All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் - "தடுமாறி போனேன் கொஞ்சமே..!" - கதை திரி

Status
Not open for further replies.

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..!
எல்லாரும் எப்படி இருக்கீங்க..?

கிட்ட தட்ட 1 and half year க்கு முன்னாடி fb ல போட்ட டீசர்.. இப்போ தான் தூசு தட்டி எடுத்து இருக்கேன்.. ஹி.. ஹி... ஹி.. படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க மக்களே.. கூடிய சீக்கிரம் கதையோட வரேன்..

fb ல என் page ஐ follow பண்ண விரும்புறவங்க umaiyaal aadhi novels ன்னு search பண்ணி என் page க்கு like கொடுங்க.. நான் அங்கே போடுற post and teasers எல்லாமே நீங்க படிக்கலாம்..

நாயகன்: வம்சி வர்தன் ❤❤
நாயகி : சதுர்ணா ❤❤


❤❤❤❤"தடுமாறி போனேன் கொஞ்சமே..!"❤❤❤❤

டீசர்:

சிறு குழந்தையை கையில் வைத்திருந்தவளை வம்சியின் இரு விழிகள் ஆச்சரியமாகப் பார்த்தது.. முகமும், மெய்யும் இன்னமும் டீன் ஏஜ் வயதை கடக்கவில்லை என்பதை பறைசாற்றியது..

ஃப்ளோரோசென்ட் பிங்கில் மேற்சட்டையும் , நீல நிற ஜீனில் த்ரீ பை ஃபோர்த்தும் அணிந்திருந்தாள்..

இவ்வளவு சிறு வயதில் இவளுக்கு ஒரு குழந்தையா என ஆச்சரியப்பட்டவன், அவள் கைகளில் தவழ்ந்து கொண்டிருந்த குழந்தையை பார்த்தான்..

அக்குழந்தை தன் சிறு பல்லைக் கொண்டு அவளின் கன்னக் கதுப்பை கடித்து அவள் முகத்தை ஈரப்படுத்திக் கொண்டிருந்தது..
அவள் இன்னமும் சிரித்துக் கொண்டே அக்குழந்தைக்கு தன் முகத்தை மகிழ்வுடன் காட்டிக் கொண்டிருந்தாள்..
அவளின் கண்களிலும், சிரிப்பிலும், பூரிப்பிலும், ஒவ்வொரு செய்கையிலும் செயலிலும் தாய்மை இழையோடிக் கொண்டிருந்தது..
அவளின் அன்பைப் பெற அக்குழந்தை பெற்ற பாக்கியம் தனக்குக் கிடைக்காதா?!.. தான் அந்த குழந்தையாகக் கூடாதா..? என அவனின் மனம் தன்னையுமறியாமல் ஒரு சில நொடிகள் ஏங்கித் தடுமாற, தன் எண்ணம் செல்லும் போக்கை கண்டு திடுக்கிட்ட வம்சி இடம் வலமாக தன் தலையை ஆட்டிய படி தன்னைத் தானே குட்டிக் கொண்டான்..

************* ***************

பிரம்மாண்டமான அந்த அலுவலகத்தின் உள்ளே சேர்மேன் அறையில் சுழலும் நாற்காலியில் அமர்ந்திருந்தவனுக்கு ஏ.சியின் குளிர் காற்றிற்கும் அவனது மனப்புழுக்கம் குறையவில்லை...

இருபத்தி மூன்று வயதில் ஆரமித்த ஓட்டம், இன்று வரை ஓடிக்கொண்டிருக்கிறான்... தற்போது வயது முப்பத்தி ஒன்று...

ஒரு வாரமாக மனதில் இனம் புரியாத அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர சிறிதளவும் குறையவில்லை... எப்போதும் இருப்பது தான் ஆனால் தற்போது மூச்சு முட்டுவது போல இருந்தது...

அதற்கு காரணம் யார் என்று அவன் அறிவான்... அவளை நினையாதே மனமே என தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் தன் மன பாரத்தை குறைக்கும் பொருட்டு ஹோமுக்கு செல்ல முடிவெடுத்தான்...

தாய்க்கு பிறகு அன்பை அவனுக்கு வாரி வாரி வழங்கியவளும் அவளே... எந்த அன்பால் அவள் அவனை ஈர்த்தாலோ அதே அன்பால் அவனை விட்டு சென்று விட்டாள்...

சொந்தம் இருந்தும் தற்போதைக்கு அந்த ஹோம் தான் அவனுக்கு வீடு... அங்கே சென்று வந்தால் தன் பாரம் குறையுமென்பது அவன் நம்பிக்கையும், உண்மையும் கூட...

