All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நந்து சுந்தரமின் ‘அகிலமும் நீயே!!!’ - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Gomathi Nandhini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அகிலமும் நீயே!!!
உணர்வு மரத்து,உயிர் வெறுத்து...தன் மகவுக்காய் வாழும் அபலை அவள்.

தவறு என தனக்கு தோன்றினால் அத்தவறிழைத்தோரை துப்பாக்கி எனும் பாசக் கயிரால் மேலோகம் அனுப்பும் கலியுக எமன் அவன்.

அத்தியாயம் 1:
பொன்னமராவதி சந்தை களை கட்டியது.

விவசாயிகள் தங்கள் விளைச்சலை வியாபாரம் செய்ய...அவர்கள் நிர்ணயித்த விலையில் ஐந்தாறு ரூபாயைக் குறைக்க பேரம் பேசி வாங்கிச் சென்றனர் பொன்னமராவதி சுற்று வட்டாரத்தினர்.

"ஏய்யா..உருளைல 1 கிலோ, முத்தல் இல்லாத கத்தரி 1/2 கிலோ,பால் கீரை 1 கட்டு கொடும்யா.."என தன் மகவுக்கு பிடித்த காய்கறிகளை அதிகமாகவும்,பொஞ்சாதிக்கு பிடித்தவைகளில் குறைவாகவும் வாங்கி இரண்டு பைகளில் நிரப்பிக் கொண்டிருந்தார் இரத்தினவேல்.

காலை 9 மணி போல் சந்தைக்கு வந்தவர்...இப்பொது சூரியன் உச்சிக்கு வந்து நேரம் நடுபகல் 12 என அறிவித்தான்.

3 மணி நேரமாய் கூட்ட நெரிசலில் முட்டி,மோதி காய்களை வாங்கியதில் உடலில் உள்ள நீர்ச்சத்து வியர்வயாய் வழிய...அதன் பலனாய் நாவரண்டு,தலை கிறுகிறுத்தது.

அருகில் இருந்த ஜூஸ் கடையில் ஒரு சர்பத்தை வாங்கிப் பறுகியவர்...மரக்கறி பைகளை தூக்கிக் கொண்டு தன் ஊருக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்.

"வேந்தம்பட்டி...வேந்தம்பட்டி...
வேந்தம்பட்டிலாம்...எறங்குங்க...பீப்...!"என்ற நடத்துனரின் விசிலில்...

பஸ்ஸில் இருந்து இறங்கி...முதல் முடுக்குத் தெருவில் உள்ள மூன்றாம் வீட்டின் கதவைத் தட்டி...

"ஏத்தா பூவு...ஏத்தா...கதவத் தொறத்தா...பூவு..."என அவர் குரல் கொடுத்தார்.

வீட்டினுள் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே..."என்ன சத்தத்தயே காணல?" என தனக்குள் முணகியவர்.

"ஏத்தா மங்கா...மங்கா.."என வேறு பெயரை சற்று உரக்கக் கத்த...

"இந்தா வாரேங்க"என்ற குரலுடன் தனது கைகளை முந்தியில் துடைத்தவாரே கதவைத் திறந்தார் இரத்தினவேலின் பத்தினி மங்கையற்கரசி.

கணவனின் கைகளில் இருந்து ஒரு கட்டைப் பையை தன் கையில் வாங்கியவர்...
"நான் பின்கட்ல இருந்தேன்.அதேன் கேக்கல...தொண்டைக்கு எதமா மோர் எடுத்தாரேன்."என்ற மங்கை அடுக்களைக்குள் நுழைய...ஹாலில் போட்டிருந்த மர ஊஞ்சலில் சோர்வாய் அமர்ந்தார் இரத்தினவேல்.

குளுமையான மோரை சொம்பில் எடுத்து வந்த மனைவியிடம்..."ஏத்தா..பூவெங்க ஆளையேக் காணோம்" என்றவர் மோரை வாங்கி பருக...

"அத ஏன் கேக்ரீக...காலேல எந்திச்சதும் குளிச்சுப்புட்டு,தெருல இருக்க நண்டு..சிண்டெல்லாம் சேத்துக்கிட்டு,கம்மாய்க்கு போயிருக்கா..."

"அப்பாரு நேரமே சந்தைக்கு போறாகலே துணைக்கு போவோம்னு தோணிச்சா இல்ல ஆத்தா தனி ஆளா வீட்டு வேல செய்ராளே கூட மாட ஒத்தாசப் பண்ணுவோனு தோணுச்சா...உங்க மகளுக்கு...ஹீம்"என மங்கை பெருமூச்சு விட...

"ஏன்த்தா..பூவ எங்கனு ஒரு வரில கேட்டாக்க...நீ என்னத்தா மூச்சு வாங்கப் பேசுரவ...இந்தா இதுல பாதி மோர் இருக்கு குடிச்சுக்க..."

"ஆமா...நான் ஒரு கூறு கெட்டவ உங்கட்ட இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கேனே...நீரு உம்ம மவள ஒரு வார்த்த என்னனுக் கேட்டுப்புட்டாக்க மழ கொட்டோ கொட்டுனு கொட்டிப்புடாது..."என்ற மங்கை தன் முகவாயைய் தோள்பட்டையில் இடித்தார்.

இன்னு ஒன்னு ரெண்டு வருசத்துல அவ இன்னோரு வீட்டுக்கு வாழப் போயிருவாத்தா...நம்ம வீட்ல இருக்க வர சந்தோசமா இருக்கட்டும்.பூவுக்கு புடிச்ச உருளை வாங்கியாந்து இருக்கேன் இதயே மதியத்துக்கு வெஞ்சனம் பண்ணீரு."

"ஹான்...நீரு இப்டியே செல்லம் கொஞ்சும்...போர எடத்துல உம்ம புள்ளைக்கு ஒரு வேலையும் தெரியலயே... இது தான் நீ புள்ள வளத்த லச்சணமானு என்னையத்தான இடிப்பாக..."என புலம்பியவாறு தன் பணிகளை மேற்கொள்ள பின்கட்டிற்கு சென்றுவிட்டார் மங்கை.

_______________________________

"ஏய் பூவு...என்னத்துக்கு இப்டி இருமி இருமி பயங்காட்ற...வாய மூடிக்கிட்டு ஒழுங்கா விளையாடு டி..."என பொடியன் ஒருவன் சிடு சிடுக்க அதை அந்தக் கூட்டத்தில் அனைவரும் ஆமோதித்தனர்.

"நா என்னடா ராசு செஞ்சேன்.விளையாட ஆரம்பிச்சதுல இருந்து புரை ஏறி இருமலா வருது.யாரோ என்னைய திட்ராக போலடா"என்ற பூவின்

ஒரு கால் தரையில் இருக்க, மற்றொரு காலை பின்புறமாய் மடக்கி,தலையை வானை நோக்கி உயர்த்தி,கண்களை மூடி,தரையில் வரைந்த கட்டங்களின் பார்டரில் கால் படாமல் குதித்துக் குதித்து நொண்டி ஆடிக் கொண்டிருந்தாள்.

"வேர யாரு உம்ம ஆத்தா தான் நாரக் கிழியா கிழிச்சிருக்கும் பூவு"என தன் கேள்விக்கு பதில் வந்த திசையில் திரும்பினாள் "பூவு" என அனைவராலும் அழைக்கப்பட்ட பூவழகி.

குரலுக்கு சொந்தக்காரரைக் கண்டவள் தான் ஆடிய நொண்டியையும்,கொஞ்சி...கெஞ்சி விளையாட அழைத்து வந்த பொடுசுகளையும் மறந்து "ஏ...சரசு"என முகம் மலர்ந்து கூவினாள்.

"டி..சரசு..எப்ப டி ஊருக்கு வந்த?" என்றவாரே சரசுவை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தாள் பூவழகி.

"இங்காறு பூவு...ஆட்டயப் பாதில நிறுத்திட்டுப் போனாக்க...நீ அவுட்டுதேன் டீ.ஒழுங்க இந்த ரவுண்ட முடிச்சிப்புட்டுப் போ.."என ராசு கத்த

"டேய்...பொடிப் பயலே...உன்னங்காட்டி 10 வயசு மூத்தவள...டி போட்டு பேசுற வாய்ல உன் ஆத்தாட்ட சொல்லி சுடு போட சொல்லிப்புடுறேன்...
மருவாதையா..எல்லாரும் வீட்டப் பாத்துப் போங்கடோய்.."என பூவைத் திட்டிய ராசை வருத்தெடுத்தாள் சரசு.

சரசு திட்டியதும்,அதற்கு பூவு நக்கலாய் சிரிக்க...அதில் கடுப்பான பொடிசுகள்..."இனிமேட்டு இந்த பூவ நம்ம ஆட்டைக்கு சேத்துக்கப்புடாது"என தங்களுக்குள் உடன்படிக்கை எடுத்துக் கொண்டு அவரவர் வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

சிறுவர்கள் கண்ணை விட்டு மறைந்ததும்...தன் கவனத்தை சரசுவை நோக்கி திருப்பிய பூவழகி" ஏ...புள்ள..நீயி தல தீவாழிக்குத்தேன் ஊருக்கு வாரனு பெரியம்மா சொல்லுச்சு...ஆனா ஒரு மாசம் முன்னையே வந்துப்புட்ட.."என தன் உற்ற தோழியும்,பெரியம்மா மகளுமான சரசுவிடம் கேட்க...

பூவழகியின் கேள்விக்கு கசந்த சிரிப்பையே பதிலாய் தந்த சுரசு கம்மாய் மணலில் அமர...

"என்னடி..நான் கேட்டதுக்கு பதிலச் சொல்லாம...ஒரு மாதிரி சிரிக்கிரவ..."என்ற பூவாழகியும் அவள் அருகில் அமர்ந்தாள்.

"வாழ்க்கைய வெறுத்த கதைய சொல்லவா...இல்ல...நான் வாழா வெட்டியா வந்த கதைய சொல்லவாப் பூவு"

"ஏ...என்ன சரசு செல்ற...நீ சந்தோசமா இல்லயாப் புள்ள"

"ஓ...பாதி நாளு வேலைக்குப் போகமாக் குடிச்சுப்புட்டு ரோட்ல கெடக்குறப் புருசன், உன்னக் கட்டிக்கிட்டதாலதேன் என் மவன் வாழ்க்கையேப் பாழாப் போச்சுதுனு திட்டிக் குமிக்கிற மாமியார், அண்ணே பொஞ்சாதி அம்மாக்கு சமம்னு நெனக்கமா என்னைய தப்பாப் பாக்குற கொழுந்தன்னு...
ரொம்ப.....சந்தோசமா இருக்கேன் பூவு.."

"என்னாத்தா சொல்லறவ..."என பூவழகி அதிர்ந்து விழிக்க...

"இப்ப என் சந்தோசத்தோட உச்சம் என்னத் தொரியுமா....கலியாணம் ஆகி 12 மாசம் ஆச்சு இன்னு உம்ம வயித்துல புழு,பூச்சி தங்கலனு என் மாமியா வீட்ட வீட்டுப் போனு தள்ளினதுதேன் டி..."

"ஐய்யயோ...உன் வீட்டுக்காரரு ஒன்னும் சொல்லலயா..."

"சொன்னாக...நீ இந்த வீட்ல என் பொண்டாட்டியா இருக்கனுனா உன் தங்கச்சி மீனாவ எனக்கு கட்டிவைனு..."என்ற சரசுவின் கண்கள் கண்ணீரைப் பொழிய...

"அடி ஆத்தி"

"அதேன் நீயு வேணா...உன் வூடும் வேணானு பெட்டியத் தூக்கிட்டு வந்துட்டேன்."என்ற சரசு பூவின் கைகளைப் புடித்துக் கொண்டு...

"நீ இன்னு விளையாட்டுப் புள்ளயாவே இருக்காதப் பூவு...நீயு நல்லாப் படிக்கிறவ...காலேசுக்குப் போயி ஒரு டிகிரிய வாங்கிப் புடு...சூதானம இருடி...என்ன மாதிரி யார நம்பியும் ஏமாந்துராதத்தா..."

"நான் வாரேன்டி...அம்மா தேடும்"என்ற சரசு கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி வீட்டை நோக்கி நடந்தாள்.

தொடரும்.
 

Gomathi Nandhini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாரம் இரண்டு நாட்கள் (திங்கள், வெள்ளி ) கதையை பதிவிடுவேன்.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள் நண்பர்களே!!😊
 

Gomathi Nandhini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அகிலமும் நீயே!!!

அத்தியாயம் 2:


தன் திருமண வாழ்க்கை 12 மாதத்தில் அஸ்தமித்ததாய் கண்ணீர் மல்க கூறிச் சென்ற சரசுவை எண்ணி வருந்திய பூவழகி மணலில் இருந்து எழுந்து வீட்டை அடைய நடைபோட்டாள்.

மங்கையற்கரசியின் ஒன்று விட்ட அக்கா மகளே சரஸ்வதி(சரசு).பூவழகியை விட ஒரு வயது மூத்தவள்.பனிரெண்டாம் வகுப்பு பப்ளிக் பரிட்சை எழுதியிருந்த சரசுக்கு அதன் ரிசல்ட் வருவதற்குள் மாப்பிள்ளை பார்க்கத்தொடங்கி இருந்தார் அவள் அப்பா.

இவர்கள் வசதிக்கேற்ப சிவகங்கை சீமையில் இருந்து மாப்பிள்ளை அமைந்து விட....குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.

"ஏடி சரசு...உன் ஆளு நல்லா கலரா...ஹீரோ கணக்கா இருக்காக டி...சிவகங்கைல பெரிய ஹோட்டல் மேனேஜரா இருக்காகலாம்ல டி...நீ ரொம்ப அதிஷ்டக்காரிதேன்..."
என சரசுவின் தோழிகள் கேலி செய்யததும்...தன் வெட்கச் சிவப்பை மறைக்க அரும்பாடு பட்டவளின் முகம் பூவழகியின் மணக்கண்ணில் தெரிந்தது.

சரசு கண்ட எல்லையில்லா வண்ணக் கனவுகள் அனைத்தும் சிதைந்து தூள் தூளாய் சிதறியதில் பிறந்தகம் திரும்பி விட்டிவளின் நிலை பூவின் மனதை பிசைந்தது.

மனமுழுக்க சரசுவின் நினைவுகளால் நிரம்பி இருக்க...பொடி நடையாய் வீட்டை அடைந்தவள்...நேரே சென்று ஹால் ஊஞ்சலில் அமர்ந்தாள்.

கதவு திறக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து ஊஞ்சலாடும் சத்தமும் கேட்டு சமயலறையில் இருந்து எட்டிப் பார்த்த மங்கை..."பசி எடுத்ததும் கழுதைக்கு வீட்டு வழி தெரிஞ்சுருச்சாக்கும்"என பூவு காலையில் கண்மாய்க்கு விளையாட போனதால் தனக்கிருந்த கோபத்தை வார்த்தைகளில் காட்டினார்.

"என்னடி...மூஞ்சியத் தூக்கி வச்சுருக்கவ...?.எங்கனையும் விழுந்து வாருனியா..."

தன் தாயின் கேள்விக்கு இல்லை என்பதாய் இடம் வலமாக தலையை ஆட்டினாள்.

