All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நந்து சுந்தரமின் ‘அகிலமும் நீயே!!!’ - கதை திரி

Status
Not open for further replies.

Gomathi Nandhini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அகிலமும் நீயே!!!

அத்தியாயம் 9:

மாலை 5 மணி...
AAA காபி ஷாப்...


தனது பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திய மித்ரசிம்மன், கடையின் கண்ணாடி கதவுகளை தள்ளி உள் சென்றான்.

இவனின் வருகைக்கென காத்திருந்த ராம்குமாரின் பிஏ பாலன்... தான் அமர்திருந்த இடத்தில் இருந்தே கை உயர்த்தி மித்ரனின் கவனத்தை தன்னை நோக்கி ஈர்த்தார்.

அதை கண்டு அவரின் டேபிளை அடைந்து காலியாய் இருந்த மற்றொரு நாற்காலியில் அமர்ந்தான் மித்ரன்.

"Welcome sir.. I am balan... Late Mr. Ramkumar's PA. Anything to drink sir?"

"No thanks Mr.Balan."ராம்குமார் கொலைக்குப் பின் மறஞ்சிருக்க ஒருத்தரப் பத்தி சொல்லனும்னு சொன்னிங்க... அது யாரு? ஏன் போலீஸ் இன்வெஸ்ட்டிகேஷன் அப்போ இந்த நபரைப் பத்தி நீங்க ஏதும் சொல்லல?"

"உங்க எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்றேன் ACP சார்."என்ற பாலன்..." ராம்குமார் சார்கு ஒரு பொண்ணு இருக்கா "என கேள்வியாய் மித்ரனை பார்க்க...

"ஆமா... கனடால PG படிக்கிறா .. ராம்குமார் இறக்க ஒரு வாரத்துக்கு முன்ன அந்த பொண்ணுக்கு அஃசிடென்ட் ஆகிருக்கு.அதுல அவ கால் பிராக்சர் ஆனதால டிராவல் பண்ண வேண்டானு டாக்டர்ஸ் அட்வைஸ் பன்னிருக்காங்க. அதுனால அவளால தன்னோட அப்பாவோட இறுதி சடங்குல கலந்துக்க முடியாம போய்ட்டதா
Mr. Vinay ramkumar ஸ்டேட்மெண்ட் குடுத்துருக்கார்."

"இது பொய்... ராம்குமார் சாரோட இளைய பொண்ணு வைஷ்ணவி எந்த நாட்டுக்கும் படிக்க போகல.."

"என்ன சொல்றிங்க mr.பாலன்... வைஷ்ணவி கடந்த ஒரு வருஷமா கனடால மாஸ்டர்ஸ் பண்றது சுற்று வட்டாரத்துல எல்லாருக்கும் தெரிஞ்சது தானே..."

"இல்ல சார். தன்னோட கவுரவத்தை காப்பாத்திக்க டிரைவர் கூட ஓடி போன வைஷ்ணவி கனடால படிக்கிறதா பொய் சொல்லி வச்சுருந்தாங்க ராம்குமார் பேமிலி."

இதை கேட்டு அதிர்ந்த மித்ரன்... "என்ன நடந்ததுனு முழுமையா சொல்லுங்க mr.balan"என்க...

ஒன்றரை வருடத்திற்கு முன் நடந்தவைகளை சொல்ல தொடங்கினார் பாலன்.

இளங்கலை கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்த வைஷ்ணவியும் ராம்குமார் வீட்டு கார் டிரைவர் சுகுமாரும் காதலித்து வந்தனர்.

இதை பற்றி அரசல் புரசலாய் ராம்குமாரின் காதிற்கு வர... சுகுமாரை வேலையில் இருந்து நீக்கிவிட்டர்.

இதை பற்றி சுகுமார்; வைஷ்ணவியிடம் கூற...தன் தந்தைக்கு தனது காதல் தெரிய வந்ததை எண்ணி பயந்த வைஷ்ணவி மறுநாளே சுகுமார் உடன் ஊரை விட்டு ஓடிவிட்டாள்.

