All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கற்பினை கற்பி

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாருமற்று வெருச்சோடி இருந்த அந்த சாலையில் கண்களில் ஆற்றாமையா கோபமா இயலாமையா வருத்தமா இவை அனைத்தும் கலந்த கலவை உணர்வில் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.

எதேனும் ஓர் ஒளி வாழ்வில் இந்நொடி வந்து இருள் விளக்கி பிரகாசமாகிடாதா என ஏக்கம் கொண்டிருந்தால் பேதையவள். ஆனால் வாழ்வெனும் பாடத்தில் வரும் இடர்களை இடரி விடவும் துன்பங்களை துறத்தியும் தடைகளுக்கு தடைகளையும் விளைவிக்கவும் கற்று தேர்வதே மகிழ்ச்சியான வாழ்விற்கு வித்திடும் என்பதை அவள் அறியவில்லை போலும். இருள் நீக்கி ஒளி பெறுவதும் அவரவர் கையில் அவரின் நம்பிக்கையில் என்பதனை தெரிந்து செயல் பட வேண்டும்…

இக்கட்டிலிருந்து இயல்பு திரும்ப வழி புலப்படாதா என்று எண்ணியவரே அவள் அழுதுக் கொண்டிருந்தாள் அவளின் இயலாமையினை எண்ணி…

எத்தகு இக்கட்டிலிருந்தும் நம்மை காக்க இறைவன் இருக்கிறான் அசரீரியாய் ஒலித்தது அவரின் குரல்.

அழுகையினூடே சட்டென்று நிமிர்ந்து பார்த்தால் அவள்… மங்களகரமாய் தன் முன் நின்றிருந்த 45 வயது மதிக்கத்தக்க அப்பெண்மனியினை.

அவள் இதழ்களில் விரக்தி புன்னகை, “ஆமா ஆமா, நல்லா ஆ காப்பாதுவாரு “ என்று அந்த நல்லாவை அழுத்தமாய் கூறினால்.

“ஏன் மா இங்க இருக்க உனக்கு என்ன பிரச்சனை என்கிட்ட சொல்லு என்னாலான முடிஞ்ச உதவியை நான் உனக்கு செய்றேன்” என்றார் அவர்.

“நான் அழுதா உங்களுக்கு என்ன” கோபத்தில் வெடித்தால் அவள்… பின்னர் தன் தவறினை உணர்ந்தவள் சே நான் ஏன் தேவையில்லாம இவங்க கிட்ட கோவப்படுறேன் என்று தன்னையே நொந்து கொண்டவள் , என்னை மன்னிச்சிடுங்க மா யாரோ மேல இருக்க கோவத்த உங்ககிட்ட காமிச்சிட்டேன் என்று மன்னிப்பை யாசித்தால்.

அதெல்லாம் இருக்கட்டும் உன் பிரச்சனை தான் என்ன அத சொல்லுமா என்று வாஞ்சையாக கேட்டார் அவர்…

அவள் கூறியதை கேட்டவர் முகத்தில் கலவையான உணர்வுகள் வந்து போயின… தன்னை சமாளித்துக் கொண்டவர் அவளிடம் சிலவற்றை கூறினார் முதலில் பயந்து மறுத்த அவள் பின்னர் துனிவுடன் கொஞ்சம் தைரியம் வரப் பெற்றவளாய் அவர் கூறியதற்கு சம்மதம் தெரிவித்து அவருக்கு ஒத்துழைத்தால்.

ஏனெனில் அவள் கண்டது ஆருதல் மொழிகளா (?) தேற்றும் விழிகளா (?) நான் இருக்கிறேன் உனக்கு எத்தீங்காயினும் தீங்கினை தீயிலிட்டு உன்னை காப்பேன் என்று சொன்னது அவரது நேத்திரங்கள்.

சில நிமிடங்களுக்கு பிறகு , நடுரோட்டில் தனது காரினை நிப்பாட்டிவிட்டு உள்ளிருந்தாவரே கத்திக் கொண்டிருந்தான் அவன்.

ஏய்! உன் மனசில என்னடி நினைச்சிட்டு இருக்க என்னை தெருத் தெருவா சுத்தவிட்ற என்ன பயம் விட்டு போச்சா நான் என்ன பண்ணுவேன் தெரியும்ல என்று கத்திக் கொண்டிருந்தான் அவன்…


மறுமுனையில் இல்ல வ… வ..வந்து அ...ங்க தெ… தெரி...ஞ்வங்க… இருக்காங்க அதான் யா..ராவது பார்த்..தா பிர...ச்சினை...யா..கிடு..மேனு…

சரி சரி இப்போ எங்க டி இருக்க என்று கேட்டான். அவள் சொன்ன இடத்தைக் கேட்டவன் மீண்டும் கோபத்தில் சீறினான். என்னடி எதாவது பிளான் போடுறியா அப்டி எதாவது பன்ன அடுத்த நிமிஷம் என்னாகும்னு டெமோ காட்டவா(?) என்றவனின் வார்த்தையில் ஏளனமும் கோபமும் போட்டிப் போட்டுக் கொண்டு தெரித்தது.

