All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரா பவியின் "கள்ளியின் கள்வன் அவன்..!!" - கதை திரி

Status
Not open for further replies.

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்..😍😍

எல்லாரும் எப்படி இருக்கீங்க😍😍 ஹோப் யூ ஆல் குட்..!! என்னோட நான்காவது கதையான "கள்ளியின் கள்வன் அவன்..!!" மூலமா உங்களை எல்லாம் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷமா இருக்கு. 😍😍

ஜாலியான கதை தான். பட் கதையின் போக்குல அது எப்படி மாறும்னு தெரியாது..!! ஹி..ஹி.. நம்பி படிங்க😁😁 சந்தோஷமா போங்க😍 முதல் அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களை பகிருங்கள்😍😘

வித் லவ்..😍
தாரா பவி😘😘
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கள்ளியின் கள்வன் அவன்..!!

6f5ad0e10022c414e1b799d6566a6e14.jpg


அத்தியாயம் - 1

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்

நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்சஷ்டி கவசம் தனை அமர ரிடர்தீர
அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக


என்று அந்த வீட்டின் பூஜை அறையில் வெள்ளை புகையோடு சாம்பிராணி மணம் கமழ கந்த சஷ்டி கவசப் பாடல் ஒலித்துக்கொண்டிருக்க. தலையில் ஈரத்துண்டை கட்டியபடி கடவுளின் திருஉருவத்திற்கு தீபாராதனை காட்டிக்கொண்டிருந்தார் அவர் 'சீதாலஷ்மி' அவ்வீட்டின் இல்லத்தரசி.

சாந்தமான அவர் முகமோ கண்மூடி மனமுருகி கடவுளிடம் வேண்டுதலை வைத்துக்கொண்டிருக்கும் போது கூட அவரது இதழில் மென்மையான ஒரு புன்னகை அமர்ந்து இருக்க அதுவே சொன்னது இவரது தூய்மையான குணத்தை பற்றி.

அதிர்ந்து கூட பேசாதவர், தன் வீட்டாரின் மேல் கொள்ளை பிரியம் வைத்திருக்கிறார்.

பூஜை முடிந்ததும் கிருஷ்ணர் சிலையின் பாதம் அருகே இருந்த சந்தனத்தையும் குங்குமத்தையும் தன் மோதிர விரலால் எடுத்து நெற்றியில் பூசியவர். தீபாராதனை காட்டிய கற்பூர ஆரத்தி எடுத்துக்கொண்டு கணவன் இருக்கும் அறை நோக்கி சென்றார்.

அறையினுள்ளோ, காதில் தன் கைபேசியை வைத்துக்கொண்டு எதிர்புறம் யாரிடமோ தீவிரமாய் பேசியபடி கஷ்டபட்டு சட்டைக்கு மேல் உள்ள டையை மாட்டிக்கொண்டிருந்தார் விஷ்வநாத், இந்தியா முழுதும் தன் தொழிற்சாலைகளின் கிளைகளை பரப்பி தனித்துவமாய் நின்று அனைவராலும் பெரிதும் வியந்து பேசப்படும் 'எஸ். வி' குரூப்ஸ் ஆப் கம்பெனியின் சேர்மேன்.

கணவன் கஷ்டப்படுவதை பார்த்து விரைந்து அவர் அருகில் சென்ற சீதாலஷ்மி, கையில் வைத்திருந்த ஆரத்தியை தொட்டு வேகமாக அவர் முகத்தில் காட்டியவர் அதே வேகத்தில் அதில் இருந்த சந்தனத்தை எடுத்து அவர் நெற்றியில் சிறு கீற்றாய் பூசி விட போக வேண்டி அவரது உயரத்திற்கு ஏற்ப தன் காலை எக்க, மனைவிக்கு சிரமம் தர விரும்பாத விஷ்வநாத்தோ காதில் கைபேசியை வைத்து பேசியபடி சீதாவின் உயரத்திற்கு ஏற்ப குனிந்தார்.

அதை கண்டு இதழ் விரித்து சிரித்த சீதா, சந்தனத்தை அவர் நெற்றியில் பூசிவிட்டு ஆரத்தி தட்டை அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு பின் கணவன் புறம் திரும்பி தானே அந்த டையை அவர் கழுத்தில் கட்டத்தொடங்க அதில் எப்போதும் போல மனைவியின் மேல் காதல் பெருகியது விஷ்வநாத்திற்கு.

கைபேசியில் தன் உரையாடலை முடித்துக்கொண்டவர் அதை அணைத்து தன் பேண்ட் பேக்கெட்டில் போட்டுவிட்டு தன் அருகே மிக கவனமாய் தன் கழுத்தில் இருந்த டையை கட்டிக்கொண்டு இருக்கும் மனைவியின் இடையை சுற்றி தன் கைகளை படரவிட்டு அப்படியே அவரை தன்னோடு சேர்த்து அணைக்க..

அதில் பதறிய சீதா "என்னங்க..!! காலங்காத்தால என்ன பண்ணுறீங்க..?? பையன் எந்திச்சிருப்பான் இங்க வந்திட போறான் விடுங்க..!!" என்றவாறு அவர் கைகளில் நெளிய.

அதில் சிரித்த விஷ்வநாத் குனிந்த தன் மனைவியின் கன்னத்தில் அழுத்தமான முத்தம் கொடுத்து விட்டே அவரை விட்டார்.

அதில் அந்த வயதிலும் அழகாய் வெட்கப்பட்டார் சீதாலஷ்மி.

அதை ரசித்து பார்த்த விஷ்வநாத் கண்களில் காதல் வழிய "சீத்து மா..!!" என்றபடி மேலும் மனைவியை நோக்கி முன்னேற , இதற்கு மேல் இங்கிருந்தால் காலை வேலைகள் எதுவும் ஓடாது என்று உணர்ந்த சீதாலஷ்மி சட்டென்று டேபிள் மீதிருந்த ஆரத்தியை கையில் எடுத்து விட்டு "நீங்க ரெடியாகுங்க, நான் நம்ம பையனை போய் பார்த்திட்டு வரேன்..!!" என்று கூறியபடி வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

அன்றும் இன்றும் மாறாத வெட்கத்துடன் தன்னிடம் இருந்து ஓட்டமும் நடையுமாய் செல்லும் தன் மனைவியை கண்டு வாய் விட்டு நகைத்தார் விஷ்வநாத்..!!

அவரிடம் இருந்த தப்பி வந்த சீதாவோ கணவனை எண்ணி உதட்டில் உறைந்த புன்னகையுடன் மேல் தளம் செல்ல படிகளில் ஏறினார் மகனது அறைக்கு செல்ல.

First things first
I'mma say all the words inside my head
I'm fired up and tired of the way that things have been, oh ooh
The way that things have been, oh ooh

Second things second
Don't you tell me what you think that I could be
I'm the one at the sail, I'm the master of my sea, oh ooh
The master of my sea, oh ooh!

You made me a, you made me a believer, believer
Pain!
You break me down, you build me up, believer, believer
Pain!
Oh let the bullets fly, oh let them rain
My life, my love, my drive, it came from...
Pain!
You made me a, you made me a believer, believer

என்று ஆங்கிலத்தில் மட்டுமல்லாது உலகம் முழுதும் புகழ் பெற்ற 'பிலிவர்' என்னும் பாடல் அதிக சத்தத்துடன் அந்த அறையே அதிர ஒலித்துக்கொண்டிருக்க. காலேஜூற்கு செல்ல வேண்டி தயாராகியபடி அதன் கூடவே சேர்ந்து "பிலிவர்... பிலிவர்...!!" என்று அதற்கு ஈடாக கத்திக்கொண்டிருந்தான் அவன் ''ஷிவ்வர்த சர்வஜித் ..!!"

தினமும் ஜிம் செய்வதன் பலன் அவன் தசைகளில் தெரிய. பிட்டான சிக்ஸ் பேக் உடம்புக்காரனான அவனுக்கோ பெண் விசிறிகள் ஏராளம். அடத்தியான அவன் புருவமும் சிவந்த அவனது உதடுகளும் அவனது அழகை மேலும் மெருகேற்றியது என்றால் அடங்காத அடத்தியான சிகையோ அதை விட அதிகமாய் அவனுக்கு அழகை அள்ளிக்கொடுத்தது. ஆறு அடிக்கு சற்று அதிகம் உள்ள ஆண் அவனுக்கு புத்தி கூர்மை அதிகம். அதிலும் அவனது கூர்மையான கண்களை வைத்துக்கொண்டு எதிரியை ஒரு பார்வை பார்த்தாலே போதும் மறுபுறம் உள்ளவர் நடுங்குவது நிச்சயம்.

காலேஜில் படிப்பாளிகள் லிஸ்டில் டாப் ஸ்டூடெண்ட்டும் அவனே..!! அடிதடி என்று தினமும் ஏதேனும் பிரச்சனை செய்து அதிக சஸ்பென்ஷன் வாங்குவதும் அவனே..!!

இவனாய் தேவையின்றி சண்டைக்கு போகமாட்டான் ஆனால் வந்த சண்டையை சீக்கிரம் விடமாட்டான். தன்னிடமோ தன்னை சார்ந்தவரிடமோ வம்பு வளர்த்தவரின் உடம்பில் இவனால் ஏதேனும் ரத்தக்காயம் பட்டால் தான் இவனது மனம் திருப்தி அடையும். பிரபலமான கல்லூரியில் எம்.பி.ஏ கடைசி வருட மாணவன்.

பாடியபடி கண்ணாடியை பார்த்து தலைக்கு ஜெல் வைத்து மேல் நோக்கி தூக்கி விட்டுக்கொண்டிருந்தவனது அறை வாயிலை அடைந்த சீதாவோ அந்த சூழ்நிலையை பார்த்து பெரிதாய் ஒன்றும் அதிர்ந்து விடவில்லை தினமும் நடக்கும் அதே கூத்து தான் என்று எண்ணி விட்டு மகனை அழைக்க, பாட்டு சத்தத்தை மீறி இவரது சத்தம் அவன் காதை எட்ட வில்லை.

அழைத்து அழைத்து பார்த்தவர் கடைசியில் 'இது வேலைக்கு ஆகாது..!!' என்று எண்ணிவிட்டு அந்த பாட்டை நிறுத்த. பாட்டு நின்றதில் 'பிலீவர்... பிலீவர்..!!' என்று சோலோவாக பாடியபடி இல்லை இல்லை கத்தியபடி புருவம் சுருங்க திரும்பினான் சர்வா.

தனக்கு பின்னே நின்றிருந்த தாயை கண்டதும் மென்மையுற்ற முகத்துடன் " வாட் மாம்..??" என்று சின்ன புன்னகையுடன் வினவ.

அவனை செல்லமாக முறைத்த சீதா "ஏன்டா சர்வா, உன் கிட்ட எத்தனை வாட்டி சொல்லுறது பாட்டை சத்தமா வச்சு கேக்காதன்னு, பாரு கொஞ்ச நேரத்தில என் காதெல்லாம் அடச்சிட்ட மாதிரி ஆகிடிச்சு..!!" என்று குறை கூற.

அவனோ அதே மென் புன்னகையுடன் "ம்மா..!! இந்த பாட்டை சவுண்டா வச்சு கேட்டா தான் மா நல்லா இருக்கும்..!!" என்று சொல்ல.

"பொல்லாத பாட்டு..!!" என்று கடுப்புடன் சற்று சத்தமாக முணுமுணுத்த சீதா கையில் வைத்து இருந்த ஆரத்தி தட்டுடன் அவனை நெருங்க அன்னை செய்ய போகும் செயலை யூகித்த அவனோ "நோ மாம் சந்தனம் எல்லாம் வச்சா பார்க்க பழம் போல இருக்கும்..!!" என்றவாறு சட்டென்று தலையை பின்னே சாய்க்க.

விடுவாரா சீதா, "காட்டு சர்வா, விளையாடாத டா எனக்கு வேலை இருக்கு..!!" என்றபடி பின்னே தலையை சரித்தவனின் சட்டையை பிடித்து தன்னை நோக்கி அவர் இழுக்க அதில் வேறு வழியில்லாமல் அவர் முன் குனிந்தான் சர்வா. அவன் நெற்றியில் அவர் சந்தனத்தை பூசிமுடித்ததும் வேகமாக திரும்பி அவன் கண்ணாடியை பார்க்க அவனுக்கோ சந்தனத்தோடு இருந்த அவன் முகம் ஏனோ பிடிக்கவில்லை.

"பார்க்க பழம் போல இருக்கேன்..!!" என்று பல்லை கடித்தபடி கோபமாக அவன் முனங்க அதை காதிலேயே வாங்காத சீதா "சீக்கிரம் கீழே வா டா, நான் உனக்கு டிபன் எடுத்து வைக்குறேன். காலேஜூக்கு டைம் ஆச்சு பாரு..!!" என்று கூறிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறி விட்டார்.

அதில் இனி ஒன்றும் செய்யமுடியாது என்று உணர்ந்த சர்வா கடுப்புடன் காலேஜ் பேக்கை தேட ஆரம்பித்தான்.
அவன் நினைத்திருந்தால் ஒரு நொடியில் அதை அழித்திருக்க முடியும் ஆனால் தன் அன்னையில் மீது அதிக அன்பு கொண்டவனால் அக்காரியத்தை செய்ய துளியும் மனம் வரவில்லை.

சிறிது நேரத்தில் காலேஜ் பேக்கை மாட்டியபடி கீழே வந்தவனை டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டிருந்த விஷ்வநாத் அழைக்க.

அதில் அவர் அருகில் சென்று அமர்ந்தவனிடம் "எப்படி போகுது காலேஜ் எல்லாம்...??" என்று விசாரிக்க. "நல்லா போகுது ப்பா..!!" என்று பவ்வியமாய் பதில் அளித்தான் சர்வா..

அதில் அவனை அழுத்தமாக பார்த்த விஷ்வநாத் "என்ன நல்லா போகுது..?? நேத்து உன் ஜூனியர் பையன் ஒருத்தன் மண்டையை பேட்டால அடிச்சு உடைச்சிருக்க. இதுக்கு பேர் தான் நல்லா போகுறதா..??" என்று சூடாய் அவர் கேட்க.

"ப்பா..!!" என்று ஏதோ கூறவந்தவனின் பேச்சை கைநீட்டி தடுத்தவர் "நீ சொல்லுற வெட்டி ரீசனை எல்லாம் கேட்க எனக்கு டைம் இல்லை. ஜி.ஹெச் ஹாஸ்பிட்டல்ல அவனை அட்மிட் பண்ணியிருக்காங்க இன்னைக்கு காலேஜ் முடிஞ்சதும் போய் அவனை பாரு..!!" என்று கூறியவர் அவனது பதிலை எதிர்பாக்காமல் சீதா லஷ்மியிடம் திரும்பி "போய்ட்டு வரேன்..!!" என்று சொல்லிவிட்டு விருட்டென்று அந்த இடத்தை விட்டு அகல போகும் அவர் முதுகை முறைத்துப்பார்த்தான் சர்வா..


தந்தை போனதை உறுதி செய்தவன் கடுப்புடன் தாயின் புறம் திரும்பி "என்னவாம் அவருக்கு, சும்மா காலையிலேயே என் கிட்ட தையா தக்கனு குதிக்கிறாரு. முதல்ல காலேஜூல நடந்த விஷயம் புல்லா அவருக்கு தெரியுமா..??" என்று எரிச்சலுடன் கேட்வன் "நம்ம விக்கி கிட்ட அந்த பையன் தேவை இல்லாம வம்புக்கு போனான் மா, நான் சமாதானம் படுத்த தான் போனேன் என் பேச்சை கேட்காம துள்ளிகிட்டு போய் விக்கியை என் கண்ணு முன்னாடியே அடிச்சிட்டான். சும்மா விடுவனா நான், பக்கத்துல இருந்த பேட்டை எடுத்து போட்டேன் ஒரு போடு. பட் நான் அவன் கையில தான் குறி வச்சேன் அவன் அசைஞ்சதுல அந்த அடி அவன் தலைல பட்டிடுச்சு . அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது..!!" என்று அலட்சியமாய் அவன் சொல்ல.

அதில் அவனை அழுத்தமாக பார்த்த சீதா "நீ அந்த பையனை இன்னைக்கு மட்டும் இல்லை அவன் காயம் சரியாகுறது வர டெய்லி ஹாஸ்பிட்டல் போய் பார்த்திட்டு வா..!!" என்று சொல்ல.

அதில் அதிர்ந்தவன் "ம்மா.. வாட் இஸ் திஸ்..!! என்னால முடியாது...!" என்று மறுப்பு சொல்ல

"அப்போ இனி என் கிட்ட பேசுற வேலை வச்சுக்காத..!!" அமைதியாய் பதில் அளித்தார் சீதா. அவரது பதிலே 'நீ செய்யா விட்டால் இதான் நடக்கும்' என்று அவனுக்கு எடுத்து கூற..

தாயின் மௌனம் அவனுக்கு பிடிக்குமா என்ன..??

"சரி போறேன்..!!" என்று வேறு வழியில்லாமல் சம்மதித்தான் சர்வா.

"சும்மா கையைவீசிட்டு போகாத, நல்ல ஃபுரூட்ஸ்சா வாங்கிட்டு போ...!!" என்று மீண்டும் சீதா வலியுறுத்த.

"அந்த கிறுக்கனுக்கு அது ரொம்ப முக்கியம்..!!" என்று மெல்லமாய் முணுமுணுத்தான் சர்வா.

ஏனோ அவனுக்கும் இவனுக்கும் ஆகவே ஆகாது. காலேஜில் யு.ஜி பஸ்ட் இயர் ஸ்டூடெண்ட்டாய் இந்த வருடம் அவன் சேர்ந்திருக்க அவன் தந்தை ஒரு போலீஸ் கமிஷனர் என்ற எண்ணத்தில் சீனியரை சிறிதும் மதிக்காமல் நடப்பான் அவன்.

பார்த்த முதல் நாளே சர்வஜித்திற்கும் அவனுக்கும் முட்டிக்கொண்டது. அவனோ சீனியரான இவனை சிறிதும் மதிக்காமல் ' வாடா போடா ' என்று ஒருமையில் திட்ட. அதன் முதலே சண்டை தான் இருவருக்கும்.

அதுவும் இப்போது சர்வஜித்தின் நெருங்கிய தோழனான விக்கி என்னும் விக்னேஷை இவன் கண்முன்னே அவன் அடித்திருக்க பொறுக்க முடியவில்லை சர்வாவால். ஏற்கனவே அவன் மீது உள்ள கோபம் எல்லாம் சேர்ந்து வைத்து பேட்டால் அடித்து விட்டான் அவனை . ஆனால் உண்மையில் கையில் தான் அடிக்க போனான் சர்வஜித் அவன் நகர்ந்ததில் தான் அந்த அடி அவன் தலையில் பட்டு விட்டது. இது அவனுக்கும் தெரியும் ..!!

அவன் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்த போது பதறத்தான் செய்தான் சர்வா ஆனால் அந்த மாணவனோ அடி வாங்கிய பின்னும் ஆத்திரம் தீராமல் திட்ட "உனக்கு இது தேவை தான் டா.." என்று அலட்சியமாய் எண்ணிவிட்டு அந்த இடத்தில் இருந்து சென்று விட்டான் சர்வஜித்.

இப்போது அவனை சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே வேப்பங்காயாய் கசந்தது அவனுக்கு.

தாயை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது என்று நன்கு உணர்ந்தவன் வந்த கோபத்தில் கையில் வைத்திருந்த சில்வர் ஸ்பூனை ஓங்கி அந்த கண்ணாடி டேபிளில் குத்திவிட்டு அதே கோபத்துடன் அருகில் இருந்த பேக்கை வேகமாக எடுத்து தோளில் மாட்டிவிட்டு விருட்டென்று வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.

நல்ல வேளை அது விலையுயர்ந்த உடையாத கண்ணாடி டேபிள் என்பதனால் அவன் ஸ்பூனை வைத்து குத்தியதில் உடையவில்லை. ஆனால் பாவம் அந்த சில்வர் ஸ்பூன் தான் அவன் குத்திய வேகத்தில் வளைந்து விட்டது.

கிச்சனில் இருந்த சீதாவோ "டொப்..!!" என்று வெளியே சத்தம் கேட்டதில் அவசர அவசரமாய் வெளியே வந்து பார்க்க அதற்குள் அவன் வெளியேறியிருந்தான்.

அவனுக்கு வைத்த உணவு உண்ணப்படாமல் அப்படியே இருக்க அதற்கு அருகிலோ சற்று நேரத்துக்கு முன் அவனால் பாதிக்கபட்ட ஸ்பூன் பரிதாபமாய் வளைந்து கிடந்தது.

அதை கண்டு நடந்ததை நொடியில் உணர்ந்து கொண்டவர்.

"கடவுளே இவன் இருக்கானே...!! எப்ப பாரு மூக்கு மேல கோபத்தை வைச்சிட்டு சுத்த வேண்டியது. எப்ப தான் திருந்த போறானோ..?? அவனுக்கு கொஞ்சம் பொறுமைய கொடு இறைவா..!!" என்று கவலையுடன் எண்ணி ஒரு வேண்டுதலை வைத்தவருக்கு நன்கு தெரியும் இவன் இப்போது நேரே போவது இவனால் அடிபட்டு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்க பட்டிருக்கும் அந்த பையனை பார்க்க தான் என்று.

என்ன தான் அதீத கோப பட்டாலும் அது என்றும் சீதாவிடம் செல்லாது அவர் பிடிக்காததை செய்ய சொன்னாலும் பல்லை கடித்துக்கொண்டு அதை செய்து முடிப்பானே தவிர அதை ஒரு நாளும் கேட்காமல் இருந்தது இல்லை .

இதை நினைத்தவர் மகனை எண்ணி ஒரு பெருமூச்சுடன் கிச்சனுக்குள் நுழைந்து கொண்டார்.

பெற்றோர் சொன்னது போல மாலை கல்லூரி முடித்தவுடன் அந்த மாணவனை சென்று பார்க்க அந்த மாணவனோ அப்போதும் முகத்தை திருப்ப அதில் கோபம் பெற்றவன் மீண்டும் அவனை அடிக்க பாய நல்ல வேளை அவனுடன் விக்கி வந்தான் "டேய் மச்சான் அவங்க அப்பன் கமிஷ்னர் ஆல்ரெடி உம்மேல காண்டுல இருக்கான் உன் அப்பாவுக்காக தான் உன் மேல எந்த கேசும் போடாம இருக்கான். தேவை இல்லாம கோபப்பட்டு நீயே போய் வாலன்ட்ரியா மாட்டிக்காத.." என்று சொல்லி அவனை வெளியே அழைத்து வந்து அடக்க பார்க்க.

அவனோ அடங்காமல் "அவங்க அப்பன் என்ன..? எவனாலையும் என்னை ஒண்ணும் செய்ய முடியாது..!!" என்று திமிராக பதில் அளித்தான் சர்வஜித்.

அதில் மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்ட விக்கி "மச்சான் டேய், 'வல்லவனுக்கு வல்லன் இவ்வையகத்துள் உண்டு...!!" அப்பிடினு ஒரு பழமொழி இருக்கு. அதுபோல உனக்கும் ஒருத்தன் இருப்பான் ..!!" என்று சொல்ல.

அதை கேட்டு வாய் விட்டு சிரித்த சர்வஜித் "சும்மா காமெடி பண்ணாத டா விக்கி, சரி வா வந்தது தான் வந்தோம் பக்கத்துல இருக்குற மால்ல சுத்தி பார்த்திட்டு போவோம்..!!" என்று கூறி அவன் தோளை சுற்றி தன் கையை போட்டு அழைத்துச்சென்று விட்டான்.

ஆனால் பாவம் அப்போது சர்வஜித்திற்கு தெரியவில்லை அதே நேரம் கன்னியாகுமரி எக்ஸ்பிரெஸில் இவனை தாக்கும் புயல் ஒன்று இவனை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என...!!


கள்ளி வருவாள்..!!
 
Last edited:

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 2

27179

"அமுதா லட்டு பண்ணி முடிச்சிட்டியா மா..??" என்று கேட்டுக்கொண்டே கிச்சனுக்குள் நுழைந்த சீதா அங்கு அனைத்து வேலைகளும் சரியாய் நடப்பதை பார்த்து திருப்தி புன்னகை சிந்த.

அவ்வீட்டில் வேலை செய்யும் அமுதா என்பவரோ சீதா லஷ்மி கேட்ட கேள்விக்கு "இதோ ஆச்சு மா, பூந்தி எல்லாம் ரெடி பண்ணிட்டேன் இனி நெய் ஊத்தி உருண்டை பிடிக்கிறது தான் பாக்கி..!!" என்று பதில் கூறியபடி பூந்திகள் அனைத்தையும் ஒரு தட்டில் மாற்ற.

அதை கேட்ட சீதாவோ தனது சேலை முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகியபடி "சரி அமுதா நான் உருண்டை பிடிக்கிறேன். நீ கொஞ்சம் கங்காவுக்கு உதவியா அவ கூட சேர்ந்து அந்த ரூமை எல்லாம் சுத்தம் பண்ணுறியா..?? பாவம் தனியா பண்ணுறா சீக்கிரமா வேற சுத்தம் பண்ணி முடிக்கணும்" என்று சொல்ல

"ஐயோ அம்மா ..!! செய்யின்னா செய்ய போறேன். அதுக்கு ஏன் கேட்டு கிட்டு இருக்கீங்க. இதோ பத்து நிமிஷத்துல கங்கா கூட சேர்ந்து அந்த அறைய எல்லாம் சுத்தம் பண்ணிடுறேன்..!!" என்று சொல்லியபடி வேகமாக அங்கிருந்த நகர்ந்து விட்டார்.

அதில் அவர் போன திசையை பார்த்து மென்மையாய் புன்னகைத்த சீதா பூந்தியை லட்டு போல பிடிக்க தொடங்கினார்.

லட்டு எல்லாம் பிடித்து முடித்ததும் அவசர அவசரமாய் நெய் மணக்க ஜவ்வரிசி போட்டு பால் பாயாசம் செய்தவர் கூடவே பால் கோவாவையும் கிண்டி முடித்து விட்டே அடுப்பை அணைத்தார்.

