All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

Status
Not open for further replies.

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8



பாரீஸ் நகரம்...



சூர்யா வரும் நாளை தெரிந்து கொண்ட பிரேமா, சூர்யா வரும் போது “நான் நம் வீட்டில் இருக்க வேண்டும்” என நேத்ரனிடம் கொஞ்சி கெஞ்சி மிரட்டி ஒருவாறு வீட்டிற்கு வந்திருந்தார்.



எப்படியும் இன்னும் இரு தினங்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்ய இருந்ததால் எந்த சிரமமும் ஏற்படவில்லை. டாக்டர்.கைலாஷ்யிடம், நேத்ரன் ஏற்கனவே ஒரு செவிலியை தன் தாயாருக்கு துணையாக (அவர் காயங்கள் குணமாகி கட்டுகள் பிரிக்கும் வரை) ஏற்பாடு செய்திருந்தான். மருத்துவர்கள் சில பல அறிவுரைகளுடன் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.





மருத்துவமனையில் இருந்து கிளம்பும் முன்னர் நேத்ரன், தங்கம்மாவிடம் வேறொரு அறையினை தயார் செய்ய சொல்ல அவருக்கு அலைபேசியில் அழைக்க நினைத்து அலைபேசியினை எடுக்க பிரேமா அவனிடம், “யாருக்கு கண்ணா கால் பண்ற...” என கேட்டார்.



நேத்ரன், “ உங்களுக்கு வேற ரூம் ரெடி பண்ண சொல்லி தங்கம்மா கிட்ட சொல்ல தான் ம்மா” என்றான் குரல் காரகரக்க.



ஒரு நிமிடம் கண்மூடி ஆழ்ந்த மூச்சினை வெளிவிட்டவர் பின்பு தன்னை சமன்செய்து கொண்டு, “வேற ரூம்மெல்லாம் வேண்டாம் கண்ணா, பழையபடி நானும் அப்பாவும் இருந்த ரூமையே ரெடி பண்ண சொல்லு” என்றார். என்னதான் சாதாரணம் போல் சொன்னாலும் அவரின் குரலில் வேதனையின் சாயல் இருக்கத்தான் செய்தது.





தன் தாயின் வேதனை குரலில் கலக்கமுற்று அமைதி காத்த நேத்ரன், சிறிதுநேர மௌனத்திற்கு பின் தன்னை சமாளித்து கொண்டு, “ வேண்டாம்... ம்...ம்மா, அந்த ரூம்ல இருந்த உங்களுக்கு அப்பா நினைவாவே இருக்கும் உங்க மைண்டும் டிஸ்டர்ப் ஆகும்...” என்றவனிடம், “ இல்ல கண்ணா, உங்க அப்பாவோட நினைவும் அவரோட ஞாபகங்களும் தான் இனிமே என்னோட மீதி இருக்குற லைப்க்கு அந்த ரூம்ல இருந்தா மட்டும் தான் உன்னோட அப்பாவின் நினைவு வரும்னு இல்ல நான் உயிரோட இருக்குற கடைசி நிமிடம் வரை என் கணவரோட நினைவுகள் என்னிடம் இருக்கும்” என்று கூறிய பிரேமாவை தேற்றும் பொருட்டு அமர்ந்திருந்தவரை அணைத்து கொண்டான் நேத்ரன். இருவரின் கண்களிலும் கண்ணீர் ஒருவர் அறியாமல் மற்றொருவர் அதனை மறைத்தனர்.



இருவரும் தங்களின் மனவருத்தம் மற்றவரை பாதிக்க கூடாது என்று சிறிதுநேரம் அமைதியாக இருக்க அந்த அமைதியினை முதலில் கலைத்த நேத்ரன், “ ஓகே மாம், உங்களுக்கு அந்த ரூம்ல இருந்த தான் சந்தோசம் நிம்மதினா உங்க இஷ்டப்படியே உங்க ரூமையே தங்கம்மா கிட்ட ரெடி பண்ண செல்லிடுறேன் ம்மா...”



நேத்ரன், தங்கம்மாவிடம் பிரேமாவின் அறையை தயார் செய்ய சொல்ல இந்த விஷயம் கேள்வியுற்று தங்கம்மா, மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.



மருத்துவமனையின் விதிமுறைகளை எல்லாம் முடிந்து ஒருவழியாக வீட்டிற்கு வந்துவிட்டார் பிரேமா. சக்கர நாற்காலியில் பொலிவிழந்து அமர்ந்து இருக்கும் பிரேமாவை, கண்கலங்க பார்த்தார் தங்கம்மா. நேத்ரனின் கண்ணசைவில் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு சிரித்த முகமாய் வந்தவரை ஆரத்தி கரைத்து வரவேற்றார் தங்கம்.



தங்கத்தை பார்த்து புன்னகைத்த பிரேமா, “ என்ன தங்கம், எப்படி இருக்க...” என அவரிடம் நலம் விசாரித்து கொண்டே வீட்டினுள் நுழைந்தார்.



“ நீங்களும்,தம்பியும் இருக்கும் பொழுது எனக்கு என்னமா குறை நீங்க ஆஸ்பத்திரில இருக்கும் போது தம்பிய பார்க்க தான் ரொம்ப கவலையா இருந்தது. இப்ப நீங்க வீட்டுக்கு வந்ததும் தான் தம்பியின் முகமே தெளிவா இருக்கு...” என்றார் தங்கம். (ஐய்யோ! தங்கம்மா உங்களுக்கு விஷயமே புரியில இன்னைக்கு நைட் சூர்யா வரா அதான் உங்க தொம்பி முகம் தெளிவா பிரகாசமா இருக்கு ).



செவிலி பெண், பிரேமாவின் சக்கர நாற்காலியை தள்ள முற்படும் பொழுது அவரை தடுத்து தானே தன் அன்னையை அவரின் அறைக்குள் அழைத்து( சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு) சென்றான் நேத்ரன்.



பிரேமாவினால் என்னதான் முயன்றாலும் அந்த அறையினில் நுழைந்தவுடன் ஒருவித வெறுமை,வருத்தம்,வலி போன்ற உணர்வுகள் தோன்றுவதை தடுக்க முடியவில்லை.



தன் தாயின் மன உணர்வுகளை அவருடைய முகமாறுதலில் புரிந்து கொண்டு பிரேமாவின் தோள்களில் கை வைத்து அழுத்தம் கொடுத்த நேத்ரன், “ம்மா,ப்ளீஸ் எதையும் யோசிக்காதீங்க ஜஸ்ட் ரிலாக்ஸ்...” எனச் சொல்லி அவரை அங்கிருந்த படுக்கையில் படுக்க வைத்தான்.



அதற்குள் தங்கம்மா, பழரசம் கொண்டுவர நேத்ரன், பிரேமாவின் முதுகு புறத்தில் தலையணையை முட்டு கொடுத்து சாய்ந்த வாக்கில் அமர வைத்து அவருக்கு பழரசம் புகட்டினான்.



அருந்தி முடித்தவர், “கண்ணா, இங்க சூர்யா எத்தனை மணிக்கு வருவா யாரை அனுப்ப போற ஏர்போர்ட்டுக்கு...” என்று கேட்டார்.



“ சூர்யா, இன்னைக்கு நைட் 9 இல்ல 9.30க்குள்ள வந்துடுவாமா நானே நேரில் போய் கூட்டிக்கிட்டு வரேன் எந்த பிரச்சனையும் வரக்கூடாது இல்ல இப்ப உங்களுக்கு ஹாப்பியா ம்மா...” என்றான் கமலநேத்ரன். ( இதுல உனக்கு என்னமோ ஏகப்பட்ட வருத்தம் போல சொல்லுற ).



“ சரிம்மா, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க நல்ல ரெஸ்ட் எடுங்க நைட் சூர்யாவோட வரேன்... (டேய், என்னமோ ஊருக்கு போன பொண்டாட்டிய கூட்டிட்டு வர மாதிரி சொல்லிட்டு போற உன் நடவடிக்கை ஒண்ணும் சரியா படலை) ஓகே வா... பை ம்மா...” என சொல்லி சென்றான் கமலநேத்ரன்.



செல்லும் தன் மகனை பார்த்துக் கொண்டிருந்தவரிடம் வந்த தங்கம், “அம்மா, நர்ஸு தங்க உங்களோட ரூமுக்கு பக்கத்தில் இருக்குற ரூம் உங்களுக்கு வசதியா இருந்த அதையே தயார் பண்ணச்சொன்னா தம்பி, உங்க கிட்டயும் ஒரு வார்த்தை கேக்க சொன்னாங்க… அதே மாதிரி ஊரில் இருந்து வரவங்களுக்கு எந்த ரூம் ரெடி பண்ணனும்னு உங்க கிட்ட கேட்டு ரெடி பண்ண சொல்லிச்சு...” என்றார்.

தன் மனத்தினை மாற்றும் பொருட்டு அவன் தனக்கு கொடுத்து சென்ற வேலைகளை நினைத்ததும் பிரேமாவின் இதழ்களில் புன்னகை பூத்தது. தன் பதிலுக்காக காத்திருக்கும் தங்கத்திடம், “சரி தங்கம், நர்ஸுக்கு பக்கத்து அறையிலேயே தங்க வசதி பண்ணி கொடுத்துடு. ஏன்னா அந்த அறையில் இருந்து இந்த அறைக்கும் வர நடுவுல ஒரு கதவு இருக்கு. முதல்ல நேத்ரனோட அப்பா, அந்த ரூம்மை தான் ஆபீஸ் ரூம்மா யூஸ் பண்ணாங்க. அப்பறம் தான் நேத்ரன் மாடியில் அவனோட அறைக்கு பக்கத்தில் செட் பண்ணிக்கிட்டான்...”



“ ஊரில் இருந்து வரபோறது சூர்யா, அவ யாரு என்ன இதைப் பத்தி எல்லாம் உனக்கு முன்னாடியே சொல்லி இருக்கேன். அவளை பொறுத்தவரை இந்த வீட்டில் வேலை பார்க்க வரா நீயும் அப்படியே நடந்துக்க. சூர்யாவுக்கு மாடில நேத்ரனோட ரூமுக்கு எதிரில் இருக்கும் அறையை ரெடி பண்ணிடு சரியா “ என்றார்.



பிரேமா, சொல்லிய அனைத்திற்கும் சரியென தலையசைத்து விட்டு தங்கம், தன் வேலையினை பார்க்க சென்றார்.



இங்கே அலுவலகத்திற்கு வந்த கமலநேத்ரன், எதிலும் கவனம் செலுத்த முடியாமல் திண்டாடினான். மிகவும் கஷ்டப்பட்டு நேரத்தினை தள்ளிக்கொண்டிருந்தான். இப்படியே இருந்தால் சரிவராது என தன் மனத்தினை முயன்று வேலையில் கவனம் செலுத்த சிறிது நேரத்தில் அவனின் வேலைகள் அவனை முழுமையாக உள்ளவாங்கி கொண்டது.



இரவு 7 மணியானவுடன் இதற்குமேல் தன்னால் சமாளிக்கமுடியாது என விமான நிலையம் நோக்கி கிளம்பினான் கமலநேத்ரன். தன் உயிருக்கு உயிரானவளை காண்பதிற்கு...



விவேக்கினால், எந்தவித இடையூறும் நேரக்கூடாது என்ற பதட்டம் ஒருபுறமும் ஐந்து நெடிய வருடங்கள் கழிந்து தன்னவளை காணும் ஆவல் மறுபுறம் என தன்னுடைய அடையாளங்கள் அனைத்தையும் மறைத்து கொண்டு தன்னவளுக்காக அந்த புகழ் பெற்ற விமான நிலையத்தில் பேராவலோடு காத்துக் கொண்டிருந்தான் நேத்ரன்.



விமானம் தரை இறங்கும் அறிவிப்பு வந்தவுடன் நேத்ரனின் உடலில் ஒரு பரபரப்பு தொற்றி கொண்டது. விடலை பையனின் மனநிலையை போல் ஒருவித படபடப்புடன் நின்று கொண்டிருந்தான். அவனின் மனநிலை குறித்து அவனுக்கே சிரிப்பாக இருந்தது. எத்தகைய சூழ்நிலையிலும் நிதானம் தவறாது தன் மனஉணர்வுகளை கட்டுக்குள் வைத்து தெளிவாக சிந்திக்கும் வல்லமை பெற்றவன். இன்று தன்னவளை பார்க்கும் ஆவலில் அவனின் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தவித்தான்.



பயணியர்கள் வரும் “அரைவல்” பகுதியில் தன்னுயிரினை தேடிக்கொண்டிருந்தான். அவன் தேடலை ஒரு முடிவிற்கு கொண்டுவருவது போல் சூர்யா வந்து கொண்டிருந்தாள். அவளை காண காண அவளை தன்னுள் இறுக்கி அணைத்து கொள்ள அவன் கைகளும் உள்ளமும் பரபரத்தன... அவை இரண்டிற்கும் தடை விதித்தவன் அவளை கண்களில் வழியே தன் உயிரில் நிறைத்தான்.



தன்னவளின் உருவத்தினை அணு அணுவாக ரசித்து பார்த்து கொண்டிருத்தான்.



பேபி பிங்க் நிற டாப், நீல நிற ஜீன்ஸ் அணிந்து கையில் ஜெர்கின், பல மணிநேர பயணத்தில் முகத்தில் ஏற்பட்ட சோர்வு.தோகை போன்ற கூந்தலை மொத்தமாக சேர்த்து மேலே தூக்கி போனி டைல் போட்டிருந்தாள். எந்தவித ஒப்பனையும் இன்றி அவனைவள் அவன் கண்களுக்கு பேரழகியாகவே தோன்றினாள்.



கண்களில் அமைதி நடையில் நிதானம் தோற்றத்தில் நிமிர்வு என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் கண்ட சூர்யாவில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டிருந்தாள்.

சூர்யா, விமான நிலையத்தின் வாயிலை நெருங்கி வரவர தன் மனத்தினையும் அதனுள் எழும் எண்ணங்களையும் கட்டுப்படுத்த முடியாமல் தன்னையும் மீறி தன்னவளை (அவள் இப்பொழுது இருக்கும் மனநிலையில்) காயப்படுத்தி விடுவோம் என இதற்கு மேல் இங்கே நிற்க கூடாது என வண்டியினை நோக்கி சென்றான் நேத்ரன்.



வண்டியில் அமர்ந்த பின்னும் அவனின் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தான் இழந்து விட்டதாக நினைத்த தன்னுயிர் தன்னிடமே வந்தடைந்ததில் அவனின் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை. வண்டியின் ஸ்டைரிங்கை தன் விரல்களால் அழுந்த பற்றி தன்னை சமன் செய்ய முயன்றான்.



ஓரளவு தன் முயற்சியில் வெற்றி பெற்று காரினை வாயிலில் கொண்டு வந்து நிறுத்தி சூர்யா வந்துவிட்டாளா என பார்க்க சூர்யா தன் பயண பொதிகளை பெற்றுகொண்டு அந்த புகழ் பெற்ற சர்வதேச விமான நிலையத்தின் அழகு, பிரம்மாண்டமான கட்டமைப்பு ஆகியவற்றை தன் விழிகளால் ரசித்து பார்த்துக்கொண்டு ( பார்த்துமா சூர்யா, அங்க ஒருத்தனுக்கு ஸ்டோமக் பர்னிங் ஆகுது) அதனின் வரலாற்றினை சிந்தித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தாள்.



ரோஸி விமான நிலையம்(உள்ளூர் மாவட்டத்தின் பெயர்) இது பிரான்சில் உள்ள மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாகும். இது உலகின் பத்தாவது பசிபிக் விமான நிலையமாகும். ஐரோப்பியாவின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமாகும்.



பாரீஸ்... சார்லஸ் டி கோயில்( charles de gaulle) விமான நிலையம் 32.38 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் (12.50 சதுர மைல்) பரப்பளவை கொண்டுள்ளது. டெர்மினல்கள் மற்றும் ஒடுப்பாதைகள் உள்ளிட்ட விமான நிலையம்.



1966 ஆம் ஆண்டில் ஏரோட்போர்ட் டி பாரிஸ் நோர்ட் (பாரிஸ் நோட்டோ விமான நிலையம்) என்று அறியப்பட்ட திட்டமிடல் மற்றும் நிர்மாண கட்டம், மார்ச் 8,1974 அன்று சார்லெஸ் டி கோலே விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.



டெர்மினல் 7 செயற்கைக்கோள்களால் சூழப்பட்ட பத்து மாடிகள் உயர் சுற்று வட்டார கட்டிடத்தின் ஒரு புதுமை வடிவமைப்பு. வடிவமைப்பில் கட்டப்பட்டது. ஒவ்வொன்றும் ஆறு வாயில்கள் சூரிய உதயம் துளைகளுக்குள் நுழைய அனுமதிக்கிறது. முக்கிய கட்டிடக் கலைஞர் பால் ஆண்ட்ரூ, அடுத்த பத்தாண்டுகளில் விரிவாக்கங்களுக்கான பொறுப்பாளராக இருந்தார். இன்னும் பல தகவல்களை சொல்லி கொண்டிருந்த தன் தம்பி ஜீவாவினை பார்த்து, தன் கரங்களினால் இரு காதுகளை மூடிகொண்டு, “ டேய், ஸ்டாப் ஸ்டாப் போதும் நிறுத்துடா. நான் பாரீஸ்ல இருக்க ஒரு நிறுவனத்தொட MD வீட்டுல போய் வேலை பார்க்க போறேன். நீ என்னமோ நான், பாரீஸ் சார்லஸ் டீ கோயில் ஏர்போர்ட்ல வேலை பார்க்க போற மாதிரி இவ்வளவு இன்பர்மேஷன் சொல்லிக்கிட்டு இருக்க இதையெல்லாம் தெரிஞ்சி நான் என்னடா பண்ண போறேன். இவ்வளவு விஷயத்தை என் மூளைக்குள்ள ஏத்துன்னா அது வெடிச்சிடும். மீ...பாவம் என்னை விட்டுடு வலிக்குது...” என சூர்யா வடிவேலு பாணியில் ஜீவாவை கலாய்த்து கொண்டிருந்தாள்.



அதில் கடுப்புற்ற ஜீவா, அவளின் முதுகில் இரண்டு சாத்து சாத்திவிட்டு, “ ஏய்...பூ...ச...ணி, உனக்கு கொஞ்சம் கூட ஜெனரல் நாலேட்ஜ் வளர்த்துக்கணும்னு எண்ணமே இல்ல. நீதான் வளரல அட்லீஸ்ட் அதையாவது வளர்த்துக்கோ...” என்றவனை முறைத்து பார்த்தவளை... இந்த பார்வைக்கு எல்லாம் நான் அசரமாட்டேன் என தன் சட்டையில் ஏதோ தூசி தட்டுவது போல் தன் கைகளால் தட்டிவிட்ட ஜீவா,“ ஒரு இடத்துக்கு போறதுக்கு முன்னாடி அந்த இடம் எப்படி அதனோட ஹிஸ்டரி ஜாக்ராபி (geography). இது எல்லாம் தெரிஞ்சி வச்சிக்கிட்டா அந்த இடத்துக்கு போய் பார்க்கும் பொழுது அந்த இடத்தோட பிரம்மாண்டம் பிரமிப்பா இருக்குமே தவிர பயமுறுத்தாது பூசணி...” அதனை நினைத்து கொண்டே அனைத்தையும் பார்வையிட்ட சூர்யா, ஜீவாவின் வார்த்தைகளில் உள்ள உண்மையை உணர்ந்து தன் மனத்திற்குள் ஜீவாவிற்கு நன்றியுரைத்தாள்.



வேடிக்கை பார்த்துக் கொண்டே சூர்யா, விமான நிலையத்தின் வாயிலை நெருங்கி இருந்தாள். குளிர் காற்று உடலினை ஊசி போல் துளைக்க கைகளில் வைத்திருந்த ஜெர்கினை அணிந்துக் கொண்டு அங்கிருந்த வாகனங்களில் கிருஷ்ணா, சொன்ன வண்டி உள்ளதா என பார்வை இட்டாள். ( எண், நிறம், காரின் பெயர் என அனைத்தும் சொல்லி இருந்தான் கிருஷ்ணா). வண்டியினை கண்டு அதன் அருகில் வந்தாள் சூர்யா. அவளை பார்த்துக் கொண்டே வண்டியினை விட்டு கீழிறங்கி அவளை பார்த்து புன்னகைத்து “பியென்வேண்யூ (bienvenue (வெல்கம்)) டு பாரீஸ் மேடம் என கூறி கார் கதவினை திறந்து வைத்து காத்திருந்தான் கமலநேத்ரன். ( பத்து பேர் இவனுக்காக வேலை செய்ய காத்துக் கொண்டிருக்க இவனோ அவளுக்கு சேவை செய்ய காத்து கொண்டிருக்கிறான் எல்லாம் காதல் செய்யும் மாயம்).



அவனை பார்த்து லேசாக இதழ்களை விரித்து சிரித்தாள் சூர்யா. ‘ஐய்யோ..! கிருஷ்ணா, காரோட நம்பர், கலர், மாடல் எல்லாம் சொன்னியே வரவரோட பேரு என்னன்னு சொன்னியா (அவன்தான் சொல்லலை நீ கேக்க வேண்டியது தானே என்றது மனசாட்சி) கம்பெனி கார் டிரைவரோட வெயிட் பண்ணும்ன்னு சொன்னான். ஆனா இவன(நேத்ரன்) பார்த்தா டிரைவர் மாதிரி தெரியலையே...’ என தன் மனத்திற்குள் சொல்லி (புலம்பி) கொண்டே காருக்குள் ஏறிகொண்டாள்.



அவள் அமர்ந்ததும் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரினை தன் இல்லம் நோக்கி செலுத்தி கொண்டிருந்தவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து கொண்டிருந்தது.’வாய் ஓயாம பேசுவா நான் வெல்கம் சொல்றேன். ஒரு தேங்க்ஸ் சொன்னா இவ என்ன குறைஞ்ச போய்டுவா. முன்ன பின்ன தெரியதாவங்களை பார்க்கும் பொழுது கர்டஸிக்காக ஜஸ்ட் ஒரு சின்ன ஸ்மைல் பண்றாது போல பண்றா கஞ்சுஸ்...’ (தம்பி, நீதான் அவளை ஐஞ்சு வருஷத்துக்கு முன் பார்த்த அவ இல்ல அவளை பொறுத்த வரை நீ யாரோ தான்) என சூர்யாவிவை மனத்திற்குள் வறுத்தெடுத்து கொண்டிருந்தான் கமலநேத்ரன்.



சூர்யா, பின் சீட்டில் அமர்ந்து மூடிய ஜன்னல்களின் வழியே பாரீஸ் நகர சாலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அதை முன்புறம் இருந்த கண்ணாடியில் கண்ட நேத்ரனின் நினைவுகள் பின்னோக்கி சென்றன.





அவள் உயிரானவன்
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9



ஐந்து வருடங்களுக்கு முன்பு...



ஒரு திருமணத்தில் தான் கமலநேத்ரன் சூர்யாவினை முதல்முறை பார்த்தது. தன் பாட்டியின் கட்டாயத்திற்காக அந்த திருமணத்தில் கலந்துகொள்ள வந்தான் நேத்ரன். தன் குடும்பத்தினர் அனைவருடனும் மண்டபத்தினுள் சென்றவன் அங்கு செய்யப்பட்டிருந்த அலங்காரங்களையும் நடைபெற்று கொண்டிருக்கும் சடங்குகளையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அவனின் பாட்டி காமாட்சியையும் அவன் அன்னை பிரேமாவையும் அங்கு வந்துள்ள இவர்களின் சுற்றத்தில் உள்ள பெண்கள் சூழ்ந்துக் கொண்டனர். கமலநாதனை, கல்யாண வீட்டார் சபையில் முன் வரிசையில் அமர செய்தனர். சத்யமூர்த்தி அவரின் அங்காளி பங்காளிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். நேத்ரன், அவர்களிடம் இருந்து சற்று பின்தங்கி திருமண மண்டபத்தில் நடக்கும் அனைத்தையும் பார்க்கும் வண்ணம் ஜன்னலின் ஓரமாக ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.



