All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாராவின் "எண்ணங்களே எழுத்துக்களாய்" - கவிதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ ஒரு புதிய கவிஞரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 
Last edited by a moderator:

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை படித்து கொண்டிருந்த எனக்கு கவிதை எழுத திரி அமைத்து கொடுத்த srikala அக்காவிற்கு என் முதல் நன்றி.
என்னுள் இருக்கும் திறமையை வெளிக்கொணற செய்த என் அக்கா பவானிக்கு மிக்க நன்றி:):whistle::whistle:
உன்னால் முடியும் என்று ஊக்க படுத்திய என் பேபிமா ரிஷாக்கு மிக மிக மிக்க நன்றி :whistle::whistle::whistle::whistle:
என் கவிதையின் பிழை திருத்தும் என் தம்பிகள் புவிமா & குணாமாக்கு என் கடைசி நன்றி .....:love::love::love:
இனி என் தொல்லையை தாங்கி கொள்ளபோகும் என் அக்காஸ் & நட்பிஸ்கும் மிக மிக மிக மிக மிக மிக மிக பெரிய நன்றி;););););););):love::love::love::love::love::love:


கதையை மட்டும் படிக்கும் நீங்கள் என் கவிதையும் படித்து அதில் உள்ள நிறை குறைகளை சொல்லி என்னை வழி நடத்துமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் அக்காஸ் & நட்பிஸ் & kutty sisters :):):):):):)

share your valuable comments in the below link sisters and friends...
http://srikalatamilnovel.com/community/threads/சாராவின்-எண்ணங்களே-எழுத்துக்களாய்-கருத்துத்-திரி.667/
 
Last edited:

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தலைப்பு :
உயிரற்ற நீ உணர்வுகளை உணர்த்துவது எப்படி?




உயிரற்ற நீ உணர்வுகளை உணர்த்துவது எப்படி?

மழலை சிரிப்பின் இதமாய்.....
இயற்கையை ரசிக்க கற்று தரும் ரசிகனாய்.....
தனிமை போக்கும் நண்பனாய்....
காதலை உணர்த்தும் காதல(லியா)னாய்....
நன்நெறி போதிக்கும் ஆசானாய்.....
கற்பனை உலகை தாங்கி நிற்கும் தலைவனாய்....
வெடிக்கும் புரட்சியின் போர்வாளாய்....
வீழ்ந்தவர்களின் துன்பமாய்.....
வீழ்த்தியவர்களின் இன்பமாய்.....
சிதைந்தவர்களின் கதறலாய்....

என

வெறும் எழுத்துகள் கொண்டு உயிர் உருகவும்
உருக்குலையவும் செய்கிறாயே....

உன்னிடம் கேட்கிறேன்....

உயிரற்ற நீ உணர்வுகளை உணர்த்துவது எப்படி?

*****************************************************************


உன்னில் மூழ்கினேன்.........

என்னை மொத்தமாய் மூழ்கடிக்கவும்

மூழ்கிய என்னை மீட்டெடுக்கவும்
துணை நிற்பது நீயே......

உந்தன் வரிகளில் வீழ்ந்து...
பக்கங்களில் புதைந்து...
கவிதையில் கரைந்து....
நான் வெளிவரும் போது....

விடிந்திருக்கும் என் வானம்....
விலகியிருக்கும் என் கலக்கம்...
தொலைந்திருக்கும் என் துக்கம்.....

*************************************************************


உன் சிறைக்கைதி நான்......

என் கைகளுக்குள்
உன்னை சிறைப்பிடிக்க
நினைத்தேன்
உன்னை கைகளில்
ஏந்திய பின்
நான்
உன் சிறை
கைதியானேன்......

