All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் கலாப காதலா 3

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
3 கலாப காதலா
வெளியே வந்த நண்பர்கள் இருவரும் கிளம்ப இவர்களை சிரிப்புடன் இரு கண்கள் கவனித்து கொண்டு இருந்தது..

" சித் என்னைக்கு இருந்தாலும் நான் உன்ன அடைஞ்சே தீருவேன் நீ எனக்கு மட்டும் தான் "
என மனதில் நினைத்து கொண்டவள் அவன் சென்றவுடன் தனது காரில் ஏறி இவளும் சென்றுவிட்டாள்...


அதிகாலை நேரம் அந்த வீடே பரபரப்பாக காணப்பட்டது.. அவரவர் வேலைகளை பார்க்க இதற்கெல்லாம் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல தலை வரை இழுத்து போர்த்தி கொண்டு தூங்கி கொண்டு இருந்தாள் நமது நாயகி...

சுமதி " ஏய் மணி ஆகுது எழுந்திரு டி உனக்காக நாங்க இத்தனை பேரு வேல செஞ்சா நீ இழுத்து போர்த்திட்டு தூங்குற "
என அவளது தாய் கத்த..
பூர்ணி " மா 5 மினிட்ஸ் மா "

சுமதி " இப்ப எழ போறியா இல்லையா "

அருண் " அந்த தண்ணிய எடுத்து அவ மேல ஊத்து மா அப்புறம் பாரு தானா எழுந்துருப்பா "
என்றான் பாசமிகு தம்பி....

முத்துராமன் " பூர்ணி எழுந்துடியா மா "
என அறையின் வாயிலிருந்து குரல் வர

பதறியவள் பட்டென கண்களை திறந்து
" கிளம்புறேன் தாத்தா "
என குளியல் அறை நோக்கி ஓடினாள் பூர்ணிமா...

அருண் " பாத்தியா மா நம்ப எவ்வளவு நேரமா எழுப்புறோம் அப்பலா எழுந்திரிக்காம தாத்தா வாய்ஸ் கேட்டதும் தலை தெறிக்க ஓடுறா "

சுமதி " அவ ஓடுறது இருக்கட்டும் நீ இதான் சாக்குனு ஓப்பி அடிக்காத தலைய கீழ குனிஞ்சு படி "
என அவன் தலையில் ஒரு கொட்டு வைக்க....

அந்த பெரிய வீட்டில் எழுபது வயது நிரம்பிய முத்துராமன் சொல்லுவதே சட்டம் அவரது அனுபவ அறிவு அவர் சொல்லுவதை கேட்க வைக்கும்....

முத்துராமன் பூர்ணிஅம்மா தம்பதியருக்கு இரண்டு மகன் ஒரு மகள்
மூத்தவர் அனந்தராமன் திருமணம் செய்து கொள்ளாமல் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்து வருகிறார்..
இரண்டாவது சிவராமன் மனைவி சுமதி
இவர்களின் மகள் பூர்ணிமா மகன் அருண்
தன் தாயின் நினைவாக தன் மகளுக்கு அவரது பெயரையே வைத்தார்...

அடுத்தது மகள் சுந்திரி சிறுவயதிலேயே கணவனை இழக்க தன் தந்தையிடம் தஞ்சம் புகுந்தான் அவரது ஒரே மகன்
கோபி கிருஷ்ணன் படித்துவிட்டு குடும்ப தொழிலை பார்க்கிறான்...

சிறுமளிகை கடை ஆரம்பித்த முத்துராமன் அவர்களின் கடின உழைப்பால் பல கடைகளாக வளர்ந்து வருகிறது......

சாமிரூம் உள்ளே அனைவரும் கண்களை மூடி கும்பிட பூர்ணி மெதுவாக ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள்..

" ஐய்யோ எப்ப படிச்சு முடிப்பாங்கனு தெரிலயே பசி உசிரு போகுதே "
என மனதிற்குளேயே பேச..

பக்கத்தில் இருந்த தன் தாயின் தோளினை மெதுவாக சுரண்டினாள்
" மா மா "

கண்களை திறக்காமலே சுமதி " ம்ம் ம்ம் "

பூர்ணி " மா மா மாவோ "

சுமதி " என்னடி "

பூர்ணி " பசிக்குது மதரு "

சுமதி " அப்படியே அறைஞ்சனா பாரு சாமி கும்பிட்ட அப்புறம் தான் சாப்பாடு பேசாம கண் மூடி சாமி கும்பிடு "
என பற்களை கடித்து கொண்டு கூற

இதனை கண்ட அருண் உதட்டினை மடித்து மெதுவாக சிரிக்க அதனை கண்ட பூர்ணி அவனது தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்துவிட்டு நல்ல பிள்ளையாக கண்களை மூடி கொண்டாள்...

