All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணியின் "கடும் கதிரவனின் அன்றலர்ந்த மலரே"!! கதை திரி

Status
Not open for further replies.

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீசர் 2:


ஆதி அத்தான், நான் உங்களை மனதார காதலிக்கிறேன். இப்போ இல்லை நான் பிறந்தது முதல் எனக்கு விபரம் தெரிந்த வரையில் உங்களை காதலிக்கிறேன் அத்தான். கூடிய சீக்கிரமே உங்ககிட்ட என்னோட காதலை வெளிப்படுத்த காத்திருந்தேன். இன்னைக்கு நம் கல்லூரியின் கடைசி நாள். கண்டிப்பா உங்ககிட்ட காதலை சொல்லியே தீருவேன், எனத் தன் காதலனுக்கு மறைமுகமாக செய்தி அனுப்பினால் லட்சுமி.


***************************************

பொறுக்கி நாயே, நீ பெரிய பணக்காரனா இருந்தா என்ன வேணாலும் பண்ணுவியா? உன்னோட அந்த கேவலமான பணத்திற்கு இந்த ஷிவன்யா எப்பவுமே மயங்க மாட்டாள். இனி நீ எந்த பொண்ணு கிட்டயும் உன் வேலையைக் காட்ட கூடாது. வேகமாக அவனிடம் நெருங்கியவள் யாரும் எதிர்பாராத வேளையில் பளார் என அறைந்து இருந்தால். நீ எப்பவுமே,எந்த பொண்ணு கிட்டே நெருங்கும் போது இந்த அறை தான் உனக்கு ஞாபகம் வரும் ஆதித்யா. மைண்ட் இட், இத்தனை பேர் பார்க்க தன்னை இப்படி செய்தவளே, நீயா என்கிட்ட தேடி வருவடி வர வைப்பேன் இந்த ஆதித்யா. நீ செஞ்ச ஒவ்வொரு காரியத்துக்கும் துடிதுடிக்க வைப்பேன் டி கண்கள் ரத்த நிறம் கொள்ள சூளுரை செய்தான்.

****************************************

போதும் ஆதி, எவ்வளவுதான் என்னை சாப்பிட வைப்பீர்கள்? உள்ளே இருக்க உங்க குழந்தை இப்போவே வெளியில வர்ற அளவுக்கு சாப்பாடு இப்படி வச்ச திணிக்காதீர்கள், என்ற மனைவியின் கூற்றின் கண்ணம் குழிய சிரித்தான் ஆதித்யா.



இது கதை திரி தயவுசெய்து உங்களது கருத்தை கருத்து திரியில்மட்டும் பகிரவும். புரிந்து கொள்வீர்கள் நண்பர்களே

நன்றி

வாழ்க வளமுடன் 😍😍😍
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தான்... நான் இப்படி செய்திருப்பேன் என்று நீங்கள் நம்புவீர்களா? அடச்சி வாயை மூடு, நீ என்ன சொன்னாலும் நான் உன்னை நம்ப மாட்டேன். எப்போது நீ என்னை காதலிக்க ஆரம்பித்தயோ எனக்கு அன்று பிடித்ததுதான் சனி. அவன் கூறிய கூற்றில் சுக்கு சுக்காக உடைந்து போனது லட்சுமியின் மனம்.


இன்னைக்கு இந்தக் கதையிலிருந்து அத்தியாயம் தரவா, ராட்சசியின் அசுரன் எதிலிருந்து அத்தியாயம் தர.. கருத்துத் திரியில் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.


வாழ்க வளமுடன் 😍😍😘😘😘
தாரணி
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1:




விடிந்தும் விடியாத அழகிய காலை பொழுதில் மார்கழி மாத பனியில் அங்குள்ள பறவை இனங்கள் எல்லாம் அன்றைய மாதத்திற்கே இருக்கும் புத்துணர்வுடன் தங்கள் கூட்டை விட்டு வெளியில் பறந்து சென்றன. ஆங்காங்கே வென்பனிகள் உறைந்திருக்க அந்தக் காட்சியே பார்ப்பதற்கு அவ்வளவு ரம்மியமாக இருந்தது.







வெள்ளங்குருகூர் அவ்வூரில் சுற்றிலும் இந்தக் காலத்தில் இவ்வாறு ஒரு ஊரா? என வியக்கத் தக்க வைக்கும் வகையில் பசுமையை பறைசாற்றும் விதமாக இருந்தது அவ்வூர்.







ஒரு பக்கம் காவிரி நதியும், மற்றொரு பக்கத்தில் இருந்த யமுனை நதியும் சேர்ந்து அந்த ஊரில் பசுமையை போற்றி காத்துக்கொண்டிருந்தது. ஆங்கு, குறுந்தொகையில் 99 மலர்களை அக்கால மக்கள் கண்டார்கள். அந்த ஊரிலும் 99 வகையான மலர்கள் இல்லை எனினும் அதில் பாதி வகையான மலர்கள் அங்கு இருந்தது. வரிசையாக ஒவ்வொரு வகையில் உள்ள ஒவ்வொரு மரம் வீதம் 10 வகையான மரங்களை ஒரே அடுக்கில் இருக்க அவற்றிற்கு இடையில் சிறு சிறு செடிகள் அவற்றை பராமரிப்பதற்காக இடையில் சிறு வழி என்று வகை செய்துள்ளனர் அந்த கிராமத்தில் வாழும் மக்கள்.







இதெல்லாம் போக, செங்காந்தல் மலர்கள், முல்லைக் கொடியும், மல்லிகைச் செடியும், கார் காலத்திற்கே உரிய பிடவம் பூவின் நறுமணம் என் அந்த ஊருக்குள் உள்ளவர்களின் மனதைப் போலவே அந்த செடிகளும் மணம் பரப்பிக் கொண்டிருந்தன. தற்போது அந்த ஊருக்கு யாரேனும் சென்றால் திரும்பி வருவதற்கு மனமே இல்லாது போகும்.







இதெல்லாம் போக அழகிய சிட்டுக் குருவிகளும், மரங்களில் மரம் கொத்தியும், அங்குள்ள நதியில் மீனை பிடிக்க காத்திருக்கும் மீன்கொத்தி, கொக்கு உடன் குருகு சிறு சிறு பச்சோந்திகள் பல பறவை இனங்களும், பூச்சிகளும் அடுத்தவர்களுக்கு தீங்கு இழைக்கக் கூடாது என்னும் விதமாக அவ்வூரில் வாழும் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, கரடி போன்ற உயிரினங்கள் கூட அங்குள்ள மற்ற உயிர்களை வேட்டை ஆடாது என்பது அந்த ஊருக்கே உரிய சிறப்பு.







அதே கிராமத்தில் தான் உள்ள மக்கள் யாவருமே அன்பில் ஒன்றிப் போனவர்கள். அவ்வூருக்கு இதுவரை ஒரு கொலை, கொள்ளை உட்பட்ட எந்தவிதமான தவறான செயல்களும் நடப்பதும் இல்லை.







இதற்கெல்லாம் காரணமானவர் அந்த கிராமத்தின் தலைவர் அங்குள்ள மக்களின் தெய்வமென கொண்டாடப்படுபவர் ஆதித்யாவின் தாத்தா வேங்கை மருதன். அவர் பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் இருந்தாலும், மனதளவில் சிறுகுழந்தை போன்றவர் அனைவருக்கும் வாரி வழங்கும் வள்ளல். அவரது மனைவி சிங்கார முல்லை. அவர்களுக்கு இரு தவப்புதல்வர்கள் மூத்தவன் சபாபதி. அந்த ஊரில் நடந்த ஜல்லிக்கட்டில் காளையை அடக்கி ஆளும் திறன் கொண்டவர். எதிர்பாராதவிதமாக மாடு முட்ட வயிற்றில் ஆழமாக கொம்பு குத்தியதால் அங்கேயே மாண்டு போனார். எதிர்பாராது நடந்த இந்த செயலில், அங்குள்ள அனைவரும் அந்த மாடு உட்பட கலங்கி நின்றவர்கள், தான் செயலை எண்ணி கலங்கிய மாடு அங்கேயே இருந்த மற்றொரு மாட்டின் கொம்பில் சென்று குத்திக்கொண்டு தான் செய்த தவறுக்காக தனது உயிரை விட்டது. அவர்களை அந்த இழப்பிலிருந்து மீட்டது அந்தத் தம்பதியினரின் இரண்டாவது மகன் அர்ச்சுனன் நெய்தல் நிலவனே அவ்வூரின் செல்ல மகனும் கூட... அர்ஜுனன் நெய்தல் நிலவனுக்கும் செங்காந்தல் அரசிக்கும் பிறந்த மகன்தான் ஆதித்யன்.







