All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரா பவியின் "கள்ளியின் கள்வன் அவன்..!!" - கதை திரி

Status
Not open for further replies.

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 20

இரவு உணவை முடித்த இருவரும் உறங்க வேண்டி அறைக்கு செல்ல அது நாள் வரை சர்வாவின் அருகில் படுக்காமல் பாயில் படுத்து வந்த சித்தாரா இன்று அவன் அருகில் படுக்கவென்று முடிவு எடுத்தாள்.

படுக்கையில் பெட்சீட்டை விரித்து படுத்துக்கொண்ட சர்வா தன் ஃபோனை எடுத்து நோண்ட அச்சமயம் அறைக்குள் வந்த சித்தாராவோ "ஷப்பா..!! இந்த பாயில இவ்வளவு நாள் படுத்து உடம்பெல்லாம் ஒரே வலிப்பா..!!" என்று கூறி தன் முதுகை பிடித்து அங்கும் இங்கும் வளைக்க ஓரக்கண்ணால் சர்வாவை நோட்டமிட்டாள்.

அவனோ இவளை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் ஃபோனில் மூழ்கி விட "கொஞ்சம்மாச்சும் கண்டுக்குறானா பாரு காண்டாமிருகம்..!!!" என்று உதட்டை சுழித்தபடி முனங்கியவள் மெல்ல அப்படியே நகர்ந்து பெட்டில் வந்து அமர்ந்தாள்

அதில் போனில் இருந்து தன் பார்வையை திருப்பிய சர்வா இவளை பார்க்க "ஹி‌.ஹி..!! பாய் படுக்க
கம்ஃபோர்டபிள்ளாவே இல்லைடா ஜித்து மாமா அதான் பழைய படி என் பெட்டுக்கே வந்துட்டேன்..!!" என்றாள் அசடுவழிய.

அதில் அவளை பார்த்து கேவலமாக ஒரு லுக்கு விட்ட சர்வா "சகிக்கலை டி..!!" என்று புருவசுழிப்புடன் கூறிவிட்டு கண்மூடி படுத்துவிட்டான்.

இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம் அப்பா..!! என்பது போல அதை தூசியாய் தட்டிவிட்ட சித்தாரா சமத்தாய் அவன் அருகில் படுத்துக்கொண்டாள்.

ஒரு மணி நேரம் கழிந்திருக்கும் அந்த நைட் லைட் வெளிச்சத்தில் மெல்ல தன் கண்களை பிரித்து தூங்கும் சர்வாவை ஏறிட்டு பார்த்தவள் அவன் தூங்கிவிட்டான் என்பதை உறுதிசெய்து விட்டு மெல்ல நகர்ந்து அவனை நெருங்கினாள்.

தூக்கத்தில் அவன் இவள் புறம் திரும்பி படுத்திருக்க அது இன்னும் வசதியாய் போய்விட்டது சித்தாராவுக்கு மெல்ல நகர்ந்து அவன் அருகில் சென்றவள் அவன் எழுந்துவிடாத வண்ணம் அவனை சுற்றி அணைத்தது போல தன் கையை மெல்ல போட்டவள் அவன் நெஞ்சில் தன் முகத்தை புதைத்தாள்.

இதயமோ அவள் செய்யும் செயலை எண்ணி பந்தைய குதிரைக்கு இணையாய் வேகமாய் துடிக்க ஆனாலும் புதிதாய் வந்த காதல் தந்த தைரியத்தில் அந்த பயத்தை விரட்டியவள் அவன் நெஞ்சில் அழுத்தமாக தன் முதல் முத்திரையை பதித்து இருந்தாள்.

தூக்கத்தில் இருந்தவன் அதை உணர்ந்தானோ என்னமோ அவனை அறியாமலேயே தூக்கத்தில் சித்தாராவின் மீது கையை போட்டவன் தற்போது முன்னை விட நெருக்கமாய் அவளை தன்னோடு அணைத்துக்கொண்டான்.

அதில் ஆனந்தமாய் அதிர்ந்த சித்தாரா அந்த நேரத்தை மனதுள் இனிமையாய் நிரப்பியபடி அவன் நெஞ்சில் தன் கன்னத்தை வைத்தபடி சுகமாய் துயில் கொண்டாள்.

வழக்கம் போல காலையில் முதலில் முழிப்பு வந்த சர்வா அவள் தன் மீது கைபோட்டபடி படுத்திருப்பதையும் பதிலுக்கு தானும் அவளை அணைத்தார் போல படுத்திருப்பதையும் பார்த்து அதிர்ந்தான் பின் தூக்கத்தில் தெரியாமல் போட்டிருப்போம் என்று தானே எண்ணியபடி அவள் கைகளை விலக்கிவிட்டு எழுந்து அறையை விட்டு வெளியே சென்றான்.

சற்றுநேரம் தன் உடலை வளைத்து வாம்அப் செய்தவன் கூடவே புஷ்அப்போடு சேர்த்து ஒரு சில எக்சர்சைஸ்சும் செய்து முடித்துவிட்டு எழுந்தான்.

அவ்வாறு எழுந்தவனின் மேல்சட்டையோ எக்சர்சைஸ் செய்த பலனாய் வியர்வையால் நனைந்திருக்க அதை கழட்டியவன் அதனைக் கொண்டே மேலும் தன் மேல் வழியும் வியர்வையை துடைத்துக்கொண்டான்.

துடைத்தபடியே படுக்கை அறையினுள் நுழைந்தவன் தனது சட்டையை அங்கு ஓரமாக இருந்த அழுக்கு கூடையில் போட்டு விட்டு நேரே சென்றது சித்தாராவை எழுப்ப தான்.

என்றும் போல இன்றும் அவள் எழுப்ப வேண்டி அவள் தோள்பட்டையை தொட அந்நேரம் தூக்கத்தில் அவள் சர்வாவுடன் டூயட் பாடிக்கொண்டிருப்பாள் போலும் அதே தாக்கத்தில் அவன் அவளை எழுப்பவேண்டி தோளை தொட்டதும் கனவு என எண்ணி அவனது கையை பிடித்து தன்னை நோக்கி இழுக்க இதனை எதிர்பாராத சர்வா தன்னை சுதாரிக்கும் முன் அதிர்ச்சியுடன் அவள் மேல் சென்று பொத்தென்று விழுந்தான்.

அதில் அதுவரை கனவில் அழகாய் சர்வாவுடன் டூயட் ஆடிக்கொண்டு இருந்த சித்தாரா இப்படி சர்வா தன் மொத்த எடையோடு அவள் மேல் சென்று விழுந்ததில் வலியோடு சேர்ந்து மூச்சு விட முடியாமல் "ஆ...!!" என்று அலறினாள்.

அவளது அலறலை பார்த்து அதிர்ச்சி விலகிய சர்வா தன் தலையில் அடித்துக்கொண்டு அவளது வாயை பொத்தினான்.

"அடியேய் கத்தாத டி வீட்டுபக்கத்துல இருக்குறவங்க என்ன நினைப்பாங்க..??" என்று கேட்டபடி அவளை விட்டு எழும்பியவன் மனமோ "போச்சு அவ மேல நம்ம விழுந்ததுக்கு இன்னைக்கு நம்மள வச்சு செய்யப்போறா..!!" என்று லேசாய் பீதியில் எண்ண.

அனால் அங்கோ அதற்கு மாறாய் கண்கள் விரிய அவனை வைத்தக்கண் மாறாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் சித்தாரா.

அவள் கண்முன்னே மேற்சட்டை இல்லாத சர்வாவின் ஃபிட்டான பாடி நெருக்கமாய் இருக்க அதை தொட்டுப்பார்க்க சொல்லி மனம் உந்த லேசாய் கையை தூக்கி அதை தொடபோனவளை அச்சமயம் "ஹே எருமை..!!" என்று கத்தி அழைத்தபடி அவளது தோளை பிடித்து உலுக்கினான் சர்வா.

அதில் தெளிந்தவள் "ஆங்..!!" என்று பதறியபடி அவன் முகத்தை ஏறிட்டு பார்க்க

அவனோ "என்ன டி பேய் அடிச்சது போல உட்கார்ந்து இருக்க..!! எத்தனை வாட்டி கூப்பிட்றது உன்னை.. ?? நான் கூப்பிட்டது உன் காதுல விழுந்துச்சா இல்லையா..??" என்று அழுத்தமாக கேட்க அவளோ அவனை மலங்க மலங்க விழித்து பார்த்தாள்.

அதில் அவள் முகத்தை அங்கும் இங்கும் திரும்பி பார்த்தவன் "என்னாச்சு டி நல்லா தானே இருக்க..??" என்று அவளது வித்தியாசமான நடவடிக்கையில் குழப்பமாய் அவன் கேட்க

சுதாரித்துக் கொண்ட சித்தாரா "என்.. எனக்கு என்ன..?? நான் நல்லாத்தான் இருக்கேன்..!!" என்றாள் திக்கித்திணறியபடி.

அவளது ஒழுங்கில்லாத பதில் அவனுக்கு சந்தேகத்தை கொடுத்தாலும் காலை ஆபிசுக்கு நேரமாவதை உணர்ந்து அதை அப்படியே விட்டவன் மேற்கொண்டு அதை பற்றி ஒன்றும் பேசாமல் அவளை அழைத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தான்.

இருவரும் சேர்ந்து ஒருவழியாய் உணவை தயாரித்து இருக்க அந்த இடைபட்ட நேரத்தில் குறைந்தது ஐம்பது முறையாவது சர்வாவை தன் குறுகுறு விழிகளால் அவன் அறியாமல் பார்த்திருப்பாள்.

இதில் சமையல் செய்வதால் வியர்வை வரும் என்பதால் சட்டை அணியாமலேயே கீழே ஒரு சாட்ஸ் அணிந்தபடி சமைத்துக்கொண்டிருந்தான் சர்வா.

இதில் சித்தாரா தான் ஒவ்வொருமுறையும் அவனை பார்க்கும் போதும் தடுமாறி போனாள்.

பெண்ணாய் இருந்துக்கொண்டு இப்படி ஒரு ஆண்மகனை பார்த்துவைக்கிறாயே என்று வெட்கத்துடன் மனசாட்சி கேட்க அதில் ஏன் பசங்க மட்டும் தான் சைட் அடிக்கணுமா என்ன பொண்ணுங்க அடிக்க கூடாதா..?? யார் எப்படியோ என் சர்வாவை நான் நல்லா சைட் அடிப்பேன் ப்பா, அதைக்கேட்க யாருக்கும் உரிமை இல்ல...!!" என்று கூறினாள் அவன் மேல் வந்த அதிகப்படியான உரிமையுடன்

பின் இருவரும் வேகவேகமாய் கிளம்பி தம் தம் வேலையை பார்க்க செல்ல அதன் படி சித்தாரா தன் கல்லூரிக்கு சென்றாள் என்றால் சர்வா ஆபிசுக்கு சென்றாள்‌.

ஆபிசுக்கு வந்த சர்வாவை வேலைகள் சூழ்ந்துக் கொள்ள அச்சமயம் அவனது மேனேஜர் அவனை அழைத்ததாய் சொல்லி அழைப்பு வந்தது.

இவனும் யோசித்தபடியே மேனேஜர் அறைக்கு செல்ல அங்கோ இவன் அறைக்குள் நுழைந்த அடுத்த கணம் இவன் மீது பைலை தூக்கி வீசிய அந்த மேனேஜர் அவனை சரமாறியாக திட்டத்தொடங்கினார் இத்தனைக்கும் அவரருகில் பூஜா நின்றுக்கொண்டு இருந்தாள் இருந்தும் சர்வாவை அவர் கண்டமேனிக்கு திட்ட ஏன் என்று தெரியாமல் புரியாமல் அவரை ஏறிட்டான் சர்வா‌‌


விஷயம் இது தான் நேற்று சர்வா கோட் செய்து சப்மிட் பண்ணியிருந்த கொட்டேஷனிற்கு புதியாய் வந்துள்ள கவெர்மென்ட் புராஜெக்ட் கிடைக்கவில்லை அதற்கு சர்வா மீது எந்த தவறும் இல்லை அவன் உள்ளதை உள்ளபடி அப்படியே போட்டான் இருந்து சில இடத்தில் ஹோல் செயில் செய்து கொள்ளலாம் என்று கணித்து கம்மியாகவே கோட் செய்தான்‌. ஆனால் இதை விட கம்மியாய் கோட் செய்தால் ஒன்று கலப்படம் உள்ள பொருட்களை வாங்கி செய்யவேண்டும் இல்லை எனில் அது இந்த கம்பனிக்கு தான் நஷ்டமாய் முடியும். அதனாலும் அவன் நியாயமான ரேட் ஒன்றை கோட் செய்தான்‌.

ஆனால் இந்த மேனேஜரோ இது தெரிந்தும் சர்வாவை பிடிக்காத ஒரே காரணத்திற்காக அவனை சரமாறியாய் திட்ட கேட்டுக்கொண்டு இருந்த பூஜாவிற்கே ஒரு மாதிரி ஆனது‌.

சர்வாவோ முதலில் பொறுத்தவன் அவர் வரம்பு மீறி பேசவும் கண்கள் சிவக்க அவரை அடிக்க போக அச்சமயம் உள்ளே வந்த பியூன் அந்த மேனேஜரை எம்‌.டி அழைப்பதாய் சொல்லி கூட்டிப்போனான்.

அவன் சென்றதும் ச்ச..!! என்றபடி தன் கோபத்தை ஒன்று திரட்டி தரையை ஓங்கி உதைத்த சர்வா தலைமுடியை அழுந்த கோதியபடி கோபத்தோடு நிற்க.

அவனது நிலை புரிந்த பூஜா மெல்ல அவன் தோளை தொட்டு திரும்பி சமாதானம் படுத்தினாள்‌.

பின் இருவரும் சென்று தம்தம் இடத்தில் அமர்ந்து வேலையை தொடர இறுக்கமாய் அமர்ந்திருந்த சர்வாவை பார்த்து வருந்திய பூஜா அவனை சமாதானம் படுத்தும் பொருட்டு அன்று மதியம் ஆபிஸ் முடிந்ததும் பீச்சுக்கு கூட்டிச்சென்றாள்.

தன் போனை சைலெண்டில் போட்ட பூஜா கூடவே அவனது போனையும் வாங்கி சைலெண்ட் மோடில் போட்டுவிட்டு "இன்னைக்கு ஈவ்னிங் வர எந்த ஒரு ஸ்டிரெஸ்சோ டிஸ்டர்ப்போ இல்லாம நம்ம பீச்சுல ஹாப்பியா விளையாடலாம்...!!" என்று சொல்லிவிட அப்போது சர்வா இருந்த மனநிலையில் அதை மறுக்கவில்லை.

இங்கு சித்தாராவுக்கு நடத்தும் பாடம் எதும் புரியவில்லை நல்ல காலத்திலேயே அவளுக்கு இப்போது காதல் கிறுக்கு அவளை பிடித்து இருக்கும் போது புரியவா போகுது.

வெளியே இருந்த மரத்தை வேடிக்கை பார்த்தவாறு அவள் மோனநிலையில் அமர்ந்து இருக்க அதை கண்டு கடுப்பான வகுப்பு ஆசிரியர் கோபத்துடன் அவளை வெளியே அனுப்பி விட்டார்.

அதில் வெளியே வந்தவள் "ச்ச இந்த கிழவிக்கு எப்பவும் என்னை மட்டும் தான் கண்ணு தெரியும் எப்ப பாரு எனக்கே பனிஷ்மென்ட் கொடுத்திட்டு இருக்கா..!! " என்று முணுமுணுத்தபடி காலேஜில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்துக் கொண்டாள்.

"இந்த சர்வாக்கு இன்னைக்கு ஆப்டர்நூன் வர தானே ஆபிஸ்..!! வெட்டியா இங்க உங்காந்துகிட்டு இருக்க நேரத்துக்கு அவனை கூட்டிட்டு பக்கத்துல இருக்க பீச்சுக்கு போனா என்ன..??" என்று யோசித்தவள் உடனே அவனுக்கு அழைப்பு விடுக்க அவனோ அந்த புறம் எடுத்த பாடு இல்லை.

அதில் கடுப்புற்றவள் அப்படியே உம்மென்று அமர்ந்திருக்க இங்கு இவள் வகுப்பை விட்டு வெளியேறியதும் அவளது வாலை பிடித்துக்கொண்டு வெளியேறி வந்த சந்தியாவும் அஜய்யும் அவள் அப்படி உம்மென்று உட்கார்ந்து இருப்பதை பார்த்து அவள் தன்னை வகுப்பில் இருந்த வெளியேற்றிய காரணத்தால் தான் அப்படி அமர்ந்திருக்கிறாள் என்று எண்ணி அவள் அருகில் சென்று அவளை சிரிக்க வைத்து அவளை அருகில் இருக்கும் பீச்சுக்கு அழைத்து சென்றனர்...!!