அதில் முகம் வெளிரியவல் இ..ல்ல இல்..ல அ...ப்டி.. எ...துவும் பண்...ணிடாத என்றால் அவள். என் நிலைமைய புரிஞ்சுக்கோ என்று கெஞ்சினால்…

சரி வந்து தொலைக்கிறேன் என்றவன் கைபேசியினை அனைத்துவிட்டு சிறிது நேரத்தில் அவ்விடம் வந்து சேர்ந்தான், ஆகினும் அவள் குறிப்பிட்ட இடத்திற்கு அவன் செல்வது என்பது கொஞ்சம் கடினமே, ஏனெனில் அவ்விடத்திற்கு அவன் காரில் செல்ல இயலாது ,நடந்து செல்ல வேண்டும்.

அவளுக்கு கைபேசியில் அழைத்தவன் இங்க எந்த தெருவில இருக்க டி என்று கேட்டான், அவள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றவன் அவள் அங்கு இல்லாதது கண்டு ஆத்திரம் அடைந்தான்.

என்ன குளிர்விட்டு போச்சா என்று மேலும் அவளிடம் காய்ந்தவன் உன்ன என்ன செய்றேன் பாரு டி என்று மனதில் கறுவிக்கொண்டான்.

இவ்வாறே அவள் சரியான இடத்தினை சொல்லாமல் மீண்டும் மீண்டும் அலைக்கழித்தால்.

கோபத்தில் கண்கள் சிவக்க அவளை காணும் வெறி அதிகரிக்க உன்ன சும்மா விடமாட்டேன்டி என்று குரூரமாய் முடிவெடுத்தான்.

அப்போது அவனது அலைபேசி அதிர்ந்தது, அதில் ஒளிர்ந்த எண்ணினை கண்டவன் கண்களில் விஷம புன்னகை… அலைபேசியினை எடுத்து இயம்பினான் அவன், இப்போவாது நீ இருக்க இடத்த சொன்ன உனக்கு நல்லது இல்லனா நான் செய்ய வேண்டியது சிறப்பா செஞ்சிடுவேன்.

அப்றம் செல்லம் நீ இவ்ளோ பண்ணதுக்கு பதிலுக்கு நான் எதாவது திறுப்பி செய்னுமே ஏன் னா நான் ரொம்பா ஆ நல்லவன் மா அதான் என் பிரன்ட்ஸ் ஆ வர சொல்லிட்டேன் கூடவே அவங்களுக்கு…
 

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உனக்கு புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன் என்றான் அதில் பதறியவள் கதறி அழுதால் பிளீஸ் என்ன விட்று நீ… நீ… எதுவும் அப்டி பண்ணல இல்ல என்று உடைந்து அழுதாள் அதை ரசித்தவன் இப்பவும் நீ சொல்லமா இருந்த இது தான் நடக்கும் என்றதும் அங்க இருந்து வர ரோடு நேரா ஒரு மலைக்கு வரும் அந்த மலைக்கு வா என்றால் வாவ்! டார்லிங் இந்த வெயிலுக்கு நல்ல இடத்த தான் தேர்ந்து எடுத்து இருக்க கேலியாகக் கூறினான் உன்ன நம்பி வரேன் என்றவன் வைத்துவிட்டான்.

சிறிது நேரத்தில் அவள் சொன்ன இடத்திற்கு வந்தவன் கண்கள் அவளை கண்டு கொண்டது…
அவன் எவ்வித லஜ்ஜையுமின்றி பார்வையினால் பாவையவளை சூரையாடி பரிதவிக்க செய்தான்.

இவ்வளவு சுத்த விட்டாலும் உன்ன பாத்ததும் அப்டியே ஜிவ்வுனு இருக்கு டி ஆனாலும் நீ பண்ணதுக்கு தண்டனை இருக்குடி என்று ஆத்திரமாய் சினம் பொங்க அவளை உருத்து விழித்தான்.

என்னடி அப்டி பாக்குற என்று கேட்டுக் கொண்டே, சட்டென்று அவளை இழுத்து அனைக்கும் வேளையில் திடுமென கேட்ட கைத்தட்டல் ஒலியில் அதிர்ந்து திரும்பியவன் உறைந்துவிட்டான்.

அங்கே நின்றிருந்தது அவனின் தாயும் தமக்கையும்.

இருவரும் அவனை இகழ்ச்சியாக இழு பிறவியாய் அற்ப புழுவினை பார்ப்பது போல் பார்த்து வைத்தனர்….
அதில் அவன் மேலும் உடைந்தான்.

