All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணியின் "ராட்சசியின் அசுரன்!!"கதை திரி

Status
Not open for further replies.

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-2:


நிரஞ்சனின் மீது சாணியை தூக்கி எரிந்தவள் அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், கலகலத்து சிரித்துக் கொண்டிருக்கும் போதே,'ஐயோ! என பதறி தான் போனான் வசந்த்.


ஏற்கனவே கார் கண்ணாடி உடைந்ததில் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த நிரஞ்சன் தன்மீது சாணத்தை தூக்கி எறிந்துவிட்டு, அதற்காக மன்னிப்பு கூட கேட்காமல் விழுந்து விழுந்து சிரிக்கும் அந்த பெண்ணின் மீது எரிச்சல் கொண்டான்.


வசந்தோ அவளின் செய்கையை பிடிக்காதவன் போல ஏய்? 'மதி கொஞ்ச நேரம் வாயை மூடிக் கொண்டிரு... சாரி சார் ஏதோ தெரியாமல் உங்கள் மீது பட்டு விட்டது என மன்னிப்பு கோரவும்', வெண்மதியை முறைத்தவாறே, பரவா இல்லங்க... நீங்க ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்.


ஆனா.."மன்னிப்பு கேட்க வேண்டிய மகராசி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறாள் சரியான ராட்சசியா இருப்பாள் போல இருக்கு... என்று நிரஞ்சன் கூறவும்,



முன்பின் தெரியாத ஒருவன் தன்னை பார்த்து ராட்சசி எனக் கூறவும், கொந்தளித்துப் போனாள் வெண்மதி. "அடியே மதி...இவனுக்கு இதெல்லாம் பத்தாதுடி என்னையவா திட்டுற உன்னை இருடா வச்சிக்கிறேன்" என மனதில் கருவிக் கொண்டவள் தக்க சமயத்திற்காக காத்திருந்தாள்.


வசந்த் தான்'பார்ப்பதற்கு பெரிய இடம் போல் இருக்கிறார் இந்த சார்.. ஆனா, இந்த லூசு இப்படி பண்ண அது மட்டும் இல்லாம இப்படி விழுந்து விழுந்து சிரித்து மானத்தை வாங்குது'என மனதிற்குள் தன் மாமன் மகளை திட்டிக் கொண்டிருந்தான் வசந்த்.



நீங்க வாங்க சார்... இதோ இங்க தண்ணி இருக்கிறது உங்களை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். நான் போய் உங்களுக்கு வேறு ஒரு சட்டையை வாங்கிவிட்டு வந்தர்றேன்... என அவனது பதிலுக்கு கூட காத்திராமல் வேகவேகமாக சென்றான்.


தன்னை சுத்தப் படுத்திக் கொள்வதற்காக, வீட்டின் பின்புறம் வந்தவனை.. தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த, வெண்மதி அவன் முகத்தை சோப்பு போட்டு கழுவி கொண்டு இருக்கவும், அவள் வீட்டில் செத்துக் கிடந்த எலியை சரியாக அங்கிருந்த குண்டானில் போடவும் அதுவும் சரியாக சென்று நிரஞ்சன் வைத்திருந்த குவளையில் விழுந்தது. மெதுவாக அந்த இடத்தை காலி செய்தவள் நடக்கப் போவதைக் காண ஆவலுடன் காத்திருந்தாள்.இது எதுவும் அறியாத நிரஞ்சன் தண்ணீரை எடுத்து முகத்தை கழுவிவிட்டு, அந்தத் தண்ணீரை வாயில் ஊற்றி கொப்பளிக்கவும்,



என்னடா இது தண்ணி ஒரு மாதிரியா இருக்கே... என தண்ணீரை உற்றுப் பார்க்கவும், அதில் கிடந்த எலியை கண்டதும் அந்த சட்டையை தூக்கி தூர போட, சரியாக வந்து கொண்டிருந்த வசந்தின் மீது பட்டது அந்த எலி.


சீ...உகும்.. எவன்டா இது இந்த நாத்தம் புடிச்ச எலிய என் மேலே தூக்கி போட்டது.. அட நாசமா போன நார பய எலியை எவன்டா தூக்கிப் போட்டது என கத்தவும், மாமனின் சத்தம் கேட்ட வெண்மதி அந்த இடத்திலிருந்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என அலறி அடித்து கொண்டு ஓட ,


அதற்கு மேலும், எலியின் நாற்றம் பொறுக்க இயலாத வசந்த் அந்த எலியை தூக்கி எறிய அது சரியாக சென்று, வெண்மதியின் மீது விழுந்தது. தன் மேல் எலி வந்து விழுகும், எதிர்பார்க்கதவள் ஆ... என்று அலறியபடி, எலியை தூக்கி வீசவும்,


என்னடி சத்தம் என்று கேட்டபடி வந்த பாட்டி மீது எலி விழவும், "ஐயோ"என்று அலறியபடி பாட்டி கீழே விழ கால் எசகுபிசகாக பிசைக்கி கொண்டது.


அங்கு, எலி விழுந்த தண்ணீரை வாயில் ஊற்றி விட்டோமென்று வாயில் எதுவும் ஆகிவிடுமோ! என்று பயந்து டாக்டர் நிரஞ்சன், அருகிலிருந்த மாட்டுச் சாணி அள்ளி வாயில் போட்டு கக்கி கொண்டிருந்தான்.


வசந்தோ'என்னடா இது... சரியான லூசா இருப்பான் போல இருக்கு... வெண்மதி சாணியை தூக்கி எரீந்ததற்கு அந்த கத்து கத்தினான். இப்போ அவனே சாணி போட்டு கலக்கி குடிக்கிறான் ஐயோ ஒண்ணுமே புரியலையே'.. என மண்டையை ,பிய்த்துக்கொண்டான் வசந்த்.


சார்.. என நிரஞ்சனை அழைக்கவும், சீ எனத் தன் கையிலிருந்த சாணி குவளையை தூக்கி தூரப் போட்டான் , அது சரியாக சென்று வெண்மதியின் மீது ஊற்றியது.அப்பத்தா வழுக்கி விழுந்து விட்டது அதற்கு உதவி செய்ய தனது மாமாவை அழைக்க வந்த, வெண்மதி மீது படவும், மீண்டும் சாணியில் குளித்தால் வெண்மதி.அதில் எரிச்சல் வர, அவனை நோக்கி



"யோவ்... சரியான கூமுட்டையா இருப்பாய் போலிருக்கு, உன் மூஞ்சில என் பீச்சாங்கை வைக்க போடா இஞ்சி தின்ன குரங்கு" என.. ஆ வில் ஆரம்பித்து இ இல் முடித்த பெண்ணைக் கண்டு திகைத்து நின்றான் நிரஞ்சன்.


'என்ன பொண்ணு நீ? சரியான இராட்சசியா இருப்பாள் போலிருக்கிறது"... என திட்டவும், மீண்டும் ஆரம்பிக்க போன வெண்மதியை, இவள் இப்போது ஆரம்பித்தாள் மறுபடியும் எப்போது மூடுவானு எனக்கே தெரியல...


வெண்மதி 'எதுக்காக வேகமா ஓடிவந்த என்னாச்சு?'என்ற வசந்தின் கேள்வியில் தான் வெண்மதிக்கு பாட்டியின் நியாபகமே வந்தது..


"ஐயோ மாமா பாட்டி கீழ விழுந்து எசகு பிசகாக கிடக்கு... அதைத் தூக்க முடியாமல் தான் உன்னை தேடி வந்தேன் மாமா... அந்தக் கிழவியை சோத்த கொஞ்சமா திங்க சொன்னா அது யான உருண்டை மாதிரி சோத்த வாயில வச்சு அம்முகுது... கிழவிய தூக்க முடியலமாமா சீக்கிரம் வா... கிழவி சாப்பிட நேரம் ஆச்சுன்னு உருண்டு கிரண்டு வீட்டுக்குள்ள போச்சுன்னா வீடு உடைந்து விட போகுது"அவசர அவசரமாக வசந்தை இழுக்காத குறையாக கூட்டி சென்றால் வெண்மதி.


அவள் செய்யும் கூத்தை எல்லாம் வாயை பிளந்தபடி பார்த்துக் கொண்டு நின்றான் நிரஞ்சன். அவருக்கு அடி எதுவும் பட்டிருக்கும் என ஒரு மருத்துவராய் எண்ணியவன் காருக்குள் சென்று முதலுதவி பெட்டியை எடுத்துக்கொண்டு அவர்கள் சென்ற திசையை நோக்கி சென்றான்.


அங்கு, இரண்டு பேரும் சேர்ந்து பாட்டியை தூக்கமுடியாமல் தூக்க... பாட்டியும் தட்டுத்தடுமாறி மெதுவாக எழுந்தது.


காலில் ஏற்பட்ட சுளுக்கு அதிக வலியை கொடுக்க, 'அம்மா'என அலறி விட்டார்கள். பதறியடித்து ஓடிவந்த நிரஞ்சன் பாட்டிக்கு முதலுதவி செய்ய ஆயத்தமாக,


வெண்மதியோ,"டேய் என்னடா பண்ற? என் பாட்டியின் காலை வாரிவிட்டு அதை கொல்ல பார்க்கிறாயா?" என்னை எதிர் கொண்டு வரவும்,


பாட்டிக்கோ, தன் பேத்தி தன் மேல் இந்த அளவு அன்பு வைத்துள்ளாள் எனக் கண் கலங்கவும், அந்த எண்ணத்தில் இடி விழுந்தது அவள் அடுத்து கூறியது.


"என் பாட்டியியை போட்டு தள்ளுவதற்கு முன்பாக அது பேரில் உள்ள அந்த ரெண்டு எரும மாடை என் பெயரில் மாற்று கொடுத்துவிடு"எனக் கூறவும், நிரஞ்சன் ஒன்றும் புரியாமல் விழிக்க


பாட்டியோ'அடி கூறுகெட்ட சிறுக்கி'திட்டுவதற்கு முன்பாக நிறுத்துங்க பாட்டி... நிரஞ்சன் நீங்க எதற்காக இதெல்லாம் செய்கிறீர்கள்? என்று வினாவாவும், ஐ அம் ஏ டாக்டர் நிரஞ்சன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.


ஓகே நீங்கள் உங்கள் வேலையை கவனியுங்கள்.. பாட்டியின் காலை சோதித்தவன், ட்ரெஸ்ஸிங் போடவண்டும் எனவும் திகைத்துப் போனாள் வெண்மதி.


மாமா... என்ன இந்த ஆளு? பாட்டிக்கு போயி பிரஸ் பண்ணனும்னு சொல்றா சரியான கிறுக்கன போல இருக்கான் என்று நிரஞ்சனை திட்டவும், அவளது கூத்தை பொறுக்க முடியாதவன் அருகிலிருந்த பிளாஸ் திரியை எடுத்து அவளது வாயில் ஓட்டினான். அவள் வாயை மூடிய பிறகுதன், நிம்மதியாக வைத்தியம் பார்த்தான்.


தன்னை சுத்தப் படுத்திக் கொள்ள, வசந்தை நோக்கியவாறு என்னை சுத்தப்படுத்திக் கொள்ள
வேண்டும் என்று கூறவும், அப்போதுதான் வசந்த்க்கும் அவனின் நிலைமை புரிந்தது.


பாத்ரூமுக்குள் அழைத்துச் சென்றவன், இங்கே உங்களை சுத்தப்படுத்திக் கொண்டு இதோ இந்த உடையை அணிந்து கொண்டு வாருங்கள்.. என வெளியில் வந்தவன் பாட்டியை காண சென்றான்.


தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வந்த நிரஞ்சன் அங்கு சுவற்றில் இருந்த மாட்டு சாணத்தைக் கண்டு திகைத்து நின்றான்.



அவன் சென்று இவ்வளவு நேரமாகியும் வரவில்லை என்று, அவனைத் தேடி வந்த வெண்மதி அவனை யோவ் டாக்டரே.. என்று அழைக்கவும், அவன் சிறிதும் அசையாமல் வைத்த கண் வாங்காமல் ஒரே இடத்தை பார்த்துக் கொண்டிருக்கவும் அங்கு தனது பார்வையை செலுத்தினால் வெண்மதி.



டாக்டர்... என்று அவள் கத்தவும்,தான் சுயநினைவு அடைந்த நிரஞ்சன் அவளை நோக்கி அவ்வளவு நேரம் இருந்த சஞ்சலத்தை மறந்து அந்த கேள்வியை கேட்க ஒரு நிமிடம் திகைத்தவள் பின் விழுந்து விழுந்து சிரித்தாள்.



அவன் அப்படி என்ன கேள்வி கேட்டு இருப்பான்? உங்களது கருத்துக்களை தயவு செய்து கருத்துக்கள் மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே... கதை திரியில் நீங்கள் பகிர்ந்து கொண்டாள அதற்கு பதில் அனுப்ப முடியவில்லை மனதிற்கு கஷ்டமாக உள்ளது. உங்கள் கருத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.



