All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யகீதாவின் "ராட்சசனே என் ரட்சகனே!!❤" - கதை திரி

Status
Not open for further replies.

RAJALAKSHMI11

New member
ராட்சசனா? ரட்சகனா? -50💓



தமிழின் வீட்டில் இருந்து கிளம்பிய ரிகானுக்கும் பூமிக்கும் அதிர்ச்சியை வழங்கவே வந்திருந்தனர் காளிங்கன்.. நடராஜன்.. மற்றும் அவர்களோடு அவர்களின் மனைவிமார்களும். அவர்களை கண்டதும் கோபம் எரிமலையென வெடிக்க காத்திருக்க எப்படி அம்மா இவர்களை வீட்டிற்குள் அனுமதித்தார்கள் என்று யோசிக்க அப்போது தான் அவர் இந்த நேரத்தில் கோயிலுக்கு சென்றிருப்பார், என்று உணர்ந்தான் ரிகான்.

காளிங்கனும் நடராஜனும் கால்மேல் கால் போட்டப்படி, அமர்ந்து இருக்க, இவர்களை பற்றி அறியாத சாதனா அவர்களுக்கு பழச்சாறை கொடுத்து உபசரித்து கொண்டிருக்க.. இதை கண்ட ரிகானுக்கு ரத்த அழுத்தம் எகிறியது. அவர்களை நோக்கி வேக எட்டுடன் நகர முயன்றவன் மனைவியின் முகம் காண அதுவோ உணர்ச்சி பிழம்பாக மாறியிருந்தது. ஆம் அவள் தன் பெரியம்மா, சித்தியை கண்களில் நீர் தேக்கியபடி கண்டிருந்தாள்..

என்ன தான் கணவனின் காதலில் அவள் கரைந்து கொணடிருந்தாலும், மனம் ஏனோ பிறந்த வீட்டை நினைத்து ஏங்க தோன்றியது.. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இது தோன்றுவது இயல்பு தானே.. அது போல் தான் பூமிக்கும் தோன்றியது. அன்பான பெரியம்மா.. பாசமான சித்தி.. அவர்களை நெடுநாள் பின் இப்போது காண, அவளின் மனமோ கலங்க, முகமோ உணர்வுகுவியிலாய் மாறிவிட்டது.

தன் மனையாளின் முகம் கண்டே அவளின் நிலை உணர்ந்தவன், அவள் கரத்தினை இறுக்கி பற்றியபடியே அவர்களை நோக்கி செல்ல கோவிலுக்கு சென்றிருந்த அமிர்தவள்ளியும் அப்போது தான் உள்ளே நுழைந்தார்.

அவரை கண்ட இருவரின் விழிகளும் ஏளனமாக அவர் மீது படிய "எப்படி இருக்கிங்க சம்பந்திம்மா" என்றவர் சம்பந்தி என்ற வார்த்தை ஒவ்வொரு எழுத்தாக அழுத்தி கேலியுடன் கூறினார்.

"எனக்கென்ன சிங்ககுட்டிங்க மாதிரி இரண்டு பசங்க, பொறுப்பான இரண்டு மருமக.. இதுல என் மூத்த புள்ளைக்கு பிள்ள பிறந்து எனக்கு பேரன் வரப்போறான்.. அதுனால என் சந்தோஷத்துக்கு குறை எதுனா இருக்குமா என்ன" நக்கல் குரலில் பதில் அளிக்க அதில் இருவரின் முகமும் கறுத்து போனது. உடனே தன்னை சுதாரித்த காளிங்கன் பூமியை நோக்கி,

"ஏன்‌ கண்ணு உனக்கு எங்கன மேல பாசமே இல்லையாடா.. ஏதோ கிறுக்கு பிடிச்சு அப்போ அப்படிலாம் நடந்துக்கிட்டோம்.. இன்னும் அதையே மனசுல வைச்சிருந்தா எப்படி கண்ணு‌‌.. அங்க உன் பெரியம்மா சித்தி எல்லாம் உன்னோட பேசாம எவ்ளோ தவிச்சு போனாங்க தெரியுமா" என்றதை கேட்டவுடன் அது வரை அவர்களை கண்ட பின் எழுந்த மகிழ்வு இப்போ குற்றவுணர்வாய் மாற, அவளின் கண்ணீரை கன்னங்களை தீண்ட, அதை கண்டு இருவரின் முகத்திலும் குரூர புன்னகை. ரிகானோ தன் மனையாளின் ஆறுதலாய் தோள் அணைக்க, மெதுவாக தன்னை நிலைப்படுத்தி நின்றாள் பூமிகா.

"ச்சே ஏங்க புள்ளையே சோர்ந்து போன மாதிரியிருக்க, அவங்ககிட்ட போய் என்னத்த பேசிட்டு கிடக்கிங்க" என்றபடி காளிங்கன் மனைவி சாந்தலட்சுமி அவள் கன்னம் வருட, நடராஜன் மனைவி கணகவள்ளியும் அவளை ஒரு பக்கம் அணைத்துக் கொள்ள, இருவரையும் கட்டிக்கொண்டு கதறிவிட்டாள் பூமிகா.

மெல்ல மெல்ல இயல்பு திரும்பியவள், கணவன் அவளை முறைப்பதை காணாமல் அவர்களோடு அரட்டை அடித்துக் கொண்டு இருக்க, நீண்ட நாள் கழித்த அவள் மனம் முழு மகிழ்ச்சி அடைந்தது போன்று காணப்பட்டது‌. ஆனால் இன்னும் சிறிது நேரத்திலேயே அவளின் மகிழ்வு சுக்கு நூறாய் உடைய போவதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

அவர்களோ நெடுநேரம் ஆளாவிக் கொண்டிருக்க, காளிங்கனுக்கும் நடராஜனுக்கும் தான் மனதில் இருந்த வஞ்சத்தை முகத்தில் பிரதிபலிக்காது பொறுமையாக காத்திருந்தனர். நேரம் இரவாகிவிட, அவர்களும் டிரையின் டிக்கெட் முன்னாடியே முன்பதிவு செய்திட அவர்களும் கிளம்ப ஆயத்தமாகினர்.

பெரியம்மா.. இப்பவே போறுமா நாளைக்கு போங்க.. என்று வருத்தத்தோடு பூமி கேட்க, இன்னொரு நாள் வரோம்டா என்றவர்கள் கிளம்ப நினைக்க, இப்போது தான் தன் திட்டத்தை செயல்படுத்த தொடங்கினார் காளிங்கன்.

ஏன்டி.. புள்ளைக்கு வாங்கிட்டு வந்த ஸ்வீட்டு எல்லாம் அப்படியே இருக்கு பாரு.. எடுத்து நீயே ஊட்டிவிடு என்றார் காளிங்கன்.