"ஏடி கதவ மூடிட்டு உள்ளார வானு எத்தனதாட்டி சொல்றது...விரிய தொறந்துப் போட்டுட்டு வந்து ஜம்முனு உக்காந்துருக்கவ..."என்றவாரே
கதவை மூட வாயிலுக்கு நகர்ந்தவர்...
வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தி இறங்கியவர்களை கண்டு புன்னகை முகமாய்...

"வா பானுமதி...வாப்பா வரதா"என்க

"வரதா" என தாய் உதிர்த்த பெயரில் பூவழகியின் கால்கள் தன்னிச்சையாய் தரையில் பதிய..கைவிரல்கள் ஊஞ்சல் செயினை இறுக்கமாய் பற்றியது.

"பூவு...அய்த்தையும்,வரதனும் வந்துருக்காக குடிக்க தண்ணி எடுத்தாத்தா..."என்றவாரே தரையில் பாய் விரித்து வந்த இருவரையும் உட்காரவைத்தார்.

"வாங்க அய்த்த..."என வரவேற்றவள் இரண்டு டம்ளரில் தண்ணீர் எடுத்து வந்து இருவர் முன்பும் வைத்தாள்.

"எங்க அத்தாச்சி அண்ணனக் காணல...?"

"காலேல வெள்ளனவே எந்துச்சு சந்தைக்குப் போய்ட்டு வந்தாக...அதேன் அசதியா இருக்குனு படுத்துருக்காக....பூவு...அப்பார...
எழுப்புத்தா..."

"சரிம்மா"என அப்பாவின் அறை நோக்கிச் சென்றவளின் மனது முழுதும் பயமே நிரம்பி இருந்தது வரதனின் வருகையால் .

என்னதான் தந்தையின் ஒரே சகோதரியின் மகனாயினும் வரதனை பார்ப்பதையோ, அவனிடம் பேசுவதையோ பூவழகி விரும்பியதில்லை.இதற்கு காரணமும் சரசுதான்.

" இங்க பாருடி பூவு...ஒரு நாள் உம்ம அய்த்த மவன் வரதன் என்கிட்ட செருப்படி வாங்கத்தேன் போறான்.எனக்கு அய்த்தப் பசங்கனு யாரும் இல்லனுட்டு நானு சமஞ்சப்போ குடிச கட்டுனான்.அன்னிக்கு இருந்து நானு பாக்கேன் அவன் பார்வையே சரியில்ல.கண்ணு முழியப் புடுங்கிப்புடனும்.எடு பட்ட பய...இந்தாறு பூவு நீ அவன்ட்டப் பேச்சு வச்சுக்காத..."

என்ற சரசுவின் அறிவுரைகள் பயந்த சுபாவம் கொண்ட பெண்ணவளை வரதனிடம் இருந்து தள்ளி நிறுத்தியது.

தந்தையை எழுப்பி ஹாலுக்கு அழைத்து வந்தவள்...அவர் பாயில் அமரவும் தன்னறைக்கு செல்லத் திரும்ப..."ஏத்தா பூவு எங்க போரவ...வா..அய்த்தப் பக்கத்துல உக்காரு...நான் முக்கியமான விசயம் பேசத்தேன் வந்தேன்..."என்ற பானுமதியின் குரலில் தந்தைக்கும்,அத்தைக்கும் நடுவில் அமர்ந்தாள்.

"விசயத்த சொல்லு பானு"

"அது ஒன்னுமில்லனே நம்ம பூவு பன்னென்டாவது முடிச்சுருச்சு...அதேன் வரதனுக்கு கட்டித் தானுட்டு கேக்க வந்தேன். உனக்கு தெரியாதது இல்ல.உன் மருமவன் மேலச்சிவபுரி காலேசுல க்ளர்க்கா இருக்கான்.நல்ல சம்பளம்.அவேன் அப்பாரு குடிச்சு குடிச்சு கண்ணு முன்னயே செத்ததப் பாத்ததால தண்ணி அடிக்கிறப்பழக்கமே இவனுக்குக் கிடையாது. "

"இப்பதேன் பூவுக்கு பதினெட்டாகுது...இன்னு ஒரு மூணு வருசம் போட்டுமே பானு"

"அதுக்குள்ள வரதனுக்கு வயசு ஏறிடுமேன்னே..."

"நல்லாப் படிக்கிறப் புள்ள....காலேசு போகனுனு விரும்புதுத்தா.."

"அதுக்கென்னனே கட்டிக்கிட்டு படிக்கட்டும்.இவன் வேலப் பாக்குத காலேசுலயே சீட்டு வாங்கிப்புடுவோம்..."

"அது....பானு..."என இரத்தினவேல் இழுக்க

"என்ன அத்தாச்சி நானும், அண்ணனுமே பேசிக்கிட்டு இருக்கோம்..நீங்க எதுவும் சொல்ல மாட்டிறீக..."என மங்கையிடம் கேட்டார் பானு.

தன் அண்ணன் மகன் பாண்டிக்கு பூவழகியைக் கட்டி வைக்க விரும்பினார் மங்கை.B.A Agri முடித்தவன் வயலில் விளைச்சலை கவனித்து கொள்கிறான்.

அதில் வரும் வருமானம் பாண்டி குடும்பத்தினரின் சாப்பாட்டுக்கே போதியதாய் இல்லா நிலையில் பூவை அவ்வீட்டு மருமகளாக்க தன் கணவன் ஒத்துக் கொள்ள மாட்டார்.

மேலும் பாண்டியையும்,வரதனையும் தன் மனதுள் ஒப்பிட்டால்...வரதன், வயல் ,நிலத்தை விற்று மேலைச்சிவபுரியிலேயே பெரிய மச்சுவீடு கட்டியுள்ளான்.நல்ல சம்பளம் அதனால் வசதிக்கு குறையில்லை. அதுமட்டுமன்றி பானுவுக்கு பூவென்றால் பிடித்தம். மருமகளென ஒதுக்காமல் மகளாய் பார்த்துக் கொள்வாள்.


அதனால் வரதுனுக்கே மகளை கட்டிவைத்தால் மகிழ்ச்சியாய் இருப்பாள் என தன் மனதின் பதிலில் "நான் சொல்ல என்ன இருக்கு பானு...என் மவ சந்தோசமா இருந்தா போதும்.அவ அப்பாரு எடுக்குதுதான் முடிவு பானு."

"என்ன அத்தாச்சி இப்புடி சொல்லிப்புட்டீக...என் மருமவள நான் தலைல வச்சு தாங்கிபுட மாட்டேன்.."என்ற பானு பூவின் கண்ணத்தை தடவி திருஷ்டி கழித்தார்.

"பானு நீ கேட்டதப் பத்தி கொஞ்சம் யோசிப்புட்டு சொல்றேன்த்தா...மங்கா சோத்தாப் போடு தா...புள்ள பசியோடு இருக்கும்...நானும் கடைக்கு போகனு லோடு வந்துருக்கும்."

"சரின்னே நல்லா யோசிச்சுப்புட்டு...நல்ல வார்த்தையா சொல்லுன்னே"

மங்கை சாப்பாட்டு பாத்திரங்களை எடுத்து வந்து, நால்வருக்கும் தட்டில் பரிமாறினார்.தன் மகளுக்கு பிசைந்து உருண்டை பிடித்து, ஊட்டிக் கொண்டே தானும் உண்டார் இரத்தினவேல்.

"மாமா...நானே உங்கள கடேல்ல எறக்கிவிடுதேன்...வாங்க"

"சரி வரதா...என்னைய இறக்கி விட்டுட்டு வந்து பானுவக் கூட்டிகிட்டு மேலச்சுவரி(மேலைச்சிவபுரி) போய்கிடுதியா"

"இல்ல மாமா..ஒரு சோலியா நான் பொன்னராதி(பொன்னமராவதி)
போறேன்.அம்மா,வீட்டுக்கு பஸ்லப் போயிரும்"

இருவரும் மங்கையிடமும்,பானுவிடமும் விடைபெற்று வண்டியில் ஏறினர்.

கருப்பு யமஹாவை இரத்தினவேலின் "பூவழகி மளிகை கடைக்கு"விரட்டியவன், வண்டியின் கண்ணாடி வழி தன் மாமனின் முகத்தைப் பார்த்து

"ஏன் மாமா...பூவ எனக்குக் கட்டத்தற உமக்கு விருப்பமில்லையா?"என்க

"அப்புடிலாம் இல்ல வரதா...அவளுக்கு வயசுதான் ஏறிருக்கேத் தவிர வயசுக்கேத்தப் பக்குவம் வரலய்யா.எங்க கைக்குள்ளேயே வளந்தப் புள்ள...வெளுத்ததெல்லாம் பால்லுனு நம்புர மனசு பூவுக்கு.."

"நீங்க இம்புட்டு விசனப்படுதீகளேனு நான் ஒரு உண்மையச் சொல்லுதேன்.பூவப் பொண்ணுக் கேக்கச் சொல்லி அம்மாவக் கூட்டியாந்தது நான்தேன்.எனக்கு.... பூவக் கட்டிக்கிட ஆச மாமா.நீரு பயப்படாம இரும்...அவள ராச்சாத்தியாப் பாத்துக்கிடுதேன்."

வரதனின் வார்த்தைகளில் பூவழகியின் மேல் அவனுக்கிருந்த விருப்பத்தை அறிந்து தனக்குள் புன்கைத்தவர்.

தன் மகள் மேல் இத்தனைப் பிரியம் உள்ளவன் அவளை கண் கலங்க விடமாட்டான் என நம்பியவர் "சரிய்யா..ஜோசியர் கிட்ட கேட்டுப்புட்டு நல்ல நாளாப் பாத்து பரிசம் போட்டுக்குவோம்"என்க

"சரி மாமா..நீங்க சொன்னது மாதிரி செஞ்சுக்குவோம் "என்றான்.

மாமனை கடையில் இறக்கி விட்டவன்,பொன்னமராவதி ரோட்டில் யமஹாவை பறக்க விட்டான்.

வரதன்,பூவழகி திருமணத்திற்கு இரத்தினவேல் சம்மதம் சொன்னதும் வரதனின் மனம் ஆனந்தத்தில் துள்ளியது.இது அவனது 5 வருட கனவல்லவா!!

பூவழகியைப் புடவையில் கண்ட நாள் அன்றே அவள் அழகு இவன் மனதில் ஒட்டிக்கொண்டு இம்சிக்க ,பூவை அடையும் வழித் தேடலில் மூழ்கினான் வரதன்.

பொன்னமராவதியை அடைந்தவன் மலையாண்டி கோவில் தெருவில் வண்டியை நிறுத்திவிட்டு.அத்தெரு முடிவில் இருந்த சிறு ஓட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

"வாய்யா மாப்பு..என்ன வாயெல்லாம் பல்லா வார.."என அவ்வீட்டினுள் இருந்த வரதனின் வயதொத்தவன் கேட்க

"என் மாமேன் அவரு மகள எனக்குக் கட்டித்தற சம்மதிச்சுட்டாக..."
என்றவாரே அவ்வரையில் இருந்த மர அலமாரியில் அடிக்கி வைக்கப்பட்டிருந்த சரக்கு பாட்டிலை எடுத்து அருந்தத் தொடங்கினான்.

"அட்ரா சக்க...எப்புடியோ ஊருக்குள்ள நல்லவன் வேசம் போட்டு உம்ம மாமன ஏமாத்தி அந்த பூவக் கட்டிக்கிட போர...சூப்பர் மாப்ள"என்றான் அவ்வரையில் இருந்த இன்னொருவன்.

"ஆமாடா...இந்த பூவ அவ சடங்குல பாத்த அன்னைக்கு இருந்தே என் தூக்கம் போச்சுது.அவள அடைய காதல்னு நம்பவைக்க நெனச்சா...அந்த சரசு சனியன் பூவ என்கிட்ட நெருங்க விடல."

"அதேன் ஸ்ரெய்ட்டா கலியாணத்துக்கு பிளனப் போட்டு, என் மாமன ஏமாத்த என்னோட ரவுசல்லாம் ஊருக்குள்ள காட்டாம...இந்த ஓட்டு வீட்டோட வச்சுக்கிட்டேன்.'"

"அதுக்கு இன்னிக்கு பலனும் கிடைச்சிடுச்சு."என வெற்றி சிரிப்பை இதழில் தவழவிட்டான்.

மது புட்டியை மொத்தமாய் வாயில் சரித்துக் கொண்ட வரதனின் கண்களில் போதையைத் தாண்டி பூவழகியை அடையப்போகும் வெறியே நிறைந்திருந்தது .

வரதனின் தீயப் பழகங்களின் பட்டியல்
சிகரெட்டில் தொடங்கி ,பெண்களை காதல் வலையில் வீழவைத்து நாசம் செய்வது வரை என அவன் தாயும்,தாய் மாமனும் அறிந்திருக்கவில்லை.
________________________________

அத்தை பானுமதி சாப்பிட்டு கிளம்பியதும்,தனதறையில் தஞ்சம் புகுந்த பூவழகியின் மனமோ ஒரு நிலையின்றி தவித்தது.

தன் திருமண வாழ்க்கையையும்,
புகுந்த வீட்டினரையும் பற்றி சரசு கூறியவைகளே அவளின் மண்டைக்குள் ஓடியது.மேலும் தான் கண்களால் காண்பதயே தவிர்த்த ஒருவனுக்கே மனைவியாகும் நிலை வந்ததை எண்ணி நொந்தாள்.

வரதனையும்,திருமணத்தையும் எவ்வாறு எதிர்கொள்ளவது என அஞ்யவள்,இத்திருமணம் வேண்டாம் என தந்தையிடம் கூற சிலகாரணங்களை திரட்டிக்கொண்டு அவர் வரவை எதிர்நோக்கி முற்றத்தில் காத்திருந்தாள்.

பேதையவளின் வாழ்க்கை பாதையை மாற்றப்போகும் வில்லனான விதியை வெல்லும் வழி உண்டோ!!!


தொடரும்.
 

Gomathi Nandhini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அகிலமும் நீயே!!!

அத்தியாயம் 3:

3 வருடங்களுக்குப் பிறகு...


வானில் நட்சத்திரக் கூட்டம் மின்னி விளையாட,அவற்றை மகிழ்வுடன் கண்டு கழித்தான் இரவோன்.

கண்ணைச் சுழட்டி அவள் காணும் திசையாவும் ராட்சச மரங்களாய் இருக்க...ஆந்தையின் அலறலும்,
இலைகள் ஒன்றோடொன்று உரசும் சத்தமும் இதயத்தை நடுங்கச் செய்ய..
தன் விதியை நொந்தவாரே கண்ணீருடன் அம்மரவீட்டில் அமர்ந்திருந்தாள்.

கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்த பெண்ணவளின் அருகில் காலடியோசை கேட்டது.
அதில் கலைந்து நிமிர்ந்தவள் தன்னருகே தள்ளாட்டத்துடன்
நின்ற கணேஷைக் கண்டு
பயத்துடன் எழுந்து நின்றாள்.

இவளை நோக்கி நடந்து வந்தவனின் பார்வை அவள் மேனியில் ஊர்ந்தது.
அவனது ஆளை விழுங்கும் பார்வையில்...பயமும்,அருவருப்புமாய் பின்னே நகர்ந்தவளின் தோளை எட்டிப் பிடித்தான் கணேஷ்.