வாழ்க வளமுடன் 😍😍😍😘😘😘

தாரணி.
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட்டி டீசர்:


நான் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் "மை டியர் ஸ்வீட் ஹார்ட் வெண்மதி டியர்"உன் கூட என் மொத்த வாழ்க்கையையும், சந்தோஷமாக வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன்.


'இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு நொடியும், உனக்காக நானும், எனக்காக நீயும் என நாம் இருவரும் வாழ வேண்டும்'என்னை விட்டு எப்போதும் பிரிந்து சென்று விடாதே வெண்மதி.


" ஃபைனலி ஐ எம் லவ்விங் வித் யூ டூ யூ லவ் மீ?"என்று தன் மனதில் உள்ள மொத்த காதலையும் நிரஞ்சன் வார்த்தைகளில் வடிக்க,



அவன் அவ்வளவு நேரமும், தமிழில் பேசியது ஏதோ புரிந்தது போல் ஆர்வமுடன் பார்த்து கொண்டிருந்தவள், அவன் ஆங்கிலத்தில் கூறவும் சந்தோஷமாக வாயை திறந்தவள்,



'ஆமாம் மாமா.. நானும் காதலிக்கிறேன். அதுவும் முன்னைவிட அதிகமாக அவள் கூறியதும், ஆயிரம் ரோஜா பூ தலையில் விழுந்தது போல் இருக்க அடுத்து அவள் சொன்னது பெரிய இடி இறங்கியது அவன் தலையில்'



கண்டிப்பா கண்டிப்பா மாமா இந்த உலகத்தில் நான் வாழும் ஒவ்வொரு நொடியும், சுவையான பரோட்டா , குருமா, சால்னா, பிரியாணி, சிக்கன் 65, கச்சோடி, பூரி, புலாவ், வித் பிரைஸ், அந்த வெள்ளை அரிசி (ஒயிட் ரைஸ்) அப்புறம் என்னென்ன இன்னும் நிறைய இன்னைக்கு சாப்பிட்டேன் மாமா. நான் அது எல்லாத்தையும் உயிருக்குயிராய் காதலிக்கிறேன் மாமா. ஐ லவ் யூ மாமா... ஐ லவ் மை டியர் மாமாவின் சூப்பர் சமையல் மாமா குட் நைட்...



இறுதியில் நிரஞ்சன் நிலைமைதான் மிகவும் கவலைக்கிடமாக போனது.


ராட்சசி வருவாள்...



உங்களது கருத்தை கட்டாயமாக பகிர்ந்து கொள்க. கருத்து திரியில் மட்டும் நண்பர்களே...



வாழ்க வாழ்க வளமுடன்😍😍😍😘😍😘😍🙏🙏


தாரணி
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3:


"யோவ்!டாக்டரே... கூப்பிடுறது கேக்குதா இல்லையா?"என்ன இவ்வளவு நேரம் கூப்பிடு கொண்டே இருக்கிறேன். இந்த ஆளு அப்படி என்னத்த பார்க்கிறான்...'இவன் பார்வை வேறு சரி இல்லையே ஒருவேளை திருடனா இருப்பானோ?'என அவள் சந்தேகிக்கவும்,



அது சரிதான் என்பதுபோல் இருந்தது நிரஞ்சனின் செயல்கள் 'சுற்றும் முற்றும் பார்த்தவன் அங்கு சுவற்றில் ஒட்டி இருந்த வரட்டியை கண்டு யோசனை பெற்றவனாக அதன் அருகில் சென்று உற்று நோக்க'...



"வாட் இஸ் திஸ்? மாடு தரையில் தானே சாணி போட்டு பார்த்திருக்கிறேன். இங்கு என்னவென்றால் மாடு சுவற்றில் அழகழகாக வட்டமாக போட்டு வைத்திருக்கிறது" ஒருவேளை இங்குள்ள மாடுக்கு திறமை அதிகமோ? என தனக்குள்ளாகவே யோசித்தவன்



கையில் எடுத்துப் பார்க்கலாம் என் அருகில் கையை கொண்டு செல்ல... அவன் தனது வரட்டியை திருடப் போவதாக சந்தேகம் கொண்ட வெண்மதியும் அவன் அவ்வாறு செய்யவும்,



"ஐயோ! திருடன், திருடன் யாராச்சும் ஓடி வாங்க... இல்லையென்றால் என்னுடைய சொத்தை கொள்ளை அடிக்கப் போகிறான் வேகமாக வாருங்கள்"என்று வெண்மதி தன் தொண்டைத் தண்ணி வற்றும் அளவிற்கு கத்த,



அந்த வரட்டியை தொட்டுப் பார்க்கச் சென்ற நிரஞ்சனின் கைகள் அந்த இடத்திலேயே நின்றது. 'இத்தனை பேர் இருக்கும் இடத்தில் எப்படி திருடன் நுழைந்தான்? எவ்வளவு தைரியம் அவனுக்கு... அவனை சும்மா விடக்கூடாது? பிளடி ராஸ்கல் இருடா வரேன்' வெண்மதியை நோக்கி வேகமாக ஓடிவந்தான் நிரஞ்சன்.



வெண்மதி "எங்கே அந்த திருடன்? இன்று அவனை இரண்டில் ஒன்று பார்க்கிறேன். சுற்றி இவ்வளவு பேர் இருக்கும்பொழுது திருட வந்தால் அவனுக்கு எவ்வளவு தைரியம் வேண்டும். நீ எதற்கும் கவலைப்படாதே மா நான் பார்த்துக்கொள்கிறேன்"என வாய் அவளிடம் பேசிக் கொண்டிருந்தாலும், கண்கள் சுற்றியும் முற்றிலும் அந்த திருடனை தான் தேடி கொண்டிருந்தது.



அவளது சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் உள்ள எல்லோரும் உடன் பின்னாடி நின்ற வசந்தும், காலில் அடிப்பட்ட பாட்டி தனது காலை விசுக்கி விசுக்கி நடந்துகொண்டு வேகமாக வெண்மதியின் அருகில் சென்றவர் "ராசாத்தி... என்னடி ஆச்சு? ஏன் இப்படி கத்துற? உனக்கு எதுவும் ஆச்சா? அய்யய்யோ எவன்டா என் பேத்தி மீது கையை வைத்தவன். மகராசா... நீ நல்லா இருக்கணும். இந்த வாயாடியை மட்டும் இழுத்து விட்டு போயிடாத... இவள் திங்கிற தினீக்கு பேசுற பேச்சுக்கும் நீ உலகத்துல வாழும்போதே என் பேத்தி நரகத்தை காட்டு விடுவாள் ராசா"



'உனக்கு இந்த காட்டு சிறுக்கி வேண்டாம். இவளைக் கல்யாணம் பண்ணுவதற்கு என்று என் பேரன் வசந்த் அழைஞ்சுக்கிட்டு கிடக்கிறான்'. அவனே... இந்த வீணாப்போனவளை கல்யாணம் பண்ணிக்கட்டும். உனக்குன்னு என்ன மாதிரி ஒரு பொண்ணு கிடைக்காமலா போய்விடும் எனக்கு கூறவும், வெண்மதி ஒருபக்கம் கிழவி என்று கத்த, நிரஞ்சனோ திருடனை தேடி கொண்டிருந்தவன் பாட்டியின் செயலில் குழம்பிப்போக, வசந்தோ பாட்டியை கண்களில் கொலைவெறியுடன் பார்க்க, இவர்கள் கூத்தை பார்த்து சுற்றி இருந்த கூட்டம் கொல்லென சிரித்து விட்டனர்.



கிழவியின் செயலில் கடுப்பான வெண்மதி"ஏய் கிழவி... நீ என்ன பெரிய ரதினு உனக்கு மனசுக்குள்ள நினைப்பா? உன்ன மாதிரியே அவனுக்கு பொண்ணு கிடைக்கணுமா? என்ன கல்யாணம் கட்டிகிட்டா அவன் கஷ்டப்படனும் தான். உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் தாத்தா செத்துப்போனது மாதிரி அவனும் செத்துப் போக வேண்டியதுதான்".



''அதுவும் எப்படி? நீ பொண்ணு... உன் வாயில் வேப்பிலையை வைத்து தேய்க்க (எத்தனை காலத்துக்குத்தான் வசம்பு என்று சொல்வது) இன்னைக்கு சொல்றேன் எழுதி வச்சுக்கோ என் கையை பிடித்த அவனுக்கு என்னை மாதிரியே ஒரு ரதி கிடைப்பாள்... அதை கண்டு நீ லிட்டர் கணக்கில் அருகம்புல் ஜூஸ் குடிக்க வைக்கிறேன் கிழவி இது என் பாட்டி உன் மேல் சத்தியம்"என்று பாட்டியின் மீது சத்தியம் செய்யவும்,



''ஐயையோ! அநியாயமா என்மேல பொய் சத்தியம் பண்ணி என்னை கொல்ல பார்க்கிறாயே? பாவி... உன்னை வளர்த்த பாவத்துக்கு நான் பாதியிலேயே போய்ச் சேர வேண்டியதுதான்... இந்த மாதம் 24 ஆம் தேதி வந்தால் தான் எனக்கு வெறும் 75 வயது தான் ஆகிறது. உன்னால அநியாயமா? நான் போய் பாதியிலேயே சேரனுமா?" என்று கிழவி ஒப்பாரி வைக்க கடுப்பான வசந்த்


'பாட்டி... முதல்ல ரெண்டு பேரும் பேசுறத நிப்பாட்டுங்க? ஏய் வெண்மதி இப்ப எதுக்கு கத்தி கூப்பாடு போட்ட... ஊரே திரண்டு வந்து நிக்குது ரெண்டு பேரும் லூசு மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க?' எனத் திட்டவும்,



தங்களை லூசு என்று வசந்த் திட்டியதில் 'ஏய்'... என ஒரே நேரத்தில், பாட்டியும் பேத்தியும் குரல் கொடுக்க... இதுங்க ரெண்டும் உருப்படாது. என்னமோ பண்ணித் தொலையுங்கள்?இதுக்கு மேல நான் இங்க நின்னா எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துரும். என்று கூறிவிட்டு நகர பார்த்த வசந்தை கண்டதும் தான் வெண்மதிக்கு, நிரஞ்சனின் செயல்கள் அனைத்தும் ஞாபகம் வந்தது.


வசந்த் மாமா...'இங்கேயே நில்லு மாமா.. நான் சொல்ல வந்த விஷயத்தையே இந்தக் கிழவி பண்ணிய கூத்துல மறந்துட்டேன்'.



பின்னிருந்து கூறிய வெண்மதியின், பேச்சில் அவள் புறம் திரும்பிய வசந்த் 'இந்தக் கிழவி சொல்லுவது போல் யார் உன் கையை பிடித்து இழுத்தது? அவனை நான் வெட்டி பொழி போட்டுடறேன்?'என ஆவேசமாக கர்ஜிக்கவும், அவ்வளவு நேரமும் திருடனை தேடிக்கொண்டிருந்த நிரஞ்சன் இவர்கள் கூத்தில் திரும்பி பார்த்தவன் கடுப்பானான்.



வசந்த்...'ஒரு நிமிடம் வெண்மதி திருடன் திருடன் என்று தான் கத்தினாள். நானும் ஓடி வந்து அவனைத் தேட, நீங்க சொன்னது மாதிரி இவ லூசு மாதிரி சம்பந்தமே இல்லாம ஏதோ ஒன்னு பேசிக்கிட்டு இருக்கா'... என்று ரஞ்சன் கூறவும்,



வெகுண்டெழுந்த வெண்மதி"மாமா இவன்தான் திருடன் என்று சொல்லவும்", வசந்த் உட்பட நிரஞ்சனும் சுற்றி இருந்த அனைவரும் அதிர்ந்து போனார்கள்.


என்னது நானா... என்று வாயைப் பிளந்தபடி நின்றான் நிரஞ்சன்.அவ்வளவு நேரமும் அவர்கள் செய்யும் கூத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஊர் மக்கள் பார்க்க நல்லவன் போல் இருக்கும் நிரஞ்சனை குற்றம் சொல்லவும், கூட்டத்தில் இருந்த ஒரு பெண் வாயை திறந்தாள்.



"ஏய் வெண்மதி என்ன இது? பாக்குறதுக்கு பெரிய ஆள் மாதிரி இருக்காரு... அவரை போய் திருடன் என்று சொல்கிறாய்! சரி அப்படி அவர் என்ன திருடினார்?"வாயை திறந்து சொல்லு,



யாரு இவனா நல்லவன் இவன் என்ன செய்தான் தெரியுமா? கஷ்டப்பட்டு நான் காயவைத்த என்னோட வரட்டியை திருட பார்த்தான் என்று அவ்வளவு நேரமும், என்னமோ ஏதோ என்று பதறிகொண்டிருந்த அனைவரும் கொலைவெறி ஆனார்கள்.



ஆளாளுக்கு அவளைத் திட்டி விட்டு தங்களது வேலையை பார்க்க சென்று விட்டனர். கிழவியும் அவளை விட்டு வைக்கவில்லை. வசந்தோ அடி நல்லவளே என்று அவள் மீது பார்வையை செலுத்தியவன், நிரஞ்சனிடம் 'மன்னித்து விடுங்கள் ஏதோ தெரியாமல் செய்துவிட்டாள்'என்று கூறியபடி இடத்தை காலி செய்தான்.


