All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கதை திரி

Status
Not open for further replies.

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“தெரியுமே” என்று பலமாக தலையாட்டினாள் புகழினி.

“சூப்பர் மேடம், அப்புறமென்ன! இஞ்சி இடுப்பழகா பாட்டைப் பாடி அசுத்துங்க! சாருக்கு ஏத்த பாட்டு தான் அது”

“ஆஆ அந்த பாட்டா, அது … எப்புடி நான்…அது”

“என்ன மேடம்? அந்த படத்துல ரேவதி மேடமும் உங்களை மாதிரி வெகுளித்தனமா கிராமத்து பாஷை பேசிட்டு இருப்பாங்க. அவங்க தான் ஹீரோ கமல் சாரை பாத்து வெறும் காத்து தேன் வருதுன்னு பேச முடியாமா தடுமாறுவாங்க. அப்புறம் சூப்பரா பாடி அவரை அசத்திடுவாங்க. எங்க பாஸும் பார்க்க கமலஹாசன் மாதிரி ஏன் அவரை விட செம ஹாண்ட்சமா தானே இருக்காரு! பாருங்க ஜிம் பாடி, என்ன ஷேப்! நோ தொப்பை! சோ நீங்க தாராளமா இஞ்சி இடுப்பழகான்னு பாடலாம் தானே? சார் முதல்ல பாடணும்னு எதிர்ப்பார்க்கிறிங்களா? ”

ஆண்டோவின் கேள்வியில் புகழினி ‘ஙே’ என்று விழித்தாள். “எத்தா மீனாட்சி, இந்த அண்ணென் ஏன் எனக்கு விபூதி அடிக்கிறாய்ங்க. நான் தேவர் மயன் பட ரேவதியா? நெனப்புதேன் இவய்ங்களுக்கு! இவங்க வேற ஒரு மாதிரி பாத்து வைக்கிறாய்ங்களெ!” என்று மனதிற்குள் புலம்பியவள், ஆண்டோவின் கேள்வியை மறுக்கும் பொருட்டு ‘இல்லை’ என்பது போல் பலமாகத் தலையாட்டினாள்.

“என்ன மேடம் எங்க பாஸ் அழகா இல்லையா?”

“எங்க கொல சாமி சத்தியமா நான் அப்புடி நினைக்கலை அண்ணென். நான் அவுங்க மொத பாட வேணாம்னு சொன்னேன்” விட்டால் அழுதுவிடுபவளைப் போல் கூறினாள்.

அவளின் பாவனையில் ஷிவேந்திரனின் முகத்தில் ஏதோ ஒரு உணர்வு வந்து போனது. “ஆண்டோ” என்ற அவனின் கண்டிப்பான குரலில், ஆண்டோ அமைதியாகப் பின் வாங்கினான். புகழினியின் அருகில் வந்து “உனக்கு இந்தப் பாட்டு ஒகேயா? பாடுறியா?” வினவினான் அவள் கண்களை ஆழ்ந்தபடி. அவன் பார்வையை தாள இயலாதவளாக தலைகவிழ்ந்தவள்,

“ம்ம்ம்ம் சரிங்க” என்று முனகினாள்.

அனைவரும் கைதட்டி அவளை ஊக்கப்படுத்தினர். ஷிவேந்திரன் ஒரு நாற்காலியில் அவளை அமரவைத்து மற்றவர்களைச் சுற்றி உட்காரும்படி செய்தான்.

தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை புகழினியின் கண்கள் ஒருவித கூச்சத்தோட அளவிட்டது. ஷிவேந்திரனைப் பார்ப்பதை கவனமாக தவிர்க்கத் தான் முயன்றாள். ஆனால் வாடிக்கையாளரின் முன் அப்படிச் செய்தால் பின் விளைவகளை எண்ணி பயந்தவளாக தயக்கத்துடன் அவனை நோக்கினாள். அவளது நேரடிப் பார்வைக்காக காத்திருந்தவனைப் போல் அவளது பார்வையை கப்பென்று கவ்விக் கொண்டவன், இமைக்கும் பொழுதில் அவளைப் பார்த்து கண்ணடித்தவன், இதழ் குவித்து முத்தமிட்டு மனையாளுக்கு நெஞ்சு வலியை வரவழைத்தான்.

புகழினியோ அவனது செயலில் அதிர்ந்து பதற்றுத்துடன் சுற்றும் முற்றும் நோக்கியவள் மற்றவர்கள் அவர்களை கவனிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டு கொஞ்சம் அசுவாசம் அடைந்தாள். அனைவரும் அவளையே ஆர்வமாக நோக்குவதைக் கண்டவள் ‘இவய்ங்க சும்மா பார்த்தாலே எனக்கு வெறும் காத்துதேன் வரும்.. இதுல இவுக பண்ணுற அலப்பரையெல்லாம் பாத்தா எங்க எனக்கு பாட வரும்! எனக்கு நெஞ்சு வலிதேன் வரும்... ஆத்தா மீனாட்சி.. கண்ணை மூடிக்க புள்ள, அப்பதேன் ஒனக்கு பாட்டு வரும்... ஊடுசாலுல அவய்ங்களைப் பாத்துப்புடாத புள்ள.. எதுக்கு கண்ணைத் தொறந்து வச்சிக்கிட்டு? அவய்ங்க பக்கம் திரும்பாம இருந்தா.. அதுக்கும் எதாவது சொல்லிப் புடுவாய்ங்க.. கண்ணை மூடிக்க வேண்டியதுதேன்.. அதேன் சரி...’ மனதிற்குள் புலம்பி ஒருவாறு கண்ணை மூடிக் கொண்டு பாடுவது என முடிவெடுத்தவள், கண்களை இயல்பாக மூடிக் கொண்டு பாடுவதைப் போல் பாடத் துவங்கினாள்.

இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா
கள்ளெச் சிரிப்பழகா
மறக்கெ மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமென் எண்ணெம் மயக்குதே பஞ்சவண்ணெம்
மடியிலே ஊஞ்சல் போடெ மானே வா ..

இஞ்சி இடுப்பழகி மஞ்ச செவப்பழகி
கள்ளெச் சிரிப்பழகி
மறக்கெ மனம் கூடுதில்லையே


தன்னெந் தனிசிருக்கெ தத்தளிச்சு தானிருக்கெ
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே
புன்னெ வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனைய நா(ன்) அறிஞ்சேன்

ஒங்கழுத்தில் மாலையிடெ உன்னிரண்டு தோளெத் தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே


இஞ்சி இடுப்பழக மஞ்ச செவப்பழக
கள்ளச் சிரிப்பழக
மறக்க மனம் கூடுதில்லையே
இஞ்சி இடுப்பழகி மஞ்ச செவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
அடிக்கிற கத்தைக் கேளு , அசையுற நாத்தைக் கேளு
நடக்கிற ஆத்தைக் கேளு , நீ தான ஆஆஆ …”

கரகோசம் காதைப் பிளந்தது. கரவொலி கேட்டதும் கண்களை மெல்ல மலர்ந்தியவளைக் கண்ட ஷிவேந்திரன் கட்டை விரலை உயர்த்திக் காட்டி சிரித்தான். அசுவாசப்பட்டவளாக மூச்சை சீராக இழுத்துவிட்டாள் புகழினி.

பெண்கள் கட்டிப் பிடித்தும், ஆண்கள் கைகுலுக்கியும் புகழினியை வாழ்த்தி மனதாரப் பாராட்டினார்கள். தங்கள் நாட்டிற்கு ஒப்பந்தத்தின் மறுபாதியை கையெழுத்திட வரும் பொழுது ஷிவேந்திரன், கண்டிப்பாக மனைவியையும் அழைத்து வரவேண்டும் என்று அன்பாக அழைப்பு விடுத்தனர். பின்னர் எல்லோரும் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தச் சுற்றுப் பயனத்தை தங்களால் மறக்கவே முடியாத நெகிழ்வான நினைவாக மாற்றிய புகழினிக்கு தங்களது நன்றிகளை உதிர்த்த வாடிக்கையாளர்கள் சகல வித மரியாதைகளோடு விடைபெற்றுச் சென்றனர்.

ஷிவேந்திரன் ஏனையோருக்கு சில வேலைகளைச் செய்யுமாறு பணித்துவிட்டு புகழினியோடு வெளியே கிளம்பிவிட்டான். நீலாங்கரை ரோட்டிலிலுள்ள ஆள் அரவமற்ற சாலையின் மர நிழலில் வண்டி நின்றது.

“ம்ம்ம்ம் புகழினி தெய்வமங்கை”

புகழினி கலக்கமாக அவன் முகம் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். ஷிவேந்திரனின் பார்வை யோசனையுடன் அவளை அளவிட்டது.

“ நீ என்ன படிச்சிருக்க?”

“ஆறா(ம்) வகுப்புங்க”

“ஏன் அதுக்கு மேல படிக்கலை? ஃபெயில் ஆகிட்டியா?”

பதில் சொல்ல இயலாதவளாக தொண்டை அடைக்க புகழினி தலை குனிந்தாள்.

“நான் கேள்வி கேட்டா பதில் வரனும்” என்றான் அழுத்தமான குரலில்.

“தெரியலங்க” என்றாள் அவசரமாக. அவளின் பதிலில் அவளை ஊன்றிப் பார்த்துவிட்டு, வினவத் தொடங்கினான்.

“நான் ஏன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தெரியுமா?”

“தெரியாதுங்க”

“சம்யுக்தா யாருன்னு தெரியுமா?”

“ம்ம்ம்ம் தெரியுங்க”

“யாரு?”

“உங்கள கட்டிக்க போறவய்ங்க”

“அப்போ நீ யாரு?”

“உங்க வப்.. இன்னொரு பொண்டாட்டி.”

“ஓ இன்னொரு பொண்டாட்டியா! நல்ல தெளிவா தான் இருக்குறிங்க, இன்னொரு பொண்டாட்டி!” என்றான் கிண்டலான குரலில்.

“நீங்கதேன், நான் அந்த மாதிரி பொண்டாட்டினு சொன்னிக!” என்றுவிட்டாள் ஒரு வேகத்தில். சொல்லி முடித்தப் பின்பே தான் யாரின் முன் அமர்ந்திருக்கோம் என்னக் காரியம் செய்துவிட்டோம், அதன் வீரியம் என்ன என்றுப் புரிந்தது அவளுக்கு. கை கால்கள் வெடவெடத்தன. மனதிற்குள் “சுகி ஆத்தா, சுகி ஆத்தா” என்று மனதிற்குள் ஜபித்து கொண்டிருந்தது எதிரில் அமர்ந்திருந்தவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

“ஓ! என்னோட ஒரே பொண்டாட்டியா இருக்க உனக்கு ஆசையா?”

“இல்லய்ங்க. நான் அது மாதிரியெல்லா(ம்) நெனக்கலங்கெ” என்றாள் பதறியபடி.

“வேற என்ன நினைச்செ?”

“உங்களுக்கு யாரோ மந்திரிச்சுப் புட்டாய்ங்கெளோன்னு நினைச்சேன்ங்க!” பாவமானக் குரலில் பரிதாபமாக கூறினாள்.

“மந்தி மந்திரிச்சு…ஹா ஹாஹா” எனச் சத்தமாக சிரித்தான்.

ஆள் அரவமற்ற சாலையில் பூட்டிய காரினுள் சிங்கம் ஒன்று சிலுப்பிக் கொண்டு சிரிக்க மான் குட்டியானது மிரண்டு விழித்தது. அவள் பரிதாபமாக அவனைப் பார்த்து விழித்ததைப் பார்த்துவிட்டு அவளிடமே வினவினான்.

“ஏன் அப்படி சொல்லுற?”

“புலி என்னதேன் பசிச்சாலும் புல்லுககட்ட திங்காதும்பாய்ங்க! நீங்க எங்கிட்ட இப்புடி பேசறது பழகுறதெல்லாம் புலி பசும்புல்ல திங்கிற கதையாத்தேன் இருக்கு.”

“சோ நான் புலின்னு கன்பார்ம் பண்ணிட்ட. இந்த புலிக்கு இப்ப பசிக்குதே, இந்த மான்குட்டிய கடிச்சு சாப்பிடவா!” என்று விஷமமாக வினவினான்.

“மான்குட்டியா! இங்கேதுங்கெ மான்குட்டி? வழி ஊட ஒரு நாய்குட்டிய கூட காணலெயே” என்று கார் கண்ணாடியின் வழியாக சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“இப்பத்தேன் ஆடு, கோழி, மீனு, காடை, கவுதாரினு ஒன்னு விடாம அள்ளி திண்ணுப்புட்டு இப்போ மான்குட்டி திங்கெ வேணுமின்னு கேக்குறாரே! ஆத்தாடி ஆக்கி போடுறவளுக்கு இடுப்பொடிஞ்சி போயிரும்டியோவ்! ஆமா அவுங்க என்ன உன்னய போல எலிகுஞ்சு கணக்கவா இருக்காங்கெ காட்டெருமை போல இல்லெ இருகாய்ங்கெ! அதுவும் வெள்ள காட்டெருமை! இம்புட்டு பெரிய ஒடம்புக்கு இந்த தீணியெல்லாம் பத்தாதுதேன்!” என்று எப்பொழுதும் போல் மனதிற்குள் பேசுவதாக நினைத்து வாய்வழியாக முணுமுணுப்பாக பேசிவிட்டாள்.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“அப்ப பூச்சாண்டி! கொஞ்ச நேரத்துக்கு முன்னே புலி! இப்ப காட்டெருமை, அதுவும் வெள்ளை காட்டெருமை! ம்ம்ம்ம்” என்றான் ஆழ்ந்த குரலில்.

