All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "தேடலின் முடிவில்...!" கதை திரி

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 8

சஹியின் அம்மா பேசிய பின் அவர்களின் தந்தையின் செயலில் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது போல் தான் இருந்தது. ஆனால் அந்த மாற்றம் எல்லாம் சில நாட்கள் தான் நீடித்தது.

பணம் என்ற போதை அவ்வளவு எளிதில் ஒரு மனிதனை விட்டு விலகி விடுமா என்ன‌. சஹியின் அன்னை சொற்களாலும் அவளின் தந்தையை சில நாட்களுக்கு மேல் தாங்கி பிடித்து வைக்க முடியவில்லை.

மறுபடியும் ஒரு நீண்ட தேடல் பணத்திற்காய். இப்போது எல்லாம் சஹியின் தாய் என்ன சமாதானம் செய்ய முயன்றாலும் சமாளித்து‌ அவர் கூற்றை ஒத்துக் கொள்ள செய்து விடுவார்.

சஹியிம் அன்னை இப்படி பேசுவது நச்சரிப்பாய் தெரிய அவரின் கவனத்தை திசைத் திருப்பும் பொருட்டு அவரை சமூக சேவையில்‌ ஈடுபட வைத்தார் அவர் கணவர்.

அவரின் எண்ணம் புரியாமல் சஹியின் தாயோ அந்த ஆதரவில்லா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருந்த மனிதர்களுக்கு உதவ விருப்பத்துடனே இசைந்தார்.

எனவே அதில் தன் கணவரின் செய்கைகளை சற்று மறந்து விட்டார் என்றே சொல்லலாம். அது அவரின் கணவருக்கு வசதியாக போய்விட சுதந்திரமாக தன் தொழில் முன்னேறினார்.

அதே போல் யாருக்கு உதவி என்றாலும் முன்னே நின்று செய்து தருவார் சஹியின் தாய். அதற்கு செலவிடுவதை அவர்களின் தந்தையும் கணக்கு பார்க்காமல் தர அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

இப்போது எல்லாம் எந்த நேரமும் பணம் பணம் என அலைந்து கொண்டிருக்கும் அவரின் கணவர் எப்படி இவ்வளவு பணத்தை பிறக்கு உதவ தருகிறார் என உணரவில்லை அவர்.

எதிலும் லாபம் இல்லாமல் நுழைய மறுக்கும் சஹியின் தந்தையின் எண்ணமோ இப்படி உதவி செய்வதால் மனைவியின் தலையீடு இல்லை.

அதேபோல் புண்ணித்திற்கு புண்ணியமும் ஆச்சு அரசிடம் வரியில் இருந்து விலக்கும் ஆச்சு என்றே எண்ணினார். அதற்காக கருப்பு பணம் சேர்த்து வைப்பவரும் இல்லை அவர்.

பணம் சம்பாதிப்பதில் சில சமயம் சேர்த்த பாவத்தை இப்படி கழித்து கொள்ளலாம். அதே போல் நல்ல மனிதர் என்ற பெயரும் கிட்டும் என சராசரி தொழிலதிபராய் எண்ணினார்.

அவரின் எண்ணத்திலும் தவறு இல்லையே. அவர் தரும் பணத்தால் பல குழந்தைகள் வயிறு நிரம்பவே செய்தது. ஏனோ அந்த பிஞ்சு முகங்களை காணும் போது சஹியுடைய தாயின் மனம் நிரம்பி தான் போகும்.

நாட்கள் இப்படி அமைதியாகவே கடந்தது. ஆனால் அவரின் அமைதியும் கடக்கும் நாளும் வந்தது. அன்றென பார்த்து ஸ்ரேயாவிற்கு நல்ல காய்ச்சல்.

இரவு முழுதும் வலியிலும் சோர்விலும் அனத்திக் கொண்டே இருந்தாள் ஸ்ரே. தீடீரென அவளின் உடல் காய்ச்சலில் தூக்கி தூக்கி போட தாயோ பயத்தில் பதறி வெளியூர் சென்ற தன் கணவனுக்கு அழைக்க வழி தேடினார்.

ஆம் வேலை சம்மந்தமாக அவரின் கணவர் வெளியூர் சென்றிருந்தார். ஆனால் அவரை அழைப்பில் பிடிக்க முடியவில்லை. இன்று போல் அன்றைய நாள் தொலைதொடர்பு சாதனங்கள் இல்லையே.

இரவு முழுவதும் அவருக்கு பயத்திலும் அழுகையிலும் தான் கழிந்தது. காலை விடிந்தவுடன் மருத்துவமனை அழைத்து சென்று விட்டார். மருத்துவர் பார்த்துவிட்டு அவரை திட்டி தீர்த்தார்.

குழந்தைக்கு இவ்வளவு காய்ச்சல் வரும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று. அதன்பின் ஊசி மருந்து மாத்திரை என எல்லாம் முடிந்து மாலை வரை மருத்துவமனையிலே குழந்தை ஸ்ரேவை வைத்திருந்னர்.

சஹியும் அவள் தாயும் ஸ்ரேயாவோடு மாலை வரை மருத்துவமனையிலே இருந்தனர். காய்ச்சல் பாதி குறைந்த பின் தான் மாலை போல் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்கு வந்து பிள்ளைகளுக்கு உணவை கொடுத்து ஸ்ரேவிற்கு மாத்திரை மருந்து கொடுத்து இருவரையும் உறங்க வைத்து வெளியே வந்த நேரம் தான் அவர்களின் தந்தை வந்து சேர்ந்தார்.

வீட்டில் நடந்த எதையும் அறியாத அவரோ தொழிலில் தனக்கு இன்று கிட்டிய வெற்றியை எண்ணி மகிழ்வுடன் வந்து அவர் மனைவியிடம் இனிப்பை நீட்டினார்‌.

அதை தொட்டு கூட பார்க்கவில்லை அவர். அதையெல்லாம் கவனிக்காத மனிதர் தான் எவ்வளவு பெரிய சாதனை நிகழ்த்தி வந்துள்ளேன் என தன் போக்கில் பேசியபடி இருந்தார்.

"பிள்ளைகள் எங்கே?" என்றார் முடிவாக அவர்களை பார்க்கும் எண்ணத்தில். அதற்கு "அங்க இன்னும் செத்து போகலை" என்றார் வெடுக்கென்று.

அவரின் இந்த பதிலை எதிர்பாராத அவர் கணவர் திக்கென்றது திரும்பி தன் மனைவியை பார்த்தார்.‌ அப்போது தான் அவர் முகத்தில் இருந்த அதீத கலைப்பையும்‌ அவரின் உணர்வற்ற பார்வையையும் கண்டார்.

சூழ்நிலை எதுவோ சரியில்லை என்பதை தாமதமாக உணர்ந்த அவர் "என்னமா ஆச்சு?" என்றார் உள்ளே போன குரலில். இப்போது அவர் மனதில் இருந்த கோபத்திற்கு எல்லாம் கணவர் வடிகாலாகி போனார்.

"நாங்க இருந்தா உங்களுக்கு என்ன செத்தா உங்களுக்கு என்ன. உங்களுக்கு எங்களை விட பணம் தான் இப்போல்லாம் பெருசா போச்சுல. இன்னைக்கு ஸ்ரேயா செத்து பிழைச்சிருக்கா.

இராத்திரி காச்சல்ல அவ உடம்பு தூக்கி தூக்கி போடறப்ப நான் உயிரோட செத்தேன். இராத்திரி நேர்த்தில எந்த ஆஸ்பத்திரி திறந்து இருக்கும்னு தெரியாம விடிய விடிய உயிரை கையில பிடிச்சிட்டு உக்காந்திருந்த எனக்கு தான் தெரியும்.

ஒரு நாள் பூரா ஆஸ்பத்திரியில வச்சு அனுப்புறாங்கனா அவளுக்கு எவ்ளோ காச்சல் இருந்திருக்கும். ஆனா நாங்க என்ன பண்ணுறோம் நல்லா இருக்கமா உயிரோட இருக்கமா செத்தமான்னு கூட தெரியலை.

நாங்க சாப்பிட்டமா எப்படி இருக்கோம்ன்னு கூட கேக்க நேரமில்லாத அளவுக்கு உங்களுக்கு உங்க தொழில் தான் முக்கியமா போயிருச்சு இல்லை" என்று மனதில் இருந்தவற்றை எல்லாம் கொட்டி தீர்த்தார்.

அப்போது தான் தன் சின்ன மகளுக்கு உடல் நிலை சரியில்லை என புரிந்து கொண்டவர் வேகமாக பிள்ளைகளின் அறை நோக்கி சென்றார்.

அங்கே வாடிய மலராய் கிடந்த ஸ்ரேவை கண்டதும் மனதிற்கு மிகவும் கஷ்டமாக போய் விட்டது. மெல்ல தலையை திருப்பி தன் பெரிய மகளை கண்டார்.

அவளை தனியே தான் படுக்க வைத்திருந்தார் தாய். ஸ்ரேவின் காய்ச்சல் இவளுக்கு ஒட்டிக் கொள்ளுமோ என்ற பயத்தில். அவளும் இன்றைய நாளின் நிகழ்வுகளால் சோர்ந்து தெரியவே இருவரின் தலையையும் மெதுவாக வருடி கொடுத்தார்.

பின் வருத்தத்துடன் தன் மனைவியை நோக்கி வந்தார். "இப்போ ஒன்னும் பிரச்சினை இல்லையே மா" என்றார் பாவமாய். அவரின் முகத்தை பார்த்து என்ன நினைத்தாரோ 'ம்ம்' என்று தலை அசைத்தார்.

மறுநாள் சஹியின் தந்தை இனி வெளியூர் எல்லாம் செல்ல கூடாது என அவள் தாய் சொல்லிக் கொண்டு இருக்க அவர் பேசாது அமைதியாக இருந்தார்.

ஏனெனில் அவர் பெரிய கம்பெனி ஒன்றோடு இனைத்து அரசாங்க டெண்டர் ஒன்றை வெளியூரில் எடுத்து உள்ளார். அது மட்டும் வெற்றி பெற்றால் அவர் இத்தனை நாட்கள் சம்பாதித்த பணத்தை இந்த ஒரே வேலையில் சம்பாதித்து விட முடியும்.

அதற்காக தான் யோசித்து கொண்டிருந்தார். சரி மெதுவாக சொல்லி புரிய வைப்போம் என மனதில் நினைத்துக் கொண்டார். சில நாட்கள் அப்படியே போக இவர் வெளியூரில் நடக்கும் வேலையை காண நேரில் செல்ல வேண்டியதாக வந்தது.

அவர் மெதுவாக மனைவியிடம் சொல்ல அவர் திட்டி தீர்த்து விட்டார். ஆனால் சஹியின் தந்தை தன் முடிவில் மாற்றம் இல்லை என்பது போல் நிற்க மனதே விட்டுவிட்டது அவளின் அன்னைக்கு.

அவர் மேலும் சண்டை போட போட அவரின் மனதில் வீம்பு வந்தது. 'நான் யாருக்காக சம்பாதிக்கிறேன். இவர்களுக்காக தானே.

அதை புரிந்து கொள்ளாமல் இப்படி என் முன்னேற்றத்துக்கு தடை விதிக்கிறாளே' என மனதில் நினைத்தவர் செல்வதென்று முடிவு செய்தார். அதன்படி சென்றும் விட்டார்.

'தான் இவ்வளவு தூரம் சொல்லியும் சென்று விட்டாரே' என எண்ணி கொண்டிருந்த சஹியின் தாய் அவர் மீது வெறுப்பை வளர்க்க ஆரம்பித்தாள்.

ஒரு காலத்தில் இவர்கள் காதலித்தார்களா என கேட்கும் படி தான் அதன் பின்னான நிகழ்வுகள் நடந்தேறியது. பணம் பத்தும் செய்யும் என்பதற்கு இணங்க அதன் வேலையை கணக் கச்சிதமாக செய்ய துவங்கியது‌. அதன் தாக்கங்கள் பிள்ளைகளையும் வந்து சேர்ந்தது.

-பயணம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 9

"என்ன சஹி உங்க அப்பா உங்க அம்மா மேல அவ்ளோ லவ் வச்சிருந்தாருன்னு சொன்னீங்க. இப்போ என்னங்க பணத்து மேல லவ் ஆகிட்டாரு" என வருத்தமாக சொன்னான் வெற்றி.

என்னதான் அவன் வருத்தம் தெரிவித்தாலும் வெற்றியின் குரலில் சிரிப்பு தான் வந்தது சஹியிற்கு. பழைய நினைவுகள் தந்த தாக்கத்தை இவனின் பேச்சு சற்று ஆற்றியது என்றால் மிகையில்லை.

அவனை புன்னகையுடன் கண்ட சஹி "ஆமா வெற்றி எங்க அப்பா ஒருத்தர் மேல‌ லவ் வச்சா எப்பவும் எக்ஸ்ட்ரீம் தான். பர்ஸ்ட் எங்க அம்மா அப்புறம் இந்த பணம்" என்றாள்.

அவள் முகத்தை பார்த்து "என்னங்க சிரிக்கிறீங்க" என்றான் பாவமாய். அதே நேரம் விஜய் அங்கே வெற்றியை கோபமாக முறைத்து கொண்டிருந்தான்.

அவனின் முறைப்பை அப்போது தான் பார்த்த வெற்றி "என்ன மச்சான் முறைக்கிற. நான் என்னடா பண்ணிட்டேன்" என்றான் ஒன்றும் புரியாது. விஜய் எதுவும் சொல்லவில்லை.

ஆனால் அவன் பார்வை 'உன்னை அப்புறம் பார்த்துக்கிறேன்" என்றது. 'ஐயையோ இவன் என்ன இந்த பார்வை பார்த்து வைக்கிறான். உசுரு முக்கியம் டா வெற்றி' என மனதினுள் பேசியவன் நன்றாக தள்ளி ஜன்னலின் ஓரம் அமர்ந்து கொண்டான்.

இவர்களை யாரும் பார்க்கவில்லை. அதே நேரம் சஹியும் தங்கள் வாழ்க்கையில் இருந்த வசந்தங்கள் எப்படி நீங்கியது என அந்த நாட்களை பகிர்ந்து கொண்டாள்.

"அன்னைக்கு வெளியூர் போக ஆரம்பித்தவர் தான் அங்கிள்‌. அதை தொடர்ந்து நிறைய நிறைய பிஸினஸ் டீல்ஸ்‌. பெரிய பெரிய கம்பெனியோட டை-யப்ஸ்.

அதோட எங்க கம்பெனியும் பெரிய கம்பெனியா உருவாச்சு. பட் அதெல்லாம் எங்க அம்மாகிட்ட அப்பா ஷேர் பண்றதையே விட்டுட்டார். அதுக்கு பதிலா என்கிட்ட ஷேர் பண்ண ஆரம்பிச்சார்.