அப்பொழுது ஒரு குரல், “என்னடா அப்படி பார்க்குற. நான் என்னமோ பொய் சொல்லுற மாதிரி நல்லா பாருடா நான் கோட்டை மிதிக்கவே இல்ல...” என அங்கிருந்த நண்டு சிண்டுகளிடம் வழக்கடித்து கொண்டிருந்தாள் சூர்யா.



“என்னடா அப்படி பார்க்குற...” என்றதும் தன்னை தான் சொல்கிறார்களோ யாரது என சுற்றும் முற்றும் தன் பார்வையினை ஓட்டினான் கமலநேத்ரன்… ஜன்னலின் அருகாமையில் குரல் கேட்கவும் அங்கே தன் பார்வையை செலுத்தினான். பார்த்தவன் தன் கண்களை சிமிட்ட மறந்து பெண்ணவளை ரசித்து கொண்டுருந்தான்.



அவன் இவளை விட பல அழகிய பெண்களை கடந்து வந்துள்ளான் தான் . அந்த குழந்தை முகமும், துறுதுறு என அசைந்தாடும் நயனங்களும், அவளிடம் அவனை ஈர்த்தன. அவனே அனைவரையும் வசீகரிக்கும் வசீகரன். அந்த வசீகரனையே வசீகரித்தாள் இந்த வசீகரி.



அழகிய மெஜந்தா வண்ண லெஹங்காவில் அதற்கு பொருத்தமான அணிகலன்களுடன் மிதமான அலங்காரத்தில் மங்கையவளை கண்டு மயங்கினான் மன்னவனும்… தன்னை மறந்து பெண்ணவளை ரசித்து கொண்டிருந்தவனின் தோளினை தட்டினார் அவனின் தாத்தா கமலநாதன். தன் ரசித்தலுக்கு வந்த தடையினை விரும்பாமல் முகத்தை சுழித்துக் கொண்டே சற்றும் குறையாத எரிச்சலோடு, ‘ம்...ச்...’ யார் என திரும்பி பார்த்தான்.



தன் தாத்தாவை கண்டதும் தன் முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாது நிமிடத்தில் சரிசெய்து கொண்டு, “என்ன... தாத்தா...” என்றவனின் முகத்தில் வந்து சென்ற உணர்வுகளை என்ன தான் அவன் மறைத்தாலும் அதனை கண்டுகொண்ட கமலநாதன், “என்னடா பேராண்டி, கல்யாணத்துக்கு வரவே மாட்டேன்னு அந்த பேச்சு பேசின இப்ப என்னடா அமைதியா ஒரு ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க என்ன விஷயம் இங்க இருக்குற பொண்ணுங்களில் யாரையாவது பிடிச்சிருந்தா சொல்லு...” என்றவரை முறைத்து பார்த்து விட்டு, “ இதுக்கு தான் நான் இந்த மாதிரி கல்யாணத்துக்கு எல்லாம் வர மாட்டேன்னு சொன்னேன். சும்மா எதையாவது சொல்லிக்கிட்டு போங்க அங்க பாட்டி உங்களை கூப்பிடுறாங்க...” என அவரின் வாயை அடைத்து விட்டு ஒருவாறு அவரின் கேள்விகளில் இருந்து தப்பித்து மண்டபத்தின் வெளியில் வந்தான்.



தன் தந்தையும், தன் மகனும் பேசியதையும் தன் மகன் முகத்தை சுழித்துக் கொண்டு வெளியில் சென்றதையும் பார்த்த சத்யமூர்த்தி, தன் தந்தையிடம், “ அப்பா, ஏன் நேத்ரன், முகத்த ஒருமாதிரி வெச்சிக்கிட்டு வெளியே போறான். அவனுக்கு இங்க ரொம்ப போர் அடிக்குதாமா அதனால தான் உங்க கிட்ட கோவிச்சிக்கிட்டு போறானா ...” என்ற தன் மகனை, “நீ எப்பவுமே இப்படி தானா இல்ல இப்படிதானா எப்பவுமே அவன் சைட் சீயிங் பண்ணிக்கிட்டு இருந்தத நான் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு கடுப்புல போயிருக்கான் நீ வேற நேர காலம் தெரியாம...”





“ மகனே, உன் புள்ளைக்கு கல்யாண வயசு வந்தாச்சு...” என்றவரிடம், “ யாருப்பா, அந்த பொண்ணு, நீங்க பார்த்தீங்களா..? “ என்றுக் கேட்டார் சத்யா.



“ எங்க நான் பார்க்கறத்துக்குள்ள அந்த பொண்ணு திரும்பிடுச்சி உன் புள்ளைய பாலோ பண்ணா அது யாருன்னு தெரிஞ்சிட போகுது வா போய் பார்க்கலாம்...”



அவனையும் அறியாமல் அவனின் கண்கள் அவள் (சூர்யா), இருந்த திசையினை நோக்கின. இன்னமும் அவள் அங்கிருந்த சிறுவர் சிறுமியரிடம் வம்பு வளர்த்து கொண்டிருந்தாள்.



கல்யாண மண்டபத்தின் பக்கவாட்டில் உள்ள இடத்தில திருமணத்திற்கு வந்திருந்த சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் அனைவரும் ஒன்று கூடி பாண்டி விளையாடி கொண்டிருந்தனர்.



வலது இடது என இருபுறமும் இடைவெளி இல்லாமல் நான்கு நான்கு கட்டங்கள் வரைந்து மொத்தம் எட்டு கட்டங்கள் மேலிருந்து கீழ் நோக்கி ஒரு சிறு கல்(ஓடு)லினை தூக்கி போட அந்த கல் கட்டங்களை தாண்டி விழ வேண்டும். பின்பு கண்களை மூடி கொண்டு இரண்டு கால்களையும் ஓவ்வொரு கட்டங்களில் வைத்து கோட்டினை மிதிக்காமல் ‘ரைட்ஆ... ராங்ஆ’ என கேட்டுக் கொண்டே ஓவ்வொரு பெட்டிகளையும் தாண்ட வேண்டும். கோட்டினை மிதித்தால் அவர்கள் தொடர்ந்து ஆடும் வாய்ப்பை இழந்திடுவார்கள் இது தான் விதிமுறை.



சிறார்கள் விளையாடுவதை பார்த்த சூர்யா, அவர்களுக்கு பலவாறு லஞ்சம் (அதாங்க சாக்லேட் ) கொடுத்து தன்னையும் அவர்களுடன் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள சொல்ல பாவம் அவர்களும் சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு இவளிடம் சிக்கி கொண்டனர் முதலில் நான்தான் விளையாடுவேன் என்று ஆடத் தொடங்கினாள்.



இரண்டு பெட்டிகள் தாண்டும் முன்பே கோட்டினை மிதித்துவிட்டாள். ஆனால் அவள் அணிந்திருந்த முழு நீள பாவாடை அவளை காப்பாற்றியது. அங்குள்ள ஒரு பொடிசு, “அக்கா, நீ கோட்ட தாண்டுறியா இல்ல மிதிக்குறியா ஒண்ணும் தெரியமாட்டிங்குது. கொஞ்சம் டிரஸ்ஸ கைல பிடிச்சுக்க...க்கா...” என்றது. சூர்யாவும், (‘ஐய்யோ! பாவாடை இருக்கறதால நாம அவுட் ஆகலை இந்த நண்டு,கரெக்ட்டா பாயிண்ட் பண்ணி சொல்லுதே வெசம் வெசம் அம்புட்டும் வெசம்...’ என மனத்திற்குள் திட்டி கொண்டு) என்ன செய்யலாம் என சிந்தித்து கொண்டே சரியென்று அடுத்த அடி எடுத்து வைத்து “ரைட்ஆ... ராங்ஆ” என்றாள். அனைத்து சிறார்களும் குதுகாலத்துடன், “ராங் ...” என கூச்சலிட்டனர். இம்முறையும் சூர்யா, கோட்டினை மிதித்து விட்டிருந்தாள். ஆனால் அதனை ஒத்துக் கொள்ளாமல் அவர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள்.



“நல்ல பாரு...க்கா, கோட்ட நீ மிதிசிட்ட நீ அவுட்...” என்றது… அதற்குள் தன் கால்களை கோட்டில் இருந்து நகர்த்தி வைத்துவிட்டு, “இல்லடா, நீங்க எல்லாரும் நல்லா பாருங்க... நான் கோட்ட மிதிக்கவே இல்லை” என்றாள் சூர்யா.



பிரேமா தன் சொந்த பந்தங்களிடம் நலம் விசாரித்து விட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார். அப்பொழுது அவரை நோக்கி வந்து கொண்டிருந்த பெண்மணியை பார்த்ததும் பிரேமாவின் முகத்தில் அளவிட முடிய சந்தோசம் வந்தவரின் முகத்திலும் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்த பிரேமா, அவரை நோக்கி தானும் எட்டுவைத்து சென்று அவரின் கைகளை பற்றிக்கொண்டார்.



“ காயூ, எவ்வளவு நாளாச்சு உன்னை பார்த்து எப்படி இருக்க? சிவா அண்ணா எப்படி இருக்காங்க? பசங்க என்ன பண்றாங்க...?” இப்படி தொடர் கேள்விகளை கேட்டவரை பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தது வேறு யாரும் இல்லை நம் சூர்யாவின் அன்னை காயத்ரி தான்.



பிரேமா, காயத்ரி இருவரும் தோழிகள். பக்கத்து பக்கத்து ஊர் என்றாலும்... பள்ளி, கல்லூரி என அனைத்தும் சேர்ந்தே பயின்றனர். பிரேமாவின் செல்வநிலை எப்போதும் இவர்களின் நட்பிற்குள் ஒரு பிரச்சனையாக வந்ததில்லை பிரேமாவிற்கு தான் ஒரு பணக்காரி என்ற கர்வம் துளி கூட கிடையாது அவரின் இந்த குணமே சத்யாவை மிகவும் கவர்ந்தது.



திருமணத்திற்கு பிறகு அவரவர் வாழ்க்கை அவரவர் வழியில் சென்றது. இது போன்ற விஷேசங்களில் பார்த்து தங்களின் நட்பை வளர்த்து கொண்டனர். அதுவும் அரிதாக பிரேமா, வெளிநாட்டில் இருந்து இங்குள்ள விசேஷங்களுக்கு வருவது என்பது அரிது. கிடைக்கும் சந்திப்புகளில் இவர்கள் தங்களின் நட்பை புதுப்பித்து கொள்வார்கள்.



“ எங்க காயூ, உன் பசங்களும் இந்த கல்யாணத்திற்கு வந்திருக்காங்களா” என பிரேமா கேட்ட பிறகே,

காயத்ரிக்கு, வெகு நேரமாக தன் மகளை காணாது தான் ஜீவாவிடம், அவளை தேடி அழைத்து வர சொன்னது நினைவுக்கு வந்தது.



“ ஆமா பிரேமி, எல்லாரும் தான் வந்திருக்கோம். நீ இங்கேயே இரு நான் போய் பசங்கள அழைச்சிகிட்டு வரேன்...” என காயூ மகளை கூப்பிட்டு வர சென்ற மகனை காணவில்லை என இருவரையும் தேடிச் சென்றார்.

ஜீவாவிற்கு, தன் தமக்கையை பற்றி தெரியும் ஆதலால் அவன் எங்கே சிறியவர்கள் விளையாடுகிறார்களோ அங்கே எல்லாம் சென்று பார்த்துவிட்டு கடைசியில் மண்டபத்தின் வெளியில் வந்தான். அங்கே சிறுவர்களோடு தன் அக்கா, வழக்கடித்து கொண்டிருந்ததை கண்டு சுற்றும் முற்றும் எங்காவது தங்களின் அன்னை இருக்கின்றாரா என பார்த்தவன், சூர்யாவினை நெருங்கி அவளின் தலையில் ஒரு கொட்டு வைத்து, “ ஏய்...லூசு, இங்க என்ன பண்ற காயூ மட்டும் நீ இப்படி வம்பு பண்றத பார்த்தாங்க. காயூ மாதா, காளி மாதவா மாறிடுவாங்க...” என்ற ஜீவாவை, பார்த்து தன் தலையினை தேய்த்து கொண்டே, “ஏன்டா... பக்கி, இப்படி கொட்டுன வலிக்குதுடா...” என்றவளிடம்.



“ காயூ, வந்தா இன்னும் டபுள் ஸ்ட்ரோங்கா கொடுப்பாங்க பரவாயில்லையா..” என இருவரும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்தவர்களை நோக்கி காயத்ரி வந்து கொண்டிருந்தார்.



இருவரையும் தேடி வந்தவர் சூர்யா, செய்த சேட்டைகளையும் ஜீவா, பேசியவற்றையும் கேட்டவர் உண்மையாகவே காளி மாதாவாக மாறி இருந்தார்.



இருவரின் அருகில் சென்ற காயத்ரி, சூர்யாவின் கை பற்றி, “வந்த இடத்துல கூட சின்ன புள்ள மாதிரி சேட்டை, சிரிப்பு கொஞ்சமாவது அடக்க ஒடுக்கமா அமைதியா ஒரு இடத்தில் இருக்க கூடாதா...” (காயூம்மா, இப்படி சொல்ற நீங்க தான் அப்புறமா என் பொண்ணோட சிரிப்பும் குறும்பும் திரும்பி எப்போ பார்க்க போறேன்னு புலம்ப போறீங்க. அது தெரிஞ்சா இப்ப இப்படி சொல்லி இருக்க மாட்டீங்கல்ல) என ஒரு பெரும் சொற்பொழிவே ஆற்றினார்.



சூர்யாவும், ஜீவாவும் ஒய்... பிளட்... சேம்... பிளட் ரியாக்சனோடு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்.



இவை அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த நேத்ரனுக்கு, தன்னையும் அறியாமல் அவனின் உதடுகள் புன்னகை பூத்தது. அதுவும் காயூ திட்டும் பொழுது இருவரது முகங்களையும் பார்த்து நேத்ரனினால், சிரிப்பினை கட்டுப்படுத்த முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். பின்னே தனியாக நின்று சத்தமாக சிரித்தால் பார்ப்பவர்கள் அவனை என்னவென்று நினைப்பார்கள்



‘அவங்க அவ்வளவு திட்டுறாங்க ரெண்டும் கொஞ்சமாச்சும் ரியாக்ட் பண்ணுதுங்களா பாவம் அந்த ஆண்ட்டி…’ (வருங்கால மாமியாருக்கு இப்பவே சப்போர்ட் நீ பொழச்சிப்ப)



சூர்யாவை பற்றி சிந்தித்துக் கொண்டே தன் தலை கோதிக் கொண்டு திரும்பியவனை எதிர்கொண்டனர்... அவனின் தாத்தாவும், அவனின் அப்பாவும். இருவரையும் கண்டு அதிர்ந்தாலும் அதனை காட்டாது சாதாரணம் போல், “ என்ன தாத்தா, ரெண்டுபேரும் இங்க நின்னுகிட்டு இருக்கிங்க “ என்றவனை பார்த்து “அதையே தான் நாங்களும் உன்ன கேக்கிறோம் நீ இங்க நின்னுகிட்டு என்ன பண்ற...” என்றார் கமலநாதன்.



“அது ஒண்ணும் இல்ல தாத்தா ஜஸ்ட் சும்மா வேடிக்கை பார்க்க வந்தேன்...” என்றவனை நம்பாத பார்வை பார்த்தனர் இருவரும். அவர்களின் பார்வைக்கும், கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறினான் கமலநேத்ரன். இதற்கு காரணமானவளோ தன் அன்னை மற்றும் தம்பியோடு வாய் மூடாமல் பேசிக்கொண்டே சென்றாள்.





தன் ஒரு வார்த்தையினால் எதிரில் உள்ளவர்களை திணற வைத்தவனை ஒரு வார்த்தை பதில் சொல்ல முடியாமல் திணற வைத்தாள்.



அவள் உயிரானவன்


 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10



திரும்பிய நேத்ரன், தன் தந்தை மற்றும் தாத்தா இருவரையும் சற்றும் எதிர்பார்க்காததினால் வந்த அதிர்ச்சி ஒரு புறம் என்றால் தான் செய்து கொண்டிருந்த செயலை நினைத்து தன்னை தானே நொந்து கொண்டான்.



இருவரும் அவனை குறுகுறுவென பார்த்து வைக்க தன் முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் நிர்மலமாக வைத்து கொண்டான்.



இருவரும் அவனை கேள்வி கேட்கும் முன் இவனே(நேத்ரனே ), முந்திக் கொண்டு “அவர்களிடம் ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க” என்றுக் கேட்டான்.



கமலநாதனோ மனத்திற்குள், ‘நான் உனக்கு தாத்தன் டா என்கிட்டயே வா’ என ஒரு மிதப்பான பார்வை பார்த்துக் கொண்டே, “அதையே தான் பேராண்டி, நாங்களும் கேட்கின்றோம். நீ இங்க என்ன பண்ற” என்றார்.



கமலநேத்ரனோ ‘இவர் பார்த்துட்டு கேக்கிறாரா இல்ல நம்ம கிட்ட போட்டு வாங்க பார்க்குறாரா ஒண்ணுமே புரியலியே’ என மனத்திற்குள் சொல்லி கொண்டு, “அது ஒண்ணும் இல்ல தாத்தா, ஜஸ்ட் சும்மா வெளிய வந்தேன் பசங்க விளையாடிக்கிட்டு இருந்தாங்க அப்படியே நின்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்” என்றான்.



“ டேய் டேய், சும்மா கதை விடாதடா, நீ என்ன பார்த்தேங்கிறத நானும் பார்த்தேன். இப்ப நீ உண்மை சொல்லலை இத அப்படியே போய் உங்க பாட்டி கிட்ட சொல்லிடுவேன் எப்படி வசதி” என சற்று மிரட்டும் தொனியில் கேட்டார் கமலநாதன்.



மகன் மற்றும் தந்தையின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த சத்யா, தன் மகனிடம் கண்களால் என்னவென்று வினவினார்.



அதற்குள் கமலநாதன், “கண்ணப்பா, உனக்கு அந்த பொண்ணை பிடிச்சி இருந்தா சொல்லுயா, யாரு என்னன்னு விசாரிக்கலாம்” என்றார் கண்களில் பேரனின் திருமணத்தினை காணும் ஆசை பளபளக்க.



தன் தந்தைக்கு, கண்களை மூடி திறந்து நத்திங் என தலையினை இட வலமாக ஆட்டி சமாதானம் செய்தவன் தன் தாத்தாவினை முறைத்து கொண்டே,

‘ஐய்யோ..! இந்த தாத்தா, அடங்கவே மாட்டாரா’ என மானசீகமாக தன் தலையில் அடித்துக்கொண்டான் கமலநேத்ரன்.



அங்கிருந்த இருக்கையில் இருவரையும் அமரவைத்தவன் இருவருக்கும் இடையில் அமர்ந்து கொண்டு இருவரின் கைகளையும் பற்றிக் கொண்டான்.



“ தாத்தா, நீங்க சொல்ற மாதிரி அந்த பொண்ண எனக்கு பிடிச்சி இருக்கு. பட் அது லவ்வா அப்படின்னு எனக்கு சொல்ல தெரியலை. அது எப்படி பட்ட பிடித்தம்னா அழகான பூ, குழந்தை இதை எல்லாம் ரசிப்போம் இல்லையா அது மாதிரி தான் இதுவும் (உன் ரசனையில் தீய வைக்க) எனக்கெல்லாம் லவ் அட் பிரஸ்ட் சைட் ஒர்க்அவுட் ஆகாது பார்த்து ரசிச்சி திகட்ட திகட்ட காதலிக்கணும். அதே மாதிரி காதலிக்கப்படணும். கல்யாணம் பண்ணிக்கிட்டு காதல் பண்றதெல்லாம் எனக்கு செட் ஆகாது...” ( நீ இப்படியே பேசிக்கிட்டு இரு உனக்கு யாரும் செட் ஆகமாட்டாங்க)



நேத்ரன் சொல்லியவற்றை எல்லாம் கேட்டு ஒரு பெரும் மூச்சினை விட்டார் கமலநாதன். இவன் சொல்றத கேட்டோம் ஸ்ட்ரயிட்டா இவனுக்கு அறுபதாம் கல்யாணம் தான் பண்ண முடியும். இது வேலைக்கு ஆகாது நாமளே களத்திலே இறங்கிட வேண்டியது தான் என யோசித்துக் கொண்டே நாற்காலியில் இருந்து எழ போனவரை, “பாட்டி கிட்ட இதைபத்தி எதுவும் சொல்ல கூடாது... ப்ளீஸ் தாத்தா, எனக்கு கொஞ்சம் யோசிக்கணும்” எனக் கூறி தனிமையை நாடி சென்றான்.



ஆம் அவனுக்கு தெளிவாக சிந்திக்க வேண்டும். உண்மையில் அந்த பெண்ணின் மீது தனக்குள்ளது ரசனையுடன் கூடிய ஈர்ப்பா அல்லது உயிருக்கு உயிரான நேசமா என்று பிரித்து பார்க்க முடியாமல் தன்னுள் தடுமாறினான். எத்தகைய சிக்கலான பிரச்சனைக்கும் தீர்வு சொல்லும் திறன் உடையவன் தன் மனம் செல்லும் திசை அறியாது தடுமாறினான். இப்படியே யோசித்து கொண்டிருந்தால் ஒரு முடிவுக்கும் வர இயலாமல் யோசிக்க யோசிக்க மூச்சு முட்டுவது போல் இருக்க. வந்த வழியே சென்றால் தாத்தா மற்றும் தந்தை இருவரிடமும் மறுபடியும் சிக்கி கொள்வோம் என மற்றொரு வாயில் இருக்க அதனை நோக்கி சென்று கொண்டே தன் மனஅழுத்தம் குறைக்கும் பொருட்டு வலது கையினால் தலையினை கோதி கொண்டு அந்த மண்டபத்தினை கண்களால் அளந்து கொண்டே நடந்தான். அவள் எங்கேயாவது இருக்கிறாளா என பார்க்க... (அடப்பாவி, அங்க என்ன பேச்சு பேசுன ஜஸ்ட் ரசனை காதல் இல்லைனு தனியா வந்து 10 செகண்ட் கூட ஆகலை அதுக்குள்ள அவளை உன் கண் தேடுது) அவன் பார்வை வட்டத்திற்குள் சிக்கினாள் சூர்யா.



தன் தாயுடன் சென்றவள் எதிரில் தன் தந்தை வரவும் அவருடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டாள். இதனை கவனிக்காத காயத்ரி ஜீவாவுடன், பிரேமாவை சந்திக்க சென்றார்.

சிவா, “ ஏன்டா, அம்மாகூட போகலை” என்றவரிடம், “அப்பா, காயூ டார்ச்சர் தாங்க முடியலை யார் கிட்டயாவது கூட்டிகிட்டு போய் அறிமுகம் செய்து வைக்கிறேன்னு இவதான் என் பொண்ணு பேரு சூர்யா, வயசு 19 B.Sc(ஹோம் சயின்ஸ்) படிக்கிறா இன்னும் ஒரு வருஷத்தில் படிப்பை முடிச்சிடுவா அப்பறம் கல்யாணத்துக்கு பார்க்கணும். உங்களுக்கு தெரிஞ்ச மாப்பிள்ளை யாராவது இருந்தா சொல்லுங்கன்னு சொல்றாங்க ப்பா...” என்று கூறி பெருமூச்சினை வெளியிட்டாள்.



