All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கல்யாண சமையல் சாதம்! - கதை திரி

Status
Not open for further replies.

Jahan jaahnu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 19

இன்னும் ஒன்றரை மாதங்களில் நடக்க போகும் டெஸ்டினேசன் வெட்டிங்கான தெரிவு செய்யப்பட்டுள்ள இடமான ஒன்டியோரா மௌண்டையின் ஹவுஸ் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தான் வேந்தன்.
இந்தியாவில் உள்ள கஸ்டமர் இந்த முறை மலை சார்ந்த இடத்தில் அவர்கள் திருமணத்தை நடத்த விரும்பியதால் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட இடமே இது. அவர்கள் திருமணம் நடக்க இரண்டு வார முன்பே இங்கு வரவிருந்தனர்.
அவர்கள் தங்குவதற்கும் இந்த ஹோட்டலிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் தங்குவதற்கான முழு செலவும் அவர்களுடையதாக இருந்தாலும் திருமணத்தில் தொடங்கி இறுதி மூன்று நாட்கள் நடக்க இருக்கும் நிகழ்ச்சி முழுவதற்குமான பொறுப்பு வேந்தன் கம்பனியினரதே!

காலை தென்றலை ரசித்தபடி,முகத்தில் சிறு புன்னகையுடன் காரில் இருந்து இறங்கியவனின் பார்வை ஒரு இடத்தில் பதிய முகத்தில் இருந்த புன்னகை வடிந்து அந்த இடத்தில் சிறு கோபம் எட்டிப் பார்த்தது.

மெல்ல அவன் உதடு முணுமுணுத்தது "நூடுல்ஸ் மண்டை!"என.

குழலி தான் அலெக்ஸாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.ஓடி போன நாட்களில் வேந்தன் இவளை பார்த்திருக்கவே இல்லை.
வேலை சம்பந்தமான எல்லா விடயங்களுக்கும் அலெக்ஸாவே வருகை தந்திருந்தாள்.அன்று நஸ்ட ஈடு பணத்தை கொடுத்த பிறகு வேண்டும் என்றே அவனை தவிர்த்திருந்தாள் இவள். அதனால் முளைத்த கோபமே இது.

இந்த ஹோட்டல் மூலமாகவும் கேட்டரிங் சர்வீஸ் தருவதாக வேந்தனிடம் கூறியிருந்தனர்.
ஆனால் இவன் தான் மறுத்திருந்தான்.அதற்கு காரணம் எதோவொரு சாக்கிட்டு குழலியை பார்க்க வேண்டும் என்பதே..

"ஹ்க்கும்"எனும் தொண்டை கணைப்புடன் அலெக்ஸாவின் பக்கத்தில் போய் நின்றவன்,"ஹாய் அலெக்ஸ்!!"என்றான்.ஆனால் அவன் பார்வை என்னவோ அலெக்ஸாவின் முன் நின்றிருந்த மேகாவிடம் இருந்தது.

"ஹாய் வேன்டன்"சிரிப்புடன் அலெக்ஸா.

"ஹாய் அலெக்ஸா!"இம்முறையும் அவனே.

அவனை நிமிர்ந்து பார்த்த அலெக்ஸா அவன் பார்வை குழலியிடம் இருக்கவும் நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.அலெக்ஸாவும் அன்று இவர்கள் டான்ஸ் செய்யும் போது அங்கு இருந்தாள் தானே!
அதனால் விழைந்த சிரிப்பே இது!

அலெக்ஸாவின் நமுட்டு சிரிப்பை பார்த்து அவளை முறைத்தாள் குழலி.

"எதுக்கு இப்ப அவளை முறைக்கற நூடுல்ஸ்?"குழலியை பார்த்து முறைப்புடன் அவன்.

"….."அலெக்ஸாவை முறைத்துக் கொண்டிருந்தவளின் பார்வை இப்போது முறைப்புடன் இவனை மோதியது.

"இப்போ எதுக்கு என்ன முறைக்கற பப்பிள் கம்!நியாயப் படி பார்த்தா நான் தான் உன்னை முறைக்கணும்..!நான் என்னை உன்னை கடிச்சா குதறிடப் போறேன்..என்னை பார்க்கறதையே தவிர்க்கற?"மெல்லிய குரலில் கடிந்தான்.மூக்கு நுனியில் அமர்ந்து கொண்டிருந்த கோபம் இன்னும் அவனை விட்டுச் செல்லவில்லை.