தொடரும்..!!
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 21

"ஹே பஞ்சு மிட்டாய்...!! டேய் சர்வா அங்க பாரு டா பஞ்சு மிட்டாய்..!!"‌ என்று அந்த கடற்கரையில் சற்று தூரத்தில் வித்துக்கொண்டு இருந்த பஞ்சு மிட்டாயை பார்த்து குதூகலமாய் சர்வாவிடம் சொன்னாள் பூஜா.

அதில் சலிப்புடன் அந்த பஞ்சு மிட்டாயை பார்த்த சர்வா "ப்ச் ஆமா பஞ்சு மிட்டாய் தான் அதுக்கு இப்போ என்ன பூசை..!!" என்று கேட்க

அதில் பொய்யாய் அவனை முறைத்த அவள் "என்ன டா அசால்ட்டா என்னங்குற..?? வாங்கி தா டா..!!" என்றாள் சிணுங்கலாய்.

அதில் சிரித்த இவன் "சரியான தொல்லை டி நீ..!! இரு வாங்கிட்டு வரேன்..!!" என்று சொன்னவன் அந்த மணல் மேடையில் இருந்து எழுந்து தன் உடையில் இருந்த மண்ணை தட்டிவிட்டபடி அந்த பஞ்சு மிட்டாய் கடையை நோக்கிச் சென்றான்.

அதே சமயம் அதே கடற்கரைக்கு வந்த சித்தாராவின் மீது சந்தியா மண்ணை வாரி போட பதிலுக்கு அவள் மண்ணை வாரி போட அச்சமயம் அதில் இருந்து விலகிய சந்தியா அஜய்யை பிடித்து இழுத்து நடுவில் விட சரியாய் சித்தாரா எறிந்தது அஜய் மேல் விழுந்தது.

அதில் "அடிப்பாவி..!!" என்று அலறிய அஜய் குனிந்து கைநிறைய மணல் வாரி சித்தாரா மீது போட வர

"நோ.. நோ.. அஜய்..!! தெரியாம தான் டா உன் மேல பட்டுச்சு..!!" என்று கூறியபடி அவனுக்கு போக்கு காட்டி ஓட ஆரம்பித்தாள் .

அவள் ஓடுவதை பார்த்த இவனோ சிரிப்புடன் "ஏய் சித்து ஓடாத டி..!!" என்றபடி அவளை துரத்த

"முடிஞ்சா என்னை பிடிச்சுக்கோ டா...!!" என்று கத்தி சிரித்தபடியே அவனிடம் சிக்காமல் ஒடினாள் சித்தாரா.


"ஹே நில்லு டி...!! ஓட முடியல...!!" என்று கூறியபடி மூச்சுவாங்க ஓடிய அஜய்யை ஓடியபடியே திரும்பி பார்த்து சிரித்தவள் எதிரில் வந்தவனை கவனிக்காமல் மோதி விட.

இவள் மோதிய வேகத்தில் எதிரில் வந்திருந்தவனின் கையில் இருந்த பஞ்சு மிட்டாயில் ஒன்று கீழே விழுந்து விட்டது.

கீழே விழாமல் இருவரும் ஒருவாறு தங்களை சமாளித்தபடி நிற்க தன் மேல் தவறு உள்ளது என்பதை உணர்ந்த சித்தாரா "அய்யோ சாரி சார்..!! தெரியாம மோதிட்டேன் சாரி சாரி சாரி...!!" என்று மூச்சு வாங்க பதற்றத்துடன் மன்னிப்பு வேண்டியபடி நிமிர.

அங்கே கீழே விழுந்த பஞ்சு மிட்டாயை பார்த்து கடுப்புடன் இவளை நிமிர்ந்து பார்த்தான் சர்வா.

ஒருவரை ஒருவர் பார்த்த அடுத்த நொடி அதிர்ந்த இருவரும் அதே அதிர்ச்சியுடன் "நீயா..??" "நீயா..??" என்று ஒரே சமயத்தில் ஒரு போல் கேட்க.

அதே நேரம் அங்கு சித்தாராவை துரத்திக்கொண்டு வந்த அஜய் அங்கு நின்றுக்கொண்டிருந்த சித்தாராவின் கையை வந்த வேகத்தில் பற்றிக்கொண்டு "ஹே சித்து நான் உன்னை பிடிச்சிட்டேன்..!! இனி நீ என் கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது..!!" என்று சொன்னபடி கையில் இருந்த மண்ணை அவள் மேல் போட போக.

அச்சமயம் வலிமையான ஒரு கரம் வந்து அவன் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டது.

அதில் யார் என்றபடி அவன் திரும்ப அங்கு அவன் கையை பிடித்தபடி நின்றது சாட்சாத் நம் சர்வாவே தான்.

முகம் இறுக தன் கையை பிடித்தபடி நின்றுக்கொண்டிருந்த சர்வாவை புரியாமல் பார்த்த அஜய் "வாட் பாஸ்..??" என்று கேட்க

அதில் அவனை அலட்சியம் செய்த சர்வா கையில் இருந்த பஞ்சு மிட்டாயை சித்தாரா புறம் நீட்டி "ம்ம்..!!" என்று குரல் கொடுக்க என்ன புரிந்ததோ உடனே அதை தன் வலக்கையில் வாங்கிக்கொண்டாள் சித்தாரா.

இப்போது பொறுமையாக அஜய் புறம் திரும்பியவன் அவனை அழுத்தமாக பார்த்தபடியே தன் கைகொண்டு சித்தாராவின் இடது கரத்தை பற்றியிருந்த அவன் கையை பிரித்தவன் சித்தாராவை பார்த்து அழுத்தமான குரலில் "கிளம்பு வீட்டுக்கு போகலாம்..!!" என்று சொல்ல

அவனது ஒவ்வொரு செயலையும் விசித்திரமாய் பார்த்தவளுக்கு அடி நெஞ்சில் பயம் இல்லாமல் இல்லை.

ஆம் பயம் தான் காலேஜ் நேரத்தில் அதை கட்டடித்து விட்டு பீச்சுக்கு வந்தது அவனதுக்கு தெரிந்து விட்டதே என்ற பயம். சர்வா காலேஜ் நாட்களில் எப்படியோ ஆனால் படிப்பில் நம்பர் ஒன் தான் அதே சமயம் ஒரு கிளாசை கூட தவறாமல் அட்டெண்ட் செய்வான். அப்படி இருக்கும் போது இப்பொழுது அவன் கஷ்டப்பட்டு தனக்கு பீஸ் கட்டிக்கொண்டு இருக்கும் சமயம் அதை இப்படி வீண் அடித்துக்கொண்டிப்பதை கண்டு என்ன சொல்வானோ என்ற பயம் அவள் நெஞ்சை ஆக்ரமித்தது.

அதனாலேயே அவனோடு இப்போது போக தயங்கியவள் "இல்லை பிரெண்ட்ஸ்..!!" என்று இழுக்க அவன் பார்த்த உக்ர பார்வையில் அடுத்து சொல்லவந்தது அனைத்தும் வாயினுள் அமிங்கியது.

இவர்கள் இருவரின் சம்பாஷனையையும் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்த அஜய் சர்வா சித்தாராவை முறைத்ததை பார்த்ததும் கோபம் சுர்ரென்று ஏறியது.

"ஹலோ என்ன சார் லந்தா..?? ஒரு பொண்ணு தனியா இருந்திட கூடாதே உடனே எங்க இருந்து தான் வந்திடுறீங்களோ..??" என்று அவனிடம் எகிறியவன்.

சித்தாரா புறம் திரும்பி "நீ ஒண்ணும் பயப்படாத சித்து நான் பார்த்துக்குறேன்..!!" என்று கூற அதற்கு அவள் எதோ கூற வருவதை கூட கேட்காமல் "பைட் பண்ணி ரொம்ப நாள் ஆச்சுன்னு நானே பீல் பண்ணிட்டு இருந்தேன்..!! அந்த கவலைய போக்க சாரே வாண்ட்டடா வந்திருக்காரு..!!" என்று கூறி சிரித்தபடி தன் தலையை இருபுறமாய் ஆட்டி சொடக்கு எடுத்தான்.

அவன் செய்யும் ஒவ்வொரு செயலையும் பீதியுடன் பார்த்த சித்தாராவோ மனதில் "அடேய் அஜய்..!! உன் முன்ன நிக்குறவன் கராத்தே பிளாக் பெல்ட்டு டா இது தெரியாம நீ வேற பெர்பாமன்ஸ் பண்ணிட்டு இருக்கியே..!!" என்று எண்ணியவள் "ஐயோ யார் பெத்த புள்ளையோ..??" என்று நினைத்தபடி அவனை பரிதாபமாய் பார்த்தான்.

இதெல்லாம் தெரியாத அஜய்யோ தன் சட்டை ஸ்லீவை தோளுக்கு மேல் மடித்துவிட்டு இல்லாத தன் ஆர்ம்சை முறுக்கி அதை சர்வா புறம் காட்டி தட்டியவாறு "யூ நோ ஆர்ம் ரஸ்லிங்..?? ஹா‌‌..ஹா தயிர்சாதம் போல இருக்க உனக்கு எங்க அதை பத்தி தெரியபோகுது..!!" என்றபடி தானே சிரித்துக்கொண்டவன் தொடர்ந்து "அதுல நான் எக்ஸ்போர்ட் சோ வீணா என் கிட்ட மோதி உன் பாடிய பஞ்சர் ஆக்காம ஓடிபோயிடு..!!" என்று கூற

அவன் பேசிய அனைத்தையும் அமைதியாய் கேட்டுக்கொண்ட சர்வா அவன் பேசி முடித்ததும் பெருமூச்சொன்றை வெளியேற்றி விட்டு அவனை மெல்ல நெருங்கி அவனது நிமிர்ந்து நின்ற சட்டை காலரை தன் கை கொண்டு மடித்து விட்டபடி "நானும் உன்னை கண்டுக்காம போகலாம்னு தான் டா முதல்ல நினைச்சேன். ஆனா உன் வாய் இருக்கு பார்த்தியா வாய் அது லைட்டா என்ன சீண்டி விட்டிடுச்சு..!! இனிமே பேசுறதுக்கு முன்ன எதிர்ல்ல நிக்குறது யாருன்னு பார்த்து பேசணும் சரியா..??" என்று கூறி அவன் கன்னத்தை தட்டியவன் அவன் சுதாரிக்கும் முன் அதே கரத்தை ஓங்கி அவன் மூக்குலேயே குத்தி இருந்தான்.

எல்லாம் சட்டென்று நடந்து முடிந்து விட தனக்கு என்ன ஆனது என்பதை உணரும் முன்னே வலியில் மூக்கை பிடித்துக்கொண்டு கீழே விழுந்திருந்தான் அஜய்‌.

அதை கண்டு "ஐயோ அஜய்..!!" என்று பதற்றத்துடன் அவன் அருகே செல்ல போன சித்தாராவின் கரத்தை இறுக பற்றிய சர்வா

"உன் கிட்ட கொஞ்ச பேசணும் நீ நாளைக்கு போய் அவனுக்காக பதறு..!!" என்று பற்களுக்கு இடையே வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு அவளை இழுத்துக்கொண்டு தன் வண்டியை நோக்கி நகர்ந்தான்.

ஒருகையில் பஞ்சுமிட்டாயை பிடித்தபடி மறுகை சர்வாவின் இறுகியபிடியில் சிக்கிக்கொள்ள நெஞ்சம் முழுவதும் அதீத பயத்தை சுமந்தபடியே அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள் சித்தாரா.

தொடரும்..!!
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -22

"என் கையை விடு..!! ப்ச் விடு டா என் கையை..!! " என தன் பல்லைக் கடித்துக் கூறியபடி சர்வாவின் கையில் இறுக்கமாக அகப்பட்டு இருந்த தன் கையை உருவ முயன்றாள் சித்தாரா.

அது எதற்கும் அசைந்துக் கொடுக்காத சர்வா அவளை இழுத்துக்கொண்டு தன் பைக் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்தவன் "ஆல் ரெடி உன் மேல செம காண்டுல இருக்கேன் அதனால மரியாதையா வண்டில ஏறு இல்லாட்டி தேவையில்லாம என் கிட்ட வாங்கி கட்டிக்க வேண்டியது இருக்கும்..!!" என்று அழுத்தமாக கூற

அவனது குணத்தை பற்றி நன்கு அறிந்த காரணத்தால் மேற்கொண்டு முரண்டு பிடிக்காமல் அமைதியானவள் அவனது வண்டியில் ஏறி அமர்ந்துக்கொண்டாள்‌.

இவள் ஏறியதும் வண்டி அசுரவேகத்தில் கிளம்ப அதிலேயே தெரிந்தது அவனது கோபத்தின் அளவு.

அதில் உள்ளுக்குள் எழுந்த பயத்துடன் தன்னை அறியாமல் அவனது சட்டையை அவள் இறுக்கி பிடிக்க.

அவனது வண்டி தானாய் ஸ்லோ ஆனது.

ஒருவாறு இருவரும் வீட்டை வந்து அடைய அதில் பைக்கை விட்டு சித்தாரா கீழே இறங்கிய அடுத்த நொடி தனது வாகனத்தை இயக்கியவன் அங்கிருந்து பறந்திருந்தான்.

போகும் அவனை குழப்பமாக பார்த்த சித்தாராவுக்கு தற்போது அவன் என்ன செய்யபோகிறான் என்பதையே கணிக்கமுடியவில்லை.

"என்ன இவன் நம்ம பண்ணதுக்கு இன்னைக்கு நம்மளை லெப்ட் ரைட்டுன்னு வாங்குவான்னு பார்த்தா வீட்டுல இறக்கி விட்டுட்டு திரும்ப எங்கேயோ போறான்...??" என்று குழப்பமாக எண்ணியவளுக்கு அவன் தன்னை ஒன்றும் செய்யவில்லை என்பதுலேயே மனம் ஆசுவாசம் ஆகி இருக்க "ப்ச் எவ்வளவோ பார்த்துட்டேன் இவன் எல்லாம் சும்மா ஜுஜுபி..!! வந்து எதாச்சாம் கேட்டா பார்த்துப்போம்..!!" என்று அசால்டாய் எண்ணியபடி வீட்டினுள் சென்றாள்.

ஆனால் அவள் எண்ணியது போல எதுவும் நடக்கவில்லை.

வீட்டுக்கு வந்த பின்னும் அவன் அமைதியாகவே இருக்க அடுத்த நாள் ஞாயிறு எப்போதும் வீட்டில் இருப்பவன் அன்று காலையிலேயே எங்கோ கிளம்பி சென்று இரவு தான் வீடு வந்து சேர்ந்தான்.

வந்தபின்னும் ஒருவார்த்தை அவளிடம் பேசாமல் இருக்க இவளுக்கு தான் என்னமோ போல் ஆனது.

தானாய் பேச சென்றால் நேற்று நடந்ததை பற்றி சண்டை போடுவானோ என்று எண்ணி இவளும் பேசாமல் இருக்க அந்த நாள் அப்படியே கழிந்தது.

*******************************

திங்கள் காலையில் காலேஜிற்கு வந்த சித்தாரா காலேஜ் கேன்டீனில் அமர்ந்தபடி தன் முன்னே மூக்கில் பெரிய சைஸ் பிளாஸ்டரை ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்த அஜய்யை கண்டு வருத்தமான குரலில் "ரொம்ப வலிக்குதா அஜய்..??" என்று கேட்க

அதில் அவளை பார்த்து அவசரமாய் தன் தலையை இல்லை என்று ஆட்டிய அஜய் "என்ன சித்தாரா இப்படி கேட்டுட்ட எனக்கு இதெல்லாம் ஒரு அடியே இல்லை..!! நான் பார்க்காத அடியா..?? என்ன.. கண்ண அசைச்ச நேரத்துல அவன் என்னை அடிச்சிட்டு உன்ன கூட்டிட்டு போயிட்டான் அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு..!!" என்றவனுக்கு மூக்கின் வலி இப்போதும் உயிர் போனது போல இருக்க அதில் முகம் சுருங்கியவன் சித்தாரா தன்னை பார்ப்பதை பார்த்து உடனே தன் முகத்தை சரி செய்தபடி "அதுவும் உன்ன நினைச்சு தானே தவிர அடி பட்டதுக்கு இல்லை..!! உனக்காக இது என்ன இதுக்கு மேல கூட நான் அடிவாங்க தயார்...!!" என்று அவன் சந்து கேப்பில் அவளிடம் காதல் ஆட்டோ ஓட்ட பார்க்க.

