All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சத்யா வாணியின் “என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன்” - கதை திரி

Status
Not open for further replies.

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு பெண்ணின் தாயக ஒரு மனம் அனைத்தையும் மன்னித்து மறந்து விடும்படி சொல்ல, பாதிக்க பட்ட பெண்ணுக்காக மற்றும் இன்றி பாதிக்கப்பட்ட பெண்ணாக சுரேனை தண்டிக்க சொல்லி பெண் மனம் கட்டளையிட்டது...


திருமணத்திற்கு பிறகாவது சுரேன் திருந்தி மனைவி மீதும் மகள் மீதும் அன்பு செலுத்தி இருந்தால் ஒருவேளை பெண்ணவள் மனது பழிவாங்கும் எண்ணத்தை கைவிட்டு இருக்கும், அவன் தனது பொறுப்பில் இருந்து தப்பித்து ஓடுவதிலேயே குறியாக இருக்க பெண்ணவள் மனது பழி வாங்கும் படலம் செயல்பட ஆரம்பித்தது...


சுரேனை பொறுத்த வரையில் அவன் ஒரு முறை தவறி விட்டான் அவ்வுளவே , அதற்காக அவன் வருந்தினான் என்பதற்கு இல்லை, அதன் பிறகு வாழக்கையை அனுபவித்து வாழ்கிறான், அப்படி அவன் அனுபவித்து வாழும் போது ஏற்பட்ட சறுக்கல் தான் அவனது திருமணம்.. அந்த சறுக்கலில் இருந்து மீண்டுவிட துடிக்கும் அவன் எப்படி மனைவியாக ஷாக்ஷியையும் மகளாக தேவ சேனாவைவையும் ஏற்றுக்கொள்ளுவான்...

இந்த உறவு சிக்கலில் இருந்து எப்படி தப்பித்து கொள்ளுவது என்று அவன் பலவாறாக யோசித்தாலும் எல்லா இடத்திலும் தடையாக அவன் தந்தை இருக்கிறார், அந்த தடையை அவனால் தகர்க்க முடியாது ஆனால் அதை அவனால் தாண்ட முடியும், அதற்கான திட்டத்தை அவன் எப்போதோ வகுத்துவிட்டான்...


தந்தையின் கண்காணிப்பில் மண்ணை துவ இரண்டு முறை வேலை சம்பந்தமாக வெளிநாடு சென்றவன்... தேவசேனாவின் முதல் பிறந்தநாளுக்கு வந்து விட்டு மூன்றாம் முறை செல்ல முயற்சித்த போது இது தான் கடைசி என்று அவன் சொல்ல கடந்த இருபது மாதங்களாக அவனை கண்காணித்து கொண்டு இருக்கும் தைரியத்தில் விட்டு பிடிக்கலாம் என்று பரந்தாமன் நினைக்க, அவர் கண்ணுக்கு சிக்காமல் வேறுஒரு நாட்டுக்கு பறந்து விட்டான் சுரேன்...


காலம் கடந்து தனது தவறை உணர்ந்த பரந்தாமன் மருமகளிடம் மன்னிப்பை வேண்ட அவள் வெறுமையான ஒரு புன்னையோடு சென்று விட்டாள்...

முதல் முறையாக மருமகளின் இந்த அமைதி பரந்தாமனுக்கு உமாவுக்கு பயத்தை கொடுத்தது, இது வரை மகனோடு சேர்ந்து வாழ மருமகள் ஒரு அடி கூட எடுத்துவைக்கவில்லை என்பதை காலம் தாழ்ந்து உணர்ந்தனர்...

மகன் ஒதுக்க நினைக்கிறான், மருமகள் ஒதுங்கியே இருக்கிறாள் , பேத்தி ஒட்டாமல் வளர்கிறாள்... மொத்தத்தில் மூவரின் வாழ்க்கையும் ஒன்றாமல்.. ஒப்புப்புக்கு உறவாக சொந்தத்திலும் சுற்றத்திலும் அறியப்படுகிறது என்பதை வலியோடு உணர்ந்தனர்....


தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்க திட்டமிட்டு அதை செயல்படுத்திய சுரேன் அடுத்து எட்டு ஆண்டுகள் கடந்த பின்னே தாய் நாடு திரும்பினான், தனக்கு பிடிக்காத திருமணத்தை செல்லாத திருமணமாக்கிவிட்டு....


தாய்நாடு திரும்பிய சுரேனை பரந்தாமன் உமா இருவரும் கண்டிக்க, அதை எல்லாம் தூசு போல தட்டிவிட்டு, மனைவி மகள் இருவரையும் ஏற்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தான்..


மருகமைகளுக்காகவும் , பேத்திக்காகவும் பெரியவர்கள் இருவரும் போராட, தனது உறவுக்காகவும் உரிமைக்காகவும் போராட வேண்டிய இருவரும் ஒதுங்கியே இருந்தனர்...

பரந்தாமன் தனது பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்க '' உங்களுக்கு ஒன்பது வயசுல ஒரு பேத்தி இருக்கா இல்ல...'' வார்த்தையில் குறிப்பிட்டு சொல்லும் போதே உறவில் ஒதுக்கத்தை காட்ட, மகனை தண்டிக்கவும் கண்டிக்கவும் முடியாமல் பெரியவர் திண்டாட , அது சுரேனுக்கு கொண்டாட்டமாக இருந்தது...

திருமணத்திற்கு பிறகு பத்து ஆண்டுகள் கடந்து மனைவியிடம் '' உனக்கும் எனக்கும் இடையில் இருந்த சட்ட ரீதியான கட்டுப்பாடு, என்னோட இந்த எட்டு வருட பிரிவில் தகர்ந்து விட்டது..'' எள்ளலாக சொன்னவன்...

''இனி யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது...'' அகம்பாவமாக சொல்ல


''கட்டு படுத்த முடியாது ஆனால், கம்பி என்ன வைக்க முடியும்...'' திடுமென ஒலித்த குரல் வந்த திசையை நோக்கி அனைவரும் தங்களின் பார்வையை திருப்ப ஒரு இளவரசியின் தோரணையோடு வந்தாள் ஒன்பது வயது தேவ சேனா...


பேத்தி சொன்னதை கேட்டு பெரியவர்கள் இருவரும் அதிர்ந்து நிற்க, வளர்ந்து நிற்கும் மகளின் தோற்றம் சுரேன் தலையில் இடியை மட்டும் இறக்கவில்லை, அவள் சொன்ன வாக்கியம் அவன் காலுக்கு அடியில் இருந்த நிலத்தை இழுப்பது போல இருந்தது...


உச்ச கட்ட அதிர்ச்சியில் மனைவியின் முகத்தை சுரேன் பார்க்க ''பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி நீ பண்ண அந்த பாதகத்தின் சாட்சி நான்...'' சொன்னவளின் முகத்தில் இருந்த தீவிரம் உனக்கு தண்டனை வாங்கி கொடுக்காமல் ஓயமாட்டேன் என்று எச்சரிக்கை செய்ய...

அதை கேட்ட அனைவரும் சிலையாக நின்றனர்...





ஆக்கும் சக்தி அழிக்கும் சக்தியாக மாறுவதும்
விளக்கெரிக்கும் நெருப்பு வீட்டை எரிப்பதும்
ஆற்றல்களின் பிழை அல்ல
அடக்கி ஆட்சி செய்ய விரும்பும் மானிடரின் பிழை



மரித்து உயிர்க்கும்....





உங்களின் கருத்துகளை இங்கே பதிவிடவும்

சத்யா வாணியின் “என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன்” - கருத்து திரி


நன்றி

சத்யா
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வலி - 4

''என்னங்க நாம இந்த ஊரை விட்டு வேற எங்காவது போய்டலாமா...'' போய்டலாம் என்று சொல்லுங்களேன்
என்ற எதிர்பார்ப்பு கண்களில் பரிதவிப்பை வெளிப்படுத்த கேட்ட மனைவியிடம் தீபேஷ் பதில் சொல்லும் முன்பு,


''செய்ய வேண்டியதை செய்து முடிச்சிட்டு போலாம் அம்மா...'' என்று மஹா பதில் அளிக்கவும்...மகளின் கண்களில் இருக்கும் தீவிரம் ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போவதை உணர்த்த பெற்றவர்களுக்கு அது பயத்தையும் கவலையையும் உண்டாக்கியது...


''இன்னும் என்ன செய்ய வேண்டி இருக்கு மஹா...'' உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டு தீபேஷ் கேட்க,



''இந்த ஊரில் இருந்தா பழைய வேண்டாத நினைவுகள் நம்மை துரத்தும் என்பதால் தானே அம்மா இந்த ஊரை விட்டு போகணும்னு சொல்லுறாங்க...'' என்றவள் சிறு இடைவெளி விட்டு

''நிச்சயம் போகலாம் பலர் நம்மை மறக்கமுடியாதபடி செய்து விட்டு போகலாம்...'' தீர்க்கமாக சொல்ல


''என்னமா செய்ய போற...'' சௌந்தர்யா கவலையோடு கேட்க


''நீதி மன்றத்தில் சரணடைய போறேன்...'' மின்னாமல் மிழுங்காமல் இருவரின் தலையிலும் இடியை இறக்கினாள் மஹா..


மகள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த சௌந்தர்யா கண்ணீர் விட்டு கதறி அழ,


''எதுக்காக மஹா...'' எல்லாம் அறிந்த தீபேஷ், எதற்காக என்று அவள் வாய்மொழியாக அறிந்து கொள்ள கேட்க,

''ஐஞ்சு பேரை உயிரோட எரிச்சதுக்காக...'' நேர்கொண்ட பார்வையில் சொல்லாமல் நிலம் நோக்கி சொல்ல


'' நீ எரிச்சவங்க எல்லாம்...'' அடுத்த வார்த்தையை செல்லவிடாமல் ''அப்பா...'' என்று அழைத்து அவரை தடுத்தவள்,


''உங்களால் என்னை நிரபராதி என்று நிரூபிக்க முடியும், அதன் பிறகு வாழ வைக்க முடியாது...'' நேர்கொண்ட பார்வையில் நெஞ்சை நிமிர்த்தி அழுத்தமாக சொல்ல,

''அப்போ நீ முடிவே பண்ணிட்ட அப்படி தான...'' ஆற்றாமையோடு கேட்க


''இதில் முடியாத ஒன்றை முடித்து காட்ட போவதே நீங்களும் அம்மாவும் தான் அப்பா..'' புன்னைகையோடு சொன்னவள், கண்ணீர் விட்டபடி இவர்கள் பேசியதை கேட்டு கொண்டு இருந்த தாயின் அருகில் சென்று அவரின் கண்ணீரை துடைத்து , தனது இரண்டாம் கட்ட திட்டத்தை சொன்ன போது கேட்ட அவர்களுக்கு தலை சுற்றி போனது...


''மஹா இதுல ஒரு சின்ன விஷயம் தவறினாலும் நாங்க உன்னை மொத்தமா இழக்க வேண்டி இருக்கும்..'' கண்களின் ஓரம் துளிர்த்த நீர் துளி தீபேஷ் மனதின் தவிப்பை பறைசாற்ற.


''அதிகாரபலமும் பணபலமும் இருப்பவர்களால் மட்டும் இல்லை, நல்ல மனம் கொண்ட மனிதர்களாலும் இது சாத்தியமாகும் அப்பா... அப்படி முடியாத நிலையில் நீங்க அந்த ஆதாரத்தை பயன்படுத்தி உங்க மகளை தண்டனையில் இருந்து காப்பாற்றலாம் ...'' வார்த்தையில் நம்பிக்கை அளித்தவள்


''அப்பா... அம்மா..'' என்று அழைத்து இருவரின் கரத்தை பற்றி அனுமதி வேண்டி நிற்க, சராசரி மனிதனாக பயமும் கவலையும் மனதில் எழுந்தாலும், மகளின் வலி கண்டு மரித்து அவளது கேள்வியில் உயிர்த்து எழுந்த பெற்றோர்களாக தங்களது சம்மதத்தை தெரிவித்தனர்...


இன்றைய விடியல் பலரின் எண்ணத்தை புரட்டிப்போடும் விடியலாக அமைந்தது...

மஹா பாரதி ஐந்து நபர்களை உயிரோடு காரில் வைத்து எரித்ததாக சொல்லி நீதி மன்றத்தில் சரணடைய, அந்த செய்தி காட்டு தீ போல பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்திகளின் மூலம் நாடெங்கும் பரவியது...


பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமாக பணத்தையும் சுதந்திரத்தையும் கொடுத்து அவர்களை மட்டும் இல்லாமல் அவர்களால் பலரின் வாழ்க்கை சீரழிய காரணமாக இருந்தவர்கள், இழந்த மகனுக்காக அழுவதா, இல்லை சரிந்து கொண்டு இருக்கும் கௌரவத்தை காப்பதா , இல்லை தொழிலில் உண்டான சிக்கலில் இருந்து தொழிலை மீட்பதா... என்று எத்திசையிலும் இருந்து வரும் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் திணறி கொண்டு இருந்தனர்...


பலம் இருந்த போது தலைவணங்கிய தலைகள் எல்லாம் இப்போது அவர்களை அலட்சியத்தோடும் ஏளனத்தோடும் பார்க்க, தங்களின் விதியை நொந்துகொள்ளுவதை தவிற வேறு வழி இல்லாமல் போனது...

மஹா விஷயம் ஊடகங்களில் பரவியதும் மக்கள் அவளுக்கு சாதகமாகும், பாதகமாகவும் பல கருத்துகளை முன் வைத்தனர்...


மஹா செய்தது நியாயம் என்றும் அதனால் அவளுக்கு தணடனை அளிக்க கூடாது என்று சில பெண்கள் அமைப்புகள் மற்றும் மாணவ அமைப்புகள் அவளுக்கு சாதகமாக குரல் கொடுக்க...


மஹா செய்தது மனித தன்மையற்ற காட்டுமிராண்டியான செயல் அதனால் அவளுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் இல்லை என்றால் இது நாட்டின் சட்ட ஒழுங்கை பாதிக்கும் என்று சிலர் அவளுக்கு பாதகமாக குரல் கொடுத்தனர்...


இதற்க்கு இடையில் சில விஷ கிருமிகளால் தவறான வதந்திகளும் பரப்ப பட்டது, மஹாவின் ஒழுக்கமும் அவள் குடும்பத்தின் நற்பண்பும் பலரால் விமர்சிக்க பட்டது, எப்போதும் போல பெரும்பான்மையான கருத்துகள் பெண்ணான அவளுக்கு எதிராகவே இருந்தது...


இவை எல்லாம் எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், அதை நிஜத்தில் அனுபவிக்கும் போது ஏற்படும் வலியையும் வேதனையையும் தீபேஷ் சௌந்தர்யாவால் வார்த்தையில் வடிக்க முடியவில்லை...


மஹாவின் மனஉறுதி நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர அது சற்றும் குறையவில்லை.... அதுவும் அவள் ஒழுக்கத்தையே கேள்விக்குறியாக்கி விமர்சனம் எழுந்த போதும் கூட ஒரு உணர்வற்ற பார்வையோடு அதை கடந்து விட்டாள், ஆனால் அவள் மனதில் பெரும் சீற்றம் ஒன்று நாளுக்கு நாள் வலுவடைந்து கொன்டே இருந்தது...


என்ன தான் மனவலிமையோடு தைரியமாக இருந்தாலும் பெற்றவர்களின் கண்ணீர் முன்னாள் எல்லாம் காணாமல் போக, கண்களில் நீர் துளிர்க்க அவர்களை பார்க்க அதை கண்டு தங்களின் வலியையும் வேதனையையும் ஒதுக்கி மகளின் கரத்தை ஆதரவாக பற்ற, சப்தங்கள் இல்லாத ஆறுதல் மொழி பென்னவளுக்கு ஆயிரம் யானை பலத்தை கொடுத்தது என்றால் அது மிகையாகாது...