சபாபதியின் இழப்பை காலத்தின் ஓட்டத்தில் மறந்தாலும், அவர் இறந்த நாள் அன்று அவருக்கும் அவருடன் இறந்த மாட்டிற்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக அவ்வூரில் உள்ள மக்கள் பச்சைத் தண்ணீர் கூட தொட மாட்டார்கள். சிறு குழந்தை உட்பட அங்குள்ள மற்ற உயிரினங்களும், அவ்வளவு ஏன் அந்நாளில் சூரியன் கூட அவ்வூரில் அஸ்தமிக்க மாட்டார்.(கற்பனை அதிகமாக இருக்கிறது என்று திட்டாதீர்கள். ஒருவேளை இதே மாதிரி நிஜத்திலும் எங்காவது இருக்கலாம் 😁😁😁)







வேங்கை மருதனின் உடன் பிறந்த சகோதரி பாலை மதி. இவருக்கு இரு பெண் குழந்தைகள் மூத்தவள் குறிஞ்சி மதி. இளையவள் தான் லட்சுமியின் தாய் முல்லை மதி. குறிஞ்சி மதியின் திருமணம் இனிதே நடைபெற, திருமணம் ஆகியும் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. இளையவள் முல்லை மதிக்கு தனஞ்செயன் கூட திருமணம் நடைபெற அடுத்த பத்தாவது மாதம் லட்சுமியை ஈன்றெடுத்தாள். எதிர்பாராதவிதமாக பிரசவத்தில் மாண்டு போனார். மனைவி அவளின் இறப்பில் தனஞ்சயன் மனதால் மரணித்தவன் மனைவியின் பிரிவைத் தாங்க இயலாது ஆற்றுக்குள் குதித்து தனது உயிரை விட்டான். குறிஞ்சி மதிக்கு குழந்தை இல்லை என்றதும், அவள் கணவன் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள லட்சுமியை வளர்க்கும் பொறுப்பு குறிஞ்சி மதியின் ஆயிற்று. பெரிய இடத்துப் பெண்ணாக இருந்தாலும் குறிஞ்சி மதி கணவனின் ஊதாரி தனத்தால் அனைத்து சொத்துக்களையும் இழக்க, உதவ முன்வந்த தனது அண்ணன் அர்ஜுனன் உதவியை வேண்டாம் என்றவர் தனி ஒரு ஆளாக வேலைக்குச் சென்று லட்சுமியை வளர்த்து ஆளாக்கி உள்ளார்.







இவர்களின் எதிரி பக்கத்து ஊரை சார்ந்த முனியாண்டியின் மகன் சிங்கார வேலன் தமயந்தியின் புதல்வி தான் சிவன்யா. எதிரி குடும்பத்தின் மீது பரம்பரை பரம்பரையாக துவேசம் கொண்ட வழி வந்தவளாக இருந்தாலும், அதிலெல்லாம் ஈடுபாடு இல்லாதவள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள்.







ஆதித்யன் உடன் பிறந்தவர்கள் யாரும் அன்றி ஒரே புதல்வனாக வளர்ந்தவன். அதனால் எதிலும் வேகம் வேகம் மட்டுமே. சிறுவயதிலேயே அளவுக்கதிகமான ஆற்றலால் பல்வேறு சாதனை புரிந்தவன். அழகான நெற்றியும், வில்லென வளைந்த புருவமும், பிறரை பார்வையாலே எரிக்கும் கண்கள், அழுத்தமான உதடுகளும் சிரித்தால் குழி விழும், பரந்து விரிந்த மார்பும் அருகருகே இரு குன்றுகளை வைத்தது போன்று இரு பக்க புஜம், ஒரு அடி எடுத்து வைத்தால் அந்த இடமே அதிரும் அளவிற்கு காலில் வலிமையும் கொண்டவனே ஆதித்யா அர்ஜுனன்.







வேங்கை மைந்தனின் வழியில் வந்த ஒரே ஆண் வாரிசு என்பதால் மிகவும் செல்லம் உடன் அகங்காரத்தையும் கோபத்தையும் கொண்டு வளர்ந்தவன்.







அவனின் அந்தக் கோபத்தால் இங்கே அவன் இழந்த இழப்புகள் அதிகம்.காலம் போன கடைசியில் கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது நடந்து முடிந்தது முன்னதாக தானே இருக்கும். விதியை மாற்றும் வல்லமை யாருக்கு உண்டு. மனதில் உள்ள வலியுடன் எப்போதும் போல் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் ஆதித்யா. நல்ல தூக்கத்தில் இருந்தவனின் காதில் கேட்ட ஓசையில் மெல்ல துயில் கலைந்தவன் கடுப்பானான்.







அந்த மார்கழி மாத பொழுதில், விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்த லட்சுமி சுற்றுமுற்றும் பார்க்க எப்போதும் போல் புன்னகை முகமாக எழுந்தாள் லட்சுமி.







"அனைவருக்கும் இன்றைய நாள் நல்லபடியாக அமைய வேண்டும் இறைவா..."என வேண்டிக் கொண்டவள் காலையிலேயே குளித்து முடித்து சுத்தமாக பூஜை அறையை நோக்கி சென்றாள்.



தனக்கு மிகவும் பிடித்த மாணிக்கவாசகரின் பாடலை பாடியவாறு தனது பூஜையை ஆரம்பித்தாள்.



"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே....

அன்பினில் விளைந்த ஆரமுதே...

பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்...


புழுத்தலை புலையனேன் தனக்குச்...

செம்மையே ஆய சிவபதம் அளித்த...

செல்வமே சிவபெருமானே...

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்...

எங்கு எழுந்து அருளுவது இனியே..."என்று தனக்கு பிடித்த பாடல் பாடி முடித்தவள் கண்களில் எப்போதும் ஆதித்யாவை நினைத்து கண் கலங்கினாள்.


அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் இறைவனே என்று மனதுக்குள் பிரார்த்தித்தவாறுகண்களை திறக்கவும், அவளை கண்களாலேயே சுட்டெரித்துவாறுமுறைத்துக் கொண்டு நின்றான் ஆதித்யா.


விழிகளை திறந்தவள் எனது எதிரே நின்ற தனது ஆதி அத்தானை கண்டு 'ஐயோ.. இவங்க எப்ப வந்தாங்கன்னு தெரியலையே'என மனதிற்குள் பதற்றம் தொற்றி கொண்டாலும், வெளியில் காட்டாது அவனைப்பார்த்து புன்னகைத்தாள்.


அவள் புன்னகையில் இன்னும் கடுப்பானவன்"உனக்கெல்லம் கொஞ்சம் கூட அறிவே இல்லையா? இப்படி காலையிலேயே வாய திறந்து கத்தி கொண்டிருக்கிறாயே? எனது மனைவியும் மகளும் எப்படி தூங்குவார்கள்... அது சரி கண்டதையும் வீட்டுக்குள்ள கொண்டு வந்து விட்டால்அது இப்படித்தான் செய்யும்..."என்று திட்டியவன் அவளை முறைத்தவாறு நிற்கஅன்றலர்ந்த புன்னகையுடன் நின்று கொண்டிருந்தவளை கண்டு,


"இவங்களுக்கெல்லாம் என்ன திட்டினாலும் சுரணை இருக்காது.."என்று முணுமுணுத்தவன் தனது அறையை நோக்கி சென்றான்.


