All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் கலாப காதலா 5

Status
Not open for further replies.

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
5 கலாப காதலா
விக்ரம் " சொல்லு நேத்ரா ரோட்ல தான் உனக்கு மீட்டிங்கா "
பானு " டேய் என்னடா பேசுற "
விக்ரம் " மா இவ்வளவு நேரம் யாருகூட எங்க என்ன பேசிட்டு இருந்தானு எனக்கு தெரியும் "
நேத்ரா " விக்ரம் நான் யாருகிட்ட எப்ப வேணா என்ன வேணா பேசுவேன் அத கேக்க நீ யாரு "
பானு " நேத்ரா என்ன மா பேசுற அவன் உன்ன "
என பேச வந்தவனை இடைமறித்து
விக்ரம் " மா விடுங்க "
நேத்ரா " அத்த என்ன மன்னிச்சுடுங்க நான் குழந்தை இல்ல இப்படி வழியில நிப்பாட்டி கேள்வி கேட்க எனக்கு தெரியும் நான் என்ன பண்ணுறேனு "
என கூறிவிட்டு அவள் வேகமாக தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டாள்....
பானு " என்னடா இவ இப்படி பேசிட்டு போறா "
விக்ரம் " நான் பாத்துக்கிறேன் மா "
பூர்ணி காலேஜ் சேர்ந்து மூன்று மாதங்கள் எந்த வித இடையூறும் இல்லாமல் சென்றது..
ஒருநாள் மாலை பூர்ணி பீர்த்தி இருவரும் காலேஜ் முடிந்த தனது ஹாஸ்டலிற்கு சென்றபோது அடித்த பலமான காற்றில் தனது துப்பட்டவை இழுத்து விட்டபடி வந்து கொண்டு இருந்தாள் பூர்ணி...
பூர்ணி " என்னடி மழை வரும் போல இருக்கு "
பீர்த்தி " அதான் போல சரி மணி 4 ஆகுது சீக்கிரமா ஹாஸ்டல் போயிடலாம் "
என பேசியபடி துரிதநடை போட்டு செல்லும் போது பூர்ணி துப்பட்டா காற்றில் பறந்து எதிரில் வந்த கருப்பு நிற ஆடி காரின் கண்ணாடி மேல் விழுந்தது...
வண்டியை ஓட்டி வந்த சித் திடிரென துப்பாட்டு வந்து விழுந்ததால் எதிரில் வரும் வாகனம் தெரியாமல் வண்டியை திருப்ப அது நடைமேடையில் மோதியது...
அதிர்ச்சி அடைந்த இருவரும் வேகவேகமாக காரின் அருகே சென்றனர்...
பீர்த்தி " என்னடி ஒரு ஷால கூட ஒழுங்கா பிடிக்க மாட்டியா இப்ப என்னாச்சு பாரு "
பூர்ணி " தெரியாம நடந்துச்சு டி சரி வா உள்ள யாரு இருக்காங்கன்னு பாப்போம் "
பீர்த்தி " நீ என்ன லூசா இந்தா இத பிடி "
என அவளது ஷாலை அவளிடம் திணித்து விட்டு அவளின் கையை பற்றி
" வா யாரும் பாக்குறதுகுள்ள ஓடிடலாம் "
பூர்ணி " ஐய்யோ அது ரொம்ப பாவம் டி உள்ள யாரு இருக்காங்கனு தெரியல ஏதாச்சும் ஹெல்ப் பண்ணலாம் "
பீர்த்தி " சரியா போச்சு போ அப்புறம் நாளைக்கு நாம தான் ஸ்டேஷன் ஸ்டேஷனா அலையனும் போலாம் வா "
அவளின் பேச்சில் எரிச்சலடைந்த பூர்ணிமா
" நீ வேணா போ நான் பாத்துகுறேன் "
என கடுப்புடன் கூறினாள்.....
அதற்குள் வண்டியை பார்த்த சிலர் உதவி செய்ய அருகில் வந்தனர்..
பீர்த்தி " இப்பவும் ஒன்னும் பிரச்சினை இல்லை எல்லோரும் பாக்குறாங்க வா வா "
" ஏப்பா உள்ள ஆளு இருங்காங்க மா ஆம்புலன்ஸ் கால் பண்ணுங்க "
என்க சரசரவென அந்த இடத்தில் கூட்டம் கூட
ஆம்புலன்ஸ் வந்து காரின் உள்ளே இருந்தவனை வெளியே எடுத்தனர்..
தலையில் மட்டும் ஒரு ஓரம் இரத்தம் வழிய மயக்க நிலையில் இருந்தான் சித்தார்த்...