கொலைக்குற்றத்தின் மீதான நீதி விசாரணைகாக சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட மஹாபாரதியை நோக்கி ஊடகங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்ப, அதை கண்டு சிறிதும் அஞ்சாமல் அவர்களை எதிர்கொண்டு ஒரு மகாராணியின் கம்பீரத்தோடு,


கற்பு நெறி
மரபுகளால் நம் மரபணுக்களில் பதிந்த ஒன்று
பெண்கள் அதை மதித்து செல்வதால்
எங்களை மிதித்து செல்லும் சமூகம்
மதிக்கும் நாங்கள் அதை மறக்க ஆரம்பித்தாள்..?
என்னவாகும் என்று சிந்தித்து பாருங்கள்..!
எங்கள் மீது திராவகத்தை மட்டும் அல்ல
திராவக சொற்களை விமர்சனங்களாக வீசும் முன்பு...


சர்ச்சையான கருத்தை மிகவும் சாதாரணமாக சொல்லி, சிலரை கோபம் கொள்ளவும் பலரை சிந்திக்க வைக்கவும் செய்தவள் நீதிபதி முன்பு ஆஜர் படுத்த பட்டாள்...


வாத ப்ரதி வாதங்களோடு விசாரணை தொடங்கியது...


************************************
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
''பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி நீ பண்ண அந்த பாதகத்தின் சாட்சி நான்...'' ஷாக்ஷி சொன்னதை கேட்டதும் சுரேன் பரந்தாமன் இருவரும் அதிச்சியாக பார்க்க, உமா எதுவும் புரியாமல் குழப்பமாக அனைவரையும் பார்க்க,


மாமனாரின் முகத்தில் தோன்றிய அதிர்ச்சி ஷாக்ஷிக்கு அவர்மீது இருந்த மதிப்பை குறைக்க, அவரை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தவள், மாமியாரிடம் திரும்பி '' நானும் என்னோட பொண்ணும் இந்த வீட்டை விட்டு போறோம்...'' என்றவளை அதிர்ச்சியாக உமா பார்க்க,


''காரணத்தை நான் சொல்லுவதை விட அதற்க்கு காரணகர்த்தாவான உங்க மகனும், தெரிந்தும் தெரியாதது போல இருக்கும் உங்க கணவரும் சொல்லுவாங்க...'' என்றவள் மகளை அழைத்து கொண்டு வாசலை நோக்கி நடக்க,


அதிர்ச்சியில் இருந்து மீண்ட உமா, பரந்தாமன் இருவரும் அவர்களை தடுக்க '' என்ன தப்பு , என்ன சாட்சி...'' அதிர்ச்சியில் இருந்து மீண்ட சுரேன் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் கேட்க, அவனை அருவெறுப்பாக ஏறிட்டவள் '' இவளை பார்க்கும் போது மகளா தெரியுதா... இல்லை, பசி கொண்டு வேட்டையாட போகும் புலியின் கண்களுக்கு தெரியும் மாமிச துண்டங்களாக தெரியுதா...'' தேவ சேனாவை சுட்டி காட்டி கேட்க...


ஷாக்ஷி கேட்ட கேள்வி அவனை கூனி குறுக வைக்க, அதை கண்டு மிதப்பான பார்வையை செலுத்தியவள் ' நீ தூக்கும் போது எல்லாம் குழந்தை அழுத போது உன் கண்ணில் இருந்த ஏக்கமும் தவிப்பும் தான் இன்றைய எனது வெற்றிக்கும் நாளைய எங்களின் போராட்டத்துக்கும் ஆதாரம்..' மனதில் சொன்னவள்.


''பதில் சொல்லுங்க சுரேந்திரன்....'' அவன் வாயடைத்து போனதை கண்டு நக்கலாக கேட்க, பதில் சொல்லமுடியாத நிலை அவனுக்கு கோபத்தை உண்டுபண்ண ''என்னடி சொல்லணும்...'' கர்ஜனையாக வினவ...


''உங்க இந்த பெண்ணை பார்க்கும் போது, உங்களுக்கு எந்த பெண்ணோட நினைவு வருதுன்னு சொல்லணும், அப்படி சொல்ல முடியாட்டி பரவாயில்லை உங்க பெண்ணோட பேரை சொன்ன கூட போதும் என்னோட கேள்விக்கு அது பதிலாயிடும்...'' பெண்ணவளின் சூட்சமமான வார்த்தையில் சூழலில் சிக்கய கப்பலாய் சுரேன் தத்தளித்து தடுமாற...


''என்ன சுரேந்திரன் தொண்டையில சிக்க மீன் முள்ளா செஞ்ச பாவம் உங்களை இன்னைக்கு படுத்தது போல...'' வாஞ்சையாக கேட்பது போல வார்த்தையில் விஷத்தை வடிக்க


''என்னடி கொஞ்சம் விட்டா அதிகமா பேசிக்கிட்டே போறியா, உரு தெரியாம அழிச்சிடுவேன்...'' உள்ளத்தில் மண்டிய எரிச்சலை போக்கும் வழி தெரியாமல் எச்சரிக்கை செய்ய


''சுரேன்....'' கண்டனமாக ஒலித்தது பரந்தாமன் குரல்


'' இன்னைக்கு உங்க மருமகளை அழிச்சிடுவேன் சொல்லும் போதே உங்க மகனுக்கு எதிராக குரல் கொடுக்கும் நீங்க, அன்னைக்கு ஒரு பெண்ணை அழிச்சது தெரிந்தும் ஏன் மாமா இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்தீங்க...'' சட்டை அடியாய் வார்த்தைகளை சுழற்ற


''இங்க என்ன தான் நடக்குது...'' மகன் மருமகள் வார்த்தைகளில் வெளிப்படும் வன்மமும் கோபமும் கண்ணீரில் கரைந்த உமாவை வெடித்து சிதற வைத்தது,


மனைவியை ஆறுதல் படுத்த பரந்தாமன் முயற்சிக்க அவரின் முயற்சி எல்லாம் முயற்சியாகவே இருந்தது...

''இணைக்கு மட்டும் இல்லை பத்து வருஷமா நீங்க எல்லோரும் செய்யுறதுக்கும் காரணம் புரியாம அமைதியா இருந்தேன், இனி அப்படி இருக்க என்னால் முடியாது...எனக்கு எல்லாம் தெரிஞ்சாகணும்.. நீங்க சொல்லுங்க.. '' இத்தனை நாள் மனதை அழுத்திய பாரம் அழுத்தமான வார்த்தைகளில் பிடிவாதமாக கணவனிடம் வெளிப்பட ,


''உண்மை தெரிஞ்சா நீ தாங்க மாட்ட உமா...'' என்னை புரிந்துகொள்ளேன் என்ற வேண்டுதல் மட்டும் இல்லை மனைவியின் மீதான அன்பும் அந்த ஆதங்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்தினர் பரந்தாமன்.


மருமகள் மீது ஒரு குற்றம் சுமத்தும் பார்வையை செலுத்தியபடி ''கடந்த பத்து வருஷத்தில் எதை எதையோ தங்கிகிட்டேன்... அதுமாதிரி இப்போ நீங்க சொல்லுறதையும் நான் தங்கிக்குவேன் நீங்க சொல்லுங்க...'' கணவனை ஊக்க

மகனை எரிக்கும் பார்வை பார்த்தவர் '' பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி சுரேன் ஒரு தப்பு பண்ணிட்டான்...'' வார்த்தைகளை தேடி பிடித்து திக்கி திணறி சொன்னவர் மருமகள் கண்ணில் கண்ட கோபத்தில் மனது வெறுத்துப்போனார் மகனை நினைத்து...


''என்ன தப்பு....'' அடுத்த கேள்வி கணையை தொடுத்த உமா முகத்தில் உணர்ச்சிகள் எதுவும் இன்றி வெறுமையாக இருந்தது


பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு...


அடுக்குமாடி குடியிருப்பு பலதரப்பட்ட குணங்கள் கொண்ட உயர் தட்டு மக்கள் வசிக்கும் இடம்..


தனது அதீத சுதந்திரதை அனுபவிக்க கல்லூரி விடுதியின் கட்டுப்பாடுகள் எல்லாம் தடையாக இருக்க கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போது நண்பர்களுடன் தனியாக அடுக்குமாடி குடியிருப்புக்கு இடம் பெயர்ந்தான்...


பெற்றவர்கள் கணக்கு வழக்கு கேட்காமல் அளவுக்கு அதிகமாக கொடுத்த பணம் அவர்களை வெகுவாக ஆட்டம் போட வைத்தது, மது மாது என்று போதையில் திளைத்தலும் படிப்பிலும் நல்ல மதிப்பெண்கள் பெற பெற்றவர்கள் கேள்வி கேட்காமல் விட்டு விட்டனர்..


படிப்பு முடிந்தும் நண்பர்கள் அனைவரும் சென்று விட வீட்டுக்கு சென்றால் இந்த அளவிற்கு எதையும் அனுபவிக்க முடியாது என்பதால் சுரேன் கொஞ்ச நாள் இருந்து வாழ்க்கையை இன்னும் நன்றாக அனுபவித்து விட்டு செல்லலாம் என்று முடிவு செய்தான்...


வாரத்தில் ஒன்று இரண்டு நாள் மட்டும் என்று அளவோடு இருந்தவன், இப்போது வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதால் வாரம் முழுவதும் இரவு பப் சென்று ஆட்டம் போடுவது, பகலில் உறக்கம் என்று அந்தப்புர அரசனாக தனது நாட்களை செலவிட்டான் சுரேந்திரன்...


நாள் தவறாமல் பப்க்கு சென்றதால் மதுவை தாண்டி சில போதை பொருட்களை கூட அங்கு விநியோகம் செய்ய, முயற்சித்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் சுரேன் அந்த போதை பொருளை வாங்கி பயன்படுத்த அவன் பெயருக்கு ஏற்றார் போல அந்த இந்திரலோகத்து அரசன் ஆகிவிட்ட உணர்வு...


கால்கள் தரையில் பதியாமல் வானத்தில் மிதப்பது போல, மிதந்து கொண்டு இருக்க, மூளை மொத்தமாக மழுங்கிவிட,மதுவின் போதையோ இல்லை மாதுவோ எல்லாம் காலையில் தெளிந்து விடும்...ஆனால் , இந்த புதுவித போதை விடிந்த பிறகும் இறங்காமல் அவனை உச்சத்தில் வைத்து அவன் உணர்வுகளை வெறியாக மாற்றி கொண்டு இருந்தது...


பப் வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வருபவர்கள் மீண்டு விடாமல் மீண்டும் மீண்டும் அங்கு வருவதற்கும், அவர்கள் செய்யும் சில பல மூன்றாம் தர வேலைகளில் ஒன்று தான் போதை மாத்திரைகள் மற்றும் அவற்றின் பல்வேறு வடிவங்கள் ஆனால், அவற்றின் செயல் எல்லாம் ஒன்று தான்...


நம்மை போதைக்கு அடிமையாக்கி, நம்மை சுற்றி இருப்பவர்களை அதற்க்கு பலியாக்கிவிடும்...



சுரேன் போதைக்கு அடிமையாக, அந்த போதைக்கு பலியானவள் தான் பதிமூன்று வயது தேவ சேனா...


சுரேன் இருக்கும் அதே அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவள், ஷாக்ஷியின் உயிர் தோழி தேவ சேனா...




நாகரீக வளர்ச்சி என்று கொண்டாடும் கொண்டாட்டங்கள்

நம்மை வீழ்த்தாத வரை மட்டுமே வளர்ச்சியின் அடையாளம்

வீழ்ந்த பின்பு ...???






மரித்து உயிர்க்கும்....







உங்களின் கருத்துகளை இங்கே பதிவிடவும்


சத்யா வாணியின் “என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன்” - கருத்து திரி



நன்றி



சத்யா
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வலி - 5



அரசு தரப்பு வழக்கறிஞர் மஹாவுக்கு இழைக்கப்பட்டது அநீதி என்றாலும், அவளாக அவர்களை தண்டித்தது வன்முறை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் காவல் துறை மற்றும் நீதிமன்றத்தை அணுகாமல் இப்படி அவர்களே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டால் நாட்டின் சட்ட ஒழுக்கையே அது கேள்விக்குள்ளாக்கிவிடும்... என்று தனது வாதத்தை தொடங்கியவர்...



மஹா பாரதியை மன்னித்து விட்டால் அது பலருக்கு தூண்டுதலாக அமைத்துவிடும் அதனால் தனிமனிதன் ஒவ்வொருவரும் சட்டத்தை மதிக்காமல் போகும் நிலை உருவாகலாம்... அதனால், மஹாபாரதிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையை விதிக்க வேண்டிக்கொள்கிறேன் என்று வாதத்தை முடித்தார்...



நீதிபதி மஹாபாரதியிடம் அவளது தரப்பை சொல்லும்படி கேட்க...



''என்னை அவர்கள் பலாத்காரம் செய்யத போது நான் அவர்களின் உயிரை எடுத்து இருந்தால் அது தற்காப்பு நடவடிக்கை என்று நானோ இல்லை என் சார்பாக எனது வழக்கறிஜரோ வாதிடலாம் ஆனால் , நான் செய்தது திட்டமிட்ட கொலை, இரண்டு வருடமாக திட்டமிட்டு செய்த கொலை... அதற்கான தண்டனை எதுவாக இருந்தாலும் அதை நான் ஏற்க தயாராக இருக்கின்றேன்...



அரசு தரப்பு வழக்கறிஜர் சொன்ன மரண தண்டனையாகவே இருந்தாலும்...'' அழுத்தம் திருத்தமாக சொன்னவள்,



''நீங்கள் அனுமதித்தால் என்னுடைய சில கருத்துகளையும் அதோடு அரசு தரப்பு வழக்கறிஜர் என் மீது சொன்ன சில குற்றச்சாட்டுகளுக்கு பதிலையும் அளிக்க விரும்புகிறேன்..'' நீதிபதியை பார்த்து பாரதி கேட்க அவள் கண்ணில் இருந்த வெளிப்பட்ட ஏதோ ஒரு சக்தி அவரை சம்மதிக்க வைத்தது...




கதைகளிலும் கற்பனைகளிலும் மட்டும் அல்ல சிலசமயம் நிஜத்திலும் இப்படி எல்லாம் நடக்கும் என்று அந்த நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் அந்த கணம் உணர்ந்தனர்....





நீதிபதி அனுமதி அளித்ததற்கு அவருக்கு தனது நன்றியை தெரிவித்தவள் '' முதலில் அரசு தரப்பு வழக்கறிஜரின் கேள்விகளுக்கு பதில்களை சொல்லிவிட்டு அடுத்து எனது தனிப்பட்ட கருத்துகளை சொல்லுகிறேன், உங்களின் அனுமதியோடு..'' பணிவாக சொன்னவள், மடை திறந்த வெள்ளமாக பேச ஆரம்பித்தாள்...



''நீங்கள் என் மீது சொன்ன முக்கிய குற்றச்சாட்டு நான் காவல் துறையையோ இல்லை நீதிமன்றத்தையோ அணுகாமல், நான் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டேன் என்பது தான்... அதற்க்கு என்னோட பதில்,


காவல் துறையில் என்னுடைய புகாரை ஏற்க மறுத்தது மட்டும் இல்லாமல் எனக்கு சில அறிவுரைகளையும் வழங்கினர்... வழங்கிய அறிவுரைகளை நான் ஏற்க மறுத்த போது அது மிரட்டலில் முடிந்தது தனி கதை...'' என்றவள் சிறு இடைவெளி விட்டு



''அறிவுரை என்ற பெயரில் எனக்கு அவர்கள் அளித்த மிரட்டலின் சாராம்சம் 'காவல் துறையில் வழக்கு பதிவிட்ட பிறகு இது பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் விமர்ச்சிக்கப்படும் பின்னாளில் அதுவே உங்களின் வாழக்கையை பாதிக்கும்..