சாந்தவும் கணவனின் பேச்சைக் கேட்டவர் இனிப்பை எடுத்து அவளுக்கு ஊட்டபோக, மகிழ்வோடு அதை வாங்க காத்திருந்தாள் பூமி. ஆனால் சாந்தாவோ அவளுக்கு ஊட்டாமல் தன் வாயருகே கொண்டு போக, அவர் அதனை சாப்பிட முன்னமே பதட்டத்துடன் அதனை தட்டிவிட்டார் காளிங்கன்.

ஏங்க இப்போ எதுக்கு இனிப்பை தள்ளி விட்டிங்க.. அதுல விஷம் ஏதும் கலந்து இருக்கீகளோ என்றவர் இன்னொரு இனிப்பை எடுத்து சாப்பிட போக, கோபமாக அதனை தட்டிவிட்டார் ஆமாடி.. அதுல விஷம் தான் இருக்கு.. சாப்பிட்டு செத்து தொலைஞ்சிடாத என்று எரிச்சலாக சொல்ல, அதுவரை புரியாமல் முழித்திருந்த அனைவருக்கும் புரிய, ரிகானோ கோபத்தில் அவரை அடிக்க செல்ல, கண்களில் வழியும் கண்ணீரோடு அதனை வேண்டாம் என்று தடுத்தாள் பூமிகா.

இதுவரை தன் கணவனை எதிர்த்து பேசிடாத சாந்தா அன்று தன் வாய் திறந்தார்.. " ஏங்க இப்படி பண்ணிங்க சொல்லுங்க.. நேத்து தோப்புல நீங்க உங்க தம்பிக்கிட்ட பேச்சிட்ட இருந்த எல்லாத்தையும் கேட்டுட்டேன்.. ஏன் மாமா இப்படி பண்ணிக.. பூமியும் என் மக மாதிரி தானே.. அதுவும் அவளை என் கையாலே கொல்ல பார்க்கிறிங்களே.. நான் உங்களுக்கு என்ன பாவம் செஞ்சேன்.. இல்லை அவ தான் உங்களை என்ன செஞ்சா.. ஏன் மாமா இந்த பழிவெறி.. சொத்து.. சொத்து.. அதுமட்டும் தான் உங்களுக்கு முக்கியமா. பூமி செத்திருந்த நான் சந்தோஷமா இருந்திருப்பேனா.‌. தாயுக்கு தாயா அவளை வளர்த்திருக்கேன் என்றவர் அங்கேயே மண்டியிட்டு கதறி அழுக, தன் மனைவியின் அழுகையை கண்டவருக்கு தவறு செய்துவிட்டோமோ என்று உள்ளுக்குள் நடுங்கியது.

அவரின் அழுகையை கண்ட பூமியும் கதறி அழுக, அவளை அணைத்து கொண்டவர் " இந்தாடி இப்போ எதுக்கு நீ அழுதிட்டு இருக்க.. உனக்கு பொறந்த வீடு இல்லைனா என்ன.. உன் புருஷன் உன்னை நல்லா பார்த்துப்பான்.. எங்களை எல்லாம் மறந்துட்டு நீ சந்தஷோமா இருடி. அதுதான் எங்களுக்கு வேணும்" என்றவர் எழுந்து தன் முகத்தினை அழுந்த துடைத்தவர்.. இனி பொஞ்சாதி அப்படினு சொல்லி என்கிட்ட வந்துடாதிங்க" என்றவர் விறுவிறுவென நடக்க, கணகுவும் அவரோடு சேர்ந்து நடந்தார். சாந்தா காளிங்கனை வெளிப்படையாக திட்டிவிட்டார்.. ஆனால் கணகவள்ளியோ தன் மௌனத்தினாலே‌ தன் கணவனுக்கு பதில் அடிக் கொடுத்தார்.

ரிகானோ‌ அறைக்கு சென்றவன் தன் கபோர்டில் வைத்திருந்த சில பத்திரங்களை எடுத்து வந்து அவர்கள் கையில் திணித்தவன்.. "இந்த சொத்து இதுதானே‌ உங்களுக்கு வேனும் எடுத்துட்டு போங்க.. ஆனா தயவுசெஞ்சு இனியாச்சு என் மனைவியை சந்தோஷமா வாழவிடுங்க என்றான். அவர்களை பழிவாங்க அவன் நினைத்திருக்க.. ஏனோ மனைவியின் காயத்தின் முன் அவனால் அதை செய்ய இயலவில்லை என்பதே உண்மை..

ரிகான் கொடுத்த பத்திரங்களை புரட்டி பார்க்க, அதில் பூமியின் சொத்துக்கள் அனைத்தும் இருவரின் பெயரிலும் மாற்றப்பட்டு இருந்தது தெரிந்தது. எதற்காக அவர்கள் போராடினார்களோ அது இப்போது கையில் கிடைத்தும் கிஞ்சித்தும் அவர்களிடம் மகிழ்ச்சி இல்லை. அதனை வெறுமையாக பார்த்தவர் அதனை கிழித்துவிட்டு.‌. அனைவரையும் கையெடுத்து கும்பிட்ட இருவரும்.." முடிஞ்சா மன்னிச்சிடுங்க" என்றுவிட்டு தம்தம் மனைவி மார்களை நோக்கி சென்றனர். இவர்கள் இருவரும் பிறப்பிலேயே கெட்டவர்கள் இல்லையே.. சுயநலமும் பேராசையும் அவர்களை அவ்வாறு மாற்றிவிட்டது.. விதை விதைத்தால் விதை அறுப்பான் வினை விதைத்தால் வினை அறுப்பான் என்பது போல்.. அவர்களின் பேராசையே தற்போது அவர்கள் மனைவியிடம் இருந்து அவர்களை பிரித்து வைத்தது.. இனி இவர்கள் மாறுவார்கள் என நம்புவோமாக..

***********

(தேவா எப்படி மிதுவை டார்ஜீலிங் அழைச்சிட்டு வந்தோம்னு பார்த்தோம்.. அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னு இப்போ பார்க்கலாம்..)

துளி துளியாய் மழை தூரல் போட்டுக் கொண்டிருக்க, சாளரத்தின் வெளியே பார்வை பதிந்திருந்த மிதுனாவின் கவனமோ சிறிதும் அந்த இயற்கை மீதில்லை.. ஏனோ அவள் மதிமுகத்தில் பல குழப்பங்கள் சூழ, அதன் பிரதிபலிப்பாய் அவளின் புருவங்கள் சுருங்கியிருக்க அவளின் ஆழ்மனமோ எதை எதையோ சிந்தித்து கொண்டிருந்தது‌.

அப்போது தான் அந்த அறையின் உள்ளே வந்த தேவா, அவளின் சிலையான தோற்றத்தை பார்த்து யோசித்தவாரே அவளை நெருங்க, குளிர் காற்றில் அவளின் கன்னங்கள் சிவந்த ரோஜாவின் நிறமாக மாறிக் கொண்டிருக்க.. அவளின் ஜிமிக்கி ஆடும் காது மடல்களும் லேசாக சிவந்திருக்க.. அதுவே அவனின் உணர்வுகளை மெல்ல மெல்ல மேல் எழும்பச் செய்தது.

