All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிவரஞ்சனியின் 'மாயம் செய்தாரோ' - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Sivaniguna

Sivaniguna
அத்தியாயம் 1

துயில் எழுந்து தன் கதிர்களால் பூமிக்கு வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்தான் கதிரவன். சுற்றி மேற்கு தொடர்ச்சி மலைகளாாலும் வயல்களாலும் சுற்றி பசுமையாக இயற்கை அழகோடும் காலை நேர பரப்பபபோடும் இயங்கி கொண்டிருந்தது தற்போது மாவட்டம் ஆன தென்காசி.

அதே பரபரப்போடு தன் வாகனத்தை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தால் நம் நாயகி.. 5 நிமிடம் தான் இருக்கு லேட் ஆனா கேட்டை அடைச்சுருவாாங்களே என்று புலம்பியவாறு புயல்வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தாள் தன் ஸ்கூட்டியை. கேட்டை மூட ஒரு நிமிடம் இருக்கும் தருவாயில் பள்ளிவளாகத்திற்க்குள் நுழைந்தாள் நிலவழகி.


பெயரில் உள்ள அழகு மொத்தமும் தன்னிடம் கொண்டவள். அங்குள்ள தனியார் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றுகிறாள்.


வளாகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு ஆசிரியர் அறையை நோக்கி சென்றாள்.


ஹாய் டி கார்த்தி

ஹாய் நிலா என்ன இன்னைக்கு லேட்

கோவிலுக்கு போனேன் லேட் ஆயிருச்சு....

நீ வந்ததும் ஹெச்.எம் உன்னை வர சொன்னார் போ போய் பார்த்துட்டு வா....

எதுக்கு வர சொன்னாாரு..

தெரியல ...

ஓகே.. நான் போய் பார்த்துட்டு வாரேன் கார்த்தி

ம்ம்...

கார்த்தியும் நிலாவும் ஸ்கூல்ல இருந்து ஒன்னா படிச்சு ஒரே ஸ்கூல்ல வேலை பார்க்குற உயிர் தோழிகள்.



ஹெச்.எம் ரூமிற்கு சென்ற நிலா
மே ஐ கமின் சார்

கமின் இன்....

55 வயது மிக்க தலையில் சிறிது வழுக்கையுடன் தலைமையாசிரியர் என்ற கம்பீரத்துடன் அமர்ந்திருந்தார் அருணாச்சலம்.

குட்மார்னிங் சார்

குட்மார்னிங் மா... உட்காரு மா..

அவர் எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.
வர்ற ஜனவரி 26 குடியரசு தினம் வருது அதுக்கான ஏற்பாட்டை எல்லாம் நீ கவனிச்சுக்கோமா.

சரிங்க சார்

அப்புறம் சீப் கெஸ்டா முக்கியமான விஐபி வாராங்க.. வரவேற்பு எல்லாம்.நல்லா இருக்கனும்.

சீப் ஹெஸ்டா யார் சார் வாராங்க.

ஏசிபி அதிகுணன்.

ஓகே சார் ...

யார் யாருக்கு என்ன வொர்க்னு நீ பிரிச்சு கொடுத்துருமா உன்ட்ட இந்த வொார்க்க கொடுக்குறதுக்கு முக்கிய காரணமே நீ சரியா முடிப்பனுதான்.

உங்க நம்பிக்கை வீண் போகாது சார் எல்லாமே கரெக்டா இருக்கும் சார்.

சரிம்மா இப்பவ வொர்க்க ஆரம்பிச்சுரு...இன்னும் நான்கு நாள் தானே இருக்கு .... இத சொல்ல தான் கூப்பிட்டேன் நீ போம

ஓகே சார் என்று விடைப்பெற்றாள்..

ஆசிரியர் அறைக்கு வந்தாள் நிலா
நிலா சார் எதுக்கு கூப்பிட்டாரு...

கார்த்தியிடம் விவரத்தை கூறினாள்.
இப்போ உனக்கு கிளாஸ் இருக்கா கார்த்தி......

இல்ல நிலா...
அப்போ வா நாம இப்பவே வொர்க்க பிரிக்க ஆரம்பிக்கலாம்...

நாம டெக்ரேட்டிங்க எடுத்துக்கலாம் நிலா...

மத்தத எல்லோருக்கும் மத்த வொர்க்க பிரிச்சுரு ...

ஒகே டன்..

சிறிது நேரத்தில் யாருக்கு என்னே வேலை என்று பிரித்து முடிக்கவும் மணி அடிக்கவும் சரியாக இருந்தது....

ஏய் நீ எல்லார்ட்டயும் சொல்லிருடி லெவன்த்க்கு இப்போ என் கிளாஸ்டி நான் போறேன் நீ பார்த்துக்க சரியா...

சரி சரி நீ போ கார்த்தி நான் பார்த்துக்கிறேன்..

அதே வேலையில் நேரம் செல்ல மதிய உணவு நேரமும் வந்தது. வேலையில் முழ்கி இருந்த. நிலாவிடம் அதை அப்புறம் பார்த்துக்கலாம் இப்ப வா நாம சாப்பிடலாம்...

நிலா நம்ம சீப் ஹெஸ்ட் நம்ம கரஸ்பாண்ட்க்கு ரிலேசனாம்.....

அப்படியா... யார் சொன்னா உனக்கு....

நம்பிக்கையான ஆள்ட்ட இருந்து தகவல் வந்துச்சு நிலா...

பியூனா சொன்னாரு ....

ஆமாடி.... அப்போ தகவல் சரிதான் டி .... சரி யார் வந்தா நமக்கென்ன .....அதன் பின் நேரம் வேகமாக செல்ல.....

மாலை பள்ளி முடிந்து இருவரும் ஒன்றாக செல்ல ஹாஸ்டலுக்கு வண்டிய விடவா... வேற எங்கயும் போகனுமா....

ஹாஸ்பிடல் போகனும் நிலா...

மாசம் மாசம் போற என்ன பிரச்சனைனு கேட்டா மழுப்புற என்ன தான்டி பிரச்சனை சொல்லு....

நானும் இன்னைக்கு டாக்டர பார்த்து என்னனு கேட்குறேன்....