அனைவரும் அந்த இடத்தை காலி செய்ய, "ஏய் இதெல்லாம் உனக்கே அநியாயமா தெரியலையா? அந்த வரட்டியை எடுத்துக் கொண்டு சென்று நான் என்ன செய்யப் போகிறேன்?" என ஆவேசமாக கேட்கவும்,


அப்புறம் எதுக்குய்யா அந்த வரட்டியை உற்று உற்றுப் பார்த்தாய் என கேள்வி கேட்கவும்,


அதுவா...என சுற்றி முற்றி பார்த்தவன் மாடு தரையில சாணி போட்டு பார்த்து இருக்கிறேன். இங்க மட்டும் சுவற்றில் அழகாக போட்டிருக்கிறது? அது எப்படி என்று ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தேன். உண்மையாலுமே திறமையான மாடு என பாராட்டவும்,


''அட நல்லவனே"... என்ற பார்வையை இப்போது வெண்மதி செலுத்தினாள். எல்லாம் ஒரு நொடிதான் அடுத்த நொடி ஹ ஹ என்று பெருங்குரலெடுத்து சிரிப்பவளை புரியாது பார்த்தான் நிரஞ்சன்.


அவனது பார்வையை புரிந்து கொண்டவள் அது மாடு போட்டது கிடையாது? அது நான் சுவற்றில் தட்டியது என்று வாயில் சொல்லியதோடு மட்டுமில்லாமல், அதை செய்து காண்பிக்கவும் அப்போதுதான் புரிந்துகொண்டான் நிரஞ்சன்.


ஹி ஹி என்று அசடு வழிந்தவாறு, சரி நான் கிளம்புறேன் என இடத்தை காலி செய்தான்.



செல்லும் அவனையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்த வெண்மதியின் மனதில் அழகான ஒரு உணர்வு தோன்றியது."அழகான ராட்சசன்" என்று மனதில் நினைத்துக் கொண்டவள் மென்மையாக புன்னகைத்தாள்.




அசுரன் ஆவான்....
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட்டி டீஸர்:


"ஏய்... வாய மூடிக்கிட்டு போ மதி... எனக்கு இருக்க கோபத்துல ஏதாச்சும் சொல்லிவடுவேன்"என்று மிரட்டிய நிரஞ்சனை கண்டு மற்ற பெண்கள் அழுது கொண்டிருப்பார்கள்.


ஆனால், இது யார் வெண்மதி அல்லவா? 'மாமா நான் செய்தது தவறுதான் ஒருமுறை மன்னிக்க மாட்டீர்களா' என்று இறுதி முறையாக கேட்க


"நீ செய்த காரியத்துக்கு உன்னை என்ன பண்ணினால் சரிவரும்"என்று மீண்டும் பழைய பல்லவியை பாட, சொல்வதைக் கேட்க மாட்டானா? என்று கடுப்பாகிய வெண்மதி,


"டேய் லூசு பயலே, உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்காடா? பச்ச புள்ள மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருக்கே நீ எல்லாம் கெஞ்சினால் மிஞ்சும் ரகம் உன் கிட்ட பேசுறது இனி வேலைக்கு ஆகாது ஒன்லி ஆக்சன் தான்"என்று கூறியபடி, தனது அசுரனை நெருங்கியவள் அவன் அதிர்ந்து பார்ப்பதையும் பொருட்படுத்தாது முதன்முதலாக அவனது இதழில் தனது இதழை ஆழமாகப் பதித்தால்.


அவள் தன்னை டா போட்டு பேசியதிலேயே அதிர்ந்தவன் அவள் இவ்வாறு செய்யவும், அதிர்ச்சியில் விழிகளை விரித்தவன்,


"மாமா..." என்ற வெண்மதியின் ஓசையில் தொலைந்தவன் மெதுவாக கண்களை திறந்து பார்க்கவும், பரட்டை தலையாக நின்ற மனைவியை கண்டு அதிர்ந்து போனான்.


அவன் அதிர்வுக்கு காரணம் என்னவாக இருக்கும்.... கரெக்டா யோசிச்சு சொல்லுங்க பார்ப்போம்.


எப்போதும் போல் கருத்து கூறுபவர்கள் உங்களது கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். புதியதாக படிப்பவர்கள் பகிர்ந்து கொள்க. உங்கள் கருத்துக்காக ஆவலுடன் காத்திருக்கும் சிறு குழந்தை நான்.
 
Last edited:

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4:


தனது பணிக்கு நேரம் ஆவதை உணர்ந்த நிரஞ்சன் அவர்களிடம் சொல்லி விட்டு செல்லலாம் என வீட்டிற்க்குள் சென்றவன் அங்கு இருந்த பாட்டியின் நிலைமையை கண்டு மயங்கி வில போனவனை அவ்வழியே வந்த வசந்த் அவன் இருந்த நிலைமையை கண்டு திடுக்கிட்டு விழாமல் வேகமாக வந்து பிடித்துக் கொண்டான்.


'டாக்டர்... உங்களுக்கு என்ன ஆச்சு?? ஏன் இப்படி திடீரென்று மயக்கம் போட்டு விழா பார்த்தீங்க? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நல்லா தானே அந்த வாயாடி மதி கிட்ட பேசிக்கிட்டு இருந்தீங்க!!' திடீர்னு உங்களுக்கு என்ன ஆச்சு? என்று வாய் அவனிடம் கேள்வி கேட்டாலும்,


மனதிற்குள்ளே, "என்னாச்சு இந்த மனுஷனுக்கு நம்ம கூட நல்லா தானே பேசிகிட்டு இருந்தாரு...!! அதுக்குள்ள இப்படி ஆகுற மாதிரி என்ன நடந்திருக்கும்??"என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொள்ள,


வசந்தின் கேள்வியில் சற்றே நிதானித்த நிரஞ்சன் "ஈஸ்வரா இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்க வேண்டுமோ?"என்று மனதிற்குள் அலறியபடியே வசந்திடம் வாயைத் திறந்து சொல்வதற்கு கூட, தெம்பு இல்லாது கண்களாலேயே சமிக்ஞை செய்தான். அவன் கண்ணசைவில் புரிந்துகொண்ட வசந்தும் அவன் காட்டிய திசையிலேயேதனது பார்வையை செலுத்தியவன் அன்று மீண்டும் ஒருமுறை கடுப்பின் உச்சத்திற்கே சென்றான்.



"கடவுளே...!! உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? அங்கே ஒரு லூசு சம்பந்தமே இல்லாம கிறுக்குத்தனமாக பண்ணிக்கிட்டு இருக்குதுன்னு பார்த்தா இந்தக் கிழவி அதுக்கு மேல இருக்கு...!!"என்று மனதிற்குள் அலறியபடி, அங்கு போட்டோவில் புன்னகைத்துக் கொண்டிருந்த தனது தாத்தாவிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தான்.


"யோவ்... மை டியர் தாத்தா கிழவா... இந்த கொடுமையெல்லாம் பார்க்க முடியாமல்தன் இந்த உலகத்தை விட்டே அல்பாயுசில் போயிட்டியா?"என்று ஆங்கு மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் இருந்த மனிதனைப் பார்த்து கேள்வி கேட்கவும், அவருக்கும் அவன் கேட்டது காதில் விழுந்திருக்குமோ? வேகமாக காற்று அடிக்க அந்த புகைப்படம் வலது புறமும், இடது புறமும் ஆடி அவர் கூற்றை ஒத்துக் கொண்டது.


"ஏய்... கிழவி இதுக்கு மேல உன் அராஜகத்தை என்னால் பொறுத்துக் கொள்ள இயலாது!!"என்று கத்தினான்.


'ஒரு தென்றல் புயலாகி வருதே...'என்ற பாட்டை மனதிற்குள் எண்ணியபடி பாட்டியை நோக்கிச் சென்றவன்,



'ஓய்... பாட்டி என்ன பண்ணிக்கிட்டு இருக்க..."என்ற வசந்தின் கேள்வியில் முகத்தை சுளித்தபடி ம்ம் கழுதையை குளிப்பாட்டி கிட்டு இருக்கிறது உனக்கு தெரியலையா...? கிண்டலடித்த படி பாட்டி கேட்கவும், இன்னும் ஆத்திரமடைந்தான் வசந்த்.


"ஏய்... கிழவி உனக்கு கொழுப்பு ரொம்ப கூடிப்போச்சு? இதெல்லாம் என்ன வேஷம் பொங்கலுக்கு வெள்ளை அடிச்சமாதிரி மூஞ்சி எல்லாம் இருக்கு... அங்கங்க கிழிந்து போனது மாதிரி பாவாடை சட்டை போட்டுகிட்டு திரியுற?? உனக்கு என்ன இளமை மீண்டும் வருதா??... கூறுகெட்ட கெழவி ஒழுங்கு மரியாதையா இந்த வேசத்தை எல்லாம் கலைத்து விட்டு புடவை கட்டிட்டு வா லூசு பாட்டி"என்று வசந்த் கூறியதும்,



அவன் தன்னை திட்டியதை கண்ட எல்லாம் கவலைப்படாத பாட்டி இறுதியாக அவன் கிழவி என்று கூறியதும், ஆவேசத்தில் பொங்கி எழுந்தது.



'ஏண்டா நார பயலே... என்ன பாத்தா என்ன உனக்கு கெழவி மாதிரி இருக்கா?? நான் என்ன மத்த பொண்ணுங்கள மாதிரி அவ்ளோ மேக்கப்பா பண்ணி இருக்கேன். ஏதோ... மூஞ்சியில கொஞ்சம் ஃபேரன் லவ்லி, பான்ஸ் கிரீம் போட்டு இருக்கேன். கொஞ்சமா கண்ணுல மை தீட்டி, உதட்டுல எனக்கு ரொம்ப பிடிச்ச ரோஸ் கலர் லிப்ஸ்டிக் போட்டிருக்கேன். அப்புறம் காதல இந்த காலத்தில் லேட்டஸ்ட் மாடல் ஜிமிக்கி கம்மல் போட்டு இருக்கேன். எல்லாத்துக்கும் மேல எனக்கு ரொம்ப புடிச்ச சைட் முடி எடுத்து பூரான் சடை பின்னி இருக்கேன். சின்ன வயசுல இருந்தே ரொம்ப ஆசைப்பட்ட காக்ரா சோளி போட்டிருக்கிறேன். கையில இங்க பாரு வளையல (நாடியில் ஆரம்பித்து முழங்கை வரை)இவ்வளவுதான் போட்டிருக்கிறேன். அப்புறம் இந்த காலத்து லேட்டஸ்ட் மாடல் ரெண்டு கையிலயும் வெறும் 10 மோதிரம் மட்டும் தான் போட்டு அப்புறம் கால் எனக்கு ரொம்ப பிடிச்ச தங்க கொலுசு போட்டு இருக்கேன். இதுல நீ என்னத்த குறையை கண்டுபிடிச்ச...நீ சொன்ன எல்லாத்தையும் கூட பொறுத்துக் கொண்டேன். ஆனால் கடைசியா என்ன பார்த்து என்ன சொன்ன கிழவினு சொன்னே!!"அதை மட்டும் பொறுத்துக் கொள்ளவே முடியாது.


"உன்ன நெனச்சா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... மைடியர் கிராண்ட் பேரன்..."


இவ்வளவு நேரமும், கிழவி கூறுவதையெல்லாம் வாயை பிளந்த படி கேட்டுக் கொண்டிருந்தவன் அவர் திடீரென வருத்தப்படவும், சற்றே குழம்பி போனான்.



"ஏய்... கிழவி இப்போ எதுக்கு நீ ரொம்ப வருத்தப்படுகிற அப்படி என்ன குடி முழுகிப் போச்சு"என்று கடுப்பில் கேட்கவும்,



"உச்... எனக்கு ரொம்ப வயசாயிடுச்சின்னு சொன்னீங்களே மைடியர் கிரண்ட் பேரன்... ஆனா உங்க கண்ணுல இப்போ பெரிய பிரச்சினை இருக்கும் நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை"... என்று பாட்டி எடுத்துக் கூறவும்,.





'அப்படி என்ன ஆயிற்று தனக்கு... அதுவும் இந்தக் கிழவி வருத்தப்படாத மாதிரி வேற சொல்லுது... ஒருவேளை நமக்கே தெரியாமல் நமக்கு ஏதோ ஆகியிருக்குமோ!!.. டிவியில வேற கொரெனா வைரசு அது இதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கானுஙக... ஒருவேளை நமக்கும் அது தாக்கி இருக்குமோ?? அதுதான் கிழவி சொல்வதோ"... ஐயோ எனக்கும் வைரஸ் வந்துருச்சா... என்று அலறிய வசந்த் அதற்குள்ளாகவே தனது கல்லறை கட்டி முடித்திருந்தான் அதிர்ச்சியில்.