“ஆத்தாடி, மனசுக்குள்ளெ பேசுறேன்னு வெளியே சொல்லிப்புட்டேனா! இன்னைக்கு யாரு மொவத்துல முழுச்சேன்னு தெரியலியே! கோளாறாவே நடக்குதே! வெளிநாட்டுல இருந்த மவராசன் இங்க வந்தது எனக்குத் தண்ணி தெளிச்சு தலையெடுக்கவா!” என மனதிற்குள் புழுங்கினாள்.

“ஆ நா நா நா ஆ “ என்று பேச்சு வராமல் தடுமாறினாள்.

“என்ன வெறும் காத்துதேன் வருதா!”

“ “

அவளிடம் பதிலின்றி போகவே “உன்னை” என்று ஆவேசமாக நெருங்கிவந்தான். அவனின் ஆவேசத்தில் மிரண்ட புகழினி கார் கண்ணாடி ஜன்னலின் மேல் முழுமையாகச் சாய்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவளின் அருகில் வந்து முகத்தை நிமிர்த்தி அழுந்தப் பற்றி அவளின் உதடுகளுக்கு நக இடுக்களவு இடைவெளியில் அவனின் இதழ்கள் இருந்தன. யாரேனும் ஒருவர் நகர்ந்தால் கூட இருவரின் இதழ்களும் ஸ்பரிசித்துவிடும். சூடான மூச்சுக் காற்று முகத்தில் மோதிக் கொண்டிருப்பதை உணர்ந்து இன்னும் கண்களை இறுக மூடிக் கொண்டாள் புகழினி. ஷிவேந்திரன் சற்று மேலேறி தன்னுடைய மூக்கால் அவளின் மூக்கை லேசாக உரசினான். அந்த உரசலில் புகழினியின் தளிர்மேனி நடுங்கி ஒடுங்கியது. பயத்தில் தான்!

அதனைப் புரிந்து கொண்ட ஷிவேந்திரன் அவளை விட்டு விலகி “தேறமாட்ட!” என்று சொல்லிவிட்டு தன்னுடைய டையை தளர்த்தி, முழுக்கைச் சட்டையை மடித்துவிட்டு, சட்டையின் பொத்தான்கள் மூன்றைக் கழட்டினான். காலரை மேலே தூக்கிச் சட்டையை தளர்த்தினான். பின்பு தான் அமர்ந்திருந்த இருக்கையைப் பின்புறம் சாய்த்துவிட்டு கைகளை தலைக்குப் பின்னால் வைத்துக் கொண்டு கண்மூடி சாய்ந்துவிட்டான். புகழினி ஒன்றும் புரியாமல் இன்னும் ஜன்னலோடு ஒண்டிக் கொண்டிருந்தாள். மக்கு பெண்ணே!

எதற்காக இங்கு அவளை அழைத்து வந்தான், என்ன காரணத்திற்காக அவளிடம் நெருக்கம் காட்டுகிறான் ஒன்றும் புரியாமல் விழித்தாள் புகழினி. அவனை எழுப்பி என்னவென்று கேட்கக் கூடிய தைரியம் அவளுக்கில்லை. கிட்டதட்ட பத்து நிமிடங்கள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு சற்று தெளிந்தவளாகச் சற்று நகர்ந்து உட்கார்ந்து கொண்டு கண்ணாடி வழியே வெளியே வேடிக்கை பார்க்கலானாள்.

பசுமை நிறைந்த இடம். அங்கு வெள்ளைக் கற்களால் இழைக்கப்பட்ட ஒரு சமண கோயில் இருந்தது. அதனைச் சுற்றிலும் வித விதமான பூச்செடிகள் இருந்தது. அதனை ஆர்வமாகப் பார்த்து கொண்டிருந்தாள். கீழே இறங்கி அந்தக் கோயிலுக்குள் சென்று நந்தவனத்தில் கொஞ்சம் நேரம் சுற்றிவிட்டு வர அவளுக்கு ஆசைதான். ஆனால் பக்கத்தில் சயனித்து இருப்பவன் விழித்தால் அல்லவா அவளால் வெளியேற முடியும்!

“தெய்வா” என்று படுத்திருந்தபடியே விளித்தான் ஷிவேந்திரன்.

“ஆன்ன்ன்ன்” என்று திரும்பினாள் புகழினி.

“இதைப் பாரு” என்று தன்னுடைய ஐபோனை அவளிடம் நீட்டினான்.

வாங்கி பார்த்தவள் கண்கள் அகல வாய்பிளந்தவள், ஒரு கையால் அவனுடைய அலைபேசியை வைத்து கொண்டு மறுகையால் தன் வாயை பொத்தி கொண்டு அதிர்ந்த முகத்துடன் அவனை நோக்கினாள்!

அழகியின் அதிர்ச்சிக்குக் காரணம் என்னவோ?

கருப்பு அழகி வருவாள்…

 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்புகளே,

இன்னைக்கு வெள்ளன்மையே வந்துட்டேன் :)

'என் கருப்பழகி'-17வது அத்தியாயம் பதிந்துவிட்டேன்.

உங்க கருத்துகளுக்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக உங்க கருத்துகளுக்கு பதிலளிக்கிறேன்.

#SAVEDELTA
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொக்கியின் “என் கறுப்பழகி”

அத்தியாயம் – 17

சமையலறைக்குள் நுழைந்த சுகுணா, அன்னம்மாவுடன் சேர்ந்து இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்த புகழினியை வேகமாக நெருங்கி,



“க்யூட்டி என்ன பண்ணிட்டு இருக்க?” என்று வினவினார்.



“ஐ! ஆத்தா ரவை சமையலத்தேன் பாக்குறேன். இந்தா இன்னும் செத்த நேரத்துல முடிச்சுபுடுவேன். ஐயனுக்கு பசி பொறுக்கலையா?”



“அதெல்லாம் ஒன்னுமில்லை! சரி அப்படியே எல்லாத்தையும் விட்டுட்டு வா, நாம மேல போலாம்.”



“ஏன் ஆத்தா?”



“உனக்கு தெரியாதா? சம்யுக்தா குடும்பத்தோட வந்திருக்கா. உன் புருஷன் உன்னை….” என்றவரின் வாக்கியம் ஓங்கி ஒலித்த ஓர் குரலினால் தடைப்பட்டது.



“ஓ கறுப்பி நீ இங்க தான் இருக்கியா?” என்ற எள்ளல் குரலில் எரிச்சலுடன் திரும்பினார் சுகுணா. சம்யுக்தா அவளது அன்னை மற்றும் அண்ணி சகிதாம் சமயலறையின் வாயிலில் நின்று கொண்டிருந்தாள். புகழினி சம்யுக்தாவை யோசனையுடன் நோக்கினாள் என்றால் சுகுணா அவர்களை புருவம் சுருக்கி கடினமாக பார்த்தார். சுகுணாவின் பார்வையை சட்டை செய்யாது அலட்டலான குரலில்,



“மாம் உங்க கிட்ட சொன்னேன்ல, இந்த வீட்ல ஒரு நொண்டி பொண்ணு சமையல்காரியா இருக்கான்னு, அது இவ தான்! இன்னைக்கு ஷிவ் ஆஃபிஸ்லயும் சமையல் வேலை பார்த்தா. பட் என்னால தான் அவ செஞ்ச டிஷ்ஷஸ டேஸ்ட் பண்ண முடியல, ஒரு அர்ஜண்ட் ஒர்க்!” என்றாள் தன் தாயிடம் விசமமாக.



“ச்ச்சுசு அட பாவமே! பட் ஷிவ் ரொம்ப ஈரமான மனசுக்காரர், அதான் இந்த மாதிரி அனாதையா இருக்கிற நொண்டி பொண்ணுக்கு அவரோட சொந்த வீட்ல சமையல்காரி வேலை போட்டு கொடுத்திருக்கார்.” போலிப் பரிதாபத்துடன் கூறினாள் சம்யுக்தாவின் அன்னை.



சம்யுக்தாவும் அவளுடைய அண்ணியும் அதனை அமோதித்து ஒரு வித கோணல் சிரிப்புடன் தலையாட்டினர். புகழனியும் அவர்களை யோசனையுடன் பார்த்தாளே ஒழிய வேறு எந்த பிரதிபலிப்பையும் முகத்தில் காட்டவில்லை. சுகுணா புருவம் சுருக்கி அவர்களை கடுமையாக நோக்கினார். அதனை கண்டு அவர்களின் சிரிப்பு நின்றது.



“ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ

என்னை தொட்டு அள்ளி கொண்ட

மன்னன் பேரும் என்னடி?

எனக்கு சொல்லடி, விஷயம் என்னடி?

நெஞ்சை தொட்டு பின்னி கொண்ட

கண்ணன் ஊரும் என்னடி

எனக்கு சொல்லடி, விஷயம் என்னடி?

அன்பே ஓடி வா அன்பால் கூடி வா

ஓ பைங்கிளி!!!!

நிதமும் என்னை தொட்டு அள்ளி கொண்ட

மன்னன் பேரும் என்னடி?

எனக்கு சொல்லடி, விஷயம் என்னடி?”


என்ற பாடலை புகழினியின் புதிய ஆண்டிராய்ட் அலைபேசி ஒலித்துக் கொண்டே இருந்தது. எங்கே வைத்தாள் என்று தெரியாமல் சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்றினாள் புகழினி. சுகுணா அலைபேசியை கண்டு கொண்டு அதில் மின்னிய படத்தையும், பெயரையும் பார்த்துவிட்டு புகழினியிடம் கேலியான குரலில்,



“உன் புருசென்தேன் புகழு ஆத்தா! உன்னதேன் அழைக்கிறாய்ன்” என்று அவளை போலவே பேசி காட்டிவிட்டு, அவளுக்கு காட்டும் சாக்கில் அலைபேசியை அவர்களுக்கும் சேர்த்து காட்டினார் சாமார்த்தியமாக. ஏனென்றால் யாவரும் புகழினியின் இடது பக்கவாட்டின் பின்பக்கம் நின்று கொண்டிருந்தனர். அலைபேசியைக் கண்டு அவர்கள் முகம் மாறியது. அதனை அவர் சட்டை செய்யவில்லை.



புகழினி அலைபேசியை மெதுவாக வாங்கிவிட்டு சுகுணாவை பார்த்தாள். அவர் பேசு என்பது போல் சாடை காட்டி புன்னகைத்தார். அலைபேசியை உயர்பித்து காதிற்கு கொடுத்தாள்.



“தெய்வா கிட்சென்ல தான இருக்க? உன்னோட சுகி ஆத்தாவோடையும், ஐயன்னோடயும் ஹாலில் போய் உட்காரு. நான் வீட்டுக்கு வரவரைக்கும் அங்கிருந்து நகர கூடாது மூனு பேரும்! காட் இட் (got it)!” என்ற ஷிவ்வின் கம்பீரமான குரல் கேட்டது.



“ஹான்” என்று வியந்தாள் புகழினி. இவருக்கு எப்படி நாம் சமையலறையில் இருப்பது தெரியும் என்று யோசித்தாள். அவளின் யோசனையை அவனது குரல் நிறுத்தியது.



“சொல்றதை செய்” என்றான் அழுத்தமான குரலில் ஆணியிட்டான்.



“ம்ம்ம் சரிங்கெ” அந்த அழுத்தமானக் குரலுக்கு பதறி பதிலளித்தாள்.



“குட் கர்ள்!” என்ற மென்மையான வாக்கியத்துடன் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.



புகழினி அலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தாள். சுகுணா அவளின் தோளை தொட்டு உலுக்கினார். “க்யூட்டி, என்ன ஆச்சு? உன் புருசன் என்ன சொல்லுறான்?”



“ஆத்தா அவரு என்னைய உங்களோடு ஹாலுலெ உக்காரச் சொல்லுறாக. அவரு வர வரை அங்கேத்தேன் உக்காந்திருக்கனும்மாம்!”



“குட் கரெக்ட்டா தான் சொல்லியிருக்கான். நானே அதுக்காக தான் உன்ன தேடி இங்க வந்தேன்! சரி சரி வா போகலாம், உன் ஐயனுக்கு பதில் சொல்ல முடியாது நான். புகழ அழைச்சிட்டு வர ஏன் இவ்வளவு லேட்டுனு, மனுசன் திட்டி தீர்த்திடுவார் என்னை!” என்றார் சுகுணா சோகம் போல.



“ஆன் ஆஆஆஆன்ன்ன்ன்ன் சும்மா ஐயன கோளாறு சொல்லாதிய சுகி ஆத்தா, ஐயனாவது உங்கள வையறதாவது! ஐயன் எப்பவும் சுகிம்மா சுகிம்மானு உங்களெ கொஞ்சிக்கிட்டுதேன் கிடப்பாங்கெ! எனக்குத் தெரியாதா!” என்றாள் குறம்புடன்.



“ஹே போக்குரி, விட்டா நீ ஒன்னு விடாம போட்டு இங்க உடைப்ப! உன்ன மொதல்ல இங்க இருந்து தள்ளிட்டு போகனும், வா போகலாம்.” என்று சிரித்துகொண்டே அவள் தோளை அணைத்து கொண்டு சமையலறையில் இருந்து அங்கு நின்றிருந்தவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் புகழினியுடன் வெளியேறினார். புகழினி அவர்களை தயக்கத்துடன் பார்த்துக் கொண்டே வெளியேறினாள்.



