All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
முதல் நாள் இரவு பெய்த மழையில் கழுவி விட்டது போல் பளிச்சென்றிருந்த தார் சாலையில் தன் ஸ்கூட்டியை செலுத்தி பிரம்மாண்டமாய் ஓங்கி நிற்கும் பத்திரிகை அலுவகத்தின் முன் பார்க் செய்தவள் அலுவலகத்திற்க்குள் சென்றாள்.
இவள் மித்ரா, ஜர்னலிசம் முடித்த கையோடு இன்டெர்னாக பயிற்சி பெற்ற பத்திரிகையிலே தேர்வாகி பணிபுரிகிறாள்.
கணிப்பொறிக்குள் தலையை கொடுத்து கொண்டிருந்த தன் உடன் பணிசெய்யும் தோழியிடம்,
"வாவ் ....... இன்டெர்ஸ்டிங், பொதுவா இவங்க யாருக்கும் பேட்டி கொடுக்க மாட்டாங்களா?,,
"ம்ம்ம் ...... எல்லாம் நம்ம சப்எடிட்டர் மகிமை, எப்படியோ ஏற்பாடு பண்ணிட்டார்,"
"க்ரைம், த்ரில்லர், அமானுஸ்யம்னு, இவங்க கலக்காத ஜர்னல்லே இல்லல, ரெண்டு லேடீஸ் ஒண்ணா எழுத ஆரம்பிச்சு , இவ்வளவு வேகமா வளர்ச்சி பேர் புகழ் அடைஞ்சுருக்காங்க, ஆனா அவங்கள பத்தி வெளிய அவ்வளவா தெரியலல "
"ஆமா சுசி, அதான் அவங்க முதல் இன்டெர்வியூ நம்மளோடதா இருக்கணும்னு நம்ம ஆஃபீஸ் முடிவு பண்ணியிருக்காங்க, இப்ப கிளம்புனா தான் சரியாய் இருக்கும், ஏதாவது சொதப்புச்சு மிக்ஸியில போட்டு ஜூஸ் போற்றுவாங்க, தினேஷாவ பிக் பண்ணிட்டு கிளம்புறேன்......... பாய்........."
"பாய் பக்கி, ஆல் த பெஸ்ட் "
**************
"தினேஷும், மித்ராவும் ஷெனாய் நகரிலில் உள்ள இரட்டை எழுத்தாளர்களின் அலுவகத்தில் நுழைந்த பொது சரியாக 8.50.
"செர்டைன்லி, எப்படியோ கரெக்டா வந்தாச்சு தினேஷா"
"எல்லாம் என்னோட டிரைவிங் மேஜிக் "
" தினேஷா..... அதுனால தான் இவ்வளவு லேட், இல்லனா இன்னும் கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாம்"
"உன்கூட வந்தேன் பாரு என்ன சொல்லனும்"
"என்னை அப்புறம் நல்லா சொல்லிக்க, இப்போ போய் கதவு கிட்ட நாம வந்திருக்கத சொல்லு " என அவனை கதவு பக்கம் தள்ளி விட்டாள்.
ஐந்து நிமிடமாக அழைப்பு மணியை அடித்தும், உள்ளே கதவு திறப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
"என்னடா இது, ரெஸ்பான்ஸே இல்ல"
"அவங்க வரலையோ என்னமோ "
"லூசு, விஷ்மயா மேடம் இங்கேயே தங்கிறவங்கடா...அமைதியான இரவுகள் தான் அழகான கற்பனைகள் பிறக்குமிடம்னு இங்கேயே நைட் ஸ்டே பண்ணி ஒர்க் பண்ணறவங்க"
"ஒருவேளை இன்னும் தூங்குறாங்களோ "
"ஏ பக்கி இன்னுமா தூங்குவாங்க, பின்னாடி போய் பாக்கலாமா"
"வா அத செய்வோம் முதல்ல"
பின்பக்கமாக உள்ள கதவுக்கு வீட்டை சுற்றி செல்ல துவங்கினர்.