ஒன்னும் இல்லடி பிசிஓடி பிரச்சனை தான் பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை...

MR மகப்பேறு மருத்துவமனை முன்பு தன் ஸ்கூட்டியை நிறுத்தினாள் நீ உள்ள போ நான் வண்டியை பார்க் பண்ணிட்டு வாரேன்....


சரி நிலா நீ ரிசப்ஷனில வைய்ட் பன்னு நான் பாக்டர பார்த்துட்டு வாரேன்....

சரி.. நீ போ

வண்டியை பார்க் செய்து விட்டு ரிசப்சனில் உள்ள இருக்கையில் அமர்ந்து காத்திருந்தாள் நிலா.....
அப்பொழுது இவளை பார்த்து மின்னல் வெட்ட பாசமாக வருடி சென்றது ஒரு ஜோடி கண்கள்... அதை அறியாதவளோ சுவரில் உள்ள ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

பின் சிறிது நேரத்தில் கார்த்தி வர

என்ன சொன்னாங்க கார்த்தி....

ஒன்னுமில்லை நிலா மருந்து எழுதிருக்காங்க ....

சரி நீ மெடிக்கல் போ நான் வண்டியை எடுத்துட்டு வாரேன்....

நிலா போன் ஒலி கொடுக்க எடுத்து பேச ஆரம்பித்தாள் பேசி முடித்து அனைத்து விட்டு திரும்ப எதிரில் வந்தவன் மோதி நின்றாள் நிலா....


மாயம் செய்வான்........
 

Sivaniguna

Sivaniguna
அத்தியாயம் - 2

எதிரில் வந்தவன் மீது மோதி நின்ற நிலா நிமிர்ந்து பார்க்க மனமதிர ஆத்தாடி இது என்ன பனை மரம் மாதிரி இருக்கான் கையில‌ வேற குழந்தை வச்சுருக்கான் திட்டிருவானோ இப்போ என்ன பன்றது என்று யோசிக்க சரி நம்ம வழியிலயே‌ போவோம். அவன் ஏதோ பேச வாய் திறக்கும் முன் இவள் முந்திக்கொண்டு தெரியாம இடிச்சுட்டேன் சாரினு தான சொல்ல வந்தீங்க நான் மன்னிச்சுட்டேன் இனிமேலாவது பார்த்து போங்க சார் என்று அவனை பேச வாய்ப்பு தராமல் பேசி கொண்டே போக..
ஹலோ நான் எப்போ உங்க கிட்ட சாரி கேட்கபோறேனு சொன்னேன் என்னை பேச விடாம நீங்க பேசிட்டே போறீங்க....

அதான் இப்போ சொன்னீங்களே சாரினு... அதனால மன்னிச்சிட்டேன்.. பார்த்து போங்க சார் யார் மேலேயும் மோதாம.... குழந்தைய வச்சுட்டு இப்படி கேர்லெஸ்ஸாவா இருப்பீங்க என்று
கூறிவிட்டு‌ வேகமாக செல்ல... இவன் நாம எப்போ சாரி சொன்னோம் என்று யோசிக்க.... எப்படி ஏமாத்திட்டு போறா என்று முகத்தில் குறுநகை தோன்றியது....

வெளியில் வந்த நிலா அப்பொழுது தான் இழுத்த மூச்சை வெளிவிட்டாள்... சே... எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு...... என்னடி தனியா பேசிட்டு இருக்க என்றாள் கார்த்தி.... ஒன்னுமில்லை ஒரு பனை மரத்து மேலே மோதிட்டேன்... என்னது பனை மரமா இங்கயா.... லூசா நீ.... நீ தான்‌ லூசு பனை மரம் மாதிரி வளர்ந்தவன் மேலே மோதிட்டேம்னு அர்த்தம் டி.... என்னடி சொல்ற அப்போ அவன் உன்னை திட்டிடானா அதான் தனியா புலம்புறியா.... இல்லடி அவனை குழப்பிவிட்டுட்டேன் நீ வா நாம போகலாம்....

அடுத்து ஹாஸ்டல் போகலாம் டி கார்த்தி

வேண்டாம் ரெஸ்டாரண்ட் போ... ஏன்டி.. நான் சர்மிய பார்க்கனும் டி.... பிறகுனா பார்க்க முடியாது.... பரவாயில்ல ரெஸ்டாரண்ட் போ .... உனக்கு ரெம்ப‌ தான் பொசிசிவ் ரெண்டு நாள் கழிச்சு போக வேண்டிய செக் அப்க்கு இன்னைக்கே போகனும்னு சொல்லும் போதே நினைச்சேன் இதுக்கு தான்னு தெரியும்.. நாம‌வீட்டுக்கு போகலாமே‌ ரெஸ்டாரண்ட்டு எதுக்கு... சும்மா கேள்வி கேட்காத வாடி..... சரி வா உன் இஷ்டபடியே போகலாம் என்றாள் நிலா...

இருவரும் அங்குள்ள ரெஸ்டாரண்ட்டு சென்று ஒரு இடத்தை தேடி அமர்ந்தனர்.

இப்போ சொல்லு கார்த்தி என்ன பேசனும் பெரியம்மா‌ என்ன சொல்ல சொன்னாங்க .....

எப்படி நிலா கண்டுபிடிச்ச...
ம்ம் சோலியங் குடுமி சும்மா ஆடாதுடி நீ இங்க கூப்ட்டாலே வில்லங்கம் இருக்குமே .....
பேரர் ஆர்டர் எடுக்க வர தற்காலிகமாக பேச்சு தடைபட வேண்டியதை ஆர்டர் செய்து விட்டு தன்னுடைய பேச்சை தொடர்ந்தனர்... சொல்லு கர்த்தி என்ன விசயம்...
உன் மேரேஜ் பத்தி தான் நிலா.....
அதான் அன்னைக்கே சொல்லிட்டனே அப்புறம் என்ன...
என்ன சொன்ன....
உனக்கு அப்புறம் தான் எனக்குனு...

