All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சத்யா ஆனந்த்தின் ‘ருத்ரனின் காதலி’ - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Sanatamilnovel

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you Srikala Mam..

Sorry konjam illa rombave late aagiduchu.. Ini vaaram irumurai story update varum.. padithu vitttu karuthukalai therivikkavum..


ருத்ரனின் காதலி -1

27772

ஆதிரை, அதிகாலை ஐந்து மணிக்கு எப்பொழுதும் போல் கண் விழித்தவர், இன்று சற்று பரபரப்பாக காணப்பட்டார்.

சுட சுட காபி தயாரித்துக் கொண்டிருக்கும்பொழுது, ரவி அங்கு வந்தவர் , "குட் மார்னிங் டார்லிங்"

"குட் மார்னிங் .. இந்தாங்க காபி, வாக்கிங் போயிட்டு சீக்கிரம் வந்திடுங்க , காலையிலே கோவிலுக்கு போகனும்"

" சரி சரிமா.. ருத்ரன் நைட் எப்ப வந்தான்?"

" தெரியலைங்க .. லேட் ஆகும்னு சொன்னான்.. நானும் கண் அசந்துட்டேன்.. "

"பிறந்தநாள் அதுமா இன்னைக்காவது வீட்டில இருக்க சொல்லு அவன"

"ஆமா நான் சொல்லி உடனே அவன் கேட்க போறான்.. " என்று அலுத்துக்கொண்டே பூஜை அறையை அலங்கரிக்கத் தொடங்கினார்.

தன் பூஜையை முடிக்கும் வேளையில் , நம் கதையின் நாயகன், ருத்ரன் தன் அறையிலிருந்து , காக்கி உடையில் கம்பீரமாக நடந்து வந்தான்.

"ருத்ரா... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் " எனக் கூறிக் கொண்டே பிரசாதத்தை ஊட்டினார்

"தேங்க்ஸ் மா"

"என்னப்பா , இன்னைக்கு கூட வீட்ல தங்காம இப்படி யூனிபார்மோட வந்து நிக்கிற?"

"அம்மா நான் என்ன சின்ன குழந்தையா ? இருபத்தியெட்டு வயசாகிடுச்சி, இன்னும் பிறந்தநாளுக்கு லீவ் எடுக்கனுமா ? நியாபகம் வச்சிக்கோங்க, உங்க பையன் ஐபிஸ் ஆபிஸர் , அசிஸ்டன்ட் கமிஷ்னர் ... என்னமா?"

"அதெல்லாம் ஊருக்கு , எனக்கு இன்னும் குழந்தை தான்.. இல்லாட்டி இன்னொரு ஐடியா இருக்கு.. சீக்கிரம் கல்யாணம் பண்ணி ஒரு பேத்தியை பெத்துக்கொடு , உன்ன தொல்லையே பண்ண மாட்டேன்"

"அம்மாமா... காலையிலே ஆரம்பிக்காதீங்க.. நான் கிளம்பனும்"

"டேய்.. கோவிலுக்காவது கூட வாடா ப்ளீஸ்"

"அம்மா.. " என்று தாயை அணைத்துக்கொன்டான். "ப்ளிஸ்லாம் சொல் லாதீங்க, கோவிலுக்கு தானே, வரேன், சரி அப்பா எங்கே ?"

"வாக்கிங் போயிருக்கார் வந்திடுவார்.. நீ போய் ஹாலில் இரு.. தோ நான் ரெடியாகிட்டு வரேன்.. "

தன் அறைக்கு வந்தவர், அவசரமாக போனெடுத்து " நந்து சக்ஸஸ்" என்ற மெஸேஜ் அனுப்பிவிட்டு தயாரானார்.

தன் தாய் தந்தையுடன் கோவிலுக்கு ருத்ரன் தன் காரில் புறப்பட்டான். அவன் வெளியே வரும்வரை காத்திருந்த ஸ்கூட்டி, அவன் பின் தொடர்ந்து சென்றது..

ருத்ரன், தாங்கள் வழக்கமாக செல்லும் சிவன் கோவிலுக்கு சென்றான்.

தரிசனம் முடிந்ததும் , "ருத்ரா, பிரகாரத்தை மூனு முறை சுத்தி வாப்பா, கால் வலிக்குது, நான் இப்படி உட்கார்ந்துக்குறேன்"

"சரிம்மா.. " என்று ருத்ரன் முன்னே நடக்க , பின்னே செல்ல முயன்ற ரவியை ஆதிரை தடுத்து நிறுத்தினார், "எங்கே போறீங்க ?.. "

"நீதானமா பிரகாரத்த சுத்த சொன்ன ? "

"ம்ம்ம்ம் அது நம்ம பிள்ளைய சொன்னேன். உங்களை இல்ல.. அங்க நம்ம நந்துமா வெயிட் பண்றா... "

"ஓஓஓ ஐ ஸீ... இதெல்லாம் மேடமோட ப்ளாண் ஆ ?"

"எஸ்.. எஸ்.. "

*******************
ருத்ரன் வருவதற்காக காத்திருந்தாள் நம் கதையின் நாயகி நந்திதா (எ) நந்து.. ஐந்தறை அடி உயரம் , அழகிய கண்கள், பேரழகி.. ஒரு ஐ.டி நிறுவனத்தில் ஹச்.ஆராக பணி புரிகிறாள். தந்தை ராம் பிரகாஷ் சென்னையில் பிரபல கீதா ஸ்டார் ஹோட்டலின் நிறுவனர்.. தாய் சிறு வயதில் தவறிட, தந்தையே தாயுமாகி போனார்.

ருத்ரனை கண்டதும் , 'ஐ.. நம்ம பேபி.. '

ருத்துவிடம் வேகமாக வந்து "பேபீ ஹாப்பி பர்த் டே.. ப்ளீஸ்.. எவ்வளவு கோபம் இருந்தாலும் இன்னைக்கு அதை மறந்திடு.. என்னோட ஸ்மால் கிப்ட்.. வாங்கிக்கோ.. "

"உனக்கு எத்தனை தடவ சொல்றது ? அறிவில்ல?”

"பேபி.. என்ன கோவம் என் மேல உனக்கு ? ஏன் இப்படி கோபப்படுற?"

"பேபி , கீபினு ஏதாவது உளறிட்டு இருந்த.. கொன்னுடுவேன் பாத்துக்க.. உன்ன நம்பிகிட்டு உன் பின்னாடி சுத்திட்டு இருந்த ருத்ரன் செத்து ரெண்டு வருஷமாச்சு"

"அப்படிலாம் சொல்லாத ருத்து.. " என்று ஆயிரமாவது முறை கண் கலங்க..

"கிப்ட் ஒரு கேடு" என பிடிங்கி தூர எறிந்துவிட்டு நடக்க ஆரம்பித்துவிட்டான்

நந்து அழுதுக்கொண்டே எதிர் புறமாக ஓடி விட்டாள்.. அவள் சென்றதை தூணின் மறைவில் நின்றுக்கொண்டு பார்த்திருந்த ருத்து, தூக்கி எறிந்த கிப்டை தேடி எடுத்தவன், காரில் வைத்து விட்டு தாயிடம் சென்றான்.

*************

காலையில் எவ்வளவு மகிழ்சியாக கிளம்பினாளோ, அதற்கு நேர் மாறாக சோகமே உருவாக வீட்டுக்கு திரும்பி வந்தாள் நந்து..