அவள் கூறிய பாவனையில் சிரித்துவிட்ட சிவா, “ஏன்டா குட்டிம்மா, உங்க அம்மா சொல்றதுல என்ன தப்பு இருக்குடா. உன் படிப்பு முடியவும் அடுத்தது உனக்கு கல்யாணம் பண்ணனும் தானே” என்ற தந்தையின் தோளில் ஒரு செல்ல சிணுங்களுடன் சாய்ந்து கொண்டு, “இல்ல ப்பா, எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். நான் மாஸ்டர் டிகிரி பண்ணனும் அப்பறம் வேலைக்கு போகணும். அதுவும் இல்லாமல் இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் செய்துகிட்டு உங்களை எல்லாம் பிரிஞ்சி போங்க எனக்கு இஷ்டம் இல்லை ப்பா” என்று கொஞ்சலாக ஆரம்பித்து கவலையாக முடித்தாள் சூர்யா.



தன் தோளில் தலை சாய்ந்து கொண்டிருக்கும் மகளின் தலையை பரிவுடன் வருடி கொடுத்தவர். மகள் சொல்வதிலும் நியாயம் இருக்க இன்னும் ஒரு மூன்று வருடத்தில் பெரிதாக ஒன்றும் ஆகிவிடாது என நினைத்து, “சரிடா குட்டிம்மா உங்களுக்கு படிக்கணும்ன்னு ஆசை இருந்தா படிங்க வேலைக்கு போறதை பத்தி அப்பறம் யோசிக்கலாம். இல்ல உங்களுக்கு வேற யாரையாவது பிடிச்சுருந்தாலும் சொல்லுங்க” என்றவரை முறைத்து பார்த்து கண்ணையும் மூக்கையும் சுருக்கிக் கொண்டு, “அப்படி எனக்கு யாரையும் பிடிக்காது எனக்கு படிக்கணும் வேலைக்கு போகணும் அதுக்கு அப்புறம் நீங்க பார்க்குற மாப்பிள்ளையை வேணா போன போகுதுன்னு கல்யாணம் பண்ணி அந்த பையனுக்கு லைப் கொடுக்கிறேன். அதுவரைக்கும் உங்க ஓய்ப் காயூ கிட்ட சொல்லி வைங்க மாப்பிள்ளை பார்க்குறேன் மண்ணாங்கட்டி பார்க்குறேன்னு ஏதாவது செய்ய போறாங்க” என்று சொல்லி விட்டு சிவாவை லேசாக கண்களால் மேல் நோக்கி பார்க்க இவள் பார்ப்பதை கண்டு கொண்டவர் அவள் தலையில் வலிக்காது தட்டிவிட்டு,



“ எப்படி பாப்பா, நீ அந்த பையனுக்கு போனா போகுதுன்னு வாழ்க்கை தரியா...? உனக்கு உங்கம்மா சொல்ற மாதிரி வாய் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு டா...” என்றார் சிரித்து கொண்டே



சிவாவிடம் சூர்யா கூறியதை கேட்டு நேத்ரனின் உதடுகளில் புன்னகை பூசிக்கொண்டன. அடிப்பாவி இப்பதானே உங்க அம்மாகிட்ட அவ்வளவு வாங்குன இப்ப இங்க வந்து இப்படி பேசுற அடங்கவே மாட்டியா நீ ( அட போப்பா, அதெல்லாம் சூர்யாவுக்கு ஜூஜூபி சும்மா தூசி மாதிரி தட்டிட்டு போய்கிட்டே இருப்பா ) எப்படி டாலி, போனா போகுதுன்னு பாவம் பார்த்து அந்த பையனுக்கு நீ லைப் கொடுக்குறியா சூப்பர் பேபி ( உனக்கு காதல் மட்டும் பார்த்த உடனே வராது பார்க்க பார்க்க தான் வரும் ஆனா செல்ல பேர் மட்டும் எப்படிடா, பார்த்த உடனே வைக்கிற)



தனியாக வந்ததும் தன் மனம் சூர்யாவை தேடியதை கண்டு கொண்ட நேத்ரன் ‘டாலி… ரியலி யூ டிஸ்டர்பிங் மீ லோட்’ என மனத்திற்குள் சொல்லியபடி கேசத்தினை தன் கைகளினால் கோதிக் கொண்டான்.



‘தேங்க்ஸ் பேபி, நான் ரொம்ப குழப்பத்தில் இருந்தேன்… இப்ப நீயே எனக்கு டைம் கொடுத்திருக்குற டாலி, நீ உன்னோட ஸ்டடிஸ்ஸ கம்பிளீட் பண்ணு அதுக்குள்ள எனக்கு இருக்குற குழப்பங்கள் தெளிவாயிடும் உங்க அப்பா கிட்ட நீ பேசுனத கேக்காம இருந்திருந்தா என்னோட குழப்பங்கள் தீர்ந்தவுடனே அடுத்த செகண்ட் உன்ன பார்க்க வந்திருப்பேன். ஆனா இப்போ நீ உன்னோட ஸ்டடிஸ் முடிக்குற வரை நான் இந்தியா வரமாட்டேன் ஏன்னு கேக்குறியா எனக்கு எப்படி என் மனசுக்கு நிறைவா உன்மேல் உள்ளது காதல் தான்னு எந்த ஒரு குழப்பமோ கட்டாயமோ இல்லாம நான் சந்தோஷமா பீல் பண்றனோ அது மாதிரி நீயும் யாரோட கட்டாயமும் எந்த வித மன சுணுக்கமும் இல்லாம சந்தோஷமான மனநிலையோடு நாம சந்திச்சு நம்ம கல்யாணம் முடிவாகணும். என்ன டாலி, இவன் மட்டும் நம்மள லவ் தான் பண்றேன்னு சொல்ல டைம் எடுத்துக்குறான். நமக்கு மட்டும் டைம் கொடுக்காம ஸ்ட்ரயிட்டா மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொல்றான் னு பார்க்குறியா என்ன பண்ண நீ உன் டாட் கிட்ட கொடுத்த ஸ்டேட்மெண்ட் அப்படி...’ என தன் மனத்திற்குள் தன் மனம் கவர்ந்தவளிடம் உரையாடினான் நேத்ரன் வரும் காலத்தில் நடக்க போவது தெரியாமல்.



அங்கே காயத்ரி, பிரேமாவிடம் தன் மகனை அறிமுகம் செய்து வைத்து விட்டு பின்தொடர்ந்து வந்துக் கொண்டிருந்த மகளை திரும்பி நோக்க அவளை காணாது ஜீவாவை காண அவனோ மிகவும் சிரமப்பட்டு கீழ்உதடுகளை மடித்து வரும் சிரிப்பினை கட்டுப்படுத்தி கொண்டிருந்தான்.

“ ஜீவா, சூர்யா எங்கடா..?” என்ற அன்னையிடம் தன் உதடுகளை பிதுக்கி அப்பாவியாக இடவலமாக தலை அசைத்து, “ தெரியாதும்மா, நாம வரும் வழியில் அப்பா வந்தாங்க ஒருவேளை அக்கா, அப்பா கூட இருக்கலாம் “ என்றான். (என்ன நடிப்புட சாமி மிடியல)



ப்ரேமாவிடம், “என்ன ஆண்ட்டி..? எப்படி இருக்கீங்க...” என அவரின் நலன்களை பற்றிக் கேட்டு கொண்டிருந்தான்.



காயத்ரி ‘என்னை புலம்ப விடுறதே அவளுக்கு வேலையா போச்சு’ என மனத்திற்குள் மகளை தாளித்து கொண்டே, “சரிடா ஜீவா, நீ போய் அக்கா வராளா னு பாரு...” என அவனை அனுப்பி வைத்தார்.



ஜீவா மற்றும் காயத்ரியின் முகபாவங்கள் கவனித்த பிரேமா இதழ்களை புன்னகை வந்தமர்ந்து கொண்டது. மகனை அனுப்பிவிட்டு திரும்பியவரை பிரேமாவின் புன்னகை வரவேற்க காயத்ரி, தோழியின் புன்னகைக்கு காரணம் புரிந்து, “ ரெண்டும் அறுந்த வாலுங்க இதுங்க கூட அவங்க அப்பாவும் சேர்ந்துகிட்டா அவ்வளவு தான் வீட்டையே இரண்டு பண்ணிடுவாங்க” என சிரிப்புடனே சலித்து கொண்டார். வெளியில் சலித்து கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களை நினைத்து உள்ளம் உவகையில் நிறைந்தது.



இருவரும் பழங்கதைகளை பேசிக்கொண்டிருந்தனர். இவர்கள் இருவரையும் தூரத்தில் வரும் பொழுதே கண்ட நேத்ரன், தன் தாயிடம் சென்றான். (பயப்புள்ள, அம்மா தனியா இருக்கும் பொழுது போகலை இப்ப கூட மாமியார் இருக்கவே போய் அட்டெண்டென்ஸ் போடுற நீயெல்லாம் நல்லா வருவடா)



தன் அருகில் யாரோ அமரும் அரவம் கேட்டு திரும்பிய பிரேமா, தன் மகனை கண்டவர் காயத்ரியிடம் அவனை அறிமுகம் செய்து வைத்தார்.

நேத்ரனை கண்டவர் நம்ப பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது இப்படி அழகான பையனா தான் பார்க்கணும். சூர்யாப்பா கிட்ட சொல்லி வைக்கணும். ( காயூம்மா, இவனே உங்களுக்கு மாப்பிள்ளையா வர ஐடியாவில தான் இருக்கான்)ச்



நேத்ரனும் அழகாக புன்சிரிப்புடன் காயூவிற்கு வணக்கம் சொன்னான். சிறிது நேரம் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தவனை இசைத்து அழைத்து அவனின் அலைபேசி.



காயூவிடமும், தன் அன்னையிடமும் விடைபெற்று கொண்டு, அலைபேசியை தன் காதில் வைத்து பேசிக்கொண்டே வந்தவனை வழிமறித்தனர் கமலநாதனும் , சத்யாமூர்த்தியும் அவர்களிடம் ஒரு நிமிடம் என கைகாட்டிவிட்டு அலைபேசியில் தன் உரையாடலை தொடர பொறுமை இழந்த கமலநாதன், அவனை முறைத்து கொண்டிருந்தார்.



அவரின் பார்வை உணர்ந்து மேலும் அவருடைய பொறுமையை சோதிக்காமல் அலைபேசியை அணைத்து தன் பாக்கெட்டில் போட்டு கொண்ட நேத்ரன், எதிரியையும் வசீகரிக்கும் தன் புன்சிரிப்புடன் தன் தாத்தாவை பார்த்து “சாரி” என சொல்ல அம்முதியவரின் மனம் இவன் பால் சரிந்தது.



“ சொல்லுங்க தாத்தா, என்ன விஷயம்” என்றவனை, “பேசிக்கிட்டு இருக்கும் போது பாதியிலேயே வந்துட்டு இப்ப வந்து என்ன விஷயம்னா கேக்குற” என்றார் கமலநாதன்.



அவரின் தோள்களில் கை போட்டு கொண்ட நேத்ரன், “அதான் அப்பவே சொல்லிட்டேனே இப்ப என்ன திரும்பவும் இன்னும் கொஞ்ச நாளைக்கு இதைபத்தி பேசாதீங்க” என்றவனை… “ நேத்ரா, நீ சொல்லுறது எனக்கு புரியுது. ஆனா ஒருவேளை அந்த பொண்ணு நீ லவ் சொல்லி மறுத்துட்டாலோ நீ உன்னோட லவ் பீல் பண்றதுக்குள்ள அவளோட பரெண்ட்ஸ் வேற யாருக்காவது அவளை மேரேஜ் பண்ணி வெச்சிட்டா என்னடா பண்ணுவ. இதே அவங்க பேரெண்ட்ஸ் மூலமா மேரேஜ் அரேன்ஜ் பண்ணிகிட்டு நீ பொறுமையா உன்னோட லவ்வ பீல் பண்ணிக்கோடா சொன்னா கேளு” என்றார் கமலநாதன் எப்படியும் அவனை திருமண பந்தத்தில் நுழைக்க.



“ டாட், உங்களுக்கு நியாபகம் இருக்கா மாம், ஒரு லைன் சொல்லுவாங்க ப்ரொவேர்ப் மாதிரி”



“ ஒருத்தன் பொண்டாட்டிய அடுத்தவன் கட்ட முடியாதுன்னு அந்த லைன் உண்மைனா எனக்கு அந்த பொண்ணு தான் ஒய்ஃப் இதுல எந்த மாற்றமும் இல்ல. வரும் நாட்களில் தான் ஏன் இப்படி சொன்னோம் என நொடிக்கொரு முறை வருத்தப்பட்டு தவிக்க போவதை முன்பே அறிந்திருந்தால் அவன் தாத்தா கேட்டவுடன் திருமணத்திற்கு சம்மதித்து இருப்பான் விதி யாரை விட்டது.



வந்தது வந்தோம் காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களை தரிசித்து விட்டு செல்லலாம் என காயத்ரி கூற அனைவரும் சரியென்று புறப்பட்டனர்.



அவன் உயிரானவள்…
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

"என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்"..... கதையோட அத்தியாயம் 7,8,9,10 போட்டுடேன்... டியர்ஸ் rerun story தான்...

guys, கதையை படிக்கிறீங்களா... புடிச்சி இருக்க... கூடவே
உங்க நிறை குறைகளையும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க...

[/URL][/URL]


தனசுதா...
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11



முதலில் அவர்கள் சென்றது காஞ்சி மாநகரையே தன் அருள் பார்வையால் காத்து ராட்சிக்கும் அன்னை காமாட்சி அம்மன் திருக்கோயில்.



நான்கு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக கோபுரங்கள். அம்மன் குடியிருக்கும் கருவறைக்கு மேல் பசும் பொன்னால் மின்னும் தங்க கோபுரம் கரும்பு வில்லினை ஒரு கையிலும், தாமரையுடன் கிளியை இன்னொரு கையிலும் தாங்கி முடியில் பிறை சந்திரனை சூடி கருணையினை மழையாய் பொழியும் கமல நயனங்களுடனும் பீடத்தில் பத்மஹசன யோகா நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள்.



இது 51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும் இக்கோயில் மகா சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கின்றது.



ஸ்ரீ ஜகத்குரு ஆதிசங்கரர் சொல்லியது போல அன்னையின் அழகினை காண கோடி கண்கள் இருந்தாலும் போதாது.



கோயிலின் உள்ளே பிராகாரங்களும், தெப்பகுளமும், நூறுகால் மண்டபமும் தனி அழகு. இக்கோயில் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்டது.



தங்கள் மக்களின் நல்வாழ்விற்காக எல்லாம் வல்ல அன்னையினை வேண்டிக்கொண்டனர். சிவா மற்றும் காயத்ரி தம்பதியினர்.

அடுத்து அவர்கள் சென்றது பஞ்ச பூத ஸ்தலங்களில் பூமி அதாவது ப்ரித்வி ஸ்தலமாக விளங்கும் ஏகாம்பரநாதர் உடனுறை எலவார்குழலி அம்மை அருள் பாலிக்கும் ஸ்தலம். திருக்கச்சியேகம்பம் இத்தலத்தின் விருட்சம் மாமரம் அக்கால மக்கள் சைவம் வைணவம் இவ்விரண்டையும் சமமாக போற்றியுள்ளார் என்பதற்கு சான்று இக்கோயிலில் நின்ற கோலத்தில் திருக்காட்சியளிக்கும் நீலகிங்கல் துண்டம் பெருமாள்.



அப்படியே அவர்கள் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் வரதராஜ பெருமாள் கோயில் சென்று பெருமாளையும் பெரும்தேவி தாயாரையும் தரிசித்தனர்.



கைலாச நாதர் கோயில் இக்கோவில் பல்லவ கட்டிட கலைக்கு சான்றாகும். பூசலார் நாயனார் அவர்களின் மனகோவில் கும்பாபிஷேகத்திற்கு செல்லும் பொருட்டு பல்லவ மன்னனின் கனவில் வந்த சிவபெருமான், இக்கோவிலின் குடமுழுக்கு வைபவத்தை வேறு ஒரு நாளில் மாற்றி வைக்க சொல்லியதாகவும் மன்னனும் அவரே செயல்பட்டதாக கூற படுகிறது. இக்கோவிலில் உள்ள லிங்க திருமேனி பிரம்மாண்டம் தனிஅழகு. குமரகோட்டம், கச்சிபேஸ்வரர் கோயில், உலகளந்த பெருமாள் கோயில் என அனைத்து திருக்கோயில்களை தரிசித்துவிட்டு சென்னை அடைந்தனர்.



சூர்யா தான் ஆசைப்பட்டது போல் இளங்கலை மற்றும் முதுகலை தேர்ச்சி பெற்றாள். அவளுக்கு சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து பணிக்கான நியமனம் வந்தது.



அதன் பிறகுதான் மங்கை அவள் வாழ்வினில்

மாற்றம் பல வந்தது வந்த மாற்றங்கள்

யாவும் நங்கை வாழ்வினில் நன்மை

பயக்காமல் போனது தான்

விதியின் விளையாட்டு.



மூன்று ஆண்டுகள் முற்று பெற்ற நிலையில் தன்னவளின் மேல் தான் கொண்ட காதலினை முழுமையாக உணர்ந்து அவளை தன் உயிர் மூச்சாக சுவாசித்து கொண்டிருந்தான் நேத்ரன்.



இனியும் தன்னவளை பிரிந்திருக்க முடியாது இருவருக்கும் சேர்த்து தான் ஒருவனே காதலித்து கொண்டிருக்க அக்காதலின் கணம் தாங்காமல் அதனை தன்னவளுடன் பகிர்ந்து கொள்ள அவனின் இதயம் துடித்தது.



இவன் இந்தியா செல்ல ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த வேளையில் அவனின் உயிர் பறிக்கும் ஒரு செய்தி வந்தது.



யாருடைய மகிழ்ச்சிக்காக தன் காதலை உணர்ந்த பின்னும் அமைதி காத்தானோ அவளே அவனின் உயிர் பூவில் வெந்நீர் ஊற்றினாள்.



பிரேமாவிற்கு காயத்ரி தன் மகளின் திருமணத்திற்கு அழைப்பு அனுப்பி இருந்தார். ஊருக்கு பத்திரிக்கை வைக்க சென்றவர் அங்கு தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர். கமல் நிறுவனத்தில் பணியில் உள்ளவர் விடுமுறைக்கு வந்திருப்பதாக அறிந்து அவரிடம் அழைப்பிழை கொடுத்து மறக்காமல் கொடுக்க சொன்னார்.



சிவா மற்றும் காயூ இருவரும் திரு.கமலநாதன் மற்றும் காமாட்சி அவர்களுக்கும் பத்திரிகை வைக்க சென்றனர். அந்நேரம் அவர்கள் தங்களின் நெருங்கிய பங்காளியின் வீட்டிற்கு ஒரு துக்க காரியமாக சென்றிருந்தனர். வீட்டில் வேலை செய்பவர்கள் விவரம் சொல்லவும் பத்திரிக்கை வைக்காமல் கிளம்பி விட்டனர்.(விதி தீயா வேலை செய்யுது யார் என்ன பண்ண முடியும்). இவர்கள் பத்திரிகை வைத்திருந்தால் ஒருவேளை சூர்யாவின் வாழ்வு மலர்ந்து மணம் வீசி இருக்குமோ.



பத்திரிகை கிடைத்தவுடன் காயத்ரியை தொடர்பு கொண்ட பிரேமா சிலபல நல விசாரிப்புகளுக்கு பிறகு, “ஏய் காயூ, மாப்பிள்ளை நல்லா இருக்கார் (மாப்பிள்ளையின் புகைப்படம் பத்திரிக்கையில் இடம்பெற்று இருந்தது) ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு (அத அப்படியே உங்க புள்ளைக்கிட்ட சொல்லுங்க) மாப்பிள்ளை உங்களுக்கு சொந்தமா இல்ல அசலா” என விசாரிக்க காயூ, “விரும்பி வந்து கேட்டாங்க எங்களுக்கும் புடிச்சி இருந்தது சரி சொல்லிட்டோம் “ என்றார். “ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்தால் ஓகே...” என்றார் பிரேமி (ஐயோ..! பிரேமி காயூ சொன்ன விரும்பி வந்து அதற்கு அர்த்தம் மாப்பிள்ளை வீட்டில் இருந்து விரும்பி வந்து பெண் கேட்டாங்க அப்படினு ஆனால் நீங்க புரிந்து கொண்டது இருவரும் விரும்பி இத்திருமணம் நடக்கின்றது என) “என்னால வர முடிஞ்சா வரேன் இல்லனா அத்தை மாமாவை வர சொல்றேன்” என்றவரிடம் தான் பத்திரிக்கை வைக்க போனது, அவர்கள் துக்க வீட்டிற்கு சென்றது என அனைத்தும் கூறினார் காயூ.



திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் காரியம் ஆகாமல் சுப விசேஷங்களுக்கு செல்ல கூடாது அதனால் ஊருக்கு அழைத்து இத்திருமணத்திற்கு செல்வது குறித்து கமலநாதன் தம்பதியர்களுக்கு தகவல் சொல்ல வில்லை பி்ரேமா.

அதனால் கமலநாதனுக்கு சூர்யாவின் திருமணம் பற்றிய விஷயத்தை யாரும் தெரிவிக்க வில்லை.



பிரேமா, தன் மகன் இந்தியா செல்ல இருப்பதால் அவனை இக்கல்யாணத்தில் கலந்து கொள்ள சொல்லலாமா என்ற யோசனையில் இருந்தார்.



இரவில் வீடு வந்தவனிடம், “கண்ணா, நீ எப்ப இந்தியா போற” என்ற அன்னையை, “ஏன்....ம்மா, நீங்களும் என்கூட வரப்போறீங்களா..?” என்று கேட்டான் நேத்ரன்.



“ ப்ச் அது இல்ல கண்ணா, என் பிரெண்டோட பொண்ணுக்கு கல்யாணம் அதான் உன்ன அட்டெண்ட் பண்ண சொல்லலாம்னு தான்” பிரேமா கூறவும் தன் தோழி என்றதும் நேத்ரனுக்கு. சூர்யாவின் தாய் காயத்ரியின் நினைவுதான் வந்தது. அந்த நினைவில் ஒரு நொடி ஆடித் தான் போனான் இந்த ஆறடி ஆண்மகன்.



“ யாருக்கு ம்மா, கல்யாணம்” என்றான் அதிவேகமாக துடிக்கும் தன் இதயத்தினை கட்டுப்படுத்தி கொண்டு,

“ இதோ இந்தா கண்ணா, இன்விடேஷன் ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு. அதுவும் இல்லாமல் ரெண்டு பேரும் விரும்பி இந்த கல்யாணம் நடக்குது. ஊருல இருக்க எல்லாரும் காதல், கல்யாணம் பண்ணிக்கிறாங்க நீ எப்ப தான் கண்ணா, எனக்கு ஒரு மருமகளை கொண்டு வருவேன்னு தெரியல...” என தான் மனத்தில் உள்ளவற்றை புலம்பி கொண்டே அவனிடம் அழைப்பிதழை தந்து விட்டு சமையல் அறை நோக்கி சென்றார் பிரேமா.



“ ச்ச... ச்ச அது டாலியா இருக்காது இருக்கவும் கூடாது… டாலி.... யூ ஆர் மைன் ஒன்லி... யூ ஆர் மை லவ் அண்ட் லைப் போர் எவர்...” என பலமுறை தனக்குள் சொல்லி கொண்டு. அந்த அழைப்பிதழை வாங்கி பிரித்து பார்க்க அதனை கண்டவுடன் யாரோ தன் இதயத்தை இரண்டாக வாள் கொண்டு பிளப்பது போல் இருக்க அந்த வலியினை தாங்க முடியாது இடக்கையினால் தன் மார்பின் இடப்பாகத்தினை அழுந்த பற்றி கொண்டு தன்னுடைய காட்சி பிழையோ என மற்றும் ஒருமுறை அந்த அழைப்பிதழை பார்க்க அது தன்னவளின் புகைப்படம் தான்.