எனக்கு அதுலாம் என்ன அப்படின்னு கூட புரியாது. பட் அப்பா பெரிய பிஸ்னஸ் பண்றார் அப்படின்ற அளவுல புரிஞ்சுது. ஆனா எனக்குள்ள அவர் பிஸனஸை விதைச்சிருக்காருன்னு எனக்கு புரியாமையே போய்ருச்சு அங்கிள்‌" என்றாள் வருத்தமாய்.

இப்போதும் அடங்காத வெற்றி "ஏங்க சஹி அப்போ ராஜாராம் சாராலை தான் உங்களுக்கு பிஸ்னஸ் மேல இன்ட்ரஸ்ட் வந்திருக்கு. சோ அதான் நீங்க உங்க அப்பா பிஸ்னஸ பார்த்தீங்களா?" என்றான் பட்டென்று.

அவன் கேள்வியில் பட்டென்று திரும்பி பார்த்த விஜய் முறைத்தான். அப்போது தான் ' ஐயையோ நானே உளரிக் கொட்டிட்டேன் போலையே. கண்டு பிடிச்சிருவாங்களோ?' என்று பீதியுடன் சஹியை கண்டான்.

ஆனால் தன் எண்ணத்தில் இருந்த சஹியோ அவனுக்கு எப்படி தன் அப்பாவின் பெயர் தெரிந்தது, தான் தன் தந்தையின் தொழிலை பார்த்தது இவனுக்கு எப்படி தெரியும் என எல்லாம் யோசித்து பார்க்கவில்லை.

அதனால் "இல்லை வெற்றி. எனக்கு எங்க அப்பான்னா ரொம்ப பிடிக்கும். சோ அவர் என்ன சொன்னாலும் கேட்டுப்பேன். அது எனக்கு பிடிக்குதா பிடிக்கலையா அப்படின்னு நான் இதுவரைக்கும் யோசிச்சே பார்த்தது இல்லை" என்றாள் வெறுமையான குரலில்.

அதை கேட்டவர்களின் மனநிலையை சொல்லவும் வேண்டுமா. 'இந்த சின்ன பெண்ணிற்கு ஏன் இவ்வளவு சோதனை' என்றே வருந்தினர்.

எவ்வளவுக்கு எவ்வளவு ராஜாராம் தன் குடும்பத்தை விட்டு விலகி செல்ல முடியுமா அவ்வளவு தூரம் சென்றிருந்தார். அதனால் மாறியது என்னவோ சஹியின் அன்னையின் குணம் தான்.

இவ்வளவு நாட்கள் ஆசிரமம் சென்று கொண்டிருந்தவர் தான். எப்போது ஒரு சண்டையின் போது அவரை திசை திருப்ப தான் ஆசிரமம் ஏன் போக சொன்னார் என உளறினாரோ அப்போதில் இருந்து அவர் அங்கே செல்வதையும் விட்டுவிட்டார்.

இப்போது முழு நேரமும் வீடே கதி என கிடந்த சஹியின் தாய் மனது சாத்தானின் உறைவிடமானது. இப்போது எல்லாம் ராஜாராம் எந்த நேரம் வந்தாலும் சண்டை என்ற நிலை தான்.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் கூறி சண்டை இட துவங்கினார். முதலில் குழந்தைகள் இருக்கிறார்கள் என எண்ணி அறைக்குள் மட்டும் இருந்த சண்டை நடு ஹாலிற்கு வந்தது.

கணவருடன் சண்டையிடும் தீவிரத்தில் தன் பிள்ளைகளை மறந்து தான் விட்டார் போல்‌. ஆனால் இவை எல்லாம் பார்க்கும் அந்த சிறு பிள்ளைகளின் மனநிலை எப்படி இருக்கும் என யோசிக்க மறந்தனர் இருவரும்.

"சே. வீட்டுக்கு வரவே பிடிக்கல. எப்போ வந்தாலும் சண்டை சண்டை. உன்னையா காதிலிச்சு கல்யாணம் செஞ்சேனு நினைச்சா என்னை நினைச்சு எனக்கே கோபமா வருது" என்று கோபமாய் பேசி சென்றுவிட உடைந்து விட்டார் சஹியின் தாய்.

இரவு முழுவதும் அழுதே கரைந்தார். இதற்கு பிறகு நிலைமை இதே போல் தான் இருந்தது. ராஜாராம் வரவே சண்டையிடுவார் சஹியின் தாய். இதுவே தொடர இவரும் சண்டையை அதிகப்படுத்துவார்.

பின் தூங்கும் பிள்ளைகள் இருவரையும் பார்த்து சென்றுவிடுவார். அலுவலகமே கதி என வீட்டை மறக்க இன்னும் இன்னும் வேலையை இழுத்து கொண்டார்.

"ஆபீஸே கதின்னு இருந்தார் அங்கிள்‌. ஆரம்பித்ததுல எங்களுக்கு தெரியாம செஞ்ச சண்டையை நாங்க இருக்கும் போதும் போட ஆரம்பிச்சாங்க.

அதை பார்த்தா எங்க மனநிலை எப்படி இருக்குன்னு அவங்க யோசிக்கவே இல்லை. அப்புறம் நான் அவர் சொன்ன கோர்சையே காலேஜ்ல எடுத்து படிச்சேன். அவர் சொன்னபடி எங்க ஆபிஸ்க்கே வேலைக்கு வந்தேன்" என்க

"அப்போ இதுவரைக்கும் உன் லைஃப்ல உன் விருப்பப்படி என்ன தான் நீ செஞ்சிருக்க?" என்றான் விஜய் சற்று கோபம் ஏறிய குரலில். கோபத்தில் மரியாதை எல்லாம் காற்றில் பறந்தது.

'என்னதான் அப்பா மீது பாசம் மலை அளவு இருந்தாலும் தன் வாழ்வில் பிடித்ததை செய்ய கூடாதா?' என்ற கேள்வியே விஜயின் மனதில் மேலே எழுந்தது.

அவன் கோப முகத்தை புரியாது பார்த்தாலும் "இல்லை. அப்பா சொல்றபடி தான் செய்வேன். சின்ன வயசுல இருந்தே பழகி போச்சு. என்ன பண்ண தங்க கூண்டுல இருக்க கிளி தான் விஜய் நான்‌" என்று அவள் சொல்லும் போதே கேட்பவர்க்கு மனது வலித்தது.

"ஆனா நான் அதை எதுவும் என் தங்கச்சிய நெருங்க விட்டது இல்லை. அவ விருப்பப்படி தான் அவளை நான் செயல்பட விட்டேன். அப்பா என்னமோ நான் தான் எல்லாத்தையும் செய்யனும்னு எதிர்பார்த்தார்.

அதனால ஸ்ரேய அவ இஷ்டபட்டபடி இருக்க மாதிரி நான் பார்த்துக்கிட்டேன்" என்றாள் பிரகாசமான முகத்தோடு.

"அப்படின்னாலும் உனக்கு பிடிச்ச சின்ன சின்ன விஷயத்தையாவது நீ பண்ணிருக்கலாமே சஹி. ஏன்மா உன்னையே இவ்ளோ கஷ்டபடுத்திக்கிற" என வருத்தமாய் வார்த்தைகள் வந்தது விஜய்யிடம் இருந்து.

"அது என்னமோ தெரியலை விஜய். என் அப்பா டிரைனிங் ரொம்ப பவர்புல்னு நினைக்கிறேன். நான் நினைச்சாலும் மாற முடியலை" என்று உயிர்ப்பில்லாத சிரிப்பை உதிர்த்தாள்.

அதோடு 'இதைப்பற்றி பேச வேண்டாமே' என ஒரு கெஞ்சும் பார்வை வேறு சஹி வீச அதற்கு மேல் விஜயும் அதை பற்றி பேசவில்லை. ஆனால் அவர்களின் விழி பேசும் மொழியை கண்ட வெற்றி தான் 'பே' வென முழித்துக் கொண்டிருந்தான்.

"எங்க ஆபிஸ்க்கு போன முதல் நாள் இன்னும் நியாபகம் இருக்கு. அந்த ஐச்சு மாடி கட்டிடத்தை பார்த்து என்னால‌ நம்பவே முடியல அது எங்க ஆபிஸ்னு. நான் அந்த பில்டிங்கையே 'பே'ன்னு பார்க்க

அந்த பக்கமா போன யாரோ என்னை பார்த்து "என்ன ஆபிஸ்க்கு புதுசா. என்னமோ பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி நிக்கிற. உள்ள போம்மா' அப்படின்னு சொல்லிட்டு போனாங்க" என்றவள் அந்த நாளின் நிறைவில் சட்டென்று சிரித்து விட்டாள்.

சஹி இதை சொன்னவுடன் விஜய் திரும்பி வெற்றியை தான் பார்த்தான். அவனிடம் 'நீயே காட்டி கொடுத்துடாத டா பிளீஸ். ஐம் யுவர் பெஸ்ட் பிரண்ட்' என்று வாயை மட்டும் அசைத்தான் வெற்றி.

அவன் செய்கையை பார்த்து விஜய் வந்த புன்னகையை உதட்டை கடித்து அடக்கி கொண்டான். 'பிளீஸ் டா மச்சான்' என்று கண்களால் கெஞ்சினான். அதில் 'பொழச்சு போ' என்றுவிட்டான்.

"எங்க அப்பா என்கிட்ட நம்ம ஆபீஸ் பெருசு பெருசுன்னு சொல்வார். ஆனா அவ்ளோ பெருசா... இருக்கும்னு நானும் நினைச்சு கூட பார்த்தது இல்லை.

எங்க முதல் ஆபிஸ் திறந்தப்ப போனது அங்கிள்‌. அப்போ அது சின்ன ரூம் அங்கிள்‌. அதை அவ்ளோ பெருசா வளர்த்தது எங்க அப்பாவோட உழைப்பு தான்.

அதை நான் ஒத்துக்கிறேன். ஆனா அதுக்காக சொந்த குடும்பத்தை அவரு ஒதுக்கி வச்சதை தான் எங்களால தாங்க முடியலை. அப்போ எனக்கு மனசுல தோனின ஒரே விஷயம்

அட்லீஸ்ட் ஒரு ஒரு மணி நேரம் எங்க கூட ஸ்பென்ட் பண்ண முடியாம இவ்ளோ பெரிய பிஸ்னஸ் பண்ணி என்ன யூஸ்? அப்டின்னு" என்றாள் நியாயமாக.

அவளின் கேள்வியின் நியாயம் மற்றவர்களுக்கு புரிய தான் செய்தது. ஆனால் புரிய வேண்டிய மனிதனோ ஒரேயடியாக போய் சேர்ந்துவிட்டாரே!

-பயணம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 10

"என்ன பாப்பா நீ இப்படி சொல்ற அவ்ளோ வருஷத்தில ஒரு நாள் கூட நீங்களாம் உங்க அப்பா ஆபீஸ பார்த்ததே இல்லையா?" என்றார் சோம் ஆச்சரியமாக.

அவரின் முகம் கண்டு "அட உண்மையை தான் சொல்றேன் அங்கிள்‌. எங்க கம்பெனி எங்க இருக்குன்னு கூட எங்களுக்கு தெரியாதுனா பாருங்களேன்" என்றாள் அவளும் வேடிக்கையாக.

அதே சமயம் அவள் சொற்கள் அத்தனையும் உண்மையும் கூட. திடீரென எதோ தோன்ற "உங்க தூக்கத்தை கெடுத்து ரொம்ப பேசி போர் அடிக்கிறனா?" என்றாள் அனைவரின் முகத்தையும் பார்த்து பாவமாக.

"அப்படியே ஒன்னு போட்டேனா. லூசு மாதிரி பேசாத சஹி. இவ்ளோ வருஷம் தான் எல்லாத்தையும் மனசுக்குள்ளையே போட்டு வச்சிருந்த அதை இப்போ எங்க கூட ஷேர் பண்றதுல உன் மனசும் கூட ரிலாக்ஸ் ஆகும்.

எங்களை உன் மனசுக்கு குளோசா பீல் பண்ணவும் தானே எங்கக்கிட்ட இதெல்லாம் ஷேர் பண்ற. அப்போ நாங்க மட்டும் உன்னை வேறையாவா பார்ப்போம்" என்றது விஜய் அல்ல வெற்றி.

இந்த முறை வெற்றி பேசியதை அனைவரும் அமைதியாக ஆமோதித்தனர். அவன் கூறியதை கேட்டு சிரித்த சஹி "நான் யாரையும் நம்பினதே இல்லை தெரியுமா.

எங்க அப்பா அடிக்கடி சொல்வாறு யாரையும் நம்பக் கூடாது அப்படின்னு. சோ சின்ன வயசுல இருந்தே நான் யார் கூடவும் பழக மாட்டேன். மனுஷங்கள நம்பினா ஏமாத்திருவாங்கன்னு நானும் நினைச்சிட்டு தான் இருந்தேன்.

பட் சோம் அங்கிள்‌ நீங்க தான் என்னோட அந்த எண்ணம் மாற காரணம்" என்றாள். அனைவரும் புரியாத பார்வை பார்க்க "ம்ம் யாருனே தெரியாத ஸ்ரே பேச ஆரம்பிக்கவும் சட்டுன்னு நீங்க பாசமா பேச ஆரம்பிச்சது பிடிச்சிது.

அதுவும் பசங்க ரெண்டு பேரு" என வெற்றியையும் விஜய்யையும் காட்டியவள் "அவங்க வரவும் நீங்க சீட் மாறினதுல உங்க கேர் எனக்கு நல்லாவே புரிஞ்சுது அங்கிள்‌. எங்க அப்பா கூட இப்படி செஞ்சதா எனக்கு நியாபகம் இல்லை.

அப்புறம் நீங்க கொண்டு வந்த புட் தந்ததுல உங்க இயல்பே இதுதான்னு எனக்கு புரிஞ்சுது. எங்களை நம்பி நீங்க உங்களை பத்தி சொன்னப்போ எந்த நம்பிக்கையில இதை எங்ககிட்ட ஷேர் பண்றீங்கன்னு கூட யோசிச்சேன்.

ஆனா உங்க லைஃப்ல நடந்த இன்சிடன்ஸ் என்னை வேற மாதிரி யோசிக்க வச்சிது அங்கிள்‌. நமக்கு மட்டும் தான் லைஃப்ல பிரச்சினை இருக்கு அப்டின்னு நான் நினைச்சிருக்கேன்.

பிகாஸ் நான் தான் யார்க்கிட்டையும் பேச மாட்டேனே. ஸ்கூல் காலேஜ் ரெண்டுலையும் எனக்கு பிரண்ட்ஸ்னு யாருமே இல்லை. உண்மையை சொல்லனும்னா நான் தான் யாரையும் கிட்ட சேர்க்கலை.

அவங்க சந்தோஷமா இருக்கிறத பார்த்து ஏங்கி கூட இருக்கேன். பட் நீங்க சொன்ன அப்புறம் தான் என் மர மண்டைக்கு புரிஞ்சுது" எனும் போது "என்னன்னு" என்று குறுக்கிட்டான் வெற்றி.