சொல்றத கேளு நிலா நான் மேரேஜ் பண்ண மாட்டேன்னு சொல்லல எனக்கு ஒரு லட்சியம் இருக்கு அது அடைந்ததும் கண்டிப்பா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் அதுக்கு முன்னாடி நீ கல்யாணம் பண்ணிக்கோ அதுதான் பெரியம்மா ஆசையும் கூட ..... அவங்க நமக்காக வாழ்றாங்க அவங்களுக்காக இது கூட செய்ய மாட்டயா நிலா ... நீ ரொம்ப பிடிவாதம் பிடிக்கிற... என் மேல உண்மையிலேயே உனக்கு பாசமும் அக்கறையும் இருந்துச்சுன்னா நீ மேரேஜ்க்கு ஒத்துக்கோ அதுதான் எனக்கு சந்தோஷம்....

இப்போ என்ன நான் மேரேஜ் பண்ணனும் அவ்வளவுதானா பண்றேன் விடு...

நீ எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணு கார்த்தி நான் பார்க்கிற மாப்பிள்ளை நீ கல்யாணம் பண்ணிக்குவேன்னு.....

ப்ராமிஸ் நிலா... ஆமா நம்ம ஸ்கூலுக்கு சீப் கெஸ்டா வாராரே பேசாம அவர மேரேஜ் பண்ணிக்கிறயா... ஆளு ரெம்ப ஹேன்ட்ஸமான்டி.... என்று பேச்சை மாற்றினாள் கார்த்திக.


வாய மூடூ கார்த்தி.... இதுக்கு பேசாம என்னை கொன்னு போட்டுரு.... இந்த உலகத்துலயே நான் அதிகமா வெறுக்குறது போலீஸதான் என்றாள் கோபமாக...

நெருப்புனு சொன்னா சுட்ருமா விளையாட்டுக்கு பேசுறதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற...

சாரி கார்த்தி இனி இப்படி பேசாத...

சரி பேசல வா வீட்டுக்கு போகலாம்....

இதை இரு செவிகள் கேட்டதை அறியவில்லை.....



மாயம் செய்வான்......
 

Sivaniguna

Sivaniguna
💞மாயம் செய்தாரோ💞 அத்தியாயம் 2 பதிந்துவிட்டேன்.......

படித்துவிட்டு உங்கள் நிறை குறைகளை கருத்துகளாக பகிருங்கள்.......
 

Sivaniguna

Sivaniguna
அத்தியாயம் 3


தென்காசியின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது ராசாத்தி இல்லம். ராசாத்தி இல்லத்தின் ஆணி வேர் விஸ்வநாதன் ராசாத்தி தம்பதியினர். விஸ்வநாதன் முதலில் ஒரு சிறிய அளவில் நகை கடை ஒன்றை தொடங்கி தன் அசுர உழைப்பால் ஒரு கடையை பல கடைகளாக மாற்றி முக்கிய பணக்காரர்களில் இவரும் ஒருவரானார். இவர்களுக்கு ராமமூர்த்தி என்ற ஒரே மகன் அனைத்து சொத்திற்கும் ஒரே வாரிசானார். படித்து தொழிலை கையில் எடுத்த பின் தன் கடையின் கிளைகளை தமிழகத்தின் முக்கிய இடங்களில் பரப்பி தமிழகத்தில் வீ.ஆர் கோல்டு கவுஸ் என்றால் அனைவரும் அறியும் வகையில் உயரத்தை அடைந்தார். தன் மகனின் வளர்ச்சியில் பெற்றோர் மகிழ்ந்தனர். தன் மகனுக்கு திருமணம் செய்ய பெண் பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் ராமமூர்த்தி தன் கடையில் வேலை செய்த யசோதாவை விரும்பினார். யசோதாவின் எளிமையான அழகில் மயங்கினார். யசோதா ஒரு அநாதை பெண். அவளுக்கு தங்கை மீனா மட்டுமே உலகம். தன் விருப்பத்தை யசோவிடம் கூற முதலில் மறுக்க பேசி பேசி யசோவை சம்மதிக்க வைத்து பெற்றோர் சம்மதத்துடன் மணந்து கொண்டார். திருமணமாகி தன் தங்கையுடன்‌புகுந்த வீடு வந்தார் யசோ. நாட்கள் அழகாக சென்றது. காலை வெகுநேரமாகியும் கீழே வராத தன் தங்கையை தேடி சென்ற யசோவை நான் எனக்கான வாழ்க்கையை தேடிக் கொண்டேன் என்னை தேட வேண்டாம் என்ற கடிதமே வரவேற்றது. இதில் மிகவும் மனமுடைந்து போனார் யசோ . அதன் பின் தன் தங்கையை கணவனிடம் கூறி அங்குள்ள மற்ற இடங்களில்தேடி ஓய்ந்து போனார். அதன் பின் விஸ்வநாதன் யசோ காதலுக்கு ஆண் பிள்ளை பிறக்க ரவி பிரசாத்‌ என்று பெயரிட்டனர்.ரவிக்கு 5 வயதாக இருக்கும் போது வயிற்றில் குழந்தையுடன் காதலனால் ஏமாற்றப்பட்டு வந்து சேர்ந்தார் மீனா. கலங்கி வந்த தங்கையை தாங்கி கொண்டார் யசா. மீனா பெண் குழந்தையை பெற்றெடுத்தார். சிறிது நேரத்தில் வலிப்பு வந்து மீனாவை காப்பாற்ற முடியாமல் போனது. குழந்தைக்கு நிலவழகி என்ற பெயர் சூட்டி தங்களுக்கு பெண் குழந்தை இல்லாத குறையை போக்கிக் கொண்டனர் யசோதா விஸ்வநாதன் தம்பதியினர்.

ராசாத்தி இல்லத்தில் வேலை செய்பவர் கமலா. கணவர் விபத்தில் இறக்க குழந்தையுடன் கஷ்டப்படும் கமலாவை தன் வீட்டிலேயே தங்கச் செய்தனர் ராசாத்தி இல்லத்தினர். கமலாவின் மகள்தான் கார்த்திகா. அன்றிலிருந்து ரவி நிலா கார்த்திகா மூவரும் அண்ணன் தங்கைகளாக பழக ஆரம்பித்தனர்.

கமலா அங்கு வேலை செய்தாலும் வீட்டில் ஒருவராகவே மதித்து மரியாதையாக நடத்தப்பட்டார். கமலா யசோவை அக்கா என்றே அழைப்பார்.