மெதுவாக அவளை நெருங்கியவன் அவளை பின்னிருந்து அணைத்து, அவளின் சிவந்த காது மடலில் தன் அச்சாரத்தை பதித்தவன், தன் நாடியை அவளின் தோள் மீது தாங்கியவாறு அவளின் சுவாசத்தை உள்ளிழுக்க செய்ய.. அதுவோ அவனுக்கு ஒருவித போதையை கொடுப்பதாக தோன்றியது. ஆனால் சிலையாய் இருந்த காரிகைக்கு
அவனின் தொடுகையில் உயிர் வந்துவிட்டது போலும்..

அவனின் செயலை சிறிதும் தடுக்காமல் அவனின் முகத்தையே தான் கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள். ஆனால் அவனுக்கோ மோக உணர்வில் எதுவும் புரியாமல் அவளை விழுங்கி விடுவது போன்று பார்த்தவன், அவள் இதழில் அமர்ந்திருக்கும் ஒற்றை பனித்துளியை காண, அதுவோ அவனை வா.‌. வாவென இழுப்பது போன்ற மாயையை ஏற்படுத்த, அதற்கு மேலும் தாங்காது அவளின் இதழை தன் இதழுக்குள் வைத்து சுவைத்தவன் சிலையென இருந்தவளை‌ தன் மடியில் அமர்த்தி கொண்டவன், என்ன பேபி இன்னைக்கு ரொம்ப சைலன்டா இருக்கு என்றபடியே அவளின் இதழ்பிடித்து இழுக்க.. அவளோ அமைதியாய் இருந்தவள்,

"என்ன மொத எங்க பார்த்திங்க.. தயவு செஞ்சு அந்த பப்புல மாட்டும்னு சொல்லாதீங்க நான் நம்பமாட்டேன்" என்றவள் அதிர்ந்த அவன் முகத்தின் முன்னே, அவனின் போனை உயரத்தி காண்பிக்க அதில் மயங்கியிருந்த மிதுனாவின் புகைப்படம் இருந்தது.. அதை பார்த்தாலே அவள் கல்லூரி படிப்பதற்கு முன்பே எடுத்தது என்று தெளிவாக தெரிந்தது.

சொல்லுங்க தேவ்.. இந்த போட்டோ எப்படி இங்க, அப்போ என்ன காப்பாத்தினது நீங்க தானா என்று கண்ணீர் வழிய கேட்டவளுக்கு ஏமாற்றம் அளிக்காமல் தன் தலையை ஆட்டினான் தேவா. அவளோ அவன் மார்பில் விழுந்தவாரே கதறி அழுக, எதை தெரிந்தாள் மனம வருந்தவாள் என்று நினைத்தானோ அதுவோ தெரிந்துவிட, அழுகும் தன் மனையாளை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தான் தேவா.. அவனின் விழிகளிளோ அவளை முதன் முறையாக பார்த்த நாள் படமாக விரிந்தது.

சில வருடங்களுக்கு முன்

தேவா அப்போது கல்லூரி பயின்று கொண்டிருந்தான். எப்போதும் அவன் இறுக்கமாகவே இருப்பதால் அவனுக்கு அதிகளவு நண்பர்கள் இல்லை என்றாலும் அவன் எப்போதும் எங்காவது சுற்றிக் கொண்டிருப்பதே அவன் வேலையாக இருக்கும். அப்படி தான் ஒருமுறை காரில் சுற்றி கொண்டிருக்க, அதனை ஓர் இடத்தில் பற்ற வைத்தவன் சிகிரெட்டை‌ பிடித்துக் கொண்டிருக்க, அவன் காதில் வந்து விழுந்தது இரண்டு தடியர்களின் பேச்சு. ஏதோ ஒரு பெண்ணை கடத்தி விட்டதாகவும் அவளை விற்க போவதை பற்றி பேசிக்கொண்டு இருக்க.. இவனுக்கோ கோபம் துளிர்த்தாலும் முதலில் அந்த முகம் தெரியா பெண்ணை காப்பாற்ற விரும்பினான்.

அந்த தடியர்கள் பேசிக் கொண்டு இருக்க, மெதுவாக காரின் பின்புறம் சென்றவன் மயங்கிக் கிடந்தவளை தூக்கி கொண்டு‌ தன் காரில் கிடத்தியவன், வேகமாக தன் காரினை எடுத்துக் கொண்டு கிளம்பியவன்.. நெடுந்தூரம் கழித்தே காரினை‌ நிறுத்த, அப்போது தான் அவள் முகத்தை பார்த்தான். குழந்தை போன்ற முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்று தோன்றியது. ஏனோ கைகள் அவனையும் மீறி போனை எடுத்து அவள் முகத்தை புகைப்படமாக்கியது. பின் யாரிவள் என்று யோசிக்க, அப்போது தான் அவள் ஸ்கூல் யூனிபார்ம் மற்றும் ஐடிகார்ட் இருக்க, அதில் இருந்த ஸ்கூல் எண்ணுக்கு போன் பண்ணியவன் விசயத்தை சொல்ல,

பள்ளியில் இருந்து சுற்றுலா வந்தவர்களும் அவளை தேடிக் கொண்டிருந்த விஷயம் அறிந்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு அவளை அழைத்து சென்றவன் அவர்கள் பாதுக்காப்புக்கு வந்த ஆசிரியரிடம் வழி தெரியாமல் தொலைந்தவள் மயங்கிவிட்டாள் என்று கூறிவிட அவர்களும் பிள்ளை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்துவிட, அதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டனர்.. இல்லையென்றால் அவர்கள் பள்ளியின் பெயர் கேட்டுவிடுமே!! அதுவும் ஒரு காரணமாக இருந்தது அந்த விடயத்தை மறைக்க.. மயக்க தெளிந்து எழுந்தவளிடமும் அதனையே சொல்ல, அவளுக்கு தான் கடத்தப்பட்டது தெரிந்த போதிலும் அதனை அவர்களிடம் சொல்லி வீட்டினருக்கு தெரியபடுத்ந விரும்பவில்லை.

இதில் தேவா தான் அவள் புகைப்படத்தை போனில் இருந்து அழிக்கவும் முடியாமல், அவளை தன் மனதில் இருந்து நீக்கவும் முடியாது தவித்துக் கொண்டிருந்தான். பின் தன் தொழிலில் கவனம் செலுத்தியவன், இளம்பெண்களை கடத்துபவர்களை அழிக்கவே அவன் எடுத்த ஆயுதம் அண்டர்கிரவுண்ட பிஸ்னஸ்.. இதையெல்லாம் அவன் கூற கூற, குண்டு கண்களில் நீர் நிரம்ப அவனை காற்றும் புகாதபடி இறுக அணைத்து கொண்டாள்..

