All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உன் கண்ணில் என்னை கண்டேன் epi 9

Karthikpriya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன் கண்ணில் என்னை கண்டேன்
9
வழக்கம் போல் வர்ணாவின் அப்பா சீக்கிரம் பாங்கிற்கு சென்றுவிட்டார். ப்ரேமும் நேரத்திற்கு தயாராகி பள்ளிக்கு சென்றுவிட்டான். வர்ணா மட்டும் இன்று தாமதமாக எழுந்து, பெட்டில் தோர்ததால் வேறு வழி இல்லாமல் சரோஜா தேவி கெட்டப்பில் தலையில் சைடு செம்பருத்தி, பஃப் கை வைத்த சுடி(சாரீஸ் இல்லாததால் சுடி) லூஸ் ஹேர் பின்னல் என்று அச்சசல் 80ஸ் நடிகை போல் கிளம்பினாள். வழியில் தெரிந்தவர்கள் சிரிப்பதையும் என்ன இது என்று கேட்பதற்க்காக அழைப்பவர்களையும் பொருட்படுத்தாமல், “எல்லாம் உன்னால தான் டா சித்து உன்ன ஒரு நாள் வெச்சு செய்றேன் இருடா” என்று புலம்பியவாறே வேகமாக பள்ளிக்கு செல்கிறாள். அவள் உள்ளே நுழைந்ததும் அவளின் கெட்டப்பை பார்த்து மாணவர்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். அதே நேரத்தில் உள்ளே வந்த ப்ரவீனும்(sir) இவளின் கெட்டப்பை பார்த்து விட்டு சிரித்தவர் பின் சமாளித்து, “என்ன இது” என்று கோபமாக கேட்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு உள்ளுக்குள் சிரிப்பை அடக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.
பிரவீன், “உன்னால கிளாஸ் டிஸ்டர்ப் ஆனது தான் மிச்சம். கெட் அவுட். கிளாஸ் முடியும் வரை உள்ள வராதே”என்று குரலை உயர்த்துகிறார்.
வர்ணா, “சாரி சார்” என்று கூறி ரெஸ்ட் ரூம் சென்று தன் முகத்தில் உள்ள மேக்கப்பை கழுவி சுத்தம் செய்து, சைடு செம்பருத்தியை நீக்கிவிட்டு. தலையை சரிசெய்து, பஃப் கையை துப்பட்டாவால் மறைத்துவிட்டு வந்து வகுப்பு வாசலில் நின்று தண்டனையை ஏற்கிறாள்.
எதற்காகவோ வெளியில் வந்த பிரேம் இவள் வெளியில் நிற்பதை பார்த்துவிட்டு “ஏன் டி வெளிய நிக்கற?” என்று கேட்கிறான்.
இவள், தானும் சித்தார்த்தும் பெட் வைத்ததையும், தன் கெட்டப்பை பார்த்து சார் கடுப்பாகி வெளியில் நிற்க வைத்ததையும் கூறுகிறாள். இதை கெட்ட பிரேம் சிரித்துவிட்டு, “அனுபவி அனுபவி கொஞ்ச நேரமாவது ரெண்டு பேரும் சும்மா இருக்கீங்களா. வீட்டுக்கு வா அம்மாவும் இன்னைக்கு வந்துடுவாங்க நீங்க ரெண்டு பேர் செய்யும் அட்டகாசத்தை போட்டு கொடுக்கிறேன். யார் சின்ன பசங்கனே தெரிய மாடிக்குது எந்த நேரம் பார்த்தாலும் ரகளை ”என்று கூறி தன் வழியில் நடக்க ஆரம்பித்தான். அவன் தன்னை கடக்கும்போது சரியாக காலை நீட்டி அவனை விழ வைத்து நக்கலாக சிரிக்கிறாள்.
பிரேம், “வீட்டுக்கு வா உன்ன பாத்துக்கிறேன்.”
வர்ணா, “போடா.”
மாலையில் வர்ணாவும் ப்ரேமும் சேர்ந்து வீடு திரும்பினார்கள். ஆனால் வீட்டில் தன் தந்தையும் அன்னையும் சண்டையிட்டு கொள்வதை பார்த்து தயங்கி நிற்கின்றனர். பெரும்பாலும் விஜயாவும் வெங்கட்டும் சண்டையிட்டு இவர்கள் பார்த்ததில்லை, அதனால் இவர்கள் உள்ளே வர தயங்கினர்.