"டே தினேஷா ஒழுங்கா எல்லாம் ஸ்னாப்ஸ் பெர்ஃபக்ட்டா எடுடா, இது சொதப்புச்சு திரும்ப ஜோதிட நேரம் தான் எனக்கு "
" ஏ மித்ரா.... என் திறமை மேலேயே சந்தேக படுறீயா நீயூ " என முறுக்கி கொண்டவனிடம்
" சச்ச... நீ தான் பெர்ஃபக்ட் போட்டோக்ராப்ர் ஆச்சே..... இருந்தாலும் ஒரு சின்ன பயம்.. எங்க திரும்ப அந்த எடிட்டர் என்னை ஜோதிடத்தில தள்ளி விற்றுவாரோனு தான்.. "
"விடு விடு அதுலாம் 20 - 700 f2.8 ல வச்சு சூப்பரா எடுத்துரலாம்.. இன்னைக்கு என் லஞ்ச் மட்டும் நீ பாத்துக்க"
"அடேய் இது என்ன புதுசா சொருகுற "
" ஹோஹோ அப்ப வாங்கி தர மாட்டியா, உனக்காக காலைல சாப்பிடாம கூட வந்திருக்கேன் பாரு... என்ன சொல்லணும் "
'ஹையோ இந்த எருமை காலைல ஃபுல்லா சாப்பிட்டு வந்திருந்தா கூட மூணு நாளைக்கு சேத்து லன்ச் சாப்பிடுவான்.. இன்னைக்கு என்ன ஆக போகுதோ'
" நீ மைண்ட் வாய்ஸ்னு வெளிய சத்தமா பேசிட்டு இருக்குற மித்ரா.. போ நான் கோச்சுகிட்டேன் "
' ஹையோ கோச்சுக்கிட்டு போட்டோஸ் வேணும்னே சோதப்பிட போறான் ' என பயந்தவள் வேகமாக அவனிடம் சமாதான உடன்படிக்கைக்கு சென்று அவனின் மதிய உணவின் பொறுப்பை ஏற்று கொண்டாள்.
மித்ராவிடம் பேசி கொண்டே வந்த தினேஷ் அலுவகத்தின் பக்கவாட்டு ப்ரென்ச் விண்டோ வழியாக பார்த்ததும் அவனின் கண்கள் நிலைகுத்தின.
அதிர்ச்சியில் மூச்சு வர சிரமம் பட்டவன், அவன் நின்றதை கவனிக்காமல் அவனை தாண்டி முன்னே சென்ற மித்ராவை அழைத்தான்..
" மி.... .. மித்ரா.... "
அவனை திரும்பி பார்த்த மித்ரா அவன் நின்ற கோலத்தை பார்த்து குழம்பி அருகில் போனாள். 'ஏன் இப்படி நிக்கிறான்' என யோசித்து அவன் பார்வை போன திசையில் பார்த்தவள் அவளும் உறைந்து போனாள்.
அதேநேரம் இரட்டை எழுத்தாளர்களின் பின் பகுதியை ஆக்கிரமித்த மீனாள் தன் அலுவகத்தின் முன் நின்ற சொற்ப கூட்டத்தை பார்த்து குழப்பத்துடன் தன்னுடைய வண்டியை பார்க் செய்து விட்டு வந்தாள்.
ஏற்கனவே இன்டெர்வியூ செய்வதற்காக மீனாளிடம் அறிமுகம் ஆனதில் மித்ரா அவளை இனம் கண்டு மீனாளிடம் சென்றாள்.
தன்னருகே வந்த மித்ராவிடம்
"இது என்ன இங்க கூட்டம், ப்ரைவேட் இன்டெர்வியூ தான சொன்னிங்க, இப்ப இவ்வளவு பேர் வந்திருக்கீங்க, இதுக்கு தான் ப்ரெஸ் மீடியானு எந்த பப்ளிக் நெட்ஒர்க்லயும் எங்களை வெளிகாட்டிக்கிறதுல, விஷ்மயாக்கு கூட்டம்னாலே பிடிக்காது, சரியான தனிமை விரும்பி அவ, உங்க எடிட்டர் கேட்டாரேன்னு நான்தான் விஷ்மயாவ கண்வின்ஸ் பண்ணி சம்மதிக்க வச்சேன்.. ஒரு மணி நேரம் இன்டெர்வியூனு சொல்லிட்டு இப்போ இத்தனை பேர கூட்டிட்டு வந்திருக்கீங்க"
என்று மித்ரா பேசவே இடம்கொடுக்காமல் பட படவென பொரிந்து கொண்டிருந்தாள் மீனாள்.
தன்னால் பேச முடியாததால் மீனாளின் கை பிடித்து கூட்டி சென்றாள் மித்ரா..
"ஹேய் இரு இரு எங்க கூட்டிட்டு போற "
"மேம் ப்ளீஸ் வாங்க இட்ஸ் வெரி சீரியஸ் திங்க்" கூட்டிவந்து ஜன்னல் வழியாக காட்டினாள்..
உள்ளே பார்த்த மீனா வீறிட்டாள்.