சமையல் வேலை முடிந்ததும் கைகழுவியவர் இடுப்பில் சொருகி இருந்த முந்தானையை உருவி கைகளை துடைத்தபடி வெளியில் வந்து "கங்கா..!! அமுதா..!! அந்த அறையை எல்லாம் சுத்தம் பண்ணீட்டீங்களா..??"என்று கேட்டபடி அந்த அறைகள் இருந்த இடத்தை அடைய.

"முடிச்சிட்டோம் ம்மா.!!" என்றபடி கடைசியாய் சுத்தம் செய்த அறையில் இருந்து வெளியேறினர் கங்காவும் அமுதாவும்.

அவர்களின் பதிலை கேட்டு எல்லா அறைகளையும் ஒருமுறை பார்த்த சீதா அது எல்லாம் சுத்தமாக இருப்பதை பார்த்து திருப்தி புன்னகை சிந்தியவர்.

"நல்லா அழகா சுத்தம் பண்ணியிருக்கீங்க இரண்டு பேரும்..!!" என்று முகம் மலர உடனடியாய் பாராட்ட குளிர்ந்து தான் போயினர் வேலை செய்த இருவரும்.

பின் மேலும் சில வேலைகளை அங்குள்ள மற்ற சில வேலையாட்களை வைத்து செய்த சீதா நேரத்தை பார்த்து அவசர அவசரமாய் அங்கும் இங்கும் ஓடியபடி தன்னால் முடிந்த வேலைகளை செய்ய.


அதே நேரம் காலை எப்போதும் போல காலேஜிற்கு செல்ல தயாராகி கீழே வந்த சர்வாவோ அங்கு நடந்து கொண்டிருந்தவற்றை பார்த்து புருவத்தை சுருக்கினான்.

என்றும் இல்லாத அளவு தடபுடலாக விருந்து சமைக்கப்பட்டு டைனிங் டேபிளின் மீது அடுக்கப்பட்டு இருக்க. அவனது தாயோ காலில் சக்கரத்தை கட்டியது போல அங்கும் இங்கும் ஓடிய படி வேலை செய்து கொண்டும் ஏவிக்கொண்டும் இருக்க.

அதில் நெற்றி சுருங்க அன்னை அருகில் சென்றவன்.

"ம்மா..!! வாட் இஸ் ஹேப்பனிங் ஹியர். எதுக்கு இவ்வளவு பெரிய விருந்து. யாராச்சும் கெஸ்ட் வராங்களா இல்லை எதாச்சும் ஸ்பெஷெல் டே வா இன்னைக்கு..??" என்று தன் சந்தேகத்தை கேட்க.

"அது பா சர்வா, நம்ம சித்.." என்று சொல்ல வந்தவரின் குரலை கிழித்துக்கொண்டு அதிக சத்தத்துடன் "அத்தை ம்மா..!!" என்ற குரல் கேட்க.

அதில் சர்வஜித்தை மறந்த சீதா "சித்தாரா குட்டி..!!" என்று மகிழ்ச்சியோடு கூவியபடி வாசலை கடந்து குட்டி மானாய் துள்ளி தன்னை நோக்கி ஓடி வந்த அந்த மங்கையை நோக்கி தன் வயதை மறந்து வேகமாக செல்ல.

அதற்குள் அவரை அடைந்த அந்த மங்கையான சித்தாரா அதே மகிழ்ச்சியுடன் அவரை இறுக்கமாக அணைத்தாள்.

பதிலுக்கு அவளை அணைத்த சீதா தன் வலது கையால் அவளது தலையை தடவ..

அதில் நெகிழ்ந்து போன அவள் அவர் கன்னத்தில் தன் முத்திரையை பரிசாய் பதித்து விட்டே விலகினாள்.

"எப்படி இருக்கீங்க அத்தைமா..??" என்ற சித்தாராவின் கேள்விக்கு "நல்லா இருக்கேன் டா மா, நீ எப்படி இருக்க சித்து குட்டி..??" என்று பதில் கேள்வி எழுப்ப.

"எனக்கென்ன லீவ்ல நல்லா மூக்கு முட்ட சாப்பிட்டும் தூங்கியும்னு ரொம்ப நல்லாவே இருக்கேன்..!!"என்று குறும்பாய் சொல்ல.

அதில் செல்லமாக அவள் தலையில் தட்டிய சீதா "எங்க என் அண்ணனும் அண்ணியும்..??" என்று கேட்க.

"அவங்க காரை பார்க் பண்ணிட்டு வரேன்னு சொன்னாங்க. நான் அதுக்குள்ள உள்ளே ஓடி வந்துட்டேன் ஹி..ஹி..!!" என்று லேசாய் அசடு வழிந்தபடி சொன்னவள்.

சீதா புறம் திரும்பி "எங்க என் மாமா..??"என்று கேள்வி எழுப்ப.

அச்சமயம் சரியாய் "சித்து கண்ணா..!!" என்றபடி அந்த இடத்தை அடைந்தார் விஷ்வநாத்.

அதில் அடுத்த நொடி அவரை நோக்கி துள்ளி குதித்து "மாமா..!!" என்று கூவியபடி ஓடியவள் அவரை சென்று அணைத்துக்கொள்ள பதிலுக்கு அணைத்த அவர் "எப்படி செல்லம் இருக்க..??" என்று கேள்வி எழுப்ப

"நான் நல்லா இருக்கேன் மாமா நீங்க..?" என்று மகிழ்ச்சியுடன் கேட்க.

"எனக்கென்னமா குறை அருமையா இருக்கேன்..!!" என்றிருந்தார் விஷ்வநாத்.

அச்சமயம் அவ்வீட்டில் நுழைந்த சித்தாராவின் தந்தையும் தாயுமாகிய விஷ்வநாத்தின் தங்கையும் தோழனுமாகிய சீதாவின் அண்ணணுமாகிய சந்திரா மற்றும் ஆனந்தை பார்த்து "வா மாப்பிள்ளை, வா மா சந்திரா..!!" என்று சந்தோஷமாக அழைக்க.

அவரது நெருங்கிய தோழன் தங்கையின் கணவன் மற்றும் மனைவியின் சகோதரனுமாகிய ஆனந்தோ "எப்படி மச்சான் இருக்க பிஸ்னெஸ் எல்லாம் எப்படி போகுது..??" என்று விஷ்வநாத்தின் தோளின் மீது கையை போட்டபடி கேட்க.

அங்கு சிறிது நேரம் நலம் விசாரிப்பு படலம் நடைபெற்றது.

நடப்பதை எல்லாம் ஒரு வித கடுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் சர்வா .

அதிலும் முக்கியமாய் அவனது பார்வை சித்தாராவை எரிக்க.

எதேர்ச்சியாய் அவன் புறம் பார்வையை திருப்பிய சித்தாராவோ அவனது எரிக்கும் பார்வையை தன் அலட்சிய பார்வையால் பார்த்து வைத்தாள்.

அதில் மேலும் உள்ளுக்குள் கோபம் பொங்கி எழ "திமிரு பிடிச்சவ..!!" என்று பல்லைக்கடித்தபடி வாய்க்குள் முனங்கியவனின் கைகளோ கோபத்தில் இறுக்கமாக மூடியிருந்தது.

அப்போது அவன் புறம் திரும்பிய ஆனந்தோ "சர்வா கண்ணா எப்படி பா இருக்க...??" என்று பாசமாக வினவ.

அதில் சட்டென்று கோபத்தில் இருந்து வெளிவந்தவன் "நல்லா இருக்கேன் மாமா நீங்க..??" என்று அவரை நலம் விசாரிக்க ஒரு வழியாய் நலம் விசாரிப்பு எல்லாம் முடிவுக்கு வந்தது.

அனைவருக்கும் பழச்சாறு எடுத்து வர வேண்டி சீதா கிச்சனுக்குள் நுழைய தோளில் மாட்டிய பேக்குடன் அவர் பின்னே சென்ற சர்வா "ம்மா.. ஏன் திடீர்னு நம்ம மாமா குடும்பம் ஊர்ல இருந்து நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க..??"என்று கேள்வி எழுப்ப.

அதற்கு சீதாவோ பழச்சாறை தயாரித்தபடி "நம்ம சித்தாரா பாப்பாக்கு நம்ம காலேஜ்ல தான் அட்மிஷன் போட்டிருக்கோம் அதான் உன் மாமா பிஸ்னெஸ்ச மொத்தமா ஊர்ல இருந்து இங்க மாத்திட்டாரு. நம்ம பக்கத்து வீட்டை கூட மாமா தான் வாங்கி இருக்காரு..!! நாளைக்கு பால் காய்ப்பு இன்னைக்கு அதான் இங்க ஸ்டே பண்ணுறாங்க. வர்ர மண்டேல இருந்து இனி தினமும் உன் கூட தான் பாப்பா காலேஜிக்கு வருவா டா சர்வா அவளை பத்திரமா பார்த்துக்கோ" என்று சொல்ல.

ஏதோ பெரிய பாராங்கல்லை தூக்கி தன் தலையில் போட்ட உணர்வு சர்வாவுக்கு "அந்த குட்டிச்சாத்தான் என் காலேஜிலையா...!!" நினைக்கையிலேயே அத்தனை கஷ்டமாய் இருந்தது. அதுவும் தாய் கடைசியில் சொன்ன "இனி உன் கூட தான் பாப்பா காலேஜிக்கு வருவா டா சர்வா அவளை பத்திரமா பார்த்துக்கோ" என்ற வார்த்தையை நினைக்கையிலேயே ஆத்திரமாய் வந்தது.

அதிலும் இதை எதுவும் இதுவரை நம்மிடம் யாரும் சொல்லவில்லையே என்ற கோபமும் சேர்ந்து எழ "இதை பத்தி ஒரு வார்த்தை முன்னமே ஏன் மா என் கிட்ட சொல்லல..??" என்று பல்லை கடித்தபடி அவன் கேட்க.

"ம்ச்..!! இப்ப உனக்கு என்ன டா பிரச்சனை, எனக்கே நேத்து தான் இந்த விஷயம் தெரியும் உன் அப்பா சர்பிரைஸா என் கிட்ட நேத்து தான் சொன்னாரு..!!" என்று சிறு புன்னகையுடன் சொல்ல.

"அவரோட சர்பிரைஸ்ல தீயை அள்ளி வைக்கணும்..!!" என்று கடுப்புடன் முணுமுணுத்தவன். பழச்சாறு அடங்கிய டிரேயை எடுத்துக்கொண்டு கிச்சனை விட்டு வெளியேறிய தாயை தொடர்ந்து வேறு வழியற்று அவனும் சென்றான்.

அங்கு ஹாலிலோ அச்சமயம் சித்தாராவை நோக்கிய விஷ்வநாத் "அப்புறம் சித்து மா 12th மார்க் வந்திச்சுன்னு கேள்வி பட்டேன், எவ்வளவு மா ஸ்கோர் பண்ணி இருக்க..??" என்று பேச்சு நடுவில் சாதாரணமாய் கேட்க.

அதுவரை பட்டாசாய் பட படவென பேசிக்கொண்டிருந்தவள் இந்த கேள்வியில் சட்டென்று மௌனமாகிவிட..

"படிச்சா தானே மேடம் மார்க் எடுப்பாங்க, அவங்க தான் படிக்கவே இல்லையே அப்புறம் எப்பிடி மார்க் எடுப்பாங்க. ஏதோ பேப்பர் கரெட் பண்ணவங்க பாவம்னு பார்த்து ஜஸ்ட் பாஸ் பண்ணி விட்டிருக்காங்க. இல்லாட்டி இந்த அம்மா இந்த வருஷம் திரும்பவும் 12th எழுதியிருப்பாங்க..!!" என்று நக்கலாக சொல்ல

சட்டென்று அங்கு ஒரு சங்கடமான நிலை உருவானது.

விஷ்வாநாத்தோ நிலமையை சரியாக்கும் பொருட்டு ஆனந்த் புறம் திரும்பி "மார்க்கை தூக்கி குப்பைல போடு டா, நம்ம சித்து குட்டிக்கு விஷயம் தெரிஞ்சா மட்டும் போதும். அந்த விஷயத்துல என் சித்து குட்டி வெரி டாலென்டெட் பெர்சன் டா..!!" என்று பெருமையாக சொல்ல.

அதை கேட்ட ஆனந்த்தோ சலிப்புடன் "நீ தான் அவளை மெச்சணும், ஒண்ணுத்துலையும் ஒரு உருத்து இல்ல. இதோ இப்ப கூட இவ எடுத்த மார்க்குக்கு ஒரு காலேஜூலையும் சீட் கிடைக்கல. உன் காலேஜிங்குறதால சீட் கெடச்சிச்சு. பெத்தா நம்ம சர்வஜித்தை போல ஒரு பிள்ளைய பெக்கணும் இவளும் தான் இருக்காளே..!!" என்றவர் சித்தாராவை நோக்கி ஒரு சூடான பார்வையை செலுத்த அதை உணர்ந்தாளோ என்னமோ அப்பாவி போல குனிந்த தலை நிமிராமல் அமர்ந்து கொண்டிருந்தாள்.

மனதிலோ பல்லை கடித்தபடி "மிஸ்டர் சொட்டை இன்னைக்கு என் இமேஜை ஓவரா டேமேஜ் பண்ணிட்டீங்க இல்ல. அதுவும் அந்த குரங்கு பயகூட என்னை கம்பேர் பண்ணி அவன் முன்னாடியே ஓவரா அசிங்கப்படுத்திட்டீங்கல, உங்களை கவனிச்சுக்குறேன்..!!" என்று மனதில் கருவியவள் வெளியில் அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு இருக்க.

அப்போது சரியாய் அங்கு வந்த இன்னொரு ஜீவனான சர்வாவோ இதை கேட்டு "நல்லா அசிங்கப்பட்டா..!! இவளுக்கு எல்லாம் இது போதாது இன்னும் நல்லா வேணும்..!!" என்று கண்களில் பழிவெறி மின்ன சித்தாராவை பார்த்தபடி மனதில் நினைக்க.

அப்போது விஷ்வநாத்தோ ஆனந்திடம் "நீ வேற ஆனந்த் , நான் பெத்து வச்சிருக்குறவன் நல்லா படிக்கிறான்னு மட்டும் தான் பேரு. ஆனா ஒழுக்கமுங்குறது சுத்தமா இல்லை. எதுக்கெடுத்தாலும் கோபம் தான். எப்ப பாரு காலேஜ்ல எவனையாவது அடிச்சிட்டு சஸ்பென்ஷன் வாங்கிட்டு ஊர் சுத்துறது..!!" என்று சர்வாவை பார்த்தபடி பொரிய

அதில் அவரை சூடாய் பார்த்த சர்வாவின் கண்களில் அவர் அருகில் இவனை நமட்டு சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த சித்தாரா தெரிய அதில் எழுந்த கோபத்தில் தன் தோளில் மாட்டியிருந்த பேக்கை கோபமாக ஒரு இழு இழுத்து தோளில் போட்டபடி வேகமாக அங்கு இருந்து வெளியேறி அதே வேகத்தில் தனது பைக்கை எடுத்து கொண்டு புறப்பட்டிருந்தான்.

அவனது கோபத்தை குடும்பமே அறிந்திருந்த காரணத்தால் கண்டு கொள்ளாமல் இருக்க.

ஆனந்த்தோ "ஏன் டா விஷ்வா அவனை எப்ப பாரு குறை சொல்லிட்டே இருக்க. இளவயசுல எல்லா பசங்களும் இப்படி தானே இருப்பாங்க. ஏன் நீயும் நானும் இருக்கலையா..??" என்று மனம்பொறுக்காமல் கேள்வி கேட்க.

"நாம இருந்தோம் தான் ஆனா இவன் அளவு இருக்கலை. காலேஜ்ல இவன் பேரு என்ன தெரியுமா "ரௌடி..!!" ஸ்டாப்ஸ் எல்லாம் அத்தனை கம்பிளைண்ட். அது நம்ம சொந்த காலேஜா இருக்குற தால சார் இன்னும் அந்த காலேஜ்ல இருக்காரு இல்லாட்டி என்னைக்கோ டி.சி தான்..."

"அடுத்த வருஷம் அந்த காலேஜை அவன் கிட்ட ஹாண்டோவர் பண்ணனும்னு இருக்கேன். ஆனா இவன் அதை பத்தி எல்லாம் கவலையே இல்லாம இப்படி திரியுறான். இவன் இப்படியே இருந்தா நாளைக்கு அந்த காலேஜை இவன் டேக் ஓவர் பண்ணும்போது எவன் மதிப்பான்..??" என்று கேள்வி எழுப்ப அதில் இருக்கும் உண்மை புரிந்து மேற்கொண்டு எதுவும் பேசவில்லை ஆனந்த் .

அடுத்தடுத்து அந்த பேச்சை விடுத்து வேறு சில விஷயத்தை குடும்பமே சுவாரசியமாய் பேசியும் சிரித்தும் இருந்தது.

அதே நாளில் இரவு எல்லோரும் அவர் அவர் அறையில் உறங்கிக்கொண்டு இருக்க.

சித்தாராவுக்கு ஒதுக்கி இருந்த அறைக்குள் இருந்த சர்வாவோ "சொல்லு டி உங்க அப்பா கிட்ட இதை மாட்டி விடட்டுமா..??" என்றவனை பார்த்து பயத்துடன்

"இங்க பாரு ஷிவ், நமக்குள்ள இருக்குற பிரச்சனையில இதை கொண்டு வராத இது என் பெர்சினல்...!!" என்று சித்தாரா சொல்ல.

"அப்படி தான் டி கொண்டு வருவேன். என்னடி பண்ணுவ..??" என்று திமிருடன் இவன் கேட்க.

"வேண்டாம் ஷிவ், பின்னாடி இதுக்கு ரொம்ப வருத்த படுவே..??" என்று அவள் எச்சரிக்கை செய்ய

அதை கேட்டு பெரிதாய் நகைத்த சர்வா "உன்னால என்னை இல்லை என் ஹேர்ரை கூட புடுங்க முடியாது போடி..!!" என்று அலட்சியமாய் சொல்லி விட்டு அவள் அறையில் இருந்து வெளியேறியிருக்க.

போகும் அவன் முதுகை பெருஞ்சினத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் சித்தாரா.

அடுத்த நாள் வேப்பமரத்தின் பச்சை கம்பை முறித்த சர்வா சித்தாராவை பார்த்து நமட்டு சிரிப்புடன் அதை அவளது தந்தையிடம் கொடுக்க.

அவனிடம் இருந்து கம்பை வாங்கிய ஆனந்த்தோ சித்தாராவை அடி வெளுத்து விட்டார்.

அவரது அடியில் " ஐயோ அம்மா...!! என்று அலறியபடி தப்பி ஓட முயன்றவளை விடாமல் துரத்தி துரத்தி ஆனந்த் வெளுத்து வாங்க.

நடப்பதை கையில் இருந்து கோக்கை குடித்தபடி சுவாரசியமாய் ரசித்து பார்த்துக்கொண்டிருத்தான் "ஷிவ்வர்த சர்வஜித்".

கள்ளி வருவாள்..!!
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 27227
அத்தியாயம் - 3

தனது தந்தையின் பேச்சில் முகம்கறுக்க நின்றுகொண்டிருந்த சர்வாவின் பார்வையோ அப்படியே அவனது தந்தையின் அருகே இருந்தவளின் மீது படிந்தது.

அவளோ இவன் வாங்கிய திட்டை கண்டு நமுட்டு சிரிப்புடன் இவனை பார்க்க அதில் ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் இவளது இந்த செயலில் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான்.

பிறப்பு முதலே கோபத்தை அடக்கும் வழி அறியாதவன் எங்கே இன்னும் சற்று நேரம் இங்கு நின்றால் கையில் கிடைக்கும் ஏதேனும் வைத்து அவளை அடித்துவிடுவோமோ என்று எண்ணி அந்த இடத்தில் இருந்து விருட்டென்று வெளியேறியிருந்தான்.

அவனது கோபத்தை வீட்டினர் அறிந்ததாலோ என்னமோ அவன் போனதை பெரிதாய் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை.

சித்தாரா மட்டும் "ரோஷத்துல முறுக்கி கிட்டு போறதை பாரு, இந்த வெட்டி சீனுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...!!" என்று நக்கலாக மனதில் நினைத்தபடி சீதா கொடுத்த உணவை எல்லாம் பாரபட்சமே பார்க்காமல் வெட்டி விழுங்கினாள்.

இங்கு வீட்டில் இருந்து கோபமாக வெளியேறிய சர்வஜித்தோ தனது பைக்கை அதிவேகமாக ரோட்டில் செலுத்திக்கொண்டிருந்தான்.

அவனது மனக்கண்ணிலோ அவனை பார்த்து சித்தாரா சிரித்த நமுட்டு சிரிப்பே நியாபகம் வர அதில் பல்லை கடித்தவன் "ர்ரூம்... ர்ரூம்.." என்று வண்டியை வேகமாக முறிக்கியபடி இன்னும் அதன் வேகத்தை கூட்டினான்.


"சர்ர்ர்.." என்று சறுக்கியபடி சர்வாவின் ஸ்போர்ட்ஸ் பைக் அந்த கல்லூரியினுள் நுழைய.

வந்த வேகத்தில் அதை பார்க்கிங்கிற்குள் செலுத்தியவன் ஒரு இடத்தில் பிரேக்கை அழுத்த,வந்த வேகத்தில் அது "கிரீச்ச்.." என்ற சத்தத்துடன் நின்றது.

பைக்கை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தியவன், அதில் இருந்து சற்றும் குறையாத கோபத்துடன் இறங்கி கல்லூரிக்குள் சென்றான்.

கையில் வைத்திருந்த சிகெரெட்டை உதட்டில் பொருத்தி அதன் புகையை ஆழ்ந்து உள்வாங்கி வெளியேற்றிக்கொண்டிருந்தான் விக்கி.

அப்போது சட்டென்று அவனது கையில் இருந்த சிகெரெட்டை ஒரு வலிய கரம் பறித்திருக்க "எவன் டா அது..??" என்று எண்ணியபடி திரும்பியவன் பார்த்தது என்னமோ நெற்றி மற்றும் கழுத்தில் நரம்புகள் புடைக்க ஒரு கையால் தலையை அழுத்தி கோதியபடி மற்றொரு கைகொண்டு சிகரெட்டை வாயில் பொருத்தி வேகமாகவும் ஆழமாகவும் இழுத்து புகைத்துக்கொண்டிருந்த ஷிவ்வர்த சர்வஜித்தை தான்.

அவனது அந்த தோற்றமே அவனது கடுங்கோபத்தை எடுத்துக்காட்ட.

"என்னாச்சு இவனுக்கு..??" என்று சுருங்கிய புருவத்துடன் குழப்பமாக அவனை பார்த்த விக்கி நன்கு அறிவான் சர்வா அதீத கோபத்தில் இருக்கும் சமயம் அவனிடம் பேச்சு கொடுத்தால் அவனிடம் இருந்து அடி கிடைப்பது நிச்சயம் என்று. எனவே அமைதியாய் அவனை ஏறிட்டு பார்த்தவன் மறந்தும் கூட வாயை திறக்கவில்லை.

கையில் இருந்த சிகரெட் முடிந்ததும் விக்கி புறம் பார்வையை திருப்பாமலேயே தனது கையை மட்டும் அவன் புறம் நீட்டிய சர்வா "ம்ம்ம்...!!" என்க.

இத்தனை ஆண்டுகளாய் அவனுடன் இருக்கும் விக்கிக்கு அதன் அர்த்தம் தெரியாமல் இருக்குமா என்ன..? உடனே தனது பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு அதில் இருந்து ஒரு ச்சூவிங் கம்மை எடுத்து நீட்டிய அவன் கைமீது வைக்க

அதை சட்டென்று பிரித்து வாயில் இட்டுக்கொண்டான் சர்வா..

வாயில் இட்டிருந்த ச்சூவிங் கம்மை சித்தாராவாய் எண்ணியபடி கண்டபடி கடித்தும் வேகமாக மென்னும் சுவைக்க.. அந்த ச்சூவிங் கம்மின் அடர் சிகப்பு நிறம் வெளிர் வெள்ளை நிறத்துக்கு மாறியபிறகு தான் அதை வெளியில் துப்பினான். சற்று கோபமும் மட்டு பட்டிருக்க, அருகில் நின்றிருந்த விக்கியின் தோளில் கைபோட்டான்.

நண்பனின் நிலை மாறியதை உணர்ந்த விக்கி மெல்ல "என்ன மச்சான் ஆச்சு ரொம்ப சூடா இருந்த..??" என்று கேட்க

அதில் அவனை பார்த்த சர்வா சலிப்புடன் "ப்ச்... அதை ஏன் டா மச்சான் கேக்குற, இன்னைக்கு என் வீட்டுக்கு என் விரோதி ஒருத்தி வந்தா டா. வந்த அன்னைக்கே அவ வேலைய காட்டுறா. பத்தாததுக்கு எங்கப்பா அவ முன்னாடி வச்சு என்னை கழுவி ஊத்துறாரு அதான் காண்டாயிருச்சு.!!" என்று சொல்ல.

அதில் அவனை அதிசயத்து பார்த்த விக்கி "மச்சான் நீயா இது..!! எப்பவும் உன் கிட்ட வம்பு வழக்குறவங்களை எல்லாம் அடி பின்னியெடுத்துட்டு அசால்டா போவ. இப்ப என்னடானா ஏதோ ஒருத்தி கடுப்பு ஏத்துனானு அவளை ஒன்னும் பண்ணாம இங்க வந்து கோபத்தை குறைச்சிட்டு இருக்குற. உனக்கு என்ன மச்சான் ஆச்சு..??" நண்பனை பற்றி நன்கு அறிந்தவன் சற்று அதிகமான அதிர்ச்சியுடன் வினவ.

அதில் அவனை பார்த்து ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்திய சர்வா "நான் அவளை சும்மா விட்டிருவேன்னு நீ எப்படி நினைச்ச..??" என்று கூலாக கேட்க.