அது புரியாத அவளோ "ச்சே நம்ம பிரெண்ட்டுக்கு இருக்குற பாசம் கூட அந்த எருமைக்கு இல்லையே..??" என்று சர்வாவை எண்ணி கடுப்புடன் நினைத்தவள் அஜய்யை பார்த்து மெலிதாய் புன்னகைத்து "உன்ன மாதிரி ஒருத்தன் என் பிரெண்டா கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் டா..!!" என்றாள் உடைந்த அவன் மூக்கை பார்த்தபடி

அதில் எதையோ சாதித்தது போல் உணர்ந்த அஜயின் மனம் எல்லாம் மத்தாப்பு பூத்தது போல் இருக்க "இன்னும் கொஞ்ச நாளுல நீ என்னை உன் பிரெண்டுன்னு சொன்ன இந்த வாயிலையே என்னை உன் லவ்வர்ருன்னு சொல்லுவன்னு எனக்கு நம்பிக்கை வந்துருச்சு சித்து. அதுக்கு சாட்சியா இதோ உன் கண்ணுலையே எனக்கான லவ் வழியுறதை நான் பார்த்துட்டேன் இது போதும் சித்து எனக்கு இது போதும்..!!" என்று மனதுள் சித்தாராவை எண்ணி நினைத்தவன் அவளையே காதல் ததும்பும் பார்வை பார்த்தான்.

அச்சமயம் அங்கு வந்த சந்தியா "ஹே கைய்ஸ் சீக்கிரம் எந்திரிங்க எதோ இம்பார்ட்டெண்ட் மீட்டிங்காம் உடனே எல்லா ஸ்டூடெண்ஸ்சையும் ஆடிட்டோரியத்துல அசம்பிள் ஆக சொல்லி இருக்காங்க..!!" என்று அவசரமாய் சொல்ல

"என்ன மீட்டிங்கா..?? இது என்னடி நம்ம காலேஜ்ல புதுசா மீட்டிங் எல்லாம் வைக்குறாங்க..??" என்று புரியாமல் கேட்டாள் சித்தாரா.

"ப்ச் அது தெரியல மச்சி..!! வா போய் என்னனு பார்ப்போம்..!!" என்று சொன்னவள் அஜய் புறம் திரும்பி "டேய் வா டா சீக்கிரம்..!!" என்று அவசரபடுத்தினாள்.

பின் நண்பர்கள் மூவரும் சேர்ந்து அந்த காலேஜின் ஆடிட்டோரியம் வந்து சேர அங்கு ஏற்கனவே காலேஜில் உள்ள மொத்த மாணவர்களும் அசம்பிள் ஆகி இருந்தனர்.

இவர்களும் கூட்டத்தோடு கூட்டமாய் அங்கு சென்று நிற்க.

மேடையில் முகம் பூரிக்க சந்தோஷமாய் நின்றிருந்தார் விஷ்வநாத்.

அவரை பார்த்த சித்தாரா "என்ன மாமா பயங்கர குஷியா இருக்காரு..?? எதாச்சும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி வைக்க போறாங்களா என்ன..??" என்று எண்ணியவள் அவரது சந்தோஷமான முகத்தை வைத்தே எதோ நல்ல விஷயம் தான் என்பதை யூகித்து அதில் தானாய் முகம் மலர நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக கதைக்க தொடங்கினாள்.

அப்போது மைக்கின் ஒலி "கீங்..!!" என்று கேட்க கூட்டத்தின் சலசலப்பு அப்படியே நின்றது.

மைக்கின் முன் வந்து நின்ற விஷ்வநாத் "டொக்..டொக்..!!" என்று அந்த மைக்கை இருமுறை தட்டி செக்செய்து விட்டு "குட் மார்னிங் ஸ்டூடென்ஸ்..!! இந்த திடீர் மீட் எதுக்குன்னு எல்லாருக்கும் குழப்பமா இருக்குல்ல..??" என்று கூறி அனைவரையும் பார்த்தவர் அனைவரின் குழப்பமான முகத்தை பார்த்து சிறு சிரிப்புடன் "இனிமேல் நம்ம காலேஜ் மேனேஜ்மென்ட் எல்லாத்தையும் நான் பார்த்துக்க போறது இல்ல புதுசா ஒருத்தர் தான் இதை எல்லாம் இனி பார்த்துக்க பொறுப்பேற்று இருக்கார் சோ அவரை உங்க எல்லாருக்கும் இன்ட்ரோ கொடுக்க தான் இந்த மீட்..!!" என்று அலுங்காமல் ஒரு இடியை அனைவரின் தலையிலும் இறக்க அதில் அனைவரும் அவரை அதிர்ச்சியுடன் பார்த்தனர். அதில் சித்தாரவும் ஒரு ஆள்.

அதில் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்த அவர் "அது வேற யாரும் இல்லை, இந்த காலேஜோட ஓல்ட் ஸ்டூடெண்ட் மற்றும் என்னோட ஒரே மகன் சர்வா தான் லெட்ஸ் வெல்கம் மிஸ்டர் ஷிவ்வர்த சர்வஜித்..!!" என்று கம்பீரமாய் கூற

அதில் அதுவரை கலக்கத்துடன் அமைதியாய் இருந்த அரங்கம் இதை கேட்டதும் "ஹோ...!!" என்று சத்தமிட.

அச்சமயம் இரண்டு இரண்டு படிகளாய் தாவி மேடை ஏறினான் சித்தாராவின் கணவன் சர்வா.

இதை கண்டு அனைவரும் மகிழ்ந்தார்கள் என்றால் இரண்டு ஜீவன்கள் மட்டும் அதிர்ந்து நின்றிருந்தனர்.

"இவன் எப்ப காலேஜ் பொறுப்பை ஏத்துகிட்டான்..??" என்று அதிர்ச்சியுடன் இவள் எண்ணினாள் என்றால்.

"இது அவன் இல்ல..!!" என்று தன் உடைந்த மூக்கை பொத்தியபடி பீதியுடன் எண்ணினான் அஜய்.

அதற்குள் மேடையை அடைந்த சர்வா மைக் முன்னே வந்து நின்றபடி "ஹலோ எவ்ரி ஒன்..!! உங்கள்ள மேக்சிமம் எல்லாருக்கும் என்ன தெரியும்னு நினைக்குறேன்..!!" என்று கூறி சற்று நிறுத்தியவன் அனைவரையும் அழுத்தமாக பார்த்து "இதுவரை உங்களுக்கு தெரிஞ்ச ஸ்டூடெண்ட் சர்வா வேற இப்ப காலேஜ் மேனேஜ்மென்ட பார்க்கபோற சர்வா வேற சோ தெரிஞ்சவன் தானேனு எந்த அட்வாண்டேஜும் எதிர்பார்க்க கூடாது..!! பிகாஸ் ரூல்ஸ் ஆர் ஆல்வேஸ் ரூல்ஸ் ஃபார் எவ்ரிஒன் இன் திஸ் கேம்பஸ்" என்று தன் கணீர் குரலில் அழுத்தமாய் கூறினான்.

அதில் சட்டென்று அங்கு நிசப்தம் நிலவியது.

"என்ன பொறுத்தவரை நம்ம எந்த போஸ்ட்டுல இருக்கோமோ அதுக்கு கரெக்டா பெர்பெக்ட்டா இருக்கணும். சோ தட் நான் எடுத்திருக்க இந்த பொறுப்புக்கு சரியா இருக்க விரும்புறேன். அதுக்குன்னு நான் ரொம்ப டெரர் ஸ்டிரிக்ட்னு சொல்லி உங்களை பயம்புறுத்த விரும்பல. ஆஸ் எ ஸ்டுடென்ட்டா நீங்க இந்த காலேஜ் ரூல்ஸ்ச ஃபாலோவ் பண்ணா தேர் இஸ் நோ ப்ராப்ளம்..!! என்றான் சிறு சிரிப்புடன் அதில் மாணவர்கள் மத்தியில் சற்று ஆசுவாசமான மூச்சு வெளியேற

"தோ பார் டா இதை தான் சாத்தான் வேதம் ஓதுதுன்னு சொல்லுவாங்களோ..??" என்று மனதில் நக்கலாக எண்ணியபடி சர்வாவை பார்த்துக்கொண்டு இருந்தாள் சித்தாரா


"அதுமட்டும் இல்லை நம்ம காலேஜ் ரூல்ஸ்ல சிலதை மாத்தி இருக்கேன் அதுக்கான சர்குலர் உங்க கிளாஸ்க்கு வரும். அந்த அந்த கிளாஸ் புரபசர் அதை உங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்ணுவாங்க..!!" என்று சொன்னவன் சற்று நேரம் அதை குறித்து பேசிவிட்டு.

"ஓகே கம்மிங் டூ தி பாயின்ட்..!! இந்த காலேஜ்ல ஸ்டூடென்ட் நிறைய பேர் காலேஜ் டைமை கட் பண்ணிட்டு வெளிய சுத்துறதா நிறைய நியூஸ் கேள்வி பட்டேன்..!!" என்று சொல்ல அதை கேட்டு நெஞ்சில் கைவைத்தபடி கீழே நின்றனர் நண்பர்கள் மூவரும்.

"இவன் எதுக்கு இப்போ முடிஞ்சு போனதை கிளறுறான்..??" என்று சித்தாரா பீதியுடன் எண்ணிக்கொண்டிருந்த போதே

"சோ அதுல நான் என் கண்ணால பார்த்த சில நல்ல ஸ்டூடென்ஸ்ச இப்போ இந்த மேடைக்கு அழைக்கபோறேன்..!!" என்றிருந்தான் அமைதியாய்.

இவனது இக்கூற்றை கேட்டு மாணவர்கள் இடையே சிறிய சலசலப்பு உருவாக.

அதை கண்டுகொள்ளாதவன் அங்கு மாணவர்களுக்கு இடையே வெளிறி போய் நின்ற சித்தாரா, அஜய் மற்றும் சந்தியாவை பார்த்து "வாங்க மூவேந்தர்களாகிய சந்தியா அஜய் மற்றும் சித்தாரா...!!" என்று அழைக்க மொத்த மாணவர்களின் ஃபோகர்சும் சடார் என்று திரும்பி அவர்கள் மூவரையும் பார்த்தது.

அதை பார்த்த இம்மூவரும் வேறு வழியின்றி நடுங்கியபடியே மேடை ஏறி வர

அவர்கள் மூவரில் சித்தாராவை பார்த்து விஷ்வநாத்தும் அதிர்ந்து தான் இருந்தார்.

இந்த விடயம் அவருக்கு புதிதல்லவா..??

மேடையில் வைத்து மகனை தடுக்கவும் முடியாமல் இறுக்கமாய் அவர் நின்றிருக்க.

இங்கு மேடையில் இவர்கள் மூவரும் ஏறியதும் மாணவர்களை நோக்கிய சர்வா "இந்த மூணு லெஜெட்ஸ் தான் காலேஜை கட்டடிச்சிட்டு என் கண்ணுல பட்டவங்க. சோ இப்ப இவங்க பண்ணதுக்கு பனிஷ்மென்ட்டா நம்ம முன்னாடி ஐம்பது தோப்பு கரணம் போட போறாங்க..!!" என்று சொல்ல.

அவனை அதிர்ந்து போய் பார்த்தனர் மூவரும்.

விஷ்வநாத்துக்கு மகனது இந்த செயல் கொஞ்சமும் பிடிக்கவில்லை அதுவும் அதில் சித்தாரா இருப்பது அவருக்கு மிகுந்த வேதனை அளித்தது.

தன்னை அதிர்ச்சியுடன் பார்த்த மூவரை பார்த்து புரியாத குரலில் "என்ன என்னை பார்க்குறீங்க லெட்ஸ் டூ இட்..!! இதுவேண்டாம்னா ஒண்ணும் பிரச்சனை இல்ல டி‌.சி வாங்கிட்டு வேற காலேஜ் பார்த்து தாராளமா நீங்க போகலாம்..!!" என்று அவன் மனசாட்சியே இல்லாமல் சொல்ல.

வேறு வழியின்றி தோப்புக்கரணம் போட ஆரம்பித்தனர் மூவரும்.

அதிலும் சித்தாராவோ அனைவர் முன்னும் தோப்புக்கரணம் போடுவதை எண்ணி வெட்கப்பட்டவள் சர்வாவை தன் விழிகளால் எரித்தபடி "இதுக்கு உன்ன பழிவாங்காம விடமாட்டேன் டா..!!" என்று தன் கண்களால் அவனுக்கு உணர்த்தினாள்‌.

அதை சரியாய் புரிந்துக்கொண்ட இவனோ "ப்ச் முடிஞ்சா பார்த்துக்கோடி..!!" என்று அலட்சியமாய் பதிலுக்கு பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான்.‌

ஒருவழியாய் அவர்கள் மூவரும் வெட்கத்தில் முகம் சிவக்க ஐம்பது தோப்புக்கரணம் போட்டு முடிக்க.

"ஸீ இந்த காலேஜ் பெயர் எனக்கு ரொம்ப முக்கியம் அதுக்கு பங்கம் வருவது போல இப்படி இவங்களை மாதிரி யாராச்சும் இனி எதாவது செஞ்சிங்கனா உங்க பேரெண்ட்ஸ்சை டைரக்ட்டா கூட்டிட்டு வந்து அவங்க முன்னாடி பனிஷ் பண்ணுவேன் மைண்ட் இட்...!!" என்று அனைவரையும் பார்த்து எச்சரித்தவன்.

சித்தாரா அண்ட் கோ புறம் திரும்பி "இது தான் உங்களுக்கு பஸ்ட் எண்ட் லாஸ்ட் வார்னிங்..!! இனி தேவை இல்லாதது பண்ணி உங்க பியூசரை ஸ்பாயில் பண்ணிக்காதீங்க..!!" என்று சொல்ல.

பயந்த சந்தியா "சாரி சார்..!!" என்றிருந்தாள் முதல் ஆளாய் அவள் சொன்ன காரணத்தால் வேறு வழியின்றி அஜய்யும் சொல்ல கடைசியாய் இருந்த சித்தாராவோ குனிந்த தலையுடன் "ஐ வோண்ட் ரிபீட் இட்..!!" என்றிருந்தாள் முணுமுணுப்பாக.

அவள் வேண்டும் என்றே தான் மன்னிப்பும் கேட்கவில்லை தன்னை சார் என்றும் அழைக்கவில்லை என்பதை நன்றாக புரிந்துக் கொண்ட சர்வா அதை குறித்து பெரிதாய் கவலை படவில்லை "திருந்துனா சரி..!!" என்று தான் இருந்தது அவனது எண்ணம்.

மேலும் அவர்களை சோதிக்க விரும்பாதவன் கீழே போக சொல்ல அவர்களும் குனிந்த தலையுடன் சென்றனர்.

பின் மாணவர்களிடம் சிலதை பேசியவன் அடுத்த பத்து நிமிடத்தில் அந்த மீட்டிங்கை முடித்திருந்தான்.

அது மட்டும் அல்ல அவர்கள் கிளாசில் இல்லை என்பது ஈவ்னிங் அட்டெண்டென்ஸ் எடுக்கும்போதே தெரிந்திருக்கும் ஆனாலும் அதை குறித்து பெரிதாய் கண்டுகொள்ளாமல் அலட்சியமாய் இருந்த அவர்கள் கிளாஸ் ஸ்டாப்பை அன்றே வேலையை விட்டும் நிறுத்தச்செய்திருந்தான்.

மகன் செய்யும் செயல் சரி என்றாலும் அவனது வேகம் எப்போதும் போல ஒருவித பயத்தை தான் விதைத்தது விஷ்வநாத்துக்கு.

அவரது எண்ணம் சனிக்கிழமை அன்று தனக்கும் அவனுக்கும் நடந்த உரையாடலில் போய் நின்றது.

தொடரும்
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 23

சித்தாராவை வீட்டில் விட்டுவிட்டு தன் வண்டியை வேகமாக கிளப்பிய சர்வாவோ நேரே சென்றது தன் தந்தையின் கம்பெனிக்கு தான்.

கல்லூரி மட்டும் அல்லாது‌ ஐ.டி. கம்பெனி ஒன்றையும் நடந்தி வந்தார் விஷ்வநாத்‌.

இப்போது சர்வா சென்றதும் அங்கு தான்.

தன் வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தியவனோ புயல் வேகத்தில் அந்த பில்டிங்கினுள் நுழைந்திருந்தான்.

யார் அனுமதியும் இன்றி சடார் என்று தன் தந்தையின் கேபினை திறந்து அவன் உள்ளே செல்ல.

