பெயர் சொல்லி கூப்பிட விரும்பாவிட்டால் அத்தான் என்று கூப்பிடு என்று சொன்னேன்"



அவள் குழப்பம் தீராமல் கிளிப்பிள்ளையாய் திருப்பி படித்தாள் "அத்தான்.."



சட்டென பிரேக் அடித்தான். அவளை திரும்பி பார்த்தவன் கண்களில் தென்பட்ட வேட்கையில் பயந்து வாயினை கைகளால் மூடி கார் கதவோடு ஒன்றினாள் சன்விதா.



அவளின் பயத்தை பார்த்தவன் கையை முஷ்டியாக்கி வாயில் வைத்து கண்களை மூடி தன்னை நிலைப்படுத்தியவன் மீண்டும் காரை ஸ்டார்ட் எடுத்தவாறே புன்னகையுடன் கூறினான் "நம் திருமணம் முடியும் மட்டும் நீ என்னை அப்படி கூப்பிடாமல் இருப்பதே நல்லது"



இன்னும் அது நிலையில் இருந்தவாறே தலையை வேகமாக ஆட்டியவளை பார்த்து சிறு சிரிப்புடன் உல்லாசமாக கேட்டான் "என்ன கல்யாணம் செய்வோமா".



அவனது சீண்டலில் பழைய நிலைக்கு மீண்டவள் சட்டெனெ தன்னையும் அறியாமல் கேட்டள் "பின் எப்படி கூப்பிடட்டும் "



"வேறு எப்படி வேண்டுமானாலும் கூப்பிடு"



இனிமையான குரலில் "ஆடு, மாடு, எருமை, கிங்காங் டைனோசர்...... " நாடியில் கைவைத்து யோசித்தவளை நோக்கியாவன் கண்களில் ரசனை வழிந்தது.



அவனையும் மீறி அவன் கைகள் நீண்டு தலையை பிடித்து செல்லமாக ஆட்டியது. அதுவரை அவளை சுற்றியிருந்த மாயவலை அறுந்து விழ அவள் எதற்கு அவனுடன் வந்தாள் என்பதும் நியாபகத்திற்கு வந்தது.



"தொடக்கூடாது " சட்டென கைகளை தட்டிவிட்டாள்.



"சரி சரி தொடலை "



"மிஸ்டர் அச்சுத கேசவன்"



உதட்டை கடித்தவாறே அவளை திரும்பி பார்த்தவன் "ஹ்ம்ம்...." என்றான்.



"இதோ பாருங்கள் எனக்கு என்று சில கொள்கைகள் இருக்கு, எனக்கு வரும் கணவர் எப்படி இருக்கனும் என்று கனவும் இருக்கு"







"ஹ்ம்ம்..."



"அதோட எனக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம் அதற்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை"



"ஹ்ம்ம்...."



"என்னுடைய கணவர் ராமனாக இருக்கனும் கண்ணனாக இல்லை" கண்களில் கனவு மிதக்க "என்னை மட்டுமே காதலித்து என்னை மட்டுமே தொடுபவராக இருக்க வேண்டும்...."



மேற்கொண்டு எந்த சத்தமும் வராமல் போகவே திரும்பி பார்த்தவன் கண்களில் விழுந்தது லேசாக சிவந்திருந்த அவள் கன்னமும் கனவு மிதந்த விழிகளும்.



அவன் புன்னகைத்தான் "இதுதான் உன் பிரச்சனையா" அவள் கைகளினை தன் கைகளில் எடுத்தவன் மென்மையான குரலில் "நான் காதலிக்கும் முதல் பெண்ணும் கடைசி பெண்ணும் நீதான்"



அவன் முகத்திலிருந்த மென்மையினை பார்த்த சன்விதா கைகளை விலக்காமல் மென்மையாக கேட்டாள் "நீங்கள் ராமான..."



அவள் கைகளினை விடுவித்தவன் உதட்டை கடித்தவாறே மெல்ல இல்லை என தலையசைத்தான்.



"எனக்கு என் கணவர் ராமனாக இருக்கணும், அது நீங்கள் இல்லை " மென்மையாகவே கூறினாள்.