"டேய் மச்சான்..!!" என்று கத்தியவன் "அதானே பார்த்தேன் என் மச்சானாச்சும் அவன் கிட்ட வம்பு வளர்த்தவங்களை சும்மா விடுறதாச்சும்..!!" என்று சொன்னவன் "ஆமா மச்சான், அந்த பொண்ணை என்ன டா பண்ண போற..?? ஆனா பாவம் டா என்னதான் இருந்தாலும் அவ ஒரு பொண்ணு கைய கிய்ய நீட்டீடாத உன் அடிய பசங்களாலையே தாங்க முடியல சோ எதா இருந்தாலும் பார்த்து பண்ணு முடிஞ்சா வார்ன் பண்ணு..!! " என்று சொல்ல.

அதில் நாக்கை வாயினுள் சுழற்றி கடையோரப் புன்னகையுடன் அவனை பார்த்த சர்வஜித் பதில் ஏதும் கூறவில்லை.

அதிலயே விக்கிக்கு தெரிந்து விட்டது "ஆகா இவன் சிரிப்பே ரொம்ப வில்லங்கமா இருக்கே. அந்த பொண்ணை வச்சு செய்யப்போறான் போல. பாவம் யாரு பெத்த புள்ளையோ போயும் போயும் இவன் கிட்ட போய் மாட்டியிருக்கே.." என்று சித்தாராவை எண்ணி நினைத்தவன் அதன் பிறகு அதை பற்றி பேசவில்லை, பேசவில்லை என்பதை விட அதை பேச அவனை அவனுக்கே தெரியாமல் சர்வா விடவில்லை என்று சொல்லலாமோ..!!


எப்பவும் போல காலேஜ் முடிந்து வீடு திரும்பியவன் அங்கு ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்த தனது மாமன் அருகில் "ஹே மாமா..??" என்றபடி தொப்பென்று அமர.

அருகில் அவனது அரவம் கேட்டு நிமிர்ந்து "அடடே வா மாப்ள.." என்றவர் அவனது முகத்தில் தெரிந்த களைப்பை பார்த்து "என்ன மாப்ள ரொம்ப அசதியா இருக்க போல..?? எதாச்சும் குடிக்கிறியா..??" என்று அக்கறையாய் வினவ

"ஆமா மாமா, லாஸ்ட் இயர் இல்லையா ஆதான் ஓரே புராஜெக்ட்டா கொடுத்து கழுத்தை நெறிக்குறாங்க. அதுவும் இல்லாம இன்னைக்கு ஃபுட் பால் மேச் வேற இருந்திச்சு எல்லா சேர்த்து செம டயர்ட் ஆகிடிச்சு..!!" என்றவன் சோர்வுடனே அவரை பார்த்து புன்னகைக்க.

படிப்பிலும் விளையாட்டிலும் திறமையாய் இருக்கும் அவனை பார்த்து புல்லரித்து போனார் ஆனந்த். அதுவும் இதில் எதிலுமே ஈடுபாடு இல்லாமல் இருக்கும் தன் மகளை இவனுடம் ஒப்பிட்டு பார்க்க இவன் அவ்வளவு பெரிதாய் தெரிந்தான் .

"இரு மாப்ள நான் உனக்கு ஜூஸ் போட்டு கொண்டு வரேன்..!!" என்று சொல்லி எழுந்தவரை பிடித்து மீண்டும் அமர வைத்தவன் "நீங்க ஏன் மாமா அதை எல்லாம் செய்யுறீங்க, சேர்வெண்ட்ஸ் கிட்ட சொன்னா அவங்களே எடுத்துட்டு வருவாங்க அதுவும் இல்லாம உடம்பு எல்லாம் ஓரே கச கச கசனு இருக்கு நான் போய் முதல்ல ஃபிரெஷ் ஆகிட்டு வரேன்..!! இல்லாட்டி ஒரு மாதிரி இருக்கும்.." என்றவன் எழுந்து அவனது அறை நோக்கி மேல் தளம் செல்ல..

"நம்ம மாப்பிள்ளை பையனுக்கு எவ்வளவு பொறுப்பு, குளிக்காம சாப்பிட கூட மாட்டிங்கிறான். நம்மளும் தான் ஒன்னை பெத்து வச்சிருக்கோமே ஆடிக்கு ஒரு வாட்டி அமாவாசைக்கு ஒரு வாட்டின்னு குளிக்கும். தினமும் குளிக்க சொல்லுறதுக்கே ஒரு போராட்டம்..!! " என்று எரிச்சலாக எண்ணியவர் ஹால் டிவியை உயிர்ப்பித்தார் தன் மூடை மாற்ற வேண்டி.

இங்கு குளிக்க வேண்டி தனது அறையை நோக்கி மேல் தளம் வந்த சர்வாவின் காதுகளுக்கோ..

"என்ன டி நிலா இன்ஜினியரிங்
சேர்ந்திட்ட போல...!!" என்ற சித்தாராவின் குரல் கேட்க.

"ச்சை போயும் போயும் இந்த பிசாசுக்கு நம்ம ரூம் பக்கம் இருக்குற ரூமையா கொடுத்தாங்க..??" என்று கடுப்புடன் எண்ணியவன் பின் இன்று ஒரு நாள் மட்டும் தானே என்று மனதை தேற்றியபடி தனது ரூமை நோக்கி செல்ல அவனது நடையோ சித்தாராவின் பேச்சை கேட்டு அப்படியே நின்றது என்றால் அவனது காலோ தானாய் அவள் அறை இருந்த இடம் நோக்கி மறைவாய் போய் நின்றது.

பேண்ட் பாக்கெட்டில் இருந்த தனது மொபைலை எடுத்து வீடியோ ரெக்கார்ட்டரை ஆன் செய்தவன் சித்தாராவை ஃபோகஸ் செய்து வீடியோ எடுக்க தொடங்க.

இதை எதையும் அறியாத சித்தாராவோ கவனக்குறைவில் தனது அறை கதவை பூட்டாமல் வந்ததை கூட உணராமல் அவளது தோழி நிலாவுடன் தனது பேச்சை தொடர்ந்தாள்.

"ஸ்ஸ்ஸ்.. ஏண்டி இதுக்கு கத்துற, ஆயா சத்தியமா எனக்கு பிடிச்ச ஃபேஷன் டிசைனிங்க படிக்கவிடாம இன்ஜினியரிங் தான் படிக்கவைப்பேன்னு எங்க அப்பா சொன்னதால தான் எல்லாத்தையும் படிச்ச நான் வேணும்னே 12thல கம்மியா ஜஸ்ட் பாஸ் ஆகுறது போல எழுதுனேன்...!!" என்றவளின் கூற்றை கேட்டு அவளது தோழி அதிர்ந்தாளோ என்னமோ இங்கு சர்வா நன்றாக அதிர்ந்தான்.

"அடிப்பாவி..!!" சத்தம் வராமல் அதிர்ச்சியில் முனங்கியவன் வீடியோ ரெக்கார்ட் செய்தபடியே அவளை கவனிக்க.

அவளது தோழி அவளிடம் என்ன சொல்லி இருப்பாளோ "ம்ச், நான் என்ன விரும்பியா படிச்சேன். படி படினு அந்த மனுஷர் வித விதமான டியூஷன் சேர்த்து விட்டு காலைல நாலு மணிக்கு எழுப்பி படிக்க வச்ச டார்ச்சர் தாங்க முடியாம வேற வழியே இல்லாம தான் படிச்சேன். ஆனா ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசியில என் டிரீம் கோர்சையே கடிக்க பாத்தார் விடுவேனா நான்..!! அடிச்சேன் பாரு சிக்சர் 'ஜஸ்ட் பாஸ்'னு மனுஷன் மூஞ்சில ஈ ஆடல. ஹா..ஹா அதை நினைச்சா இப்பவும் எனக்கு சிரிப்பு பொத்துகிட்டு வருது டி..." என்றவள் பெட்டில் உருண்டு புரண்டு கெக்க பிக்கவென்று சிரிக்க.

"சிரிப்பு பொத்துக்கிட்டா வருது உனக்கு..!! நாளைக்கு கைகால்ல எல்லாம் ரத்தம் பொத்துக்கிட்டு வரும் இப்பவே நல்லா சிரிச்சுக்கோ..!!" என்று பல்லை கடித்தபடி கருவியவன் தொடர்ந்து நடப்பதை ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தான்.

அவளது தோழியும் அவளை கண்டித்து ஏதோ சொல்லியிருப்பாள் போலும்.

அதற்கு சித்தாராவோ "என்னது அவர் பாவமா..!! விடிய காலைல ஜில்லுன்னு ஒரு பக்கெட் தண்ணிய அப்படியே என் தலைல கவுப்பாரே அப்போ நல்ல தூக்கத்துல இருந்த நான் விழுந்து அடிச்சிட்டு எழும்பி உக்காருவேனே அது எல்லாம் உன்கிட்ட சொல்லி எத்தனை தடவ நான் புலம்பியிருப்பேன் ஒரு தடவையாவது என்னை பாவம் சொல்லி இருப்பியா டி குள்ள கத்திரிக்காய்...!" என்றவள் அவளது தோழியை சரமாரியாக திட்டிவிட்டு பின்

"எப்படியோ கெட்டதுல ஒரு நல்லது போல , நான் மார்க் கம்மியானதும் எனக்கு எந்த இன்ஜினியரிங் காலேஜிலையும் சீட் கிடைக்கல. நம்ம ஊர் காரங்க என் மார்க் கம்மியானதை பத்தி ஒருமாதிரி பேச ஆரம்பிச்சாங்களா அப்பா மொத்த பிஸ்னெசையும் சென்னைக்கு ஷிப்ட் பண்ணிட்டாரு நானும் நைசா என் மாமா கிட்ட சொல்லி அவர் காலேஜிலையே ஃபேஷன் டிசைனிங் கோர்சுல சேர்த்துவிட சொல்லி எங்க அப்பாகிட்ட சொல்லுங்க சொல்ல. என் தங்க மாமா அதை அப்படியே பண்ணி இப்போ நான் அவரோட காலேஜிலையே எனக்கு பிடிச்ச கோர்ஸ் பண்ண போறேன்.

அதுவும் இது என் மாமா காலேஜிங்கிறதால நான் எவ்வளவு வேணும்னாலும் என்ஜாய் பண்ணிக்கலாம் என்னை யாரும் எதுவும் கேட்க முடியாது ஏன்னா நான் என் மாமா செல்லம்..!!" என்று பெருமையாய் சொல்ல.

அதை எல்லாம் கண்களில் தோன்றிய பளபளப்புடன் சர்வா பார்த்துக்கொண்டிருந்தான் என்றால் அதற்கு நேர் எதிரே அவனது உதடுகளோ வஞ்ச புன்னகை ஒன்றை உதிர்த்தது.

மேலும் தொடர்ந்த சித்தாராவோ "ஆனா நல்லதுல ஒரு கெட்டது போல அந்த லூசு பையன் ஷிவ் வீட்டுக்கு பக்கத்துல வீடு வாங்கியிக்காரு டி...!! உனக்கே தெரியும் இல்ல எனக்கும் அவனுக்கும் ஆகாதுன்னு..!!" என்று எரிச்சலுடன் சொல்லி முடித்தவள் மேலும் சிலவற்றை அவள் தோழியிடம் சொல்லிவிட்டு போனை வைக்க.

அவள் பேசியது அனைத்தையும் தனது ஐபோனில் பக்காவாக ரெக்கார்ட் செய்திருந்த சர்வாவோ அதை தனது பாக்கெட்டில் போட்டபடி சித்தாரா அறையை பார்த்து "செத்த டி மவளே..!!" என்று வன்மமாய் நினைத்தபடி திரும்பி அவனது அறைக்கு செல்ல அவனது முகமோ எதையோ சாதித்த பொலிவுடன் இருந்தது.


இரவு உணவு அருந்தும் போதும் அவளது வம்பு பேச்சுக்கெல்லாம் ஒரு புன்னகையே இவன் பதிலாய் கொடுக்க அவள் தான் "என்ன ஆச்சு இவனுக்கு, இவன் லேசுல விடுற ஆள் எல்லாம் இல்லையே ..!!"என்று குழப்பமாய் எண்ணியபடி இருந்தாள்.

நாளை ஆன்ந்த் இந்த வீட்டின் அருகில் வாங்கியிருக்கும் வீட்டின் பால் காய்ப்பு காரணமாய் எல்லோரும் சீக்கிரமே தூங்க சென்றிருக்க மேல் தளம் வந்த சர்வாவோ சித்தாரா அறியாமல் அவளுடனே அவள் அறையினுள் நுழைந்திருந்தான்.

அவனது இந்த திடீர் செய்கையில் "ஏய் நீ ஏன் டா என் ரூம்க்கு..!!" என்றபடி அவன் அருகில் செல்ல. அதற்குள் அறை கதவை பூட்டிய சர்வா நிதானமாக அவள் புறம் திரும்பி ஒற்றை காலை கதவில் வைத்து கைகளை கட்டியவாறு "வேணும்னு தான் வந்தேன்..!!" என்றான் அவளை பார்த்து நக்கலாய்.

அவனது பதிலில் கடுப்பானவள் "ஏய் என்ன திமிரா..?? மாமா கீழ தான் இருக்காரு ம்ம்ம்.. னு ஒரு குரல் கொடுத்தா போதும், உன் கதி அவ்வளவு தான்..!!"என்று மிரட்ட

அதில் இறுகிய முகத்துடன் அவளை ஏறிட்டு பார்த்தவன் "நான் என்ன அன்னைக்கு இருந்த சின்ன பையன்னு நினைச்சியா..?? நீ மாட்டிவிட்டதும் அடிவாங்குறதுக்கு" என்று சூடாய் கேட்க.

இவன் வேண்டுமென்று தான் தன்னிடம் பிரச்சனை செய்ய வந்திருக்கிறான் என்பதை சரியாய் புரிந்துகொண்டாள் சித்தாரா.

"ப்ச் இப்ப உனக்கு என்ன வேணும் எதுக்கு எங்கிட்ட பிரச்சனை பண்ணிகிட்டு இருக்க..?" என்று கடுப்புடன் கேள்வி கேட்க.

அதை அலட்சியப்படுத்தியவன் "ஆமா நீ ஏன் 12thல மார்க் கம்மியா எடுத்த..??" என்று அவளை பார்த்து கூர்மையாய் கேட்க.

இது என்ன கேள்வி என்பது போல அவனை பார்த்தவள் "படிக்கலை எடுக்கல..!!" என்றாள் தெனாவெட்டாய்.

அதை கேட்டு "ஓ...." என்றபடி தன் தாடையை தடவியவன் கையில் இருந்த போனை அவள் முகத்தருகே தூக்கி பிடித்த படி "ஆனா இதுல நீ அப்படி சொல்லலியே மா..!!" என்றான் நக்கலாய்

இவன் வந்ததில் இருந்தே மண்டையில் அடித்துக்கொண்டிருந்த அலாரம் இவன் காட்டிய வீடியோவை பார்த்து வெடித்து சிதறிட நெஞ்சை பிடித்தபடி "இது.. இது.. இது எப்படி உன் மொபைல்ல..!!" என்று அதிர்ச்சியுடன் வினவ

அவனோ அதற்கு பதில் கூறாமல் "ஏன் டி லூசு, இதை மட்டும் நான் உன் அப்பா கிட்ட காட்டுனா என்ன ஆகும்..??" என்று நக்கலாக வினவ.

"பாவி பையன் நேரம் பார்த்து பழிவாங்குறானே..!!" என்று மனதில் கருவியவள் வெளியில் அவனை முறைத்து பார்க்க.

"காட்டட்டுமா..??" என்று மீண்டும் நக்கலுடன் அவன் கேட்க அவளோ அவனை முறைத்து பார்த்தாளே தவிர பதில் ஏதும் கூறவில்லை.

அதில் கோபம் வர பெற்றவன் "சொல்லு டி..!! உங்க அப்பா கிட்ட இதை காட்டட்டுமா..??" என்று சீற அதில் அவனை பார்த்து பயத்துடன்

"இங்க பாரு ஷிவ், நமக்குள்ள இருக்குற பிரச்சனையில இதை கொண்டு வராத இது என் பெர்சினல்...!!" என்று சித்தாரா சொல்ல.

"அப்படி தான் டி கொண்டு வருவேன். என்னடி பண்ணுவ..??" என்று திமிருடன் இவன் கேட்க.

"வேண்டாம் ஷிவ், பின்னாடி இதுக்கு ரொம்ப வருத்தபடுவ..??" என்று அவள் எச்சரிக்கை செய்ய

அதை கேட்டு பெரிதாய் நகைத்த சர்வா "உன்னால என்னை இல்லை என் ஹேரை கூட புடுங்க முடியாது போடி..!!" என்று அலட்சியமாய் சொல்லி விட்டு அவள் அறையில் இருந்து வெளியேறியிருக்க.

போகும் அவன் முதுகை பெருஞ்சினத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் சித்தாரா.

அடுத்த நாள் அழகாய் விடிய..

காலை கண்முழித்தது முதல் இவன் மாட்டிவிடுவானோ மாட்டிவிடுவானோ என்று பதட்டத்துடன் சுற்றிக்கொண்டிருந்த சித்தாரா..

வீடு பால் காய்ப்பு எல்லாம் முடிந்த பின்னும் அவன் அதை பற்றி மூச்சே விடாமல் இருப்பதை பார்த்து நிம்மதியுற்றவள் "என்னை பயமுறுத்த சீன் கிரியேட் பண்ணியிருக்கான் டோமேட்டோ. டேய் சிறுத்தை சிக்கும் இந்த சில்வண்டு எப்பவும் சிக்காது..!!" என்று மிதப்பாய் எண்ணியவள் பதட்டத்தில் சரியாய் உண்ணாமல் விட்டவற்றை எல்லாம் ரவுண்டு கட்டி உண்டு முடித்தாள்.

உண்ட மயக்கத்தில் 'அக்கடாவென்று" சோபாவில் அமர்ந்தவள் கையில் வைத்திருந்த ஆப்பிளை வாயில் போட்டு கொறித்துக்கொண்டிருக்க சட்டென்று அங்கு ஒரு பரபரப்பு .

அதில் "என்ன டா இது..??" என்றபடி அவள் பார்க்க. அவள் முன் ருத்ரமூர்த்தியாக வந்து நின்றார் ஆனந்த்.

அதில் ஏன் என்று தெரியாமலேயே பயத்தில் தொண்டை குழி ஏறியிறங்க எச்சிலை கூட்டி விழுங்கியவள் தானாய் எழுந்து நிற்க அவளது தந்தையோ "மாப்ள..!!" என்று குரல் கொடுக்க அதில் எங்கிருந்தோ வந்த சர்வா வேகமாக வீட்டின் வெளியில் நின்றிருந்த வேப்பமரத்தின் பச்சை கம்பை முறித்துக்கொண்டு யாரும் அறியாமல் சித்தாராவை பார்த்து நமுட்டு சிரிப்பொன்றை கணநேரத்தில் உதிர்த்து விட்டு அதை அவளது தந்தையிடம் கொடுக்க.

அவனிடம் இருந்து கம்பை வாங்கிய ஆனந்தோ சித்தாராவை அடி வெளுத்து விட்டார்.

அவரது ஒவ்வொரு அடியிலும் அவள் மார்க் வேண்டு வென்றே கம்மியாக எடுத்ததை குறிப்பிட்டு காட்டி சொல்லி சொல்லி அடிக்க

அவரது அந்த அடிகளில் எல்லாம் " ஐயோ அம்மா...!! என்று அலறியபடி தப்பி ஓட முயன்றாள் சித்தாரா. அவரோ விடாமல் துரத்தி துரத்தி அவளை வெளுத்து வாங்க.

நடப்பதை எல்லாம் கையில் இருந்து கோக்கை குடித்தபடி சுவாரசியமாய் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தான் "ஷிவ்வர்த சர்வஜித்".

சித்தாராவோ அந்த வீட்டை சுற்றி சுற்றி ஓடியது மட்டும் இன்றி வழியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் அவர்கள் பின்னே மறைய போக இவளது கெட்ட நேரம் சரியாய் சர்வாவின் பின்னே சென்று மறைந்தபடி "காப்பாத்துங்க..!! காப்பாத்துங்க..!!" என்று அலற.

அவனோ அலுங்காமல் குலுங்காமல் தனக்கு பின்னே இருந்த நின்றிருந்தவளின் கையை பிடித்து தனக்கு முன்னே தன் மாமன் அடிக்க வசதியாய் விட்டவன் நல்ல பிள்ளைபோல சுவற்றில் சாய்ந்தபடி விட்ட கோக்கை குடிக்க ஆரம்பித்தான்.

அங்கு ஆனந்தோ இப்போது சித்தாரா ஓட முடியாத படி அவளது கையை கெட்டியாக பிடித்து வெளுக்க தொடங்க அவரது ஒவ்வொரு அடிக்கும் துள்ளி துள்ளி நின்றாள் சித்தாரா..

சிறிது நேரம் அவளது தப்புக்காக அவளை அடிவாங்க விட்ட விஷ்வநாத் அவள் கத்துவதை பார்த்து மனம் கேளாமல் ஆனந்த் கையில் இருந்த கம்பை பறிக்க. அப்போதும் விடாமல் ஆனந்த் அவளை திட்ட பொறுக்கமுடியாத விஷ்வநாத் "இப்ப உனக்கு என்ன டா அவ இன்ஜினியரிங் படிக்கணும் அதானே சரி விடு நம்ம காலேஜ்ல அவளை இன்ஜினியரிங் கோர்ஸ்க்கு மாத்திடலாம். எதுக்காக அவ மார்க்க கம்மியா எடுத்தாளோ அதுவே இப்ப அவ படிக்கபோறா சோ அதுவே அவளுக்கு தண்டனை தான். இனிமே அவளை அடிக்கவோ திட்டவோ செய்யாத..!!" என்று அழுத்தமாக சொல்லிவிட.

அதற்கு மேல் அவளை ஒன்றும் செய்யவில்லை அவர்.

சந்திராவும் சீதாவும், ஆனந்த் அடித்ததின் பயனாய் சித்தாராவின் உடம்பில் தடித்திருந்த இடத்தில் எல்லாம் மருந்தை பூசிக்கொண்டிருக்க.

சித்தாராவோ விசும்பலுடன் தனக்கெதிரே தன்னை நக்கல் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த சர்வாவை தன் அக்னி பார்வையால் சுட்டெரித்துக்கொண்டிருந்தாள்.

அதில் அவளை பார்த்த சர்வாவோ அதை பார்த்து ஆச்சரியப்படுவது போல இரு புருவத்தையும் உயர்த்தி தன் உதட்டை லேசாய் தாழ்த்தி அவளை பார்த்துவிட்டு மீண்டும் தன் நக்கல் புன்னகையை தன் உதட்டில் படரவிட்டபடி "போடி..!!" என்றான் அழுத்தமாக அவளுக்கு மட்டும் புரியும் படி தன் வாயை அசைத்து சத்தம் கேட்காதவாறு.


அதில் அவனை மேலும் முறைத்த சித்தாரா "கண்டிப்பா இதுக்கு ஒரு நாள் நீ அனுபவிப்ப டா நாயே..!!" என்று உள்ளுக்குள் அதே கோபத்தோடு நினைத்துக்கொண்டாள்.

கள்ளி வருவாள்..!!
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 4



"ஸ்ஸ்ஸ்.. ஆ.. ம்மா.." என்று வலியில் முனங்கிய சித்தாரா அதனால் ஏற்பட்ட கோபத்துடன் "ப்ச்..!! ம்மா அழுத்தி ஒத்தடம் கொடுக்காதேனு ஒரு தடவை சொன்னா கேட்க மாட்டியா நீ..?? ஏற்கனவே உன் புருஷன் என் உடம்பை நல்லா பஞ்சர் ஆக்கிட்டு போய்ட்டார் உன் பங்குக்கு நீயும் பஞ்சர் ஆக்குறீயா..??" என்று என்னத்தான் வீராப்பாக அவள் பேசினாலும் முனுக்கென்று கண்களில் கண்ணீர் கோர்த்துக்கொள்ள அதில் மேலும் கடுப்புற்றவள் தாய் பதிலுக்கு என்ன கூற வருகிறார் என்று கூட கேட்காமல்

"ஒத்தடமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்..!!" என்று எரிச்சலுடன் முணுமுணுத்தபடி எழுந்து தனது அறையை நோக்கி சென்றாள்.

"எப்பா என்ன பண்ணிட்டேன்னு இந்த பொண்ணு இந்த சிலுப்பு சிலுப்பி கிட்டு போறா..??" என்று கூறி முறைத்த சந்திராவோ கடுப்பில் தனது அண்ணியை காண பக்கத்து வீட்டிற்கு சென்று விட்டார்.


இங்கு தனது அறைக்கு வந்தடைந்த சித்தாராவுக்கோ அத்தனை எரிச்சல் மனதில்.

தன் தந்தையிடம் அடிவாங்கி மூன்று நாட்கள் கடந்து விட்டது ஆனாலும் அதன் வலியும் அது கிடைக்க காரணமானவனின் மேல் உள்ள கோபமும் கொஞ்சமும் குறையவில்லை.

அதுவும் அவனது அந்த நக்கல் சிரிப்புடன் கூடிய பேச்சு அதை இப்போது நினைத்தாலும் அத்தனை ஆத்திரம் வந்தது அவளுக்கு.

அவளது நினைவுகளோ அடிவிழுந்த நாளை நோக்கி சென்றது.


தந்தையிடம் அடிவாங்கிய நாள் அன்று மாலையில் தன் தந்தை அடித்து தடித்த இடத்தை தடவியபடி தனது அறைக்குள் சித்தாரா செல்ல போக "அடி ரொம்ப பலமோ..??" என்று சர்வாவின் நக்கல் வழியும் குரல் கேட்டு அவளது நடை அப்படியே நின்றது என்றால் அவளது கண்களோ கோபத்தில் சிவந்தது.

அதே கோபத்தோடு அவன் புறம் திரும்பியவள் "வேண்டாம் டா ஷிவ்வு என்னை வெறி ஏத்தாத..!!" என்று சொல்ல.