ரவிக்கு தன் தங்கைகள் என்றால் உயிர்.
அவர்கள் தான் அவனுக்கு உலகம். தங்கைகளுக்காக எதையும் செய்வான்.

ரவி சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடிச்சு சொந்தமா சாப்ட்வேர் கம்பெனி வச்சு நடத்திட்டு இருக்கான். தன் அப்பா நகை கடைகளை கவனிக்க ஏனோ அவனுக்கு ஆர்வம் இல்லாமல் போக அவனுக்கு பிடித்த சாஃப்ட்வேர் துறையைத் தேர்ந்தெடுத்து நடத்தி வருகிறான். படிப்பை முடித்து சொந்தமாக தொழில் தொடங்கி இன்று தன் திறமையால் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறான் ரவி பிரசாத்.

வீட்டிற்கு வந்த நிலா கார்த்திகாவை வரவேற்றார் கமலா.

கமலாம்மா யசோம்மா எங்க...

பாட்டி கூட கோவிலுக்கு போய்ருக்காங்க நிலா..

நீங்க ரெண்டு பேரும் பிரஸ் ஆகிட்டு வாங்க நான் டிபன் எடுத்து வைக்கிறேன்....

ரவியண்ணா வந்துட்டானாம்மா என்றால் கார்த்திகா

. தம்பி அப்பவே சீக்கிரமா வந்திருச்சு மேல அவர் ரூம்ல இருக்கு...

சரி நாங்க அண்ணாவ பார்த்துட்டு வாரோம் எனக்கு டிபண் வேண்டாம் கமலாம்மா என்றால் நிலா.

எனக்கும் வேண்டாம்டாம்மா....

ரவி தன் வேலையில் முழ்கியிருந்தான்.
அண்ணா என்று இருவரும் கூவ
ஏய் வாலுங்களா ஏன் இப்படி ஏலம் வடுறீங்க ... நான் பக்கத்துல தான் இருக்கேன்.

கார்த்திகா ரவி நீயே இன்னைக்கு சீக்கிரம் வந்து இருக்க...

ரவி அதிருக்கட்டும் நீங்க என்ன லேட்..

நிலா இவ ஹாஸ்பிடல் போனா அதான் லேட் ஆகிட்டு...

கார்த்தி என்ன பண்ணுதுடா உடம்புக்கு நீ என்கிட்ட எதுவுமே சொல்ல மாட்டேங்குற மறைக்கிறியா நாளைக்கு காலையில நீ கிளம்பு நம்ம ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் போயிட்டு வர்றோம் நீ ஏதோ எங்க கிட்ட பொய் சொல்ற மாதிரியே தோணுது


அப்படி அப்படி எல்லாம் இல்லை ரவிண்ணா எனக்கு ஒன்னும் இல்ல அது எல்லாருக்கும் வர பிரச்சனை தான் ... அத விடு இது என்ன கவர் ரவி ..

உன் இரண்டு பேருக்கும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாச்சு சோ மாப்பிள்ளை போட்டோஸ் இது. பாருங்க எந்த மாப்பிள்ளை ஓகே யோஅத பிக்ஸ் பண்ணிரலாம் ...

எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் எனக்கு சில ஆம்பிஷன் இருக்கு அதுக்கு அப்புறம் தான் கீழ் அம்மா கூப்பிட்டாங்க நான் கீழ் போறேன்... என்று எழுந்து சென்றாள் கார்த்தி. அவள் செல்வதையே கூர்ந்து பார்த்தான் ரவி .....

இங்க பாரு ரவி எங்க ரெண்டு பேருக்கும் ஒன்‌ இயர் போகட்டும்... இப்போ என்ன அவசரம் நீ மேரேஜ் பண்ணிக்கோ... இதை யசோ அம்மாட்டயும் சொல்லியாச்சு உனக்கு பொண்ணும் பார்த்தாச்சு... நீ நாளைக்கு உன் வொர்க் எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு நாளைக்கு அவங்கள மீட் பண்ண போற ஒகே...

அதெல்லாம் முடியாது நிலா...

பர்ஸ்ட் மீட் பண்ணு அப்புறம் பிடிச்சா ஓகே சொல்லு பிடிக்கலனா வேண்டாம்...

அப்போ நீங்க ரெண்டு பேரும் எங்க கூட வரனும்...

ஹை ஜாலி அப்போ நாளைக்கு வர
சொல்லி சொல்லிடலாம்....

அப்புறம் அண்ணா இப்போ கொஞ்ச நாளாக கார்த்தி சரி இல்ல... நீ கேளுடா ரவி அவகிட்ட ..

நிலா நீ அவளோட ரிப்போட்ட அவளுக்கு தெரியாம எடுத்துட்டு வா... அவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு சொல்ல மாட்டுக்கா... நீ எடுத்துட்டு வா நான் கார்ல் வைய்ட் பண்றேன்..

எங்க போறோம்.

நீ வா சொல்றேன்...
கார்த்திக்கு தெரியாம ரிப்போர்ட் எடுத்து சென்றனர் இருவரும்...

இப்ப எங்க போறோம் டா அண்ணா

ஒன்னு அண்ணா சொல்லு இல்லனா டா சொல்லு ரெண்டையும் போட்டு ஏன் படுத்துற...

இப்போ அது ரெம்ப முக்கியம்.... எங்க போறோம்னு சொல்லு... அவ கிட்ட சொல்லாம வேற வந்துருக்கோம் தேடுவா...

உன்‌ போனை எங்க சைலண்ட்ல போடு.... அவ பேசுனா நீ உலரிருவ ஆபீஸ் தான் போறோம்... அங்க ஒரு சிஸ்டம் லாக் ஆகிருச்சு.. நீ அத பாரு...
நிலா கெமிஸ்ட்ரி டீச்சர் ஆக இருந்தாலும் கம்ப்யூட்டரில் அனைத்தும் அத்துப்படி

என் ஃப்ரெண்ட் ராகுல் இருக்கான்ல அவனுக்கு இத மெயில் பண்றேன் அவன் ஒரு டாக்டர் தான் அவன் என்னன்னு பார்த்து சொல்லுவான்.....ரெம்ப பயமா இருக்கு நிலா அவளுக்கு ஏதாவது பெரிய பிரச்சினையா இருக்குமோன்னு

பயப்படாதடா அதெல்லாம் ஒன்னும் இருக்காது......