டேய் அப்போ எனக்காக தான் எல்லாம் செய்றியா‌ என்றவள் மூக்கை உறிஞ்சிக்கொண்டே, டேய் அப்போ நான் அஜ்ஜூவை கல்யாணம் செஞ்சிருந்தா என்னடா பண்ணியிருப்ப என்று ஆர்வமாக கேட்க,

அவனோ சிம்பளாக, அவன் தாலி கட்டுறதுக்கு ஒரு நிமிசம் முன்னாடியாச்சு உன்னை தூக்கிட்டு வந்து தாலிக்கட்டி இருப்பேன் என்றவன் அதிர்ந்த அவள் முகத்தை கண்டு உனக்கு ஒன்னு தெரியுமா அவன் கல்யாணம் செஞ்சிட்டு உங்கிட்ட வந்து எப்படி சொல்றதுனு முழிச்சப்போ நீ சப்புன்னு ஒரு அறைவிட்டு போன பார்த்தியா.. அப்படியே குளுகுளுனு இருந்துச்சு தெரியுமா.. என்றவனை முறைத்து பார்த்தவள் சப்பென்று அவனை அறைய, அவனோ பாவமாக ஏன்டி என்றிட, அவளோ சும்மா என்று கண் சிமிட்டியவன் அவனோடு ஒன்றிக்கொள்ள.. மகிழ்வாக அவர்களின் இல்லறம் தோன்றியது.

அவனோ கடலுக்குள் முத்து குளிப்பது போன்று இன்னும் இன்னும் அவளுள் மூழ்கினான். அவள் மீது அவன் கொண்ட காதல் அத்தகையது.. அவளுக்காக அவன் செய்த செயல் அத்தகையது..‌ என்றும் அவன் காதல் அவள் மட்டுமே.

**************

நாட்கள் மாதங்களாக உருண்டோட, அனைவரின் வாழ்வு ஓரளுவு சீராகவே சென்றிருந்தது. தன் பிறந்த வீட்டினை நினைத்து பூமி ஏங்க.. அவளுக்காக அவர்கள் பெரியம்மா சித்தியிடம் பேசியவன் அவர்களை பேச சொல்ல, அவர்களுள் தற்போது அவர்களின் கனவன்மார் செய்ல்களில் மாற்றம் இருக்க, திருத்த அவர்களுக்கு ஓர் வாய்ப்பு கொடுத்தனர்.. தவறு செய்வது மனிதர்கள் இயல்பே.. ஆனால் அதை திருத்தி கொள்பவனே சிறந்த மனிதனாகிறான்..

இன்று.. சமையல் அறையில் தன் மேடிற்ற வயிற்றுடன் அமர்ந்திருந்தவள், சாதனாவிடம் என்ன செய்வது என்று வளவளத்து கொண்டிருக்க, சமையல் அறையின் உள்ளே நுழைந்தார் அமிர்தவள்ளி.

"ஏய் என்ன பண்ணிட்டு இருக்க.." என்று அவர் கேட்க,

பூமியோ "சாதனா பாரு உன்னை தான் அத்தை கூப்பிடுறாங்க" என்றிட, அவளோ, "இல்லைக்கா உங்களை தான் கூப்பிடுறாங்க".. என்னது நானா இருக்காதே என்று நினைத்து கொண்டாள்.. பின்னே அவர் இவளிடம் பேசியே பல மாதங்கள் ஆகிவிட்டது.. அதனால் அவளால் அப்படி தானே நினைக்க முடியும்.

"ஏய் பூமி உன்னை தானே கூப்பிடுறேன்.." என்று அவர் பெயர் சொல்லியே அழைக்க இப்போது ஆச்சரியத்துடன் அவரை கண்டவள் "சொல்லுங்க அத்தை" என்றிட, " ஏன்டி உனக்கு கொஞ்சம் கூட அறிவு இருக்காத.. இப்போ மசக்கையா இருக்க தானே.‌. இந்த நேரத்தில தான் அசதியா இருக்கும்.. கொஞ்சம் ஓய்வு எடுக்காம இப்போ எதுக்கு மாங்கு மாங்குனு வேலை செய்ற.. அப்போ எல்லாரும் என்னை கொடுமைக்காரி மாமியாருனு சொல்லனும் அப்படிதானே" என்றிட, இவளுக்கோ சுத்தமாக புரியாமல் பேந்த பேந்த நிற்க, "கண்ணா என்னை பார்த்திட்டு இருக்க, அவளை ரூமுக்கு கூட்டிட்டு போ என்று ரிகானிடம் சொல்ல" அவனும் தன் தாயை கண்டு புன்சிரிப்பு சிந்திவிட்டு தன் மனையாளை கையில் ஏந்தியபடி அறைக்கு செல்ல அவரும் அதே சிரிப்போடு தன் அறைக்கு சென்றார்.

இதில் பேந்த பேந்த முழித்தது என்னவோ அர்ஜூன் தான். "ஆமா இப்போ இங்க என்ன நடந்துச்சு.. நம்ம அம்மாவா அந்த பூசணிக்கிட்ட நல்ல பேசுனது.. ஒன்னுமே புரியலையே" என்றபடி தன் மனைவியை தேடி சமையல் அறைக்கு சென்றான் அர்ஜூன். அங்கோ அவள் பூரிக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தாள்..

"சனா குட்டி என்ன பண்ணுறீங்க.. மே ஐ ஹெல்ப் யூ" என்றபடி தன் பல்லை காட்ட, அவளோ பூரிக்கட்டையை தூக்கி காட்டினாள். பின்னே காலையில் இருந்து உதவி செய்றேன்.. உதவி செய்றேனு அவளை படுத்தி எடுத்தா.. இதோ பூனை இருந்தவளும் புலியா மாறிட்டா.. தன் மனையாள் செய்கை கண்ட அர்ஜூன் தான்.. "ச்சே இந்த லோகத்துல நல்லதுக்கே காலம் இல்லப்பா" என்று புலம்பியபடி செல்ல, அவனின் புலம்பலை கேட்டு கலகலவென சிரித்தாள் சனா. இதோ இவர்களின் வாழ்வும் நாளொரு பொழுதும் காதல்.. சீண்டல்.. ஊடல் என அமோகமாய் சென்று கொண்டிருந்தது.

தங்கள் அறைக்கு வந்த ரிகான் கட்டிலில் அவளை சாய்வாக அமரவைத்துவிட்டு, கதவை சாற்றிவிட்டு வர, அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் பூமிகா. அவனோ கரம் கொண்டு அவளின் வயிற்றினை தடவிக் கொண்டிருக்க, உள்ளே அவனின் இரு உயிர்களும் மெல்ல அசைந்தது‌. அதை உணர்ந்த ரிகான் பூரிப்புடன் பூமியை காண, அவளும் அவனை காதலோடு நோக்கி கொண்டிருந்தாள்.. ஆம்‌ ஸ்கேன் செய்து பார்த்ததில் தெரிந்தது பூமிக்கு டிவின்ஸ் என்று. ரிகானோ‌ தன் மனையாளின் வயிற்றுக்குள் இருக்கும் தன்னுடைய உயிர்களுக்கு தன் முத்தத்தை பரிசளித்தவன் தன் மார்பில் சாய்ந்திருக்கும் தன் மனையாளின் சோர்ந்த முகத்தை தான் வருத்தத்தோடு கண்டிருந்தான்.