தன் பி.ஏ. வுடன் பிஸ்னெஸ் சம்மந்தமாய் முக்கியமாய் ஏதோ பேசிக்கொண்டு இருந்த விஷ்வநாத்.

இப்படி அனுமதி இல்லாமல் தன் கதவை படார் என்று திறந்துக்கொண்டு வந்த மகனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவனது அழுத்தமான முகத்தை வைத்தே ஏதோ பிரச்சனை என்பதை கணித்துக்கொண்டவர் தன் பி.ஏ. விடம் திரும்பி "யூ மே கோ நவ்..!!" என்று சொல்ல, "ஓகே சார்..!!" என்று தலையாட்டிய அவர் பி.ஏ. அந்த நொடியே அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தார்.

அவர் போனது தான் தாமதம்.

"என்ன காலேஜ் நடத்துறீங்க நீங்க..??" என்று சூடாய் கேட்டிருந்தான் சர்வா.

அதற்கு பதில் சொல்லாத அவர் தன் மகனை கண்கள் சுருங்க பார்த்தபடி "இன்ஜினியரிங்ல இருந்து டாக்டர் வரை, ஆர்ட்ஸ்ல இருந்து நர்சிங் வரைனு இப்படி எல்லாவிதமான கோர்சும் நான் நடத்துற காலேஜ்ல இருக்கு..!!" என்று சொன்னவர் நிறுத்தி "இதை கேட்க தான் இவ்வளவு தூரம் வந்தியா ப்பா..??"‌ என்றிருந்தார் நக்கலாய்.

அதில் பல்லை கடித்தவன் "மண்ணாங்கட்டி..!!" என்று சீறியிருந்தான்.

அதில் கோபம் கொண்ட விஷ்வநாத் "சர்வா...!!" என்று உறும.

அங்கு அவருக்கும் மேல் கோபமாக இருந்தவனோ "என்ன சர்வா..?? ஹான் என்ன சர்வாங்குறேன்..?? அங்க உங்க காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் எல்லாம் கட்டடிச்சிட்டு வெளியே சுத்திட்டு இருக்காங்க இங்க நீங்க அதை பத்தி எதுவும் தெரியாம உக்காந்துக்கிட்டு இருக்கீங்க..?? இதுதான் நீங்க காலேஜ் நடத்துற லட்சணமா..??" என்று தன்னை மீறி கோபத்தில் அவன் கத்த

"ப்ச் சர்வா இது ஆபிஸ்.. உன் வீடு இல்ல கத்துறதுக்கு. அதே போல நான்‌ உன்னோட மகன் இல்ல நான் உனக்கு அப்பன் அதை மனசுல வச்சு பேசு..!!" என்று கடுமையுடன் அவர் எச்சரிக்க

அதில் தன் தவறு புரிய உடனே அமைதியாகி விட்டான் சர்வா‌.

"முதல்ல இங்க வந்து உட்காரு..!!" என்று தனக்கு எதிரே இருந்த இருக்கையை நோக்கி கைகாட்டி அவர் சொல்ல ஒன்றும் பேசாமல் சென்று அமர்ந்தான்.

டேபிள் மீது வீற்றிருந்த தண்ணீர் கப்பை அவன் புறம் நகர்த்தியவர் "குடி..!!" என்று சொல்ல

"ப்ச்..!! இருக்குற கோபத்தில இவர் வேற..!!" என்று மனதுள் பல்லை கடித்தவன் தந்தையை பற்றி நன்கு தெரிந்த காரணத்தால் வேறு வழியின்றி அந்த தண்ணீர் கப்பை எடுத்து மடக்மடக்கென ஒரே மூச்சில் குடித்து முடித்தான்.

குடித்து முடித்த கையோடு அதை டேபிள் மீது வைத்து விட்டு மூச்சு வாங்க நிமிர்ந்து அவரை நிமிர்ந்து பார்க்க அதைக் கண்டு "எல்லாத்துக்கும் அவசரம்..!!" என்று மனதில் எண்ணியவர் சலிப்பாய் தன் தலையை இடம் வலமாய் ஆட்டியவாறு "ம்ம்.. இப்ப சொல்லு என்ன விஷயம்‌..??" என்றார் அவனை பார்த்து அழுத்தமாய்.

அவர் கேட்டது தான் தாமதம் மடமடவென அனைத்தையும் ஒப்பித்தவன் அதன் தாக்கத்தில் முகம் இறுக அவரை நிமிர்ந்து பார்க்க.

அவன் கூறிய அனைத்தையும் பொறுமையாய் கேட்டு முடித்தவர் "இது ஒண்ணும் அவ்வளவு பெரிய குற்றம் இல்ல சர்வா..!!" என்றார் அமைதியாய்.

அதை கேட்டு "வாட்..??" என்று அதிர்ந்த இவன்.

"என்ன டேட் விளையாடுறீங்களா..?? காலேஜை பங்க் பண்ணீட்டு தைரியமா வெளிய சுத்திட்டு இருக்காங்க அதை சொன்னா தப்பு இல்லனு சொல்லுறீங்க, ஆர் யூ கிட்டிங் மீ..??" என்று நக்கலும் கோபமுமாய் அவன் கேட்க.

"நான் தப்பு இல்லைனு சொல்லல சர்வா பெரிய குற்றம் இல்லைனு தான் சொன்னேன்‌ இதெல்லாம் காலேஜ் டேஸ்ல சகஜம்..!! ஏன் நீ கூட பண்ணியிருக்கலாம்..!!"என்று அவர் அசால்ட்டாய் சொல்ல.

"நான் ஒண்ணும் அப்படி பண்ணல..!!" என்று உடனே ரோஷத்துடன் கூறினான் சர்வா.

"பைன் நீ பண்ணலைனா விடு..!! பட் காலேஜ் டேஸ்ல நீயும் நிறைய வேண்டாத வேலைய செய்து காலேஜ்ல பத்து நாள் சஸ்பெண்ட் ஆனங்குறதை மறந்துடாத..!!" என்று அவர் அவனுக்கு நினைவுபடுத்த

அதில் முகம் கறுக்க அவரை பார்த்த சர்வா "என்ன குத்தி காட்டுறீங்களா..??" என்று கேட்டான்.

"ச்ச ச்ச குத்தி எல்லாம் காட்டல ஜஸ்ட் உனக்கு நினைவு படுத்துறேன் உன்ன போலவே தான் எல்லாரும்னு ஒவ்வொரு விதமா இருப்பாங்கன்னு புரியவைக்க டிரை பண்ணுறேன்..!!" என்றார் அமைதியாய்

இவனோ அதை அலட்சியம் செய்துவிட்டு "இப்ப முடிவா என்ன சொல்லுறீங்க..??" என்று கேட்ட

அவரோ அவனை கூர்மையாய் பார்த்து "நான் முடிவா என்ன சொல்லணும்னு நீ எதிர்பார்க்குற..??" என்று பதில் கேள்வி கேட்டார்.

அதில் சற்றும் யோசிக்காத சர்வா‌ "பனிஷ் பண்ணுங்க அப்ப தான் நெக்ஸ்ட் டைம் பண்ணமாட்டாங்க..!!" என்று சொல்ல

"அப்படி பார்த்தா அந்த காலேஜ்ல இருக்க பாதி பேரை பனிஷ் பண்ணனும் ..??" என்று சொன்னவர் அவனை அதே கூர்மையான பார்வை பார்த்து "மோர் ஓவர் நீ சொல்லுறதை நான் எப்படி கேட்பேன்னு நினைச்ச நீ என்ன அந்த காலேஜோட ஓனரா இல்ல மேனேஜிங் டைரக்டரா..??" என்று நக்கலாக கேட்க.


கோபம் கொழுந்து விட்டு எரிந்தது சர்வாவுக்கு‌‌..!!

அதே கோபத்தோடு தன் தந்தையை ஏறிட்டு பார்த்தவன் "அந்த காலேஜ்ல எனக்கும் உரிமை இருக்கு..!!" என்றான் தாடை துடிக்க

"ம்ம்..!! இருக்கு தான், ஆனா அபிஷீயலா இல்லையே பா.‌!!" என்று அவர் அதே நக்கலோடு சொல்லி முடிக்க

"நான் காலேஜ்ஜை டேக் ஓவர் பண்ணிக்குறேன்..!!" என்றிருந்தான் அவன்.

அதை கண்டு கண்கள் விரிய அவனை பார்த்த அவர் "ஹா‌‌..ஹா ஆர் யூ ஜோக்கிங்...!!" என்று கூறி சிரிக்க

"டேட்..!!" என்று பல்லைக் கடித்த அவன் "ஐயாம் சீரியஸ் அண்ட் இட்ஸ் நாட் எ ஜோக் டு லாப்..!!" என்றான் கடுப்பாய்.

அதை கேட்டு "ஐ சீ..!!" என்று தன் புருவத்தையும் தூக்கி கூறிய விஷ்வநாத் "ஆமா உனக்கு காலேஜ் மேனேஜ்மென்ட்டை பத்தி என்ன தெரியும் பா..??" என்று நக்கலாக கேட்க

அதை கேட்டு அதே நக்கலுடன் அவரை பார்த்த அவன் "இதுக்கு முன்ன எப்படியோ ஆனா இப்போ நீங்க காலேஜ் நடத்துற அழகை பார்த்த அப்புறம் உங்களை விட நல்லாவே நான் அதை ஹேண்டில் பண்ணிடுவேன்னு நம்பிக்கை வந்திடிச்சு‌..!!"‌ என்றான் தன் உதட்டை ஒரு புறம் வளைத்தவாறு‌.

அதற்கு அவர் கோபமாய் ஏதோ பேச வர அதற்குள் அவரை முந்திக்கொண்ட இவன் " இங்க பாருங்க டேட் நான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டேன் நீங்க நம்ம‌ லாயர் கிட்ட சொல்லி எல்லா பேப்பர்சையும் ரெடி பண்ணுங்க நாளைக்கு வந்து சைன்‌ பண்ணுறேன் மண்டே அஃபிஷியலா அனௌன்ஸ் பண்ணிடலாம்..!!" என்று கடகடவென கூறிவிட்டு அங்கு நில்லாமல் வெளியேறிவிட

போகும் அவனை மர்ம புன்னகையோட பார்த்த விஷ்வநாத்.

அவன் சொன்ன படி அடுத்த நாளே எல்லாம் ரெடியாக அவனும் சைன் செய்துக் கொடுத்தான்.

இதோ இப்போது அபிஷியலாகவும் அதை தெரிவித்து விட வந்த அன்றே தன் வேலையை ஆரம்பித்து விட்டான் அல்லவா‌.

இப்போது தான் அவருக்கு விளங்கியது அவன் ஏன் வலிய வந்து தன்னிடம் பேசினான் என்றும் காலேஜ் பொறுப்பை கேட்டான் என்றும்.

முதல் முதலாய் சித்தாரா மற்றும் இவனது உறவை எண்ணி கலக்கம் கொண்டார் விஷ்வநாத்.

இங்கு ஆபிஸ் அறையில் உட்கார்ந்துக் கொண்டு இருந்த சர்வாவுக்கோ மனம் அத்தனை லேசாய் இருந்தது.

"நல்லா வாங்கி கட்டிக்கிட்டியா எல்லார் முன்னாடியும்..? உனக்கு தேவை தான் டி..!! கட்டா அடிக்குற கட்டு இனி பார்ப்ப இந்த சர்வாவோட ஆட்டத்தை..!!" என்று மனதுள் சித்தாராவை வறுத்தெடுத்தவன் அவளுக்கு தண்டனை கொடுத்த மகிழ்ச்சியில் பூரித்து போய் இருந்தான்.

இங்கு வகுப்பறையில் இருந்த சித்தாராவோ மனம் முழுக்க சர்வாவின் மேல் உள்ள கோபத்தில் தகித்துக்கொண்டு இருந்தாள்.

இந்த நாள் அவள் வாழ்க்கையில் முழுக்க மறக்க முடியாத நாளாய் மாற்றி அமைத்தவனின் மீது துளிர் விட்ட காதல் கூட இப்போது பின்னுக்கு போக "உன்ன இதுக்கு பழிவாங்காம விடமாட்டேன் டா சர்வா நாயே..!!" என்று கருவினாள் மனதுள்.

தொடரும்...
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 24

"என்ன தலைவி பங்கமா மாட்டிக்கிட்டீங்க போல நம்ம காலேஜ் சேர்மேன் பையன் கிட்ட..!!" என்று அந்த வகுப்பறையில் உள்ள ஒருவன் நக்கலாக சித்தாராவிடம் கேட்க
அதற்குள் அவன் அருகில் இருந்த மற்ற ஒருவனோ

"ம்ச் என்ன மச்சான் நம்ம தலைவிய கலாய்ச்சிட்டு இருக்க..?? நம்ம தலைவி பண்ண காரியத்துக்கு நம்ம அவங்களை பாராட்டணும் டா..!! என்று சொல்ல

அதில் அவனை சிரிப்புடன் பார்த்த மற்றொருவனோ "ஏன் டா மச்சான்‌..!!" என்று ஒரு மாதிரி இழுத்தபடி சித்தாராவை பார்த்து கேட்க.

"ஆமா பின்ன நம்ம சீனியர் சர்வாவுக்கு காலேஜை ரன் பண்ணுறதுல இன்ட்ரெஸ்ட் இல்லைனு நம்ம எல்லாருக்குமே தெரியுமே அப்படி பட்டவரையே நம்ம தலைவி வழிக்கு கொண்டு வந்துட்டாங்க பார்த்தியா...??" என்று சொன்னவன்

"அதனால நம்ம தலைவிக்கு அவங்க ரெண்டு பிரெண்ட்ஸ்சுக்கும் சேர்த்து எல்லாரும் சேர்ந்து ஒரு ஓ.. போடுங்க பார்ப்போம்...!!" என்று அந்த வகுப்பறையில் இருந்த அனைவரையும் பார்த்து உற்சாகமாய் அந்த மாணவன் சொல்ல.

அந்த வகுப்பறையே இம்மூவரையும் பார்த்து "ஓ....!!" என்றது சிரித்தபடி.

சுற்றி ஒலித்த சிரிப்பொலிக்கு நடுவே தன் நண்பர்களோட முகம் கறுக்க அமர்ந்திருந்தாள் சித்தாரா. அவள் மனமோ சர்வாவின் மீது உள்ள கோபத்தில் கொழுந்து விட்டு எரிந்தது.

******************************

இங்கு சர்வாவுக்கு ஒதுக்கி இருந்த அறையினுள் அவனது அனுமதியே இல்லாமல் சடார் என்று நுழைந்த விஷ்வநாத்.

"வாட் தி ஹெல் யூ ஆர் டூயிங் சர்வா..??" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டபடி அவனை நெருங்க.

அதில் அவரை சாதாரணமாக ஏறிட்ட சர்வா‌ "கூல் டாட் கூல் எதுக்கு இந்த கோபம்..??" என்று கூறியபடி தன் மேசையில் இருந்த தண்ணீரை அவரை நோக்கி தள்ளி "ரொம்ப சூடா இருக்கீங்க போல இந்தாங்க இதை குடிச்சு கொஞ்சம் கூல் ஆகிக்கோங்க..!!" என்று நக்கலாக சொல்ல

அதில் அவனை‌ முறைத்தபடி வந்து அவன் எதிரே அமர்ந்தவர் "சோ நீ சித்தாராவ பழிவாங்க தான் இந்த காலேஜை டேக் ஓவர் பண்ணியிருக்க ரைட்..??" என்று‌ சரியாய் அவன் நாடியை பிடித்தது போல கேட்க

"அப்படி ஓப்பனா அதுக்குதான்னு சொல்லமுடியாது பட் அதுக்கும் தான்..!!" என்றிருந்தான் சிறு அலட்டலுடன்.

"உஃப்...!!" என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட விஷ்வநாத்.

"நீ காலேஜை பாத்துக்க தேவை இல்ல சர்வா ..!!" என்று அமைதியாய் அதே சமயம் அழுத்தமாய் அவனை பார்த்து சொல்ல.

