All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணியின் "கடும் கதிரவனின் அன்றலர்ந்த மலரே"!! கதை திரி

Status
Not open for further replies.

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கதைக்காக எத்தனை பேர் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்... நாளை முதல் கதை பதியப்படும் மக்களே... கண்டிப்பாக இந்த முறை ஏமாற்ற மாட்டேன். நாளை முதல் பதிவு உண்டு. இந்த கதைக்காக எத்தனை பேர் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்...
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அத்தான்... ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க... உண்மையாலுமே என்னை பார்த்தால் உங்களுக்கு அப்படித்தான் தோன்றுகிறதா...நீங்கள் இந்த மாதிரி பேசியதற்கு பதிலாக உங்கள் கைகளாலேயே என்னை கொன்று போட்டிருக்கலாம்..."


"அப்புறம் நீங்க சொன்ன ஒரு விஷயம் மிகவும் சரிதான்... நான் படுக்கையை உங்கள் கூட பகிர்ந்து கொண்டவள் தான் சின்ன வயசுல நான் அம்மாகூட படுத்து தூங்குவதை விட உங்களுடன் தான் அதிகமாக உறங்கி இருக்கிறேன்... அப்போதெல்லாம் உன்கிட்ட அம்மா கிட்ட இருக்கிற பாதுகாப்பை மட்டுமே உட்கார்ந்து இருக்கிறேன்... ஏன் அத்தான் நான் கேட்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள்... நீங்கள் என்னை பார்த்து கேட்ட கேள்வியை நாளை உங்கள் மகளைப் பார்த்து வேறொருவர் கேட்டால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்... யாரோ ஒருவர் பெற்ற பிள்ளை என்பதற்காக இப்படி எல்லாம் பேசாதீர்கள் அத்தான்...நான் உங்களுக்கு காலம் முழுவதும் சேவை செய்து கொண்டு வாழ மட்டுமே தான் நினைக்கிறேன் அன்றி உங்கள் வப்பாட்டியாக வாழ எனக்கு ஒருபோதும் வாழ்வதற்கு விருப்பமில்லை... பேசும் வார்த்தையை பார்த்துப் பேசுங்கள்... அத்தான்.... ஆனா நீங்களா இவ்வளவு ஆசை கேக்குறதால உங்களுக்கு ஒரு முத்தம் தரவா..."தன் உதட்டைக் குவித்து காமிக்க அவள் கன்னத்தில் பளாரென விழுந்தது ஒரு அறை.


ஆதித்யா விட்ட அறையில் இதை எதிர்பார்க்காதவள் அந்தக் கட்டிலின் விளிம்பில் தன் தலையை மோதிக் கொள்ள தலையை பியித்துக்கொண்டு ரத்தம் வர "என்னடி சொன்னே... என் பொண்ணை பார்த்து ஒருத்தன் இப்படிக் கேட்டால் என்ன செய்வேன் என்றா சொல்கிறாய்... அவன் சொல்வதற்கு முன்பே அவன் உடம்பில் உயிர் இருக்காது... உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் தி க்ரேட் பிசினஸ் மேன் ஆதித்யா பொண்ணைப் பார்த்து உனக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்... உன்னை என்ன செய்கிறேன் பார்..." பயத்தில் கோழிக்குஞ்சு போல் நடுங்கிக் கொண்டிருந்தவளை சிறிதும் கணக்கில் கொள்ளாமல் அவள் கையைப் பிடித்துத் தூக்கியவன் மீண்டும் ஒரு அறை விட போக,"அத்தான் எனக்கு ரொம்ப வலிக்குது... நான் கோபத்தில் என்ன பேசுகிறேன் என்று தெரியாமல் பாப்பாவைப் பற்றி பேசி விட்டேன்... நான் நான் பேசியது தவறுதான்... நீங்கள் சொல்லும் போது எனக்கும் இப்படி தானே மனம் வலிக்கிறது..."


"வாயை மூடுடி... நான் உன்னை கொன்று போட்டாலும் கூட நீ ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசக்கூடாது... என்ன சொன்ன என் பொண்ணை பார்த்து இன்னொருவன் பேசினால் என்ன செய்வாய் என்றா கேட்டாய்..."கேள்வி கேட்டபடியே அவளை மீண்டும் நெருங்கி


இதன் பிறகு என்ன ஆனது என்று யோசித்துக் கொண்டே இருங்கள்... மாலையில ud type பண்ணிட்டு வந்துடரேன்... இன்னைக்கு பார் மிஸ் யூ டி உண்டு...




community/threads/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.1472/[/URL]

mb(0).jpg196881_1360490643469_full.png
 
Last edited:

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3:


"அத்தான்... ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க... உண்மையாலுமே என்னை பார்த்தால் உங்களுக்கு அப்படித்தான் தோன்றுகிறதா...நீங்கள் இந்த மாதிரி பேசியதற்கு பதிலாக உங்கள் கைகளாலேயே என்னை கொன்று போட்டிருக்கலாம்..."


"அப்புறம் நீங்க சொன்ன ஒரு விஷயம் மிகவும் சரிதான்... நான் படுக்கையை உங்கள் கூட பகிர்ந்து கொண்டவள் தான் சின்ன வயசுல நான் அம்மாகூட படுத்து தூங்குவதை விட உங்களுடன் தான் அதிகமாக உறங்கி இருக்கிறேன்... அப்போதெல்லாம் உன்கிட்ட அம்மா கிட்ட இருக்கிற பாதுகாப்பை மட்டுமே உட்கார்ந்து இருக்கிறேன்... ஏன் அத்தான் நான் கேட்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள்... நீங்கள் என்னை பார்த்து கேட்ட கேள்வியை நாளை உங்கள் மகளைப் பார்த்து வேறொருவர் கேட்டால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்... யாரோ ஒருவர் பெற்ற பிள்ளை என்பதற்காக இப்படி எல்லாம் பேசாதீர்கள் அத்தான்...நான் உங்களுக்கு காலம் முழுவதும் சேவை செய்து கொண்டு வாழ மட்டுமே தான் நினைக்கிறேன் அன்றி உங்கள் வப்பாட்டியாக வாழ எனக்கு ஒருபோதும் வாழ்வதற்கு விருப்பமில்லை... பேசும் வார்த்தையை பார்த்துப் பேசுங்கள்... அத்தான்.... ஆனா நீங்களா இவ்வளவு ஆசை கேக்குறதால உங்களுக்கு ஒரு முத்தம் தரவா..."தன் உதட்டைக் குவித்து காமிக்க அவள் கன்னத்தில் பளாரென விழுந்தது ஒரு அறை.