அவனோ இப்போது மிக நக்கலாய் "ஓ.. உனக்கு வெறி வேற புடிக்குமா..!! ச்சு.. ச்சு.. இது எனக்கு தெரியாம போச்சே. தெரிஞ்சிருந்தா அப்போ உன் அப்பா கிட்ட மாட்டிவிட்டு டைம் வேஸ்ட் பண்ணதுக்கு பதில் ஸ்டிரைட்டா மென்டல் ஹாஸ்பிட்டல்ல போய் சேர்த்திருப்பேன்.உன் தொல்லையும் இனி இருந்திருக்காது ..!! ப்ச் மிஸ் பண்ணிட்டேன்" என்று சோகம் போல சொல்லி முடிக்க.

இவளுக்கோ கோபம் உச்சியை தொட்டது..!!

"ச்சி நீ எல்லாம் ஒரு மனுஷனா.!!" என்று வெறுப்புடன் அவள் கூற.

அதில் அதுவரை இருந்த இலகுத்தன்மை அவனிடம் இருந்து விலக ஒரே எட்டில் அவளை அடைந்தவன் அவளது தோளில் தனது வலிய கரம் கொண்டு அழுந்த பற்றியபடி சுவற்றோடு அவளை வேகமாக சாய்க்க.

அவளோ சற்று அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டு பார்க்க அவளது அதிர்ச்சியை அலட்சியம் செய்தவன் இன்னும் அவளை நெருங்கி இமைகள் இரண்டும் உரசும் தூரத்தில் நின்றபடி தன் உஷ்ண மூச்சுக்காற்று அவளது முகத்தில் உரச "என்ன சொன்ன நான் எல்லாம் ஒரு மனுஷனா..??" என்றவன் அவளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே "மனுஷத்தனம் இல்லாத அளவுக்கு நான் எங்க டி கொறைஞ்சு போனேன்..??"என்று சூடாய் கேள்வி கேட்க.

அவளோ அவனை ஏறிட்டு கூட பார்க்காமல் "ப்ச் மறுபடியும் கடுப்பேத்தாம மரியாதையா என்னை விடு ஷிவ்..!!" என்று அவனிடம் இருந்து விலக பார்க்க.

விடுவானா அவன் "விடாட்டி என்ன டி பண்ணுவே..??" என்றவனது கையோ மேலும் அழுத்தத்தை கூட்டி அவளது தோள்பட்டையை வலிக்கும் படி பிடிக்க.

அதில் வலியெடுத்தாலும் அவன் முன் தன் வலியை காட்டக்கூடாது என்று நினைத்தவள் "ஆடு டா.. நல்லா ஆடு.. உன்னால எவ்வளவு தூரம் ஆட முடியுமோ நல்லா ஆடு. ஒரு நாள் இந்த ஆட்டம் என் கைக்கு வரும் அப்போ வச்சுக்குறேன் உன்னை..!!" என்று பல்லை கடித்தபடி கூற.

ஏதோ பெரிய ஜோக்கை கேட்டது போல வாய் விட்டு சிரித்தவன் "ஹா..ஹா.. காமெடி பண்ணாம போடி..!! வந்துட்டா பெரிய இவளாட்டம்..!!" என்றவன் "நான் இருக்குறேன்னு தெரிஞ்சும் தைரியமா என் இடத்துக்கு வந்த இல்ல. இனி அதுக்கான பரிசை தினமும் அனுபவிப்ப..!!" என்று அழுத்தமாக சொல்லிவிட்டு அவளது தலையில் வலிக்கும் படி கொட்டிவிட்டே அங்கிருந்து சென்றான்.

போகும் அவனை தன்னால் முடிந்த மட்டும் முறைக்கத்தான் முடிந்தது சித்தாராவால்.

இதை எல்லாம் நினைத்து பார்த்த சித்தாராவோ "ஒரு நாள் என் கிட்ட வசமா மாட்டுவ இல்ல அப்ப வச்சுக்குறேன் டா உன்னை..!!" என்று கருவியபடி தூங்கி போனாள்.

************************************
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டணம் என்னும் ஊர் தான் ஆனந்த் மற்றும் சீதா லஷ்மியுடைய பிறப்பிடம்.

அண்ணன் தங்கையான ஆனந்த் மற்றும் சீதா லஷ்மியின் பெற்றோர் சிறுவயதிலேயே இறந்திருந்தனர்.

நல்ல வேளை அவர்கள் சம்பாதித்த பணம் சிலது பேங்கில் போட்டிருந்ததால் மாதா மாதம் அதிலிருந்து வரும் வட்டி பணத்தை வைத்து அவர்கள் இருவரின் படிப்பு செலவும் வீட்டு செலவும் எந்த தடையும் இன்றி இருந்தது.

சரியாய் சீதா லஷ்மிக்கு இருபது வயது இருக்கும் சமயம் உடன் இருந்த சொந்தங்கள் அவருக்கு தூரத்தில் ஒரு வரன் கொண்டு வந்திருக்க.

விசாரித்ததில் அது ஆனந்த் உடன் சென்னையில் ஒன்றாக கல்லூரியில் படித்த அவரது நண்பன் விஷ்வநாத் என்று தெரியவர. மனம் நிறைந்து விட்டது ஆனந்திற்கு. நண்பனின் குணம் நன்கு அறிந்தவராயிற்றே. விஷ்வநாத்தின் வீட்டிலோ ஆனந்த் குணம் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்ததால் பெண் குடுத்து பெண் எடுப்பதாய் முடிவெடுத்தனர்.

அதன் படி இரு திருமணமும் ஒரே மேடையில் நடக்க.

ஆனந்தும் சந்திராவும் கன்னியாகுமரியில் தங்களது வாழ்க்கையை தொடங்கினார்கள் என்றால் விஷ்வநாத்தும் சீதா லஷ்மியும் சென்னையில் தங்களது வாழ்க்கையை தொடங்கினார்கள்.

விஷ்வநாத்தோ தந்தையின் தொழிலை கையில் எடுத்து அதில் வெவ்வேறு பிரிவினை புகுத்தி இந்தியா முழுதும் அதை பெரிது படுத்த.

ஆனந்தோ தோட்டத்தில் விளையும் பழம் முதல் காய் கறி வரை வெளிநாடுகளுக்கு எக்ஸ்போர்ட் செய்து தனது தொழிலை வளர்த்தார்.

விஷ்வநாத்திற்கும் சரி ஆனந்திற்கும் சரி தங்களது பிள்ளைகளின் குணத்தின் மீது அத்தனை பிடித்தம் இல்லை.

என்னதான் படிப்பில் முதல் இடத்தை பிடிப்பவனாய் இருந்தாலும் கோபத்தில் தன்னை அடக்காமல் கண்டபடி தனது இஷ்டம் போல நடக்கும் சர்வாவின் குணம் விஷ்வநாத்திற்கு பிடிக்காது என்றால் அவனது அந்த குணமோ ஆனந்திற்கு அதிகம் பிடிக்கும்.

ஆனால் படிப்பில் சுமார் ரகமாகவும் விளையாட்டு, மற்றும் குறும்புகளில் கூடவே கவனக்குறைவில் முதல் இடம் வகிக்கும் சித்தாராவின் குணம் ஆனந்திற்கு பிடிக்காது என்றால் விஷ்வநாத்திற்கு அதிகம் பிடிக்கும்.

இங்கு விஷ்வநாத் சர்வா செய்யும் செயல்களை கண்டிப்பார் என்றால் அங்கு ஆனந்த் சித்தாரா செய்யும் வேண்டாத செயல்களை கண்டிப்பார்.

அதுவும் சென்னைக்கு சென்று தனது தொழிலை விரிவுபடுத்தலாம் என்ற அவரது கனவு நினைவானது என்னமோ சித்தாராவின் மிக மோசமான மார்க்கில் தான். அதுவும் அவள் படிக்கவேண்டும் என்பதற்காக இவரும் நான்கு மணிக்கு எல்லாம் எழும்பி அவளை எழுப்பி விட்டு படிக்க வைத்து டீ போட்டு கொடுத்து மாலையில் ஸ்கூல் முடிந்து டியூஷன் கொண்டு போய் விட்டு என அவர் பட்ட பாடு அவருக்கு தான் தெரியும்.

மகள் ஓஹோ என்று மதிப்பெண் வாங்காவிட்டாலும் ஓரளவு வாங்குவாள் என்று அவர் உறுதியாக நம்பி இருக்க அதில் பெரிய சைஸ் கல் ஒன்றை தூக்கி போட்டாள் சித்தாரா.

அதுவும் மிக மிக குறைவான மதிப்பெண் எடுத்து. அதிலும் அவள் அதை பற்றி கவலையே படாமல் ஊர் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட காண்டான ஆனந்த் எல்லாரையும் கூட்டிக்கொண்டு பெட்டியை கட்டிவிட்டார் சென்னை நோக்கி.

இங்கு விஷ்வநாத்தோ சொந்த காலேஜில் மகன் பெயர் மோசமாய் அதுவும் அடிதடியில் மிக மோசமாய் கெட்டுக்கிடக்கிறதே என்று வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தார்.

இதில் சித்தாராவுக்கும் சர்வாவுக்கும் சுத்தமாக ஆகாது. இவன் கிழக்கு என்றால் அவள் மேற்கு என்பாள் இவன் மேற்கு என்றால் அவள் கிழக்கு என்பாள். அதிலும் ஊருக்கு சென்றால் எங்கே இவள் முகத்தில் முழிக்க வேண்டுமோ என்று எண்ணி பல வருடங்களாக ஊர் பக்கமே தலைகாட்டாமல் இவன் இருக்க.

இன்ஜினியரிங் பாடப்பிரிவை சர்வா எடுத்து படித்தான் என்ற ஒரே காரணத்தால் அதை மட்டும் எடுக்கவே கூடாது என்று இவள் இருக்க. அவளது தந்தையோ அதையே படிக்க சொல்ல கடுப்புற்றவள் வேண்டுமென்றே நன்றாக தெரிந்த கேள்விக்கும் பதில் எழுதாமல் ஜஸ்ட் பாஸ் மார்க் எடுத்து பேஷன் டிசைனிங் கோர்சை தனது மாமன் காலேஜில் எடுத்துக்கொள்ள ஆனால் விதியோ அவளை இன்ஜினியரிங் கோர்சில் பிடித்து தள்ளி விட்டது.

"போயும் போயும் அந்த தடிமாடு எடுத்த கோர்ஸ்ல படிக்கிறோமே அதுவும் அவன் எடுத்த மேஜர் சப்ஜக்ட்ல" என்று இவளும், "போயும் போயும் நம்ம வீட்டு பக்கத்துலயா அந்த பிசாசு வீடு அமையணும் இனி டெய்லி அந்த அழுக்கு மூஞ்ச பார்க்கணுமே" என்று இவனும் ஒரு புள்ளியில் ஒன்று சேர்ந்தால்...!! சேர்வார்களா..?? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

கள்ளி வருவாள்..!!
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 5

27381


"ஏய் சித்து..!! எந்திரி டி, இன்னைக்கு காலேஜ் போகணுமா இல்லையா. முதல் நாளே காலேஜுக்கு லேட்டா போய் தொலையாத டி. சர்வா எப்பவோ காலேஜ் போக ரெடி ஆகிட்டான் ஆனா நீ இன்னும் தூக்கம் கூட எந்திரிக்காம இருக்க. ஆம்பிளை பையன் அவனுக்கு இருக்குற பொறுப்பு கொஞ்சமாச்சும் உனக்கு இருக்கா..?? இப்ப எந்திரிக்க போறியா இல்லையா நீ..!!" என்று தலையில் அடிக்காத குறையாய் இழுத்துப்போர்த்தியபடி தூங்கிக்கொண்டிருக்கும் சித்தாராவை பார்த்து சந்திரா கத்த.

அவளோ அவர் கத்துவது காதிலேயே கேட்காதது போல உறங்கிக்கொண்டிருந்தாள்.

அதில் கோபம் வரபெற்ற சந்திரா அவளது பின்புறத்திலேயே "சப்..!!!" என்று ஒரு அடியை வைக்க அது தந்த வலியில் அடித்த இடத்தை பரபரவென தடவியபடியே எழுந்தமர்ந்தாள் சித்து.

சந்திராவோ அவளை முறைப்பதை நிறுத்தாது "இது தான் நீ எந்திரிக்கிற நேரமா டி..!!" என்று இடுப்பில் கைவைத்தபடி கேட்க.


"இப்ப எதுக்கு மா காலங்காத்தால என்ன நீ அடிச்ச..!!" என்று முறைத்தபடி கேட்டவள்.

தன் இருகைகளையும் சேர்த்து மேலே தூக்கி நெட்டி முறித்தபடி "ஹாஆஆ...!!" என்று கொட்டாவி விட்டவாறு தன் அன்னையை ஏறிட்டவள் "வந்தது தான் வந்த கூடவே காபி கொண்டு வந்திருக்க வேண்டியது தானே ம்மா..!!" என்று அலுத்துக்கொள்ள.

அதில் இப்போது அவள் முதுகில் ஒரு அடி போட்ட சந்திரா "உனக்கு அது ஒன்னு தான் இப்போ குறை, முதல்ல போய் பல்லு தேய் டி. அங்க பேசுறது இங்க வர நாறுது...!!" என்று சிடுசிடுக்க.

"இதோடா..!! கொழுப்பு தானே உங்களுக்கு..!!" என்று கூறி அவரை முறைத்தவள் கப்போடில் இருந்த தன் உடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூமினுள் சென்றாள்.

"காலேஜ் முதல் நாள் அதுவுமா கைகால் அலம்பிட்டு வராம இன்னைக்காச்சும் தலைக்கு குளி டி..!!" என்ற சந்திராவின் குரலுக்கு "ஆங்..!! ஆங்..!! பார்க்கலாம் பார்க்கலாம்.. !!" என்று அசட்டையாய் சித்தாரா பதில் கூற.

அதில் "பெத்து வச்சிருக்கேன் பாரு சரியான அழுக்கு மூட்டை..!!"என்று வெளிப்படையாக கூறி தலையில் அடித்துக்கொண்டவர்.

"எதையோ பண்ணி தொலை, ஆனா தயவு செஞ்சு லேட் பண்ணாம சீக்கிரம் வா, சர்வா பாவம் அப்பத்துல இருந்து உனக்காக அவன் வீட்டுல வெய்ட் பண்ணுறான். நேத்தே அவன் கிட்ட உன்னையும் சேர்த்து காலேஜ்ல டிராப் பண்ண சொன்னேன். என் பேச்ச கேட்டு அந்த பிள்ளையும் இவ்வளவு நேரம் பொறுமையா உனக்காக வெயிட் பண்ணுறான் அதனால தயவுசெய்து சீக்கிரம் வா..!!" என்று சொல்லியவர் அந்த அறையை விட்டு வெளியேறி விட.

காலையில் எழுந்த சோம்பல் சரியாய் தீராத காரணத்தால் இன்று கைகால் முகம் மட்டும் கழுவி விட்டு காலேஜுக்கு புறப்படலாம் என்று எண்ணிய சித்தாராவின் செவியில் தாய் கூறிய அனைத்தும் அழகாய் வந்து விழ.

அதில் கண்கள் மின்ன "அந்த குரங்கு பையன் வெயிட் பண்ணுறானா..?? அப்போ கண்டிப்பா நல்லாஆஆஆ... சோப்பு போட்டு தேய்ச்சு குளிக்கணுமே..!!" என்று நினைத்தவள்.

ஜக்கில் தண்ணீரை எடுத்து அதனுள் தன் கையை விட்டு தண்ணீரில் நனைத்தவள் அதை அப்படியே தன் மீது சொட்டு சொட்டாய் தண்ணீர் படுமாறு காட்டி தன் குளியலை தொடங்கினாள்.

"என்னையா எங்க அப்பா கிட்ட மாட்டி விட்டு அடிவாங்க வச்ச இப்போ எனக்காக நல்லா வெயிட் பண்ணிட்டு கடுப்பாகிட்டு இரு டா எருமை..!!" என்று மனதில் அவனை வசைபாடியவள் தனது ஆமை குளியலை தொடங்கினாள்.

இங்கு அவளுக்காக வேண்டாய் வெறுப்பாய் காத்துக்கொண்டிருந்த சர்வாவுக்கோ நேரம் கடக்க கடக்க கோபம் உச்சியில் ஏறியது.

பிறப்பிலேயே அதிக கோபம் வரப்பெற்ற சர்வாவோ இவளது தாமதத்தில் கோபம் எழுந்தாலும் அதை தனது அத்தை சந்திராவுக்காக பொறுத்துக்கொண்டான். ஆனால் நேரம் கடக்க கடக்க அவள் வராமல் இருக்க இவனுக்கு நன்றாக விளங்கி விட்டது இது அவளது பழிவாங்கும் செயல் என்று.

அதில் எழுந்த கோபத்தில் "ஷட்..!!" என்று தன் கைகளை மடக்கி அமர்ந்திருத்த சோபாவில் ஓங்கி குத்தியவன்.

இதற்கு மேல் முடியாது என்ற நிலையில் கோபத்தில் விருட்டென்று எழுந்தவன் தனது பைக் கீயை எடுத்துக்கொண்டு வெளியே செல்லப்போக.

சரியாய் அச்சமயம் "ச்ச இந்த அம்மா மட்டும் வந்து பாத்ரூம் கதவை தட்டி திட்டாம இருந்திருந்தா இன்னும் கொஞ்ச நேரம் கூட நல்லா குளிச்சிருக்கலாம் எல்லாம் இந்த அம்மாவால. கடைசில ரொம்ப நேரம் குளிச்சேன்னு சோறு கூட போடாம தொரத்தி விட்டுட்டாங்க ப்ச்..!!" என்று மனதில் புலம்பியபடி அங்கு வந்து சேர்ந்தாள் சித்தாரா.

கோபத்தில் வேகமாக வாசலை நோக்கி வந்தவன் இவள் வருவதை கவனிக்காமல் இடித்து விட, தாயை மனதில் வறுத்தெடுத்தபடி வந்த சித்தாராவும் இவனை கவனிக்காமல் இடித்து விட, இடித்த வேகத்தில் அப்படியே பின்னால் சரிந்தவள் பேலன்ஸ் இல்லாமல் "பொத்..!!" என்று அப்படியே தரையில் விழுந்தாள்.

விழுந்தவளோ "அய்யோ..!! அம்மா..!! இடுப்பு போச்சே..!!" என்று வலியில் கத்த அதை அலட்சிய பார்வையுடன் பார்த்தான் சர்வா.

அதை பார்த்த இவளுக்கோ பத்திக்கொண்டு வர "பார்க்குறான் பாரு கல்நெஞ்சக்காரன், விழுந்தாளே பாவம் எழுப்பி விடுவோம்னு ஒரு மனிதாபிமானம் இருக்கா...?? மனசாட்சி இல்லாத ஜென்மம்..!!" என்று அவனுக்கு கேட்கும் வண்ணம் முனங்கியவள். கஷ்டப்பட்டு தானே எழுந்து நிற்க முயல அவனோ அதில் எரிச்சலுற்று பொறுமை இன்றி அவளை கடந்து சென்று விட்டான்.

ஒருவாறு தட்டுத்தடுமாறி அவள் எழுந்து நிற்க அவளை உரசுவது போல வந்து வண்டியை நிறுத்திய சர்வா பிரேக்கை பிடித்த வண்ணம் ஆக்சிலேட்டரை வேகமாக முறுக்க அதுவோ அவனை போலவே "ர்ரூம்.. ர்ரூம்..!!" என்று உறுமியது.

அவளோ வலியில் அவனை பார்த்தவண்ணம் நிற்க அதை கண்டு கொஞ்சமும் மனம் இறங்காதவன் "வர்றீயா இல்ல நான் போட்டுமா..??" என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கடுகடுவென கேட்க.

"கடங்காரன் கடங்காரன்..!! வேணும்னே இப்பிடி பண்ணுறான்...!!" என்று மனதில் கடுப்புடன் நினைத்தவளுக்கு அவனை தவிர தற்போது வேறு எந்த வழியும் இல்லை. நேரம் ஆகி விட்ட காரணத்தால் தந்தையும் மாமாவும் ஆபிஸ்சுக்கு சென்றிருக்க, அவர்களிடம் உதவி கேட்க முடியாத நிலை. வீட்டில் பல கார்கள் இருந்தாலும் முதல் நாள் காலேஜுக்கு தனியாய் போக ஏனோ மனம் ஒப்பவில்லை.

வேறு வழியில்லாமல் அவன் பைக்கில் கஷ்டப்பட்டு ஏறிய அவள் அமர்ந்த நொடி விருட்டென்று வேகமாய வண்டியை செலுத்தியிருந்தான்.

எடுத்ததும் வேகமாக அவன் வண்டியை செலுத்தியதில் பின்னே சென்றவள் எங்க விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் தன் முன்னே இருந்த சர்வாவின் சட்டையோடு சேர்ந்து அவன் தோள்பட்டையை அழுத்தமாக பிடித்துக்கொள்ள அதை உணர்ந்த இந்த கல்நெஞ்சக்காரனோ அப்போதும் பைக்கின் வேகத்தை குறைத்தான் இல்லை.

இவனது இந்த வேகத்தில் அரைமணிநேரத்தில் அடையவேண்டிய கல்லூரியை கால் மணிநேரத்தில் வந்து அடைந்து விட.

ஒருவழியாய் பார்க்கிங் ஏரியாவிற்கு சென்று சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்.

உயிர் போய் உயிர் வந்த நிலை சித்தாராவுக்கு. ஒருவாறு பைக்கில் இருந்து தட்டுத்தடுமாறி இறங்கியவளுக்கு தலை கிறு கிறுவென சுற்றி அதில் தன் தலையை அழுத்தமாக பற்றியவள் கண்களை ஒருமுறை அழுத்தமாக மூடி தலையை சிலுப்ப இப்போது சற்று தெளிவு வந்ததே போல தோன்றியது அவளுக்கு.

நல்லவேளை குதிரை வால் கொண்டை போட்டிருந்ததால் அவள் முடி தப்பியது இல்லை என்றால் அவன் வந்த வேகத்தில் அவளது முடி எல்லாம் அலங்கோலமாகி இருக்கும்.

"மனுஷனாடா நீ..!! இப்படி தான் வேகமாக வண்டியை ஓட்டிட்டு வருவியா..?? எங்கயாச்சும் விழுந்து வாரி இருந்தா என்ன ஆகிருக்கும்னு கொஞ்சமாச்சும் நினைச்சு பார்த்தியா..?? நீ சாகணும்னா நீ போற டைம் மட்டும் ஸ்பீடா போக வேண்டியது தானே டா, என்னை கூட்டிட்டு போகும்போது ஏன் டா பைத்தியக்காரன் போல ஓட்டுற..!!" என்று படபடவென அவள் பொரிய.

அதில் அவளை நக்கலுடன் ஏறிட்ட சர்வா "முதல் நாள் காலேஜுக்கு என் கிட்ட அடிவாங்கிட்டு அழுதுட்டே போகணும்னு ரொம்ப விரும்புற போல சரி உன் ஆசையை நிறைவேற்றிட்டா போச்சு..!!" என்றவன் கைகளை முறுக்கி சுழற்றியபடியே அவளை நெருங்க.

"ஆஹா..!! படுபாவி பய அடிச்சாலும் அடிச்சிடுவான் போலயே, சித்தாரா இனி ஒரு நிமிஷம் இங்க நின்னா கூட உன் உசுருக்கு உத்தரவாதம் இல்லை விடு ஜூட்..!!" என்ற மனதுக்குள் நினைத்தவள் அப்போதும் மனம்கேட்காமல் "போடா எருமை..!!" என்று போறபோக்கில் சொல்லிவிட்டு செல்ல.

"அடங்காபிடாரி..!! எவ்வளவு பட்டாலும் திருந்தமாட்டா" என்று போகும் அவளை பார்த்து கோபத்துடன் முணுமுணுத்தவன் எரிச்சலுடன் தனது கிளாசை நோக்கி சென்றான்.

இங்கு தனது கிளாசை தேடிக்கொண்டிருந்த சித்தாராவோ அதை கண்டு பிடிக்க முடியாமல் சர்வாவை வறுத்தெடுத்துக்கொண்டு இருந்தாள் .

"கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா இவனுக்கு.பாவம் சின்ன பொண்ணு புது காலேஜ் அதுவும் பஸ்ட் டே வேற. தனியா என்ன பண்ணுவாளோ கொஞ்சம் கிளாஸ் எங்க இருக்குன்னாச்சும் சொல்லுவோம்னு ஒரு அக்கறை இருக்கா...?? கல்நெஞ்சக்காரன்..!!" என்று மனதில் வறுத்தெடுத்தபடியே வர

அச்சமயம் அவளை கடந்து சென்ற ஒரு மாணவனை கண்டவள் "சரி இந்த பையன் கிட்ட வழி கேட்போம்..!!" என்று எண்ணியவள் அந்த மாணவனை "ஹலோ..!!" என்று அழைக்க அவனோ அதை கவனிக்கவில்லை

அதில் இவளோ மீண்டும் மீண்டும் அவனை அழைக்க பாவம் அவன் காதில் இவளது அழைப்பு விழவில்லை போல அதில் கடுப்பானவள் "ஹே மஞ்ச கலர் சட்ட..!!" என்று கத்த அதில் அங்கு சென்று கொண்டிருந்த சில மாணவர்கள் இவளை ஒருமாதிரி திரும்பி பார்க்க அதை கண்டுகொள்ளாதவள் இப்போது தன் அழைப்பில் திரும்பியவனை பார்த்து "உன்னை தான்..!!" என்று அவனது நடையை நிறுத்த.

அந்த மாணவனோ இவளை புருவம் சுருக்க பார்த்தபடி இவள் அருகில் வர "உன்னை எத்தனை வாட்டி கூப்பிட்றது..!! லாஸ்ட்ல உன் டீ சர்ட் கலர் சொன்ன அப்புறம் தான் திரும்புன..!!" என்று கூற

"சாரி நான் கவனிக்கல..!!" என்றான் அவன்.