ம்ம் பாக்கலாம்...

தன் ஆபீஸ்க்குள் சென்று காரை பார்க் செய்து விட்டு ரவி கேபினை நோக்கி சென்றனர் இருவரும்.. நீ இத பாரு நான் அவனுக்கு மெயில் அனுப்புறேன்....

பத்து நிமிடத்தில் லாக்கை சரி செய்து அவனருகில் வந்தாள்...

என்னாச்சு ரவி உன் ஃப்ரெண்ட் என்ன சொன்னாங்க பிரச்சனை ஒன்னும் இல்லையே

கொஞ்சம் பிரச்சனை தான் நிலா..

என்ன பிரச்சனை...

அவளுக்கு சின்ன வயசுல
ஏதோ கற்பபையில அடிபட்டிருக்கு அதை சரியாக கவனிக்காமல் விட்டதுனால கர்ப்பப்பை கொஞ்சம் டேமேஜ் ஆயிருக்கு குழந்தை பெத்துக்க கஷ்டம் அப்படின்னு ரிப்போர்ட்ல இருக்கான் நிலா..‌

இதைக் கேட்ட நிலா அதிர்ச்சியில் மயங்கி சரிந்தாள்.....


மாயம் செய்வான்........
 

Sivaniguna

Sivaniguna
அத்தியாயம் 4

மயங்கி சரிந்த நிலாவை தாங்கிப் பிடித்தான் ரவி. அவளை அருகிலுள்ள சோபாவில் அமரவைத்து நிலா நிலா என்று கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றான். குட்டிமா எந்திரிடி... அருகில் உள்ள வாட்டர் பாட்டிலை எடுத்து முகத்தில் தண்ணீர் தெளித்தான். குட்டிமா குட்டிமா என்று கன்னத்தை வேகமாக தட்டினான். மெதுவாக கண்களைத் திறந்தால் நிலா. நாம எங்க டா இருக்கோம் இப்ப இந்த கேள்வி ரொம்ப முக்கியம் மண்டையில் நறுக்கென்று கொட்டினான் ரவி..... டேய் இப்ப ஏன்டா கொட்டின... அதற்குள் ரவி போன் சிணுங்க அதை ஆன் அதை ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டான். சொல்லுடா ராகுல்.... டேய் ரவி அந்த அளவுக்கு பெருசா பிரச்சனை இல்லடா த 70% குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கு மிச்ச 30 சதவிகிதம் ட்ரீட்மெண்ட் எடுத்த சரி பண்ணிடலாம்டா.....
இப்ப நீ எங்கடா இருக்க ராகுல்...... சென்னையில தான் டா இருக்கேன் நெக்ஸ்ட் வீக் திருநெல்வேலி வருவேன் அப்ப என்னோட கிளினிக் வேணா கூட்டிட்டு வா நான் பார்க்கிறேன் ஓகேடா.... சில டெஸ்ட் எடுத்ததான் என்னால உறுதியா சொல்ல முடியும்... சரிடா நெக்ஸ்ட் வீக் நான் கார்த்திய அங்க கூட்டிட்டு வரேன் ஓகே டா பாய் நான் அப்புறம் கூப்பிடுறேன் ஓகேடா பாய் நெக்ஸ்ட் வீக் பார்க்கலாம்...... நிலா நெக்ஸ்ட் பிளான் என்னடி.......
நீ சண்டே உனக்கு பாத்த பொண்ணு பார்க்க போறோம் ஃபர்ஸ்ட் இரண்டு பேரும் மீட் பண்ணுங்க அப்புறம் பிடிச்சிருக்கா பிடிக்கலையா என்று பார்க்கலாம் சண்டே ஏதாவது ஒரு ரெஸ்டாரண்டில் மீட் பண்ணலாம்.....
ஓகே நிலா இப்ப வீட்டுக்கு போலாமா சரி வா போலாம்....


இருவரும் வீட்டை நோக்கி சென்றனர்...
*******************************************

இரண்டு நாள் பள்ளி, குடியரசு தின விழா டெக்ரேசன் என நாட்கள் அதன் போக்கில் வேகமாக சென்றது.ஞாயிறு காலை அழகாக விடிந்தது.

நிலா எழுந்திரு மா டைமாச்சு......
யசோம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் இன்னைக்கு சண்டே தானே அப்புறம் ஏன் எழுப்பிட்டே இருக்கீங்க.... இன்னைக்கு உங்க அண்ணா கூட நீ உங்க அண்ணனுக்கு பார்த்த பொண்ணு பாக்க போனும் ஞாபகம் இருக்கா.......
ரவி அண்ணாவும் கார்த்திகாவும் கிளம்பிட்டாங்க நீதான் இன்னும் கிளம்பாமல் இருக்க.... இதான் ரவியே வந்துட்டான் இனி உன்பாடு அவன்பாடு நான் போறேன்.... யசோம்மா போகாதீங்க என்று கூறி அவர்கள் மடியில் படுத்துக்கொண்டாள்.

நிலா குட்டி பொண்ண மீட் பண்ற ப்ரோக்ராம் கேன்சல் பண்ணிடலாமா... ஏன்டா கேன்சல் பண்ணணும்... அவங்க 11 மணிக்கு வநந்துருவாங்கடா.... மணி இப்ப பத்து அதான் கேன்சல் பன்னிருரேன் நீ தூங்கு.. ஐயோ வேணாம் ஃபைவ் மினிட்ஸ் கிளம்பி வாரேன்.... நீங்க போய் வெளியில வெயிட் பண்ணுங்க என்று ஓசோவின் கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு குளியலறை நோக்கி ஓடினாள்...... நிலா இப்பவே ஆரம்பிச்சுட்டியா போய் குளிச்சிட்டு வா என்று கூறி இருவரும் வெளியே கிளம்பினார்...

அடுத்த மூவரும் கிளம்பி பொண்ணை....
சந்திக்க கிளம்பினர்....