அதை எப்போதும் போல் தூசு தட்டியவள் மார்கழி மாத பொழுதில் கோலம் போட்டு முடித்தவள், சமையல் வேலைகளையும் முடித்து இருந்தாள். நேரத்தைப் பார்க்க அது ஆறு என்று காண்பிக்கவும், தோட்ட வேலைகளை கவனிக்க சென்று விட்டாள்.


இங்கே படுக்கையில் விழுந்த ஆதித்யா விற்கு அதற்கு மேலும் தூக்கம் வராது போக "ப்பச்சு"தூக்கமே வரவில்லை எல்லாம் அந்த வீணாப்போன லட்சுமி தான். இவளுக்கு எல்லாம் வேற வேல பொழப்பே இருக்காது என்றவளை திட்டியவாறு ஆபீஸ் கிளம்பி கொண்டிருந்தவனை "நைனா"என்ற மழலை குரலில் அவ்வளவு நேரம் இருந்த கடுகடுப்பு மறைந்து புன்னகையுடன் திரும்பினான் தனது மகளை பார்த்து (ஆதித்யா சிவன்யாவின்மகள் தியா லட்சுமி)


"அடடா... என்ன செல்லக்குட்டி இவ்வளவு சீக்கிரம் எழுந்து விட்டீர்கள்"என்று தந்தை கேட்டதும்,'தூக்கா வழா'என மழலை மொழியில் கூறிய மகளை அணைத்துக் கொண்டவன் மனைவியை முறைத்தவாறு மகளைக் கீழே தூக்கி கொண்டு சென்றுவிட்டான்.


கீழே சென்றதும், ஆதித்யாவின் கைகளிலிருந்து இறங்கிய குழந்தை "லமி"என்று அழைப்புடன் லட்சுமியை தேடி ஓடியது. மகளைப் மகளைப் பற்றி இனி கவலை இல்லை என ஆபீஸுக்கு சென்றவனை கண்டு கண்களில் உதிரம் வடிந்தது லட்சுமிக்கு. லட்சுமி தன்னை பார்க்காமல் இருப்பதை கண்டு கோபமடைந்த குழந்தை "லமி" என்று அழைக்கவும் தான் கைகளில் இருந்த ஒன்றரை வயது குழந்தை தியா லட்சுமிக்கு பால் கொடுக்க வேண்டும் என்று எண்ணியவள் குழந்தையிடம் மன்னிப்பை வேண்டிய வாறு தூக்கிச் சென்றாள்.


அலுவலகத்தில் கிளம்பிச் சென்று அன்றைய மீட்டிங்கை முடித்தவன் காலை உணவை உண்ணலாம் என்று கேண்டீனுக்கு சென்றவன் காதில் அங்கிருந்த ஊழியர்கள் பேசுவது கேட்டு கடந்து போக நினைக்கையிலேயே, லட்சுமி சிவன்யா என்ற பெயரைக் கேட்டதும் அங்கேயே பிரேக் போட்டது போன்று நின்றவன் காதில்,


அங்கிருந்த ஆண்களில் ஒருவன் ஆதித்யா சார் அவங்க மனைவி உயிரோடு இருக்கும்போதே லட்சுமி சைடுல வச்சிருக்கார்... பாவம் அந்த பொண்ணு சிவன்யா எப்படித்தான் இவன் கூட வாழ முடியாமல் தான்*****போயிற்று.என்று மேலும் அவனை தரைகுறைவாக பேசிக்கொண்டிருக்கவும், அவர்களை அந்த நிமிடமே பணியை விட்டு தூக்கியவன் வீட்டை நோக்கி சென்றான்.


மூன்று மணி நேரத்திற்குப் பின்பு...


காரிலிருந்து புயலென இறங்கிய ஆதித்யாஅளவுக்கதிகமான கோபத்துடன் "லட்சுமி எங்கடி இருக்க?" என்று கத்த வும், அவனின் சத்தத்தில் ஓடி வந்தால் லட்சுமி.



கண்களில் சிகப்பு பொறி பறக்க, அவளை இரண்டே எட்டுகளில் நெருங்கியவன் விட்ட அறையில் பொறி கலங்கி கீழே விழப் போனவள் தன்னை சமாளித்துக் கொண்டு அவனை பார்த்து அன்றலர்ந்த மலராக புன்னகைக்க அதை பார்த்து இன்னும் கடுப்பானவன் அவளது கழுத்தை பிடித்து நெறித்த சமயம்"ஆதியா..." என்ற தியாவின் குரலில்தனது பிடியை தளர்த்தினான்.


'வசந்தி'என்று ஆதித்யா அழைக்கவும், ஓடிவந்த அந்த வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி தயங்கியவாறே அவனிடம் சென்றவள்"ஐயா கூப்பிட்டீங்களா? என்று கேட்டதுதான் தாமதம் படாரென அவளது கன்னத்தில் அறைந்தவன் குழந்தையை தூக்கிக்கொண்டு அறைக்குள் செல் என கத்தவும், அதில் பயந்த குழந்தை வசந்தி தூக்கி கொண்டதும் அழுதபடியே சென்றது.


பார்வையை லட்சுமியிடம் திருப்பியவன்"உன்னை இதுக்கு மேல விட்டா என் மனைவியை****பண்ண மாதிரியே குழந்தையை ஆக்கிவிடுவாய்... முதலில் இந்த வீட்டை விட்டு வெளியில போடி..."என்று கத்தவும்,"முடியாது..."என்றால் ஒத்த வார்த்தையாக...


அதில் தனது கட்டுப்பாட்டை இழந்தவன் கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேச ஆரம்பித்தான்.


"என்னது... வீட்டை விட்டு போக மாட்டியா? அது சரி நீ எப்படி போவ... என்னை எப்படியாச்சும் மயக்கி விடலாமென்று தானே இங்கயே சுத்திக்கிட்டு இருக்க... கிட்டத்தட்ட நீயும் வேசிகள் மாதிரிதான்... உன்னை மாதிரி வேசி எல்லாம் என் வீட்டுக்குள்ளே இருக்கக் கூடாதுடி!!... உன்ன மாதிரி பொம்பளைங்ககுன்னு தான் ஒரு இடம் இருக்குதில்ல அப்புறம் ஏன் இங்கே இருந்து என் உயிரை எடுக்குற"என்று கத்தவும்,


பளார் என அறைந்து இருந்தார் அர்ஜுனன். பிளடி ராஸ்கல் எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட***பத்தி தப்பா பேசுவ என்று கோபத்தில் அர்ஜுனன் தனது பெல்ட்டை கழட்டி நொடியில் ஆதித்யாவை அடி பின்னி விட்டார்.


நொடியில் நடந்த நிகழ்வில் அகங்காரம் கொண்ட லட்சுமி, "மாமா.... போதும் நிறுத்துங்க?"இன்னொரு தடவ அத்தான் மேல் கையை வைத்தால் உங்களை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என கத்தியவாறு ஆதித்யாவை நெருங்கியவள் அவனே எதிர்பாராத சமயம் சுற்றியிருந்த யாரையும் பொருட்படுத்தாது அவனை அணைத்தவள் அவன் இதழில் தன் இதழை ஆழமாகப் புதைத்துக்கொண்டாள்.


கதிர் ஆவான்...


மகளிர் தின ஸ்பெஷலாக முதல் அத்தியாயம் பதிந்துள்ளேன். முதல் முறை ஒரு கடினமான பகுதியை எடுத்துள்ளேன். உங்களுக்காகத்தான் கதை எழுதுகிறேன் மக்களே படித்துவிட்டு அதன் கருத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டால் தான் கதை எவ்வாறு உள்ளது என்பது எனக்கு புரிந்து கொள்ள இயலும்.தயவு செய்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்க கருத்து திரீயில் மட்டும்..


இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...
 
Last edited:

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-2:


"ஆதித்யா... இங்க நின்னு என்ன கனவு கண்டு கொண்டு இருக்கிறாயா? ஆபீஸிலிருந்து முக்கியமான மீட்டிங்கில் விட்டுவிட்டு இங்கே என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய்?"என்ற அர்ஜுனனின் கேள்வியில் தான் கனவிலிருந்து வெளிவந்தவன் சுற்றும்முற்றும் நோக்கினான்.


அங்கு, லட்சுமியை காண அவளோ அவன் என்ன கனவு கண்டிருப்பான் என்று புரிய நமுட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்.


அவனை முறைத்தவாறு "இல்லப்பா... ரொம்ப தலை வலியாக இருந்தது அதுதான் வீட்டிற்கு புறப்பட்டு வந்து விட்டேன் மன்னித்து விடுங்கள்"என தந்தையிடம் மன்னிப்பு கோரினான்.


சரி சரி பரவாயில்லை விடு. இப்பொழுது தலைவலி எவ்வாறு உள்ளது? ஏதோ சில காலங்கள் தான் நீ பழையபடி மாறி இருக்கிறாய்... உன்னை மீண்டும் இழந்துவிட்டாள் அதைத் தாங்கும் சக்தி இங்கே யாருக்கும் இல்லை அப்பு...


(என்னது அப்புவா... என்று நீங்கள் ஆச்சரியப் படுவது புரிகிறது. அர்ஜுனன் நெய்தல் நிலவனுக்கும் செங்காந்தள் அரசிக்கும் வேங்கை மைந்தரின் பரம்பரையில் வந்த ஒரே ஆண் வாரிசு என்பதால், அனைவரும் அவனை செல்லமாக "அப்பு" என்றே கூப்பிடுவார்கள்)


தன்னால் தன் தந்தை எந்த அளவு கஷ்டத்தை அனுபவித்து உள்ளார் என்று அவர் வாயிலாக கூறும் போதே, ஆதித்தன் மனம் அவன் செய்த வேலைகளை எண்ணி மரத்து போனது.


"சரிப்பா பார்த்துக்கொள்... அம்மாடி லட்சுமி உன் அத்தானிடம் நான் கோபப்பட்டது தவறுதான்... என்னை என்னை மன்னித்துவிடம்மா"என்று மன்னிப்புக் கோரவும்,



அவ்வளவு நேரமும் செய்த தவறை எண்ணி மறுகி கொண்டிருந்தவன் தந்தை அவளிடம் மன்னிப்பு வேண்டவும், கோபத்தில் வாயை திறந்தான்.



"அப்பா..."கண்டவளிடம் எல்லாம் எதற்கு மன்னிப்பு கேட்கிறீர்கள்... நீங்கள் எவ்வளவு பெரிய ஆள்? போயும் போயும் இந்த வீட்டு வேலைக்காரியிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்... என்று கூறிய மகனை திரும்பிப் பார்த்தவர் "நீ எப்பொழுதும் மாறமாட்டாய் அப்பு"என்று பெருமூச்சு விட்டவாறே அங்கிருந்து நகர்ந்தார்.


அங்கிருந்து நகர்ந்த வரை"மாமா..."ஒரு நிமிடம் நில்லுங்கள்... என்ன மாமா இது?நீங்கள் வயதில் பெரியவர் என்னிடம் மன்னிப்பு கேட்கலாமா... நான் நீங்கள் பார்க்க வளர்ந்த பெண்... இப்படி எல்லாம் மன்னிப்பு கேட்டு என்னை சங்கடப் படுத்தாதீர்கள்... அத்தோடு என் கண்முன்னாலேயே ஆதி அத்தானை அடித்து விட்டீர்கள் என்ற கோபத்தில் பேசிவிட்டேன் மன்னித்து விடுங்கள்... என்று மன்னிப்பு வேண்டினாள்.


அவளது தலையை வருடி விட்டவர்,"கையில் கிடைக்கும் பொக்கிஷத்தின் அருமை அது கையில் இருக்கும்போது தெரியாது அப்பு... உன் கையில் வைத்திருக்கும் இந்த பொக்கிஷத்தை இழந்து விடாதே..."என்று கோரியவரிடம் நிமிடமும் தாமதியாது "நான் செய்ததற்கு வேண்டுமானால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால், என்மனைவி ஷிவானிக்கு என்னால் துரோகம் செய்ய இயலாது. நான் அவளை எந்த அளவு காதலித்தேன் என்று உங்களுக்கே தெரியும். இதற்குமேல் என்னை வற்புறுத்தாதீர்கள்... மாடியில் ஷிவானி எனக்காக காத்துக் கொண்டிருப்பாள். நீங்கள் பேசுவது எல்லாம் அவள் காதில் விழுந்தாள் மிகவும் வருத்தப்படுவாள். என் மனைவி கஷ்டப்படுவதை எக்காரணம் கொண்டும் என்னால் தாங்க இயலாது. ஆதலால் மீண்டும் நீங்கள் இதைப் பற்றி பேசாமல் இருப்பதே அனைவருக்கும் நல்லது" என்று கூறிய மகனை வெறித்து பார்த்தவர் எதுவும் கூறாமல், இதயத்தில் வழியும் குருதியுடன் அங்கிருந்து நகர்ந்தார்.



தந்தையிடம் எதிர்த்துப் பேசி விட்டோம் என்ற கோபத்தில் லட்சுமியை பார்த்தவன் இதற்கெல்லாம் காரணம் இவள் தானே என்ற கோபம் மொத்தமாக அவளிடம் திரும்பியது.


"ஏய்... லட்சுமி உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னைப் பார்த்தே சிரிப்பாய்... என் தந்தை உன்னிடம் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு நீ என்ன பெரிய ஆளா?? நீ என்று எங்கள் வாழ்வில் இருந்து தொலைந்து போறியோ... அன்று தான் எங்களுக்கு நிம்மதி. அப்போதாவது, எங்களைப் பிடித்த சனியன் ஒழிகிறதா... என்று பார்ப்போம்" என்று அவளை திட்டியவாறு அங்கிருந்து நகர்ந்தான்.


அவளோ... எப்போதும் போல் புன் சிரிப்பை உதிர்த்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்.


மாடிக்குச் சென்றவன் அங்கிருந்த மனைவியிடம் சென்றவன்"மன்னித்துவிடு அம்மு... அப்பா பேசியது தவறுதான் அவர் பேசியது எல்லாம் கணக்கில் கொள்ளாதே..." என்று தனது மனைவியிடம் கூற அவளோ அவனை பார்த்து அழகாக புன்னகைத்தாள்.


மனைவியை பார்த்த பிறகுதான் மகளின் எண்ணம் வரவும்,"அச்சோ... இங்கு நடந்த கலவரத்தில் தியா குட்டி மறந்துட்டேனே... நான் போய் தியாவை தூக்கிட்டு வர்றேன் என மனைவியிடம் கூறியவாறே, கீழே வந்தவன் மகளை கைகளில் அள்ளிக் கொண்டான்.



"தியா..."என்று அழைத்த வாரே வந்த தந்தையைக் கண்டு கோபத்தில் கைகளைக் கட்டியபடி முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தது அந்த வாண்டு.


மகளின் கோபம் புரிந்தவன், காதை பிடித்தவாறு குழந்தையின் உயரத்துக்கு முழங்காலிட்டு அமர்ந்தவன் "பேபி அப்பா செய்தது தவறுதான்... மன்னிக்க மாட்டீர்களா..." என்று அழுவது போல் பாசாங்கு செய்யவும்,


தந்தையின் கோபத்தில் அரண்டு இருந்த குழந்தை சிறு குழந்தைகளுக்கு உரிய முறையில் நடந்த அனைத்தையும் மறந்து அப்பா அழுவது பொறுக்காமல்"நைனா... நோ... நீ ஏ பாப்பாதை துட்டுநி..(திட்டினாய்) நா கோவா இருக்கேன்... நீ அழாத, பாப்பா நெய்னா முத்தா தர்றே நீ சிதி"(பாப்பா உனக்கு நைனா நெற்றியில் முத்தம் தருகிறேன் நீ அழுகாதே)என்று மழலை மொழியில் கூறியவாறு, தந்தையின் கன்னத்தில், நெற்றியில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தது.