வைஷ்ணவி தன்னை ஏமாற்றி சென்றதை தாங்கமுடியாமல் பயங்கர கோபத்துடன் இருந்த ராம்குமார் இருவரையும் (வைஷ்ணவி, சுகுமார் ) தேடிப்பிடித்து கொலை செய்ய ரௌடி கணேஷை அனுப்பிவைத்தார்.

தனது ஆட்களுடன் இவர்களை தேடிச்சென்ற கணேஷும் ஓரிரு வாரங்களில் கோவை பேருந்து நிலையத்தில் இருவரையும் கண்டதாகவும், ராம்குமார் கூறியது போல ஊட்டி போகிற வழியில் இருக்கும் அடர்ந்த வனத்தில் வைத்து உயிருடன் எரித்து சம்பலாக்கியதாகவும் கூறினான்.
என கூறிக் கொண்டிருந்த பாலனை

"Oh my god!!"என்ற மித்ரனின் அதிர்ச்சி குரல் நிறுத்தியது.

மித்ரன்,"நீங்க சொல்றத வச்சு பார்த்தா ... வைஷ்ணவியும், சுகுமாரும் கணேஷ் கையால இறத்துட்டாங்க. உயிரோட இல்லாத ரெண்டு பேரால இந்த கேஸ்க்கு என்ன எவிடென்ஸ் கிடைக்கப் போகுது mr. பாலன்".

பாலன்,"வைஷ்ணவியும், சுகுமாரும் உயிரோட தான் சார் இருக்காங்க."அவுங்கள கணேஷ் கொலை செய்யல".

என்ற பாலன் தனது ஸ்மார்ட் போனில் இருந்த ஒரு போட்டோவை மித்ரனிடம் காட்டினார்.

பாலன்,"நேத்திக்கு காலேல நான் பேமிலியோட NEWBIES MALL க்கு போயிருந்தேன்."

பாலன்,"அங்க வச்சுதான் இவுங்கள பாத்தேன். அதுக்கு முன்ன வர நானும் இவுங்க இறந்துட்டதா தான் நெனச்சுட்டு இருந்தேன் சார்."

மித்ரன்,"இந்த போட்டோவ எனக்கு சென்ட் பண்ணுங்க.. என்றவன் தனது மொபைல் நம்பரை கூறினான். "

"Mr. பாலன்... இந்த போட்டோல இருக்கது வைஷ்ணவியும், சுகுமாரும் தானா?... ஒரு வேல அவுங்கள போல தோற்ற ஒற்றுமை இருந்ததால நீங்க அவுங்கதான்னு நெனச்சிட்டீங்களா?"

பாலன், "நோ சார். I am damn sure about this.வைஷ்ணவியோட 10 வயசுல இருந்து நான் அவள பாத்துட்டு இருக்கேன் சார். அதேபோல ராம்குமார் சார் கிட்ட சுகுமார் வேலைக்கு சேர்ந்ததுல இருந்தே அவனோடயும் எனக்கு நல்ல பழக்கம் சார்.He is very obedient boy"

"அதுனால என்னால அடிச்சு சொல்ல முடியும் இது வைஷுவும், சுகுமாரும் தான் "

"ஓகே மிஸ்டர் பாலன்... வைஷ்ணவியும், சுகுமாரும் உயிரோட இருக்கதுக்கும் ராம்குமார் கொலைக்கும் என்ன சம்மந்தம்?" என மித்ரன் வினவ

தனது வழுக்கையில் வழிந்த வேர்வையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே...

"ராம்குமார் சாரோட கொலைக்கு பின்னாடி இருக்குற மாஸ்டர் பிரெயின் சுகுமார்னு நெனக்கிறேன் சார்".என்றார் பாலன்.

"என்ன பாலன் சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி Sugumar is very obedient அப்படினு நீங்களே அவர பத்தி நல்லதா சர்டிஃபிகேட் கொடுத்துட்டு... இப்போ அவர் தான் கணேஷ வச்சு ராம்குமாரை கொன்னுருப்பாருனு சொல்றீங்களே"

"பிறக்கும் போது எல்லாரும் நல்லவங்க தானே ACP சார்.சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் ஒரு மனுஷனை வெவ்வேறு மாதிரி மாத்துது. அப்படி பார்த்தால் சுகுமாரும் அவரு காதலிச்ச பொண்ணு கூட நல்லா வாழனும்னு தன்னோட காதலை எதிர்த்த ராம்குமாரை ஏன் கொலை பண்ண நினைத்திருக்கக் கூடாது."