உணவேதும் உண்ணாமல் காலையிலிருந்து சுற்றியது தலை வலிக்க , வெறும் வயிற்றில் மாத்திரை எடுத்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.

ருத்ரன் அலுவலக அறையில் தன் கையையே பார்த்துக் கொண்டிருந்தான், அவள் தந்த அழகிய கை கடிகாரம் அவனுக்கு அத்துனை பொருத்தமாக இருந்தது..

"தேங்க்ஸ் டி அம்மு.. ரொம்ப ஸாரி.. உன்னை ரொம்ப கஷ்ட படுத்துறேன்.. ப்ளீஸ் என் கண் முன் வராதேடி..."

ருத்ரனும் மகிழ்ச்சியாக ஒன்னும் இருந்திடவில்லை..

இந்த துயரம் எதற்க்காக ?? விடை அவர்களுக்கு மட்டுமே தெரியும் ...

************

ருத்ரனின் அலுவலகத்திற்குள் திடீரென வந்து கட்டிக்கொண்டான் கிஷோர்.. ''ஹேப்பீ பர்த் டே மச்சான்.. "

கிஷோர் , ருத்ரனின் சிறு வயதிலிருந்து உயிர் நண்பன், வேளச்சேரி ஆர். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணி புரிகிறான்..

"தேங்க்ஸ் டா.. என்ன காலையிலேயே இந்த பக்கம் ?"

"உன்னை பார்க்க தான் வந்தேன்... அப்புறம் என்ன மச்சி பர்த் டே ஸ்பெஷல் ??"

"வழக்கம் போல தான்டா.... "

அப்போது அங்கு வந்த கான்ஸ்டபிள் , "வணக்கம் ஸார், ருத்ரன் சார கமிஷ்னர் கூப்பிடறார்.. "

"ஒகே டூ மினிட்ஸ் வரேனு சொல்லுங்க... "

கான்ஸ்டபிள் சென்றதும் கிஷோர் , "மச்சி நீ போ, நான் சாயங்காலம் வீட்டுக்கு வரேன்.. நான் இங்க ஒருத்தரை பார்க்க வந்தேன், நான் மீட் பண்ணிட்டு கிளம்புறேன்.. "

"சரி டா... "
கமிஷ்னர் குணா, ருத்ரனுக்காக காத் துக்கொண்டிருந்தார்.. ருத்ரன் அனுமதி கேட்டு உள் ளே வந்ததும் , "குட் மார்நிங் மை பாய்.. கமான், டேக் யுவர் ஸீட்"

"குட் மார்நிங் ஸார்.. தேங்க் யூ"

"அன்பார்டுநேட்லி, ஒரு ஸேட் நியூஸ் ருத்ரா.. வி நீட் டு ஆக்ட் ஸூன்.. "

"என்ன ஆச்சு ஸார்? "

"டெல்லியில் ஜெயிலிருந்த முக்கியமான் தீவிரவாதி, மூன்று ஜியிலர்ஸ சுட்டு கொண்ணுட்டு தப்பிச்சிருக்கான்.. அவன் தமிழ்நாடு வழியா இலங்கை போறதா தகவல் கிடைச்சிருக்கு, அவனை பத்தின டீடெயில்ஸ் இதுல இருக்கு, வீ டோன் ஹாவ் டைம் .. சீக்கிரம் அவனை அரஸ்ட் பண்ணனும்.. மாக்ஸிமம் டூ டேஸ்"
"ஷ்யூர் ஸார் பிடிச்சிடலாம்... நான் டிடெயில்ஸ் பார்த் திட்டு, ஐ வில் கம் வித் த ப்ளாண்.. ஐ வில் லீவ் நவ்.. "

"எஸ்.. தேங்க் யூ.. "

************
நந்து நன்றாக தூங்கி எழுந்ததும் பசி எடுக்க, கீழே சென்றாள்.. அங்கு மரகதம்மாள் இவருக்காக காத்திருந்தார்..

"நந்து பாப்பா.. காலையிலே சாப்பிடலையா ? தம்பி புலம்பிகிட்டே போனார்.. "

"தலை வலி அத்தை.. லஞ்ச் எடுத்து வைங்க வரேன்.. "

"சரிடா.."

மரகதம்மாள் , நந்துவின் அத்தை.. தாயில்லாமல் வளர்ந்த நந்துவின் மேல் அதீத பாசம் கொண்டவர்..

சாப்பிட்டு தன் மொபைலை எடுத்தவளிற்கு சிறு மகிழ்ச்சி கடந்த ஆச்சரியம் , ருத்துவிடமிருந்து சில மெஸேஜுகள் வந்திருந்தன..

"அம்மு.. ஸாரி உன்னை மறுபடி மறுபடி ஹர்ட் பண்றேன்.. பட்.. என் முன்ன திரும்பி வராத.. உன்ன ரொம்ப பேசிடுவேனோனு பயமா இருக்கு.. "

"ப்ளீஸ் சாப்பிடு.. உன்னை மன்னிக்கவும் முடியல , மறக்கவும் முடியலை.. டோன்ட் கிவ் மீ எனி மோர் பெயின்.. "

"டேக் கேர்.. "
"நான் என்ன தப்பு செஞ்சேனு சொல்லாமலே எனக்கு தண்டனை கொடுக்கிற, இதை விட பெரிய வலி இருக்குமா பேபி ? " என்று நினைத்தவள், தன் தந்தையை காண சென்றாள்..

***********************

ருத்ரன் இங்கு தன் அடுத்த வேட்டைக்கு தயாரானான்.. தன் ஐந்து நபர் படைகளுடன் கிஷோரையும் சேர்த்துக்கொண்டவன், தன் குகைக்கு அவர்களை கூட்டிச் சென்றான்.

ஒரு பாலடைந்த கட்டிடம், மேல் தளம் மட்டும் கட்டி இருந்தது ஆனால் சிமன்ட் பூச வில்லை, பெயின்ட் அடிக்க வில்லை ..பேஸ்மன்ட்டிலி 3அறைகள் மட்டும் இருந்தது.. ஒன்று அவனது அலுவல் அறை, இரண்டு அறைகள் பெர்ஸனல் லாக்கப்பாக உபயோகிப்பான் நம் ருத்து பேபி..

மேலே முதல் தளம் பூசப்படாமல் இருந்தாலும் உள்ளே அழகான இன்டீரியர்ஸ் செய்யப்பட்டிருந்தது.. அது மூன்று படுக்கை அறை கொண்ட அழகான வீடு..

---- தொடரும்
 

Sanatamilnovel

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ருத்ரனின் காதலி -2

28272645a295136da53e66fb48d9edfc4cf5a.jpg


இரவு 7 மணி , ருத்ரன் கமிஷ்னர் கொடுத்த பைலுடன் தன் கோட்டைக்கு வந்திருந்தான். அது ஒரு கட்டி முடிக்காத வீடு, மேல் தளம் மட்டும் கட்டி இருந்தது ஆனால் சிமன்ட் பூசவில்லை, பெயின்ட் அடிக்கவில்லை. கீழே 3 அறைகள் மட்டும் இருந்தது.. ஒன்று ருத்ரனின் அலுவல் அறை, இரண்டு அறை காலியாக இருந்தன.
மேலே முதல் தளம் பூசப்படாமல் இருந்தாலும் உள்ளே அழகான இன்டீரியர்ஸ் செய்யப்பட்டிருந்தது.. அது மூன்று படுக்கை அறை கொண்ட அழகான வீடு.