அதில் கண்களில் நீர் துளிர்க்க, அதை துடை தெரிந்தவன் "சரிடா செல்லகுட்டி"என்று குழந்தைக்கு முத்தமிட்டு அணைத்துக் கொண்டான்.


சரி வா நம்ம ரூமுக்கு போவோம்... என்று அழைக்கவும்,"நைனா... நான் வில்லா(விளையாட) போறேன் என்று கூறவும், சரி அடிபடாமல் சென்று பத்திரமாக விளையாடு... "என்று குழந்தையிடம் கூறியவன் "வசந்தி..."என்று வேலைக்காரியை அழைத்தான்.


எஜமானின் குரலுக்கு பதறியடித்துக் கொண்டு வந்தால் அந்த வீட்டில் பத்து வருடங்களாக வேலை பார்க்கும் வசந்தி. அவனிடம் பயந்தவாறு வந்தவள்"சொல்லுங்க ஐயா..."என்ற பயத்துடனேயே கேட்டாள்.



குழந்தை விளையாடுகிறாள் பார்த்துக்கொள் எங்கும் சென்று விடாதே... உன்னை அடித்தது தவறுதான் மன்னித்துக்கொள்... என்று மற்றவர்களைப் போன்று செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்காமல் தலைக்கனம் கொண்டு திரிபவன் அல்ல. மன்னிப்பு வேண்டிய முதலாளியை அதிசயமாக பார்த்தாள் வசந்தி.


ஆனால், அவன் லட்சுமியிடம் மட்டும் ஏன் அவ்வாறு நடந்து கொள்வதற்கும் மட்டும் என்ன காரணம் என்று இதுவரை அங்குள்ள யாருக்குமே தெரியாது...??


"சரிங்கய்யா..."என்றவாறு குழந்தையை விளையாடுவதற்காக வெளியில் தூக்கிச் சென்றாள்.


அங்கு சமையலறையில் லட்சுமி "அச்சோ.. அத்தான் பாவம். காலையில் வேறு சாப்பிடவில்லை. இப்போ வேற தலை வலிக்குதுன்னு சொல்றாங்க... இந்த டீயையாவது கொண்டுபோய்க் கொடுக்கிறேன். அப்போதாவது அத்தானுக்கு தலைவலி நிற்கிறதா என்று பார்ப்போம்..."என்று கூறியவாறு தயாரித்த தேநீரை வேறு ஒரு கப்பில் மாற்றியவள் அவனுக்கு மிகவும் பிடித்த பிடி கொழுக்கட்டை உடன் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.


"இப்போ நான் ரூமுக்கு போனா அத்தான் என்னை திட்டுவார்கள்... ஆனால், பாவம் இந்த டீயை கொடுக்காமல் எப்படி இருப்பது"என்று யோசித்துக் கொண்டே வெளியில் வந்தளுக்கு அந்த அவசியம் இல்லாது போனது.


ஏனெனில், அங்கு சோபாவில் அமர்ந்து தலையை வலியின் காரணமாக பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.


அவளது நிலையைப் பார்க்க லட்சுமிக்கு மனம் வலித்தது. அவனிடம் சென்றவள்"அத்தான் தலை வலிக்குது என்று சொன்னீர்களே இந்த டீயை எடுத்துக் கொள்ளுங்கள்"என்று தட்டை அவனிடம் நீட்டினாள்.


அன்று காலையில் இருந்து வரிசையாக நடந்ததை எண்ணி கடுப்பில் இருந்தவன் அவள் டீயை நீட்டவும், கொதிக்கும் தேனீரை அவள் முகத்திலேயே ஊற்றினான்.



திடீரென தன் மீது ஊற்றிய தேனீரில் "ஐயோ அம்மா எரியுதே"என்று துடித்து போனாள்.


அந்த மிருகம் அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாது "நீ இனிமே இங்கே இருந்தா யாருக்குமே சந்தோஷம் இல்லை"என்று கையை பிடித்து இழுத்துக்கொண்டு சிறிதும் ஈவிரக்கமில்லாமல் வெளியில் தள்ளினான்.



அவன் டீயை ஊற்றியதைக்கூட, பொருத்துக் கொண்டவள் கழுத்தை பிடித்து தள்ளவும், சமநிலை இன்றி கீழே விழுந்தவள் கண்களில் வழிந்த கண்ணீருடன் அந்த இடத்தை விட்டு சென்றாள்.


அவள் கத்தும்போது வீட்டில் உள்ள அனைவரும் வந்தனர். ஆனால், அவன் அப்படி செய்வதை தடுக்க முடியாது கண்களில் வழிந்த கண்ணீருடன் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.


அவனை நோக்கி கையெடுத்து கும்பிட்டவள் அழுதபடியே அங்கிருந்து நகர்ந்தாள்.


"மகிழ் பதம் பலநாள் கழிப்பி, ஒரு நாள்...


'அவிழ்ப்பதம் கொள்க'என்று இரப்ப, முகிழித் தகை...


முரவை போகிய முரியா அரிசி...

விரல் என நிமிர்ந்த நிரல்அமை புழுக்கல்...

பரல்வறைக் கருணை, காடியின் மிதப்ப...


அயின்ற காலை, பயின்று இனிது இருந்து,...


கொல்லை உழு கொழு ஏய்ப்ப, பல்லே...


எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி,...


உயிர்ப்பிடம்பெறாது ஊன் முனிந்து...


என்று கூறுகிறது பொருநராற்றுப்படை. சங்க காலத்தில், கரிகால வளத்தான் தன்னைத் தேடி வந்த பொருநர் கெல்லாம், உணவு கொடுத்த ஓம்பிய முறையில் கூறுகிறது.



உண்ணுவதற்கு அறிய உணவை கொடுத்து, அவர்கள் அருகிலேயே அமர்ந்து 'தின்னுங்கள் திண்ணுங்கள்'என்று அவர்கள் வயிறு புடைக்க உணவு கொடுப்பானாம். அந்த உணவுகளை எல்லாம் நாக்கு வெந்து போகும் அளவிற்குத் தின்பார்களாம்... இது கரிகாலன் ஆட்சியில் சிறந்த உபசரிப்பும் முறையாம்"


அதே போலத்தான், குரு கூரில் உள்ள மனிதர்கள் யாவரும், தங்களிடம் வருவோரை அன்பு செய்வர்.



அப்படிப்பட்ட ஊரில் உள்ள ஒருவரிடம் தான், அவ் வீட்டில் வேலைக்காரியாக (அவளாக நினைத்துக் கொண்டு)வேலை செய்கிறாள் லட்சுமி.


அவன் வீட்டை விட்டு துரத்திய பிறகு, அழுதுகொண்டே வந்தவளை தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார் அந்த ஊரில் உள்ள கீதாரி. (ஊர் ஊராக தங்கி, கிடாய்போட்டு ஆடு மேய்ப்பவர்கள் கீதாரி என்று கூறுவர்)


கவலையுடன் தனது ஆதி அத்தனையும்,குழந்தையையும் குடும்பத்தையும் எல்லோரையும் நினைத்து அழுதுகொண்டிருந்தவளைக் கண்ட இறைவன், உனக்கு இன்னும் சோதனை முடியவில்லை என்பது போல்,




அவளுக்கு இன்னும் பல சோதனைகளை வைத்து காத்திருந்தான் இறைவன். அதன்படி அங்கு வந்து சேர்ந்தான், எதிரி குடும்பத்தைச் சார்ந்த சிவன்யாவின் அண்ணன் சந்திர பதி.