யாருடைய முகத்தை கனவிலும் நினைவிலும் கண்டு மகிழ்ந்திருந்தானோ அவனைவளின் முகமே மணமகனாக தான் இருக்க வேண்டிய இடத்தில வேறு ஒருவனின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. அதனை கண்டு ஆற்றாமை, கோபம், ஏமாற்றம் என இன்னும் பல உணர்வுகளின் பிடியில் சிக்கி தவித்தான் கமலநேத்ரன்.



அதுவும் ஒருவரை ஒருவர் விரும்பி இந்த திருமணம் நடைபெறுகின்றது என்பதை கேள்வியுற்று அவன் உயிர் துடித்தது.



ஏதோ பேய் துரத்துவது போல் அங்கிருந்து அவன் அறைக்குள் இருந்த குளியலறைக்குள் சென்று பூட்டிக்கொண்டான்.



தன் ஆடைகளை கூட கலையாமல் அப்படியே நீருக்கு அடியில் நின்றான். எவ்வளவு நேரம் நின்றானோ அவனுக்கே தெரியாது இருந்தும் அவனின் உணர்வுகள் அடங்க மறுத்தன.



ஒரு கட்டத்திற்கு மேல் நேத்ரன், ‘அவ என்ன உன்ன லவ் பண்றேன்னு சொல்லியா ஏமாத்திட்டா நீ லவ் பண்ணுறதே அவளுக்கு தெரியாது. அன்னைக்கே தாத்தாவின் சொல்படி அவளை திருமணம் செய்திருந்தால் இப்பொழுது இதுபோல் ஒரு நிலை தனக்கு வந்திருக்காது’ என காலம் கடந்து ஞானோதயம் வந்து என்ன பயன்… ‘தாத்தாவும், அப்பாவும் அவ்வளவு சொன்னாங்க கேட்டியா நீ லவ்வ பீல் பண்றேன் கூட்டு பண்றேன்னு இப்ப உன்னோட டாலி உனக்கு இல்ல’ என ஒரு மனம் அவனை குற்றம் சொல்ல.



மறுமனமோ ‘லவ்வ பீல் பண்ணவுடனே சொல்லாம எதுக்கு இவ்வளவு நாள் வெயிட் பண்ண அவளோட சந்தோசம் முக்கியம்னு தானே. இப்பவும் அவளோட சந்தோசம் இந்த கல்யாணம் அப்படினா அதை நீயென் போய் கெடுக்குற’ ( அவ்வளவு நல்லவனடா நீ சொல்லவே இல்ல).



அத்துடன் இவ்விஷயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான் நேத்ரன்.



ஆனால் அவனுள் பல மாற்றங்கள் மனதால் மிகவும் இறுகி போனான் இந்தியா செல்வதை முற்றிலும் தவிர்த்தான் திருமணத்தினை பற்றி பேசினால் தட்டி கழித்தான். மொத்தத்தில் உயிருள்ள ஒரு எந்திரமாக மாறிப் போனான். தாய் தந்தைக்கு மட்டும் நல்ல மகனாக இருந்தான். சத்யாவும், கமலநாதனும் எவ்வளவு கேட்டும் சூர்யாவை பற்றி கூற மறுத்துவிட்டான்.



தன் நினைவுகளில் இருந்து வெளிவந்த நேத்ரன் சூர்யாவை பார்க்க அவள் கொட்டாவி விட்டவாறு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.



‘ எனக்கு பிடிச்ச அந்த துறுதுறு குறும்பு நிறைஞ்ச பழைய டாலியா உன்னை மாத்தலை என் பேரு நேத்ரன் இல்லடி பேபி. இனியும் உன் இஷ்டத்துக்கு விட்ட நான் காலம் முழுக்க திருநீலகண்டர் விரதம் தான் இருக்கணும்...’ என தன் மனத்திற்குள் தன்னுடைய டாலியிடம் செல்ல சண்டை இட்டுக் கொண்டிருந்தான் அந்த காதல் கள்வன் ‘இனி பாரு பேபி மாமனோட பெர்ஃபாமன்ஸ் எப்படின்னு…’



மன்னவனின் காதல் மங்கை வாழ்வதனை மீட்குமா!!!



அவன் உயிரானவள்...







அத்தியாயம் 12



கேட்டிற்குள் கார் நுழைந்ததும் சூர்யா, இறங்குவதற்கு ஏதுவாக காரினை நிறுத்திவிட்டு அவள் இறங்கும் முன் தான் இறங்கி வந்து அவளுக்காக கார் கதவினை திறந்து விட்டான் நேத்ரன்.



இதனை கண்டு அவ்வீட்டில் வேலை செய்யும் மருது, திறந்த வாய் மூடாமல் பார்த்திருந்தார். தன் எஜமானனின் செயலை கண்டு...



மருதுவும் அவர் மனைவி செண்பகமும் தோட்ட வேலை மற்றும் மேல் வேலை செய்பவர்கள் இவர்கள் அங்குள்ள அவுட்ஹவுஸில் வசிக்கிறார்கள். மருது,செண்பகம் இருவருக்கும் குழந்தைகள் இல்லை.



காரில் இருந்து இறங்கிய சூர்யா வீட்டினை நோ...நோ... அந்த மாளிகையை கண்டு வியந்தாள். அதனினும் அங்குள்ள தோட்டத்தினை கண்டு,

தான் ஏதோ ஒரு மலர்வனத்துக்குள் நுழைந்து விட்டதாகவே நினைத்தாள். ஆமாம் அங்கு எல்லா வித மலர்களும் இடம்பெற்று இருந்தன. விழிவிரித்து பார்த்து கொண்டிருந்தவளை நிகழ்விற்கு அழைத்து வந்தது நேத்ரனின் குரல்.



மருதண்ணா, “ இவங்களோட திங்ஸ் எல்லாம் எடுத்திட்டு போய் அவர்களுக்காக அல்லாட் பண்ணி இருக்குற ரூம்ல வைங்க…” என



“சரி…” என்ற மருது, சூர்யாவின் பொருட்களை தூக்கி கொண்டு வீட்டிற்குள் சென்றார்.



திரும்பிய நேத்ரன், “ வாங்க சூர்யா, உள்ள போகலாம்” என்றான் நடந்து கொண்டே, “அம்மா, முழிச்சிட்டு இருக்காங்களான்னு தெரியலை அப்படி அம்மா தூக்கிட்டங்கான்னா நீங்க சாப்பிட்டுட்டு போய் ரெஸ்ட் எடுங்க மோர்னிங் பாக்கலாம்” என





அவன் பேசுவதை பார்த்து சூர்யா ‘டேய், நீ இவ்வளவு பேசுவியா என்கிட்ட காரில் ஏறும் போது வாய்க்குள்ள விளக்கெண்ணை வச்சிட்டு இருந்த மாதிரி வழவழ கொழகொழனு ஒரு விஷ் பண்ணிட்டு இங்க வந்து என்ன பேச்சு பேசுறான்’ என மனத்திற்குள் தாளித்து கொண்டிருந்தாள்.



முன்னே சென்றவன் சூர்யா தன்னை தொடராமல் இருப்பதை கண்டு திரும்பியவன் இவனையே விழி அசையாது பார்த்துக்கொண்டிருந்த அவளுடைய பார்வையில் திகைப்புற்றான்.



‘ டாலி, நீ இப்படியெல்லாம் பார்த்த நடக்குற எதுக்கும் நான் பொறுப்பில்லை. மாமனை ரொம்ப சோதிக்காதடி’ (டேய், அவ உன்னை என்னமோ காதல் பார்வை பார்க்கிற மாதிரி பீல் பண்ற அவளோட பார்வைக்கான அர்த்தமே வேற) என தன்னவளை மனத்திற்குள் செல்லம் கொஞ்சி கொண்டவன். வசீகரிக்கும் புன்னகையினை தன் உதட்டில் படர விட்டு அவளை பார்த்து தன் புருவங்களை மேல் நோக்கி வளைத்து என்ன என வினவ. அவன் சட்டென்று திரும்புவான் என எதிர்பார்க்காததினால் சூர்யா, ஒரு கணம் அதிர அவனின் புன்சிரிப்பிலும் புருவ சுழிப்பிலும் மங்கை மனம் மயங்கியதென்னவோ உண்மை.



தன் மனம்செல்லும் திசை கண்டு தலையினை ஆட்டி அவ்வெண்ணங்களுக்கு தடையிட்டவள், ‘லூஸு சூர்யா, இப்படியா அவனை பட்டிகாட்டான் மிட்டாய் கடைய முறைச்சு பார்க்கிற மாதிரி பார்த்து வைப்ப அவன் உன்னைப் பத்தி என்ன நினைப்பான். காதலிக்கிறதா சொல்லிக்கிட்டு உன் பின்னாடியே சுத்திக்கிட்டிருந்தவன் மேல வராத சலனம் இவன பார்த்ததும் ஏன்? இவன் பேரு கூட தெரியாது. ஏற்கனவே பட்டது எல்லாம் போதாதா இனிமே இவன் சிரிக்கும் போது இவன் கண்ண பார்க்காதே வந்த வேலைய மட்டும் கவனி…’ என தனக்குத் தானே கூறிக்கொண்டவள். அவனை பார்த்து மென்னகை புரிந்து, ஒன்றும் இல்லை என இடவலமாக தலையாட்டிவிட்டு அவனை பின் தொடர்ந்தாள்.



இருவரும் இணைந்து வருவதை கண்டு பிரேமாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவர்கள் இருவரும் கூடிய விரைவில் வாழ்விலும் இணைய வேண்டும் என்று தாயுள்ளம் பேராவல் கொண்டது.



ஹாலில் பிரேமா இன்னும் விழித்திருப்பதை கண்ட நேத்ரன் செவிலியையும், தங்கம்மாவையும் பார்த்து முறைக்க அவன் மேற்கொண்டு பேசும் முன்,“வா கண்ணா, இவங்க தான் நீ சொன்ன சூர்யாவா” என்றார் பிரேமா.



சூர்யாவோ ‘ஒ… இவன் பேரு கண்ணனா’ தன்னுடைய கேள்விக்கான விடை கிடைத்ததாக நினைத்து கொண்டாள்.( உன் மூளையை கொண்டுபோய் மியூசியத்தில் தான் வைக்கணும்)

பேச்சு என்னமோ நேத்ரனிடம் இருந்தாலும் பார்வை முழுவதும் சூர்யாவிடம் தான். அவளை உச்சி முதல் பாதம் வரை தன் கண்களால் தழுவினார். அவரின் உடல்நிலை ஒத்துழைத்து இருந்தால் தன் கைகளால் தழுவி இருப்பார்.



மனத்திற்குள் ‘காயூ அன்னைக்கு உன் மகனை அறிமுகம் படுத்தும் பொழுது உன் மகளையும் அறிமுகம் செய்திருந்தா இந்நேரம் எப்பாடு பட்டாவது அவளை என் மருமகளா கொண்டு வந்திருப்பேன். அவளோட வாழ்க்கையிலும் எந்த பிரச்சனையும் வந்திருக்காது என்ன செய்ய எல்லாம் விதி’ என ஒரு பெரும்மூச்சினை வெளியேற்றினார் பிரேமா. (ஐய்யோ பிரேமி, விதி கொஞ்சம் தான் தன் வேலையை பண்ணுச்சு மீதியை உங்க முன்னாடி இருக்கு பாருங்க இதுங்க ரெண்டும் பண்ணின வேலை)



தன் அன்னையினை பார்த்து முறைத்து கொண்டே,

“ ஆமாம் அம்மா, இவங்க தான் சூர்யா, உங்களோட காம்பானியன் ப்ரம் இந்தியா அண்ட் இவங்க தான் மிசஸ்.பிரேமா” எனக் கூற சூர்யா பிரேமாவினை பார்த்து இருகரம் குவித்து “வணக்கம் மேடம் “ என சொல்ல, பிரேமாவும் தன் தலை அசைத்து அவள் வணக்கத்தினை ஏற்று அவளை தன் பக்கத்தில் இருந்த சோபாவில் அமர சொல்ல தயங்கியவளை வலுக்கட்டாயமாக அமர வைத்து அவளின் பிரயாணம் மற்றும் இன்ன பிற விஷயங்களை பேசிக்கொண்டிருந்தார்.



இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து கொண்டிருந்த நேத்ரனுக்கு தான் ரத்த அழுத்தம் கூடிக்கொண்டே போனது. என்கிட்ட ஒரு வார்த்தை பேசலை இங்க என் அம்மாகிட்ட என்னமோ அவங்களை ரொம்ப நாளா தெரிஞ்ச மாதிரி எவ்வளவு பேசுறா என சிறுபிள்ளை தனமாக பொறாமை கொண்டான் அக்காதலன்.

அவர்களிடம் இருந்து தன் பார்வையினை திருப்ப அங்கு நின்றிருத்த செவிலி, தன்னை தான் நேத்ரன், முறைப்பதாக எண்ணி கொண்டு.



“ நான் சொன்னேன் சார், இவங்க தான் நீங்க வர்ற வரைக்கும் மாத்திரை போட்டுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க சார். சாரி சார், நான் போய் மாத்திரை கொண்டு வரேன் சார்” என ஓராயிரம் சார்களை போட்டவர் விட்டால் போதும் என்று தன்னுடைய அறைக்குள் சென்று மறைந்து கொண்டார்.



தங்கம்மாவும் “ தம்பி, ரொம்ப களைப்பா இருப்பீங்க நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என அவரும் சமையல் அறை நோக்கி சென்றுவிட்டார்.



என்னதான் பிரேமாவிடம் பேசிக்கொண்டிருந்தாலும்

அங்கு நடப்பதை கவனித்து கொண்டிருந்த சூர்யாவிற்கு ‘ஒண்ணும் புரியாத எபெக்ட் தான். இவனை பார்த்து எல்லாரும் ஏன் தெறிச்சி ஓடுறாங்க (ராசாத்தி உண்மை தெரிஞ்சா நீயும் ஓடியிருப்ப). இவன் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா இல்ல அந்த MDக்கு ஜால்ட்ரா போடுறவனா’ என தன் மனத்திற்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தாள்.



“ போதும்...ம்மா, நீங்க போய் டேப்லெட் போட்டுக்கிட்டு படுங்க “ என்றவனிடம், “ இல்ல கண்ணா, என் கம்பானியன் கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு அப்புறமா போய் படுக்குறேன்” என பிரேமா கூற “ ம்மா, இன்னும் அவங்க சாப்பிடலை. அவங்க பிரேஷ்அப் பண்ணிட்டு , சாப்பிட்டு வரதுக்கு டைம் எடுக்கும். சோ, நீங்க போய் தூங்குங்க மீதியை காலையில் பார்த்து பேசிக்கலாம்...” என்ற நேத்ரனை,

‘இவனுக்கு ரொம்பஆஆஆ தான் ....’ என தன் மனத்திற்குள் நொடித்து கொண்ட சூர்யா…



‘எல்லாரையும் தான் அரட்டி மிரட்டுறனு பார்த்தா MD சார், அம்மாவையே ஆதட்டுகிறான்… அந்த வீணா போன MD அவனோட பேரு ஹ....க்..... கமலநேத்ரன், எங்க போனான். உடம்பு சரியில்லாத அம்மாவ விட்டுட்டு நேரம் என்ன ஆகுது இன்னும் வீட்டுக்கு வரலையா? இல்ல வீட்டுல தான் இருக்கானா..?’ ( ஹய்யோ! இந்த கண்ணன(நேத்ரன்), பார்த்ததுல இருந்து ரொம்ப பேசுறேன். காயூ, சொல்ற மாதிரி எனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சி. புதிய இடம் புதிய மனிதர்கள் என மனத்திற்கு ஒரு புத்துணர்வு அளிக்க அதைவிட இத்தனை நாள் மனத்தில் குடிக்கொண்டிருந்த மனஅழுத்ததில் இருந்து விடுப்பெற்ற உணர்வு. மனத்தில் இனம்புரியாமல் பரவும் இதம் என சூர்யா அறியாமலே அவள் மனநிலை மாறி இருக்க அதன் பிரதிபலிப்பாக இத்தனை நாட்களாக அவளுள் மறந்து மரித்திருந்த குறும்பும் துறுத்துறுப்பும் மறுபடியும் உயிர்பெற்றது).







கடவுளே, ‘நான் பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்னு காயூக்கு, சொல்லணுமே எப்படி சொல்றது ஆனா இவன் பேசுனதுலேயே எனக்கு பிடிச்ச ஒரே நல்ல விஷயம் சாப்பாடு தான். எனக்கு வேற பசி எடுக்குது. இப்ப என்ன பண்றது’ என வீட்டினை சுற்றி தன் பார்வையினை சுழற்றினாள்.



சூர்யாவிற்குகென தயார் செய்திருக்கும் அறைக்கு அவளை அழைத்து செல்ல செண்பகம் அவர்களை அழைக்கும் பொருட்டு சமையல் அறை நோக்கி திரும்பியவன் கண்டது வீட்டினை தன் பார்வையால் அளந்து கொண்டிருக்கும் சூர்யாவை தான்.



‘ இவ எதுக்கு வீட்ட இப்படி சுத்தி பார்க்குறா’ என ஒருவித யோசனையோடு நெற்றியினை வலக்கர சுட்டு விரல் மற்றும் பெரு விரலால் நீவி கொண்டவன், “என்ன சூர்யா யாரை தேடுறீங்க” என்றவனிடம்.



“ இல்ல கண்ணன் சார், அது MD சார் வீட்டுல இல்லையா நான் இங்க வந்து சேர்ந்துட்டேன்னு வீட்டுக்கு இன்போர்ம் பண்ணனும் அதான்” என தயங்கி தயங்கி மென்குரலில் கூறினாள் சூர்யா.



அவள் ‘கண்ணன் சார்’ என்றவுடன் தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அதற்கும் ஒருபடி மேலே சூர்யா ‘ MD சார் வீட்ல இல்லையா?’ என கேட்டவுடன் நேத்ரன் மிகவும் கஷ்டப்பட்டு கீழ்உதட்டினை மடித்து கடித்து வந்த சிரிப்பினைஅடக்கி கொண்டான். பிரேமாவால் அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.



பலநாட்கள் கழித்து மனம்விட்டு சிரிக்கும் அன்னையை ஒரு தாயின் வாஞ்சையோடு கண்கள் கலங்க உதடுகள் சிரிக்க பார்த்துக் கொண்டிருந்தான் கமலநேத்ரன்.



சத்தம் கேட்டு வெளிவந்த தங்கம், பிரேமா சிரிப்பதை கண்டு கலங்கிய கண்களை தன் சேலை தலைப்பில் துடைத்து கொண்டு செண்பகத்திடம், பரிமாற எல்லாவற்றையும் தயாராக வைக்கும் படி சொல்லிவிட்டு அவர்களின் அருகில் சென்றார்.



தான் அப்படி என்ன சொல்லிவிட்டோம் இவர்கள் இப்படி சிரிப்பதற்கு, ‘ இந்த கண்ணன் வேற அவங்க சிரிக்கிறதை ஏதோ உலக அதிசயம் போல பார்க்குறான் அவன்தான் அப்படின்னா செய்ற வேலைய விட்டுட்டு வந்து இவங்களும்(தங்கம்), காணாததை கண்ட மாதிரி பார்க்குறாங்க. ஐய்யோ சூர்யா, உனக்கு இப்படி ஒரு சத்தியசோதனையா கடவுளே…’ என தன் மனத்திற்குள் அனைவரையும் பாரபட்சம் இன்றி வறுத்தெடுத்து கொண்டிருந்தாள். ஆனால் வெளியில் அப்பாவி பார்வை பார்த்து வைத்தாள்.( காரணம் என்னன்னு தெரியும் போது இருக்கு யார் பொழப்பு சிரிப்பாஆஆஆ சிரிக்க போகுதுன்னு)



தன் அறையில் இருந்து எட்டி பார்த்த செவிலியிடம் ஒன்றும் இல்லை என தலையசைத்து விட்டு பிரேமாவின் தோளை தொட தன் மகனின் ஸ்பரிசத்தில் ஒருவழியாக தன் சிரிப்பினை கட்டுப்படுத்தி கொள்ள, தன்னையே பார்த்து கொண்டிருக்கும் சூர்யாவை பார்த்து, “நீ இங்க வந்து சேரந்துட்டேன்னு வீட்டுக்கு இன்போர்ம் பண்ணனும் அவ்வளவு தானே” என்றவர் மகனிடம், “கண்ணா, இன்போர்ம் பண்ணி சொல்லிடு” என கூறும் அன்னையை முறைக்க முயன்று சிரித்துவிட்டான் நேத்ரன்.



“ ம்மா, மறுபடியும் மா” என்று அவன் சொன்ன பாவனையில் மீண்டும் பிரேமாவின் இதழ்களில் புன்னகை படர்ந்தது.



தாய் மற்றும் மகனின் செய்கையை கண்ட தங்கம், நேத்ரனிடம் பார்வையினால் என்ன என வினவ இதனை கண்ட பிரேமா தங்கத்திடம், “ தங்கம், உன் முதலாளி வீட்டுல இருக்கிறாரா..? இல்ல வெளிய போய் இருக்காரா..?” என வினவ தங்கம் ஒன்றும் புரியாமல் நேத்ரனை பார்க்க தான் காதில் கேட்டது சரி தானா என மீண்டும் ஒருமுறை பிரேமாவிடம், “என்னமா கேட்டீங்க…?” என்ற தங்கத்திடம், பிரேமா “உங்க முதலாளி வீட்ல இருக்காரான்னு சூர்யாவை, கை காட்டி இவங்க கேட்கிறாங்க” என சொல்ல தங்கமும் சிரித்து விட்டார்.



தங்கம் சிரிக்கவும் சூர்யாவின் முகம் வாடி விட்டது. நாம என்ன கேட்டுட்டோம்னு எல்லாரும் இப்படி ரவுண்டு கட்டி சிரிக்கிறாங்க என மனசுணக்கம் கொண்டாள்.



இதனை கண்ட தங்கம், “என்னம்மா பாப்பாகிட்ட விளையாடிக்கிட்டு பாவம் புள்ள முகம் எப்படி வாடி போயிடுச்சு பாருங்க” என தங்கம் கூற, பிரேமா சூர்யாவினை கைநீட்டி தன் அருகில் அழைக்க சூர்யாவும், சற்றும் சுணங்காமல் நீட்டிய கரங்களை பற்றி கொண்டு மண்டியிட்டு அவர் முன் அமர, அவள் முகத்தில் விளையாடிக்கொண்டிருந்த முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டு, “சாரி டா, கண்ணா நீ அப்படி கேட்கவும் என்னால சிரிப்ப கண்ட்ரோல் பண்ண முடியவில்லை” என்ற அன்னையின் கூற்றில் இடையிட்டு, “சூர்யா, இப்ப இவங்க உங்களையும் கண்ணா அப்படின்னு கூப்பிட்டாங்க. அப்போ உங்க பேர் கண்ணாவா “ என்ற நேத்ரனை, நார்மல் சைஸ்சில் உள்ள விழிகள் எக்ஸ்ட்ரா லார்ஜர் சைஸ்சாக விரிய உதடுகள் குவித்து, “ஓ! அப்ப உங்க பேர் கண்ணன் இல்லையா..?” என்றவளின் இதழ்களில் இருந்து நேத்ரனின் பார்வை விலக மறுத்தது. அவளின் இதழ்களின் மென்மை மற்றும் சுவையினை அறிய அவனின் உதடுகள் பேராசை கொண்டது. தன் உணர்வுகள் தனக்கு கட்டுப்பட மறுக்க தலைகோதி உணர்வுகளை சமன் செய்தவன் அவளை நெருங்கி மண்டியிட்டு அமர்ந்து இருந்தவளை கைபற்றி எழுப்பி, “வாங்க சாப்பிட்டு கிட்டே பேசலாம்” என்றவன்.