தன் நந்துவுடன் வாழ்வதற்காக, ஆசையாய் அவன் கட்டிய வீடு , இப்பொழுது இந்த நிலையில்...

அந்த பைலில் , குறிப்பு எதுவும் அவ்வளவாக இல்லை.. தப்பி சென்றவனின் பெயர் ஷமீத்.. அவனின் புகைப்படம் மற்றும் அவன் ஜெயிலிருந்த தப்பிய வாகனம் பற்றிய விபரங்கள் இருந்தது..

அவன் தப்பி வந்த போலீஸ் ஜீப்பும் டில்லியிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தள்ளி ஒரு ஹைவேஸில் கண்டு பிடிக்கப்பட, வேறு எந்த வாகனத்தில் தப்பினான் என்ற தகவல் ஏதுமில்லை.. அவன் இலங்கை தப்பி செல்லக்கூடும் என்ற சந்தேகம் ஏனெனில் ஷமீதின் இதர பல சொத்துக்கள் அங்கு தான் உள்ளது.

சுங்கச் சாவடியிலுள்ள சிசிடிவிக்களின் தகவலின் படி , பதினாறு வாகனங்கள் டில்லியிலிருந்து சென்னை வரும் ரூட்களில் அதே நேரம் பயணிக்கின்றன..

ருத்ரன் , கன்ட்ரோல் ரூமிற்கு அழைத்து, அந்த வாகனங்களின் எண்களை கூறி, அதனை ட்ராக் செய்ய கூறினான்.

தன் நண்பன் கிஷோருக்கு அழைத்தவன் உடனே தான் இருக்கும் இடத்திற்கு வருமாறு கூறினான்.

கிஷோர் இரவு உணவுடன், ருத்ரனின் இடத்திற்கு வந்தான்.
ருத்ரன், " டேய் , வாடா.. "
கிஷோர் , " டேய் பர்த் டே அதுமா இங்க என்ன பண்ற ? அம்மா உனக்காக காத்துட்டு இருக்க மாட்டாங்களா ? "

ருத்ரன், " அத விடுடா.. ஒரு முக்கியமான விஷயம், அதற்கு தான் உன்ன வர சொன்னேன்.. இந்தா , இதை படி" என பைலை அவன் புறம் நீட்டினான்.

கிஷோர் அந்த பைலை பார்த்துக்கொண்டிருக்கும் போதே ருத்ரனுக்கு கன்ட்ரோல் ரூமிலிருந்து அழைப்பு வந்தது.

ருத்ரன் , " சொல்லுங்க சார்"

" நீங்க கொடுத்த வெஹிக்கல்ஸ் செக் பண்ணிட்டேன் சார். எட்டு வண்டி கோயம்பேடுக்கு உருளைக்கிழங்கு ஏத்திட்டு வந்தது , நாலு வண்டி பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸோடது , இன்னும் நாலு வண்டி , சென்னை லிமிட் குள்ள க்ராஸ் ஆகலை சார்.. நான் அதோட டீடைல்ஸ் உங்க நம்பருக்கு அனுப்பி வைக்றேன்... அந்த நாலு வண்டில மூன்று லாரி சார்.. ஒரு வண்டி நம்பர் மட்டும் கண்டு பிடிக்க முடியல... நம்பர் தப்போனு தோணுது "

ருத்ரன் , "நான் பார்த் துக்குறேன். ரொம்ப நன்றி சார்"

ருத்ரன் " கிஷோர் , ஒரு வண்டி மட்டும் ட்ராக் பண்ண முடியலையாம்.. மே பி சஸ்பெக்ட் அதுல இருக்கலாம்.. "

"டேய்.. அதெப்படிடா உறுதியா சொல்ல முடியும்.. அவன் வேற ரூட் ல வந்திருந்தா ?? சப்போஸ் ட்ரியின்ல இல்ல ப்ளைட்ல வந்தா ??"

"ப்ளைட்டில் வர சான்ஸே இல்லை, அவன் தப்பின அடுத்த நிமிஷம் செக்யூரிட்டி டைட் பண்ணிட்டாங்க.. மே பி டிரைன் ரூட்ல வர சான்ஸ் இருக்கு.. நான் எக்மோர் அன்ட் சென்ட்ரல் ஸ்டேஷன அலர்ட் பண்றேன் அன்ட் ஏற்கனவே போர்ட் போற எல்லா ரூட்டும் செக்கிங் போயிட்டிருக்கு.. பட் அந்த ஒரு வண்டியை கண்டிப்பா ட்ராக் பண்ணனும்.. நம்பர் ப்ளேட் மாத்தி ஓட்டுற எவனும் யோக்கியனாக இருக்க மாட்டான்.."

கிஷோர் , " சரிடா... வா முதலில் சாப்பிடலாம்.. பின்ன ட்ராக் பண்ணலாம்"

"ப்ப்ச்ச்ச்ச்.. இருடா.. இந்த வண்டி கடைசியா எந்த டோல்கேட்டை க்ராஸ் ஆகிருக்குனு தெரியனும்.. இன்னும் ஒரு மணி நேரத்தில் எனக்கு இன்பர்மேஷன் வேணும் , நான் கமிஷ்னர் கிட்ட பேசிட்டு வரேன்.. "

சிறிது நேரம் கழித்து ருத்ரன் வந்தவன் , கிஷோருடன் இரவு உணவை உண்டான்.
**************************
அந்த கருப்பு நிற ஆடி கார் , மிக வேகமாக ஈசிஅர் ரோட்டில் பறந்து வந்துக்கொண்டிருந்தது.. அதிலிருந்தவன் , தன் மொபைலிலிருந்து நூறாவது முறையாக யாருக்கோ அழைத்து, அது எடுக்கப்படாமல் போக , கடுப்பின் உச்சத்திற்கே சென்றான்.

அவனின் பொறுமையை இன்னும் சோதிக்காமல் அவனின் எண்ணிற்கு அழைப்பு வந்தது ஜேபியிடமிருந்து..
"என்ன ஜேபி ஸார்... நான் எவ்வளவு பதட்டமா இருக்குறேன் , என் போன் கூட அட்டன் பண்ண மாட்றீங்க.. "

"முட்டாள்.. நானே கூப்பிடற வரைக்கும் கால் பண்ணாதேனு சொன்னேனா இல்லையா??.. நீ நீலாங்கரை வந்ததும் அங்க உள்ள ஆர். ஆர் கார் வொர்க்ஷாப்பில் இந்த வண்டிய விட்டுடு, அங்க இருக்கும் ப்ளூ பென்ஸ் ல நீ கிளம்பு.. நான் நீ தங்க போகும் விலாசம் கார் டேஷ்போர்ட் ல இருக்கும் , அங்க போய் ஷங்கர்னு உன் பேர சொல்லு , ரூம் கீ தருவாங்க , நாளை காலையில பத்து மணி வரைக்கும் வெளிய வராதே.. உனக்கு இன்ஸ்ட்ரக்ஷன் வரும்.. புரியுதா ?"

