All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் கலாப காதலா 1

Status
Not open for further replies.

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1 கலாப காதலா
" ஏய் நில்லு டி "
" மாட்டேன் போடா "
" இப்ப நீ நிக்கல உன்ன "
என தன் எதிரே ஓடியவளை தாவி பிடித்தான் நமது நாயகன்...
சட்டென கண்விழித்தவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது..
தன் எதிரில் கண்ணத்தில் குழி விழ பார்பவர் கண் கவரும் அழகிய ஆண்மகன்
மாலையிட்ட ஃபோட்டோ வில் அழகாக சிரித்து கொண்டு இருந்தான்....
" ஏன்டா என்ன விட்டு போன உன்ன மட்டும் நம்பி தானே வந்தேன் நீ இப்படி பண்ணிடியே "
என அவனது ஃபோட்டோ முன்பு அமர்ந்து கதறினாள் பூர்ணிமா....
" மேடம் போலிஸ் வந்துருக்காங்க கீழ சார் பேசிட்டு இருக்காங்க " என்று வேலையாள் ஒருவன் கூற அழுதுவடிந்த தனது முகத்தை துடைத்து கொண்டு கீழே இறங்கி வந்தாள்.....
பார்ப்பவர் கண்களை கவரும் அழகான கண்களும் அதற்கேற்ப மூக்கு உதடு என பொருந்திய மாநிற முகத்துடன் சற்று பூசினார் போல் இருக்கும் உடல் அமைப்பு
சிறிது நாட்களாக அழுது அழுது கண்களின் கீழே கருவளையம் முகம் சிரிப்பை மறக்க
அலைந்த ஓவியம் போல அந்த ஐந்து மாடி கொண்டு வீட்டில் லிப்ட் மூலம் கீழே வந்தாள்......
" அம்மு நீ ஏன் வந்த நானே பேசிக்குறேன் நீ போ போய் ரெஸ்ட் எடு " எனறான் ஆருயிர் நண்பன் அஜய்....
" இல்ல அஜ்ஜூ நான் பேசுறன் அவங்களும் எத்தனை நாள் தான் அலைவாங்க கஷ்டமா இருக்கும்ல " என்றாள் பூர்ணி...
" சொல்லுங்க சார் என்கிட்ட என்ன கேக்கனும் " என்று காவல் அதிகாரியை பார்த்து கேட்க..
" சாரி மேடம் இந்த டைம்ல டிஸ்டர்ப் பண்ண கூடாது தான் பட் சாரோட டைத்துக்கு ரீஸன் தெரியனும் ல அதான் "
" ம்ம் கேளுங்க "
என கண்களில் வரும் கண்ணீரை அடக்கி கொண்டு பேசினாள்...
" லாஸ்டா எப்ப மேம் சார்கிட்ட பேசுனிங்க "
" அன்னைக்கு நைட்டு அவரு கார்ல வரும்போது பேசினேன் திரும்பவும் 20 மினிட்ஸ் கழிச்சு பேசும் போது அவரு கத்திட்டே ஃபோன் கட் ஆகிடுச்சு "
என விசுபலுடன் கூற..
" மறுநாள் தான் சித் கார் ஆக்ஸிடென்ட் ஆனது எங்களுக்கு தெரியும் " என்றான் அஜய்....
அன்று இரவு காரில்
" ஏய் இருடி வீட்டுக்கு தான் டி வரேன் "
" சரி சொல்லு என்ன சர்ப்ரைஸ் "
" அதான் சர்ப்ரைஸ் சொல்லிடன் ல அப்புறம் என்ன வீட்டுக்கு வா சொல்லுறேன் என்றாள் பூர்ணி...
" ஏய் பூரி ரொம்ப ஓவரா பண்ணாத சொல்லு டி "
" நோ நோ நோ வீட்டுக்கு வா சொல்லுறேன் "
என்றாள் பூர்ணி...
" போடி ஏய் வைட் பண்ணு கூப்பிடுறேன் "
என்றவன் போனை அணைக்க அவன் வருகைக்காக காத்திருந்தாள் பூர்ணி...
பாவம் அவளுக்கு தெரியவில்லை அவன் வரவே மாட்டான் என....