அவ்வளவு நேரமும் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த நிரஞ்சன் மனதிற்குள்ளே"சரியான லூசு குடும்பமா இருக்கும் போலவே நாம தெரியாம வந்து மாட்டிகிட்டோம் போலவே? இப்ப இங்கே இருந்து எப்படி போறது"என்று மனதிற்குள்ளேயே யோசித்துக் கொண்டிருந்தவன் காதில் வசந்த் கூறிய வைரஸ் என்ற வார்த்தை காதில் விழவும், ஒரு நிமிடம் அதிர்ந்தவன் அடுத்த நிமிடமே டாக்டராக மாறினான். அங்கு நடந்த கூத்தை மறந்தபடி,



வசந்தை நெருங்கியவன் அவன் தோளில் கை வைக்கவும், அப்போதுதான் சற்று சுயநினைவு அடைந்தான் வசந்த். அங்கு நின்று கொண்டிருந்த நிரஞ்சனை கண்டதும் தான் போன உயிர் திரும்பி வந்தது போன்று இருந்தது.


'டாக்டர்.... நீங்கதான் என்னை எப்படியாச்சும் காப்பாத்த வேண்டும். அந்த வைரசு கிட்டே இருந்து என்ன காப்பாத்துங்க... இப்ப நான் என்ன பண்றது? கேள்வியை அவனிடம் கேட்டவன் நிரஞ்சன் பதில் சொல்வதற்கு முன்பாகவே அப்படின நான் இந்த உலகத்தில இனிமேல் வாழ முடியாதா... பாவம் என் நயன்தாரா அண்ட் தீபிகா படுகோன் ரெண்டு பேரும் நான் இல்லாமல் எப்படி வாழப் போகிறார்கள்... பாவம் என் இரு செல்லக்குட்டிகளும்" என்று லூசு மாதிரி உளறியவன் அடுத்த நிமிடமே ஆவேசம் வந்தவனாக, 'ஏய் வைரஸ் என்னையா நீ தாக்குற... இரு உன் மேல் பூச்சி மருந்து தெளித்து என்ன சாவடிக்கிறே' என்று சபதம் செய்தான் (வசந்த் ஒரு கிராமத்தான் என்பதால் அவன் வெறும் எட்டாவது மட்டுமே படித்துள்ளான். அதுவும் பெயில். ஆனால் மற்றவர்களிடம் பெரிய படிப்பாளி போன்று காட்டிக் கொள்வான்)


நிரஞ்சன் தான் சொல்ல வந்ததை கேட்காமல் அவன் பாட்டுக்கு உளறிக் கொண்டிருக்கவும், சரி அவனுக்கு உயிர் பயம் வந்துவிட்டது போல என்று கவலைப்பட்டால் அவன் கடைசியாக சொன்ன பெயர்களைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டான்.


இவனை இப்படியே விட்டால் இன்னும் என்னென்னமோ பேசுவான் என்று கடுப்பாகியவன் சுற்றுமுற்றும் பார்க்க எதுவும் கிடைக்காது போக, பக்கத்தில் நின்று கொண்டிருந்த கிழவியின் மேல் கிடந்த காக்ரா சோளியை பின்னிருந்து இழுத்தவன் வசந்த் வாயை அடைக்க போகவும், அந்தப் புடவையில் இருந்து வந்த நாற்றம் கண்டு மயங்கி விழுந்தான் வசந்த்.


அதைக்கண்டு இன்னும் அதிர்ச்சி அடைந்தான் நிரஞ்சன். வசந்த மயங்கி விழுவதை கண்ட பாட்டி "ஐயோ..." என்று அலறவும், பாட்டியின் குரல் கேட்டு வேகமாக ஓடி வந்தாள் வெண்மதி.



"ஐயோ பாட்டி உனக்கு என்ன ஆச்சு? என்ன விட்டு போயிட்டியா... இனிமேல் என்னை யாரு பார்த்துக்குவாங்க மனதிற்குள் அப்போதுதான் நினைவு வர, இவ்வளவு நாள் இந்த கிழவியை நான் தானே பார்த்துக் கொண்டோம் என்று நினைவு வர, பாட்டி போயிட்டியா..."என்று துள்ளலுடன் ஓடி வரவும், அங்கு பாட்டி குத்துக்கல் போன்று நிற்கவும் "புஷ்" என்றாகிப் போனது அவளுக்கு.



அதில் கடுப்பானவள் 'ஏய் கிழவி இப்ப எதுக்கு சத்தம் போட்டே' என்று திட்டவும், என்னை கற்பழிக்க பார்க்கிறான் இந்த பாவி என்றே நிரஞ்சனை கை காட்டவும், விக்கித்துப் போனான் நிரஞ்சன்.



என்ன சொல்ற பாட்டி.. ஐயோ நம்ம குடும்ப மானமே போச்சு... என்று அவள் பங்குக்கு அவள் ஒப்பாரி வைக்க, கடுப்பாகி போனவன்,நீங்க ரெண்டு பேரும் மட்டும் வாயை மூடவில்லை என்றால் ரெண்டு பேருக்கும் பேதி மாத்திரை கொடுத்து விடுவேன் என்று மிரட்டவும், கப்சிப்பென்று ஆகினர் பாட்டியும் பேத்தியும்.


சற்றே தொல்லை இல்லாதவன் மயங்கி விழுந்த வசந்தை தண்ணீர் தெளித்து எழுப்பியவன் அவன் மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பிப்பதற்கு முன் கொண்டவன்"மிஸ்டர் வசந்த் உங்களுக்கு எந்த நோயும் இல்லை அந்த வைரஸ் உங்கள் உடம்பில் பரவி இருந்தால் நீங்கள் இது போல் நின்று எல்லாம் பேசி கொண்டு இருக்க இயலாது" என்று கூறியவன் பின்புதான் மூச்சு விட்டான் வசந்த். அதன் பிறகு ஒரு மருத்துவராக அந்த வைரஸை பற்றி அங்குள்ளவர்களுக்கு எடுத்துக் கூறவும், அவர்களும் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக தலையை அசைத்ததும் பெருமூச்சுவிட்டான் நிரஞ்சன்.


அப்போதுதான் வசந்துக்கு கிழவி சொன்னது ஞாபகம் வரவும், "ஏய்... கிழவி ஏன் அப்படி சொன்னாய் என்று எகிறி கொண்டு வரவும்",


'டேய் கேன பயலே நான் எப்போ உனக்கு வைரஸ் வந்துச்சுன்னு சொன்னேன்.. உனது கண்ணு தெரியலனு சொல்ல வந்தேன்... அதுக்குள்ள நீயா முந்திகிட்ட அதற்கு நானா பொறுப்பு? என்றார் பாட்டி.



எனக்கு கண்ணு நல்லா தானே தெரியுது என்று அவன் கூறவும்,உனக்கு கண்ணு நல்லா தெரிந்து இருந்தால் இந்த பியூட்டிஃபுல் லேடியோ போய்க் கிழவி என்று சொல்லி இருப்பாயா? என்று எதிர்க் கேள்வி கேட்கவும், இதற்கு மேலும் இங்கிருந்தால் கொலை விழுவது கன்ஃபார்ம் என்றெண்ணிய வசந்த் கிழவியை முறைத்தபடி நிரஞ்சனிடம் மன்னிப்பு வேண்டினான்.


"இட்ஸ் ஓகே வசந்த்..."இதற்கு மேலும் தான் இங்கு நின்றால் லூசு ஆகி விடுவோம் என்று பயந்தவன் அனைவரிடமும் கூறியபடி விடைபெற்றான். தனது காரை நோக்கி சென்றவன் அப்போதுதான் கார் உடைந்ததும் ஞாபகம் வரவும்,அவர்களிடம் உதவி கேட்கலாம் என மீண்டும் வீட்டை நோக்கிச் சென்றவனின் காதில் வெண்மதி ஏய் கிழவி நீ என்ன இப்படி டிரஸ் பண்ணிக் கொண்டிருக்கிறாய் என்று திட்டவும், மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தார் பாட்டி. வசந்தும் அவன் பங்குக்கு திட்ட இதற்கு மேல் தான் அங்கு சென்றால்தன் கதி அதோ கதிதான் என்று எண்ணியவன் வந்த திசையை திரும்பிப் பார்க்காமல் காரை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். இதழ்களில் புன்னகை படர ...


ராட்சசி வருவாள்...


உங்கள் கருத்துக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சிறு குழந்தை நான் 😍😍😘😘🙏🙏
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5:


இவர்களின் தொல்லையில் இருந்து தப்பியவன் இன்னும் அந்த நிகழ்விலிருந்து விடுபடாமல் மண்டை காய்ந்து போய் தனது காரை இயக்கி கொண்டிருந்தான் நிரஞ்சன்.



"என்ன குடும்பம் டா சாமி இது... நல்ல வேலை எனக்கு இந்த மாதிரி ஒரு குடும்பம் இல்லை ஒருவேளை இது மாதிரி இருந்தா... ஈஸ்வரி உன் நிலைமை என்னாகும்..? பாவம் என்ன பெத்த தாய் அந்தப் பொண்ண சமாளிச்சா அடுத்து அந்த பாட்டி அந்தப் பாட்டியோட பேர் என்னவோ சொன்னாங்களே... "


"வில்லி பாட்டியா..??"சீ.. ஹாங் ஞாபகம் வந்திருச்சு வள்ளி பாட்டி.


பேத்தி அரை மெண்டல் என்று பார்த்தால் அந்தப் பாட்டி மெண்டலுகெல்லம் மெண்டலா இருக்கும் போல இருக்கே... இனி அவங்க இருக்கிற திசை பக்கம் தலையை கூட வச்சு படுக்கவே மாட்டேன் சாமி என வாய்விட்டு புலம்பியபடி சென்றவனை கண்டு விதி சிரித்தது.


மகனே... நீ எவ்வளவு தூரம் சென்றாலும், உன்னை நோக்கியே இந்தப் பாட்டியும் பேத்தியும் வருவார்கள் என்பது உன் விதி... யாருக்கும் அனுதாபக் படாத விதி கூட நிரஞ்சன் எதிர்கால நிலையைக் கண்டு ஒருநொடி பரிதாபப்பட்டு தான் போனது.


தனது மருத்துவமனைக்குள் நுழைந்தவன் எப்போதும் போல் "செய்யும் பணியே தெய்வம்" என்ற வாக்கிற்கேற்ப தனது பணியில் மட்டுமே கவனம் செலுத்தியவன் எப்போதும்போல் மாலை வீடு திரும்பினான்.



அவனது வருகைக்காக காத்திருந்த மகேஸ்வரி வாயிலில் மகனது கார் சத்தம் கேட்டவுடனேயே, அவனைப் பார்ப்பதற்காக ஆவலாக எழுந்து சென்றார்.



காரை நிறுத்தி விட்டு இறங்கிய நிரஞ்சன் எப்போதும் இல்லாது புதிதாக வந்து அதுவும் மகிழ்வுடன் நிற்கும் அன்னையைக் கண்டு குழம்பினான்.



"என்னம்மா..."என்ன விஷயம்? இன்னைக்கு பார்க்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க...



"எல்லாம் சந்தோஷமான விஷயம் தான் கண்ணா... இன்னைக்கு புதுசா ஒரு சமையல் உனக்காக வைத்து இருக்கேன் அது எப்படி இருக்குன்னு நீ சாப்பிட்டு பாத்துட்டு சொல்லு... உனக்காகத்தான் ரொம்ப நேரமா காத்துக் கொண்டிருக்கிறேன்". என்றதும், ஒரு நிமிடம் நிரஞ்சன் இதயம் நின்று துடித்தது.


"கடவுளே.... உனக்கு மனசாட்சி இருக்கா இல்லையா? காலையில் சாப்பிட்டது தான் அந்த கிராமத்துல அந்தப் பாட்டியும் பேத்தியும் அடித்த கூத்தில், மதிய சாப்பாட்டை மறந்து விட்டேன். வீட்டுக்கு வந்தாச்சு நல்ல சோறு திங்கலாம்னு பார்த்தா...நிரஞ்சா இன்னைக்கு உன் நேரம் சரியில்லை போலடா... என்ன பண்றது அனுபவிச்சு தானே ஆகணும்.. சரி மா நீங்க போய் சாப்பாட்டை எடுத்து வைங்க... நான் ரெப்ரெஷ் ஆகி விட்டு வருகிறேன்".



மாடிக்குச் சென்றவன் நினைவுகள் எல்லாம் சிறுவயதில் அவர் இதே போல் செய்து கொடுத்த சாப்பாட்டை நோக்கிச் சென்றது.


அப்போது நிரஞ்சனுக்கு எட்டு வயது இருக்கும். பள்ளியில் சென்று மீண்டும் வீடு திரும்பியவனை இப்போது அழைத்தது போன்று தான் பாசமாக "கண்ணா" அழைத்தார் மகேஸ்வரி.