முக்கியமாக நீதிமன்றத்தில் வழக்கறிஜர் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் உங்களால் பதில் சொல்ல முடியாது அந்த அளவுக்கு அவங்களோட கேள்விகள் உங்களை கூனி குறுக வைக்கும், தப்பு பண்ணவங்களுக்கு நீங்க தண்டனை வாங்கி கொடுத்தாலும், அவங்க பணத்தை வைத்து வெளியில் வந்திடுவாங்க...



நீங்க உயிர் நீதி மன்றத்தில் தண்டனை வாங்கி கொடுத்தால் அவங்க உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து வெளியில் வந்திடுவாங்க, அவங்க கிட்ட பணபலம் அதிகார பலம் எல்லாம் இருக்கு...




இப்போ சிலருக்கு மட்டும் தெரிஞ்ச விஷயம் நீங்க வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்துக்கு போகும் போது பலருக்கு தெரிந்து உங்கள் வாழ்க்கை விமர்ச்சிக்கப்படும், இப்போ உங்களுக்கு சாதகமாக சில அமைப்புகள் எல்லாம் போராட கூட செய்யலாம் ஆனால் அது குறுகிய காலம் வரை மட்டும் தான், அதன் பிறகு நீங்கள் வாழ்க்கை முழுவதும் போராட வேண்டி இருக்கும்...



இந்த போராட்டத்தில் நீங்க பணம் உறவு தொடங்கி இருதியில் உயிரையும் இழக்கலாம் நீங்கள் இறந்த பின்பும் அது உங்களை தொடரும் அதாவது உங்கள் குடும்பத்தினரை தொடரும் என்பது தான்...'' பாரதி சொல்லி முடிக்கும் போது பலர் பாரதி சொன்னதை ஆமோதிக்க சிலர் எதிர்க்க செய்தனர்...



''அடுத்து நீதி மன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பயந்து தானே சிலர் நீதி கேட்டு வரவே பயப்படுகின்றனர் நீங்கள் கேட்பதற்கு முன்பாக நானே எனக்கு நடந்தை உங்களுக்கு விளக்கமாக சொல்லுகிறேன், இடையில் நீங்கள் சந்தேகம் கேட்டாலும்..''மஹா இறுதியாக சொன்ன வாக்கியத்தில் இருந்த ஏதோ ஒன்று அனைவரையும் ஒரு கணம் தலை குனிய வைத்தது என்றால் அது மிகையாகாது...




உள்ளும் புறமும் காயம்பட்டு, அதற்க்கு நியாயம் கேட்டு வரும் போது விசாரணை என்ற பெயரிலும், வாதம் என்ற பெயரிலும் அவர்களை மேலும் வதைத்து வாயடைக்க செய்வதும் , ஏன் தான் நீதி கேட்டு வந்தோமோ என்று தன்னை தானே நொந்துகொள்ளும் அளவிற்கு அவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் கேள்விகளால் வதைத்து, விமர்சனங்களால் குத்தி கிழித்து ஒடுங்க செய்துவிடுகின்றது நம்முடைய சமூகம்.. ஆதரவு அளிக்க வில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்களை நிந்தனை செய்யமால் இருந்தாலே போதும்...



இதை எல்லாம் கடந்து வந்தால் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் உடலின் காயத்தின் அளவை பரிசோதித்து அதை பொறுத்து தண்டனையின் கால அளவும் அபராத தொகையின் அளவும் மாறுபடும்...


உயிரை கொல்லுவது கொலை குற்றம் என்றால்.... ஒரு பெண்ணின் அல்லது பெண் குழந்தையின் உணர்வுகளை கொன்று மனதளவில் அவர்களை மரிக்க செய்வது உயிரை கொல்லும் கொலையை விட மிக பெரிய குற்றம் தானே... இங்கு வாதத்திற்கான கருத்துகள் ஏராளம் ஆனால் தீர்வு தான் இன்றைய நாள் வரையில் காணப் பாடவில்லை...


அன்றைய நாளின் நினைவின் வலியில் இருந்து தன் மனதை மீட்டு, நடந்ததை எல்லாம் இயந்திரகதியில் சொல்ல ஆரம்பித்தாள் ''வீட்டுக்கு வரும் வழியில் என்னை கடத்தியவர்கள் அவர்களின் விருந்தினர் மாளிகைக்கு என்னை தூக்கி சென்றனர், அவர்களுக்கு பணத்துக்காகவே இல்லை விரும்பியே வரும் பெண்களை காட்டிலும் இப்படி விருப்பமில்லாத பெண்களின் எதிர்ப்புகளை அடக்கி அனுபவிப்பதில் தான் ரொம்ப சந்தோஷமும் கிக்கும் கிடைக்குமாம்...'' மரத்த குரலில் சொன்னவள் தனக்கு நடந்த கொடுமைகளை விளக்கமாக சொல்ல ஆரம்பிக்கவும் நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் சொல்ல வேண்டாம் என்று கூச்சலிட பலரின் கண்களில் கண்ணீர் தன் தடத்தை பதித்தது என்றால் பலருக்கு நெஞ்சை தைத்தது...


சற்று நேரத்திற்கு நீதி மன்றத்தில் கூச்சல்கள் அடக்கிவிட பாரதி மீண்டும் பேச ஆரம்பித்தாள் '' கடித்து குதறி எறியப்பட்டு ரணத்தோடு நீதி கேட்டு வரும் பெண்களிடம் என்ன நடந்தது எப்படி நடந்தது என்று விளக்கம் பெற கேள்வி கேட்கும் உங்களிடம் நாங்கள் விளக்கமாக விளக்கி செல்ல ஆரம்பித்தாள் உங்களால் தாங்க முடியுமா...'' கேள்வியாக கேட்டவள் ஒரு கசந்த முறுவலோடு '' அதற்கான பதிலை நீங்களே சற்று நேரத்திற்கு முன்பு தெளிவுபடுத்திவிட்டீர்கள்...'' என்றவள்




''உடலின் வலியையும் உள்ளத்தின் வலியையும் பொறுத்துக்கொண்டு வரும் போது நாங்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளும், விமர்ச்சனங்களும் , நிராகரிப்புகளும் எங்களை ஒன்று பலமிழக்க செய்து ஓடிக்கிவிடுகிறது... மற்றொன்று களம் இறக்க செய்து கருவறுக்க வைக்கின்றது...



இங்கு பெரும்பான்மை மட்டும் இல்லை சிறுபான்மையும் முதலில் சொன்னது தான் நிகழ்கின்றது.. நான் ஒரு மாற்றமாக மற்றொன்றை நிகழ்த்தி காட்டினேன்...'' நெஞ்சை நிமிர்த்தி நேர்கொண்ட பார்வையில் யாருக்கும் அஞ்சாமல் சொன்ன பாரதியை அந்த நீதி மன்றமே வியப்போடும், நீ செய்தது தான் சரி என்ற எண்ணத்தோடும் பார்த்தது...



''எனக்கான நீதி எனக்கு கிடைக்காத போது நானே அதை எடுத்துக்கொண்டேன் இதற்க்கு நான் வருந்தவில்லை, ஆனால் இது சட்டத்தின் பார்வையில் குற்றம் என்பதால் அதற்கு நீங்கள் கொடுக்க போகும் தண்டனையை ஏற்றுகொள்ளுவதற்கு நான் சற்றும் தயக்க போவது இல்லை...'' தனது மீது சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு தன் மனதில் இருந்ததை சொன்னவள்...



''ஒரு ஆணின் கர்வம் தலை தூக்கும் போது ஒரு பெண்ணின் சுதந்திரமும் சுயமரியாதையும் நசுக்கப்படுகின்றது... அவனுள் மூன்றாம் பாலின் எண்ணம் தலைதூக்கும் போது அந்த பெண்னே நசுக்கப்படுகிறாள் அல்லது கசக்கி எறியப்படுகின்றாள்...

 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


''எத்தகைய சமூகத்தை நாம் நிர்மாணித்து உள்ளோம், ஆணின் ஒரு பாதியும் பெண்ணின் ஒரு பாதியும் இணைத்து தான் வாழ்க்கை முழுமையடையும் எனும் போது, ஒரு பாதி என்றும் தன் சகபாதியை அடக்கி தன் காலுக்கு அடியில் வைக்க நினைப்பது எப்படி முறையாகும், அப்படி இருந்தால் வாழ்க்கை எங்கனம் முழுமை பெரும்...



''துவாபர யுகத்தில் ஆன்றோர்கள் சான்றோர்கள் நிறைந்த சபையில் திரௌபதிக்கு இழைக்க பட்ட அநீதி... இன்று ஒரு நாளின் ஒவ்வொரு எட்டு நிமிடத்திற்கும் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படுகின்றது, அன்றாவது அவளை காக்க கடைசி நேரத்தில் கோகுல கண்ணன் வந்தான் இன்று ?



''பெண்ணவளின் மானம் காக்கும் கடமை கொண்ட மன்னவர்கள் தலை குனிந்து நின்றது போல, இன்று ஒரு பெண்ணுக்கு அநீதி நடக்கும் போது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்கள் அதை வேடிக்கை பார்க்கின்றன...




''அன்று சபையில் நீதி நியாயம் அறிந்த அனைவரும் அமைதி காத்தது போல இன்றைய சமூகம் அமைதி காக்கின்றது...




''காலங்கள் பல மாறினாலும், பெண்களின் வாழ்வில் காட்சிகள் மாறுவதில்லை...




'' ஒரு பெண்ணுக்கு தீங்கு நடக்கும் போது, பூமி பிளந்து அந்த பாதகனை உள் வாங்கினாள்.. காற்று சுழன்று அடித்து அவனை வீழ்த்தினால், வானம் இடிந்து அவன் தலையில் விழுந்தால், பெண்ணவளின் கண்கள் சிந்தும் கண்ணீர் தீயாய் மாறி அவனை தகித்தால், இனியொரு முறை இப்படி ஒரு அநியாயம் நடக்குமா...?





''அன்று பாண்டவர்கள் சபையில் தலைகுனிந்து நின்று ஆண்டுகள் பல கடந்து போரிட்டது போல தானே இயற்கையும் காலம் கடந்து தீயவரோடு சேர்ந்து பல நல்லவரையும் அழிக்கின்றது... அன்றே அப்போதே அதை எதிர்த்து நின்று தட்டி கேட்டு இருந்தால்...?




''காலம் தாழ்ந்து அளிக்கப்படும் நீதி அநீதிக்கு சமம்.. ஆண்டுகள் பல கடந்தாலும் பெண்களுக்கு நீதி கிடைப்பதில்லை இது நிதர்சனம். அதனால் எனக்கான நீதியை நானே கையில் எடுத்து கயவர்ளை தண்டித்தேன், எனக்கு கேடு விளைவித்தவர்களை எரித்து கொன்றேன்.



''மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்று மகாகவி பாரதி சொன்னான்....



.மஹா பாரதியான என்னை காக்க கண்ணன் வரவில்லை, காயம் கொண்ட நான் காளியாக மாறி மாதர் தம்மை இழிவு செய்த கயவர்களை கொளுத்தினேன்..



அவள் பேசி முடித்த பிறகு அந்த நீதி மன்றத்தில் பேரமைதி நிலவியது, அவள் சொன்னதை உணர்ந்து உறைந்து இருந்த அனைவரும் அவளுக்கான தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர்....


*****************************************
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுரேன் போதையில் தன்னை மறந்து தான் நிலை மறந்து இருக்க, தனது பதிமூன்றாவது பிறந்தநாளை அன்று கொண்டாடி கொன்று இருந்த தேவ சேனா, அக்கம் பக்கம் குடியிருப்புகளில் இருந்தவர்களிடம் இனிப்பை கொடுத்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டாள்....



தேவ சேனாவின் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்பவர்கள், ஆண்டின் இறுதி கணக்கு முடிக்க வேண்டும் என்பதால் விடுப்பு எடுக்க முடியாமல் பணிக்கு சென்று இருந்தனர்...



சாக்ஷியின் வீட்டுக்கு வந்து இனிப்பு கொடுத்த தேவ சேனா, சாக்ஷிக்கு அன்று லேசான காய்ச்சல் இருந்ததால் அவளோடு விளையாட முடியாத வருத்தத்தில், இனிப்பை கொடுத்து விட்டு சென்று விட்டாள்...



சுரேனை அவள் பலசமயம் பார்த்து இருந்தாலும் பேசியது எல்லாம் கிடையாது, அனைவருக்கும் இனிப்பு கொடுத்துவிட்டு இந்த அங்கிளுக்கு மட்டும் கொடுக்காமல் போக கூடாது என்று, வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தாள்... விதி தனது வாழ்வில் கோரமாக விளையாட போவதை அறியாமல்..



போதையில் இருந்தவனுக்கு அழைப்பு மணி எரிச்சலை கொடுக்க கோபத்தில் தள்ளாடியபடி எழுந்து சென்றான்... கதவை திறந்த போது அங்கு நின்று இருந்த தேவ சேனையை பார்த்ததும் கோபம் போய் அந்த இடத்தை கொடும் மிருகம் ஆட்கொண்டது...



தேவசேனா புன்னகைத்து ''அங்கிள் இன்னைக்கு எனக்கு பிறந்தநாள்..'' என்று சொல்லி இனிப்பை கொடுக்க, இனிப்பை எடுக்காமல் தேவசேனாவை உள்ளே இழுத்து கதவை தாழிட அதை கண்டும் அவன் தள்ளாட்டத்தை கண்டும் பயந்தவள்..



''அங்கிள் கதவை திறங்க நான் வீட்டுக்கு போகணும்...'' என்று சொன்னவள் பயத்தில் அழ ஆரம்பித்தாள்..




சுயத்தை தொலைத்து சிந்திக்கும் திறனை போதை எனும் மாயையில் சிக்கி தொலைத்தவனுக்கு, அந்த இளம் தளிரின் கதறலும், பயமும் செவிகளை சென்றடையவில்லை...



காலை என் பெண் தேவைதை போல இருக்கா என்று சொல்லி பெருமைப்பட்ட தந்தையின் கனிவை சுமந்த கண்களை கண்ட பார்த்த போது தேவசேனையின் முகத்தில் அழகான ஒரு புன்னகையை தோன்றியது என்றால்...




இப்போது சுரேன் கண்ணில் பிரதிபலிக்கும் கொடும் பளபளப்ப்பு அவள் முகத்தில் பயத்தையும் அச்சத்தையும் உண்டாக்கியது...



தீண்ட கூடாத இடங்களில் எல்லாம் அவன் கரம் பட்ட போது அனலில் இட்ட புழுவாக கதறி துடித்தவள், தனக்கு என்ன நடக்கின்றது என்பதை அரிமையால் காயம் கொண்டு வலியால் நினைவை இழந்து மூர்ச்சையானால்...


சில மணி நேரங்கள் கடந்து ஏறிய போதை சற்று தெளிய, கண்களை திறந்த நரேன் அவன் கண்ட காட்சியில் அதிர்ந்து போனான்...




நடந்தது எல்லாம் ஏதோ பனிமூட்டம் போல நினைவில் தோன்ற அதில் திடுக்கிட்டவன், நடுங்கும் கரங்களை தேவசேனாவின் சுவாசத்தை சோதிக்க, அவனால் அவள் சுவாசத்தை உணர முடியவில்லை...



செய்த செயலை நினைத்து நெற்றியில் அறைந்து கொண்டவன், சற்று நேரம் எதைப்பற்றியும் சிந்திக்க முடியாமல், பயத்தில் உறைந்து போனேன்...