இதுவரை தனக்கு தெரிந்ததை போலிஸ்க்கு பூர்ணி சொல்ல மேலும் தமக்கு தேவையான தகவல்களை கேட்ட பின்னர் அவ்விடம் விட்டு நகர்ந்தனர் காவல்துறையினர்....
நாம் பார்ப்போம் பூர்ணி ஃபோன் வைத்தபின் நடந்ததை...
" ஏய் வைட் பண்ணு கூப்பிடுறேன் "
என போனை வைத்தான் காரினை கைகாட்டி நிறுத்தினான் ஆடவன் ஒருவன்..
" ஹாய் சார் ஐ யம் சோ சாரி சார் வண்டி வர வழியில மக்கர் பண்ணிடுச்சு அதான் கொஞ்சம் டிராப் பண்ண முடியுமா "
" ஓஓஓ கண்டிப்பா நானும் அந்த வழியா தான் போறேன் "
" என்ன பாஸ் ரொம்ப எக்சைடா ‌ இருக்கிங்க " என்றான் புதியவன்..
" ஆமாம் ப்ரோ வீட்டுல ஒரு சின்ன சர்ப்ரைஸ் இருக்கு அதுக்கு தான் இந்த எக்சைட்மெண்ட் "
அவனது கழுத்தில் இருந்த ஐடி கார்டை பார்த்து
" எங்க வொர்க் பண்றிங்க "
" ஆங் சார் நான் இங்க ஐடி பார்க் ல ஐடி ஆபிஸ்ல வொர்க் பண்ணுறேன் "
" ஐ யம் இனியவன் "
என தன்னை அறிமுகபடுத்தி கொண்டான்...
" ஐ யம் சித்தார்த் வர்மா "
என கூறினான்......
" சித்தார்த் எங்கயோ கேள்வி பட்ட "
யோசித்தவன் முகம் மலர " சார் நீங்க சித்தார்த் வர்மா இளம் தொழிலதிபர், த கிரேட் கிங் ஆஃப் பிசினஸ் ராஜன் வர்மா சன் " இனியவன்
" எஸ் எஸ் நான் தான் ஓவர் பில்டப் வேணாமே பிளிஸ் " என்றான் சித்தார்த்
" லாஸ்ட் டூ இயர் முன்னடி உங்க டாடிய யாரோ மர்டர் பண்ணிடாங்கனு "
அவனது முக மாறுதலை கண்டு
" ஐ யம் சாரி சார் நான் தெரியாம உங்க பாஸ்ட் நியாபகம் பண்ணிடன் " என்றான் இனியவன்...
" இட்ஸ் ஓகே ப்ரோ "
என்ற சித்தார்த் க்கு மீண்டும் அழைப்பு வர...
" ஓன் மினிட் "
என்றவன்
" ஏய் வரேன் டி இன்னும் 30 மினிட்ஸ் "
என்று பூர்ணி யிடம் பேசி கொண்டு இருக்கும் போதே
" ஓஓஓஓஓ ஸ்யேட் "
..................
மறுநாள் காலை பூர்ணிக்கு மற்றும் அஜய்க்கு கால் வர அங்கு சித்தார்த் கார் முழுவதும் எரிந்த நிலையில் இருக்க உள்ளே கருகின உடல் மட்டும் ஓட்டுனர் இருக்கையில் இருக்க அதனை பார்த்த பூர்ணி கதறினாள்.....
காரினுள் இருந்த பர்ஸ் திருமணத்தென்று அவனுக்கு பூர்ணி போட்ட மோதிரம் இதனை எல்லாம் வைத்து அது சித்தார்த் என உறுதி ஆக எரிந்த உடலை திரும்பவும் போஸ்ட்மார்ட்டம் என்ன பெயரில் சிதைக்க அஜய் ஒத்து கொள்ளவில்லை...
அவர்களது பண பலம் ஜெயிக்க சித்தார்த் உடல் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகள் செய்யபட்டது.....
அஜய் " அம்மு கொஞ்சம் சாப்பிடு டா நீ இப்படிலா இருக்கறத பார்த்த பயமா இருக்கு டி பிளிஸ் கொஞ்சம் சாப்பிடு "
பூர்ணி " என்க்கு வேணாம் அஜ்ஜூ என்னால முடியல சித்து இல்லாத உலகத்த நினைச்சு பார்க்கவே பிடிக்கல "
அப்போது அங்கு வந்தாள் நித்யா..