"என்னாச்சு சுட்க்கி டையர்டா இருக்கா" என்றிட.. கணவனின் வருந்திய முகத்தை காண இயலாதவள்.. "டேய் இல்லைனு பொய் சொல்லமாட்டேன் டையர்டா தான் இருக்கு.. உள்ள இருக்கிறது உன் பிள்ளைங்க ஆச்சே.. என்னை படுத்தி எடுக்கிறாங்க.. இருந்தாலும் என்னை கையில வைச்சு தாங்க தான் என் லவ்வபிள் புருஷன் இருக்கானே.. சோ நோ பெயின்" என்றவள் அவன் மீசையை பிடித்து இழுத்தபடி அவனின் முகம் கண்டவள்..

"அத்தைக்கிட்ட என்ன பேசுன ரிகா" என்றிட.. அவனோ தடுமாறியபடியே "இல்லையே.. எதுவும் இல்லையே" என்று சொல்ல.‌‌. "நீ சொல்ல விரும்பலனா விடு.. ஆனா எனக்கு தெரியும் அத்தை என்க்கிட்ட நல்லா பேச நீ தான் காரணம்னு.. ஐ லவ் யூ டா புருஷா" என்றவள் அவன் இதழில் அழுத்தமாக தன் இதழ் பதித்தாள். அறைக்கு வந்த அமிர்தவள்ளியோ இன்று மதிய‌ வேளையினில் நடந்ததை ஆசைப்போட்டார்.

இன்று மதிய வேளையில்,

அனைவரும் அவரவர் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்க.. கதவை தட்டியபடியே தன் தாயின் அறைக்குள் நுழைந்தான் ரிகான். அவனை கண்டதும் எழுந்த அமிர்தவள்ளி,
"வா கண்ணா.." என்றழைக்க தன் தாயின் மடியில் படுக்க, அவரும் தன் மகனின் தலையை கோதிக் கொண்டிருந்தார்.. தன் தாயின் முகத்தையே கண்டிருந்தவன்

"ஏன்ம்மா இப்படி செஞ்சிங்க" என்றவனது வார்த்தையில் அவரின் கரம் அப்படியே நிற்க, "சொல்லுங்கமா.. ஏன் இப்படி செஞ்சிங்க.. எதுக்காக பூமியை குழந்தையை பெத்துக் கொடுத்தவுடன் இந்த வீட்டை விட்டு போக சத்தியம் வாங்குனிங்க. இதை கூட அவ சொல்லி இருப்பானு நினைக்கிறிங்களா.. இல்லவே இல்லைமா.. கொஞ்ச நாளாவே உங்க ஒதுக்கத்தை நானும் பார்த்திட்டு தான் இருக்கேன்‌ அப்புறம் பூமியுடைய டைரி அதுல தான் நான் இதை தெரிஞ்சுக்கிட்டேன்.. ஏன் இப்படி செஞ்சிங்க சொல்லுங்கமா.. சொல்லுங்க.." என்றிட அவரிடமோ மௌனம் மட்டுமே பதிலாக இருந்தது.

" ஏன்ம்மா குழந்தையை விட்டுட்டு அவளால தான் இருக்க முடியுமா.. இல்லை அவளை விட்டுட்டு என்னால இருக்க முடியுமா.‌ எனக்காக எதுவும் செய்ய கூடியவமா அவ.. எனக்கு தெரியும் அப்பா இறந்ததுக்கு அவ ஒரு காரணம் அப்படினா நானும் தானமா காரணம்.. இந்த வேலைக்காரன் அளவுக்கு அதிகம் ஆசைப்பட்டிருக்க கூடாது தானே" என்றவன் கண்களில் நீர் வழிய, எந்த தாயால் தான் தாங்க முடியும் இப்படிப்பட்ட வார்த்தைகளை.. அதோடு அவனின் சிறுதுளி கண்ணீரும் அவரை அசைத்து பார்த்தது உண்மையே!!

"டேய் கண்ணா இப்போ என்ன இப்படி சின்ன பிள்ள மாறி கண்ணை கசக்கிட்டு இருக்க.. உன் அப்பாவோட விதி முடிஞ்சு போச்சு அவர் போயிட்டார்.. இதுக்கு நீ காரணம் கிடையாது சரியா.‌. இனி நான் அவளை எதுவும் சொல்ல மாட்டேன் போதுமா" என்றிட அவரை கண்டவனோ..

"ம்மா எனக்கு அவ எந்த அளவுக்கு முக்கியமோ உங்க சந்தோஷமும் அந்த அளவுக்கு முக்கியம் பிளிஸ் மா.‌. இனி இப்படி ஏதோ மாதிரி இருக்காதிங்க" என்று தன் கைபிடித்து கேட்கும் தன் மகனை பார்க்க சிறுபிள்ளையாக தான் தோன்றியது அவருக்கு..

அவனையே புன்னகை முகமுடன் நோக்கியவர், "ஹா..ஹா.. இப்போ தான் யாரோ சின்ன புள்ளயாட்டும் அழுதாங்க.. அதுக்குள்ள பெரிய மனுசங்க ஆகிட்டாங்களா" என தன் மகனை கேலி செய்தவர் இனியாவது தன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டார்.. பெற்ற பிள்ளைகள் மகிழ்வினை தவிர வேறென்ன வேண்டும் அவருக்கு‌‌..

***********

இயற்கை கொஞ்சும் அழகை மௌனமாக ரசித்திருந்தவளின் பார்வையில் விழுந்தான் அவளவன். காற்றில் அசைந்தாடும் சிகை‌.. அதை அழுந்த கோதிக் கொண்டபடியே இருக்கும் அவனின் அழுத்தமான விரல்கள் என பவ்யா தமிழை ரசித்துக் கொண்டிருக்க, அவளின் அருகில் வந்தமர்ந்தாள் பூஜா. இதற்கு முன்பே இருவரிடமும் சிறு இணக்கம் இருந்திருந்தாலும், தமிழை அவள் விட்டுச்சென்றது பூஜா மனதில் கோபமாக மாற அதை அப்படியே அவளிடம் காட்டிவிட்டாள் அவளை கண்ட நாளன்று.

அதற்கு பின் சிட்டு பேசி புரியவைத்தாலும் பூஜாவுக்கு பவ்யாவை அடித்தது தவறு என்று தோன்றினாலும் மன்னிப்பு கேட்க தோன்றவில்லை.. பவ்யாவும் அதை பெரிதும் எண்ணாமல் விட, இப்போது ஓரளவிற்கு பேச இருவரிடமும் முன்பு இருந்த நெருக்கம் மெல்ல மெல்ல தோன்றியது.