“ செண்பா, இவங்களுக்கு அவங்களோட ரூம் காட்டுங்க… என கட்டளையிட்டவன் “போய் பிரேஷ் அப் பண்ணிட்டு வாங்க சூர்யா சாப்பிடலாம்” என கூறி அவளை அனுப்பினான் நேத்ரன்.



அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே செண்பாவினை பின் தொடர்ந்தாள் சூர்யா. அவள் மாடியில் அதுவும் தன்னுடைய அறைக்கு எதிர் அறைக்கு செல்லவும் மனம் குதூகலித்தாலும் மிகவும் நல்ல பிள்ளையாக, “ஏன் ம்மா, உங்க கம்பானியனுக்கு உங்க ரூம் பக்கத்தில ரூம் அரேஞ்சு பண்ணாம மாடியில ரூம் ரெடி பண்ணி இருக்கீங்க “ என்றவனிடம்,





“ என்னோட பக்கத்து ரூம்ல நர்ஸ் தங்கி இருக்காங்க இன்னொன்னு தாத்தா பாட்டி யோட ரூம் தங்கம்மா இன்னொரு ரூம்ல தங்கியிருக்காங்க அதான் சூர்யாவ மேல தங்க வைக்க சொன்னேன். உனக்கு டீஸ்டர்ப்பா இருந்தா சொல்லு நான் சூர்யாவை நர்ஸ் கூட தங்கிக்க சொல்றேன் “என்றார் பிரேமா. மனத்திற்குள் சிரித்து கொண்டே,



' ஐ...ய்...யோ! ம்..மா, ' என வாய்வரை வந்த வார்த்தைகளை மிகவும் பிரயத்தனபட்டு வெளியே வராமல் தடுத்தான் நேத்ரன். இயல்பாக உணர்வுகள் காட்டா குரலில், “அதெல்லாம் ஒண்ணும் சேஞ்ச் பண்ண வேணாம் அவங்க இப்ப இருக்க ரூம்லையே இருக்கட்டும். எனக்கு ஒரு டீஸ்டபென்சும் இல்ல…” என கூறினான் . இன்னும் இங்கேயே நின்று கொண்டிருந்தால் தான் எதையாவது உளறி விடுவோம் என, “ நான் போய் பிரெஷ்அப் பண்ணிட்டு வரேன் “ என வேகமாக படிகளில் ஏறிச் சென்றான்.



செல்லும் தன் மகனின் முதுகினை பார்த்து கொண்டே,

'புள்ள பாலுக்கு அழுகுதா இல்ல பயத்துல அழுகுதா னு பெத்தவளுக்கு தெரியும் டா. நான் உன்ன பெத்தவ

எனக்கு உன்னோட மனசு தெரியாதா என்னைக்கு நீயா சொல்றனு பார்க்கலாம்' .



செண்பா காட்டிய அறையின் அழகினை கண்டு சூர்யா, தன்னை மறந்து நின்றுவிட்டாள். அதற்குள் பசியெடுக்க, ‘பொறுமையா அழகை ரசிப்போம் முதல்ல குளிச்சிட்டு போய் சாப்பிடணும்’ என தனக்கு தானே சொல்லிக்கொண்டு குளிக்க சென்றாள்.



குளித்து முடித்து கைக்கு கிடைத்த சுடிதாரை அணிந்து கொண்டு கூந்தலை சற்று தளர பின்னி சிறு பொட்டிட்டு அவள் வருவதற்குள் கமலநேத்ரன், குளித்து முடித்து அவனின் இரவு உடையான ட்ராக்ஸ் மற்றும் டீஷர்ட் போட்டுக் கொண்டு டைன்னிங் டேபிளில் அமர்ந்திருத்தான்.



மாடியில் இருந்து அவள் இறங்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவனை கண்டு புன்னகைத்தவள் பிரேமா இருக்கின்றாரா என சுற்றி பார்த்துப்படி நேத்ரனிடம் “மேடம் தூங்க போய்ட்டாங்களா…?” என கேட்டு கொண்டே அவனுக்கு பக்கத்தில் உள்ள நாற்காலியில் மிகவும் இயல்பாக அமர்ந்தாள்.



இவ்வளவு அருகாமையில் தன்னவளை கண்டவுடன் நேத்ரனின் விழிகள் அவளை அணு அணுவாக ரசிக்க தொடங்கின.

பால் வண்ண மேனி, குண்டு கன்னம், வில் போன்ற வளைத்த புருவம், கருமையில் சேராத பிரௌனி ப்ளாக் நிற அட்ராக்டிவ் கண்கள், சிவந்த அதரங்கள், சங்கு கழுத்தில் வலது புறத்தில் ஒற்றை மச்சம். அதில் முத்தம் பதிக்க மனம் பரபரத்தது. இன்னும் கீழே சென்ற பார்வையினை தடுக்க முயன்றான் நேத்ரன்.



அவளுடைய அருகாமையில் தடுமாறும் மனதினை அடக்க வழி தெரியாமல் தன் கேசத்தினை கோதி கொண்டு மனஉணர்வுகளை தன் கட்டுக்குள் கொண்டுவர போராடி வெற்றியும் கண்டான். ‘ரியா டாலி..... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உன் மனசில் நான் இடம் பிடிக்கணும். எங்கே என்னையும் அறியாமல் என் பார்வையால் உன்னை காயப்படுத்தி விடுவேனோன்னு பயமா இருக்கு பேபி’ என அவளிடம் மனத்திற்குள் உரையாடிக் கொண்டிருந்தான். பாவம் அவனுக்கு தெரியவில்லை இன்று பார்வையால் கூட தன்னவளை காயப்படுத்த கூடாது என நினைக்கும் தானே, தன் சொல் மற்றும் செயல்களால் தன்னவளை காயப்படுத்தும் அளவிற்கு அவனைவள் அவனின் பொறுமையை சோதிக்க போகிறாள் என அறியாமல் புன்னகை முகமாகவே அவளின் கேள்விக்கு பதில் சொல்லி கொண்டிருந்தான்.



“ ஆமாம் சூர்யா, அம்மா டேப்லெட் எடுத்துக்கிட்டு படுக்க போய்ட்டாங்க. ஆல்ரெடி ரொம்ப லேட் அப்புறம் உங்க வீட்டுக்கு மெசேஜ் கன்வே பண்ணியாச்சு, நீங்க பேசனும்னா கால் பண்ணி பேசுங்க…” என.



இவர்கள் வந்தமர்ந்ததை பார்த்த

தங்கம்மா, இருவருக்கும் பரிமாற வந்தவரை தடுத்த நேத்ரன், “ நாங்களே போட்டு சாப்பிட்டுக்குறோம் நீங்க போய் சாப்பிடுங்க” என்றான்.



ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்ள இவனோ தன்னவளாக நினைத்து பரிமாற அவளோ சக ஊழியனாய் நினைத்தாள்.



சூர்யா பரிமாறும் பொழுது அவனை நெருங்கி பதார்த்தங்களை எடுக்கும் போதும் வைக்கும் போதும் குளித்ததினால் வந்த சோப்பின் வாசனையும் தன்னவளின் மணமும் அவனை கிறங்க வைத்தன.



ஒரு மனம் அவன் செய்கையினை குற்றம் சொல்ல காதல் கொண்ட மனமோ நுரையீரல் முழுவதும் அவளின் வாசத்தினை சுவாசித்து நிறைக்க சொன்னது. நேத்ரனும் காதல் மனம் சொன்னதை கருமமே கண்ணாக செய்துக் கொண்டிருந்தான் அந்த காதல் கள்வன்.



தன்னவளின் வசத்தில் மயங்கியவனை நிகழ்விற்கு அழைத்து வந்தது சூர்யாவின் குரல்.



“ இல்ல சார், நான் மோர்னிங் பேசிக்கிறேன். அப்புறம் சார், நீங்க இன்னமும் உங்க பெயர் என்னன்னு சொல்லையே” என தயங்கி தயங்கி ஓரு வழியாக கேட்டுவிட்டாள்.(இன்னும் சிறிது நேரத்தில் நிகழ போவது தெரியாமல்).

நேத்ரனின் முகத்தில் விஷமமும், குறும்பும் போட்டிப்போட எப்பொழுதும் எதிரில் உள்ளவர்களை வசீகரிக்கும் புன்னகையினை உதடுகளில் படரவிட்டு அவனின் ஆளுமை நிறைந்த குரலில் “கமலநேத்ரன்” என்றான்.



வாயில் வைக்க கொண்டு சென்ற உணவினை தவறவிட்டு கை அப்படியே அங்கேயே நிற்க திறந்த வாய் மூடாமல் கண்கள் இரண்டும் சாசர் போல் விரிய,“வாட்…!” என்றாள் ஒட்டுமொத்த அதிர்ச்சியையும் தன்னுடைய குரலில் காட்டி.



“மைவிழியாளின் பாவனையில் மன்னவனின் மனம் விரும்பியே சிக்கி கொண்டது”...



அவள் உயிரானவன்…
 
Last edited:

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

"என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்"..... கதையோட அத்தியாயம் 11 & 12 போட்டுடேன்... டியர்ஸ் rerun story தான்...

guys, கதையை படிக்கிறீங்களா... புடிச்சி இருக்க... கூடவே
உங்க நிறை குறைகளையும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க...

[/URL][/URL]


தனசுதா...
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 13



“போற்றி அருளுகநின்
ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின்
அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிருக்கும்
தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிருக்கும்
போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிருக்கும்
ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும்
காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட்
கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ
ராடேலோ ரெம்பாவாய்...”



என திருவெம்பாவை பாடலை தன் இனிய குரலால் பாடிக்கொண்டு தோட்டத்தில் உள்ள மலர்களை பூஜைக்காக பறித்து கொண்டிருந்தாள் சூர்யா.



அவள் வந்து இந்த ஒரு மாத காலமாக அவளின் விடியல் இப்படி தான் தொடங்குகிறது. அதாவது மழை இல்லா நாட்களில்...



பாரீஸில்... டிசம்பர் மாத வானிலை குளிர், மழை மற்றும் பனி கொண்டதாக இருக்கும்.



ரெண்டு நாட்களுக்கு முன்பு தான் மழை பெய்தது. இந்த குளிரில் ஆதவன் அங்கும் இங்கும் என கண் சிமிட்டும் வேளையில் மலர்களை பறித்து கொண்டிருந்தவளை நோக்கி வந்த மருது “என்ன பாப்பா, இன்னைக்கு எனக்கு முன்னாடியே வந்துட்ட” என்று கேட்டார்.



அவரை கண்டதும் புன்னகையுடன், “குட் மோர்னிங்” சொன்னவள் அவர் “பாப்பா” என்றவுடன் முறைத்து கொண்டே “மருதண்ணா, உங்ககிட்ட எத்தனை தடவை சொல்றது என்னைய பாப்பான்னு கூப்பிடாதீங்க சூர்யான்னு கூப்பிடுங்க” என்றாள்.



“ பாப்பா, நான் என்ன செய்யட்டும் நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். எனக்கு இப்படி கூப்பிட தான் வருது பெயர் சொல்லி கூப்பிடுறது எல்லாம் என்னால் முடியவே முடியாது” என கூறிக் கொண்டே மருதுவும் பூக்களை பறித்து சூர்யா வைத்திருந்த பூக்குடையினை நிறைத்து கொண்டிருந்தார்.



சூர்யா பாட அரம்பித்ததுமே துயில் கலைந்த நேத்ரன், தன் அறையினை ஒட்டியுள்ள பால்கனிக்கு வந்தான் தன்னவளை காண...

அங்கே சூர்யா மருதுவிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவள் என்ன பேசுகிறாள் என்று கேட்கா விடினும் அவளின் முகபாவங்களை ரசித்துக் கொண்டிருந்தான்.



“ போங்கண்ணா” என சலித்துக் கொண்டுக் கொய்த மலர்களை எடுத்து கொண்டு வீட்டுக்கு செல்ல அடியெடுத்து வைத்தாள்.



சூர்யா வீட்டை நோக்கி வரவும் தன் அறையை விட்டு வெளி வந்த கமலநேத்ரன் வாசலை அடைந்திருந்தான்.

இரவு உடையில் கலைந்த சிகையுடன் இருந்தாலும் அவனின் விரிந்த மார்பும் உடற்பயிற்சியால் திரண்ட தோள்களும் அந்நிலையிலும் அவனை ஆண்மையும், கம்பீரமும் நிறைந்த பேரழகனாய் காட்டின.



அவன் நிலைக் கதவில் சாய்ந்து இருக்கரங்களையும் மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு இடது காலை பதிய வைத்து வலது காலை சற்று மடக்கி இடது காலுக்கு பக்கத்தில் வலது காலின் விரல்களை மட்டும் நிலத்தில் பதிய ஒற்றை காலில் நின்று கொண்டிருந்த தோரணையும் உதடுகளில் வசீகரிக்கும் மந்திர புன்னகையினையும் காண அந்த கோகுலத்தின் கண்ணனாகவே பேதை அவள் கண்களுக்கு தோன்றினான் கமலநேத்ரன்.( என்ன கலர் தான் கொஞ்சம் இடிக்கும் பரவாயில்லை)



நேத்ரனின் அருகில் வந்த சூர்யா, அவனை பார்த்து மென்னகையுடன் “குட் மோர்னிங் சார்” என்றாள். அதுவரை புன்னைகை மன்னனாக இருந்தவன் முகத்தில் கோபத்தின் சாயல் தோன்ற.



“ சூர்யா எத்தனை தடவை சொல்றது டோண்ட் கால் மீ சார் கால் மீ கமல் or நேத்ரன் ( இல்ல வேற செல்ல பேர் வச்சி கூப்பிட்டாலும் ஓகே டாலி). நீங்க சார்னு கூப்பிடும் போது எனக்கு வீட்டுல இருக்க பீல் இல்ல வேற எங்கயோ அவுட்சைடு இல்ல ஆபீஸ்ல இருக்குற பீல் (உன் பீலிங் என்னன்னு எல்லாருக்கும் தெரியும்) சோ டோன்ட் நெவெர் கால் மீ சார்… ஓகே” என்றான்.



பின்ன அவனும்தான் என்ன செய்வான். இந்த ஒரு மாதமாக எப்படி எல்லாமோ சொல்லி பார்த்து விட்டான். அவள் மாற்றி கொள்ளவில்லை. இன்று கோபம் போல் காட்டியும் சொல்லிவிட்டான்.



நேத்ரனின் கோபம் சூர்யாவின் மனதினை தாக்க அது அவளின் முகத்தில் பிரதிபலித்தது. அதனை கண்டு நேத்ரன் மானசீகமாக தன் தலையில் அடித்து கொண்டான். அவளை பத்தி தெரிஞ்சும் இப்படி ‘அவசரபட்டுட்டியே நேத்ரா’ என தன்னையே நொந்து கொண்டான்.



“ சாரி சா... சார் என சொல்ல வந்தவள் சா…சாரி... க...ம..ல...நே...த்...ர....ன்...” என்றாள் சூர்யா.



அவள் அவன் பெயரை சொல்லியதை கேட்டு விளக்கெண்ணெய் குடித்தது போல் மாறியது நேத்ரனின் முகம்.



“ சூர்யா என் பெயர் மேல உனக்கு அப்படி என்ன கோபம் அதை போட்டு இப்படி கடிச்சி துப்புறீங்க...” என கேட்டுவிட்டு “ இட்ஸ் ஓகே உனக்கு எப்ப கூப்பிட தோணுதோ அப்ப கூப்பிடு” என வெற்றிகரமாக பின் வாங்கினான். தோல்வியையே அறியாத வெற்றியளான் (காதல் வந்தா புலி கூட புல்லை தின்னும் போல).



‘ எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிடுறா இல்லைனா உறவுமுறை வைத்து கூப்பிடுறா… ஆனா? என்னை மட்டும் பெயர் சொல்லி கூப்பிட இப்படி தயங்குற போடி பப்ளிமாஸ்’ என மனத்திற்குள் தன் செல்ல டாலியுடன் சண்டையிட்ட நேத்ரன்.



“ கொஞ்சம் சிரிச்ச மாதிரி உள்ள போ அப்புறம் உன் அத்தையம்மா (பிரேமா அவளிடம் மேடம் என அழைக்கக்கூடாது என்றவர். அத்தை என அழைக்க சொல்ல சூர்யாவோ தயங்கி கொண்டே வேண்டாம் அம்மா என்று அழைக்கவா என்க பிரேமா மறுக்க ஒரு பெரும் யோசனைக்கு பிறகு இருவருக்கும் வேண்டாம் ரெண்டையும் இணைத்து அத்தையம்மா என சூர்யா சொல்ல பிரேமாவும் பெரும் மனதுடன் ஒத்துக்கொண்டார்). நான் என்னமோ உன்னை திட்டுன மாதிரி என்கிட்ட வந்து சண்டை போடுவாங்க சோ ஸ்மைல் ப்ளீஸ் ரியா…” என்றான்.



அவன் சொன்ன விதத்தில் சூர்யாவின் முகத்தில் புன்னகை பூக்க… விட்டால் போதும் என்று பூஜை அறை நோக்கி சென்றாள்.



செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் அன்று தன் பெயரை சொன்னவுடன் அதிர்ந்த சூர்யாவின் முகம் நினைவுக்கு வந்தது.



பூஜை அறையில் பூ தொடுத்து கொண்டிருந்தாலும் சூர்யாவும், தான் வந்த அன்று நடந்ததையே நினைத்து கொண்டிருந்தாள்.



அன்று இரவு...

பரிமாற வந்த தங்கம்மாவை தடுத்து தாங்களே பரிமாறிக் கொள்வதாக சொல்லி அவரை அனுப்பிவிட்டு இருவரும் பரிமாறிக் கொண்டு உணவு உண்டு கொண்டிருந்த வேளையில் சூர்யா, அவனின் பேரை கேட்க அவன் தன் பெயர் சொல்ல அதை கேட்டு அவள் அதிர்ந்து இமைக்கவும் மறந்து நேத்ரனை பார்த்து கொண்டிருந்தாள்.



எப்பொழுதும் போல் அவளின் பார்வையில் சொக்கியவன்… ‘நான் என் பெயரை தானே சொன்னேன்? நான் என்னமோ? ஐ லவ் யூ சொன்ன மாதிரி இவ்வளவு ஷாக் ஆகுறடி மை கியூடீ’ என மனத்திற்குள் செல்லம் கொஞ்சியவன்.

“சூர்யா.... சூர்யா…” என இருமுறை அழைத்தும் அவள் முகத்தின் அருகில் கைகளை அசைத்தும் அவளிடம் எந்த வித மாற்றமும் இல்லை என்றபின் சூர்யாவின் தோளில் கை வைத்து சிறு அழுத்தம் கொடுத்து அசைக்க அதில் சுயம் திரும்பியவள் இமைகள் இரண்டும் பட்டாம்பூச்சிகளாய் படபடக்க.



“ என்ன சொன்னீங்க…” என்றாள் மறுபடியும். தன் செவித்திறன் மேல் ஐயமுற்று அவளின் குழந்தைத்தனமான ஒவ்வொரு அசைவுகளையும் உதட்டில் உறைந்த புன்சிரிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தவன்.



“ ம்... கமலநேத்ரன்” என்றான் குறும்பும் விஷமமும் நிறைந்த குரலில்,அவனின் பதிலில் மீண்டும் அதிர்வுற்று ‘அந்த லூசு(கிருஷ்ணா), கம்பெனி கார் அண்ட் டிரைவர் வருவாங்கன்னு தானே சொன்னான். எனக்கு அப்பவே டவுட் வந்தது இவன்(நேத்ரன்) ஆளும், தோரணையும் பார்க்க டிரைவர் மாதிரி இல்லைன்னு அதான் குடும்பமே ஒண்ணு கூடி அப்படி சிரிச்சாங்களா… ஐய்யோ இப்படி என்ன காமெடி பீஸ் ஆகிட்டானே’ என்று மனத்திற்குள் கிருஷ்ணாவை திட்டி கொண்டிருந்தாள்.



தனக்குள் யோசனையில் ஆழ்ந்திருந்தவள் முன் சொடக்கிட்டு, “ஹலோ சூர்யா, என்ன கிருஷ்ணாவை திட்டி தீர்த்தாச்சா” என்றவனை அதிர்த்து பார்த்தவள். நாம மனசுக்குள் நினைச்சதை இவன் எப்படி கண்டு பிடிச்சான் மனசுக்குள்ள திட்டுறதா நினைச்சு வாய் விட்டுட்டோமோ (மஹும்… நீ வாய்விட்டு வேற சொல்லணுமா அதான் நீ என்ன நினைக்கிற அப்படின்னு உன் முகமே காட்டி கொடுக்குதே) என யோசிக்க.



“ மறுபடியும் பிரீஸ் ஆயிட்டீங்களா…? என்ன நாம மனசுல நினைச்சதை எப்படி இவன் சொன்னான்னு நினைக்கிறீங்களா…?” என நேத்ரன் கேட்க,



சூர்யா பதறி தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்துவிட்டாள். ( அறிவே இல்லடி சூர்யா உனக்கு மத்தவங்களை சொல்ற மாதிரி இவன்… ஷ் இவரையும் மரியாதை இல்லாம பேசிட்ட).



“ சா… சாரி சார் கிருஷ்ணா, கம்பெனி டிரைவர் தான் வருவாங்கன்னு சொன்னாரு. நீங்களே வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை” என திக்கி திணறி கூறினாள் சூர்யா. அவள் குரலில் உள்ள படபடப்பினை கண்டுக் கொண்ட நேத்ரன்.

“ ஏய், ஈஸி...ஈஸி... ப்ளீஸ் நீ முதல்ல உட்காரு” என நாற்காலியில் அமர வைத்து அருந்த நீர் கொடுத்தான் அவளின் படப்படப்பினை குறைக்க.



அவன் கொடுத்த நீரினை ஒரே மூச்சில் குடித்து முடித்த சூர்யாவின் முதுகை மெல்ல தடவி கொடுத்து,“ எதுக்கு இவ்வளவு பதட்டப்படுறீங்க சூர்யா, ஸ்டே கூல் உங்களை ரிசீவ் பண்ண வர இருந்தவர் ஏதோ காரணத்தினால் வர முடியலை.(அடப்பாவி போக வேண்டிய ஹரிஷை வேண்டாம் சொல்லிட்டு ஏர்போர்ட்க்கு முதல் ஆளா போய் நின்னுட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பொய் சொல்ற). சோ நான் உங்களை ரிசீவ் பண்ண வந்தேன். இதுல என்ன இருக்கு அண்ட் மொரோவர் என் அம்மாவிற்காக வந்திருக்கீங்க அவங்களோட ஹெல்த் அண்ட் ஹாப்பினெஸ்காக இதை கூட நான் செய்ய மாட்டேனா…? ( நீ உங்க அம்மாவுக்காக போன நம்பிட்டோம்) டோன்ட் பீல் எம்பாரஸ்ட் ஓகே? சாப்பிடுங்க… இட்ஸ் ஆல்ரெடி லேட்” என்றான் கமலநேத்ரன்.



நேத்ரனின், பேச்சில் ஓரளவு இயல்பு நிலைக்கு வந்தவள் ( வந்த முதல் நாளே இவ்வளவு அதிர்ச்சி கொடுத்துட்டு பீல் பிரீ சாப்பிடுங்க அப்படின்னா… எங்கே சாப்பாடு என் தொண்டை குழியை விட்டு இறங்க மாட்டேங்குது போ... டா… ஐய்யோ! இவன் முன்னாடி மனசுல கூட எதையும் நினைக்க முடியாதே என மனத்திற்குள் நேத்ரனை தாளித்து கொண்டு) இதழ்களில் ஒட்ட வைத்த புன்னகையுடன் உணவினை கொறித்து கொண்டிருந்தாள் சூர்யா.



தான் இங்கிருந்தால் அவள் ஒழுங்காக உணவு உண்ண மாட்டாள் என தன் உணவினை சீக்கிரமாக முடித்து கொண்டு தங்கம்மாவினை அழைத்து சூர்யாவிற்கு தேவையானதை செய்து கொடுக்குமாறு சொல்லிவிட்டு தன் அறை செல்ல மாடிபடி நோக்கி சென்றவன் திரும்பி வந்தவன்.