சிறிது நேரத்தில் தன்னை மீட்டு கொண்டவன், ''இந்த உடலை மட்டும் இங்கிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேற்றிவிட்டால் மட்டும் போதும், தப்பிச்சிடலாம்..'' என்று தனக்கு தானே சொல்லி கொண்டவன்..முதலில் தன்னை சீர் படுத்திகொண்டு வந்து வெளியில் நோட்டம் பார்த்தான், ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை...


ஒரு பெரிய சூட்கேசில் உடலை வைத்தவன் யாருக்கும் சந்தேகம் வராதபடி அதை எடுத்து சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை போட்டு விட்டு, சூட்கேஸை வரும் வழியில் கூவத்தில் எறிந்துவிட்டான்...



இப்போது உடனே இங்கிருந்து வீட்டுக்கு கிளம்பினாள் தன் மீது சந்தேகம் வரும் என்பதால், வீட்டிலேயே அடைந்து கிடந்தான்...


வேலையில் இருந்து வந்ததும் தேவசேனாவின் பெற்றோர்கள் மகளை காணாமல் தேட, எங்கு தேடியும் அவள் கிடைக்காததால் காவல் துறையில் புகார் அளித்தனர்...


தேவசேனா இனிப்பு கொடுக்க சென்றதையும், சுரேன் சூட்கேசுடன் வெளியேறிய போது அதில் சிகப்பு நிறத்தில் ஏதோ ஒன்று சிந்தியதையும் எதிர்குடியிருப்பில் இருந்து பார்த்த சாக்ஷி இரண்டையும் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி பார்க்க தெரியாமல், மாலை அம்மா கொடுத்த மருந்தையும் உணவையும் உண்டு விட்டு நிம்மதியாக உறங்கி போனாள்...


இனி தனது வாழ்க்கையில் நிம்மதியான உறக்கமே இருக்க போவதில்லை என்று அறியாமல்...




காலையில் எழுந்தவள் அக்கம் பக்கம் பரபரப்பாக இருப்பதை பார்த்து என்னவென்று கேட்க அப்போது தான் அவளுக்கு தன்னுடைய தோழி காணாமல் போனது தெரியவந்தது, அப்போதும் அவளுக்கு நேற்று நடந்த நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி பார்க்க முடியாமல் போக, வேண்டுதலும் கண்ணீருமாக அவள் நாட்கள் கடந்தது...




இரண்டாவது நாள் தேவசேனையின் உடல் மீட்கப்பட்டு, பரிசோதனைக்கு பிறகு அவள் பெற்றோரிடம் ஒப்படைக்க பட்டது... தோழியின் மரணம் சாக்ஷியின் மனதை வெகுவாக பாதிக்க அவள் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது...




சாக்ஷியின் உடல் நிலை நன்கு தேறிய நிலையில் ஒரு நாள் தொலைக்காட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை மையமாக வைத்து ஒரு திரில்லர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டு இருக்க அதில் அவள் கண்ட காட்சிகள் தனது தோழியின் மரணத்தில் இருக்கும் சிக்கலை அவிழ்த்து கொலைகாரன் யார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது....




இதை சாக்ஷி அவள் பெற்றோரிடம் சொல்ல, இதை செய்தது ஏதோ பெரிய இடத்து வீட்டு பையன் என்பதால் வழக்கின் திசையே மாற்றப்பட்டு வழக்கை முடித்துவிட்ட நிலையில் சாக்ஷி இப்படி சொல்லவும், இது வெளியில் தெரிந்தால் தங்கள் மகளின் வாழ்க்கை மட்டும் அல்ல ஒட்டு மொத்த குடும்பமே பாதிக்கப்படும் என்று உணர்ந்த அவர்கள்..



சாக்ஷியிடம் அன்பாக சொல்லி அதட்டி, மிரட்டி , அடித்து என்று அவள் வாயை அடைத்துவிட்டனர்.... இந்த இடத்தில் இருந்தாலே அவளுக்கு மீண்டும் மீண்டும் தோழியின் நினைவு வந்து உண்மையை வெளியில் சொல்ல வாய்ப்பு இருக்கு என்று அஞ்சி, சாக்ஷியின் அப்பா வேலையை வெளியூருக்கு மாற்றிக்கொண்டு வந்துவிட்டார்....




சாக்ஷி அம்மா அப்பாவின் வார்த்தைக்கும் கண்ணீருக்கும் கட்டுப்பட்டு உண்மையை மறைத்து விட்டாலும், அவள் மனதில் ஒரு பக்கம் அது புகைந்துகொன்டே தான் இருந்தது...



என்றாவது ஒரு நாள் தோழியின் மரணத்துக்கு காரணமானவனை சட்டத்திற்கு முன்னாள் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று அவள் நினைத்தாலும், சுரேனை இனி வாழ்நாளில் சந்திக்கவே கூடாது என்ற வேண்டுதலையும் தவறாமல் இறைவனிடம் வைத்தால்...



மீண்டும் விதி ஆடிய விளையாட்டில் அவளின் ஒரு வேண்டுதல் மறுக்கப்பட்டு, மற்றதை நிறைவேறும் வாய்ப்பு உருவானது, அதில் அவள் வாழ்க்கை பலியானது, அவள் பெற்றுஎடுத்த மகளின் வாழ்க்கை பணயமானது... தந்தை மகள் பாசம் பலியானது...


சதை பிண்டத்தில் தொடங்கி
சோற்று பிண்டத்தில் முடியும் பயணம்
இந்த பயணத்தில்
பெண்களை தேவதைகளாக, கடவுளாக கொண்டாட வேண்டாம்
சதை கோலங்களாக பார்த்து
அவர்கள் வாழ்வை சீரழிக்காமல் இருந்தாலே போதும்



மரித்து உயிர்க்கும்...
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வலி 6

பாரதிக்கு நீதிபதி சொல்லப்போகும் தீர்ப்பை எதிர்ப்பார்த்து அனைவரும் காத்திருக்க, நீதிபதி தீர்ப்பு சொல்ல போகும் நாளை குறிப்பிட்டு சொல்லிவிட்டு, கனத்த மனதோடு தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்றார்...

பாரதி தந்தையிடம் கண்ணை காட்டிவிட்டு சென்று விட, அவர் அடுத்த கட்டத்திற்கான திட்டத்திற்கு காய் நகர்த்த சென்றுவிட பாரதி சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டாள்...


பாரதி கேட்ட கேள்விகள் எல்லாம் அனைவரின் மனதிலும் இருந்தாலும் ஏனோ அதை அனைவராலும் வெளியில் கேட்டுவிட முடியவுமில்லை அதை அவர்கள் முயற்சிக்கவும் இல்லை, யாருக்கோ தானே என்ற அலட்சியமும், நமக்கு எதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற பயமும் தான் அதற்க்கு காரணம்...


அலட்சியமும் பயமும் சரிபாதியாக இருக்க கண்ணுக்கு முன்னாள் அநியாயம் நடக்கும் போதும் பலர் கண்டும் காணாமல் கடந்து சென்று விடுகின்றனர், அவர்கள் அதை கடந்து செல்ல எடுத்துக்கொள்ளும் காலத்தில் யாராவது ஒருவர் தனது அலட்சியதியும் பயத்தையும் தாண்டி ஒரு அடி எடுத்து வைத்தால் போதும் கண்டிப்பாக அவர் எடுத்து வைக்கும் அடுத்த அடிக்கு பலம் சேர்க்க பலரின் அடிகள் சேர்ந்து இருக்கும்...

அனைவருக்கும் ஒரு தூண்டுதலும் அதே சமயம் துணையும் தேவைப்படுகின்றது கண் முன்னாள் நடக்கும் அநீதியை தட்டி கேட்க, இது தான் மனித இயல்பு. கதைகளிலும் கற்பனைகளிலும் தான் நாயகன் ஒருவனாக இருபது நபர்களை அடித்து வீழ்த்துவது எல்லாம் சாத்தியம், நிஜம் அப்படி இல்லையே...


நிஜத்தில் ஒற்றை ஆளாக போராடுவது என்பது அசாத்தியம் ஆனால், ஒன்று கூடி போராடினால் அசாத்தியம் நிச்சயம் சாத்தியமாகும்...


தீபேஷ் மகளை காக்க வேண்டி பாரபட்சமின்றி அனைவரிடமும் உதவி வேண்ட, உதிவிக்கு கரங்கள் நீளுமா இல்லை பாரதி வாழ்க்கை இதோடு முடிந்துவிடுமா என்று பயந்து நாட்களை நகர்த்தி கொண்டு இருந்தனர் பாரதியின் பெற்றோர்கள்..


சிறையில் இருந்த பாரதியின் நினைவுகளில் இந்த இரண்டு ஆண்டுகளாக அவளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு தானே தீர்ப்பை நிர்ணயித்த போது, அவள் மனதில் மனித உயிர்களை வதைப்பது சரியா என்ற கேள்வி எழும் போது எல்லாம் அவள் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைகளை பற்றிய தகவல்களை எல்லாம் பல்வேறு வழிகளில் சேகரிக்க ஆரம்பித்தாள்..


அப்படி தகவல்களை சேகரிக்கும் போது, அவள் மனது நீ தேர்ந்தெடுத்த வழி மிகவும் சரி என்று சொல்லும், அவள் தனக்காக மட்டும் என்று தொடங்கிய இந்த போராட்டம் தன்னை போன்ற பாதிக்க பட்ட பெண்களுக்காகவும் இனி எந்த பெண்ணும் இப்படி பாதிக்க பட கூடாது என்பதற்காகவும் என்று சுயநலத்தில் இருந்து பொதுநலனாக மாறியது...


இப்போது நம்முடைய அடுத்த கட்ட திட்டம் தவறோ, அது சட்டத்தை அவமதிக்கும் செயலோ என்ற எண்ணம் அவள் மனதில் எழ, அந்த எண்ணத்தை விரட்டி அடிக்க சில புள்ளிவிவர தகவல்களை தனது சிந்தனையில் ஓடவிட்டாள்...

அந்த தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும், அதில் இருக்கும் ஒரே சம்பந்தம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு பலியானது என்பது தான்..

குடும்பத்துக்குள்ளே நடக்கிற பாலியல் வன்கொடுமைகள் மட்டுமல்ல, பொது சமூகத்தில் உருவாகும் திட்டமிட்ட, திட்டமிடாத கலவரங்களின்போதும் பெண்ணின் உடல்கள் தாக்கப்படுகின்றன.

1994- ல் ருவாண்டா நாட்டின் இனப் படுகொலைகளின்போது 2,50,000 முதல் 5,00,000 பெண்கள் வரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கின்றனர். சியாரா லியோன் உள்நாட்டுப் போரின்போது சுமார் 6,00,000 பேர். போஸ்னியா, ஹெர்சகோ யுத்தத்தில் 20,000 லிருந்து 50,000 வரை. 1996-லிருந்து காங்கோ நாட்டில் குறைந்தது 2,00,000 பேர் என்கிறது ஐ.நா சபையின் உத்தேசக் கணக்கு.

தெற்காசிய நாடுகளில் பாலியல் வன்முறைகளும் அவற்றுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட மறுக்கும் நிலையையும் பற்றிய விவரங்களைத் தொகுக்கும் முயற்சி முதன்முதலாக நடந்துள்ளது. 1971-ல் வங்கதேச சுதந்திரப் போரின்போதும் 1947-ல் இந்தியப் பிரிவினையின் போதும் 2,00,000 லிருந்து 4,00,000 பேர்வரை பாலியல் வன்முறைக்கு ஆளானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான குற்றங்களில் எவரும் தண்டிக்கப்படவில்லை.

இலங்கையில், 26 ஆண்டுகால உள்நாட்டுப்போரில் பெண்களின் மீதான குற்றங்களும் உள்ளன. போரின் முடிவில் 90,000 பெண்கள் விதவைகளாகியுள்ளனர் என்றும், பெண் தலைமையிலான 50,000 குடும்பங்கள் ஆதரவற்ற வறுமையில் உள்ளன என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களின் மீதான பொதுச் சமூகத்தின் பார்வையை மாற்ற வேண்டும் என்றார் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ப்ரேமா ரேவதி.

இலங்கையில் பாலியல் வன்முறைக் குள்ளாக்கப்பட்ட பெண் உடல்கள் தேசியவாதப் பிரச்சாரத்தின் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அந்தப் பெண்களுக்கான நீதிதான் கிடைக்கவில்லை என்றார் ப்ரேமா ரேவதி.

பெண்ணிய வரலாற்றாளர் பேராசிரியர் உமா சக்ரவர்த்தி ஒரு புத்தக வெளியிட்டு விழாவில் பேசுகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்பாரிகளை ஒடுக்குவது என்ற போர்வையில் பழங்குடிப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைச் செய்கிற நிலை இன்னமும் தொடர்வதைச் சுட்டிக்காட்டினார்.


இப்படி ஒவ்வொரு சம்பவமாக சுட்டிக்காட்டி கொண்டே சென்றால் நாட்கள் நீளுமே தவிற நீதி கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான்..


இங்கு கொடுமைகள் ஒரு பெண்ணுக்கு மட்டும் என்று இல்லை ஒட்டுமொத்தமாக ஒரு சமூக பெண்களுக்கு என்று மட்டும் இல்லை பெண் என்றாலே அவளுக்கான கொடுமைகள் வீட்டிலும் நாட்டிலும் பெண்ணவளை தொடர்ந்து துன்புறுத்தி கொண்டே இருக்கின்றது..


பெண்ணவளை துன்புறுத்தி இன்பம் காணும் மனம் இல்லாத மனித இனம் அறியவில்லை பெண் எனப்படுபவள் எத்தைகைய சக்தியென்று


1914 காலகட்டம். முதலாம் உலகப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. போரும், வறுமையும் இணைபிரியா தோழர்கள்தானே.... எதற்காகப் போராடுகிறோம்.. யார் மகிழ்ச்சிக்காக என்று தெரியாமலேயே ரஷ்ய வீரர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள்... செத்துக்கொண்டும் இருந்தார்கள்.

தெரிந்தவர்களுக்கு மன்னனை எதிர்த்து கலகம் செய்ய அச்சம். அந்தச் சமயத்தில் போரில் ஈடுபட்டு இருந்த ரஷ்ய வீரர்களுக்கு சில தகவல்கள் வருகிறது. மைனஸ் டிகிரி குளிரிலும் நடுங்காதவர்கள், அந்தத் தகவலைக் கேட்டதும் நடுங்கிப்போனார்கள்; உள்ளுக்குள் உடைந்தும்போனார்கள்.


அந்தத் தகவல், “பசியால்... வறுமையால்.... ஒருவேளை உணவு இல்லாமல் வீரர்களின் குழந்தைகள் இறந்துகொண்டிருக்கின்றன” என்பதுதான். உள்ளுக்குள்ளேயே மருகினார்களே தவிர, திடமாக என்ன முடிவெடுப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது பெண்கள் முடிவெடுத்தார்கள்... இனியும் நாம் பொறுமையாக இருந்தால் நம் பிள்ளைகளை இருளில் நாமே தள்ளியதுபோல ஆகிவிடும் என்று ரஷ்யத் தலைநகர் பெட்ரோகிராடில் பெண் தொழிலாளர்கள் கொதித்தெழுந்தார்கள். 1917 மார்ச் 8-ம் தேதி வீதிக்கு வந்தார்கள்.