"அது லைஃப் அப்படினாலே பிராப்லம்னு" என்று அசடு வழிந்தாள் சஹி. மற்றவர்களும் புன்னகைக்க " அப்போ அங்கிள் கிட்ட விஜய் பேசினாருல்ல. உங்க சொத்து எல்லாம் போகலை.

அந்த சொத்தே நீங்க சம்பாதிச்ச மனுஷங்க தான்னு. அந்த வேர்ட்ஸ் ரொம்பவே என்னை டிஸ்டர்ப் பண்ணிருச்சு. அப்போ இவ்ளோ நாள் லைஃப்ல நான் என்னத்தை சம்பாதிச்சிருக்கேன் அப்படின்னு ஒரு தாட்" என பெருமூச்சு விட்டவள் சோர்வான புன்னகையுடன்

"அந்த நேரம் எனக்கு புரிஞ்சுது. எங்களுக்குன்னு இந்த உலகத்தில யாருமே இல்லைன்னு" என்னும் போதே கண்களின் ஓரம் கண்ணீர் கசிந்து விட்டது.

இடையே பேசப் போன வெற்றியின் கையை பிடித்து தடுத்த விஜய் அவளை இன்னும் நிறைய பேசவிட்டான்‌. அதன் மூலம் அவள் மனதில் நிம்மதி கண்டிப்பாக பிறக்கும் என நம்பினான்.

தன்னையே சற்று தேற்றி கொண்டவள் "அதுக்கு அப்புறமும் விஜய் பேசின விஷயங்கள் என் மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்திச்சுனு தான் சொல்லனும்.

எனக்கு மனசுல ஒரு தேடல் இருந்துட்டே இருந்துச்சு. எதை செஞ்சா மனசு நிம்மதியா இருக்கும்னு. அதோட விஜய் சொன்ன விஷயமும் ஒத்து போச்சு.

எங்ககிட்ட பணம் நிறையவே இருக்கு. அதை எங்க அப்பா செஞ்ச மாதிரி வெறும் புண்ணியம், வரி விலக்குக்காகன்னு அந்த பணத்தை செலவு பண்ணாம நானே போய் செய்யனும் அப்படின்னு மனசுல இப்போ தோனுது" இதுவரை பொதுவாக பார்த்து பேசியவள் இப்போது விஜய்யை பார்த்து ஆரம்பித்தாள்

"இந்த மாதிரி தேவை இருக்க ஆட்களுக்கு உதவுனா வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் அப்படின்னு எனக்கு யாரும் சொல்லி தந்தது இல்லை விஜய்.

அன்பை நாம ஒரு மடங்கு தந்தா அது எப்படி நமக்கு பேரன்பா திரும்பும்னு சோம் அங்கிள் நீங்க உங்க வாழ்க்கையால எனக்கு சொல்லி தந்தீங்க" என சோம் அங்கிளை பார்த்து முடித்தாள்.

எல்லோரும் அவளை பரிவுடன் பார்க்கும் போது "யார் என்னன்னு தெரியலைனாலும் பசில இருந்தா சாப்பாடு குடுக்கனும் அப்படின்னு உங்க கிட்ட தெரிஞ்சிக்கிட்டேன் லக்ஸ் மா.

யாராவது சோகமா ஆகிட்டா அவங்க மனசு சரியில்லைனா அவங்கல எல்லாம் சிரிக்க வைக்கனும்‌ன்ற விஷயத்தை உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டேன் வெற்றி" என்று முடித்தாள்.

"அதுவும் இல்லாம ஸ்ரே அழவும் என மனசு ரொம்ப லோன்லியா பீல் ஆச்சு. லைஃப்ல எனக்கு முக்கியமான நிறைய விஷயங்களை சொல்லி தந்த நீங்க எனக்கு என் ஃபேமிலி மெம்பர்ஸா தான் தெரிஞ்சீங்க.

அதனால‌ உங்ககிட்ட என் மனசுல இருந்த விஷயத்தை எல்லாம் சொல்லலாம்னு முடிவு செஞ்சேன். மோர் ஓவர் எனக்கும் மனுஷங்கள தெரிஞ்சுக்க ஆசை வந்திருச்சு" இவ்வாறு தன் மனதை சொல்லி முடித்தாள் சஹி.

அவள் மனநிலையை கணிந்த சோம் மற்றும் லக்ஷ்மி "இனிமே இந்த உலகத்தில‌ எனக்கு யாரும் இல்லை அப்படின்னு உளறக் கூடாது பாப்பா. நீயும் என் பொண்ணு தான்" என்றனர்.

அதற்கு சிரித்து மட்டும் வைத்தாள் சஹி. வெற்றி "அப்புறம் உங்க அப்பாவோட ஆபீஸ் போன கதையை சொல்லாம விட்டுட்டீங்க" என்று விஷயத்திற்கு வந்தான்.

சஹியும் புன்னகையுடனே ஆரம்பித்தாள் "அது ஒரு காமெடி வெற்றி. நானும் வாயை பிளந்துட்டு உள்ள போக ஆபீசே என்ன கேவலமா பார்க்கன்னு செமயா போச்சு.

அதுக்கு அப்புறம் ஒரு வருஷம் நான் யாருன்னே சொல்லாம ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு செஷனா போய் நான் வேலையை நல்லா கத்துக்கிட்டேன்.

வேலைல டௌட்னா யாரு என்னன்னு பார்க்க மாட்டேன். பக்தத்தில‌ யாரு இருந்தாலும் உடனே கிளியர் பண்ணிப்பேன். அதுக்கு அப்புறம் எங்க அப்பா எனக்கு டெஸ்ட்லாம் வச்சு என்னை கம்பெனி எம்.டி ஆக்கினார்.

ஒரு வருஷம் அவர் செஞ்ச வேலையை நானும் நல்லாவே கொண்டு போனேன். இப்பையும் சமாளிக்கிறேன்" என்று பெருமூச்சுடன் முடித்தாள்.

"ம்ம் கிரேட்" என வாய்விட்டே பாராட்டினான் விஜய். லக்ஷ்மி அம்மா தயங்கியபடி "ஆனா ஸ்ரே பாப்பா எதுக்கு அப்படி புலம்பி அழுதா டா பாப்பா?" என்றாள் மெதுவாக.

"அது" என இழுத்தவள் "ஒரு சிக்ஸ் மந்த்ஸ் இருக்கும். நான் ஆபீஸ் போய்ட்டேன். ஸ்ரே அப்போ தான் ஃபைனல் இயர் எக்சாம் முடிச்சிட்டு வீட்ல தான் இருந்தா. அப்பாவும் அம்மாவும் அன்னைக்கு வெளியே ஒரு பார்ட்டிக்கு போயிருந்தாங்க.

வழக்கம் போல சண்டை போல கார்ல. ஸ்ரே அம்மாக்கு போன் பண்ணியிருக்கா. அம்மா கோபமா பேசிட்டு வச்சிட்டாங்க போல. அவ பயந்துட்டா. அதனால‌ என்கிட்ட போன் பண்ணி ஒரே புலம்பல்.

எனக்கும் கஷ்டமா போச்சு. சோ அவ வீட்ல தனியா இருக்க வேண்டாம்னு ஆபீஸ்க்கு வர சொன்னேன். அது தான் நான் பண்ண பெரிய தப்பு" என்றவளின் கண்களில் கண்ணீர் வந்தது.

அன்று ஸ்ரேயா வரும் வழியில் ஒரு இடத்தில் கூட்டமாக நிற்க எதோ ஒரு ஆர்வத்தில் பார்க்க போய்விட்டாள். அங்கே அவள் பார்த்தது என்னவோ ரத்த வெள்ளத்தில் இருந்த தாய் தந்தையை தான்.

பார்த்த உடன் கதறி விட்டாள். யாரோ ஏற்கனவே ஆம்புலன்ஸை அழைத்து இருக்க அவளும் ஏறி சென்றாள். சஹிக்கும் விஷயம் சொல்லப்பட அடித்து பிடித்து ஓடி வந்தாள் மருத்துவமனைக்கு.

ஆனால் என்ன முயன்றும் அவர்கள் இருவரையும் காப்பாற்ற முடியாமல் போக விதியின் விளையாட்டில் கைப்பாவை ஆகி போனார்கள் இருவரும்.

"அப்பா அம்மா இறுதி காரியத்தை முடிச்ச அப்புறம் தான் எங்களுக்கு நிறைய பிரச்சினை. இதுவரை இல்லாத சொந்தகாரங்க எல்லாம் சொத்துக்காக வந்தாங்க.

அவங்கல ஒருவழியா சமாளிச்சா ஆபீஸ்ல பிரச்சினை. எங்க கம்பெனி ஷேர் ஹோல்டர்ஸ் எல்லாரும் இவ பொண்ணு தானேன்னு எங்க கம்பெனிய புடுங்க பார்த்தாங்க.

இப்படி பிரச்சினை எல்லாத்தையும் சரி பண்ணவே எனக்கு நாலு ஐஞ்சு மாசம் ஓடிப் போச்சு. இதுல நான் என் தங்கச்சியை மறந்தே போய்ட்டேன்" என்றவள் குற்றம் செய்த குழந்தையாய் முழித்தாள்.

ஒரு நாள் வீட்டில் இருந்து வேலையாள் அழைத்தார். ஸ்ரேயா மயங்கி விழுந்து விட்டதால் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக கூற வேகமாக சென்றாள்.

அங்கே ஸ்ரேயா சில மாதங்களாக நிறைய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூற உடைந்து விட்டாள் சஹி. தானும் மற்றொரு ராஜராமாக மாறி விடுவோமா என பயந்தே விட்டாள்.

எனவே அதன் பிறகு ஸ்ரேயை உடன் இருந்தே பார்த்து கொண்டாள். மருத்துவர் இடமாற்றம் அவள் மன காயங்களை ஆற்றும் என்று கூறியதில் எங்கே செல்லலாம் என ஸ்ரோயாவிடமே கேட்டாள்.

அவள் வடக்கே டெல்லி ஹிமாச்சல் போன்ற இடங்களுக்கு செல்லலாம் என கூற தங்கள் தொழிலின் ஆரம்பத்தில் இருந்தே உடன் இருக்கும் மேனேஜரிடம் மொத்த பொறுப்பையும் தந்து விட்டு இந்த இரயில் பயணத்தை தொடங்கி இருந்தனர் சகோதரிகள் இருவரும்.

சஹி தங்கள் வாழ்வின் நிகழ்வுகளை சொல்லி முடிக்கும் நேரம் ஆதவனும் சோம்பலாக தன் கதிர்களை பரப்ப தொடங்கினான்.

-பயணம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 11

வெய்யோனின் ஒளி சிறிது சிறிதாய் உறங்கி கொண்டிருந்த ஸ்ரேயா முகத்தின் மீது விழுந்தது. அந்த வெளிச்சத்தில் அவள் கருவிழிகளை மெல்ல அசைத்தாள்.

மெதுவாக எழுந்து பார்க்கும் போது அவளை தவிர்த்து மற்றவர்கள் எல்லாரும் கீழே அமர்ந்து இருந்தனர். அனைவரும் பேசாது மௌனமாக இருக்க சஹி வேறு சோம் மற்றும் லக்ஷ்மியின் நடுவே அமர்ந்திருந்தாள்.

அப்போது தான் இரவு நடந்த நிகழ்வுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்தது. 'சே எல்லாரையும் படுத்திட்டேன் போலையே.

சஹி முகமே வேற சரியில்லை. பாவம் அவ கஷ்டத்தையே வாழ்க்கை பூரா அனுபவிக்கிரா" என வேதனையாக எண்ணி கொண்டவள் அமைதியாக கீழே இறங்கினாள்.

சோம் அங்கிள்‌ முன் போய் நின்றவள் அனைவரையும் தயங்கியபடியே ஏறிட்டாள். "சாரி உங்க எல்லாரையும் நான் ரொம்ப பயமுறுத்திடேனா?" என்றாள் சங்கடத்துடன்.

முறைக்க கூட முடியாது அவளை பார்த்த வெற்றி "அதெல்லாம் ஒன்னும் இல்லை ஸ்ரே. நீ வொர்ரி பண்ணிக்காத" என்று ஆதூரமாக கூறியவன் "நைட் நல்லா தூங்குனியா டா?" என்றான் பரிவான குரலில்.

"ம்ம் நல்லா தூங்கிட்டேன். இப்போ கூட நானா தானே எழுந்தேன். நீங்க எழுப்பி விடவே இல்லை" என்றாள் குறை போல். அதன்பின் எங்கே அமர என இரண்டு இருக்கையையும் அவள் மாறி மாறி பார்க்க அதை கவனித்த வெற்றி சிரித்து விட்டான்.

"எம்மா ஸ்ரே! என்ன திருவிழால காணம போன பச்சைப் புள்ளை மாதிரி திருதிருன்னு முழிச்சிட்டு இருக்க. நேத்து வாய மூடாமா பேசிட்டு இருந்த, இன்னைக்கு என்ன ஆச்சு.

தூங்கி எழுந்தா முதல் நாள் நடந்தது எல்லாம் மறந்திடுவியா? எங்க எல்லாரையும் உனக்கு நியாபகம் இருக்கா இல்லையா" என்றான் கிண்டலாக.

இதை கேட்டவாறு பழையபடி சோம் சென்று வெற்றி விஜய்யின் அருகே அமர்ந்துக் கொண்டார். அதை கண்டு வெற்றியை பார்த்து பழிப்பு காட்டிவிட்டு சஹியின் அருகே அமர்ந்து கொண்டாள்.

இப்போது ஸ்ரே பழைய ஸ்ரேயாவா தெளிந்து திரும்பி இருந்தாள். "இந்த கேள்வியை நான் தான் கேக்கனும் மிஸ்டர். முட்டை கண்ணன். தூங்கிட்டு இருந்த என்னை விட்டுட்டு நீங்க எல்லாரும் பேசிட்டு இருக்கீங்க.

வாட்ஸ் த மேட்டர். என்ன ரகசியம் பேசினீங்க. சொல்லுங்க முட்டை கண்ணன் சொல்லுங்க" என்று ஆரம்பித்துவிட்டாள் ஸ்ரேயா. மேலும் இவர்கள் இருவரின் பேச்சுக்களும் மற்றவர்களுக்கு சிரிப்பை தான் தந்தது.

"ஏய் வாயாடி எழுந்தியே பிரஷ் பண்ணுனியா. வந்து பேச உக்காந்துட்ட. சரியான சோம்பேறி கழுதை" என்று அவளை செல்லமாக திட்டினாள் சஹி.

அப்போது தான் மற்ற அனைவருக்கும் நினைவு வந்தது. தாங்களும் இன்னும் பல்லு கூட விலக்கவில்லை என்று. அவர்களின் முழியை வைத்தே கண்டு கொண்ட ஸ்ரே

"என்ன சொல்றியே, நீங்க எல்லாரும் பல்லை விலக்கு விலக்குன்னு விலக்கிட்டு தான் வாயடிச்சிட்டு இருக்கீங்களா" என்று அவர்களையும் ஓட்டினாள்.