அவன் கையைப் பட்டென்று தட்டி விட்டவள்,அவனது கால்களில் விழுந்து"அண்ணே...நான் அந்த மாதிரி பொண்ணில்ல...என்னைய விட்டுடுங்க..."என கதர

கோபம் கொண்ட கணேஷ்..."வுடவா பத்தாயிரம் செலவு பண்ணி உன்னிய இழுத்தாந்துருக்கேன்"என்றவன் அவளை எழுப்பி அணைக்க முயன்றான்.

தன் பலம் முழுதையும் திரட்டி அவனை தள்ள...அதில் வெறி ஏற அவளது இரு கண்ணங்களிலும் மாறி மாறி அறைந்தான்.

இறும்பு கைகளின் தாக்குதலை தாள முடியாமல் துவண்டவளின் சேலையை அந்த மனித மிருகம் பற்ற ...அதேநேரம் சீறிவந்த தோட்டா ஒன்று மரச்சுவரை துளைத்த சத்தத்தில் இருவரும் அதிர்ந்து வாயிலை நோக்கினர்.

தன் ஒரு கையில் துப்பாக்கியுடன்,தலையில் மாட்டியிருந்த ஹெட் டார்ச் லைட் வெளிச்சத்தில்...இவர்களை கூர்மையான பார்வையால் அளந்தவாறே,ஆஜானுபாகுவாய் நின்றிருந்தான் சென்னை ACP மித்ரசிம்மன்.

இருட்டிற்கு பழகியிருந்த கண்கள் வெளிச்சத்தைப் பார்த்ததும் கூச...அதை சிமிட்டி சரிசெய்து புதியவனை அடையாளம் கண்டுகொண்ட கணேஷின் மனதுள் சிறு பயம் தோன்றினாலும் அதை மறைத்து தன் இதழ்களை ஏளனமாக வளைத்தவன்...

"வாய்யா போலீஸூ...
ஊருக்குள்ள எவன் குத்திட்டு பூட்டாலு...நீ என்னையவே தேடிக்கிட்டு வூட்டான்ட வாரியேனு தான்..குஜால்சா இருக்கலானு எடத்த மாத்திக்கினு இந்தக் காட்டுக்கு வந்தேன்.
இங்கனையும் வந்துட்டியேய்யா..."
என்க

"நீ குஜால்சா இருக்க யார் தொந்தரவும் இல்லாத இடத்துக்கு நான் உன்னைய அனுப்பவா?"என நக்கலாக கேட்டான் மித்ரசிம்மன்.

அவன் தன்னை அனுப்ப விரும்பும் இடமாக ஜெயிலை தான் குறிப்பிட்டான் என்பதை புரிந்து கொண்ட கணேஷ்...

"இன்னிக்கு காலேல பார்க்காண்ட செத்துக் கெடந்த ரவிக்குமார் சாவுக்கு என்னைய சந்தேகபட்டு அரெஸ்ட் பண்ண வந்துக்குனியா?"

"ச...ச...ச...கன்பார்மா நீ தான் கொலைப் பண்ணனு தெரிஞ்சு தான் உன்னைய அள்ளிட்டுப் போக வந்துருக்கேன்."

"அதுக்கு இன்னா ஆதாரம்"
என்றவனின் குரல் சிறுது நடுக்கம் கண்டது.

"பாருடா...லோக்கல் ரவுடிக்கு சட்டம் தெரிஞ்சுருக்கே....ஆமா அது தெரிஞ்சது நால தான நீயே ஆதாரமா உன்னோட செல்போனை கொலை நடந்த ஸ்பாட்லயே விட்டுட்டு வந்துருக்க..."

என்ற மித்ரன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து பிளாஸ்டிக் கவரை எடுத்துக் காட்ட...அதனுள்ளே இருந்த கணேஷின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் அவனைப்பார்த்து சிரித்தது.

"இது...இது...என் போ...போன்" என கணேஷ் திணர

"இருங்க...இருங்க ரௌடி சார்.இது உங்க போன் இல்லனு சொல்லப் போறிங்கதான...இந்த போன் மட்டும் இல்ல மெர்டர் நடந்த பார்க்ல இருந்த சிசிடிவில உங்க அழகு முகம் பதிஞ்சிருக்கு.இந்த ஆதாரம் போதாதா உன்னைய அனுப்பிவைக்க.."

"சிசிடிவியா..."என அதிர்ந்த கணேஷ் அதை கவனிக்க மறந்து கொலை செய்த தன் மடைமையை எண்ணி மானசிகமாய் தன்னை அறைந்தவன்.

தான் ஜெயிலுக்கு போனாலும் பெயிலில் எடுக்க வெளியே ஆட்கள் உள்ளனர் என்பதில் சிறு நிம்மதி பரவ..."இந்த தபா..ஏதோ மிஸ்டேக் ஆகிருச்சு...அடுத்த ஸ்கெட்ச் மிஸ்ஸாகாம போட்றலாம்..."என கேலியாக மொழிந்தான்.

"அதுக்கு நீ உயிரோட இருந்தா தானடா நாயே...நான் உன்னைய அனுப்பப் போரது ஜெயிலுக்கு இல்லடா நரகத்துக்கு என சிம்மக் குரலில் கர்ஜித்த மித்ரசிம்மன் கண் இமைக்கும் நொடியில் துப்பாக்கியின் விசையை அழுத்த அதில் இருந்து வெளியான குண்டு கணேஷின் இதயத்தை துளைத்து அவனை மூர்சை ஆக்கியது.

அத்துனை நேரம் புதியவனுடனான கணேஷ்ஷின் சம்பாஷனையைக் கேட்டு... வந்தவன் போலீஸ் என அறிந்து தன்னை காப்பாறிடுவான் என மகிழ்ந்தவள் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

இறுதியில் கணேஷ் குண்டடிப்பட்டு விழுந்ததும் "ஐய்யோ.."என அலர...போலீஸ்காரன் பார்த்த பார்வையில் தன் இருக் கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டாள்.

தன் போனை எடுத்து யாருக்கோ அழைத்து பேசியவன் இவளை நோக்கி "வா"என அழைத்தவாரே மரப்படிகளில் இறங்கினான்.

அவளும் இவன் பின்னே செல்ல...அவ்வனத்தை விட்டு வெளியேறி ரோட்டில் நின்றிருந்த மித்ரசிம்மனின் போலீஸ் வாகனத்தின் அருகில் நின்றனர் இருவரும்.

"உன் பேர் என்ன?" என்ற மித்ரசிம்மனின் கேள்வியில் அவனை நிமிர்ந்து அவள் பார்க்க...

"ஹூம்...உன்ன தான் கேக்றேன்...பேர் என்ன?" என அதட்ட

"பூ...பூவழகி"என்றாள் திக்கித்திணறி...

அவளிடம் அடுத்த கேள்வியை கேட்க மித்ரசிம்மன் வாய் திறக்க...ஆம்புலன்ஸ் அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தது. அதையடுத்து டிவிஎஸ் எக்சலில் வந்திருங்கிய இரண்டு நபர்கள் மித்ரனின் முன் சல்யூட் அடித்தனர்.

அதை ஒரு தலை அசைப்புடன் ஏற்றுக் கொண்டவன்."பாபு ,பாடிய எடுத்துட்டு போய் புரசீஜர்ஸ் கம்ப்லீட் பண்ணீடு."என மித்ரசிம்மன் கூறிக் கொண்டிருக்கையில் ஆம்புலன்ஸ்ஸில் இருந்து கையில் ஒரு வயது குழந்தையுடன் இறங்கிய நர்ஸ் இவர்களை நோக்கி வந்தாள்.

நர்ஸிடம் இருந்து குழந்தையை வாங்கிய மற்றொரு போலீஸ்காரர் சந்தானம்,
"சார்.கணேஷத் தேட எல்லா விபாச்சார விடுதிக்கும் ரெய்ட் போனப்போ...ஒரு விடுதில இந்தக் குழந்த இருட்டு அறைல மயங்கி கிடந்துச்சு.டாக்டர்ட கூட்டிட்டு போய் ட்ரீட்மெண்ட் பாத்தாச்சு."என்றார்.

விபச்சார விடுதி, குழந்தை என்ற வார்த்தைகளில் விலுக்கென நிமிர்ந்த பூவழகி..அக்குழந்தையின் ஆடையைக் கண்டதும்...தேம்பியவாரே..."ஆரா...
ஆராதனா..."என அழைத்துக் கொண்டே சந்தானத்தின் கையிலிருந்தவளை இழுக்க.

சந்தானம் குழந்தையை தர மறுக்க..."அண்ணே என் கொழந்தண்ணே...என்டத் தாங்க..."என ஆராதனாவின் கையை பற்ற

டாக்டர் கொடுத்த மருந்தின் வீரியத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தன்னை யாரோ இழுத்ததில் அழத் தொடங்க.

"ஆராமா...அம்மாட்ட வாடி ராசாத்தி"என்ற பூவழகியின் குரலில் தன் தாயை அடையாளம் கண்டு கொண்ட சிசு"அம்மா"என மழழையில் அழைத்தவாரே பூவழகியிடம் தாவ...ஆராதனாவை அள்ளி அணைத்தவள் சரமாறியாய் அவளின் கண்ணங்களில் முத்தமிட்டாள்.

"இந்த குழந்தை இருந்த விபாச்சார விடுதில இருந்து தான் ஒரு பொண்ண பத்தாயிரம் குடுத்து கணேஷ்
கூட்டிட்டு வந்துருக்கான் சார் "
என்றார் சந்தானம்.

"ஹூம்..அவன் கூட்டிட்டு வந்தது இந்த பூவழகியதான்.அப்போ குழந்தையும் இவளோடதா இருக்க வாய்ப்பிருக்கு.இதப்பத்தி நான் விசாரிச்சுக்குறேன்."

"மணி பத்தாச்சு நீங்க கணேஷ் பாடிய ஆம்புலன்ஸ்ல ஜிஹெசுக்கு எடுத்துட்டு போங்க.நாளைக்கு காலேல 8 மணிக்கு கமிஷ்னர் ஆபீஸ் வந்துடுங்க."என்க

"எஸ் சார்"என்ற பாபுவும்,சந்தானமும் மரவீட்டை நோக்கி நகர...

பூவழகியையும், ஆராதனாவையும் தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி பறந்தான் மித்ரசிம்மன்.

தொடரும்.
 

Gomathi Nandhini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அகிலமும் நீயே!!!

அத்தியாயம் 4:


சென்னை பைபாசில் சீறிப் பாய்ந்த போலீஸ் வாகனத்தின் உள்ளே நிலவிய அமைதியைக் கலைத்தான் மித்ரசிம்மன்.

"உன்னோடப் பேரு பூவழகினு சொன்ன....உன் ஊரு எது?நீ எப்டி கணேஷ் கிட்ட மாட்டுன? கொழந்த எப்டி அந்த விடுதிக்குப் போனா?"என லாவகமாய் ஸ்டியரிங்கை வளைத்துக்கொண்டே சரமாறியாக கேள்விகளைத் தொடுக்க

தன் மடியில் இருந்த மகளைத் தட்டிக் கொடுத்தவாரே மித்ரசிம்மனின் அருகில் அமர்ந்திருந்தாள் பூவழகி.

தன் கேள்விக்கு பதில் வராததால் சிறிது சினம் எழ..."சென்னைப் போரதுக்குள்ள நான் கேக்கறதுக்கு பதில் சொல்லிட்டா உன்ன விட்டுடுவேன்.இல்லனா ஜெயில்ல வச்சு என் ஸ்டைல்ல உண்மைகள வாங்க வேண்டியதா இருக்கும்"என மிரட்ட

அப்படியும் அவள் தன் மௌனத்தை கலைக்காமல் இருக்கவே அவன் கோபம் எல்லையைக் கடந்தது.

"ஏய் என்ன திமிரா ?கேட்டுட்டே இருக்கேன் பதில் சொல்ல மாட்டியோ...அதுசரி தப்பான தொழில் பண்றவ தான அதோட குழந்தைகள கடத்தறதும் ஸைட் பிஸ்னசா பண்றியோ...அப்போ மெய்ன் பிஸ்னஸ் வி......."

"போதும் சார் போதும்....வாய் இருக்குனு எதுனாச்சும் பேசாதீக.
இவள நான் கடத்தலாம் இல்ல இது என் கொழந்த..."என கத்திய பூவழகி.

"நான் ஒரு வீட்ல வேல செஞ்சுகிட்டு இருந்தேன்.அந்த வீட்ல பெரியவர் மட்டும் தான்.அவர் பொஞ்சாதி இறந்துட்டாக.மகேன் வெளிநாட்டுல இருக்காக.அவரு வீட்டுக்குப் பக்கத்து காம்பவுண்ட்லதேன் நானு வாடகைக்கு இருந்தேன்."

"இன்னிக்கு காலேல நான் என் மகேன் வீட்டுக்கு போகுதேன்.அதனால உன்னைய வேற ஒரு நல்ல எடத்துல வேலைக்கு சேத்து வுடுதேன்னுக் கூட்டிட்டு போய்யு அந்த விடுதி வச்சிருந்த பொம்பளேட்ட என்னைய வித்துட்டாரு"

"அவரு போனப்பறம்தேன் எனக்கு அது என்ன மாதிரி இடம்னு தெரிஞ்சுது.
அவுக சொன்னதக் கேக்க மாட்டேன்னு அழுதப்போ என் புள்ளைய கொன்னுறுவேன்னு மிரட்டி கணேசுக் கூட என்னைய அனுப்பிட்டாக..."


"நான் தப்பானவ இல்ல....நான் அந்த மாதிரி பொண்ணில்ல..."என கதறியவளை தேற்றும் வழியறியாது... அவள் கூறியவைகளில் கண்கள் சிவக்க அமர்ந்திருந்தான் மித்ரசிம்மன்.

அவள் அழுது முடித்துத் தேம்ப ஆரம்பித்ததும் தண்ணீர் போத்தலை அவளிடம் நீட்டியவன்"உனக்குனு யாரும் இல்லையா.."என வினவ

அதை வாங்கி பருகியவள்
"இதோ இருக்காளே என் குலசாமி..
என் பொண்ணு...ஆராதனா..
இவ தான் எனக்கு அம்மா,அப்பா, சொந்தம்,பந்தம் எல்லாம் என கண்ணங்களில் கண்ணீர் வழிய மடியில் கிடந்த மகளை இருக்கி அணைத்தாள்.

அதில் குழந்தை அழ ஆரம்பிக்க...
"ஹேய் பூவழகி பாப்பாவ இருக்காத
அவ அழறாப் பாரு...எமோஷனல் ஆகாத..."என மித்ரசிம்மன் பதறினான்.

"ஆராக்குப் பசிக்குது சார்.அதுதேன் அழுகுறா.."

"இன்னேரத்துல எந்த ஹோட்டலும் இருக்காதே.."என அவன் யோசிக்க

அதைக்கண்டு தன் இதழை சிறிது வளைத்து புன்னகைத்தவள்"பாப்பா ஹோட்டல்லலாம் சாப்பிட மாட்டா.."
என்றவள் தலையைக் குனிந்து கொள்ள...

அவளது புன்னகையில் அவள் கூறவருவது புரிய...காரை
ஓரமாய் நிறுத்தி,விண்டோவை
ஏற்றி விட்டு,கீழிறங்கி நின்றான்.

