All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கானல் காற்றாய் விலை மாது

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
14129
கானல் காற்றாய் விலை மாது


ஆடை கலைந்தால் அவள் பசிக்கு

ஆண் சுகம் தனித்தால் அவன் பசிக்கு
பெண்ணை மறைத்து
தன்னை தொலைத்து
விலை தந்து விலை வாங்கி நிற்கும்

அவளும் உயிர்கொண்ட பிணமே…

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




வேதனையே வேதமாய் ஏற்றவள்

சேற்றில் விழ்ந்த செங்காந்ள்
வறுமைக்காய் வழி மாறிய வானிதியவள்
நிலைக்கு நிலை விலை மாற்றம் கொண்டவள்
விலை மாறிய பின்னும் வேலை மாறாதவள்
அங்கத்தின் வலியை விழியால் சுமப்பவள்
கருவறையை கல்லறையாக்கியவள்
தன் உடலையும் உணர்வையும் விற்று உயிர்
சிலையானவள்
உன்னதனாய் வேடமிட்ட அரக்கர்களின்

அந்தரங்க நாயகியவள்…

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



வரம் பெறவில்லை நான்


எளிமையான இல்லற வாழ்வை வாழ
வரம் பெறவில்லை நான்..

ஒரு தாலி ஏந்தி
தாலி தந்தவனை மட்டும்
தலைவனாய் ஏற்று
என்னை தந்து
கருவறையில் தெய்வம்
சுமக்க

வரம் பெறவில்லை நான்….

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




விதையிட்ட குடும்பத்திற்கு
என்னை விற்று

நாணயத்திற்காய் நாணம் திறந்து
இருள் சூழும் பொழுதுக்காய் காத்திருக்கிறேன்

இன்றும் வரும் காளையாது காயம்
தராமல் செல்வானா என்று….


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



எதிரில் கண்டோரையெல்லாம்
கலந்துவிடும் தன் நிழலைக்கண்டு
நீயுமா என்று விரக்தியில் இதழ்
விரித்தால்

விற்பணை பெண்.........



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




உயிர் உடல் தந்தவர் யாரோ
அதை பங்கு போட வருவது யாரோ

உளியால் உருவெடுத்த பாறை சிற்பமாகும்
சதையால் உருவெடுத்த நானோ அற்பமாகினேன்

துன்பதை பெற்று இன்பதை தந்தேன்
மாற்றம் மாறி மாறி வந்துபோக

இடம் மாறியும் இன்னல் மாறவில்லை
தினமும் பூக்கிறேன் பூத்த நொடியே
கசங்குகிறேன்

பகலில் யோக்கியமாய் திரிபவன்
இரவில் இடம் கேட்டு நிற்கிறான்

காமனின் பணியாள் என்பதால் கைது
செய்ய படுகிறேன்

கைது செய்த காவலிடம்
அங்கேயும்
ஒரு மன்னவன் காத்திருப்பான்
என்னில் கூடலில் கலந்து செல்வான்

ஊடகத்தில் காட்சி பொருளாய் நான்
என்னுடன் கூடல் கொண்டவனோ நியாயவான்

அருவெறுப்பும் அர்த்தமற்ற வார்த்தையும்
அழிக்கும் சொல்லும் எனக்கு மட்டும்

என்னை ஏசும் ஏகபத்தினிகளே நீங்கள் பார்கா
உங்கள் பதியின் முகமும் நான் அறிவேன்

விலை மாது என்று அழைப்போரே நாங்கள்
விலை மாது இல்லை வேல்வி மாதுகள்

எங்களை எரித்தே உயிர் காத்து உயிர் வாழ்கிறோம்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.


தேடி வந்து விழவில்லை


தேடி வந்து விழாதா வாழ்க்கை

காதல் கொண்டேன் கணவன் காப்பான்
என்று அவனோ என் கற்பை கடனுக்கு
தந்து சென்றான்

தேடி வந்து விழாதா வாழ்க்கை
ஒரு கருவறையில் ஒன்றாய் பிறந்தோம்
அவனோ என் கருவறையை
கழிவறையாக்கி சென்றான்

தேடி வந்து விழாதா வாழ்க்கை
உயிர் தந்ததவனே உடலை குத்தகைக்கு
விட்டு என் இதயத்தை குத்திகிழித்து
சென்றான்

என்னை காத்துக்கொள்ள கதறினேன்
என் முன் வந்து நிற்கும் ஆடவர்களும்
காக்கிறேன் என்று கருவருத்து சென்றான்
உறவுமுறைகளை சொல்லி

வலித்து வலித்து மறத்து போனேன்
உயிருடன் நடை பிணமானேன்
தேடி வந்து விழவில்லை

இந்நகர வாழ்கையில்…..


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



கூடி கலைத்தவன் அலங்கோலமாய் நிற்க
அணங்கு அவள் கேலிமுறுவல் தந்தாள்

கேலிமுறுவலை கண்டவனோ கோபம்
கொண்டு வார்த்தை தந்தான்

பலர் நாடும் பரத்தைக்கு கேலியென்ன
என்று தீயாய் கொதிக்க

அவளும் கொதித்தால்
ஆம் நான் பரத்தை தான்

என்னிடம் வறுமை கதை இல்லை
நியாய காரணமில்லை

உனக்கு காமம் எப்படியோ
எனக்கும் அப்படியே

ஆம் நான் பரத்தை தான்
இல்லாள் இழந்தவனின் வாடிக்கால் நான்
மனித மிருகத்தின் காமங்களைத்து மீண்டும்
மனிதனாக்கும் மாதர் நான்

நொடிக்கு நொடி நடக்கும் பாலியல் குற்றத்தை
தடுக்கம் சிறு துணை நான்

நான் இருந்தும் பச்சிளஞ்சுகளை
பாழ்செய்யும் உன் சமூகம்..