ஒருவழியாக தங்கள் வேலைகளை முடித்து வந்தனர் அனைவரும். அதன்பின் ஸ்ரேயா வெற்றியின் பேச்சை ரசித்தபடி காலை உணவை எடுத்துக் கொண்டனர். இதில் சஹியும் அவர்களுடன் சகஜமாக பேச அவளையும் ஓட்டிக் கொண்டிருந்தாள் ஸ்ரே.

இது மாதிரி ஒரு மகிழ்வான காலை வேளையால் சஹியின்‌ மனது நெகிழ்ந்து போனது.‌ அவர்கள் வீடும் இப்படி தான் சிரிப்பும் சந்தோஷமாக இருந்தது ஒரு காலத்தில்.

மீண்டும் அந்த நிலை வராது என்ற நினைவே அவளுக்கு வருந்தத்தை அளிக்க அமைதியாகி விட்டாள் சஹி. சஹியின் அமைதியை கவனித்த சோம் அங்கிள்‌

"என்ன பாப்பா பழசையே நினைச்சிட்டு இருக்கியா. எல்லாத்தையும் கடவுள் கைல விட்ரு டா. அவன் பார்த்துப்பான். மனச சந்தோஷமா வச்சுக்கோ என்ன" என்றார் ஆறுதலாக.

அவரை கண்டு புன்னகைத்தவள் "ம்ம் சரி அங்கிள்" என்றாள்‌. இதை ஆச்சரியமாக பார்த்த ஸ்ரே அப்போது தான் சோமின் வரிகளை உணர்ந்தாள்.

"அங்கிள்‌ அது எங்க பாஸ்ட் பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றாள் தயக்கமாக. அவள் அவரையே பார்க்க பதில் என்னவோ சஹியிடம் இருந்து வந்தது.

"நான் தான் நம்ம லைஃப்ல நடந்த எல்லாவற்றையும் இவங்க கூட ஷேர் பண்ணிக்கிட்டேன் ஸ்ரே" என்றாள் புன்னகையுடன். இப்போது ஆச்சரியமாகி போன ஸ்ரே "நிஜமாவா!

ஹே சஹி நிஜமாவே நீயே சொன்னியா என்ன. வானம் பொத்துட்டு தான் ஊத்த போகுது. உண்மை தானா?" என சந்தேகமாய் கேட்க செய்தாலும் அவள் மனமும் மகிழ்ந்தது உண்மையே.

"ஹே உண்மை டா. நீ வேணும்னா இவங்ககிட்ட கேட்டு பாரு" என சின்ன பிள்ளையாய் முன்னிருந்தவர்களை‌ கை காட்டினாள். அவள் கிண்டல் செய்கிறாள் என புரியாத லக்ஷ்மியும்

"சஹி சொல்றது உண்மை தான் ஸ்ரே பாப்பா. உங்களை பத்தி தெரிஞ்ச அப்புறம் மனசுக்கு கஷ்டமா போச்சுடா" என்றார் வருத்தமாக.

இந்த பதிலில் பழையது நினைவு வர சற்றே சோர்ந்து விட்டது அவள் முகம். "எங்க லைப் சந்தோஷமா தான் இருந்தது. சஹி சொல்லிருப்பா. அப்படியே இருந்திருந்தா நல்லா இருக்கும்னு தோணுது அங்கிள்" என்றாள்.

அவளின் நேற்றைய அழுகையை பார்த்து வருந்தி இருந்தவர்கள் இப்போது அவளின் சோர்ந்த முகத்தை காண சகியாது அவள் மனதை மாற்றும் பொருட்டு "சரியான அழுமூச்சு பாப்பாவே தான் நீ.

தயவு செஞ்சு அழுது கிழுது வெள்ளத்தை வர வச்சிராத மா. எங்களால போட் எல்லாம் ஓட்ட முடியாது. அப்புறம் உன் முகத்தையும் பார்க்க சகிக்கலை" என ஆரம்பித்தான் வெற்றி.

அவனின் முயற்சி புரிந்தபடி "ஹலோ ஹலோ! மிஸ்டர். முட்டை கண்ணன். நாங்களாம் அழுதாலும் அழகு தான். ரொம்ப பண்ணாதீங்க" என்றாள் வீம்பாக.

கொஞ்ச நேரம் இப்படியே கழிய திடீரென விஜயை பார்த்து "ஆமா விஜய் நாங்க எல்லாம் எங்களை பத்தி செல்லிட்டோமே. நீங்க என்ன ஒன்னும் சொல்லலை.

எப்படியும் என் அக்கா ஏ டூ இசட் எங்களை பத்தி சொல்லிருப்பா‌. வெற்றியும் சொல்லிட்டாரு. சோம் அங்கிள் அவர் தான் ஸ்டார்ட் பண்ணியே வச்சாரு.

ஆனா நீங்க கருத்து கருத்தா பேசுனீங்க. நீங்க என்ன பண்றீங்க என்ன ஏதேன்னு ஒன்னுமே சொல்லலையே. நீங்களும் சொல்லுங்க விஜய். அப்போ தானே உங்களை பத்தியும் எங்களுக்கு தெரியும்" என்றாள் ஆர்வமாக.

ஆனால் விஜய் சிரித்தானே ஒழிய ஏதும் பேசவில்லை. "என்ன விஜய் இது. நாங்க எல்லாரும் சொன்னோம்ல நீங்க சொல்றதுக்கு என்ன. எங்களை நீங்க இன்னும் பிரண்டா கண்சிடர் பன்னலை இல்ல" என்றாள் கோபம் போல்.

ஆனால் எதற்கும் விஜய் மசிந்து விடவில்லை. அவன் எதுவும் சொல்லாதது சஹிக்கும் ஒரு மாதிரி ஆக "என்ன விஜய் சொல்ல மாட்டீங்களா?" என்றாள் பாவமாக.

அவள் கேள்விகளுக்கு மட்டும் "வேண்டாமே" என்றான். அவன் பார்வையில் இருந்த இயலாமையில் அதற்கு மேல் சஹியும் ஏதும் கேட்கவில்லை.

ஆனால் அவன் பதிலில் கோபம் அடைந்த ஸ்ரே வெற்றியை பார்த்து "ஏய் முட்டை கண்ணா. அவர் உன் பிரண்ட் தானே நீ சொல்லுடா அவரை பத்தி" என்று கத்தினாள்.

அவளை விஜையை விட பாவமான முகபாவத்தை வைத்து கொண்டு பார்த்தான் வெற்றி. "என்ன முகபாவனைல பேசுறியா. எனக்கு நேரா பேசினாவே புரியாது. நீ ஒழுங்கா வாயால பேசி தொலை" என்று கடுப்படித்தாள் ஸ்ரே.

அவன் நிலையை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் விஜய். அவனை பார்த்து "அடேய் கிராதகா! பாரு என்ன கேக்குறான்னு. இப்ப நான் சொல்றதை கேட்டா காறித் துப்புவாளே. ஏன்டா என்னை இப்படி மாட்டி விட்ட" என்று பல்லை கடித்தான்.

"ஹேய் எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு. அங்க என்ன ரகசியம்?" என்றாள் ஸ்ரே அவனை விடாது. இப்போது ஸ்ரேவை பார்த்து 'உன் விதியை யாரால மாத்த முடியும் வெற்றி.

கேட்டுட்டு கண்டமேணிக்கு கழுவி ஊத்த போறாங்க' என மனதில் எண்ணினான். எல்லாரும் அவனையே பார்த்திருக்க 'சரி ஆரம்பிப்போம்' என சொல்ல தொடங்கினான்.

"அந்த சோக கதையை ஏன்மா கேக்குற" என்று இழுத்து வராத கண்ணீரை துடைத்து கொண்டிருந்தான். அவன் செய்கையில் கடுப்படைந்த ஸ்ரே

"இங்க பாரு வெற்றி என்னை கடுப்பேத்தாத. ஒழுங்கா சொல்லிரு. இல்லை நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. பார்த்துக்க" என்று எகிறிவிட்டாள்.

அவளை நன்கு கடுப்பேத்திவிட்டோம் என புரிய "சரி சரி கோவப்படாத. நான் சொல்லிடறேன். ஆனா அதை கேட்டுட்டு என்னை திட்டக்கூடாது, அடிக்ககூடாது. ஆன் அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.

என்னை கண்டபடி கழுவி ஊத்தவே கூடாது. இதுக்கு எல்லாம் ஓகேன்னு சத்தியம் பண்ணு நான் சொல்றேன்" என்று பீடிகை போட்டான். அவனை முறைத்த ஸ்ரே "சரி சத்தியம்.

எதுவும் பண்ண மாட்டேன். நீ சொல்லு" என அவனை நம்பி வாக்கு கொடுத்தாள். ஆனால் அவன் சொல்லி முடிக்கும் போது இது அத்தனையும் அவள் செய்து தான் அவனை விட்டாள்.

-பயணம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 12

விஜையை பற்றி தனக்கு தெரிந்த இன்னும் சொல்ல போனால் விஜயை பார்த்த நாட்களை பகிர ஆரம்பித்தான் வெற்றி. "அதுக்கு நாம ஒரு நாலு வருஷம் பின்னாடி போகனும்" என ஆரம்பிக்க

"ஹலோ வெற்றி இதுக்காக நாங்க டைம் டிராவல் எல்லாம் பண்ண முடியாது. ஒழுங்கா நடந்ததை சொல்லு இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ்லா சொல்லி எங்களை கடுப்பேத்தாத" என்றாள் ஸ்ரே கோபமாக.

"ஓகே ஓகே மா. வைய் டென்ஷன். நடந்த விஷயத்தை சொல்றேன். அன்னைக்கு தான் எனக்கு பர்ஸ்ட் டே ஆபிஸ். புது ஆபிஸ் எனக்கு யாரையும் தெரியலை.

முதல் நாள் வேறையா மீட்டிங்க வைச்சாங்க. அந்த கம்பெனி பத்தி எல்லாத் தகவலையும் எங்க மைன்ட்ல ஏத்தி தான் அனுப்பி வச்சாங்க. அவ்ளோ நேரம் நான் எப்படி தூங்காம வந்தேன்னு தான் எனக்கு இப்ப வரை புரியலை" என அதிசயம் போல் சொன்னான்.

மற்றவர்களின் பார்வை முறைப்பாய் வருவதை கண்டவன் நல்ல பிள்ளையாக மாறி "ஒருவழியா மீட்டிங் முடிஞ்சுது. ரூமை விட்டு வெளியே வந்த உடனே ஒரு யூ டர்ன போட்டு கேண்டீனை தான் தேடி போனேன்.

அங்க ஒரு காபியை வாங்கி குடிச்சு முடிச்ச அப்புறம் தான் என் மயக்கமே தெளிஞ்சுது. சரி ஆபிஸ்ல சேர்ந்தாச்சு. நமக்குன்னு ஒரு ஃபிரண்டை பிடிப்போம்னு தலையை தூக்கினப்ப எனக்கு முதல்ல தெரிஞ்ச முகம்" என்றவன் விஜயை காட்டி

"இந்தா இவன் முகம் தான் ஸ்ரே. இவனை பார்த்த உடனே ஆஹா பர்ஸ்ட் இவனை தான் பார்த்திருக்கோம் இவனை நம்ப ஃபிரண்ட் ஆக்கியே தீரனும்னு அப்போ டிசைட் பண்ணுனேன்" அன்றைக்கு மனதில் பேசிய வீர வசனம் எல்லாம் நினைத்து இப்போது சிரித்தான் வெற்றி.

"ஓய் வெற்றி! என்ன சிரிப்பு. சிரிக்காம சொல்லு மேன்" என்றாள் ஸ்ரே. அவளை பார்த்து "சொல்றேன் தாயே! குறுக்க பேசாத!" என்றான். ஸ்ரேயும் சரி சரி என மண்டையை நாலாபுறமும் ஆட்டி வைத்தாள்‌.

அவளை சந்தேகமாக பார்த்தாலும் தொடர்ந்தான் வெற்றி. "மனசுல முடிவை எடுத்த உடனே இவன் டேபில்ல போய் உக்கார்ந்துட்டேன். நான் இவனை பார்த்து ஆர்வமா ஒரு ஹாய‌ போட.

அவன் ஒரே ஒரு பார்வை தான் பார்த்தான். சே என்ன ஒரு அவமானம்னு நினைச்சாலும் என் கையை நீட்டி என் பேர் வெற்றி உங்க பேர் என்னன்னு கேட்க அவனும் விஜய்னு கை குடுத்தான்.

ஆஹா இவனுக்கும் நம்ப கூட பிரண்ட்ஷிப் வச்சுக்க இஷ்டம் தான் போலன்னு நானும் நினைச்சேன். அதை நம்பி இவன்ட்ட நான் என்னை பத்தி அதாவது நான் படிச்ச ஸ்கூல் காலேஜ் பத்தி எல்லாத்தையும் அப்படியே ஒப்பிச்சேன்.

அவன் மூஞ்சில ஒரு ரியாக்ஷனும் காட்டலை. அதை பார்த்தாவது அப்பவே நான் சுதாரிச்சிருக்கனும் ஸ்ரே. நான் லூசு மாதிரி எல்லா டீடெயிலும் சொல்லிட்டு உன்னை பத்தி சொல்லுன்னு சொன்னேன்.

அதுக்கு 'நான் எதுக்கு சொல்லனும்'னு கேட்டுப்புட்டான். 'என்னை பத்தி நான் எல்லாம் சொன்னேனே அப்போ நீ உன்னை பத்தி சொல்லனும்ல' அப்படின்னு நியாயமா ஒரு கேள்வியை நான் கேக்க அவன் சொன்ன பதிலை கேட்டு அப்படியே என் மனசே வெடிச்சிருச்சு" என்றான் பொய்யான சோகத்துடன்.

"அப்படி விஜய் என்ன பதில் சொன்னாரு?" என்றாள் ஸ்ரே ஆர்வத்தை உள்ளடக்கிய குரலில். அன்றைய நாளின் நினைவில் விஜய்யும் சிரித்துக் கொண்டிருந்தான்.

"சிரிக்கிறியா டா எருமை" என்று விஜையை கடிந்து கொண்டவன் "என்னை பார்த்து இந்த அப்பாவி வெற்றியை பார்த்து" என்னும் போதே "ஏய் நடுவுல என்ன உன்னை நீ அப்பாவின்னு வேற சொல்லிக்கிற.

இந்த பில்ட் அப்பை கட் பண்ணிட்டு சொல்லு" என இடையே புகுந்தாள் ஸ்ரே. "கொஞ்சம் என்னை பத்தி பெருமையா ஒரு வார்த்தை சொல்ல விடுற" என பொய்யாய் சலித்தாலும் தொடர்ந்தான்.