ரெஸ்டாரண்டில் வந்து அமர்ந்து அவர்களுக்காக காத்திருந்தனர்.......

டேய் அண்ணா அதோ வருது பாரு பொண்ணு பேரு ஆதிரா கூட ஒரு பனைமரம் வருது பாரு அது அவளோட அண்ணன் நினைக்கிறேன் நீ போய் பேசு நானும் கார்த்தியும் இங்க வெயிட் பண்றோம் ஓகே ஆல் த பெஸ்ட்...... ஏய் வாலுங்களா அது உங்க பிரண்ட் தான... ஆமாடா அப்புறமா இதெல்லாம் பேசலாம் நீ பர்ஸ்ட் போய் பேசு... சரி சரி போறேன் டென்சன் ஆகாத....


ரவி சென்றதும் கார்த்தியிடம் நீ ஏண்டி எப்ப பார்த்தாலும் சோககீதம் வாசிச்சுக்கிட்டு இருக்க...
ஒன்றுமில்லை நிலா. பக்கத்துல எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் போய்ட்டு வரட்டுமா..... எங்கடி போற என்னை தனியா விட்டுட்டு.... இருடி இப்ப வந்துருவேன்... எரும நான் கேட்டுட்டே இருக்கேன் நீ போயிட்டு இருக்க.... அவர் பேசியது காற்றோடு தான் அதற்குள் வேகமாக சென்றிருந்தால் கார்த்திகா.......
கொஞ்ச நாளா ஒரு மார்க்கமா தான் இருக்கா சரி இல்லையே....

அவள் ரவி வாங்கி கொடுத்த குல்பி சாப்பிட ஆரம்பித்தாள் அப்பொழுஅவளுக்கு மிக அருகில் ஹாய் பார்பி டால் என்று கூறி அவள் அருகில் வந்து அமர்ந்தான் ஒருவன்....

டேய் பனைமரம் இப்ப எதுக்கு இங்க வந்து உட்காருற.....

நான் இங்க உட்காருதனால உனக்கு என்ன பிரச்சனை.....

முன்ன முன்ன பின்ன தெரியாத அவங்க பக்கத்துல எல்லாம் என்னால உட்கார முடியாது..

அப்படியா என்ன உனக்கு தெரியாது..... என்று கூறி அவளைத் துளைக்கும் பார்வை பார்த்தான்....

தெரியாது தெரியாது....

சரி சரி ஓகே நான் தெரியாதவனாக இருக்கட்டும் என் தங்கச்சி ஆதிராவை எதுக்கு உன் அண்ணனுக்கு பாக்கணும்னு உங்க வீட்ல சொன்ன...
நான் ஒன்னும் சொல்லல யசோம்மா போட்டோ காட்டுனாங்க நான் ஓகே சொன்னேன் அவ்வளவுதான்....

உனக்கு என்மேல தான நிலா கோவம் அதுக்கு ஏன் ஆராட்ட் (ஆதிரா) பேசாம இருந்த.... அவ என்ன பண்ணுனா....

நான் யாரு உங்க மேல கோபப்படுவதற்கு உங்களுக்கு எனக்கு என்ன சம்பந்தம் இருக்கு.....

உன் கழுத்துல போட்டு இருக்கயே ஒரு செயின் அது சொல்லும் உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னு.... யாருன்னே தெரியாதவங்க போட்டுவிட்ட செயின கூட நீங்க கழற்றாமல் கழுத்தில் போட்டு இருப்பீங்களா நிலா மேடம்... இங்க பாரு பார்பி டால் என் மேல் தான் எல்லா தரப்புமே 3 வருசமா அதான் உன்னை நான் எந்த தொந்தரவும் பண்ணல ஆனா இனிமே அப்படி கிடையாது இனி டெய்லி தொந்தரவு பண்ணுவேன்....

ஹலோ மிஸ்டர் அதிகுணன் சார் உங்கள் லிமிடெட் தாண்டாத வரை உங்களுக்கு நல்லது...

தாண்டினால் என்னடி பண்ணுவ...

ம்ம்.. உன் மேல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்......

ஓகே இருக்கிற கேஸ்ல இதையும் ஒரு கேஸா எடுத்து பார்த்துக்கலாம்...அந்த கேஸ நானே ஸ்பெஷலா டில் பண்ணிக்கிறேன் கம்ப்ளைன்ட் பண்றத அப்புறம் பார்க்கலாம் கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாமா.....

எதுக்கு உன் கூட வரணும்.....


நீயா வந்தா நல்லது இல்லனா நான் உன்னை இங்க இருந்து தூக்கிட்டு போக வேண்டிதா இருக்கும்....

ரவி அண்ணா கிட்ட கேட்டு தான் வருவேன்.....

அதற்குள் ரவி அவளை போனில் அழைக்க... சொல்லு ரவி
டேய் அண்ணா நீ ரொம்ப பண்ற நீ வீட்டுக்கு வா இருக்கு கச்சேரி.... என்று கூறி போனை வைத்தாள்..

என்ன நிலா மேடம் உங்க அண்ணா போக சொல்லிட்டாங்களா... இப்ப வர்றீங்களா....

நான் வரல....

வாடி என்று கையை பிடித்து இழுத்துச் சென்றான்....
நீ போலீஸ் தானே அப்புறம் ஏன்டா பொறுக்கி மாதிரி பிஹேவ் பண்ணுற கைய விடு நானே வர்றேன்....

இனி உன் கைய எப்பவும் விடுவதாக இல்லை... பார்பி டால் என்றான் சற்று அழுத்தமாக....

கைய விடுங்க ஏசிபி சார்....

என்ன திடீர்னு மரியாதை எல்லாம் தூள் பறக்கு... பேசிக்கொண்டே அவளை காரின் முன் சீட்டில் தள்ளி கதவை சாற்றி மறுபக்கம் டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஷார்ட் செய்தான்...

காரில் மௌனமே ஆட்சி செய்ய அவள் வெளியில் வேடிக்கை பார்த்த படி வர அப்பொழுது திடீரென்று... வண்டி நிறுத்துங்க டேய் டைனோசர் வண்டியை நிறுத்து டா.... அவளின் டைனோசர் என்ற அழைப்பில் வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான் அதிகுணன்....