ஆதித்யா விட்ட அறையில் இதை எதிர்பார்க்காதவள் அந்தக் கட்டிலின் விளிம்பில் தன் தலையை மோதிக் கொள்ள தலையை பியித்துக்கொண்டு ரத்தம் வர "என்னடி சொன்னே... என் பொண்ணை பார்த்து ஒருத்தன் இப்படிக் கேட்டால் என்ன செய்வேன் என்றா சொல்கிறாய்... அவன் சொல்வதற்கு முன்பே அவன் உடம்பில் உயிர் இருக்காது... உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் தி க்ரேட் பிசினஸ் மேன் ஆதித்யா பொண்ணைப் பார்த்து உனக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்... உன்னை என்ன செய்கிறேன் பார்..." பயத்தில் கோழிக்குஞ்சு போல் நடுங்கிக் கொண்டிருந்தவளை சிறிதும் கணக்கில் கொள்ளாமல் அவள் கையைப் பிடித்துத் தூக்கியவன் மீண்டும் ஒரு அறை விட போக,"அத்தான் எனக்கு ரொம்ப வலிக்குது... நான் கோபத்தில் என்ன பேசுகிறேன் என்று தெரியாமல் பாப்பாவைப் பற்றி பேசி விட்டேன்... நான் நான் பேசியது தவறுதான்... நீங்கள் சொல்லும் போது எனக்கும் இப்படி தானே மனம் வலிக்கிறது..."


"வாயை மூடுடி... நான் உன்னை கொன்று போட்டாலும் கூட நீ ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசக்கூடாது... என்ன சொன்ன என் பொண்ணை பார்த்து இன்னொருவன் பேசினால் என்ன செய்வாய் என்றா கேட்டாய்..."கேள்வி கேட்டபடியே அவளை மீண்டும் நெருங்கி அவள் கழுத்தை இறுக்கி பிடித்தவன் தன் கைகளைக் கொண்டு நெரிக்க பாவையவள் மூச்சுத் திணறிப் போனாள்.


அவன் கழுத்தை பிடித்து நெரித்ததில் சுவாசம் தடை பட உயிருக்கு போராடியவள் என்ன நடக்கமோ நடக்கட்டும் என்பது போல் அவன் கண்களை உற்றுப் பார்க்க அந்தக் கண்கள் வழி வந்த செய்தியில் துடிதுடித்துப்போனான் ஆதி.


தன் கைகளை அவள் கழுத்திலிருந்து வேகமாக எடுக்க தன் பலம் முழுவதும் அவ்வளவுதான் என்பது போல் தரையில் சரிந்தாள்.


"என்ன காரியம் பண்ணிவிட்டாய் ஆதி... என்னுடைய அம்முவை நானே கொல்ல பார்க்கிறேன்... என்ன காரியம் செய்ய இருந்தேன்..." தன்னைத்தானே கடிந்து கொண்டவன் தன் அம்முவை பார்க்க அங்கு அவள் இல்லாது போக, குனிந்து பார்த்தவன் அங்கு மூர்ச்சையாகிக் கிடந்த லட்சுமி கண்டு அதிர்ந்து போனான்.


"ஐயோ..."பதறியபடி அவளை நோக்கி குனிந்தவன் "அம்மு இங்கே என்னை பார்... உனக்கு ஒன்றும் இல்லை தயவு செய்து என்னை கண்ணை திறந்து பாரு... ரொம்ப பயமாக இருக்கிறது என்னுடன் விளையாடாமல் உன் கண்ணை திறந்து பார் அம்மு..."அவள் கன்னத்தை தீண்டியும் அவள் எழாமல் இருக்க பயந்து போனான் ஆதி.


எப்பொழுதும் தன்னுடைய கரங்கள் பட்டதும் சிலிர்த்துக் கொள்பவள் இன்று எந்தவிதமான உணர்வையும் காட்டாது இருக்க அவன் மனதில் பயம் கவ்விக்கொண்டது.


இப்பொழுது என்ன செய்வது என்று அதிர்ந்து பார்க்க மேஜையில் இருந்த நீரை கண்டவன் போன உயிர் மீண்டு வந்தது போல தண்ணீரை தன் கைகளில் ஏந்திக்கொண்டு லட்சுமியின் முகத்தில் தெளித்தான்.


தன் முகத்தில் ஏதோ ஜில்லென்று ஒன்று விழ ஆழ்ந்த மயக்கத்தின் பிடியில் இருந்தவள் தன் கண்களின் கருமணிகளை மென்மையாக சுழற்றி கண்களைத் திறந்து பார்க்க அங்கு தனது எதிரே மொத்த உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு நின்ற ஆதித்யாவை கண்டு சிறு புன்னகை சிந்தினாள்.


வாயை இழுத்து வைத்து புன்னகைக்க கழுத்துப்பகுதியில் சேர்ந்த உறுப்பு ஆகையால் அவள் சிரிக்கும் பொழுது அவள் கழுத்து வலிக்க "அம்மா வலிக்கிறது..." கழுத்தை பிடித்துக் கொண்டு வலியில் கண்களை சுருக்கினாள் லட்சுமி.


"அச்சோ அம்மு ரொம்ப வலிக்குதாடா..."அவள் கழுத்தை பிடித்திருந்த கையை விலக்கிவிட்டு அந்த இடத்தில் ஆறுதலாக தடவிக்கொடுத்தான் ஆதித்யா.


தன் கைகளில் இருந்த சொம்பு நிறைந்தநீரை அவள் வாய்க்கருகில் கொண்டு போக லட்சுமி என்ன மாதிரி உணர்ந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.


தன் மார்பில் அவள் தலையை சாய்த்தவன் ஒரு கையால் அவள் கழுத்தை வருடி கொடுக்க மற்றொரு கரத்தால் அவளுக்கு நீர் புகட்டினான்.


அவன் அன்பில் நெகிழ்ந்து போனவள் கண்களில் கண்ணீர் சுரக்க அதில் ஒரு துளி ஆதித்யாவின் கரங்களில் பட்டு தெறிக்க தன் கரங்களில் விழுந்து தண்ணீரைக் கண்டு துடித்துப் போனவன் "ரொம்ப வலிக்கிறதா அம்மு என்னை மன்னித்து விடுடி என்னை ஏன் இப்படி கீழ்த்தரமாக செய்ய வைக்கிறாய் அம்மு ஒவ்வொரு முறையும் தெரியாமல் உன்னை காயப்படுத்தி விட்டு உன்னிடம் மன்னிப்புக் கேட்பதே எனக்கு வேலையாக போய்விட்டது" அவள் கழுத்தை மேலும் வருடிக் கொடுத்த சுகமாக தனது அத்தானின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் லட்சுமி.