"நீங்க சொல்ற மாதிரி பார்த்தாலும் தனக்கு படியளக்கும் ராம்குமார் சொல்வதைக் கேட்காமல்... வேலைவெட்டி இல்லாத தனக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத சுகுமார் சொல்றத கேட்டு கணேஷ் எப்படி ராம்குமாரை கொலை செய்திருக்க முடியும்."

"கணேஷுக்கும் சுகுமாருக்கும் ஏற்கனவே தொடர்பு இருக்கு சார். சுகுமாரோட அண்ணணும் கணேஷும் நண்பர்கள் சார். கணேஷ் செஞ்ச கொலைக்காக சுகுமாரோட அண்ணன் ஜெயிலில் இருக்கான் சார்.
கணேஷ் சொல்லிதான் ராம்குமார் சார் சுகுமாரைத் தன்னோட கார் டிரைவரா வேலைக்கு சேர்த்து கிட்டார்."

"அதோட ராம்குமார் இறந்ததும் மிஸஸ் ராம்குமாரும், வினய் ராம்குமாரும் தங்களை ஏத்துகிட்டா சொத்துல பாதி வைஷ்ணவிக்கு வரும் அது இன்டேரக்டா சுகுமாருக்கு தானே போகும்.

அதுல ஒரு அமௌன்ட் கொடுக்கிறதா கூட சுகுமார் கணேஷை ஆசை காட்டி இந்த கொலையை செய்ய வச்சிருக்கலாம் சார் ."

"ஹா... ஹா... என்ன மிஸ்டர் பாலன் ஏதோ நீங்களே சுகுமாருக்கு பிளான் போட்டு குடுத்த மாதிரி இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க."

"ஐயோ ஏசிபி சார்!! நான் ராம்குமார் சார் இந்த "RAM SOLUTIONS" சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பித்ததிலிருந்தே அவருக்கு கீழே வேலை செஞ்சிட்டு இருக்கேன். அதனால நான் அவருக்கு ரொம்ப விசுவாசமான தொழிலாளி. ராம்குமார் சார் வெளியே எப்படி இருந்தாலும் என்ன போல சில தொழிலாளிகளுக்கு ரொம்ப செஞ்சிருக்கார். என் பையனோட படிப்புக்கும், என் பொண்ணோட கல்யாணத்துக்கும் ஒரு தொகை கொடுத்து உதவி செய்தவர். இதுமாதிரி பல பேருக்கு அவர் உதவி பண்ணிருக்கார் . "

"அவருடைய இறப்பு எங்களைப்போல சில பேருக்கு பெரிய இழப்பு சார்".

"அவரோட கொலைக்கு பின்னால யார் இருக்காங்கறது வெளிச்சத்துக்கு வரணும் சார்".

"சுகுமாரும் படிக்காத வெகுளித்தனமான பையன் கிடையாது. அவன் பிஏ English lit.. முடிச்சுட்டு வேற எந்த வேலையும் கிடைக்காமல் சும்மா வெட்டி தனமா சேரியில சுத்திட்டு இருந்த பையன் தான்."

"அவனுக்கும் வசதியா வாழணும்னு ஆசை இருந்திருக்கலாம். அதற்கு தடையாக இருந்த ராம்குமார் இல்லாமல் போய்விட்டால் தன்னோட ஆசை நிறைவேறும்னு கூட தன் அண்ணன் நண்பனான கணேஷ வச்சு ஏதாவது செஞ்சு இருக்கலாம் இல்ல சார்".

"ஓகே Mr.பாலன். கடைசியா ராம்குமார் இறக்க ரெண்டு நாளைக்கு முன்னாடி கணேஷுக்கும், அவருக்கும் ஏதோ வாய் தகராறு வந்தததா வினய் சொன்னாரே அது எதனால்னு உங்களுக்கு தெரியுமா?"