"அம்மா..."என்று அழைப்பு உடன் ஓடி வந்து தாயைக் கட்டிக் கொண்டவன் 'அம்மா பசிக்குது'என்கவும், ஒரு தாயாய் தனது சேயின் பசியை புரிந்து கொண்டவர், போய் கைகால் கழுவிட்டு வா கண்ணா... உனக்கு அம்மா ஒரு வித்தியாசமான உணவை செய்து வைத்திருக்கிறேன்.


அம்மா தனக்கு சுவையான உணவைத் தயார் செய்து வைத்து உள்ளார்கள் போல "ஐ ஜாலி ஜாலி"என வேகமாக தயாராகி வந்தவன் முன்னிலையில் தட்டை வைத்து பரிமாற ஆரம்பித்தாள் மகேஸ்வரி.



கண்ணா... உனக்கு அம்மா டோக்லா செய்துள்ளேன். சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு...? என்றவாறு பரிமாறினார்.


தட்டில் உணவை வைத்ததும் நாராசமான எலியின் வாடை வந்தது. அந்த வாடையில், முகத்தை சுளித்தபடி மூக்கைப் பிடித்துக் கொண்டான் நிரஞ்சன்.


"என்னடா இது சாப்பிட போற நேரத்துல ஒரு கேவலமான வாடை"என அந்த வாடை எங்கிருந்து வருகிறது ஆராய்ந்து கொண்டிருந்தான். தட்டில் வைத்த உணவை இன்னும் மகன் உண்ணாமல் இருக்கவும், மகேஸ்வரி பதட்டம் ஆனார்.



"என்னாச்சு கண்ணா...? இன்னும் சாப்பிடாமல் இருக்கிறாய். வேகமாக சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லு".


"இல்லம்மா ஏதோ எலி செத்த வாடை வருகிறது"என்றதும் உஷார் ஆனார் மகேஸ்வரி.


அது ஒன்னும் இல்லை. உனக்கு அந்த மாதிரி தோன்றுவது போல நீ விட்டா இப்படியே பேசிக்கிடடே இருப்பே... இரு நானே உனக்கு ஊட்டி விடுகிறேன்.


எங்கே"வாயை திற..."என்றதும், அம்மா சொன்னதை சரி என ஏற்றுக் கொண்டவன் "ஆ.."என வாயை திறக்க வாடை தன் பக்கத்தில் நெருங்கி கொண்டிருப்பது போல தோன்றவும், அவர் கொண்டுவந்த உணவை வேகமாகத் தட்டி விட்டான்.



அதில் கோபமடைந்த மகேஸ்வரி ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உண்மையை உளறிக் கொட்டினார்.


"ஏண்டா... அது என்ன ரொம்ப வா வாட வருது. நான் போன வாரம் தான் செய்து பிரிட்ஜில் வைத்து இருந்தேன்.அது அப்படியே மறந்துட்டேன் இன்னைக்கு தான் என் கண்ணுல பட்டுச்சு, சரி இன்னைக்கு நாம எடுத்து சாப்பிடலாம் நினைச்சேன். எனக்கு நானே சமைத்து தால் என்னவோ? அந்த சாப்பாடு டேஸ்டே தெரியவில்லை. சரி நீ வந்து சாப்பிடுவாய் என்று உனக்காக வைத்திருந்தால் இப்படி பண்ணிவிட்டாய்..." என்று கூறிய வரை வெட்டவா? குத்தவா? என்ற ரீதியில் முறைத்தான் நிரஞ்சன்.


அவன் முறைக்கவும் தான் தான் அவசரப்பட்டு உளறி விட்டதை எண்ணி நாக்கை கடித்துக் கொண்டவர் அவனைப் பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தார்.


"நிரஞ்சன்.."என்ற மகேஸ்வரியின் குரலுக்கு பழையதை விட்டு வெளியில் வந்தான். "இன்னைக்கு என்ன பண்ணி வச்சிருக்காங்க கடவுளே நீதான் காப்பாத்தணும்"என கடவுளை துணைக்கு அழைத்தபடி கீழே இறங்கிச் சென்றான்.



கீழே இறங்கி வந்தவனை இந்தா இத சாப்பிடு ஏதோ ஒரு பாத்திரத்தை நீட்டவும், அவரை பய பார்வை பார்த்தான். அதில், மகேஸ்வரியும் அதற்கான அர்த்தத்தை புரிந்து கொண்டவர் கோபத்துடன்"இதை ஒன்றும் நான் செய்யவில்லை. இன்னைக்கு ஒரு கடைக்கு போயிட்டு திரும்பி வர வழியில என்னோட சொந்த கார பாட்டி(வள்ளி பாட்டி நிரஞ்சன் கிளம்பிய பிறகு நிகழ்ந்த கூத்து)ஒருத்தவங்கள பார்த்தேன் அவங்க தான் இதை கொடுத்தார்கள் என அவரை சந்தித்த கதையை கொசுவர்த்தி சுருளில் விட ஆரம்பித்தார்.


நிரஞ்சன் மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றதும், தொலைக்காட்சியை ஆன் செய்து சின்-சான் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென கரண்ட் போகவும் கடுப்பானார்.



கரண்டு 'வந்துடும் வந்துடும்' என எதிர்பார்க்க கரன்டு வராமல் போகவே"சே கொஞ்ச நேரம் சின்சான் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியலை"என எரிச்சல் ஆனவர் கடைக்கு போயிட்டு வருவோம் எனக் கிளம்பினார். (நிரஞ்சன் பாட்டி வீட்டிலிருந்து சென்ற பின்)



அங்கு பாட்டி வீட்டில், மூவரும் ஆளுக்கு ஒருவராக அடித்துக்கொண்டு அந்த சம்பவமே நடைபெறாதது போல்


"அடியே வெண்மதி இன்னைக்கு அல்வா செய்கிறேன் டி"என்றதும் பாட்டியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தவள் அல்வாவிற்காக காத்திருந்தாள்.



பாட்டியும் அல்வா செய்து முடித்திருந்தார். செய்து முடித்தவுடன், வசந்தையும் வெண்மதியையும் அழைத்தவர் அல்வாவை நடுவில் வைக்க நாக்கு ஊறியது இருவருக்கும்.


அல்வாவை இப்போதே வெட்டி தாருங்கள் இருவரும் கூப்பாடு போட, அவர்களின் ஆசையை புரிந்து கொண்டவர் அல்வாவை வெட்டப் போன கத்தி உடைந்து போனது. அதைக் கண்டு அதிர்ந்து போனார் இருவரும்.



கிழவியோ"ஹி ஹி கத்தி சரியில்ல என்று அருவாவ கொண்டுவந்துவெட்ட அருவாவும் உடைந்து போனது. அதைக் கண்டு அலறி அடித்தபடி இருவரும் வெளியே ஓடி விட்டார்கள். 'கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை...' என அவர்களை திட்டியபடியே, வெளியில் வந்து ஏதாவது இழிச்சவாய் மாட்டாமலா போகப்போகிறது என எண்ணிக் கொண்டிருந்த நேரம் சரியாக அவ்வழியாக வந்தார் மகேஸ்வரி.



மகேஸ்வரி வள்ளி பாட்டியின் தூரத்து சொந்தம். 'அடியே மகேஸ்வரி என அவரை அழைத்தவர் தன் சொந்த கதை சோக கதை எல்லாம் புலம்பியவாறு இறுதியில் அல்வாவை பார்சல் பண்ணினார்'.


உனக்கு ஒரு மகன் இருக்கிறான் ஆமே அவனுக்கு இதை கொண்டு போய் கொடு... என்றதும் அவரிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு சந்தோஷமாக விடை பெற்று வந்தார் மகேஸ்வரி.



இப்போது வீட்டில், மகேஸ்வரி தனது கதையை முடிக்கவும், அந்தப் பாத்திரத்தை திறந்து பார்த்தவன் அதிலிருந்த அல்வாவை கண்டு அதிர்ந்தவன் அவர் கண்ணு முன்னாடியே, அல்வாவை எடுத்துக்கொண்டு போய் நீண்ட நாளாக நான் உடைய மாட்டேன் என அடம் பிடித்த சுவரில் ஒருபக்கம் அல்வாவை வைத்து அடிக்கவும், தூள் தூளாக நொறுங்கிப் போனது அந்த சுவர். அதைப் பார்த்து அதிர்ந்து போனார் மகேஸ்வரி.



ராட்சசி வருவாள்...


Comment please.
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6:


"ஏன்மா.. நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன். இந்த மாதிரி எல்லாம் இனிமே செய்யாதீங்க, நீங்க செய்யறது சும்மா நச்சுனு..."எனக்கூற வந்தவன் நிறுத்தி அவர் முகத்தை பார்க்கபார்க்க


மகன் தன்னை பெருமையாக கூற போகிறான் என ஆர்வமுடன் அவன் முகத்தைப் பார்க்க ஓரக்கண்ணால் அவர் முகத்தை பார்த்தவன் "கேவலமாக இருக்கு இந்த மாதிரி எல்லாம் இனி ட்ரை பண்ணாதீங்க!"என்று கூறவும், புஸ்சென்று ஆகிப்போனது மகேஸ்வரிக்கு.


"போடா தடி பயலே... என்ன கிண்டல் பண்ணலாட்டி உனக்கு தூக்கமே வராது போ... இன்னைக்கு உனக்குசாப்பாடு கிடையாது போ"என்று கோபமாக கூறியவர் தனது அறைக்குள் நுழைந்து கொண்டார்.


அறைக்குள் நுழைந்தவர் 'பாவம் என் மகன்.. ரொம்ப களைப்பா வீட்டுக்கு வந்தான். இப்போ மட்டும் நான் போய் சாப்பாடு கொடுக்கவில்லை எனில் அப்படியே படுத்து விடுவான். என்னோட பிள்ளை என் கையால் சாப்பிடவில்லை எனில், அவன் எடுத்துவச்சு சாப்பிடவும் மாட்டான்... சரி போயிட்டு சாப்பாடு குடுத்திட்டு வந்துருவோம்". என பெரிய மனது பண்ணி சமையல் அறைக்குள் சென்றவர் அங்கு கண்ட காட்ச்சியில் உறைந்து போனார்.



நிரஞ்சனோ 'பொறுத்தது போதும்பொங்கி எழு.. இனி யாரும் எனக்கு சாப்பாடு போட வேண்டாம். நான் சட்டி ஓடவே எடுத்து வச்ச சாப்பிடுகிறேன். எங்கே அந்தச் சோத்து குண்டான். அந்த யாஸ்மின் (baby nithan) வர்றதுக்குள்ளசோத்த காலி பண்ணிடனும். அந்த புள்ள பக்கத்து வீட்டுக்கு வந்தாலும் வந்துச்சு 24 மணி நேரமும், இங்கேயே வந்து டேரா போடுது. முதல்ல அதுக்கு சாப்பாட்டுல பேதி மாத்திரை கலந்து விடனும் என்று பக்கத்து வீட்டுப் பெண்ணை திட்டிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவன் கையை கழுவிட்டு பெரிதாக ஏப்பம் விடவும்,


அங்கு வந்த மகேஸ்வரி "தனது மகனுக்கு பசியினால் தான் ஏப்பம் வருகிறதா?? என்றெண்ணி அவர் தனது தப்பை உணர்ந்து நிரஞ்சனிடம் மன்னிப்பு வேண்டினார்.


"சாரி கண்ணா... இனிமே அம்மா உன்னை பசியில் வாட விடமாட்டேன்" என்று கூறவும்,


ரஞ்சனோ 'இவர் என்ன சம்பந்தமே இல்லாமல் கூறுகிறார்'என மனதில் நினைத்துக் கொண்டவன் அப்போதுதான் அவர் தான் இன்னும் சாப்பிடவில்லை என்று எண்ணிக்கொண்டு அதைத்தான் சொல்கிறார் போல என அசையாமல் அங்கேயே நின்றான்.



சமையலறைக்குள் சென்று சாப்பாட்டை திறந்தவர், எல்லாம் காலியாக இருக்கவும் அதிர்ந்துபோய் நிரஞ்சனை பார்க்கவும்,


மனதிற்குள் "ஐயோ... இது என்ன சோதனை என அலறியவன் இந்த சாப்பாடெல்லாம் அந்த யாஸ்மின் தான் சாப்பிட்டு இருக்கும். பரவால்ல விடுங்கள் வளரும் குழந்தை தானே நான் சென்று படுத்துக் கொள்கிறேன் குட் நைட் மா". என தனது அறைக்குள் சென்று மறைந்து கொண்டவன் தப்பிச்சோம் டா சாமி... சாரி யாஸ்மின். குட் நைட் என மானசீகமாக மன்னிப்பு வேண்டினான்.



பாவம் என் மகன். அடியே யாஸ்மின் அடுத்த தடவை சாப்பாட்டுல கை வை அதுல ரெண்டு பேதி மாத்திரை கலந்து வைக்கிறேன் எடப் பக்கத்து வீட்டுப் பெண்ணை திட்டியவர் சென்று படுத்தார். (யாஸ்மின் பேபி ஜாக்கிரதை மா அம்மாவும் புள்ளையும் உன்னை போட்டு தள்ள பிளான் பண்ணுதுங்க).