சிறிது நேரம் சென்ற பிறகு "போதும் அத்தான் எனக்கு கழுத்து வலி நின்றுவிட்டது... எனக்கு தடவி கொடுத்து உங்கள் கரங்கள் வலிக்க போகிறது... இப்பொழுது எனக்கு பரவாயில்லை..." அவன் கைகளை விலக்க,"நிஜமாலுமே தானே சொல்ற அம்மு இல்லை இப்பொழுது தயாராகு நாம் எதற்கும் மருத்துவமனைக்குச் சென்று விட்டு வந்து விடுவோம்..."


"அத்தான் எனக்கு நிஜமாலுமே வலியில்லை நீங்கள் கவலைப்படாதீர்கள்... அப்புறம் ஒரு விஷயம் நான் சிறிது நேரத்திற்கு முன்பு பேசியது மிகவும் தவறு தான்... தியாவைப் பற்றி தவறாக பேசிவிட்டேன்... சத்தியமாக நான் வேண்டுமென்றே பேசவில்லை... ஏதோ ஒரு கோபத்தில் தான் பேசிவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்..."அவனிடம் மன்னிப்பை யாசிக்க அவள் கெட்ட நேரம் முடியவில்லை என்பது போல் அவன் மறந்த விஷயத்தை அவளே ஞாபகப்படுத்த மீண்டும் சினம் குடிகொண்டது ஆதியின் மனதில்.


"என்னை விட்டு தள்ளிபோடி..."தன் மார்பில் இருந்தவளை பிடித்து தள்ளிவிட அவனிடம் இதை எதிர்பார்க்காதவள் அருகில் இருந்த சுவற்றில் மோதிக்கொள்ள ஏற்கனவே அடிபட்டு ரத்தம் வந்த தலையில் ரத்தம் உறைந்து போயிருக்க, அவள் மீண்டும் ஒருமுறை மோதிக்கொள்ள இந்த முறை ரத்தம் சற்று அதிகமாகவே வர அவள் கழுத்து வழியாக கீழே இறங்க அதைப் பார்த்து மீண்டும் தன்னைத்தானே நொந்து கொண்டான் ஆதித்யா.


அவன் அறையில் எப்போதுமே முதலுதவிப் பெட்டி இருக்கும் ஆதலால் அதனை விரைந்து எடுத்தவன் அவளது காயத்தை சுத்தப்படுத்தி மருந்திட வழியில் கண்களை சுருக்கனாள் லட்சுமி.


அவள் காயத்திற்கு முழுவதுமாக மருந்திட்டு முடித்தவன் அவள் கண்களை உற்றுப் பார்த்து "இங்கே பார் லட்சுமி... சொன்னதையே மீண்டும் மீண்டும் என்னை சொல்ல வைத்து எரிச்சல் படுத்தாதே... நீ ஒன்றும் சிறுகுழந்தை அல்ல... உனக்கு மீண்டும் மீண்டும் புரிய வைப்பதற்கு... தயவுசெய்து நான் சொல்வதை காது கொடுத்து கேளு... என்னை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கிறாயோ அந்த அளவிற்கு உனக்கு நல்லது... மீண்டும் ஒரு முறை என்னை இப்படி செய்ய வைக்காதே..."கெஞ்சலில் ஆரம்பித்தது கோபத்தில் முடித்தான்.


"அம்மு" என்ற அழைப்பு "லட்சுமி" என்று மாறியதைக் கண்டு கொள்ளாமல் "இங்கே பாருங்கள் அத்தான்... நீங்கள் என்னதான் சொன்னாலும் சரி என்னை காயப்படுத்தினாலும் சரி... நான் உங்களை விட்டு பிரிந்து போவது போல் எண்ணம் இல்லை... உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்...எனக்கு உங்கள் கோபத்தை விட நான் செய்து கொடுத்த சத்தியம் தான் முக்கியம்...அந்த சத்தியத்தை நிறைவேற்றுவதற்காக எந்த எல்லைக்கும் போவதற்கு நான் தயாராக உள்ளேன்... நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்..."திடமான குரலில் கூறி முடிக்க, அவள் பேச்சை கண்டு மலைத்துப் போனான் ஆதித்யா.


"இங்கே பாரு அம்மு... நீ முதன்முதலாக பிறந்த பொழுது எனக்கு வயது 5 பிறந்தவுடன் சிறு குழந்தையான உன்னை நர்ஸ் தூக்கிக்கொண்டு வெளியில் வந்ததும் அம்மா உன்னை வாங்கி என்னிடம் காண்பித்தார்கள்... ரோஸ் கலரில் வெண்ணை குட்டி போல(பிடிக்கல பிடிக்கல நீ இப்படி வர்ணிக்கிற நடத்து நடத்து) இருந்த உன்னை கண்டதும் எனக்கு தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை வர, அம்மாவிடம் அடம்பிடித்து உன்னை தூக்கி கொண்டேன்... அப்போ அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா..."


"இங்க பாரு ஆதி உன் கைகளில் இருக்கும் இந்த குட்டி பாப்பாவை எந்த காரணத்தை கொண்டும் அழவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்..." சொன்னதும் அந்த நிமிடம் நான் அவர்களிடம் "இந்தப் பாப்பா ரொம்ப அழகா இருக்கும்மா... அம்மா இந்தப் பாப்பா நான் பார்த்துக்கிறேன்..."சிறு குழந்தையான உன் நெற்றியில் முத்தம் பதித்தேன்.


"நான் அவர்களுக்கு வாக்குக் கொடுத்த நேரமோ என்னவோ அந்த வாக்கை என்னால் கடைசிவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது... உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்வேன் என்று சொன்ன நானே உன்னை அளவுக்கதிகமாக துன்புறுத்துகிறேன்... இதற்கெல்லாம் ஒரே ஒரு வழி மட்டும் தான் இருக்கிறது... தயவு செய்து என் வாழ்க்கையில் இருந்து நீ விலகிப் போய்விடு...உன்னை நேசிக்கும் ஒருவரை திருமணம் செய்துகொண்டு காலம் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்... உன்னை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் நான் உன்னை வார்த்தையால் கதற அடிப்பதை விட உன்னை காதலிக்கும் காசி அவரைத் திருமணம் செய்து கொண்டால் அவர் உன்னை காலம் முழுவதும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்..."பேச்சுவாக்கில் தனது கருத்தைச் சொல்ல, அதில் அமைதியாக இருந்தவள் தனக்கு எதிரே இருந்தவனை பொசுக்கி விடுவது போல கண்களாலேயே எரித்தாள் லட்சுமி.


தன்னைப் பற்றி அவன் பேச பேச நெகிழ்ந்து போனவள் நீ வேறு ஒருவனை திருமணம் கொள் என்றதைக் கேட்டு அவனை விழிகளால் எரித்தாள்.