"வைஷ்ணவி,சுகுமாரை எரித்து சாம்பலாக்கிய கணேஷ் ராம்குமார் சார் கிட்ட அவனுக்கு பேசி இருந்த பணத்தை கேட்டப்போ....
உன்ன நம்பி தானே சுகுமார வேலைக்கு வச்சேன் அந்த நாய் என் பொண்ணை இழுத்துட்டு போய் எனக்கு பெரிய அவமானத்தை தந்துருச்சு அதற்கு பிராயச்சித்தமா இந்த கொலையை செய்ததாக வச்சுக்கோ இதுக்கான கூலியை உனக்கு தர முடியாது அப்படினு கோபமா சொல்லிட்டார்."

"அதோட அவனுக்கு எந்த வேலையும் குடுக்காம... அவன் ஏரியால கணேஷுக்கு எதிரியான வெங்கியை தன்னோட அடி ஆளா வச்சுக்கிட்டார் ராம்குமார் சார்".

"அதனால கோபமான கணேஷ் ரெண்டு, மூணு தடவ ஆபீஸ்க்கு வந்து தகராறு பண்ணான். கடைசியா அவரு வீட்டுக்கு போய் தகராறு பண்ணி இருக்கான்."

"மிஸஸ் ராம்குமாருக்கும்,வினய் ராம்குமாருக்கும் தெரியாத வைஷ்ணவி சுகுமார் கொலையைப் பற்றிய விஷயங்கள் கூட உங்களுக்கு தெரிஞ்சிருக்கே
Mr. பாலன்... உங்களுக்கும் ராம்குமாருக்கும் உள்ள ரிலேஷன்ஷிப் எப்படி இருந்துச்சு?"

"இது நான் போலீஸ் இன்வெஸ்டிகேஷன்ல சொன்னதுதான். ராம்குமார் சார் அவர் மனைவி, மகனுக்கு அடுத்தபடியாக அவர் குடும்ப பிரச்சனைகளை பகிர்ந்துக்கிறது என்கிட்ட தான் சார்."

"அப்படி தெரிஞ்சிகிட்ட விஷயங்கள்தான் இது எல்லாமே. அதனாலதான் குறிப்பா எனக்கு சுகுமார் மேல சந்தேகம் எழுந்தது. அதுவும் ராம்குமார் இறந்த ஒரு வாரத்திலேயே வைஷ்ணவியும், சுகுமாரும் இதே ஊர்ல எந்த பயமும் இல்லாம எல்லா மக்களோடு மக்களாக கலந்ததில் எனக்கு ஒரு டவுட் இருக்கு சார். இதை பத்தி உங்களுக்கு தெரிய படுத்த நினைச்சேன்."

"ஓகே மிஸ்டர் பாலன். நீங்க சொன்ன விஷயங்கள் எல்லாமே இந்த கேஸ்க்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்னு நினைக்கிறேன். தேங்க்யூ."

"ஓகே சார். I shall take the leave "என்ற பாலன் இருக்கையில் இருந்து எழுந்து கடையினின்று வெளியேறினார்.

இறந்துபோன ராம்குமாரின் பிஏ பாலன் கூறியனவற்றை
அசைப்போட்ட மித்ரன் சூடான பிளாக் டீயை வரவழைத்து அருந்தினான்.

இதில் ஒரு தெளிவு பெற தான் உடனடியாக வினய்யை தொடர்பு கொண்டால் முடியும் என முடிவு செய்தவன் ராம்குமாரின் மகன் வினய் ராம்குமாருக்கு அழைத்தான்.

வினய்,"ஹலோ சொல்லுங்க ACP சார்."

மித்ரன், "ஹா...வினய் உங்ககிட்ட சில விஷயங்கள் கிளாரிஃபை பண்ண வேண்டி இருக்கு.இப்போ வீட்டுக்கு வரேன்"

"ஓ சாரி ACP சார். நான் இப்போ பெங்களூர்ல இருக்கேன்.
நாளைக்கு மதியம் சென்னைக்கு வந்துருவேன்.அதுக்கப்பறம் நம்ம மீட் பண்ணலாமா?"

