All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் கலாப காதலா 18

Status
Not open for further replies.

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
18 கலாப காதலா
" விக்ரம் "
" வாங்க அஜய் என்ன இந்த நேரத்தில "
" நேத்ரா எங்க "
" வந்ததும் வரதாதும் நேத்ரா எங்கனு கேட்டா என்ன சொல்ல என்ன விஷயம் சொல்லுங்க "
கோபத்தை கட்டுபடுத்தி கொண்டு
" சித் ஆக்ஸிடென்ட்க்கும் நேத்ராக்கும் சம்பந்தம் இருக்குனு எனக்கு தோனுது "
" உங்களுக்கு தோனுறதுக்குலா நாங்க என்ன பண்ண முடியும் இன்பாக்ட் நேத்ரா பாரின்லா தான இருக்கா அவ எப்படி இத பண்ண முடியும் "
" என்ன விக்ரம் ரொம்ப ஸ்மார்டா பேசுறதா நினைப்பா "
" அஜய் நேத்ரா இங்க இல்ல அவளுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்ல‌ இன்னும் சொல்ல போனா சித் இறந்ததுல ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டா "
" தம்பி விக்ரம் சொல்றது உண்ம தான் நேத்ரா இங்க இல்ல அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை "
என விக்ரம் தாய் அவளுக்காக பேச
" இங்க பாரு விக்ரம் நல்லா கேட்டுக்கோ சித் ஆக்ஸிடென்டுக்கும் நேத்ராவுக்கும் சின்ன சம்பந்தம் இருந்தாலும் சரி நான் மனஷனாவே இருக்க மாட்டேன் "
என விரல் நீட்டி எச்சரித்து விட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினர்...
" என்னடா நடக்குது ஏன் அந்த பையன் இப்படி பேசுறான் "
" அவனுக்கு நேத்ரா மேல இப்ப சந்தேகம் மா அதான் இப்படிலா பேசுறான் "
" என்னவோடா எனக்கு சீக்கிரமா என் மருமக நம்ப வீட்டுக்கு வரனும் "
" கவலபடாதிங்க சீக்கிரமா பூர்ணி இந்த வீட்டு மருமகளா வருவா நீங்க போய் ரெஸ்ட் எடுங்க "
மனதில் பல திட்டங்களை தீட்டி கொண்டே போனை நேத்ராவிற்கு அழைத்தான்...
நீண்ட அழைப்புக்கு பின் எடுக்க
" ஹாய் நேத்ரா எப்படி இருக்க "
" யா பைன் "
" சாப்பிடியா என்ன பண்ணுற வோர்க்கு லா எப்படி போகுது "
" விக்ரம் பிளிஸ் ஸ்டாப் இட் எனக்கு நிறைய வேல இருக்கு நான் பேசுறேன் சாரி "
இதற்க்கு மேல் ஒன்றும் இல்லை என்பது போல அவள் வைத்துவிட இவனும் வைத்துவிட்டு தனது வேலைகளை பார்த்தான்...
அஜய் வேகமாக கார் ஓட்டி கொண்டு வர
" அஜய் கொஞ்சம் பொறுமையா போ பிளிஸ் "
" ஏய் சொன்னா கேளு டா பொறுமையா போ "
அவள் பேச்சினை காதில் எடுத்து கொள்ளலாம் வேகமாக சென்று கடற்கரை பக்கத்தில் நிறுத்தி தனது கோபத்தை காரின் கதவில் காட்டினான்....
" ஏன்டா இப்படி பண்ணற பைத்தியாமா உனக்கு "
" ஆமா பைத்தியம் தான் பைத்தியம் தான் போதுமா "
என கத்தி கொண்டே நித்யாவை பிடித்து தள்ள சரியாக அந்த நேரம் உள்ளே வந்தாள் பூர்ண...
" அஜய் "
என்கிற கத்தலில் இருவரும் திரும்பி பார்க்க கோபத்துடன் நின்று இருந்தாள் பூர்ணிமா..