"இங்க பாருங்க ஆதித்யா...என்னைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது... நான் எவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் மட்டும்... அதில் தலையிட உங்களுக்கு உரிமையில்லை... எத்தனை காலம் ஆனாலும் உங்களை மட்டும் நினைத்து என் வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விடுவேன்..."உறுதியான தொனியில் சொல்ல, அவள் பேசியதைக் கேட்டு திகைத்துப் போனான் ஆதித்யா.


"நீ எல்லாம் என்ன ஜென்மமோ... வேறு ஒரு பெண்ணின் கணவனை பார்த்து இப்படி எல்லாம் பேசுவதற்கு உனக்கு கொஞ்சம்கூட அருவருப்பாக இல்லையா... நானும் போனால் போகிறது என்று சொன்னால் நீ பேசியதையே பேசிக்கொண்டு இருக்கிறாய்... இதற்குமேல் என் கண்ணில் பட்டு விடாதே உன்னை உயிரோடு எரித்து விடுவேன்... உன் முகத்தை பார்க்க கூட அருவருப்பாக இருக்கிறது..."அவ்விடத்தை விட்டு காலி செய்ய செல்லும் தன் அத்தனை கண்டு அவள் முகத்தில் இளநகை தோன்றி மறைந்தது.


தன் அறைக்கு வந்த ஆதித்யா விற்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. கோபத்தில் அருகிலிருந்த நாற்காலியை எட்டி உதைத்தவன் "நானும் இவளிடம் எப்படி பேசினாலும் என்னை விட்டு செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாளே... இதற்கு ஒரு காலமும் தீர்வே இல்லையா..."தன் தலையை அழுத்தி கோதி கொண்டவன் பார்வை எதேச்சையாக அங்கிருந்த புகைப்படத்தின் மீது விழ அவ்வளவு நேரமும் மாவட்ட கண்களில் இருந்த கோபம் சென்று காதல் குடிகொண்டது.



அந்தப் புகைப்படத்தின் அருகில் சென்றவன் அந்த புகைப்படத்தை வருடிக்கொடுத்தான்.


"உனக்கு தெரியுமா செல்லம்மா இன்னும் மூன்று மாதத்தில் நமக்குத் திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகப் போகிறது..." அந்த புகைப்படத்தில் இருந்த மனைவிக்கு முத்தம் கொடுத்தான் ஆதித்யா.


ஆம். அது சாட்சாத் ஆதித்யா சிவன்யாவின் திருமண புகைப்படம்.


அந்த புகைப்படத்தை கண்டவன் மனம் தனது காதலி அவள் திருமணத்தை பற்றி சொன்ன விஷயத்தை நோக்கி பயணித்தது.


அன்று காலையில் மனம் படபடப்பாக இருந்தது சிவன்யாவிற்கு.


"சே... என்ன என்று தெரியவில்லை மனம் இப்படி படபடப்பாக இருக்கிறது..."தனக்குள்ளேயே பேசி கொண்டவள் கல்லூரிக்கு கிளம்பி கீழே இறங்கி வர அவள் அன்னை "அம்மாடி சிவன்யா சாப்பாடு தயாராகி விட்டது வந்து சாப்பிட்டுவிட்டு செல்..."என்க யோசனையில் இருந்தவள் அன்னையை கவனிக்காமல் செல்ல,"சிவன்யா..."அழுத்தமான குரலில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள் சிவன்யா.


அவளது தந்தை தான் மனைவி மகளை அழைத்தும் தன் போக்கில் சென்று கொண்டிருந்த மகளை யோசனையுடன் பார்த்தவர் அவள் பெயரை அழுத்திக் கூற தன் நினைவிலிருந்து மீண்டும் தந்தையை பார்த்தாள் சிவன்யா.


"என்ன ஆச்சு பா? எதற்காக இப்பொழுது என்னை அழைத்தீர்கள்..."குழப்பத்துடன் வினவ,


"அங்கே பாரு உன் அம்மா உன்னை சாப்பிட அழைக்கிறார்... நீ அதை கண்டு கொள்ளாமல் ஏதோ யோசித்துக் கொண்டிருந்த அதான் உன்னை அழைத்தேன்..."அவளை அழைத்ததன் காரணம் சொல்ல,


தாயைப் பார்த்து சிறு புன்னகை சிந்தியவள் "மன்னித்து விடுங்கள் அம்மா மனம் ஏனோ படபடப்பாக இருக்கிறது அதனால் நீங்கள் கூப்பிட்டது காதில் விழவில்லை..."


"அதெல்லாம் ஒன்றுமில்லை சிவா... நீயாக எதையும் போட்டு மனதில் குழப்பிக் கொள்ளாமல் வந்து சாப்பாடு சாப்பிடு..." வேண்டாம் என்று கூற வாய் திறந்தவள் அன்னையின் பார்வையை கண்டு முடிவை மாற்றிக் கொண்டு உணவை உண்டு முடித்தாள்.


"சரிமா எனக்கு காலேஜ்க்கு நேரமாகிவிட்டது நான் கிளம்புகிறேன்..."அன்னைக்கு கைகாட்டியவள் தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு "பை டாடி" சிட்டாய்ப் பறக்க, செல்லும் மகளை புன்னகையுடன் பார்த்தனர் தம்பதிகள் இருவரும்.


எப்போதும் போல் காலையில் தங்கள் கார் டிரைவருடன் வந்து சேர்ந்தாள் கல்லூரிக்கு.


அவளுக்கும் மற்றவர்களைப் போல வண்டியில் வந்து செல்ல ஆசையாக இருந்தாலும் தந்தை சொன்ன "அம்மாடி இந்த காலத்தில் ஆபத்துகள் அதிகம்... நீ நம் காரில் சென்று வந்துவிடு..." அவள் தலையை வருடிக் கொடுத்தபடி சொல்ல தந்தையின் பேச்சை தட்டாத மகளும் அதற்கு வேறு வழி இன்றி ஒத்துக் கொண்டாள்.


கல்லூரி வாசலில் இறங்கியவள் தன் கார் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டு தனது அலைபேசியை எடுத்தவள் ஒதுக்குப் புறமாக நின்று கொண்டு தன் காதலன் ஆதித்யாவிற்கு போன் செய்தாள்.


வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லா லாலா லாலலா லா லாலா லாலலா
லாலாலலா லாலாலலா


கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்த ஆதித்யாவின் செல்போனில் தன் காதலிக்கு என வைத்திருக்கும் பிரத்தியேகமான ரிங்டோனை கண்டு கன்னத்தில் விழுந்த குழி புன்னகையுடன் அதை அடைவதற்கு முன்பாக எடுத்து காதில் வைத்தான்.