அவன் பேச்சில் திரும்பி அலெக்ஸாவைப் பார்த்தாள். இவர்களிடம் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டிருந்தாள் அவள்.

"அலெக்ஸ் அப்பவே போயிட்டா!"அவள் பார்வையை கண்டு அவன்.

நிதானமாக கைகளை மார்பிற்கு குறுக்கே கட்டிக் கொண்டு அவனை பார்த்து,"நான் என்ன சொல்லனும்னு நினைக்கற யாழன்..?"என கேட்டவளை,

"…."அவனும் அதே பார்வையுடன் பார்திருந்தானே தவிர பதில் பேசவில்லை.

"நான் முன்னாடி சொன்னது தான் யாழன்..என்னை விட்டுப் போயிடு!"

"போறேன் ஆனா இப்போ இல்ல.."கண்கள் சுருங்க சிரித்தான் அவன்.

"ப்ச்"சலிப்புடன் பார்வையை திருப்பிக் கொண்டாள் அவள்.

"மேகா..!"அவன் மேகத்துக்கான மென்மையாக அழைப்பு அவனிடம்.

அவனை பார்க்க முயன்ற கண்களை அடக்கி பார்வையை இன்னும் அதே இடத்தில் வைத்திருந்தாள் அவள்.

"கிளவுடி"அவளை தீண்டிக் கொண்டிருந்த தென்றலை விட இனிமையாக அழைத்தான்.

முகத்தில் மோதிய தென்றல் காணாமல் போய் அவன் மூச்சுக் காற்று இப்போது மோதவும் திடுக்கிட்டு திரும்பினாள்.

அவளிடம் இருந்து ஒரடிக்கும் குறைவான தூரத்தில் இருந்தவனை பார்த்து கண்களை விரித்தாள் அவள்.விரிந்திருந்த அவள் கண்களில் தன் இதழால் கவி பாட சொன்ன மனதை விரட்டி அடிக்கும் நிலையில் இல்லை அவன்.

பின் மெதுவாக தென்றலின் தீண்டலில் அவள் முகத்தில் வந்து விழுந்த முடிக்கற்றைகளை மென்மையாக அவள் காதோரமாய் ஒதுக்கி விட்டு,

"இப்படி இருக்காத மேகா!" என கரகரப்புடன் சொன்னான்.

கரகரத்தலுடன் வெளிவந்த அவன் குரல்,இரண்டடி தள்ளி நிற்கும் அவன் அண்மை மூச்சடைக்க வைத்தது அவளுக்கு.ஆனாலும் இருவரின் பார்வையும் விலகிக் கொள்ளவில்லை.

"வேந்தன்" எனும் குரல் இருவரின் நிலையையும் கலைத்தது. அவளை மென்னகையுடன் நோக்கி விட்டு மெதுவாக விலகியவன், திரும்பி பார்த்தான்.அந்த ஹோட்டலின் உரிமையாளர் நின்று கொண்டிருந்தார்.

பின் அவருடன் வேலை சம்பந்தமான சில விடயங்கள் பேசப்பட்டன. அதில் தாங்கள் தரவிருந்த கேட்டரிங் சர்வீஸை வேந்தன் மறுத்ததை புன்னகையுடன் சொன்னார் அவர்.அவர் சொன்னதை கேட்ட வேந்தன், அசடு வழிய குழலியை பார்க்க,அவளும் அவன் நினைத்ததை பொய்யாக்காமல் அவனை தான் முறைத்துக் கொண்டிருந்தாள்.

பின் அந்த ஹோட்டலை சுற்றி பார்த்தனர்.வேந்தன் எங்கே என்ன அரேன்ஜ்மெண்ட் செய்ய வேண்டும் என்பதை குறித்துக் கொண்டான்.
பின் கேட்டரிங்க்கான சமையலறை,
அதற்கான சாப்பாடு வைக்கும் இடம் என ஒவ்வரு இடமாக பார்த்தவர்களை அந்த ஹோட்டலின் பால் ரூமினுள் அழைத்துச் சென்றார்.அந்த பால் ரூமை பார்த்த இருவருமே வெவ்வேறு மனநிலையில் சிக்கிக் கொண்டனர்.