ராஜபாரம்பரியம் மிக்க அந்த பெண்களின் முகம் விகாரமாக மாறியது. அவர்கள் துவேசத்துடன் சுகுணாவையும், புகழினியையும் முறைத்து கொண்டிருந்தனர். ஏதோ நடக்கப் போகிறது என்று அவர்களின் உள்ளுணர்வு சொல்லியது. எதனால் அப்படி உணர்கிறார்கள் என்று சம்யுக்தாவை தவிர மற்ற இருவருக்கும் தெரியவில்லை.



சம்யுக்தாவிற்கு ஷிவேந்திரனை நினைத்தால் குலை நடுங்கியது. அவனது அலைபேசியில் அவள் பார்த்தது, அவளுக்கு ஷிவ்வுடனான திருமணத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைப்பதாகும். இன்று மதியம் ஷிவேந்திரனுடனான அவளது விவாதம் அவளுக்கு நினைவிற்கு வந்தது.



“நோ இதெல்லாம் பொய்! ஐ டோண்ட் பிலீவ் திஸ்! (I don’t believe this!)”



“ரியலி! (really)”



“ஷிவ் இது யாரோ ஃபேக்கா ரெடி (fake a ready) பண்ணியிருக்காங்க! நம்ம இரண்டு பேரையும் பிரிக்கப் பாக்குறாங்க. யூ ஹேவ் டு பிலிவ் மீ மேன்! (you have to believe me man!)”



“இஸிட்!” என்று கேலியாக வினவினான்.



“ஷிவ்! இது உண்மையாகவே இருந்தாலும் அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?”



“வைய் வோண்ட் இட்? (why won’t it?)”



“ஷிவ் வீ ஆர் லவ்வர்ஸ்! (we are lovers!) இது மாதிரி இஷூய்ஸ்காக நாம ஃபைட் பண்ண கூடாது!”



“லவ்வர்ஸ்! இது எப்போதிலிருந்தும்மா!” என்றான் ஆச்சிரமானக் குரலில்.



“ஷிவ் டோண்ட் பிளே வித் மீ! நாம இரண்டு பேரும் எதுக்காக கல்யாணம் பண்ணிக்க டிசைட் பண்ணினோம், மறந்துட்டிங்களா? (don’t you remember?)”



“நீ தான் மறந்துட்ட சம்யுக்தா! என்ன காரணத்துகாக என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சியோ, எந்த ரீசனை சொல்லி என்கிட்ட மேரஜ் பிரோப்போசல நீயும் உன் பேமிலியும் முன் வச்சிங்களோ, தட் ரீசன் பிகேம் இன்வேலிட் நௌ! ரீசனே இன்வேலிட் ஆகிடுச்சு தென் மேரஜ் பிரோப்போசல் எப்படி வேலிட் ஆகும்?”



“ஷிவ்! உங்கள கல்யாணம் பண்ணிக்க அது ஒரு ரீசன் தான், பட் பட்ட்ட்ட், நான் உங்கள ட்ரூவா லவ் பண்றேன். அதான் உங்கள. கல்யாணம் பண்ணிக்க துடிக்கிறேன்! ப்ளீஸ் டிரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ, மேரஜ் பிரோப்போசல இஸ் நாட் வாய்ட் யெட் ( Please try to understand me, marriage proposal isn’t void yet!)” என்றாள் கிட்டதட்ட கெஞ்சும் குரலில்



“ஹா ஹா ஹா கமான் சம்யுக்தா யுவர் ஷோ இஸ் ஓவர், யு ஜஸ்ட் லாஸ்ட் டு மீ! சோ பெட்டர் பேக் ஆஃப் ஆர் எல்ஸ் ஐ வில் ஹேவ் நோ சாய்ஸ் பட் டு ஹண்ட் யூ டவுன்! (உன் விளையாட்டு முடிந்துவிட்டது. என்னிடம் நீ தோற்றுவிட்டாய். இப்பொழுது நீ பின்வாங்கவில்லை என்றால் உன்னை வேட்டையாடுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.)”



“நான் கறுப்பி இல்லை ஷிவ், ஈசியா தூக்கிறதுக்கு!” என்றாள் அகங்காரமான குரலில்.



“ஓ ரியலி! உன்னால முடிஞ்சா தெய்வாவ தூக்கி பாறேன்! ” என்று சவால்விட்டான்.



“ஷிவ் வேண்டாம், டோண்ட் டீஸ் மீ. ஆர் எல்ஸ் யு வில் ஃபேஸ் தி ஹீட் (என்னைச் சீண்ட வேண்டாம் இல்லையென்றால் அதற்கான பின்விளைவுகள் பயங்கரமாயிருக்கும்)”



ஷிவேந்திரன் மெல்ல அடியெடுத்து வைத்து அவளை நெருங்கினான். அவளுக்கும் அவனுக்கும் இரண்டடி இடைவெளி தான் இருந்தது. சிகரட்டை புகைத்து பக்கவாட்டில் ஊதிவிட்டு,



“ம்ம்ம்ம் கொடைக்கனால்ல மட்டும் தான் கார் ஆக்ஸிடண்ட் ஆகுமா சம்யுக்தா தேவி?” என்று மிகவும் அமைதியான குரலில் வினவினான்.



அவனின் கர்ஜனையான குரலை காட்டிலும் இந்த குரல் சம்யுக்தாவின் உடலை பயத்திலும், கோபத்திலும் நடுங்க வைத்தது. அவள் சோர்ந்து போயிருந்தாள். ஆனால் இது சோர்ந்து போகும் நேரமில்லை. இந்த பட்டத்துராசாவை கரம் பிடித்து அவள் பட்டத்தரசியாக வலம் வரவேண்டும். இன்றே இதற்கு ஒரு முடிவு கட்டி ஆகவேண்டும் என்று திண்ணமாக எண்ணினாள். தன் சக்தியெல்லாம் திரட்டி தன்னுடைய ஐந்தரையடி உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவள்,



“ஷிவ், இந்த ராஜகுமாரி சம்யுக்தா தேவி தான் இந்த ராஜாதிராஜன் ஷிவேதிரனோட ஆஸ்தான மனைவி! வேற எந்த…….. இவளும் உனக்கு பொண்டாட்டியாக முடியாது. அது கனவுல கூட நடக்காது. கடவுளே நினைச்சாலும் நம்ம கல்யாணத்தை நிறுத்த முடியாது! ” என்று அழுத்தம் திருத்தமான குரலில் கூறினாள்.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“இந்த ஷிவேந்திரனால கூடவா?” தன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி வினவினான்.



அவனிடம் மேலும் வாதிட தெம்பின்றி அவனை வெறித்து பார்த்துவிட்டு படக்கென்று திரும்பி தன் கார் நிற்குமிடம் நோக்கி சென்றுவிட்டாள். ஷிவேந்திரன் தன்னுடைய அலைபேசியை எடுத்து எதிரில் இருப்பவருக்கு சில பல கட்டளைகளை பிறப்பித்தான். தொடர்ந்து சில நிமடங்கள் பேசிவிட்டு அதனை அணைத்த அவனின் கண்கள் வேட்டையாடப் போகும் வெறியுடன் ஜொலித்ததை யாரும் கவனிக்க வாய்ப்பில்லை!



தாயின் உலுக்கலில் நினைவுலகத்திற்கு திரும்பி வந்த சம்யுக்தா தாயை யோசனையாக பார்த்துவிட்டு ஹாலிற்கு சென்றாள். அங்கு தர்மேந்திரன் வீட்டு மக்கள் அனைவரும் இருந்தனர். ஷிவேந்திரனை தவிர! வசந்த் சம்யுக்தாவை யோசனையாக பார்த்து கொண்டிருந்தான். இவ்வளவு பேர் இருக்கையில் அவளை எப்படி தனியாக சந்திப்பது என்று குழம்பினான்.



விமன்யா புகழினியை முறைத்து கொண்டிருந்தாள். வசுந்தரா அண்ணன் ராஜேந்திரன், அவரது மனைவி சுகுணா மருமகள் புகழினி என்று அனைவரையும் முறைத்து கொண்டிருந்தாள். மேகவதி கணவன் தர்மேந்திரனை யோசனையாக பார்த்து கொண்டிருந்தார். ரகுவரனோ மகனை கண்களால் அளவெடுத்தார். சம்யுக்தாவின் மேல் அவன் பார்வை படிவதை சம்யுக்தாவின் வீட்டினர் ரசிக்கவில்லை என்பதை அவர்களின் முகம் வெளிப்படையாக காட்டி கொடுத்தது. சம்யுக்தா வசந்தின் பக்கம் கூட திரும்பி பார்க்கவில்லை.



புகழினி ராஜேந்திரனை வலப்பக்கமும் சுகுணாவை இடப்பக்கமும் பாதுகாவலாக கொண்டு அந்த மூன்று பேர் அமர கூடிய இருக்கையில் நடுவில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு அவஸ்த்தையாக இருந்தது. ஏனென்றால் எல்லோரும் அவளை அல்லவா முறைத்து முறைத்து பார்த்து கொண்டிருந்தனர். என்ன தான் ராஜேந்திரனும் சுகுணாவும் அவளுக்கு பாதுகாவலாக இருந்த போதிலும், அவர்களால் அவர்கள் எல்லோரையும் சமாளிக்க முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை. உள்ளுக்குள் உதறல் எடுத்தது. ஆனால் வெளியில் சாதாரணமாக இருக்க முயற்சி செய்தாள். அதில் ஓரளவு வெற்றியும் கண்டாள்.



யார் இவர்களை சமாளிப்பது? எவரால் முடியும்? விட்டால் இங்கேயே என்னை கடித்து குதறி கொன்றுவிட காத்திருக்கும் இவர்களை யாரால் சமாளிக்க முடியும்? முடியும்! அவனால் முடியும்! அவனால் மட்டுமே முடியும்! அவன் நினைத்தால் மலையையே புரட்டி தலை குப்புற கவிழ்த்து விடுவான். யாரவன்! ஆகாச சூரனாயிற்றே! அவளின் அசுரன்! ஷிவேந்திரன்!



ஆனால் எப்பொழுது எப்படி மாறுவான் என்று சொல்ல முடியாதே! எப்பொழுதும் போல் அவனை பற்றி நினைக்கையில் அவளுக்கு மண்டை காய்ந்து போயிற்று. அவனை நம்ப அவளால் முடியாது. ஆனால் இந்த பிரச்சனைகளை சமாளிக்க அவனால் மட்டுமே முடியும் என்பதில் அவளுக்கு உறுதி! அவள் சம்யுக்தாவின் வீட்டினரை நிமிர்ந்து பார்த்தாள். அவர்கள் முறைத்த முறைப்பில் கப்பென்று பார்வையை திருப்பி கொண்டவள், மெதுவாக சுகுணாவின் புரம் சரிந்து அவரின் காதோரமாக கிசுகிசுத்தாள்.



“ஆத்தா, இவங்ய்கெல்லாம் ஏன் இப்புடி வெட்டுவேன் குத்துவேங்கிற கணக்கா என்னைய பாத்து மொறைக்கிறாய்ங்க?”



“ஏனா அவங்க பொண்ணுக்கு பார்த்த மாப்பிளை, உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான்ல அதான்.” இலகுவாக பதிலளித்தார் சுகுணா.



“அதுக்கு உங்க மயனதேன் மொறைக்கனும், எதுக்கு வேலை மெனக்கட்டு என்னைய மொறைக்கிறாய்ங்க?” சிணுங்கலாக வினவினாள்.



“அவனை முறைக்க முடியாதில்ல, முறைச்சா தோளை உரிச்சு உப்பு கண்டம் போட்டுறுவான்ல அதான்!”



“ஆத்தி! கொலைகார பயலுக்குல என்னைய கட்டிவச்சிருக்காய்ங்க”



“என்னதூ!”



“அ ஆ அதில்ல ஆத்தா, அம்புட்டு ஆளும இருக்கிறவருக்கா என்னைய கட்டிவச்சாய்ங்கெனு சொல்ல வந்தேன்” என்று கூறியவளின் குரல் அவசரமாக தொடங்கி பின்பு சுருதி குறைந்து கடைசியில் தேய்ந்து ஒலித்தது.



“ம்ம்ம் நீ பொழைச்சுக்குவ க்யூட்டி! நல்லா சமாளிக்கிற!”



“ஏதோ வாய் தவறி வந்திடுச்சு ஆத்தா மன்னிச்சுபுடுங்கெ”



“ஏய்! ஏன் கண் கலங்குது! மொதல்ல கண்ணை துடை உன் புருசன பத்தி எங்களுக்கு தெரியாதா! சரி விடு அந்த பேச்சு இப்ப எதுக்கு, வரேன்னு சொல்லிட்டு இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருக்கான் இவன்?”



புகழினி உதடுகளை பிதுக்கி காண்பித்துவிட்டு பரிதாபமாக அவரை நோக்கினாள். அந்த குழந்தை தனத்தில் அவளின் கன்னம் கிள்ளி ‘க்யூட்’ எனச் செல்லம் கொஞ்சினார் சுகுணா.