"என்ன அண்ணி.‌. அண்ணாவை சைட் அடிக்கிங்கிறளா.." என்று கேட்க அவனையே கண்டிருந்தவள் தன்னையும் மறந்து தலையாட்ட, அவளை பார்த்து சிரித்தவள்..

"அண்ணெ.. அண்ணெ.." என்றழைக்க, போனில் யாருடனோ பேசி கொண்டு இருந்தவனோ போனை அணைத்துவிட்டு என்ன என்றபடி பூஜாவின் புறம் வந்து நிற்க..

"இல்லை அண்ணி தான் கூப்பிட சொன்னாங்க" என்றவள் சிட்டாய் பறந்து விட.. ஏய் பார்த்து வாடி உள்ள பாப்பா இருக்குல என்றபடி பூஜாவை ஏசினான் சிட்டு. ஏனோ நீண்ட நாள் கழித்து இப்போது தான் இவர்களுக்கு குழந்தை செல்வம் உண்டாகியது. இதுவும் அந்த வீட்டிற்கு இரட்டை மகிழ்வை கொடுத்தது. இப்போது தமிழின் தாய் தான் தன் மகளை மருமகளையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார்.

தன் மனைவியின் அருகே வந்தமர்ந்த தமிழ்.. "சொல்லு பப்பி.. எதுக்கு கூப்பிட்ட என்றபடி அவளின் அருகில் அமர, அவளோ கையை நீட்டி தூக்கு என்பதை போன்று பாவனை செய்ய, சிரிப்புடனே அவளை கைகுழந்தை போன்று தூக்கி கொண்டவன் உள்ளே நடக்க, இது எப்போதும் நடப்பது தானே என்று அனைவரும் அவரவர் வேலையை பார்த்தனர்.

தங்களின் அறையில் மெத்தையில் தன் மனையாளை கிடத்திய தமிழ்.. அவளின் இரண்டு பாதங்களையும் பிடித்துவிட.. அவளுக்கோ அவனை கண்டு இன்னும் இன்னும் காதல் பொங்க "ஏன்டா பட்டிக்காடு.. நான் இவ்ளோ செஞ்சும் ஏன் என்னை உனக்கு பிடிச்சிருக்கு" என்றவளின் கலங்கிய விழிகளை நோக்கியவன்.. "எத்தனை முறை சொல்லி இருக்கேன் அழக் கூடாதுனு" என்று அதட்டியவன்.. "ஏன்னா என் பப்பியை நான் அவ்ளோ லவ் பண்றேன்.. போதுமா விளக்கம்" என்றவனின் காதலில் எப்பொழுதும் போல் அவள் கரைந்து தான் போனாள்..

"காதல்
ஒன்றை கொடுத்து
ஒன்றை பெறுவது அல்ல..
ஆனால்
இதயங்கள் மட்டும்
இடம் மாறுவது ஏனோ??
காதலோடு காயத்தையும் பரிசளித்தவள்
இன்று அவன் உயிரோடு
காதலில் கலந்தாளோ!!"

**********

டார்ஜீலிங்கில் இருந்து வந்த மிதுவோ தன் வேலையை விட்டவள் நாளும் பொழுதுமாக தன்‌ மாமியாரை வம்பிழுப்பது.. தன் கொழுந்தன் ராக்கியிடம் வம்பிழுப்பது.. தன் கணவனோடு சேட்டை செய்வது என்று பொழுதை கடத்தினாள்.

அன்றும் அப்படித்தான் ஒரு சேட்டை செய்ய காத்திருந்தாள்.. ஏய் அண்ணி.. இதெல்லாம் சரியா வருமா.. ஒருவேளை அண்ணாக்கு என் மேல பாசம் இல்லைனா கால் உடைச்சுக்கிட்டது வேஸ்டா போயிடுமே என்று பாவமாக பேசியவனை கண்டவள்.. டேய் லூசு சொல்றதை செய்டா.. சும்மா கடுப்பேத்தாமா என்றவள் அவனை தள்ளிவிட அவனும் சரியாக படியில் இருந்து உருண்டு விழப்பார்க்க அவன் விழாதவாரு அவனை பிடித்து கொண்டான் தேவா.

அவனை நேராக நிறுத்தியவன், ஏன்டா அவ தான்‌ கிறுக்கு மாதிரி படியில விழச்சொல்றா நீயும் விழுவையா..‌ எருமை கொஞ்சமும் அறிவே கிடையாது என்று திட்டியவன் தன் மனைவியை முறைத்துவிட்டு செல்ல, ராக்கியோ கண்களில் கண்ணீர் வழிய‌ நின்றிருந்தான்.

டேய் ராக்கு எதுக்குடா இப்போ அழுற..‌உன் அண்ணன் திட்டனதுக்கு எல்லாம் அழனும் அப்படினா நான்லாம் தினம் அழனும் என்றிட, அவளை இறுக்கி அணைத்தவன் தேங்க்ஸ் அண்ணி.. தேங்க்ஸ் அண்ணி என்று கத்தியவன் எங்கோ செல்ல வெளியே வந்த தன் தாயை தூக்கி சுற்றியவன்.. மம்மி அண்ணா என்கிட்ட பேசிட்டான் என்றபடி சிறுகுழந்தையாய் குதித்து ஓட, ஏனோ அவருக்கும் கண் கலங்கியதோ.. தேவாவையும் தன் மகனாக தான் நினைக்கிறார்.. ஆனால் அவன் தான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறானே.. இவனையாவது ஏற்றுக் கொண்டானே என்று அவருள் சிறு நிம்மதி..

மிதுனாவிடம் சென்றவள்.. "ஏய் கேர்ள் யூ கொஞ்சமே கொஞ்சம் குட்கேர்ள் போல" என்றிட அவளும் "ஆமா அத்தை மீ நிறைய குட் கேர்ள்" என்றிட இதுக்கு மேல் இவளிடம் பேசுவது டேஞ்சர் என்று நினைத்தவர் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டார். ஏனோ அவளின் மனம் இப்போது தான் நிறைந்தது போன்று‌ இருந்தது.. எப்படியும் ராக்காயை தள்ளவிட்டாள்‌ தேவா பிடிப்பான் என்று தான் அப்படி செய்தாள்.. அவனும் அவள் எண்ணம் போலே செய்ய இவளுக்கோ தாளமுடியாத அளவு மகிழ்ச்சி.. காரில் அமர்ந்திருந்த தேவாவும் சிறுபிள்ளையேன குதித்து ஓடும் ராக்கியை கண்டவன் இதழ்கள் தேங்க்ஸ் பேபி என்று முனுமுனுத்து கொண்டது

************

நாட்கள் அதன் போக்கில் செல்ல, பூமியை மருத்தவமனையில் அனுமதித்திருந்தனர் பிரசவத்திற்காக. உள்ளே இருந்து வந்த அவளின் கதறலில் இங்கு ரிகானுக்கு தான் கிடுகிடுவென்று நடுங்கியது. அந்த நேரத்திலும் சிட்டு தான் "இப்போ எதுக்கு நீ பிரேக் டான்ஸ் ஆடிட்டு இருக்க" என்று கேட்டு ரிகானிடம் முறைப்பு வாங்கிக் கொள்ளவும் தவறவில்லை.