நெருப்பென்றால் பரவுவது இயல்புதானே... அதுவும் ஏற்கெனவே உள்ளுக்குள் கனன்று கொண்டிருப்பவர்களை அந்த நெருப்பு உடனே தழுவும்தானே... ஆம், அந்தப் போராட்ட நெருப்பு பரவியது... மாணவர்கள், இளைஞர்கள், அரசு அதிகாரிகள் பின், ராணுவத்தினரும் அந்தப் போராட்டத்தில் குதித்தார்கள். சரியாக எட்டாவது நாள்... தம் குழந்தைகளின் நல்எதிர்காலத்துக்காக வீதிக்குவந்த பெண்கள், முடியாட்சியை வீழ்த்தினார்கள். இது சர்வதேச மகளிர் தினம் குறித்த ஒரு நீண்ட வரலாற்றின் சிறு பகுதி.


சரி, இப்போது பெட்ரோகிராடில் வீதிகளிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலுக்கு வாருங்கள்... அங்கு குழுமியிருக்கும் பெண்களைச் சந்தியுங்கள். அமுதா... கவிதா... லெட்சுமி, வளர்மதி, வசந்தா அம்மா எனப் பெண்கள் கூட்டம் வரலாற்றின் பக்கங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாழ்வாதார போராட்டங்களைத் தாங்களே முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

“வழக்கமான உள் அரசியலால் நெடுவாசல் போராட்டம் பிசுபிசுத்துவிட்டது. போராட்டத் தலைவர்கள் திக்குத்தெரியாமல் திணறுகிறார்கள்” என வழக்கம்போல அதிகாரவர்க்கம் வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்க... போராட்டத்தின் முதல் வரிசையில் பெண்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள்; போராட்டத்தை முனைப்புடன் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.



''மொத்த தமிழகமும் நெடுவாசல் நோக்கிவந்து, அரசின் சதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்... இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்'' எனக் கோரிக்கைவைக்கிறார்.


இதேபோல தங்கச்சிமடத்தில், இலங்கைக் கடற்படைக்கு எதிரான போராட்டத்திலும்... பெண்கள்தான் முதல் வரிசையில் நிற்கிறார்கள். “எம் பிள்ளைகளை கொன்றுகொண்டே இருப்பார்கள்... அரசு கள்ள மெளனம் சாதித்துக்கொண்டே இருக்குமா...” என அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள்.


இப்படி பல்வேறு காரணங்களுக்கு பெண்கள் போராடினாலும் அவர்கள் போராட்டத்தில் மொழி நாடு என்ற வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களின் ஒரே நோக்கம் தங்களுடைய வரும்கால தலைமுறை வளமாக நலமாக வாழ வேண்டும் என்பது மட்டுமே, இப்படி போராடும் பெண்களின் போராட்டம் எப்போதும் தனது இலக்கை அடைந்தே தீரும்...

ஏனென்றால் இப்போது போராட்டக்களங்களில் முதல் வரிசையில் நிற்பது பெண்கள்.
பெண்கள் சக்தியெனப்படுக!(நன்றி - மு. நியாஸ் அகமது)


இதேபோல் நாளை பெண்கள் தங்களுக்காக வீதியில் இறங்கி போராடி தான் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நிலை வந்தாள் பெண் சக்தி கொதித்து எழுந்து தீயாய் பரவும் இதற்க்கு எந்த நாடும் விதிவிலக்கு அல்ல, இப்போதும் அவர்களின் போராட்டத்தாலும் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகள் நிற்கவில்லையே..


இன்று மஹாபாரதியின் போராட்டம் நாளை



அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!

வெந்து தணிந்தது காடு

தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!


காட்டுக்கு பதிலாக கயவர்கள் வெந்து தணியும் காலம் வரும்...


*********



கடந்த ஓராண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை 38,172. அவற்றில் பாலியல் வல்லுறவுகள் மட்டும் 8 ஆயிரத்து 541 என்று தேசிய குற்றப் பதிவுப் பிரிவு தெரிவிக்கிறது. இது வெறும் புள்ளிவிவரம் அல்ல. ஒட்டுமொத்தக் குழந்தைகளின் கேள்விக்குறியாக்கப்படுகிற எதிர்காலத்தின் குறியீடு..


குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் (பாக்ஸோ) போன்ற மிக வலிமையான சட்டங்கள் இருந்தும், அவை குறித்த உரிய விழிப்புணர்வு இல்லாததால் குற்றங்கள் அதிகரிப்பதைத் தடுக்க முடியவில்லை என்பது வருத்தமான உண்மை.


பாக்ஸோ சட்டம் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அனைவரையும் குழந்தைகள் என்று கூறுகிறது இந்தச் சட்டம். மன வளர்ச்சி குன்றிய குழந்தை மீது நடத்தப்படும் தாக்குதலுக்கும் ஆசிரியர், மருத்துவர், குடும்பத்தினர் போன்ற நம்பிக்கைக்குரியவர்களின் தாக்குதலுக்கும் கூடுதல் தண்டனை உண்டு. பாலியல் துன்புறுத்தலை அறிந்து அதைப் பற்றிப் புகார் அளிக்காமல் இருப்பவருக்கும் தண்டனை உண்டு.


காவலர்களே பாதுகாவலர்

விசாரணையின்போது காவல் துறையினரைக் குழந்தையின் பாதுகாவலராகக் கருதுகிறது சட்டம். எனவே ஒரு புகார் எழுந்தவுடன் அக்குழந்தைக்கு தேவையான அடைக்கலம், மருத்துவ வசதிகளைச் செய்துதருவது காவல் துறையின் கடமை.

மருத்துவச் சோதனை குழந்தைக்கு அறிமுகமான நபரின் முன்னிலையில் நடைபெற வேண்டும். பெண் குழந்தையாக இருந்தால் பெண் மருத்துவர்தான் சோதனை செய்ய வேண்டும்.

இந்த வழக்குகளை விசாரிக்க குழந்தைகளுக்கு ஏதுவான சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பெற்றோர் அல்லது காப்பாளரின் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். குழந்தையை அடிக்கடி நீதிமன்றத்துக்கு வரவழைக்காமல் காணொளி மூலம் பேசிக்கொள்ளலாம்.

குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க சட்டம் மட்டும் போதாது. அதை அமல்படுத்துவதிலும் தீவிரம் வேண்டும்...



“10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பாடத்திட்டத்திலேயே குழந்தைகளின் உரிமை, குடும்ப வன்முறை, பெண் சமத்துவம் பற்றிய தகவல்களைச் சேர்க்கலாம்.

குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் பெரும்பாலும் நன்கு தெரிந்தவர்களால்தானே நடக்கிறது. இந்தப் புகார்களைப் பதிவு செய்வதே ஒரு சவால் இல்லையா?

பாலியல் குற்றத்துக்கு, பாதிக்கப்படும் பெண் காரணமில்லை என்ற பார்வையே நிர்பயா வழக்குக்கு பிறகுதான் வந்திருக்கிறது. ஒவ்வொருமுறை பாலியல் வன்கொடுமை நடக்கும்போதும் மக்கள் எழுச்சியுற்றுப் போராடி நியாயம் கேட்க முடியாது. சட்டத்தின் மூலமாகத்தான், சமூகத்தில் நீதி நிலைநாட்டப்படும் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால் சட்டங்கள் நடைமுறைக்கு வரவே தாமதமாகிறது” (நன்றி அஜிதா)


“குற்றவாளிகளை விரைவாகவும் கடுமையாகவும் தண்டிக்கும் போதுதான் அச்சம், அவமானம், தவறான கட்டுப்பெட்டித் தனம் விலகும். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிதான் எழுதப்படுகிறது. அதற்கு மாறாக, குற்றம் இழைத்தவருக்குத் தரப்படும் தண்டனைகளைப் பற்றியும் வழக்குகளைப் பற்றியும் எழுதப்பட வேண்டும்”


''குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமே என்ற அச்சத்திலேயே பலர் தங்கள் குழந்தைக்கு நேர்ந்த அநீதியை வெளியே சொல்வதில்லை. ஆனால் இந்தத் தயக்கமே குற்றங்களை அதிகாரித்து விட்டது, அடுத்தவர் வீடு தானே பற்றி எரிகின்றது அமைதி காத்தால் அந்த தீ நாளை கணத்தில் நம் வீட்டிலும் பரவலாம்..''


''உனக்கு நாட்டில் நடக்கும் குற்றங்களை பற்றியும் அதை தடுக்கவும் தண்டனை வழங்கவும் இருக்கும் சட்டத்தை பற்றியும் அது செயல்படும் முறை பற்றியும் என்ன தெரியும், ஒன்பது வயது குழந்தை நீ..'' வழக்கறிஜர் சொல்ல அதில் வெகுண்ட வேதா தனது வாதத்தை தொடங்க வாயடைத்து போனது மொத்த நீதிமன்றமும்...





Punishments for Offences covered in the Act
• Penetrative Sexual Assault (Section 3) on a child — Not less than seven years which may extend to imprisonment for life, and fine (Section 4)
• Aggravated Penetrative Sexual Assault (Section 5) — Not less than ten years which may extend to imprisonment for life, and fine (Section 6)
• Sexual Assault (Section 7) i.e. sexual contact without penetration — Not less than three years which may extend to five years, and fine (Section 8)
• Aggravated Sexual Assault (Section 9) by a person in authority — Not less than five years which may extend to seven years, and fine (Section 10)
• Sexual Harassment of the Child (Section 11) — Three years and fine (Section 12)
• Use of Child for Pornographic Purposes (Section 13) — Five years and fine and in the event of subsequent conviction, seven years and fine Section 14 (1)

ஆங்கிலத்தில் சொன்னவள் அதை அடுத்து விளக்கமாக மொழி பெயர்த்து சொல்லவவும் அதை கேட்ட பலருக்கும் மனம் கூசிப்போனது பெண்குழந்தைகளின் அவல நிலையை நினைத்து,


குழந்தை பாலியல் முறைகேடுக்கு எதிரான சட்டங்கள்:

1.உடலுள் ஊடுருவும் பாலியல் வன்கொடுமை:(Penetrative Sexual Assault)

தண்டனை: குற்றவாளிக்கு குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டலாம்.

2.உடல்ஊடுறுவல் இல்லாத பாலியல் வன்கொடுமை:(Sexual Assault)

பாலியல் நோக்குடன் குழந்தையின் எந்தவொரு உடல் பாகத்தை தொடுவதோ அல்லது தொடச் செய்வதோ அந்தக் குழந்தையை பாலியல் வன்முறை செய்வதாகும்.

தண்டனை:குற்றம் செய்தவர் யாராயிருப்பினும் 3 வருட சிறைதண்டனை விதிக்கப்படும். அத்தண்டனை 5 வருடத்திற்க்கும் நீட்டிக்கப்படலாம்.

3.மோசமான பாலியல் கொடுமை:(Aggravated Penetrative Sexual Assault / Aggravated Sexual Assault)

சில நடவடிக்கைகளை சட்டம் மோசமான பாலியல் கொடுமையாக வரையறுக்கிறது.

தண்டனை:

உடல்ஊடுறுவலுடன் மோசமான பாலியல் கொடுமை செய்தவருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அது ஆயுள் தண்டனையாகவும் நீட்டிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படலாம்.

உடல் ஊடுறுவல் அற்ற மோசமான பாலியல் கொடுமை செய்தவருக்கு 5 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.



4.பாலியல் துன்புறுத்தல்:(Sexual harassment)

குழந்தை கேட்கக் கூடியதாகவோ அல்லது பார்க்கக் கூடிய வகையிலோ பாலியல் எண்ணத்தோடு செய்யப்படும் சத்தமோ அல்லது செய்கையோ அல்லது உடல் உறுப்பை காட்சிப்படுத்துவதோ பாலியல் துன்புறுத்தல் ஆகும். குழந்தையை இடைவிடாது தொடர்ந்து நேரிலோ அல்லது மின்னணு சாதனங்கள் மூலமாகவோ அல்லது வேறு வகையில் பார்ப்பதோ, பாலியல் நோக்கில் எந்த ஒரு பொருளை காட்டுவதோ, அல்லது ஆபாச பட நோக்கத்தில் குழந்தையை மயக்குவதோ குழந்தை பாலியல் முறைகேடாக எடுத்தக்கொள்ளப்படும்.

தண்டனை: குழந்தையிடம் பாலியல் முறைகேடாக நடப்பவருக்கு 3 வருட சிறை தண்டனை தரப்படலாம்.

5. குழந்தை ஆபாச படத்திற்கு எதிரான சட்டம்

ஆபாச பட நோக்கில் ஒரு குழந்தையையோ அல்லது பல குழந்தைகளையோ பயன்படுத்துபவருக்கு 5 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். தொடர் குற்றங்களுக்கு 7வருடங்கள் வரை சிறை தண்டனையும் , சில சமயங்களில் அபராமும் விதிக்கப்படலாம்.

6.உடந்தை:
குற்றம் செய்வதற்கு துணை போவதும், நடந்த குற்றத்தைப் பற்றிய உண்மை நிலவரத்தை மறைப்பதும் உடந்தையாக கருதப்படும்

தண்டனை:குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவருக்கு அவரே குற்றம் செய்த்தாக கருதி தண்டனை வழங்கப்படும்.

7. குற்றம் செய்ய முயற்சி:

குற்றம் செய்ய முயல்பவருக்கு, குற்றம் செய்வதற்க்கான தண்டனையில் பாதியளவு சிறை தண்டனை வழங்கப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படலாம்.

8.அறிந்து கொண்டு புகார் அளிக்காமல் இருத்தல்:

குழந்தைக்கு பாலியல் வன்முறை நடப்பதை ஒருவர் அறிய வந்தாலோ அல்லது நடக்கும் என்று எதிர்பார்த்தாலோ அதை உடனடியாக காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். அப்படி நல்எண்ணத்துடன் புகார் செய்பவர் குற்றவியல் மற்றும் குடிமையியல் பொறுப்பில்; பொய்புகார் செய்பவராக கருதப்படமாட்டார்.

தண்டனை: குழந்தை வன்கொடுமை பற்றி அறிந்து இருந்தும் புகார் செய்ய தவறுபவருக்கு (குழந்தைகள் தவிர) 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஒரு அமைப்பு அல்லது நிறுவனப் பொறுப்பில் இருப்பவர்(குழந்தைகள் தவிர) தான் அறிந்த குழந்தை வன்கொடுமை பற்றிபுகார் செய்யாமல் இருந்தால் , அவருக்கு 1 வருட சிறை தண்டனை உடன் கூடிய அபராதம் விதிக்கப்படலாம்.

9.புகாரை பதிவு செய்யாமல் இருத்தல்:
எந்த ஒரு காவலர் குழந்தை பாலியல் வன்கொடுமை பற்றிய புகாரை பதிவு செய்யவில்லை என்றாலும்; அவருக்கு இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் பிரிவு 166ன் கீழ் குறைந்த பட்சம் 6 மாத சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

10.மருத்துவ உதவி அளிக்க மறுத்தல் :
மருத்துவ மையத்தில் இருப்பவர் , மருத்துவ உதவி அளிக்க மறுத்தால், அவர் பிரிவு 166Bன் கீழ் சிறை தண்டனை அனுபவிக்கவோ அல்லது அபராதம் கட்டவோ நேரும்.



இத்தகைய தண்டனையை அவர்களுக்கு அளிக்க, பாதிக்க பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்:

1. சம்பவத்தைக் குறித்து காவல் நிலையத்திலோ அல்லது சிறப்பு சீர்திருத்த காவல் நிலையத்திலோ புகார் செய்யலாம்.

2. காவலர்கள், குழந்தையை அருகாமையில் உள்ள மருத்துவ மையத்தற்க்கு 24 மணி நேரத்திற்குள் அழைத்து செல்ல வேண்டும்.

3. மருத்துவ பரிசோதனையின் போது கட்டாயமாக பெண் ஒருவர் உடன் இருக்க வேண்டும். மேலும், பெற்றோர் உடன் இல்லாமல் இருந்தால், பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரி 24 மணி நேரத்திற்குள், பெண் காவல் அதிகாரியையோ, உதவியாளரையோ வரவழைக்க வேண்டும்.