அன்று குழலியுடன் நடனம் செய்ததும் அதன் பின் தன் மனதில் உள்ள நேசத்தை உணர்த்தும் முகமாக அவள் நெற்றியில் முத்தமிட்டதையும் நினைத்து பார்த்த வேந்தன் வெட்கம் கலந்த புன்னகையுடன் அவளை திரும்பி பார்த்தான். அவளுக்கும் அதே நினைவு தான்.. ஆனால் அவன் முத்தம் அவளை பலவீனமாக்கும் உணர்வு.அதை நினைத்து பார்த்து கண்களை அழுந்த மூடிக் கொண்டாள்.அவன் புன்னகையுடன் திரும்பிய போது கண்டதென்னவோ உள்ளங்கையை அழுத்தி கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு நின்றவளை தான்.

அலெக்ஸாவும்,ஹோட்டல் உரிமையாளரும் பேசிய படி முன்னே சென்று விட கண்களை திறவாமல் இருந்தவளின் முன்னால் வந்து நின்ற வேந்தன்,ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

"மேகா" எனும் அழைத்தலுடன் இறுக்கி மூடியிருந்த அவள் கைகளுடன் தன் கைகளை கோர்த்துக் கொண்டான் வேந்தன்.

திடுகிட்டு கண்திறந்தவள் தன் கைகளுடன் கைகளை பிணைத்தபடி நின்றிருந்தவனை முறைக்க முயன்று தோற்று பிணைந்திருந்த இரு கைகளையும் அதனுடன் கோர்த்திருந்த பத்து விரல்களையும் பிரிக்க முயன்றாள்.

அவள் கையின் சில்லிப்பை உணர்ந்து கொண்டான் வேந்தன்.அவன் கோர்த்த பின்னரே உருவாகியது அந்த சில்லிப்பு எனவும் புரிந்து கொண்டான்.

"யாழன்!"கசங்கிய முகத்துடன் அவன் கையை பிரிக்கும் முயற்சியில் அவள்.

"ஸ்.. மேகாமா! டோன்ட் க்ரீவ் யூர் செல்ஃப்..!"அவள் கசங்கிய முகம் அவனில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

கண்ணில் நிறைந்த நீருடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"அப்படி பார்க்காத மா! ப்ளீஸ்.."

"கையை விடு யாழன்!இப்ப தானே சொன்ன உன்.. மேல பாய மாட்டே..ன்னு! அப்பறம் இது என்ன..?"திக்கி திணறி பேசியவள்,வெளிவர இருந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு அவனுக்கு காட்டாமல் இருக்க மறுபுறம் திரும்பினாள்.

வலது கையால் அவள் முகத்தை பிடித்து திருப்பினான் வேந்தன்.
குனிந்திருந்தவளின் இடது பக்க கன்னத்தில் வழிந்த கண்ணீரை வலது கையின் கட்டை விரலால் துடைத்து விட்டான்.பின் கோர்த்திருந்த தன் இடது கையை அவள் கையில் இருந்து விடுவித்துக் கொண்டான்.அவன் கையை விட்டதும் அவனிடமிருந்து விலகி நின்று கொண்டாள் அவள்.

"என்னை எதிர்த்து பேசு, அடி, திட்டக் கூட செய்..!ஆனா அழுகாத...இப்படி இருக்காதே.. என்னை எதிர்த்து பேசற நூடுல்ஸ் தான் எனக்கு பிடிக்கும்..இப்படி அழுகற பொண்ணு இல்ல!"இன்னும் முகத்திலுள்ள கலக்கம் மாறாமல் இருந்தவளை பார்த்து மன்றாடும் குரலில் அவன்.

"உன்னை பிடிக்கல யாழன்!உன்னை வெறுக்கறேன்! ஐ ஹேட் யூ!" அவன் கண்களை நோக்குவதை விடுத்து பேசியவள், அங்கிருந்து வெளியேறினாள்.