"சரி விடு இங்க பஸ்ட் இயர் ஐ.டி டிபார்ட்மென்ட் எங்க இருக்கு தெரியுமா..?" என்று கேள்வி எழுப்ப

"யா நானும் அந்த டிபார்ட்மென்ட் தான் வா கூட்டிட்டு போறேன்..!!" என்று கூற

அதில் மகிழ்ந்தவள் "ஹே வாவ், சூப்பர்ல எங்க எனக்கு பிரெண்ட்ஸ் கிடைக்க மாட்டாங்களோன்னு நினைச்சிட்டே இருந்தேன். நல்ல வேளை நீ கிடைச்சிட்ட..!!" என்றவள் அவன் முன் தன் கையை நீட்டி "நான் சித்தாரா ..!!" என்று மலர்ந்த புன்னகையுடன் சொல்ல.

அதில் அதுவரை அவளது செய்கை அனைத்தையும் "லூசா இவ..!!" என்பது போல பார்த்த அந்த மாணவன் அவள் கைநீட்டியதை ஒரு நொடி பார்த்துவிட்டு "அக்னி தேவ்..!!" என்று அழுத்தமாக கூறி அவளது கைகளை பற்றி குலுக்கினான்.

தொடரும்.
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 6

27382


"அக்னி தேவ்..!! ப்பா பெயரே ரொம்ப மாஸா இருக்கே..!!" என்று இரு புருவத்தை வியப்பில் உயர்த்தி சிறு குழந்தை போல அவள் சொல்ல.

அதில் அதுவரை இறுக்கமாக இருந்த தன் இதழை பிரித்து மென்மையாக புன்னகைத்த அவன் அவளை நோக்கி "சரி கிளாசுக்கு போகலாமா டைம் ஆச்சு..!!" என்று சொல்ல.

அதில் "ஸ்ஸ்ஸ்..!! ஆமால நான் மறந்திட்டேன்..!! சரி வா போகலாம்..!!" என்று கூறியவள் அவனுடன் இணைந்து கிளாசுக்கு சென்றாள்.

கிளாசில் அவனருகில் இருந்த இருக்கை காலியாக இருக்க அதிலயே அமர்ந்து கொண்டாள்.

வகுப்பும் தொடங்க அவள் புதிதாக சேர்ந்துள்ளமையால் அவளது அறிமுக படலம் நடந்து முடிந்தது.

முதல் இரண்டு வகுப்பு முடிந்ததும் இன்டர்வல் வர அக்னியுடன் இணைந்து கேன்டீனை நோக்கி சென்றாள்.

அதே சமயம் தன் நண்பன் விக்கியுடன் கேன்டீனை நோக்கி வந்து கொண்டிருந்த சர்வா அங்கு சித்தாரா அக்னியுடன் இணைந்து இருப்பதை பார்த்து கோபத்தில் பல்லை கடித்தான்.

"இவளை..!!" என்று கூறி பல்லைக்கடித்த சர்வாவை குழப்பமாக பார்த்த விக்கி நண்பனின் பார்வை போகும் திசையை பார்த்தவாறு "என்ன மச்சான் ஆச்சு..??" என்று புரியாது கேட்க..

அதற்கு பதில் கூறாத சர்வா விருவிருவென சித்தாராவை நோக்கி செல்ல.இவனது செய்கை புரியாமல் அவனுடனே சென்றான் விக்கி.


நேரே சித்தாரா அருகில் சென்றவன் "ஏய் எந்திரி டி..!!" என்று எடுத்ததும் அதட்ட.
அவனது திடீர் அதட்டலில் பயந்தவள் தன்னை நிலைப்படுத்தியவாறு அவனை நிமிர்ந்து பார்க்க

அவனோ இவளை கடுஞ்சினத்துடன் முறைத்தவாறு "உன்னை எந்திரிக்க சொன்னேன் ..!!" என்று சொல்ல.

அவனது இந்த வித்தியாசமான செய்கையில் முழித்த சித்தாரா அவனது கோப முகத்தை பார்த்து பயத்தில் எந்திரிக்க போக அவளை எழும்ப விடாதவாறு அவளது கையை இறுக்கமாக பற்றிக்கொண்டான் அக்னி.

அதில் அவள் திரும்பி அக்னியை பார்க்க அவனோ சர்வாவை அழுத்தமாக பார்த்துக்கொண்டே "நீ உக்காரு சித்தாரா..!!" என்று அழுத்தமாக சொல்ல

அவ்வளவு தான் சர்வாவுக்கு இருந்த பொறுமை எல்லாம் பறந்து போய் விட்டது.

சித்தாராவை நெருங்கியவன் அவளது கைகளை விடாப்பிடியாய் பிடித்து தன் புறம் இழுக்க.

அவனது இந்த முரட்டுத்தனமான செய்கையில் தன் பிடியை விலக்கினான் அக்னி.

சித்தாரா நடப்பது புரியாமல் சர்வா பொது இடத்தில் அனைவர் முன்னிலையிலும் இப்படி நடப்பது பிடிக்காமல் எரிச்சலுடன் அவனை ஏறிட.

அவனோ இவளை தன் அருகில் நிற்கவைத்து விட்டு அக்னியை ஒரு சூடான பார்வை பார்த்த படி "இனிமே நீ அவன் கூட கூட்டு சேரக்கூடாது மீறி சேர்ந்த அப்புறம் இந்த சர்வாவை எதிரியா தான் பார்ப்ப..!!" என்று தடாலடியாக சொல்ல.

அதில் அவனை "லூசா இவன்..!!" என்பது போல பார்த்த சித்தாரா.

அவனை பார்த்து பொறுமையாய் "முடியாது..!!" என்று அழுத்தமாக கூற.

அதில் வெகுண்டவன் அவளை கோபமாக பார்த்து "அவன் என்னோட எதிரி டி..!!" என்று உறும.

அதில் அவனை கடுப்புடன் ஏறிட்டவள் "சோ வாட்..?? உனக்கும் அவனுக்கும் தானே பிரச்சனை அதுல நான் ஏன் அவன் கிட்ட பேசக்கூடாது. மோர் ஓவர் ஹி இஸ் மை பிரண்ட் சோ நான் அவன் கிட்ட கண்டிப்பா பேசுவேன் பழகுவேன் ...!!" என்று அழுத்தமாக கூற.

முகம் கறுத்து விட்டது சர்வாவுக்கு.

அதுவும் அக்னி முன்னே அவள் தன்னை எடுத்தெறிந்து பேசியதை மிக அவமானமாய் உணர்ந்தான் அவன்.

இவளது இந்த செய்கையில் மேலும் மேலும் அவனுக்கு அவள் மேல் உள்ள வன்மம் கூடிக்கொண்டே போக அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்.

விக்கிக்கோ தலையும் புரியாத வாலும் புரியாத கதை தான் எதற்கு நண்பன் இப்போது அங்கு போனான் எதற்கு எந்த பெண்ணிடம் அப்படி நடந்து கொண்டான் என்று தெரியாமல் மீண்டும் இப்போது சர்வாவுடன் திரும்பினான்.

இங்கு சித்தாராவோ எரிச்சலுடன் மீண்டும் இருக்கையில் அமர அவளிடம் எதுவுமே கேட்கவில்லை அக்னி.

ஆனால் சிறிது நேரத்தில் தன்னை நிலைப்படுத்தியவள் அக்னி புறம் திரும்பி "உனக்கு அவனுக்கும் என்ன பிரச்சனை..??" என்று கேட்க

அதில் ஒரு நொடி இறுகினாலும் நடந்த அனைத்தையும் சொன்னான் அக்னி (அக்னி வேறு யாரும் அல்ல சர்வாவால் அடிபட்டு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்க பட்டிருந்தவன் தான்..!!")

அக்னி மூலம் அனைத்தையும் கேட்டுத்தெரிந்தவளுக்கு அனைத்தும் விளங்கி போனது சர்வா ஏன் இவன் மேல் கோபம் கொள்கிறான் என்று.

சிறுவயது முதலே சர்வாவுக்கு மரியாதை குறைவாய் பேசினால் பிடிக்காது அப்படி இருக்கும் போது அக்னி மரியாதை இல்லாமல் பேசியதில் கோபம் கொள்ள பதிலுக்கு அக்னி கோபம் கொள்ள என ஒன்றும் இல்லாத விஷயத்தை கடைசியில் ஊதி பெருசாக்கி விட்டுருக்கின்றனர்.

இவர்கள் சண்டையில் நம்மால் ஒன்றும் பண்ண முடியாது என்று எண்ணியவள் அமைதியாய் தன் முன்னே இருந்த பப்சை சாப்பிட ஆரம்பிக்க.

அக்னியோ சற்று தயங்கியவாறு "சர்வா உனக்கு தெரிஞ்சவனா..??" என்று கேட்க

பப்சை வாயில் அடைத்தபடியே "ஆமா..!! ஆமா..!! அவன் என் அத்தை பையன் தான்..!!" என்று சொல்ல

அதில் சற்று அதிர்ந்தாலும் அதை வெளியில் காட்டிக்கெள்ளாதவன் "ஓ அதனால தான் அவன் கிட்ட தைரியமா சண்டை போட்டியா..??" என்று ஒருமாதிரியான குரலில் கேட்க

அதை உணராதவள் "அவன் கிட்ட சண்டபோட நான் எப்பவும் பயப்படமாட்டேன். சொல்லபோனா எனக்கும் அவனுக்கும் சுத்தமா ஆகாது..!! அவனுக்கு உன் கூட பிரச்சனைனா அவன் பேசாம இருக்குறதுல ஒரு நியாயம் இருக்குது ஆனா நான் ஏன் அப்படி இருக்கணும் அதான் அவன் கிட்ட சொன்னேன்..!!" என்று சொல்ல

சர்வாவுக்கும் இவளுக்கும் ஆகாது என்று சித்தாரா சொன்னதை கேட்ட பிறகு தான் அக்னிக்கு சித்தாராவுடன் நட்பு பாராட்ட வேண்டும் என்ற எண்ணமே வந்தது.

மாலை காலேஜ் முடிந்தவுடன் சர்வா சித்தாராவின் மீது உள்ள கோபத்தில் அவளை விட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுவிட.

அதில் அவனை மீண்டும் வசை பாடியவள் வேறு வழியில்லாமல் அக்னியுடன் வீட்டை வந்து அடைந்தாள்.

தன்னை வீட்டில் விட்டதும் கிளம்ப நின்றவனை வீட்டினுள் அழைத்துவந்தவள் அவனை தன் தாய் தந்தையரிடம் அறிமுகப்படுத்தி வைக்க பேச்சுவாக்கில் பன்னிரண்டாம் வகுப்பில் ஸ்டேட் பஸ்ட் வாங்கிய மாணவன் நான் என்பதை அக்னி சொல்ல அவ்வளவு தான் அக்னியை மிகவும் பிடித்து விட்டது ஆனந்திற்கு.

கூடவே பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் சித்தாரா செய்த திருட்டு தனத்தை பற்றி அவனிடம் கூற.

அதை கேட்டு சின்ன புன்னகை சிந்தியவனிடம் அவனது குடும்பத்தை பற்றி விசாரிக்க.

அதில் தான் அவன் சென்னை கமிஷ்னர் "அக்னி ராஜ்"ஜின் மகன் என்பது தெரியவந்தது.

அதை கேட்டு அவனை மேலும் மதிப்புடன் பார்த்த ஆனந்த் அவனை நன்கு உபசரிக்க சிறு புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டவன் தனக்கு நேரமாவதை உணர்ந்து அவர்களிடம் இருந்து விடை பெற்றான்.

அவனை கேட் வெளியே வந்து சித்தாரா வழி அனுப்பி விட அதே நேரம் தனது பைக்கில் வீட்டை வந்து அடைந்த சர்வா இவர்கள் இருவரையும் பார்த்து வெறுப்புடன் தனது வீட்டினுள் நுழைந்தான்.

அவனுக்கோ ஆத்திரம் அடங்கவே இல்லை "தான் அவ்வளவு சொல்லியும் என்ன நெஞ்சழுத்தம் இருந்தால் அவனை வீட்டிற்கே அழைத்து வந்திருப்பாள்." என்று நினைத்து நினைத்து அவள் மேல் கோபத்தை வளர்த்திக்கொண்டே சென்றான்.

இங்கு அவனை வழியனுப்பி விட்டு வீட்டினுள் நுழைந்த சித்தாராவோ தனது அன்னையிடம் "ம்மா அவ எப்ப மா இங்க வருவா..?? அவ இல்லாம ரொம்ப போர் அடிக்குது. அவளை சீக்கிரம் வர சொல்லு மா..!!" என்று சொல்ல.

"ப்ச், அவ தான் முதலிலேயே தெளிவா சொல்லிட்டாளே டி ஸ்கூல் ரியோப்பன் ஆகுற டைம்க்கு இரண்டு நாள் முன்னாடி வந்திடுறேன்னு. சின்ன வயசுல இருந்து பாட்டி தாத்தா கிட்ட ரொம்ப குளோசா இருந்தவ டி அவ கொஞ்ச நாள் அவங்க கூட இருந்துட்டு வரேன்னு தானே சொல்லுறா..!! இருக்கட்டுமே, எப்படியும் இங்க வந்தாலும் ஸ்கூல் திறக்குற வரை சும்மா தான் இருக்க போறா அதுக்கு அவ கொஞ்ச நாள் தாத்தா பாட்டி கூட இருக்கட்டுமே..!!(கிராமத்தில் இவர்கள் வீட்டு அருகில் உள்ள தூரத்து சொந்தம். ஆனந்திற்கும் சீதா லஷ்மிக்கும் சித்தி சித்தப்பா முறை)" என்று சொல்ல.

"ம்மா அவ இல்லாம ஏதோ போல இருக்கு மா..!!" என்று சிணுங்க

"ப்ச்..!! சின்ன புள்ளையாட்டும் இருக்காத சித்தாரா கொஞ்ச நாள் உன் தங்கச்சிய பிரிஞ்சு இருக்க மாட்டியா..??"என்று கேள்வி எழுப்ப.

"உனக்கென்ன அக்கா தங்கச்சி கூட பொறந்திருந்தா என் வலி தெரிஞ்சிருக்கும் நீ போ..!! நான் அவ கிட்டையே பேசிக்கிறேன்..!!" என்று சொன்னவள் தனது போனை எடுத்து தனது தங்கைக்கு அழைப்பு விடுத்து பேச.

இவளது தொடர் கெஞ்சலின் பயனாய் நாளை சென்னை வருவதாய் சொன்னாள் அவளது உடன் பிறந்த தங்கை.

தங்கை வரும் செய்தியை சந்தோஷமாய் வீட்டில் சொல்ல அவளை அழைத்துவர வேண்டி உடனே ஊர் நோக்கி கிளம்பினார் ஆனந்த்.

தங்கை வரும் சந்தோஷத்தில் சர்வாவின் கோபத்தை சுத்தமாக மறந்து இவள் இருக்க.

அங்கு தனது அக்காவை காண போகும் சந்தோஷத்தில் தனது உடமைகளை எல்லாம் அடுக்கி வைக்க தொடங்கினாள் அவள் "கண்மணி..!!" இந்த வருடம் ஒன்பதாம் வகுப்பில் அடி எடுத்து வைக்கப்போகும் டினேஜ் பெண்.

தொடரும்.
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 7

27467


அன்று கண்மணி வரும் நாள் அதனால் என்னமோ மிக சீக்கிரமாய் கண்விழித்து விட்டாள் சித்தாரா..!!

காலையிலேயே தூக்கம் எழுந்த கையோடு கிச்சனுக்குள் நுழைந்தவளை "குளிச்சிட்டு கிச்சனுக்குள்ள வான்னு எத்தனை தடவ டி உனக்கு சொல்லுறது..!! என் பேச்சை கேட்கவே மாட்டியா " என்று எப்போதும் போல அவளது தாய் சந்திரா கத்த அதை காதிலேயே வாங்காத சித்தாரா

"ப்ச் ம்மா காலையிலேயே கத்தாத..!!" என்று கடுப்புடன் முனங்கியவள் "இன்னைக்கு கண்மணிக்கு புடிச்ச சாப்பாடு பண்ணுறேன்னு நிறைய பண்ணி வைக்காத. பண்ணாலும் வேஸ்ட் , அதை அவ சாப்பிட போறது இல்லை. பிகாஸ் நாங்க ரெண்டும் பேரும் சேர்ந்து இன்னைக்கு வெளிய போக போறோம் அங்கையே சாப்பிட்டுப்போம் வீட்டுக்கு வர லேட்டா ஆகும் இப்பவே சொல்லிட்டேன்..!!" என்று சொல்ல

அதை கேட்டு அவளை கோபமாக முறைத்த சந்திரா கடுப்புடன் "என்னமோ பண்ணி தொலைங்க. எனக்குன்னு வந்து வாச்சிருக்கு பாரு இரண்டு குட்டி பிசாசுங்க..!!" என்று திட்டியவாறு அடுப்பை அணைக்க

தாயை பளிச்சென்ற புன்னகையுடன் பார்த்த சித்தாரா அங்கு அவளுக்காக வைக்கப்பட்டிருந்த காபியை ஒரே மடக்கில் குடித்து விட்டு அங்கிருந்து அகன்றுவிட்டாள்.

சிறிது நேரத்தில் பீம்..!! பீம்..!! என்ற தந்தையின் கார் சத்தத்தில் பல நாட்கள் கழித்து தங்கையை பார்க்க போகும் ஆவலில் வேகமாக வாசலை நோக்கி ஒடியவள் தங்கையை பார்த்த மகிழ்ச்சியில் "கண்மணி..!!" என்று கூவியபடி அவளருகில் ஓடி சென்று அவளை கட்டிக்கொள்ள பதிலுக்கு அவளை சந்தோஷத்துடன் அணைத்துக்கொண்டாள் கண்மணி.

சொன்னது போலவே அக்கா தங்கை இருவரும் அன்று முழுவதும் ஊர் சுற்றி மாலை நேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர்.

ஹாலில் அமர்ந்திருந்த ஆனந்திற்கு டீயை கொடுத்து விட்டு நிமிர்ந்த சந்திரா அப்போது தான் வீடு வந்து சேர்ந்த மகள்களை கண்டு முறைத்தபடி "எவ்வளவு நேரம் டி உங்களுக்கு ஊர் சுத்த வேணும்...!! கொஞ்சம் சீக்கிரம் வந்தா குறைஞ்சா போயிடுவீங்க..?? சரி சரி அப்படியே சீதா அண்ணி வீட்டுக்கா கிளம்புங்க காலைல இருந்தே கண்மணி எங்கன்னு கேட்டிருந்தாங்க. நீங்க வெளிய போயிருக்க விஷயத்தை சொன்னதும் வீட்டுக்கு வந்த உடனே உங்க இரண்டு பேரையும் அங்க வர சொன்னங்க. டின்னரையும் அங்கையே முடிச்சிட்டு வந்திடுங்க, உங்க அத்தை சொன்னதால நான் எனக்கும் அப்பாக்கும் மட்டும் தான் டின்னர் பண்ணியிருக்கேன்..!!" என்று சொல்ல.

அதை கேட்ட பெண்களுக்கு கசக்கவா செய்யும் உடனே துள்ளி குதித்து ஓடினர் தங்கள் அத்தையின் இல்லம் நோக்கி.

வந்தவர்களை வரவேற்ற சீதா அவர்களுடன் சிறிது நேரம் சந்தோஷமாய் பேச அவருடன் வந்த விஷ்வநாத்தும் பாசத்துடன் அவர்களிடம் நலம் விசாரித்தார்.

அச்சமயம் "ஹலோ கண்மணி மேடம்..!! எப்பிடி இருக்கீங்க.?? இப்ப தான் உங்களுக்கு இங்க வர வழி தெரிஞ்சிதா..??" என்று கேலியாக கேட்டபடி வந்ததது வேறு யாரும் அல்ல சாட்சாத் நம் சர்வாவே தான்.

அவனை பார்த்ததும் மகிழ்ந்த கண்மணியோ "ஹே அத்தான்..!!" என்றபடி அவனை நோக்கி ஓட அதில் சிரிப்புடன் அவளை நோக்கி வந்தவன் அப்படியே அவளை தன் தோளோடு அணைத்து விடுவித்தான்.

இதை கண்டு உதட்டை சுழித்த சித்தாராவோ "என்ன இன்னைக்கு பாச மழை ரொம்ப ஹெவியா இருக்கு..!!" என்றவாறு பார்க்க

"எப்பிடி டி இருக்க..?? ரொம்ப நாள் பார்க்காம ஆளே அடையாளம் தெரியல பெரிய பொண்ணா வளர்ந்திட்ட போ..!! என்று சொல்ல.

அதை கேட்ட சித்தாராவோ " அவ்வா..!! எப்பிடி வாய் கூசாம புளுகுறான் பாரு..!! போன மாசம் தான் அவ இங்க வந்து தங்கிட்டு போனா..!! அவ இங்க தங்கிட்டு ஊருக்கு வந்த அப்புறம் தான் நாங்களே வந்தோம் இதுல இந்த நாய் மனசாட்சியே இல்லாம எப்பிடி பொய் சொல்லுறான் பாரு. சரியான புளுகினி மூட்ட..!!" என்று மனதுக்குள் அவனை நினைத்து கடுப்புடன் முணுமுணுக்க.

அங்கு அவனோ "ஆனாலும் கொஞ்சம் மெலிஞ்சிட்டது போல இருக்க கண்மணி" என்று சொல்ல

அதில் சித்தாராவோ "லூசா டா நீ..!! இப்ப தானே அவ வளர்ந்திட்டானு சொன்ன அதுக்குள்ள மெலிஞ்சிட்டானு சொல்லுற..!! இவன் என்ன ஒவ்வொரு வாட்டியும் மாத்தி மாத்தி சொல்லுறான். சரியான கிறுக்கனா இருப்பான் போல..!!" என்று மனதுக்குள் முணுமுணுத்தவாறு அவனை கேவலமான ஒரு லுக்குடன் பார்த்தாள்.

அவன் கூறியதை கேட்டு சிணுங்கிய கண்மணியோ அவனை பார்த்து அதே சிணுங்கலுடன் "அத்தான்..!! நான் டயர்ட்ல இருக்கேன், அதான் இளைச்சிட்டது போல தெரியுது..!!" என்று சொல்ல

இப்போதும் இதை கேட்டு நெஞ்சிலே கை வைத்து விட்டாள் சித்தாரா அவளது மனக்கண்ணிலோ இன்று கண்மணி தன்னுடன் சேர்ந்து உணவை பாரபட்சமே பார்க்காமல் வெளுத்துக்கட்டியது எல்லாம் நினைவில் வந்து மின்னி மறைய அதில் தங்கையை பார்த்தவளது வாயோ "அடிப்பாவி..!!" என்று தானாய் முணுமுணுத்தது.

அதற்குள் அவர்களை சீதா சாப்பிட அழைக்க.

கண்மணி அருகில் இருந்த இருக்கையிலேயே அமர்ந்த சர்வா அவளது தட்டில் தானே சாப்பாட்டை சிறிது அதிகம் வைத்தபடி "நல்லா சாப்பிடு கண்மணி, இந்த வயசுல நல்லா சாப்பிடணும். டயர்ட் இருக்கறதுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்கு சோ இப்ப நல்லா சாப்பிடு..!!" என்று சொல்லி அவளுக்கு பிடித்த சிக்கனையும் அவளது பிளேட்டில் அதிகம் வைக்க.

அதில் "அத்தான்..!!" என்று சிணுங்கினாலும் பத்து நிமிடத்தில் சமத்தாய் பிளேட்டை காலி செய்திருந்தாள் கண்மணி.

பின் எல்லாரும் சாப்பிட்டு முடிக்க. விஷ்வாநாதிற்கு தலைவலி என்ற காரணத்தால் அவருடன் சேர்ந்து அவருக்கு மருந்து கொடுக்க சீதாவும் அறைக்குள் சென்றார்.

இங்கு சர்வாவும் கண்மணியும் சிரித்து சிரித்து கதை பேச கூடவே சர்வாவின் மொபைலை எடுத்து அதில் இருந்த ஃபிரீ பயரை பார்த்தவள் கண்கள் மின்ன அவனிடம் அதை கற்றுகொடுக்குமாறு கேட்க அவனும் புன்னகையுடன் அதை அவளுக்கு சொல்லி கொடுத்தான்.

இப்படி இவர்கள் சிரித்து சிரித்து பேசியபடி இருக்க அங்கு தனித்து விடப்பட்டது என்னமோ சித்தாரா தான்.

வந்ததில் இருந்து அவளை ஒரு மனுஷியாக மதித்து கூட தன் பார்வையை அவள் புறம் திருப்பவில்லை அல்லவா சர்வா..!!

அவளுக்கு நேரம் செல்ல செல்ல கடுப்பு கூடிக்கொண்டே போக தங்கைக்காக அமைதியுடன் அமர்ந்திருந்தாள்.

அச்சமயம் ஆர்வத்துடன் கேம் விளையாடியபடி இருந்த கண்மணி எதேர்ச்சியாய் நிமிர அப்போது தான் அவள் அக்கா அவள் கண்ணில் பட்டாள். அதிலும் அவள் தனியாய் அமர்ந்திருக்க "அச்சோ பாவம் அக்கா, நான் ஒரு லூசு அத்தானை பார்த்த சந்தோஷத்துல எல்லாத்தையும் மறந்திட்டேன்..." என்று தன்னை தானே கடிந்தபடி.

"சித்து இங்க வா டி..!! நம்ம ஃபிரீ பயர் விளையாடலாம் ரொம்ப ஜாலியா இருக்கு..!!" என்று சொல்ல

அதை கேட்ட சித்தாராவுக்கோ உள்ளே லேசாய் ஆசை எட்டி பார்க்க தான் செய்தது.

சிறு வயதிலேயே படிப்பில் கண்டிப்பாய் இருந்த ஆனந்த் சித்தாராவின் செயலை பார்த்து அவளுக்கு பள்ளி பருவத்தில் ஃபோன் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தவே இல்லை.

அவளுக்கு உடன் பயிலும் தோழர் தோழிகள் எல்லாம் ஃபோன் உபயோகிப்பதை பார்த்து தானாய் அதன் மேல் ஆசை எழ.

அதை கவனித்த ஆனந்தும் சரி பள்ளி படிப்பு முடிந்ததும் அவளுக்கு வாங்கி கொடுக்கலாம் என்று நினைத்திருக்க.