உன்ன பெத்து வளர்த்து அளாக்கினதுக்கு நல்ல காரியம் பண்ணிட்ட டா , என்றார் அவன் தாய் சீ நீயெல்லாம் மனிஷனா… உன்ன நம்பி என் பொண்ண உங்கிட்ட விளையாட விட்டேனே அப்போ அவளையும் இப்டி தானே நினைச்சு இருப்ப தூ என்று காரி உமிழ்ந்தாள் அவன் தமக்கை

இப்போது தான் அவன் செய்யவிருந்த காரியத்தின் வீரியம் உணர்ந்தான்…

காலம் கடந்த ஞானோதயம்…
ஒரு பொண்ண அவ அனுமதி இல்லாம கண்களால் தீண்டுவது கூட தப்புனு உனக்கு தெரியாதா சீறினார் அவன் அன்னை. நீ இப்படி பட்டவனா வருவ னு அப்போவே தெரிஞ்சிருந்தா நீ பால் குடிச்ச என்னோட அங்கத்தில விஷம் வச்சி உன்ன கொன்னுட்டு அதை அருத்து எறிஞ்சிருப்பேன் என்று அவசேமாய் கூறியவர் அதே அவேசத்துடன் அவன் கண்ணை அக்கூரிய மரக்கட்டை வைத்து குத்தி விட்டார். இந்த கண்ணு தானே அவள தப்பா பாத்துச்சு என்றவறே அவன் வாயினை உடைத்தார் இதில் அவன் அலறலொலியில் அவ்விடமே அதிர்ந்தது… அதற்கு கிஞ்சித்தும் வருத்தபடாதவராய் அடுத்து அவன் இடது கையினை முறிக்க அவன் வலது காலினை முறித்தால் அவன் தமக்கை…

அவன் வலியில் கதறினான்… அம்மா… என்று சீ அந்த வார்த்தைய சொல்லக் கூட உனக்கு அருகதையில்ல என்று சினந்தார்.

அக்கா அவ குழந்தை அவள நா அப்டி நினைப்பேனா ஓ அப்போ வேற ஒரு பொண்ணா இருந்தா என்ன வேணா செய்வ அப்படி தானே அவள் கோபத்தில் கத்தினால்…

அவன் மனம் அதில் அடிப்பட்டது அவன் குருதியினூடே அவன் குரூர எண்ணங்களும் வன்மமும் வக்கிர புத்தியும் விடை பெற்று சென்றது…

நடக்க முடியாமல் கால்களை இழுத்துக் கொண்டே தரையில் ஊர்ந்து சென்றவன் அவன் ஒரு கண்ணின் பார்வைக் கொண்டு என்ன மன்னிச்சிடு என்று அவளிடம் மனதார மன்னிப்பினை யாசித்தான்…

அவளோ உணர்ச்சி துடைத்த முக பாவத்துடன் இறுகிய நிலையில் இருந்தால் .

உனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது டா என்ற அவன் அன்னையும் தமக்கையும் அவளை அழைத்துச் சென்றனர்.


போகும் அவர்களையே குற்றவுணர்வு மேலோங்க தன் தவறினை உணர்ந்து திருந்தியவனாய் பார்த்திருந்தான்.

காரில் சென்றுக் கொண்டிருந்த மூவரின் மனதிலும் வெவ்வேறு சிந்தனைகள்…

சில மணி நேரங்களுக்கு முன்னர் , உனக்கு என்ன பிரச்சனைனு நான் சொல்லவா நீ குளிக்கும் போது உனக்கு தெரியாம வீடியோ எடுத்து உன்ன அவன் மிரட்டி இங்க உன்ன வரவச்சிருக்கான் , நான் சொன்னது சரியா(?) என்பது போல் பார்த்திருந்தார் அவர்…

அதை கேட்டு அதிர்ந்தவள் தலை ஆம் என்பது போல் அசைந்தது … நான் அவன் அம்மா இவ அவன் அக்கா...இது அடுத்த அதிர்ச்சி அவளுக்கு…

அவன் பேசினது நான் கேட்டேன் மா என்றவர் உடைந்து அழுதார்… தன் வளர்ப்பு சரியில்லாமல் போனதன் வலியில்…

பின்னர் தன்னை சமாளித்தவராய் நான் சொல்லறபடி செய் என்றவரின் திட்டமே இவை அனைத்தும் …

முதலில் பயந்தாலும் அவர் அளித்த தைரியம் மற்றும் நம்பிக்கையில் அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டால் அவள்…

அவள் கண்களுக்கு தெய்வமாய் தெரிந்தார் அவர் பின்னே அவள் வாழ்வின் இருள் நீக்கி ஒளி வெள்ளத்தை பாய்ச்சியவராயிற்றே…

அவரின் மனதிலோ தான் ஒரு பெண்மனியாய் உயர்ந்திருந்தாலும் தாயாய் தோற்றுப் போன வலி, எங்கே அவரது வளர்ப்பு தவறியது என்ற வேதனை … இவற்றையே அவன் தமக்கையும் சிந்திதாள்…


பெண்களாய் பிறந்த அனைவருமே இறைவிகளே … தைரியம் தன்னம்பிக்கை துணிச்சல் இவையே கயவர்களிடமிருந்து நம்மை காக்கும் மாபெறும் சக்திகள் என்று உணர்வோம்.
 
Top