இதனை யாவையும் கவனித்து கொண்டிருந்த சம்யுக்தா குடும்பத்தினரும், விமன்யா குடும்பத்தினரும் வயிறு எரிந்தனர். சுகுணாவிற்கும் புகழினிக்கும் இடையில் இருக்கும் அன்யோன்யத்தை அவர்களால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அத்தோடல்லாமல், அந்த நொண்டி பெண்ணுக்கு பாதுகாவலாக அமர்ந்திருக்கும் கணவன் மனைவி இருவரையும் என்ன செய்தால் தகும் என்று யோசிக்கலாயினர்.



மணி இப்பொழுது இரவு 8.15 என்று காட்டியது. சம்யுக்தாவின் தந்தை பொறுமையை இழக்க தொடங்கினார். ஆனால் தாங்கள் சந்திக்கவிருப்பது சாதாரணமானவன் இல்லையே! தமிழகத்தின் முதன்மை தொழிலதிபன்! அதுவும் எதற்காக இந்த சந்திப்பு! மருமகனாக அவனை ஆக்கி கொள்வதற்காக. மகளுடன் அவனுக்கான திருமணத்தை உறுதி செய்வதற்காக. அவர் தன்னை கட்டுபடுத்தி கொண்டிருந்தார். ஷிவேந்திரன் இன்னும் வரவில்லையே என்று உடையவளை தவிர மற்றவர் யாவரும் ஒவ்வொரு மனநிலையில் எதிர்பார்த்திருந்தனர்.



கார் நிற்கும் சப்தம் கேட்டது. வந்துவிட்டான்! ஷிவேந்திரன் வந்துவிட்டான். அங்கு குண்டூசி கீழே விழுந்தால் கூட சப்தம் கேட்கும் அளவு அமைதி நிலவியது. மாடிப்படிகளில் அழுத்தமான காலடி ஓசைகள் தங்களை நெருங்கி வருவது கேட்டது.



ஷிவேந்திரன் ஹாலில் பிரவேசித்தான். சந்தன நிற முழுக்கை சட்டை முழங்கை வரை மடக்கி விடப்பட்டிருக்க. முதல் பொத்தான் சட்டையில் எடுத்துவிட பட்டிருக்க, கறுப்பு நிற கால் சராயில் அட்டகாசமாய், ஆண்மையின் கம்பீரத்தோடு இருந்தான். அந்த நிலையிலும் விமன்யாவும், சம்யுக்தாவும் அவனை பார்த்து ஜொள்ளினார்கள்! ஆனால் உடையவளோ “இவங்ய்க நேரத்துக்கு நேரம் உடுப்பு மாத்துவாய்ங்களோ!” என்று கர்மசிரித்தையாக மனதிற்குள் எண்ணி வியந்தாள் புகழினி.



அனைவரும் மரியாதையாக எழுந்து நின்றனர். தர்மேந்திரனும், மேகவதி, ராஜேந்திரன் மற்றும் சுகுணா இவர்கள் நால்வர் மட்டும் எழாமல் அமர்ந்திருந்தனர். எல்லோரையும் தனது லேஸர் பார்வையில் அளந்தவன் தன்னுடைய செல்ல(!) மனையாட்டியை சிறு புன்னகையுடன் நோக்கினான். அவள் பேந்த பேந்த விழித்து கொண்டிருந்தாள். அதில் அவனது உதட்டோரம் சிரிப்பில் துடித்தது. உதட்டை கடித்து அதனை அடக்கியவன், அவளை நெருங்கி முன்னே இழுத்து தோளோடு அணைத்து கொண்டு தாத்தாவின் பக்கத்தில் இருந்த இருவர் அமரக்கூடிய இருக்கையில் மனைவியை அணைத்து கொண்டே கால் மேல் கால் போட்டுக் கொண்டு கம்பீரமாக அமர்ந்தான்!



இதனை பார்த்து சுபிக்‌ஷத்தில் இருக்கும் அனைவரும் ஆவென்று வாய்பிளந்தனர். பலர் மனதினுள் வெந்து கொண்டிருந்தனர். ராஜேந்திரனுக்கும், சுகுணாவிற்கும் ஏற்கனவே விசயம் தெரியும் என்பதால். அவர்கள் எதையும் முகத்தில் பிரதிபலிக்கவில்லை.



புகழினிக்கு அவனது நெருக்கத்தில் எப்பொழுதும் போல குழப்பம் தான். ஏன் இப்படி திடீர் நெருக்கம் காண்பிக்கிறான் என்று. எல்லோரையும் தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் அகல விரிந்தது. எல்லோரது பார்வையின் மாற்றத்தால் வந்த ஆச்சரியம்! புருவங்கள் மேலேறக் கணவனை நோக்கினாள். அவனும் பதிலுக்கு புருவம் உயர்த்தினான். அவள் ‘ஒன்றுமில்லை’ என்பது போல் வேக வேகமாக தலையசைத்தாள். அவளின் காதோரமாக குனிந்து கிசுகிசுத்தான்



“என்ன தெய்வா?”



“ஆன் ஒன்னுமில்லைங்க”



“நான் கேட்க்கும் போது பதில் சொல்றது நல்லது.”



“அது.. அது….என்னைய இம்புட்டு நேரமா மொறைச்சு மொறைச்சு பாத்தாய்ங்களா… ஆனா உங்க பக்கத்துல உக்காந்ததும அமைதியா பாக்குறாய்ங்களா.. அதேன்...” மேலே சொல்லமுடியாமல் இழுத்தாள்.



“ஓ! சோ என் பக்கத்துல உக்காந்ததால உன்னை முறைக்கல, ரைட்?”



“அதேன் அதேன்”



“ஏன் முறைக்கல?”



“ஏன்ன்ன்ன்?”



“நீ தான் யோசிச்சு சொல்லேன்”



“ம்ம்ம் ம்ம்ம் நான் சொல்லுவேன் நீங்க என்னய வையப்புடாது”



“இதெல்லாம் நல்ல தெளிவு தான்! சொல்லு தாயே உன்ன ஒன்னும் பண்ணமாட்டேன்.”



“அது நீங்க அவங்ய்கள அடிச்சு, தோலை உரிச்சு, உப்பு கண்டம் போட்டுபுடுவிய்ங்கல்ல அந்த பயந்தேன்.” அவன் காதோரமாக எம்பி யாருக்கும் கேட்டுவிடக் கூடாதென்று கிசுகிசுத்தாள்.



“கரெக்ட்! பட் உன்னை முறைச்சா, நான் ஏன் அவங்களை உப்பு கண்டம் போடனும்?” அவளைவிட கிசுசிசுப்பானக் குரலில் வினவினான்.



இந்த கேள்வியில் அவள் மறுபடியும் பேந்த பேந்த விழித்தாள். இதற்கு என்ன பதில் சொல்வதென்று அவளுக்கு உண்மையாக தெரியவில்லை. ஒருவேளை கேள்வியே புரியவில்லையோ!



“ரொம்ப முழிக்காத, நானே பதில் சொல்றேன். ஏன்னா, நீ என் பொண்டாட்டி, அதாவது இன்னொரு பொண்டாட்டி! சரியா! இப்போ புரிஞ்சிதா?”



அவள் புரிந்தது என்பது போல் தலையை வேகவேகமாக ஆட்டினாள். அந்த அழகில் கவரப்பட்டு அவளின் நெற்றியில் லேசாக முட்டினான் ஷிவேந்திரன். அந்த செய்கையில் கலவரத்துடன் அனைவரையும் நோக்கியவள் கணவனின் ம்ம்ம் என்ற அழுத்ததில் அவனை பார்த்துவிட்டு லேசாக தலை குனிந்து கொண்டாள்.



எல்லோரும் இந்த கூத்தை முகத்தில் கோபத்தின் சாயலை காட்டாமல் பார்த்து கொண்டிருந்தனர். ஷிவேந்திரனின் முன் கோபத்தை காட்டவிடமுடியுமா என்ன! எல்லாம்வல்ல அந்த உலகாளும் அம்பலத்தான் சிவனின் ருதர் தாண்டவத்திற்கு சற்றும் குறையாத ரவுத்திரத்திற்கு பெயர் போனவன். அவர்களின் மனதில் கோப தீ கொழுந்து விட்டெறிந்தது என்பதை அனைவருமே அறிவர். தர்மேந்திரன் செறுமி பேரனிற்கு சூழலை உணர்த்த் முயன்றார். ஷிவேந்திரன் புருவ சுளிப்புடன் அவரின் பக்கம் திரும்பினான்.



“ஷிவ் கண்ணா, சம்யுக்தா வீட்ல ஏதோ பேசனும்னு வந்திருக்காங்க.”
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


“சொல்லுங்க”



சம்யுக்தாவின் அப்பா சூரஜ் மகளையும், தனது குடும்பத்தாரையும் ஒரு தடவை பார்த்துவிட்டு, ஷிவேந்திரனின் அருகில் அமர்ந்திருந்த புகழினியை ஆழ்ந்து நோக்கியவர், பின்பு அவளைச் சுட்டி காட்டி,



“நாங்க சொன்ன மாதிரியே ஒரு ஊனமான பொண்ண அன்னஃபிஷியலா கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களே ஷிவேந்திரன்! வீ ஆர் வெரி ஹாப்பி அபவுட் இட்.” என்று சிலாகித்துவிட்டு அவனின் முகத்தை பார்த்தார். அவன் அசராமல் அவரையே பார்த்து கொண்டிருந்தான்.



“ஃபைன், இப்போ நாம என் டாட்டருக்கும் உங்களுக்குமான அஃபிஷியல் மேரெஜ் பத்தி பேசலாம்.”



“உங்க டாட்டரோட எனக்கு மேரேஜ்ஜா?” குரலில் ஆச்சரியரம் காட்டி வினவினான் ஷிவேந்திரன்.



“என்ன ஷிவேந்திரன்? எதுவும் தெரியாத மாதிரி கேக்குறிங்க?” சூரஜின் சுருதி ஏறியிருந்தது.



“நான் எப்ப உங்க மகளை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்” என்று போட்டானே ஒரு போடு அனைவரும் அதிர்ந்துவிட்டனர்.



புகழினியோ மீன்குஞ்சு தன் வாயை திறப்பது போல் ஓவென்று வாய் திறந்து அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள். ஷிவேந்திரன் அவளது பாவனையில் சிரித்து கொண்டே அவளது வாயை இருவிரல் கொண்டு மூடினான். ஷிவேந்திரன் அயல்நாட்டிற்கு செல்வதற்கு முன் சம்யுக்தாவை மணம் செய்ய போவதாக அவனின் வீட்டு உறுப்பினர்களிடம் அறிவித்திருந்தான். இப்பொழுது இப்படி சொல்கிறானே என்று எல்லோரும் விழி பிதிங்கினர். இதில் சிலர் சந்தோசித்தனர், குறிப்பாக வசந்த.



சம்யுக்தா அவனை கடுப்புடன் நோக்கினாள். ஆனால் அவன் அவள் பக்கம் திரும்பினால் அல்லவா! எல்லோரும் இது என்னடா புது கதை என்பது போல் பார்த்தனர். ராஜேந்திரனும், சுகுணாவும் ஷிவேந்திரனை கூர்மையாக பார்த்து கொண்டிருந்தனர். புகழினியை ஏன் திருமணம் செய்து கொண்டான் என்று இன்றளவிற்கும் எவருக்கும் தெரியாது. ஏன், புகழினிக்கே தெரியாது! இப்பொழுது பூனை குட்டி வெளியே வர போகிறது என்று காத்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு தெரிய வேண்டியிருந்தது. ஆதி முதல் அந்தம் வரை!



எதிரிலிருப்பவன் வேறு எவராக இருப்பினும் சம்யுக்தாவின் தந்தை ஒரு கை பார்த்துவிடுவார். ஆனால் அவன் ஷிவேந்திரன் ஆயிற்றே! தொழில் சாம்ராஜியத்தின் முடிசூடா மன்னன். பிளாக் சீட்டா! சிறுத்தை சீறி பாய்ந்து சின்னாபின்னம் ஆக்கிவிடாதா! பொறுமை! பொறுமை!



“நாம ஆறு மாசம் முன்னே முடிவு பண்ணினது தானே! இப்ப இப்படி சொல்றிங்க?”



“நான் எப்பவும் எதையும் உங்ககிட்ட சொல்லலை.”



“பட் நீங்க ஒத்துக்கிட்டிங்களே.”



“எதை?”



“என் பொண்ண மேரெஜ் பண்ண.”



“ஓ! நான் உங்க பொண்ணுக்கிட்ட லவ் பிரபோஸ் பண்ணேன்னா?”



“நோ, பட் என் பொண்ணு உங்களுக்கு பிரபோஸ் பண்ணாளே“



“பட் ஐ நெவர் கேவ் ஹர் அ பாசிடிவ் ரிப்ளை (நான் அவளுக்கு சாதகமான எந்த பதிலையும் சொல்லவில்லையே.)”



“நீங்க நெடிவ்வாவும் ரிப்ளை பண்ணலியே”



“ஹாஹா எனக்கு டெய்லி தவுண்ட்ஸ் ஆஃப் ப்ரோபஸ்ல்ஸ் வருது, அதுக்கெல்லாம் ரிப்ளை பண்ணிட்டு இருக்கவா முடியும்! நான் என்ன வேலை வெட்டி இல்லாதவனா!”



அவனின் பதிலில் சம்யுக்தாவின் உடன் பிறந்தவர்களின் மீசை துடித்தது. பத்தோடு பதினொன்றாக தங்களின் அன்பு தங்கையை ஷிவ் சொல்லிவிட்டான் என்று கொதித்து கொண்டிருந்தவர்களை தந்தையின் பார்வை அமைதிப் படுத்தியது.