அதற்கு சொந்த செலவிலே ஆப்பு வைத்துக்கொண்டாள் சித்தாரா ஆம் பன்னிரெண்டாம் வகுப்புத்தேர்வில் மிகமோசமான மதிப்பெண் அல்லவா எடுத்தாள்.

அதில் கொதித்து போன ஆனந்த் ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்க நினைத்த தனது முடிவை மாற்றி பட்டன் போன் வாங்கி கொடுத்தார்.

தன் நிலையை எண்ணி நொந்த சித்தாரா வேறுவழியின்றி கடுப்புடன் அதை வாங்கிக்கொண்டு காலேஜிற்கு செல்ல.

அவளுடன் காலேஜில் படிக்கும் மாணவர்களோ "டேய் அவனை சுடு டா..!!! இவனை சுடு டா..!! உன் பின்னாடி பாரு டா...!! அந்த கன்னை யூஸ் பண்ணு டா..!! என்று கத்தியபடி ஃபோனில் ஃபிரீ பயர் என்னும் ஒரு வகை கேம்மை விளையாட.

அந்த கேம்மோ சித்தாராவை வெகுவாய் ஈர்த்து விட்டது.

இன்று அதே கேம்மை தன் தங்கை விளையாடிக்கொண்டிருக்க மேலும் தன்னையும் அதனை விளையாடுமாறு அழைக்க.

அதில் தனக்கும் சர்வாவுக்கும் இருந்த சண்டையை மறந்த அவளோ சந்தோஷத்துடன் அவர்களை நோக்கி செல்ல.

அவள் வருவதை கண்ட சர்வாவோ சட்டென்று கண்மணியிடம் இருந்த ஃபோனை வாங்கிவிட்டு "சார்ஜ் தீந்திடிச்சு கண்மணி..!!" என்று சொல்ல அவனுக்கோ தான் அவ்வளவு சொல்லியும் சித்தாரா அக்னியுடன் பேசிய கடுப்பு அதனாலே அவளை பழிவாங்கவே இப்படி வேண்டுமென்றே சொன்னான்.

அவர்களை நோக்கி வந்த சித்தாராவுக்கு நன்றாக புரிந்து விட்டது அவன் வேண்டும் என்றே தான் இப்படி சொல்கிறான் என்று.

உடனே அவள் முகம் கறுக்க தன் நடையை நிறுத்தாது வேகமாக அவர்கள் அருகில் சென்றவள் சர்வாவின் முகத்தை கொஞ்சமும் பார்க்காமல் "கண்மணி வா வீட்டுக்கு போகலாம்..!!" என்று சொல்ல.

இவர்களின் பனிப்போரை அறியாத கண்மணியோ "ஏன் சித்து க்கா இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே..!!" என்று கெஞ்சலுடன் கேட்க.

அதை காதிலேயே வாங்காத சித்தாராவோ "இப்ப நீ வரியா இல்லை..!!"என்று அழுத்தமாக கேட்க


அதில் வெகுண்ட சர்வாவோ "ஹே உனக்கு என்ன டி பிரச்சனை அவ தான் கொஞ்ச நேரம் இருக்குறேன்னு சொல்லுறா இல்லை, உனக்கு போகணும்னா நீ போடி. தேவை இல்லாம அவளை எதுக்கு டி போர்ஸ் பண்ணுற..!!" என்று காட்டமாக கூறி அப்போது தான் அவளிடம் பேசவே செய்தான்.

சித்தாராவோ அவனது குரலுக்கு சிறிதும் செவி சாய்க்காமல் "வா கண்மணி கிளம்பலாம் ..!!" என்று தங்கையிடம் சொல்ல.

"ஹே நான் இங்க பேசிட்டு இருக்கேன் நீ என்னடானா திரும்ப திரும்ப அவளை கூட்டிட்டு போறதுலையே குறியா இருக்க..!!" என்று எகிற

நிலமை மோசமாவதை உணர்ந்த கண்மணியோ "ஐயோ அத்தான்..!! இதுக்கு ஏன் டென்ஷன் ஆகுறீங்க..!! இன்னைக்கு இல்லாட்டி நாளைக்கு வர போறேன். அதுவும் இல்லாம இங்க வந்து ரொம்ப நேரம் வேற ஆகிடிச்சு நான் நாளைக்கு வரேன் சரியா ..!!" என்று சமாதானம் படுத்தும் வகையில் சொல்ல

சமாதானம் ஆகாத அவனோ "ஒன்னும் தேவை இல்ல நீ இன்னைக்கு இங்கையே ஸ்டே பண்ணு நான் அத்தை மாமா கிட்ட பேசிக்கிறேன்..!!" என்று சொல்ல

உள்ளே கோபம் பொங்கியது சித்தாராவுக்கு.

ஆனாலும் அதை வெளியில் காட்டாதவள் "இப்போ என் கூட வர்றீயா இல்லையா கண்மணி..!!" என்று கோபத்தை உள் அடக்கிய குரலில் கேட்க

நிலமை மோசமாவதை உணர்ந்த கண்மணியும் உடனே இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள் அக்காளுடன் செல்வதற்கு.

ஆனால் இதை அப்படியே விடுபவனா சர்வா.

"எதுக்குடி இப்போ அவளை மிரட்டுற..!!" என்று சத்தமாக கத்த

அதுவரை பொறுமையாய் இருந்த சித்தாராவுக்கோ தனது பொறுமை பறக்க "அவ என் தங்கச்சி அவளை மிரட்டுறது என்ன அடிக்கவே செய்வேன் அதை கேட்க உனக்கு எந்த உரிமையும் இல்லை ..!!" என்று காட்டமாக சொல்ல.

அவள் கூறிய வார்த்தையோ சுருக்கென்றது சர்வாவுக்கு. அதில் மேலும் அவள் பால் அவனது கோபம் கூட.

"யாருக்கு டி உரிமை இல்லை..!!" என்றபடி அவளது கையை அழுத்தி பற்றியவன் அப்படியே அதை அவள் முதுகுபுறம் முறுக்கி பிடிக்க.

வலி உயிர்போனது சித்தாராவுக்கு ஆனாலும் அதை முகத்தில் காட்டாதவள் பல்லை கடித்தபடி "கையை விடுடா..!!" என்று சீற பதறிய கண்மணியும் "ஐயோ அத்தான் விடுங்க அக்கா பாவம்..!!" என்று சொல்ல.

சரியாய் அச்சமயம் "அவளை விடு சர்வா..!!" என்ற கடினமான சீதாவின் குரல் அவர்களது முதுக்குக்கு பின் ஒலிக்க.

தானாய் தன் பிடியை தளர்த்தினான் சர்வா.

அவன் பிடி தளர்ந்ததும் அவனை தள்ளிவிட்ட சித்தாரா வலித்த தன் கையை உதற. அதில் பதறியபடி வேகமாக அவள் அருகில் வந்த சீதா அவளது கையை தடவி விட்டபடி தன் மகனை சீற்றத்துடன் முறைத்தார்.

"என்ன வேலை டா இது. எங்க இருந்து வந்தது இந்த பழக்கம் இதுவரை இரண்டு பேரும் வாய் சண்டை தான் போட்டுட்டு இருந்தீங்கனு பார்த்தா இன்னைக்கு நீ அவளை அடிக்கிற வரை போயிட்ட...!! யாரு கொடுத்த தைரியம் இது..!!" என்று சீறியவருக்கோ கணவன் மட்டும் இதை பார்த்திருந்தால் நிலமை என்ன ஆகியிருக்கும் என்பதிலேயே சுழல நல்ல வேளை தலைவலி காரணமாய் அவர் இன்று சீக்கிரம் தூங்கியது நல்லதாய் போயிற்று.

"அவ கிட்ட மன்னிப்பு கேளு...!!" மகனை அழுத்தமாக பார்த்தபடி சொல்ல.

தாயின் பேச்சுக்கு கட்டுப்படுபவனான சர்வாவோ தன் கோபத்தை அடக்கியபடி அவளை பார்த்து "சாரி...!!" என்றான் ஆனால் மருந்திற்கும் அவன் கேட்ட சாரியில் வருத்தமோ குற்ற உணர்வோ இல்லை மாறாக அத்தனை கோபத்துடன் வெளிப்பட்டது அவனது சாரி.

சித்தாராவோ அவன் கேட்ட சாரிக்கு ஒரு தலையசைப்பை பதிலாய் கொடுக்க அதில் மேலும் பற்றிக்கொண்டது அவனுக்கு இனி இங்கு இருந்தால் நிலமை தன் கைமீறிவிடும் தேவை இல்லாமல் தன் தாய் மனமும் அதில் கஷ்டப்படும் என்று எண்ணியவன் சட்டென்று அங்கிருந்த படிகட்டுகளில் தாவி தாவி வேகமாக ஏறி தனது அறையை சென்று அடைந்தான்.

போகும் அவனை பெருமூச்சுடன் பார்த்த சீதாவோ சித்தாரா புறம் திரும்பி "அவனுக்காக நான் உன் கிட்ட மன்னிப்பு கேக்குறேன் டா, அவன் ஏன் இப்படி மாறுனான்னு தெரியல முன்ன எல்லாம் வார்த்தைக்கு வார்த்தை சித்து குட்டி சித்து குட்டினு சொல்லுறவன் இப்ப உன்னை கண்டாலே எரிஞ்சு விழுறான். இன்னைக்கு உன் மேல கையே வச்சிட்டான்..!! வர வர நீங்க இரண்டு பேரும் சரியா பேசிக்கிறது கூட இல்லை" என்று வருத்தமாக சொல்ல

தன் அத்தை வருந்துவது தாங்காத சித்தாராவோ "ஐயோ அத்தை நாங்க சும்மா தான் சண்டை போட்டோம்..!! நீங்க நினைக்குறது போல எல்லாம் இல்லை..!! இது சும்மா செல்ல சண்டை போல எனக்கும் அவனுக்கும் சின்ன ஒரு பிரச்சனை அதான் இரண்டு பேரும் இப்போ பேசிக்கிறது இல்லை நீங்க ஒண்ணும் அதை நினைச்சு பீல் பண்ணாதிங்க. நாங்க சீக்கிரமே சரியாகிடுவோம்..!!" என்று புன்னகையுடன் சொல்ல

ஏனோ அதில் மனம் சமாதானம் ஆகவில்லை சீதாவுக்கு ஆனாலும் அவளை பார்த்து அவர் புன்னகைக்க.

சிறிது நேரத்தில் அவரிடம் சொல்லிவிட்டு தன் தங்கையுடன் தன் வீட்டை நோக்கி சென்றாள் சித்தாரா.

போகும் அவளை பார்த்த சீதாவோ "எப்படி இருந்த பிள்ளைங்க..!! இப்போ...!!" என்று பெருமூச்சுடன் தன் அறை நோக்கி சென்றார்.

அடுத்த நாள் கல்லூரியிலோ "ஹே நான் அவனை சுட்டுட்டேன்..!! சுட்டுட்டேன்..!!" என்று சந்தோஷத்தில் சித்தாரா கத்திக்கொண்டு இருக்க அதை கண்ட அக்னியோ "ப்ச் ஒருத்தனை சுட்டது பெரிய விஷயம் இல்லை மேடம், அங்க இருக்க எல்லாரையும் சுடணும்..!!"என்று வேண்டுமென்றே சலிப்புடன் சொல்ல அதில் பொங்கியவள் "இப்போ பாரு நான் எப்பிடி சுடுறேன்னு..!!" என்று வீரவசனம் பேசியபடி அந்த ஃபிரீ பயர் கேம்மை விளையாட அந்தோ பரிதாபம் வேறு ஒருவன் சித்தாராவை சுட்டு அவுட் ஆக்கி விட்டான்.

அதில் "ஹையோ..!!" என்று தலையில் கைவைத்தவளை பார்த்து சிறுசிரிப்புடன் இருபக்கமும் தலையாட்டியவன் "வா நான் சொல்லி தர்றேன்..!!" என்றபடி அவளுக்கு பொறுமையாய் சொல்லி கொடுக்க அவளும் ஆவலுடன் அதை கற்றுக்கொண்டாள். அதே சமயம் "நீ மட்டும் எப்பிடி அக்னி கரெக்டா ஷூட் பண்ணுற..??" என்று ஆச்சரியமாய் இவள் கேட்க ஒரு புற உதட்டை மற்றும் சிறிதாய் வளைத்த அக்னியோ "பிராக்டீஸ் மேக்ஸ் மேன் பெர்பெக்ட்..!!" என்று போனில் இருந்து தன் பார்வையை அகற்றாமலேயே சொல்லி முடித்த நேரம் அந்த கேம்மிலும் அவன் வென்றிருக்க அதில் சித்தாராவை பார்த்து இருபுருவத்தை உயர்த்தி "புரிஞ்சிதா..!!" என்று கேட்க.

அவளோ "நீ வேற லெவல் டா அக்னி..!!" என்று மகிழ்ச்சியில் கத்தினாள்.

இதை எல்லாம் தன் நண்பர் பட்டாளத்துடன் சேர்ந்து கடுங்கோபத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தான் "ஷிவ் வர்வ சர்வஜித்..!!".

தொடரும்..
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 8

27487

நாட்கள் இப்படியே வேகமாய் கழிய இந்த இடைப்பட்ட காலத்தில் சித்தாராவும் அக்னியும் நெருங்கிய நண்பர்கள் ஆகி இருந்தனர்.

சித்தாராவை தினமும் அவளது வீட்டில் இருந்து காலேஜிற்கு கூட்டி வருவது முதல் மாலை காலேஜ் முடிந்ததும் அவளை வீட்டில் விடுவது வரை எல்லாம் செய்வது அவனே.

முதலில் இதை கண்டு ஆத்திரம் அடைந்த சர்வாவோ நாள் அடைவில் அதை கண்டாலும் காணாமல் செல்லத் தொடங்கினான்.

அதுவும் இந்த இடைப்பட்ட நாட்களில் இருவருக்கும் இடையே எந்த வித பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை, நடைபெறவில்லை என்பதை விட இருவரும் அதற்கான வாய்ப்பை அமைத்துக் கொள்ளவில்லையோ..??

கண்மணியும் தனது ஒன்பதாம் வகுப்பை அருகில் இருந்த பள்ளியிலே படிக்க தொடங்கினாள்.

இதற்கிடையே சித்தாரா சர்வாவை தவிர அவனது நண்பர் நண்பிகளிடம் எல்லாம் நன்றாக பேசி நெருக்கமாகி இருந்தாள்.

அன்று காலையில் வழக்கம் போல அக்னி இவளுக்காக வெளியில் காத்து இருக்க.

இவளோ அப்போது தான் அவசர அவசரமாக குளித்து கொண்டு வெளியே வந்து இருந்தாள்.

வெளியே ஸ்கூல் செல்ல வேண்டி யூனிபார்மை எல்லாம் போட்டு விட்டு கண்ணாடி முன் நின்று நேர்வகிடு எடுத்து தலைவாரிக்கொண்டு இருந்த கண்மணி அரக்க பறக்க சுடிதார் அணிந்து கொண்டிருந்த அக்காவை பார்த்து கடுப்புடன் "க்கா ஒரு நாள் சீக்கிரமா ரெடி ஆகலாம் இல்லை, பாவம் உன் பிரெண்டு அக்னி உனக்காக எவ்வளவு நேரம் வெளிய வெயிட் பண்ணுறாரு பாரு..!!" என்று அக்கறையுடன் சொல்ல.

அவசர அவசரமாய் உடை அணிந்து கொண்டிருந்த சித்தாராவோ "சாரி டி சாரி டி, நைட் படம் பார்த்துட்டு லேட்டா தூங்குனதால காலைல சீக்கிரம் எந்திரிக்க முடியல இனிமே ப்ராமிஸா நைட் படம் பார்க்க மாட்டேன் டி. இனி பாரு எப்படி டான்னு காலைல எந்திரிச்சு சீக்கிரமா ரெடி ஆகுறேன்னு..!!" என்று சொன்னவளை 'இதே டயலாக்கை தான் நேத்தைக்கும் சொன்ன..!!" என்ற ரீதியில் பார்த்தாள் கண்மணி.

ஆனால் அதை சிறிதும் கண்டுக்கொள்ளாத சித்தாரா வேகவேகமாய் உடையணிந்து விட்டு கலைந்து இருந்த முடியை சீப்பே உபயோகிக்காமல் தன் கைகொண்டே வாரி ஹேர் பேண்ட் கொண்டு குதிரை வால் ஒன்றை போட்டு விட்டு. கைக்கு கிட்டிய ஷாலை தூக்கி தன் மேல் போட்டபடி காலேஜ் பேக்கை எடுத்துக்கொண்டு கீழே ஓடினாள்.

போகும் அவளை பார்த்து சலிப்புடன் தலையாட்டிய கண்மணி தன் அக்கா சென்றதை ஒரு முறை உறுதி படுத்தி விட்டு வேகவேகமாக அந்த அறையில் இருந்த ஜன்னல் அருகே சென்று நின்றபடி எட்டி கீழே பார்த்தாள்.

கீழே அக்னி பைக்கில் அமர்ந்தபடி இருக்க அதை பார்த்து அவனை கள்ளத்தனமாய் ரசித்தவள் அச்சமயம் அங்கு வந்த தன் அக்காவை பார்த்து சட்டென்று தன்னை அங்கிருந்த சுவற்றின் பின் மறைத்துக்கொண்டாள்.

பின் மெல்ல தன் தலையை மட்டும் லேசாய் எட்டி பார்த்தவளுக்கு தற்போது இருவரும் பைக்கில் செல்வது கண்ணில் பட சிறுபுன்னகையுடன் சிறிது நேரம் அங்கு நின்று அவர்களை பார்த்தவள் பின் அவர்கள் சென்றதும் அங்கிருந்து நகர்ந்தாள்.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல சில நாட்களாகவே கண்மணியின் வாடிக்கையான செயல் இதுதான்.

பதின் பருவத்தின் எல்லாம் பெண்களுக்கும் ஏற்படும் நோய் தான் இப்போது கண்மணியையும் தாக்கி உள்ளது.

எப்போது அக்னி அவளுள் நுழைந்தான் என்பதை அவள் அறியாள் ஆனால் அவளே அறியாமல் அவள் மனதில் ஏறி அமர்ந்து கொண்டான் அக்னி.

அக்னி பற்றி நினைத்தவளுக்கோ அடிவயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போல் இருக்க படபடப்புடன் தன் ஸ்கூல் பேக்கை எடுத்துக்கொண்டு கீழே சென்றாள் கண்மணி.

இங்கு காலேஜிற்கு அக்னியுடன் வந்த சித்தாராவை ஒரு நொடி அலட்சியமாய் பார்த்த சர்வா அடுத்தநிமிடம் அவளை கண்டுக்கொள்ளாமல் அவளை தாண்டி சென்று விட்டான்.

அவனது ஒரு நொடி அலட்சிய புன்னகையை கண்டு கொண்ட இவளோ "ரொம்பத்தான்..!!" என்று தன் கழுத்தை நொடித்த வண்ணம் அங்கிருந்து அகன்று இருந்தாள்.


இவள் சர்வாவை திரும்பி பார்த்தவண்ணமே வந்ததில் முன்னே சென்று கொண்டிருந்த அக்னியை இடித்து விட அதில் எங்கே அவள் விழுந்து விடுவாளே என்ற பதட்டத்தில் அவளை பிடித்துக்கொண்டான் அக்னி.

அதில் ஒருவாறு தன்னை நிலைப்படுத்தியவள் அவனை பார்த்து அசடு வழிந்தவாறே "ஹி..ஹி சாரி அண்ட் தேங்க்ஸ் டா, கவனிக்காம மோதிட்டேன்.." என்று தலையை சொரிய அதில் அவள் தலையை லேசாய் தட்டியவன் "இனியாச்சும் ஒழுங்கா பார்த்து வா டி..!!" என்றபடி முன்னே செல்ல அதில் தன்தலையில் தானே தட்டியபடி அவனை தொடர்ந்து சென்றாள் சித்தாரா .

இங்கு நண்பர்களுடன் இருந்த சர்வாவோ அவர்களுடன் பேசி சிரித்தபடி இருக்க அச்சமயம் அங்கு வந்த ஒருவன் "மாட்னான் டா அந்த அக்னி, அன்னைக்கு அவ்வளவு பேர் முன்னாடி அந்த சித்தாராவை தப்பா பார்த்தேன்னு அடிச்சான்ல இப்ப அவனையும் அந்த சித்தாராவையும் சேர்த்து சுட சுட ஃபோட்டோ எடுத்து பிரின்சி நம்பருக்கே அனுப்பி இருக்கேன் இப்ப பாரு ரெண்டு பேரும் எப்படி மாட்டிட்டு நிக்குறாங்ன்னு..!!" என்று கண்களில் பழிவெறி மின்ன சொன்னவனை பார்த்த அவனது நண்பர்களோ " எப்பிடி டா..?? ஏது டா..?? " என்று விதவிதமாய் கேள்வி எழுப்ப அவனும் காலையில் சித்தாரா விழும் போது அக்னி பிடித்த காட்சியை ஆங்கிள் மாற்றி அவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பது போல தன் போனில் போட்டோ எடுத்ததாய் விளக்கி விட்டு.

"இப்ப பாரு, எப்பிடியும் அந்த பிரின்சி ஒரு வாரமாச்சும் சஸ்பெண்ட் பண்ணாம விடமாட்டான். அப்படி அவன் அவங்களை வார்ன் பண்ணி விட்டான்னு வை காலேஜ் டீச்சர்ஸ் குரூப்ல இருந்து ஸ்டூடென்ட் குரூப் வர அந்த போட்டோவை ஷேர் பண்ணி விட்டு அந்த அக்னிய நாறடிச்சிட மாட்டேன்..!!" என்று நயவஞ்சகமாய் சொன்ன அவன் ரமேஷ்..!!

அதை கேட்டு கொல்லென்று சிரித்த அவனது கூட்டம் "ஹே மச்சான் மாஸ் டா..!!" என்றபடி அவனுக்கு ஹைபை கொடுத்தவாறு அங்கிருந்து நகர்ந்தனர்.

இதை எல்லாம் அவர்களுக்கு அருகில் இருந்த மரத்தின் பின் அமர்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்தனர் சர்வாவும் விக்கியும்.

விக்கி மற்றும் சர்வாவின் தோழி ஸ்டெல்லாவை தவிர யாருக்கும் சித்தாரா சர்வாவின் அத்தை பெண் என்பது தெரியாது. ஏன் ஸ்டெல்லாவுக்குமே சர்வா கூறவில்லை விக்கி தான் கூறியிருந்தான்.

அதே போல தான் இங்கு அக்னியை தவிர யாருக்கும் சித்தாரா மற்றும் சர்வாவின் உறவு முறை தெரியாது.

விக்கியோ சர்வாவை பார்த்து "என்ன மச்சான் இது..!!" என்று கலவரமாய் கேட்க அவனுக்கோ இத்தனை நாள் தன்னை அண்ணா அண்ணா என்று அழைத்தபடி சிரித்து சிரித்து பேசும் சித்தாராவை எண்ணி உள்ளே கலக்கம் எழுந்தது.

சர்வாவோ விக்கியை பார்த்து அலட்சியமாய் "என்ன மச்சான் இதுன்னு என் கிட்ட கேட்டா எனக்கெப்படி டா தெரியும்..??" என்று நக்கலாக கூறியவன் "இதுக்குத்தான் தேவை இல்லாம எல்லாரையும் பகைச்சுக்க கூடாதுன்னு சொல்லுறது..!!" என்று அக்னியை எண்ணி கூறிய அவன் தான் அக்னியை காட்டிலும் எதிரியை சம்பாதித்து வைத்துள்ளான் என்பதை அக்கணம் மறந்து தான் போனான் போலும்.

அவனது பேச்சை கேட்டு "மச்சான் நம்ம சித்தாரா டா..!!" என்று வார்த்தையை மென்று முழுங்கியவாறு விக்கி சொல்ல

அதில் அவனை நோக்கி தன் சூடான பார்வையை வீசிய சர்வா "நம்ம சித்தாரா டா னா..?? நான் என்ன பண்ண முடியும்..?? இதுக்கு தான் முதல்லையே அவ கிட்ட அவன் கூட பேசாத டி பழகாத டி ன்னு சொன்னேன் கேட்டாளா அவ..?? திமிரெடுத்து போய் என் ஃபிரெண்டு என் நட்புன்னா இப்படி தான் அனுபவிப்பா..!! நல்லா அனுபவிக்கட்டும் ஒரு வாட்டி பட்டாதான் அவளுக்கு எல்லாம் அறிவு வரும்..!!" என்று கோபமாய் கூறியவன் "உன்னை தவிர வேற யார்கிட்டையாச்சு அவ என் அத்தை பொண்ணுன்னு சொல்லி இருக்கேனா..??" என்று விக்கியை நோக்கி கேள்வி எழுப்ப அவனோ இல்லை என்னும் விதமாய் தலையாட்டினான்

"இதுக்கு தான் இந்த இழவுக்கு தான் நான் யார் கிட்டையும் சொல்லல." என்று கடுப்புடன் அவன் உரைக்க மச்சானுக்குள்ள ஒரு நல்லவனா என்றபடி நண்பனை வியந்து பார்த்தான் விக்கி.

அதை பார்த்த நக்கலாக சரித்த சர்வா "அவ்வளவு எல்லாம் இங்க சீன் இல்ல, அவளுக்கு எதாச்சும் ஒன்னுன்னா என் வீட்டுல இருக்குற அந்த ஹிட்லருக்கு நான் தான் பதில் சொல்லணும் அதான் இப்படி..!! நீ நினைக்குற அக்கறை சக்கரை எல்லாம் இங்க இல்ல..!!" என்று சொன்னவன் தொடர்ந்து

"இனி அவ என்ன ஆனாலும் என்னை குவெஸ்டீன் கேட்க யாரலையும் முடியாது பிகாஸ் நான் அவளை ஆல் ரெடி வார்ன் பண்ணிட்டேன் அவ தான் என் பேச்சை கேட்கலை..!!" என்று தன் தோளை குலுக்கியவண்ணம் கூலாக கூற

"அதானே பார்த்தேன்..!!" என்று உள்ளுக்குள் முணுமுணுத்தான் விக்கி.