என்னாச்சுடி...

அங்க பாரு.....

அங்க என்ன.....

அது கார்த்தியும் ஆ....த...வ... என்று தின்ற

அது என் தம்பி ஆதவன் தான் இப்ப என்னாச்சு அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றது உனக்கு தெரியாதா...‌

என்னது லவ் பண்றாளா எனக்கு தெரியாது...

ஆமா ரெண்டு வருஷமா விரும்பரதா ஆதவன் சொன்னான்....

ஓ... அந்த லேம்போஸ்ட் ஆதவனா....

லேம்போஸ்டா...

ஆதவனுக்கு அந்த அமுக்கினி வச்சுருக்குற பேரு...

ஓ... உனக்கு எப்படி தெரியும்......

அடிக்கடி அந்த பேர்ல் தான் மகாராணிக்கு அழைப்பு வரும்...

வண்டியை ஸ்டார்ட் செய்தான்...

வண்டி சாலையில் கலக்க அவளிடம் ஆழ்ந்த குரலில் என் மேல இருந்த கோபம் இன்னும் போகலையா பார்பி டால்.....

அவள் அவள் அமைதியாக வர உன் கிட்ட தான் நிலா கேட்கிறேன் என் மேல இருந்த கோவம் போயிட்டா போகலையா....

போகல உன்ன நெனச்சாலே எனக்கு ரொம்ப வெறுப்பா இருக்கு
காரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தி அவள் புறம் திரும்பினான்....

நான் நான் செஞ்ச தப்புக்கு மூணு வருஷம் என்ன திரிஞ்சு தண்டனை கொடுத்துட்டே..... இனி என்னை பிரிஞ்சு தண்டிக்காத டி.......

மன்னிக்கிற மாதிரி தப்பையா நீ பண்ணுன அத்து...... கண்களில் கண்ணீரோடு வலிக்குது இங்க என்று தன் இதயத்தை காட்ட.....‌
அதற்குள் அவளை இழுத்து அனைத்திருந்தான் அதிகுணன்.....

நீ அத்து டைனோசர் பனைமரம் னு கூப்பிறத கேட்டு 3வருசம் ஆய்ட்டு டி... என்று அவள் உச்சந்தலையில் இதழ் பதித்து தன் கன்னத்தை உச்சந்தலையில் சாய்த்து அவளை இறுக்கி அணைத்து கொண்டான்......

மாயம் செய்வான்💞........




 

Sivaniguna

Sivaniguna
அத்தியாயம் 5

அவன் அணைப்பில் இருந்தவள் மனதில் மூன்று வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தவை மனக்கண்ணில் படமாக ஓட தீச்சுட்டார்போன்று அவன் மார்பில் கை வைத்து தள்ளி தீப்பார்வை பார்த்தாள்.....


அவள் தள்ளியதில் கோபம் ஏற்பட அவளை முறைத்தான்.....

நீங்க ஏன் முறைக்கிறீங்க நான்தான் முறைக்கனும் ...எந்த உரிமையில நீங்க இப்ப என்னை கட்டிப்பிடிச்சிங்க.....


எந்த உரிமைனு சொல்லவான்று கையை அவள் புறம் நீட்ட அவள் பின்னுக்கு நகர்ந்தால் அவள் கழுத்தின் அருகே கையை நீட்டி கழுத்தில் உள்ள செயினை வெளியே எடுத்து போட அதில் ஒரு மாங்கல்யம் கோர்க்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியாகி அவனைப் பார்க்க அவன் கண்ணால் அதை காட்டினான் இப்ப புரியுதா என்ன உரிமைனு... எல்லாம் உரிமையும் உங்கிட்ட எடுத்துக்கலாம் முழு உரிமை எனக்கு இருக்கு மைன்ட் இட்.... என்று கர்ஜித்தான்......

அவள் அணிந்திருந்த செயின் பார்ப்பற்கு சாதாரணமாக தெரிந்தாலும் தெரிந்தாலும் அதில் மாங்கல்யம் கோர்க்கப்பட்டிருப்பது யாரும் அறியாத ஒன்று அதிகுணனை பிரிந்து வந்த அன்று மாங்கல்யத்தை கழட்டி வைக்க மனமில்லாமல் அதை அவன் அவளுக்கு அணிவித்த செயினில் கோர்த்து கொண்டாள். ஆனால் இதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டாள்‌. ஆனால் இவன் அதை காட்ட அவளுக்கு பயத்தில் வார்த்தைகள் தந்தியடிக்க‌ நான் எப்போ டிவோஸ் பேப்பர்ல சைன் பண்ணினனோ அப்பவே உங்களுக்கும் எனக்கும் இடையில் எந்த உரிமையும் கிடையாது உறவும் கிடையாது யு மைன்ட் இட் என்று பயத்தில் கூறி கோபத்தில் முடித்தாள்......

டிவோர்ஸ் பேப்பர்ல நீ மட்டும் தான் சைன் பண்ணி இருக்க.... பட் நான் இன்னும் சைன் பண்ணல என்று கூற நிலா அவனை முறைத்தாள்...

இப்போ உங்களுக்கு என்னதான் பிரச்சனை....மூணு வருஷமா இல்லாம இப்ப எதுக்கு என்ன தேடி வந்தீங்க...


நான் உன்னை தேடி வருவேன்னு நீ எதிர் பார்த்தா நிலா

நான் எதுக்கு அப்படி நினைக்கும் நீ யாரு எனக்கு நான் ஏன் உங்கள் தேடனும் என்றாள் கோபமாக....

கோபத்தில் கண்கள் சிவக்க நான் நேரா விஷயத்துக்கு வர்றேன்... ஆரா மேரேஜ் அவ ஆசைப்பட்ட மாதிரி உங்க அண்ணா கூட நடக்கனும்....... என்றான் அதிகுணன்...


அதுக்குதான அவங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வச்சுருக்கேன் அப்புறம் என்ன என்றால் நிலா எரிச்சலுடன்......


ரவி கண்டிப்பா இந்த மேரேஜ்க்கு ஒத்துக்க மாட்டாரு....