"நீ யாருன்னு கேட்டுப்புட்டான் மா பாவி பய. இவ்ளோ நேரம் தான் நான் என்னை பத்தி சொன்னேன்ல அப்படின்னு நான் பாவமா கேக்க,

'அதெல்லாம் நான் உன்கிட்ட கேட்டேனா' அப்படின்னு வேற சொல்லி என் வாயவே அடைச்சிட்டான் மா அடைச்சுப்புட்டான்" என்று நெஞ்சிலே கையை அடித்துக் கொண்டு வசந்தமாளிகை சிவாஜியை போல்‌ வசனம் பேசினான்.

அவன் சொன்ன விதத்தில் எல்லோரும் சத்தமாக சிரித்து விட்டனர். "அப்புறம் என்னாச்சு?" என்றாள் ஸ்ரே சிரிப்பு மாறாத குரலில். அனைவரும் சிரிப்பதை பார்த்துக் கொண்டே

"அது அதுக்கு மேல நடந்த ஒரு சோக கதை ஸ்ரே. இவன் என்னை அவ்ளோ அசிங்கப்படுத்தியும் அசரலையே நானு. நான் இவனை தான் முதல்ல பார்த்தேன். அதனால இவனை ஃபிரண்ட் ஆக்கியே தீருவேன்னு சத்தியமே பண்ணிட்டேன்னா பார்த்துக்கோயேன்.

அப்போ என் மிஷனை நான் ஸ்டார்ட் பண்ணுனேன்" என்றான் தீவிர முகபாவத்தில் "என்ன மிஷன்‌. விஜய் கிட்ட அசிங்கப்படுற மிஷனா" என்றாள் சஹி புன்னகையுடன்.

அவளை பார்த்து "யூ டூ புரூட்டஸ்" என்று பாவனையாக கேட்டவன் "அதெல்லாம் இல்லை. மிஷன் விஜய்னு நானே பேர் வச்சிக்கிட்டேன்" என்றவன் சஹியை பார்த்து

"ஆனா நீ சொன்னது தான் மா நடந்தது" என்றான் பாவமாக. இப்போது எல்லாம் விழுந்து விழுந்து சிரித்தனர். "என் அவமானம் உங்களுக்கு எல்லாம் காமெடியா இருக்கா?" என்று கோபம் போல் சொன்னாலும் அவன் முகத்திலும் சிரிப்பு தான் இருந்தது.

"என் மிஷனை அடுத்த நாள்ல இருந்தே ஆரம்பிச்சேன். நாயா பேயா ஒரு மாசம்‌ முழுசா ஒரு மாசம் நான் இவன் பின்னாடி சுத்தினா மகராசன் திரும்பிக் கூட பார்க்கலை.

'என்ன ஒரு அசிங்கம்' அப்படின்னு கண்ணாடியை பார்த்து என்னை நானே காறித் துப்பிக்கிட்டாலும் அவன் பின்னால போறதை நிறுத்தலையே.

இதே நான் ஒரு பொண்ணு பின்னாடி இப்படி சுத்தி இருந்தா இன்னேரம் நான் கமிட்டட் ஆயிருப்பேன். எங்க என் தலையெழுத்துல இவன் கூட சிங்கிளா தான் சுத்தனும்னு எழுதி இருந்தா யாரால மாத்த முடியும்" என்று வராத கண்ணீரை வலித்து துடைத்தான்.

"அப்புறம் எப்படி தான் இவரை உங்க ஃபிரண்ட் ஆக்குனீங்க" என்றாள் சஹி ஆர்வமாய். "ஒரு மாசமா இவன் பின்னாடி சுத்துனதுல இவன் பார்த்தானோ இல்லையோ சுத்தி இருக்கவங்க பார்த்து என்னை அவனா நீன்ற ரேஞ்சுல நினைச்சு பேச அதைக் கேட்டு தான் என்னை திரும்பி பார்த்தான் மா.

அப்பவும் வந்து 'நீ யாரு? எதுக்கு என் பின்னாடி வரன்னு?' கேட்டான் பாரு" என்று சொல்லி வடிவேலு பாவனைகள் நாலை முகத்தில் காட்டினான்.

"அப்புறம் எங்க ஆபிஸ்ல பர்ஸ்ட் டே மீட் பண்ணதை சொல்லி. பிரண்ட்ஸ் ஆகலாம் அப்படின்னு நான் கேக்க 'அதுக்கா என் பின்னாடியே நீ இவ்ளோ நாள் சுத்துன' அப்படின்னு ஐயா ஆச்சரியப்பட்டு, என் பர்பாமென்ஸ்ல இம்ப்ரெஸ் ஆகிட்டார்.

அதுக்கு அப்புறம் தான் என்னை பிரண்டா ஏத்துக்கிட்டான் மா. எப்படியோ என் மிஷன் சக்சஸ் ஆச்சு. அதுல ஒரு ஆனந்தம்" என்றான் நிறைவான புன்னகையில்

"ம்ம்.. அதுக்கு அப்புறம் ரெண்டு வருஷம் அதே கம்பெனில தான் நாங்க சேர்ந்து குப்பை கொட்டுனோம். அந்த நேரம் தான் என்ன பெத்தவரு ஒரு குண்டை தூக்கிப் போட்டாரு" என்று சோகமே உருவாக நிறுத்தினான்.

"அப்படி என்ன குண்டு வெற்றி. ஆட்டம் பாமா? ஹைட்ரஜன் பாமா?" என்றாள் ஸ்ரே கிண்டலாக. "அதெல்லாத்தையும் விட பெரிய பாம். நான் சொன்னேன்ல என் நைநா சென்ட்ரல் கவர்மெண்ட்ல வேலை பார்க்குறார்னு.

அதனால நானும் கவர்மெண்ட் எக்சாம்க்கு படிச்சு பாஸ் பண்ணும்னு சொல்லிப்புட்டாரு" என்றான் வருத்தம் மேலிட்ட குரலில். "நீங்க சொன்னா நான் கேட்டுருவேனா அப்படின்னு மனசுல நினைச்சுக்கிட்டு,

இந்தா இருக்கானே இவனை என் உயிர் நண்பனா நம்பி 'எனக்கு சப்போர்ட்டா வாடா என் சப்போட்டா'னு இழுத்துட்டு போனேன் மா. ஆனா அது எனக்கு நானே தோன்டுன புதைக்குழியா போச்சு.

இந்த பக்கி பையல நம்பி போனேன் மா. அங்க வந்து என் அப்பா பேசறது எல்லாம் கேட்டுட்டு என்கிட்டையே வந்து 'மச்சான் அப்பா சொல்றது எல்லாம் உன் நல்லதுக்கு தான் டா.

அவர் பேசறத கேட்டு எனக்கே அந்த பீல்டுல ஆர்வம் வந்திருச்சு. நானும் வரேன் ரெண்டு பேரும் கோச்சிங் போலாம்னு சொல்லி என் தலையில பாராங்கல்லையே போட்டுட்டான்.

அதோட விட்டு தொலைச்சானா தேடி புடிச்சு நல்ல ஒரு இன்ஸ்டிடியூட்டா பார்த்து ரெண்டு பேருக்கும் அட்மிஷனே போட்டுட்டான் இந்த தடிமாடி" என்றான் சோகமாக.

"அப்புறம் என்ன தான் ஆச்சு? எக்சாம்க்கு கிளாஸ் போனீங்களா இல்லையா?" என்று கேள்வி எழுப்பினாள் சஹி. "ம்ஹூம்" என பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டவன்

"எங்க இவன் தான் சனி ஞாயிறுலாம் காலங்காத்தால கரெக்டா வந்து என்னை இழுத்துட்டு போய்ருவானே. அதுவும் சாதா கோர்ஸ்லையா சேர்த்து விட்டிருந்தான்.

யு.பி.எஸ்.சி க்கு. ஐயா கலெக்டர் எக்சாம் எழுதனும்னு என்னையும் அவனோட ஜோடி சேர்த்துக்கிட்டான். அதோட விட்டானா வாடா குரூப் ஸ்டெடி பண்ணலாம்னு என்னை போட்டு பாடா படுத்தி மோரா திரிச்சான்" என்று அழுத்துக் கொண்டான்.

அதற்கு "அப்புறம் என்ன ஆச்சு. கலெக்டர் எக்சாம் எழுதினீங்களா?" என்றாள் ஸ்ரே ஆர்வமாய். விஜய்யை பார்த்து "இவன் எங்க என்னை விட்டான். எனக்கும் சேர்த்து எக்சாம்க்கு அப்பளையே பண்ணிட்டான்.

இவனை சும்மா சொல்லக் கூடாது ஸ்ரே தத்தி தடுக்கி பிரிலிம்ஸ் எக்சாம் மெயின் எக்சாம்னு ரெண்டு கண்டத்த என்னையே தாண்ட வச்சிட்டான். இன்னும் ஒரு வாரத்தில எங்களுக்கு டெல்லில இன்டர்வியூ.

அதுக்கு தான் இப்ப உங்களோட குப்பை கொட்டிட்டு போய்ட்டு இருக்கோம்" என்று முடித்தான் சோகம் போல் முகத்தை வைத்து.

அவன் என்னதான் கிண்டல் போல் பேசினாலும் அவர்கள் கலெக்டர் ஆக இன்டர்வியூ செல்கிறார்கள் என தெரிய சட்டென்று அனைவரும் அவர்களின் வாழ்த்தை முதலில் தெரிவித்துக் கொண்டனர்.

வாழ்த்து படலம் முடிந்த பின்னர் ஸ்ரே எதோ யோசனை செய்து "ஆமா வெற்றி நான் விஜய்யோட பாஸ்ட் தானே கேட்டேன். நீ என்னனா அவரு உன் கூட பழகின அப்புறம் நடந்த இன்சிடென்ட்ஸா சொல்ற?" என்றாள் கேள்வியாக.

அந்த கேள்வியில் அவளை பார்த்தவன் "இத்தனை நாள் பழகின இவன் அவனை பத்தி என்கிட்டையே சொல்லலையே!! நான் எப்படி அதை உங்ககிட்ட சொல்லுவேன்" என்றான் ராகமாய்‌.

இப்போது காண்டான ஸ்ரே "அதை முதல்லையே சொல்றதுக்கு என்னடா முட்டை கண்ணா. இவ்ளோ லென்த்‌ லென்த்தா டையலாக் பேசுற" என புசுபுசுவென மூச்சு வாங்கினாள்.

அவளை பார்த்து நக்கலாக சிரித்த வெற்றி "நான் முதல்லயே எனக்கும் அவனை பத்தி எதுவும் தெரியாதுன்னு சொல்லியிருந்தா நீ என்ன சொல்லி இருப்ப;

'கூடவே சுத்துறியே செவ்வாழ உனக்கு தெரியாம இருக்காதுன்னு' சொல்லி இருக்க மாட்ட. அதான்" என்றவன் நன்றாக சிரித்து விட்டான்.

"அடேய்" என கத்திக் கொண்டே எழுந்த ஸ்ரே நங் நங்கென்று தன் மனம் ஆறும் வரை கொட்டி முடித்து வந்த அமர்ந்தாள். வெற்றியும் அதை சிரிப்புடனே ஏற்றுக் கொண்டான்.

இவன் கதையாக எல்லாம் சொல்லி முடிக்கும் நேரம் மாலையே நெருங்கி விட்டது. இவர்கள் சிரித்துக் கொண்டிருந்த போது ரயில் திடீரென நிற்க ரயிலின் வெளியே அழுகுரல்கள் கேட்கவே திடுக்கிட்டனர் அனைவரும்.

-பயணம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 13

சஹி மற்றும் ஏனையோர் பயணிக்கும் ரயில் அப்போது தான் அந்த நிறுத்தத்தில் இருந்து புகையை கக்கி கொண்டு செல்ல ஆரம்பித்தது. ஒரு பத்து நிமிடம் இருக்கும் திடீரென நின்றது.

திடீரென ரயில் நிற்கவும் யாருக்கும் என்னவென்று புரியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் அப்போது தான் வெளியே பலவிதமான அழுகுரல்கள் கேட்டதை அனைவரும் உணர்ந்தனர்.

எல்லோருக்கும் உள்ளம் பதற தொடங்கியது. "அங்கிள் நீங்க எல்லாம் இங்கையே இருங்க. நாங்க போய் என்னன்னு பார்த்துட்டு வந்து சொல்றோம்" என வெற்றியை அழைத்துச் சென்றான் விஜய்.

சிறிது நேரம் கழித்து வெற்றி மட்டும் பதட்டமாக தனியே வந்தான்‌. "என்ன ஆச்சு? விஜய் எங்க" என சோம் கேட்க "அங்கிள்‌ இந்த டிராக் ஆப்போசிட்ல இருந்து வந்த டிரையின் ஒன்னு தடம் புரண்டுருச்சு.

ப்ர்ஸ்ட் இருந்த ஏசி கோச் எல்லாம் சரிஞ்சிருச்சு. நல்ல வேலை நம்ம இஞ்சின் மாஸ்டர் தூரத்தில இதை பார்த்து நம்ம டிரையன நிறுத்திட்டார். இல்லைனா இன்னும் பேட்டல் டேமேஜ் தான்‌ ஆகியிருக்கும்.

அங்க அந்த டிரையின் கம்பார்ட்மெண்ட்ல இருக்க ஆளுங்க எல்லாம் உள்ளே மாட்டிட்டு இருக்காங்க. இதுக் கொஞ்சம் சிட்டி அவுட்டர் பிளேஸ்‌ போல. இன்னும் ரெஸ்க்கூயு டீம்லாம் வரலை.

வெற்றி அங்க அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கான். உங்ககிட்ட சொல்லிட்டு போக தான் வந்தேன். நானும் போறேன்" என வெற்றி எல்லா தகவல்களையும் சொல்லி கிளம்பி விட்டான்.

அவன் கூறி சென்றதை கேட்டு எல்லோரும் பதறி விட்டனர். சோம் அங்கிள் போவதாக கூற சஹி தானும் வருவதை கூறி அவருடன் சென்றாள். லக்ஷ்மி அம்மாவின் வயதையும் ஸ்ரேயாவின் மனநிலையையும் கருத்தில் கொண்டு அவர்களை அங்கையே இருத்தி சென்றனர்.

சோம் மற்றும் சஹி அங்கே செல்லும் போது பல பேரின் வலியின் ஓலம் தான் அவர்கள் காதை எட்டியது. இவர்களை போல் இவர்கள் ரயிலில் இருந்து வந்து நிறைய பேர் மக்கள் வெளியேற உதவிக் கொண்டு இருந்தனர்.

அதில் விஜய் வெற்றி எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சோம் அங்கிள்‌ அந்த சூழ்நிலையை கண்டு தானும் துரிதமாக செயல்பட்டார்.

ஆனால் அங்கே இரத்த வெள்ளத்தில் இருந்த மக்களை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டாள் சஹி. இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கூட அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.

அப்போது எங்கேயோ ஒரு குழந்தை வலியில் அழும் குரல் வரவே, அதில் தெளிந்தாள் சஹி. அந்த குரல் எங்கிருந்து வருகிறது என தேடி சென்றாள்.