அவளை காப்பாற்ற போவது இனி யாரோ....

தொடரும்...



உங்களது கருத்தை பகிர்ந்து கொள்க
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட்டி டீசர்:


"அம்மு... என்னை மன்னித்துவிடு, நான் உன்னை வீட்டை விட்டுப் போகச் சொன்னது தவறு தான். அதற்காக நீ எதற்காக உன் வீட்டிற்கு செல்லாமல் யாரோ ஒருவரின் வீட்டிற்கு சென்றாய். அதனால்தான் இவ்வளவு அசம்பாவிதமும் நிகழ்ந்தது. நீ இப்படி செய்தது தவறு அம்மு.



பல நாட்களாக தனது அத்தானின், வாயிலிருந்து அம்மு என்ற வார்த்தை வராதா... என்று ஏங்கிய நாட்கள் உண்டு. ஆனால் இன்று அவன் வார்த்தைக்கு வார்த்தை அம்மு என்று கூப்பிட்டாலும், அடிமனதில் கத்தியை பாய்ச்சியது போல் தான் வலித்தது லட்சுமிக்கு.



நான்,இங்கே திரும்ப வந்ததற்கான காரணம் என் குழந்தை தியா மட்டுமே... நீங்கள் ஆசைப்பட்டது போல் நான் இனி உங்கள் வாழ்வில் திரும்ப வர மாட்டேன் அத்தான் நான் போகிறேன் என செல்ல போனவளை இழுத்து அணைத்து அவள் இதழில் தன் இதழை ஆழமாகப் பதித்தான் ஷிவானியின் கணவன்.



Comment please 😍 intha story continue pannva...
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3:


முனியாண்டி தமயந்தி தம்பதியருக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். அதில் மூத்தவன் சந்திரபதி, இதற்கடுத்து இரண்டாவது மகன் சங்கரன். இவர்களின் கடைக்குட்டி மற்றும் குடும்பத்தின் செல்ல வாரிசு ஒரே பெண் குழந்தையான சிவன்யா தான்.


தனது பகையை தீர்த்துக் கொள்வதற்காக தனது மகளை பகடைக்காய் ஆக்கிக் கொண்ட தந்தையின் ஈன புத்தியை அறிந்த சிவன்யாவும், மொத்த குடும்பத்தையும் உதறித் தள்ளிவிட்டு ஆதித்யாவை கை பிடித்திருந்தாள்.



அவள் அவ்வாறு செய்ததில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், அவள் சந்தோஷமாக வாழ்ந்தாள் அது ஒன்றே போதும் என்று எண்ணி அதனை பெரிதுபடுத்தாமல் விட்டனர் முனியாண்டி குடும்பத்தினர்.


ஆனால், சிவன்யா விற்கு எதிரியாக வந்தவள் லட்சுமி என்று எண்ணிக்கொண்டு அவளை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தான் சத்ரபதி. (சந்திர பதி)



ஆனால் அவர்களுக்குத் தெரியாது அல்லவா லட்சுமி அந்த வீட்டில் இருப்பதற்கு ஒரே காரணம் சிவன்யா வின் உத்தரவும் லட்சுமி கொடுத்த வாக்கும் தான் காரணம் என்று தெரியவில்லை. தெரியும் போது காலம் கடந்திருக்கும்.



சந்திர பதி தாத்தாவின் குணத்தை அப்படியே உரித்து வைத்து பிறந்தவன். படிக்கும் காலத்தில், யாராவது ஒருவன் அவனை எதிர்த்துப் பேசி விட்டால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் பேச முடியாதபடி வாயிலுள்ள நாக்கை அறுத்து விடுவான். அவ்வளவு கேவலமானவன். சங்கரனும் கிட்டத்தட்ட அவனில் பாதி தான். அந்தக் குடும்பத்தில் தப்பி பிறந்தவள் சிவன்யா ஒருவள் மட்டுமே...


சந்திரபதி அவ்வூரில் உள்ள அனைத்து பெண்களையும் குழந்தைகளையும் கண்டுவிட்டால் அவர்களை ஒரு வழி செய்துவிடுவான். அவனைக் கண்டாலே யாவரும் காததூரம் பறந்து விடுவார்கள்.



ஏற்கனவே தங்கையின் விஷயத்தில், ஆதி லட்சுமி இருவருக்குமான உறவை கண்டு வெம்பிப் போயிருந்தவனுக்கு லட்சுமியை பழிவாங்குவதற்காக தகுந்த சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அந்த சந்தர்ப்பத்தை உருவாக்கினான் ஆதித்யா.



லட்சுமி ஆதியின் வீட்டிற்குச் சென்ற பிறகு, மகளின் பிரிவில் குறிஞ்சி மதிக்கு ஏக்கம் வர அது கொஞ்சம் கொஞ்சமாக நோயாக மாறி இறுதியில் படுக்கையில் கிடக்கும் அளவிற்கு அவரது நிலைமை மோசமாக இருந்தது.


அவர் வேலை செய்துதான் லட்சுமியை காப்பாற்றினார். அவருக்குப் பிறகு அவரைப் பார்த்துக் கொள்ளும் மொத்த பொறுப்பையும் அர்ஜுனன் ஏற்றுக்கொண்டார்.


அதற்கு, முதலிலேயே லட்சுமி "வேண்டாம் மாமா... ஆதி அத்தான் சும்மாவே என்னை திட்டிக் கொண்டே இருப்பார்கள் இதில் நீங்கள் உதவி செய்யும் விஷயம் மட்டும் தெரிந்தால் பிரச்சினையாகிவிடும் வேண்டாம்"என மறுக்க,


"என்னோட தங்கைக்கு இந்த உதவியை செய்ய கூட எனக்குத் தகுதி இல்லையா மருமகளே"என ஒரே கேள்விதான் கேட்டார். அவரை அதற்கு மேலும் சங்கடப்படுத்த விரும்பாதவள் "சரி மாமா"என ஒப்புக்கொண்டாள்.



வீட்டை விட்டு வந்தபிறகு, அவரின் அந்த உதவியையும் முற்றிலுமாக மறுத்தவள் தன் தாயைத் தானே பார்த்துக் கொள்வதற்காக, அந்தக் கீதாரி வீட்டில் ஆட்டினை பராமரிக்கும் பொறுப்பை மேற்கொண்டாள்.



அந்த ஆடு மேய்க்கும் கீதாரி நல்ல மனிதனாக இருந்ததால் "உனக்கு என்ன வேலை தெரியும் அதை செய் கண்ணு"என்று பாசத்துடன் கூறிவிட்டார்.


அதன்படி அவளுக்கு மிகவும் பிடித்த ஆடுகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்.


அன்றும் அப்படித்தான், ஆடுகளை சுத்தி கிடந்த ஜானங்களை கூட்டி ஒரே இடத்தில் சேர்த்தவள் மிகவும் சோர்ந்து போய் நின்றிருந்தவளை தூரத்தில் கண்டுகொண்டான் சந்திர பதி.



அடியால் கொடுத்த தகவல்படி லட்சுமியை தேடி வந்திருந்தான். அதிலும், அவன் நல்ல நேரமோ இல்லை இலட்சுமியின் கெட்ட நேரமோ அவ்விடத்தில் சுற்றிலும் ஆட்கள் இல்லாது போனது அவனுக்கு இன்னும் வசதியாகப் போனது.


உதட்டில் கேலிப் புன்னகை மின்ன கண்களில் காமத்துடன் அவளை அணு அணுவாக ரசித்தான் அந்த ஈனப்பிறவி.


சோர்வில் நின்றவளை நெருங்கியவன் "என்ன லட்சுமி இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க..."என்ற சந்திரபதியின் குரலில் தூக்கிவாரிப்போட்டது லட்சுமிக்கு.