“பட் உங்க வீட்ல சம்யுவ தான் கல்யாணம் பண்ணிக்க போறதா சொல்லியிருந்தீங்க?”



“எஸ்.”



“ஏன் சொன்னிங்க?”



“உங்க பொண்ணு சொல்ல சொன்னா.”



“சோ சம்யு சொன்னா நீங்க செய்விங்க?”



“இதுக்கான ஆன்சர் உங்களுக்கே தெரியும் மிஸ்டர் சூரஜ். இருந்தாலும் இப்போ எல்லார் மத்தியிலும் சொல்றேன், என்னோட பர்மிஷன் இல்லாம உங்க டாட்டர் என்னோட பிஸ்னஸ் சர்க்கில்ல அவ தான் என் ஃபியான்சினு காசிப்ஸ் பறப்பினா. சோ ஐ ஜஸ்ட் வாண்ட் கிவ் ஹர் அ கவுண்டர் அட்டாக் (பதிலுக்கு பதில் கொடுக்க விரும்பினேன்). புரியும்னு நினைக்கிறேன்”



“ஓ! ஒகே, அவ செஞ்சது தப்பு தான். உங்க மேல இருக்கிற ட்ரூ லவ்ல அப்டி பண்ணிட்டா. ப்ளீஸ் ஃப்ர்கிவ் ஹர் (அவளை மன்னித்துவிடுங்கள்)”



“ட்ரூ லவ்! உங்க பொண்ணுக்கு என் மேல ட்ரூ லவ்வா!” என்று கேலியான குரலில் கூறிவிட்டு சம்யுக்தாவை கூர்ந்து நோக்கினான். அந்த பார்வையில் அவளின் முதுகு தண்டு சில்லட்டது.



“ஓகே உங்களுக்கு என் பொண்ண மேரஜ் பண்ண இண்டரஸ்ட் இல்லை, தட்ஸ் ஃபைன். ஆனா ஏன் இந்த மாதிரி பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க?”



“தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ் (அது உங்களுக்கு தேவையில்லாத விசயம்)”



“நோ ஷிவேந்திரன், என் பொண்ணோட லைஃப் இது. சோ நான் பேசி தான் ஆகனும். உங்க ஜாதகத்தை பார்த்த எங்க பரம்பரை ஜோசியர் உங்களுக்கு இரண்டு மனைவி அதிலேயும் முதல் மனைவியோட தாலி பலத்துல தான் உங்க ஆயுசு கெட்டியா இருக்கும்னு சொன்னாரு. அண்ட் முதல் மனைவி இருக்கிறப்ப தான் நீங்க செக்ண்ட் மேரஜ் பண்ணிப்பிங்கன்னும் சொன்னாரு இல்லையா! அதுவும் ஒரு ஊனமான பொண்ண தான் முதல் மனைவியா அமையனும்னு சொல்லி இருந்தார். அதை நீங்களும் கேட்டிங்க தானே! அதனால தான இந்த பொண்ண யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திங்க அன்னஃபிஷியல் வைஃபா!” என்றார் குரூரமாக.



ராஜேந்திரனும், சுகுணாவும் ‘விசயம் இது தானா’ என்று மகனை உறுத்தனர். அவர்களின் உள்ளம் மகனின் ஈனமான செயலில் கொதித்து கொண்டிருந்தது. மற்றவர்கள் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர். வசந்திற்கு இப்பொழுது புரிந்தது ஏன் புகழினியை ஷிவேந்திரன் பாதுகாக்கிறான் என்று.



புகழினியின் காதுகளில் வேறு எதுவும் கேட்கவில்லை. ஜோசியர்! ஜோசியர்! என்கிற வார்த்தை தான் திரும்ப திரும்ப அவள் காதுகளில் ஒலித்து கொண்டிருந்தது. அவளின் பிறப்பு முதல் விடாது கறுப்பு என்பது போல் அவளை துரத்தும் இந்த சோசியத்தை எண்ணி கண்கள் பனித்தாள். ஷிவேந்திரன் அவனின் அணைப்பை இறுக்கினான். மனையாளின் முகம் நிமிர்த்தி கண்ணீரை துடைத்துவிட்டான். அங்கிருந்தவர்களை கூர்மையாக நோக்கியவன், யாருடைய பார்வையையும் சட்டை செய்யாது,



“ஆண்டோ!!!” என்று உறுமினான்.



ஷிவேந்திரனின் பி.ஏ ஆண்டோ அடுத்த முப்பது வினாடிகளில் ஹாலில் வந்து நின்றவன். ஷிவ்வின் பார்வையில் அவனிடம் ஒரு ஃபைலை நீட்டினான். ஃபைலில் இருந்தவற்றை எல்லோரிடமும் கொடுக்குமாறு ஆண்டோவை பணித்தான்.



அது ஷிவேந்திரன் புகழினியுடைய பதிவு திருமண சான்றிதழின் நகல். அதிர்ந்துவிட்டனர்! சுகுணாவோ எதற்காக இந்த நாடகம் என்பது போல் மகனை கூர்ந்து நோக்கினார். ராஜேந்திரனும் மனைவியை போலவே எண்ணினார். எல்லோரின் பார்வையின் அர்த்ததை ஷிவ் உணர்ந்தே இருந்தான். தன் மனைவியிடம் அந்த சான்றிதழை காட்டி,



“தெய்வா, நாம இரண்டு பேரும் முழுமையான கணவன் மனைவி. நம்ம மேரஜ்ஜ நான் உனக்கு தாலி கட்டின அன்னைக்கே பதிவு செஞ்சுட்டேன். என்னோட ஒரே ஆஸ்தான மனைவி நீதாண்டா! அந்த சொக்கனுக்கு மீனாட்சி இணை போல இந்த ஷிவேந்திரனுக்கு புகழினி தெய்வமங்கை தான் இணை!”



புகழினிக்கு ஒன்றும் புரியவில்லை. அவளுக்கு தலை சுற்றி மயக்கம் வருவது போல் இருந்தது. பிடிமானத்திற்காக கணவனின் மார்பில் கைவைத்து சட்டையை இறுக்கி பிடித்துக் கொண்டாள். ஷிவேந்திரனும் மனையாளின் நிலை உணர்ந்தவனாக அவளை தன் மார்பில் சாய்த்து கொண்டு தலையை மென்மையாக தடவி கொடுத்தான்.


வசந்திற்கு ஒரு புறம் சந்தோசமாகவும், இன்னொரு புறம் சந்தேகமாகவும் இருந்தது. பொறுத்திருந்து பார்க்கலாம் இன்னும் என்னன்ன கூத்து அரங்கேறப் போகிறது என்று எண்ணினான். எல்லோரும் இன்றைய அதிர்ச்சியின் அளவை தாங்க முடியாமல் ஸ்தம்பித்து போயிருந்தனர். சம்யுக்தாவிற்கு இந்த செய்தி புதிது.. ஷிவேந்திரன் ஏதோ காரணமாக மிரட்டுகிறான் என்று தான் எண்ணினாள். ஆனால் இந்த செயலை அவள் சத்யமாக எதிர்பார்க்கவில்லை. தன் இருக்கையில் இருந்து எழுந்து “யூ சீட்” என்று ஷிவேந்திரனின் அருகில் வந்து அவனின் சட்டையை பிடிக்க முயன்றாள். ஷிவேந்திரன் அவளின் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி எழுந்து தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றான் மனைவியை அணைத்துக் கொண்டு. அவனது பார்வையில் சமைந்தவள், அவன் அணைத்திருந்த புகழினியை உறுத்து விழித்தாள். புகழினி அவளின் பார்வைக்கு பயந்து கணவனிடம் இன்னும் அழுந்த ஒண்டி கொண்டாள். ஷிவேந்திரனும் மனையாளை இறுக அணைத்து ‘நான் இருக்கிறேன் உனக்கு’ என்று சொல்லாமல் சொன்னான்.




சம்யுக்தாவின் அம்மா “எங்க குடும்பத்த அவமானப்படுத்திறதே உங்க குடும்பத்துக்கு வேலையா? இந்த ராஜேந்திரனால என் நாத்தனார் ரதி செத்து, அவ நினைப்புல என் மாமியார், மாமனார் செத்து எங்க தொழிலில பிரச்சனையாகி. எவ்வளவு அவமானப்பட்டோம். இன்னைக்கு என் பொண்ணுக்கும் அதே நிலையா? நான் இதை சும்மா விடமாட்டேன். அதுவும் இந்த நொண்டி பொண்ணுக்காகவா! டேய் சூரஜ், வீரஜ் என்னன்னு கேளுங்கடா” என்று ஆக்ரோசமாக கத்தினார். ஆண்டோ ஷிவேந்திரனின் பாடிகார்ட்ஸை வெளியே இருந்து உடனே உள்ளே வருமாறு பணித்தான். அடுத்த சில வினாடிகளில் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் பத்து பாடிகார்ட்ஸ் ஷிவேந்திரனைக்கும் புகழினிக்கும் அணைவாய் நின்றனர்.



“ஆண்டோ ஸ்விட்ச் ஆன் தி டிவி” என உறுமினான் ஷிவேந்திரன்.



எல்லோரின் கவனமும் தொலைக்காட்சியின் ப்க்கம் திரும்பியது. இன்னும் என்ன அனுகுண்டு வெடிக்க போகிறதோ என்று பீதியுடன் அனைவரும் அதனை நோக்கினர். ஆம் அனுகுண்டு தான் வெடித்தது!



சம்யுக்தா அப்படியே கீழே சரிந்து அமர்ந்துவிட்டாள். சுகுணாவும் ராஜேந்திரனும் ஓடி வந்து புகழினியை ஷிவேந்திரன் பிடியிலிருந்து இழுத்து அணைத்து கொண்டனர். டிவியில் இருந்து கண்களை அகற்ற முடியாமல் எல்லோரின் கண்களும் திரையில் குத்திட்டு இருந்ததன.



“வெல் மிஸ்டர் தீரஜ், தி கேம் இஸ் ஓவர்.. இந்த ஷிவேந்திரனுக்கே கல்தாவா! உதய்பூர் சமஸ்தானம் அண்ட் ராஜ பாரம்பரியம் உள்ள லோட்டஸ் குரூப் வில் பி ஹண்டட் டவுன்! அண்ட் தி ஹண்ட் ஸ்டார்ட்ஸ் நௌ!” என்று கர்ஜித்தான்.



கருப்பு அழகி வருவாள்…








 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்புகளே,
இன்னைக்கும் வெள்ளன்மையே வந்தாச்சு :)

'என் கருப்பழகி'-18வது அத்தியாயம் பதிந்துவிட்டேன்.

உங்க கருத்துகளுக்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

#SAVEDELTA
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொக்கியின் “என் கறுப்பழகி”

அத்தியாயம்
– 18

விளக்குகள் பளிச்சிட கொடி மண்டபமும் அதனை சுற்றியிருந்த மலர்களும், செடி கொடிகளும் சொர்க்க லோகம் போல் காட்சியளித்தன! தங்கள் அறையின் பால்கனியில் நின்று கொண்டு அதன் அழகில் லயித்து தோட்டத்தை ரசித்து கொண்டிருந்தனர் ராஜேந்திரனும் சுகுணாவும். நேரம் நள்ளிரவு பன்னிரெண்டு மணியை நெருங்கி கொண்டிருந்தது. இன்று காலையில் இருந்து எவ்வளவு அதிர்ச்சி, ஆச்சர்யங்கள். ஒற்றை நாளில் தங்களின் வாழ்வின் தடமே முற்றிலமாக மாறிவிட்டார் போல் சுபிக்‌ஷத்தில் உள்ள அனைவருமே உணர்ந்தனர். அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவன் ஷிவேந்திரன்!



“நினைச்சு கூட பார்க்கல சுகி, என்னால இப்பவும் நம்ப முடியல.”



சுகுணா மௌனமாக தலையசைத்தார். அவரின் முகத்தில் தோன்றியிருந்த சிறுபுன்னகை மறைந்தது. அன்று இரவு நடந்தவற்றை நினைத்தால் கூட அவரது உடம்பில் ஒரு நடுக்கம் ஓடி மறையத்தான் செய்கிறது! யார் சொன்னது சிங்கம் புலி போன்ற ஏனைய வேட்டையாடும் மிருகங்கள் தான் அபாயகரமானவை என்று? பூவுலகில் மிகவும் அபாயகரமான அதிபயங்கரமான வேட்டையாடும் மிருகங்கள் மனிதர்கள் தான்!



“என்ன சுகி யோசிக்கிற?”



“இவ்வளவு தூரம் ஒருத்தருக்கு மனசுல வன்மம் இருக்குமா? அதுவும் இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் கொஞ்சமும் குறையாமா?”



“இதை தான் உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரியனு சொல்லுவாங்க சுகி.”

“ம்ம்ம்ம் எங்க இந்த பையன் அந்த பொண்ணு சம்யுக்தாவ கல்யாணம் பண்ணிக்கிட்டுறுவானோனு ரொம்ப பயந்தேங்க. இப்ப தான் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு.”