அங்கே விழுந்து‌ கிடந்த ரயில் பெட்டியின் அருகே தான் அந்த குழந்தை நின்று கொண்டிருந்தது. யாரோ அனேகமாக அந்த குழந்தையின் பெற்றோராக இருக்கலாம். அந்த குழந்தையை மட்டும் ஜன்னலின் வழி அனுப்பி விட்டிருப்பர் போல்.

அந்த குழந்தைக்கும் சிறு சிறு அடிப்பட்டிருந்தது. அந்த குழந்தை எங்கே செல்வது என புரியாது இங்கையும் அங்கையும் பார்த்து அழுதுக் கொண்டிருந்தது.

அந்த குழந்தையை கண்டு விட்ட சஹி அதை தூக்கி கொண்டு வந்து காப்பாற்றிய எல்லோரையும் அமர வைத்திருந்த இடத்திற்கு கொண்டு வந்தாள். அதே நேரம் ஆம்புலன்ஸ் ரெஸ்க்யூ டீம் எல்லாரும் வந்துவிட்டனர்.

அதன் பின் சஹியும் நிற்கவில்லை. அவள் கண்ணுக்கு தெரிந்த இடத்திற்கு சென்று அங்கே இருந்தவர்கள் எல்லோரும் வெளியே வர உதவ ஆரம்பித்தாள்.

ஒரு இடத்தில் ஏசி கோச் என்பதால் ஜன்னல்கள் எல்லாம் அடைந்து கிடக்க திறக்க முடியாது உள்ளே ஸ்டக் ஆகி இருந்தது. அதில் இருந்த யாரோ மூச்சுக்கு திணறி கையால் ஜன்னலை தட்டிக் கொண்டிருக்க அதை பார்த்துவிட்டாள் சஹி.

அருகில் கிடந்த கல்லை எடுத்து தன் பலம் முழுவதையும் கொடுத்து ஜன்னலை உடைத்து விட்டாள். பின் அந்த நபரை கஷ்டப்பட்டு வெளியே இழுத்து வந்தாள்.

அதன் பின் அங்கே இருந்த மற்றவர்களும் அந்த ஜன்னலின் வழியே வெளியே இழுத்தாள் முதலில் இழுத்த நபரின் உதவியோடு.

அதை செய்து முடித்த பின் வெளியே வந்தவர்கள் கை கூப்பி இவளுக்கு நன்றி உரைத்திட உண்மையான மகிழ்ச்சியை மனதார உணர்ந்தாள் ச‌ஹி.

அவர்களிடம் பரவாயில்லை என கூறி ஆம்புலன்ஸ் இருக்கும் திசையை காட்டிவிட்டு தன் பணியை தொடர சென்றாள் இப்போது சஹி. அங்கே சோம் அங்கிள் தன்னால் ஆன உதவிகளைச் செய்து கொண்டிருந்தார்.

உள்ளே இருந்து வெளியே வருபவர்களை ஆம்புலன்ஸ் இருக்கும் இடம் அழைத்து செல்ல, நடக்க முடியாதவர்களை தன் கைகளால் தாங்கி செல்ல என அவரின் வயதிற்கு முடிந்த உதவிகளை செய்யலானார்.

விஜய்யும் வெற்றியும் ரயிலின் உள்ளே இருப்பவர்களை முடிந்த அளவு அவர்களை பத்திரமாக வெளியே இழுத்து வந்தனர். அதுவும் விஜய் ரயிலின் உள்ளே செல்ல முடிந்த இடத்திற்கு எல்லாம் அவனே சென்று காப்பாற்றி கொண்டிருந்தான்.

இப்படி போய் கொண்டிருக்கும் போது தான் ஏசி கோச் ஒன்றில் மெதுவாக தீப்பற்ற ஆரம்பித்தது. நல்ல வேளையாக அந்த கோச்சில் இருந்த நபர்களை தான் சஹி காப்பாற்றி இருந்தாள்.

ஆனால் நெருப்பு கண்டிப்பாக மற்ற பெட்டிகளுக்கும் பரவும் அபாயம் இருக்கவே எல்லோரும் துரிதமாக செயல்பட ஆரம்பித்தனர்.

ஆனாலும் மக்கள் இருந்த ஒரு பெட்டி திடீரென தீப்பற்றி விட அனைவரும் அதிர்ந்து நின்று விட்டனர். அந்நேரம் வந்த விஜய் யோசிக்காது உள்ளே ஏறி விட்டான்.

சஹி சோம் வெற்றி அங்கே தான் நின்றிருந்தனர். சஹியும் சோம் அங்கிளும் பதறி போய் கத்தினர். ஆனால் வெற்றி தான்‌ "அவன் முறையா நிறைய டிரைனிங் எடுத்திருக்கான்.

சோ பயப்படாதீங்க. அவன் எல்லாத்தையும் சேஃப்பா கூட்டிட்டு அவனும் சோஃபா வெளியே வந்திருவான்" என்று சமாதானம் செய்தான்.

ஆனால் அவன் மனதும் திக்திக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. அவனுக்கு என்ன தான் விஜய் பாதுக்காப்பாக வந்துவிடுவான் என அவன் மூளை சொன்னாலும் விஜய் நல்லபடியாக வரவேண்டும் என்றே வேண்டிக் கொண்டிருந்தான்.

கொஞ்ச நேரத்தில் விஜய் ஒவ்வொரு நபராக வெளியே தூக்கி வர அவர்களை வெற்றி என அங்கிருந்தவர்கள் வாங்கி கொண்டு சென்றனர்.

நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகம் தான் ஆனது. ஆனால் தைரியமாக அங்கே இருந்த கடைசி நபர் வரை வெளியே கொண்டு வந்து தான் பத்திரமாக வெளியே வந்துவிட்டான் விஜய்.

கீழே இவன் இறங்கவும் அங்கிருந்தவர்கள் எல்லாம் கை தட்டி ஆர்ப்பரிந்தனர். அதை சிறு சிரிப்புடன் ஏற்றுக் கொண்ட விஜய் நல்லபடியாக கீழே இறங்கி விட்டான்.

ஒருவழியாக எல்லா மக்களையும் வெளியே இழுத்து விட்டனர். ஆனால் சிறு அடி முதல் பலமான அடி என எல்லோருக்குமே அடிப்பட்டிருந்தது. அதுவும் சிலருக்கு எல்லாம் அடி மிகவும் அதிகம்.

அவர்களின் நிலை கவலைக்கிடம் தான். இனி மருத்துவமனை சென்ற அவர்களின்‌ உயிர் மருத்துவர் கைகளில் தானே. யாருக்கும் எதுவும் ஆகக் கூடாது என வேண்டிக் கொள்வதை தவிர வேற எந்த எண்ணமும் யாருக்கும் தோன்றவில்லை.

முழுதாக ஐந்து மணி நேரம் கடந்திருந்தது. நன்றாக இருளும் சூழ ஆரம்பிக்க அப்போது தான் இவர்கள் நால்வரும் தங்கள் பெட்டியை அடைந்தனர்.

இவர்கள் ரயிலும் இங்கே தான் நின்று கொண்டிருந்தது. ஏனெனில் முன்னே இருக்கும் ரயிலின் பெட்டிகளை நீக்கினால் தான் இவர்களது முன்னேறும்.

எப்படியும் வேலை முடிய இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் என புரிந்தது. அதனால் வந்து அமைதியாக அமர்ந்து கொண்டனர். சோம் அங்கிள் தான் அங்கே நடந்த எல்லாவற்றையும் லக்ஷ்மி ஸ்ரே இருவருக்கும் கூறிக் கொண்டிருந்தார்.

விஜய் அந்த எரியும் பெட்டியின் உள்ளே ஏறியதை சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார். இதை பற்றி பேச ஆரம்பிக்கும் போதே சஹி சட்டென எழுந்து விட்டாள்.

எல்லோரும் 'என்ன' என்பதை போல் பார்க்க "அது ரெஸ்ட் ரூம் போறேன். இப்போ வந்தர்ரேன்" என நகர்ந்திருந்தாள். அவளை பார்த்த விஜய் அவளின் முகம் சரியில்லை என புரிந்து கொண்டான்.

எனவே அவள் சென்ற சில நிமிடங்கள் கழித்து அவனும் சென்றான். பார்த்தவர்களுக்கு புரியாமலா இருக்கும். புரிந்தது தான். ஆனால் யாரும் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

அங்கே கதவருகில் தான் சஹி நின்றிருந்தாள். அவளை நெருங்கிய விஜய் "என்னாச்சு சஹி?" என்றது தான் தாமதம் விஜய்யின் கையை பிடித்து கொண்டு அழுது விட்டாள்.

"ஏன்" என விஜய் கேட்டகாது அவள் மனபாரம் குறையும் வரை அழவிட்டான். அவள் சற்று தெளிந்த பின்‌ "ஏன் மா அழுத?" என்றான் பரிவாய்.

அவனை பார்த்தவள் "தெரியலை. ஆனா நீங்க சட்டுன்னு அந்த நெருப்புக்குள்ள போகவும் ரொம்ப பயமாகிருச்சு. எதோ ஒரு பீல். எனக்கு அதை சொல்ல தெரியலை.

ஆனா உங்கள இழ்திருவோம்னு பயமாகிருச்சு. அதான் இப்ப சோம் அங்கிள் அதை சொல்லவும் அழுகை வந்திருச்சு" என்றாள் தன் கண்களை துடைத்துக் கொண்டு.

தனக்கான அவள் உணர்வுகள் என்னவென புரிந்து கொண்ட விஜய் எதுவும் பேசவில்லை. காதல் என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை.

இது சாதாரண ஈர்ப்பாக தான் இருக்கும் என எண்ணினான். பாவம் பெண்ணின் மனதை பற்றி அறியாத விஜய்.

அந்த நேரம் சஹியின் கைப்பேசி அழைப்பு விடுக்க அழைத்தது அவள் மேனேஜர். ரயில் விபத்து செய்தியை பார்த்து பதறி அழைத்திருந்தார்.

அவரிடம் பேசி சமாதானம் செய்தவள் கைப்பேசியை அணைத்தாள். அப்போது எதேச்சையாக அவளின் கைப்பேசியை கண்ட விஜய் ஆனந்தமாக அதிர்ந்தான்.

அவள் கைப்பேசியில் இருந்த அவள் அம்மாவின் புகைப்படத்தை காட்டி "பானு ம்மா தானே! இவங்க தான் உன் அம்மாவா?" என்றான் ஆச்சரியமாக.

'இவருக்கு எப்படி நம்ம அம்மாவை தெரியும்' என குழம்பிய சஹி ஆம் என்பதாய் குழப்பத்தோடு தலை அசைத்தாள்.

-பயணம் தொடரும்

 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 14

சஹிக்கு இன்னும் நடந்ததை நம்ப முடியவில்லை. எப்படி எப்படி என மனதில் ஆயிரம் கேள்வி முளைத்தாலும் எல்லாம் தெய்வமாகிய தன் அன்னையின் செயல் தான் என புரிந்தது.

"பானு ம்மா தான் உன் அம்மாவா?" என கேட்டதன் மூலம் ஏதோ ஒரு வகையில் அவனுக்கு தன் அன்னை பானுமதியை தெரிந்திருக்கிறது என்று புரிந்து கொண்ட சஹி

"விஜய் எப்படி என் அம்மாவ உங்களுக்கு தெரியும்?" என்றாள் ஆச்சரியமான குரலில். "மூனு நாளா ஃபிளாஷ் பேக் கேட்டே நொந்து போய் இருப்பாங்க எல்லாரும்.

இதுல என்ன பத்தி வேற தெரிஞ்சக்கனுமா" என கிண்டல் செய்தாலும் "வா எல்லாரையும் சேர்த்து வைச்சே சொல்லிடறேன்" என அழைத்து சென்றான்.

சோகமாக சென்ற சஹி சிரித்துக் கொண்டு வரவும் அனைவரும் புரியாது பார்க்க "நம்ம விஜய் அவரை பத்தி சொல்ல போறாரு" என்றாள் ஆர்வமாய்.

மற்றவர்களும் அதே ஆர்வத்துடன் கேட்க தயாரானர். இந்த இடைவெளியில் "ஹே நம்ம அம்மாவை இவருக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு ஸ்ரே" என்றாள் வியப்பாய் சஹி.

எல்லாருக்கும் 'எப்படி' என்ற கேள்வி வந்த போதும் அவன் வாயில் இருந்தே உண்மை வர காத்திருந்தனர். "என்னை பத்தி சொல்ல பெருசா ஒன்னும் இல்லை. ஆனா நான் இப்போ இவ்ளோ பெரிய ஆளா இருக்க காரணம் என் பானு ம்மா தான்" என்றான் பூரிப்பாக.

"என்னை பெத்தவங்க யாருன்னே எனக்கு தெரியாது. சின்ன வயசுல ரோட்ல பிச்சை எடுத்துட்டு சுத்திட்டு இருந்திருக்கேன். யாரோ ஒரு நல்ல மனுஷன் என்னை பார்த்து ஆசிரமத்தில கொண்டு போய் விட்டுருக்கார்" விஜய் இதை சொல்லவும் அனைவருக்கும் அப்படி ஒரு அதிர்ச்சி.

ஆனால் அதையெல்லாம் கவனிக்காத விஜய் மேலே தொடர்ந்தான். "அது ஒரு கிரிஸ்டியன்‌ மிஷனரி. அவங்க தான் எனக்கு விஜய் லூப்ரினு பேர் வைச்சாங்க.

ஏன்னா அப்போ எனக்கு என்னோட பேரே தெரியாதாம்" என்றான் சிரித்தபடி. "அந்த ஆர்பனேஜ்ல தான் வளர்ந்தேன். அவங்க ஆர்பனேஜோட ஸ்கூலும் வச்சிருந்தாங்க. சோ என்னால‌ படிக்க முடிஞ்சது.

அப்போ நான் எட்டாவது படிச்சிட்டு இருந்த டைம் அந்த நாள் எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு. அன்னைக்கு தான் பானு ம்மா எங்க ஆசிரமத்துக்கு வந்தாங்க.

அன்னைக்கு எனக்கு உடம்பு சரியில்லையா இல்லை என்னன்னு தெரியலை. என்னால சாப்பிடவே முடியலை‌. அதை பார்த்த பானு ம்மா தான் எனக்கு ஊட்டி விட்டாங்க. எனக்கு விவரம் தெரிஞ்சு அவங்க தான் பர்ஸ்ட் எனக்கு ஊட்டி விட்டவங்க" இதை சொல்லும் போதே அவன் முகத்தில் அத்துனை மகிழ்ச்சி.

"எங்க ஆர்பனேஜ் வரவங்க மோஸ்ட்டா எதோ கடமையா இல்லை பேர் புகழ்க்குன்னு செய்ரவங்க தான். ஆனா பானு ம்மா அப்படி இல்லை. எங்களுக்காவே வருவாங்க.

எங்க கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணுவாங்க. அவங்க வர நாள நான் எதிர்ப்பார்த்து காத்திருக்க எல்லாம் செஞ்சிருக்கேன். எங்கலை எல்லாம் அவங்க அம்மா ன்னு கூப்பிட சொல்வாங்க. அது அப்படியே பானு ம்மா ஆகிருச்சு.