"ஓகே ஸார்"

"நான் இப்ப கட் பண்றேன்.. ப்ளீஸ் கால் பண்ணிடாதே.. அப்புறம் முக்கியமான விஷயம் , இந்த போனை இந்த கார்குள்ளையே விட்டுடு.. தூக்கிட்டு சுத்தி என்னை மாட்டி விட்றாதே.. "

"ஓகே சார்" ஷமீத் போனை கட் செய்தவன் நீலாங்கரைக்கு வேகமாக பறந்தான்.
*********************************
ருத்ரனிற்கு கமிஷ்னரிடமிருந்து வந்த தகவலின் படி , அந்த கார் விழுப்புறம் அருகே உள்ள ஒரு சுங்க சாவடியில் கடைசியாக ரெக்கார்ட் ஆகியிருந்தது.. அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டுபவனின் முக்கால்வாசி முகம் வீடியோவில் பதிய, அவன் ஷமீத் தான் என உறுதியானது...

ஆனால் அந்த வாகானம் செங்கள்பட்டு டோல் கேட்டிற்கு வந்து சேரவில்லை.. இடையில் எங்கோ அவன் தப்பி இருக்கிறான்..

ருத்ரன் கிஷோரிடம் , "மச்சி , அவன் இன்னும் சென்னையை தான்டி போகலை டா.. என் உள் மனசு சொல்லுது , இங்க தான் பக்கத்தில இருக்குற மாதிரி, நீ ஒன்னு பண்ணு , சென்னையிலுள்ள எல்லா ஸ்டார் ஹோட்டலுக்கும் தகவல் சொல்லு, யார் நைட் தங்க வந்தாலும் ஆதார் வெரிபை பண்ண சொல்லு, யாரவது இல்லைனு சொன்னா இல்ல சந்தேக படுற மாதிரி இருந்தா உன் நம்பருக்கு உடனே கால் பண்ண சொல்லு .."

"அது எப்படி டா சொல்ற அவன் ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவானு ?"

" நம்பர் ப்ளேட் தப்புனாலும் அவன் வந்த கார் ஆடிடா... அது மட்டுமில்ல , ஸ்டார் ஹோட்டல்னா போலீஸ் தொல்லை இருக்காதுனு நினைப்பிருக்கும்.. "

"சப்போஸ் அவன் எங்கையும் தங்காமல் வேகமா எஸ்கேப் ஆக ட்ரை பண்ணினா??"

"பாஸிபல்... பட் போர்ட்க்கு போற எல்லா ரோடும் க்ளோஸ் பண்ணியாச்சு.. ரெண்டு நாளைக்கு கமிஷ்னர் பர்மிஷன் இல்லாமல் யாராலையும் நுழைய முடியாது... பார்க்கலாம்.. அவனா இல்லை நாமலானு.. "

கிஷோர் நண்பனின் உத்தரவு படி அனைத்து உயர் தர ஸ்டார் ஹோட்டலுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டிருக்க , ருத்ரனின் போன் ஓயாமல் அடித்துக்கொண்டிருந்தது.. வேறு யார்?? நம்ம நந்து பேபி தான்..

பத்து முறைக்கும் மேல் அடித்துக்கொண்டிருக்க, அவளை கடித்துக்கொதரும் வெறியோடு அதனை அட்டன் செய்தான்.

"அறிவிருக்காடி உனக்கு , நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன் ரொம்ப ஓவரா தான் போற? எத்தனை தடவை சொல்லிருக்கேன் என்னை தொல்ல பண்ணாதேனு?"

"ருத்து... " என்று அவள் அழைத்ததில் சோகம் அப்பட்டமாக இருக்க , அதற்கு மேல் அவனால் கோவத்தை இழுத்துப்பிடிக்க முடியவில்லை.

"அம்மு இங்க பாரு நான் ரொம்ப முக்கியமான வேலையிலிருக்கேன் தயவு செய்து ரெண்டு நாள் என்னை தொல்லை பண்ணாதே " என அவள் பதிலையும் கேட்காது கட் செய்துவிட்டான்..

*************************************

"கீதா பாலஸ்" என்ற பெயர் பலகையை தாங்கிய ஐந்து அடுக்கு நட்சத்திர ஹோட்டல் கம்பீரமாக நின்றது..
ஷங்கர் என்னும் ஷமீத் கம்பீரமாக முகத்தில் மாஸ்க் அணிந்துக்கொண்டு ரிசப்ஷன் ஏரியாவிற்கு சென்றான்

ஷமீத் , " ஹெலோ ஸார்.. தெர் இஸ் அ ரூம் புக்ட் இந் த நேம் ஆப் ஷங்கர் , மே ஐ ஹவ் த ரூம் ப்ளீஸ்"

ரிசப்ஷனிஸ்ட் மோகன் லெட்ஜரை சரி பார்த்து , "ஸ்யூர் சார், வி ஹாவ் அ புக்கிங் இன் யுவர் நேம்.. ப்ளிஸ் வெயிட்" என சாவியை எடுக்கப்போக ,
அப்போது அங்கு இன்னொரு ரிஸப்ஷனிஸ்ட்டாக பணி புரிந்த ப்ரியங்கா "ஸார் மே ஐ ஹவ் யுவர் ஆதார் ஆர் பான் கார்ட்??"

அதற்க்குள் மோகன் , "ப்ரியா என்ன இது , ஸார பார்த்தா அப்படியா இருக்கு , சும்மா இவர் கிட்டலாம் இப்படி கேட்காத.. "

ப்ரியங்கா ," ரூல்ஸ் ஈஸ் அ ரூல்ஸ் மோகன்.. , ஸார் கிவ் மீ யுவர் ப்ரூப் ப்ளீஸ்.. "

ஷமீத் , " சாரி, நான் ஏதும் கொண்டு வரல.. நாட் இன் மை ஹாண்ட்.. "

ப்ரியங்கா, " பரவாயில்லை சார் , ப்ளீஸ் ஷோ மீ எனி ஈ காப்பி , தட் ஷுட் பீ பைன்.. "

ஷமீத் , " அதெல்லாம் காட்ட முடியாது.. நோ யுவர் லிமிட்ஸ்.. நீ யார் கிட்ட பேசிட்டு இருக்க தெரியுமா.. "

ப்ரியங்கா, "ஐ டோன்ட் கேர் ஸார்.. ரூல்ஸ் ஆர் ரூல்ஸ். "

அவன் வாக்குவாதத்தில் ஈடுபட , உடனே கிஷோர் எண்ணிற்கு தகவல் அளித்து விட்டாள் ப்ரியங்கா...

ஷமீத் கோபத்துடன் அங்கிருந்து கிளம்ப, சற்று நேரத்தில் அங்கு வந்த கிஷோரும் ருத்ரனும் அவனை பின் தொடர்ந்தார்கள்..

கிஷோர் , "அவனை அரஸ்ட் பண்ணாம ஏன்டா லவ்வர் மாதிரி பின்னாடியே போற.. ?"

ருத்ரன் , "அவன் இவ்வளவு தூரம் தைரியமா வாரானா நம்ம ஊரில யாரோ சப்போர்ட் பண்றாங்க மச்சி.. அதை நம்ம கண்டு பிடிக்க வேண்டாமா.. ?"

கிஷோர் , "உன் அறிவுல தீயை வைக்க.. போய் தொல.. "

"டேய்.. அது மட்டுமில்ல, அவன் கிட்ட ஆய்தம் ஏதாவது இருந்தா? அதான் நம்ம ஸ்க்வாட வர சொல்லிருக்கேன் , அவுட் ஆப் சிட்டி தான்டுனதும் வேட்டை தான்.. மூடிட்டு வா.. "

-- தொடரும்
 

Sanatamilnovel

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
HI Friends,

Rudhran is back for u all..