“ம்ம்ம்ம்ம் ஆமா உண்மை தான் எனக்கும் பதை பதைப்பு தான். ஆனா சுகி என்னால இன்னும் அவன நம்பமுடியல. நேற்று இல்லாத மாற்றம் என்னதுன்னு அவனை பார்த்து பாட தோணுதுன்னா பாறேன்”



“நீங்க இருக்கிங்களே!” என்று கூறி கணவனின் வலது கை மணிகட்டில் லேசாக தட்டி உடல் குலங்க சிரித்தார் சுகுணா.



“பின்னே! புகழ் குட்டிய எவ்வளவு படுத்தி எடுத்தான் அந்த தடிப்பய, சூடெல்லாம் வச்சான்ல. இப்போ வந்து நீ மட்டும் தான் எனக்கு பொண்டாட்டினு வசனம் பேசுறான், அதுலயே புகழு மயங்கி விழுந்துடுச்சு. நமக்கே இப்டி இருக்குன்னா, நம்ம புகழுக்கு எப்படி இருக்கும்? இதுல கடவுள வேற இணை கூட்டுறான் இந்த கும்கி பய. சொக்கனுக்கு மீனாட்சிய போல இவனுக்கு நம்ம புகழாம். புகழ மீனாட்சிக்கு இணை கூட்டி சொல்லுறது சரிதான். ஆனா இவனை சொக்கநாதனுக்கு இணை கூட்டி சொன்னான் பாரு, அதை தான் என்னால தாங்க முடியல சுகி. அதை கேட்டு எனக்கு நெஞ்சுவலி வராத குறைதான்.” என்று அங்காய்லித்தார் ராஜேந்திரன்.



ராஜேந்திரனின் விவரிப்பில் சுகுணா உடல் குலுங்க சிரித்துவிட்டு, கணவனின் கூற்றிலிருந்த உண்மை புரிந்து யோசனைக்குள்ளானார். மனைவியின் யோசனையான முகத்தை பார்த்துவிட்டு தயங்கி தயங்கி வினவினார்.



“ம்ம்ம்ம்ம்… சுகி புகழ அவன் கூட……”



சுகுணா ‘வேண்டாம்’ என்பது போல் தலையாட்டினார். ராஜேந்திரன் அத்துடன் அமைதியாகிவிட்டார். மனைவியின் மனதிலிருப்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு பொருமூச்சை இழுத்துவிட்டு இருவரும் தங்கள் அறைக்குள் சென்று அடைந்து கொண்டனர்.



வசுந்தரா தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள். மேகவதி கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு விட்டத்தை வெறித்தார். விமன்யா அதே கட்டிலில் குப்புற விழுந்து கிடந்தாள். ரகுவரன் சோபாவில் கண்மூடி அமர்ந்திருந்தார். வசுந்தரா நிமர்ந்து எல்லோரையும் பார்த்துவிட்டு வசந்த் அங்கு இல்லையென்று புரிந்து கொண்டு கணவனிடம் வினவினாள்



“ரகு வசந்த் எங்க?”



“சம்யுக்தாவை பார்க்க போயிருப்பான்!”



“என்னதூ!” வசுந்தரா அலறிவிட்டாள்.



“ம்ம்ம் கண்டிப்பா அங்க தான் போயிருப்பான்.”



“இருக்கிற பிரச்சனை பத்தாதுனு இவன் எதுக்கு எழரைய இழுத்து விடுறான். இடியாடிக் ஃபெலோ. நீங்க ஏன் அவனை தடுத்து நிறுத்தல?”



“நான் சொன்னா அவன் கேட்பான்னா?”



“இது ஒரு பதிலா! அவளை எதுக்கு இவன் பார்க்க போறான்?”



“தெரியலை, எனக்கு ஒரு கெஸ் இருக்கு. பட் கன்பார்ம்மா தெரியலை.”



“என்ன பொடலங்கா கெஸ், சொல்லி தொலைங்க.” என்று எரிந்து விழுந்தாள்.



“வசந்த் சம்யுக்தா தேவிய லவ் பண்ணுறான்னு நினைக்கிறேன்.”



“வாட்” என்று மூன்று பெண்களும் ஒருசேர அலறி தங்கள் அதிர்ச்சியை வெளிபடுத்தினர். விமன்யா கட்டிலில் இருந்து எழுந்து வேகமாக தந்தையின் எதிரே வந்து நின்று.



“எப்படி சொல்லுறிங்க டாட்?” வினவினாள்.



“இன்னைக்கு நீங்க ரிசார்ட்கு வரதுக்கு முன்னாடி சம்யுக்தா எங்கள மீட் பண்ண வந்தா.”



“ஓ! பட் வசந்த் எதுவுமே சொல்லலியே டாட்?”



“அது தான் எனக்கும் ஆச்சர்யம் விமி. ஷிவ் ஆஃபிஸ்ல ஏதோ நடந்திருக்கு. அதுல டிஸ்டப் ஆகிதான் சம்யுக்தா அவ ஃபாமிலியோட வீட்டுக்கு வந்துட்டா. வந்த இடத்தில ஷிவ் உனக்கும் பெ பே உன் குடும்பத்துக்கும் பெ பேனு சொல்லிட்டான். நல்லா தூக்கி வச்சான், அனுகுண்டை அவங்க தலையில.”



“ம்ம்ம்ம் வசந்த்கிட்ட என்ன பேசினா? அவன் அவளுக்கு பிரபோஸ் பண்ணிட்டானா?”



“உன் பாசமலர் அண்ணன் என்னை கிளம்புறியானு பார்வையாளேயே துரத்தி அனுப்பிட்டான். வரும் போது காம்மா கூலா தான் வந்தா, பட் போகும் போது ஷீ வாஸ் டோட்டலி டென்ஸ்டு.”



“பிரோப்போஸ் பண்ணியிருந்தானா இல்லையானு நமக்கு தெரியாது பட் சம்யுக்தா ஷிவ்வ கல்யாணம் பண்ணிக்க ரொம்ப க்யூரியஸ்ஸா இருந்தா. அவ எப்படி இவனுக்கு ஒத்துப்பா” என்றார் மேகவதி.



விமன்யா குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். என்ன செய்வதென்று அங்குள்ள எவருக்கும் பிடிபடவில்லை. வசந்த் சம்யுக்தாவை காண செல்வது ஷிவேந்திரனுக்கு தெரிந்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள். அவனுக்கு இந்நேரம் செய்தி பறந்திருக்கும் என்பதில் அவர்களுக்கு உறுதி. ஷிவேந்திரனின் அதிரடியில் அவர்கள் வெளுவெளுத்து போயிருந்தனர். அரசாளும் குலமே ஆண்டியப்பனாகி அவன் முன் மண்டியிட்டாகி விட்டது! இவர்களோ அண்டி பிழைப்பவர்கள், அவனுக்கு எதிராக ஒற்றை விரலை உயர்த்த நினைத்தால் கூட உயிரோடு எரித்துவிடுவானே! எமகாதகன்! வசுந்தராவிற்கு மகனை நினைத்து மனதினுள் பயம் பிடித்து கொண்டது, ஷிவேந்திரனை பற்றி தெரிந்தும் மகன் சிக்கலில் மாட்டி கொள்கிறானே என்று.



“விமி நீ வசந்துக்கு கால் பண்ணு, சீக்கிரம். எங்கிருந்தாலும், உடனே சுபிக்‌ஷத்துக்கு வர சொல்லு.” என்றாள் பத்தட்டத்துடன்.



விமன்யாவும் தாயின் சொல்லுக்கிணங்கி அலைபேசியில் தமையனுக்கு பல முறை முயன்று தோற்றாள்.



“மாம் அவன் கால் கட் பண்ணுறான்.”



“ஷிட்” என்று தலையில் அடித்து கொண்டாள் வசுந்தரா. பின் கணவனை நிமிர்ந்து பார்த்து,



“ரகு, வசந்த எங்க இருந்தாலும் தேடிபிடிச்சு, கூட்டிட்டு வாங்க.”



“வாட்? கம் அகெய்ன்.”



“நான் சொன்னது உங்க காதுல தெளிவா விழுந்ததுன்னு எனக்கு நல்லா தெரியும். சோ கிளம்புங்க ரகு.” என்றாள் அதிகாரமாக.



ரகு தயக்கத்தோடு எழுந்தார். படார் என்று கதவு திறந்து கொண்டது. வசந்த்! சோர்ந்து போயிருந்தான். தந்தையின் அருகில் வந்தமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். மூடிய கண்களின் வழியே நீர் வழிந்தன. வசுந்தரா மகனை நெருங்கி அவன் அருகில் அமர்ந்தாள்.



“வசந்த் கண்ணா!” என்றாள் மென்மையாக.



வசந்த் மெதுவாக கண்களை திறந்தான். கண்கள் சிவந்து கலங்கி இருந்தன.



“என்னடா கண்ணா ஆச்சு?”



“சம்யுவ பார்க்க முடியல மாம்.”



“நீ ஏன் அவளை தோடி போன?”



தலைகுனிந்திருந்த வசந்த் நிமர்ந்து “பிகாஸ் ஐ லவ் ஹர் அ லாட் மாம் (b’cos I love her a lot mom). ஷி இஸ் மை லைஃப் (she is my life). ஒன்லி ஷீ கேன் பி மை வைஃப் (Only she can be my wife)”
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ஆஹா! நல்லா டி.ஆர் மாதிரி வசனம் பேசுரடா வசந்த்.” என்றார் ரகுவரன் கேலியான குரலில் கண்களில் கோபம் மின்ன. பின்னே ஷிவேந்திரன் ஒதுக்கி வைத்த ஒருத்தியை காண செல்கிறானே மகன் என்று மனம் படபடத்தது.



வசுந்தரா திரும்பி கணவனை பார்வையால் சுட்டாள். ரகுவரனோ ‘இதுங்களுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வராது’ என்று மனதில் எண்ணி கொண்டு முகம் திருப்பி கொண்டார்.



“வசந்த் கேக்குறேன்னு தப்பா நினைக்காத, இது நடக்க கூடிய விஷயமா?”



வசந்த் அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருந்திருந்தான். வசுந்தராவிற்கு மகனை காணும் பொழுது நெஞ்சு கனத்தது. ஆசை மகன்! அவன் விரும்பும் பெண்ணை மணம் முடித்து வைக்க கூடிய நிலையில் தாங்கள் இல்லையே என்று மனதிற்குள் புழுங்கினாள்.



“உன் லவ் பத்தி அவளுக்கு தெரியுமா?”



“தெரியும்”



“எப்ப தெரியும்?”



“நேத்து நீங்க ரிசார்ட்டுக்கு வரதுக்கு முன்னாடி”



“ஓ! உன்னை மீட் பண்ணதுக்கு அப்புறம் தான் அவ ஃபேமிலியோட சுபிக்‌ஷம் வந்திருக்கா இல்லையா?”



தாயின் கேள்வியை புரிந்து கொள்ளாமல் இருக்க வசந்த் என்ன முட்டாளா! உன்னுடைய காதலை அவள் மதிக்கவில்லை. அவள் ஷிவேந்திரனின் காதலை தான் யாசிக்கிறாள். இது உனக்கு புரியவில்லையா? என்று தாய் மறைமுகமாக வினவுவது அவனுக்கு புரிந்தது.



“ஏன் மாம், நான் அசைப்பட்ட பொண்ணோட வாழ்ற தகுதி எனக்கு இல்லையா மாம்?” என்றான் வலி மிகுந்த குரலில் கண்களில் தேங்கிய நீருடன்.



எதற்கும் கலங்காத மகன் ஷிவேந்திரனின் மேல் நோக்கம் கொண்ட அரசிளங்குமிரியின் மேல் ஏற்பட்ட காதலினால் இன்று கண் கலங்கி நிற்கவும், அவளின் பெற்ற வயிறு இறுகி துடித்தது. வசுந்தராவிற்கா அந்த வலி புரியாது! இன்றளவும் அனுபவித்து கொண்டிருக்கிறாளே. சம்யுக்தாவின் தந்தையை காணுகையில் தான் இழந்த சொர்க்க வாழ்வின் அளவு அவளுக்கு பூதாகரமாக தெரிந்தது. சம்யுக்தாவின் தாய் தன்னை பார்த்த பார்வையை அவளால் அவளின் உயிர் பிரிந்தாலும் மறக்க முடியாது. எப்பேற்பட்ட அவமானம்! எப்படி கூசி போனாள்!



“மாம் இனிமேலும் நாம அமைதியா இருக்க முடியாது மாம். உன் அண்ணன் ஃபேமலிய மொத்தம்மா போட்டு தள்ளிடலாம். ஒட்டு மொத்தம்மா.. அது ஒன்னு தான் நம்ம டோட்டல ரிலீவ் பண்ணும்” என்று உறுமினான் வசந்த் கண்கள் பளபளக்க.



“எஸ் வசந்த், எல்லாரையும் போட்டு தள்ளிடலாம். அந்த ஷிவ் என்ன எவ்ளோ இன்சல்ட் பண்ணினான். அவன் எனக்கு கிடைக்காம அந்த நொண்டிக்கு கிடைச்சிட்டான். அவன் கண்டிப்பா உயிரோடு இருக்க கூடாது. கறுப்பி! அந்த நொண்டி நாய அவ வாக்கிங் ஸ்டிக்காலயே அடிச்சு நான் கொள்ளனும். விடாத அண்ணா.. ஒரு கை பார்த்துடலாம்.” என்று தன் பங்கிற்கு எகிறினாள் விமன்யா. பயந்து போயிருந்தவள். அண்ணங்காரன் கோடை போடவும், இவள் ரோடை போட்டுவிட்டாள்.