இதுவும் தொழிலே ஏமாற்றமில்லா தொழில்
ஊழலில்லா தொழில்

இங்கும் ஏமாற்ற வருகிறான் ஏமாந்து செல்கிறான்

நீ அசைவம் கொலை என்று ஏற்றுக்கொள்
நான் விபச்சாரம் தவறென ஏற்றுக்கொள்கிறேன்

கற்பழிக்கப்படுவர் வேசி பரத்தை என்றால்
கற்பழிப்பவன் எதில் சேர்வான்
கற்பிழந்தவர் வேசி என்றால் நீயும் ஆண்
வேசியே

வேசி பெண் பால் என்று எதில் உரைத்தது
என்று அனலாய் அறையை விட்டு செல்ல
அதிர்ந்து நின்றான்

அவளை ஆண்டவன்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


தேவதையாழ்


சாதி சாதி என்று றைசாற்றுபவன்
என் சதைபிண்டம் என்ன சாதி என்று
பார்பத்தில்லை

மதம் மதம் என்று மார்தட்டிக்கொள்பவன்
என் மதம் எது வென்று மறுகவில்லை

சித்தாந்தம் பேசுபவன் என்னுள் சிதைந்து
போகிறான்
வேதாந்ம் பேசுபவன் என்னுள் வீழ்ந்து
போகிறான்
போர்களத்தில் போர்புரிபனின் போதை
நான்

புறவொழுக்கம் பேசுபவனும் என் முன்
அகவொழுக்கம் அற்று நிற்கிறான்

மதிகெட்ட மாந்தர் முன் சிலையாகி
போனேன்
மெய் விற்று பொய்யாகி போனேன்

இங்கு என் வயதே முதலீடு
என் உடலே வினை பொருள்
லாபம் உள்ளத்தின் வலி
நஷ்டம் உடலின் காயம்

தினம் தினம் தோயாது எனை மீட்டுபவர்

எனக்கு இட்ட பெயர் தேவதையாழ்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


விலைமாதுவின் காதல்

பல வண்டுகள் முகர்ந்த மலரை
மன்னவன் மாலையாக்க நினைக்க
மலர் பெண்ணவளோ
இதழ் திறக்காமல்
விழி திறந்தவள்
அவ்வற்புத ஆணவனின் மலரடிக்கு
தன் உவர்நீரை பொழிந்தால்…..

சுட்டமண்ணில் சுவடு தேடாதே என்று

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




தாளவில்லை

தாளவில்லை....

என்னில் தீவிரவாதம் பழகுபவனின் தீவிரம் தாளவில்லை

தாளவில்லை..........
நானும் மனிதி என்று நினையாமல்
மார்பில் சுடும் நெருப்பின் சுடு தாளவில்லை

தாளவில்லை....
அவன் வலிக்கு என்னை வலிக்க செய்பவனின்
வலி தாளவில்லை

தாளவில்லை.........
கோபத்தால் என் தேகத்தை சிதைப்பவனின்
கோபம் தாளவில்லை

தாளவில்லை..........
காதல் மொழியின் பிதற்றுபவனின் பிதற்றல்
மொழி தாளவில்லை

தாளவில்லை.......
என் சோகமே ஏராளமிருக்க என்னுடம் வந்து
சோகம் பகிர்பவன் சோகம் தாளவில்லை

கொடுமையினும் கொடுமையாய்

தாளவில்லை..........
மாதவியாய் நானிருக்க என் மணிமேகலையையும்
மாதவியாக்க துடிக்கும் மிருகங்களின் செயல்
தாளவில்லை…..


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


By

சாரா💐💐💐

விலைமாது தான் இந்த கவிதையோட கரு
எல்லாம் விலைமாதும் தான் ஒரு விலைமாதுவ ஆகா ஆசைப்பட்டது இல்லை அவங்களைடைய சூழ்நிலை தான் பெரும்பலும் அவங்களோட இந்த பாதையே தேர்ந்தெடுக்க வைக்கிறது. என்று எனது எண்ணம்..
அதையே என் கிறுக்கலில் அவங்களோட சில வரிகள்
இந்த தலைப்பு இந்த கவிதை இதில் ஏதேனும் தவறாய் இருந்தால் என் தவறை மன்னக்கவும்

பிழை இருந்தால் திருத்திக்கொள்ள உங்கள் கருத்தை தர வேண்டும் என் தோழிகளே….:smile1::smile1:சகோதரிகளே...:smile1::smile1:
 

Fathima Nazreen

New member
அக்கா கவிதை செம்ம அவங்க வலியெல்லாம் அழகா சொல்லிருக்கீங்க
 

Sharmilapuvi

New member
மிகவும் அருமையான பதிவு சகோ. விலைமாது உண்மையாகவே அவள் ஒரு பாவபட்ட பெண்ணாக பிறப்பெடுத்து தன்னையே அழித்து பல ஈனப்பிறவிகளுக்கு தன் உடலை அளிக்கும் பெண்அவள்.
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு சகோ. விலைமாது உண்மையாகவே அவள் ஒரு பாவபட்ட பெண்ணாக பிறப்பெடுத்து தன்னையே அழித்து பல ஈனப்பிறவிகளுக்கு தன் உடலை அளிக்கும் பெண்அவள்.
ama sago nanrikagal
 
Top