***************************************************************


கவிதை எப்படி இருக்குனு சொல்லுங்க sister & friends நல்லருந்தாலும் சொல்லுங்க குறை இருந்தாலும் சொல்லுங்க நான் திருத்தி கொள்ள உதவியாய் இருக்கும்
kavitha epdi irukkunu sollunga akkas & sisters & cutty sisiters love you all

கருத்தை கருத்து திரியில் சொல்லவும்... sisters
https://srikalatamilnovel.com/community/threads/சாராவின்-எண்ணங்களே-எழுத்துக்களாய்-கருத்துத்-திரி.667/pole_romashki_kniga_stranitsyi_serdechko.jpg
 
Last edited:

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
13-58-54-images.jpg

வாழ்க்கை

சிலருக்கு இன்பமாய் சிலருக்கு துன்பமாய்
சிலருக்கு துரோகமாய் சிலருக்கு ஏமாற்றமாய்
சிலருக்கு வெறுமையாய் சிலருக்கு வண்ணமாய்

இன்னும் சிலருக்கு வாழ்க்கை என்னவென்று கூட அறியாமல்
என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் அமைகிறது

நிரந்தரமில்லா நிலையையே நிரந்தரமாக கொண்டது
தான் வாழ்க்கை

தேடல் எதுவென்று அறியாமல் தேடி சொல்லும்
பயணமே வாழ்க்கை

அப்பயணத்தில் வரும் சில முட்களே அந்த
சிலருடைய எண்ணங்கள்

அதை கடந்து செல்பவன் தான் தேடியதை கண்டறிகிறான்

அதில் துவண்டு போறவன் அதனை குறை சொல்கிறான்

ஆனால் அவன் சொன்ன குறையை பிழையாய் ஏற்காமல்
ஆசானாய் மாறி பிழையை திருத்தி கொள்ள உதவுகிறது வாழ்க்கை

அதனை புரிந்து கொள்ள மறுக்கிறது மானிட மனம்.....


share your comments sister & friends
http://srikalatamilnovel.com/community/threads/சாராவின்-எண்ணங்களே-எழுத்துக்களாய்-கருத்துத்-திரி.667/
 
Last edited:

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
14-31-03-images.jpg

வாழ்கை பயணம்

வாழ்கை இரண்டின் அடிப்படையில் அமைகிறது...

ஒன்று பணயம் மாற்றென்று பயணம்

கல்வியை பணயம் வைத்து எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறோம்

காதலை பணயம் வைத்து திருமணத்தை நோக்கி பயணிக்கிறோம்

இளமையை பணயம் வைத்து முதுமையை நோக்கி பயணிக்கிறோம்

பிறப்பை பணயம் வைத்து இறப்பை நோக்கி பயணிக்கிறோம்

பயணம் வெற்றி எனில் பணயம் பயன் உள்ளதாய் முடியும்

பயணம் தோல்வியை தழுவினால் பயணம் மட்டும் அல்ல

பணயமும் பாழாய் போகும்...


share your comments sister & friends
http://srikalatamilnovel.com/community/threads/சாராவின்-எண்ணங்களே-எழுத்துக்களாய்-கருத்துத்-திரி.667/
 
Last edited:

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
7425


ஆணின் வெட்கம்

ஆணுக்குள்ளும் பெண்மையுண்டு அது அவர்களின்
தாய்மை செயலில் வெளிப்படும்...............

ஆணுக்குள்ளும் நாணமுண்டு அது அவர்களின்
வெட்கத்தில் வெளிப்படும்..............

ஆணின் வெட்கம் அழகு அதனை அவர்கள் வெளிபடுத்தும்
விதம் அதனினும் அழகு...................

தன்னவளை பற்றியும் தன் காதல் பற்றியும் பேசும் போது
அழகாய் வெளிபடும்.....................

ஆணுக்கும் கன்னம் சிவக்கும் வெட்கம் கொண்டால்................

சூரியன் பிரகாஸம் கண்டு செந்தாமரை மலரும் சில சமயம்
சூரியனே பிரகாஸிக்கும் செந்தாமரையின் மலர்ச்சியை கண்டு............

அதுவே ஆணின் வெட்கம்.............

ஆண்களின் வெட்கம் என்பது முரட்டு குழந்தையின் செல்ல
சிணுங்கள் போன்றது...................

ஆண்களின் வெட்கம் என்பது எழுதபடாத கவிதை படிகபடாத பாடல்..............

எழுதப்படும் படிக்கபடும் அவனவளாள் மட்டுமே..............