வாழ்கையில் அடிபட்டு ஆதரவற்று வந்த சாரதாவுக்கு அடைக்கலம் கொடுத்தது அன்னை இல்லம் தான்... தற்போது ஹோமின் தலைமை பொறுப்பை ஏற்று அதை நன்முறையில் நடத்தி வருபவரும் கூட, வசியின் உதவியாலும் மற்ற சிலரின் நன்கொடையிலும்... இதில் வசியின் பங்கு தான் அதிகமானது... சாரதாவுக்கு அவள் அழைப்பெடுத்தான்..

"என்னாச்சும்மா? குரலே ஒரு மாதிரி இருக்கு? உடம்பு சரியில்லையா?"

"எனக்கு ஒன்னும் இல்லப்பா வம்சி... நாளுக்கு நாள் ஹோம்ல ஆளுங்க எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது... வர வர நாட்டுல மக்களுக்கு அன்பு, பாசம், மனிதாபிமானம் எல்லாம் குறைஞ்சு போச்சு போல... அதை நெனச்சா தான் வருத்தமா இருக்கு..."

"அதான் இப்போ உள்ள இன்னொரு பில்டிங் கட்டி முடிக்குற நிலைமையில இருக்கேம்மா... எத்தனை பேரு வந்தாலும் நம்ம ஆதரவு கொடுப்போம்..."

"சொல்ல மறந்துட்டேன்ப்பா... கொஞ்ச நாளைக்கு ஹோமுக்கு புதுசா ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்தேன்... சின்ன பொண்ணு தான் இருவது வயசு தான் இருக்கும்... ட்ரைன் முன்னாடி விழுந்து தற்கொலை பண்ணிக்க போச்சு... நான் தான் காப்பாத்தி கூட்டிட்டு வந்தேன்..."

"எதுவும் பேச மாட்டேங்குறா... சதா அழுகை தான்... ஒரு வாரம் ஆகுது இன்னும் வாய திறந்து அவ பேரை கூட சொல்லல..."

"நேத்து யாரோ பிறந்த குழந்தையை ஹோம் முன்னாடி விட்டுட்டு போய்ட்டாங்க... இன்னிக்கு காலையில அந்த குழந்தையை அவளே தான் வந்து தொட்டு தூக்கினா..."

"ஏற்கனவே பழக்கப்பட்டவ மாதிரி குழந்தைக்கு எல்லாத்தையும் பார்த்து பார்த்து பன்ணினா... கொஞ்ச நேரத்துல குழந்தை அழ ஆரமிச்சுது... உடனே என் கையில குழந்தையை கொடுத்துட்டு ஓடினவ தான் ஆளையே காணும்..."

"குழந்தைங்க அழுகை சத்தத்தை கேட்டாலே காதை மூடிகிட்டு ரூமுக்குள்ள போயி தாழ் போட்டுக்கறா... நாள் முழுக்க அழறா, அன்னிக்கு முழுசா சாப்பிடுறதும் இல்ல... இப்போ ரெண்டாவது முறையா சூசைடு அட்டெம்ப்ட் பண்ணிருக்கா, நல்ல வேளை காப்பாத்தியாச்சு..."

"டாக்டரை வரவழச்சு கவுன்செல்லிங் கூட கொடுத்தாச்சு... பிடி கொடுக்கவே மாட்டேங்குறா... நீங்க பேசி என் மனசை சமாதானப் படுத்தினா நான் இழந்த எல்லாத்தையும் திருப்பி கொடுத்துருவீங்களா? இல்லல்ல அப்படின்னு சொல்லிட்டு திரும்ப அழ ஆரமிச்சுடுறா..."

"இப்படி ஒருத்தியை நான் பார்த்ததே இல்ல... இப்போ கூட அந்த பொண்ணு கிட்ட கெஞ்சி கொஞ்சி சாப்பிட வச்சுட்டு தான் வரேன்... இந்த பொண்ணுக்கு என்ன ட்ரீட்மென்ட் கொடுக்கிறதுன்னே தெரியல... பார்க்கவும் ரொம்ப கஷ்டமா இருக்கு... மனசொடிஞ்சு இருக்குற இந்த நிலைமையில அந்த பொண்ணை அதட்டி மிரட்டி சாப்பிட வைக்கவும் பயமா இருக்கு..." என்று முழு நீளமாக பேசியவர் மூச்சு வாங்கினார்...

*************** ************

காரை விட்டு இறங்கிய வம்சி சுற்றி முற்றிலும் பார்வையை செலுத்த ஒரு ஈ, காக்காய் கூட கண்ணில் படவில்லை... என்ன எல்லாமே புதுசா இருக்கு... யாரையுமே காணும் என்றவாறு முதல் கட்டிடத்தை கடந்து உள்ளே நுழைய மொத்த ஹோம் ஆட்களும் அண்ணார்ந்து வானத்தைப் பார்த்திருந்தனர்...