அதில் அவரை நோக்கி நக்கல் புன்னகை சிந்திய சர்வா தன் இருக்கையில் இருந்து எழுந்து அவர் புறம் மெதுவாய் நடந்தவாறு "டாட்.. டாட்..!! இன்னும் நீங்க அப்டேட்டே ஆகாம சின்ன புள்ளையாவே இருக்கீங்க டாட்..!! உங்களை பார்த்தா எனக்கு சிரிப்பு தான் வருது..!!" என்று சொல்லியபடி அவர் அமர்ந்திருந்த இருக்கையை பிடித்தபடி அவர் பின்னே வந்து நின்றவன் "இதுல இருந்து ரிலீவ் ஆகுறதுக்கா நான் அவ்வளவு அவசரமா காலேஜ் பொறுப்பை எடுத்துக்கிட்டேன்..??" என்று ஒற்றை புருவம் உயர்த்தி நக்கலோடு கேட்டவன் தன் இருக்கை நோக்கிச் சென்று அதில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவாறு அதே நக்கலை சிறிதும் குறைக்காமல் "மோர் ஓவர் நீங்க சொன்னா நான் எப்படி கேட்பேன்னு நீங்க நினைச்சீங்க..??" என்றான் சற்று கேலியாய்.

இதை கேட்ட விஷ்வநாத்திற்கோ முகம் கறுத்துவிட்டது எந்த தகப்பனால் பொறுக்க முடியும் மகன் இவ்வாறு பேசுவதை.

அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காதவர் தன் இருக்கையில் இருந்து எழுந்து வெளியே செல்லபோனார்.

சரியாய் அந்த அறை கதவை திறக்க போன சமயம் என்ன நினைத்தாரோ அந்த கதவின் மீது கைவைத்தபடி அதை திறக்காமல் "எல்லா செயலுக்கும் உண்டான பயன் அதை செஞ்சவங்களை சேராம விடாது அதே போல இப்போ நீ பண்ணுற எல்லாத்துக்கும் ஒருநாள் நீ பதில் சொல்லி நிற்க வேண்டிய நிலைமை வரலாம் ஏன் வருந்துற நிலைமை கூட வரலாம் ஆனா அப்போ காலம் கடந்திருக்கும்..!!"என்று மட்டும் சொன்னவர் அந்த அறையை விட்டு விருட்டென்று வெளியேறியிருந்தார்.

போகும் அவரை பார்த்து புருவத்தை சுருக்கிய சர்வா "பாவம் நம்ம கிட்ட நோஸ் கட் வாங்குன கடுப்புல எதோ வாய்க்கு வந்ததை உளறிட்டு போறாரு மிஸ்டர் டாடி..!!" என்று எண்ணி தன் தோளை குலுக்கியபடி தான் செய்யவேண்டிய வேலையில் கவனம் செலுத்தினான்.

"ச்ச காலேஜ்ல ஒரு பைய நம்மள மதிக்க மாட்டிங்கிறான் இதுக்கு முன்ன பயந்திட்டு வணக்கம் சீனியர்னு சல்யூட் அடிச்ச பய எல்லாம் இப்போ எப்ப அடுத்து தோப்புகரணம்னு கேட்டுட்டு நக்கலா சிரிச்சிட்டு போறான்..??" என்று புலம்பியபடி சற்று முன் கேண்டினில் வாங்கிய பஜ்ஜியை அந்த டேபிளில் வைக்க.

அந்த டேபிளில் ஏற்கனவே அமர்ந்திருந்த சித்தாரா மற்றும் சந்தியாவுக்கு அவனது புலம்பல் கேட்கத்தான் செய்தது.

அதில் சந்தியாவோ "விடு டா நம்ம மேலயும் தப்பு இருக்கு தானே..?? கிளாஸ கட்டடிச்சிட்டு போனதுக்கு அவர் பனிஷ் பண்ணாரு அதுல அவர் தப்பு என்ன இருக்கு..??" என்று கேட்க

அதை கேட்ட அஜய்யோ " எப்புடி டி வெக்கமே இல்லாம உன்னால இப்படி பேச முடியுது..?? ஆடிட்டோரியம்ல அவ்வளவு பேர் முன்னாடி தோப்புக்கரணம் போடவச்சான் டி அந்த அவமானத்தை மறந்திட்டு ஜஸ்ட் லைக் தட் மாதிரி போக சொல்லுறீயா..?? நம்ம என்ன கொலை பண்ணமா கடத்தல் பண்ணமா ஜஸ்ட் ஃபன்னுக்கு கிளாஸ் பங்க் பண்ணிட்டு வெளியே போனோம் அது பெரிய குற்றம்னு அவன் அவ்வளவு ரியாக்ட் பண்ணுயிருக்கான்..!!" என்று சூடாய் கேட்க.

முகம் சுருங்கிய சந்தியா "அவர் பண்ணுனதுக்கு என்ன ஏன் டா கத்துற..??" என்று கோபமாக கேட்டபடி டேபிள் மீது இருந்து பஜ்ஜியை எடுத்து உண்டாள்.

"பின்ன இவ்வளவு நடந்த அப்புறம் அவனுக்கு சப்போர்ட் பண்ணுற..??" என்று சொன்னவன் அங்கு அமைதியாய் இருந்த சித்தாராவை பார்த்து "ப்ச் விடு சித்து நடந்தது நடந்திருச்சு இனி அதை பத்தி கவலைப்பட்டு பலன் இல்லை.என்ன இந்த ஜூனியர் பசங்க தான் கொஞ்ச துள்ளுறானுங்க ரெண்டு தட்டு தட்டி வச்சா அதுவும் சரியாகிடும் நீ கவலை படாத..!!" என்றவன் சந்தியா கையில் இருந்த பஜ்ஜி பிளேட்டை "குடு டி..!!" என்று சத்தம் வராமல் வாய் அசைத்தவாறு அவளிடம் இருந்து பிடுங்கி "பஜ்ஜி எடுத்துக்கோ சித்து மா..!!" என்று சித்தாரா புறம் நீட்டினான்.

அப்போதும் அதற்கு பதில் ஏதும் கூறாத சித்தாரா இறுக்கத்துடனே அவன் நீட்டிய தட்டில் இருந்து பஜ்ஜியை எடுத்து உண்டாள்.

அவள் நிலை அறிந்த நண்பர்கள் இருவரும் வேறு எதுவும் மேற்கொண்டு பேசாமல் அமைதியாகினர்.

இங்கு சர்வாவுக்கு அன்றைய காலேஜ் வேலையெல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்ப மணி எட்டை கடந்திருந்தது.

"மிஸ்டர் கருத்து கந்தசாமி பயங்கரமா வேலை செஞ்சிருப்பாரு போலவே..??" என்று தான் செய்த வேலையை எண்ணி அவன் மனதுள் நினைத்துக்கொண்டான்.

பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி இருந்த தனது பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி பறந்தான்‌.

வீட்டை அடைந்தவன் படிக்கட்டில் ஏறும்போது காலையில் சித்தாரா போட்ட தோப்புக்கரணத்தை மனதுள் நினைத்தபடி சிரித்துக்கொண்டே தன் வீட்டை அடைந்தான்‌.

பூட்டி இருந்த வீட்டில் தன்னிடம் இருந்த சாவியை கொண்டு பூட்டை ஓபன் செய்தவன் கதவை திறக்க வேண்டி தள்ள அந்தோ பரிதாபம் உள்ளே சித்தாரா மேலும் கீழும் தாழ்ப்பாள் போட்டிருந்த காரணத்தால் அது திறக்கவில்லை.

புரிந்துக் கொண்ட இவனோ "இவளை...!!" என்று பல்லை கடித்தபடி

"ஏய் கதவை திற டி..!! இப்ப மட்டும் நான் உள்ள வந்தேன் அப்புறம் நடக்குறதே வேற..!!" என்று மிரட்ட

உள்ளே ஹால் சோபாவில் கையை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த சித்தாராவுக்கு அது கேட்கத்தான் செய்தது ஆனாலும் ஒரு இஞ்ச் கூட நகராமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

"இன்னைக்கு கொசு கடியில வெளியே கிடந்து சாவு டா.!!"

விடாமல் கதவை தட்டிக்கொண்டிருந்தவனின் சத்தம் ஒரு கட்டத்தில் நிற்க புருவம் சுருக்கிய சித்தாரா "என்ன சத்தத்தை காணும் ஒரு வேளை ரோஷத்துல வெளியே போயிட்டானோ..??" என்று எண்ணியபடி சோபாவில் இருந்து எழுந்தவள் வாசற்கதவு அருகே சென்று அதில் தன் காதை வைத்து வெளியே ஏதும் சத்தம் கேட்கிறதா என்று பார்க்க ம்கூம் எந்த சத்தமும் கேட்கவில்லை.

அதில் நெஞ்சில் கைவைத்தவள் "ஹப்பாடி போய்ட்டான்..!!" என்று வாய் விட்டு புலம்பிய படி இவள் திரும்ப அங்கோ இவளை முறைத்தபடி பால்கனி வாசலில் நின்றுக் கொண்டு இருந்தான் சர்வா.

அதைக் கண்டு அதிர்ந்து கண்கள் விரிய நெஞ்சில் கைவைத்துக்கொண்டாள்.

"பால்கனி வழியாய் வந்திருக்கான்..!!" என்று சரியாய் புரிந்துக்கொண்டவளுக்கு இவனது குரங்கு சேட்டை அறிந்தும் பால்கனி கதவை மூட மறந்த தன் மடமையை எண்ணி தன்னை தானே நொந்துக் கொள்ளாமல் இல்லை.

அவனோ தான் போட்டிருந்த ஷர்ட்டின் ஸ்லீவை ஏற்றி விட்டபடி அவளை நோக்கி முன்னேற.

இதற்கு மேல் அமைதியாய் இருந்தால் அவன் எகிறி விடுவான் என்ற உண்மையை அறிந்த இவளோ "ஏன் டா உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா காலேஜ்ல அத்தனை பேர் முன்னாடி என்ன தோப்புக்கரணம் போட வச்சிருப்ப..??" என்று கேட்டபடி அவனை நோக்கி வேகமாக வந்தவள் அங்கிருந்த சோபாவை கவனிக்காது அதில் கால் இடிக்க பேலன்ஸ் இன்றி அவன் மீது சென்று விழுந்தாள்.

சர்வா கீழே கிடக்க இவள் அவன் மேலே கிடந்தாள்.

இருவருமே இதை எதிர்பார்க்கவில்லை என்று அவர்களின் விரிந்த இருந்த கண்களிலேயே தெரிந்தது.

முதலில் சுதாரித்தது சர்வா தான். தன் மேல் விழுந்து கிடந்தவளை கண்டு கோபமானவன் "ப்ச் முதல்ல என் மேல இருந்து எந்திரி டி உன் முகரைய இவ்வளவு குளோஸா பார்க்க எரிச்சலா வருது..!!" என்றான் சீற்றமாய்

அதில் தெளிந்த இவளோ "ஓ அப்போ நான் இப்படி உன் கூட குளோசா கிடக்குறது உனக்கு கடுப்பா இருக்கு இல்லையா‌..??" என்று இவள் ஒருமாதிரி கேட்க

"என்ன இவ கேட்குறதே சரியில்லை..??" என்று எண்ணிய சர்வா தலையை மட்டும் ஆம் என்பது போல ஆட்டிவைத்தான்.

அதில் தன் உதட்டை ஒரு புறமாய் வளைத்த சித்தாரா "நைஸ்‌...!!" என்று மட்டும் சொல்லி விட்டு அவன் என்ன என்று சுதாரிக்கும் முன் அவனது உதட்டை தன் உதட்டோடு பொருத்தி இருந்தாள்.

அதில் அதிர்ந்த சர்வா கண்கள் விரிய அவளை பார்க்க அவளோ அவன் உதட்டில் தன் உதட்டை பொருத்தியவாறு அவனை பார்த்து பட்டென்று கண் சிமிட்டி இருந்தாள்.

தொடரும்
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 25

தன்னை முத்தமிட்டவளை கண்டு சர்வா அதிர்ந்து நின்றது எல்லாம் ஒரு நிமிடம் தான் அவள் அவனை பார்த்து கண் சிமிட்டிய அடுத்த நொடி அவளை தன் மீது இருந்து தள்ளிவிட்டவன் அடுத்த நிமிடமே அவள் கன்னத்தில் தன் கைரேகை பதிய அறைந்திருந்தான்.

அவன் அறைந்த வேகத்தில் தள்ளி போய் அவன் அருகில் விழுந்த சித்தாராவுக்கோ கன்னத்தில் சுள்லென்று வலி எடுக்க அதில் தன் கையால் கன்னத்தை பிடித்தபடி அவனை ஏறிட்டவள் அவனை உறுத்து விழித்தாள்.

அவனோ அவளுக்கு மேல் அவளை தீயாய் முறைத்தபடி "ச்சை பைத்தியமா டி நீ..?? கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம ஒரு ஆம்பிள்ளை பையனை வந்து கிஸ் பண்ணுற..??" என்று சீற்றத்துடன் கேட்க.

அதை கேட்டவளுக்கோ முகம் கறுத்து தான் போனது.

கூடவே தனக்கு அவன் மீது இருக்கும் விருப்பம் அவனுக்கு இல்லையே என்ற வலியும் எழ அது அவன் பால் கோபமாக உருவானது‌‌.

அதில் அடுத்த நொடி அவன் கன்னத்தில் தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி அறைந்தவள் அவன் என்ன என்று சுதாரிக்கும் முன் அவன் சட்டையை கொத்தாய் பிடித்து ஆட்டியவாறு "ஏன் டா.. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா காலேஜ் ஆடிட்டோரியத்துல அத்தனை பேர் முன்னாடி என்னை தோப்புக்கரணம் போட வச்சு அசிங்கப்படுத்திருப்ப...??" என்று கேட்டபடி தன் வலக்கரத்தால் அவனது தலைமுடியை அழுத்தமாக பற்றி ஆட்டியவாறு அவனை கோபத்துடன் பார்த்து

"டேய்.. உன் மனசுல நீ என்ன பெரிய பருப்புன்னு நினைப்பா டா..?? ஏதோ உன் கடைகண் பார்வைக்கு நான் தவிச்சிட்டு இருக்குறது போல பேசுற ஹாங்..??" என்று கேட்டவளோ அவனை அழுத்தமாய் பார்த்து

"குளோசப்ல என் முகத்தை பார்க்க முடியலைனு சொன்ன இல்ல அதான் இன்னும் குளோசப்ல என் மூஞ்ச உனக்கு காட்டுனேன். இதை தப்பா புரிஞ்சிட்டு என் கிட்ட லவ்வு கிவ்வுன்னு மனச கெடுத்துட்டு வந்து நின்னு தொலைச்சிடாத அப்புறம் மனசு உடைஞ்சு போயிடுவ. ஏன்னா நான் ஆல்ரெடி கமிட்டெட்..!!" என்று கடைசியில் சொன்னதை மட்டும் லேசாய் வெக்கம் போல சொன்னவள் மீண்டும் அவனது கன்னத்தில் பலமாய் அறைந்து விட்டு "இது நீ என்ன அடிச்சதுக்காக..!!" என்று அவனை பார்த்து அதே அழுத்தத்துடன் சொன்னவள் குடுகுடுவென ஓடி படுக்கை அறையினுள் சென்று கதவை பூட்டிக் கொண்டாள்.

"நல்ல வேளை அவன் ஷாக்குல இருக்கும்போதே நச்சுன்னு நாலு டைலாக் பேசி மனசு சந்தோஷப்படுற அளவு அவனை அடிச்சிட்டு வந்துட்டோம் இல்லைனா ஏன் கிஸ் கொடுத்தேன்னு வச்சு செஞ்சிருப்பான் நல்ல வேளை முந்திட்டோம்..!!" என்று பூட்டி இருந்த அறை கதவின் மீது சாய்ந்து நின்றவாறு நெஞ்சில் கைவைத்து தன்னை ஆசுவாசப்படுத்தினாள்.

இங்கு அறையின் வெளியே இருந்த சர்வாவோ கன்னம் சிவக்க தலையெல்லாம் கலைந்து போய் தரையில் அமர்ந்தபடி பூட்டி இருந்த அறை கதவை தான் உறுத்து விழித்துக்கொண்டு இருந்தான் அவனது இரு கன்னத்திலும் சித்தாராவின் கைரேகை அழகாய் பதிந்து இருந்தது.

அரைமணி நேரம் கழிந்து இருக்க‌ அறையுள் இருந்த சித்தாராவுக்கோ பசி வயிற்றை கிள்ளியது.

"ஐயோ பசிக்குதே இப்ப என்ன பண்ண..?? அவன் வேற வெளியில நம்ம மேல கோபமா இருப்பானே..??" என்று எண்ணியபடி சிறிது நேரம் அந்த அறையிலேயே இருந்தவளுக்கு ஒரு கட்டத்தில் பசி தாங்க முடியாமல் போக "போங்க டா கோபமாச்சும் மண்ணாச்சும் எனக்கு சோறு தான் முக்கியம்..!!" என்று எண்ணியவாறு அந்த அறை கதவை திறந்து மெல்ல தன் தலையை மட்டும் வெளியே நீட்டி சர்வா எங்கு இருக்கிறான் என்று பார்த்தாள்.