தன் வாயால் கூறாமலே பாப்பாவிற்குப் பசியாற்ற தனிமைத்தந்து இறங்கிச் சென்றவனின் கண்ணியம்
அவள் மனதை நிறைத்தது.

பூவழகிக்கு சென்னையில் தான் கண்ட ஆண்களினின்று தனித்துவமாய் தெறிந்தான் மித்ரசிம்மன்.


காரில் இருந்து கீழ் இறங்கியவன் செல்போனை எடுத்து "சுசிலா ஜெயகாந்தன்" என சேவ்
செய்திருந்த எண்ணிற்கு
அழைத்து பேசியவன் பூவழகி கூறியவற்றை அசைப்போட்டான்.

அவள் ஏமாந்ததிற்கு காரணம் பூவழகி வேலை செய்த வீட்டின் பெரியவர் அன்று அவரை இவள் நம்பியதே என தோன்றியது மித்ரசிம்மனுக்கு.

கார் விண்டோ தட்டும் சத்தத்தில் கதவைத் திறந்து உள்ளே ஏறி
காரைக் கிளப்பினான்.

சென்னை நெடுஞ்சாலையில் இருந்து ஆவடி கிளைச்சாலையில் நுழைந்த கார் மூன்று அடுக்குக் கட்டிடத்தின் முன் நின்றது.

கண்ணாடி வழியே அக்கட்டிடத்தை கண்டு மிரண்டவள் அதன் வாயிலில் இருந்த போர்டைக் காண "சாருமதி காப்பகம் "என அச்சிட்டிருந்தது.

மித்ரசிம்மன் இறங்க மறுபக்கம் ஆராதனாவைத் தூக்கிக் கொண்டு இறங்கினாள் பூவழகி.

"இது என்ன இடம்"என அவள் மிரட்சியாய் வினவ

"இங்க பெற்றவர்களால தூக்கி எறியப்பட்ட குழந்தைகள்,
பிள்ளைகளால கைவிடப்பட்ட பெரியவர்கள்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்னு நிறைய பேரு இருக்காங்க.நீயும் இவுங்கள்ள ஒருத்தியா இங்க இருக்கப் போற"
என மித்ரசிம்மன் கூறிக் கொண்டிருக்க

50 வயது மதிக்கத்தக்க பெண்மணியும், 20 வயதுடைய இளம்பெண்ணும் இவர்களை நோக்கி வந்தனர்.

"ஹாய் மித்ராண்ணா...எப்டி இருக்கிங்க.."என இயல்பாய் வினவினாள் இளம்பெண்.

"நல்லா இருக்கேன்டா மீனா...நீ எப்டி இருக்க.."

"சுசிமா இருக்கப்போ எனக்கென்ன கவலை நானும் செம்மயா
இருக்கேன்" என்ற மீனாவின் தலையில் வலிக்காமல் குட்டினாள்
அந்த பெண்மணி சுசிலா ஜெயகாந்தன்.

"சரியான வாலுப் பொண்ணு"என மீனாவைக் குறிப்பிட்ட சுசிலா "இது தான் நீ சொன்ன பூவழகியா மித்ரா.."எனக் கேட்டார்.

"ஆமா ஆண்ட்டி"

"உங்கப் பேரு போலயே நீங்களும் ரொம்ப அழகா இருக்கிங்க பூவு...நான் இனி உங்கள பூவுனு தான் கூப்பிடப்போறேன். "என்ற மீனாவின் பேச்சிலும்,அவள் தன்னை அழைத்த "பூவு"என்ற அழைப்பிலும் பூவழகிக்கு சரசுவை நினைவுப்படுத்தியது.

சரசுவின் நியாபகங்கள் மனதுள் எழ கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது அவளுக்கு.இமையைச் சிமிட்டி
கண்ணீரை உள்ளிழுத்தவள் "தாரளமா பூவுன்னேக் கூப்புடு"என்றாள்.

மீனாவின் "பூவு" என்ற அழைப்பில் பூவழகியின் முகமாற்றத்தை அவதானித்த மித்ரன்...
"மீனா,இவ இனி உன்கூட தான் இருக்கப் போறா..நீ பேச வேண்டியதலாம் மெதுவாப் பேசிக்கோமா"என்றான்.

"பூவழகி,இவங்க மிஸ்ஸஸ் சுசிலா ஜெயகாந்தன்.இந்த காப்பகத்தோட பொறுப்பாளர்.இது மீனா.மூணு வயசுல இருந்து இங்க தான் வளர்ரா...இப்ப B.E civil final year படிக்கிறா...நல்ல வாயாடி."என மித்ரன் அவர்கள் இருவரையும் பூவழகிக்கு அறிமுகம் செய்துவைத்தான்.

"பாத்துக்கோங்க ஆண்ட்டி.நான் கிளம்புறேன்"என மூவருக்கும் பொதுவாய் ஒரு தலையசைப்புடன் விடைப்பெற்றான்.

அவனின் கார் தன் கண்ணை
விட்டு மறைந்ததும் மீனா,
சுசீலாவைப் பின்தொடர்ந்து
சாருமதி காப்பகத்திற்குள்
காலடி எடுத்துவைத்தாள்
பூவழகி.

__________________________________

சென்னை கமிஷனர் அலுவலம் காலை நேர பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.

உடம்பை இருக்கிப் பிடித்திருந்த
காக்கி உடை,முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற மினுமினுப்பான பழுப்பு நிற ஷூ சகிதம் அவ்வளாகத்தினுள் நுழைந்தான் மித்ரசிம்மன்.

தன் வலது கைக்காப்பை முறிக்கவிட்டவன் கமிஷனர் அறைக்கதவைத் தட்ட...
"Yes come in"என கேட்ட குரலில் கதவைத்தள்ளி உள் நுழைந்து
விரைப்பாய் சல்யூட் வைத்தான்.

"உக்காருங்க மித்ரசிம்மன்..."என கமிஷனர் விஜயேந்தர் பணித்தார்.

"thank u sir...நேத்து காலேல விஜயநகர் ஸ்டீர்ட் பார்க்ல நடந்த பிஸ்னஸ்மேன் ராம்குமார் மெர்டர் பத்தின ரிபோர்ட் சார்"

"சொல்லுங்க மித்ரசிம்மன்..."

"சார்,ராம்குமார் டெத் ஸ்பாட்ல இந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இருந்தது."என பிளாஸ்டிக் கவரில் இருந்த செல்போனைக் காட்டினான்.

"இதுல இருக்க சிம் லோக்கல் ரவுடி கணேஷ் பேர்ல ரிஜிஸ்டர் ஆகிருக்கு சார்.அவனும் நேத்து காலேல விஜயநகர் பார்க்குக்கு வந்திருக்கான்.
அத அங்க இருக்க சிசிடிவி புட்டேஜ்ல செக் பண்ணிட்டோம்."

"ஒகே...லோக்கல் ரவுடி கணேஷ்ஷோட செல்போன்,கணேஷ் பார்க் வந்ததற்கான புட்டேஜ்.இது மட்டும் வச்சு ராம்குமார மெர்டர் பண்ணது அவன் தான்னு சொல்றிங்க.ஆனா எந்த கொலகாரன் சிசிடிவி இருக்கப் பிளேஸ்ல முகம் தெரியுர மாதிரி வந்து கொலப் பண்ணுவான் மித்ரன்."

"U are right sir...எந்த மெர்டரரும் சிசிடிவி இருக்கப் ப்ளேஸல கொலப் பண்ண மாட்டாங்க."

"மிஸ்டர் ராம்குமார் தினமும் காலேல 6 மணிக்கு அவரு ஏரியாப் பார்க்ல தான் வாக்கிங் போவாரு.அது Newly constructed நால இன்னும் சிசிடிவி பிக்ஸ் பண்ணல.இது அவர் மனைவியோட ஸ்டேட்மெண்ட் சார்"

"கணேஷூம் அங்க வச்சு
அவரக் கொல்ல தான் ப்ளான் பண்ணீருக்கான்.ஆனா நேத்துக் காலேல ராம்குமார் அவரு தெருல இருக்கப் பார்க்குக்குப் போகாம விஜயநகர் ஸ்டீர்ட் பார்க்குக்கு போய்ட்டார்."

"அவரப் பாலேப் பண்ண
கணேஷூம் அந்த பார்க்ல சிசிடிவிய கவனிக்காம வேறயாரும் வர முன்ன ராம்குமாரக் கத்தியாலக் குத்திட்டான்.
அவன் வெளிய போற நேரம் பேண்ட் பாக்கெட்ல இருந்த செல்போன்
தவறி விழுந்துருக்கு சார்."

"மெர்டர் நடக்க 5 நிமிஷம் முன்ன ராம்குமாரும்,கணேஷூம் உள்ளப் போயிருக்காங்க.ராம்குமார் இறந்த 2 நிமிஷத்துல கணேஷ் மட்டும் வெளிய வந்ததுக்கான புட்டேஜ் சார்"என மெமரிக்கார்டை கமிஷனரிடம் கொடுத்தான்.

"கணேஷ் ராம்குமாரக் கொல்றதுக்கான மோட்டிவ் என்ன மித்ரன்?"

"இதப்பத்தி அவரோட சன் மிஸ்டர் விமல் கிட்ட விசாரிச்சப்போ...இரண்டு நாளைக்கு முன்ன கணேஷ் வீட்டுக்கு வந்ததாகவும் ,ராம்குமார் அவன ஆபீஸ் ரூம்க்கு கூட்டிட்டுப் போனவர் அரை மணிநேரம் ஆகியும் வெளிய வராம போக விமல் அந்த அறைக்குப் போனதாகவும் சொன்னார்.

"உள் பக்கமா தாழ் போட்டிருந்த அறைக்கு வெளிய நின்னு அவங்க பேசுறத விமல் கேட்டிருக்கார்."

"தன்னோட பிஸ்னஸ் எதிரிகளின் கை,காலை உடைக்க கணேஷைப் பயன்படுத்தி இருக்கார் ராம்குமார்.
கடைசியா கணேஷ் செஞ்ச அஸைண்மண்ட்க்கு அவர் பேசிய அமௌண்ட்டை குடுக்காமல் போக அதைக் கேட்கவே கணேஷ் வந்திருக்கிறான்."

"ராம்குமார் பணத்தைத் தர மறுக்க...
உன் சாவு என் கைல தான்னு
கத்திட்டு வீட்ட விட்டு வெளிய போயிட்டான்.இத பத்தி போலீஸ் கம்ப்ளைண்ட் குடுப்போம்
என விமல் ராம்குமாரிடம் கேட்க... குறைக்கிற நாய் கடிக்காது போலீஸ்லாம் வேண்டாம்னு சொல்லிற்கார்.இது தான் விமலோட ஸ்டேட்மெண்ட் சார்."

"கணேஷ அரெஸ்ட் பண்ண அவன் வீட்டுக்குப் போனோம்.அவன் ரெகுலராப் போற விபச்சார விடுதில இருக்கதா தெரியவந்துச்சு.அந்த விடுதில இருந்து பூவாழகின்ற பொண்ண சென்னை டூ திருப்பதி போற வழில இருக்க காட்ல ஒரு மரவீட்டுக்குக் கூட்டிட்டு போனதா விடுதில இருக்கப் பொண்ணுங்க சொன்னாங்க சார் "

"ஓகே பைன்.கணேஷக் கோர்ட்லப் ப்ரடியூஸ் பண்ணிருங்க"

"சார்.."என மித்ரன் இழுக்க

அவனது இழுவையில் மித்ரன் கணேஷை என்கவுண்டர் செய்து விட்டான் என புரிய அவர் கண்கள் கோபத்தைக் காட்டியது.

"அவர் கண்களைக் கண்டவாரே கணேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுவை தாக்கிட்டு தப்பிக்க முயல வேற வழி இல்லாம அவன சுட வேண்டியதாப் போச்சு சார்"என இயல்பாய் மித்ரன் மொழிய

"அவனை நம்பாதப் பார்வை பார்த்தவர்.சென்னைக்கு ட்ராண்ஸ்பர் ஆகி வந்த 5 வருஷத்துல 20 என்கவுண்டர் பண்ணீருக்க மித்ரா.
DC பிரமோஷன் லிஸ்ட்ல உன் பேரு இருக்கு. அதேநேரம் ஹியுமன் ரைட்ஸ் கமிஷன்ல இருந்து உன் என்கவுண்டர்ஸ் பத்தி என்கொயரி பண்ண சொல்லிப் பிரஷர் குடுக்குறாங்க."

"கணேஷ் மாதிரி ரவுடீஸ்லாம்... பொலீட்டிஷியன்ஸ்,
பிஸ்னஸ்மென்னோட நிழல்ல இருக்கவங்க.அவுங்களுக்காக என்ன தப்பு வேனா செய்யுற கணேஷ் மாதிரி ஆளுங்க தனியா மாட்டும் போது என்கவுண்டர் தான் கரெக்ட் சார்.அத விட்டுட்டு அரெஸ்ட் பண்ணி உள்ளத் தள்ளுனா அவனுங்க ஈசியா பெயில்ல வந்து அடுத்த கொலைய செய்வானுங்க."

"நீங்க என்கொயரி கமிஷன் வச்சாலும் இல்ல பிரமோஷன் லிஸ்ட்ல இருந்து என் பேர எடுத்தாலும் என் பாலிஸிய மாத்திக்க மாட்டேன் சார்."

"கமிஷனரா இல்லாம உன் மாமாவா சொல்றேன். ஐய்யனார் அரிவாளோட இருக்காப் போல எப்பயும் துப்பாக்கியத் தூக்கிட்டு அலையாத மித்ரா "என்றார் மித்ரன் தாயின் உடன்பிறந்த சகோதரர் கமிஷனர் விஜயேந்தர்.

"இந்த மித்ரசிம்மன்...
நல்லவங்களுக்கு மட்டும் தான் மித்ரன்....(நண்பன்)
சமூக துரோகிகளுக்கு சிம்மன்....நரசிம்மன்."

"இரணியனத் தன் நகங்களால கொன்னார் நரசிம்மன்.
பணமும், அதிகாரமும் இருந்தா என்னவேனா தப்பு செய்யலாம்னு நெனச்சுட்டு இருக்க நவீன இரணியன்கள தன் துப்பாக்கிக்கு பலியாக்குவான் இந்த மித்ரசிம்மன்."என்க

"இதெல்லாம் நல்லாப் பேசு...ராம்குமாரக் கொல்றதால கணேஷ்க்கு என்ன லாபம்னு யோசிச்சியா..."என விஜயேந்தர் சலித்துக்கொள்ள

"ராம்குமாரோட சாவுல லாபம் கணேஷுக்கு இல்ல...தொழிலதிபர் JPக்கு சார்"

"What?"என விஜயேந்தர் அதிர

"எஸ். உங்க தங்கச்சி ஹஸ்பண்டும், என்னோட அப்பாவுமான top leading business man Mr.JeyPrakashகு தான் ராம்குமார் டெத்ல ப்ராப்பிட் இருக்கு மாமா"என்றவனை அதிர்ச்சிப் பார்வை பார்த்தார் கமிஷனர் விஜயேந்தர்.



தொடரும்.
 

Gomathi Nandhini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அகிலமும் நீயே!!!

அத்தியாயம் 5:


ராம்குமாரின் கொலைக்குக் காரணம் ஜெய்பிரகாஷ் என மித்ரசிம்மன் கூறியதைக் கேட்டு பதட்டமானார் கமிஷனர் விஜயேந்தர்.