விஜயா, “யாருக்காக இதை வாங்கி வெச்சிருக்கீங்க? எனக்கு மேக்கப் போட பிடிக்காது. அப்போ யாருக்கு இது? உண்மைய சொல்லுங்க. நான் வேலை விஷயமா பாதி நாள் ஊர்ல இல்லாததால இன்னொரு பொண்ணு பார்க்க ஆரம்புச்சிருக்கீங்களா. இத்தன வருஷம் ஒழுங்கா தான வாழ்ந்தீங்க. இப்போ என்ன புதுசா. இல்ல முன்னாடியே இதெல்லாம் இருந்ததை நான் தான் கவனிக்கலையா” என்று கோபமாக கேட்டு தனக்குள்ளே புலம்பிக்கொண்டிருக்கிறார். (விஜயாவின் கையில் சித்தார்த் கொடுத்த மேக்கப் செட்)
வர்ணாவும் ப்ரேமும் இதை பார்த்துவிட்டு ஷாக் ஆகிறார்கள். என்ன செய்வதென்று புரியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கின்றனர்.
வெங்கட், “உண்மையா இது என்னனு கூட எனக்கு தெரியாது டா. எனக்கு நீ கிடைச்சதே அதிசயம். இதுல நான் வேற யாருக்குடா வாங்க போறேன்? ப்ளீஸ் நம்பு மா. நான் ஸ்ரீராமனை போல ஏகபத்தினி விரதன் டா.” என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார். அப்பா கெஞ்சுவதை பார்க்க பொறுக்காமல் வர்ணா தடாலென உள்ளே நுழைகிறாள். அவள் திடீரென உள்நுழைந்ததை பார்த்து வெங்கட்டும் விஜயாவும் தங்கள் சண்டையை நிறுத்திவிட்டு அவளை பார்க்கின்றனர். ஸ்கூல்ல இருந்து வந்தாச்சா தம்பி எங்க என்று கேட்டவாறே முகத்தை திருப்பி கொண்டு தன் கண்ணீரை மகளுக்கு காட்டாதவாறு துடைக்கிறார் விஜயா. அவர் கேட்டு முடிப்பதற்குள் பிரேமும் வீட்டின் உள்ளே வருகிறான். ஆனால் தன் தாயின் கண்ணீரை பார்த்துவிட்ட வர்ணா, “அம்மா” என்று மெதுவாக அழைக்கிறாள். விஜயாவும் ஒன்றுமே நடவாதது போல் முகத்தை வைத்து கொண்டு, “என்ன டா” என்று கேட்கிறார்.
வர்ணா, “அம்மா அப்பா மேல் எந்த தப்பும் இல்ல மா.” என்று உண்மையை கூற வருவதற்குள் விஜயா, “அச்சோ நம் பர்சனல் விஷயத்தை பிள்ளைகள் வருவதை கூட கவனிக்காது பேசி இருக்கிறோமே என்ன தாய் நானெல்லாம்” என்று தன் தலையில் மானசீகமாக ஒரு கொட்டு வைத்துக்கொண்டு வர்ணாவின் புறம் திரும்பி “சாரி டா உங்கள கவனிக்காம ஏதேதோ பேசிட்டோம் நீ இதிலெல்லாம் இன்வால்வ் ஆகாத படிக்கறத மட்டும் பாரு 12th std வந்துட்ட பப்ளிக் எக்ஸாம் இருக்கு போ போய் ரெபிரெஸ் பண்ணிட்டு போய் படிக்கிற வேலைய பாரு.” என்று கூறி அவளை அனுப்ப முயன்றார். ஆனால் அவர் கூற வரும் எதையும் பொருட்படுத்தாது
வர்ணா, “அம்மா உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நான் முந்தைய நாள் சித்துவ சார் கிட்ட மாட்டிவிட்டு பனிஷ்மென்ட் வாங்கவெச்சிட்டேன் அதனால சித்துவும் நானும் ஒரு கேம் பிலே பண்ணோம் அதில் நான் தோத்துட்டேன் அதால அவன் என்ன சரோஜா தேவி கெட்டப்பில் வரணும்னு பெட் வெச்சான் அதுக்குதான் இந்த மேக்கப் செட் கொடுத்தான் மா. அப்பா மேல எந்த தப்பும் இல்ல. அப்பாக்கு எப்பவும் நாம