நான் அப்போ பிளஸ் ஒன் படிச்சிட்டு இருந்தேன். அப்போல இருந்து தான் பானு ம்மா வரத நிறுத்திட்டாங்க. ஆனா அவங்களுக்காக நாங்க தினமும் காத்திட்டு தான் இருந்தோம்.

ஆனா அவங்க ஏன் வரலைன்னு இப்போ புரியுது" என்றான் சஹி மற்றும் ஸ்ரே இருவரையும் பார்த்து. "பிளஸ் டூ முடிச்சிட்டேன். அதோட என்னை ஆசிரமத்திலையும் வச்சிருக்க முடியாது.

வெளியே போய் ஆகனும்ற சிட்டுவேஷன். என்ன செய்றதுன்னு யோசிச்சப்போ தான் ஒரு டைம் பானு ம்மா தந்த அட்ரெஸ் நியாபகம் வந்திச்சு. சோ நான் அவங்களை போய் பார்த்தேன்‌.

அவ்ளோ நாள் கழிச்சு என்னை பார்த்தும் என் பேரை நியாபகம் வச்சு என்னை உள்ள கூட்டிட்டு போனாங்க. நான் என் பிரச்சினையை சொல்லவும் அவங்க தான் என் மார்க்க பார்த்துட்டு உனக்கு கவர்மென்ட் காலேஜ்லையே சீட் கிடைக்கும்னு சொல்லி எஞ்சினியரிங் அப்ளை செஞ்சாங்க" என்றான் நிறைவான புன்னகையுடன்.

பானுமதி அதே போல் கவுன்சிலிங் அழைத்து செல்ல நல்ல அரசு கல்லூரியிலே சீட்டும் கிடைத்தது. அவனின் கல்லூரி பீஸ் அரசு கல்லூரி என்பதால் மிகவும் குறைவாகவே இருந்தது.

அந்த செலவை எல்லாம் பானுமதியே ஏற்றுக் கொண்டார். ஆனால் தன் செலுவுக்கு விஜய் பகுதி நேர வேலை ஒன்றை தனக்கு பார்த்து கொண்டான். பானு எவ்வளவு தூரம் தான் செய்வதாய் கூறியும் இந்த விஷயத்தில் மறுத்து விட்டான் விஜய்.

அந்த ஒரு செயலே அவன் குணத்தை சொல்லிவிட்டது. அதனால் பானுமதிக்கு அவன் மேல் தனி மரியாதை வந்தது. அதே போல் இயல்பிலே புத்திசாலியான விஜய் படிப்பில் முதலாகவே வந்தான்.

நான்கு வருட படிப்பை முடித்து விட்டு வேலைக்கான இரண்டு மூன்று கால் லெட்டர்களுடன் பானுமதியிடம் வந்திருந்தான் விஜய் ஆசிர்வாதம் வாங்கி செல்ல.

அவனை மனப்பூர்வமாக ஆசிர்வாதம் செய்த பானுமதி எந்த எந்த கம்பெனி என பார்த்தார். அதில் அவர்கள் கம்பெனியும் இருக்க "எந்த கம்பெனிக்கு போக பா முடிவு பண்ணிருக்க‌?" என்றார் அதை பார்த்துக் கொண்டே.

அவன் "நான் இன்னும் முடிவு செய்யலை பானு ம்மா" என்றான் சிறுவன் போல். அவன் தலையை பரிவுடன் தடவி கொடுத்த பானுமதி அவர்களின் கம்பெனியை தேர்வு செய்தார்.

"இந்த கம்பெனிக்கு போப்பா" என்று சொல்ல அவர் வாக்கை வேத வாக்காக எண்ணி கொண்டு அங்கேயே சேர்ந்தான்.

"அப்போ எனக்கு தெரியலை சஹி அவங்க தன்னோட சொந்த கம்பெனிக்கு தான் என்னை போக சொல்றாங்கன்னு" என்று சிரித்து விட்டான் விஜய்.

கடைசியாக "இவ்ளோ தான் என்னோட பாஸ்ட். அதுவும் நீங்க என் பானு ம்மா பொண்ணுங்க அப்படின்னு தெரியவும் அவ்ளோ சந்தோஷம்" என்றவன் முகத்தில் உண்மையாகவே அவ்வளவு மகிழ்ச்சி.

வெற்றியை பார்த்து "என் பாஸ்ட நான் கேவலமா நினைச்சு உன்கிட்ட சொல்லாம இருக்கலை வெற்றி. ஆனா என்னை பத்தி கேட்டு நிறைய பேர் பாவமா பார்ப்பாங்க.

சோ அதான் நான் எதுவும் சொல்லாம இருந்தேன்" என்றான் விஜய். வெற்றிக்கும் புரிந்தது. விஜய் கூறுவது போல் வெற்றி தானும் பாவமாக தான் பார்த்திருப்போம் என்றே யோசித்தான்.

அதனால் புரிந்தது என்பது போல் தலை அசைத்தவன் விஜய்யை கட்டிக் கொண்டான். இதை எல்லாருமே புன்னகையுடன் பார்த்திருந்தனர்.

சிறிது நேரம் சென்றது. அப்போது தான் தன் தலையில் பல்ப் எரிந்தது போல் "அப்போ நீங்க எங்க ஆபிஸ்ல தான் வேலை செய்றீங்களா?" என்றாள் சஹி ஆச்சரியமாக.

"ம்ம் ஆமாம்" என்றார்கள் விஜய் வெற்றி இருவரும் சிரிப்புடன். அதை கேட்டு "ஆனா பாருங்களே! எனக்கு உங்களை சுத்தமா அடையாளமே தெரியலை" என்றாள் வியப்பாக.

விஜய் வெறுமனே சிரித்தானே அன்றி வேறு எதுவும் சொல்லவில்லை. ஆனால் வெற்றி "அதான் எங்களுக்கு தான் அது தெரியுமே. உங்க மேனேஜரே சொன்னாரு.

அதெல்லாம் உங்களை அவங்களுக்கு சுத்தமா தெரியாதுன்னு" என்று வார்த்தையை விட்டான். வெற்றி சட்டென இப்படி எல்லாவற்றையும் உளறுவான் என தெரியாத விஜய் அவன் கையை பிடித்து 'ம்ஹூம்' என்று தலை அசைத்தான்.

ஆனால் காலம் கடந்திருந்தது. அதான் இவை எல்லாம் அனைவரின் காதிலும் விழுந்திருந்ததே. இப்போது தடைகள் எல்லாம் நீங்கி இருக்க ரயிலும் தன் இயக்கத்தை தொடங்கியது.

வெற்றி சொல்லியது புரிந்த உடன் "என்ன" என்று எழுந்து நின்று விட்டனர் சகோதரிகள் இருவரும். ரயில் செல்ல ஆரம்பிக்கவும் சிறிது தள்ளாடி அமர்ந்தனர்.

"அப்போ நீங்க ரெண்டு பேரும் எங்களுக்கு பாடி கார்ட் வேலை பார்க்க வந்திருக்கீங்க. அப்புறம் இந்த ஐ.ஏ.எஸ் இன்டர்வியூ எல்லாம் சும்மா அடிச்சு விட்டீங்களா?" என்று கொதித்தாள் ஸ்ரே.

இப்போது பதறிய வெற்றி "எம்மா ஆத்தா! நான் சொல்றதை முதல்ல முழுசா கேளு. நாங்க ஐ.ஏ.எஸ் இன்டர்வியூக்கு தான் போறோம். அது உண்மை தான். வேணும்னா எங்க ஹால் டிக்கெட் கூட காட்டுறோம் பார்த்துக்க" என்று அவர்களை சாந்தபடுத்திய பின்

"என்ன நடந்துச்சுனா. நாங்க ரெண்டு பேரும் லீவ் கேக்க அந்த சொட்டை தலை மேனேஜர் கிட்ட போனா நாங்க ரெண்டு பேரும் டெல்லி போறோம்னு தெரியவும் உங்க கூட போக சொன்னாரு.

பர்ஸ்ட் எனக்கு புரியலை. ஆனா அப்புறம் தான் நீங்க நார்த் இந்தியா டிரப் போறத சொன்னாரு. சோ டெல்லி வரைக்கும் டிரைன்ல எங்களை பார்த்துக் சொன்னாரு.

அதுக்கு மேல நம்பிக்கையான ஆட்களை ஏற்பாடு செய்றதா சொல்லிட்டு இருந்தார். சோ இந்த இடைப்பட்ட நேரத்தில எங்களை அவர் தான் உங்க கூட கோர்த்து விட்டாரு. சரி நாமலும் போற போக்குல ஒரு சமூக சேவைன்னு ஒத்துக்கிட்டோம்" என்றான்.

பின் என்னவோ நினைத்து "ஆனா அவர் சொன்னது உண்மை தான். உங்களால எங்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியாதுன்னு அடிச்சு சொன்னாரு. அதை நீங்க புரூவ் பண்ணிட்டீங்க" என்று கூறி சிரித்தான் வெற்றி.

இப்போது ஓரளவு எல்லாம் புரிந்து விட நிம்மதி ஆனார்கள் சகோதரிகள். அப்படியே அனைவரும் உறங்க சென்றனர். ஆனால் இன்று நடந்த நிகழ்வுகளை ஜீரணிக்க முடியாத சஹி தூங்காது முழித்துக் கொண்டிருக்க விஜய் பார்த்துவிட்டான்.

அவனுக்கும் புரிந்தது இன்றைய நிகழ்வுகள் அவளை பாதித்து இருக்கிறது என. அவளை தனியே அழைத்தவன் "என்ன ஆச்சு. தூக்கம் வரலையா?" என்றான்.

அவன் எண்ணியது போலையே "அது இன்னைக்கு இவ்ளோ நடந்திருச்சு‌. அதைலாம் என்னால டக்கன்னு ஏத்துக்க முடியலை‌‌. அதான் தூக்கம் வரலை" என்று உண்மையை உரைத்தாள்.

"ஓகே அப்போ என் கூட வா" என்று கதவருகே அழைத்து வந்தான். "என் கையை புடிச்சிக்கோ. இப்போ கண்ணை மூடி அப்படியே வர காத்தை முகத்தில‌ வாங்கிக்கோ‌.

அந்த காத்து எப்படி மோதி போகுதோ அப்படியே உன் மனசுல இருக்க குழப்பமும் காணம போய்ரும் பாரு" என்றவன் சில மணி துளிகள் அவளின் கையை தாங்கியிருந்தான்.

விஜய் கூறுயது போல் சஹியின் மனதும் லேசானது. இப்போது கண்ணை திறக்க "என்ன ஓகேவா" என்றான் விஜய் புன்னகை முகத்தோடு. அவன் முகத்தை அப்படியே சில நிமிடம் பார்த்திருந்தாள் சஹி.

விஜய் "என்ன" என என்று விழியை தூக்கி கேட்க "நாம கல்யாணம் பண்ணிக்கலாமா விஜய்?" என்றாள் அவன் முகத்தை பார்த்து ஆவலாக எந்த வித மேல் பூச்சும் இல்லாமல். விஜய் தான் அதிர்ந்து நின்றுவிட்டான்.

-பயணம் தொடரும்

 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 15

சஹானா "நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று விஜய்யிடம் கேட்ட போது சிறிது அதிர்ந்தது உண்மையே. பின் சுதாரித்தவன் "இங்க பாரு சஹி இது ஜஸ்ட் ஒரு ஈர்ப்பு தான்.

ஒரு டூ டேஸ் என்னை பார்த்துட்டே இருக்கவும் உனக்கு இப்படி தோணுதுன்னு நினைக்கிறேன்‌. லைஃப்ல இந்த மாதிரி பாசிங் கிளவுட்ஸ் நிறைய இருக்கும் சஹி.

அதெல்லாம் லவ்னு நினைச்சு உன்னை நீயே குழப்பிக்காத" என்று புரிய வைக்க நினைப்பதாய் எண்ணி பேசினான். அவன் பேசியதை பொறுமையாக கேட்டவள் இப்போது தன் மனதை பேசினாள்.

"நீங்க சொல்றது எல்லாம் புரியுது விஜய். பட் இது ஜஸ்ட் ஒரு ஈர்ப்பு இல்லைன்னு கண்டிப்பா எனக்கு தெரியும். உங்களுக்கு தான் அது புரியலை விஜய்.

எனக்கு வாழ்க்கையில நிம்மதி கிடைக்க என்ன செய்றது அப்படின்னு மனசுக்கு உள்ள ஒரு தேடல் இருந்துட்டே இருந்துச்சு. அன்ட் அந்த தேடலுக்கான பதிலை நீங்க தான் விஜய் எனக்கு தந்திருக்கீங்க.

இன்னைக்கு மார்னிங் அங்க தேவை இருந்த மக்களுக்கு உதவி செஞ்சப்ப‌ ஐ பெல்ட் வெரி புல்பில்டு. அதே மாதிரி ஒரு ஃபீலிங் உங்க கூட இருக்கும் போதும் தோனுது விஜய்.

எனக்கு பயமா இருக்கு விஜய். என்னோட லைஃப் எங்க என்னோட அப்பா அம்மா லைப் மாதிரி போயிருமோன்னு. பட் நீங்க என் கூட இருந்தா ஒரு நம்பிக்கை லைஃப் நல்லா இருக்கும்னு" என்று அவள் சொல்லும் போது அவன் மனது வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

ஏன் என அவனுக்கும் தெரியவில்லை. இப்போது சஹி பேசுவதை மீண்டும் கேட்டான். "நான் ஸ்ரே சோம் அங்கிள்‌ லக்ஸ் ஆன்டி எல்லாரும் டெல்லி போய்ட்டு ஒரு டென் டேஸ் காசி அமர்நாத் இந்த மாதிரி கோவிலை சுத்த போறோம்.

அன்ட் ஆப்டர் டெர் டேஸ் ஆக்ரா வரோம். அப்போ நீங்க வாங்க விஜய். அப்போ வந்து உங்க மனசுல என்ன இருக்கோ அதை சொல்லுங்க‌. அது வரைக்கும் டைம் எடுத்துக்கோங்க.

அப்புறம்" என இழுத்தவள் "டூ யுவர் இன்டர்வியூ வெல். நான் உங்களை கலெக்டரா பார்க்க ரொம்ப ஆசைப்படுறேன். அதையும் மைன்ட்ல வச்சிக்கோங்க. இப்போ தூங்க போலாம்" என்று மனதில் இருந்ததை பேசி சென்று விட்டாள்.

ஆனால் விஜய் தான் அவள் பேச்சில் அப்படியே நின்று விட்டான்‌. காதலிக்கப்படுவது சுகம் என படித்திருக்கிறான். அதை நேரில் உணரும் தருணம் இவ்வளவு மகிழ்ச்சியை தருமா என்று இப்போது உணர்ந்தான் விஜய்.