"பொய் மட்டுமே சொல்ற இல்ல கிளவுடி!"என அவள் சொன்னதை கேட்டு மர்மாக சிரித்தவன் வெளியில் வந்தான்.அவள் கிளம்பியிருந்தாள்.பெரு மூச்சுடன் அங்கு அவனுக்காக காத்துக் கொண்டிருந்த உரிமையாளருடன் வேலை பற்றி பேசி விட்டு,பின் தனது ஆபிஸ் நோக்கி சென்றான்.

ஆபிஸ் சென்றாலும் இவனுக்கு வேலை ஓடவில்லை.அவள் கலங்கிய தோற்றம் கண் முன்னால் தோன்றி இவனை கலங்கச் செய்தது.அன்றும் அவள் கண்ணீரால் இரண்டு வாரங்கள் ஒழுங்கான தூக்கம் இல்லை, இன்றும் வேலை ஓடவில்லை என நினைத்துக் கொண்டான்.அவளை சிரிக்க செய்வது கஷ்டமான வேலை என்றாலும் அந்த முகத்தில் சிறு புன்னகையாயினும் தோன்ற வைக்க வேண்டும் எனும் முயற்சியில் அவளை பார்க்க சென்றான்.

ஆனால் இந்த முயற்சியில் பாவமாக முழிக்கப்போவது என்னவோ கோபால் தான்!

கிரேன் பெரி கபேயினுள் வழமையை விட இன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.
கைக்கடிகாரத்தை பார்த்தான் வேந்தன். மாலை நான்கு மணி என காட்டியது..மெதுவாக கண்களை சுழற்றி அவன் மேகத்தை தேடினான்.ஆனால் அவனின் மேகமோ கண்ணில் பாடாமல் கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டிருந்தது.

மேகமும் மறைந்து நின்று தன்னைத் தேடியவனை தான் பார்த்துக் கொண்டிருந்தது பேக்கரி அறையிலிருந்து.எதுவோ உள்ளுணர்வு தோன்ற கண்களை பேக்கரி பக்கம் திருப்பினான் வேந்தன்.கதவின் சிறு இடைவெளியில் கண் மட்டும் தெரியுமாறு அவனை பார்த்துக் கொண்டு நின்றவளை கண்டு கொண்டான் அவன்.அவன் தன்னை கண்டு கொண்டதை அறிந்தவள் உடனே அங்கிருந்து நகர்ந்தாள்.

குழலி வேகமாக அங்கிருந்து நகர்ந்ததை பார்த்து புன்னகைத்துக் கொண்டவன்,உல்லாசமாக நடையுடன் அதனுள் நுழைந்தான்.

வேந்தனுக்கு முதுகு காட்டிய படி அங்கிருந்த மேசையை கைகளால் அழுந்த பற்றியவாறு தலையை குனிந்தபடி நின்றுகொண்டிருந்தாள் அவள்.அங்கு அவர்கள் இருவரையும் தவிர வேற எவரும் இருக்கவில்லை.

"மேகா" என கதவின் அருகில் நின்றவாறு அவளை பார்த்து அழைத்தான் வேந்தன்.

அவன் உள்ளே வந்ததை அறிந்து நெஞ்சம் படபடத்தாலும் முகத்தில் அதை காட்டாமல் நீண்ட மூச்சை விட்டபடி அவனை திரும்பி பார்த்தாள். பின் அவளே,

"எதுக்கு வந்திருக்கீங்க யாழன்..?"என கேட்டாள்.

காலையில் தன் முன்னால் கண் கலங்க நின்றவள் இவளா என நினைத்துக் கொண்டான் வேந்தன்.பழைய படி தன்னை தள்ளி நிறுத்த முயற்சிக்கிறாள் என புரிந்து கொண்டான்.

அவள் கேள்விக்கு பதில் ஒன்றும் கூறாமல் அவளை பார்த்தபடி அவள் அருகில் நெருங்கி வந்தான்.அவன் அருகில் வர வர உள்ளே பரவும் நடுக்கத்தை தடுக்க முடியாமல்,
கைகளால் பின்னோக்கி இருந்த மேசையை அழுந்த பற்றிக் கொண்டாள்.