" என்ன நடக்குது இங்க "
தன்னை சமன் செய்த நித்யா எழுந்து
" வா பூர்ணி "
" வா அம்மு நீ எப்ப வந்த தனியாவா வந்த "
" பேச்ச மாத்தாத ஏன்டா இப்படி பண்ணுற "
" ஏய் பூர்ணி அதலா ஒன்னும் இல்ல உனக்கு தெரியாதா உன் அஜ்ஜூ பத்தி "
" எனக்கு என் அஜ்ஜூ பத்தி நல்லாவே தெரியும் எவ்வளவு கோபம் வந்தாலும் உங்கள எதும் பண்ண மாட்டானு உங்களையே தள்ளி விடுறானா கண்டிப்பாக ஏதோ இருக்கு "
என்றவள் அஜய் முகம் திருப்பி
" என்ன அஜ்ஜூ என்னாச்சு ஏன் இவ்வளவு கோபம் "
" என்னமோ தப்பா இருக்கு அம்மு "
" என்ன தப்பு டா "
" சித் டெத்துல ஏதோ தப்பு இருக்கு அத என்னால கண்டுபிடிக்க முடியல டி "
தான் அழுதால் நிச்சயம் அது அஜய் பாதிக்கும் என எண்ணிய பூர்ணி
" என்ன தப்பு "
" அதான் தெரியல "
" சும்மா ஏதாச்சும் உளறாத அஜய் சித்து டெத் ஒரு ஆக்ஸிடென்ட் அவ்வளவு தான் நீ தேவையில்லாம ஏதாச்சும் யோசிக்காத "
என கோபமாக பேச
" இல்ல பூர்ணி "
" போதும் அஜய் நிறுத்து சித் இறப்பால அதிகமா பாதிக்கப்பட்டது நான் தான் நான் சொல்றேன் சித்க்கு நடந்தது ஆக்ஸிடென்ட் தான் நீ எதும் கற்பனை பண்ணாம உன் வாழ்க்கைய மட்டும் வாழ பாரு "
" என் வாழ்க்கைய பாக்கனும்னா உன்ன யாரு பாத்துபா "
" நான் பாத்துபேன் நான் ஒன்னும் குழந்தை கிடையாது எனக்கு என்ன பாத்துக்க தெரியும் நீ இனிமே என்ன பாக்க வராத பாய் ஏதாச்சும்னா நானே கால் பண்ணுறேன் "
" ஏய் அப்படிலா விட முடியாது நீ எனக்கு முக்கியம் என் நண்பன தொலச்ச மாதிரி உன்ன தொலைக்க மாட்டேன் "
என அவளது கையினை பிடிக்க
" அஜய் விடு அறிவில்ல உனக்கு உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு இனி இதான் உன் குடும்பம் இதமட்டும் நீ பாரு என் புருஷன் எப்படி செத்தான் அது ஆக்ஸிடென்ட் கொலையானு நான் பாத்துக்குறேன் "
விறுவிறுவென காரில் ஏறி தன் வீடு செல்ல
அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கட்டுப்பாடு இல்லாமல் வந்தது...
அன்று பேசி சென்றபின் அஜய் பூர்ணியை பாக்க வரவில்லை அதுபோக போலிஸ் கால் செய்து அஜய் பற்றி கேட்க இவள் ஏன் என் திருப்பி கேட்க வேற வழியில்லாமல் அஜய் குணசீலன் நேத்ரா பேரில் விசாரித்தது என எல்லாம் கூற நித்யாவுடன் இருக்கும் நேரத்தை தேவையில்லாமல் செலவிடுவதாக நினைத்து அவனிடம் எடுத்து சொல்ல தான் சென்றாள்...
அஜயின் கோபம் கண்டு தன்மையாஇ பேசி பயனில்லை என உணர்ந்து கடுமையான வார்த்தைகளால் அவனை தாக்கினாள்...
வீட்டிற்கு வந்தவள் அவனை பற்றியும் சித்தை பற்றியும் நினைக்க அழுதழுது தூங்கியும் போனாள்....
பூர்ணி காணாமல் போன விஷயம் அவளதீ பெற்றோர்க்கு தெரியவர ஹாஸ்டல் வார்டன் அவள் கிடைத்து விட்டது பற்றியும் சித் வீட்டில் இருப்பது பற்றியும் கூறினார்...