நீண்ட நேரத்திற்கு பிறகே அழகான இரட்டை ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள் பூமி. அதை கண்ட ரிகானுக்கு கண்களில் நீர் வழிய தன் குழந்தைகளோடு தன் மனையாளையும் அணைத்துக் கொண்டான்‌ ரிகான்.

சந்தீப்பின் தங்கைக்கு உடம்பு முடியாது போகிவிட.. இப்போதும் தன் நண்பர்களை பார்க்க முடியாது தவித்து கொண்டிருந்தனர் மினியும் சந்தீப்பும்.. ஆனால் வாரத்திற்கு ஒரு முறையாவது அனைவரிடமும் வீடியோ கால் பேசிவிடுவர்..

பவ்யாவுக்கும் சில நாட்கள் முன் தான் பெண் மகவு பிறந்திருக அதனால் அவளால் வரமுடியாமல் போனது.. ஆனாலும் போனில் தன் நண்பனுக்கு வாழ்த்து கூறினாள்.. தமிழும் சிட்டுவும் ரிகானை அணைத்து வாழ்த்து கூற, தன் தமக்கையை காண நீண்ட நாட்கள் கழித்து வந்த மிதுவும் தன் அக்காவிடம் மனம் திறந்து பேசியவள் குழந்தைகளை கொஞ்சிவிட்டே வந்தாள்..

அனைவரும் பார்த்து விட்டு சென்றுவிட, சோர்வாக அமர்ந்து இருந்தவளுக்கு பழச்சாறை பருகுவித்தான் ரிகான்.. அவனையே கண்டிருந்தவள் தேங்க்ஸ்டா என்றிட..

"எதுக்கு" என்று புருவம் உயர்த்தி கண்டவனை ரசனையாக பார்த்தவள் "எல்லாத்துக்கும் தான்" அவன் உச்சியில் இதழ் பதித்தாள்.

"ராட்சசனாக
இருந்தாலும்..
என்றும்
அவளுக்கு
அவன்‌ ரட்சகனே!!💓💓"

***********

எபிலாக்

சில வருடங்களுக்கு பின்,


"அக்கா எல்லாம் எடுத்து வெச்சுட்டீங்களா டைமாச்சு.. கோவிலுக்கு போனும்.." என்ற சாதனாவை கண்டு தலையில் அடித்துக் கொண்ட பூமி, நீ போய் மொதல்ல டிரஸ்ஸை மாத்துடி டைமாச்சு, என்றிட அவளும் வேக வேகமாக அறைக்கு சென்றவள் தன் புடவையினை மாற்றிக் கொண்டிருக்க.. சனா செல்லம்.. என்ற அர்ஜூனை கண்டு தலையில் அடித்தவள், "ஏங்க பாப்பா எங்க.. அவளை ரெடி பண்ணிங்களா இல்லையா.." என்றிட, "அதெல்லாம் பெர்பெக்டா முடிச்சுட்டேன் இப்போ என் பொண்டாட்டியை தான் ரெடி பண்ணனும்" என்றவன் அவளிடம் வம்புவளர்த்துக் கொண்டிருக்க.. "அச்சோ உங்கக்கிட்ட முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேன் பாருங்க.. மிது வந்திருக்கா தயவுசெய்து தேவா அண்ணாக்கிட்ட வம்பு வளரக்காதிங்க சத்தியமா எங்க ரெண்டு பேராலும் முடியல" என்று நொந்து கொள்ள..

மிதுவும்‌ தன் கணவன் தேவாவிடம் அதையே தான் வேறு மாதிரி சொல்லிக் கொண்டிருந்தாள்.. " இங்க பாரு‌ தேவா.. தேவையில்லாமா அஜ்ஜூக்கிட்ட சண்டை போட்ட அவ்ளோ தான்டா"

"ஏய் நான் என்னடி பண்ணேன்.. அவன் தான்‌" என்றவன் இதழ் ஊர்வலத்தை நடத்த அதற்கு‌ மேல் அவள் எங்கே பேச, என்ன தான் மிதுவும் சாதனாவும் தோழிகளாக பழகினாலும் தேவாவும் அர்ஜூனும் சண்டை கோழியாக தான் சிலிர்த்து கொள்கின்றனர்.

சாதனாவை அனுப்பிய பூமியோ அமிர்தவள்ளியிடம் சென்று அத்தை கோவிலுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைச்சிட்டேன் சரியா‌ இருக்கா பாருங்க, என்றிட, அமிர்தவள்ளியும் அனைத்தும் சரி பார்க்க.. பூமியும் வேக வேகமாக தங்கள் அறைக்கு சென்றாள். அவள் நினைத்தது போலவே தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தார்கள் அவளின் இரட்டை புதல்வர்கள் ஆதி கிருஷ்ணன்.. மற்றும் வம்சி கிருஷ்ணன்..

ஆதி.. வம்சி.. என்று கத்தியபடியே அவர்கள் இருவரையும் முறைக்க.. "மம்மி.. டாடி தான் எல்லாம் செஞ்சாங்க.. நாங்கெல்லாம் குட் பாய்ஸ்.. ஆமா தான தேவ் என்று தன் தமையனிடம் கேட்க, தேவும் மேலும் கீழும் ஆட்டி தன் சகோதரனை வழிமொழிந்தான்.

எப்போதும் தந்தையின் மீது பழிபோடுவதே அவர்களின் வழக்கம்.. தன் புதல்வர்களின் குறும்பை ரசித்தவள், அவர்களை வேக வேகமாக தயார்படுத்த, அவர்களும் சமத்தாக ரெடியாகிவிட்டு குடுகுடுவென ஓடிவிட்டார்கள். தலையை வாரிவிட்டு நெற்றியில் குங்குமம் வைக்க முயல, அதற்கு முன் ஒரு‌ கரம் அவளின் நெற்றயில் குங்குமம் சூட்ட.. அவளை அப்படியே பின்னிருந்து அணைத்தவன் அவளின் தோளில் தன் நாடியை குற்றியவாரே.. ஜோடி பொருத்தம் சூப்பர்ல.. என்றிட பூமியோ ஆமா.. ஐயாவுக்கு இப்போ தான் மூடு வந்திருக்கு.. போடா கோயிலுக்கு போக டைமாச்சு.. என் புருஷனுக்கு பரிவர்த்தனை கட்டுறதை பார்க்க நானும் ரொம்ப ஆர்வமா இருக்கேன்ல என்றபடி அவனின் மீசையை முறுக்க.. எப்போதும் அவளை மயக்கும் மாயபுன்னகையை சிந்தினான் ரிகான். அவளும் மெய்மறந்து அவனின் கன்னக்குழியில் கைவைக்க.. வெளியே அனைவரின் பேச்சு சத்தம் கேட்டு வேகமாக இவர்களும் கிளம்பினர்.