" ஆமாம் நீ இப்படி அவள கொஞ்சிட்டே இரு அப்படியே சாப்பிடுவா பாரு தள்ளு நீ "
என அவனிடம் இருந்த பிளேடை வாங்கி அதில் இருந்த உணவை ஊட்ட தொடங்கினாள்...
நித்யா இன்றைய நாகரிக பெண் டாக்டர் முடித்துவிட்டு தனியாக மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறாள்..
அஜய்யின் அத்தை பெண்...
சித்தார்த் யின் உற்ற தோழி...
ஒருவழியாக அவளுக்கு உணவு ஊட்டி விட்டு மாத்திரை கொடுத்து அறையில் தூங்க வைத்துவிட்டு வெளியே வந்தாள் நித்யா...
சித்து அறை விளக்கு எரிய அங்கே சென்று பார்க்க அஜய் சித்தார்த் ஃபோட்டோ வை வைத்து வெறித்து பார்த்து கொண்டு இருந்தான்....
நித்யா " அஜய் வாட்ஸ் ஹாப்பனிங் நீ தான் அவளுக்கு ஆறுதல் சொல்லனும் நீயே இப்படி ஒடஞ்சு உக்காராத டா "
அஜய் " முடியல டி சித் இல்லாம நானும் பூர்ணி யும் என்ன பண்ண போறோம் நினைச்சாலே பயமா இருக்க "
" டேய் மச்சான் ஏன்டா எங்கள விட்டு போன "
என கண்ணீர் விட்டு அழ..
அவனை தனது மடியில் தாய் போல தாங்கி சமதானம் செய்தாள் நித்யா....
ஆனது இன்றுடன் சித்தார்த் இறந்து மூன்று மாதம் ஆனது...
மேடிட்ட தனது வயிற்றை பார்த்தபடி அந்த மருத்துவமனையில் அமர்ந்து இருந்தாள் பூர்ணி...
" ஏய் செல்லகுட்டி அப்படி தான் வாந்தி வரும் கொஞ்சம் நாள் தான் டா எல்லாம் சரியா போயிடும் "
என தனது மனைவியை கணவன் கொஞ்ச அதனை பார்த்த பூர்ணி கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது...
சுற்றி இருந்த அனைவரையும் பார்க்க கர்ப்பிணி பெண்கள் அனைவரும் தம்தமது கணவணுடன் மற்றும் சொந்தபந்தட்டுடன் வந்தினர்...
சிறிது நேரம் பார்த்த பூர்ணி தனக்கு யாருமில்லை என தோன்ற ஹாஸ்பிடல் என்றும் பாராமல் கதறி அழுதாள்..
அனைவரும் அவளை விசித்திராமாக பாக்க அங்க அஜய் " அம்மு என்ன பண்ணுற என்னாச்சு டா அழாத வா போகலாம் "
அஜயை கட்டி கொண்டவள் " எனக்கு என் சித்து வேணும் அஜ்ஜூ என்ன என் சித்து கிட்ட கூட்டிட்டு போ "
அங்கு வந்த நித்யா " வாட்ஸ் ஹேப்பனிங் பூர்ணி எத்தனை தடவ சொல்லுறது போதும் அமைதியா இரு நீ இப்படி பண்ணுறது குழந்தைக்கு தான் ஆபத்து பிளிஸ் புரிஞ்சுக்கோ "
என அவளிடம் சத்தம் போட அந்த மிரட்டலுக்கு பயந்தவள் வாயை மூடி கொண்டு விசும்பினாள்...
நித்யா " சரி வா போய் ஸ்கேன் பாக்கலாம் "
ஸ்கேன் பார்க்க குழந்தை ஆரோக்தியமாக உள்ளது நீங்க தான் இன்னும் சத்தானதா சாப்பிடனும் என சில அறிவுரைகள் கூறி மருந்து மாத்திரைகளை எழுதி கொடுத்து அவளை அனுப்பி வைத்தார்...