அவள் கொட்டியதில் வலி உண்டாக " ஐய்யோ அம்மா "என கத்தி விட்டான்...

இவனது கத்தலில் அனைவரும் கண்திறக்க

சுமதி " என்னடா என்னாச்சு ஏன் கத்தின "
திருதிருவென முழித்து கொண்டு

அருண் " அது அது எறும்பு கடிச்சுட்டு மா அதான் தெரியாம கத்திட்டேன் "
அனைவரும் அவனை முறைக்க..

முத்துராமன் " சரி சரி எல்லோரும் சாப்பிட போங்க "

அதுவரை கண்களை திறக்காமல் இருந்த பூர்ணி பட்டென கண்களை திறந்து
"ஐய் சாப்பிட போலாமா "

அப்போது அனைவரும் அவளை முறைக்க

" ஐய்யோ மைண்ட் வாய்ஸ் னு நினைச்சு சத்தமா பேசிட்டோமே "

" நம்ம டேன் ஆகிட்டே முறைக்கறாங்களே முறைக்கறாங்களே என்ன பண்ணுறதுனு தெரியலயே சரி சமாளிப்போம் "

சற்று சத்தமாக இரும்பியபடி நிற்க
சுமதி " சரி போதும் வா ஓவர் ஆக்டிங் பண்ணாத "

அனைவரும் வெளியே வர
முத்துராமன் " பூர்ணி "

பூர்ணி " ஆங் தாத்தா "

முத்துராமன் " இந்தா இத
எடுத்துட்டு போய் மாடில காக்கா க்கு வைச்சுட்டு வா "
என அவளது கையில் இலையை வைக்க

பாவமாக முகத்தை வைத்து கொண்டு போனாள் ( பசினு வந்த புள்ளய ஒரு வாய் சாப்பிட உடுரிக்கலா )

ஒரு வழியாக உணவு உண்ண அமரும் போது

ஹே எத்தனை சந்தோஷம் தினமும் கொட்டுது உன்மேல நீ மனசு வைச்சுபுட்ட ரசிக்க முடியும் உன்னால நீ சிந்துர கண்ணீரும் இங்க நிரத்தரம் இல்ல இதை புரிஞ்சுகிட்டாலே நீ தான்டா ஆள
என அவளது ஃபோன் அழைக்க

" என்னடா இன்னைக்கு ரொம்ப ஜாம் ஆகுது "

என நொந்தவாறே தலையை தூக்க பார்க்க...

சிவராமன் " அம்மாடி ஃபோன கையிலே வைச்சுட்டு இருப்பியா ஆஃப் பண்ணு "

அனந்தராமன் " அம்மாடி சாப்படும் போது எதுக்கு மா ஃபோன் எட்ட வைமா "

ஒருவழியாக உணவை முடித்துவிட
முத்துராமன் " பூர்ணி பூர்ணி "

பூர்ணி " சொல்லுங்க தாத்தா "

முத்துராமன் " இங்க வா தா பேசனும் "

பூர்ணி " தாத்தா என்ன தாத்தா "
முத்துராமன் " என்னைக்கு தா ஊருக்கு போற "

பூர்ணி " நாளை கழிச்சு மறுநாள் தாத்தா "

" ம்ம் " என்று சற்று யோசித்தவர்

" உனக்கே தெரியும் டா நம்ம கிராமத்துல வெளியே போய் யாரும் படிச்சது இல்லனு உன்ன நாங்க அனுப்பி வைக்குறோம் நம்பிக்கைய காப்பாத்தனும் டா "

அவரின் கையினை பிடித்து கொண்டு " நிச்சயமா தாத்தா "

பூர்ணிமா தனது மேற்படிப்பிற்காக வந்தாரை வாழ வைக்கும் சென்னை நோக்கி சென்றாள்....
தொடரும்...

வணக்கம் பிரண்ட்ஸ்

படிக்கற எல்லாரும் உங்களோட கருத்துகள சொல்லிட்டு போங்க உங்க கருத்துகள் தான் என்னோட energy boost தயவு செய்து கமெண்ட் பண்ணுங்க
நன்றி
 
Top