"என்னடி செல்லம்... மாமாவை பார்க்காம இருக்க முடியவில்லையா... காலையிலேயே போன் பண்ணி இருக்கிறே..."கொஞ்ச லோடு கேட்க,


"போடா பன்னி குட்டி... உன் மூஞ்சியும் மொகரையும் பாரு... இன்னும் பத்து நிமிடத்தில் நீ கல்லூரியில் இருக்க வேண்டும்..."கட்டளையிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.


அவள் திட்டியதை கண்டு ஏதோ பெரிய அவார்ட் வாங்கியது போல சந்தோஷமாக நகைத்தவன் தனது பைக்கை எடுத்துக் கொண்டு சாலையில் சீறி பாய்ந்தவன் அடுத்த ஐந்து நிமிடத்தில் அவள் முன்பு நின்றான்.


கல்லூரி வாசலில் நின்று கொண்டிருந்தவள் தன் மீது மோதுவது போல் வந்து நின்ற காதலனைக் கண்டு கடுப்பானாள்.


"ஏன்டா அறிவு கெட்டவனே... உன்னிடம் எத்தனை முறை சொல்வது... இப்படி அவசர அவசரமாக கிளம்பி வராதே என்று சாலையில் வரும் அவசரத்தில் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது..."அவன் அவசரமாக வந்ததற்கு கடிந்து கொள்ள, தான் அவள்மீது மோதுவது போல் வண்டியை நிறுத்தியதை கண்டு திட்டாமல் மீதுள்ள நம்பிக்கையில் அக்கரையில் கடிந்து கொள்ள தன் கண்ணாடியை இறக்கியவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க படபடவென பேசியவள் அவனின் செய்கையில் பட்டென மூடிக்கொண்டது அவள் வாய்.


அதில் முத்து மூரல்கள் தெரிய சிரித்தவனை கண்டு கோபம் வர அவன் செய்த செயலுக்காக தன் பையை எடுத்து அவனை அடித்தவள் வண்டியில் ஏறி அமர்ந்து அவன் தோளில் கை இட்டு அமர அகமகிழ்ந்து போனான் ஆடவன்.



கல்லூரியில் இருந்து வாகனத்தை கிளப்ப அவன் காதுக்கருகில் குனிந்தவள் "நம்ம ஊரில் இருக்கும் அந்த பிள்ளையார் கோவிலுக்கு போ..."என்றதும் அவள் சொன்ன இடத்தை நோக்கி வாகனத்தை செலுத்தினான்.


மற்ற காதலர்கள் எல்லாம் தங்கள் காதலிகள் இப்படி சொல்வதைக் கேட்டு சலித்துக்கொள்ள தன் காதலன் மட்டும் தான் சொன்ன வார்த்தைக்கு இணங்கி எப்பொழுதும் நடப்பதை கண்டு காதல் அதிகரிக்க அவனை நெருங்கி அமர்ந்து அவன் தோளில் முகம் புதைத்து கொள்ள ஆடவன் மனதில் மகிழ்ச்சி பொங்கியது.


நேரே கோவிலுக்குச் சென்ற வாகனத்தை நிறுத்திய பிறகு இருவரும் தம்பதிகள் போல கோவிலுக்குள் நுழைய எப்போதும் போல் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வந்தான் ஆதித்யா.


தான் வழக்கமாக வாங்கும் மல்லிகைப்பூவை அவளிடம் நீட்ட அவன் பக்கம் திரும்பியவள் "எப்பவும் போல் நீயே வச்சு விடு..."என்றதும் அவள் தலையில் அழகாக பூவை சூடி விட்டான்.


வழக்கம்போல் கோவிலுக்கு சென்று "அனைத்து உயிர்களும் இந்த பூமியில் சந்தோஷமாக வாழ வேண்டும்...நானும் என் அருகில் நிற்கும் என் எதிர்கால கணவரும் மகிழ்ச்சியுடன் வாழ நீதான் அருள் புரியவேண்டும்..."மனமார பிரார்த்தித்துக் கொண்டாள்.


கடவுள் மீது நம்பிக்கை இல்லாத ஆதித்யன் காதலியின் சந்தோஷத்திற்காக எப்பொழுதும் கோவிலுக்கு வந்தாலும் அவள் அருகில் நிற்பானே தவிர கடவுளை வணங்க மாட்டான்.


அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் "உன் விருப்பத்திற்காக நான் கோவிலுக்கு வருகிறேன்... ஆனால் கையெழுத்து எல்லாம் கும்பிட முடியாது..."முடிவாக சொல்லி யவனை அதற்குமேலும் வற்புறுத்தாமல் விட்டுவிட்டால் சிவன்யா.


கடவுளை வணங்கிய பிறகு மனதில் உள்ள கவலை நீங்கியது போல இருக்க சற்று தூரத்தில் மேல சத்தம் கேட்க அங்கே திரும்பி பார்த்தாள்.


அது பிரசித்தியான கோவில் என்பதால் ஒரு ஓரத்தில் திருமணம் நடக்க அதைப் புன்னகையுடன் பார்த்தவள் தங்கள் திருமணத்தை நினைத்து பார்க்க முகம் சிவந்து போனாள்.


அங்கிருந்து அகன்று ஒரு தூணின் அருகில் அமர அவளோட அமர்ந்தான் ஆதித்யா.


"என்ன செல்லமா உன் முகம் இப்படி சிவந்து இருக்கு... அந்தக் கல்யாணத்தை பார்த்தபிறகு உன் முகம் பிரகாசமாக இருப்பதை பார்த்தால் வா நாம் இப்பொழுதே திருமணம் செய்து கொள்ளலாம்..."டீ குடிப்பது போல அழைக்க, அவளை மீண்டும் இரண்டு மொத்து மொத்தினாள் சிவன்யா.


அவள் அடிகளை சுகமாக வாங்கி கொண்ட ஆதித்யா அவளைப் பார்த்து சிரிக்க அந்த கண்ணு குழி சிரிப்பில் மொத்தமாக விழுந்தாள் ஷிவன்யா.


"உங்களுக்கு தெரியுமா... சங்க இலக்கியங்களில் திருமணம் பற்றி வழக்கங்கள் இருக்கின்றன... அதே மாதிரி தான் நம் கல்யாணமும் நடக்க வேண்டும்... சங்க இலக்கியத்தில் அகநானூறு திருமணச் சடங்கைப் பற்றி சொல்கிறது... அது என்ன நான் சொல்லட்டுமா..."அவனை ஆசையுடன் பார்க்க தன் காதலிக்கு தமிழ் மீது விடாத காதல் உண்டு என்பதை அவளைக் காதலித்தால் இத்தனை நாட்களில் அறிந்து கொண்டவன் அவள் அந்த தமிழ் மொழியை உள்ள இலக்கியங்கள் பற்றிய குறிப்பிட்டு பேசும்பொழுது இதில் இவ்வளவு இருக்கிறதா என்று ஆச்சரியத்துடன் கேட்பானே தவிர வேண்டாம் என்று ஒரு வார்த்தை கூட கூற மாட்டான்.