" நீங்க ஏன் அப்பா கவலபடுறிங்க எவ்வளவு தூரம் சொன்னோம் படிக்க மட்டும் தான் சென்னை போயிறுக்க வேற ஏதும் பண்ணாதனு இப்ப ஏவனோட வீட்டில போய் உட்கார்ந்து இருக்காளா அவ "
தன் கணவனின் கோபம் கண்டு மனதில் பயந்த சுமதி மகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என எண்ணி
" மாமா நான் மட்டும் போய் பூர்ணிய அழைச்சிட்டு வரேன் மாமா "
" என்ன டி நடிக்குறியா உனக்கு தெரியாமலா உன் பொண்ணு இந்த தப்புலா பண்ணுவா "
என சிவராமன் தன் மனைவியிடம் எகிற
மகனின் கோபம் கண்ட முத்துராமன்
" டேய் நீ போக வேணாம் சுமதி மட்டும் போயிட்டு நம்ப பூர்ணி ய அழைச்சிட்டு வரட்டும் "
" அப்பா என்ன பேசுறிங்க "
தன் கை காட்டி அவரை மறித்தவர்
" கூட நம்ப கோபியும் போவான் நீ இங்கேயே இரு "
சுமதி கோபி இருவரும் கிளம்பி சென்னை வர...
விக்ரம் வீட்டிற்கு அஜய் சித் இருவரும் செல்ல வாசலிலே ப்ளார் என அறையும் சத்தம் கேட்டு அப்படியே நின்றனர்...
விக்ரம் " என்னாச்சு நேத்ரா ஏன் இப்படி பண்ண நீயும் ஒரு பொண்ணு தான உன்னால எப்படி இப்படி ஒரு காரியத்த பண்ண முடிஞ்சுது "
நேந்ரா " என்ன கேள்வி கேக்குற உரிமையே உன்கிட்ட இல்ல இதுல என்ன கை நீட்டி வேற அறையுறியா "
விக்ரம் " முட்டாளா நீ நீ என்ன தப்பு பண்ணிருக்கனு உனக்கு புரியுதா இல்லையா "
வெறி கொண்டு கத்தியவள்
நேத்ரா " ஆமா தப்பு தான் பண்ணேன் எனக்கு கிடைக்க வேண்டிய என் சித் ஒருத்தி பறிச்சுக்கிட்ட என்னால வேடிக்கை பாத்துட்டு இருக்க முடியல "
விக்ரம் " அதுக்காக அவள் கடத்துற அளவுக்கு போவியா "
நேத்ரா " கடத்த மட்டும் இல்ல கொலை பண்ணுற அளவுக்கு கூட போவேன் "
உள்ளே வந்த சித் நேத்ரா கண்ணத்தில் பளார் பளார் என அறைந்தான்
" என்ன சொன்ன நான் இருக்கும் போது என் பூர்ணி மேல கை வைச்சுடுவியா என்ன தைரியம் உனக்கு "
தலைக்கு மேல் கை வைத்து தனது கோபத்தின் அளவை கட்டுபடுத்தியவன்..
" இங்க பாரு இந்த ஜென்மத்துல பூர்ணி தான் என் காதலி மனைவி எல்லாமே அவ இல்லாத ஒரு வாழ்க்கை எனக்கு இல்ல புரியுதா "
" ஏன் சித் என் காதல் உனக்கு புரியல "
என கதறி கொண்டே கேட்பவளை
" எனக்கு உன் மேல லவ் வரல நேத்ரா ஏன் ஏன்னு கேட்டா நான் என்ன சொல்ல "
" நீ எதும் சொல்ல வேணாம் சித் இனி நேத்ரா இங்க இருக்க மாட்டா அவளால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது "
என விக்ரம் முடிக்க
அவனையும் வெட்டும் பார்வை பார்த்தவள் வேகமாக தனறைக்கு சென்று கதவை ஓங்கி சாத்தினாள்.. அந்த சத்தமே சொல்லியது அவள் கோபத்தின் அளவை...
சித் அஜய் இருவரும் கிளம்பி வீடு வர
இங்கு விக்ரம் நேத்ராவை வெளிநாடு அனுப்பும் முயற்சியில் இறங்கினான்.....