"மித்ரா,உன் அம்மா விஷயத்துல உன் அப்பா ஜெய்பிரகாஷ் மேல உனக்கு இருக்க கோபத்துனால அவன் மேலக் கொலப்பழி போடாதடா..."

"நான் Personalலயும் , Proffessionனயும் கண்பியூஸ் பண்ண மாட்டேன் சார். மிஸ்டர் ஜெய்பிரகாஷ் தான் கணேஷை வைத்து ராம்குமாரக் கொன்னார்னு நான் சொல்றதுக்கு ஆதாரம் இருக்கு சார்."

"ஆதாரமா....."

"ஆமா சார்.கணேஷத் தேடி நான் மரவீட்டுக்குப் போனப்போ...அங்க புதருக்குப் பின்னாடி மறஞ்சிருந்த இரண்டு நார்த் இண்டியன்ஸ் என்ன தாக்க வந்தாங்க."

"அவுங்க கிட்ட இருந்து லாவகமாத் தப்பிச்ச நான்... இரண்டு பேரையும் தாக்கி...அதுல ஒருத்தன தூப்பாக்கி முனைல நிறுத்தி நீங்க யாருனுக் கேட்டப்போ...போலீஸ் கைல கணேஷ் சிக்குறத்துக்குள்ள அவனக் கொல்ல ஜெய்பிரகாஷ் அனுப்புன ஆட்கள்னு சொன்னான்."

"ராம்குமாரக் கொலப் பண்ண கணேஷுக்கும்,தொழிலதிபர் ஜெய்பிரகாஷுக்கும் என்ன சம்மந்தம்னு நான் கேட்டதுக்கு...
கணேஷ வச்சு ராம்குமாரக் கொல செஞ்சதே ஜெய்பிரகாஷ் தானு சொன்னான்."

"நான் அடுத்தக் கேள்விக் கேட்க வாய் திறக்க ; அவன் என் கண்ணுல மண்ணத் தூவிட்டான்.கண்ணக் கசக்கிட்டு நான் பாக்கறதுக்குள்ள அவுங்க ரெண்டு பேரும் ஓடிட்டாங்க சார்."

"அப்போ..நீ கணேஷ அரெஸ்ட் பண்ணி
கோர்ட்ல நிறுத்துனா... தன்னோடப் பேர அவன் சொல்லிருவான்னு அவனக் கொல்ல ஆட்களை அனுப்புவான் ஜெய்."

"ஆமா சார்.ஆனா கணேஷ், மிஸ்டர் ஜெய்பிரகாஷ் பேர சொன்னாலும் ,அவருதான் ராம்குமாரக் கொல்ல சொன்னார்னு எந்த எவிடென்சும் இல்ல"

"அதுமட்டும் இல்லாம ராம்குமார் வீட்ல கணேஷுக்கும், ராம்குமாருக்கும் இரண்டு நாளைக்கு முன்னாடி நடந்த வாக்குவாதமும்,அதை விமல் கேட்டதும் மிஸ்டர் ஜெய்பிரகாஷுக்குத் தெரிஞ்சிருக்கும் சார்."

"அதுனால கணேஷத் தூண்டி ராம்குமாரக் கொல்ல பிளான் பண்ணீருக்காரு.ஆனா வழக்கமாப் போற பார்க்குக்குப் போகாம ராம்குமார் வேறப் பார்க் போனதும், அங்க இருக்க சிசிடிவிய பாக்காம கொலப் பண்ணி கணேஷ் போலீஸ் கிட்ட மாட்டுனதும் ஜெய்பிரகாஷே எதிர்பாக்காமே நடந்தது."

"என்னால நம்பவே முடில மித்ரா..ராம்குமாரும்,ஜெய்பிரகாஷும் பிஸ்னஸ் எனிமீஸ்தான்.அதுக்காக ராம்குமாரக் கொல்ற அளவு ஜெய்க்கு என்ன வென்ஜன்ஸ் இருக்கும்."

"அதப்பத்தின இன்வஸ்டிகேஷன இப்பவே ஸ்டார்ட் பண்றேன் சார்"

"ஒகே மித்ரா. இதக் கொஞ்சம் சீக்ரட்டாப் பண்ணுடா..ஜெய் நம்ம சந்தேக வட்டத்துக்குள்ள வந்தது அவனுக்குத் தெரியக்கூடாது."

"எஸ் சார்"என சல்யூட் செய்தவன் அவர் தலையசைத்ததும் அவ்வறையை விட்டு வெளியேறினான்.

_____________________________

சாருமதி காப்பகம்.

தன் கைகள் இரண்டையும் மேல் நோக்கி நீட்டி,கால்கள் இரண்டையும் கீழ் நோக்கி நீட்டி,உடம்பை வளைத்து சோம்பல் முறித்தவாரே கட்டிலினின்று எழுந்தமர்ந்தாள் பூவழகி.

கட்டிலுக்கு நேர் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து,தன் இரு கைகளிலும் தலையைத் தாங்கியிருந்த மீனாவின் இமைக்காப் பார்வையில் திடுக்கிட்டவள்.

"ஏய் மீனா...ஏன் இப்டி பாக்குறவ?"எனக் கேட்டாள் பூவழகி.

"அம்மாடியோவ்...ஒரு வழியா எந்துச்சுட்டியா ராசாத்தி"

"நான் எப்பவும் 5 மணிக்கெல்லாம் எழுந்துருவேன் மீனா"என பூவழகி பெருமையாய் கூறினாள்.

அவளை ஏறஇறங்கப் பார்த்த மீனா...
"சூரியனே எந்துச்சு 3 மணிநேரம் ஆச்சு..நீ நல்லாப் பப்பரப்பானுத் தூங்கி வழிஞ்சுட்டு,5 மணிக்கெல்லாம் எழுவேன்னு கதை விடுறியா?"என்றாள் மீனா.

"என்னடி உளறுற?"என்ற பூவழகி சுவற்றில் இருந்த கடிகாரத்தைப் பார்க்க; பெரிய முள் 12லும் , சின்ன முள் 9லும் இருந்தது.

"ஆத்தாடி மணி 9தாச்சா..."என மனதுள் அதிர்ந்தவள்.

தான் நீண்ட நாட்களுக்குப் பின் நிம்மதியான உறக்கம் கொண்டதை உணர்ந்தாள்.சில காலங்களாய் அவளின் இறவுகள் அழுகையிலும், பயத்திலுமேக் கழிய, அதற்கு முற்றுப் புள்ளி வைத்தது போல் இருந்தது இன்று அவளின் தாமதமான விழிப்பு.

இதன் காரணத்தை யோசத்தவளுக்கு மித்ரசிம்மனின் முகமே நினைவு வந்தது.அதன் கோர்வையாய் நேற்றிரவு நடந்தவைகளை அசைபோட்டாள்.

மித்ரசிம்மன் கிளம்பியதும்,மீனாவின் அறையில் தன்னையும்,ஆராவையும் சுசிலாமா தங்க சொல்ல;குழந்தையுடன் அவ்வறைக்கு சென்றாள் பூவழகி.

தட்டில் 4 இட்லிகளுடன் வந்த மீனா"இந்தாப் பூவு..இத சாப்பிட்டுக்கோ.அப்பறம் இந்தக் கட்டில நீ எடுத்துக்கோ,பாப்பாக்கு ஒரு தொட்டில் வாங்கிடலாம்."என பேசிக்கொண்டிருக்க

"ஏன் மீனா...என்னைய இங்க கூட்டிவந்தாரே போலீஸ்காரரு அவரு யாரு?"என கேட்டாள் பூவழகி.

"நான் இங்க மூச்சு வாங்க பேசிட்டு இருக்கேன்.நீ ACP மித்ரசிம்மனப் பத்திக் கேட்டுட்டு இருக்கியா"என்க

"அச்சச்சோ...அவுக யாரு ACP மித்ரசிம்மன் ?.நான் கேட்டது நேத்து என்னையக் காப்பாத்திக் கூட்டிவந்தவர மீனா"என
பாவம் போல் முழித்தவளைக் கண்டு தன் தலையில் அடித்த மீனா

"என் அறிவுக்கட்டி...உன்ன காப்பாத்திக் கூட்டி வந்தது தான் ACP மித்ரசிம்மன்.

"அப்டியா..."

"உனக்கு அவருப் பேரு தெரியாதா...இரு மித்ராண்ணாப் பத்தி சொல்றேன்."
என்ற மீனா...மித்ரன் சென்னையில் ACPயாய் வந்தநாளிலிருந்து இந்த 5 வருடங்களில் அவன் செய்த வீர தீர பராக்கிரமங்களைப் பற்றி கூறினாள்.

அவன் பலப் பெண்களின் வாழ்வைக் காப்பாற்றி இக் காப்பகத்தில் சேர்த்திருப்பதைக் கேட்ட பூவழகியின் மனம் அவளறியாமலே" இவனை ஏன் தான் முன்பே பார்க்கவில்லை.அப்படி பார்த்திருந்தால் தனக்கு நடந்த கொடுமைகள் அனைத்தையும் தட்டிக்கேட்டு அந்த பாழும்கிணற்றில் இருந்து தன்னை மீட்டிருப்பான் "என எண்ணியது.

தன் மானத்தையும்,தனது உயிருக்குயிரான ஆராவையும் காப்பாற்றிப் பாதுகாப்பான இடத்தில் விட்டுச் சென்ற மித்ரசிம்மனுக்கு ஒரு நன்றியும் சொல்ல மறந்த தன்னை மானசீகமாய் குட்டினாள் பூவழகி.


கடிகாரத்தைப் பார்த்தவாரே சிலையென சமைந்திருந்தவளின் தோழ்பட்டையை உலுக்கிய மீனா.

"இவ்ளோ நேரம் கண்ண மூடிக்கிட்டு தூங்குன ; இப்ப கண்ணத் தொரந்துட்டு தூங்குறியா?பசி உயிர் போகுது பூவு.சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா"என்க

மண்டையை உருட்டிய பூவழகி அறையில் இருந்த குளியலறைக்குள் நுழைய

"ஏய்.டிரஸ் எடுக்காம போற"என கத்திய மீனா.

"இந்தா உனக்கு சுடிதார், பேஸ்ட்,பிரஷ்,சோப் "என அவள் கைகளில் திணித்தாள்.

அவற்றைக் கண்டு பூவழகி கேள்வியாய் தன் புருவத்தைத் தூக்க

"காலேல கடைக்கு போய் என் சைஸ்ல உனக்கு ரெண்டு டிரஸ் ; பாப்புக்கு (ஆராதனா) ரெண்டு டிரஸ் எடுத்தேன்.வீக்கென்ட்ல உனக்கு தேவையான திங்செல்லாம் வாங்கிருவோம்"என்க

சரி என்பதாய் தலையசைத்து விட்டு பூவழகி நக்ர்ந்து விட கட்டிலில் கை ,கால்களை ஆட்டிக் கொண்டு தன்னைப் பார்த்து சிரித்த ஆராவின் அருகில் அமர்ந்த மீனா ;ஆராவிற்கு டவல் பாத் எடுத்து விட்டு,தான் வாங்கிய ஆடையை அணிவித்தாள்.

பூவழகி குளித்துவிட்டு வந்ததும் இருவரையும் அழைத்துக் கொண்டு அந்த காப்பகத்தை சுற்றி காட்டினாள்.

தரை தளம் முழுதும் வயதானவர்கள் இருக்க,முதல் தளத்தில் ஒரு பக்கம் நடுத்தற வயது பெண்களும், இன்னொருப் பக்கம் குழந்தைகளும் இருக்க, மூன்றாவது தளத்தில் இளம்பெண்கள் இருந்தனர்.

பூவழகி, ஆராதனாவை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்த மீனா ; ஆபீஸ்ரூம் அருகில் இருந்த சமயலறைக்கு அழைத்துச் சென்றாள்.

"பூவு, சமைக்கிறது ,காய் நறுக்குறது, பாத்திரம் கழுவுறது, பரிமாறுறது எல்லாம் காப்பகத்துல இருக்கவங்க தான் செய்யனும்."

"நீ உனக்கு செய்யத் தெரிஞ்ச வேலையை செய்.எனக்கு எப்பவும் சாப்பிட மட்டும் தான் தெரியும் "என்ற மீனா சாப்பிடும் இடத்தில் அமர்ந்தாள்.

ஷாலை பின்புறம் முடிச்சிட்டு; சமயலறை நோக்கிச் சென்றப் பூவின் கைகளைப் பிடித்து தடுத்த மீனா "அம்மா பரதேவத...மொத பிரேக்பாஸ்ட் சாப்பிடலாம்.அப்பறமா நீ சமைக்கப் போமா"என்க

அதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்துக் கொண்டே பூவழகியையும், மீனாவையும் அமரவைத்து டிபன் பரிமாறினர்.

ஆராப் பூவழகியை சாப்பிட விடாமல் சேட்டை செய்யவும் அவளைத் தூக்கிய பெண்மணி ஒருவள் விளையாட்டுக் காட்ட ; ஆராவின் கண்ணக் குழி சிரிப்பில் அவள் கண்ணத்தைக் கிள்ளி கொஞ்சினர் கிட்ச்செனில் இருந்த பெண்மணிகள்.

ஆராவின் சிரிப்பு சத்தத்தில் பூவழகியின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வடிய அதற்கு நேர்மாறாக அவளின் இதழ்கள் புன்னகையில் மிளர்ந்தது .

தொடரும்.
 

Gomathi Nandhini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அகிலமும் நீயே!!!

அத்தியாயம் 6:


ராம்குமாரின் கொலை வழக்கில் தன் தந்தை ஜெய்பிரகாஷ் சம்மந்தப் பட்டிருப்பதை அறிந்ததில் இருந்து மித்ரசிம்மன் ஒரு நிலையாய் இல்லை.

ஒரு கொலையை மறைக்க மற்றொரு கொலை செய்யத் துணிந்தவரை நினைக்க நினைக்க மித்ரனின் மனம் உலைக்களமாய் கொதித்தது.

20 வருடங்களுக்கு முன் சாலை விபத்தில் இறந்த தாயின் மரணம் விபத்தா? இல்லை அதுவும் தந்தை திட்ட மிட்டு செய்த ஆக்சிடென்ட்டா? எனும் கேள்வி புதிதாய் மித்ரனின் மனதில் உதித்து அவன் மண்டையை வண்டாய் குடைந்தது.

தாய் இறந்து 3 மாதத்தில் வேறு திருமணம் செய்து கொண்டதால் இத்தனை வருடங்களாய் ஜெய்பிரகாஷ் மேல் இருந்த கோபம் இன்று வெறுப்பாய் மாற ;

அடிமனதில் அவர் தன் தந்தை என்றிருந்த உணர்வு இன்று அவரை யாரோ ஒரு தொழிலதிபர் என பாவிக்கச் செய்தது.