கருத்தை கருத்து திரியில் சொல்லவும்... sisters & FRIENDS
https://srikalatamilnovel.com/community/threads/சாராவின்-எண்ணங்களே-எழுத்துக்களாய்-கருத்துத்-திரி.667/
 
Last edited:

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
8173


முத்தம்

முத்தம் இரு காதல் மனங்களின் தூதுவன்

நேற்றியில் இதழ் பதிக்கும் தருணம்
உனக்கு எல்லாமுமாய் நான் இருப்பேன்
என்று உணர்த்தும்......

கன்னத்தில் இதழ் பதிக்கும் தருணம்
காதலியை குழந்தையாய் பாவிக்கும்.....

கழுத்தில் இதழ் பதிக்கும் தருணம்
கண்ணவனின் தாபத்தை உணர்த்தும்........

இதழில் இதழ் பதிக்கும் தருணம்
இரு உயிரும் ஒன்றே ஒன்று இடமாற்றும் தருணம்...

அவளின் அவனையும் அவனில் அவளையும்
உணர்த்தும் தருணம்.......



************************************************************************************************

8174


இரு
இதழ்கள்
இணைந்து
செய்யும்
தவறுக்கு

சாட்சிகள்
இருக்ககூடாதென
தெரிந்து
தான்

இரு ஜோடி
விழிகளும்
மூடிக்கொள்கிறதோ
என்னவோ...........

******************************************************************************



கருத்தை கருத்து திரியில் சொல்லவும்... SISTERS & FRIENDS
https://srikalatamilnovel.com/community/threads/சாராவின்-எண்ணங்களே-எழுத்துக்களாய்-கருத்துத்-திரி.667/
 
Last edited:

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
8349


பெண்ணின் வலி


ஆண்களை பலமாய் படைத்து பெண்களை பாதுகாக்க
பலவந்த படுத்த அல்ல.......

பெண்ணின் சதை தான் ஆண்னின் இச்சை என்றால் அதை
அறித்தெறிந்தால் இச்சை மறித்துவிடுமா?

மனித இனப்பெருக்க சுகத்தை இயற்கை பெண்ணுக்குள்
வைத்தது பெண்ணின் குற்றமா?

ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரும் வேறுபாடு இல்லை
உடலையும் உறுப்பையும் தவிர...........

ஆணுக்கு வலிக்கும் எனில் பெண்ணுக்கும் வலிக்கும் அதை
புரிந்து கொள்ள மறுகிறது சில மனித மிருகங்கள்...........

இதை எதிர்த்து ஒரு பெண் போராடினால் அவளின் நடத்தை
கேள்விகுறியாக்கி விடுகின்றனர்............

போராடி வென்றுவிட்டால் வீரமங்கை என்று கூறி போராலியாக
மாற்றிவிடுகின்றனர்...........

அவரவர் பசிக்கு அவரவர் தான் உண்ணவேண்டும் அதே போல்
அவரவர் பிரச்சனைக்கு அவரவர்களே தான் தீர்வுகாண வேண்டும்...

யாரவது வருவர்களா நம்மை காப்பற்ற என்று யோசிக்கும் நொடிதனில்
நம்மை நம் காத்து கொள்ளலாம்...

ஏனெனில் இது சுயநலமிக்கவர்கள் வாழும் காடு.............




******************************************************************************************************



8350



ஆணுக்கும் புரியும் பெண்மை

பெண்ணின் வலியை ஆணினால் புரிந்து கொள்ள முடியாது
என்றுரைப்பது தவறு..............

ஆணினால் மட்டுமே பெண்ணின் வலியை புரிந்துக்கொள்ள
முடியும்............

பெண் ஆண்ணாவனின் உயிரை சுமக்கிறாள் என்றால்

ஆண் அவனோ தன் உயிரையும் தன் உயிரை சுமக்கும்
தன்னுயிரானவளையும் நெஞ்சில் சுமக்கிறான்..............

ஒரு உயிரை பெற்றேடுக்க பெண் படும் வேதனை கொடுமை
என்றால்...........

தான் இரு உயிரை கண்ணில் காணும் வரை ஆண் படும் வேதனை
கொடுமையிலும் கொடுமை...............