"ஓகே வினய்.I will meet you at your home sharply by 6pm tomorrow."

"ஓகே சார்.Thats fine."

காலை கட் செய்து ஸ்மார்ட் போனை பாக்கெட்டில் வைத்த மித்ரன் வீட்டை நோக்கி வண்டியை விரட்டினான்.

____________________________________

ஆதவன் தன் பணிகளை முடித்துவிட்டு மேற்கே ஓய்வெடுக்கும் முன்னிரவு நேரம்.

சாருமதி காப்பகத்தில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் இருந்த விநாயகர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தனர் மீனாவும் பூவழகியும்.

"கோவிலுக்கு ஸ்கூட்டிலயே வந்து இருக்கலாம். நீதான் நடந்து போகனும்னு சின்ன புள்ள மாதிரி அடம்பிடிச்ச...! காப்பகத்துக்கு போக இன்னும் 15 நிமிஷம் நடக்கணும்.
எனக்கு காலெல்லாம் வலிக்குது பூவு..." என மீனா சோர்வாய் ஒரு இடத்தில் அமர்ந்து விட...

"ஐயோ மீனு குட்டி இப்டி நடுவழில உட்கார்ந்துட்ட வா வா...
ஆரா பாப்பா வேற அங்க இருக்குற பெரியவங்கள எல்லாம் பாடாப்படுத்திட்டு இருப்பா...
சீக்கிரம் போய் அவங்கள காபாத்துவோம்."

அரைக்கண்ணால் பூவழகியை முறைத்துக் கொண்டே மீனா எழுந்து கைகால்களில் சோம்பல் முறிக்க...

"என் செல்ல குட்டில இன்னும் கொஞ்சம் தூரம் தான் சீக்கிரம் போய்டலாம்."

சரி என்றவாறே மீனாவும் பூவழிகியுடன் இணைந்து நடக்க தொடங்கினாள்.

இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டே நடக்க பூவழகி தன்னை யாரோ ரொம்ப நேரமாய் உற்றுப் பார்ப்பது போல் இருக்க சடாரென பின்னால் திரும்பி பார்த்தாள்.

முகத்தில் கருப்பு துண்டை கண்கள் மட்டும் தெரியுமாறு சுற்றிக்கொண்டு பூவழகியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு ஒருவன் நடந்து வருவதைக் கண்டு அஞ்சினாள் அவள்.

"மீனு! மீனு! ஒரு நிமிஷம் பின்னாடி திரும்பி பாரேன்"என்க

பூவழகி கூறியதை கேட்டு பின்னால் திரும்பிப் பார்த்த மீனா..."பின்னாடி என்ன பூவு?அங்கு யாரும் இல்லையே!"என்றாள்.

மறுபடியும் பூவழகி திரும்பிப்பார்க்க அதே உருவம் ஒரு சுவற்றிற்கு பின்னால் இருந்து வெளி வந்து அவளை கவனித்தது.

அதில் பயந்த பூவழகி மீனா பார்க்கும் பொழுது மறைந்து கொண்ட அவன் தான் பார்க்கும் போது தன்னை தொடரத் தொடங்கியதை உணர்ந்தாள்.

மீனாவின் கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு குடுகுடுவென மூச்சுவாங்க ஓடியவள் நின்ற இடம் சாருமதி காப்பகம்.

மீனா,"ஏய் என்ன ஆச்சு.ஏன் இப்டி ஓடி வந்தோம் "

பூவு,"ஒன்னும் இல்ல சும்மாதான் ரொம்ப நாளாச்சு ஓடி....அதான் ஓட முடியுதானு செக் பண்ணேன். "

"ஹேய்..உனக்கு ரொம்ப கொழுப்பு தாண்டி "என்ற மீனா உள்ளே சென்றுவிட...

தான் நின்ற இடத்தில் இருந்து திரும்பி பார்த்த பூவழகிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாய் அங்கு நின்றிருந்தான் தனது முகத்தில் கருப்பு துண்டை கட்டி இருந்த நெடியவன்.

- தொடரும்.
 
Status
Not open for further replies.
Top