கோவிலில் அனைவரும் தம்தம் ஜோடிகளோடு நிற்க.. வெளியே அவர்களின் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தது. தமிழ்- பவ்யா மகள் தர்ஷினி, சிட்டு- பூஜா மகள் ரோஜாவும்.. வம்சியுடன் விளையாடிக் கொண்டிருக்க.. அவர்களோடு தேவா- மிது மகள் ஆத்விகாவும், அர்ஜூன்- சாதனா மகள் விசாகா.. மற்றும் ஆதியும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஊரார் அனைவரும் கூடியிருக்க காளிங்கன் மனமகிழ்வோடு ரிகானுக்கு பரிவட்டம் கட்டம் அங்கே மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.. எப்போ தன் மனைவிமார்களின் ஒதுக்கத்தை உணர்ந்தார்களோ அப்போதே அவர்கள் திருந்திவிட்டனர்.. தனிமையும் சிறந்த ஆசானே!!!

அனைவரும் கோவிலில் மகிழ்வோடு அமர்ந்து கதைபேசிக் கொண்டிருக்க,
"ஏங்க இந்த பசங்க எங்க ஆளை காணோம்" என்று பவ்யா தமிழிடம் கேட்க அனைவருக்கும் அப்போது தான் யாரும் இங்க இல்லையே என்று தோன்றி அவர்களை தேட‌ தொடங்க, அங்கே கோவிலுக்கு சிறிது அருகில் சிறுவர்கள் அனைவரும் சண்டையிட்டு கொண்டிருக்க பதறியபடி அனைவரும் அங்கே செல்ல..

அங்கோ ஆதி ஒரு சிறுவனை அடித்துக் கொண்டிருக்க, அவனும் இவனை அடித்துக் கொண்டிருந்தான். அவர்களுக்கு ஒரு பக்கத்தில் வம்சி, ஆத்விகா, தர்ஷூனி, ரோஜா இருக்க மற்றொரு பக்கத்திலோ தீக்சிதா, கதிர்வேலன், சுகானா பதறியபடி நின்றுக் கொண்டு இருந்தனர். ஓரேநேரத்தில் ஆதி.. தேவ்.. என்று இருவேறு குரல்கள் கேட்க, இரு குழந்தைகளும் அடிக்காமல் ஒருவரை‌ ஒருவர் முறைத்தபடி எழுந்தனர்.

"என்ன ஆதி இது‌‌" என்ற ரிகானின் கோப குரலில்.. "ப்பா.. அவன் தான் என்னை அடிச்சான் அதுதான் நானும் அடிச்சேன்" என்று தோளை குலுக்கியவனை கண்ட ரிகானுக்கு கோபம் ஏறியது. இதை கண்ட பூமி தான் " ஆதி அப்பாக்கிட்ட இப்படி தான் பேசுவியா‌" என்று கடிந்திட ஏனோ தந்தையின் கோப வார்த்தையை விட தாயின் வார்த்தை தான் அந்த பிஞ்சுக்கு வலித்தது போலும்..

வம்சி தான் தன் தமையன் வருத்தம் காண பொறுக்காது அந்ந பொன்னு தான் எனக்கிட்ட சண்டை போட்டுச்சு அதுதான் ஆதி அடிச்சிட்டான் என்று விசும்பிட தன் தம்பியை அணைத்து கொண்ட ஆதி அந்த பெண்ணை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான். அவள் வேறு யாருமில்லை தீக்சிதா.. ருத்ரன்- சிற்பிகாவின் மகள். அவளுக்காக சண்டை போட்டது வேறு‌யாருமில்லை எழில்- சுலோச்சனா மகன்.. அருண்தேவ் தான்.

அனைவரும் வம்சி கைகாட்டிய பெண்ணை பார்க்க, அங்கே சிற்பிகா தான், தான் பெற்ற மகளை திட்டிக் கொண்டிருந்தார்.

ஏன்டி கோவிலுக்கு வந்தா சாமியை பார்க்காம உனக்கென்ன சண்டை போடுறது என்ன பழக்கம்.. இதுல தேவ் நீயும் இவளுக்கு சப்போர்ட் என்றவள் தன் கணவன் ருத்ரனை முறைக்க, அவனோ விடுடி ஏதோ சின்னபிள்ளை சண்டை போட்டுருச்சு அதுக்கு போய் இப்படி திட்டிட்டு இருக்க என்றவன் தன்‌‌ மனைவியிடம் ‌கண்களாலே கெஞ்சியபடியே.. தன் மகளை தூக்கியவன் அந்த பையனிடம் சாரி கேட்க சொல்ல.. அவளும் முகத்தை தூக்கி வைத்தபடியே வம்சியிடம் வந்தவள் சாரி என்றுவிட்டு ஆதியை முறைத்துவிட்டு செல்ல.. ஆதியும் தன் தாய் சொல்லியபடி தேவ்விடம் சாரி கேட்டவன்.. அவன் அருகில் நின்றிருந்த தீக்சியின் காதில் "போடி முட்டைபோன்டா" என்றுவிட்டு வேகமாக ஓடிவந்துவிட்டான்.

மோதலில் ஆரம்பித்த இவர்களின் வாழ்வு காதலில் சேர போகாறதா.. இல்லை காயத்தில் முடியபோகிறதா என்று பொருத்திருந்து காண்போம்..

"நித்தமும்‌ உன் நினைவே" கதையின் வாயிலாக..

(ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரி பார்க்கல.. அப்புறம் சரி பண்ணிடுறேன் செல்லங்களா)

**********

ஹாய் டியிரிஸ்,

கதை உங்களுக்கு பிடிச்சு இருக்கும்னு நம்புறேன். எபிலாக்கில வந்த சில கேரக்டர்ஸ் என்னுடைய முந்தைய கதையான " இருவர் ஒன்றானால்" கதையில் வந்தவங்க.. அதாவது அந்த கதையில வந்த ஹீரோ குழந்தைகளும் இந்த கதையில் வந்த ஹீரோ குழந்தைகளும் சேர்ந்து வரது தான்

நித்தமும் உன் நினைவே!! - புதிய கதை

அந்த கதையை‌ படிக்கலன கூட இந்த புதிய கதை புரியும்.. பட் படிச்சிங்கனா இன்னும் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அந்த கதையை சீக்கிரம் இந்த தளத்தில் பதிப்புக்கிறேன். அப்புறம் இந்த புதிய கதை அடுத்த வருடம் தான் தொடங்கும். இப்போ அடுத்த கதையா..சிறை செய்யும் ராவணனே..💔 ( antihero novel) எழுத போறேன்.. அதுக்கும் உங்க full support கொடுங்க.. and plzz comment பண்ணுங்க. அப்போ தான் கதை எப்படி இருந்துச்சுனு எனக்கும் தெரியும்.. thank you frnds.. and love you all..😘😘😘😘😘💓💓💓💓😍😍😍😍


Superb 👌👌👌👌👌👌
 
Status
Not open for further replies.
Top