சூர்யாவிடம், “ரொம்ப தேங்க்ஸ்...” என்றவனை எதற்கு என்று புரியாது பார்த்தவளை, “ரொம்ப நாள் கழிச்சி எங்கம்மா வாய்விட்டு சிரிச்சாங்க அதுக்கு தான். ஓகே குட் நைட் மத்த விஷயம் எல்லாம் மோர்னிங் பேசலாம் டேக் ரெஸ்ட்” எனக் கூறி சென்றான் நேத்ரன்.



அவன் சென்றவுடன் உப்ஸ்...ஸ்... என பெரும் மூச்சினை வெளியிட்டாள் சூர்யா.



தங்கம்மாள், எவ்வளவு சொல்லியும் அரைகுறையாக உண்டுவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் சூர்யா.



தங்கம்மா, நேத்ரன் மற்றும் சூர்யாவிற்கு பால் கொண்டு வந்து கொடுக்க , “ இன்னைக்கு நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன் அதுவும் இல்லாம வயிறு நிறையாவும் சாப்பிட்டேன் வேண்டாம் தங்கம்மா” என நேத்ரன் மறுத்து விட.



என்ன தான் தாங்களே பரிமாறிகொள்வதாக சொல்லி இருந்தாலும் சமையல் அறையில் மறைவாக நின்றுக் கொண்டு அவர்கள் இருவரும் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தார் தங்கம்மா.



எப்பொழுது அந்த விபத்து நிகழ்ந்ததோ அதிலிருந்து இவரின் வற்புறுத்தலுக்காக பசி ருசி அறியாது உண்ணுபவன் இன்று சூர்யா பரிமாற மலர்ந்த முகத்துடன் உண்ணும் நேத்ரனை கண்டு தங்கம்மாவிற்கு கண்கள் கலங்கி விட்டன. ‘கடவுளே கூடிய சீக்கரம் இந்த வீட்ல பழைய சந்தோசம் திரும்பணும்’ என வேண்டிக்கொண்டார்…



ஆகையால், அவனை வற்புறுத்தாமல் நேத்ரனின் மனநிலை புரிந்து அறையில் இருந்து வெளியேறினார்…



சூர்யா அறை கதவினை தட்ட திறந்தவள், “ என்ன தங்கம்மா, மேடம் கூப்பிட்டாங்களா?” என கேட்க, “அதெல்லாம் ஒண்ணும் இல்ல பாப்பா, நீ சரியா சாப்பிடலை அதான் பால் கொண்டுவந்தேன்” என கூற வேண்டாம் என்றவளை வற்புறுத்தி குடிக்க வைத்தார். (சூர்யாவிற்கு, தன் அன்னை காயத்ரி ஞாபகம் வர அவளின் விழிகள் கலங்கின) சூர்யாவின் கண்ணீரை கண்டு பதறிய தங்கம்மா, என்னவென்று கேட்க சிரிப்புடன், “ஒண்ணுமில்லை அம்மா ஞாபகம் வந்திடுச்சு” என்றவளின் தலையினை ஆதூரமாக தடவி கொடுத்து, “சரி பாப்பா நீ படுத்துக்கோ ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடு எந்த நேரமா இருந்தாலும் தயங்காதே” என சொல்லி சென்றுவிட்டார்.



தன் வீட்டின் அறையை விட ரெண்டுமடங்கு பெரியதாக இருந்த அந்த அறையில் நான்கு பேர் படுக்கக் கூடிய கட்டில், படுத்ததும் உள்வாங்கி கொள்ளும் மெத்தை, காதலை கண்களில் தேக்கி அன்னத்தினை தூது விடும் ரவிவர்மனின் தமயந்தி சித்திரம் ஒருபுறம்… வெண்ணை திருடி உண்ணும் மாய கண்ணனின் மற்றும் அவனின் நண்பர்கள் சித்திரம், இன்னும் சில இயற்கை காட்சிகள் ஆங்காங்கே அழகாக அவ்வறையினை அலங்கரித்து கொண்டிருந்தன. அட்டாச்டு பாத்ரூம், தோட்டத்தினை காணும் வகையில் அமைத்த பால்கனி என பல நவீன வசதிகளை கொண்ட அந்த அறையின் அழகு சூர்யாவின் மனதினை கவர்ந்ததை விட அங்குள்ள மனிதர்கள் அவள் மனதினை கவர்ந்தனர்.



என்னென்று சொல்லமுடியா உணர்வு மனதில் இதம் பரப்ப இதழ்களில் மென்னகை மிளிர துயில் கொண்டாள் சூர்யா.

தன் கைபொருள் தன்னிடமே வந்ததினால் ஏற்பட்ட மகிழ்ச்சியிலும், மனஅமைதியிலும் நிம்மதியான உறக்கம் நேத்ரனை ஆட்கொண்டது.



இங்கே இவர்கள் நிலை இப்படி இருக்க அங்கே சென்னையில் பொங்கும் எரிமலையென குமுறி கொண்டிருந்தான் விவேக்.



அவனின் கோபத்திற்கு காரணம், சூர்யாவின் பாரீஸ் பயணம் அதுவும் அவளை பற்றிய எந்த தகவல்களையும் அறிய முடியவில்லை. இதோ இப்பொழுது அவள் அங்கே தரையிறங்கிய பிறகு சூர்யா தங்கும் இடம் அறிந்து அவளுக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணலாம் என்றிருக்க அவள் வெளியிடங்களில் தங்காமல் நேரே கமலநாதன் இல்லம் சென்றது விவேக்கின் கோபம் என்னும் அக்னியில் எண்ணெய் வார்த்தது போல் ஆகிவிட்டது.



இனி சூர்யாவின் நிழலுக்கு கூட இவனால் இன்னல் விளைவிக்க முடியாது. ஏனெனில் சூர்யாவின் நிழலாக நேத்ரன் இருப்பதை பாவம், இந்த மூடனுக்கு யார்சொல்லி புரியவைப்பது...




அவன் உயிரானவள்...
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 14



பிரேமா கைகளில் உள்ள கட்டுகள் பிரிக்கப்பட்டு அக்கைகளை அவர் அசைக்கவோ, வேகமாக நீட்டி மடக்கவோ கூடாது என தொட்டில் கட்டி விட்டிருந்தனர். அப்படி தான் தங்கம்மா சொல்லுவது...



கால் கட்டுகள் பிரிக்க இன்னும் ஒரு மாதகாலம் ஆகும். சூர்யா காலையில் பிரேமாவினை எழுப்பி அவரை காலை கடன்களை முடிக்க வைத்து சத்துமாவு கஞ்சி ஊட்டிய பிறகே அவள் தோட்டத்திற்கு சென்று மலர் பறிப்பாள்.



சூர்யாவே, பிரேமாவினை குளிக்க வைக்க முற்படும்போது அவளை தடுத்த செவிலி, “ஏன் சிஸ்டர், நேத்ரன் சார் தர சேலரிக்கு நான் கொஞ்சமாச்சும் வேலை பார்க்கணும் இல்ல நானே மேடம்க்கு குளிக்க ஹெல்ப் பண்றேன்” என்றாள் சிரித்துகொண்டே,



“ அத்தம்மா, நீங்க சொல்லுங்க நான் செய்யவா..? இல்ல இந்த நர்சம்மா செய்யட்டுமா..? என்றவளிடம்.



“ நீ போய் பூஜைக்கு ரெடி பண்ணு அதுக்குள்ள லிசா(நர்ஸ்) ஹெல்ப்போட நான் குளிச்சிட்டு வரேன்” என்றவரையும் செவிலியை பார்த்து, “ம்க்கும்...” என கழுத்தை நொடித்து கொண்டாள். அவளின் செய்கையில் சிரித்து விட்டார் பிரேமா. அவரை பொய் கோபத்தோடு முறைத்து கொண்டு அறையில் இருந்து வெளியேறினாள் சூர்யா. இது அவர்களுக்குள் தினமும் நடக்கும் சண்டை.



இங்கு வந்த புதிதில் சத்யமூர்த்தி மற்றும் பிரேமா அவர்களின் புகைப்படத்தினை பார்த்து, “ரெண்டு பேரும் அழகான ஜோடி இல்லையா..?” என தங்கம்மாவிடம் கேட்க அவரின் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது பதறிய சூர்யா.



“ஐய்யோ..! தங்கம்மா, சாரி நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா? எதுக்கு நீங்க இப்படி அழுகுறீங்க ப்ளீஸ் அழாதீங்க” என்றவளிடம்.



“அதில்லை பாப்பா, ஐயாவும், அம்மாவும் ரொம்ப அன்னியோன்னியமா இருப்பாங்க தம்பிக்கு அவங்க அப்பானா ரொம்ப இஷ்டம் அந்த ஆக்ஸிடெண்ட் எல்லாருடைய சந்தோஷத்தையும் மொத்தமா பறிசிடிச்சி”.



“ ஐயா இறந்துட்டாங்க… அம்மா ஹாஸ்பிடல்ல நேத்ரன் தம்பிய கண்கொண்டு பார்க்க முடியல ரொம்ப சிரமம் பட்டுட்டாங்க இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா சகஜ நிலைக்கு திரும்புறாங்க தம்பி, பிரேமா.. ம்மா, முன்னாடி கண்ணு கலங்கவோ, அந்த ஆக்ஸிடெண்ட் பத்தி பேசவோ கூடாதுன்னு சொல்லிட்டாங்க நீ ஐயாவையும் அம்மாவையும் பத்தி சொன்னதும் சட்டுன்னு கண்ணு கலங்கிடுச்சி வேற ஒன்னும் இல்ல பாப்பா...” என கூறி அவர் வேலையினை பார்க்க சென்று விட்டார்.



சூர்யாவும், பிரேமாவின் மருத்துவ அறிக்கை பார்த்தும், நர்ஸ் லீஸாவிடம் கேட்டும் ஓரளவிற்கு அவரின் உடல் நிலை பற்றி அறிந்துக் கொண்டு அதற்கு தக்கவாறு பிரேமாவினை தனிமையில் விடாமல் அவரிடம் ஏதாவது வம்பு வளர்த்து கொண்டும் அவரை சிரிக்க வைத்தும் கொண்டிருந்தாள் .



வாயில் நோக்கி சென்றவளை அழைத்தார் தங்கம்மா, “என்ன பாப்பா உங்க பஞ்சாயத்து எல்லாம் முடிஞ்சிடுச்சா” என்க.

“ குட் மோர்னிங், தங்கம்மா எல்லாம் ஆச்சி சரி நான் போய் பூஜைக்கு பூ பறிச்சிட்டு வரேன்...” என்றவளை நிறுத்தி, சத்துமாவு கஞ்சியினை மிதமான சூட்டில் குடிக்க கொடுத்தார். அக்குளிருக்கு அமிர்தமாய் சூர்யாவின் தொண்டையில் இறங்கியது. “ இந்த குளிரில் போய் ஏன் பாப்பா பூ பறிக்கிற. செண்பகம் கிட்ட சொன்னா பறிச்சிட்டு வந்து தர போறா “ என்றவரிடம் ஒரு புன்னகையினை பதிலாக அளிக்க, “ அதானே நான் சொன்னா கேட்கவா போற ரொம்ப நேரம் பனியில நிக்காம சீக்கரமா வந்துடு” என கூறிய தங்கம்மாவிடம் சிறு தலை அசைப்புடன் விடைபெற்று பூக்கூடையுடன் தோட்டத்துக்கு சென்றாள் சூர்யா.



பூக்களை பறித்துக்கொண்டு திரும்ப அங்கே நேத்ரனை காண இவள் பெயர் சொல்லிய அழகில் அவனின் கோபம் கண்டு சிக்கி திக்கி தெறிச்சி ஓடிவந்து பூஜை அறைக்குள் பூ தொடுத்து படி. தான்வந்த அன்றிரவு நிகழ்ந்த நிகழ்வுகளை பற்றிய யோசனையில் இருந்தவள் கவனத்தை கலைத்தது பிரேமாவின் குரல்.



“ என்னடா சூர்யா, எல்லாம் ரெடி பண்ணிட்டியா?” என கேட்டவரிடம், “ எல்லாம் ரெடி அத்தம்மா “ என கூறிக் கொண்டே தொடுத்த மலர்களை அங்கிருந்த ஸ்வாமி படங்களுக்கு சாற்றினாள். விளக்கை ஏற்றி தூப தீப ஆரத்தி முடித்து ஆரத்தி தட்டினை பிரேமாவின் முன் நீட்ட அவர் ஆரத்தியை கண்களில் ஒற்றிக்கொண்டு நிமிர அங்கு படிகளில் அலுவலகம் செல்ல தயாராகி வந்து கொண்டிருந்த நேத்ரனை பார்த்து அழைத்து சூர்யாவிடம் கண் காட்ட அவனின் முன்னால் ஆரத்தி தட்டு நீட்டப்பட்டது. அதனை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டவன் தன் அன்னையினை பார்த்து புன்முறுவல் சிந்தி, “ குட் மோர்னிங் ம்மா “ என்றான்..



“ குட் மோர்னிங் கண்ணா... “ என்றார் சிரிப்புடன்,



“ வாங்கம்மா சாப்பிட போகலாம்” என கூறி பிரேமா அமர்ந்திருந்த சக்கர நாற்காலியினை உணவு மேஜை நோக்கி தள்ளிக் கொண்டு சென்றான் நேத்ரன்.



அன்னையின் நாற்காலிக்கு அருகில் அமர்ந்துக் கொண்டான். பிரேமா சூர்யாவினை உண்ண அழைக்க அவள் மறுத்து தங்கம்மாவிற்கு உதவி செய்து கொண்டிருந்தாள். இருவருக்கும் தங்கம்மா பரிமாறினார். பரிமாறிய உணவினை அன்னைக்கு ஊட்ட தொடங்கினான் நேத்ரன்.



அந்த காலை வேளையில் ஹரிஷ் , நேத்ரனை காண வீட்டிற்கு வந்தான். “ ஹாய் நேத்ரா, ஹாய் அம்மா எல்லாரும் எப்படி இருக்கீங்க...?” என்றவறே.



“ நல்லா இருக்கேன்… என்னடா ரொம்ப நாளா வீட்டு பக்கமே ஆள காணும் “ என்றார் பிரேமா.

“ ஒன்னும் இல்ல அம்மா, கொஞ்சம் வேலை அதான்” சொல்லிக்கொண்டே மேஜை மீதிருந்த பாத்திரங்களை திறந்து பார்த்து கொண்டே, “ஒருத்தன் வந்திருக்கானே சாப்பிடுன்னு சொல்றீங்களா? வர வர உங்களுக்கு ஹாஸ்பிட்டலிட்டி அதாங்க விருந்தோம்பல் மறந்து போச்சு” என சொல்லிக் கொண்டே தட்டினை எடுத்து தானே பரிமாறி கொண்டு உண்ண ஆரம்பித்தான் ஹரிஷ்.



நடப்பவற்றை புரியாமல் பார்த்து கொண்டிருந்த சூர்யாவிடம், “சிஸ்டர் அந்த குருமாவை கொஞ்சம் நகர்த்துங்க” என அவன் பேச்சில் சற்று மிரண்டாலும் அவன் கேட்டதை செய்ய தவறவில்லை.



ஹரிஷின் செய்கையினால், மிரண்ட தன்னவளின் பார்வையினை கண்டுகொண்ட நேத்ரன், “சூர்யா இவன் பெயர் ஹரிஷ், மை கிளோஸ் பிரெண்ட் “ என அறிமுகம் செய்து வைக்க. தாமரை மொட்டென கைகுவித்து வணக்கம் சொன்னாள் சூர்யா.



“ என்னமா, வணக்கமெல்லாம் சொல்லிக்கிட்டு நான் உன்னை எவ்வளவு அழகா சிஸ்டர் சொன்னேன் நீ என்னை உன்னோட ப்ரோவா ஏத்துக்க கூடாதா? எனக்கு வணக்கமெல்லாம் வேணாம் இன்னும் ரெண்டு சப்பாத்தி போட்டு குருமா விடு” என்றவனை பார்த்து பிரேமா தலையில் அடித்து கொள்ள சூர்யா, அவன் சொன்ன பாவனையில் சிரித்துவிட்டாள்.



நேத்ரனோ ‘நீயெல்லாம் திருந்தவே மாட்டே’ என ஒரு பார்வை பார்க்க அத்தனையையும் தூசிபோல் தட்டி விட்டு தன் வேலையினை அதான் சாப்பிடும் வேலையை தொடர்ந்தான்.



நேத்ரன், தன் அன்னைக்கு ஊட்டிவிட்டு தானும் உண்டு முடிக்க ஹரிஷும் சூர்யாவிடம் கதை பேசியபடி சாப்பிட்டு முடித்தான்.



நேத்ரன்… ஹரிஷிடம், “சரி வா எதுக்கு வந்தியோ அந்த வேலை கொஞ்சம் பார்க்கலாம்...” என தன் அலுவல் அறை செல்ல மாடியேறினான். ஹரிஷும் அவனுடன் செல்ல நான்கு படி ஏறியதும் திரும்பி சூர்யாவிடம், “சூர்யாம்மா, உன் ப்ரோக்கு ஒரு காபி தங்கம்மா கிட்ட சொல்லிடுடா” என.

“ சரி அண்ணா…” என்ற சூர்யாவையும், ஹரிஷையும் மாறி மாறி பார்த்தான் நேத்ரன்.



அவனின் பார்வை கண்டு, “ ஏன்டா என்னையும், என் தங்கச்சியையும் இப்படி சைட் அடிக்கிற சூர்யாவை சைட் அடிக்கிறதுலையாவது ஒரு அர்த்தம் இருக்கு. பட் என்னைப் பார்த்து நோ யூஸ் நானெல்லாம் அந்த மாதிரி கிடையாது கற்புக்கரசனாக்கும்...” என்றவனின் முதுகில் இரண்டு அடி போட்டு.



“பார்க்குற பொண்ணுங்க கிட்ட எல்லாம் ஆர் யூ பிரீ…? ஐ அம் சிங்கில் அப்படின்னு கேட்குறவன் நீ? போடாங் நல்லா வருது வாயில எதையாவது சொல்லிட போறேன் ஓடி போய்டு “ என நேத்ரன் அவனை மேலும் வசைபாட.



“ ஹி....ஹி பொது வாழ்க்கைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம் டா, உன்னையெல்லாம் பெரிய பிசினஸ் டைகூன் ஹை கிளாஸ் அப்படி இப்படின்னு புகழ்ந்து தள்ளுறானுங்க ஆனா சரியான லோ கிளாஸ்டா நீ “ என கூறிய ஹரிஷை பார்த்து,



“ உனக்கு கொஞ்சம் கூட இந்த வெக்கம் மானம் இதெல்லாம் கிடையாதா..?” என்ற நேத்ரனிடம், “உன் பிரெண்டா இருந்துக்கிட்டு கருமம் அதெல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்ண” என்றவனின் கழுத்தில் கைபோட்டு இறுக்கிக் கொண்டான் நேத்ரன்.

இவர்களை அதிசயம் போல் பார்த்து கொண்டிருந்த சூர்யாவிடம், “என்ன சூர்யா, ரெண்டு பேரும் சின்ன புள்ளைங்க மாதிரி சண்டை போட்டுக்கிட்டு போறாங்கன்னு பார்க்குறியா? இது கம்மி இன்னும் நேத்ரனோட அப்பா இருந்தா இன்னும் வீட்டையே ரெண்டு பண்ணுவாங்க மூணு பேரும் சேர்ந்து...” என்றார் குரல் கரகரக்க பின் பெரும் மூச்சினை வெளியேற்றி.





“ ஹரிஷ் பாவம்டா, குழந்தையா இருக்கும் போதே அம்மாவை இழந்தவன். அவனோட அப்பா கூட வளர்ந்தவன். நேத்ரனும், ஹரிஷும் ஸ்கூலிங் ஒண்ணா படிச்சவங்க... அப்ப இருந்தே நம்ம வீட்டுக்கு வருவான். அவங்க அப்பா பிசினஸ் விஷயமா வெளிய போனா இங்க தான் தங்குவான். நேத்ரனுக்கு ரொம்ப ரொம்ப கிளோஸ் அவனோட அப்பாவும் சில வருஷம் முன்னாடி தவறிட்டார். தனியாத்தான் இருக்கான் அவங்க அப்பாவோட தொழில் மற்றும் இவனோட தொழில் எல்லாம் பொறுப்பா பார்த்துக்குறான் ரெண்டும் எதுல ஒற்றுமையா இருக்கோ இல்லையோ கல்யாணம் பண்ணிக்க சொன்னா எஸ் ஆயிருதுங்க ...” என வருத்தத்தில் ஆரம்பித்து புலம்பலில் முடித்தார் பிரேமா.



இங்கே அறைக்குள் நுழைந்தவுடன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, “ சொல்லுடா, என்ன விஷயம்...” என்ற நேத்ரனிடம்.



“அந்த விவேக் இன்னும் அடங்கலடா… இன்னமும் சூர்யாவோட வீட்டையும் அவங்களோட போனையும் ட்ரெஸ் பண்ணிக்கிட்டு தான் இருக்கான், அதோட இங்கேயும் சூர்யாவோட ஆக்ட்டிவிட்டிஸ் வாட்ச் பண்ண ஏற்பாடு பண்ணி இருக்கான். பட் அவங்க இங்க நம்ம வீட்டில் உன் கூட இருக்கிறதுனால சூர்யாகிட்ட நெருங்க முடியலை. பட் தே வெயிட்ங் போர் எ சான்ஸ்...” என்றான் ஹரிஷ்.



ஹரிஷ் கூறியவற்றை கேட்டு ஒரு நீண்ட பெருமூச்சினை விட்டு, “ நானும் கவனிச்சேன் டா, அதனால தான் இன்னும் செக்யூரிட்டி டைட் பண்ணியிருக்கேன் வீட்டுக்கு… அவளோட புது நம்பருக்கு பிரைவேட் கால்ஸ் எல்லாம் பிளாக் பண்ணி வச்சிருக்கேன். எப்பவும் யாராவது அவ கூட இருக்குற மாதிரி பார்த்துக்க சொல்லி இருக்கேன் “என்றான் நேத்ரன்.



“ இன்னும் ஏன்டா அந்த விவேக் விஷயத்தில் நீ இவ்வளவு பொறுமையா இருக்க உன்னோட கேரக்டருக்கு இந்த பொறுமை செட் ஆகலையே? சூர்யா சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் ஏன்தான் இவ்வளவு பொறுமையா இருக்கீயோ ஒன்னும் புரியலை” என புலம்பிய நண்பனை கண்டு புன்சிரிப்புடன், “ விவேக் விஷயத்தில் நான் பொறுமையா இருக்க காரணம் தெரிஞ்சோ தெரியாமலேயோ அவனால தான் சூர்யா என்னோட லைப்குள்ள மறுபடியும் வந்திருக்கா அவனால சூர்யா ரொம்ப மனக்கஷ்டம் அனுபவிச்சிருக்கா அதே கஷ்டம் அந்த விவேக் அனுபவிக்கிறது என் சூர்யா பார்க்கணும். ( மனத்திற்குள் அந்த விவேக் அவளை நெருங்கும் முன்னாடி நான் அவளோட மனசுக்கு நெருக்கமா மாறணும்) அதுக்குதான் இந்த ஸ்லொவ் ப்ரோஸஸ்...” என்றான் கமலநேத்ரன்.



இருவரும் பேசிக் கொண்டிருக்க கதவு தட்டும் ஒலிகேட்க, “ உள்ள வாங்க தங்கம்மா...” என்றான் நேத்ரன். ஆனால் வந்தது சூர்யா அவர்களுக்கு காபி கொண்டு வந்திருந்தாள்.