அவன் முகத்தில் இருந்த மென்மை மெதுவே மறைய உணர்ச்சியற்ற பாறை போலான முகத்துடன் மெல்ல தலையசைத்தவாறே கூறினான் "உன்னோட இந்த கனவை மட்டும் என்னால் நிறைவேற்ற முடியாது ப்ளீஸ்"



"இந்த தகுதி இல்லாத ஒருவரை நான் மணமகனாக ஏற்க முடியாது " அழுத்தமாக கூறினாள்.



முகம் மேலும் இறுக "அனைத்து கனவுகளும் நனவாவதில்லை" வறண்ட குரலில் கூறினான்.



ஆழ்ந்த மூச்சினை எடுத்துவிட்ட சன்விதா பொறுமையாக சொன்னாள் "கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள் நான் உங்களை திருமணம் செய்ய முடியாது"



"ஏன்... மறுபடியும் அதே காரணம் வேண்டாம் வேறு எதாவது இருந்தால் சொல்" எதிரே இருந்த பாதையில் கண்களினை பதித்தவாறே கூறினான்.



அவனை முறைத்தவள் "நான் வேறு ஒருவரை காதலிக்கின்றேன் போதுமா காரணம்" மெதுவே சென்றுகொண்டிருந்த கார் இப்போது நின்றே விட்டிருந்தது.



"ஏய்ய் " அடிக்க கையோங்கியவன் அவளது பயத்தினைப் பார்த்து ஸ்டேரிங் வீலில் ஓங்கி அடித்தவன் அதையே இறுக பிடித்தான். ஸ்டேரிங் வீலை பிடித்திருந்த கரங்களின் முட்டி வெண்மையாக மாறத் தொடங்கியது.



"தென் போர்ஹெட் ஹிம் அண்ட் லேர்ன் டு லவ் மீ"



சன்விதா அதிர்ந்து போய் அவனை பார்த்தாள். இவ்வளவு நேரம் தன்னிடம் பேசியவன் முகமா இது கடும்பாறை அது போல் அவன் குரலும் எதுவித உணர்ச்சியுமற்று இருந்தது.



"மனுஷன் பேசுவான உங்களிடம், கதவை திறங்க நான் போகணும்" கார் கதவை திறக்க முயன்றவாறே



எதுவித அசைவுமின்றி அமர்ந்திருந்தவன் கைகளினை மட்டும் அசைத்து அன்லாக் செய்ய போனவனின் விரல் இடையிலே நிற்க கேட்டான் "அவன் பெயர் என்ன?"



"அவன் பெயர்... அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு, நீங்க கதவை திறவுங்கள் " அவள் குரல் அவளையும் மீறி கெஞ்சியது.



அவன் விரல் அவனையும் மீறி கதவை திறந்துவிடவே, கைப்பையினை எடுத்தவாறு இறங்கியவள் "குட் பாய், மிஸ்டர் அச்சுத கேசவன், நாம் இனி சந்திக்காமல் இருந்தால் நல்லது" திரும்பியும் பாராமல் நடக்க தொடங்கினாள்.



அவள் போவதையே இறுகிபோய் எதுவித அசைவுமின்றி பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை மெதுவே மானினை வேட்டையாடும் புலியின் பார்வையாக மாறியது.



யாசிப்பன்....



இது ஓர் காதல் பயணத்தின் யூடி கொஞ்சம் லேட் ஆகும் dears மன்னிச்சிருங்க மறந்திராதீங்க எல்லாத்தையும் மனோஜ் பண்ண இப்ப தான் பழகிறான் ப்ளீஜ்

இதை பற்றி உங்கட கருத்தையும் சொல்லிட்டு போங்க ப்ளீஜ்
 
Last edited:

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்பூக்களே....
வியூ வந்திருக்கு கமெண்ட்ஸ் லைக் ஒன்றையும் காணோம் சரி இந்த ரைட்டர் நேரத்துக்கு யூடி கொடுக்காது இதுக்கு கமெண்ட்ஸ் வேறயா என்று நினைச்சிருப்பங்களோ '
ums Priyabalaji suganya17 ரொம்ப நன்றிம்மா அப்படியே ஆளில்லாத கடைல டீ ஆத்தின பீலிங்ஸ் உங்களால் இல்லாமல் போச்சு

 
Status
Not open for further replies.
Top