ஜெய்பிரகாஷ் செய்த , செய்ய முயன்ற கொலைகளுக்குத் தக்க தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்
என தனக்குள் முடிவு செய்தவனின் சிந்தையைக் கலைத்தது டிரைவர் வேலுவின் "சார்...சார்..."என்ற அழைப்பு

அதில் நிகழ்காலம் திரும்பியவன்"என்ன வேலு?"என்க

"நீங்க சொன்ன அட்ரஸ்கு வந்தாச்சு சார்"

"சரி நீ நிழல்ல கார நிறுத்திட்டு வெயிட் பண்ணு.நான் விசாரிச்சுட்டு வரேன்"என்றவன் விபாச்சார விடுதி நடத்திய பெண்மணியிடம் இருந்து தான் வாங்கிய பூவழகியை விட்டுச் சென்ற பெரியவரின் முகவரி நோக்கிச் சென்றான்.

அவ்வீட்டு கேட்டில் பெரிய திண்டுக்கல் பூட்டுப் போட்டிருக்க ; பூவழகியிடம் அப்பெரியவர் கூறியது போல் வெளிநாட்டில் இருக்கும் அவரின் மகன் வீட்டிற்கு சென்றுள்ளதாய் அக்கம் பக்கத்தினர் கூறினர்.

அடுத்ததாக பூவழகி வாடகைக்கு இருந்த வீட்டிற்கு சென்றான்.

பெரியவரின் வீட்டில் இருந்து இரண்டு வீடுகள் தள்ளியிருந்த காம்பவுண்டுக்குள் நுழைந்து ஒரே மாதிரியாக இருந்த மூன்று போர்ஷனில் முதல் வீட்டுக் கதவைத் தட்டினான் மித்ரன்.

"யாரது?" என கேட்டாவாரே திருமணமான பெண் ஒருவள் கதவைத் திறந்தாள்.

வெளியே நின்ற மித்ரனின் போலீஸ் உடையைக் கண்டதும் உள்ளம் அதிர "சார்"என்றாள் பயந்த குரலில்.

"இந்த பொண்ணத் தெரியுமா?"என தன் மொபைலில் பூவழகிக்குத் தெரியாமல் நேற்றிரவு அவளை தான் எடுத்தப் புகைப்படத்தைக் காட்டினான்.

"நல்லாத் தெரியும் சார்.இந்தப் பொண்ணுப் பேரு பூவழகி.அவக் கைல இருக்கது அவளோடப் பொண்ணு ஆராதனா."

"உங்களுக்கு எப்டி இவளத் தெரியும்"

"நான் தான் சார் வாடைக்கு வச்சிருந்தேன்.இதோப் பக்கத்துப் போர்ஷன்ல தான் அவ இருந்தா."

"இப்பயும் இங்க தான் இருக்காளா?"

"இல்ல சார்.அவ வேலப் பாத்த வீட்டு ஓனர் வெளியூர் போறதால அவள வேர ஒரு வேலைல சேத்து விடுறேன்னு சொன்னார்னு நேத்துக் காலேல தான் வீட்டக் காலி பண்ணிட்டுப் போனா சார்".

"அவ வேல செஞ்ச வீட்டுப் பெரியவர் எப்டி?"

"அவரப் பத்தி எனக்குத் தெரியாது சார்.ஆனா அவரு வீட்ல வேலைக்கு வர்ரப் பொண்ணுங்க என் வீட்ல தான் வாடகைக்கு இருப்பாங்க."

"பூவழகி அவ ஜாமனெல்லாம் எடுத்துட்டுப் போயிட்டாளா?."

"அவப் பெருசா எதும் எடுத்துட்டு வரல.ஒரே ஒரு பிக்ஷாப்பர் தான் கொண்டு வந்தா.3 வேள சாப்பாடு அவ வேல செய்ற வீட்லயே சாப்ட்டுப்பா.மத்தபடி 2 தலையாணி,2 பெட்ஷுட் மட்டும் தான் வச்சிருப்பா"

"அப்டியா...எத்தன வருஷமா பூவழகி இங்க வாடகைக்கு இருக்கா?"

"வருஷமாலாம் இல்ல சார் ஒரு மாசமாதான் இருந்தா."

"ஒரு மாசம் தானா "என்றவன்

அப்படினா ஒரு மாசம் முன்னாடி அவ எங்க இருந்தா?அவளுக்கு வேற எதும் கடந்த காலம் இருக்குமோ?"
என தனக்குள் யோசித்தவன்.

"பூவழகியோட சொந்த ஊர் எது?அவளப் பத்தி எதுனாச்சும் தெரியுமா?"

"இல்ல சார்.அந்தப் பொண்ணு ரொம்ப அமைதி.அவ உண்டு அவ வேல உண்டுனு இருப்பா"

"அவளத் தேடி யாரும் வருவாங்களா?"

"அப்டி யாரும் வந்ததில்ல.இந்த ஏரியால 4 காலேஜ் பசங்க இருக்காங்க சார்.அவனுங்கத் தெருல ஒருப் பொண்ணப் போக விட மாட்டானுங்க.தப்புத் தப்பாப் பேசுவானுங்க."

"பூவழகியயும் ரொம்ப கேலி செஞ்சு ஒரு நாள் ராத்திரி வீட்டுக்கே வந்துட்டாங்க.என் வீட்டுக்காரர் தான் போலீஸ்குப் போன் பண்ணட்டுமானு மிரட்டி அவனுங்கள அனுப்புனாங்க."

" "

"ஒருப் பொண்ணு கழுத்துல தாலி இல்லாம,கைலக் குழந்தையோட இருந்தா இந்த சமூகம் அவளத் தப்பாத்தான சார் பாக்குது."

"கழுத்துல தாலி இல்லையா"என அதிர்ந்தவன்.நீங்க சொன்னப் பசங்க எங்க இருப்பாங்க?"

"இந்தத் தெரு முக்குல கேரம் ஆடிட்டு,போர வாரப் பொண்ணுங்கள கிண்டல் பண்ணிட்டு இருப்பானுங்க."

"சரி மா.தாங்க்ஸ்"என மித்ரன் நகர

"சார்.பூவழகிக்கு ஒன்னும் இல்லயே அவ நல்லா தான இருக்கா"

"அவ ரொம்ப சேப்பான இடத்துல நல்லா இருக்காமா.அவ வேல செஞ்ச வீட்டுப் பெரியவர் ஊருக்கு வந்தா எனக்கு தகவல் சொல்லுமா"என்றவன் தனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தான்.

"சரி சார்"என அப்பெண் அதை வாங்கிக் கொள்ள ; மித்ரன் அவ்வீட்டை விட்டு வெளியேறி தனது வாகனத்தில் ஏறினான்.

"வேலு தெரு முக்குக்கு வண்டிய விடு"

"சரிய்யா" என்ற வேலு மித்ரசிம்மன் கூறிய இடத்தில் வண்டியை நிறுத்தினான்.

அந்தப் பெண் கூறியது போல் நான்கு காலேஜ் மாணவர்கள் கையில் கலர் கலரான பேண்ட்,காதில் தோடு,வாயில் சிகரெட்டுடன் கேரம் ஆடிக் கொண்டிருந்தனர்.அதே நேரம் ஒருப் பெண் கையில் காய் கறிப்பையுடன் நடந்து செல்ல ; நால்வரும் அவளின் ஷாலை இழுத்து ஏதேதோ கிண்டல் செய்து அவளை அழச் செய்தனர்.

இவற்றை எல்லாம் படம் பார்ப்பது போல் பார்த்த மித்ரன் வேலு வண்டிய குடோனுக்கு விடு என்றான்.

மித்ரனின் முகத்தைத் திரும்பி திரும்பி வேலுப் பார்க்க ; அவனோ மும்மரமாய் போனைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

குடோனை அடைந்ததும் காரில் இருந்து இறங்கி,அதன் இரும்பு கதவுகளைத் திறந்து; உள்ளிருந்த சேரில் அமர்ந்து Assassin விளையாடத் தொடங்கினான் மித்ரன்.

பத்து நிமிடத்தில் அக்குடோனுக்குள் வெள்ளை நிற மாருதி நுழைய ; அதிலிருந்து மூன்று தடியர்கள் சிறிது நேரத்திற்கு முன் மித்ரன் பார்த்த 4 காலேஜ் மாணவர்களின் கையைக் கட்டி இழுத்து வந்தனர்.

"அண்ணே நீங்க அனுப்புன போட்டோல இருக்கப் பசங்கள தூக்கிட்டு வந்துட்டோம் " என மித்ரனின் காதில் முனுமுனுத்தான் தடியர்களில் ஒருவன்.

"நீ கிளம்பு மாரி"என மித்ரன் கூற

"இல்ல அண்ணே முடிச்சிட்டேப் போறோம்"என்றான் மாரி.

"சார்.இவனுங்க அடிச்சு இழுத்துட்டு வந்துட்டாங்க.எங்களக் காப்பாத்துங்க."என மாணவன்களில் ஒருவன் மித்ரனின் போலீஸ் உடையைக் கண்டு தங்களைக் காப்பாற்றக் கோரினான்.

"ஹ...ஹ...ஹ...நான் உங்களக் காப்பாத்தனுமா...Funny guy..."

"சார்" என அவன் பயப்பார்வைப் பார்க்க

"என்னடா சாரு.காலேஜ் போயிப் படிச்சு முடிச்சு வேல வாங்கிக் குடும்பத்தக் காப்பாத்தாம ; ஊர்ல இருக்கப் பொண்ணுங்களத் தப்பு தப்பாப் பேசிட்டு இருக்கீங்கள்ள ; அதுக்கு ஒரு ட்ரீட்மெண்ட் குடுக்கத் தான் உங்களக் கூட்டிட்டு வர சொன்னேன்."

"சார்.இனி இப்டிப் பண்ண மாட்டோம்.எங்கள விட்டுடுங்க"என இன்னொரு மாணவன் கெஞ்ச

"விடுறதா...அது என் பாலிசிக் கெடையாது."என தனது சாக்சில் இருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்தவன் 4 புல்லட்டால் அவர்கள் நால்வருக்கும் மோட்சம் அளித்தான்.

"மாரி, இவனுங்கள டிஸ்போஸ் பண்ணிரு."என நகர்ந்திட வேலு அவனைப் பின் தொடர்ந்தான்.

தன் கண் எதிரே நடக்கும் குற்றத்திற்கு மித்ரனின் தீர்ப்பு அதை செய்தவரின் மரணம் மட்டுமே.

சக உயிர்களை கொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை என மித்ரனின் செயலை நாம் வித விதமாக விமர்சித்தாலும் , இன்று அந்நால்வரின் மரணத்தால் அத்தெருவில் 400 பெண்கள் நிம்மதியாய் நடந்து செல்வர்.

குற்றங்கள் அதிகரிப்பின் அதற்கான தண்டனைகள் கடுமை ஆக்கப்படவேண்டும்.ஒருவனின் தவறிற்கு நாம் வழங்கும் முதல் மன்னிப்பே அவனை அத்தவறின் அடுத்தக் கட்டத்தை செய்யத் தூண்டும்.

இன்று பெண்களை கேலி செய்பவன், நாளை அவளைக் கடத்துவான், கடத்தியவளைக் கற்பழிப்த்துக் கொலையும் செய்வான் என்பதே மித்ரனின் வாதம்.

தான் ACPயாய் பணியில் அமர்ந்த நாளில் இருந்தே சட்ட விரோதமான செயல்களை செய்யாதே என மித்ரன் பாட்டாய் பாட ; அதைக் காதில் சிறிதும் வாங்கினோர் இல்லை.

தன் வாய் பேச்சைக் குறைத்தவன் ; தூப்பாக்கியால் பேசத் தொடங்க ஊரில் தலை விரித்து ஆடிய கொலைக் கொள்ளைக் கற்பழிப்புகள் குறையத் தொடங்கின.

மற்றவர்களுக்கு கொலையாய் தெரிவது மித்ரனைப் பொருத்தவரை "வதமே".

ரௌடிகளை என்கவுண்டர் செய்பவன் இக் காலேஜ் மாணவர்கள் போல் தவறின் முதல் படியில் இருப்பவர்களை மாரி போன்ற முன்னாள் ரௌடிகளை வைத்து கடத்தி வரச்செய்து தண்டனைத் தந்திடுவான்.

இவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் காணவில்லை என கம்ப்ளைண்ட் கொடுத்தால்...


"உங்கள் பிள்ளைகளின் கேலியால் தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் அண்ணன் எவனாவது கடத்திட்டுப் போயிருப்பான்"என கேஸை குளோஸ் செய்திடுவான்.

பேப்பரில் இச்செய்தியைப் பார்ப்போரில் சிலராவது திருந்துவரே எனும் நப்பாசை மித்ரனுக்கு.


குடொனில் இருந்து ஸ்டேஷனை நோக்கிச் சென்றது மித்ரனின் போலீஸ் வாகனம்.

___________________________________

வானம் இருண்டிருக்க ; புவியை நனைத்தது மழைத் தூறல்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஜன்னலின் வழி இருட்டை வெறித்திருந்த ஜெய்பிரகாஷின் செல்போன் சிணுங்கியது.

அதை ஏற்று காதில் வைத்ததும் "என்ன காரியம் பண்ணிருக்க ஜெய். இவ்ளோ கேர்லஸ்ஸாவா இருப்ப."என எதிர்முனையில் இருப்பவர் கத்தத் தொடங்க.

"அந்த ராஸ்கல் கணேஷ் இப்டி சொதப்புவான்னு நெனக்கல.சரி கெட்டதுலயும் நல்லதா அவனுக்கும், ராம்குமாருக்கும் ஏற்கெனவே டெர்ம்ஸ் சரி இல்லாததால நம்ம கெஸ் பண்ணது போல கணேஷதான் போலீஸ் சந்தேகப்பட்டு ;எண்கவுன்டர் பண்ணீட்டாங்க."

"கணேஷ் தான் இதுல மாட்டிப்பான்னு தெரிஞ்சும் நீ அவனக் கொல்ல ரெண்டு பேர அனுப்புனியே அவனுங்க என்ன ஆனானுங்க."

"அ....அது...அவனுங்க போனையே எடுக்கல. ஒரு வேள மித்ரனே கணேஷ சுட்டதப் பாத்துட்டு நமக்கு வேல மிச்சம்னு கிளம்பிட்டாங்களோ?"

"நம்ம எவ்ளோப் பெரிய விஷயம் பண்ணிட்டு இருக்கோம் ஜெய். நீ சின்னப் புள்ள மாதிரி பேசிட்டு இருக்க.நீ அனுப்புன வடநாட்டுப் பசங்க மித்ரன் கிட்ட மாட்டி உன் பேர சொல்லிருந்தா? "

"ச..ச..அதுலாம் சொல்லிருக்க மாட்டாங்க.அப்டியே சொல்லிருந்தா மித்ரன் என்னோட ஆக்டிவிட்டீஸ பாலோப் பண்ண ஆரம்பிச்சுருப்பான்."

"சரி ஜெய்.எதோ சொல்ற.ஏற்கனவே உன் புள்ள உன் மேல கோபமா இருக்கான்.இதுல நம்ம செய்றது தெரிஞ்சா நம்ம கத முடிஞ்சது."

"ஒருப் பொடிப் பையனுக்கா இவ்ளோ பயப்படற.எது எப்டி வந்தாலும் நான் பாத்துக்கிறேன்."