அவரவர் அறைக்கு சென்றவர்கள்நிம்மதியான உறக்கத்தை அனுபவித்தவாறு ஆழ்ந்து போனார்கள்.


மறுநாள் பொழுது புலர, அங்கே பாட்டி வீட்டில் வந்து நின்றான் வசந்த்.


நான் சொல்லப்போற இந்த விஷயத்தை கேட்டால் பாட்டியும் மதியும், எப்படி தாங்கிக் கொள்ள போகிறார்களோ? வேற வழி சொல்லித்தானே ஆகணும் என தனக்குள் பேசிக் கொண்டிருந்தவனை ஆரம்பம் முதலே பாட்டியும் பேத்தியும் பார்த்துக் கொண்டிருந்தனர்.



"அடியே மதி.. இந்தப் பயலுக்கு கிறுக்கு பிடிச்சுருக்கா? தனக்கு தானே பேசுகிறான் என்னாச்சுன்னு தெரியலையே?"


"அது ஒண்ணுமில்ல பாட்டி... நேத்து நீ பண்ண அல்வாவை நெனச்சு பாராட்டு கிட்டு இருக்கும்"என சரியாக நோஸ் கட் பண்ணினாள்.


போடி கூறு கெட்டவளே.. நான் போயி அவன்கிட்டயே என்னன்னு கேட்கிறேன்...


"ஏய்... பேராண்டிஉனக்கு என்ன ஆச்சு? நீ பாட்டுக்கு ஏதோ பேசிக்கிட்டு நிக்கிற?"என பாட்டி கேட்டது தான் தாமதம்


"பாட்டி"எனக் கூவலோடு பாட்டியை அணைத்தவன் நான் இந்த ஊரை விட்டே போகப்போகிறேன் பாட்டி என்றதும், அது வரை அனைத்தையும் கேட்டபடி நின்ற மதி கண்களில் கண்ணீருடன் அவன் முன்னே வந்து நின்றவள் "மாமா"நிஜமாலுமே நீ எங்களை விட்டுப் போகப் போறியா? என்றதும் தன் அத்தை மகளுக்கு தன் மேல் எவ்வளவு பாசம் என கர்வம் கொண்டான். ஆனால் அது பிடிக்காதவள் நொடியில் அவனை டே மேட்ச் ஆக்கினாள்.



"மதி... அடியே மதிப்புள்ள... சொல்லு மாமா? என் மேல உனக்கு அவ்வளவு பாசமா? இல்ல மாமா.. பின்னே எதுக்கு இவ்வளவு பாசமா கேட்ட?"வேற எதுக்கு மாமா


நீ என்ன விட்டுப் போயிட்டா எனக்கு தலை அரிக்கும் போது யார் பெண் பார்த்து விடு வா? என் துணிமணி எல்லாம் யார் துவச்சு போடுவாங்க? வகைவகையா யார் எனக்கு ஆக்கி போடுவாங்க? அந்தப் பாத்திரத்தை எல்லாம் யார் இனி கழுவுவார்கள்... இது எல்லாம் நெனச்சா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா... என்றதும் அவளை முறைத்தான் வசந்த்.


அவனது முறைப்பை பொருட்படுத்தாதவள் "நம்ப சிம்ரன்உன்னை ரொம்ப மிஸ் பண்ணுமே மாமா, அங்க பாரு திரிஷாநீ போறதுன்னு சொன்னவுடனேயே உன்னையே பார்த்துக் கிட்டு இருக்கு... என அவள் கையை நீட்டிய திசையில் நின்று கொண்டிருந்தது அவள் வீட்டு நாய்க்குட்டி. சிம்ரன் அவள் வீட்டு பன்னிக்குட்டி."இதுக்கெல்லாம் இனிமே யார் மாமா சுத்தம் பண்ணி குளிப்பாட்டுவார்கள்? என ஒப்பாரி வைக்க,


"இவ கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன் என்ன சொல்லணும் என தன்னைத்தானே திட்டிக் கொண்டான் வசந்த்".


"ஏன்டா? வசந்த் நீ அப்படி எங்க போயி வேல பாக்க போறே?" என பாட்டி கேட்டதும்,


பெருமையாக நான் அமெரிக்கா போகப் போகிறேன் என்றான் வசந்த். ஆமா எட்டாவது நீ நாலு வருஷம் படிச்ச அதுலயும் பெயில். உனக்கு யாருடா? வேலை கொடுத்தது.



"ஏய்... கிழவி நான் ஒன்னு பெயில் ஆகவில்லை. அந்த வாத்தியார் தான் எனக்கு மார்க் போட வில்லை"என கூறவும் ஏன் எனக் கேட்டார் பாட்டி.



எல்லாத்துக்கும் காரணம் நீ எங்க அம்மா அப்புறம் இந்த மதி புள்ள தான்.


"டேய் நீ பெயில் ஆகிட்டு எங்களை சொல்றியா?" என ஆவேசமானார் பாட்டி.



உண்மையைத்தான் சொல்றேன் கேளு. நான் எட்டாவது படிக்கும் போது அந்த வாத்தியார் என்கிட்ட நாலு கேள்வி கேட்டாரு. அதுக்கு பதில நா உங்க நாலு பேர் கிட்ட கேட்டேன். நீங்கள் தான் பதில் சொன்னீர்கள்...


"அப்படி என்னடா அந்த ஆளு உன் கிட்ட கேட்டாரு?"என்றார் பாட்டி.



வேற என்ன நம்ம நாட்டின் கலை அம்சம் எதுனு கேட்டாரு? அதுக்கு எங்க அம்மா சொன்ன பதில் போடா சொட்ட ன்னு சொல்லிச்சு. இததான் நான் அந்த ஆளு கிட்ட சொன்னேன்.


அடுத்து இரண்டாவது கேள்வி அவரை திட்டவும், தலைமையாசிரியர் கிட்ட சொல்லவா? அப்படினு அவர் கேட்க அதுக்கு நீ சொன்ன பதில் அவன் என்ன பெரிய சொம்பையா?


அடுத்து மூன்றாவது கேள்வி இரு நான் போய் மேலதிகாரிகளிடம் சொல்றேன்... அதுக்கு இந்த மதி சொன்ன பதில் நீ ஒரு ஆணியும் புடுங்க முடியாது இது தான் சொன்னேன் அந்த ஆளு கடுப்பா ஆயிட்டாரு. அப்புறம் எங்க அம்மா அவரை எப்படியோ சமாதானப்படுத்திமறுபடியும் என்ன ஸ்கூலுக்கு அனுப்பிச்சு...


எட்டாவது முழு ஆண்டில்தமிழ்ல விடுமுறை விண்ணப்பம் கேட்டாங்க... நானும் எழுதினேன்..



"அப்படி என்னடா எழுதின..."


அதுவா... யோவ் சொட்ட உனக்கு வணக்கம் எல்லாம் சொல்ல முடியாது. நான் நாளைக்கு கரகாட்டம் பாக்க போறேன். அதுக்கு எனக்கு நீ லீவு தர வேண்டாம் நானே எடுத்துக்கிறேன். எனக்கு பதிலா நீ இந்தப் பரிட்சையில் எழுதிவிடு அப்படின்னு தான் சொன்னேன் அந்த ஆளு இதுக்குப் போயி என்னை பீர் ஆகிட்டார் பாட்டி.



"நீ சரியா தான் எல்லாத்துக்கும் பதில் சொல்லியிருக்க... அந்த ஆளுக்கு பதில் தெரியாமல் உன்ன பெயிலாகி விட்டார் போலடா.."



சரி அங்க போயிட்டு நல்லா காசு சம்பாதிச்சு வரும்போது பாட்டிக்கு லிப்ஸ்டிக், ஐ ப்ரோ, ஐ லைனர், பான்ஸ் கிரீம், சன் க்ரீம், அப்புறம் அந்த நீச்சல் உடை எல்லாத்தையும் மறக்காம வாங்கிட்டு வந்துரு...



ஏய் கிழவி எனக்கு எதுவும் கிடையாதா? மாமா நீ பத்திரமா போயிட்டு திரும்பி பத்திரமா வா கூடவே ஒரு நல்ல மாடா பார்த்து வாங்கிட்டு வா மாமா அது போதும் என்று கூறவும்,


அவர்களது பதிலில் திருதிருவென முடித்தவன் இனிமேல் இங்கு நின்றாள் அவ்வளவுதான் என வந்த திசை பார்க்காமல் வீட்டிற்கே ஓடிவிட்டான்.


ஒரு வாரத்திற்குப் பிறகு...


அனைத்து பார்மலிடி செய்யும் முடித்தவன் தனது தாய், தந்தை, பாட்டி, மதி எல்லோரும் பத்திரமாக இருங்க... என அனைவரையும் கண் கலங்க பார்த்தவன் விமானத்தில் சென்று அமர்ந்தான்.


அங்கு, அவன் புரோட்டா மாஸ்டராக தான் செல்கிறேன். யாரும் கவலைப் படாதீங்க...



ஆனால், அவன் திரும்பி வரும்பொழுது மதி இன்னொருவனின் மனைவியாக இருப்பாள் எனத் தெரிந்திருந்தால்செல்லாமல் இருந்திருப்பனோ??விதி வலியது.


அசுரன் ஆவான்...



comment please 😍

 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7:


இரண்டு வருடங்களுக்குப் பிறகு,


"டேய் நிரஞ்சா பத்திரிகை எல்லாம் எடுத்துட்டியா?? இப்போதிலிருந்து எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பித்தால்தான் சரியாக இருக்கும்".


கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. அதனுள்ளே எல்லா ஏற்பாடுகளையும் முடித்திருக்க வேண்டும். அதனால், சீக்கிரமா அனைவருக்கும் பத்திரிக்கை கொடுத்து முடிக்க வேண்டும் என்ற அன்னையை கோபத்துடன் பார்த்தான் நிரஞ்சன்.


அவன் பார்வையை புரிந்து கொண்டவர்,"நீ கேட்டது மாதிரியே உனக்கு இரண்டு வருடம் கால அவகாசம் கொடுத்துவிட்டேன். நீயும் உனது ஹாஸ்பிடல் கட்டி முடித்து விட்டு திறக்கும் தருவாயில் காத்திருக்கிறாய். எனக்கு உன்னுடைய ஆசைகள் புரிகிறது ரஞ்சன். ஆனால், நீ உன் மனைவியுடன் தான் அந்த ஆஸ்பத்திரியை திறக்க வேண்டும் என்பது என்னோட ஆசை. அம்மாவின் ஆசையை நிறைவேற்ற மாட்டாயா??"என்று கேட்ட அன்னையை பார்த்தவன் பெருமூச்சு விட்டவாறே,


அதுதான் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து இப்போது திருமணம் வரை கொண்டு வந்து விட்டீர்களே "இனி என்ன பேசி என்ன ஆகப் போகிறது!!"


ஆனாலும் மனதிற்குள், இந்த அம்மாவிற்கு ஏன் தான் இவ்வளவு அவசரமோ? என திட்டிக் கொண்டான்.


அவனுக்கு தெரியவில்லை. இது ஆண் குழந்தை பெற்ற ஒவ்வொரு தாயின் ஆசை என்பதும்,


ஆம். இந்த இரண்டு வருடத்தில், தனது கனவு படி ஆஸ்பத்திரியை கட்டி முடித்திருந்தான். அதில் அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே நிரஞ்சனின் கனவு.



ஆஸ்பிட்டல் கட்டி முடித்த செய்தியை தாயிடம் பகிர்ந்தவன் அதை நீங்கள்தான் திறந்து வைக்க வேண்டும் என்று கூற முற்றிலுமாக மறுத்தார் மகேஸ்வரி. "கண்டிப்பாக நீ திருமணம் செய்துகொண்ட பிறகு உன் மருத்துவமனையை திறக்க வேண்டும். இதை மீறினால், இனி உன்னுடன் பேச மாட்டேன்"எனவும், நிரஞ்சனுக்கு தூக்கிவாரிப்போட்டது.


வேறு வழியில்லாது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, மகேஸ்வரியும் தனது உறவுக்காரப் பெண்ணின் மகளை நிரஞ்சனுக்கு பேசி முடித்திருந்தார். ஆனால், பாவம் அந்தப் பெண் வேற ஒரு பையனை காதலிக்கிறாள் என்ற விடயம்.



தெரிந்திருந்தால், அந்த திருமணத்தையே நிறுத்தி இருப்பார். ஒருவேளை அப்படி செய்தால் நான் எப்படி உன் மகனுக்கு அந்த வெண்மதியை திருமணம் செய்து வைப்பது என்று விதி தனது ஆட்டத்தை தொடங்கியது.


பத்திரிக்கை அனைவருக்கும் வைத்தவர், கிராமத்திலிருந்த வள்ளிபாட்டிற்கும் சென்று வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டவர் மகனை அழைத்துக்கொண்டு முதல் பத்திரிக்கை வைத்ததே அவருக்குத் தான்.