"வேணாம்..."

"வந்துரு..."

"சொன்னா கேளும்மா..."

சாரதாம்மா முதற்கொண்டு அனைவரும் அவளை கீழே இறங்கி வர சொல்லி பதற்றத்துடன் கொளுத்தும் வெயிலில் கத்திக் கொண்டிருக்க, அப்பெண் அசையாமல் நின்றிருந்தாள்...

மெலிந்த உடல் கொண்ட, சுடிதார் அணிந்த ஒரு பெண், அந்த புதிய கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியின் மேல் ஏறி நின்று கொண்டிருந்தாள்... காற்றில் அவள் கார்கூந்தல் அவள் முகத்தை மறைத்திருக்க சூரியனின் கதிர்கள் கண்களை கூச அவள் முகம் சரியாக தெரியவில்லை...

தன் ரேபன் கூலிங்கிளாசை அணிந்தவன், அவளை உற்று நோக்க அவள் முகம் அப்போதும் தெரியவில்லை...
'அம்மா சொன்ன பொண்ணு இவ தானோ..?' என கணித்தவன் யாரும் அறியாமல் கட்டி முடிக்கும் நிலையில் இருந்த அந்த கட்டிடத்தின் பின் புறம் ஓடியவன் மளமளவென படிகளில் ஏறி மூச்சு வாங்க தண்ணீர் தொட்டியை அடைந்தான்...

தன் ஷூக்களை கழற்றியவன் அந்த சுடும் தரையில் மெதுவாக சத்தமின்றி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான்... அமைதியான சூழலில் திடீரென சத்தம் கேட்டால் அது யாரையுமே சற்று பதற செய்யும்... அந்த சத்தத்தில் அப்பெண் திடுக்கிட்டு விழுந்து விடக் கூடாது என நினைத்தவன் அவ்வாறு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான்...

காற்றில் பறக்கும் அவள் உடை, தோய்ந்து போய் நின்றிருந்த தோற்றம், இவையனைத்துமே அவள் விரக்தியின் பிடியில் இருக்கிறாள் என்று கண்டிப்பாக எவருக்கும் உணர்த்தும்...

ஒரு பேப்பருக்கு அடியில் இருந்த சிறு கண்ணாடித் துண்டு ஒன்று அவன் கால்களில் மிதி பட்டு உடைந்து சத்தம் எழுப்ப, அப்பெண் சட்டென திரும்பிப் பார்த்தாள்...

சே! என தன்னை நொந்தவன் அப்பெண்ணை நிமிர்ந்து பார்க்க, பலமான காற்று ஒன்று அங்கே வீச அதில் அவள் கற்றைக் கூந்தல் பறந்து அவள் முகத்தை பளீரென காட்டி மீண்டும் மறைத்து விட,

தான் காண்பது கனவா..? நனவா..? என கண்ணாடியை கழற்றி விட்டு தன் கண்களை கசக்கியவனின் வாய் "சது.." என அவள் பெயரை உச்சரித்தது...

யாரைப் பிரிந்து அவன் வருடக்கணக்கில் துடிக்கிறானோ அவளே அவன் கண் முன் நிற்க, அவளை அள்ளி அணைக்க முடியவில்லை என்றாலும் அவள் சாவின் விளிம்பில் நிற்ப்பதை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை...

'அவங்க தான் வேணும்ன்னு என்னை உதறி விட்டுட்டு போனாளே... எப்படி இங்க வந்தா? அந்த சூனியக்காரி எதுக்காக என் சதுவை தனியா தவிக்க விட்டா?' என ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அவன் மனதில் அலை அலையாய் ஆர்பரிக்கும் கடலைப் போல சீறியது...

இப்போது இது முக்கியம் அல்ல அவள் உயிர் தான் முக்கியம் என எண்ணியவன் அவளை காப்பாற்றவேண்டுமென உள்ளம் துடித்தது...
அவன் மேலே அவனுக்கு கோபமும், ஆத்திரமும் கட்டுக்கடங்காமல் வந்தது...

முன்பை விட அவள் தேகம் மெலிந்திருக்க, கண்கள் இடுங்கி உள்ளே போயிருக்க, முகம் ரத்தமின்றி வெளுத்திருக்க, கழுத்தில் எலும்புகள் நன்றாகத் தெரிய, மொத்தத்தில் ஒடித்தால் ஒடிந்துவிடும் இளம்குருத்து போல, யாரோ ஒருத்தியை போல இருந்தாள்...

அவள் இதழ்கள் அழுகையில் துடித்தது, கண்களில் கண்ணீர் வெள்ளமென பொங்க, அதில் வம்சியின் உருவம் மறைக்கப்பட, வேக வேகமாக தன் கண்ணீரைத் துடைத்தவள் கடைசியாக அவனை தன் கண்களில் நிரப்பிக் கொண்டாள்...