தான் காதலிக்கும் பெண் இன்னொருவனை மணம் செய்ய அதுவும் அவனுடைய பரம எதிரியை மணமுடிக்க ஒற்றை காலில் நிற்பதை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அப்படி ஒற்றை காலில் நின்று அவள் அடைந்தது என்ன? இந்த பணமும் பதவியும், சொத்து, சுகுமும் தானே ஷிவேந்திரனின் மேல் ஆசை கொள்ள வைத்தது. இவையாவையும் அடையும் சபதமெல்லாம் அவனால் எடுக்க இயலாது. ஆனால் இதனை உடையவனை இல்லாமல் ஆக்க அவனால் முடியுமல்லவா! ‘ஷிவேந்திரா, உன்னையும் உன் குடும்பத்தையும் ஒழிச்சு கட்டுறேன்னா இல்லையா பாருடா.’ என்று மனதிற்குள் சூளைரைத்து கொண்டான்.



வசுந்தரா மகனின் வாயை தன் கைகளால் இறுக மூடியவள், பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். கணவனிடம் வெளியே சென்று பார்த்துவிட்டு வரும்படி கண்சாடை செய்தாள். ரகுவரனும் உடனே எழுந்து வெளியே சென்று நோட்டமிட்டுவிட்டு எவரும் இல்லை என்று உறுதிபடுத்திவிட்டு அறையுனுள்ளெ நுழைந்தார். வசந்த் பெற்றோரின் செயலில் அதிருப்தி அடைந்தவானாய் அவர்கள் இருவரையும் எரிச்சலோடு நோக்கிவிட்டு தாயின் கரங்களை தன் வாயிலிருந்து எடுத்தான்.



மேகவதியோ பதட்டமாக இருந்தார். விமன்யாவை அருகில் அமர்த்தி அறிவுரை வழங்கினார். “விமி உன் கண் முன்னாடி தான பார்த்தா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த சம்யுக்தா ஃபாமிலிக்கு நடந்ததை. இப்போ மடத்தனமா பேசுறியே? திஸ் இஸ் ஸில்லி! நம்ம சைட் என்ன வெயிட் இருக்குன்னு யோசிச்சிட்டு பேசனும்.” என்று பேத்தியை கடிந்து கொண்டார்.



மகன் குடும்பம் அழிவதை பற்றி அவருக்கு ஒரு கவலையும் இல்லை. மகளது குடும்பத்தினருக்கு ஆபத்து வந்தால், அதுவும் ஷிவேந்திரனால் வந்தால் அதனை தடுத்து நிறுத்தும் சக்தி எவருக்கும் இல்லை என்பதை அவர் அறிவார். பேத்தி ஆத்திர மிகுதியில் அறிவிழந்து பேசுகிறாளே என்று மன குறைப்பட்டார்.



“மாம் இப்போ எதுக்கு என் வாயை மூடுனிங்க? பாட்டி எதுக்கு விமிய திட்டுறிங்க?”



“ஏன்னா ஷிவேந்திரனுக்கு நீயும் உன் தொங்கச்சியும் பேசனது தெரிஞ்சா உங்க ரெண்டு பேருக்கும் வாய்க்கரிசி போட்டுறுவான்ல அதுக்கு தான்டா மவனே உன் அம்மாவும் பாட்டியும் உங்க வாய மூடுறாங்க.“ கேலி கலந்த பதட்டமான குரலில் கூறினார் ரகுவரன்.



“ரகு! வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்? வாய்க்கரிசி அது இதுனுட்டு!” என்று வசுந்தரா கணவனை கடிந்து கொண்டாள். அவளுக்கு பதட்டமாக இருந்தது மகனும், மகளும் பேசியது ஷிவ் காதில் விழுந்தால் அவ்வளவு தான்! வேறு வினையே வேண்டாம் என்று மனதிற்குள் எண்ணி பயந்தாள்.



“அப்போ சரி, இனிமே இந்த ரூமிக்குள்ளே இவங்க மூனு பேரோட நாம தங்கிடலாம் என்ன சொல்லுறிங்க டாட்! மாம் எனக்கும் அப்பாவுக்கும் ஆளுக்கொரு சேலைய குடுங்க நாங்க கட்டிக்கிறோம்.”



“நீ என்ன பொ**டைனு சொல்றனு எனக்கு தெரியுது. நீ என்ன வேணா சொல்லிக்கோ, எனக்கு கவலை இல்லை. எதை இழந்தாலும் மீட்க முடியும். ஆனா உயிர் போனா ஒரு ம**ம் புடுங்க முடியாது. அத முதல்ல மண்டையில ஏத்திக்க.” என்றார் சற்று காரமாகவே.



“நான் புடுங்கி காட்டுறேன். இன்னைக்கே உங்க மச்சனன் குடும்பத்த மொத்தம்மா தூக்கறேன்.” என்று ஆக்ரோஷமாய் சவால்விட்டு தனது அலைபேசியை எடுத்து சில எண்களை அழுத்தினான். அவன் அலைபேசியை காதுக்கு கொடுக்கும் முன்,



“என்ன வசந்த் யாராவது தாதாக்கு கால் பண்ணுறியா? இந்தியாவில இல்லை, வெளிநாட்டுல உள்ள எந்த தாதாவ நீ புடிச்சாலும், உன்னால ஒரு மண்ணும் பண்ண முடியாது. என்னடா முறைக்கிற! அறிவு கெட்டவனே, நீ யார வச்சு ஷிவ்வையும் அவன் குடும்பத்தையும் போட நினைக்கிறியோ, அவன் நேரா ஷிவேந்திரனுக்கு கால் பண்ணி நீ சொன்ன தகவல் எல்லாத்தையும் சொல்லுவான்டா. அந்த தாதாவ வச்சே ஷிவ் உன்னை, அப்புறம் எங்களையும் சேத்து போடுவாண்டா முட்டா பயலே.



கழுதை! இந்த காதல் வந்தா மூளை எல்லாம் மழுங்கிடும் போல சே! ஏண்டா தலை கீழே உன்னை தொங்கவிட்டு அடிச்சும்மா உனக்கு புத்தி வரல? ஏய் உன்னை நடு ஹால்ல பெல்ட்டால விட்டு விலாசினானே மறந்து போச்சா? அவன் பொண்டாட்டிய நீ ஸ்டிக்கால அடிச்சு கொன்னுடுவியா? எங்க இதே ஃபோலர்ல தான் அது புருஷனோட இருக்கு, போய் அடிச்சு கொள்ளு பார்ப்போம்! மட்டி கழுதை.. அடிச்சே கொள்றாளாம்! உன்னை தோளை உரிச்சு அவன் நாய்ங்களுக்கு தூக்கி வீசிடுவான் பார்த்துக்க.



டேய் அவன் சிங்கம்டா. நாம எல்லாம் நரி கூட்டம், தந்திரம்மா காரியம் சாதிக்க தான் யோசிக்கனும் டிரை பண்ணனும். வலுச்சண்டைக்கு போக கூடாது.. புரிஞ்சு நடந்துக்க.. பேசுறான் பாரு பேச்சு, போட்டு தள்ளுறானாம்! யாரா யாருடா போட்டு தள்ளுரது? எனக்கு நல்லா வந்துடும் வாயில. ஏண்டி அல்டி உன்னை மாதிரியே இதுங்களையும் ஒன்னுத்துக்கும் உருப்புடாம வளர்த்து வச்சிருக்கியே! தனக்கு எது பலம் பலவீனம்னு கூடவா ஒருத்தனக்கு தெரியாது?



நீயும் இப்படி தான் அந்த சுகுணாவ மட்டம் தட்டி அவளை கிழிச்சுடுவேன் குழுச்சுடுவேன்ன, எதாவது பண்ண முடிஞ்சதா? வெட்டி ஜம்பம் பேசாம பிழைக்கிறதுக்கு வழிய பாருங்க. நான் கிளம்புறேன், உங்க கூட இருந்தா என்னை தான் அவன் முதல்ல வெட்டுவான்.” கோபம் கொப்பளிக்கும் குரலில் கூறிவிட்டு அறையைவிட்டு வெளியேறிவிட்டார். வெகு நாட்களாக மனைவியின் மேலிருக்கும் மனத்தாங்கலையும் இன்று கொட்டி கவிழ்த்து விட்டார்.



கர்ஜிக்கும் இளம் சிங்கத்தின் முன் குள்ளநரி ஊளையிட்டு என்னுடன் சண்டைக்கு வருகிறாயா என்று தொடைகளை தட்டி அழைப்பதற்கு சமானம் ஷிவேந்திரனுடன் வசந்த் மோதுவது என்பது. அதனை புரிந்து கொள்ளாமல் மகனும் மகளும் வெட்டி வீராப்பாக பேசுகிறார்களே என்று ரகுவரனுக்கு கடுப்பாக இருந்தது. இருப்பதை சுருட்டி கொண்டு, சுகமாக வாழ்வதை விட்டுவிட்டு அவனுடைய உயிரோடு தங்களின் உயிர்களுக்கும் சேர்த்து வேட்டு வைக்கிறார்களே அவர் பெற்ற அருமை மக்கள் என்று மனம் வெம்பினார். அங்கு அமைதியாக நிலவியது. ரகுவரனின் கூற்று முற்றிலும் உண்மை என்று அவர்கள் ஏற்று கொண்டதற்கு சான்று தான் அந்த பேரமைதி. விமன்யா பயந்து வாயை இறுக மூடி கொண்டாள். பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் ஷிவேந்திரனுக்கு அந்த பாகுபாடெல்லாம் கிடையாது! யாரென்றாலும் ஆடி தீர்த்துவிடுவான்!



வசந்திற்கும் தந்தையின் கூற்று உண்மையே என்று புரிந்தது. ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது போல அவசரப்பட இருந்துனே! காதல் என் கண்களை மறைத்துவிட்டதா? என் காதலியை எப்படி சாதுர்யமாக சிக்கலில் இருந்து என்பதை பற்றி தான் இப்போது நான் சிந்திக்க வேண்டும். பின்பு அவளுடன் சேர்ந்து முழு பலத்துடன் ஷிவேந்திரனை ஒரு வழியாக்குவதை பற்றி யோசிக்கலாம். எவனாக இருந்தாலும் ஒரு நாள் தோற்று தான் போக வேண்டும். தோற்பான்! நிச்சயம் அவன் தோற்பான்! ஷிவேந்திரனும் நிச்சயம் ஒரு நாள் இந்த வசந்தனிடம் தோற்பான்! அதுவரை பொறு மனமே பொறு!’ என்று தனது அலைபாய்ந்த மனதை அமைதிபடுத்தி கொண்டான்.

 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெண்பஞ்சு மெத்தையில் கணவனின் இறுகிய அணைப்பில் கட்டுண்டு கிடந்த புகழினிக்கு இன்னும் இரவு நடந்தவைகளை மறக்க முடியவில்லை. அவள் கண்முன் அந்த காட்சிகள் விரிந்தன.



““ஆண்டோ ஸ்விட்ச் ஆன் தி டிவி” என்று ஷிவேந்திரன் கட்டளையிட்டவுடன் அந்த பெரிய தொலைக்காட்சி உயிர்ப்பிக்கபட்டது.



ஆண்டோ ஒரு செய்தி சேனலில் வைத்து, தொலைக்காட்சியின் சப்தத்தை கூட்டினான். வீட்டிலிருந்த அனைவரின் கவனமும் அதில் திரும்பியது. அங்கு ஒரு அழகிய இளமங்கை செய்திகளை வாசித்து கொண்டிருந்தாள்.



பிரேக்கிங் நியூஸ்:



நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை குற்றம் – கொலையாளி பெங்களூரில் கைது.



சந்தேகம் காரணமாக தேனிலவில் கணவனே மனைவியை கொன்ற கொடூரம்!



காரின் ப்ரேக் வயரை அறுத்து விபத்தை ஏற்படுத்தி மனைவியை கொன்று வெறிச் செயல்.



மேலே கொடுக்கப்பட்ட மூன்று வாக்கியங்களும் திரும்ப திரும்ப தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டன. அந்த இளமங்கை செய்திகளை வாசிக்க தொடங்கினாள்.



சற்று முன் கிடைத்த தகவல். உதய்பூர் சமஸ்தானத்து ராஜகுமாரி மறைந்த திருமதி ரதிதேவியின் கொலை வழக்கில், அவரின் கணவரும் கொலை குற்றவாளியுமான வீர்பிரதாப் பெங்களூர் விமான நிலையத்தில் சற்று முன் கைது செய்யப்பட்டார்.





விரிவான செய்திகள்:



உதய்பூர் சமஸ்தானத்து ராஜகுமாரி திருமதி ரதிதேவி நாற்பது ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் ஒரு பள்ள தாக்கில் அவரது கார் உருண்டு விழுந்து உடல் எரிந்து சாம்பலானார். அந்த சம்பவம் ஒரு விபத்து தான் என்று காவல் துறையால் அந்த வழக்கு மூடபட்டது.



கடந்த ஆறு மாததிற்கு முன்பு ரதிதேவியின் உடன்பிறந்த சகோதரி ரித்திதேவி தனது தமக்கையின் மரணத்தில் சந்தேகமிருப்பதாகவும். அது விபத்தல்ல திட்டமிட்ட படுகொலையென்றும் வழக்கை மறுவிசாரணை செய்யும்படியும் கோரியுள்ளார். குறிப்பாக தமக்கையின் கணவரின் மேல் தனக்கு தீவிர சந்தேகம் இருப்பதாகவும் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.