அவனை கண்டதும் உடல் நடு நடுங்க ஆரம்பித்தாள். சுற்றுமுற்றும் யாராவது உதவிக்கு இருக்கிறார்களா என்று நோட்டம் விட, கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லாது போக மனதில் பயம் கவ்விக்கொண்டது.


இருந்தாலும் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளும் நேரம் இதுவல்ல என்பதை உணர்ந்தவள்,


"நான் இங்கே என்னமோ பண்ணிக்கிட்டு இருக்கேன் அண்ணா... உங்களுக்கு என்ன பண்ணுது முதலில் இந்த இடத்தை விட்டு காலி பண்ணுங்க"என்று தைரியமாக ஒருவழியாக கூறி முடித்தாள்.


"என்னது, அண்ணனா யாருக்கு யாருடி அண்ணே"



என் தங்கச்சி வாழ்க்கையே தட்டிப் பறிக்க வந்த மூதேவி நீ என் தங்கச்சியா,


உன்னை அந்த ஆதித்யா வீட்டை விட்டு துரத்தி விட்டுவிட்டானாமே கேள்விப்பட்டேன்.



சரி நீ அதை பத்தி கவலை படாதே, உனக்குத் தேவையான சந்தோஷத்தை நான் தரேன்... நீயும் என்னை அடிக்கடி திருப்தி படுத்தினால் உனக்கு தேவையான பணம் உன் வீடு வந்து சேரும்... என்றதும்,



அவனின் பேச்சில் அவன் முகத்தில் காறி உமிழ்ந்தவள் சங்ககால புறநானூற்றில் வரும் பாடலை உச்சரித்தாள்.


"யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!"என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவள்,


எவ் வூராயினும் அஃது எம் ஊரே யாவராயினும் அவர் எம் உறவினரே! தீதும் நன்றும், நோதலும் தணிதலும் பிறரால் வருவதன்று நம்மாலேயே விளைவதாம். சாதலோ இவ்வுலகிலே புதிய செய்தியன்று. வாழ்தலே இனிது என மகிழ்தலும், வெறுத்து அதனை இன்னாதென ஒதுக்குதலும் இல்லோம். பேரியாற்று நீரிலே செல்லும் மிதவைபோல் எம் அரிய உயிரானது முறையாகச் சென்று கரைசேரும் என்பதனைத் துறவுடையோர் காட்சியினால் தெளிந்தோம். எனவே, செல்வத்தாற் பெரியவரை மதித்தலும் செய்யோம்; சிறியோரை இகழ்தலும் செய்யோம். அவரவர், ஒழுக்கம் ஒன்றையே யாமும் கருதுவோம்.


என்னுடைய இந்த ஒழுக்கத்தை விட்டு உனக்கு முந்தி விரீக்கறதுக்கு, நான் ஒன்னும் உன் பொண்டாட்டி அந்த மௌரி மாதிரி நான் கிடையாதுடா...



நான் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண். நீ இப்பவும் சிவன்யா அக்காவோட அண்ணன் என்பதால் மட்டுமே உன்னை சும்மா விடுகிறேன்.. இல்லையென்றால் உன் கழுத்தை இங்கேயே அறுத்துப் போட்டுட்டு போயிட்டே இருப்பேன் டா... என கோபத்துடன் கூறி முடித்தவள் அவ்விடத்தை விட்டு காலி செய்ய அவள் கையை பிடித்து இழுத்தான் சந்திரன்.



தன்மீது காரி உமிழ்ந்த அதோடு மட்டுமில்லாது தன் மனைவியையே கேவலமாக பேசியவளை அப்போதே அவமானப்படுத்த நினைத்தவன் அவள் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயற்சிக்க,



அவன் தலையில் இடி விழுந்தது போன்று விழுந்தது ஆதித்யாவின் அடி. ஒரு அடி என்றாலும் மரண அடி


கண்கள் சிவக்க கைகளில் நரம்பு புடைக்க கண்கள் செவ்வரி கோடு மின்ன தனது அத்தை பெண் மீது கை வைத்தவனை மனைவியின் அண்ணன் என்று கூட பார்க்காமல் புரட்டி எடுத்து விட்டான் ஆதித்யா.



உயிருக்கு போராடும் இறுதியில் அவனை பெரிய மனது பண்ணிவிட,


"இன்னொரு முறை இவளை நெருங்கினால் என்றால் உன் சாவிற்கு நீயே நெருங்கிக் கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்"ஜாக்கிரதை கொன்று புதைத்து விடுவேன்" என்று மிரட்டியவாறு,



பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த லட்சுமியை நெருங்கியவன் அவள் கையை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றான் தனது வீட்டை நோக்கி.


வீட்டு லட்சுமி சென்ற பிறகு, குழந்தை தியா தனது"லமியை" காணாமல் வீடு முழுவதும் சுற்றி வந்தவள் உதடு பிதுக்கி அழ ஆரம்பித்து விட்டாள்.



குழந்தையின் அழுகையில் மொத்த குடும்பமும் ஒன்று கூட, அங்கு தனது மகளின் அழுகையை கேட்டு ஓடிவந்தான் ஆதித்யா.



குழந்தையின் அருகிலேயே மண்டியிட்டு "என்னாச்சு செல்லம் நீ ஏன் அழுகிறீர்கள்..."எனக் கேட்கவும்,



"லமி வேண்டும் நைனா"என குழந்தை அழுதபடியே கூறவும்,


குழந்தைக்கு புரிய வைக்கும் நோக்கில் "இனி உன்னுடைய லட்சுமி இங்கு வர மாட்டாள்" என்று ஆதித்யா கூறவும்,



அவ்வளவு தான் அடுத்த நொடி குழந்தை தியா மயங்கி சரியவும், ஆதி உட்பட அனைவரும் அதிர்ந்து போனவர்கள் டாக்டருக்கு போன் செய்ய,


அவரும் வந்து பரிசோதித்துவிட்டு"குழந்தை மிகவும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். அவள் சொல்லும் விஷயத்தை நிறைவேற்றி வைத்தால் மட்டுமே உங்கள் குழந்தையை காப்பாற்ற முடியும்"



இப்போதைக்கு குழந்தைக்கு ஒரு இன்ஜெக்ஷன் போட்டுவிட்டேன். இனிமேல் இது உங்கள் பொறுப்பு என்று கூறியவாறு சென்றுவிட்டார்.


குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அவ்விடத்தில் மயான அமைதி குடிகொள்ள முதலில் வாயை திறந்தார் அர்ஜுனன்.



"போதும் ஆதி... நீ இவ்வளவு தூரம் செய்ததை பொறுத்துக் கொண்டது மிகப் பெரிய தவறு ஒழுங்கு மரியாதையா போய் லட்சுமியை அழைத்துக்கொண்டு வா"எனக் கூறவும்,


ஒற்றை வார்த்தையில்"முடியாது" என மறுத்துவிட்டான்.


இம்முறை வாயை திறந்து பேசினார் குடும்பத்தின் மூத்த வரும் ஆதித்யா பின் தாத்தாவும் ஆன வேங்கை மைந்தர்.


"இங்க பாருப்பா... நீ இதுவரைக்கும் என் பேத்தியை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு படித்து விட்டாய்... இனிமேலும் என் பேத்தி இங்கு வர வேண்டிய அவசியமில்லை ஆனால், உன் குழந்தை நல்லபடியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் இனி உன் விருப்பம்"என்றவர்,



பேச்சு முடிந்தது என்பது போல் அங்கிருந்து நகர்ந்தார் அவரைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் மொத்தமும் கலைந்து போயினர்.


அவர் சொல்லிய"உன் குழந்தை நல்லா இருக்கவேண்டும் என்றாள்"என்ற செய்தி சரியாக அவனை தாக்கியது.



பல்லை கடித்துக்கொண்டு குழந்தைகாக லட்சுமியை அழைத்துக் கொண்டு வர சென்ற இடத்தில் அவளுக்கு நடந்த சம்பவத்தை கண்டு இயல்பாக அவள் மீது இருக்கும் பாசம் வெளிவர சந்திரனை போட்டு புரட்டி எடுத்து விட்டான்.