நித்யா மருந்து வாங்க செல்ல அஜய் அவளது தோளினை பற்றி தாங்கி கொண்டு அழைத்து சென்றான்...
அப்போது இதனை தூரத்தில் இருந்து பார்த்த இரு பெண்களில் ஒருவர் " அஜய் தான அது அவன் ஏன் அந்த பொண்ண கூட்டிட்டு போறான் அவ புருஷன் கூட ஒரு மாசத்துக்கு முன்னாடி இறந்துட்டாராபமே "
" இவனுக்கு ஏன் இந்த தேவயில்லாத வேல "
" என்னமோ போங்க பாத்துக்கோங்க இதலா நல்லதுக்கு இல்ல "
என மற்றொரு பெண்ணிடம் பேசினாள்..
இதனை கேட்ட அந்த பெண்மணி கண்களில் கோபம் கொந்தளிக்க அந்த இடத்தை விட்டு அகன்றாள்....
வீட்டிற்கு வந்த அஜய்யை நிறுத்தினார் அந்த பெண்மணி இந்திரா " அஜய் நில்லு நீ பண்ணுறது சரியில்ல "
அஜய் " என்ன சரியில்லை "
இந்திரா " அவள ஏன்டா நீ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போற "
அஜய் " எவள "
என கண்களில் சினத்துடன் கேட்டவனை பார்த்து பறந்தாலும் தனது பயத்தை வெளியே காட்டாமல்
இந்திரா " அவ தான் அந்த சித்தார்த் பொண்டாட்டி "
அஜய் " அம்முவ நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகாம வேற யாரு கூட்டிட்டு போவா "
இந்திரா " என்ன அம்மு வா அதான அந்த சித்தார்த் பைய இருக்கும் போதே நீ அவள அம்முனு கொஞ்சுறதும் அவ ஒன்ன அஜ்ஜூ பொஜ்ஜூ னு கொஞ்சுறதும் நடந்துட்டு தான இருந்துச்சு இப்ப அவனும் இல்ல உங்களுக்கு நல்ல வசதியா போச்சு "
" ஒருவேளை அந்த குழந்தைக்கும் உனக்கும் ஏதாவது சம்பந்தம் "
என முடிப்பதற்குள்
" அம்மா "
என குரல் கேட்டு இருவரும் வாசல் பக்கம் பார்க்க அந்த ருத்ர காளியாக நித்யா நின்று கொண்டு இருந்தாள்....
தொடரும்...
வணக்கம்
கதையின் முதல் தொடர் பதிப்பித்துடேன் எப்படி இருக்குனு கமெண்ட்ல சொல்லுங்க கதையில் நாயகன் சித்தார்த் நாயகி பூர்ணிமா நண்பணாக அஜய் அவனது காதலி நித்யா இவர்களை சுற்றி நடக்கும் கதை...
உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது ஆமா கதைபடி ஹூரோ இறந்துவிட்டார்..
இனியவன் பத்தி இனிவரும் தொடர்களில் பார்கலாம்...
ஏதாவது சந்தேகம் என்றாள் கமெண்டில் கேட்கவும்
நன்றி....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல் பாகம் பதிப்பித்து விட்டேன் படித்துவிட்டு நிறை குறைகளை சுட்டி காட்டவும் அப்போது தான் திருத்தி கொள்ள முடியும் நன்றியுடன்
சிந்தியன்
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma starting... Starting ye. Hero va konnu tingale நியாயமா.... இனியன் யாரு.... Car la rendu dead body இருக்கானும் la but ஒன்னு தானே இருக்கு... Appo யாரு இறந்து போனது...
 

S Sathya

Bronze Winner
Super Super Super maa... Semma starting... Starting ye. Hero va konnu tingale நியாயமா.... இனியன் யாரு.... Car la rendu dead body இருக்கானும் la but ஒன்னு தானே இருக்கு... Appo யாரு இறந்து போனது...
Sis நீங்க சொன்னது சரி எனக்கு என்னமோ எறிஞ்சி போயி இருந்தது இனியவன்னு தோணுது சித்தார்த் உயிரோட இருக்காங்கனு நெனைக்கிறேன் பார்க்கலாம்
 
Status
Not open for further replies.
Top