அவர்களை வரவேற்ற வள்ளி பாட்டிக்கு நிரஞ்சனுக்கு திருமணம் என்றதும் சந்தோஷமாக"நீ நன்றாக இரு ராசா"என்றவனை வாழ்த்தியவர் கல்யாணத்துக்கு வரோம் ஆத்தா என்றார்.


அப்போது தான் வெளியில் சென்றுவிட்டு மீண்டும் திரும்பிய வெண்மதி அங்கு இருந்த நிரஞ்சனை தான் முதலில் கண்டாள். அவரைக் கண்டதும் வாயெல்லாம் பல்லாக "யோவ் டாக்டரே.. எப்படி இருக்க"என நலம் விசாரிக்கவும், அவளைப் பார்த்து அதிர்ந்தான் ரஞ்சன்.


அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவனுக்கு இந்த இரண்டு வருடங்களில், அவளை முற்றாக மறந்து இருந்தான்.


இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்ததைவிட, இப்போது வயதுக்குரிய முதிர்ச்சியும், அவளது அழகும் அவனைத் பித்தாக்கியது. விட்டால் அவளை பார்வையாலேயே கபளீகரம் செய்பவன் போல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அப்போதுதான் நினைவு வந்தது வசந்தின் எண்ணம். உடனே தான் செய்யும் செயல் நினைவு வர, தன்னையே கடிந்து கொண்டான். அவன் நல்ல நேரம் அவனை யாரும் கவனிக்கவில்லை.



அவனது நல்ல நேரம், அவனிடம் கேள்வி கேட்டவள்அப்போதுதான் அருகில் அமர்ந்திருந்த மகேஸ்வரியை கண்டவள் "நீங்க நல்லா இருக்கீங்களா? ரொம்ப நாளா உங்க கிட்ட கேட்க வேண்டும் என்று நினைத்தேன். அன்னைக்கு நீங்க வாங்கிட்டு போனீங்களே அல்வா அது எப்படி இருந்தது?"என்றதும் இம்முறை அதிர்ந்தான் நிரஞ்சன்.


அப்படி என்றால் அது இவள் செய்தது தானா? நல்லவேளை நான் தப்பித்துக் கொண்டேன். பாவம் அந்த வசந்த் என நடந்ததை அறியாமல் அவனுக்காக பரிதாப்பபட்டான்.


அவள் அப்படி கேட்டதும், மகேஸ்வரியும் பாட்டியும் அதிர்ந்து போனவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஈ என இளித்து கொண்டார்கள்.


அவள் ஒரு கூறு கெட்டவள் அவளை விட்டு தள்ளு என்றார் பாட்டி. சரி பாட்டி கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துருங்க, நீயும் தான் வெண்மதி. ரெண்டு பேரும் வந்துருங்க, அப்புறம் அத்தை வெண்மதிக்கு எப்ப கல்யாணம் என்று கேட்கவும், இவள் மாமன் வெளி நாட்டிற்கு சென்றுள்ளான். அவன் திரும்பி வந்ததும் கல்யாணம் என்றதும் சரி என்றவர் "நாங்க போயிட்டு வரோம்"என்று விடை பெற்றவர் வாயிலை நோக்கிச் செல்ல, ரஞ்சனுக்கு எதையோ பறிகொடுத்த உணர்வு தாக்க அதைப்பற்றி மேலும் யோசித்தாள் ஆபத்து என்று எண்ணியவன் அவர்களைத் திரும்பியும் பாராது அன்னையுடன் சென்றான்.


அவர்கள் கேட்டதும் தான் பாட்டிக்கு வசந்த் இல்லை என்றால் என்ன? அவன்தான் இன்னும் சிறிது நாட்களில் திரும்பி வந்து விடுவானே? நாம போயிட்டு அவன் அம்மாகிட்ட தட்டை மட்டும் மாற்றி கொள்வோம் என்ற எண்ணத்துடன், பேத்தியை அழைத்துக் கொண்டு ஒரு தட்டில் பழம் பூ ஸ்வீட் என வாங்கிக் கொண்டவர் அவர்கள் வீடு நோக்கிச் சென்றார்.


அவ்வளவு பொருட்களையும் கண்ட வெண்மதி அவற்றைத் திங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால், பாட்டியின் முகத்தை பார்த்தவள் இப்போது ஏதாவது செய்தால் கிழவி கண்டிப்பாக கிட்டும் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள்.


நேரே வசந்தின் வீட்டிற்கு சென்றனர்."வேணி அடியே வேணி எங்கடி இருக்க?"என்று கத்தியவாறு உள்ளே நுழைந்தார்.


வசந்தின் தாய் வேணிக்கு எப்போதுமே பாட்டியையும் பேத்தியையும் பிடிக்காது.


தன் வீட்டுக்குள்ளேயே, இப்படி யார் சத்தம் போடுகிறார்கள் என்று எரிச்சலுடன் தனது பெருத்த உடலை சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தவர் அங்கு நின்றவர்களை கண்டு எரிச்சலான பாவத்தை அவர் முகமே காட்டியது.


ஆனால் வெள்ளந்தி பாட்டி "நம்ம வசந்த் என் பேத்திக்கும் தட்டை மாற்றிக்கொள்வோம் உன் மகன் வந்தவுடனேயே திருமணம் வைத்துக் கொள்ளலாம்"என்று கூறி முடித்தவர் தட்டில் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் எடுத்து அடுக்கி அவர் வேணி இடம் நீட்ட,


அவர்கள் வந்ததில் ஏற்கனவே கடுப்பில் இருந்தவர் தானாகவே அனைத்தையும் கூறி முடித்து இப்போது தட்டை அவரை நோக்கி நீட்ட, பளாரென அந்த தட்டை தட்டிவிட்டார்.


சிறிது நேரம் வரை சுழன்று தனது ஆட்டத்தை நிறுத்தியது தாம்பலம்."ஏய் கிழவி உனக்கு கொஞ்சமாச்சும் அறிவில்லை நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கே இந்த அனாதைக்கு என் மகனைக் கேட்கிறதா??"


என் மகனுக்கு யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று நான்தான் முடிவெடுப்பேன். மரியாதையா கழுத்தை பிடித்து தள்ளுவதற்கு முன்பாகவே ரெண்டு பேரும் வீட்டை விட்டு போங்கள் என அசிங்கபடுத்தினார்.



பாட்டியும் பேத்தியும் அதிர்ந்தவாறு, அந்த இடத்தை காலி செய்தனர். வீட்டுக்கு வந்தவர்கள் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு கண்ணீரில் மிதக்க ஆரம்பித்தனர்.


ஒரு வாரத்திற்குப் பிறகு,


அந்தத் திருமண மண்டபம் முழுவதும் ஆட்கள் கொலுவிருக்க வந்தவர்களை எல்லாம் புன்சிரிப்புடன் வரவேற்றார் மகேஸ்வரி. பாட்டியும் வெண்மதியும் திருமணத்திற்கு சந்தோஷமாகவே கிளம்பி வந்து இருந்தனர். வெண்மதி அரக்கு கலர் வைத்த பட்டுப்புடவை அணிந்து தோதான நகைகளுடன் வந்தவளை கண்டு மகேஸ்வரிக்கு அப்போதுதான் அவளைத் தனது மகனுக்குத் திருமணம் செய்து இருக்கக் கூடாதா? என்ற எண்ணம் வந்தது.


"ஐயோ என்னது இது?" என்று தலையை உலுக்கியவர் வாங்க வாங்க என அவர்களை சந்தோஷமாக வரவேற்றார்.


அவர்களை முன்பாக அமர வைத்தவர், அவர்களிடம் கூறிவிட்டு வந்திருக்கும் மற்றவர்களை கவனிக்கச் சென்றுவிட்டார்.


மனையில் அமர்ந்திருந்த நிரஞ்சன் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த வெண்மதியை கண்கொட்டாமல் பார்த்தவன் இந்தத் திருமணம் எப்படியாவது நின்று விடாதா? என்று பொல்லாத எண்ணம் தோன்ற, அவளை விடுத்து பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.


"பொன்னை அழைச்சுண்டு வாங்கோ?"என் ஐயரின் குரலுக்கு மணமகள் அறையில் பெண்ணை காணவில்லை என்ற செய்தியே கிடைத்தது. சிறிது நேரத்தில் மண்டபமே அல்லோலகல்லோலப் பட்டது.


பொன்னை அழைச்சுண்டு வாங்கோ!"என்ற ஐயரின் குரலுக்கு ஐயோ பெண்ணை காணவில்லை என்றதும் முகம் இறுகிப் போனது நிரஞ்சனுக்கு, உள்மனதில் (ஹப்பா! இப்பவாச்சும் இந்தத் திருமணம் நின்றது என்று உள்மனம் குத்தாட்டம் போட) வெளியில் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டான்.





அதைக் கேட்டு நிரஞ்சன் தாயார் பெரும் ரகளை கட்ட, நடப்பது எல்லாம் வேடிக்கை பார்த்த வள்ளி பாட்டிக்கு திடீரென அந்த யோசனை உதயமானது.


"அடியே ஈஸ்வரி என் பேத்தி பாக்குறதுக்கு ஐஸ்வர்யாராய் மாதிரி இருப்பா அவள் எல்லாம் உன் கண்ணுக்கு தெரியவில்லையா? என்று கேட்ட அந்தப் பாட்டி மகேஸ்வரியின் கண்களுக்கு தெய்வமாக தெரிந்தவர்,





எங்கே என் மருமகள். அவளை கூட்டிட்டு போய் திருமணத்திற்கு தயார் செய்யுங்கள், என மகேஷவரி கூறவும், நிரஞ்சன் இன் மனதில் கட்டிவைத்த கோட்டைகள் சரசரவென இடிந்து அவன் தலையிலேயே விழுந்தது. ஏனெனில், அவனைப் பொறுத்தவரை வெண்மதி வசந்தின் காதலி என்பதினாலேயே அவனது அதிர்வு.


வெண்மதி இதை முற்றிலும் மறுக்க, அவளது காலில் விழுந்தார் மகேஸ்வரி. அவர் தனது காலில் விழுந்து கிடப்பதைக் கண்டு அவரைத் தூக்கி விட்டவள் திருமணத்திற்கு சம்மதித்தாள்.





அவள் தனக்குள் சொந்தமானவை இல்லை என்ற எண்ணத்தில் தன் பக்கத்தில் அமர்ந்த பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காமல், கெட்டி மேளம் கெட்டி மேளம் என்ற ஐயரின் குரலுக்கு, தாலியை கட்டி முடித்தவன் அப்போதுதான் நிமிர்ந்து பெண்ணின் முகத்தை பார்க்க வேண்டுமென்றே "நீயா..." என வாய் விட்டு அலறி விட்டான்.





என்னோட அம்மாவ உன் காலில் விழ வைத்து விட்டாய் அல்லவா??.அடியே, உன்னை இன்னும் 20 நாள்ல உன்னை வீட்டை விட்டு துரத்து கிறேன் என சபதம் கட்டவும், அவனது மனைவியோ ஐயோ "அசுரனா..." என மனதில் அலறியபடி அடுத்தடுத்த சடங்குகளையும் மேற்கொண்டனர்.


சுற்றியிருந்த அனைவரும் அதிர்ச்சியாக பார்க்கும்போதே, பெண்ணுக்கு சொந்தம் இல்லையா? என்று கேட்கவும் பாட்டியும் பேத்தியும் விக்கித்துப் போன சமயம் நாங்க இருக்கோம் என்ற சத்தத்துடன் வந்தனர் கவிதா, கிரீனி, லட்சுமி, சம்யுக்தா, திவ்யா, யாஸ்மின், சரளா, ஜெயலட்சுமி அனைவரும்...





அடுத்த பதிவில் சந்திப்போம்... comment please 😍
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8:


திருமணம் நல்லபடியாக முடிந்தது கண்டு நிரஞ்சனுக்கு ஏற்கனவே கல்யாணம் செய்ய இருந்த பெண்ணின் தாய்க்கு இவ்வளவு பெரிய சம்பந்தம் நழுவிய தோடு, மகள் செய்த காரியம் எனக் கோபம் ஒழுங்கே தோன்ற தன்மகள் இடத்தில் வேறொரு பெண்ணுடன் நிரஞ்சன் அமர்ந்திருப்பதைக் கண்டு அந்தப் பெண்மணியின் உள்ளம் காந்தியது.


அதன் விளைவாகவே, அந்தப் பெண்மணி "இந்தப் பெண்ணுக்கு என்று சொந்தம் இல்லையா?"என்று கேள்வி கேட்கவும், பாட்டிக்கு அவர் கேள்வி மிகவும் பாதித்தது.


வெண்மதிக்கும் அவர் கேட்ட கேள்வியில் ஒரு வாரத்திற்கு முன்பு, வேணி கூறிய அனாதை என்ற வார்த்தை ஞாபகம் வர, மிகவும் மனமுடைந்து போனவளின் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.


சரியாக அவளது கண்ணீர், நிரஞ்சனின் கரங்களில் விழவும், மனைவியின் கண்ணீர் ரஞ்சனையும் காயப்படுத்தியது.