அந்த புகாரினை தொடர்ந்து மறைந்த ரதிதேவியின் கணவர் வீர்பிரதாப் ரகசியமாக கண்காணிக்கப்பட்டுள்ளார். காவல் துறையின் தீவிர கண்காணிப்பில் நேற்று அவர் பெங்களூரில் ஒரு கேளிக்கை விடுதியில் தனது நண்பர்களுடன் மதுபோதையில் உரையாடிய காணொளி ரகசிய காமிரா மூலம் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டது. தன்னுடைய மனைவியை எப்படி கொலை செய்தார் என்று அந்த காணொளியில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ அந்த காணொளி உங்களுக்காக.



வீர்பிரதாப்:



என் மாமா பொண்ணு ரதிதேவி, குட்டி சும்மா லட்டு மாதிரி இருப்பாடா! அவ்வளவு சொத்துக்கு வாரிசு! கட்டிக்கிட்டா குட்டிக்கு குட்டியாச்சு, சொத்துக்கு சொத்தும்மாச்சுனு அவளை அடுத்தவன் நெருங்காம காவல் காத்துக்கிட்டு உட்கார்ந்திருந்தா, எவனோ ஒருத்தன் ராஜேந்திரன்னு தமிழ்நாட்டு நாட்டு நாய் தான் வேணும்னு அடம்பிடிச்சா.



அவன் ரொம்ப தெளிவுடா, குடும்ப குத்துவிளக்கை கல்யாணம் பண்ணிக்கிட்டான். இந்த மகாராணி மனசுல இருக்கிற காதல் தோல்விய மறைச்சுக்கிட்டு நெஞ்சை நிமித்திக்கிட்டு அரண்மனைல நடந்தா.. விடுவேனா நான், உடனே என் மாமாகிட்ட நல்லவன் வேசம் போட்டு எங்க துர்கா குலதெய்வ கோயில்ல சத்தியம் வாங்கிட்டேன்ல.



கல்யாணத்துக்கு முன்னாடி வெளில கூட்டிட்டு போறேன்னு அவளை டார்ச்சர் பண்ணி பேசியே அழவிட்டேன். அதுவும் நல்லதுக்குதான். அவ மனசு இன்னும் பழைய காதலை மறக்கலை, மாறலைனு நீலி கண்ணீர் விட்டேன், அந்த வீட்ல என்னை பிடிக்காதவன் கூட என்னை நம்பிட்டான். ஐயாவோட ஆக்டிங் அப்டி! கல்யாணம் நடந்துச்சு. வெளிநாட்டுக்கு ஹனிமூன் பிளான் பண்ணாங்க. ஆனா நான் கொடைக்கானல் பிளான் பண்ணேன்.



ஏன் தெரியுமா? அந்த ********** ராஜேந்திரன் அவன் அழகு பொண்டாட்டியோட ஹனிமூனுக்கு வந்திருந்தான். அவனை பாத்துட்டு மேடம்கு ஒரே அழுகை. சொத்து என் பேருக்கு வந்திடுச்சு, அடுத்தவனை நினைக்கிற தெரு நாய் நமக்கெதுக்குனு அவர் கார் பிரேக் வயர கட் பண்ணிட்டேன்.



பிளான் பண்ணி அவளை அவனோட சேத்து பேசி வெறுப்பேத்தினேன். நான் நினைச்ச மாதிரி காரெடுத்துட்டு வெளில போனவ, ராஜேந்திரனை அவன் பொண்டாட்டியோட பார்த்துட்டு கார பள்ளத்துக்குள்ள விட்டு அப்படியே பரலோகம் போயிட்டா. நான் அவ பின்னாடி ஃபாலோ பண்ணது அவளுக்கு தெரியாது. நான் யாரு வீர்பிரதாப் ஆச்சே, என்னையா அசிங்கப்படுத்துறா! என்னையா வேணாம்னு சொன்னா! அதான் அவளுக்கு வாழ தகுதி இல்லைன்னு உலகத்த விட்டே அனுப்பிட்டேன் எப்புடி!



அவ குடும்பத்திக்கிட்ட அப்டியே பிளேட்ட திருப்பிட்டேன். அவ எழுதின மாதிரியே ஒரு டைரியை நான் ஒரு சிக்நேச்சர் ஆர்டிஸ்ட்ட மூலம் கொடுக்கானல் வரதுக்கு முன்னாடியே ரெடி பண்ணேன். அதையும் என் மாமா வீட்டு மாக்கானுங்க நம்பிட்டானுங்க! அப்புறமென்ன ராஜேந்திரன் அவங்க பரம்பரை எதிரி ஆகிட்டான்! என்னவிட பெரிய இவனா அவன்? அதான் அவன் நிம்மதியா வாழ கூடாதுனு நிறைய உள்வேலை பார்த்தேன்.



அதுக்கு அப்புறம் என் மாமா எனக்கு இன்னும் கொஞ்சம் சொத்து தந்து, அவரோட தம்பி பொண்ணையே எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க! நான் நைசா அந்த ரதி தேவி கல்யாணத்துக்கு முன்னே கெட்டு போனவனு அடிச்சுவிட்டேன். சும்மா பக்குனு பத்திக்கிட்டு அரண்மனையையே அரண்டு போய்டு. என் முகத்தை பார்த்து பேசுற என் மாமன் என் செருப்பை பாத்து தலை குனிஞ்சு பேசினான்ல! பேச வச்சேன்ல! பண திமிரு.. பெரிய மகாராஜான்ற திமிரு.”



“சரி பிரதாப், இப்போ அந்த உதய்பூர் சமஸ்தானுத்து ராஜகுமாரி சம்யுக்தாவுக்கும் உன் பையனுக்கும் எப்போ கல்யாணம் பண்ண போறே!”



“நீ வேறடா அவ அத்தைகாரி மாதிரியே இந்த நாயும் இருந்து வைக்கிது.”



“என்னடா சொல்லுற?”



“அந்த ராஜேந்திரனோட மகன் ஷிவேந்திரன்னு ஒருத்தன்.. அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பாளாம்.”



“நீ யார சொல்லுற? திரன் குரூப் ஷிவேந்திரனையா!”



“ம்ம்ம்ம் ம்ம்ம் அவன் தான்”



“அவன் பெரிய ஆளேச்சேபா! பிளாக் சீட்டானு பிஸ்னெஸ் சர்கிள்ல சொல்லுவாங்க. ரொம்ப ஷார்ப் & ஸ்மார்ட்! இந்தியா மட்டுமில்ல வெளிநாட்டுலையும் பயலுக்கு பயங்கற டிமாண்ட். சவுத் இண்டியால அவன் தான் இப்ப நம்பர் ஒன். அவன எப்படி அவ விடுவா! நீ உன் பையனுக்கு வேற பொண்ணு தான் பாக்கனும்.”



“ஹா ஹா அதெல்லாம் ஒன்னும் நடக்காது. அவன் ஒரு நொண்டி பொண்ண கட்டிக்கிட்டு வந்துட்டான். அவக்கிட்ட யாரையும் நெருங்க விடாம பாதுகாக்குறான். இந்த சம்யுக்தா நாய்க்கு அது பொறுக்கல, எங்கிட்ட வந்தா. உன் கதையும் உன் அத்தை கதை மாதிரி ஆகிடுச்சேனு நான் பழைய கதைய சொல்லி நீலி கண்ணீர் விட்டென்.



உடனே அவ நான் அத்தை மாதிரி இல்ல. நான் அந்த குடும்பத்தையே போட்டு தள்ள ரெடின்னா. எனக்கும் அந்த **** ராஜேந்திரன் நாய் குடும்பம் ஒழியனும். அதான் கிடைச்ச வாய்ப்ப கப்புனு பிடிச்சிட்டு, அவளை நைசா தூண்டிவிட்டேன். அப்புறம் அவளே கார் ஆக்சிடெண்ட் பண்ண மூனு தடவை ஏற்பாடு பண்ணி ராஜேந்திரன், சுகுணா, அந்த நொண்டி பொண்ண கொல்ல முயற்சி செஞ்சிருக்கா. மூனு தடவையும் ஃபெயிலியர்.



இவளே அந்த நொண்டி பொண்ண ஒரு தடவ சைலன்சர் கன்ன வச்சு ஒரு ஷாப்பிங் மால்ல பாத்ரூம்ல வச்சி ஷூட் பண்ண பாத்துருக்கா முடியல. இப்போ புதுசா வெள்ளைக்கார ஸ்நைப்பர் ரெடி பண்ணுறேன்னு சொல்லியிருக்கா. பாக்கலாம் என்னத்த கிழிக்கிறான்னு! என்ன இருந்தாலும் நம்ம சாமார்த்தியம் அவளுக்கு வராதில்ல! அந்த ஷிவேந்திரனும் அவன் அப்பன போல இவள் வேண்டாம்னு சொல்ல போறான். அப்புறம் எங்கிட்ட வந்து தானெ ஆகும். அப்ப அவளை என் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து என் மகனுக்கு கட்டி வைப்பேன். அவன் இவளை நல்ல வாயிலயே மிதிப்பான் பாரு. அப்புறமென்ன உதய்பூர் சமஸ்தானமே எங்களது தான்! ஹாஹாஅஹாஅஹா”



இந்த காணொளியை தொடர்ந்து இன்னும் வேறு சில முக்கிய ஆதரங்கள் சிக்கி இருப்பதாகவும். அவருக்கு பெயிலில் வெளியே வர இயலாத பிடிவாரண்ட் பிரப்பித்திருப்பதாகவும் காவல் துறை ஆய்வாளர் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். அதோடு இந்த காணொளியில் குறிப்பிட பட்டுள்ள உதய்பூர் ராஜகுமாரி சம்யுக்தா தேவியின் மேல் கொலை முயற்சி, சட்ட விரோதமாக ஆயுதம் பதுக்கல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது. ராஜகுமாரி சம்யுக்தா தேவிக்கு தற்போது கைது வாரண்ட் பிரப்பித்திருப்பதாகவும் அவரது குற்றங்களுக்கும் தகுந்த அதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.”



தீடிரென்று அறையின் விளக்குகள் பளிச்சிட்டன. அவள் காதோரமாக ஏதோ உராய்வதை அவளால் உணர முடிந்தது. புகழினி பதறியடித்து கொண்டு கட்டிலில் எழுந்து அமர்ந்தாள். அவள் கணவன் ஷிவேந்திரன் தான் அவளை குறு குறுவென்று பார்த்து கொண்டு அவள் எதிரே அமர்ந்திருந்தான்.

“தெய்வா குட்டி, என்னடா இன்னும் முழிச்சிட்டு இருக்க தூக்கம் வரலையா?”

“ம்ம்ம்ம்ம் அந்த சம்யுக்தா இருக்காங்கள்ளெ அவங்கள பத்திதேன் நினைச்சிட்டு இருந்தேங்க.”

“நீ அவளை பத்தி நினைக்க என்ன இருக்கு?”

“உங்க மேல அவிய்ங்களுக்கு அம்புட்டு ஆசை! அதேன் என்னையெ கொன்னுப்புட்டு உங்கள கட்டிக்கிட கிடந்தாய்ங்க, இல்ல!” என்றாள் ஆச்சர்யமான குரலில்.

“வாவ் தெய்வா குட்டி! உன்னை மாதிரி வீட்டுக்கு ஒருத்தி இருந்தா போதும், சக்களத்தி சண்டையே இந்த நாட்டுல வராதுன்னா பாரேன்!” என்றான் பரிகாசமான குரலில் கூறிவிட்டு அவளுக்கு திருஷ்டி கழித்தான்.

“உண்மையாதேன் சொல்றாய்ங்களா? இல்லை என்னைய வரண்டு இழுக்குறாய்ங்களா?” மனக் குழப்பத்துடன் நிமிர்ந்து கணவனை ஓரவிழியால் நோக்குவதும் நிலம் நோக்குவதுமாக இருந்தாள்.

ஷிவேந்திரன் கட்டிலில் இருந்து எழுந்து சென்று ஃபிரிட்ஜை திறந்து இரு குடுவைகளை கைகளுக்கு ஒன்றாக எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்தவன் அவளிடம் ஒரு குடுவையை நீட்டினான்.

“இந்தா ஜூஸ் குடி.”

புகழினி மறுப்பேதும் சொல்லாமல் சற்று தயக்கத்துடன் வாங்கி கொண்டாள். அவள் குடுவையை உருட்டி உருட்டி பார்வையிடுவதை கண்டவன் சொடக்கிட்டான் இரு முறை. திடுக்கிட்டு நிமிர்ந்தவளிடம் புன்னகைத்தபடி ‘குடி’ என்பது போல் சாடை காட்டினான். விமன்யா அதே போல் குடுவையை கைகளில் ஏந்தி கொண்டும் குடித்து கொண்டும் அலைவதை அவள் பார்த்திருக்கிறாள். மெதுவாக அந்த குடுவையை உயர்த்தி பருகினாள். ஷிவேந்திரன் அவளை ஓரக்கண்ணால் சிரிப்புடன் நோக்கினான். அடுத்த சில வினாடிகளில்,

“அய்ய்ய்ய்ய்ய்ய்ய் த்த்த்தூஊஊஊஊஊஊஊ உவ்வாஅஆஆஆ”
 
Status
Not open for further replies.
Top