இப்போதும் அதே போல ஆம் என்று கண்ணசைக்க சிறு புன்னகையுடன் அவற்றை விபரிக்க ஆரம்பித்தாள் ஷிவன்யா.



சங்க இலக்கியத்தில் தமிழர்களின் திருமணங்கள் எப்படி பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்தது என்பதற்கு சான்றாக இரண்டு முக்கிய பாடல்களை நாம் பார்க்கலாம், ஒன்று அகநானூறு 86 வது பாடல் மற்றும் 136 வது பாடல்.

அகநானூறு 86 வது பாடல் நல்லாவூர் கிழார் எனும் புலவரால் எழுதப்பட்டது. வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது பற்றி சொல்லும் பாடல் தான் இது.

"உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;

கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர,
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
‘கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!’ என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
‘பேர் இற்கிழத்தி ஆக’ எனத் தமர் தர,
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்தகாலை, ‘யாழ நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை’ என,
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
மடம் கொள் மதைஇய நோக்கின்,
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே".

இந்தப் பாடலின் பொருள் உழுந்தம் பருப்பைக் கூட்டிச் சமைத்த பொங்கலோடு பெரிய சோற்றுத் திரளை உண்ணுதல் ஆரவாரத்துடன் நிகழ, வரிசையாகக் கால்களையுடைய (கம்பங்கையுடைய, தூண்களுடைய) பெரிய பந்தலில், கொணர்ந்து இட்ட புதிய மணலைப் பரப்பி, மனையில் விளக்குகளை ஏற்றி வைத்து, மாலைகளைத் தொங்கவிட்டு, தீயக் கோள்களின் தொடர்பு நீங்கிய, வளைந்த வெண்ணிலாவை குற்றமற்ற சிறந்த புகழையுடைய உரோகிணி என்னும் நாள் அடைந்த வேளையில், மிக்க இருள் நீங்கிய அழகான காலை நேரத்தில், தலை உச்சியில் குடத்தை வைத்திருப்பவர்களும், புதிய அகன்றப் பானைகளைத் தூக்கி வைத்திருப்பவர்களும் ஆகிய திருமணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவாகவும் பின்னே தருவனவாகவும் முறையே தந்திட, புதல்வர்களைப் பெற்ற, தேமலுடைய அழகிய வயிற்றையுடைய, தூய அணிகளை அணிந்த நான்கு பெண்கள் கூடி, நல்ல பேறுகளைத் தந்து உன்னை எய்தியக் கணவனை விரும்பிப் பேணும் பெண்ணாக நீ ஆக’ என்று தண்ணீருடன் கூடிய ஈரமான இதழ்களையுடைய பூக்களை நெல்லுடன் அவளுடைய அடர்ந்தக் கருமையான கூந்தலில் தூவி வாழ்த்தினர். இவ்வாறு திருமணம் முடிந்த பின்னர், அவளுடைய சுற்றத்தார் ஒலியுடன் விரைந்து வந்து, ‘பெரிய மனைக் கிழத்தி ஆவாயாக நீ’ என்று அவளை வாழ்த்தி, என்னிடம் அவளைத் தந்தனர் என்கிறான் தலைவன் .


மேலும் நாங்கள் இருவரும் புணர்ச்சிக்குரிய ஓர் அறையில் தனிமையில் இருந்தோம் (முதலிரவு அறை) தன் முதுகினை வளைத்து, நாணத்துடன் தன்னுடைய புத்தாடையில் ஒதுங்கினாள் அவள். அவளை அணைக்கும் விருப்பத்துடன், நாணத்தினால் அவள் தன் முகத்தினை மறைத்த ஆடையை நான் நீக்க, அவள் அஞ்சி பெருமூச்சு விட்டாள். ‘உன் நெஞ்சில் உள்ளதை மறைக்காது என்னிடம் கூறு’ என்றேன் நான். இனிய மகிழ்ச்சியுடன், நாங்கள் ஒன்றாக இருந்த அந்த நொடிகளில், மானின் மடப்பத்தையும், பெருமையான பார்வையையும், ஒடுங்கிய குளிர்ந்த கூந்தலையும் உடையவளாக, சிவப்பு மணிகள் பதித்த காதணி தன் அழகிய காதுகளில் அசைய, நெஞ்சில் மிக்க மகிழ்ச்சியுடன், விரைந்து தலைகுனிந்தாள் அந்த மாமை நிறத்துடைய பெண்.



இந்தப் பாடலில் முழுதும் ஆரிய சடங்குகள் இல்லை, ஐயர் எனும் நபர் இல்லை, தாலி இல்லை. ஆனால் நாள் பார்த்து சுற்றத்தார் சூழ திருமணம் நடந்ததாகக் கூறப்பட்டிருக்கின்றது.

அதே போன்று வீட்டு முற்றத்தில் போடப்படும் திருமணப் பந்தலில் வெண்மணல் பரப்புவது, பூச்சரம் கட்டுவது இன்றும் யாழ்ப்பாணத்தில் வழக்கில் இருந்து வருவது எண்ணி வியக்கத்தக்கது. சங்க காலத்தில் நடந்த திருமணத்தை பற்றி படிக்கும்போதே ஆச்சரியமாக இருக்கிறது ஆதி என்றவள் சத்தம் வராது போக நிமிர்ந்தேன் காதலனை நோக்க அவன் பார்த்த பார்வையில் தலையை குனிந்து கொண்டாள் சிவன்யா.


திருமணத்தை பற்றி சொல்லும் பொழுது ஏனோ தானோ என்று கேட்டவன் புணர்ச்சியை பற்றிக்கூற காதலனாக இல்லாமல் கணவனாக தன் அருகில் இருக்கும் மனைவியை (காதலியை) பார்க்கவும் அந்த பார்வையை தாங்கிக்கொள்ள முடியாது தலை குனிந்து கொண்டால் சிவன்யா.


அவள் விட்ட பாதியைத்தான் தொடர்ந்தான் ஆதி.


அதே போன்று அகநானூறு 136, இதை எழுதியவர் விற்றூற்று மூதெயினனார், இப்பாடலின் திணை மருதம் – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது.