"நோ ........ இது உண்மையில்லை ..... நான் நம்பமாட்டேன் ... " என்று கண்ணாடி கதவை திறக்க முற்பட்டாள்
"மேம், இந்த கண்ணாடி, முன்னாடி என்ட்ரன்ஸ் , பின்கதவு எல்லாமே பூட்டிற்கு "
சுய உணர்வு பெற்ற மீனா "ஆஃபீஸ் சாவி என்கிட்ட ஒன்னு இருக்கு".
அவசரமாக விரைந்த தினேஷ்,மித்ராவும், மீனாவுடன் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றனர்.
விஷ்மயாவின் அறையின் கதவை திறக்க முயற்சித்தனர். அது உள்ளே பூட்டப்பட்டுருந்தது..
"மீனா மேடம் இந்த ரூம் சாவி இருக்கா? "
"இல்ல, இந்த ரூமுக்கு ஒரு சாவிதான், அது விஷ்மயாட்ட தான் எப்பவும் இருக்கும், அவளோட பிரைவசியை வேற யாரும் டிஸ்டர்ப் பண்றது அவளுக்கு பிடிக்காது..
"மே பி அவங்கள காப்பாத்தமுடியலாம், இப்ப உள்ள போனுமே ......எப்படி போறது..... "
என யோசித்தவர்கள் வேறு வழியில்லாமல் ஜன்னல் கண்ணாடி கதவை உடைத்து கொண்டு சென்றனர்..அது ஒரு பிரென்ச் விண்டோ மாதிரி என்பதால் உள்ளே செல்வது சுலபமாகவே இருந்தது ..
உள்ளே வந்தவர்களை வரவேற்றது என்னவோ விஷ்மயாவின் சடலம் தான் ..
இரட்டை எழுத்தாளரின் முதல் பாதியை கொண்ட விஷ்மயா கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்தாள்.
அருகில் பார்க்கவும், மேலும் அதிர்ந்து உறைந்து போய் தொப் என எது விழுந்தாள் மீனாள்.
சூழ்நிலையை உணர்ந்த தினேஷ் தன் வேலைய தொடங்கினான், தன் கையில் உள்ள காமெராவினால் சுற்றி அவன் கிளிக் செய்து புகைப்படமாய் பதிந்து முடிக்கவும், தகவல் சொல்லப்பட்ட போலீஸ் வேன் வரவும் சரியாக இருந்தது.
ஸ்கெட்ச் 2.............
கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.
இன்ஸ்பெக்டர் பெர்னாடஸ் தன் முன் அமர்ந்திருந்த மீனாள் மற்றும் தினேஷ் , மித்ராவை கேள்விகளால் தொடுத்து அயர வைத்துக்கொண்டிருந்தார்.
"சோ நீங்க ரெண்டு பேரு தான் ப்ரஸ்ட் இன்சிடென்ட்ட பாத்தது இல்லயா , நீங்க இன்டெர்வியூக்காக வரும்போது 9 மணி இருக்குமா?" என மித்ரா, தினேஷிடம் வினவினார்.
"ஆமா சார், கிட்டத்தட்ட 9 மணி இருக்கும் ".
அழுது கொண்டிருந்த மீனாளிடம் திரும்பினார். அவளோ இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மிகவும சோர்ந்து இருந்தாள்.
"மேடம் உங்க வருத்தம் புரியுது, ஆனா இப்ப உங்க ஒத்துழைப்பு ரொம்பவும் முக்கியம், விஷ்மயா மரணம் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க"
என இன்ஸ்பெக்டர் அவளை அணுகவும், நிலைமையை புரிந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசினாள் மீனாள் .
"ரொம்ப ஷாக்கிங்அ இருக்குசார் டோட்டல்லி அன்எஸ்பக்டட்..
விஷ்மயா ரொம்ப தைரியமானவ, துணிச்சல்காரி எனக்கு என்ன சொல்றதுனே தெரியல சார்.... "
"அவங்க பொதுவா இங்க தான் தங்குவாங்களா?"
"ஆமா சார், நைட்ல எந்த தொந்தரவும் இல்லாம வேலை செய்ய தான் அவளுக்கு பிடிக்கும்"
"இந்த ரூம்க்கு இந்த ஒரு சாவி தான? வேற இல்லயா " என அவளிடம் ப்ரென்சிக் பண்ணி சீல் செய்யப்பட்ட சாவியை காட்டினார்
"ம்ம்ம்......., ஆமாம்.... விஷ்மயாக்கு அவளோட தனிமையை நான் உட்பட வேற யாரும் தொந்தரவு பண்றத விரும்பமாட்ட, மெயின் கதவு சாவி தான் எங்க ரெண்டு பேர்கிட்டயும் இருக்கு... இது அவளோட ரூம்'மா அவ மட்டும் யூஸ் பண்ணிப்பா " என்றவள் மேலும் தொடர்ந்தாள்.