பெண்ணிற்கு மன வலிமை அதிகம் தான் ஆனால் அது உடையும்
போது ஆணினால் மட்டுமே அதை உருப்பெற செய்ய முடியும்........

நண்பனாய் தந்தையாய் தமையன் தம்பி கணவன் மகன் என
அனைத்துமாய் பெண்ணுடன் துணையிருப்பது ஆண்...........

ஆணினாலும் பெண்ணின் வலியை உணர முடியும்..........

**********************************************************************************************

by
சாரா💐💐💐


கவிதை இரண்டும் எதிர் எதிர் திசை கொண்ட கருவை கொண்டது இரண்டும் என் எண்ணங்களில். பிழை இருந்தால் கூறவும் திருத்தி கொள்கிறேன் சகோகளே.
படித்துவிட்டு கருத்தை திரியில் சொல்லவும் சகோகளே
... sisters & FRIENDS :smile1:
https://srikalatamilnovel.com/community/threads/சாராவின்-எண்ணங்களே-எழுத்துக்களாய்-கருத்துத்-திரி.667/
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
8684

சாதி

சாதிக்கு உயிர் இல்லை ஆனால் என்றும் உயிர் பலி கேட்கிறது.. ஏன்?....

நம்மை அழிக்க வழி தேடி அலைந்த நயவஞ்சகர்கள் உருவாக்கிய
ஆயுதமே சாதி....

மேல் சாதி கீழ் சாதி அதில் பல பிரிவுகள் பிரித்து மனிதனே
மனிதத்தை மரணிக்க காரணமாகிவிட்டான்....

வெவ்வேறு சாதிக்காரன் தொட்டுக்கொண்டல் அவர்கள் இறந்து போவதில்லை.
அவன் வீடு இடிந்து போவதில்லை.

ஒரு சாதிக்காரனின் கால் பட்ட நெல்தான் இன்னொரு சாதிக்காரனின் சாப்பாட்டில்
உள்ளது அதனால் தீட்டுப்பட்டு அவன் மாண்டு போவதில்லை.

வேற்று சாதி என்பாதல் இருவரின் இரத்தம் வேறுபடவில்லை
இரண்டும் ஒரே நிறம் தான் சிவப்பு...

வேற்று சாதிகாரன் முலம் உயிர் பிழைப்பது உன் சாதிக்கு கலங்கம் என்றால்
நீ பிழைக்க வேண்டாம் செத்துவிடு....

உன்னால் மாறும் உலகம் மாசுபடாமல் இருகட்டும்

தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க இயலாதவனே சாதியை
அடையாளப்படுத்திக்கொண்டு வாழ்கிறான்.......

சாதி என்றும் உன் கலாச்சாரம் இல்லை


மனிதம் மிஞ்சிய வேறு உணர்வும் இல்லை ................

************************************************************************************************************************


8686



அரும்பில் கருகும் மொட்டுகள்

அரும்பிலே கருகும் மொட்டுகள்
பதின்லே பாழாகும் சின்ன சிட்டுகள்

கொடி படருகையில் பற்றுகோல் வேண்டும்
இல்லையேல் பாதை மாறி சென்று பாழாகிவிடும்

பற்றுகோலும் பாதுகாப்பாய் அமைய வேண்டும்
பந்தலில் படரும் கொடி பாதுகாக்கப்படும்

முற்ச்செடியில் படரும் கொடி பட்டுப்போய்விடும்....

முதல் முறை புகை பிடிக்கும் போது ஏற்படும் இரும்பலும்....
முதல் முறை குடிக்கும் போது ஏற்படும் மது வாடையின்
உமட்டலும்.....

கேடுதல் என்று உணராமல்

செய்ய முடியாத செயலை செய்வது தான்
செருக்கு கர்வம் என்று எண்ணி

தவறை சரி என்று கூறி மறுபடியும் அதையே செய்கிறார்...