அவனோ சோபாவில் சாய்ந்து தலையை மேலே பார்த்தவாறு கண் மூடி அமர்ந்திருக்க.

"ரொம்ப கோபமா இருக்கான் போலையே..!!" என்று அவனது தோற்றத்தை பார்த்த அவனது மனநிலையை கணித்தவள் அச்சமயம் அவளது வயிறு சத்தம் போடவும் "சரி முதல்ல நம்ம வயிறை கவனிப்போம்..!!" என்று எண்ணியபடி அவனை பார்த்தபடி கவனமாய் மெல்ல நடைவைத்து கிச்சனுள் நுழைந்தாள்.

கிச்சனுள் நுழைந்தவளோ அங்கிருந்த பாத்திரத்தை பார்க்க எல்லாம் சிங்கில் கழுவ போட்டது போட்டபடி அப்படியே இருந்தது .

அதை கண்டு அதிர்ந்தவள் "என்ன இது எல்லாம் கழுவ போட்டு இருக்கு அப்ப சாப்பிட ஒண்ணும் இல்லையா..??" என்று பசி தந்த எரிச்சலில் வாய் விட்டு புலம்பியவள் கிச்சன் மேடையில் இருக்கும் பாத்திரத்தை எல்லாம் திறந்து பார்க்க எல்லாம் காலியாக தான் இருந்தது. அதிலேயே அவளுக்கு தெரிந்தது சமைக்கவில்லை என.

என்றும் சமைப்பவன் இன்று இவளது செயலில் கோபமாக அமர்ந்திருக்க. இப்போது இரவு உணவு கேட்ட வயிற்றுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றாள் சித்தாரா.

"சரி பிரிட்ஜிலையாச்சும் எதாச்சும் தேறுதானு பார்ப்பாம்..!!" என்று நினைத்தபடி பிரிட்ஜை திறத்தவளது அதிஷ்டமோ என்மோ பிரெட் மற்றம் பீனெட் பட்டர் இருந்தது.

அதை கண்டு மகிழ்ந்தவள் "நல்ல வேளை இதாச்சும் கிடைச்சிதே..!!" என்று எண்ணியபடி கடகடவென பிரெட்டில் அந்த பீனெட் பட்டரை தேய்த்தவள் இருந்த பசிக்கு அதை ஒரே வாயில் போட்டு முழுங்கி இருந்தாள்.

பின் அடுத்த பிரெட்டை எடுத்து பீனெட் பட்டரை தடவ போக அப்போது தான் அவளுக்கு சர்வா ஞாபகம் வந்தது அவனும் பசி தாங்க மாட்டான் அல்லவா‌..??

காதல் கொண்ட மனமோ அவனுக்கு இதை கொண்டு கொடு என்று சொல்ல இன்னொரு மனமோ அவனுக்கு இது தேவை தான் ஒரு நாள் பசியில் கிடக்கட்டும் என்று கூறியது.

இரண்டு மன போராட்டத்தில் கடைசியில் காதல் மனமே ஜெய்க்க.

தட்டில் இன்னும் இரண்டு மூணு பிரெட்டை எடுத்துக்கொண்டு அவனை நோக்கிச் சென்றாள் சித்தாரா.

கண்களை மூடி புருவம் சுருங்க சோபாவில் இருந்தவனை பார்த்து லேசாய் பயம் வந்தாலும் அவனது பசியை மனதில் கொண்டு "ஷ்.. ஷ்..ஷ்ஷிவ்வூ மாமா..!!" என்று குழைவாய் அழைத்தபடி அவன் அருகில் செல்ல.

"ஆல்ரெடி உன் மேல செம கடுப்புல இருக்கேன்‌ என் கோபத்தை கூட்டாம மூடிட்டு போடி.‌.!!" என்று அமைதியாய் கண்களை திறக்காமலேயே முகத்தில் அடித்தார் போல சொல்லி இருந்தான் அவன்.

அதில் லேசாய் முகம் சுருங்கினாலும் இதை பின்னாளில் பார்த்துக்கொள்ளலாம் என்று அதை ஒதுக்கி வைத்தவள்.

அவன் அருகில் வேண்டுமென்றே தொப்பென்று ஒட்டி அமர்ந்தவாறு "சரி நீ என் மேல கொலை வெறில கூட இரு ஆனா இப்போ அந்த கண்ணை மூடிட்டே ஆ காட்டு பார்ப்போம்..!!" என்று சொல்ல.

அதில் தன் கண்களை சுருக்கியவன் தன் கண்களை மலர்த்தி பார்க்க அவன் வாய் அருகில் பிரெட்டை மடித்து நீட்டிக்கொண்டு இருந்தாள் சித்தாரா.

அதில் அவளையும் அவன் வாயின் அருகே நீட்டிக்கொண்டு இருந்த அவள் கையை மாறி மாறி பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் வாயை திறக்க.

"என்ன ஒண்ணுமே சொல்லாம வாயை திறந்திட்டான் இவன் இப்படி எல்லாம் பண்ண மாட்டானே..!!" என்று ஆச்சரியமாக நினைத்தபடி அவனுக்கு ஊட்டத்தொடங்கினாள்.

அவனும் ஒன்றும் சொல்லாமல் வாங்க அவனுக்கு கொடுத்தபடியே அவளும் அவ்வபோது ஒன்று இரண்டு வாய் உண்டாள்‌‌.

கடைசி வாய் இருக்க அதை உண்ணபோனவள் "ப்ச் பாவம் ஜித்து பையன் ..!!" என்று நினைத்தபடி அதை உண்ணாமல் அப்படியே சர்வாவுக்கு ஊட்ட போக

வாயை திறந்து வாங்கியவனின் கண்களில் மின்னல் வெட்ட அதை புரியாமல் குழப்பமாய் பார்த்துக்கொண்டு இருந்த சித்தாராவின் பூ விரல் அடுத்த நொடி சர்வாவால் கடிக்கப்பட்டது.

அவன் கடித்த வேகத்தில் "ஆ....!!" என்று அலறியவள் அவன் முகத்தில் மற்றொரு கையை வைத்து "ஆஆ‌‌.. விடு டா விடு டா என் கையை..!!" என்று அலற

அவனோ அவள் கையை விடாமல் வாயில் அகப்பட்டு இருந்த விரலை கடித்து வைத்திருந்தான்.

கைவைத்து தள்ளி பார்த்தவள் கடைசியில் அது முடியாமல் தன் காலை எடுத்து வேகமாக அவன் நெஞ்சிலேயே ஓங்கி மிதிக்க.

அதை எதிர்பார்க்காதவன் அவள் மிதித்த வேகத்தில் அவள் கையை விட்டு விட்டு சோபாவில் அப்படியே படுத்தவாக்கில் விழுந்து விட்டான்.

இங்கு தன் கையை அவனிடம் இருந்து உருவிக்கொண்டவளுக்கோ அவன் பற்கள் அழுந்த பதிந்து வீங்க இருந்த தன் நடுங்கும் விரல்களை தன் முகத்திற்கு நேராய் தூக்கி பார்த்து வலியில் உதட்டை பிதுக்கி அழ தொடங்கினாள்‌.

இங்கு சோபாவில் படுத்துக் கிடந்த சர்வாவோ அவள் அழுவதை ரசித்தவாறு "இப்ப தான் திருப்தியா இருக்கு..!!" என்றான் சற்று சத்தமாய்.

அதை கேட்ட இவளுக்கோ கோபம் வர அழுதுக் கொண்டு கோபத்துடன் அவன் அருகில் வந்தவள் "போடா நாயே எப்படி கடிச்சு வச்சு இருக்க என் விரல நீ எல்லாம் இதுக்கு நல்லா படுவ டா..!! சிரிக்குறதை பாரு பைத்தியக்காரன் ரத்தக்காட்டேரி பிசாசு..!!" என்று அவனை வசைபாடியவாறே தன் கால் கொண்டு அவனை மிதித்தவள் அவன் அவளை சிரித்துக்கொண்டே பார்ப்பதை பார்த்து "ச்சை பே சொரணை கெட்ட ஜென்மம்..!!" என்று அவனை பார்த்து கோபமாக கத்திவிட்டு மீண்டும் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டாள்‌.

அவளை பார்த்து சிரித்த சர்வாவின் கண்களில் முழு திருப்தி இல்லையோ.??

அடுத்த நாள் காலேஜ்ஜில் இருந்த நோட்டீஸ் போர்ட்டில் ஒட்டப்பட்ட செய்தியை பார்த்து காலேஜ்ஜே ஆட்டம் கண்டு நின்றது..!! அதில் ஒருத்தியாக சித்தாராவும்‌

அப்போது அந்த காலேஜ்ஜில் தனது அறையில் இருந்த சர்வாவின் முகமோ முழு திருப்தியுடன் வசிகரித்து.

அப்படி என்ன அந்த நோட்டீஸ் போட்டில் ஒட்டி இருக்கும்...??

தொடரும்...
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 26

"என்ன டி இது உன் கன்னம் சிவந்து போய் வீங்கி இருக்கு...!!" என்று அந்த காலேஜ் கேன்டீனில் தன் முன்னே அமர்ந்து‌ இருந்த சித்தாராவை பார்த்து பதட்டமாய் சந்தியா கேட்க.

"அச்சோ பௌன்டேஷன் போட்டு மறைச்ச பின்னும் இவ கண்ணுல சிக்கிடிச்சே..!! இப்ப என்ன பண்ணி சமாளிக்குறது..??" என்று யோசித்தபடி அவளை பார்த்து அசடு வழிய சிரித்தவள் சிரித்தபடியே "நம்ம பனிஷ்மென்ட் வாங்குனது எப்படியோ என் வீட்டுல தெரிஞ்சிடிச்சு அதான் கிளாஸ் கட் அடிப்பியானு கேட்டு கேட்டு அடிச்சிட்டாங்க..!!" என்று சொன்னவள் அவள் முழிப்பதை பார்த்து தான் புரிந்தது தான் சிரித்துக்கொண்டே அவளிடம் கதை சொல்கிறோம் என அதில் சட்டென்று தன் முகத்தை சோகமாக மாற்றியவள் " க்கூம்..!! இனி கிளாசை கட் அடிப்பியானு கேட்டு கேட்டு அடிச்சுடாங்க..!!" என்றாள் கன்னத்தை பற்றியபடி சோகமாய் .

அப்போது அவர்களை கண்டு அங்கு வந்த அஜய்யின் காதுகளில் இது கேட்க "என்னது உன்னை உன் வீட்டுல அடிச்சாங்களா..??" என்று கேட்டபடி சித்தாராவை நெருங்கியவன் அவள் கன்னத்தை பற்றியிருந்த கையை விலக்கி விட்டு கன்னத்தை நோக்க கன்னம் லேசாய் தடித்து போய் இருந்தது அதை கண்டு வெகுண்டவன் "என்ன ஒரு காட்டுமிராண்டி தனம் பேரண்ட்ஸ் ஆனாலும் அவங்க குழந்தைங்களை அடிக்க அவங்களுக்கு உரிமை இல்ல சட்டப்படி தப்பு..!! இதுல உன்னை கன்னம் வீங்கி போற அளவு அடிச்சிருக்காங்க" என்று அவன் கோபத்தில் குதிக்க.

அதை கண்டவளோ "என்ன இவன் இதுக்கே இப்படிங்குறான் நம்ம கணக்குக்கு இது சும்மா அந்த எருமை தட்டுனது ஆச்சே இதுவே பிரமாதம்னா இதை விட இல்ல என் அப்பா என்னை தூக்கி போட்டு மிதிப்பாரு அதெல்லாம் பார்த்தா இவன் ரியாக்ஷன் எப்படி இருக்கும்...??" என்று எண்ணியவளுக்கு அவனது ரியாக்ஷனை எண்ணி லேசாய் சிரிப்பு வர அதை கஷ்டப்பட்டு அடக்கியபடி அவனை பாவமாக பார்த்தாள்.

அப்போது அந்த கேண்டினுள் வேகமாக நுழைந்த ஒரு மாணவன் "கையிஸ் நம்ம நோட்டீஸ் போர்ட்ல ஏதோ எழுதி ஒட்டியிருக்காங்க எல்லாரும் அதை பார்த்துட்டு ஸ்டிரைக் பண்ணுற ஐடியால இருக்காங்க எல்லாரும் சீக்கிரம் கிரௌண்டுக்கு வாங்க..!!" என்று மூச்சு வாங்க சொன்னபடி மீண்டும் அவன் கிரௌண்டை நோக்கி ஓட

அதில் "ஸ்டிரைக்கா..??" என்று குழப்பமும் பதற்றமுமாய் அவனை பின் தொடர்ந்தனர் அங்கு இருந்தவர்கள் எல்லாம்.

"என்ன மச்சி நம்ம காலேஜ்ல புதுசா ஸ்டிரைக்குனு எல்லாம் சொல்லுறாங்க என்ன விஷயமா இருக்கும்..??" என்று சந்தியாவிடம் கேட்டபடி வேகமாய் சித்தாரா நடக்க

அவளுடன் அதே வேகத்தில் நடந்தபடியே "தெரியல மச்சி ஆனா தெரிஞ்ச வரைக்கும் நம்ம காலேஜ் அகராதில இந்த மாதிரி ஸ்டிரைக்குன்னு எல்லாம் ஒரு விஷயமே நடந்தது இல்லை‌‌..!!" என்று சொல்ல

நெற்றி சுருக்கிய சித்தாரா தன் நடையை தொடர்ந்து கிரௌண்டை அடைந்திருந்தாள்.

அங்கோ நோட்டீஸ் போர்ட்டிற்கு முன்னோ சில மாணவர்கள் கூட்டமாய் குவிந்து நிற்க அதற்கு சற்று தள்ளி நின்று மாணவர்கள் கோபமாக ஏதோ தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

இதை எல்லாம்‌ பார்த்தபடி வந்த நண்பர்கள் மூவரும் அந்த கூட்டத்துள் புகுந்தபடி அந்த நோட்டீஸ் போர்டை பார்க்க அவர்கள் கண்களிலும் அதே அதிர்ச்சி.

அதற்கு காரணம் இருபாலினர்கள் படிக்க கூடிய அக்கல்லூரியில் இனி பெண்கள் சுடிதார் போடவேண்டும் என்றும் அப்படி போடும் சுடிதார் காலர் நெக்காவும் லூசாகவும் இருக்க வேண்டும் என்று போட்டப்பட்டு இருக்க அதோடு ஆண்கள் கியாஷூயல்ஸ் அணிந்து வர தடையோடு பார்மல் உடையில் டக்செய்து வருமாறும் ஷூ அணிந்து வருமாறும் அணிந்து இருந்தது கூடவே போலீஸ் கட்டை தவிர்த்து வேறு எந்த வித சிகை அலங்காரமும் இருக்க கூடாது என்று குறிப்பிட்டு இருந்தது பெண்களுக்கு முடியை விரித்துவிடாமல் பின்னல் இட்டு வரவேண்டும் என்று எழுதி ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் அந்த காலேஜ் கேம்பஸ்ஸினுள் அனாவசியமாக பெண்களும் ஆண்களும் அமர்ந்து அரட்டை அடிக்க கூடாது என்றும் இதை எல்லாம் மீறினால் பனிஷ்மென்ட்டே இல்லாமல் டீசி தரப்படும் எனவும் இருந்தது.

"நோ... வாட் தி ஹெல் இஸ் திஸ்‌‌...!!" என்று கோபத்தில் கத்திய அஜய்.

"சுத்த ரப்பிஷ்ஷா இருக்கு எந்த காலத்துல இருக்காங்க..?? இப்ப போய் டிரெஸ் கோட் பாத்துக்கிட்டும் கேர்ள்ஸ் அண்ட் பாயிஸ் பேசகூடாதுன்னும் போட்டு இருக்காங்க..!!" என்று சீற அதே போல பல மாணவ மாணவிகள் அங்கு கோபத்தில் குதித்துக்கொண்டு இருந்தனர்.

சித்தாராவுக்கு "இவனுக்கு என்ன கிறுக்கா..??" என்று தான் தோன்றியது.

இத்தனை காலம் இந்த காலேஜில் நன்றாக போய் கொண்டு இருந்த நடைமுறை அவன் மாற்றியதை அவளால் சுத்தமாய் ஏற்க முடியாவில்லை.

அப்போது அந்த இடத்தில் சட்டென்று சலசலப்பு நிற்க அங்கு கருப்பு நிற பார்மெல் பேண்ட் மற்றும் வெள்ளை நிற பார்மல் சர்ட் போட்டுக்கொண்டு அதை பேண்டினுள் டக்செய்தபடி ஆசிரியர் படை சூழ வேகமாக அவ்விடம் நோக்கி வந்தான் சர்வா.