அவனை இப்போதெல்லாம் முறைக்க முயற்சி செய்கிறாளே தவிர முறைக்க முடிவதில்லை.அதை நினைத்து தன்னையே நொந்து கொண்டவள் அருகில் வருபவனை பார்த்து முறைத்தாள்.
(முயற்சித்தாள்?!)

அவள் முறைப்பை பார்த்து சிரிப்புடன் பிடரியை தேய்த்தவன்,"முன்னாடி எல்லாம் ரொம்ப காரமா முறைப்ப..ஆனா இப்போ அந்த முறைப்புல காரம் மிஸ்ஸிங் கிளவுடி!"என்றான்.

அவன் பேசியதை கேட்டு தலையை குனிந்த படி கீழ் உதட்டை கடித்துக் கொண்டாள்.அவள் முகத்தையே பார்த்திருந்தவனின் பார்வை இப்போது அவள் பற்சிறையில் இருந்த அவள் இதழ்களில் பதிந்தது.

'ஒதட்டு வரி
பள்ளத்துல உசிர் விழுந்து
தவிக்குதடி…' சங்கர் மகாதேவன் அவன் காதுக்குள் சங்கீதமாக!

அவன் நின்று விடவும் புருவம் தூக்கியபடி மேல் கண்ணால் அவனை நோக்கினாள்.அவன் பார்வை இருக்கும் இடத்தைக் கண்டு உடனே இதழை விடுவித்துக் கொண்டவள் இப்போது நன்றாக நிமிர்ந்து நோக்கி அவனை முறைத்தாள்.

பற்சிறையிலிருந்து அவள் உதடு விடுவிக்கப்பட்டதும் மந்தகாச புன்னகையுடன் வலது புருவத்தை நீவிய படி அவளை பார்த்தான் வேந்தன்.அவள் முறைக்கும் பார்வையை மாற்றவில்லை என தெரிந்தும் அவளை உரிமையுடன் நோக்கினான்.

"நீ..நீ இன்னும் இங்..க. வந்த காரணத்தை சொல்லல யாழன்!"அவன் பார்வையில் தந்தி அடித்து தடுமாற்றத்தோடு வெளி வந்தது அவள் குரல்.

பின் குரலை சரி செய்து,"நீ எதுக்கு வந்தன்னு சொன்னா என் வேலைய நான் கவனிக்க போகலாம்..
இல்லன்னா.."என்றவள் அங்கிருந்த கதவை நோக்கி கை காட்டினாள்.

அவளை பார்த்து மறுப்பாக தலையாட்டியபடி,கைகளை கட்டிக் கொண்டான் அவன்.

நெற்றி சுருங்க அவனை பார்த்தவள்,அவனை தாண்டி செல்ல முற்பட்டாள்.

தன் அருகில் வந்துவிட்டவளிடம், "அப்பாக்கு இன்னைக்கி பர்த்டே.. நான் கேக் ஆர்டர் செய்ய வந்தேன்" என கள்ளச்சிரிப்புடன் சொன்னான்.

"அப்படியா..! அங்கிள் என்கிட்ட சொல்லவே இல்ல.?"

'எனக்கு கூட தான் தெரியாது'

"அது..அது.. நைட் தான் சப்ரைஸா செலிப்ரேட் செய்யணும்னு இருந்தேன்!"

"ஓஹ்"என சொல்லிக் கொண்டவளுக்கு உள்ளுக்குள் ஏதோ அழுத்தும் உணர்வு.

அவள் அமைதியை பார்த்த வேந்தனுக்கு அதற்கான காரணம் தெரிந்து இதழின் ஓரத்தில் புன்னகை தோன்றியது.

"தகப்ஸ், உன்னை இன்னைக்கி வீட்டுக்கு வர சொன்னார்!உன் தாத்தவையும் இன்வைட் பண்ணி இருக்கார்!"

"நான்…நான் இல்ல..எனக்கு வேலை இருக்கு.. என்னால இன்னைக்கி வர முடியாது..!நான் அங்கிள்கு ஃபோன் பண்ணி விஷ் செய்யறேன்!"
தயங்கினாள்.