ருத்ரனின் காதலி -3


645a295136da53e66fb48d9edfc4cf5a.jpg

அந்த ப்ளூ கலர் பென்ஸ் கார் இலக்கின்றி சென்றுக்கொண்டிருந்தது , அவனுக்கு சென்னை அவ்வளவு பரிட்சயமில்லை, இவ்வளவு நேரம் கூகுள் மேப் உதவி செய்தது, இப்பொழுது எங்கு செல்வது தெரியவில்லை.. ஜேபிக்கு கால் செய்ய முடியாததால் மெஸேஜ் அனுப்பி வைத்தான்.

அதே நேரம் ஜேபி, தான் நினைத்தது நடக்காமல் போக கோபத்தின் உச்சியில் இருந்தான். அவன் ஷமீதை வைத்து சில காரியங்கள் முடிக்க நினைத்திருந்தான்.. இப்பொழுது தான் உதவி புரிய நேர்ந்தால் மாட்டிக்கொள்வோம் என்ற நினைத்து அமைதிகாத்தான்.

ருத்ரன் பின் தொடர்ந்தாலும் சிட்டி லிமிட் தாண்டும் வரை எந்த ஆக்ஷனிலும் ஈடுபடவில்லை... கிஷோருக்கு அப்போது ராகுலிடமிருந்து அழைப்பு வந்தது.

ராகுல் , கிஷோர்,ருத்ரன் , சந்தோஷ் , ஆர்த்தி ஐவரும் சிறு வயதிலிருந்து ஒன்றாய் வளர்ந்த நண்பர்கள்.. கிஷோர்,ருத்ரன் தவிர மற்றவர்கள் வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்தாலும் , ருத்ரனுக்கு தேவைப்படும் நேரங்களில் உதவ வருவார்கள்.

ராகுலின் அழைப்பை ஏற்ற கிஷோர் "சொல்லு ராகுல்"

"டேய் எவ்ளோ நேரம் டா??"

"ருத்ரா ஏதும் சொல்லலை மச்சி.. நான் கேட்டுட்டு கால் பண்றேன்"
என்று கால் கட் செய்தான்.

"டேய் என்ன ப்ளான்??"

ருத்ரன் , "இன்னும் கொஞ்சம் தூரம் போனால் ட்ராபிக் கம்மி ஆகிடும் சமயம் பார்த்து, ராகுல அந்த காரை வழி மறிக்க வை.. அவன் பயந்திடுவான்.. சப்போஸ் அவன் கையில் கன் இருந்தா ஹீ வில் ட்ரை டு அட்டாக்.. நான் பின்னிருந்து நான் பார்த்துப்பேன்.. இல் லாட்டி அவன் காரிலிருந்து இறங்க மாட்டான்.. அவர் ஜாப் ஈஸ் ஈஸி.. "
கிஷோர், "சரி மச்சி.. "

ருத்ரனின் ஆலோசனைப்படி அவனை மடக்கி பிடித்தார்கள்.. அவனை கைது செய்து கமிஷ்னரிடம் ஒப்படைத்த சில மணி நேரங்களிலேயே டெல்லி போலீஸார் வந்து ஷமீதினை கூட்டிச்சென்று திகார் ஜெயிலில் அடைத்தனர்..

கிஷோருக்கும் ருத்ரனுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.. என்ன தான் ரகசிய ஆப்ரேஷனாக கருதப்பட்டாலும், விஷயம் செய்தியாளர்கள் செவிக்கு சென்றடய , அடுத்த நாளே செய்திதாள்களிலும் டீவியிலும் பர பரப்பாக பேசப்பற்றது..

இதனை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்த நந்துவிற்கு ருத்துவை பார்க்கும் ஆர்வம் அதிகமானது.. ஆனாலும் வேலை என ஒன்றிருக்கிறதே..

திரையை வெறித்துக்கொண்டிருந்த நந்துவிடம் வந்தாள் அவள் உயிர் தோழி தேனு..

தேனு," ஏய்..நந்து, இங்க உட்கார்ந்துகிட்டிருக்க, அண்ணனை பார்க்க பறந்திருப்பேனு நினைச்சேன்.. "

நந்து , "அடிப்போடீ.. வேலை நிறைய இருக்கே.. இந்த ரிப்போர்ட் நாளைக்கே வேனுமாம்.. நான் இப்போ முடிச்சா தான் மார்நிங் நம்ம லதா மேடம் வெரிபை பண்ணி அனுப்ப முடியும்.. "

தேனு , "அவ்வளோ தான் விஷயமா ? நீ முடிச்சதை எனக்கு அனுப்பு நான் பார்த்துக்குறேன்... மீதியை நான் கம்ப்ளீட் பண் ணி உனக்கு அனுப்புறேன்.. நீ நைட் மெயில் பார்த் திடு.. சரி தானே..?""

நந்து , "வாவ்.. தேங்க்ஸ் டீ செல்லக்குட்டி, பாய்... " பையை தூக்கிக்கொண்டு தன் ஸ்கூட்டரை நோக்கிப் பறந்தாள்..

அவளது மகிழ்ச்சியை கண்ட தேனுவிற்கு கண் கலங்கியது.. என்ன இருந்தாலும் உயிர் தோழி அல்லவா? காலேஜிலிருந்தே தொடர்ந்த நட்பினால், நந்துவைப்பற்றி அனைத்தும் தெரிந்தவள்.. எப்பாடுப்பட்டாவது அவளது காதல் கைக்கூட வேண்டுமென்று வேண்டிக்கொண்டாள்..

நந்து நேரே சென்றது ருத்ரனின் வீட்டிற்கு தான்.. அவளை வரவேற்த்த ஆதிரை, நந்துவின் கண்கள் அங்குமிங்கும் நோட்டமிடுவதை பார்த்ததும்

"நந்துமா உன் ஆள் வீட்டில் இல்லை.. அவன் வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் ஆகுது.. நானும் உன்ன மாதிரி டிவில தான் அவன் போட்டோவை பார்த்திட்டு இருக்கேன்.. "

"அப்படியா ?? சரி பரவாயில்லை அத்தை.. நான் அவர் ஆபீஸ் வழியா தானே வீட்டுக்கு போனும் அப்போ பார்த்திட்டு போறேன்.. "

ஆதிரை, "அடியேய், வந்த உடனே கிளம்பனுமா ?? நில்லு காபி எடுத்துட்டு வரேன்.. "

என்ன தான் ருத்ரன் இவளை வெறுத்தாலும் (நடித்தாலும்) உண்மையன நேசம் இருவருக்குமே புரிந்து தான் இருந்தது.. ஆதிரையும் நந்துவும் எப்பொழுதும் போல் பாசமாகவே இருந்தனர்.

காபியை அவளிடம் நீட்டிய ஆதிரை, "நந்துமா.. நீ சரியா சாப்பிடறதில்லையா ? வெயிட் கம்மியான மாதிரி தெரியுது.. ஆளே டல்லா இருக்க ?"

நந்து, " அப்படியெல்லாம் இல்ல அத்தை.. கொஞ்சம் அலைச்சல் அதான்.. "

ஆதிரை, " ம்ம்ம்.. சரி உடம்பை பார்த்துக்க, ருத்ரனை நினைத்து வருத்தபடாதே.. சரி தானே ?? நம்மை மீறி அவன் என்ன பண்ணிட முடியும் ??