மாணவிகளோ அவனை பார்த்து "வாவ் ..!!" என்று முணுமுணுத்தபடி கண்கள் விரிய பார்க்க.

"என்ன இவன் இவ்ளோ அழகா இருக்கான் இன்னைக்கு..??" என்று மனதில் எண்ணியபடி கண்சிமிட்டாமல் பகிரங்கமாய் அவனை சைட் அடித்தாள் சித்தாரா.

மாணவர்களோ "பார்மெல் டிரெஸ்ல இவ்ளோ ஹேண்ட்ஸசமா இருக்கலாமா..??" என்றபடி அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இந்த பார்வைகளுக்கு எல்லாம் உரியவனோ

"வெல்...!!" என்றபடி தன் காலை அகட்டி தன் பேண்ட்பேக்கட்டில் கைகளை நுழைத்து மாணவர்களை கூர்மையாக பார்த்தவாறு "ஸ்டிரைக் பண்ண போறதா கேள்வி பட்டேன்..?? இஸ் தட் ட்ரூ..!!" என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்தியபடி கேட்க

அதில் சில மாணவர்கள் பயத்தில் அமைதியாய் இருந்தார்கள் என்றால் ஒரு சில மாணவர்களோ தைரியமாக "ஆமா சார் நீங்க போட்ட புது ரூல்ஸ் எங்களால அக்செப்ட் பண்ண முடியாது நீங்க மாத்தாட்டி நாங்க கண்டிப்பா ஸ்டிரைக் பண்ணுவோம்..!!" என்று சொல்ல அவனை தொடர்ந்து சில மாணவர்கள் கோரசாக "ஆமா ஸ்டிரைக் பண்ணுவோம்..!!" என்றனர் சத்தமாய்.

இதை எல்லாம் கண்ட சர்வாவோ அதுவரை இறுக்கமாய் பூட்டி இருந்த தன் உதட்டை லேசாய் பிரித்து சின்னதாய் ஒரு புன்னகையை அவர்களை நோக்கி வீசியவன்.

"மூர்த்தி‌ண்ணா..!!" என்று உரக்க அந்த காலேஜ் பியூனை அழைக்க.

அவனது அழைப்புக்காக தான் அவரும் காத்திருந்தார் போலும் "சரி தம்பி..!!" என்று அவனுக்கு பதிலளித்து விட்டு வேகமாக எங்கோ சென்றார்.

மாணவர்களோ 'இங்கு என்ன நடக்கிறது..??' என்று தெரியாமல் முழித்துக் கொண்டு நிற்க.

அச்சமயம் மிகுந்த சலசலப்போட அங்கு வந்தது ஒரு கூட்டம்.

அந்த கூட்டத்தை பார்த்து அதிர்ந்த மாணவர்களோ எச்சிலை கூட்டி விழுங்கியபடி பயத்துடன் நிற்க.

அவர்களுக்கு நேர் எதிரே அவர்களை உக்கிரமாய் முறைத்தபடி நின்றுக் கொண்டு இருந்தனர் அவர்கள் பெற்றோர்கள்.

"ஓகே டியர் ஸ்டூடெண்ட்ஸ் நான் போட்டுருக்க ரூல்ஸ் பத்தி உங்க பேரெண்ட்ஸ் உங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணனும்னு பிரியப்படுறாங்க சோ யூ பீப்பிள் கேரியான் நாங்க டென் மினிட்ஸ் கழிச்சு இங்க வரோம்..!!" என்று சொல்லிவிட்டு ஆசிரியர்களோடு அவன் நகர.

அவன் முதுக்கு பின்னாலோ " ஏன் டா உனக்கு கஷ்டப்பட்டு பீஸ் கட்டி உன்னை படிக்க அனுப்புனா துரைக்கு டிரைக் செய்ய கேட்குதோ ஸ்டிரைக்..??" என்ற ஒரு மாணவனின் அம்மாவின் பேச்சு சத்தத்தை தொடர்ந்து "ஐயோ ம்மா விடு நான் சும்மா தான் ம்மா அப்படி சொன்னேன் என் முடிய விடு மா வலிக்குது.!!" என்று ஒரு மாணவனின் அலறல் சத்தம் கேட்டது.

அதேபோல் பல குரல்கள் அங்கு ஒலித்தது.

இதில் என்ன சிறப்பு என்றால் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவர்களின் பெற்றோரும் அங்கு வரவைக்கப்பட்டு இருந்தனர்.
இதை எல்லாம் கேட்டபடி நடந்த சர்வாவின் உதடுகளோ தாராளமாய் விரிய தன் நடையை தொடர்ந்து அங்கு இருந்து நகர்ந்துச் சென்றான் அவன்.

சரியாய் பத்து நிமிடம் கழித்து அங்கு வந்த சர்வா அதே லேசான புன்னகை சிறிதும் மாறாமல் "இப்போ சொல்லுங்க ஸ்டூடெண்ஸ் ஸ்டிரைக் பண்ண போறீங்க..??" என்று கேட்க

"இல்ல சார் இல்லை..!!" என்று உடனே அவசரமாக மறுத்து இருந்தனர் மாணவ மாணவிகள் .

அதில் புன்னகை மேலும் விரிய "தட்ஸ் குட்..!!" என்று சொன்னவன் "நாளைல இருந்து நோட்டீஸ் போர்ட்ல ஒட்டி இருந்த ரூல்ஸ் பாலோவ் பண்ணுங்க..!!" என்று சொல்லி நிறுத்தி அவர்களை அழுத்தமாக பார்த்தவன் "ஒரு வேளை நீங்க பண்ணாட்டி தட் வுட் பீ யுவர் லாஸ்ட் டே இன் திஸ் காலேஜ்..!!" என்றிருந்தான் அமர்த்தலாய்.

அதில் பயத்துடன் மாணவர்கள் சரி என்று தலையாட்டினர்.

நடந்ததை எல்லாம் பார்த்த சித்தாராவுக்கோ "மாமா இந்த காலேஜை ஹேண்டில் பண்ணப்போ எவ்வளவு ஜாலியா இருந்திச்சு..!!"‌ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

அடுத்து தொடர்ந்து வந்த நாட்களில் அந்த காலேஜில் பழைய ரூல்ஸ் எல்லாம் மாறி புது ரூல்ஸ் போடப்பட்டது.

ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகள் பேரெண்ட்ஸ் அல்லது கார்டியன் அல்லாது வெளியே எங்கும் போக அனுமதி இல்லை என்பது முதல் காலையில் ஒரு நிமிடம் லேட்டாக வந்தாலும் அந்த மாணவர்களுக்கு அந்த நாள் முழுவதும் அப்சென்ட் என்று போடப்படும் என்பது வரை மிக ஸ்டிக்ட்டாக மாறியிருந்து அந்த காலேஜ்‌.

அந்த ரூல்ஸ் எல்லாம் எண்ணி மாணவர்களுக்கு கடுப்பு வந்தாலும் அதை வெளிக்காட்ட முடியாமல் வேறு வழியின்றி அதை எல்லாம் ஃபாலோவ் பண்ணி இருந்தனர். அதற்கு காரணம் ஏற்கனவே நான்கு மாணவர்களுக்கு ரூல்ஸ் பாலோவ் பண்ணாத காரணத்தால் டிசி கொடுக்கப்பட்டிருந்தது அதில் மாணவிகளும் அடக்கம்.

அந்த காலேஜ் ரூல்ஸ் மாற மாற மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் எடுக்கத்தொடங்கி இருந்தனர்.

முன்பெல்லாம் ரிலாக்ஷேஷன் என்று சொல்லி அரட்டை அடித்து காலேஜ் கட் அடித்து ஊர் சுத்தியவர்கள் இப்போது அது முடியாமல் எக்டிரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் செய்து தங்கள் திறமையை பல்வேறு துறையில் வெளிக் கொண்டு வருகின்றனர் அதற்கு அந்த காலேஜ் லெக்சரர்ஸ்சும் உறுதுணையாக இருந்தனர்.

சித்தாரா சர்வா வாழ்க்கை இன்னும் அடிதடி சண்டையில் போய்கொண்டு இருந்தாலும். அவ்வப்போது சர்வா மீது சித்தாரா வைத்துள்ள காதல் வெளி காட்டும்.

அதன்படி டிவி பார்த்துக்கொண்டே அவன் தோளில் சாய்வது முதல் உறங்கும் போது அவனை இறுக்க கட்டிக்கொண்டு தூங்குவது வரை தன் வேலையை சிறப்பாக செய்தாள் சித்தாரா. அதில் சர்வா தான் தடுமாறி போனான்.

அன்றும் அப்படி தான் சர்வா இரவுக்கான உணவை தயாரித்துக்கொண்டு இருக்க.

"டேய் மாமா இந்த சம் எனக்கு புரியல கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணேன்..!!" என்றபடி அங்கு வந்த சித்தாரா. உடலை இறுக்கிய ஆர்ம் கட் பனியனுடன் வேர்வை வழிய சமைத்துக் கொண்டு இருந்த சர்வாவை பார்த்து குறும்பு மின்ன தன் கையில் இருந்த நோட்டை கிச்சன் மேடையில் வைத்துவிட்டு மெல்ல அவனை நெருங்கி அவனுக்கு இரு புறம் இருந்த மேடையில் கையை ஊன்றியபடி அவனை சிறை எடுத்தபடி எட்டி அவன் சமைப்பதை பார்த்து "என்ன டா மாமா செய்யுற..??" என்று அவனிடம் ஒன்றும் தெரியாத அப்பாவி போல கேட்க

அவளது நெருக்கத்தில் சிலிர்த்து போன இவனோ அந்த உணர்ச்சியை தாங்க முடியாது பல்லைக் கடித்தபடி "தள்ளி நில்லு டி..!!" என்றான் பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பியபடி.

அதில் அவனை மேலும் சீண்ட எண்ணியவள் அவனை மேலும் நெங்கியவாறு "இவ்வளவு தள்ளி நின்னா போதுமா..??" என்று அதுவரை உரசியும் உரசாமலும் இருந்த தன் மேனியை அவன் மீது மொத்தமாய் சாய்த்தபடி அவன் காதில் மெல்ல கேட்க.

அந்த நொடி அவள் பால் அவனுக்கு எழுந்த உணர்வை எண்ணி ஸ்தம்பித்து போய் தன் கையில் பிடித்திருந்த கரண்டியை தவறவிட்டிருந்தான் சர்வா.

அவனது வாயோ அதிர்ச்சியுடன் "வாட் தி ஹெல் இஸ் ஹேப்பனிங் இன் மீ..!!" என்றது முணுமுணுப்பாய்.


தொடரும்...
 
Last edited:

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -27

தனக்குள் எழுந்த உணர்வை எண்ணி அதிர்ந்த சர்வா சட்டென்று அவளை தன்னை விட்டு விலக்கி நிற்க வைத்தான்.

"ஆகா பார்முக்கு வந்துட்டான் போல இதுக்கு மேல இங்க நின்னா உன் கதை கந்தலாகிடும் டி சித்து சத்தம் காட்டாம கிளம்பிடு..!!" என்று மனதுள் எண்ணிய சித்தாராவோ நைசாக கிச்சனில் இருந்து நழுவி ரூமுக்குள் சென்று மறைந்தாள்.

இங்கு சர்வா தான் அவளால் எழுப்பப்பட்ட உணர்வுகளை ஏற்கவும் முடியாது அடக்கவும் முடியாது கிச்சன் மேடையை இறுக்க பற்றிக்கொண்டு நின்றான்.

இரவு உணவை இருவரும் அமைதியாகவே உண்டனர்.

அவன் நிலை புரியாத சித்தாராவோ "உன் பிளேட்டுல அதிகமா இருக்கு என் பிளேட்டுல ஒரே காயா இருக்கு..!!" என்று கூறி புலம்ப அவள் கூற்றுக்கு பதில் அளிக்கவே இல்லை இவன்.

அதில் "ரொம்ப தான் பண்ணுறான் சிடுமூஞ்சி..!!" என்று மனதுள் முணுமுணுத்தவள் அப்போதும் தன் பேச்சை நிறுத்தாது வளவளத்தபடியே தான் இருந்தாள்.

உணவை உண்டு முடித்ததும்‌ இருவரும் ரூமினுள் நுழைய.

"ஷப்பா ஒரே டயர்டா இருக்கு டா..!!" என்றபடி தொப்பென்று சென்று பெட்டில் குப்பற விழுந்தாள் சித்தாரா.

அவள் பின் வந்த சர்வாவோ கபோர்டில் இருந்து தன் துணியை எடுத்துக்கொண்டு நேரே பாத்ரூமினுள் செல்ல.

அதை ஒருக்களித்து படுத்தவண்ணம் பார்த்த சித்தாரா "இவன் என்ன அதிசயமா ராத்திரி குளிக்க எல்லாம் போறான்..??" என்று எண்ணியபடியே தன் கண்களை மூடியவள் அப்படியே உறங்கியும் விட்டாள்.

மணி இரவு இரண்டை தொட்டநேரம் படுக்கையில் திரும்பி திரும்பி படுத்துக்கொண்டிருந்தாள் சித்தாரா.

தூக்கத்தில் அவளுக்கு வசதியாய் இல்லை போலும் திரும்பி திரும்பி படுத்துக்கொண்டு இருந்தவள் கடைசியில் "பச்..!!" என்றபடியே தன் தலையை சொறிந்தவாறு எழும்பி யாரையோ தேட அவள் தேடியவனோ அங்கு இல்லவே இல்லை அதில் மேலும் தன் தலையை பரபரவென சொறிந்தபடி எழுந்தவள் அப்படியே நடந்து அந்த அறையை விட்டு வெளியேற அங்கு அவள் தேடியவன் பாய் விரித்து சுகமான துயிலில் இருக்க அதில் தன் தலையை சொறிவதை நிறுத்தியவள் அந்த தூக்க கலக்கத்தோடு பல் தெரியாமல் உதட்டை மட்டும் விரித்து சிரித்தவள் அதே தூக்க கலக்கத்தோடு அவன் அருகே சென்று படுத்து அவன் நெஞ்சில் தன் தலை சாய்த்து படுத்துக்கொண்டாள்.

அடுத்த நாள் ஞாயிறு காலை..

சுள்லென்று வெயில் முகத்தில் பட கண்களை சுருக்கியபடி தன் தலையை திருப்பினான் சர்வா.

அப்போது அவன் முகத்தில் ஏதோ ஊறுவது போல இருக்க அதில் பதறியபடி தன் முகத்தை தொட்டு பார்த்தவனது கையில் ஏதோ மென்மையானது சிக்க அதில் அதை முகத்தில் இருந்து எடுத்தவனுக்கு அப்பொழுது தான் தெரிந்தது அது முடி என்று‌.

அதில் அதை புருவம் சுருங்க ஒரு நொடி பார்த்தவன் அடுத்தநொடி தன் நெஞ்சை பார்த்தான். அதில் அவன் எதிர்பார்த்தபடியே சித்தாரா தான் படுத்து கிடந்தாள்.

ஏனோ அதை பார்த்தால் எப்பொழுதும் எழும் எரிச்சலும் சலிப்பும் இப்போது எழவில்லை மாறாக ஏதோ ஒரு அமைதியான பீல் குட் என்பார்களே அதை போன்ற ஒரு உணர்வு எழ அது அவனுக்கு பிடித்து தொலைத்தது தான் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அப்படியே தன்னை மறந்து அவளை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டு நின்றிருப்பானோ காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க அதில் தன்னை சுதாரித்துக்கொண்டவன் அவளை தன் கைகளில் ஏந்தி ரூமில் உள்ள படுக்கையில் ஒழுங்காய் கிடத்திவிட்டு விலகியிருந்த அவள் டீசர்ட்டை இழுத்து ஒழுங்காய் விட்டு விட்டு அவள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் அருகில் இருந்த தன் பெட்சீட்டை எடுத்து அவளை நன்றாக போர்த்தி விட்டே காதவை சென்று திறந்து யார் என்று பார்த்தான்

அங்கோ "அத்தான்..!!!" என்றபடி அவனை வந்து கட்டிக்கொண்டாள் கண்மணி‌.

"ஹே கண்மணி குட்டி..!! வாட் ஏ சர்பிரைஸ்..?? எப்படி இருக்கீங்க..??" என்று கேட்டபடி பதிலுக்கு அவளது தோளில் கைபோட்டு கழுத்தை நெறிப்பது போல தூக்கி வீட்டினுள் விட்டவன் "ப்பா உன் அக்கா மாதிரி நீயும் சோத்து மூட்டை ஆகிட்டியா இந்த கனம் கனக்குற..??" என்று கேட்டபடி கதவை சாத்திவிட்டு திரும்ப.