"சரி கவனமா இரு"என எதிர்முனை அழைப்பை முடிக்க

தனது காதில் இருந்து செல்போனை எடுத்த ஜெய் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த மற்றொரு போனை எடுத்து

"Did the fruit come safely "என SMS அனுப்ப ; அதற்கு "Yes" என வந்த பதிலில் போனை அணைத்து மேஜை டிராவில் வைத்தவரின் மனதில்

"கணேஷோ இல்லை கணேஷ்ஷைக் கொல்லத் தான் அனுப்பிய வடநாட்டுப் பையன்களோத் தன் பெயரை மித்ரனிடம் சொல்லிருப்பரோ..."

"அந்த இரண்டு பேரும் தன்னிடம் பணம் வாங்கவும் வரவில்லையே! ஒருவேளை மித்ரனின் கஸ்டடியில் இருப்பரோ!"

"தன் மேல் சந்தேகப் புள்ளி விழுந்திருக்குமோ..."என தனக்குள் யோசித்தவர். DC ரகுராமிற்கு அழைப்பு விடுத்தார்.

அந்தப் பக்கம் அழைப்பு ஏற்றதும் "ரகு, நான் ஜெய் பேசுறேன்"என்றார் ஜெய்பிரகாஷ்.

"சொல்லுங்க சார்.என்ன இன்னேரம் கூப்பிடுறிங்க"

"ஒரு இன்பர்மேஷன் வேணும்.ராம்குமார் மெர்டர் கேஸ்ல சந்தேகத்தின் பேர்ல யாரயும் அரெஸ்ட் பண்ணிருக்கிங்களா?"

"இல்ல சார்.கணேஷ் தான் அக்யூஸ்ட்னு ப்ரூப் ஆகி மித்ரன் அவன எண்கவுன்டர் பண்ணி கேஸைக் குளோஸ் பண்ணிட்டான்."

"ஆப் தி ரெக்கார்டா..மித்ரனுக்கு யார் மேலயும் டவுட் இருக்கா."

"இல்ல சார்.அப்டி எதும்னா கமிஷனருக்கும் ,எனக்கும் தெரியாம இருக்காது."

"ஒகே ரகு"

"நீங்க பயப்படாதிங்க சார்.ராம்குமார் கேஸ்ல உங்களுக்கு எதிரா மித்ரன் எதும் ஆதாரம் வச்சுருந்தாலும்.அத நான் இல்லாமப் பண்ணிடமாட்டேன்."

"ஆமா ரகு.நீ இருக்கப்ப எனக்கு என்ன பயம்.உன் கைக்கு ராம்குமார் கேஸ் வரும்னு நெனச்சேன் அத மித்ரன் கிட்ட கமிஷனர் விஜய் குடுத்துட்டான்."

"ஆமா சார்.எனக்கு இன்னொரு கேஸ் வந்துடுச்சு.அதுனால ராம்குமார் டெத்த மித்ரன் இன்வஸ்டிகேட் பண்ணான்."

"சரி ரகு.நாளைக்கு வீட்டுக்கு வந்து பணத்த வாங்கிக்கோ.."

"ஒகே சார்.நான் பாத்துக்குறேன் சார்.நீங்க எதும் பெரிசாப் பண்ண முன்னாடி என்கிட்ட சொல்லிருங்க"

"சரி"என்றவர் காதிலிருந்து செல்போனைப் பிரித்து சட்டைப்பையில் போட்டவர்
"ராம்குமார் மெர்டர்ல மித்ரன் என்னைய சந்தேகப் பட்டாலும் அத ஈசியா இல்லாம ஆக்கிடலாம்."

"இனிமே செய்றத கவனமா செய்யனும்.அதேநேரம் மித்ரன் நம்மள நோட் பண்றானானு தெரிஞ்சுக்கனும்"என தனக்குள் முடிவு செய்தவர் ; தனதறைக்குச் சென்று பெட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தனது மனைவியின் அருகில் படுத்து துயில் கொண்டார்.

தொடரும்.
 

Gomathi Nandhini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அகிலமும் நீயே!!!

அத்தியாயம் 7:



ஆதவன் துயில் களைந்து தம் பணிகளை மேற்கொள்ள வானை நோக்கி உயர்ந்தான்.

மித்ரனின் செல்போன் அலாரம் அடிக்க ; தன் இடது கையால் அதை அணைத்தவன், வலது கையால் கண்களைக் கசக்கிக் கொண்டு பெட்டினின்று கீழ் இறங்கினான்.

காலைக் கடன்களை முடித்து விட்டு,ட்ராக் ஸூட் அணிந்து ஜாகிங் சென்றவனின் மனம் ;காதில் ஹெட் போன் வழிக் கேட்ட எஸ்பிபியின் பாடலில் லயிக்காமல் பூவழகியைச் சுற்றியே வந்தது.

அவளை மித்ரன் கண்ட நொடியில் ; அவள் உடுத்தியிருந்த சேலையும், தன் இடையைத் தாண்டிய கூந்தலை நீண்ட சடையிட்டிருந்த பாங்கும் அவனுக்கு தன் அன்னையை நினைவுபடுத்தியது.

பூவழகியின் கண்களில் கண்ட பயமும், வெகுளித்தனமும் மித்ரனுக்கு கவலையைத் தந்தது.

துடுக்கானப் பெண்களையே தங்கள் வலையில் வீழ்த்திடும் ஆண்கள் இருக்கும் இக்காலத்தில் தனியாளாய் பெண் பிள்ளையை பூவழகி எப்படி வளர்த்திடுவாள் என்னும் கேள்வி அவனுக்குள் எழுந்த நொடியில் அவளின் கடந்த காலத்தை அறிந்து அவள் குடும்பத்துடன் சேர்த்திட வேண்டும் என நினைத்தான்.

மித்ரனுக்கு இது போல் ஆதரவில்லாதப் பெண்களை காப்பாற்றிக் காப்பகத்தில் சேர்த்திடுவது புதிதல்ல.பூவழகியைப் போல் அவன் நூற்றுக்கணக்கானப் பெண்களைக் கண்டிருக்கிறான்.

அவர்களுக்கு தைரியம் அளித்து இச்சமுதாயத்தை எதிர்கொள்ளப் பழக்கியிருக்கிறான்.

எனினும் பூவழகி விடயத்தில் இது சாத்தியமா ?அவளை பயமின்றி தைரியசாலியாய் உலகை எதிர்நோக்கச் செய்திடமுடியுமா?

அவளின் குழந்தையை நல்ல படியாய் ஆளாக்கிடுவாளா? என அவன் யோசிக்க ; அவளுக்கு தன்னாலான உதவிகளைச் செய்து அவளுக்கும், ஆராவுக்கும் நல்ல வழி செய்திட முடிவு செய்தவன் ஜாகிங்கை முடித்து க்வார்ட்டைஸை அடைந்தான்.


குளித்து முடித்து புளு ஜீன்ஸ், ஒயிட் ஷர்ட் அணிந்து ; மாலையிட்டிருந்த தன் தாயின் புகைப்படத்தின் முன் இருந்த விளக்கை ஏற்றி ;அவரை வணங்கியவன் வீட்டைப் பூட்டிவிட்டு தனது ராயல் என்ஃபீல்டில் மாமன் விஜயேந்தரின் வீட்டை நோக்கிச் சென்றான்.

________________________________

"ஏம்மா ரோகி? என்ன ஸ்பேஷல் இன்னிக்கு தடபுடலா சமச்சிட்டு இருக்க?என்ன விசேஷம்?" என கேட்டுக் கொண்டே டைனிங் டேபிள் சேரில் அமர்ந்தார் விஜயேந்தர்.

அவரை கிட்செனில் இருந்து பார்த்து முறைத்த அவரின் மனைவி ரோஹிணி "இன்னிக்கு என்ன டேனு மறந்திட்டிங்களா?"என கேட்க

"இன்னிக்கு சண்டே"என தோளைக் குலுக்கியவர் டேபிளில் இருந்த பால் பணியாரக் கிண்ணத்தைத் தொட ;
அவர் கையில் கரண்டியால் ரோஹிணி அடித்தாள்.

"ஸ்...ஆ.மித்ரா இன்னிக்கு புல்டே இங்க இருப்பான்.அதுக்கு தான் அவனுக்குப் புடிச்ச ஐட்டம்ஸ் செஞ்சுருக்க கரக்ட்டா"என்றவர் "இப்ப நான் இத சாப்பிடலாமா "என பாவம் போல் கேட்க

"அதுலாம் மித்ராக்குப் புடிக்குமேனு பண்ணது.அதத் தொட்டிங்க அவ்ளோதான்." என ரோஹிணி மிரட்டிக் கொண்டிருக்க

"அத்தம்மா...அத்தம்மா "எனக் கேட்ட மித்ரனின் குரலில் மிரட்டலை நிறுத்தி விட்டு வெளியே ஓடினார்.

இதழில் உதித்தப் புன்னகையை வாய்க்குள் முழுங்கியவர் ; மித்ரனைக் கண்டு முகத்தைத் திருப்பியவாறு "ஏங்க உங்களப் பாக்க ACP மித்ரசிம்மன் வந்திருக்கார்" என கூறி வீட்டினுள் நுழைய

"அத்தம்மா..என் மேல என்ன கோபம்? "என கேட்டுக் கொண்டு ரோஹினியின் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.

அவனின் கையைப் பிரித்து விட்டவர் டைனிங் டேபிளில் அமர தானும் அவர் அருகில் அமர்ந்து கொண்ட மித்ரன்

"என்னோடப் பேசுங்க அத்தம்மா"எனக் கெஞ்ச

"அவனுக்காகப் பாத்துப் பாத்து சமச்சுட்டு. இப்போ அவனோடப் பேசாமா இருந்தா அவனுக்குக் கஷ்டமா இருக்கும்ல.பேசு மா"என்றார் விஜயேந்தர்.

"பின்ன என்னங்க.நமக்குனு புள்ளயா?குட்டியா?இவனோட பத்து வயசுல உங்க தங்கச்சி இறந்ததும் இவன நம்ம தான் வளக்கனும்னு கூட்டிட்டு வந்திங்க.அப்போருந்து என் பிள்ளையா தானப் பாத்துக்கிறேன்."

"ஏன்மா ரோகி அதுலாம் எங்களுக்கு தெரியாதா என்ன? இப்ப எதுக்குமா இதெல்லாம் சொல்லிட்டு இருக்க?"

"நான் மட்டும் என் பிள்ளனு பாசம் காட்டுனா போதுமா.இவனுக்கும் என் மேல துளி அன்பாச்சு இருக்கனுமேங்க"

"அய்யோ அத்தமா.சண்டே ஆனா டான்னு இங்க வந்துடுறேன்ல.ஏன் இப்டி வருத்தப்பட்டுட்டு இருக்கீங்க அத்தம்மா"

மித்ரனை முறைத்த ரோஹிணி

" ஏழு நாளும் இங்க இருந்தே ஸ்டேஷன் போலாமே ஏன் க்வார்ட்டஸ்ல இருக்கானாம்?"என விஜய்யிடம் கேட்டு மித்ரனைப் பார்க்க

"நான் தான் சொன்னனே அத்தமா.என் வேலைல நிறையா ஆபத்து இருக்கு.எனக்கு வக்கிற குறில உங்கள பலியாக்க நான் தயாரில்ல. சண்டே புல்லா உங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்றேன்ல அத்தமா"

"ஆமா உன் மாமாவும் போலீஸாதான இருக்காரு.அவரு கூட தான 30 வருஷமா இருக்கேன்.அப்பலாம் வராத ஆபத்து இப்ப உன்னால எங்களுக்கு வந்திடப்போகுதா"என மித்ரனிடம் ரோஹினி கேட்க

"மாமா மாதிரி வாங்குற சம்பளத்துக்கு மட்டும் வேலப் பாக்கலையே.நான் செய்ற அண்டர்கவர் வேலைகளால உங்களுக்கு எதும் ஆபத்து வந்திடகூடாது.பெத்த அம்மாவ இழந்தமாதிரி என்னைய வளத்த அம்மா உங்கள நான் இழக்க மாட்டேன்."

என தனக்குள் நினைத்தவன்

"அட அத்தம்மா.நீங்க நினைக்கிற மாதிரி மாமா வேலப் பாக்கல கமிஷனர் ஆபீஸ்ல இருக்கப் பொண்ணுங்கள நல்லா சைட் அடிச்சுட்டு இருப்பாரு.இப்பவே இப்பிடினா யங் ஏஜ்ல எப்பிடிலாம் இருந்துருப்பாரு"

என மித்ரன் நமட்டுச் சிரிப்புடன் கூற

மித்ரன் மேல் இருந்த கோபப் பார்வையை விஜய்மேல் ரோஹிணி திருப்ப

"நீ தப்பிக்க என்னை ஏன்டா மாட்டிவிடுற.அய்யோ ரோகி என்னப் பத்தி உனக்குத் தெரியாதா.நான் ஏகப் பத்தினி விரதன் மா."

"ஆமா ஆமா.உங்களப் பத்தி எனக்கு நல்ல்ல்ல்லாத் தெரியுமே.செரியான திருட்டு கழவானிங்க"என இருவரையும் பார்த்து நொடித்த ரோஹிணி

இருவருக்கும் டிபன் பரிமாறினார்.

"மித்ரா சாப்பிட்டிட்டு ஜவுளி கடைக்குப் போகணும்"என்றார் ரோஹிணி.

"ஓகே அத்தம்மா.நீங்களும் உக்காந்து சாப்பிடுங்க.டிபன் முடிச்சிட்டு கிளம்பலாம்."

________________________________

நான்கு அடுக்குமாடிகள் கொண்ட ஜவுளி கடையின் முன்பு ஸ்கூட்டியை நிறுத்தி இறங்கினர் மீனாவும்,பூவழகியும்.

"ஏய்..பூவு,டிரஸ்ஸ அர்ஜஸ்ட் பண்றேண்ணுப் பாப்பாவக் கீழப் போட்டுடாதா"என ஆராதனாவைத் தன் கைகளில் வாங்கினாள் மீனா.

"நீ ஏன் மீனா சேரி வாங்கல.எனக்கு இந்த டிரஸு போட்டுறுக்கது ஒரு மாதிரி இருக்கு"

"ஒகே...ஒகே.உனக்கும்,பாப்பாக்கும் டிரஸ் எடுக்கதான் சுசிமா பணம் குடுத்துருக்காங்க.நீ உனக்கு புடிச்ச டிரஸ வாங்கிக்கோ பூவு."என்ற மீனா கடைக்குள் நுழைய அவள் பின்னே சென்றாள் பூவழகி.

உள்நுழைந்ததும் வலது பக்கம் மாடிப்படி அருகில் நின்றிருந்த மித்ரனை கண்டு அவனருகில் மீனா சென்றுவிட...பின்தங்கிவிட்டாள் பூவழகி.

"என்ன மித்ராண்ணா இந்தப் பக்கம்?எதாச்சு என்கொய்ரியா?என்னன்னா பூவ விட்டுட்டுப் போனதோட சரி...அதுக்கடுத்து காப்பகத்துக்கு வரவே இல்ல? "என கேள்விகளை அடுக்க...

தனது பெயரை அழைக்கக் கேட்டுத் திரும்பிய மித்ரன்,மீனாவைக் கண்டு புன்னகைப் புரிந்தான்.

"அடேயப்பா மூச்சு வாங்கிக்கோ மீனா...தண்ணீ எதும் வேணுமா?..."என அவள் தன்னைப் பேசவிடாமல் கேள்விகள் கேட்டதை கிண்டல் செய்தான் மித்ரன்.

"போங்கண்ணா" என மீனா சிணுங்க...