நந்து , "ஆமாம் அத்த.. சரி நான் கிளம்புறேன்.. சண்டே வீட்டுக்கு வரேன்.. மாமாவையும் பார்க்கனும்.. "

ஆதிரை , " சரிடா எப்பவும் போல் லஞ்சுக்கு வந்திடு.. லேட் பண்ணாதே சரியா ? இப்ப பார்த்து வண்டியை ஓட்டனும்.. வேகமாக போகாதே.. "

அவளை வழி அனுப்பிய ஆதிரைக்கு கண்கள் கலங்கியது... ருத்ரன் மேல் ஆயசமாக இருந்தது.. ஒரு பெரு மூச்சுடன் உள்ளே சென்றார் அவர்..

**********************************

ருத்ரனின் அலுவலகமிருக்கும் சாலையில் குறுக்கும் நெடுக்குமாக பத்தாவது முறையாக சென்று விட்டாள் நந்து, ஆனாலும் நம் நாயகனின் தரிசனம் தான் கிட்டவில்லை.. இதனை ஜன்னல் மறைவில் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு கோபம் தலைக்கேறியது.. எவ்வளவு சொன்னாலும் திருந்துவது கிடையாது..
உடனே தனக்கு கீழ் பணி புரியும் ராமையாவை அழைத்து , "அங்க ஸ்கூட்டில ஒரு பொன்னு இந்த ரோட்ல சுத்திட்டு இருக்கு என்னனு கேளுங்க.. "

"ஓகே ஸார்"

அவர் நந்துவின் வண்டியை நிறுத்தியவர் , "ஏம்மா இந்த பக்கமே சுத்திட்டு இருக்க , என்ன வேணும்?? "

தன் ஆக்டிஙை ஆரம்பித்தாள் நம்ம நந்து பேபி.. "ஸார் என் செயின் தொலஞ்சு போச்சு ஸார் அதான் தேடிட்டு இருந்தேன்.. எங்க வீட்டுக்கு அதில்லாமல் போனால் அப்பா அடி பிண்ணிடுவார், அதான் தேடுறேன்.. "

"ஏம்மா, செயின இங்க தான் தொலச்சேனு எப்படி தெரியும் இந்த ரோட்லயே அலையுற ??"

ஐய்யயோ மாட்டிக்கிட்டோமா என்று யோசித்தவாரே , "ஸார் அந்த டர்னிங்ல திரும்பும் போது என் செயின் இருந்த மாதிரி நியாபகமிருக்கு .. "

அவளை நம்பாத பார்வையை பார்த்தவர் , "இங்க பாருமா, இது கமிஷ்னர் ஆபீஸ் இருக்குற இடம் , இப்படி அங்கும் இங்கும் அலைய கூடாது, மரியாதையாய் கிளம்பு இங்கிருந்து... "

அவரை முனகிக்கொண்டே வண்டியயை ஸ்டார்ட் செய்ய...
ராமைய்யா , "என்ன மா முனகுற ?"
நந்து , "ம்ம்ம்ம்ம்... போயா லூஸு.. " என்று ஸ்கூட்டியில் பறந்தாள்..

"ஏய் யாரை பார்த்து லூஸுங்குற, அடுத்த முறை உன்ன இங்க பார்த்தேன் அவ்வளவு தான்.. "

அந்த கடுப்புடன் ருத்ரனிடம் செனறவர் , "சரியான திமிரு புடிச்ச பொண்ணா இருக்கும் போல ஸார்.. என்ன லூஸுனு சொல்லிட்டு போகுது... "

ருத்ரன், "ஓகே ராமண்ணே நீங்க போங்க... "

பிறகு நொடிக்கொருமுறை அவள் வருகிறாளா இல்லையா என பார்த்துக்கொண்டிருந்தவன் தன்னையே அலுத்துக்கொண்டான்.. "டேய் ருத்ரா.. என்ன தான் வேணும் உனக்கு நீயே துரத்துற , நீயே அவ வரலையேனு ஏங்குற??? "
அதே நேரம் கிஷோர் அங்கு வர , "டேய் இன்னும் நீ வீட்டுக்கு போகலயா.. அதான் கேஸ் முடிஞ்சதுல, அப்புறம் என்ன???"

ருத்ரன் , "கேஸ் இன்னும் முடியலை டா.. "

கிஷோர் , "என்னடா சொல்ற?? ""

ருத்ரன் , " அந்த கார் ரெண்டும் நம்ம கண்ட்ரோல தானே இருக்கு ??"

கிஷோர் , "ஆமாம் டா.. அதுக்கென்ன ??"

ருத்ரன் , "அது யாரோடதுன்னு கண்டு பிடிக்கனும்.. அது கொஞ்சம் ரகசியமா பண்ணனும்.. "

கிஷோர் , "அந்த டேஷெல்லாம் அப்புறம் பண்ணலாம் , நீ முதலில் வீட்டுக்கு வா.. " என கையோடு இழுத்துச்சென்றான் கிஷோர்..

கிஷோரின் பைக்கில் ஏறிச்சென்றவன் , கொஞ்ச தூரத்தில் தன் ஸ்கூட்டியில் தலை கவிழ்ந்து படுத்திருக்கும் நந்துவை பார்த்துவிட்டான்..
"பிடிவாதக்காரி.. சொல் பேச்சே கேட்பதில்லை.. இப்ப இவன் வேற இருக்கான் " என யோசித்தவன் நேரத்தை பார்த்தான் மணி , இரவு எட்டு.. உடனே யோசித்தவன் கிஷோரிடம் , "மச்சி வண்டியை நிறுத்து.. "

"ஏன்டா... "

"முக்கியமான பைல வச்சிட்டு வந்துட்டேன் டா... அது மட்டுமில்ல , என் வண்டி ஆபீஸ் ல இருக்கு அதை நாளைக்கு சர்வீஸ் விடனும் நான் மறதுட்டேன், நீ கிளம்பு... "

"சரிடா நான் ஆபீஸ் ல வந்து விடறேன்.. "

"இல்ல நீ யூ டர்ன் எல்லாம் போட வேண்டாம், நான் பார்த்துக்குறேன் நீ போ..."

"சரி மச்சான், சீக்கிரம் வீட்டுக்கு போ.. "
கிஷோரின் வண்டி மறையும் வரை பார்த்திருந்தவன் வேகமாக நந்துவிடம் சென்றான்..

அவளை அருகே பார்த்தவனின் மனம் சுக்கு நூறாகியது.. கலையிழந்த கண்கள், சரியாக உண்ணாமல் இளைத்த தேகம், பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்.. இவளை கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை எனக்கூறினால் எவரும் நம்ப மாட்டார்கள்.

"அம்மு" என காதலோடு அழைத்தான்
அந்த குறலை கேட்டும் அவள் எழவில்லை..

மறுபடியும் , "அம்மு, நந்து.. ஏய் அம்மு.. " அழைக்க அவளிடம் அசைவில்லை..

வேகமாக அவள் முகத்தை திருப்ப, அவன் கைகளிலேயே மயங்கி விழுந்தாள் நந்து.. பயத்தின் உச்சிக்கே சென்றவன், வேகமாக ஆம்புலன்ஸ் வர வைத்தவன் , அதில் அவளை ஏற்றிக்கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்றான்..