“ வாம்மா, என்னடா இன்னும் காபி வரலையே ஒருவேளை மறந்திட்டியோன்னு நினைச்சேன். இப்ப நீ கொண்டு வந்திருக்கலைனா நானே கீழே வந்திருப்பேன்...” என்றான் ஹரிஷ். சூர்யா நீட்டிய ட்ரேயில் இருந்து ஒரு கோப்பையினை எடுத்துக் கொண்டே.

மற்றொரு கோப்பையினை நேத்ரனிடம் தர, “ நீங்க ஏன் சூர்யா கொண்டு வர்றீங்க தங்கம்மா இல்ல செண்பகம் இல்லையா” என்றான் நேத்ரன்.



“ தங்கம்மாவிற்கு கிச்சன்ல கொஞ்சம் வேலை இருக்கு. அதுவும் இல்லாம எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...” ( சார் என சொல்லவந்து அந்த வார்த்தை வெளிவராமல் தடைசெய்தாள். மறுபடியும் யார் அவனிடம் (நேத்ரனிடம்) பாட்டு (திட்டு) வாங்குவது) என்றாள்.



காபி அருந்திக் கொண்டே வல புருவத்தினை ஏற்றி ‘என்ன..?’ என வினவினான்.



அவனின் செய்கையில் மனம் மயங்கினாலும் அதனை ஒதுக்கி “கிறிஸ்துமஸ் செலெப்ரேட் பண்ண லிசா அவங்களுக்கு லீவ் வேணுமாம்... சோ நீங்க ஓகே சொன்னீங்கன்னா லிசா அவங்களோட வீட்டுக்கு போய்ட்டு வருவாங்க...” என்ற சூர்யாவிடம்.



“ ரியா நான் உங்ககிட்ட என்ன சொன்னேன். வீட்டு சம்பந்தமா என்ன முடிவு எடுக்கறதா இருந்தாலும் என்னை கேட்கணும்னு அவசியம் இல்ல நீங்களும் அம்மாவும் டிசைட் பண்ணா போதும் உங்களால லிசா இல்லாம மேனேஜ் பண்ண முடியும்னா ஜஸ்ட் கோஹெட்... எனக்கு எந்த சிரமமும் இல்லை” என்று நேத்ரன் பதிலளிக்க, “நான் லிசா கிட்ட கிளம்ப சொல்றேன்...” என சூர்யா கூறினாள்.



“ அப்பறம் டிரைவர் கிட்ட சொல்லி லிசாவ அவங்க வீட்டுல ட்ரோப் பண்ண சொல்லிடுங்க. அப்படியே அவங்களுக்கு கிறிஸ்துமஸ் கிப்ட் பேக், மணி வேற என்ன தரலாம்ன்னு அம்மாகிட்ட கேட்டு கொடுத்து விடுங்க. கைலாஷ் அங்கிள் கிட்ட நான் இன்போர்ம் பண்ணிடுறேன்” என்ற நேத்ரனிடம்,“ சரி…” என உதட்டில் புன்னகை தவழ சிறு தலை அசைப்புடன் விடைபெற்றாள் சூர்யா.



எப்பொழுதும் போல் இப்பொழுதும் தன்னவளின் புன்னகையில் மயங்கி தான் போனான் நேத்ரன்.



சூர்யா சென்ற பின்னும் அத்திசையை நோக்கிக் கொண்டிருந்த நண்பனிடம், “ டேய், தங்கச்சி போய் அரைமணி நேரமாகுது. ரொம்ப வழியுது தொடச்சுக்க” என்றான் ஹரிஷ் சிறுகேலியுடன்...



நண்பனின் கேலியில் சிறு வெட்கம் தோன்றினாலும் அதனை மறைத்தப்படி ஹரிஷை பார்த்து முறைத்துக் கொண்டே, “ வந்த வேலைய பாருடா, ஹரிஷ், ஒரு சின்ன கேம் விளையாடி பார்க்கலாமா அந்த விவேக் கூட…” என கூறி கண்சிமிட்டி சிரித்தான் நேத்ரன்.



அவள் உயிரானவன்...
 
Last edited:

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

"என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்"..... கதையோட அத்தியாயம் 13 & 14 போட்டுடேன்... டியர்ஸ் rerun story தான்...

sorry guys, நேத்து போட்ட 12வது யூடில கடைசி பார்ட் மிஸ்ஸிங்க் டியர்ஸ்... இன்னைக்கு எடிட் பண்ணி போட்டிருக்கேன் பாருங்க...

கதையை படிக்கிறீங்களா... புடிச்சி இருக்க... கூடவே
உங்க நிறை குறைகளையும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க...

[/URL][/URL]


தனசுதா...
 
Last edited:

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 15



“ஒரு சின்ன கேம் விளையாடி பார்க்கலாமா” என கூறி கண்சிமிட்டி சிரித்த நண்பனை பார்த்த ஹரிஷ்,

“விளையாடணும்னு முடிவு பண்ணிட்டா செஞ்சிடலாம் வா...” என்றவனின் தோள் அணைத்து…



“ நண்பேன்டா” என்றான் நேத்ரன்.



“ ம்ஹும்... பேய்க்கு வாக்கப்பட்டா புளியமரம் ஏறித் தான் ஆகணும்... உனக்கு பிரெண்டா இருந்துகிட்டு நான் ஆட்டத்துக்கு வரலை சொன்னா விடவா போற போடா, என்ன செய்ய போறங்கிறதை கொஞ்சம் சொல்லிட்டு செய்...” என்றான் ஹரிஷ்.



“ புலம்பாதடா, அந்த விவேக்கோட மோடிவ் என்ன சூர்யா, ஹாப்பியா இருக்கக்கூடாது. அவளோட நிம்மதிய கெடுக்கணும் அதுக்கு அவள பத்தின ஏதாவது டீடெயில்ஸ் அவனுக்கு தெரியணும் தெரியவச்சுடுவோம்...” என



“ எப்படி நீயே போன் பண்ணி சூர்யா, டீடெயில்ஸ் கொடுக்க போறியா..?” என ஹரிஷ் கேக்க அதில் கடுப்பான நேத்ரன், “உன்னையெல்லாம் நம்பர் ஒன் டீடெக்ட்டிவ்னு சொல்றாங்க பாரு...” எனக் கூறி தலையில் அடித்து கொண்டான்.



“ கடுப்பாகுதா... அப்படித்தானே இருக்கும் எனக்கும், நான் சொன்ன இன்போவை (information) திரும்பவும் எனக்கே சொல்லுற அடுத்து என்ன செய்ய போற...? பிளான் என்னன்னு கேட்டா பில்ட்அப் கொடுக்குறியா பக்கி... நல்ல க்ரீனிஷ் ....க்ரீனிஷ்ஷா வரும் என் வாயில ...” என்ற ஹரிஷிடம்.



“ ஓகே ஓகே... கூல் படி(budy)...” என பலவாறு சமாதானம் கூறி ஹரிஷை மலையிறக்கினான் நேத்ரன்.



“நியூ இயர்க்கு ஏதாவது பிளான் பண்ணி இருக்கியா.? “ என்றவனை வெட்டவா? குத்தவா? என பார்த்தான் ஹரிஷ்.



“டேய், நாம எதைபத்தி பேசிக்கிட்டு இருக்கோம். இப்ப நியூ இயர் இவ்( new year eve) செலெப்ரஷன் ரொம்ப முக்கியமா..? “ என்றவனின் முகத்திற்கு நேரே நிறுத்து எனும் விதமாக கைகாட்டி, “ஏன்டா, எதையுமே முழுசா கேக்க மாட்டியா நீ..? சரியான ஆர்வக்கோளாறு” என திட்டிய நேத்ரன்,



“ ஒழுங்கா முழுசா கேளு, நடுவுல தையா தக்கனு.. குதிக்காத...” என கூறி தன் திட்டத்தினை சொல்ல தொடங்கினான் நேத்ரன்.



“ நாம நியூ இயர் இவ் கொண்டாட வெளிய போகலை ... அதை ஒரு ரீஸனா வச்சி விவேக் பிளான் என்ன..? அவனோட அடுத்த மூவ் சூர்யாவுக்கு, அவன் வச்சியிருக்க ட்ராப் இதையெல்லாம் நாம தெரிஞ்சிக்க போறோம் நாம போற இடம்... நமக்கு பெமிலியர் ஆன இடமா, கூட்டம் இருக்கணும் ஆனால் நெரிசல் இருக்காத இடமா இருக்கணும், மொத்தத்தில் நாம எல்லாரையும் பார்க்குற மாதிரி இருக்கணும்... மத்தவங்களுக்கு அவங்களை நாம கவனிக்கறது தெரியக்கூடாது. அந்த மாதிரி ஒரு சில இடங்களை நான் சொல்லுறேன். அதுல எது நமக்கு சேப் அப்படின்னு பார்த்து எனக்கு இன்போர்ம் பண்ணு என்ன புரிஞ்சிதா..?” என்றான் நேத்ரன்.



‘ தெளிவா சொன்னாலே எனக்கு புரியாது இதுல இவன் வேற இருக்கணும் இருக்கக்கூடாது, பார்க்கணும் பார்க்கக்கூடாதுன்னு ரொம்ப… ரொம்ப தெளிவா குழப்புறான். புரியலைன்னு சொன்னா மானகேடா திட்டுவான். எதுக்கும் குத்துமதிப்பா தலை ஆட்டி வைப்போம்...’ என மனத்திற்குள் முடிவெடுத்தவனாக நேத்ரனை பார்த்து, “ஓகே…” என ஒரு மார்க்கமாக தலை ஆட்டிவிட்டு, மறுபடியும் அலைபேசியில் தன் பார்வையினை பதித்து கொண்டான் ஹரிஷ்.



“நான், நீ, சூர்யா அப்புறம் அம்மா எல்லோரும் நியூ இயர் இவ்காக வெளிய போறோம்...” என்றவுடன் ஹரிஷ், “அம்மா, ஏன்டா பாவம் அவங்களை கஷ்டப்படுத்திக்கிட்டு நாம மூணு பேரும் வேணா போகலாம்...” என்றான் புத்திசாலிதானமாக.



தான் கூறியதிற்கு எந்த எதிர்வினையும் இல்லாது போக அலைபேசியினை விடுத்து நேத்ரனின் முகம் காண இவனை முறைத்து கொண்டிருந்தான் நேத்ரன்.



‘ஐய்யையோ..! பயப்புள்ள பார்வையே சரி இல்லை நாம ஏதாவது தப்பா சொல்லிட்டோமோ...’ என யோசிக்க ‘நாம ஒன்னும் அப்படி தப்பா சொல்லலேயே’ என தன் மனத்திற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான் ஹரிஷ்...



சரி பையன் மலையேறருதுக்குள்ள... மலையிறக்கிடுவோம் என முடிவுக்கு வந்து, “ நான் எதுவும் தப்பா சொல்லலையே கமல், எதுக்கு என்னைய இவ்வளவு பாசமா பார்க்குற…?” என்றான்.



“மூளைன்னு ஒரு மெட்டீரியல் உனக்குள்ள இருக்கா..? இல்லையா..?” என வார்த்தைகளை கடித்து துப்பிய நேத்ரனை.

அப்பாவி பார்வை பார்த்து,“என்னை ஏன்டா திட்டுற? நான் அம்மா நல்லதுக்கு தானே சொன்னேன்...” என்றவனின் மேல் மேலும் சினமுற்ற நேத்ரன், “நல்லா வந்துட போகுது என் வாயில லூசாடா நீ..? நாம முணுபேரும் வெளிய போய் நியூ இயர் இவ் செலெப்ரேட் பண்ணலாம் வாம்மா சூர்யான்னு, நீ கூப்பிட்டதும் அப்படியான்னு கேட்டுட்டு உடனே கிளம்பிடுவா பாரு… அம்மா வந்தாலாவது அது இதுன்னு எதையாவது சொல்லி எப்படியாவது சம்மதிக்க வைக்கலாம். அதுவே கஷ்டம் இதுல நாம மட்டும் போறோம்ன்னு சொன்ன உன் திடீர் தொங்கச்சி இந்த வீட்டு வாசலை கூட தாண்ட மாட்டா” என்றான் சலித்துக்கொண்டு. (அவனவன் கஷ்டம் அவனுக்கு. அவனுக்கு மட்டும் ஆசையா என்ன உன் கூட எல்லாம் நியூ இயர் இவ் கொண்டாட…)



மேற்கொண்டு ஏதோ பேச வந்த ஹரிஷிடம், தன் வாயில் வலது கை வைத்து மூடி நிறுத்து என செய்கை செய்த நேத்ரன், “ நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் நாங்க முணுபேர் மட்டும் போய்க்கிறோம் ஹெல்ப் பண்ண கூப்பிட்டா டார்சர் பண்ணிக்கிட்டு” என்றவனின் தோளில் கைபோட்டு அணைத்து கொண்ட ஹரிஷ்,



“ டென்ஷன் ஆகாத மச்சான், நீ சூர்யாவை வெளிய அழைச்சிட்டு போய் அந்த விவேக்குக்கு பேவர் பண்றது எனக்கு ஒருமாதிரி இருக்கு ரிஸ்க் எடுக்குறோமோன்னு தோணுது தனியா அவனை டீல் பண்ணிக்கலாமே கமல், சூர்யா உன் பக்கத்தில் இருக்குற வரை அவனால ஒன்னும் பண்ண முடியாது.



அவனை அப்படியே சுத்தல்ல விட்ரு மண்ட காயட்டும். இல்லைன்னா அவன் திரும்ப இவங்க பக்கமே தலை வச்சு படுக்காத மாதிரி அவனுடைய பிஸ்னெஸ்ல பிரச்சனைக்கு மேல பிரச்சனை குடு. யாரு வேணாம்னு சொன்னா...” என்றவனை பார்த்து விஷமம் நிறைந்த புன்னகையினை உதட்டில் மிளிர விட்ட நேத்ரன்.



“ நீ என்னை உன் பிரெண்ட் கமலநேத்ரனாவே பார்க்குற பிசினஸ் மேன் கமலநேத்ரனா, இன்னும் என்னை புரிஞ்சிக்கலை. ம்.... நீ சொன்னது அத்தனையும் அந்த விவேக் அனுபவிப்பான்” என்ற நேத்ரனின் முகம் இறுகி காணப்பட்டது. அதில் நேத்ரனின் கோபத்தின் அளவை கண்டுக் கொண்டான் ஹரிஷ்.



“ எனக்கு அவனை சூர்யா, லைப்ல இருந்து மொத்தமா விலக்க ஒரு செகண்ட் ஆகாது பட் எனக்கு சூர்யா மனசுல அவனால ஏற்பட்ட ரணம் ஆறணும் அதுக்கு சூர்யா அவனை பார்த்து இப்ப ஒதுங்கி போற மாதிரி போகாம.... அவனை தைரியமா நின்னு பேஸ் பண்ணனும் அதுவே அவனுக்கான பெரிய அடியா இருக்கும்”.



“விவேக், சூர்யாவை நெருங்கும் முன், நான் சூர்யாவுக்கு நெருக்கமாக இருக்கணும்… முதல்ல நடந்த மாதிரி இம்முறை அவளை தவிக்க விடக்கூடாது… அஃப்கோர்ஸ் அவங்க பேமிலி மெம்பெர்ஸ் எல்லாரும் அவளுக்கு சப்போர்ட்டா இருந்தாங்க தான். ஆனா அதுக்கெல்லாம் மேல அவனை(விவேக்), சூர்யா நேருக்கு நேர் பார்க்கும் பொழுது அவளோட மனசு துவளாம தாங்கி நிற்கணும். அந்த தைரியத்தையும் மனவுறுதியையும் என்னாலையும் என்னோட காதலாலையும் மட்டும் தான் அவளுக்கு குடுக்க முடியும்” என்றான் நேத்ரன்.



“தங்கச்சிக்கு, தைரியம் இல்லைன்னு சொல்றீயா கமல்...?”.



“ சூர்யாவுக்கு ரொம்ப அதிக மனதைரியம், அது இருக்கவே தான். அந்த விவேக், என்ன பிரச்சனை பண்ணாலும் அவளை அசிங்கப்படுத்தினாலும் ‘துஷ்டரை கண்டால் தூர விலகு’ அப்படின்னு அவனை அவாய்டு(avoid) பண்ணி இவ்வளவு தூரம் வந்திருக்கா. இல்லைன்னா அவன்கிட்ட அழுது கெஞ்சிருப்பா தன்னோட லைப்ல ஏன் பிரோப்ளேம் பண்றன்னு… அதர்வைஸ் தன்னையே அழிச்சிக்கிட்டு இருப்பா...” இதை சொல்லும் பொழுது நேத்ரனின் கைமுஷ்டிகள் இறுகி குரல் கடினபட்டு இருந்தது.



“ சூர்யா, அந்த விவேக்கிட்ட இருந்து ஒதுங்கி வாழ்றதை விட, “பாதகம் செய்தாரை பார்த்து பயம் கொள்ளலாகாது பாப்பா.... அவரை மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா...” இந்த பாரதியாரின் பாட்டுல வர வரிகள் மாதிரி சூர்யா அந்த விவேக்கோட ஆணவம், திமிர், பணபலம் இதெல்லாம் அவளோட காலில் போட்டு மிதிக்கணும்...” என கோபத்தில் தாடை எலும்புகள் இறுக தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்ற நேத்ரனை சகஜமாக்கும் பொருட்டு.



அவன் தோளினை தட்டி, “ உன்னோட மெயின் பிளான் சூர்யாவை கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கு சைட்ல கொஞ்சம் அந்த விவேக் பையனை பழி வாங்கணும்...” என சிரிக்காமல் கேட்ட ஹரிஷை, நேத்ரன் திரும்பி பார்க்க அவன் கண்களில் வழிந்த விசமத்திலும் சிரிப்பினை கட்டுப்படுத்தியதால் உதடுகளில் ஏற்பட்ட சிறு அசைவிலும் அவனின் குறும்பை கண்டுகொண்ட நேத்ரன்.



“ நான் எவ்வளவு சீரியஸ்ஸா பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்னை வச்சு காமெடி பண்ணிக்கிட்டு இருக்க உன்னை “ என அடிக்க முற்பட்டவனை.



“ வெயிட், பேச்சு பேச்சா தான் இருக்கணும். கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது. நானும் வர மாட்டேன் கொஞ்சம் நேரத்துக்கு முன்ன வச்சிருந்தியே அந்த மாதிரி டெரர் லுக்கோட என் தங்கச்சி முன்னாடியெல்லாம் போய் நின்னுடாத பாவம் குழந்தை புள்ள பயந்துட போகுது. அப்புறம் சூர்யாவை கட்டிக்கிட்டு ஹனிமூன் கொண்டாட முடியாது... தனிமூன் தான் கொண்டாடணும் புரியுதா..? அப்புறம், நீ சொன்னதுல எந்த இடம் செட்டாகும்” என ஹரிஷ், தன் மோவாயில் ஒற்றை விரலால் தட்டி தீவிரமாக யோசித்து கொண்டிருந்தவன்.



முகம் பிரகாசிக்க, “ மச்சான், நாம

“ MOULIN ROUGE” (மௌலின் ரோக்) போகாலமா..? நீ சொன்ன இடங்களை விட இதுதான் பெஸ்ட் எவனும் நம்மளை கவனிக்க மாட்டான். அவனவன் வந்த வேலையை மட்டும் பார்ப்பான்” என்றவனை கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் கொண்டு அடித்தான் நேத்ரன்.(“ MOULIN ROUGE” என்பது உலகளாவிய அங்கீகரத்துடன் நடக்கும் பேரிசியன் கார்ப்ரெட்)



“ஏன்டா… உனக்கு இந்த கொலைவெறி…? ஏற்கனவே, சூர்யா என்கிட்ட ரொம்ப நல்லா பேசுவா இதுல அவளை நான் நீ சொன்ன இடத்துக்கு அழைச்சிட்டு போனேன்னு வை. அவ இந்த ஜென்மத்துக்கு என் முகம் பார்த்துக் கூட பேச மாட்டா எனக்கு கல்யாணம் ஆகாமலேயே டிவோர்ஸ் வாங்கி கொடுத்துடுவ போல இருக்கு” என கூறி இன்னும் ரெண்டு வைக்க.



ஓரளவிற்கு நேத்ரனின் மனநிலையினை மாற்றிவிட்ட ஹரிஷ், “ போதும் வலிக்குது விட்ரு இல்லனனா அழுதுகிட்டே போய் என் தங்கச்சிகிட்ட சொல்லிடுவேன். அந்த இடத்துக்கு உன்னை இவன் கூப்பிட்டுகிட்டு வர சொன்னான். நான் வேண்டாம்ன்னு சொன்னா என்னை அடிக்கிறான்மா அப்படின்னு? சொல்லுவேன் “ என்றவனை.



தன் மோவாயில் கைவைத்து “அடப்பாவி…” என பார்த்துக் கொண்டிருந்த நேத்ரனிடம், “அது அந்த பயம் இருக்கணும்...” என மிதப்பான பார்வை பார்த்த ஹரிஷ், “நம்மளோட சேப்டி மத்ததெல்லாம் பார்த்துட்டு சொல்றேண்டா, இன்னும் ஒன் வீக் இருக்குள்ள அதுக்குள்ள பார்க்குறேன்.அப்புறம் இந்தா டா, நீ கேட்ட சூர்யா பத்தின ஃபுல் டீடெயில்ஸ் அண்ட் அந்த விவேக் பத்தின டீடெயில்ஸ்... ஆல்ரெடி உனக்கு சொன்னதுதான். இந்த பைல்ல இருக்கு என்கிட்ட வேற காப்பி கிடையாது. நீ சொன்ன மாதிரி இதுல சூர்யா சம்பந்தப்பட்டு இருக்குறதுனால நான் பேக்கப் எடுக்கலை. சோ, இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சவுடனே இதை அழிச்சுடு உன்கிட்ட நேரில் பார்த்து சொல்லி கொடுக்கத்தான் வந்தேன். நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்ல இருந்தாலும் சொல்றேன்... சூர்யாவை தனியா எங்கேயும் போகவிடாத நீயும் ஜாக்கிரதையா இரு அம்மாகிட்டையும், சூர்யாகிட்டையும் சொல்லி வெளிய போக பெர்மிஷன் வாங்கிடு...” என கூறி ஹரிஷ் கிளம்ப.



“ இருடா… நானும் ஆபீஸ் தான் போகணும், ஒரு ரெண்டு நிமிஷம் இரு இந்த பைல்ல வச்சிட்டு வந்துடறேன்…” என கூறி அந்த பைலை பத்திரமாக பூட்டிவைத்தான்.



பின்னாளில் இதனால் பெரும் சங்கடங்களை சந்திக்க நேரும் என அறிந்திருந்தால் அதனை இப்பொழுதே, இக்கணமே நொடியும் தாமதிக்காமல் அழித்திருப்பான். என்ன செய்ய விதி வலியது ...



இருவரும் சூர்யா மற்றும் பிரேமாவிடம் விடைபெற்று கிளம்பினார்கள்.



சூர்யா லீசாவிடம் கிளம்ப சொல்ல... அவள் மகிழ்ச்சியில் சூர்யாவை கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு, “தேங்க் யூ சிஸ்டர்” என கூறி (இந்த சீன் மட்டும் நேத்ரன் இருக்கும் போது நடத்து இருக்கணும் லீசா கண்ணு உனக்கு லீவ், கிப்ட் எல்லாம் கான்செல் ஆயிருக்கும் தப்பிச்ச). பிரேமா, அவருக்கு தரவேண்டிய மருந்துகளின் அட்டவணை ஏற்கனவே சூர்யாவிற்கு, தெரிந்தாலும் மறுபடியும் சொல்லிவிட்டு டிரைவர் துணையுடன் நேத்ரன் கூறியபடி ப்ரேமாவிடம் கேட்டு லீசாவிற்கு கிறிஸ்துமஸ் கிப்ட், பணம் எல்லாம் கொடுத்து அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்.