மைப்பு அறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு,
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்,
புள்ளுப் புணர்ந்து, இனிய ஆகத் தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்கத் திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்துக்,
கடி நகர் புனைந்து, கடவுள் பேணிப்,
படு மண முழவொடு பரூஉப்பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
பூக்கணும் இமையார் நோக்குபு, மறைய,
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மா இதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு வெந்நூல் சூட்டித்,
தூ உடைப் பொலிந்து, மேவரத் துவன்றி,
மழை பட்டன்ன மணன் மலி பந்தர்,
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றித்
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்,
உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம் படுவி
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்,
‘பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற’ என,
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே, பேணிப்
பரூஉப் பகை ஆம்பல் குரூஉத் தொடை நீவிச்
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.

குற்றம் உண்டாகாதபடிச் சமைக்கப்பட்ட நெய் மிக்க வெள்ளைச் சோற்றை எல்லை இல்லாத வள்ளன்மைப் பண்புடன் சுற்றத்தார்க்கும் சான்றோர்களுக்கும் உண்ணக் கொடுத்து அவர்களைக் கவனித்து, (இதனை சிலர் ஊண் சோறு என்றும் குறிப்பிடுவர்)

Siragu kurundhogai-5

புள் நிமித்தம் (நல்ல நேரம்) பொருந்தி இருக்கும் இனிமையான வேளையில், உரோகிணிக் கூடிய குற்றமற்ற நல்ல நாளில், மணமேடையை அழகுப்படுத்தி, கடவுளை வழிபட்டு, (எந்தக் கடவுள் என்ற குறிப்பு இல்லை என்பது கவனிக்கத்தக்கது)

ஒலிக்கும் மண முரசுடன், பணை முரசும் ஒலிக்க (பல விதமான முழவு போன்ற முரசுகள் சங்க இலக்கிய பாடல்கள் மூலம் அறியமுடிகின்றது , அந்த வகையில் பணை முரசு ஒருவகை பெரிய முரசு)

தலைவியை நீராட்டிய பெண்கள், தங்களின் மலர் போன்றக் கண்களால் இமைக்காமல் அவளை நோக்கி, பின் விரைந்து மறைய, முதிய கன்று மென்மையான மலர்களையுடைய வாகை மரத்தின் புல்லிய (சிறப்பு இல்லாத) பின்புறத்தையுடைய பிரிவு உடைய இலைகளை உண்டப் பள்ளத்தில் படர்ந்துள்ள, ஒலிக்கும் வானின் முதல் மழைக்குத் துளிர்த்த கழுவிய நீலமணியை ஒத்தக்கரிய இதழ்களையும் கிழங்கையும் உள்ள அறுகம்புல்லின் குளிர்ந்த நறுமணமான அரும்புடன் தொடுத்த வெள்ளை நூலை அவளுக்குச் சூட்டி, மேகம் ஒலித்தாற்போல் ஒலியுடைய திருமணப் பந்தலில், அணிகளைச் சிறப்புடன் அணிந்த அவளின் வியர்வையைத் துடைத்து, அவள் குடும்பத்தார் அவளை எனக்குத் தர, முதல் நாள் இரவில், வெறுப்பு இல்லாத கற்புடைய அவள், என் உயிர்க்கு உடம்பாகப் பொருந்தும் அவள், கசங்காத புத்தாடையால் தான் உடலை முழுக்கப் போர்த்தியிருக்க, “உன் பிறை நெற்றியில் அதிகப் புழுக்கத்தினால் அரும்பியுள்ள வியர்வையைப் போக்க, உன் ஆடையைக் கொஞ்சம் திற” என்று கூறி ஆர்வ நெஞ்சத்துடன் மூடிய அவளுடைய ஆடையை நான் கவர, உறையினின்று எடுத்த வாள் போல அவள் உருவம் வெளிப்பட்டு விளங்க, மறைக்கும் வழியை அறியாதவள் ஆகி, விரைவாக நாணம் அடைந்து, வண்டுகள் சூழ்ந்து ஒலிக்கும் அழகிய நிறம் பொருந்தியப் பருமனான ஆம்பல் மலர்ச் சரம் அணிந்த தன்னுடைய கருமையான அடர்ந்தக் கூந்தலால், தன் உடலை மறைத்து என் முன் தலைக் குனிந்தாள் என்று தலைவன் தன் நெஞ்சத்திடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது என்று அவன் சொல்லி முடிக்க அங்கிருந்து ஓடியே போனாள் சிவன்யா.



காதலிக்காக தமிழ் மொழியை விரும்பி படித்தவன் மனதில் இந்த பாடல் நிலைபெற்று போக அதை சரியான சந்தர்ப்பத்தில் பயன்படுத்திக் கொண்டான்.


அதன்பிறகு இருவரும் கல்லூரிக்கு கிளம்பி சென்றனர்.


அன்று நடந்ததை இன்று யோசிக்கையில் மனம் தித்தித்தது ஆதித்யாவிற்கு அதேசமயம் மனைவியின் நினைவு வர வேதனையில் கசங்கியது அவன் முகம்.



 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"கடும் கதிரவனின் அன்றலர்ந்த மலரே!!"ஒரு சிறிய டீஸர்.


தான் கிளம்பி தயாராக இறங்கி வந்த ஆதி அனைவரையும் நோக்கி தயாரா என்பது போல் பார்வையை செலுத்த அங்கிருந்த குடும்பத்தார் பார்வை அனைத்தும் மாடி அறையை நோக்கிச் செல்ல அவர்கள் கவனம் இங்கு இல்லை என்பதை புரிந்து கொண்ட ஆதித்யா அவர்கள் பார்வை சென்ற இடத்தை தானும் பார்த்தவன் ஒரு நிமிடம் அதிர்ந்து போனான்.

கண்களை ஒருமுறை தேய்த்து விட்டு நன்றாக பார்க்க அப்பொழுதுதான் புரிந்தது தன் மனைவி சிவன்யாவின் புடவையை லட்சுமி கட்டிக் கொண்டு வந்ததை அவளைப் பார்த்ததும் கோபம் பன்மடங்காக அவளை உறுத்து விழித்தவன் தன்னை நோக்கி வந்தவளை வார்த்தையால் கதர அடிக்க காத்திருக்க இவன் பார்வையைப் பார்த்ததும் புரிந்து கொண்ட லட்சுமி கைகளில் தயாராக குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தாள். குழந்தையைக் கண்டதும் எதுவும் பேசமுடியாமல் கோப தீயை அடக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

*************************

"உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் மனைவியின் புடவையை உடுத்திக்கொண்டு வருவாய்... நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்படி வருவதற்கு உனக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்...உனக்கு இதற்கு தண்டனை கொடுத்தே தீர வேண்டும் அல்லவா..." என்றவாறு அவளை நெருங்கினான்.