" யாராவது தெரிஞ்சவங்க இருக்கிங்கல "
என ஆம்புலன்ஸ்யில் இருந்தவர் கேட்க..
தன்னால் தான் அவருக்கு இந்த அடி என குற்ற உணர்வில் இருந்த பூர்ணி
" நான் நான் இருக்கேன் "
பீர்த்தி அவளது கையை பிடித்து " உனக்கென பைத்தியமா "
பூர்ணி " உன்ன மாதிரிலா என்னால இருக்க முடியாது விடு "
என அவளின் கையின் தட்டி விட்டு ஆம்புலன்ஸில் சித்தார்த் உடன் ஏறினாள்....
ஹாஸ்பிடல் அழைத்து சென்று தேவையான முதலுதவி செய்தபின் வந்த நர்ஸ் ஒருவர்
" மேடம் இந்தாங்க இதுல இருக்கற மெடிசின் வாங்கிட்டு வாங்க "
" ஆங் "
என முழித்து கொண்டு இருந்தவளை
" மேடம் சீக்கிரம் போங்க டிரிப்ஸ் போடனும் "
பூர்ணி " ம்ம் ஓகே நான் போய் வாங்கிட்டு வரேன் "
என்றவள் அந்த மருத்துவமனை யிலே உள்ள மெடிக்கலுக்கு சொன்றாள்...
பூர்ணி " அண்ணா இந்த மெடிசின் தாங்க இப்ப என்கிட்ட கையில காசு இல்ல நான் ஏடிஎம் போயிட்டு வந்து தரேனே "
" போ பிராபளம் மேம் இந்தாங்க நாங்க இந்த பில்ல பேஷண்ட் டிஸ்சார்ஜ் ஆகுறதுக்கு கூட சேர்த்து போட்டுகுறோம் "
" நல்லா விபரமா தான் டா இருக்கிங்க "
அடுத்து என்னவென்று யோசிப்பதற்குள் பில் அவளது கையில் வந்தது " என்னது எட்டாயிரமா " என வாயினை பிளந்தவள்..
" பேசாம பீர்த்தி சொன்னத கேட்டு அங்கயே இருந்து இருக்கலாமோ "
என ஒரு மனம் கூற
" ச்ச்சீ இல்ல நம்பலா தான அடி பட்டுச்சு நாம தான் பண்ணும் "
" பட் பணத்துக்கு இப்போ என்ன பண்ணுறது "
என தனது கழுத்தில் உள்ள செயினை கையில் வைத்தபடி யோசித்து கொண்டு இருக்க...
" ஆங் ஐடியா "
என வாசலை நோக்கி வந்தவள் நேராக அருகில் உள்ள வட்டி கடைக்கு சென்று தனது கழுத்தில் இருந்த ஜெயினை வைத்து எட்டாயிரம் பெற்று கொண்டு அதற்கான ரசிதை வாங்கி கொண்டு வந்தாள்...
பணத்தை முழுவதுமாக செலுத்திய பின்னர்
" மேடம் நீங்க போய் இப்ப சார பாக்கலாம் "
" ம்ம் பணம் வாங்கிட்டு தான் உள்ளயே விடுறிங்க "
என மனதிற்குள் எண்ணியள் வெளியே சிரித்தபடி சித்தார்த் இருந்த அறைஇஅகு சென்றாள்.....
இதுவரை அவனுக்கு எதும் ஆக கூடாது என எண்ணி கொண்டு இருந்தவள் இப்போது தான் அவனது முகத்தையே பார்க்கிறாள்...
ஆறடி ஆண்மகன் மாநிறத்தில் தலைமுடி காற்றில் ஆட கண்கள் இரண்டும் மென்மையாக மூடியபடி படுத்து இருந்த சித் அருகில் சென்றாள்...
அவனிடம் உள்ள ஏதோ ஒரு ஈர்ப்பு அவளை இழுக்க தன்னையும் அறியாமல் கைகள்
தானாக அவனது தலை கேசத்தை கோத
திடிரென கைகளை பின்னுக்கு கொண்டு வந்தவள்
" அடியே என்னடி பண்ணுற யாராச்சும் பாத்தா என்னாகுறது "
என எண்ணியவள் அவசரமாக வாசலுக்கு ஓடினாள். சென்றவள் வாசலில் நின்று மீண்டும் ஒருமுறை அவனை திரும்பி பார்த்துவிட்டு சென்றாள்.....
