All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Nayaki

Bronze Winner
எதிர் எதிர் துருவங்கள் தா இணையும் என்பதற்கிணங்க , காதல் வெறியனுக்கும் எதார்தவாதிக்கும் இடையே நடக்கும் யுத்தமே எரிய தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா....

தனக்கு நேர்ந்த துரோகத்தோல் அனலாக எரிய ஆரம்பித்தவன் குளிர்ந்தானா என்பதை மிக மிக இயல்பான எழுத்து நடையில் கொடுத்திருக்காங்க விஜயமலர்....

விச்சு : எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த கதாபாத்திரம்... ஆரம்பம் முதல் இறுதி வரை கதையின் முக்கிய போக்கை மாற்றியவன்..சுயநலமில்லாதவன்... அதுவும் இறுதி எபியில இவன் பேசும் வசணங்கள் செம செம செம....

தேவகி : போற்றப்பட வேண்டிய பெண்... ஆரம்பம் முதல் நிதானம் இழக்காமல் சூழ்நிலைக்கேற்ப தன் அன்பால் அதட்டியும், கெஞ்சியும், கொஞ்சியும் தன் குடும்பத்தை அழகாக வழி நடத்துகிறார்... அன்னையாகவும், மாமியாராகவும் நியாயவாதியாக ஜொளிக்கிறார்....

ஆரியன் : என்னை பொறுத்து இப்படியொருவனை மகனாகவும், வாழ்க்கை துணையாகவும் பெற பல பல புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதிரடி காதல்காரன், பிடிவாத்தகாரன், அழுத்தக்காரன் இப்படி பல குணங்களில் பயணித்து இறுதியில் தன்னவளுக்காக அவளிடம் சரணாகதியும் ஆகிவிடுகிறான்...

உமை : அன்பிற்காக ஏங்கி காதலில் விழுகிறாள்... திருமணம் முடிக்கிறாள்... விதி வசத்தால் ஏமாற்றப்படுகிறாள்... அதனால் இவளும் ஏமாற்றுகிறாள்...இவள் ஏமாற்றியபவன் நல்லவனாய் இருக்க போக தப்பித்தால் இல்லை ......

விஜயமலர் : முதலில் இப்படி ஓர் கதை கரு எடுத்துக்கு வாழ்த்துக்கள்... மிக மிக அழகாக இருவரின் உணர்வுகளையும் எங்களை உணர வச்சீங்க... அதனால தா எங்களால் இந்தளவு கதையோடு ஒன்ற முடிந்த்து... இயற்கை வர்ணிப்பு பத்தி சொல்வே வேண்டும்.. அது எப்பவுமே உங்களுக்கு அல்வா சாப்பிடறாப்ல... இந்த முறை காமெடியிலும் சும்மா நச்சுனு தடம் பதிச்சு விட்டீங்க... அருமை....

கதையின் இறுதி அத்தியாயங்கள் ரொம்ப ரசித்தேன்... அருமையான முடிவு... இறுதியாக அவளை அவளோட இயல்பிலே ஏற்று அவளிடம் அவன் சரண்டைந்த்தும் என்னைப் பொறுத்து கெத்தே....

இது போல பல பல வெற்றி கதைகள் படைக்க வாழ்த்துகள்...
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh my dear. wow wow. thank you soooooooooo much ma. really I am blessed. ithai vida periya viruthu ethuvum kidayathupa. ellaam neenka ellarum koduththa aseervathamthanpa. :love::love::love::love:
Nayanima idhu Elam ungaluku konjam over ah therila aseervathama ipadi Soli en vayasa adhiha paduthi nenga Chinna pulla ahikalamnu ennama... Na unga ponu Mari ok aseervathama Elam ila valthukkal vena soluven ... And idhu ungaloda talent nayanima nanga verum readers matum than so keep it up ... Idhe Mari neraya stories nenga eluthanum nanga padikanum ... Ok quick next stor kondu vanga ... We r waiting...😘😘😘😘😘
 

goofy

Active member
super story sis......aryan is so manly,lovable and sweet.............avan rough ah umai kitta arrogant ah nadanthukitalum avanoda love,care for her is simply superb......aryan and his mom's bonding is so beautiful....ramya krishnan image is very suitable for her and i love it ..................kadhai starting la aryan oda kobathala kashtama irundhalum ending is so nice and happy...................:smiley2::FlyingKiss:
 

sivanayani

விஜயமலர்
அருமையான கதை நயனிமா😍😍😍😍. அந்தமில்லாரியன்-ஆர்யன் ஐந்து வயதில் தந்தையை இழந்து, பதினெட்டு வயதில் தாயின் உடல்நிலை காரணமாக தொழிற்சாலையை தனியே நடத்தி வெற்றி கண்டவன். தாயின் வளர்ப்பில் ராமனாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில் வளர்ந்தவன். முன்கோபக்காரன் ,தவறுகளை விரும்பாதவன்.