அதில் பயந்தபடி லட்சுமி "இதை எனக்கு சிவன்யா அக்கா கொடுத்தார்கள் அத்தான்..."பயத்தில் நடுங்கியபடி கூறிய லட்சுமி தலையைத் தாழ்த்திக் கொள்ள அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற நொடியும் தாமதிக்காமல் அருகில் இருந்த சேற்றில் அவளை பிடித்து தள்ளிவிட அழகிய பூவாக இருந்தவள் நொடியில் வாடிய மலராக அசிங்கப்பட்டு நின்றாள்.

அவளைப் பார்த்து வாய்விட்டு சிரித்தவன் "இப்பொழுது தான் நீ பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறாய்... இது போல மீண்டும் ஒரு முறை செய்ய நினைத்தால் உன்னை முழுவதுமாக அழித்து விடுவேன்..."அவளை எச்சரித்தவாறே அங்கிருந்து நகர்ந்தான் ஆதித்யா.

அவனைக் கண்டு எப்போதும் போல் கசந்த புன்னகையை உதிர்த்தாள் லட்சுமி.

கருத்தை மறக்காமல் மறுக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே..

நன்றி
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"கடும் கதிரவனின் அன்றலர்ந்த மலரே!!"ஒரு சிறிய டீஸர்.


தான் கிளம்பி தயாராக இறங்கி வந்த ஆதி அனைவரையும் நோக்கி தயாரா என்பது போல் பார்வையை செலுத்த அங்கிருந்த குடும்பத்தார் பார்வை அனைத்தும் மாடி அறையை நோக்கிச் செல்ல அவர்கள் கவனம் இங்கு இல்லை என்பதை புரிந்து கொண்ட ஆதித்யா அவர்கள் பார்வை சென்ற இடத்தை தானும் பார்த்தவன் ஒரு நிமிடம் அதிர்ந்து போனான்.

கண்களை ஒருமுறை தேய்த்து விட்டு நன்றாக பார்க்க அப்பொழுதுதான் புரிந்தது தன் மனைவி சிவன்யாவின் புடவையை லட்சுமி கட்டிக் கொண்டு வந்ததை அவளைப் பார்த்ததும் கோபம் பன்மடங்காக அவளை உறுத்து விழித்தவன் தன்னை நோக்கி வந்தவளை வார்த்தையால் கதர அடிக்க காத்திருக்க இவன் பார்வையைப் பார்த்ததும் புரிந்து கொண்ட லட்சுமி கைகளில் தயாராக குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தாள். குழந்தையைக் கண்டதும் எதுவும் பேசமுடியாமல் கோப தீயை அடக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

*************************

"உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் மனைவியின் புடவையை உடுத்திக்கொண்டு வருவாய்... நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்படி வருவதற்கு உனக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்...உனக்கு இதற்கு தண்டனை கொடுத்தே தீர வேண்டும் அல்லவா..." என்றவாறு அவளை நெருங்கினான்.


அதில் பயந்தபடி லட்சுமி "இதை எனக்கு சிவன்யா அக்கா கொடுத்தார்கள் அத்தான்..."பயத்தில் நடுங்கியபடி கூறிய லட்சுமி தலையைத் தாழ்த்திக் கொள்ள அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற நொடியும் தாமதிக்காமல் அருகில் இருந்த சேற்றில் அவளை பிடித்து தள்ளிவிட அழகிய பூவாக இருந்தவள் நொடியில் வாடிய மலராக அசிங்கப்பட்டு நின்றாள்.

அவளைப் பார்த்து வாய்விட்டு சிரித்தவன் "இப்பொழுது தான் நீ பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறாய்... இது போல மீண்டும் ஒரு முறை செய்ய நினைத்தால் உன்னை முழுவதுமாக அழித்து விடுவேன்..."அவளை எச்சரித்தவாறே அங்கிருந்து நகர்ந்தான் ஆதித்யா.

அவனைக் கண்டு எப்போதும் போல் கசந்த புன்னகையை உதிர்த்தாள் லட்சுமி.

கருத்தை மறக்காமல் மறுக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே..

நன்றி
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை ஆரம்பம் முதலே ஏனோ பலவித தடைகள் என்னுடைய அப்பத்தாவிற்கு (அப்பாவுடைய அம்மாவிற்கு) உடல் நலம் சரியில்லை. அதனால் ud type செய்ய இயலவில்லை. அடுத்த மாதம் முதல் தொடர்ச்சியாக அனைத்து கதைகளையும் எழுதி முடித்து விடுகிறேன்.


அப்படி முதலாக முடிப்பது இந்த கதைதான்.


டீ:


மனைவியை இறுக அணைத்துக் கொண்டு ஆழ்ந்த துயிலில் இருந்தான் ஆதித்யா.


ஏதோ பொருள் உடையும் சத்தத்தில் அதிர்ந்து விழித்தவன் முதலில் தன் அருகில் இருந்த மனைவியை பார்க்க அவள் இன்னும் நித்திரையில் இருக்க போன உயிர் மீண்டும் வந்தது போன்று அவள் நெற்றியில் தன் அதரங்களை பதித்தான்.


பொருட்களின் சத்தத்தில் கீழே இறங்கி வந்தவன் ஒளியை ஒளிரச் செய்ய அங்கு நின்ற லட்சுமி கண்டு அதிர்ந்து போனவன் பின் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.


அதில் கோபம் வர பெற்ற லட்சுமி "அத்தான் இப்போது எதற்காக என்னைப்பார்த்து சிரிக்கிறீர்கள்..."சினுங்களோடு வினவ அவள் அருகில் சென்றவன் சிரிப்பு நின்றபாடில்லை.


"ஏண்டி எதற்கு இப்பொழுது அர்த்தராத்திரியில் உன் தலையில் மாவை கொட்டிக் கொண்டு நிற்கிறாய்..."கண்களில் கண்ணீர் வர மீண்டும் அவளை பார்த்து சிரிக்க அதில் கோபம் பெற்ற லட்சுமி தன் மீது உள்ள மாவை அவனை கட்டிக்கொண்டு அவன் உடம்பிலும் நன்றாக தேய்த்து விட்டவள் குறும்புடன் நிமிர்ந்து அவனை பார்க்க சிரிப்பதற்கு அடையாளம் அன்றி அவளைப் பார்த்து முறைக்க பாவையவள் பயத்தில் நடுங்கி போனாள்.


Comment please
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே. என்னுடைய முதல் கதையான நாக தேவனின் நங்கையே இன்று மதியம் அமேசானில் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.


 
Status
Not open for further replies.
Top