அங்கோ இவன் சொன்னதை கேட்டு "அத்தான் உங்கள கொல்ல போறேன் பாருங்க..!!" என்றபடி முறைத்துக் கொண்டு நின்றாள் கண்மணி.

அதில் அவள் தலையை கலைத்து விட்டவன் "ஹாஹா சும்மா..!! என்றான் கண்சிமிட்டியபடி‌

அதில் தன் முறைப்பை விடுத்த அவளும் ஏதோ ஞாபகம் வந்தது போல

"வந்த விஷயத்தையே மறந்துட்டேன் ..!!" என்று தன் தலையில் அடித்துத்துக்கொண்டவள் அவனை நன்றாக முறைத்தபடி "என்ன அத்தான் வீர தீர செயல்லாம் செஞ்சு வச்சு இருக்கீங்க..?? ஒரு வார்த்தை என் கிட்ட சொல்லணும்ணு உங்களுக்கு தோணிச்சா பாத்தீங்களா..??"‌ என்று இடுப்பில் கையை வைத்து முறைத்தபடி அவனிடம் கேட்க

தன் முன்னே பெரிய மனிஷி தோரணையில் நின்று கேள்வி கேட்பவளை பார்த்து சிரித்த சர்வா.

"அது நானே எக்ஸ்பெக்ட் பண்ணலை டி..!!" என்றான் உண்மையாய்

அதை கேட்டு தோளை குலுக்கிய அவளோ "அதெல்லாம் எனக்கு தெரியாது நீங்க காலேஜை பொறுப்பேத்துகிட்டதுக்கு நீங்க எனக்கு டிரீட் வச்சே ஆகணும்..!!" என்றாள் உறுதியுடன்.

அதில் அவளை பார்த்து பக்கென்று சிரித்தவன் "அடிப்பாவி டிரீட்காகவா இப்படி சீன் போட்ட சரி சொல்லு என்ன வேணும் உனக்கு..??" என்று அவளிடம் கேட்டான்.

"அது இதுன்னு தனிப்பட்ட முறையில சொல்ல முடியல அத்தான் எனக்கு நிறைய ஐட்டம் வேணும் நல்ல கடையா பார்த்து கூட்டிட்டு போங்க..!!" என்று சொல்ல.

"கடைக்கா..?? உன் அத்தான் இப்போ அவ்வளவு எல்லாம் பண்ணுற அளவு வொர்த் இல்ல டி..!!" என்று சொல்ல முகம் சொங்கி போனது கண்மணிக்கு. அதை கண்டு சிரித்தவன் "ம்ம்..!! அது பண்ணமுடியாது தான் ஆனா அதை விட பெட்டரா பண்ணமுடியும்..!!" என்று கூறி அவளை பார்க்க அவன் நினைத்தது போலவே அவள் முகத்தில் புன்னகை விரிந்தது.

அதை கண்டு திருப்தி அடைந்தவன் "சரி உள்ள போய் உங்கொக்காவ எழுப்பு.. விட்டா இன்னைக்கு பூரா தூங்கிட்டே இருப்பா..! நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்..!!" என்று சொல்லிவிட்டு அவன் வெளியே கிளம்பி விட

இவள் "க்கா...!!" என்று அழைத்தபடி பெட்ரூமினுள் நுழைந்தாள்.

அங்கு சித்தாராவோ சர்வாவின் பெட்சீட்டை போர்த்தியபடி சுகமாய் துயிலில் இருக்க.

அவள் அருகில் வந்த கண்மணியோ சத்தம் போடாமல் வேகமாக அவளை உலுக்க.

சர்வா தானோ என்று எண்ணியவள் சட்டென்று தன்னை உலுக்கிய கையை பிடித்து இழுத்து தன் அருகே போட்டு அடுத்த நொடி அந்த கைக்கு சொந்தக்காரரின் மீது உட்கார்ந்து உட்கார்ந்த வேகத்தில் குனிந்து அந்த உருவத்தின் கன்னத்தை கடித்து வைத்திருந்தாள்.

அதில் "ஆ....!!" என்று அலறியபடி அவளை தன் பலம் மொத்தமும் சேர்த்து தள்ளிவிட்டு இருந்தாள் கண்மணி.


சர்வாவின் குரலுக்கு பதில் வேறு ஒரு பரிச்சயமான குரல் கேட்டதில் திடுக்கிட்ட சித்தாரா பெட்டில் விழுந்த வேகத்தில் பதறி அடித்துக்கொண்டு எழ

அங்கோ அவள் பற்கள் பதிந்த கன்னத்தை பற்றியபடி உதட்டை பிதுக்கிக்கொண்டு அழும் நிலையில் இருந்தாள் கண்மணி.

"அச்சோ கண்மணி நீயாடி..?? சாரி டி தங்கம்...!!" என்படி அவள் அருகில் பதற்றத்தோடுச் செல்ல.

"நீ என்ன கடிச்சிட்டல்ல..!!" என்ற படி அழத்தொடங்கினாள் கண்மணி.

அதில் பதறிபோன இவளோ "ஐயோ இல்ல டி செல்லம், அந்த லூசு பையன்னு நினைச்சு கடிச்சிட்டேன் சாரி..!!" என்று சொல்லி சமாதானப் படுத்த.

லேசாய் அழுகை வந்தாலும் இமையை சிமிட்டி அதை உள் இழுத்த கண்மணி சித்தாராவின் கெஞ்சலை கண்டு மனம் இறங்கி சமாதானம் ஆனாள்.

அவளின் கன்னத்தை வருடிய சித்தாரா "சாரி டி..!! வலிக்குதா..??" என்று உண்மையான வருத்தத்துடன் கேட்க

"இல்லை இனிக்குது..!! கேக்குறா பாரு கேள்வியை நல்லா பல்லு பதிய கடிச்சிட்டு..!! என்று பதில் சொன்னவளோ தன் கன்னத்தை பிடித்தபடி தன்னையே பாவமாக பார்த்துக்கொண்டு இருந்த தன் அக்காவை பார்த்து "என்ன பீலீங்ஸ்சா..?? இல்லை பீலீங்கஸ்சானு கேக்குறேன்..!! எனக்கு தான் டி பீலீங்ஸ் எனக்கு தான் பீலீங்..!! போ என் மூஞ்சையே பார்க்காம போய் காப்பி தண்ணி கொண்டா" என்று வடிவேலு பாணியில் கூற.

அதில் முகத்தை சுருக்கிய சித்தாரா அவள் தலையில் பட்டென்று தட்டியவாறு "போடி லூசு..!!" என்று கூறிவிட்டு எழும்பி போனாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் தங்கைக்கு காப்பி போட்டு கொடுக்க அவள் மறக்கவில்லை.

"எங்க டி அந்ந சிடுமூஞ்சி..??" சோபாவில் தலைகீழாய் படுத்தவாறு கண்மணியிடம் சித்தாரா வினவ.

சோபாவுக்கு கீழ் தன் அக்காவின் தலைக்கு அருகே அமர்ந்துக் கொண்டு கையில் இருந்த சிப்ஸ்சை கொறித்துக்கொண்டு இருந்த கண்மணியோ "ப்ச் நோ ஐடியா க்கா..!! அத்தான் கிட்ட டிரீட் மட்டும் தான் கேட்டேன் அப்போ வெளிய போனவரை இன்னும் காணும்..!!" என்று சொன்னபடி தீர்ந்த சிப்ஸ் கவரினுள் தலையை விட்டு வேறு இருக்கிறதா என்ற ஆராய்ச்சியில் அவள் ஈடுபட.

"அப்படி எங்க போயிருப்பான்..??" என்று தீவிர சிந்தனையில் இறங்கினாள் சித்தாரா.

பத்து நிமிடம் கழிந்து இருக்கும் கதவை திறுந்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான் சர்வா.

வந்தவனது பார்வையில் முதலில் விழுந்தது சோபாவில் தலைகீழாய் படுத்து கிடந்த சித்தாராவும் அவள் அருகில் தரையில் தலையை வைத்து காலை தூக்கி சோபாவின் மீது போட்டபடி தன் அக்காவிடம் ஏதோ சிரித்து பேசிக்கொண்டு இருந்த கண்மணியும் தான்‌.

அதை பார்த்தவனுக்கோ என்னதான் வாயை அடக்கியும் முடியாமல் "பொண்ணுங்களை பெக்க சொன்ன என் மாமா குரங்குங்களை பெத்து வச்சு இருக்கார்..!!" என்று முணுமுணுக்க

அவன் குரல் கேட்டு திரும்பி பார்த்த சகோதரிகளுக்கு நல்ல வேளை அவன் முணுமுணுப்பு என்னவென்று தெரியவில்லை.

"ஹே அத்தான் வந்திட்டார்..!!" என்றபடி துள்ளி குதித்து அவன் அருகில் போன கண்மணி "அத்தான் என்ன வாங்கிட்டு வந்தீங்க எனக்கு பிடிச்ச கிரில் சிக்கன் இருக்கு இல்ல..??" என்று ஆர்வமாய் அவன் வாங்கி வந்த பையை பார்த்தபடி கேட்க.

அதை கேட்டு புன்னகைத்த இவன் "ம்ம்..!!"என்று மட்டும் பதில் சொல்ல.

"என்ன த்தான் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் கூட சொல்ல மாட்டிங்கிறீங்க சரி
கொடுங்க நானே பார்க்குறேன்..!!" என்று ஆசையுடன் நாக்கில் எச்சில் ஊற அவன் கையில் இருந்த பெரிய சைஸ் ஷாப்பிங் பேக்கை வாங்கி பார்க்க. பார்த்த அடுத்த நொடி அவள் முகம் அதிர்ச்சியுடன் சர்வாவை நோக்கியது.

"என்னத்தான் எல்லாம் பச்சையா இருக்கு..??" என்று பாவமாக அவள் கேட்க.

"சமைக்காட்டி பச்சையா தான் மா இருக்கும்..!!" என்றான் சர்வா

அச்சமயம் ஒரு பெரிய சிரிப்பொலி கேட்க கண்மணியும் சர்வாவும் திரும்பி சிரிப்பு சத்தம் கேட்ட இடத்தை நோக்கினர் அங்கோ சோபாவில் தலைகீழாய் படுத்த வாக்கில் இவர்களை பார்த்து தான் சிரித்துக்கொண்டு இருந்தாள் சித்தாரா.


சிரித்தபடியே "பல்பு வாங்கினியா டி கண்மணி எப்பவும் இவனுக்கு கொடி தூக்குவ இப்போ உனக்கே ஆப்பா..??" என்று கேட்டு கேட்டு சிரித்தவள் "சரி நீ ஃபீல் பண்ணாத டி நம்ம ஈவ்னிங் எங்கையாச்சும் போய் சாப்பிடலாம் நான் பார்ட் டைம் பார்த்த காசு கொஞ்சம் இருக்கு அதை வச்சு நம்ம என்ஜாய் பண்ணலாம்..!" என்று அவள் சொல்ல

கண்மணியோ திரும்பி சர்வாவை பார்த்து முறைக்க.

அவனோ சித்தாராவை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

"இன்னைக்கு சமையல் என்னோடது கண்மணி சோ நீ கவலை படாத உனக்கு பிடிச்ச எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன் ஒரு இரண்டு மணி நேரத்துல எல்லாம் ரெடி ஆகிடும்..!!" என்று சொல்ல

அதில் அதுவரை சிரித்துக்கொண்டு இருந்தவள் இப்போது சிரிப்பை நிறுத்தி வேகமாக எழுந்து ஒழுங்காய் அமர்ந்தவளது எண்ணமோ சிறிது நாட்கள் முன் நடந்த சம்பவத்தை எண்ணியது.

"டேய் ஷிவ்வூ எனக்கு பிரியாணி சாப்பிடணும் போல இருக்கு டா மாமா பண்ணி கொடேன்..!!" என்று அவனது தோளை உலுக்கியபடி கேட்டவளை அதுவரை ஏறிட்டும் பார்க்காமல் இருந்த சர்வாவோ இதில் நிமிர்ந்து "ப்ச் எனக்கு அதெல்லாம் செய்ய தெரியாது டி நான்வெஜ்ஜே எனக்கு சமைக்க தெரியாது..!!" என்றான் உறுதியான குரலில்.

"செய்ய முடியலைனா என்ன டா வாங்கி கொடு..!!" என்று அவள் கேட்டதுக்கு.

அவளை கண்டு முறைத்தவன் "காசு என்ன மரத்துலையா காய்க்குது..?? போடி அங்கிட்டு கடுப்பை கிளப்பாம..!!" என்றிருந்தான்.

அதை எண்ணியவளோ "அடப்பாவி..!!" என்று வாயில் கைவைத்தபடி அவனை அதிர்ந்து பார்க்க அவனோ அவளை கண்டுக்கொள்ளாமல் கிச்சனுள் நுழைந்தான்.

போகும் அவனை பார்த்த அவளுக்கோ மனம் லேசாய் சுருங்கியது "தங்கை கேட்ட உடன் மெனக்கெட்டு போய் உணவை வாங்கி வரும் அவன் இதே நான் கேட்ட சமயம் இதில் ஒரு துரும்பை கூட அசைக்கவில்லையே..?? அவனுக்கு தன்னை உண்மையிலேயே பிடிக்கவில்லையோ" என்று எண்ணி சோர்ந்த மனதுடன் அவள் அமர்ந்திருக்க அப்போது அவள் அருகில் வந்த கண்மணியோ

"க்கா வா அத்தான்க்கு எதாச்சும் ஹெல்ப் பண்ணலாம் பாவம் தனியா சமைக்க போறாரு ..!!" என்று கூறி சித்தாராவின் கையை பிடித்து இழுக்க.

மற்ற நேரமாய் இருந்தால் "ஏன் அவன் தனியா பண்ண மாட்டானா..??" என்று கேட்டு சண்டை போட்டிருப்பாள் ஆனால் இப்போது இருந்த மனநிலையில் அவனுக்கு தான் பாராமாக இருக்கிறோமோ..?? என்ற எண்ணம் வேறு சேர்ந்துக்கொள்ள ஒன்றும் கூறாமல் அமைதியாய் கண்மணியோடு கிச்சனுள் நுழைந்தாள்.

பாவம் அவள் அறியவில்லை உண்மையிலேயே சர்வாவுக்கு நான்வெஜ் செய்து பழக்கமில்லை என்றும் அப்போது அவள் கேட்ட சமயம் அதை வாங்கி கொடுக்கவும் கையில் பணம் இல்லை என்றும்.

இதோ நேற்று தான் அவனது சம்பளம் அவனது அக்கௌன்ட்டில் கிரெடிட் ஆகி இருக்க அதில் அவளது செமெஸ்டர் பீஸ்க்கென்று தனியாய் ஒது க்கி வைத்தவன் மீதி பணத்தில் இன்று ஏதாவது வாங்கி கொடுக்கலாம் என்று தான் எண்ணி இருந்தான். ஆனால் கண்மணி வந்து டிரீட் கேட்டதும் வெளியில் ஏன் வாங்க வேண்டும் அந்த காசு வைத்து பொருள் வாங்கினால் அதை விட நிறைய உணவு வகைகளை வீட்டிலேயே சமைக்கலாம் என்று எண்ணி தான் அவன் பொருள் வாங்கி வந்தது. இது ஏதும் அறியாது அவளே அவள் மனதில் ஒன்றை நினைத்துக்கொண்டு இருக்க அதை உணர்த்த வேண்டியவனும் உணர்த்த தவறி விட்டான்.

கிச்சனுள் சென்ற சர்வாவை தொடர்ந்து கண்மணி போக அவளுக்கு பின்னே சித்தாரா போனாள்.

கையில் வைத்திருந்த பொருட்கள் அடங்கிய கவரை கிச்சன் மேடையில் வைத்துவிட்டு திரும்பிய சர்வாவோ தனக்கு பின்னே வந்து நின்ற கண்மணியை கண்டு புருவ முடிச்சுடன் "ஹேய் கண்மணி உன் கன்னத்துல எப்படி (tooth) டூட் பிரின்ட் வந்திச்சு..??" என்று கேட்க.

அவளோ திரு திருவென முளித்தபடி தனக்கு பின்னே வந்ந அக்காவை பார்த்தாள்.

அதில் மேலும் விழிகள் இடுங்க அக்கா தங்கை இருவரையும் கேள்வியாய் பார்த்துக்கொண்ணு நின்றான் சர்வா..!!


தொடரும்..!!
 
Status
Not open for further replies.
Top