4. மருத்துவ உதவிக்கு செல்வதற்க்கு முன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்க வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாததால்; மருத்துவ உதவி செய்ய முடியாது என்று எந்த மருத்துவரும் பாதிக்கப்பட்டவரை திருப்பி அனுப்ப முடியாது.

5. 24 மணிநேரத்திற்குள் குழந்தை நல குழுவிற்கும் (எல்லா மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.) காவலர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

6. 30 நாட்களுக்குள் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். 1 வருடத்திற்குள் சிறப்பு நீதிமன்றத்தால் வழக்கு முடிக்கப்பட வேண்டும். துரித விசாரணைக்காகவே சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


பெரும்பாலும் நமது நீதித்துறை, சாட்சியங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குகிறது. அதுமட்டும் இல்லாமல், இதுதான் பாலியல் குற்றம் என்று நீதிமன்றம் செய்துவைத்துள்ள வரையறைகளுக்கு அப்பால் எத்தனையோ பரிமாணங்களில் பாலியல் குற்றங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன அவற்றை எப்படிக் கூண்டில் ஏற்றுவது, எப்படி தண்டனை வாங்கி தருவது....


இது தான் நீங்க சொன்ன சட்டமும் தண்டனையும்..'' வேதா சொல்லி முடித்ததும் அங்கிருந்த பலருக்கு மூச்சே அடைத்தது...

தன் பிள்ளை அப்பா என்று அழைத்து பேசுவதை கேட்டு பூரிப்பும் பெருமிதமும் அடையவேண்டிய தந்தை, இன்று தன் உத்திரம் தனக்கு எதிராக வாதாடுவதை கேட்டு தன்னையே அருவெறுத்து நின்றான் சுரேன்....



பிள்ளையின் கிள்ளை மொழியை
கேட்டு ரசித்து மகிழ வேண்டிய தந்தை
தலை குனிந்து நிற்கின்றான்
காரணம்
பொதுவில் பெதும்பை பேசியது
கிள்ளை மொழி அல்ல
உள்ளம் கொண்டவரை
உறுத்தவோ இல்லை உணரவோ செய்யும்
பெண்களின் அவல நிலையின் மொழி.
 
Last edited:

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வலி - 7

வேதா மறுபிறவி என்பது ஊடகங்களின் மூலமாகவும் இன்றைய தொழில்நுட்பங்களின் மூலமாக தீயாக பரவியது, மக்களுக்கு தேவசேனா மறுபிறவி என்பது வாதத்துக்கும், விமர்சனத்துக்கும் மட்டும் இன்றி மிகுந்த ஆச்சர்யத்துக்கும் ஆர்வத்துக்கு உரிய விஷயமாக மாறியது..


நீதி மன்றத்துக்கு சாட்சிகளும் ஆவணங்களுமே தேவை என்பதால் ஷாக்ஷி தன்னுடைய இறந்த தோழி தேவசேனாவின் பெற்றோர் மூலம் மீண்டும் வழக்கு தொடர, ஷாக்ஷி சுரேனுக்கு எதிராக அன்று கண்டதை கண்ணால் கண்ட சாட்சியாக இன்று நீதிமன்றத்தில் சாட்சி சொன்னது நீதி மன்றத்தால் ஏற்றுக்கொள்ள பட்டதா இல்லை நிராகரிக்க பட்டதா என்ற குழப்பத்துக்கு விடைகிடைக்காமலே அடுத்து சேனா அன்றைய சம்பவத்தை சொல்லவும் அதை கேட்க முடியாத சுரேன் தனது குற்றத்தை ஒத்துக்கொள்ள அவனுக்கு தண்டனை அளிக்கப்படும் தேதியை குறிப்பிட்டு நீதிபதி வெளியேற, சுரேன் சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல பட, ஊடகங்கள் யாவும் உமா, ஷாக்ஷி, தேவசேனா என்ற மூன்று பெண்களையும் மொய்த்துக்கொண்டு தனது கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தது...


ஏற்கனவே இந்த ஊடகங்களின் கேள்வி தாக்குதல்கள் அனைத்தையும் சந்தித்த பெண்கள் இன்றும் தயங்காது அதை எதிர்கொண்டனர்..


''என்ன தப்பு செய்து இருந்தாலும் மகனை ஒரு தாய் விட்டுக்கொடுக்க மாட்டாங்க ஆனா நீங்க...'' நிருபர் ஒருவர் உமாவை கேட்க


''அம்மா நான் இப்படி ஒரு தப்பு செய்துட்டேன் என்று என் மகன் வந்து என்கிட்டே சொல்லி மன்னிப்பு கேட்டு இருந்தா ஒரு தாயா கண்டிப்பா அவனை மன்னிச்சி நல்வழி படுத்த முயற்சி செய்து இருப்பேன், திருந்தாத பிள்ளைக்கு தன்னை திருத்திகொள்ள முயற்சிக்காத பிள்ளைக்கு தாயாய் இருந்து அரவணைப்பதை விட ஒரு பெண்ணாக இருந்து தவறை சுட்டிக்காட்டவே மனது நினைக்கின்றது....'' பதிலளித்தவர் மருமகள் மற்றும் பேத்தியோடு அங்கிருந்து வெளியேறினார், அவர் மனதோ உண்மையெல்லாம் தான் தெரிந்துகொண்ட நாளை நோக்கி பயணித்தது...




பெற்றுஎடுத்த மகனின் உண்மை முகம் தெரிய வந்ததும் அந்த தாயின் உள்ளம் இறைவனிடம் எழுப்பிய ஒரே கேள்வி 'இதை எல்லாம் கேட்ட பின்பும் என் இதயம் ஏன் இன்னும் தன்னுடைய துடிப்பை நிறுத்தாமல் இருக்கின்றது..' என்பது தான்


வலி, கோபம், வெறுப்பு , ஆவேசம் , ஆதங்கம் , குற்றவுணர்ச்சி , அருவெறுப்பு , கழிவிரக்கம் , என்று எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் சிலையென நின்ற உமாவிற்கு பல மணித்துளிகள் சிலையென நின்றவர் கணவனின் உலுக்கலில் சுயம் பெற்று,



கருவறையில் இருக்கும் தெய்வமாய் மௌனமாக இல்லாமல், கருவறையில் குழந்தையை சுமந்த நடமாடும் தெய்வங்களின் சான்றாக


''அவன் செய்த தவறை உணர்ந்து அவனே திருந்தி இருந்தா கண்டிப்பா ஒரு தாயா இருந்து அவனை காப்பாற்ற போராடி இருப்பேன், தான் செய்தது எத்தகைய பாதகம் என்று தெரிந்தும் அதற்காக சற்றும் வருந்தாமல் இன்று இந்த நிமிடம் வரை தனது விருப்பப்படி தனது வாழ்க்கையை வாழும் அவனுக்குகாக நான் கண்ணீர் சிந்தினால் அது நான் இன்னொரு தாய்க்கும் அவளது தாய்மைக்கும் செய்யும் அவமானம்.



செய்து தவறுக்கு வருந்தாத பிள்ளையும், தவறை நினைத்து நாளடைவில் திருந்தாத பிள்ளையும் நாட்டுக்கு மட்டும் அல்ல வீட்டுக்கும் கேடு என்றும்.'' தான் மருமகளின் பக்கம் என்பதை மறைமுகமாக சொல்ல, அதை கேட்ட பரந்தாமன் சுரேன் இருவரும் அதிர்ந்து நின்றனர்..


''உமா....'' தன்னிலை விளக்கம் சொல்ல வந்த கணவரை தடுத்த உமா, ''நீங்க எனக்காக தான் இந்த உண்மையை என்கிட்ட சொல்லாமலும் நம்ம பிள்ளையை தண்டிக்க முடியாமலும் இத்தனை வருசமா மனசுக்குள்ள தவிச்சிக்கிட்டு இருந்தீங்க என்பதை நீங்க சொல்லி தான் நான் தெரிந்துகொள்ள வேண்டுமா...'' கேள்வியாக நிறுத்த


வாழ்க்கையில் முதல் முறையாக தன்னுடைய தவறை உணர ஆரம்பித்தான் சுரேன், இப்படி பட்ட ஒரு பெற்றவர்ளுக்கு மகனாக பிறந்து சிற்றின்பத்தை பெரிதாக நினைத்து காலமெல்லாம் அனுபவிக்க வேண்டிய அன்பை இப்படி குறுகிய காலத்தில் இழக்கும் படி தவறான செயலை செய்து விட்டேனே என்று..



அதன் பிறகு தாய், தந்தை , மனைவி , மகள் என்று யாரிடமும் ஒரு வார்த்தை சுரேன் பேசவில்லை, இனி அவர்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்க்கு கட்டுப்பட வேண்டும் என்ற தீர்க்கமான மனநிலையோடு நின்றாலும் அவன் கண்கள் வலியோடும் , வேதனையோடும் மகள் மீது படிவதை தவிர்க்க முடியவில்லை..


சுரேனின் பார்வையை உணர்ந்து கொண்ட சாக்ஷி மனதார இறைவனுக்கு நன்றி தெரிவித்தாள் தனது முயற்சி சரியான பாதையில் பயணிப்பதை நினைத்து...


சாக்ஷி தனது தோழியின் பெற்றோர் மூலமாக மீண்டும் சுரேன் மீது சந்தேகத்தின் பெயரில் வழக்கு பதிவு செய்ய, காவல் துறையினர் தங்கள் விசாரணையை தொடன்கினர், தேவசேனா மறுபிறவி என்பது உடங்களின் கவனத்தை கவர, விசாரணை மேலும் தீவிரமடைந்தது..



எந்தவித எதிர்ப்பும் இன்றி சுரேன் அணைத்து குற்றங்களையும் ஒப்புக்கொள்ள வழக்கு நீதி விசாரணைக்காக நீதி மன்றம் சென்றது...


சாட்சியங்களின் அடிப்படையில் வழக்கை நீதிபதி விசாரிக்க, முக்கியமாக சுரேன் எதையும் எதிர்க்காமல் ஒப்புக்கொண்டது விசாரணை விரைவாக முடிய வழிவகுத்தது...


தேவசேனா மறுபிறவி என்பதை ஒரு வழக்கறிஜர் கேலியாகவும் கேள்வி எழுப்பியும் நிறுத்த, அதை கேட்டு தேவசேனா நீதிமன்றம் மற்றும் காவல் நிலையங்களை பற்றி சற்று எதிர்மறையான கருத்துகளை சொல்லவும் அவர் வெகுண்டு சேனாவிடம் ஒரு ஒன்பது வயது சிறுமி உனக்கு என்ன தெரியும் என்று ஆவேசமாக கேள்வி எழுப்ப, அதற்கு அவள் சொன்ன பதில்கள் அனைவரையும் வாயடைக்க செய்ததோடு தலை குனியவும் செய்தது...


சுரேன் மற்றும் மஹாபாரதி இருவரும் தங்களுக்கான தீர்ப்புக்கான நாளை நோக்கி காத்திருக்க அவர்களின் குடும்பத்தினர் விமர்சனங்களையும் கேள்விகளையும் கண்டு அஞ்சாமல் நீதிக்காக தங்களின் நிலையில் நின்று பிறழாமல் அனைத்தையும் பொறுமையோடு கையாண்டனர்...


இதில் தேவசேனா தான் மிகுந்த சோதனைகளை அனுபவித்தாள், இதை கண்டு சாக்ஷி மிகுந்த வேதனை கொண்டாலும் அதனை வெளிக்காட்டாமல், நாளைக்கு பல குழந்தைகளின் வாழ்க்கையை காக்க வேண்டும் என்றால் தன்னுடைய மகள் இந்த வேதனையை தாங்கி கொள்ள தான் வேண்டும் என்று முடிவெடுத்து சேனாவிற்கு துணையாக சாக்ஷி இருந்தாள்...



தனது குஞ்சுகளை இறகுக்குள் அடைகாக்கும் தாய் பறவையாகவும், தேவையான சமயம் அவளை தனித்து விட்டு போராடவும் செய்தால் அவளுக்கு அரணாக நின்று, சாக்ஷிக்கு பரந்தாமன் மற்றும் உமாவின் துணை மேலும் பலமளிக்க, ஒரு சிலரின் மனதில் இவர்களின் நேர்மையான சிந்தனை சட்டையடியாக விழுந்தது என்றால் அது மிகையாகாது...



அனைவலராலும் எதிர்பார்க்க பட்ட அந்த நாலும் வர மஹாபாரதி மற்றும் சுரேன் இருவருக்கும் நீதிபதியால் மரணதண்டனை என்று தீர்ப்பு எழுத பட்டது...





தீர்ப்பு சொன்னதும் மகளை தீபேஷ் ஒரு அர்த்தமுள்ள பார்வையை பார்க்க அவளும் அதை புன்னகையோடு ஏற்றுக்கொண்டால், தீர்ப்பு சொல்லிவிட்டு நிமிர்ந்த நீதிபதி தனது வாழ்நாளில் எத்தனையோ வழக்குகளை சந்தித்து அதற்க்கு தீர்ப்பு எழுதி இருந்தாலும் பாரதியின் புன்னகை அவர் கடைவிழி ஓரம் கசிய செய்தது...



சுரேனுக்கு அளிக்க பட்ட தீர்ப்புக்கு சிறிய அளவில் எதிர்ப்பு இருந்தாலும் அது வலுபெறவில்லை, ஆனால் பாரதிக்கு வழங்க பட்ட தீர்ப்பு பலரால் எதிர்க்கப்பட்டு அதற்க்கு எதிராக போராட்டங்கள் நடந்தது...


உடகங்களில் பாரதிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு விவாதமாக, பாரதிக்கு சாதகமாக அவளது தண்டனையை குறைக்க சொல்லி சிலர் வழக்கு தொடுக்க, பாரதி அதற்க்கு ஒத்துக்கொள்ளத்தால் அவளது தண்டனையை நிறைவேற்றும் காலத்தை துரிதப்படுத்தினர், சட்ட ஒழுங்கினை காப்பாற்ற...


யாரும் எதிர்பார்க்காத விதமாக உமா தனது மகன் சுரேனுக்காக மேல் முறையீடு செய்ய, மஹாபாரதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது...



தீபேஷ் சிதைக்கு கொல்லி வைக்க, சில மணி நேரத்தில் நெருப்பில் வெந்து எல்லாம் சாம்பலானது...



கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே

கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி -
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி -
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி
கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே

சதி செயல் செய்தவன் புத்திசாலி -
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே




கல்லுக்கு உயிர்வருமா
கல் மனம் கொண்டவர் உயிர்ப்படைய
கேள்விகள் நம்மிடம்
இதற்க்கு பதில் காலத்திடம்...



மரித்தும் உயிர்க்கும்.....
 
Last edited:

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வலி - 8(நிறைவு பகுதி )

கிழக்கே உதித்து மேற்கே மறையும் செங்கதிரோன் உதிக்கும் காலமும் மறையும் நேரமும் நாட்டுக்கு நாடு மாறுபட்டாலும் பகலவன் பணி மாறுவதில்லை. இன்றைய விடியலுக்கான நேரம் நெருங்க,


விடியலுக்கு இல்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும்
இரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
இரத்தத்தின் இரத்தத்தில்
அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
யுத்தங்கள் தோன்றட்டும்
இரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
இரத்தத்தின் இரத்தத்தில்
அச்சங்கள் வேகட்டும் கொள்கை மாறலாமா


''ஆம், நான் கொண்ட கொள்கையில் இருந்து ஏன் மாறவேண்டும்..'' உறுதியாக நினைத்தவள் மீண்டும் அந்த பாடலை முதலில் இருந்து ஒலிக்க வைக்க


''தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?



உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா


''மறக்க கூடாது...'' பதிலளித்தவள் பாடலை நிறுத்திவிட்டு செங்கதிரோனின் தரிசனத்தை காண சென்றாள்...


தன் செம்மையான கதிர்களால் தரணியில் இருளை விரட்டிய ஆதவனின் கதிர்கள் காலனிடம் இருந்து மீண்டு வந்த காரிகையை வாழ்த்தி வரவேற்க, பகலவனுக்கு தன் புன்னகை மூலம் நன்றி சொன்னவள், புத்துணர்ச்சியோடு புறப்பட்டு சென்றாள்...

தங்களின் முன்னாள் நிற்கும் உருவத்தை திகிலோடு ஐவரும் பார்க்க,

''நான் ஆவி இல்லை, இங்க பாருங்க கால் இருக்கு..'' நக்கலாக மொழியவும் அதை கேட்ட அவர்களுக்கு குழப்பமாகவும் அதே சமயம் எப்படி இது சத்தியம் என்ற எண்ணமும் எழுந்தது, அவர்களின் எண்ண ஓட்டத்தை சரியாக படித்த பாரதி...


''நீங்க பணத்தால் சாதிப்பேன் என்று சொன்னதை நான் நல்ல மனத்தால் சாதித்து விட்டேன், அதற்க்கு சாட்சியாக உங்களின் முன்னாள் நான்...'' புன்னகையோடு சொல்ல, ஏற்கனவே மரணத்தின் விளிம்பு வரை சென்று ஒருவழியாக பிழைத்து வந்தர்வர்கள், அந்த வழியை ஏற்படுத்திக்கொடுத்தவள் ஆடும் சதுரங்க ஆட்டத்தை புரிந்தும் புரியாமல் வேடிக்கை பார்க்க,


''நான் அன்னைக்கு இதுக்கு எல்லாம் நீங்க சட்டத்தின் முன்னிலையில் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்ன்னு சொன்ன போது..'' சிறு இடைவெளி விட்டு ஐவரில் ஒருவனான வினீத்தை சுட்டிக்காட்டி ''நீ என்ன சொன்ன, எங்க கிட்ட இருக்க பணத்துக்கு நீ எங்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்து தூக்கு மேடைக்கே அனுப்பினாலும், நாங்க தப்பிச்சிடுவோம், ஏன் தெரியுமா money makes many things, அதுல இதுவும் ஒன்னுன்னு பணத்திமிரில் நீ சொன்னதை தான் மனத்தை கொண்டு சாதித்துக்கொண்டேன்.. அவ்வுளவே...'' அசாதாரனமான ஒரு விஷயத்தை சாதாரனமாக மஹாபாரதி சொல்ல


அவள் பேசுவதை கேட்ட அவர்களுக்கு பல வித உணர்வுகள் மனதில் எழுந்தாலும் அதில் பிரதானமாக இருந்தது பயம் மட்டுமே, இவள் தங்களை என்ன செய்ய காத்திருக்கின்றாளோ என்ற பயம் மட்டுமே, மரண பயத்தையும் தாண்டிய ஒரு பயம், ஏனென்றால் அவர்கள் தான் அந்த மரண பயத்தை பாரதியின் உபயத்தால் கடந்து விட்டார்களே...


மஹாபாரதியின் முன்னாள் நின்று கொண்டு இருந்த வினீத் , அருண் , ஆதர்ஷ் , வினய் , விகல்பன் ஐவரின் எண்ணங்களும் மரணத்தை தொட்டு வந்த நாளை நோக்கி பயணித்தது...


அவர்களின் மிரட்டல், வேண்டுதல், கதறல் என்று எதையும் பொருட்படுத்தாமல் காருக்கு தீ வைத்த பாரதி சற்று நேரத்தில் அவர்களை சிலரின் உதவியோடு தீயில்இருந்து மீட்டு விட்டாள், புகையால் மூச்சு திணறல் மற்றும் சிறு சிறு நெருப்புக்காயங்களோடு அவர்கள் தப்பித்து கொள்ள அடுத்த நாள் கோவில்களில் தீமிதி விழாவுக்கு ஏற்பாடு செய்வது போல ஒரு அடி ஆழத்துக்கு ஆறு அடி அகலத்துக்கும் இருபதுஅடி நீளத்துக்கும் பள்ளம் எடுத்து அதில் கட்டைகளை எரித்து நெருப்பு துண்டங்களை பரப்பி, பாதி உணர்வு மயங்கும் அளவுக்கு மயக்க மருந்து கொடுத்து அந்த நெருப்பில் ஒருவர் பின் ஒருவராக உருட்டி வந்தாள், பெண்ணவள் மனதில் எரிந்துகொண்டு இருக்கும் நெருப்புக்கு முன்னாள் பெண்ணவள் காலடி பட்ட நெருப்பு வீரியம் குறைந்துபோக, பெண்ணவள் பத்தாம் பாவிகளை பந்தாடியது...


தீக்காயம் பட்டு உடல் எல்லாம் புண்ணாக வலியால் துடிக்க ஆரம்பித்தனர், பாரதி அவர்களுக்கு உண்டாக்கியது இரண்டாம் நிலை தீ காயங்கள் Second-degree (partial thickness) burns. Second-degree burns involve the epidermis and part of the dermis layer of skin. The burn site appears red, blistered, and may be swollen and painful, இந்த காயங்கள் குணமாக 3 -8 வாரங்கள் வரை ஆகும்.


இந்த காயம்பட்ட நிலையில் ஐவரின் இருப்பிடம் எளிதாக அவசர ஊர்தி மூலம் மாற்றப்பட்டு ஒரு மலை கிராமத்தை வந்து அடைந்தனர், அவர்கள் காயம் ஆறும் வரை மருத்துவ சிகிச்சை மட்டும் இல்லை செய்திதாள் மற்றும் தொலைக்காட்சி மூலம் பாரதி சிறை சென்றது முதல் மரண தண்டனை வரை அனைத்தையும் அறிந்து இருந்தனர்...


இதை அறிந்த போது அவர்களுக்கு உண்டான அதிர்ச்சிக்கும், பயத்துக்கும் அளவே இல்லை,
தங்களை கடத்தி இப்படி எல்லாம் செய்த பாரதி இறந்து விட்டாள், இருப்பினும் நமக்கு இப்படி ஒரு அவல நிலை என்றால் இதற்க்கு பின்னாள், தங்களை சுழன்று சுழன்று அடிக்க ஏதோ பெரிய திட்டத்தோடு தான் எல்லாம் நடக்கின்றது என்பதை உணர முடியாத அளவுக்கு அவர்கள் முட்டாள் இல்லையே...


இப்படி இடுக்கில் மாட்டிய எலியாக அவர்கள் தவித்துக்கொண்டு இருந்தாலும் இப்படி பாரதி உயிரோடு தங்களின் கண் முன்னாள் உயிரோடு வந்து நிற்பாள் என்று கனவிலும் அவர்கள் நினைத்து பார்க்கவில்லை...


என்ன தான் காயங்களையும், அது தரும் வலிகளையும் வேதனைகளையும் அவர்கள் அனுபவித்து கொண்டு இருந்தாலும் உடலில் ஏதோ ஒரு அணுவின் ஆழத்தில் தங்கள் குடும்பத்தினரால் மீட்கப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கை இருக்க தான் செய்தது, அதற்க்கு நிகராக அவர்களின் பணத்தின் மீதான கர்வமும், அதிகாரத்தின் மீதான அகங்காரமும் இருந்தது, அது மொத்தமும் சுத்தமாக மடிந்து போனது மரண தண்டனையில் இருந்து மீண்டு வந்த பாரதியை பார்த்து..


காயங்கள் எல்லாம் குணமானதும் அவர்களுக்கான சிறைவாசம் தொடங்கியது, தினமும் அவர்கள் ஐவரும் தங்களுக்கு கொடுக்க படும் மூல பொருட்களை வைத்து ஊதுபத்திகளை உருவாக்க வேண்டும், அவர்கள் செய்யும் வேலையின் அளவுக்கு ஏற்ப உணவு வழங்கப்படும், இதில் அவர்கள் தப்பிக்க முயற்சித்து காலை பொசுக்கிக்கொண்டது மட்டும் இல்லாமல் கசையடி வாங்கிய நிகழ்வுகளும் இந்த ஓராண்டில் முதலில் பலமுறை நடந்து இப்போது அவர்கள் தேர்ந்த அடிமைகளாக மாற்ற பட்டனர், இதில் யாராவது ஒருவன் தற்கொலைக்கு முயன்றாள் அடுத்தவரை சாவின் விளிம்பு வரை கொண்டு சென்று காப்பற்றினர், மொத்தத்தில் அவர்கள் வாழவேண்டும், அதுவும் பாரதியால் நிர்ணயிக்கப்பட்ட நரகத்தில் வாழவேண்டும், உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையே இல்லாமல் உயிரோடு வாழ வேண்டும்...



மரணம் என்பது தண்டனை அல்ல விடுதலை, அழிந்துபோகும் போகும் உடலுக்கும் அழியாத ஆன்மாவுக்கும் கிடைக்கும் விடுதலை, மரணத்தினால் தவறு செய்ய துணையாக இருந்த உடல் மட்டுமே அழிக்கின்றது, ஆன்மா உடலில் இருந்து விடுபட்டு தண்டனையில் இருந்து தப்பித்து விடுகின்றது...


ஆன்மா கழட்டிப்போடும் சட்டை தான் உடல், அந்த சட்டையை தண்டிக்கும் சட்டங்களை தான் நாம் உருவாக்கி கடைபிடித்து வருகிறோம், நாம் கொடுக்கும் தண்டனை ஆன்மாவுக்கானதாக இருக்க வேண்டும், நாம் கொடுக்கும் தண்டனையின் வீரியின் அந்த ஆன்மாவில் பயத்தை ஆழ பதிக்க வேண்டும் அப்போது தானே அது மீண்டும் ஏற்கனவே செய்த தவறை செய்ய நினைத்து கூட பார்க்காது, அதை தான் பாரதி செயல்படுத்தினாள்..



கொலை கொள்ளை போன்ற குற்றங்களுக்கு கூட ஏதாவது ஒரு நியாயமான காரணத்தை சொல்லலாம் ஆனால் பெண்களுக்கு அதிலும் முக்கியமாக குழந்தைகளுக்கு நடக்கும் வன்கொடுமைக்கு...????


பணத்தில் பிறந்து, அதை கொண்டு உருவாக்கிய சொர்க்கத்தில் சொகுசாக பலரின் வாழந்த வினீத் , அருண் , ஆதர்ஷ் , வினய் , விகல்பன் ஐவரும் பாரதியின் முயற்சியால் தேர்ந்த அடிமைகளாக மாற்றப்பட்டனர்...


பாரதி இவர்களை முதலில் அழிக்க தான் முயற்சி செய்தால் ஆனால் அதன் பிறகு தான் மரணம் என்பது தண்டனை அல்ல என்ற முடிவுக்கு வந்து தனது திட்டத்தை மாற்றினால், இவர்களை கொலை செய்து விட்டு நீதிமன்றதிடம் வழக்காடி அவள் விடுதலை பெறலாம் ஆனால் அது அவளுக்கு மன திருப்தியை கொடுக்காது என்று உணர்ந்து தனது பழிவாங்களின் பாதையை மாற்றினாள், இதற்க்கு தான் தீபக் அப்படி பயந்தது, ஒரு வேலை அவர்களின் திட்டம் பலிக்காமல் போனால் பாரதிக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் முன்பு அவள் கொலை செய்துவிட்டதாக சொல்லப்பட்ட ஐவரையும் நீதி மன்றத்தில் ஒப்படைத்து காப்பாற்ற வேண்டும் இது தான் திட்டம் , இதற்க்கு அவசியம் ஏற்படாமல் பல நல்ல உள்ளங்களின் உதவியால் பாரதி மரண தண்டனையில் இருந்து காப்பற்றப்பட்டால், சட்டத்தை பொறுத்தவரை மட்டும் இல்லை இந்த உலகை பொறுத்தவரையில் அவள் உயிரோடு இல்லை ஆனால் .... அவள் உயிரோடு இருக்கின்றாள் உணர்வுகளை கொள்ளும் மிருகங்களை தண்டிக்க...


இவர்களை தண்டிப்பதை மட்டும் இல்லை இன்னும் சில போராட்டங்களுக்கு முதுகெலும்பாகவும் செயல்பட ஆரம்பித்தாள்...
தினமும் வேலை பெரும்பாலும் ஒருவேளை உணவு என்று வினீத் , அருண் , ஆதர்ஷ் , வினய் , விகல்பன் எல்லோரும் அவர்களுக்கான வாழ்க்கையை பாரதியின் புண்ணியத்தால் சிறப்பாக வாழ, நாட்டில் புரட்சிக்கான நாள் குறிக்கப்பட்டது....

***************

உமா நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய திரும்பவும் ஊடகங்களின் பார்வை அந்த பக்கம் திரும்பியது...


அவரிடம் பல கேள்விகளை கேட்க அதற்க்கு அவள் அளித்த ஒரே பதில், ''ஒரு பெண்ணாக இருந்து அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்துவிட்டேன் இப்போது ஒரு தாயாக தண்டிக்க போகிறேன்..'' என்பது தான் இதை கேட்ட அனைவருக்கும் புரிந்தும் புரியாது போல ஒரு மாயம் மனதினுள்..


சில மாத சிறைவாசத்தில் சுரேன் பெருமளவு மாறிப்போனான் உருவத்தில் மட்டும் அல்ல உள்ளத்தளவிலும் தான்...


சுரேனை சந்திக்க உமா , சாக்ஷி , சேனா மூவரும் சென்றனர், முதலில் அவர்களை பார்க்க மறுத்த சுரேன் சற்று நேரத்தில் மனம் மாறி அவர்களை பார்க்க சம்மதம் தெரிவித்தான்...



அவர்களை நேர்கொண்டு பார்க்க முடியாமல் ''நீங்க பண்ண மேல் முறையீட்டை வாபஸ் வாங்கிடுங்க..'' நிலம் பார்த்து சொன்னவன் அவ்வுளவு தான் என்பது போல திரும்பி செல்ல,


''நன்றி சுரேன்..'' தாயின் நன்றியில் அவரை கண்கலங்க ஏறிட


''பிள்ளையோட மரணத்தை எந்த பெத்தவங்களாலும் தாங்கிக்கொள்ள முடியாத நரக வேதனை அவன் குற்றம் செய்தவனாகவே இருந்தாலும்...


''அம்மா...நீங்க ...என்னை ....ம ..'' மன்னிச்சிடீங்களா என்று கேட்கமுடியாமல் செய்த பாதகம் தடுமாற வைக்க

''கண்டிப்பா இல்லை சுரேன்...'' தாயின் பதிலில் வலியோடு தலை குனிய,



''ஒரு ஆண் தவறு செய்யும் போது பாதிக்கப்படுவதும் பெண்கள் தான் அவன் செய்த தவறுக்காக பழிக்கப்படுவதும் பெண்கள் தான் அதேபோல அவன் செய்த குற்றத்திற்க்காக தண்டிக்கப்படும் போதும் சரி பாதிக்கப்படுவதும் பழிக்கப்படுவதும் பெண்கள் தான். அம்மா, மனைவி , மகள் , சகோதரி என்று....



மத்தவங்க விஷயத்தில் பாதிக்க பட்ட பெண்கள் என்றும் பழியை சுமக்கும் பெண்கள் என்று இருதரப்பு பெண்கள் இருப்பாங்க, உன்னோட விசயத்துல பாதிக்கபட்டதும் பழிக்கப்படுறதும் உன்னோட மனைவி மற்றும் மகள்..