எப்படி இவ்ளோ கன்பார்மா சொல்றீங்க....



சரி அது இருக்கட்டும் ... நீ என்னை உன் ஹஸ்பெண்டா ஏத்துக்கிட்டயா..... என்று அதிகுணன் கேட்க அது எப்பவும் நடக்காது என்றாள் கோபமாக....

இல்லை பொண்டாட்டி புருஷனை கூப்பிடறது மாதிரி வாங்க போங்கனு மரியாதை எல்லாம் தூள் பறக்கே அதான் கேட்டேன்.....

டேய் பனைமரம் தேவையில்லாம பேசுறத விட்டுட்டு என்ன சொல்ல வந்தயோ அதை சொல்லு அப்புறம் வேற எதாவது பேசுன ராட்ஷசி ஆய்ருவேன் பாத்துக்கோ....


இப்பவே அப்படி தான் இருக்க என்று நமட்டு சிரிப்புடன் அதிகுணன் கூற.... நீ தான்டா ராட்ஷசன் ...

ஓகே நான் ராட்ஷசனாவே இருக்கேன் நீ தேவதையாவே இரு...

சரி சரி தேவையில்லாம பேசமா விசயத்துக்கு வாரிங்களா...


அவன் தன் நாவிற்கடியில் சிரிப்பை அடக்கினான்.....
எதுக்கு இப்ப பல்ல காட்டுற.... என்றாள் கடுப்புடன்


உங்க அண்ணா கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டான் ஏன்னா ஆராவ‌ கல்யாணம் பண்ணுனா என்னை நீ அடிக்கடி பார்க்க வேண்டியது வரும் அப்புறம் நீ பீல் பண்ணுவலா அதான்‌ என்று அவன்‌ கூற நிலா அவனை முறைத்தாள்..
முறைக்காத உண்மையாவே தான் சொல்றேன்
...

உங்கள நினைச்சு நான் எதுக்கு ஃபீல் பண்ணனும்.....

நீ ஃபீல் பண்ண மாட்டேன்னு உனக்கு தெரியும் எனக்கு தெரியும் உங்க அண்ணனுக்கு தெரியாதே.....


எனக்கு புரியல....என்றாள் நிலா.

ஆரா என் சிஸ்டர் அந்த ஒரு ரீசனை போதுமே உங்க அண்ணா ஆராவ ரிஜைட் பண்ண...

இல்ல அவன் அப்படி பண்ணமாட்டான்......


உனக்கு புரியல நிலா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் வரை ரவி மேரேஜ் பண்ண சம்மதிக்கிறது கஷ்டம் புரிஞ்சுக்கோ....

அதுக்கு நான் என்ன பண்ணனும் என்று நிலா கேட்டாள்....

அவன் தன் திட்டத்தை கூற வாட் என்று அதிர்ந்து நோக்கினாள்...


*******************

ஆதிராவிற்கு தான் ஒருதலையாக உயிராக விரும்பியவன் எதிரே இருக்க பேச வார்த்தைகளற்று மௌனமே வார்த்தையாக அமரந்திருந்தாள்.....
அங்கு ரவியின் மனநிலையோ வேறு தன் தங்கை வாழ்க்கை யாரால் பாதிக்கப்பட்டதோ அவனின் தங்கையை தனக்கு பெண்ணாக பார்த்திருப்பது அதிர்ச்சியாக இருக்க அந்த பெண்ணை தன் தங்கையே தேர்ந்தெடுத்தது அதை‌விட அதிர்ச்சியாக இருந்தது... மௌனத்தை கலைத்து முதலில் பேச ஆரம்பித்தான் ரவி சொல்லுங்க ஆதிரா ஏதோ பேசம்னு சொன்னீங்க நிலாவை எதுக்கு உங்க அண்ணா கூட போக சொல்ல சொன்னீங்க.....


நிலா வாழ்க்கையை சரி பண்ணத்தான்...என்றாள் ஆதிரா

புரியலையே ஆதிரா ......

கண்டிப்பா நிலா வேற லைஃப் அமைச்சுக்கமாட்டா ரவி, நீங்க நினைக்கிற மாதிரி நிலா பழைய விஷயங்கள் எதையும் மறக்கல ...... சந்தோஷமாவும் இல்லை......


என்ன சொல்றீங்க ஆதிரா நிலா அதிகுணன விரும்புறாளா

நிலா எங்க அண்ணாவ விரும்புராலா இல்லையான்னு தெரியாது, பட் அவள பொருத்தவரை மேரேஜ்ங்கறது லைஃப்ல ஒரு தடவ தான் அப்படினு நினைக்க கூடியவை.... அவளைப் பற்றி எனக்கு நல்லாவே தெரியும்.... என்றாள் ஆதிரா...

ரவி யோசனையாக இப்போ என்ன பண்றது என்று கேட்டான்......

அவள்‌ அதிகுணன் திட்டத்தை கூறினாள்.....

நிலா இதனால் ரெம்ப கஷ்டபடுவா இதெல்லாம் வேண்டாம் என்றான்.....

உடம்புக்கு முடியலனா மருந்து கசப்பா இருக்குனு சாப்பிடாம விட்டா சரியாகாது அதை சாப்பிட்டா தான் குணமாகும்....
அது மாதிரி தான் நிலாவுக்கும் இப்போ கஷ்டபட்டாலும் பின்னாடி நல்லா இருப்பா.. உங்களுக்கு பரியும்னு நினைக்கிறேன்....

ஓகே இப்போ நான்‌ என்ன‌ பண்ணனும்‌ என்றான் ரவி....

இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனு சொல்லுங்க போதும்... என்றாள்

நான் உங்கிட்ட மேரேஜ்ல விருப்பம் இல்லனு தான் சொல்லத்தான் வந்தேன் ஆதிரா அதையே‌ நீங்க வீட்ல சொல்ல சொல்றீங்க என்றான் ரவி சிரித்த முகமாக....

இதைக் கேட்ட ஆதிரா மனதில் சுருக்கென்று வலிக்க ஏமாற்றத்தை உணர அதை வெளியில் தெரியாமல் மறைத்தாள் ......

மாயம் செய்வான்
💞
 
Status
Not open for further replies.
Top