"நேத்து நைட் கூட நார்மலா தான் இருந்தா சார், இன்னைக்கு இன்டெர்வியூ பத்தி ஞாபக படுத்திட்டு அவள ரெடியா இருக்க சொல்லிட்டு தான் நான் வீட்டுக்கு போனேன்"
இன்ஸ்பெக்டர் பெர்னாடஸ் மீனாளிடம் பேசி கொண்டிருக்கும் போது திடிரென நடுவில் புகுந்த எஸ்ஐ சந்துரு
" மேம் நான் உங்க பெரிய ரசிகன், உங்க புக்ஸ் ,வெப் சீரிஸ் இப்படி எல்லாம் கலெக்ஷனும் பாத்துருவேன்,....
மேடம் நீங்க போட்டோஸ் விட நேரில ரொம்ப யங்கா அழகா இருக்கீங்க" என்று சூழ்நிலைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாமல் மீனாளிடம் வளவளத்து கொண்டிருந்தான்.
"எனக்கு ஒரு ஒன்னு..... ரெண்டு ....... இல்ல ஒரு அஞ்சு ஆட்டோகிராப் கொடுங்க மேடம் ப்ளீஸ், ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் ........" என்று மேலும் இழுத்தவனை மண்டையில் தட்டி இழுத்து சென்றார் பெர்னாடஸ்,..
"டேய் இங்க என்ன விஷயம் நடந்திருக்கு, நீ என்ன பண்ணிட்டு இருக்க.... , ஒழுங்கா எதுக்கு வந்தோமோ அந்த வேலையை மட்டும் பாரு.. " என பெருமூச்சு விட்டவர்,
" விஐபி கேஸ்.. இந்த கேஸ முடிக்கிறதுக்குள்ள நாம என்னவாக ஆக போறோமா, இதுல நாம போற இடத்துக்குலாம் நமக்கு பின்னாடிதான் எப்பவும் மீடியா பீப்பிள் வந்து கொடைச்சல் கொடுப்பாங்க... ஆனா இங்க கேஸ் ஆரம்பிச்சருக்கதே மீடியா பீப்பிள் கிட்டயிருந்து தான்.. என்ன ஆக போகுதோ...
முதல்ல கேஸ்'ச ஒழுங்கா பாரு சந்துரு "
"சார், இன்னும் இதுல பாக்க என்ன இருக்கு, இது ஒரு கம்ப்ளீட் சூசைட்... போய் ப்ரென்சிக் பஷீர் சார்கிட்ட கேளுங்க" என்று பஷீரிடம் தள்ளினான்.
ப்ரென்சிக் பார்த்துக்கொண்டிருந்த பஷீரும் "ஆமா பெர்னாடஸ் கழுத்துல உள்ள அழுத்தம் காரணமா மூச்சு விட சிரமம் பட்டு டெத் நடந்துருக்கு, டெத் ஒரு மணில இருந்து 2 குள்ள நடந்திருக்கனும்."
"சூசைட்?"
"இப்ப உள்ள ப்ரெசன்ட் ஸ்டேட் பாக்கும்போது இட்ஸ் கம்ப்ளீட்லி சூசைட்.. வேற எந்த ட்ரெஸ்'சும் இல்ல"
அப்போது எஸ்ஐ சந்துரு " சார், டிஎஸ்பி ஆன் தி வே, நியூலி ஜாயின்ட்...
இங்க சென்னையில இது அவரோட ப்ரஸ்ட் கேஸ்.. கமிசினர் அவர இங்க டைவேர்ட் பண்ணி கிளீன் ப்ரோசஸ் வேணும்னு ப்ரோஸீட் பண்ண சொல்லிருக்காங்கலாம்.."
“ யாரு, மாறன்னா” ?
********
டிஎஸ்பி மாறன் வந்ததும் பரஸ்பரம் அறிமுகம் முடிச்சுட்டு கேஸ் டீடெயில்ஸ் பத்தி கலந்து பேசி தெரிந்து தெளிவு படுத்தி கொள்ள ஆராம்பித்தனர்.
"பெர்பெக்ட்லி இட் சீம்ஸ் சூசைட் சார், இனி மத்த பிராசஸ் பாக்கனும், அப்புறம் இவங்க தான் முதல்ல பாடிய பாத்தவங்க"
அவர்களை மாறன் திரும்பி பார்ப்பதற்க்கு முன்னாடியே
" டேய் மாறா... " என்று மித்ராவின் ஆச்சரிய குரல் அவனை அடைந்தது.....
ஸ்கெட்ச் 2.............
கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.