செல்லும் வழியில் தன் தாய்க்கு அழைத் தவன் , சுருக்கமாக விஷயத்தைக் கூறி , உடனே ஹாஸ்பிட்டலுக்கு வர சொன்னான்.. தான் யூனிபார்மில் இருப்பதுக்க்கூட நினைவில் பதியாமல், கண் கலங்கி நின்றான் அந்த காவல் காரன்..

-- தொடரும்


Please Share your comments here ,


Thanks,
Sathya Ananth
 

Sanatamilnovel

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Friends,

Here is the next episode of Rudran..

ருத்ரன் -4

645a295136da53e66fb48d9edfc4cf5a.jpg


ஆதிரை வேகமாக அந்த மருத்துவமனையில் நுழைந்தார். ருத்ரனை தேடி வந்தவர்,
"டேய் ருத்ரா , இந்தா முதலில் இந்த ஷர்ட்ட மாத்திட்டு வா, யூனிபார்ம்ல இருந்தால் தேவையில்லாத பிரச்சனை தான் வரும்.. நான் வெயிட் பண்றேன் இங்க.. "

ருத்ரன் , "சரி மா.. நந்துக்கு ட்ரீட்மன்ட் போயிட்டு இருக்கு, நான் மாத்திட்டு வரேன், இங்கேயே இருங்க"

டாக்டர் ரகு சிகிச்சை அளித்துவிட்டு வெளியே வருவதற்க்கும் , ருத்ரன் உடை மாற்றி விட்டு வருவதற்க்கும் சரியாக இருந்தது..

அவரிடம் விரைந்த ருத்ரன் , "டாக்டர் அம்முவிற்கு ஐ மீன் நந்திதா எப்படி என்ன ஆச்சு ?"

"நத்திங் டு வரி , ஒழுங்க சாப்பிடறதில்ல போல , பீபி லோ ஆகி மயங்கிட்டாங்க.. அன்ட் ஆள் ரொம்ப வீக்காயிருக்காங்க ட்ரிப்ஸ் முடிஞ்சதும் கூட்டிட்டுப் போங்க , ஹெல்தியான புட் கொடுங்க , ஷீ வில் பீ ஆல்ரைட்... மிஸ்டர் அப்புறம் உங்களை எங்கேயோ பார்த் த மாதிரி இருக்கே.. "

"டாக்டர் ஐ அம் ருத்ரன் ஏசீபி.. தேங்க்யூ"

"கிளம்புறத்துக்கு முன்ன என் கேபினில் வந்து பாருங்க ஸார்.. ப்ளீஸ், கொஞ்சம் பர்ஸ்னல்.. "

"ஸ்யூர் ஸார்.. "

டாக்டர் சென்றதும் ருத்ரன் அருகில் வந்த ஆதிரை பட்டென்று ஒரு அறை விட்டிருந்தார்..

ருத்ரன், "அம்மா ஆ... "

ஆதிரை , "உன்ன லவ் பண்ணினத தவிர என்ன தப்புடா பண்ணினா?? அவளை இந்த அளவிற்கு படுத்தி வச்சிருக்க ?? உன்னை பார்க்க அவ்வளவு ஆசையா வீட்டுக்கு வந்தா.. உங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ எனக்கு தெரியாது , ஆனால் இனி அவ உன் பொறுப்பு.. அவளுக்கு ஏதாவது ஆச்சு, உன் அம்மா உனக்குக்கிடையாது.. "

ருத்ரன்,"அம்மா என்னம்மா இப்டி சொல்ற... "

ஆதிரை , "நான் சொன்னா சொன்னது தான்.. நான் போய் அவளை பார்க்கிறேன்"

நந்துவிடம் விரைந்த ஆதிரை, "இப்ப எப்படி டா இருக்க, உன்ன சாப்பிட்டு தானே கிளம்ப சொன்னேன்.. அந்த தடி மாட்டிற்காக உன் உடம்பை கெடுத்துப்பியா ? "

நந்து சோர்வாக காணப்பட்டாலும் , "அத்தை நீங்க எப்படி இங்க வந்தீங்க..ஆக்சுவலா நான் வண்டி ஓட்டும்போது மயக்கமா வந்தது, வண்டியை ஓரமா நிறுத்துனேன் அதுக்கப்புறம் நியாபகமில்ல.. "

ஆதிரை , " அடிப்பாவி , வண்டில போகும்போதா.. உனக்கு ஏதாவதாச்சுனா நான் என்னடி பண்ணுவேன்.. இதுலாம் வேலைக்காகாது நான் நாளைக்கே உங்க அப்பா கிட்ட பேசுறேன்.. "

நந்து, "ஐயோ அத்தை இப்ப வேண்டாம் ப்ளீஸ் கொஞ்ச நாள் டைம் கொடுங்க"

ஆதிரை , "ரெண்டு பேர் மனசிலயும் என்ன தான் இருக்கோ.. சரி இப்ப எப்படி இருக்க ? இரு அவனை சாப்பாடு வாங்கிட்டு வர சொல்றேன்.. "

ஆதிரை சொன்ன நேரம் ருத்ரன் சாப்பாடு பார்ஸலுடன் உள்ளே நுழைந்தான்..

நந்துவை முறைத்துக்கொண்டே ஆதிரையிடம் உணவை அளித்தவன் , "அவ பிரண்ட் வீட்டுக்கு வந்துட்டு லேட்டா ஆனதா அன்பரசியை விட்டு அவ அப்பா கிட்ட சொல்லிட்டேன், சாப்பிட வைங்க நான் டாக்டரை பார்த்திட்டு வரேன் "

இதற்கொன்னும் குறைச்சலில்ல என்று ஆதிரை முனகியது ருத்ரனிற்கு நன்றாகவே கேட்டது..

அவனையே பார்த்துக்கொண்டிருந்த நந்துவிற்கு இப்பொழுது கூட நம்மிடம் பேச தோன்றவில்லயே என்ற ஏக்கம் அழுகையாக மாறியது..

அவளருகே வந்த ஆதிரை , "அவன் கிடக்குறான்மா பிஸ்கோத்து பையன் நீ சாப்பிடு " என இட்லியை ஊட்டத் துவங்கினார்.

ஆதிரைக்கு இருவரின் வாழ்க்கையும் கேள்வி குறியாகி நிற்பதைக் கண்டவர் , இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி ஒரு தவறான முடிவை எடுத்துக்கொண்டார்.

******************************
அங்கு டாக்டர் அறையில் முகத்தில் கலவரத்துடன் அமர்ந்திருந்தான் ருத்ரன்.

டாக்டர் ரகு , "மிஸ்.நந்திதா உங்களுக்கு சொந்தமா ஸார்? ஏன் கேட்கிறேனா நான் சொல்ல போறது கொஞ்சம் கான்பிடன்ஷியல்.. "

ருத்ரன், "சொந்தமாக போறவங்க டாக்டர்.. எங்கிட்ட சொல்லலாம்.. அப்புறம் , ஸார் எல்லாம் வேண்டாம், ப்ளீஸ் கால் மீ ருத்ரன்"

"ஓகே ருத்ரன், நந்திதாவை செக் பண்ணும் போது ஏதோ
சாப்பிடாமல் இருந்ததால வந்த மயக்கம்னு நினைச்சோம் பட் அவங்க வெயிட்ட பார்த்தா ரொம்ப அன்டர் வெயிட்ல இருந்தாங்க, அது மட்டுமில்ல, நிறைய டிஸ்டர்ப்டா இருந்தாங்க.. ஷீ இஸ் மென்டலி நாட் வெல் ஆஸ் வெல்.. "

இதை கேட்ட ருத்ரனின் மனம் சுக்கு நூறாய் உடைந்தது, இவை அனைற்றிர்க்கும் காரணம் அவனல்லவா ??