அழுத இதழ்கள் இப்போது புன்னகை புரிய, ஆசை தீர மட்டும் அவளை உள்வாங்கிக் கொண்டவள்,
"எ... ங்க உ... ங்களை பார்க்காமலே செத்துருவனோன்னு நெனச்சேன் வசி... இ...ப்போ நான் சந்தோஷமா செத்துப்போவேன்.... இன்னொரு பிறவி இருந்தா உங்களுக்கு மகளா பிறக்கணும்... ஐ லவ் யு மேட்லி... என்னை மன்னிச்சுருங்க வசி..." என்றவாறு மண்டியிட்டு அமர்ந்தாள்...

"சது... ப்ளீஸ் என்கிட்ட வந்துருடி..." என உயிரை உருக்கும் குரலில் தான் பெரிய தொழிலதிபன் என்பதையும் மறந்து கண்களில் துளிர்த்த கண்ணீருடன் அவன் கெஞ்ச, வேண்டாமென தலையசைத்தவள் எழுந்து நின்று தன் கண்களைத் துடைத்தவள், ஆழமான மூச்சை உள்ளிழுத்தவள், விழியோரத்தில் அவன் நினைவைச் சுமந்த படி அடுத்த நொடி அந்த ஐந்து மாடி கட்டிடத்தின் உச்சியில் இருந்து குதித்திருந்தாள்...

**************** **************

ஹீரோயினை போட்டுத் தள்ளிடலாமா..?;););););):ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

please leave your comments here,
"தடுமாறி போனேன் கொஞ்சமே..!" - கருத்து திரி
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே...! மகிழ்ச்சியான விஷயத்தை உங்களோட பகிர்ந்துக்க வந்துருக்கேன்..😍😍😍😍

43 வது சென்னை புத்தக கண்காட்சியில் எனது ஐந்தாவது நாவல் “என்னுயிர் சுவாசம் உனதாகும்..!” நேரடி புத்தகமாக வெளியாகியுள்ளது..
❤❤❤❤❤


விசித்ரமான விசித்ரனையும், ரகசியமான ரகசியாவையும் புத்தகமாக கையில ஏந்தும் நொடிக்காக காத்துட்டு இருக்கேன்.. 😍😍😍😍

(மு. கு) : book fair க்கு போற தோழிகள் அப்படியே என் books ஐ போட்டோ எடுத்து குடுத்தீங்கன்னா இங்கிருந்து கண்ணார கண்டு சந்தோஷப்பட்டுப்பேன்.. 😁😁😁😁

நேரம் கைக்கூடி வரும் போது கண்டிப்பா book fair க்கு வருவேன்னு நம்புறேன்.. அது எப்போன்னு இப்போதைக்கு தெரியல..

புக் பேர்ல என் புத்தகங்களை வாங்கி படிச்சுட்டு உங்க பேராதரவை தெரிவிக்கும் படி பணிவன்புடன் கேட்டுக்கறேன் மக்களே.. 😘😘😘😘😘😘😘

இத்தோடு எனது முந்தையை கதைகளான

1. உன் விழிகளில் விழுந்த நொடி..! இரண்டு பாகங்கள் (க்ருஷ் - பாவை)
2. காதல் வைரஸ்..! (சர்வேஷ் – பவழா, ராம் - தென்றல்)
3. எந்தன் உயிரே..! எந்தன் உயிரே..! (உதய், உதித், நக்ஷத்ரா, மந்த்ரா)

ஆகிய நாவல்களும் கிடைக்கும்..

எனது கதைகளை புத்தகங்களாக வெளியிடும் அருண் பதிப்பகத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.. 🙏🙏🙏🙏🙏🙏🙏

புத்தகங்கள் கிடைக்குமிடம் : அருண் பதிப்பகம்
ஸ்டால் நம்பர் (Stall num) : 292

இங்கே எனது புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்..

புத்தகங்கள் order செய்ய விரும்புவோர் wecanshopping மற்றும் udumalai .com ஐ அணுகலாம்..

வாங்கி படிச்சுட்டு மறக்காம உங்க கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே.. மீ ஆவலோடு waiting..

சென்னை புத்தக கண்காட்சி : ஜனவரி 09 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை..

இடம் : YMCA மைதானம், நந்தனம்

உங்கள் ஆதரவை என்றும் எதிர் நோக்கும்,
உமையாள் ஆதி
நன்றி..
❤❤❤❤
தடுமாறி போனேன் கொஞ்சமே..!" - கருத்து திரி
 

Attachments

Status
Not open for further replies.
Top