All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் கலாப காதலா 8

Status
Not open for further replies.

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
8 கலாப காதலா

பூர்ணி யை தேடி வெளியே வந்த வந்தார் இந்திரா சுற்றிலும் பார்க்க எங்கும் பூர்ணி தென்படவில்லை..
" ஒருவேல வீட்டுக்கு போயிட்டாலோ "
என எண்ணியபடி கார் பார்க்கிங்க்கு வர

" அண்ணா என்னாச்சு னா "
என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க பூர்ணி காரில் இருந்த டிரைவரிடம் பேசி கொண்டு இருந்தாள்..

" என்னாச்சுனு தெரியல மேடம் கேப் சொல்லிருக்கேன் வந்ததும் நீங்க போங்க மேடம் நான் கார சரிபார்த்து வீட்டுக்கு எடுத்துட்டு வரேன் "
என்றார் டிரைவர்..

" மேடம் கேப் வந்துடுச்சு வாங்க "

இவர்கள் பேசுவதை கேட்ட இந்திரா வேக வேகமாக பூர்ணியிடம் சென்றார்...

பூர்ணி இறங்கி காரிடம் செல்லவும் இந்திரா வேகமாக ஓடிவரவும் சரியாக இருந்தது...

பூர்ணி " மா நீங்க "

மூச்சு வாங்க ஓடி வந்தவர் பூர்ணியின் கையினை பிடித்து கொண்டு சற்று தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டார்...

இந்திரா " பூர்ணி பூர்ணி "

பூர்ணி " சொல்லுங்க மா கல்யாணத்த வச்சுட்டு இப்படி வந்து இருக்கிங்க என்னாச்சு மா "

இந்திரா " நீ வாமா மண்டபத்துக்கு நீ வாமா "

பூர்ணி தயங்கியபடி நிற்க

" நான் உன்ன பேசுனதுலா தப்பு தான் என் பொண்ணு வாழ்க்கையே உன் கையில தான் இருக்கு நீ வந்தா தான் தாலி கட்டுவேனு அஜய் அங்க உக்கார்ந்து இருக்கான் மா பிளிஸ் மா வா "
என இரு கையால் கும்பிட்டு மன்னிப்பு கேட்க...

" ஐய்யோ மா என்ன பண்ணுறிங்க "
என அவரது கையை இறக்கி விட்டவள்
" சரிமா நான் வரேன் "
என அவருடன் சேர்ந்து மண்டபத்தை நோக்கி சென்றனர்...

பூர்ணியை கண்ட அஜய் கோபத்துடன் அவள் அருகில் சென்றான்...

" ஏன் மேடமுக்கு அவ்வளவு தைரியமா யாராச்சும் ஏதாவது சொன்னா என்கிட்ட சொல்ல மாட்டிங்களா கோசிட்டு மண்டபத்த விட்டு கிளம்பிடுவிங்களா "
என அவளுக்கு மட்டும் கேட்கும் விதம் கூற

" அஜ்ஜூ அதலா என்ன யாரும் எதும் சொல்லல நீ வா வந்து தாலிய கட்டு முதல பாவம் டா நித்யா இன்னும் எத்தன தடவ தான் காத்துட்டு இருப்பாங்க "

அதன்பின் அஜய் நித்யா கழுத்தில் தாலி கட்ட திருமணம் இனிதாக நடைபெற்றது...
சித் இல்லை என்கிற குறையை தவிர வேறு எதும் அங்கு இல்லை எல்லாமே சுமுகமாக நடந்தது...

நாத்தனார் முடிச்சு பூர்ணி கையாலே போட இம்முறை அவளை யாரும் எதும் சொல்லவில்லை....

" உனக்கு டையரடா இருந்தா போய் ரெஸ்ட் எடு பூர்ணி "
என்ற நித்யாவிடம்

" அதலா ஒன்னும் இல்ல "
என்றவள் நித்யா அஜயுடன் பொழுதை கழித்தாள்..

மாலை நேரமாக பூர்ணி தன் வீட்டிற்கு கிளம்ப
" அஜ்ஜூ நான் போயிட்டு நாளைக்கு வரேன் "

" இப்ப எதுக்கு நீ அங்க போறேன் போறேன்ங்குற எல்லாம் ஒன் வீக் கழிச்சு நான் போய் விடுறேன் "

" இல்லடா மனசு ஒரு மாதிரியா இருக்கு "

" திரும்பவும் உன்ன யாருச்சும் ஏதாவது சொன்னாங்கள "
என கோபத்துடன் கேட்க

" அஜ்ஜூ அஜ்ஜூ ஏன் எல்லாத்துக்கும் கோபப்படுற அதலாம் ஒன்னும் இல்ல சித் கூட இருக்கனும் போல தோனுது அதான்
டா "

" ஏய் விடு அவ போயிட்டு நாளைக்கு வரவா " என நித்யாவும் அவளுக்கு சாதகமாக பேச அரை மனதுடன் அஜய் அவளை அனுப்பி வைத்தான்...

அலங்கரிக்கப்பட்ட அறையில் அஜய் காத்திருக்க அழகு பதுமையாக பெண்ணவள் வந்தாள்..

" அஜய் அஜய் "
இருமுறை கூப்பிட்டும் காதில் வாங்காமல்
இருக்க

அவனின் முன்பே சென்று நின்றாள் நித்யா..

அவளை பார்த்தவன் அவளின் கைகளை பற்றி இழுத்து தனக்கு முன்பாக நிற்க வைத்தவன் அவளது தோளில் முகம் புதைத்தான்...

" என்ன அஜய் விடுடா ஒரு மாதிரியா இருக்கு "

" என்ன மாதிரியா இருக்கு "
என பேசி கொண்டே இடை அழுத்தினான்...

வெட்க்கத்தில் முகம் சிவந்தவள் திரும்பி அவனது நெஞ்சிலே முகம் புதைத்தாள்...

" பார்ரா உனக்கு வெட்கம் லா கூட வருமா "
என கேட்க பொய் கோபம் கொண்டு அவனின் நெஞ்சில் குத்தியவள் மீண்டும் அவனிடமே தஞ்சம் புகுந்தாள்....

தொடரும்.......

நன்றி நன்றி நன்றி அழகான விமர்சனம் நிறைய வந்தது படிப்பதர்க்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது..
தொடர்ந்து இதுபோல ஆதரவு தாருங்கள் உங்களுடைய கருத்துக்கள் தான் என்னை மேன்மேலும் உயர்த்தும்.....
 

Chitra Balaji

Bronze Winner
பூரணி ah kutikitu vanthutaanga இந்திரா.... அஜய் கல்யாணம் mudichidichi.... அவளும் kalambita ava வீடு ku avanuku anupurathula இஷ்டம் இல்ல ava kalambita... Super maa
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூரணி ah kutikitu vanthutaanga இந்திரா.... அஜய் கல்யாணம் mudichidichi.... அவளும் kalambita ava வீடு ku avanuku anupurathula இஷ்டம் இல்ல ava kalambita... Super maa
நன்றி சகி
 
Status
Not open for further replies.
Top