"அன்அபீஷியல் தான்...அத்தம்மா டிரஸ் எடுக்கனும்னு சொன்னாங்க அதான் கூட்டிட்டு வந்தேன்.
ஒரு கேஸ்ல பிஸி அதான் காப்பகத்துக்கு வர முடில... "என மீனா கேட்டவைகளுக்கு பதில் கூறியவன்.

"இது ஆராதனா தான...பூவழிகியையும் கூட்டிட்டு வந்துருக்கியா?" என மீனாவின் கையில் அமர்ந்து தன் குண்டு கண்களை உருட்டியவளைக் கண்டு கேட்டான்.

"ஆமாண்ணா பூவு பின்னாடி தான் வரா"என்றவள்..."ரோஹினிமா எங்க?"என்க

"செகன்ட் பிளோர்ல இருக்காங்க"

"ஓகேண்ணா" என்றவள்...குழந்தையுடன் செகன்ட் பிளோரை நோக்கி ஓடினாள் ரோஹிணியைக் காண.

மீனா நகர்ந்ததும்...பட்டிக்காட்டான் மிட்டாய்கடையை காண்பது போல் தன் பெரிய கண்களை விரித்து கடையை அளந்து கொண்டிருந்த பூவின் அருகில் சென்றான் மித்ரசிம்மன்.

- தொடரும்
 

Gomathi Nandhini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அகிலமும் நீயே!

அத்தியாயம் 8:


கண்களால் கடையை அளந்து கொண்டிருந்த பூவின் பின் நின்று செறுமினான் மித்ரன்.

தனக்கு வெகு அருகில் கேட்ட செறுமலில் பதறிய நெஞ்சை நீவி சரிசெய்தவாறு சத்தம் வந்த திசை நோக்கித் திரும்பியவள்,

மித்ரனைக் கண்டு சிறு மென்னகை புரிய,அதில் தானும் பற்கள் தெரிய சிரித்தான்.

"என்ன பூவழகி ஷாப்பிங் வந்துட்டு வெளியவே நிக்கிற?"

"அது சார்.".

"சரி வா." என மித்ரன் முன்னேற

அவன் பின் நகர்ந்தவாறு மீனாவைத் தேடியவளைக் கண்டு;அவள் ஆராவுடன் இரண்டாம் தளத்தில் உள்ளதை கூறியவன்;பூவை பெண்கள் ஆடைப் பிரிவிற்கு அழைத்துச் சென்றான்.

"என்ன டிரஸ் எடுக்கனும்? சொல்லு...ஜீன்ஸ், டீஷார்ட், ஸ்கார்ட், டாப்ஸ், சுடி "என அவன் ஆடை வகைகளை அடுக்க

"எனக்கு சேரீஸ் போதும் சார் " என்றாள் பூவழகி.

"இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே"என யோசித்தவன்.
"அட மித்ரசிம்மா,தமிழர் கலாச்சார உடையான சேலைய மறந்துட்டியேடா"
என மானசீகமாய் தன்னைக் குட்டிக்கொண்டு அவள் கேட்பதை எடுத்துக் காட்ட ஊழியரைப் பணித்தான்.

ஆறு சேலை அதற்கு மேசிங் பிளவுஸ், உள்பாவாடை மற்றும் தேவையான உள்ளாடைகளை தேர்வுசெய்திருந்தாள்.

அவை அனைத்தையும் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ள பில்லிங் செக்ஷன் நோக்கி இருவரும் நடக்க...

"காப்பகத்துல எந்த பிரச்சனையும் இல்லையே? இடம் செட் ஆயிடுச்சா!"
என வினவினான்.

"எந்த பிரச்சனையும் இல்ல சார்.அங்க இருக்க எல்லாரும் என்னையும் , ஆராவையும் அவங்க உறவாதான் பாக்கறாங்க."

"எங்கள காப்பாத்தி இதுபோல பாதுகாப்பான எடத்துல சேத்ததுக்கு என் ஆயுசுக்கும் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கேன் சார்.நீங்க மட்டும் இல்லனா நாங்க என்னவாகி இருப்போமோ!"

என உணர்ச்சி வசப்பட்ட பூவை

"ஹேய் பூவழகி கூல்.இனிதான் நீ திடமா இருக்கனும்.இது சிட்டி இங்க தெளிவான பெண்களையே ஈசியா ஏமாத்திடுவாங்க...

உன்ன நீயே பாதுகாத்துக்கிற துணிச்சல வளத்திக்கோ...யார நம்பியும் இருக்காத...ஆராவ ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவர நீ உன் கூட்ட விட்டு வெளிய வரணும்.

உனக்கு என்ன உதவி வேணுமோ அத நான் செய்றேன்."என மித்ரன் கூறிக் கொண்டிருக்க

அவன் இடதுகை மணிக்கட்டில் மென் ஸ்பரிசத்தை உணர்ந்து பேசுவதை நிறுத்திவிட்டு அங்கு பார்க்க...

பூவழகியின் வலது வளைக்கரங்கள் அவன் கையை இறுகப்பற்றி இருந்தது.நிமிர்ந்து முகம் நோக்க; அவளின் விழிவிரிப்பும், படபடப்பும்;அன்னிச்சையாய் மித்ரனை தங்களின் எதிர்திசையில் காணச் செய்தது.

அங்கு ஆறேழு வாலிபர்கள் கைகளில் விதவிதமான பேண்டுகள், கிழிந்த ஜீன்ஸ், டிரண்டி ஹேர்ஸ்டைலுடன் இவர்களைக் கடக்க ;
இதேபோல் வாலிபர்களால் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தால் இவர்களைக் கண்டு அஞ்சியவள்; தன்னைக் காத்துக்கொள்ள மித்ரனின் கையை கெட்டியாய் பிடித்து; அவனை ஒட்டி நின்று கொண்டாள்.

இதை கவனித்தவன் இத்தனை நேரம் நாம் போதித்தவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் வீண் என நொந்தான்.

இருப்பினும் முயற்சியை கைவிடாது அவளின் பயத்தைப் போக்க முடிவு செய்தவன்;அது என்றாவது ஒரு நாள் பலனைத் தரும் என நம்பினான்.

வார விடுமுறை நாள் என்பதால் கடையில் கூட்டம் அதிகமாய் இருந்தது.
ஜன வெள்ளத்தில் நீந்தி பில் கவுண்ட்டரை அடைந்த இருவரும் ; அங்கிருந்த நீண்ட வரிசையில் தங்களைப் புகுத்திக் கொண்டனர்.

இன்பாக்ஸில் குமிந்திருந்த செய்திகளை படித்திக் கொகூண்டிருந்த மித்ரன்;தன் காதில் விழுந்த "சப்" எனும் சத்தத்தில் திரும்பி பார்த்தான்.

எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர்; வரிசையில் பூவழகியின் பின் நின்ற முப்பது வயது இளைஞனை அறைந்திருந்தார்.

அவரின் சினம் சிரிதும் மட்டுப்படாமல் மேலும் அவனைத் தாக்கியவர் ;

" ஏன்டா நீயெல்லாம் அக்கா தங்கையோடப் பிறக்கலையா? நானும் பாதுட்டே இருக்கேன்.அந்தப் பொண்ணோட முதுகுல உரசிட்டே இருக்க? " என்றவர் பூவழகி இருந்த திசையில் கைகாட்ட...

அதில் அதிர்ந்த மித்ரன் அவள் முகம் பார்க்க...கண்கள் கண்ணீரில் நிரம்பி இருக்க...அவள் தன்னை பிடித்திருந்த கையில் குழுமையை உணர்ந்தான்.

" ஏன்மா பாப்பா! அவன் உரசுனப்போ திரும்பி ஒரு தடவ மொறச்சிருக்கலாம் இல்ல உன் வீட்டக்காரர்ட்ட சொல்லிருக்கலாம்ல "என பூவழகி மித்ரன் இருவரையும் பார்த்தார்.

பெரியவர் கூறியதைக் கேட்டு பதறிய பூவு; அவர் மொழிந்ததை மறுத்து கூற முயல ; அதைத் தடுத்தன மித்ரனின் "இனி கவனமா பாத்துக்கிறேன் ஐயா.உங்க உதவிக்கு ரொம்ப நன்றி."என்ற வாக்கியங்கள்.

யாரும் அறியாமல் அவனைத் தன் கைபேசியில் புகைப்படம் எடுத்து ; அதனை முன்னாள் ரௌடி மாரிக்கு அனுப்பினான்.

மித்ரனின் கண்கள் உரசியவனை தீயென எரித்ததில் இருந்து நாளை செய்திதாளில் இவனின் இரங்கல் செய்தி வர வாய்ப்புள்ளது என அவனை அறிந்தவர் உணர்ந்திடுவர்.

தனது முறை வர வேகமாய் பணம் செலுத்தி உடைகளை வாங்கிக் கொண்டு அவ்விடம் விட்டு
கடையின் நுழைவாயிலுக்கு பூவை அழைத்துச் சென்றான்.

கண்கள் தாண்டி கன்னம் வழிந்த கண்ணீரைத் துடைக்காமல் ;
ஏதோ சிந்தனையில் இருந்த அவளை..."பூவழகி! மீனாவும் ,ஆராவும் வராங்க...கண்ணீரத் தொடச்சிக்கோ"
என்றவனின் வார்த்தையில் சுயம் பெற்றவள் ; முகத்தை அழுந்தத் துடைத்து, இயல்பாய் வைத்துக் கொண்டாள்.

தாங்கள் பர்சேஸ் செய்தவைகளுக்கு இரண்டாம் தளத்திலேயே பணம் கட்டி பொருளை வாங்கிவிட்டு பூவழகியை நோக்கி வந்த மீனா ; தனக்கு பின் நின்ற ரோஹிணியைச் சுட்டிக் காட்டியவள்;

"பூவு! இவங்க தான் ரோஹிணி அம்மா.நம்ம காப்பகத்தோட சேர்மன்.என் ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு அடுத்து 0.00000% ஹேட்டர்ஸ் இருக்கது இவங்களுக்கு மட்டும் தான்னாப் பாத்துக்கோயேன்."என அங்கலாய்க்க

அதில் செல்லமாய் மீனாவை முறைத்த ரோஹிணியைக் கண்டு தன் இதழ் பிரித்து சிரித்த பூவு "வணக்கம்மா" என்க

தலையசைத்து ஏற்ற மூத்தவரின் விழிகள் மித்ரனின் கையைப் பற்றி இருந்த பூவின் விரல்களில் பதிய ;

அதை உணர்ந்தவள் தன்னைத் திட்டிக்கொண்டேப் படக்கென கையை எடுத்து விட்டு; மீனாவின் தோளில் தூங்கியிருந்த ஆராவை வாங்கிக் கொண்டாள்.

"ஆராக்குத் தேவையானதை வாங்கிட்டேன்.நீ உனக்கான டிரஸை எடுத்திட்டியா?" என மீனா வினவ

" ஹான்பா எடுத்திட்டேன்.மித்ரன் சார் தான் பணம் குடுத்தார்.எவ்ளோ ஆச்சுனுக் கேட்டு அவருகிட்ட பணம் குடுத்திடு " என்றாள்

கலகலவென சிரித்த மீனா "ஹய்யோ பூவு! மித்ரன் அண்ணாவோட அத்த தான் ரோஹிணி அம்மா.He is one of the trustees in saratha trust.அதனால நம்ம டிரஸ்ட்ல இருக்கவங்களுக்கு அண்ணா செலவு பண்ணது டிரஸ்ட் பண்ட்ல வந்திடும்."

"ஓ"என்றவள் அமைதியாகிட

"பர்சேஸ் முடிஞ்சதுல நம்ம போலாமா அத்தமா "என்ற மித்ரன் கேள்விக்கு சரி என ரோஹிணி தலை அசைக்க ; மற்ற இருவருக்கும் கையசைத்து விடைப்பெற்றனர்.

தன் கையில் இருந்த பைகளை பூவு வாங்கிக் கொள்ள; தனது ஸ்கூட்டியைத் திருப்பி நிறுத்தி அவளையும், ஆராவையும் ஏற்றிக் கொண்டு காப்பகம் நோக்கி விரைந்தாள் மீனா.

____________________________________

அத்தமாவின் முகத்தில் யோசனை பரவியுள்ளதை ரியர்வியூ மிரர்ரில் கண்ட மித்ரன் என்னவென வினவ

"இப்ப நம்ம மீனாவோட பாத்தோமே ஒரு பொண்ணு; அவள பத்தி தான் ஒரு வாரத்துக்கு முன்ன சொன்னியா?" என கேட்டார் ரோஹிணி.

"ஆமா அத்தமா.அவ பேரு பூவழகி.ரொம்ப பயந்த சுபாவம் உள்ள பொண்ணு "என தொடங்கி இன்று கடையில் நடந்தவை அனைத்தையும் ஒப்பித்தான்.

" இதேப் போல எத்தனையோ பெண்கள நம்ம தைரியம் சொல்லி தனியா உலகத்த எதிர்கொள்ள செய்திருக்கோம்.அதே மாரி இவளையும் தன்னம்பிக்கை உள்ள ஒருத்தியா மாத்துவோம் மித்ரா"

"இல்ல அத்தமா.எனக்கு நம்பிக்கை இல்ல.தன்ன தப்பா தொட்ட ஒருத்தன் கிட்ட சின்ன எதிர்ப்பக் காட்டவே பயப்படுறா...இவளுக்கு துணிச்சல வரவைக்கிறது ரொம்ப கஷ்டம்."

"இவளையும், இவ பொண்ணையும் காலமெல்லாம் கண்ணுக்குள்ள வச்சுப் பாத்துக்கிற ஒருத்தன் கிடச்சா இவள அவன்கிட்ட ஒப்படச்சுரலாம்."என பெரு மூச்சு விட்ட மித்ரனை

"கவலப்படாத மித்ரா.கடவுள் காரணமில்லாம யாரையும் சந்திக்க வைக்க மாட்டார்.
அவ உன் கண்ல படக் காரணம் ; நீ அவளக் காப்பாத்தி அவளுக்கானத் துணையத் தேடித் தரனும் அப்பிடினா... அந்த துணையையும் சீக்கிரம் உன்னக் காணச் செய்வார்."என சமாதானம் செய்தார்.

"சரி அத்தமா"

வீட்டை அடைந்த இருவரும் பைகளை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல ;மதிய உணவைத் தயாரிக்க நேரேக் கிட்சனுக்குள் நுழைந்தார் ரோஹிணி.

சோபாவில் உட்காந்தவன் கைபேசி ஒலிக்க அட்டெண்ட் செய்து காதில் வைத்து "ACP மித்ரசிம்மன் ஹியர் "என்க

எதிர்முனை "சார்.நான் இறந்து போன ராம்குமார் பிஏ பேசுறேன்.அவரோட கொலைக்குப் பின் மறஞ்சிருக்க ஒருத்தரப் பத்தி உங்கட்ட சொல்லனும்.இன்னிக்கு ஈவுனிங் 5கு AAA காபி ஷாப்ல மீட் பண்ணுவோம் " என்றது.

"சரி" என காலைக் கட் செய்தவன் மனம் பூவழகியிடம் இருந்து ராம்குமாரின் கொலை வழக்கிற்கு தாவியது.

--- தொடரும்.
 
Status
Not open for further replies.
Top