டாக்டர் ரகு தொடர்ந்தார், " அன்ட் இது அவசியமில்லாதது கூட அவங்களோட ப்ளட் ஸாம்பிள் எடுத்திருக்கோம் , ஐ டவுட் தேர் இஸ் ஸம் அதர் இஸ்யூ அஸ் வெல்.. நீங்க கொஞ்சம் நாளை மார்நிங் ரிப்போர்ட் வாங்கிட்டு என்னை வந்து பாருங்க.. அன்ட் அவங்களை நல்லா பார்த்துக்கோங்க, சாப்பிட வைங்க.. "

ருத்ரன், "கண்டிப்பா டாக்டர்.. தேங்க்யூ ஸோ மச்"

ருத்ரன் வெளியே வரும் போது ஒரு நிமிடம் தயங்கி நின்றவன் பிறகு சட்டென்று நந்துவிடம் சென்றுவிட்டான்..

ஆதிரையிடம் , " அம்மா, நான் பில் செட்டில் பண்ணிட்டு வந்துடுறேன்... கிளம்பலாம் நேரம் ஆச்சு.. "

ஆதிரை "சரிடா, நான் அப்பாவை வர சொல்லிருக்கேன் அவர் கூட வீட்டுக்கு போறேன், நம்ம காரை எடுத்துட்டு வந்தேன், அதில் நந்துவை வீட்டில் ட்ராப் பண்ணிட்டு வந்திடு.. "

ருத்ரன் "சரி மா.. "

நந்துவின் மைன்ட் வாய்ஸ் என்ன பட்டுனு ஒத்துகிட்டான், ஒரு வேலை வீட்டுக்கு போற வரைக்கு திட்டலாம்னு ஐடியா பண்றானோ ? எப்படி இருந்தாலும் நமக்கு ஓகே.. கொஞ்ச நேரம் சைட் அடிக்கலாம் என்ற குஷியுடன் கிளம்பினாள் நந்து..

************************************************************
அந்த காரினுள் பலத்த அமைதி நிலவியது.. நந்து ருத்ரனைப் பார்த்துக்கொண்டே வந்தாள்... இப்பக்கூட நம்மிடம் பேச மாட்டானா என்ற ஏக்கம் அவளை வாட்டியது என்னவோ உண்மை..

தொண்டையை செறுமிய ருத்ரன், " நதியை பற்றி ஏதாவது தெரிந்ததா?? விசாரிச்சையா.. ?"

இவ்வளவு நேரம் அமைதியாக வந்த நந்துவிற்கு நதியை பற்றி பேசியதும் கோவம் தலைக்கேறியது.. "ஓஹோ அவள பத்தி கேட்க தான் என்ன வீட்டில் விட ஒத்துக்கிட்டீங்களோ, நான் கூட என் மேல பாசம் வந்திடுச்சோனு நினைச்சேன்... " அவள் சொல் லி முடிக்கும் தருவாயில் ஒரு துளி நீர் அவள் கண்ணில் கசிந்தது..

இதற்கெல்லாம் இறக்கப்பட்டால் அவள் ருத்ரன் அல்லவே , "அப்புறமா அழுகலாம் நான் கேட்ட கேள்விக்கு பதில்.. "

நந்து நன்றாக முறைத்துக்கொண்டே , " எனக்கு தெரியாது.. அவ எங்க போனானே தெரியல, ஏன் நீங்க தான் பெரிய போலீஸ் ஆச்சே நீங்க கண்டு பிடிக்க வேண்டி தானே.. "

அவனும் மூன்று வருடங்களாக தேடிக்கொண்டு தான் இருக்கிறான்.. ம்ம் யோசனையுடன் மிரரைப்பார்க்க அதில் அந்த சிவப்பு சட்டைக்காரன் வண்டியில் வந்துக்கொண்டிருந்தான்.. ருத்ரனின் மனம் யோசனைக்குள்ளானது, இவனை தானே ஹாஸ்பிட்டலில் பார்த்தோம்.... காரை ஒரு ஓரமாக பார்க் செய்ததும் நந்து பயந்து விட்டாள், பாதி வழியில் இறக்கி விட போறானோ என்று.. ஆனால் ருத்ரனோ,

"அம்மு ஒரு சிவப்பு சட்டைக்காரன் இப்ப க்ராஸ் பண்ணுவான், அந்த ஆள எங்கையாவது பார்த்திருக்கியானு சொல்லு.. "

நந்து "ப்ச்ச்ச்.. ஹெல்மட் போட்டு இருக்கான், வேகமா போயிட்டான், எப்படி தெரியும் .. எனக்கே உடம்பு சரியில்ல.. என்ன பேபி இது ஒரே கேள்வியா கேக்குற??"

உடனே தன் பார்வையை மாற்றிக்கொண்டவன் , "இங்க பார் அம்மு, உன்னையும் என்னையும் சுத்தி பல குழப்பங்கள் , பிரச்சனைகள் நிறைய இருக்கு... அது எல்லாம் சரியாகனும்னா நதியாவை நாம கண்டு பிடிக்கனும் ஏனா அவ விஷயத்துல நீயும் சம்மந்த பட்டிருக்க.. இதை எதுவும் ஸால்வ் பண்ணாமல் உன் கூட ரொமன்ஸ் பண்ணிட்டு இருக்க முடியாது.. இதுல உன் உடம்பை ஒழுங்கா பார்த்துக்காமல் எனக்கு இந்த எக்ஸ்ட்ரா டென்ஷன கொடுக்காத.. உன் கூட வாழவும் முடியாம உன்ன விடவும் முடியாம செத்துட்டு இருக்கேன் நான்.. மேலும் என்ன கஷ்டப்படுத்தாத.. ப்ளீஸ் சாப்பிடு அப்புறம் என்ன சுத்தி சுத்தி வரத நிப்பாட்டு , போலீஸ்காரன் எனக்கு ஆயிரம் எதிரி இருப்பான், தேவையில்லாத பிரச்சனையில் மாட்டாத.. " எனற நீண்ட லக்சரை முடிக்க நம்ம நந்துவோ "ம்ம்ம்.. சரி" என்ற இரு வார்த்தையில் முடித்துக்கொண்டாள்.

பிறகு அவள் வீட்டிற்கருகில் நந்துவை டிராப் செய்தவன் , "நந்து உன் வண்டி அபிஸில் இருக்கும் நாளைக்கு எடுத்துக்கோ வீட்டில் ஏதாவது சொல்லி சமாளி.. குட் நைட் அம்மு.. ரெஸ்ட் எடு.. பை"

"குட் நைட் பேபி.. "

நந்து வீட்டினுள் நுழைந்ததும் அதனை மறைந்திருந்த சிவப்பு சட்டைகாரன் போட்டோ எடுத்து விட்டு திரும்ப, நம் ருத்ரனிடம் வசமாக சிக்கினான்..

யார் இவன் ???

**************************************************************

Please share ur comments here,



Thanks,
Sathya Ananth
 
Status
Not open for further replies.
Top