ஹாஸ்டலில் நுழைந்தவளை பிடித்து கொண்ட பீர்த்தி " உனக்கு கொஞ்சமாச்சம் அறிவு இருக்கா எவ்வளவு தூரம் சொன்னேன் அவரு கூட போகாதனு போலிஸ் யாராச்சும் வந்தாங்கள உன்ன ஏதாவது கேட்டாங்கல உன் கூட வந்ததுக்கு என்ன எதும் கேட்கலயே "
என அவள் பேசி கொண்டே போக..
பிரியா " ஏய் பீர்த்தி அவள விடு நீ வா பூர்ணி என்னாச்சு இப்ப எப்படி இருக்காங்க ஒன்னும் ஆபத்து இல்லையே "
பூர்ணி " ஒன்னும் இல்ல பிரியா அவரு நல்லா தான் இருக்காரு எந்த பிரச்சனையும் இல்ல "
பீர்த்தி " அப்பாடா நான் வேற பயந்துட்டேன் எங்க ஏதாவது பிரச்சினை ஆகிடுமோனு "
அவளின் கழுத்தை பார்த்த பிரியா " ஏய் உன் செயின் எங்க எங்காவது தொலைச்சுடியா "
பூர்ணி " இல்லடி அவரு டீரிட்மெண்ட்க்கு பணம் தேவை அதான் செயின அடகு வைச்சுறுங்கேன் "
பீர்த்தி " என்னது அடகுவச்சுறுக்கியா நல்ல வேல சாமி நான் உன்கூட வரல வந்துருந்தா அவ்வளவு தான் என்னோட நகையும் சேர்த்து வைச்சுறுப்ப "
அவளின் பேச்சினை கேட்ட இருவரும் இவள் இப்படி தான் தலையில் அடித்து கொண்டு தூங்கினர்.....
அஜய் " யாரு மச்சான் உன்ன ஆக்ஸிடென்ட் பண்ணது "
சித் " தெரில மச்சி ஏதோ துணி மாதிரி கண்ணாடி மேல விழுந்துச்சு கார திருப்பின அப்புறம் ஸ்டேரிங்ல இடிச்சு மயங்கிட்டேன் யாரு சேத்தா என்ன பண்ணாங்க ஒன்னும் புரியல "
அஜய் " நித்யா கிட்ட சொல்லி நம்ப ஹாஸ்பிடல் போலாமா "
சித் " வேணாம் மச்சான் இதுவே கம்படெபிளா தான் இருக்கு "
" அடயேய் அப்ப நீ ஜூஸ் போட்டது எனக்கு இல்லையா "
அஜய் " சீசீ ரொம்ப தாகமாக இருந்துச்சு அதான் எனக்கு போட்டு குடிச்சேன் "
அந்நேரம் வந்த நித்யா
" சித் இப்போ எப்படி இருக்கு "
அஜய் " அவனுக்கு என்ன எல்லாம் நல்லா தான் இருக்கான் "
நித்யா " உன்னயா நான் கேட்டேன் ஆமா அடிபட்டு அவன் படுத்துறுக்கான் அவனுக்கு ஜூஸ் தராம நீ போட்டு குடிச்சுட்டு இருக்க இடியட் "
.
சித் " நல்லா கேளு நித்யா ஜூஸ் எங்கனு கேட்டா என்னையே திட்டுறான் "
அஜய் " டேய் நீ வேற ஏன்டா போட்டு கொடுக்கற "
நித்யா " அவன் என்ன சொல்லுறது உன்ன பத்தி எனக்கு தெரியாத நாளைக்கு நான் இப்படி ஹாஸ்பிடல் கிடந்தாலும் நீ உனக்கென்ன ஜூஸ் போட்டு குடிப்ப அப்படிதான "
அஜய் " நீ என்னடி சம்மந்தமே இல்லாம பேசிட்டு இருக்க நோ நோ இனி சரண்டர் தான் நித்யா பேபி "
என அவளை கொஞ்சி சமாதான படுத்த..
சித் வேறொரு யோசனையில் முழ்கி இருந்தான் " யாரோ ரொம்ப நெருக்கமானவங்க வந்த மாதிரி இருந்துச்சே யாரது மனசு ஒரு மாதிரி ஃபீல் ஆகுதே "
என எண்ணி கொண்டே இரவை கழித்தான்

மன்னிக்கவும் சிறிய தவறு போன எபியில் யாத்ரா என தவறாக குறிப்பிட்டு விட்டேன் நேத்ரா என்பதே சரியான பெயர் தடங்களுக்கு மன்னிக்கவும்
நன்றி
 
Status
Not open for further replies.
Top