All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் கலாப காதலா 9

Status
Not open for further replies.

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
9 கலாப காதலா

அன்று சித்தார்த் அவளை பஸ் ஸ்டாண்டில் விட இவள் பேருந்து ஏறி தனது வீடு வந்து சேர்ந்தாள்...

சுமதி " என்னடி இவ்வளவு நேரம் "

பூர்ணி " மா பஸ் நானா ஓட்டுன வேகமாக வரதுக்கு "

சுமதி " சரி சரி அதுக்கு ஏன்டி கடுப்பு அடிக்கற போ போய் துணி மாதிட்டு வா தாத்தா உன்ன கேட்டுடே இருந்தாங்க "
என கூற தனது அறைக்கு சென்றவள் துணி மாற்றி கொண்டு தாத்தா முத்துராமன்யிடம் வந்தாள்..

" தாத்தா "
" வாடா பூர்ணி பயணம்லா நல்லா இருந்துச்சா எந்த பிரச்சனையும் இல்லையே "
" அதலா எதும் இல்ல தாத்தா "
" சரிடா படிப்பு லா எப்படி போகுது "
" நல்லா போகுது தாத்தா "

எதையோ சொல்ல வாய் எடுத்தவர் பின்பு மறைத்துவிட்டு அவளிடம்
" சரி மா நீ போ போய் ரெஸ்ட் எடு ஊரேலேந்து வந்தது களைப்பா இருக்கும் போடா "

" சரி தாத்தா "

அங்கு வந்த சிவராமன்
" அம்மாடி உன்னய உங்க அம்மா கூப்பிட்டா பாரு"
" சரி பா "

சொல்லிவிட்டு வெளியே வந்தவள் யார் மீதோ மோத யாரென்று நிமிர்ந்து பார்க்க அங்கு கோபி (பூர்ணிமா அத்தை மகன் )
நின்று கொண்டு இருந்தான்..

" சாரி சாரி மாமா தெரியாம இடிச்சுடேன் "
" பரவாயில்ல பூர்ணி நீ பாத்து போ "
என சிரித்து கொண்டே கூற..

அவனின் சிரிப்பு வித்தியாசமாக பட்டது பூர்ணிக்கு....
பூர்ணியை நினைத்து சிரித்து கொண்டே வந்தான் கோபி ( அவனது மனதிற்குள் பட்டாம்பூச்சி பறந்தது )...

" டேய் என்னடா தனியா சிரிச்சுகிட்டு வர "
என அவனது தாய் சுந்தரி கேட்க..
" இல்லமா தாத்தா பூர்ணிய பத்தி பேசுனதுலேந்து அவள பாத்தாலே மனசுகுள்ள ஒரு மாதிரியா இருக்கு மா "
" டேய் அடக்கி வாசி நானே கஷ்டப்பட்டு எங்க அப்பா கிட்ட பேசி சம்மதம் வாங்கிருக்கேன் கெடுத்துடாத தாத்தா வா எல்லாம் பேசி முடிப்பாறு புரியுதா போ போய் வேலைய பாரு "
என கூற கோபியும் சோகமான முகத்துடன் இவ்விடத்தை விட்டு நகர்ந்தான்...

அறைக்கு வந்த பூர்ணிமா எதேச்சையாக தனது ஃபோனை பார்க்க 23 மிஸ்ட் கால் இருந்தது...

" யாருடா அது இத்தனை தடவ நமக்கு கால் பண்ணிருக்கது " என யோசித்து கொண்டே இருக்க திரும்பவும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது..

" ஹாலோ யாரு "
" ஹலோ ஹேய் எந்தன தடவ ஃபோன் பண்ணுறது அறிவுயில்ல ஊருக்கு போயிட்டு ஃபோன் பண்ணு சொன்னேன்ல இடியட் "

அவனது குரலிலே அடையாளம் கண்டு கொண்டவள்..
அவன் இடியட் என்பதில் கோபம் கொண்டவள்
" இங்க பாருங்க இந்த திட்டுற வேலலா வேணாம் நான் எதுக்கு உங்களுக்கு கால் பண்ணி சொல்லனும் ஓவரா அட்வான்டேஜ் எடுத்துகாதிங்க "
" ஏய் என்ன பேசுற "
என கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்க...

" என்ன என்ன பேசுறாங்க என்னால உங்களுக்கு அடி பட்டுச்சு அதுக்காக தான் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணேன் அவ்வளவு தான் அதோட எல்லாம் முடிச்சுட்டு இனிமே இந்த மாதிரி கால் பண்ணி திட்டுறதுலா வைச்சுகாதிங்க "
என கோபத்துடன் ஃபோனை கட் செய்தாள்...