கொட்டும் பனியினையும் பொருட்படுத்தாது காலை வேளையில், ஹரிஷ் தனது காரில் நேத்ரனின் மாளிகைக்கு வந்துவிட்டான். ஆம் அவர்கள் நியூ இயர் இவ் கொண்டாட மாண்ட்மார்டெர் (montmarter) நகருக்கு செல்ல உள்ளனர்.

அவர்கள் வெளியில் செல்ல ப்ரேமா சம்மதம் சொல்லிவிட்டாலும் சூர்யாவிடம் சம்மதம் வாங்குவதற்குள் ஒருவழி ஆகிவிட்டான் நேத்ரன். கடைசியில் நேத்ரன், ஹரிஷ், பிரேமா, சூர்யா இவர்களுடன் தங்கம்மாவையும் இணைத்து கொண்டனர்.



ஹரிஷ் எல்லாம் விசாரித்து முடித்து, முடிவாக அவர்கள் “மாண்ட்மார்டெர் “ செல்லலாம் என முடிவு செய்து அதை நேத்ரனிடமும் தெரிவித்து விட்டான். அதற்கு காரணம் மாண்ட்மார்டெர்ரில் கமலநேத்ரனுக்கு ஹோட்டல் உள்ளது.



பாரீஸ் மாநகரில் கிறிஸ்துமஸ் தொடங்கி நியூ இயர் வரை கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்காது. உணவகங்கள், கடைகள், சந்தைகள், என அந்நகரமே ஒளி வெள்ளத்தில் மிதக்கும்.



அவள் உயிரானவன்...











அத்தியாயம் 16



“மாண்ட்மார்டெர்” (MONTMARTER)



“The Mountains of Martyrs”... மாண்ட்மார்டெர் 130M (430ft) உயர பெரிய மலை.



பொழுதுபோக்கு அம்சமாகவும், வரலாற்று சிறப்புகள் வாய்ந்த பல இடங்கள் மாண்ட்மார்டெரில் இருந்தாலும் பிரேமாவின் உடல்நிலை பொருட்டு அவர்கள் சென்றது.



“சேக்ரீ கோயர் “ (sacre coeur) தெருக் காட்சி மற்றும் இயேசுவின் திரு இதயம் பசிலிக்காவிற்கு தான்.”



ஹரிஷ், நேத்ரனின் வீட்டிற்கு காலையிலேயே வந்துவிட்டான். இங்கிருந்தே அனைவரும் ஒன்றாக செல்லலாம் என்று.



இவர்கள் வீட்டில் இருந்து கிளம்பி முதலில் சென்றது நேத்ரனின் “கமல் ஹோட்டல்ஸ்”க்கு தான்.



நேத்ரனின் “ கமல் ஹோட்டல்ஸ்” பாரீஸின் பல பகுதிகளில் அதன் கிளைகள் அமைத்து உள்ளது. அது போல் மாண்ட்மார்டெரிலும் அவனின் ஹோட்டல் 100 அறைகள் கொண்ட 10 மாடி கட்டிடம், இது ஸ்பானிஷ் மற்றும் பிரிட்டன் கட்டிட கலையினை கொண்டு உருவாக்கப்பட்டது.



பத்தாவது மாடியில் மீட்டிங் அண்ட் பங்ஷன் ஹால், ஜிம் போன்ற வசதிகள் உள்ளன… ஹோட்டல் நிறுவனர்களுக்கு என தனி பிரத்யேக சூட் ரூம்களும் உண்டு. டபுள் சூட் ரூமில் பிரேமா, தங்கம்மா மற்றும் சூர்யா தங்கிக்கொண்டார்கள் மற்றும் சிங்கிள் சூட் ரூமில் நேத்ரனும், ஹரிஷும் பகிர்ந்துக் கொண்டார்கள்.



மாண்ட்மார்டெர் மலையின் அழகு கண்ணை கவரும் வண்ணம் பார்த்து ரசிக்க தக்கவாறு வடிவமைக்க பட்டிருந்தது ஹோட்டலின் எல்லா அறைகளும்... அறைக்கு வந்தவர்கள் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு பசிலிக்கா செல்லலாம் என்ற முடிவில் அவரவர் அறைக்கு சென்றனர்.



கால் கட்டு பிரிக்காத நிலையில் தன்னால் மலைமீது இருக்கும் சர்ச்சுக்கு வரமுடியாது என்றும் சிறியவர்களை சென்று வர சொல்ல சூர்யா அவருடனே இருப்பதாக சொல்ல, வெளியில் செல்ல தயாராகி வந்த நேத்ரன் மற்றும் ஹரிஷ் செவிகளில் இது விழ, “பார்த்தியா உன் தொங்கச்சி கொஞ்ச தூரத்தில் இருக்குற இடத்துக்கே வரமாட்டுறா அம்மா இல்லைன்னா அவ நம்மகூட வந்திருக்கவே மாட்டா” என ஹரிஷின் காதுக்குள் மெதுவாக கிசுகிசுத்தான் நேத்ரன்.



இருவரும் அறைக்குள் நுழைய சூர்யாவின் பேச்சு தடைப்பட நேத்ரன், ஏதும் அறியாதவன் போல், “ கிளம்பலாமா ம்மா…” என்றவனை பார்த்து ‘என்ன நடிப்புடா சாமி’ என மனத்திற்குள் சொல்லிக் கொண்டான் ஹரிஷ்.



பிரேமா, நேத்ரனிடம் “தங்கம்மாவும் நானும் சர்ச்சுக்கு வரலை கண்ணா, படி ஏறணும் அதனால நான் இப்ப ரெஸ்ட் எடுத்திட்டு நைட் வரேன் “ என்றார்.



“ அத்தம்மா… அண்ணாவும், சா... அவரும் வேணா போயிட்டு வரட்டும் நானும் உங்கக்கூடவே இருக்கேன்” என்ற சூர்யாவினை நேத்ரன் ஒரு பார்வை பார்க்க அவள் இதழ்கள் பசைபோட்டது போல் ஒட்டிக்கொண்டன.



‘ இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இந்த பார்வை பார்க்குறாங்க... என்ன கண்ணு ... இந்த கண்ணை பார்த்தா மட்டும் எனக்கு என்னமோ ஆகுது... நானும் இவரோட கண்ணை நேருக்கு நேர் பார்க்க கூடாதுன்னு இருந்தாலும் மேகனேட் (magnet) மாதிரி அந்த கண்கள் என்னை அதுக்குள்ள இழுக்குற மாதிரி இருக்கு...’ என மனத்திற்குள் எண்ணமிட,



“ சூர்யா, அம்மாவை பார்த்துக்க தங்கம்மா, இருக்காங்க இங்கவந்து ரூம்குள்ளேயே இருக்குறதுக்கு இங்க வராமலேயே இருந்திருக்கலாம்...” என ஹரிஷும்.

“ எனக்கு தான் வயசாயிடிச்சு உடம்புக்கு முடியலை நீங்க எல்லாம் இளவயசு பசங்க நல்ல சுத்திப் பார்த்துட்டு வாங்க...” என பிரேமவும் சொல்ல… ஒருவழியாக சமாதானம் ஆகி அவர்களுடன் போவதற்கு சம்மதம் தெரிவித்து தயாராகி வர சென்றாள்.



வெள்ளை நிற முழுநீள பாவாடை அதற்கு ஏற்றார் போல் வெள்ளை நிறத்தில் தங்கநிற சிறுபூக்கள் போட்ட டாப் மற்றும் கழுத்தை சுற்றி வெண்ணிற துப்பட்டா அணிந்து தலைமுடியினை இருபக்கமும் சிறிது எடுத்து நடுவில் கிளிப் செய்து தோகை என விரியவிட்டு, எந்தவித ஒப்பனையும் இல்லாமல் நெற்றியில் ஒரு சிறு பொட்டிட்டு, கைகளில் ஓவர்கோட் சகிதம் வந்தவளை கண்டு நேத்ரனின் கண்கள் அவளிடமே தஞ்சம் புகுந்தன.



அவனுடைய முக மலர்ச்சியை கண்டு உள்ளுக்குள் சிரித்து கொண்டார் பிரேமா.



வெகுநேரமாக நேத்ரனிடம் அசைவில்லாமல் போக அவன் பார்வை சென்ற திசை நோக்கிய ஹரிஷ், காரணம் அறிந்து நேத்ரனின் காதில் “வாய மூடுடா வாட்டர்பால்ஸ் ஓவர்ப்ளோ ஆகுது...” என கூறி நேத்ரனின் முறைப்பை பரிசாக பெற்றுக் கொண்டான்.

மூவரும் கிளம்ப பிரேமா ஆயிரம் பத்திரம் சொல்லி அனுப்பி வைத்தவர். “ சூர்யாவை பத்திரமா கூட்டிகிட்டு போய்ட்டு வாங்க… அவளுக்கு இந்த இடம் புதுசு கண்ணா, ஹரிஷ் கூட அரட்டை அடிச்சிட்டு போகாதே சூர்யாவை உன்னோடவே இருக்குற மாதிரி பார்த்துக்க” என்றார்.



சூர்யாவிடமும், “தனியா எங்கேயும் போகாதடா, படிகள் ஏறும்போது முடியலைன்னா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு மேல நடங்க” என கூறினார்.



ஹரிஷ்… நேத்ரனிடம் “ பாவம் அம்மா, இதெல்லாம் அவங்க சொல்லாமலே அந்த வேலையை தான் நீ பார்ப்பேன்னு அவங்களுக்கு தெரியலை...” என்றவனின் காலினை மிதித்தான் நேத்ரன்.



வலியில் ஹரிஷ் கத்த அனைவரும் என்னவென கேட்க அவனை முந்திக்கொண்டு நேத்ரன், “கீழ ஷாப்ல புது ஷூ வாங்குனான் அது டைட்டா இருக்குபோல வலிக்குது அதான் கத்துறான்...” என்றான்.



“ ஹரிஷ், நீ போய் அந்த ஷாப்ல ஷூவை மாத்திட்டு வாடா...” என்றவனை, “துரோகி…” என சத்தம் வராமல் திட்டிவிட்டு போய் வேறு அணிந்து வந்தான்.



மேலும் பிரேமாவிடம் சில பல அறிவுரைகளை பெற்றுக்கொண்டு மூவரும் ஒருவழியாக பசிலிக்கா வந்தடைந்தனர்.



Basilica of Sacred heart of paris (சுருக்கமாக திரு இதயம்) sacre-coeur, Basilica du Sacre - coeur....



இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கிய நிலக்குறியாக நகரத்தின் உயர் புள்ளியில் அமைந்துள்ளது. திரு இதயம் அரசியல் மற்றும் கலாச்சார நினைவிடமாகவும் திகழ்கின்றது. அத்துடன் இயேசுவின் திரு இதயத்திற்கு அர்பணிக்கப்பட்டுள்ள இது கிறிஸ்துவின் அன்பையும், இரக்கத்தையும் தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது. (The Big white dommed chruch).



அந்த பிரம்மாண்ட வெள்ளை கத்தோலிக்க சர்ச் கண்டு சூர்யாவின் விழிகள் விரிந்தன வியப்பில்.



இவர்கள் சுற்றியுள்ள இயற்கை எழிலை கண்டு ரசிக்க விவேக் ஏற்பாடு செய்த உளவாளி இவர்கள் அறியாமல் தொடர்வதாக அவன் நினைத்து கொண்டான். பாவம் அவன் அறியவில்லை. தான் கண்காணித்து கொண்டிருப்பது, “தி கிரேட் கமலநேத்ரன் மற்றும் துப்பறியும் புலி ஹரிஷ் “ என்று.



அதற்கு பெரிதும் உதவியது அவர்களின் தற்போதைய தோற்றம்… நேத்ரன் தாடியை மேலோட்டமாக ட்ரிம் செய்து பிராண்டட் ரவுண்டு நெக் டீஷிர்ட் மற்றும் ஜீன்ஸ் கண்களில் கூலர்ஸ் குளிருக்கு அடக்கமாக ஜெர்கினை அணிந்து பார்த்ததும் யாரும் அடையாளம் காணமுடியாத விதத்தில் இருந்தான். ஹரிஷும்… வி நெக் டீஷிர்ட், ஜீன்ஸ் மற்றும் கூலர்ஸ், ஜெர்கின், தலையில் தொப்பி அணிந்திருந்தான்.



ஏனெனில் அவர்களை வீட்டில் இருந்து பலோ செய்து தகவல் சொன்னவன் வேறு இப்பொழுது தொடர்பவன் மற்றவன். முதலாமானவன் தகவல் பரிமாற்றம் செய்யும் பொழுது சூர்யா புகைப்படம், அவர்களின் வண்டி எண், தங்கும் இடம் இவற்றை மட்டும் சொன்னவன், நேத்ரனை பற்றி குறிப்பிடவில்லை. இங்கே விதி சூர்யாவிற்கு ஏதோ கொஞ்சம் நல்லது செய்தது.



சூர்யாவோடு பசை போட்டு ஒட்டாத குறையாக அவளை அடிப் பற்றியே நடத்து வந்துக் கொண்டிருந்தான் நேத்ரன்.



முதலில் ஆர்வக்கோளாரில் வேகமாக படி ஏறிய சூர்யா, ஒருக் கட்டத்திற்கு மேல் ஏற முடியாமல் கஷ்டப்பட இதனை கண்ட நேத்ரன்.



“ ரியா, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு போகலாம்...” என கூறி அங்கு படிகளுக்கு அருகில் உள்ள திண்டில் அமர, சூர்யாவும் நேத்ரன் அருகில் சிறு இடைவெளி விட்டு அமர்ந்தாள். ‘நானெல்லாம் திருப்பதி மலை ஏறவே யோசிப்பேன். இந்த அத்தம்மா, இப்படி என்னைய மாட்டி விட்டுட்டாங்களே… படியேறணும் சொன்னாங்களே…? இம்பூட்டுன்னு சொன்னாங்களா…? ஜீவா, உன்னளவுக்கு இங்க யாருக்கும் திறமை பத்தலைடா, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறது இது வரை ஏறி வந்த டையர்ட் போக மீதம் உள்ள படி ஏற எனர்ஜி வேண்டாம். அது என் கூட வந்த இந்த ரெண்டு லூஸுக்கும் தெரிய மாட்டிங்குது.



‘ஐ மிஸ் யூ சோ மச் ப்ரோ’ என மனத்திற்குள் புலம்பி கொண்டே சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவள் கண்கள் அங்கு சென்று கொண்டிருந்த 6 வயது சிறுமியின் மீதும் அவள் கைகளில் உள்ள சாக்லேட் மீதும் படிந்து விலகியது.



(அதுவேற ஒண்ணும் இல்லை மக்களே சூர்யாவுக்கு சாக்லேட்னா ரொம்ப... ரொம்ப... பிடிக்கும் அதனால ஜீவா, மலையேறும் போது அங்குள்ள கடைகளில் சாக்லேட் ஒன்னே ஒண்ணு வாங்குவான்).



அதற்கு சூர்யா, “கஞ்சுஸ், ஏன்டா ஒண்ணு மட்டும் வாங்குன கொஞ்சம் நிறைய வாங்க வேண்டியது தானே” என கேட்க.

“ஏய் பூசணி, உன்னை மாதிரி என்னையும் லக்கேஜ் தூக்கிட்டு வர சொல்றியா..?”.



“டேய், நான் எங்கடா லக்கேஜ் தூக்கிக்கிட்டு வரேன்... ஒரே ஒரு பேக் மட்டும் தானே” என்ற சூர்யாவை, உச்சி முதல் பாதம் வரை பார்த்து, “நீயே ஒரு வேஸ்ட் லக்கேஜ்” என கூறி அங்கிருந்து வேகமாக நடக்க தொடங்கி விட்டான்.



பக்கத்தில் இருந்து அடிவாங்க அவனுக்கு என்ன பைத்தியமா... இருவரின் ரகளைகளையும் பார்த்து உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியில் அவர்கள் இருவரையும் கண்டித்து கொண்டே வந்த காயூ.



ஜீவா வேகமாக நடக்க தொடங்கவும்... அவனை பிடிக்க முயன்றவளின் கரம் பற்றி, “சூர்யா, இது வீடில்ல ஒழுங்கா எங்க கூடவே வா” என்றவரை முறைத்து விட்டு அவரிடம் இருந்து கைகளை விலக்கி கொண்டு.



“ அதை போய் உங்க சீமந்த புத்திரன் கிட்ட சொல்லுங்க அவன் மட்டும் என் கையில் கிடைக்கட்டும் இருக்கு அவனுக்கு” என பொருமியவளின் தோளில் கைபோட்டு அணைத்து கொண்ட சிவா.

“விடுடா… என் குட்டிமாவை பத்தி அவங்களுக்கு என்ன தெரியும், வா அப்பா உனக்கு சாக்லேட் வாங்கி தரேன்...” என கூற தாய்க்கு “வெவ்...வ்.. வெ” என அழகு காட்டிவிட்டு தந்தையோடு சென்றாள்.



இவர்கள் வரும் வரை காத்திருந்த ஜீவா, சூர்யாவிடம் சாக்லேட் தர அவள் அவனிடம் முறுக்கி கொள்ள ஜீவா, “ பூசணி, உனக்கு நிஜமாவே சாக்லேட் வேண்டாமா..? நான் சாப்பிட்டுடுவேன்...” என கூறி வாயில் வைக்க கொண்டு செல்ல அதனை பறித்து தன் வாயில் போட்டு கொண்டவள். அவனை ரெண்டு அடி போடவும் மறக்க வில்லை.



“ஏன்டா, பக்கி அப்படி சொன்ன?” என்றவளிடம்… “லூஸு பூசணி, நாம போற வழி எல்லாம் கடை இருக்க எதுக்கு வாங்கி சுமக்கணும்” (உள்ளுக்குள் மொத்தமா வாங்குனா உனக்கு திங்கத்தான் தோணும். நடக்க மாட்ட அதே ஒண்ணே ஒண்ணு வாங்குனா அடுத்தது வாங்குறதுக்குக்காகவது நடப்ப இல்ல எப்படி என் ஐடியா என தனக்கு தானே சபாஷ் சொல்லி கொண்டான் ஜீவா).



தன் தமயனுடன் சென்ற பயணத்தில் நிகழ்ந்த நினைவுகளில் இருந்தவளின் முன்னே சாக்லேட் ஆட்டி அவளின் யோசனை கலைத்தான் நேத்ரன்.



“ என்னாச்சு ரியா… ரொம்ப நேரமா கூப்பிடுறேன்” என நேத்ரன் பேசிக் கொண்டிருக்க… சூர்யாவின் கவனம் முழுவதும் அவன் கையில் உள்ள சாக்லேட்டிடமே இருந்தது.



“ சரி, வாங்க போகலாம்...” என்று மீண்டும் மூவரும் மேலே செல்ல தொடங்கினர்.



அவளின் பார்வை அந்த சிறுமியிடம் சென்று மீண்டதை கண்ட நேத்ரன், தங்களுக்கு பாதுகாவலராக வந்தவர்களில் ஒருவனை அழைத்து சாக்லேட் வாங்கி வர சொன்னான்.



‘ நம்ம கூட தானே வந்தாங்க எப்ப? எப்படி..? இவங்க கையில் சாக்லேட் வந்தது...’ என மிகவும் அதி முக்கிய விஷயமாக தீவிர யோசனையில் இருந்தாள் சூர்யா.

அவளின் முகப்பாவனைகளை கவனித்துக் கொண்டிருந்த நேத்ரனுக்கு சிரிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. அப்படியும் அவன் உதடுகள் சிரிப்பால் துடிக்க கீழ் உதட்டினை மடித்து கடித்து கொண்டான் சிரிப்பினை கட்டுப்படுத்த.

‘ சாதாரண சாக்லேட் அதுக்கு என்ன ஒரு ரியாக்ஷன் கொடுக்குறா உனக்காக தான் டாலி, வாங்கிட்டு வர சொன்னேன். நீ எப்ப டாலி, என்கிட்ட உரிமையா எல்லாம் கேக்க போற’ என மனத்திற்குள் நினைத்து ஒரு பெரும்மூச்சினை வெளியேற்றினான்.



“ ரியா, இந்தாங்க சாக்லேட் இதை கொடுக்கத்தான் கூப்பிட்டேன் மறந்துட்டேன்” என கூறி அவளிடம் சாக்லேட் தந்தான் நேத்ரன்.



கேள்வியாய் நோக்கியவளிடம் நியூ இயர் செலேப்ரஷன்காக இங்க வந்தவங்க கொடுத்தாங்க என கூறியவனிடம், வேண்டாம் என வாய் மறுத்தாலும் கைகள் அதனை சந்தோசமாகவே பற்றி கொண்டன.



உடனே அந்த சாக்லேட்டை பிரித்து நேத்ரனுக்கும், சிறிய துண்டை கொடுக்க அதனை பெற்று கொண்டவன் பார்வை... அந்த இனிப்பை ரசித்து ருசித்து உண்ணும் சூர்யாவின் இதழ்களிலேயே இருந்தது.



சிறிது இடைவெளி விட்டு இவர்களை தொடர்ந்து வந்துக் கொண்டே தன் வேலையினை செம்மையாக செய்து கொண்டிருந்த ஹரிஷ் (அதாங்க சைட் சீயிங்) திடீரென இருவரும் நின்றுவிட வேகமாக அவர்களை நெருங்குகையில் தான். தன் நண்பனின் நிலையை கண்டுகொண்டவன் நேத்ரனின் தோளில் கைவைத்து, “வாங்க போகலாம்” என .



சுற்றுப்புறம் உரைக்க தன்னிலை மீண்ட நேத்ரன், ஹரிஷ் தன்னை கண்டுக் கொண்டதை நினைத்து அவனிடம் சிறுவெட்கம் தோன்ற, “சரி வாங்க போகலாம்” என அவனும் பொதுவாக கூறிப் படி சூர்யாவை அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.



சூர்யா, ஹரிஷிடமும் ஒரு சிறு துண்டு சாக்லேட் தர, “வேண்டாமா நீயே சாப்பிடு” என கூறினான்.



‘ உன் கிட்ட ஒரு பீஸ் வாங்கி சாப்பிட்டா உன் பக்கத்தில் இருக்குற டெரர் பீஸ் கிட்ட யாரு வாங்கி கட்டிக்கிறது… பாரு பயப்புள்ள என்னை எவ்வளவு பாசமா பார்க்குறதை…’ என மனத்திற்குள் சொல்லிக் கொண்டிருந்தவனை நிஜத்திலும் நேத்ரன் முறைத்துக் கொண்டு தான் இருந்தான்.

ஒரு வழியாக இவர்கள் சர்சினை அடைந்து சுற்றி பார்த்து விட்டு மீண்டும் திரும்புகையில், ஒரு பெண் வேகமாக நடத்து வருவதை (கிட்ட தட்ட ஓடிவருவதை) சுற்றுப்புறத்தை ஆராய்ந்த படி வந்த நேத்ரன் சிறிது தொலைவிலேயே கண்டுகொண்டான். ஹரிஷிடம் கண்களால் செய்கை செய்ய அப்பெண்ணை காண அவள், அவளுக்கு பின்னால் திரும்பி திரும்பி பார்த்த வண்ணம் வந்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பின்னால் ஒருவன் மற்றவர் கவனம் கவராதவாறு அவளை பின் தொடர்ந்தான்.



இவர்கள் அருகில் வந்தவுடன் கால் தடுக்க அப்பெண் சூர்யா மேல் மோதி இருவரும் விழப்போகிறார்கள் என்றவுடன், சூர்யாவினை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான் நேத்ரன். அவ்வணைப்பில் காமமோ... இல்லை வேறு எந்த வித உணர்வும் இல்லை. ஆபத்தில் இருந்து தன் சேயினை பாதுகாக்கும் ஒரு தாயின் பரிவோடு தன்னில் பொதிந்து கொண்டான்.



அவன் உயிரானவள்...


 
Status
Not open for further replies.
Top