இல்லையேன் மனவருத்தத்திற்கு மருந்து என்று அதை நாடுகிறார்

நம் எடுத்து வைக்கும் முதல் படி நல்லதாய் அமைந்தால்
நல்லதே நடக்கும்

ஆனால் எது நல்லத என்று நம் அறியாமல் இருப்பது தான்

இங்கு வேதனை..........



by
சாரா🌷🌷🌷🌷



*****************************************************************************************



நம் சமுதாயத்தில் மறைந்தும் கொண்டே வளர்ந்து கொண்டிருக்கும் இரு செயல்களை எனது வரிகளில் எனக்கு தெரிந்த முறையில் சொல்லிருக்கிறேன் சகோகளே எவ்வாறு உள்ளது என்று படித்து விட்டு சொல்லவும் குறை இருந்தாலும் சொல்லுங்க தோழமைகளே நான் திருத்தி கொள்ள உதவியாய் இருக்கும்

என் எண்ணங்களுக்கு ஆதரவு தரும் என் இனிய உறவுகளுக்கு நன்றி தோழமைகளே :smile1::smile1::smile1:

irandavathu kavithaikku image kettaikka konjam atjust pannikonga sisters

கருத்தை திரியில் சொல்லவும் சகோகளே... sisters & FRIENDS :smile1:
https://srikalatamilnovel.com/community/threads/சாராவின்-எண்ணங்களே-எழுத்துக்களாய்-கருத்துத்-திரி.667/
 
Last edited:

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை எதும் தோலை ஆனால் என் சுகி பேபி :love::love::love: கேட்டதால் என் பல வரி கவிதைகள் அல்லாத சில வரிகளில் இருக்கும் கவிதை தொகுப்பு எப்படி உள்ளது என்று சொல்லுங்கள் akkas and friends ithu nan munbu ezhuthiyathu inru ungal mun




ஒரு

நொடியானாலும்
உன் மேல் பட்டு
மறையவே
துடிக்கின்றேன்

-பனி துளி

**************************************************************




பௌர்ணமி மட்டும்
அழகென நினைத்தேன்
உன்
மதிமுகம் கண்டதால்

காரிருளும் அழகென
உணர்ந்தேன்
உன்
கார்குழலில்
புதைந்ததால்



***********************************************************************




மோகத்தின் மிச்சத்தையும்

தாபத்தின் சொச்சத்தையும்

என் வெற்று மார்பில்
உதிர்ந்து கிடக்கும்
உன் கார்குழலின் ஒற்றை
இதழ் சொல்லுமடி

முடிவுறாமல்
முடிவுற்ற நம்
காதல் விளையாட்டை.


*****************************************************************************



வெயில் போல் வேதனை
உன் மேல் விழுந்தாலும்

மழை போல் சோகம்
உன்னை சூழ்ந்தாலும்

இவற்றிடம் இருந்து எப்போதும்
உன்னை பாதுகாப்போன்
குடையாய் நின்று

இப்படிக்கு

உன் உயிர் தோழி




************************************************************************************


உன்
நெஞ்சுகுழியில்
புதைந்திட ஆசையடி
உன் சங்கு கழுத்தில்
திருமாங்கல்யமாய்

நான் இருந்தால்



***********************************************************************



மலர் மாலை கொண்டு கையில் மலர் சென்டுடன் அவன்


மலர் மாலை கொண்டு ஓளை படுக்கையில் அவள்

இவர்களின் நிலைக்கு யார் காரணம் என கேட்டேன்

எங்களின் அதிகபடியான காதலே இந்நிலைக்கு காரணம்
என்று

இரு குரல் ஒன்றாய் கேட்டது

ஒன்று ஆத்மார்த்தமான இதயத்தின் குரல்
ஒன்று ஆன்மாவாய் மாறிபோன இதயத்தின் குரல்

அதிகபடியான காதலும் ஆபத்து தான் போலும்

*******************************************************************************


BY
- சாரா-💐💐💐💐💐



படித்துவிட்டு கருத்தை திரியில் சொல்லவும் சகோகளே
... sisters & FRIENDS :smile1:
https://srikalatamilnovel.com/community/threads/சாராவின்-எண்ணங்களே-எழுத்துக்களாய்-கருத்துத்-திரி.667/
 
Last edited:
Status
Not open for further replies.
Top