மேல்படிப்புக்காக கனடா செல்பவன் சாருத்தமையை கண்டதும் காதல் கொண்டு ,அவளை மணந்து கொள்கிறான்.திருமணம் முடிந்த பிறகு சாருத்தமை , ஷ்யாமின் மனைவி என்றும் ,பணத்திற்க்காக அவனை மணந்து கொண்டது தெரிந்து அவள் செய்த துரோகத்தை மன்னிக்க முடியாமல் விலகி செல்கிறான். போகும் போதும்அவளுக்கு தேவையான பணத்தை கொடுத்து(வீசி)விட்டு செல்வதுடன் இதற்க்காக இன்னொருவனை ஏமாற்றாதே என கூறினாலும், அவன் காதலித்தவள் பணத்துக்காக கஷ்டப்படுவதை விரும்பாததே காரணம்.

மூன்று வருடங்களுக்கு பின் சாருத்தமை, தேவகியின் அண்ணன் மகளாக அவன் வீட்டிற்க்கே வருவதும்,அவளை பார்த்ததில் இருந்து அவள் செய்த துரோகத்தை மறக்கவும் முடியாமல்,அவள் மன்னிப்பை ஏற்கவும் முடியாமல் தவிப்பதும்,துடிப்பதும் உமையை வார்த்தைகளால் வதைப்பதும்,அவள் மனவருத்தத்தை கண்டு கண்கலங்குவதும்,உமை இறந்து விட்டதாக எண்ணி அவளுக்கு முன்னே உயிர் விட நினைப்பது என ஆர்யனின் உணர்வு போராட்டத்தை கொண்டு சென்ற விதம் அருமை👌👌👌👌👌.

சாருத்தமை பணக்காரியாக பிறந்தவள்.பணத்தையும்,தாயையும் இழந்து,காதல் என்ற பெயரில் அயோக்கியனை திருமணம் செய்து கொண்டு,அவளிடம் பணம் இல்லை என தெரிந்த பின் ஷ்யாமிடம் அவள் படும் துன்பங்கள் கொஞ்சமல்ல,நண்பனின் உதவியுடன் ஷ்யாமை போலிஸில் சிக்க வைத்தாலும், சிறையிலிருந்து வெளியே வருபவன் மிருகமாக நடந்து கொள்வது மனதை கலங்க வைக்கிறது😢😢😢😢😢.ராஜ் மட்டுமே சாருவுக்கு உற்ற நண்பனாய் கடைசி வரை இருந்தது ஒன்றே ஆறுதலானது☺☺☺☺.

தேவகி கனடாவுக்கு சென்ற ஆர்யன் திரும்பி வரும் போது அவனிடம் ஏற்பட்ட மாற்றங்களை கண்டு காரணம் தெரியாமல் தவிப்பதும், உண்மை தெரிந்த பின் வருண்,நாயகி,அமந்தி இவர்கள் உதவியுடன் ஆர்யன், சாருத்தமையை சேர்த்து வைக்க செய்யும் முயற்ச்சிகள் கலக்கல்😂😂😂😂.

சாருத்தமை உண்மை சொல்வதற்க்கு முன்பே ஆர்யன்அவளை ஏற்றுக்கொண்டது அவன் சாருத்தமையின் மேல் கொண்ட மாறாத காதலை சொல்கிறது😍😍😍😍😍. விசு அருமையான நண்பன். ஆர்யன், விசு இருவரின் சாபமும் பலித்ததா என காண முடியாதது வருத்தம்😛😛😛😛.

இழப்புகள் கூட அழகை கொடுக்குமா,குதுகாலிக்க வைக்குமா,ரசிக்க வைக்குமா என இலையுதிர்கால பூக்கள், மரங்கள்,இலைகள் என வர்ணித்ததும், நயாகரா அருவியை வர்ணனை செய்த விதமும் அத்தனை அழகு மனதை கொள்ளை கொண்டது😘😘😘😘😘.இறுதி பதிவு மிகவும் அருமை😍😍😍😍.
அழகான காதல் கதை.நிறைவான ,இனிமையான முடிவு. வாழ்த்துக்கள் நயனிமா👍👍👍👍🙏🙏.
wow wow wow What a beautiful comment. Thank you soooooooooooooooooooooo much my dear Mary. மிக மிக மிக மகிழ்ச்சிப்பா. உங்களை போன்ற வாசகர்கள் வரம். எனக்கு
 
Status
Not open for further replies.
Top