அஜய் வழியில் அவனது வீட்டில் இறங்கி கொள்ள சித் வீடு வரவும் சுமதி கோபியுடன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது...
" இங்க பாருங்க இப்ப எங்கள உள்ள விட போறிங்களா இல்லையா "
என கோபி வாட்ச்மென் உடன் கத்த
" இங்க பாருங்க ஐயா இப்ப வீட்டுல இல்ல வந்ததும் வந்து பாருங்க "
காரை நிறுத்தி விட்டு இறங்கி அங்கு வந்த சித்
" வணக்கம் ஐயா "
" என்ன பிரச்சினை யாரு இவங்க‌ "
" உங்கள பாக்க தான் வந்துருக்காங்க "
" யாரு நீங்க எதுக்கு பிரச்சினை பண்ணுறிங்க "
என இருவரையும் பார்த்து கேட்க
" யாரு பிரச்சினை பண்ணுறா எங்க வீட்டு பொண்ணு கூட்டிட்டு வந்து நீ தான் பிரச்சினை பண்ணுற "
" வாட் ஏய் என்ன பேசுற உங்க வீட்டு பொண்ணா "
" ஆமா பூரணி எங்க வீட்டு பொண்ணு அவள எங்க கூட அனுப்பு நீ உங்க ஊருல எவ்வளவு பெரிய பணக்காரனா வேணா இருந்திட்டு போ எங்களுக்கு கவலயில்ல எங்க பொண்ணு வேணும் "
என கோபி சித்திடம் எகிற
" நீங்க பூர்ணி "
" நான் பூர்ணி அம்மா "
" வாங்க உள்ள வாங்க உள்ள போய் பேசலாம் "
என மரியாதையுடன் இருவரையும் உள்ளே அழைக்க
உள்ளே சென்ற இருவரும் அவனின் வீட்டினை பார்த்து வாய் பிளந்தனர்...
" உட்காருங்க காஃபி சாப்பிடலாம் "
" நாங்க இங்க காஃபி குடிச்சுட்டு சாப்பிட்டு போக வரல எங்க பொண்ண எங்க கூட அனுப்புங்க "
என சுமதி கை எடுத்து கும்பிட
" ஐய்யோ என்ன மா பண்ணுறிங்க உங்க வயசு என்ன என் வயசு என்ன நீங்க போய் "
என அவரின் கையினை இறக்கிவிட
" கொஞ்சம் பேசலாம் மா பூர்ணி தான் எனக்கு எல்லாம் அவள நான் அவ்வளவு லவ் பண்ணுறேன் கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன் மா "
" வேணாம் தம்பி நீங்க எதும் பேச வேணாம் என் பொண்ணு எங்க "
" வாங்க "
என்றவர் சுமதியை தனது அறைக்கு அழைத்து செல்ல தூங்கி கொண்டு இருந்த பூர்ணி பேச்சு சத்தம் கேட்டு கண்விழிந்தாள்..
சித் என சிரிப்புடன் அவன் பக்கம் சென்றவள் பக்கத்தில் வந்த தனது தாயினை கவனித்து
" மா "
" வா போகலாம் "
என அவளது கை பிடித்து இழுக்க
" மா நான் சொல்லுறத "
" எதும் வேணாம் போ போய் காருல ஏறு போ "
சித்தை திரும்பி பார்த்தவள் அவன் கண்ணால் போ என சம்மதம் தர காரில் ஏறினாள்...
சுமதி சித்யிடம் திரும்பி
" ஏதா இருந்தாலும் வீட்டுல பெரியவங்க கிட்ட வந்து பேசுங்க "
என்றவர் காரில் ஏற
ஏனோ சுமதி சம்மதம் மறைமுகமாக கூறியதாக நினைத்த சித் சற்று திருப்தியுடன் அனுப்பி வைத்தான்....
தொடரும்
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போன எபி க்கு reply பண்ணாததுக்கு மன்னிக்கவும் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள் ஃபோன் எபிக்கு கருத்துகளை சொன்னவங்களுக்கு மிக்க நன்றி
 
Status
Not open for further replies.
Top