தன் மனைவியை அழவைத்த அந்தப் பெண்மணியின் மீது கோபம் ஊற்றெடுக்க, அவன் வாயைத் திறப்பதற்கு முன்பாகவே "நாங்கள் இருக்கிறோம்" என்று அதிரடியாக கூறிக்கொண்டு வந்தாள் பக்கத்து வீட்டுப் பெண யாஸ்மின்.


தனது அண்ணன் நிரஞ்சனின் திருமணத்திற்க்காக திருமணத்திக்கு தனது தோழிகளான கவிதா, கிரினி, திவ்யா, வசந்தி, ஜெயலட்சுமி உடன் வந்தவர்கள் அங்கு நடந்த கலவரத்தை அறிந்தவர்கள் உடனே "நாங்கள் இருக்கிறோம்"என்று வந்தனர்.


தக்க சமயத்தில் வந்த யாஸ்மினை கண்டு அவளுக்கு மனதிற்குள்ளேயே நன்றி சொன்னான் நிரஞ்சன்.


அதிரடியாக நுழைந்தவர்கள் பெண்ணுக்கு எதையும் யோசிக்காமல் தங்கள் கைகள் கழுத்தில் போட்டிருக்கும் நகைகளை கழட்டி மதிக்கு போட்டு அழகு படுத்தி பார்த்தனர்.


அடுத்ததாக வந்த சொந்தங்கள் அனைவரையும் பெண்வீட்டு சார்பாக விருந்து உபசரிப்பு தடபுடலாக நடக்க அங்கு நின்ற அந்தப் பெண்மணிக்கு வயிறு காந்த அங்கிருந்து சென்று விட்டாள்.


எதிர்பாராத திருமணமாக இருந்தாலும், அந்த தோழிகளும் மண்டபத்தையே ஒரு கலக்கு கலக்க திருமணமானவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றவர்கள் கலாய்த்துக் கொண்டே வந்தவர்கள்


வீட்டிற்கு வந்ததும், யாஸ்மின், கவிதா ஆகிய பெண்கள் நிரஞ்சனின் தங்கையாக மாறி ஆரத்தி எடுத்த பிறகு,


"தட்டில் ஆயிரம் ரூபாய் போடுங்கள்" என்றதும் அவர்களின் செயலால் சந்தோஷமாக இருந்தவனும் அவர்கள் கேட்ட பணத்தை சந்தோஷமாக கொடுத்தான்.


அதன்பிறகு பெண்ணை விளக்கேற்ற சொல்லி மகேஸ்வரி சொல்ல வெண்மதியும் இன் முகமாகவே விளக்கை ஏற்றியவள் "கடவுளே இந்த திருமணம் எதிர்பாராதவிதமாக நடந்திருந்தாலும் கூட இதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை எனக்கு தாருங்கள். பாவம் என் வசந்த் மாமா திரும்பி வரும்போது என்னை கல்யாணம் கட்டிக்கணும்னு சொன்னுச்சு... ஆனால் எல்லாமே கனவா போயிருச்சே... அவருக்கு ஒரு நல்ல பெண் மனைவியாக அமைய வேண்டும். சரியான நேரத்திற்கு இந்த அக்காக்களை அனுப்பி வைத்து என்னை சந்தோசம் ஆகிவிட்டாய். நன்றி கடவுளே இந்த சந்தோஷம் என்றென்றும் நிலைக்க வேண்டும்"என கடவுளை வேண்டியபடி வெளியில் வந்தாள்.


"தம்பதியருக்கு பாலும் பழமும் கொடுக்க வேண்டும் நான் போய் அதற்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று மகேஸ்வரி கூறியவாறு செல்ல,


ஒரு நிமிடம் அம்மா என தடுத்தாள் யாஸ்மின். "நாங்கள் அனைவரும் கிளம்புகிறோம்"என்றதும் பதறிப்போன மகேஸ்வரி.


"ஏன்மா... அதற்குள் என்ன அவசரம் இன்னும் சில நேரம் இருந்து விட்டு செல்லுங்கள்" என்று கூற,


இல்லை அம்மா வீட்டிற்குச் செல்ல வேண்டும் புறப்பட தயாரானவர்கள் தம்பதியருக்கு வாழ்த்து சொல்ல, தக்க சமயத்தில் உதவியோர்க்கு கைகளைக் கூப்பி தனது நன்றியைத் தெரிவித்தாள் வெண்மதி.


அவளின் செய்கையில் பதறிப்போன தோழி கூட்டம்"என்னது இது?"என்று திட்டியவர்கள் அவளை அணைத்து சந்தோஷமாக வாழவேண்டும். அதை நாங்கள் கண்ணாரக் கண்டு மகிழ வேண்டும் என்றதும் இன்முகமாகவே தலையசைத்தாள்.


அவ்வளவு நேரமும் நடப்பதைப் பார்த்த பாட்டி "உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது தாயி இந்த உதவியை நானும் என் பாட்டியும் கடைசி வரை மறக்க மாட்டோம்..."


அப்புறம் நீங்க எல்லோரும் ஒருநாள் வீட்டிற்கு வாருங்கள். என் கைகளால் சமைத்துப் போடுகிறேன் என்றதும்,


"அய்யய்யோ"என்றவாறு மனதில் அலறியவர்கள் "நாங்கள் போயிட்டு வரோம்" என விடை பெற்றோர்கள் மனதில் திரும்பவும் உங்கள் கண்ணில் படவே கூடாது. என்று கடவுளை வேண்டியபடி தங்களது வீட்டை நோக்கி பயணித்தனர்.


செல்லும் அவர்களையே புன்னகையுடன் பார்த்து இருந்தது மொத்த குடும்பமும், அதன் பிறகு மகேஸ்வரிக்கு பாலும் பழமும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நினைவு வர, "நீங்க ரெண்டு பேரும் போயிட்டு சோபாவுல உக்காருங்க நாங்க இதோ வருகிறோம்" என்று அவர்களுக்கு தனிமையை அளித்தபடி அங்கிருந்து நழுவி சென்றனர் பெரியோர்கள் இருவரும்.


அவர்கள் அங்கிருந்து செல்லவும், அவ்வளவு நேரமும் பொறுமையை பிடித்து வைத்திருந்தவள் "உஷ் அப்பாஇப்பவே கண்ண கட்டுதே"என முனகியவள் பக்கத்தில் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனுக்கு மனதில் ஒரு மெல்லிய உணர்வு தோன்றி மறைந்தது.


அவன் படித்த கல்லூரி காலங்களில் சரி, வேலையிலும் சரி நல்லபடியாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவனுக்கு மனைவிமேல் தோன்றியது காதல் என்ற விஷயம் அவதானிக்க இயலாது போனது.


"இது என்ன உணர்வும் என்று புரியவில்லை என்றால் கூட சந்தோஷமாக இருக்கு"என்று மனதிற்குள் கூறியவாறு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்கவும், கடுப்பானாள் அவனது மனைவி.


"யோவ் டாக்டரே... என்ன அப்படி பார்க்கிறாய்?"என்று திட்டவும், அப்போதும் அசையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.


ஒருவேளை இந்த டாக்டருக்கு இந்த கல்யாணத்தில் கிறுக்கு பிடிச்சுருக்கா? அய்யோ... அப்ப நான் இந்தக் லூசு கூட வாழ வேண்டுமா என்று தன்னை அறியாமல் பதறினாள்.


அவன் எதற்கும் அசையாமல் அப்படியே அமர்ந்திருக்க பக்கத்தில் இருந்த கட்டையைத் தூக்கி அவளது தலையில் அடித்தாள்.


அதில் உணர்வு வர பெற்றவன் "ஸ் ஆ... ராட்சசி ஏண்டி தலையில் அடிச்சே வலிக்குது"என்று திட்டவும், அதில் கடுப்பானவள் வாயை திறப்பதற்கு முன்பாகவே அங்கு வந்து சேர்ந்தார் மகேஸ்வரி.


மகன் மனைவியை முறைத்தவாறே தலையைத் தேய்த்துக் கொண்டு இருக்கவும், மகனை நோக்கி கேலிப் புன்னகை உதிர்த்தவர் "இப்போதிலிருந்தே இதற்கெல்லாம் தயாராகி கொள் மகனே"என்று மனதிற்குள் கூறியவர் வாயை திறந்து சொல்லவில்லை.


கொண்டுவந்த பழத்தை மகனிடம் நீட்ட, அதை பிடிங்கிய வெண்மதி "ரொம்ப பசிக்குது அத்தை"என்று சாப்பிடவும், அவளது "அத்தை" என்ற அழைப்பில் உச்சி குளிர்ந்து போனார் மகேஸ்வரி.


அவள் அப்படி செய்ததும், பாட்டி"உனக்கு இப்போ என்ன அவசரம்" என்று திட்டவும் மதியின் முகம் கூம்பி போனது.


மனைவியின் முகம் வாடியது கண்டு "நீங்க ஏன் என் மனைவியை திட்டுகிறீர்கள்? அவளுக்கு பசிக்கிறது எடுத்து சாப்பிடுகிறாள்" என்று பாட்டியை திட்ட மகேஸ்வரி வள்ளி பாட்டி இருவருக்கும் இந்த திடீர் திருமணத்தால், பிரிந்து விடுவார்களோ? என்று கலங்கியவர்களுக்கு நிரஞ்சனின் செய்கை சந்தோஷமாக இருந்தது.


அதில் மதியின் முகம் நிலவு போல மீண்டும் பிரகாசமாக, அவர் கைகளில் இருந்த பாலை வாங்கி குடித்தவள் அப்போதுதான் அவர் கூறிய சடங்கு நினைவு வரவும், பாதி பாலை கணவனிடம் நீட்டினாள்.


அதில் கணவனின் மனம் குளிர்ந்து போனது. அவள் நீட்டிய பாலை வாங்கி குடித்தவன் சிறுபிள்ளை போன்று நாக்கை சப்புக்கொட்டியவாறு குடித்தான்.


அப்போதுதான் அவளுக்கு வசந்தன் நினைவு வர "பாட்டி வசந்த் மாமா..."என்று ஆரம்பிக்க அவள் வாயை வேகமாக பொத்தினார்.


அனைத்தும் நல்ல விதமாக நடக்க, எங்கே பேத்தி கெடுத்து விடுவாளோ என்று அவள் வாயை அடுத்தவர், கண்களாலேயே எதுவும் பேச வேண்டாம் என்று சைகை செய்தார்.


அதை கேட்ட ரஞ்சனுக்கு தான் மனம் பாரமாக போனது போல ஒரு உணர்வு. அவள் கூறியதைக் கேட்டு, திகைத்துப் போனான்.


அவ்வளவு நேரம் இருந்த உணர்வுகள் அறுந்து போக, தனது அறைக்குள் நுழைந்தவன் வெளியில் வரவில்லை.


மகேஸ்வரியும் அப்படியே விட்டவர், மருமகளை மட்டும் சாந்தி முகூர்த்தத்திற்கு தயாராகி அறைக்கு அனுப்பி வைத்தார்.


திடீரென்று நடந்த திருமணத்தில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் திருமணம் செய்துகொண்ட வெண்மதியின் மீது அளவுக்கதிகமான பாசம் உண்டானது.


அவளை அணைத்து உச்சி முகர்ந்தவர் "கண்ணு... மாப்பிள்ளை மனசு கோணாமல் நல்லபடியா நடந்துக்கோ..."என்று கூறவும், ஏன் அவர் மனசு நான் பேசினால் கோனி போய்விடுமா? என்று சந்தேகம் கேட்டவள் சரி கிழவி என்றபடி கணவனின் அறை நோக்கி சென்றாள்.


என்ன ஒரு ஆச்சரியம் அவளுக்கு திருமணமாகி அடுத்தவர் வீட்டில் வேறொருவருடன் இருக்கிறோம் என்ற நினைவு சுத்தமும் இல்லாது போனது.


இதற்குக் காரணம் அவள் மனதில் அவளை அறியாமலே விழுந்த நிரஞ்சனின்காதல் விதை தான் என்பதை அறியாமல் போனது அவளது துரதிர்ஷ்டம்.


அறைக்குள் நுழைந்த நிரஞ்சனை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டாள் அவனது மனைவி. அதில் கோபம் வர பெற்றவன்,





"ஏய், ஒழுங்கு மரியாதையா போய் வெளியில படு,என கூறவும் நல்ல பிள்ளையாக பாய் தலையணையை கொண்டு வெளியில் போட்டவள், ரூமிற்குள் மீண்டும் வந்து குட்நைட் "அசுரா.." எனவும் என்னவென்று யோசிப்பதற்கு, முன்னதாகவே அவனை பிடித்து வெளியே தள்ளி கதவை சாத்தினாள்.


அதில் கோபத்தில் கதவில் கையை குத்தியவன் கைப் பொருள் சேர்ந்த சந்தோஷத்தில் உறங்கிப் போனோன்.


ராட்சசி வருவாள்...

இதற்கடுத்து தான் ஆட்டமே இருக்கிறது. யாரும் மிஸ் பண்ணாமல் தொடர்ந்து படிங்க...
 
Status
Not open for further replies.
Top