கையில் போனை வைத்து கொண்டு அவள் பேசிய வார்த்தைகளால் உச்சகட்ட கோபத்தில் இருந்தான் சித்தார்த்...
" இவ பத்தரமா போயிட்டேனு ஃபோன் பண்ணி சொல்லாம என்ன ஏன் திட்டுறா அவ சொல்லாதது அவ தப்பு தான "
என ஒரு மனமும்
" அவ சொன்னா உனக்கு என்ன சொல்லாட்டி உனக்கு என்ன நீ ஏன் இவ்வளவு கோபப்படுற "
என மற்றொரு மனமும் கேட்க..

காரில் வரும் போது நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்தனர் இருவரும்...

" என்ன அமைதியாவே வர பேச தெரியாதா "
" இல்ல அதலா ஒன்னும் இல்ல டைம் ஆகிடுச்சு அதான் "
" எத்தன மணிக்கு பூர்ணி பஸ் "
" ஆங் என் பேரு எப்படி உங்களுக்கு தெரியும் "
" என்ன மறந்துட்டியா அதான் ஹாஸ்பிடல எழுதி கொடுத்தியே "
" ஆமாம் லா "
என உதடு கடித்து கூறும் அழகை ரசித்தவன் அவள் பார்க்கும் முன்பு முகத்தை திருப்பி கொண்டான்...

பஸ் ஸ்டாண்ட வர அவசரமாக இறங்க சென்றவளை
" பூர்ணி "
" ஆங் சொல்லுங்க "
" இந்தா "
என கையில் உள்ளதை கொடுக்க அதை பிரித்து பார்த்தவள் சந்தோஷத்துடன்
" நானே மறந்துட்டேன் நீ நியாபகமா கொடுத்துடிங்க ரொம்ப தேங்க்ஸ் "
" இட்ஸ் ஓகே‌ "
" நான் கிளம்புறேன் "

சற்று தூரம் நடந்தவள் திரும்ப அவனிடமே வந்து
" தேங்க்ஸ் "
என கூற சிறு தலை அசைப்புடன் அவளை அனுப்பி வைத்தவன்...
" போயிட்டு கால் பண்ணு "

அவள் இருந்த அவசரத்தில் அவன் கால் பண்ணு என்று சொன்னதை கவனிக்கவும் இல்லை அப்படியே கவனித்து இருந்தாலும் தனது.ஃபோன் நம்பர் அவளிடம் இல்லையே என்கிற யோசனை சித் யிடமும் இல்லை..

சற்று நேரம் யோசித்த இருவருக்கும் தவறு தங்கள் மீதும் இருக்கிறது என்பது புரிய முதலில் யார் அழைப்பது என்கிற இகோ இருவரையும் பேச விடாமல் தடுத்தது....

இரவு நெருங்க‌ நெருங்க பூர்ணி மனது ஏனோ சித்து வை நினைக்க வைத்தது..

கால் வர முதல் அழைப்பிலே அவனது காலை எடுத்தாள்...
இருபுறமும் அமைதியாக இருக்க சித்தார்த் ஆரம்பித்தான்..

" ம்க்கும் "
என தொண்டயை செரும்ப..

" ம்ம் சொல்லுங்க "
என ஆரம்பித்தாள் பூர்ணி..
" என்ன சொல்லுங்க "
" சாரி தெரியமா அப்படி பேசிட்டேன் நீங்க திட்டினதும் கொஞ்சம் கோபம் வந்துடுச்சு "
" நீ பண்ணது தப்பு ஆனா என்ன திட்டுற நீ "
" என்ன தப்பு பண்ணாங்க உங்க நம்பரே என்கிட்ட இல்ல அப்புறம் எப்படி நான் கால் பண்ண "

ஏன் இவர்கள் மாறி மாறி சண்டை போடுகிறார்கள் என புரியாமலே சண்டை இட்டனர்...
ஒருவழியாக சமாதானம் ஆகி நார்மலாக பேச இரவு வரை இவர்களது பேச்சு தொடர்ந்தது....

தொடரும்.....
 

Chitra Balaji

Bronze Winner
பூரணி ku avalodaya அத்தை பையன் ah pesi irukkaan gala avaluku இன்னும் theriyala.... Rendu perum சண்டை pottu சமாதானம் aaitaan... Super Super maa
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூரணி ku avalodaya அத்தை பையன் ah pesi irukkaan gala avaluku இன்னும் theriyala.... Rendu perum சண்டை pottu சமாதானம் aaitaan... Super Super maa
நன்றி நன்றி சகி
 
Status
Not open for further replies.
Top