ஆம் சஹியின் பேச்சில் இருந்த தெளிவு, அவள் கண்களில் தெரிந்த காதல் என ஒவ்வொன்றும் அவளின் மனதை அப்படமாக காட்ட இதை சாதாரண ஈர்ப்பு என்ற பிரிவில் அவனால் சேர்க்க முடியவில்லை.

அதே போல் அவனுக்கு யோசிக்கவும் நேரம் தேவைப்பட அதை சொல்லாமலே தந்து சென்ற சஹியின் மீது ஒரு அபிமானம் தானாவே வந்து விட்டது விஜய்க்கு சஹி மீது.

அந்த எதிர்க்காற்றை தானும் முகத்தில் வாங்கியவனின் புன்னகையோ அந்த இருட்டிலும் அழகாக தெரிந்தது.

அடுத்த நாள் மதிய நேரம் டெல்லியை வந்து அடைந்தது ரயில். அவ்வளவு நேரம் ஒன்றாக வந்த அந்த ஆறு பேரும் பயணிகளாக இல்லாது ஒரு குடும்பமாகவே இப்போது மாறி இருந்தனர் என்றால் மிகையில்லை.

"அப்புறம் திரும்ப எப்போ மீட் பண்ணலாம்" என்று வெற்றி தான் கேட்டான். அவன் கேள்விக்கு வெற்றியை பார்க்காது விஜயை பார்த்தே தான் அவள் பதில் வந்தது.

"இன்னும் டென் டேஸ் தான் வெற்றி. வீ வில் கம் அகைன்‌. நீங்க எங்களுக்காக வெயிட் பண்ணுங்க. நாம ஆக்ரா போலாம். நிறைய பிளேஸ் பார்க்கலாம். அவ்ளோ நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.

சோ நாங்க எங்க இறை சுற்றுலாவை முடிச்சிட்டு வரோம். எல்லாரும் இங்க ஒரு ஃபன் சுற்றுலா போலாம். ஓகேவா" என்றவள் விஜயை நோக்கி புருவத்தை உயர்த்தி கண்களாலே 'ஓகேவா?' என்றாள்.

அவள் பாவனையில் விஜய்க்கு சிரிப்பு வந்தாலும் முகத்தில் எந்த பாவத்தையும் காடட்வில்லை. மதிய உணவை முடித்தபின் வெற்றியும் விஜய்யும் அவர்கள் முன்பதிவு செய்திருந்த அறைக்கு கிளம்பினார்கள்.

அதே நேரம் சஹி ஸ்ரே சோம் லக்ஸ் இவர்கள் நால்வரும் காசிக்கு செல்லும் அடுத்த ரயிலுக்கு செல்ல ரயில் நிலையத்திற்கே மீண்டும் சென்றனர்.

காசி சென்றவர்கள் வந்தது போல் பேச்சும் கூத்தும் என சந்தோஷமாக சென்றாலும் ஏதோ குறைவது போல் தான் உணர்ந்தனர். ஆனால் அதை ஒருவர் மற்றவரிடம் காட்டாமல் இருந்து கொண்டனர்.

இந்த இறை சுற்றுலா நால்வரின் மனதிலும் நல்ல இதத்தை பரப்பியது என்னவோ உண்மை தான்.‌ இதில் சோம் லக்ஷ்மி மீது காட்டிய அக்கறை பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது சஹி ஸ்ரேவிற்கு.

அங்கே தேவை உள்ளவர்களுக்கு தங்களால் முடிந்த அளவு உதவி செய்து கொண்டும் வந்தனர். கோவிலுக்கு சென்றதை விட பிறருக்கு உதவியது தான் மனதுக்கு நிம்மதி அளித்தது இவர்களுக்கு.

இதில் ஸ்ரே தன் கவலையில் இருந்து நன்கு தெளிந்து வெளியே வந்துவிட்டாள். இரவில் நன்றாக உறங்கி எழ அது சஹிக்கு மிகுந்த நிம்மதியை தந்து சென்றது.

என்ன தான் இவர்களோடு சுற்றினாலும் இடை இடையே சஹியின் மனம் என்னவோ விஜய் சொல்லப்போகும் பதில் என்னவாக இருக்கும் என்பதை சுற்றியே வந்தது.

இங்கே இப்படி செல்ல இன்டர்வியூ என்று வந்த விஜய் மனதிலும் சஹியின் எண்ணங்கள் தான் வரிசை கட்டி நின்றது. ஆனாலும் இன்டர்வியூ என்று வந்த போது சிரத்தையாக மற்ற எண்ணங்களை ஒதுக்கி நல்லபடியாகவே செய்து விட்டு வந்தான்.

'கண்டிப்பா அவளை விட வேற யாரும் நம்ம லைஃப் பாட்னரா வந்தா செட்டாகாதுன்னு தான் எனக்கு தோனுது. அவளுக்கு ஓகே சொல்றதுன்னு முடிவு பண்ணியாச்சு. பட் எங்க வச்சு சொல்ல' என்று யோசித்தவனுக்கு சட்டென பல்ப் எரிந்தது.

"தாஜ் மஹால்!! அதான் அதுதான் கரெக்ட் பிளேஸ். அந்த இடத்தில சொன்னா அவ கண்டிப்பா ரொம்ப சந்தோஷப்படுவா" என்று மகிழ்ச்சியாக மனதில் எண்ணிக் கொண்டான்.

பத்து நாட்களும் நிமிடங்களாய் கடக்க இறை சுற்றுலா சென்ற நால்வரும் டெல்லி வந்து சேர்ந்தனர். வந்தவர்களை ஆர்ப்பாட்டமாக வரவேற்றான் வெற்றி. விஜய்யும் புன்னகையுடன் தான் வரவேற்றான்‌.

சோம் விஜய்யின் கையை பிடித்து கொண்டவர் "எனக்கு வாழ்க்கைக்கு என்ன தேவைன்னு நல்லா உணர்த்திட்ட விஜய். என் மனசு நிம்மதி அடைய எனக்கு என்ன செய்யனும்னு இப்ப புரிஞ்சிருச்சு பா.

நான் முடிவு பண்ணிட்டேன். நான் ஏன் ஊரை விட்டு இப்படி ஓடி ஒளியனும். நான் எங்க ஊருக்கே போகலாம்னு முடிவு பண்ணிட்டேன். அங்க என் மக்களுக்கு என்னால‌ ஆன உதவியை என் காலம் இருக்க வரை செஞ்சிட்டு,

நிம்மதியா ஒரு சாவை பார்க்கலாம்னு மனசுல ஒரு எண்ணம் வந்திருச்சு" என்று புன்னகையுடன் கூறிய சோமை விஜய் "நல்ல முடிவு அங்கிள்" என கூறி மகிழ்வுடன் அனைத்து கொண்டான்.

அதன்பின் ஒரு நாள் முழுக்க டெல்லியை நன்றாக சுற்றி பார்த்தனர்‌. விஜய் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாது அமைதியாகவே வர சஹி‌ தான் அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.

ஆனால் அதை எதையும் உணராதவன் போல் சுற்றி வெறுப்பேற்றி கொண்டிருந்தான் விஜய். அவனை பார்த்து முறைக்க மட்டுமே முடிந்தது சஹியால்.

அன்று இரவு நன்கு ஓய்வெடுத்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஆக்ரா நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினார்கள் அனைவரும்.

ஆக்ரா கோட்டை, அக்பர் சமாதி, ஃபத்தேபூர் சிக்ரி என அனைத்து இடங்களையும் ஒரு லயிப்புடன் பார்த்து கொண்டே வந்தனர்.

அந்த கட்டுமான தொழில் நுட்பத்தை கண்டு ஆர்வமாக பார்வையிட்டனர். மாலை தான் தாஜ்மகால் செல்வதென முடிவு செய்திருந்தனர். இரவு நிலவின் ஒளியில் தாஜ்மகாலின் பிம்பம் அருமையாக இருக்கும் என பலர் சொல்லியிருக்க அதற்காகவே மாலை வேளையை தேர்வு செய்திருந்தனர்.

மாலை நேரமும் வந்தது. இவர்கள் ஆறு பேரும் தாஜ் மகாலை வந்தடைந்தனர். வந்தவர்களின் கண்களுக்கு நல்ல விருந்தாய் அமைந்தது அந்த காட்சி.

அவ்வளவு அழகான வேலைப்பாடு. உண்மையான காதலின் அழகான ஒரு சின்னம் அல்லவா. "வாங்க வாங்க லவ் பேட்ஸ். உங்களை போன்றவர்கள் தான் இந்த இடத்தை சுத்தி பார்க்கனும்.

வந்து எஞ்சாய் பண்ணுங்க" என்று ஸ்ரேயா சோம் லக்ஷ்மியை ஆர்ப்பாட்டமாக கூட்டி சென்றாள். இவர்களுடன் தானும் இணைந்து கொண்ட வெற்றி விஜய்யை பார்த்து 'ஆல் த பெஸ்ட் மச்சான்' என வாயசைத்து கையால் சைகை செய்து சென்றான்.

அவனிடம் விஜய் எல்லாம் சொல்லி இருந்தான். எனவே அவன் விஜய் சஹி இருவரும் தனியே இருக்கும் சூழ்நிலை வர அவனும் அவர்களுக்கு தனிமை தந்து சென்றான்.

அந்த யமுனை ஆற்றின் அழகை பார்த்து கொண்டிருந்த சஹியின் அருகே சென்றான் விஜய். அவளின் அழகான முகத்தை கண்டு புன்னகைத்த விஜய் "சஹி" என்றான் வார்த்தைக்கே வலிக்காமல்.

அந்த குரலில் ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்த சஹி "விஜய்" என்றாள் புன்னகையுடன்‌. எல்லாரும் எங்கே என்று பார்க்க யாரும் கண்ணில் தென்படவில்லை. எனவே கேள்வியாய் விஜயை பார்த்தாள் சஹி.

அவளின் கையை மென்னகையுடன் பற்றியவன் "வா உக்காந்து பேசலாம்" என்று அவளை அழைத்து சென்று அமர்ந்து கொண்டான். அவனின் செய்கைகளை ஆச்சரியமாக பார்த்தவள் உடன் அமர்ந்தாள்.

சிறிது மௌனித்தவன் "ம்ம் சஹி! எதுல இருந்து ஆரம்பிக்கன்னு தெரியலை. ஆனா சொல்லனும்னு முடிவு பண்ணிட்டேன். அதுவும் இங்க இந்த இடத்தில வச்சு சொல்லனும்னு ஆசைப்பட்டேன். அதான் இங்க வச்சு சொல்றேன் டா.

உன்னை ஆபிஸ்லையே பார்த்திருக்கேன். உன் டெடிகேஷன் பிடிக்கும். பட் அதுக்கு மேல எதுவும் தோனினது இல்லம்மா. அன்ட் டிரைன்ல வந்தப்ப உன் பாஸ்ட் தெரிஞ்சப்போ கஷ்டமா இருந்துச்சு.

பட் அப்போவும் எதுவும் தோனலை டா. ஆனா நீ டென் டேஸ் முன்னாடி என்கிட்ட புரபோஸ் பண்ண பாத்தியா அப்போ ஐ வாஸ் ஸ்பெல் பவுண்ட். அப்ப கூட என் பாஸ்ட் கேட்டு பரிதாபப்பட்டு சொல்றியோன்னு தோனிச்சு" என்னும் போதே அவள் எதோ பேச வர

"இரு டா லெட் மீ கம்ப்லீட். ஆனா அதுக்கு முதல்லையே நீ உன்னோட பீலிங்ஸ்ஷ ஷேர் பண்ணிக்கிட்ட. சோ ஐ வாஸ் ஹேப்பி. அன்ட் காதலிக்கிறத விட காதலிக்கப்படுற பீல் தட் இஸ் எ கிரேட் ஃபீலிங் டா.

யூ கேவ் மீ தட் ஸ்வீட் ஃபீலிங் டா. அப்போவே எனக்குள்ள இங்க வந்து " என தன் இதயத்தை காட்டியவன் "என்னமோ பண்ணிட்ட டா" என்றான் புன்னகையுடன்.

"உன்னை லைஃப்ல மிஸ் பண்ணிட கூடாதுன்னு மட்டும் தோனிருச்சு டா" என்றதும் சஹானா காற்றில் பறந்தாள் என்றே சொல்லலாம்.

"இந்த டென் டேஸ் நீ இல்லாம ஐ பெல்ட் தட் சம் பார்ட் இஸ் மிஸ்ஸிங். சோ அந்த பார்ட் நீதான்னு எனக்கு புரிய ரொம்ப டைம் எடுக்கலை. அன்ட் அப்போ டிசைட் பண்ணுனேன்.

இங்க இந்த லவ் சிம்பல் முன்னாடி வச்சு உனக்கு என்னோட லவ்வ சொல்லனும்னு முடிவு செஞ்சேன்" என்றதும் சஹியின் மனது வேகமாக அடித்து கொண்டது.

விஜய் தான் வாங்கி வைத்திருந்த மோதிரத்தை எடுத்தவன் அவளை எழுப்பி நிறுத்தி "வில் யூ மேரி மீ டா?" என்றான் அவளை போல் நேரடியாக எந்த முகப்பூச்சும் இன்றி.

இப்போது சஹியின் விழியில் இருந்து இரண்டு சொட்டு நீர் கூட விழுந்து விட்டது. சந்தோஷமாக ஆம் என தலை அசைக்க அந்த மோதிரத்தை அவளின் விரலில் அழகாய் போட்டு விட்டான்.

"என்னோட தேடல் என் மன நிம்மதி எதுல இருக்குன்னு உணர்த்தின நீங்க இப்போ எனக்கே எனக்குன்னு லைஃப் லாங் வந்து என் லைஃப்ப புல்பில் பண்ண போறீங்க விஜய். ஐ லவ்‌ யு" என்றாள் ஆத்மார்த்தமாக.

தன் காதல் நிறைவேறிய இடம், உலகில் இதற்கு மேல் வேறொரு சிறந்த இடம் இருக்க‌ முடியும் என்று சஹிக்கு‌ தோன்றவில்லை. மனநிறைவுடன் விஜய்யின் தோளில் சாய்ந்தாள் சஹி.

அன்று நிலவு வெளிச்சம் நன்றாகவே இருக்க தாஜ்மகாலின் பிம்பம் அழகாக யமுனை ஆற்றில் விழுந்து கிடந்தது. அதை பார்த்தவாறு தங்கள் வாழ்வு கண்டிப்பாக சிறக்கும் என்ற எண்ணத்தில் மகிழ்வுடன்‌ அமர்ந்திருந்தனர் அந்த ஜோடி புறாக்கள்.

கானல் நீரென இருந்த மனம்
சுனை நீரின் மீனாய் துள்ள,
காடு மலை கடந்ததாய் எண்ணம்;
மலை முகட்டில் மனம் நிற்க
எஞ்சியது என்னவோ
சிறு கண்ணீர் துளி;
உரிய இடம் சேர்ந்த களிப்பில்.......

-தேடல் முடிந்துவிட்டது ஆனால் வாழ்வில் பயணங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்
 
Top