சர்வாவோ அப்படியே அமர்ந்து இருக்க "டேய் பாவம் டா சித்தாரா..!!"என்றான் மனம் கேட்காமல்.

அதில் எரிச்சலுற்ற சர்வா "ப்ச் விக்கி என்னை கடுப்பேத்தாத...!!" என்றிவிட்டு அங்கிருந்து அகல "ச்சை இவன் எல்லாம் என்ன மேக்கோ கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லை..!!"என்று நினைத்தபடி தலையில் கைவைத்து அமைதியாக அமர்ந்து விட்டான் விக்கி.

இங்கு அவனை விட்டு தள்ளி வந்த சர்வாவோ தனது ஃபோனை எடுத்து யாருக்கோ அழைத்துப்பேச, பேசி முடித்தவனின் இதழிலோ மர்மபுன்னகை ஒன்று வீற்றிருந்தது அவனது கண்களோ எதையோ நினைத்து பளபளத்தது.


சிறிது நேரம் சென்று தன் கையை உதறியபடி மீண்டும் வந்து மரத்தடியில் சர்வா அமர அச்சமயம் "டேய்..!! நம்ம ரமேஷ்ஷை யாரோ அடிச்சிட்டாங்க போல டா, மூச்சு பேச்சு இல்லாம முகம் எல்லாம் வீங்க பாய்ஸ் பாத்ரூம்ல மயங்கி கிடக்குறான் டா..!!" என்று ஒருவன் சொல்ல.

"யாரு டா அந்த நல்ல காரியத்தை பண்ணது..!!" என்று தன்னை மறந்து வாய்விட்டு புலம்பிய நண்பனை பார்த்து குறுஞ்சிரிப்புடன் சர்வா அமைதியாய் இருக்க அவனது அமைதியில் அவன் புறம் திரும்பிய விக்கி நண்பனின் முகத்தை வைத்தே நடந்ததை யூகித்து விட்டான்.

"டேய் மச்சான்...!!" என்று தன்னை மறந்து அவன் கத்த அதில் அவனோ அவனை பார்த்து கிண்டலாய் "சாக்க கொற சாக்க கொற..!!" என்றான் விளையாட்டாய்.

ஆர்வம் தாங்காத விக்கியோ "எங்க..?? எப்பிடி டா..??" என்று கேட்க

தனது பேண்ட் பேக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து நோண்டிய வண்ணம் "ஜஸ்ட் நௌ நம்ம பாத்ரூம்ல வச்சு..!!" என்றான் கூலாக.

அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தவனோ சட்டென்று "ஆனா அந்த நாய் நம்ம பிரின்சிக்கு போட்டொவை அனுப்பிடுச்சே..!!" என்றான் சோகமாய்

அதை கேட்ட சர்வாவோ தன் கையில் இருந்த மொபைலில் கண்ணை பதித்தவண்ணம் "பிரின்சிட்ட நான் பேசிட்டேன்..!! அதுவும் இல்லாம நான் அடிச்சதுல அவன் எந்திச்சு நடக்கவே ஒரு மாசம் ஆகும் ஒரு மாசம் களிச்சு அவன் காலேஜிக்கு வரும்போது இங்க அவனுக்கு டீசியும் ரெடியா இருக்கும்..!!" என்றவன் சட்டென்று கையில் வைத்திருந்த பொனை வேகமாக தூக்கி கேழே எறிந்தான் அதுவோ அவன் எறிந்த வேகத்தில் சில்லு சில்லாய் நொறுங்கியது.

விக்கியோ இதை கண்டு "டேய்..!!" என்றபடி அதிர்ந்து எழும்ப

"அந்த போட்டோவையும் வந்த சுவடே தெரியாம அழிச்சாச்சு..!" என்று அசாலட்டாய் கூறியபடி தனது கழுத்தை வளைத்து நெட்டி முறித்தான்.

விக்கியோ தனது நண்பனை பெருமையுடன் பார்க்க அதில் அவனை பார்த்து நக்கலாக "டேய் ரொம்ப பெருமையா பார்க்காத, என் வீட்டுல இருக்குற ஹிட்லர் நான் என்னதான் காரணம் சொன்னாலும் என்னை விட மாட்டாரே அதான் வேற வழி இல்லாம என் நிலைமைய யோசிச்சு இப்படி அவரோட சேர்மேன் பவரை யூஸ் பண்ணி எல்லாத்தையும் சரி பண்ணேன்..!!" என்று சலிப்புடன் சொல்ல அதை கேட்ட விக்கியோ "உன் ரீல் அந்த ரொம்ப நேரம் ஆச்சு மச்சான்..!!"என்ற தோரணையில் அவனை பார்த்துக்கொண்டு இருந்தான்

தொடரும்..!!
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 9

27559


இதோ இதோ என காலேஜ் முதல் வருடத்தின் இறுதி செமஸ்டர் தேர்வுக்கு வந்து இருந்தனர் அக்னி மற்றும் சித்தாரா. அதே போல இங்கு சர்வாவும் தன் முதுகலை படிப்பின் இறுதி நாட்களை அடைந்திருந்தான்.

படிப்பில் கண்டிப்பான ஆனந்த் சித்தாராவை எப்போதும் போல ராத்திரியும் பகலுமாய் படிக்க வைக்க ஆரம்பித்திருந்தார். என்ன ஒரு வித்தியாசம் என்றால் இம்முறை அவளுக்கு துணையாய் அவளது தங்கை கண்மணியும் அடுத்த வகுப்பான பத்தாம் வகுப்பு பாடத்தை தந்தையின் கெடுபிடியால் இப்போதே உக்காந்து படிக்க தொடங்கியிருந்தாள். கூடவே ஸ்பெஷல் ட்யூஷன் சென்டரில் வேறு அவளை சேர்த்து விட்டிருக்கிறார் ஆனந்த்.

அன்றும் அப்படி தான் எப்போது போல டியூஷன் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் கண்மணி.

அவள் வரும் வழியில் ஒரு பெரிய பூங்கா ஒன்று உண்டு அதை கடந்து தான் அவள் வர முடியும். எப்பவும் போல அதை கடந்து வரும் சமயம் எதேர்ச்சியாய் அவள் கண்கள் பூங்காவை சுற்றி வேடிக்கை பார்க்க சட்டென்று அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது காரணம் அந்த பூங்காவின் ஒரு மூலையில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்தான் அக்னி.

அவனை கண்டதும் இவள் கண்களோ படபடவென அடித்துக்கொண்டது என்றால் இதயமோ பந்தய குதிரையின் வேகத்தில் துடித்தது.

அவனை கண்டு மனம் படபடக்க மெல்ல அந்த பூங்காவினுள் நுழைந்தாள் கண்மணி.

அவள் மனம் எங்கு எப்படி எப்போது அவன் மேல் காதல் வயப்பட்டது என்பது தெரியவில்லை ஆனால் இப்போது அவள் மனம் முழுக்க அக்னி அக்னி அக்னி மட்டும் தான்.

சில நாட்களாகவே அவனிடம் தன் காதலை தெரிவிக்க வேண்டும் என்று தான் நினைத்துக்கொண்டிருக்கிறாள் கண்மணி.

ஆனால் அதற்கான சந்தர்ப்பமே இதுவரை அவளுக்கு அமையவில்லை அதை நினைத்து தான் இப்போது கூட வருந்திக்கொண்டே வந்தாள். ஆனால் அவளே எதிர்பார்க்காத வகையில் அக்னி அவளது கண்ணில் விழுந்திருக்க அதில் மகிழ்ந்து போனவள் இதோ கிளம்பி விட்டாள் அவனை நோக்கி தன் காதலை சொல்ல.

இங்கு அக்னியோ தந்தையின் மீது அதிக கடுப்புடன் உட்கார்ந்து இருந்தான்.

அவனது தந்தைக்கு மும்பையில் டிரான்ஸ்பர் கிடைத்துள்ளது அதனால் இந்த வருட கடைசி செமஸ்டர் முடிந்தவுடன் இவனும் பெற்றோருடன் சேர்ந்து மும்பைக்கு செல்ல உள்ளான். அவனது படிப்பும் மும்பையிலேயே தொடர உள்ளது இதை நினைக்க நினைக்க அவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

இன்று நேற்று அல்ல இவன் பிறந்தது முதல் இது தான் வாடிக்கையாக நடந்து கொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு ஊரில் இவனது படிப்பு தொடரும் இதனாலையே இவனுக்கு எந்த நட்பும் இல்லை இவனும் யாருடனும் பெரிதாய் நட்பு பாராட்டமாட்டான். ஆனால் அவனே எதிர்பாராமல் அமைந்தது தான் சித்தாராவின் நட்பு. இவ்வளவு குறுகிய காலத்தில் ஒருவளிடம் நீ நட்பு பாராட்டுவாய் என்று எவரேனும் போன வருடம் சொல்லி இருந்தால் சிரித்துவிட்டு போயிருப்பான். அப்படி அவனே எதிர்பாரா விதத்தில் வந்தது இந்த நட்பு ஆனால் இப்போது அதுவும் பாதியிலேயே முடிவுக்கு வரபோகிறது என்பதை எண்ணுகையில் அத்தனை ஆத்திரம் அவனுள்.

இதே சிந்தனையில் அந்த பூங்காவில் அமர்ந்து கொண்டு இருந்தவன் முதலில் தன்முன்னே வந்து நின்ற கண்மணியை கவனிக்கவில்லை ஆனால் அதிக நேரம் தன் முன் ஒரு நிழல் ஆடுவதை உணர்ந்தவன் நிமிர்ந்து பார்க்க...!! அங்கு நின்று கொண்டிருந்தாள் கண்மணி...!! அதை கண்டு யோசனையுடன் புருவத்தை சுருக்கியவன்.

"நீ சித்தாராவோட தங்கச்சி கண்மணி தானே..!!" என்று தன் முன் நின்றவளை பார்த்து கண்களை சுருக்கியவண்ணம் வினவினான் அக்னி.

அதில் மகிழ்ந்த கண்மணியோ "என் பேர் எல்லாம் உங்களுக்கு தெரியுமா..??" என்று ஆனந்த அதிர்ச்சியில் கண்களை விரித்த வண்ணம் கேட்க

அவளது அதீத ஆர்வத்தை கண்டு புருவம் சுருக்கியவனோ "ம்ம்ம்..!!" என்று மட்டுமே பதில் அளித்தான்.

சட்டென்று அங்கு ஒரு அமைதி நிலவ அது தந்த பதட்டத்தில் நகத்தை கடித்தபடி அவனை நோட்டமிட்டாள் கண்மணி.

அவனும் அவளை தான் கூர்மையாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

வந்ததில் இருந்து அவளது நடவடிக்கைகள் யாவும் சரியில்லாமல் இருக்க யோசனையுடனே அவளை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்.

அவன் தன்னை பார்ப்பதை பார்த்து பதட்டம் கொண்டாலும் "எப்படியாவது இன்று சொல்லி விட வேண்டும் ..!!" என்று மனதுள் முடிவெடுத்தவள்

மெல்ல தன் விழி உயர்த்தி அவனை ஏறிட்டு பார்க்க அவனோ இன்னும் அவளை தான் அழுத்தமாய் பார்த்துக்கொண்டிருந்தான்.

அதில் சட்டென்று தன் பார்வையை தாழ்த்தியவள் உலகில் இருக்கும் எல்லாக் கடவுளையும் துணைக்கு அழைத்தவாறு "உ.. உங்.. உங்களை பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு, நீ.. நீங்க எப்போ எனக்குள்ள நுழைஞ்சிங்கனு தெரியல, ஆனா இப்போ என் மனசுல விஜய் தேவரகொண்டாக்கு அப்புறம் நீங்க மட்டும் தான் அழுத்தமா பதிஞ்சு இருக்கீங்க. ஐ திங்க்.. இல்ல இல்ல கன்பார்மா நான் உங்களை ரொம்ப நாளா லவ் பண்ணிட்டு இருக்கேன்..!!" என்றவள் நேற்று பார்த்த படத்தை மனதில் நிறுத்தியபடி

"நான் உங்களை விரும்பல, உங்க மேல ஆசை படல , நீங்க அழகா இருக்கீங்கனு நினைக்கல .!! ஆனா இதல்லாம் நடந்திடுமோன்னு பயமா இருக்கு யோசிச்சு சொல்லுங்க..!!" என்று மனப்பாடம் செய்து வைத்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்து விட்டு மெல்ல தன் விழியுயர்த்தி அவனை பார்க்க அவனோ தனது அழுத்தமான பார்வையை சிறிதும் மாற்றாமல்

"நீ நயன்த் தானே படிக்கிற ரைட்..!!" என்று கேட்க அவனை முந்திக் கொண்டு "நயன்த் முடிக்க போறேன் எனக்கு பதினஞ்சு வயசு முடிஞ்சு பதினாறு ஆக போகுது..!!" என்றாள் வேகமாக.

அவனோ அதை கேட்டு "ஓ..!!" என்றபடி தன் இரு புருவத்தை உயர்த்தினானே தவிர வேறு எதுவும் கூறவில்லை

மீண்டும் அங்கு மௌனம் ஆட்சி செய்ய அது பிடிக்காத அவளோ "உங்க முடிவென்ன..??"என்றபடி ஆர்வமும் பதட்டமுமாய் அவனை பார்க்க அவனோ "என்ன பத்தி உனக்கு என்ன தெரியும்..??" என்று கேட்டான் பொறுமையாய்

அதில் சட்டென்று நிமிர்ந்து அவனை பார்த்தவள் "நீங்க ரொம்ப ரொம்ப நல்லவங்கனு எனக்கு நல்லா தெரியும்..!!" என்றாள் பளிச்சென்ற புன்னகையுடன்.

அதை கேட்டு நக்கலாக சிரித்தவன் "அப்படினு யார் சொன்னா..??" என்றான் அவளை பார்த்து தன் ஒன்றை புருவம் உயர்த்தி.

அவளோ பதில் பேசாமல் அவனை குழப்பமாய் பார்க்க.

"நான் நீ நினைக்குறது போல நான் நல்லவன் இல்லை மா..!! ரொம்ப ரொம்ப கெட்டவன்..!!" என்று அதே நக்கல் புன்னகையுடன் சொல்ல.

அதை கேட்ட அவளோ சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு மனதில் ஏதோ முடிவெடுத்தவளாக "பரவால நான் உங்களை திருத்துறேன்..!!" என்று உறுதியுடன் சொன்னாள்.

அதில் "ப்ச் ரொம்ப சினிமா பார்ப்பா போல..!!" என்று உள்ளுக்குள் எரிச்சலுடன் முணுமுணுத்த அக்னியோ அவளை பார்த்து "நான் நாளைக்கு இந்த ஊர விட்டே போறேன் இனி இந்த சைடு கூட வர மாட்டேன் சோ வீணா மனசுல ஆசைய வளர்க்காம என்னை மறந்திட்டு போய் படிக்கிற வேலைய பாரு..!!" என்று சற்று காட்டமாக சொல்ல.

முணுக்கென்று கண்ணீர் தேங்கிவிட்டது கண்மணியின் கண்களில் அதே கண்ணீர் நிறைந்த கண்களுடன் அவனை ஏறிட்டு பார்த்தவள் "இங்க பாருங்க நீங்க எங்க வேணா போங்க ஆனா உங்களை மறக்க சொல்ல உங்களுக்கு கூட உரிமை இல்லை. நீங்க எங்க போனாலும் உங்க நினைப்போடவே நான் கடைசி வாழ்க்கை வர வாழ்ந்திடுவேன்..!! ஏன் முடிஞ்சா உங்களை தேடி கூட வருவேன்..!!"என்று அழுகையை அடக்கியபடி சொல்ல

"இது என்னடா புது தலைவலி..!!" என்று எண்ணியபடி எரிச்சலுடன் தன் நெற்றியை நீவிக்கொண்டான் அக்னி.

அவளுக்கு புரியவைக்கும் நோக்குடன் "நீ சின்ன பொண்ணு மா..!!" என்று சொல்ல அதில் அவளோ "இல்லை எனக்கு பதினாறு வயசு ஆகபோகுது இன்னும் இரண்டு வருஷத்துல நான் மேஜர் கூட ஆகிடுவேன்..!!" என்றாள் அவனை பார்த்து என்னை புரிந்து கொள்ளேன் என்னும் விதத்தில்.

அதை கேட்டு கடுப்புற்றவனுக்கோ "இதை ஷாப்டா ஹேண்டில் பண்ணா எல்லா சரியாகாது..!!" என்று எண்ணியபடி அவள் புறம் திரும்பி "எனக்கு ஓகே..!!" என்றான் அவளை பார்த்து அழுத்தமாய்.

அதை கேட்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தவள் நம்ப முடியாமல் "உண்மையாவா..!!" என்று கேட்க அவனோ இறுக்கமாக தலையாட்டினான்.

அதில் எழுந்த சந்தோஷத்தில் துள்ளி குதித்தவள் "எனக்கு தெரியும் நீங்க என் லவ்வ அக்சப்ட் பண்ணுவீங்கனு எனக்கு தெரியும்..!!" என்று சொல்ல.

அதில் சிறிது நேரம் அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தவன் இதற்கு இன்று ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்று எண்ணியபடி.

"சரி வா பக்கத்துல தான் **** ஹோட்டல் இருக்கு போயிட்டு வரலாம்..!!" என்று சொல்ல அதில் அவனை பார்த்து சிரித்தவள் "நம்ம லவ் சக்சஸ் ஆனதுக்கு புட் டீரீட் கொடுக்க போறீங்களா..?" என்று மகிழ்ச்சியுடன் கேட்க.

அதில் அவளை ஒருமாதிரி பார்த்தவன் "புட் டிரீட்டா..?? ஹா..ஹா உன்னையே எனக்கு டீரீட்டா எடுக்க போறேன்..!!"என்று நக்கல் சிரிப்புடன் சொன்னான்.

அவளோ புரியாமல் "என்ன சொல்லுறீங்க..??" என்று கேட்க

"ஆக்சுவலி எனக்கு இந்த காதல் கத்திரிக்கா கல்யாணத்து மேல எல்லாம் பெருசா இன்டிரெஸ்ட் இல்லை, எல்லாம் பிராக்டிக்கலா பண்ணி எனக்கு ஓகே ஆச்சுன்னா தான் எனக்கு புடிக்கும் அதான் நம்ம இரண்டு பேரும் பக்கத்துல இருக்க ***ஹோட்டல் ரூம்க்கு போய் பிராக்டிக்கலா பண்ணலாம் புடிச்சா நெக்ட்ஸ்ட் ஸ்டேஜுக்கு போகலாம் என்ன சொல்ற..??" என்றபடி அவள் தோளில் கைபோட போக

சட்டென்று அவன் கையை தட்டி விட்டவளுக்கோ அனைத்தும் புரிந்து போனது சில விஷயம் தெரியாமல் இருக்க அவள் ஒன்றும் குழந்தை இல்லையே குழந்தைக்கும் குமரிக்கும் நடுவில் இருக்கும் நிலையில் அல்லவா இப்போது அவள் இருக்கிறாள்.

"சீ உன்னை நான் எவ்வளவு நல்லவன்னு நினைச்சேன் ஆனா நீ ரொம்ப கெட்டவனா இருக்க..!! இப்ப சொல்லுறேன் கேட்டுக்கோ ஐ ஹேட் யூ உன்னை நான் ரொம்ப வெறுக்குறேன்..!!" என்று வெறுப்புடன் சொல்ல

அதில் அவளை பார்த்து அதே நக்கல் புன்னகையுடன் "இதை தானே மா நானும் சொன்னேன்..!! பின்ன நான் மட்டும் என்ன என்னை நல்லவன்னா சொன்னேன்..??" என்று கேட்க

அதில் "ச்ச..!!" என்று முகத்தை திருப்பியவள் வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டாள்.

போகும் அவளை பார்த்து "ஊப்..!!" என்று வாய் குவித்து ஊதிய அக்னி இருபுறமும் தலையாட்டியபடி "சரியான சினிமாட்டிக் பைத்தியம் ..!!" என்று எரிச்சலுடன் முணுமுணுத்துக்கொண்டான்.

அடுத்த நாள் கல்லூரியில் வைத்து தான் ஊர் மாற போவதை பற்றி சித்தாராவிடம் சொன்னவன் மறந்தும் கண்மணி விஷயத்தை அவளிடம் கூறவில்லை அவனது எண்ணமோ சிறு பெண் டீனேஜ் வயதில் வரும் அட்ரக்ஷனின் காரணமாய் அதை காதல் என்று எண்ணி கொண்டு இருக்கிறாள் தான் இங்கு இருந்து சென்று விட்டால் நிச்சயம் தன்னை மறந்து விடுவாள் என்றே உறுதியாய் எண்ணியது அதனால் அதை சித்தாராவிடம் சொல்லி சிறு விஷயத்தை பெரிதாய் ஊதவேண்டாம் என்று விட்டுவிட்டான்.

அவன் போகப் போகிறேன் என்று சொன்னதும் சோகமான சித்தாராவை கிண்டல் செய்து சிரிக்க வைத்து சகஜமாக்கினான்.

ஆனால் இவன் போகும் செய்தி அறிந்து சந்தோஷபட்ட ஒரே ஜீவன் நம் சர்வா தான்.

"போட்டும்..!! இவன் இருக்கான்னு எவ்வளவு ஆட்டம் போட்டா அவ..!! இனிமே அவனும் இல்லை எங்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறேன்னு பாக்குறேன் டி..!! ஆட்டமா போடுற ஆட்டம் இனி என் ஆட்டத்தை பாரு டி ராட்சசி..!!" என்று மனதில் முடிவெடுத்தவன் சித்தாராவை எண்ணி நக்கலாக சிரித்தான்.

சொன்னது போலவே அந்த கடைசி செமஸ்டர் முடிந்த அன்றே தன் பெற்றோருடன் மும்பை நோக்கி சென்றிருந்தான் அக்னி.

நண்பனின் பிரிவில் மனம் வருந்தினாலும் பிறப்பிலேயே குறும்பு குணம் கொண்ட சித்தாரா அதில் இருந்து சீக்கிரம் வெளிவந்து விட்டாள்.

ஏற்கனவே சர்வாவின் நண்பர்களுடன் சகஜமாக பழகிக்கொண்டிருந்த சித்தாரா அக்னியின் பிரிவுக்கு பின்னர் இன்னும் நன்றாக பழகியிருந்தாள்.

அதுவும் சர்வாவின் கேங்கில் உள்ள ஸ்டெல்லா அவளுக்கு மிகவும் நெருக்கமான நட்பாய் மாறியிருந்தாள்.

"ஸ்டெல்லா க்கா..!! ஸ்டெல்லா க்கா..!!" என்று அழைத்தபடியே அவளுடன் நன்றாக பழகினாள்.

ஸ்டெல்லாவுக்கும் துறுதுறுவென பேசும் சித்தாராவை மிகவும் பிடிக்கும்.

இப்படியே சென்று கொண்டிருந்த இவர்களின் நாட்களில் பல நாட்கள் கழித்து சர்வாவின் வீட்டிற்குள் நுழைந்திருந்தாள் சித்தாரா..!!

ஹாலில் அமர்ந்து பூக்கட்டிக் கொண்டிருந்த சீதாவை பார்த்து சந்தோஷத்துடன் "ஹாய் அத்தை..!!" என்றபடி அவர் அருகில் சித்தாரா செல்ல.

அவளை பார்த்து சந்தோஷம் அடைந்த சீதா அதை முகத்தில் காட்டாமல் "வா டி இப்ப தான் உனக்கு இங்க வர வழி தெரிஞ்சிச்சா..??" என்று பொய் கோபத்துடன் கேட்க.

அதில் தன் நாக்கை கடித்து கண்களை சுருக்கி அவரை பார்த்த சித்தாரா "சாரி அத்தை, எனக்கு சுத்தமா டைமே இல்லை. காலேஜ் பஸ்ட் இயர் முடிச்ச கையோட லீவுல ரிலாக்ஸ் கூட பண்ணவிடாம கம்பியூட்டர் கிளாஸ் சேர்த்து விட்டுட்டாரு உங்க அண்ணன்..!! நானே டெய்லி கடுப்புல அந்த கிளாஸ்ச அட்டெண்ட் பண்ணிட்டு ஈவ்னிங் வீட்டுக்கு வந்து டயர்ட்டுல அக்கடானு படுத்தா அது கூட உங்க அண்ணாக்கு பொறுக்காம பரதநாட்டியம் கிளாஸ் சேர்த்து விட்டுட்டாரு. நீங்களே சொல்லுங்க அத்தை இந்த வயசுல எனக்கு பரதநாட்டியம் தேவையா..?? கூட ஆடுறதுங்க எல்லாம் பத்து வயசு பன்ணெண்டு வயசு வாண்டுங்க அதுங்க கூட சேர்ந்து நானும் ஆடுறேன்..!! டான்ஸ் சொல்லி குடுக்குற அந்த சொர்ணாகா நான் அரமண்டி ஒழுங்கா போடலைனு என் முட்டியிலையே அடிக்கிறா கிராதகி..!! இது எல்லாம் கடந்து நொந்து நூடில்ஸ் ஆகி நான் வீட்டுக்கு வர நைட் ஆகிருது இதுல எங்க அத்தை நான் இங்க வர டைம் இருக்கு ..!!" என்று தன் சோக கதையை சோகமாக பேசி முடித்தவளை பார்த்து பாவமாக இருந்தது சீதாவுக்கு.

அதில் அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த பொய் கோபத்தை எல்லாம் விட்டவர் அவள் அருகில் சென்று தலையை பாசமாக வருடியவாறு "அப்பா உன் நல்லதுக்காக தான் டா இதெல்லாம் செய்யுறாரு..!! அது இப்ப உனக்கு புரியாது ஆனா சீக்கிரமே இதை நீ புரிஞ்சிப்ப..!!" என்று சொன்னவரை பார்த்து சலிப்புடன் "போங்க அத்தை ஈடுபாடே இல்லாம ஒரு விஷயத்தை செய்தா அது எப்பவும் நமக்கு நல்லதா இருக்காது யூசும் ஆகாது..!!" என்று கூறியவள் பின் "ஆமா ஷிவ் எங்க அத்தை..??"என்று கேட்டபடி வீட்டை சுற்றி தன் கண்களை சுழலவிட


சீதாவோ அவள் கேட்ட கேள்வியில் இன்பமாக அதிர்ந்தார்.