வீட்டிற்கு அவளை அழைத்துக் கொண்டு வந்தவன், உள்ளே அழைத்துச் செல்வதற்கு முன்பாக அங்கேயே நின்றாள் லட்சுமி.


கண்களில் ஏன் என்ற கேள்வியோடு அவன் பார்க்க,"சாரி ஆதி அத்தான் என்னால் இந்த வீட்டிற்குள் வர இயலாது"என்று குண்டை தூக்கி போட்டாள்.



ஏற்கனவே பல பிரச்சினைகளில் இருந்தவன் "உள்ளே வரப் போகிறாயா இல்லையா என்று மிரட்டவும்", என்ன அதிசயம்? லட்சுமி கல் சிலை போன்று அப்படியே நின்றாள்.


அவளது ஆதி அத்தான் கூப்பிட்டு வராமல் இருக்கிறாள்.



அதில் ஆச்சரியம் மேலிட அவளைப் பார்த்தவன், வேறு வழி இல்லாமல் அவளை எப்போதும் கூப்பிடும் "அம்மு" என்ற வார்த்தையை உதிர்த்தான்.


குழந்தையின் நிலை பற்றி கூறி முடித்தான். மேலும்,


"அம்மு... என்னை மன்னித்துவிடு, நான் உன்னை வீட்டை விட்டுப் போகச் சொன்னது தவறு தான். அதற்காக நீ எதற்காக உன் வீட்டிற்கு செல்லாமல் யாரோ ஒருவரின் வீட்டிற்கு சென்றாய். அதனால்தான் இவ்வளவு அசம்பாவிதமும் நிகழ்ந்தது. நீ இப்படி செய்தது தவறு அம்மு"என்று மனதை கல்லாக்கி கொண்டு மன்னிப்பு வேண்டினான்.



பல நாட்களாக தனது அத்தானின், வாயிலிருந்து "அம்மு..."என்ற வார்த்தை வராதா... என்று ஏங்கிய நாட்கள் உண்டு. ஆனால் இன்று அவன் வார்த்தைக்கு வார்த்தை அம்மு என்று கூப்பிட்டாலும், அடிமனதில் கத்தியை பாய்ச்சியது போல் தான் வலித்தது லட்சுமிக்கு, இருந்தாலும் அதை சமாளித்து கொண்டு அவனிடம்,



"நான்,இங்கே திரும்ப வந்ததற்கான காரணம் என் குழந்தை தியா மட்டுமே... நீங்கள் ஆசைப்பட்டது போல் நான் இனி உங்கள் வாழ்வில் திரும்ப வர மாட்டேன் அத்தான் நான் போகிறேன்" என செல்ல போனவளை இழுத்து அணைத்து அவள் இதழில் தன் இதழை ஆழமாகப் பதித்தான் ஷிவானியின் கணவன்.


அதில் அதிர்ச்சியாகி நின்றவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்றவன் அவள் திகைத்து நிற்பதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டான்.



குழந்தையிடம் நேரே அழைத்துச் சென்றதும், மொத்த குடும்பத்தினரும் குழந்தையின் அருகிலேயே இருந்ததால் லட்சுமி வந்தபிறகு, இனி ஒன்றும் பிரச்சினை இல்லை என நிம்மதியுடன் அவரவர் அறைக்கு சென்றனர்.


குழந்தையிடம் சென்றவள் குழந்தையை தலை முதல் கால் வரை வருடிக்கொடுத்து,"என்ன மன்னிச்சிடு குட்டி"என மன்னிப்பு வேண்டியவள் தூங்கும் குழந்தையை கஷ்டப்படுத்த விரும்பாவள் குழந்தையின் நெற்றியில் முத்தத்தை பதித்துவிட்டு, சிறு புன்னகையுடன் வெளியில் வந்தவளை, தனது அறைக்கு கிட்டத்தட்ட இழுத்து சென்றான் ஆதித்யா.


அவளை உள்ளே தள்ளியவன் யாருக்கும் கேட்காமல் இருப்பதற்காக கதவை சாத்தினான்.



அவன் இழுத்து வந்ததோடு அல்லாது, கதவை சாத்த பயந்துபோன லெச்சுமி,"ஏன் அத்தான் கதவைச் சாத்துகிறார்கள்" என மெதுமெதுவாக முனுமுனுத்தாள்.


அவளிடம் நெருங்கியவன்,"சரியான ஆளுதான் நீ. உன்கிட்ட என்ன இருக்கு என் குடும்பம் மொத்தமும் உனக்கு சப்போர்ட் பண்றாங்க... இவ்வளவு ஏன் என் பொண்டாட்டியோட அண்ணன் கூட உன்னை விடாமல் வந்திருக்கிறானே... உண்மையாலுமே நீ பெரிய ஆளு தாண்டி.."


நீயும் ரொம்ப நாளா என்ன சுத்தி வர, நீ சந்தோஷமாக இருந்தால்தான் இந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்கள் சந்தோஷமாக இருந்தால்தான் நான் நிம்மதியாக இருக்க முடியும்.



உன்னை சந்தோஷப்படுத்தலாம் முடிவெடுத்தேன்."என்ன என் பொண்டாட்டிக்கு துரோகம் பண்றேன் கொஞ்சம் கஷ்டமா இருக்கு, பரவாயில்லை உன்னை என் வப்பாட்டியாக வைத்துக் கொள்கிறேன். உன் தேவையை நான் தீர்க்கிறேன், இப்போ உனக்கு சந்தோஷம்தானே எதுக்கு உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று யோசித்து வை, உன் அத்தான் சென்று தயாராகி வருகிறேன் என அவள் இதயத்தை உயிரோடு சமாதி கட்டினான்.



தன் பேச்சில் கடுப்பாகி அவள் இங்கிருந்து சென்று விடுவாள் என்றெண்ணி கூறியவன் அவள் முகத்தை பார்க்க, எப்போதும்போல் அன்றலர்ந்த மலராக அவனைப்பார்த்து புன்னகைத்தாள் கண்களில் வலியுடன்.


 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீஸர்:


"அம்மாடி... லட்சுமி போயிட்டு குழந்தையை தயார் படுத்துமா... நாம செல்ல வேண்டிய இடத்திற்கு இப்பொழுது நேரம் ஆகிவிட்டது..."ஆதியின் அம்மா கூற,


"சரிங்க அத்தை..."என்று அவருக்கு பதில் அளித்தவள் மாடியில் இருந்த குழந்தையின் அறையை நோக்கி சென்றவள் "தியா குட்டி வாங்க ரெடி ஆகலாம்..."என்று அழைத்ததும் குழந்தையும் அவளிடம் எந்தவிதமான தொல்லையும் செய்யாமல் அரை மணி நேரத்தில் தயாராகியது. குழந்தையை தயார்படுத்தி அவள் தன்னையும் தயாராக கொள்ள "தியா குட்டி..."ரெடி ஆயிட்டியாடா என்றபடி அங்கு வந்த ஆதி லட்சுமி அழகைக் கண்டு திகைத்து போனவன் மனைவியின் நினைவு வர அவளிடம் சென்றவன் "என் வீட்டு வேலைக்காரி உனக்கு இவ்வளவு ஆடம்பரமும் ஆகாதடி... ஒழுங்கு மரியாதையா இங்கியே இருடி என் குடும்பத்தில் நீ வேலை காரி மட்டுமே அதை நினைவில் வைத்துக்கொள்..."அவளைப் பார்த்து உறுமியவன் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்று விட்டான். எப்போதும் போல அன்றும் வழக்கமாக புன்னகைத்தாள்...


நாளையிலிருந்து கதை தொடர்ச்சியாக வரும் மக்களே... கதை எப்படி இருக்கிறது
 
Status
Not open for further replies.
Top