''அம்மா போதும் ..'' மகனின் கெஞ்சலில் உமா வாயை மூடிக்கொள்ள


''நன்றி சுரேன்...'' மனைவியை கேள்வியாகவும் குழப்பமாகவும் பார்க்க,


''நீங்க எதிர்த்து வாதம் செய்து இருந்தாள் கண்டிப்பா நீங்க தண்டனையில் இருந்து தப்பித்து இருக்கலாம், நீங்க அப்படி செய்யலை அதற்க்கு தான் இந்த நன்றி...''விளக்கமளித்தவள் கணவனின் பார்வை மகள் மீது குற்றஉணர்ச்சியோடு படிவதை பார்த்து...


இதுவரை இவன் மனதளவில் வருந்தியது போதும் என்று நினைத்தாளோ இல்லை இனி இவன் கண்டிப்பாக தடம் மாற மாட்டான் மனம் மாறிவிட்டான் என்று உறுதியாக நினைத்தாளோ அவள் போட்ட சூட்சம முடிச்சை அவளே அவிழ்த்தாள்...


''தேவ சேனா என்ற பெயர் மட்டுமே இறந்துபோன தேவசேனாவோடது...'' சொல்லிய மறுகணம் அதிர்ச்சியோடு சுரேன் மனைவியை பார்க்க, இருவரின் நினைவுகளும் பின்னோக்கி பயணித்தது...



உமா சொன்னதை கேட்டு வேண்டா வெறுப்பாக குழந்தையை பார்க்க வந்த சுரேன் அந்த பிஞ்சு குழந்தையின் தரிசனத்தில் மனம் மாறி இவள் என் ரத்தம் என் உயிரில் இருந்து ஜனித்தவள் என்ற பாசம் பிறக்க அன்போடு குழந்தையை வாங்க அவனையும் அறியாமல் கை நீட்ட சாக்ஷி சுரேன் கையில் குழந்தையை கொடுக்கும் போது யாரும் அறியாமல் குழந்தையை கிள்ளி விட குழந்தை வலியால் அழ ஆரம்பித்தது, அதை கண்டதும் சுரேன் முகம் மாறிவிட்டது, இதை கண்டு தான் சாக்ஷி அன்று புன்னகைத்து,



இதே போல குழந்தையை சுரேன் நெருங்கும் நேரம் எல்லாம் சாக்ஷியின் திருவிளையாடல் திவ்வியமாக அரங்கேற சுரேன் மனதளவில் மிகவும் வருந்தினான், சுரேனின் வருத்தம் சாக்ஷிக்கு வெற்றியை கொடுக்க, குழந்தைக்காகவேனும் மனைவியை ஏற்றுக்கொள்ளலாம் என்று சுரேன் நினைக்க, குழந்தை அவன் ஸ்பரிசம் பட்டாலே அழுவதால் மனைவி மற்றும் மகளை விட்டு நிரந்தரமாக பிரிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்து அதை செயல்படுத்தினான்...


இந்த காலகட்டத்தில் சாக்ஷி அவள் மகள் சேனாவை, இறந்து போன தோழி தேவசேனாவை போல ஆடை அலங்காரம் செய்தது மட்டும் இல்லாமல் அவளுடைய எட்டாவது வயதில் நடந்த அனைத்தையும் சொல்லி அவளை தயார்படுத்த , புத்திசாலியான மகளும் அதை புரிந்துகொண்டு செய்யப்பட்டால், சுரேன் உடன் இருந்து சேனாவை வளர்த்து இருக்கவிட்டாலும் தன்னுடைய இருப்பை அவளுக்கு உணர்த்தி இருந்தால் கண்டிப்பாக அவள் தடுமாறி இருப்பாள்...


சுரேன் மகளிடம் இதுவரை பேசியது கூட இல்லை அனைத்திற்கும் மேலாக சேனா தந்தையின் புகைப்படத்தை கூட அவள் நினைவு தெரிந்த நாளில் இருந்து பார்த்தது இல்லை இதற்க்கு காரணம் சாக்ஷி...



சாக்ஷி மகளுக்கு செய்தது தவறு என்றாலும் ஒரு பெண்ணாக அவள் செய்தது நியாயம் தான்.. சுரேனை தண்டிப்பதில் சாக்ஷி உறுதியாக இருந்தது அவளுடைய மனவலிமையை அதிகரிக்க கொண்ட நிலையில் இருந்து மாறாமல் மாற்றங்களை உண்டாக்கினால்...


ஆண்டுகள் கடந்து வந்த சுரேன் அவனுடைய மகள் சேனா அவனால் இறந்து போன தேவசேனாவின் மறுஜென்மம் என்பது அவன் மனதை பாதிக்க எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் தனக்கான தண்டனையை ஏற்றுக்கொண்டான் சுரேன்...


நினைவுகளில் இருந்து மீண்ட இருவரும் சேனாவை பார்க்க, அப்பாவின் ஏக்கமான பார்வையும் தாயின் அர்த்தனமான பார்வையை உணர்ந்து சேனா ''அப்பா ..'' என்று அழைக்க அப்படியே தரையில் மடிந்து அமர்ந்த சுரேன் கதறி அழ ஆரம்பித்தான், அவன் கதறல் அங்கு இருந்த அனைவரின் மனதையும் தாக்கியது என்றால் மிகையாகாது...



போதையின் பிடியில் பிஞ்சு ஒன்று கருக காரணமாகி போனேனே என்று நினைத்து கதறினானா இல்லை செய்த பாதகம் நெஞ்சை பொசுக்க வலியோடு நடமாடியவன் இன்று தன் மகள் மறுஜென்மம் அல்ல என்ற உண்மையை தெரிந்துகொண்டதால் கடவுளுக்கு நன்றியாக தன்னுடைய கண்ணீரை சிந்தினானா என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்...



வெகுநேரமாகியும் அவன் கதறல் நிற்காமல் போக, சிறை காவலர்கள் அவனை வலுக்கட்டாயமாக அழைத்து செல்ல ...உமா, சேனா , சாக்ஷி அங்கிருந்து புறப்பட்டனர்...



மூன்று பெண்கள் அவனுக்கு எதிராக நின்று தண்டித்த போது உணர்ந்த வலியை விட அவர்கள் மன்னித்த போது உண்டான வலி சுரேனை உயிரோடு கொன்றது...


மேல் முறையீட்டில் சுரேனின் மரண தண்டனை இரட்டை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது...

மாற்றத்திர்க்கான நாள்....


நாடு முழுவதும் பெண்கள் எல்லாம் ஒன்று திரண்டு தங்களின் பாதுகாப்புக்காக போராட ஆரம்பித்தனர்...


எப்போதும் போல சாதாரண போராட்டம் தானே என்று அரசாங்கம் நினைக்க இந்திய அரசியல் சாசனத்தையே மாற்றி அமைத்தது இந்த போராட்டம், பெண்கள் அகிம்சை முறையில் மட்டும் இல்லை அவர்களின் போராட்டத்தை அவர்களே அவன படுத்தினர், போராட்டத்தை வலுவிழக்க செய்ய இணைய தொடர்புகளை துண்டித்தனர்...



மக்கள் சிறிதும் கவலை கொள்ளாமல் பழைய காலத்தில் இருந்தது போல மக்கள் இசை, நாடகம் போன்றவற்றின் மூலம் விழுப்புணர்வை உண்டாக்க,


நாட்டுக்கே அரசனானாலும் வீட்டரசிக்கு கணவன் தானே, தங்கள் வீட்டரசிக்கு துணையாக
ஆண்களும் போராட்டத்திற்கு துணையாக நின்றனர்...இது மாற்றத்திற்கான சமயம் என்று பெண்கள் எல்லோரும் அலுவலக பணிகளை கூட புறக்கணித்து போராட்டத்திற்கு வலுசேர்த்தனர்...


வெளியிடிங்களில் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் தான் எத்தனை, இத்தனை காலம் மௌனியாக இருந்தவர்கள் இன்று மௌனத்தையே ஆயுதமாக்கி போராடினர்... ஆம், இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் எடுத்த ஆயுதம் மௌனம்...


வீட்டிலும் சரி நாட்டிலும் சரி உனக்கு என்ன தெரியும் வாயை மூடு பெரும்பாலும் பெண்களை வாயடைக்க சொல்லுவது இதை தானே அதையே அவர்கள் செய்ய நாடே ஸ்தம்பித்து போனது, உலக நாடுகள் எல்லாம் வியக்கும் வகையில் மட்டும் அல்ல நம்மை ஒரு மதிப்போடு பார்க்கும் வகையில் இந்த போராட்டம் இருந்தது...


போராட்டம் வலுவடைய அரசு சமாதான பேச்சுவார்த்தை நடத்த, அவர்கள் மட்டும் தான் பேசினர் மக்கள் மௌனமாக இருந்தனர்...


சில உயிரிழப்புகள் ஏற்பட்ட போதும் போராட்டம் தொய்வு இல்லாமல் நடைபெற, மக்கள் தீர்வுக்க்கா போராடவில்லை இது தான் தீர்வு என்று நிர்ணயித்து ஒரு முடிவோடு தான் போராடுகின்றனர் என்று ஆள்பவர்களுக்கு புரிந்துபோக,


''இதை செய்கிறோம் அதை செய்கிறோம் என்று சொன்ன அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்..'' என்று கேள்வி எழுப்ப போராட்டத்தின் கோரிக்கை காகிதம் அவர்களிடம் கொடுக்கப்பட்டது..


1.மது உள்ளிட்ட போதை பொருள் உட்கொண்டு யாரும் பொது இடங்களில் நடமாடுபவர் உடனடியாக கைது செய்ய பட்டு போதை தெளிந்த பிறகு தான் விடுதலை செய்ய படவேண்டும்...

2.பாலியல் குற்றங்களை விசாரிக்க என்று மாவட்டம் தோறும் தனி நீதி மன்றம் சிறப்பு காவல் குழு அமைத்து, அந்த மாவட்டத்தில் இதுவரை பதிந்த வழக்குகள் எல்லாம் விசாரித்து உடனடியாக தண்டனை வழங்க பட வேண்டும்...

3. முக்கியமான கோரிக்கை பாலியல் குற்றங்கள் புரிந்தவர்களுக்கு என்று ஒவ்வொரு நாட்டிலும் தனி சிறைச்சாலை அமைக்க வேண்டும், அந்த சிறை சாலையில் பாதிக்க பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் காவலர்களாக பணி புரிய வேண்டும், உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரையிலும்...

4. ஒரு நாளை மூன்று எட்டு மணிநேரங்களாக பிரித்து பகுதிநேர முறையில் அந்த சிறையில் வேலைசெய்பவர்களின் பணி அமைய வேண்டும்..

5. அங்கு வேலை செய்பவர்களுக்கு மட்டுமே அரசாங்கம் செலவு செய்ய வேண்டும்..ஊதியம் , உணவு , உடை உள்ளிட்டவைகளுக்கு எல்லாம், சிறை கைதிகளுக்கு அரசாங்கம் எந்த செலவும் செய்ய கூடாது...

6.ஒவ்வொரு கைதியும் அவனுக்கு தேவையான உணவு மற்றும் உடைக்காக மற்றும் இன்றி அவன் இருக்கும் சிறைச்சாலைக்கான (உறைவிடத்திற்கான) அவனே கைத்தொழில் செய்து வருமானம் ஈட்ட வேண்டும்...

7. பாலியல் குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனையாக இருக்கும் மரண தண்டனை இரட்டை ஆயுள் தண்டனையாக மாற வேண்டும்.. குறைந்த பட்ச தண்டனையாக பத்து ஆண்டு சிறைத்தண்டனை இருக்க வேண்டும்...


8.போலியான பாலியல் புகார் தெரிவித்தாள் தண்டனை அடைத்தவருக்கு கொடுக்க பட்ட தண்டனைக்கு இரு மாடங்காக பொய் வழக்கு தொடுத்தவருக்கு வழங்க வேண்டும்...


9. நாட்டில் பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை, அளிக்க பட்ட தண்டனைகளின் விவரம், சிறை சாலை கைதிகள் ஈட்டிய வருமானம் மற்றும் செலவு கணக்கு எல்லாம் ஆண்டு தோறும் அரசாணையில் வெளியிட படவேண்டும்...

10. பாலியல் குற்றங்களுக்கு மட்டும் இல்லாமல், பெண்களின் மீதான பல்வேறு விதமான வன்கொடுமைகளுக்கு இது பொருந்துமாறு இந்திய அரசியல் சாசனம் மாற்றி எழுதப்பட வேண்டும்...



நாடெங்கும் பரவிய போராட்டம் இந்திய அரசியல் சாசனத்தையே மாற்றி எழுத வைத்தது....


ஆண்டுகள் கடந்து...


''பாரதி நேரமாச்சு...''


''இதோ வந்துட்டேன்..'' என்று வந்த பாரதி கணவனிடம் இருந்து உணவை பெற்றுக்கொண்டு இரண்டு வயது மகளை கணவனிடம் கொடுத்து விட்டு அவள் ஆசிரியராக பணியாற்றும் பள்ளியை நோக்கி சென்றாள்...


(பாரதியால் தண்டனை வழங்கப்பட்ட வினீத் , அருண் , ஆதர்ஷ் , வினய் , விகல்பன் இப்போது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சிறைச்சாலையில் தங்களின் இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவிக்கின்றனர், அவர்கள் பாரதி உயிரோடு இருப்பதாக சொல்ல அதை நம்ப யாரும் தயாராக இல்லை நிரூபிக்க அவர்களிடம் ஆதாரமும் இல்லை)


மாற்றத்திற்கான நெருப்பை உண்டாக்கிய பாரதியின் நிழலை கூட யாரும் பார்க்கவில்லை. இதற்காக அவள் தன்னுடைய வாழ்நாளில் பத்து ஆண்டுகளை செலவிட்டால் அன்று நாம் விடுதலை பெற பல தியாகிகள் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தது போல...


''அம்மா, அப்பா ...நான் ஹோட்டலுக்கு போறேன் நீங்க அக்னியை பார்த்துக்கோங்க, உங்களை ரொம்ப படுத்தினா எனக்கு போன் பண்ணுங்க நான் உடனே வந்திடுறேன்..'' என்று தீபேஷ் சௌந்தர்யாவிடம் சொன்ன பாரதியின் கணவன் அவன் நடத்தும் உணவகத்தை நோக்கி சென்றான்...


பல இன்னல்களுக்கு பிறகு மகளின் வாழ்க்கை மலர்ந்து விட்ட ஆனந்தத்தில் தீபேஷ் சௌந்தர்யா தம்பதியினர்...



பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிக்கு செல்ல வேண்டிய முதல் நாள் தந்தையை காண வந்த சேனா,

''அப்பா இன்னைக்கு நான் முதல் நாள் கல்லூரிக்கு போறேன்...'' என்று சொல்லி பாதத்தை தொட இரண்டடி தள்ளி நின்ற சுரேன்


''தேவதைங்க வரமளிக்க பிறந்தவங்க...'' என்றவன் மகள் முகம் வாடுவதை கண்டு பொறுக்க முடியாமல் வாழ்த்தியவன், அன்று போதையில் மூளை மழுங்கிய நிலைக்காக என்றும்
போல் இன்றும் கடவுளிடம் சண்டை போட்டு, மகளை இன்முகமாக வழி அனுப்பி வைத்தான்...






மகளின் வலியில் மனம் மரித்து மனிதம் உயிர்த்த தீபேஷ்
மகளின் கேள்வியில் மிருகம் மரித்து மனிதனாக உயிர்த்த சுரேன்


கற்பனையில் தீர்வாக தோன்றியது எழுதப்பட்டுவிட்டது
உண்மையில் காட்சிகள் எப்போது மாறுமோ
வலி தரும் கேள்வியோடு விடைபெறுகிறேன்...


நன்றி ....

சத்(தியா) வாணி
 
Status
Not open for further replies.
Top