என்ன தான் சில நேரங்களில் கோபாலிடம் பேசிக் கொண்டாலும் இன்னும் அவள் வட்டத்தை பெரிதாக்கி கொள்ளவில்லை அவள்.

வேந்தனின் அமைதியில் அவனை பார்த்தாள்.போலி முறைப்புடன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

"நான் இப்பவே அவருக்கு போன் பண்றேன்!"அவன் பார்வையை பார்த்து போனை தேடி பார்வையை சுழற்றினாள்.

'ஐயையோ!!' என மனதுக்குள் அலறிய வேந்தன்,"அதெல்லாம் ஒத்துக்க முடியாது!அவர் உன்னை எதிர் பார்த்துட்டே இருப்பார் நூடுல்ஸ்! நான் அங்க இருக்கறது தான் உனக்கு கஷ்டமா இருந்ததுன்னா.. நான் இன்னைக்கி ஆபிஸ்லயே இருந்துடறேன்!நீ என் வீட்டுக்கு போகலாம்"என்றான்.

"சே..ச்சே! நீ உன் வீட்ல இருக்கறதுல எனக்கு பிராப்ளம் இல்ல யாழன்" என்றாள் அவனின் பேச்சில்.

அவள் சொன்னதை கேட்டவன்,ஆர்வத்துடன் அவளை பார்த்து "அப்படியா.?" என கேட்க,

"ஆமா..வேலை இடத்திலேயே உன்னை சமாளிக்கறேன்..வீட்ல அங்கிள் வேற சப்போர்ட்கு இருக்காரு சோ எனக்கு நோ பிராப்ளம்"என கலாய்த்தாள் அவனை.

அவள் பேச்சில் ஆச்சர்யம் அடங்காமல் அவளை பார்த்தவன்,பின் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு "கிரேட் இன்சல்ட்"என முணுமுணுத்தான்.

பின் அவளை திசை திருப்பும் பொருட்டு, "நீ எனக்கு கேக் டிசைன் காட்டு மேகா!"என்றவனிடம்,

சரி என தலையாட்டிபடி அவள் வெளியே சென்று விட இவன் உடனே தந்தைக்கு அழைத்தான்.

"சொல்லுடா மகனே..?!"உற்சாகமாக போனின் அந்த பக்கம் கோபால்.

"அப்பா உனக்கு இன்னைக்கி பொறந்த நாள் தானே?!நீ என்னை செய்ற மேகாக்கும், அவ தாத்தக்கும் ஃபோன் பண்ணி நைட் பார்ட்டிக்கு இன்வயிட் பண்ணு என்ன?நான் போனை வெச்சிடறேன்"படபடவென பேசினான் இவன்.

"டேய்.. டேய்..எனக்கு எங்கடா இன்னைக்கி பொறந்த நாளு?அது தான் பெப்ரவரி மாசமே போயிடுச்சே!! இப்போ மாசம் ஜூலை ஆச்சே!"போனை வைத்து விடுவானோ என அவரும் வேகமாக பேசினார்.

"தகப்ஸ் எனக்கு அது தெரியாதா என்ன? நீ,நான் சொல்ற மாதிரியே செய் பா..ப்ளீஸ் பா!நீ கூட ஒரு தடவை ஆசப்பட்டியே.. மேகா நம்ம வீட்டுக்கு வரணும்னு அதனால தான் இந்த பிளான்"

அவன் சொன்னதை கேட்டு சிரித்தவர்,"இது எனக்கான பிளான் மாதிரி இல்ல! உனக்கானதுன்னு
தான் எனக்கு தெரியுது!"என்றார்.

"ப்பா..என சிணுங்கியவன்,"நீ.. நான் சொன்ன பிளானை எக்ஸ்ஸிக்யூட் செய்ற வேலையை பாரு"என்றபடி போனை கட் செய்தவாறு நிமிர்ந்தவன், கதவை நோக்க.. அங்கு கைகளை கட்டியபடி அவனை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள் குழலி..

 

Jahan jaahnu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!

கல்யாண சமையல் சாதம்! முடிவுற்றது..இந்த கதைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்❤😍🤗

காதல் ராகம் நீதானே! நாளையில் இருந்து பதிவிடப்படும்..🥰
 
Status
Not open for further replies.
Top