"சர்வாவை பத்தி தானா வந்து கேக்குறா..?? அப்போ இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நடந்த பிரச்சனை எல்லாம் சரி ஆகிடிச்சா..!!" என்று உள்ளுக்குள் சந்தோஷமாக எண்ணியவர் அதே சந்தோஷத்துடன் "மேல ரூம்ல இருக்கான் மா..!!" என்றார் அவள் கேள்விக்கு பதிலாய்.

அதை கேட்டு "மேல இருக்கானா..?? சரி அத்தை நான் போய் அவனை பார்த்துட்டு வரேன்..!!" என்று சொன்னவள் கடகடவென படிகளில் ஏறி சர்வஜித்தின் அறையை அடைந்திருந்தாள்.

ஏதோ நியாபகத்தில் பட்டென்று கதவை திறந்து கொண்டு அவள் உள்ளே செல்ல அப்போது தான் குளித்து முடித்து வெறும் ஷாட்ஸ்சுடன் கண்ணாடி முன் வந்து நின்ற சர்வா இவள் இப்படி திடீர் என்று வருவாள் என்று எதிர்பாக்காமல் தன் நிலை மறந்து சட்டென்று திரும்ப அவளோ அவனது இந்த கோலம் கண்டு "ஐயோ கருமம்..!!" என்று வாய் விட்டு அலறியவள் தன் கைகொண்டு கண்களை மூடியபடி சுவரு புறம் திரும்பிக்கொண்டாள்.

அவளது அலறலில் தன் நிலை உணர்ந்தவன் வேகமாக அருகில் இருந்த தன் டி சர்டை எடுத்து அணிந்து விட்டு அவளருகில் சென்றான்.

அவளோ இதை அறியாமல் கண்களை தன் கைகொண்டு மூடியபடி திரும்பி நின்றிருக்க.

அதை கண்டு எரிச்சலுற்றவன் "ப்ச் ஓவரா சீன் போடாம திரும்பு டி..!!' என்றான் கடுப்பாய்.

அதில் மெல்ல திரும்பிய அவளோ "உன்னை நம்பி தான் டா திரும்புறேன் தயவுசெஞ்சு அரைகுறையா நிற்காம இரு..!!" என்று கூறியபடி லேசாய் தன் கைகளை விலக்கி அதில் எழுந்த சிறு ஓட்டை வழி அவன் சட்டை அணிந்திருப்பதை உறுதி படுத்திய பின்பே முழுதாய் கை விலக்கினாள்.

அவனோ அவளது செய்கை ஒவ்வொன்றையும் எரிச்சலுடனே பார்த்துக்கொண்டு இருக்க.

அதில் லேசாய் எழுந்த கோபத்தில் தன் கட்டை விரலால் நெற்றியை தேய்த்த வண்ணம் அவளை பார்த்து "எதுக்கு வந்த..??" என்று எரிச்சலாக கேட்க

அதில் நியாபகம் வந்தவளாய் தன் தலையில் அடித்துக்கொண்டவள் "ஸ்ஸ்..!! வந்த விஷயத்தையே மறந்துட்டேன் பாரு..!! டேய் ஷிவ் நம்ம விக்கி அண்ணாவும் ஸ்டெல்லா அக்காவும் ரொம்ப டீப்பா லவ் பண்ணுறாங்க டா...!!" என்று அவள் சொல்ல

அதை கேட்ட இவனோ கண்ணாடியை பார்த்து தன் தலையை துடைத்தபடியே "தெரியும் ..!!" என்றான் ஒற்றை சொல்லாய்.

அதில் இவளோ "ஹே..!! உனக்கு இந்த மேட்டர் முன்னமே தெரியுமா அப்போ நல்லதா போச்சு போ..!!" என்றவள் தொடர்ந்து

"அவங்க லவ் மேட்டர் நம்ம ஸ்டெல்லா அக்கா அப்பாக்கு தெரிஞ்சிடிச்சு டா, அவசர அவசரமா ஸ்டெல்லா அக்காவுக்கு அவங்க அப்பா வேற மாப்பிள்ளை பார்க்குறாரு..!!" என்று பதட்டத்துடன் சொல்ல.

அவனோ அப்போதும் அவள் புறம் திரும்பாமல் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து தலையை துவட்டிய வண்ணமே "ப்ச் அதுவும் தெரியும்..!!" என்றான் அசட்டையாய்.

அதில் அவனை அதிர்ச்சியுடன் பார்த்த சித்தாரா "என்ன இதுவும் உனக்கு தெரியுமா..?? இதை தெரிஞ்சும் எப்பிடி டா அமைதியா இருக்க..!! அங்கு விக்கி அண்ணாவும் ஸ்டெல்லா அக்காவும் பிரிய போற ஸ்டேஜ்ல இருக்காங்க இங்க நீ என்னடானா கூலா எதை கேட்டாலும் தெரியுங்கிற இல்லை நான் தெரியாமத் தான் கேக்குறேன் நீ எல்லா மனுஷ ஜென்மமா.." என்று வந்த கோபத்தை அடக்கியபடி பல்லை கடித்த வண்ணம் அவள் கேட்க.

"என்ன நீ இன்னைக்கு வாலென்ட்ரியா என் கிட்ட அடிவாங்க வந்திருக்க போல ..??" என்று நக்கலாக கேட்டவனை பார்த்து கோபத்துடன் "மனசாட்சி இல்லாதவன் டா நீ..!!" என்று கூறி முறைத்தபடி சித்தாரா நிற்க அதை கண்டு அதுவரை இருந்த பொறுமை எல்லாம் பறந்து போக தலையை துவட்டிக்கொண்டிருந்த டவலை தூக்கி வேகமாக அவள் முகத்தில் எறிந்தவன் "இப்ப என்ன டி உனக்கு பிரச்சனை சும்மா நொய் நொய்னு வந்து கடுப்பேத்திட்டு இருக்க..!!" என்று கோபத்துடன் கத்த.

அதில் உள்ளுக்குள் மிரண்டவள் அழுகையை அடக்கிய குரலில் "விக்கி அண்ணாக்கும் ஸ்டெல்லா அக்காவுக்கும் இன்னைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ்..!! விக்கி அண்ணா கால் பண்ணா நீ எடுக்க மாட்டிங்கிறீயாம் அதான் என் கிட்ட சொல்லி விட்டாங்க. அவங்களே எதிர்பார்க்காம அவசர அவசரமா எடுத்த முடிவாம் சோ
உங்கிட்ட சொல்ல முடியலையாம் உனக்கு சொல்லலாம்னு கால் பண்ணி நீ எடுக்கலையாம்..!!" என்று சொல்லியவளை நக்கலாக பார்த்தவன்

அதே நக்கலை குரலில் தேக்கியவண்ணம் "எது..?? எல்லாம் முடிஞ்ச பிறகு சொல்லுறதா..??" என்று கேட்க

அதில் அவனை இப்போது எரிச்சலுடன் பார்த்த சித்தாரா "இங்க பாரு நீ தேவை இல்லாம ஈகோவை புடிச்சிட்டு உன் பிரெண்டு லைப் ஸ்பாயில் பண்ணாத..!! அங்க சாட்சி கையெழுத்து போட ஆள் இல்லை நம்ம தான் போய் போடணும் இந்த விஷயம் நம்ம நாலுபேருக்கு மட்டும் தான் தெரியும்..!!" என்று சொல்ல

"அதானே பார்த்தேன்..!! சாட்சி கையெழுத்து போட ஆள் இல்லாம தான் கூப்பிடுறானா..??" என்று நினைத்தவனுக்கோ எப்போதோ நண்பனின் விஷயம் தெரிந்திருந்தது சரி இன்று சொல்வான் நாளை சொல்வான் என்று எதிர்பார்த்து இருந்தவனுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்ச இதோ எல்லாம் முடிந்த பின் சாட்சி கையெழுத்து போட அல்லவா தன்னை அழைக்கிறான் அதை எண்ணி வேதனையுற்றாலும் வேதனை காட்டிலும் கோபமே அவனுக்கு அதிகமாய் இருக்க வேண்டும் என்றே சித்தாராவின் கூற்றை அசட்டை செய்தான்.

ஆனால் என்ன தான் இருந்தாலும் அவன் நண்பனாயிற்றே என்று எண்ணியவனோ "நீ என்ன எப்படி நினைச்சேன்னு தெரியலை டா ஆனா நான் உன்னை என் நண்பனா தான் நினச்சேன் அதுக்காக அதுக்காக மட்டும் தான் இப்ப நான் அங்க வரேன்..!!" என்று மனதில் நினைத்துக்கொண்டவன்

ஒருத்தி அங்கு நிற்பதையும் பொருட்படுத்தாமல் கபோடில் இருந்து வேறு உடையை எடுத்துக்கொண்டு டிரெஸ்சிங் ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.

போகும் அவனை பார்த்து "என்னை இவன் கொஞ்சமாச்சும் மதிக்கிறானா பாரேன்..??" என்று கடுப்புடன் எண்ணியவளுக்கோ இப்போது விக்கியிடம் என்ன சொல்வது என்பதிலேயே உழன்றுகொண்டு இருந்தது.

"அவனை எப்படியாச்சும் கூட்டிட்டு வரேன் முடியாட்டி கடத்தி கார் பின்னாடி தூக்கி போட்டு கொண்டு வரேன்னு எல்லாம் விக்கி அண்ணா கிட்ட வீர வசனம் பேசுனேனே..?? இப்போ அவன் இல்லாம போன எவ்வளவு பெரிய கேவலம்..!!"என்று மனதில் புலம்பியவள் வெளியில் நகத்தை கடித்த வண்ணம் நின்று கொண்டு இருந்தாள்.

ஐந்து நிமிடத்தில் உடைமாற்றி வெளியே வந்தவன் அவளை சிறிதும் கண்டுகொள்ளாமல் கண்ணாடி முன் நின்று தன் தலையை சீவிவிட்டு நின்றுகொண்டு இருந்தவளை ஏறெடுத்தும் பார்க்காமல் "கல்யாணத்துக்கு வர ஐடியா இல்லையா..??" என்று கேட்டுக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியேற

அவன் சொன்னதை கேட்டு திகைத்தவள் சட்டென்று தன்னை மீட்டெடுத்தவளாய் "ஹே உண்மையாவா சொல்லுற ஷிவ். நான் சொன்ன உடனே ஒத்துகிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் டா ஷிவ்..!!" என்று உண்மையான மகிழ்ச்சியுடன் அவள் சொல்ல.

அதில் அறையை விட்டு வெளியேற போனவன் இவளது கூற்றை கேட்டு சட்டென்று தன் நடையை நிறுத்தி மெல்ல இவளை திரும்பி பார்த்து அழுத்தமான குரலில் "நான் அவன் மேல வச்சிருக்க நட்புக்காக வரேனே தவிர நீ சொன்னேன்னு வரல..!!" என்று சொல்லிவிட்டு விருட்டென்று அங்கிருந்து அகன்று விட.

அதை கேட்டு "ரொம்பத்தான்..!!" என்று கழுத்தை நொடித்த சித்தாரா அவனுடனே வேகமாக சென்றாள்.

ஹாலில் இருந்த சீதாவோ கீழே வேகமாக வரும் தன் மகனையும் அவனை தொடர்ந்து ஓடிவரும் சித்தாராவையும் பார்த்து ஆனந்தம் அடைந்தவர்.

"எங்க பா..?? வெளிய கிளம்பிட்டீயா..??" என்று சர்வாவிடம் கேட்டவரை பார்த்து "ஆமா அத்தை நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் போறோம் பிரெண்டு.. பிரெண்டு வீட்டுக்கு..!!" என்று அவசரமாக ஒரு பொய்யை சொன்னவள் சர்வாவை பார்த்து அசட்டுப்புன்னகை ஒன்றை சிந்திவைக்க அவளை கோபமாக முறைத்தான் சர்வா.

மகனது முறைப்பையும் சித்தாராவின் அசட்டு சிரிப்பையும் கண்டு கொண்ட சீதா. அவர்கள் இருவருக்கும் இன்னும் சண்டை சரியாகவில்லை என்பதை புரிந்துகொண்டார். இதை இப்படியே விட்டால் சரியாகாது என்று எண்ணியவர்.

சித்தாராவின் கூற்றுக்கு "அப்படியா டா பார்த்து பத்திரமா போய்டு வாங்க..!!" என்று பொதுவாய் கூறியவர் அவர் கட்டி வைத்திருந்த மல்லி சரத்தை எடுத்து சித்தாராவின் தலையில் சூடி விட்டு "பார்த்து பத்திரமா குழந்தைய கூட்டிட்டு போ டா..!!" என்று மகனுக்கு அறிவுரை கூறி விட்டு வழி அனுப்பி விட.

இவளும் அத்தை இருக்கும் தைரியத்தில் அவன் பைக்கில் அழகாய் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

அதில் பல்லை கடித்த சர்வாவுக்கோ அன்னையின் முன் எதுவும் செய்யமுடியாத நிலை மனதில் "தொல்லை..!!" என்று எரிச்சலுடன் முணுமுணுத்தவள் வேறு வழி இல்லாமல் வண்டியை இயக்கி ரிஜிஸ்டர் ஆபிசை நோக்கி செலுத்தினான்.

ரிஜிஸ்டர் ஆபிசை அடைந்ததும் வண்டியை பார்க் செய்து விட்டு உள்ளே நுழையபோனவர்கள் முதலில் கண்டது என்னமோ அங்கு தன் அடி ஆட்களுடன் வந்து காரில் இறங்கிய ஸ்டெல்லாவின் தந்தையை தான் அதை பார்த்து பதறிய சித்தாரா உணர்ச்சிவசப்பட்டு "ஐயோ..!!"என்று கத்தபோக அதற்குள் அவள் வாயை பொத்திய சர்வா "ஷ்ஷ்ஷூஊஊஊ..!!!" என்று வாயில் விரலை வைத்து அவளை அமைதியாய் இருக்கும் படி கூறிவிட்டு அவளை கையோடு அழைத்துக்கொண்டு ரிஜிஸ்டர் ஆபிசினுள் நுழைய அங்கோ பதட்டத்துடன் நின்றுகொண்டு இருந்தனர் விக்கி மற்றும் ஸ்டெல்லா.

விக்கியோ சர்வாவை கண்டதும் வேகமாக அவன் அருகில் வந்து அவனை கட்டிக்கொண்டவன் "சாரி மச்சான் ரொம்ப ஸ்ட்ரெஸ் டா, என்ன பண்ணுறதுனே தெரியல தீடீர்னு போட்ட பிளான் தான் இந்த கல்யாணம் எல்லாம் அதான் உன் கிட்ட சொல்ல முடியலை..!!" என்று சொல்ல அதை கேட்டுக்கொண்டானே தவிர அதை குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை சர்வா.

நிலமை உணர்ந்து அவனது அணைப்பில் இருந்து வேகமாக விலகியவன் ஸ்டெல்லாவின் புறம் திரும்பி "உன் அப்பா அடியாளோட இங்க வந்திருக்காரு..!!" என்று பட்டென்று சொல்ல.

அங்கிருந்த அனைவருக்கும் கிலி பிடித்துக்கொண்டது.

விக்கியோ நிலமையின் தீவிரம் உணர்ந்து தலையில் கைவைத்து நின்றுகொள்ள ஸ்டெல்லாவோ அழுதே விட்டாள்.

"போச்சு நம்ம இரண்டு பேரும் சாவ போறோம்..!!" என்று விக்கி புலம்ப.

சர்வாவுக்கோ இந்த நிலமையை என்ன செய்து சமாளிக்க என்றே தெரியவில்லை.

அனைவரும் அவர் அவர் யோசனையில் இருக்க அங்கு விக்கி மற்றும் ஸ்டெல்லாவுக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த மலர் மாலையை தன் கழுத்தில் போட்டுக்கொண்ட சித்தாரா மற்றொன்றை எடுத்து வேகமாக சர்வாவின் கழுத்தில் போட்டுவிட்டாள்.

அவளது செய்கையை விசித்திரமாய் பார்த்துக்கொண்டிருந்த சர்வா அவள் தன் கழுத்தில் மற்றொரு மாலையை போட்டதும் அதிர்ச்சியுடன் அவளை பாத்து "என்ன டி பண்ணுற..!!" என்று வார்த்தைகளை கோபத்தின் காரணமாய் கடித்து துப்ப.

அவனது கோபத்தை அசட்டை செய்தவள் "பிளீஸ்..!! பிளீஸ் டா ஷிவ்..!! இப்போ ஸ்டெல்லா அக்கா அப்பா இங்க வந்து ஸ்டெல்லா அக்காவையும் விக்கி அண்ணாவையும் பார்த்தா பிரச்சனை ரொம்ப பெருசாகிடும். சோ கொஞ்ச நேரம் நம்ம இந்த வேஷத்துல நிற்போம் அவங்க வந்தா கூட ஸ்டெல்லா அக்காவும் விக்கி அண்ணாவும் நம்ம கல்யாணதுக்கு சாட்சி கையெழுத்து போட வந்தாங்கனு சொல்லி சமாளிக்கலாம்...!! என்று தீவிரமாக சொன்னவள் அவனை ஏறிட்டு

"நம்ம இப்போ உண்மையா கல்யாணம் பண்ண போறது இல்லை டா ஜஸ்ட் அப்படி பண்ண போறது போல டிராமா பண்ண போறோம். இதை விட்டா வேற வழி இல்லை டா, வேணும்னா இதை தவிர உனக்கு வேற ஐடியா இருந்தா சொல்லு..!!" என்று சொல்ல வேறு வழியில்லாத காரணத்தால் அமைதி காத்தான் சர்வா.

சரியாய் அச்சமயம் தன் அடியாட்களுடன் உள்ளே நுழைந்த ஸ்டெல்லாவின் தந்தை அங்கு தன் மகளுக்கு பதில் மாலையும் கழுத்துமாய் நின்றுகொண்டிருந்த சர்வாவையும் சித்தாராவையும் கண்டு குழப்பம் கொண்டு அவர்கள் அருகில் சென்றார்.

அவருக்கு வந்த தகவல் படி கல்யாணம் தன் மகளுக்கு நடக்கிறது என்று அறிந்து கோபத்துடன் வந்தவருக்கு இங்கு வேறு ஒரு ஜோடி கல்யாண கோலத்தில் நிற்பதை பார்த்து அமைதியுடன் தன் மகள் அருகில் நெருங்கினார்.

"இங்க என்ன பண்ணுற ஸ்டெல்லா..??" என்று மகளை நோக்கி கடுமையாய் அவர் கேட்க.

சித்தாரா சொன்னதை கேட்ட ஸ்டெல்லாவும் "அது... அது ப்பா..!! என் பிரெண்டுக்கு கல்யாணம் அதான் சாட்சி கையெழுத்து போட வந்திருக்கேன்..!!" என்று சொல்ல.

"அதுக்குன்னு இப்படி தான் வீட்டுல சொல்லாம கொள்ளாம வருவீயா..??" என்று தன் முறைப்பை கைவிடாமல் அவர் கேட்க.

" சா.. சாரி.. சாரி ப்பா..!! வீட்டுக்கு தெரியாம அவசரமா நடக்குற கல்யாணம் அதான் இப்பிடி வரவேண்டியதா போச்சு..!!" என்று சொல்ல

தன் மகள் ஒருவனை நேசிக்கிறாள் என்று அறிந்தவருக்கு அது விக்கி என்று தெரியாதது அங்கு நல்லதாய் போச்சு .

இப்போது சித்தாரா மற்றும் சர்வாவின் புறம் திரும்பியவர்.

சர்வாவை பார்த்து புருவம் சுருக்கியபடி "நீ விஷ்வநாத் பையன் தானே..??" என்று வினவ

அதில் அவரை பார்த்து மௌனமாய் தலையாட்டினான் சர்வா.

"அவரோட பையனா இருந்துட்டு இப்பிடி அனாதை மாதிரி கல்யாணம் பண்ணுறீயே ப்பா..?? உன் அப்பா சொசைட்டீல எவ்வளவு பெரிய ஆளு நீ இப்படி பண்ணுறது அவருக்கு எவ்வளவு பெரிய தலைகுனிவை கொடுக்கும் தெரியுமா..??" என்று கேட்டவர்.

"இந்த காலத்து பசங்களுக்கு எதுலையும் பொறுமை இல்ல ப்பா..!! எல்லாத்துலையும் அவசரம்..!!" என்று தனக்கு கூறுவது போல சற்று சத்தமாக கூறியவர்.

பின் தன் அடியாட்கள் புறம் திரும்பி "சரி வந்தது தான் வந்தோம் இவங்க கல்யாணத்துக்கு அட்சதைய போட்டுட்டு போவோம்..!! என்ன டா சொல்லுறீங்க..??" என்று கேள்வி எழுப்ப.

"அப்படியே செய்யலாம் அண்ணே..!!" என்று கூறினர் அவரது அடியாட்கள்.

அவர்களது பதிலை கேட்டு புன்னகைத்தவர் சர்வா மற்றும் சித்தாராவின் புறம் திரும்பி "ம்ம்ம்..!! இன்னும் ஏன் மசமசனு நின்னுகிட்டு இருக்கீங்க சட்டுபுட்டுன்னு தாலியை கட்டுங்க ப்பா நாங்க அட்சதைய போட்டுட்டு கிளம்புவோம்..!!" என்று சொல்ல.

இப்போது அதிர்வது சித்தாரா முறை ஆனது.

சும்மா ஒரு கண் துடைப்புக்கு மணமக்கள் கோலத்தில் சிறிது நேரம் இருக்கலாம் என்று அவள் எண்ணி இருக்க இங்கோ உண்மையாய் அவர்களுக்கு கல்யாணம் நடந்து விடும் போல இருக்க தவிப்புடன் சர்வாவை ஏறிட்டாள்.

அவனோ பாறையை விழுங்கியதுபோல இறுக்கத்துடன் நிற்க.

அவனது கன்னத்து ஓரம் அசைவே சொன்னது அவன் கோபத்தை அழுத்தமாக தன் பற்களை கடித்துக்கொண்டு அடக்குகிறான் என்று.

நிலமை கைமீறி போக வாய் திறந்தாலும் பிழையாகி விடும் திறக்கா விட்டாலும் பிழையாகி விடும் என்ற நிலையில் செய்வதறியாது நின்றாள் சித்தாரா.

சர்வாவுக்கோ சொல்லவே தேவையில்லை கோபம் கோபம் கோபம் மட்டும் தான் இப்போது அவன் மூளையை ஆக்ரமித்து இருந்தது.

அங்கு ரிஷ்ட்டர் ஆபிசில் வேலை செய்பவர்களும் அருவாள், கம்புடன் இருந்த அடியாட்களை பார்த்து ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருந்தனர்.

அதற்குள் ஸ்டெல்லாவின் தந்தையின் கட்டளையில் அடியாளில் ஒருவன் மேசை மீது வீற்றிருந்த தாலியை எடுத்து சர்வாவிடம் நீட்ட.

அதை வெறித்து பார்த்த சர்வா ஒரு முறை தன் நண்பனை ஏறிட்டு பார்க்க அவனோ ஸ்டெல்லாவின் தந்தையை பயத்துடன் பார்த்தானே தவிர வாயே திறக்கவில்லை.

அதை கண்டு எரிச்சலுற்றவன் அதே எரிச்சலுடன் அந்த தாலியை வாங்கி தன் அருகே செய்வது அறியாது முழித்துக்கொண்டு நின்ற சித்தாராவின் கழுத்தில் கோபத்துடன் அதை கட்டி அவளை தன் மனைவி ஆக்கிக்கொண்டான்.

அவன் தாலி கட்டியதும் அதிர்ந்து அவனை ஏறிட்டு பார்த்த சித்தாராவை சிறிதும் கண்டுகொள்ளாமல் அவன் இறுக்கத்துடன் வேறு புறம் திரும்பி நிற்க.

சொன்னது போலவே அட்சதை தூவினார்கள் ஸ்டெல்லாவின் தந்தையும் அவரது அடியாட்களும்.

"நினைச்சது போலவே உங்க கல்யாணத்தை முடிச்சிட்டீங்க வாழ்த்துக்கள்..!!" என்று சொன்ன ஸ்டெல்லாவின் தந்தை "இனி என்ன ரிஜிஸ்டிரேஷன் பாக்கி இருக்கா..?? சட்டுபுட்டுன்னு அதையும் முடிச்சீங்கனா என் பொண்ணை கையோட கூட்டிட்டு நான் கிளம்பிடுவேன்..!!"என்று அவர் சொல்ல.

அதில் அதுவரை அமைதியாய் நின்றிருந்த சர்வா "முடிஞ்சிச்சு..!! ரிஜிஸ்டிரேஷன் ஏற்கனவே முடிஞ்சிடிச்சு..!!" என்றான் அழுத்தமாய்.

"ஓ..!! அதை முடிச்சிட்டு தான் தாலி கட்டுனீங்களா பேஷ் பேஷ்..!!" என்றவர் ஸ்டெல்லா புறம் திரும்பி "அதான் எல்லா முடிஞ்சிடிச்சே இதுக்கு மேல இங்க உனக்கு என்ன வேலை என் கூட கிளம்பு..!!" என்று சொல்லி அவளை கையோடு வெளியே அழைத்துச்செல்ல.

வெளியே வந்ததும் அவர் செய்த முதல் வேலை விஷ்வநாத்திற்கு அழைத்து நடந்த அனைத்துயும் சொன்னது தான்.

இங்கே சர்வா கட்டிய தாலியை கழுத்தில் சுமந்தபடி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தாள் சித்தாரா அவள் அருகிலோ மிக மிக இறுக்கமாக நின்றுகொண்டு இருந்தான் "ஷிவ்வர்வ சர்வஜித்..!!

தொடரும்...!!
 
Status
Not open for further replies.
Top