மட்டும் தான் முக்கியம் அவர் வேற யாரை பத்தியும் யோசிக்க கூடா மாட்டார். என் மேல தான் தப்பு” என்று தான் செய்த தவறை ஒத்துக்கொள்கிறாள். அதற்க்கு பின் விஜயா தன் தவறை உணர்ந்து இத்தனை வருட வாழ்க்கையை ஒரு மேக்கப் செட் பார்த்ததும் சந்தேகித்துவிட்டோமே என்று ஒரு நிமிடம் தன்னை நினைத்தே கூனிக்குறுகி வெங்கட்டை பார்த்து அசடு வழிந்தவாறே “சாரி” என்று கூற இருவரும் சமாதானமாகினர். பின் வர்ணாவின் புறம் திரும்பிய விஜயா, “பாரு வர்ணாமா நீ இன்னும் கொழந்த கிடையாது கொஞ்சமாவது வளந்த பொண்ணு மாதிரி நடந்துக்கோ. பிரேம் உன்ன விட ஆறு வயசு சின்னவன் ஆனா அவன் அளவுக்கு கூட நீ பொறுப்பா நடந்துக்க மாட்ற. இன்னும் விளையாட்டு தனமாவே இருக்க. அப்பறம் போற எடத்துல நான் தான் பேச்சு வாங்கணும். ஒழுங்கா லண்ட்சணமா வீட்ல இருந்து பொண்ண வளக்க கூறு இல்லாதவ வெளியில போய் எதுக்கு வேலை செய்யணும்னு அம்மாவை தான் டா தப்பா பேசுவாங்க.” என்று கண் கலங்க விஜயா அறிவுரை கூற,
வர்ணா, “அதெல்லாம் உன்ன குறை சொல்லாத இடமா பாத்து தான் நான் கல்யாணம் கட்டிக்குவேன் கவலை படாத மா” என்று விளையாட்டாகவே தன் தாயை சமாதானம் செய்ய முயல, இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பிரேம் தன் அன்னை கண் கலங்குவதை பார்த்ததும், “அதெல்லாம் அக்கா பொறுப்பா தான் இருக்கா. அவ தான் காலைல எழுந்து அப்பாக்கு ஹெல்ப் பண்றா, எனக்கு ஸ்கூல் கிளம்ப ஹெல்ப் பண்றா. அவ எல்லா இடத்துலயும் பொறுப்பா நடந்துப்பா நீங்க அழாதீங்க மா. இல்ல பா?” என்று தான் கூறும் பொய்க்கு தகப்பனையும் துணைக்கு அழைக்க, இவன் கூறும் பொய்க்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் எல்லா பக்கமும் தலையை தலையை ஆட்டி, “ஆமாம் ஆமாம்” என்று கூறி தன் மனைவியை சமாதானம் செய்து வைத்தார்.
பின் விஜயா இரவுணவை பரிமாற அனைவரும் மகிழ்ச்சியாக அமர்ந்து விஜயா ஊரில் இல்லாத போது நிகழ்ந்த கலாட்டாக்கள் அனைத்தை பற்றியும் பேசிக்கொண்டே உண்டுவிட்டு உறங்க செல்கின்றனர்.
எப்போதும் போல் இன்றும் நடந்த அனைத்தையும் டைரியில் எழுதி வைத்தால் வர்ணா. சித்தார்த் செய்த கலாட்டாவையும் அதை தான் ரசித்ததையும் சேர்த்து எழுதிவைத்தாள். அம்மா வருத்த பட்டதையும் அதனால் தான் இனி பொறுப்பாக இருக்க முயல போவதையும் எழுதிவைத்தாள். எப்போதென்றே தெரியாமல் அவளின் மனதிற்குள் சித்தார்த் நுழைந்துவிட்டதையும், எழுதி வைக்கிறாள்.
 

Chitra Balaji

Bronze Winner
இதுங்க panna kalaatavula ava அம்மா அப்பா kula சண்டை வந்துடுச்சி.... எப்படியோ அவளே சமாதானம் pannita... Prem semma பொறுப்பு....
 

Karthikpriya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதுங்க panna kalaatavula ava அம்மா அப்பா kula சண்டை வந்துடுச்சி.... எப்படியோ அவளே சமாதானம் pannita... Prem semma பொறுப்பு....
Hmmm amam amam
 
Top