All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நாகாவின் ‘மயிலிறகு மங்கை’ - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்பூக்களே,
நான் நாகா , உங்களுடன் புதிதாக இணைந்திருக்கிறேன் , இந்த எழுத்து பயணத்தில்.
நான் எழுதும் கதைகள், உங்கள் மனதில் ஏதோ மூலையில் தாக்கத்தை, ஒரு விதையை விதைத்தால் அதுவே எனது மாபெரும் வெற்றி.
மிக்க நன்றி.

என் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த, நான் எழுதியது என மகிழக்கூடிய ஒரு கதை இந்த மயிலிறகு மங்கை .
ஒரு நடுத்தர நிலை பெண்ணின் வாழ்கையை இந்த மயிலிறகு மங்கை வாழ்ந்து காட்டுவாள், வாருங்கள் அவளுடன் படிப்போம்.
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29383
மயிலிறகு மங்கை
மங்கை 🌹 1


அடர்ந்த காரிருள், லேசாக மழை தூரிக் கொண்டிருந்தது.

காற்றும் சற்று தன் பலத்தை காட்டி கொண்டு தான் இருந்தது....

மரகதத்திற்கு, படப்படப்பு அதிகரித்து கொண்டே போக, வாசல் வழியாக தெருவை பார்த்தபடியே, அங்கும், இங்கும் நடந்து கொண்டிருந்தாள்.......

தெரு முழுவதும் இருட்டு படர்ந்திருக்க,தெரு விளக்கும் பசியில் மயங்கி இருந்தது....

வீட்டின் வாயிலை பார்த்து கொண்டிருந்தவர் ,கண்கள் உற்று நோக்க...

தூரத்தில், நனைந்து கொண்டு யாரோ,வருவது போல் இருந்தது,

பட பட வென சாரல் அடிக்க தலையில் கைவத்தப்படி ஒரு பெண் வேகமாக நடந்து வருவதை பார்த்தார் மரகதம்,

அவளாகத்தான் ,இருக்கும் ,என சற்று நிம்மதி ஆகவும்,
வேகமாக வந்தவள் வீட்டின் வாயிலுக்கு வர, நிம்மதி முழுதும் வந்தது, மரகதத்திற்கு.

"வாம்மா , மங்கா,ஏன்மா இன்னிக்கு இவ்ளோ
லேட் ஆகிட்டு ,நான் பயந்தே போயிட்டேன் மா" என்றார் மரகதம் தாயிற்குரிய பதட்டத்தோடு.

மங்கை, ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்துப் பெண், அழகு என்று வர்ணிக்க முடியாவிட்டாலும்,
அவள் முகத்தை பார்த்தால், அனைவருக்கும் பிடிக்கும், முகத்தில் ஒரு நேர்மறை ஒளி இருக்கும்,
வாயின் சிரிப்பில் ஒரு கஞ்சதனமும், பேச்சில் தாராளமான தன்னம்பிக்கையும் இருக்கும்....

அவளது தோற்றம் மயிலாக இருப்பினும், மனதில் சிங்கமாக தன்னை உருவகப்படுத்தி வைத்திருக்கும் ,விந்தைக்காரி இவள்

"அம்மா ,நீ சின்ன விசயத்துக்கும் பயந்து போற ம்மா ...."

"மங்கை உனக்கு என்ன , உன்ன வெளியில் அனுப்பிட்டு, நீ வீட்டுக்கு வர்ற வரைக்கும் நான் படுற பாடு எனக்கு தான் தெரியும்....."

"அம்மா, நீ உன் புள்ள மங்காவ, பத்தி கவலபடாதமா ,என்னை நான் பத்திரமா பாத்துகிடுவேன்....."

"ஏதோ ,சொல்லுற , இந்த சமூகத்த நினைச்சு, பொட்டப்புள்ளய வைச்சு இருக்கிறவங்க எப்படி கவலைப்படாம இருக்க...."

"சரி சரி தினமும் இதே பொலம்பல் தானா , விடுமா....."

"சரிம்மா,கோமூவ எங்க? "

"உனக்காக தான் காத்திருந்தா,நீ வர லேட் ஆகும், காலையில் பள்ளி க்கு போகனும்னு சொல்லி, தூங்க சொல்லி ட்டேன்......"

"அட டா ,தூங்கிட்டாளா! ".

"ஏன்டி, உன் தங்கச்சி ஏதாவது கேட்டுருந்தாளா.......ஏன்னா காரணம் இல்லாம உன்ன தேட மாட்டாளே ......"

"அப்படி யெல்லாம் இல்லை, என் தங்கச்சி என்ன எப்போதும் தேடுவாம்மா"

"விட்டு கொடுக்க மாட்டீயே......சரி , சரி புடவைய மாத்திட்டு, தலைய துவட்டிட்டு வா,நான் சாப்பாடு எடுத்து வைக்கேன்....."

"சரிம்மா" ,என்றவள் தன் அறைக்குள் நுழைய அங்கு கோமூ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

கோமதி, மங்கையின் தங்கை , அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறாள்,மிகவும் சுட்டி படிப்பிலும், சேட்டையிலும்....

தன் தங்கை தூங்கும் அழகை சிறிது நேரம் ரசித்து விட்டு பின் , உடையை மாற்றினாள் , தோகை போல் இருக்கும் தன் கூந்தளை துவட்டும் போது தன்னை அறியாமல் தன் கண்களில் கண்ணீர் வடிய, அதை கண்ணாடி யில் பார்த்தவள் சட்டென , முடியை இரண்டு பக்கமும் சிறு அளவு எடுத்து பிண்ணி போட்டு விட்டு வெளியே வந்தாள்...

சாப்பாடும், தயாராக இருக்க,சாப்பிட உட்கார்ந்தவளுக்கு ,சாப்பாடு தான் இறங்க வில்லை.....

தட்டில் ,உள்ள சோற்று பருக்கையில் தன் கையால்,கோலம் போட்டப்படி எதையோ யோசித்து கொண்டிருந்தவளை...

"மங்கா , சாப்பிடுடாமா,என்ன யோசனை? என்னாச்சு?, வெளியே ஏதும் பிரட்சனையா"

"இல்லம்மா , நாம இங்கு வந்து இன்னையோட,ஒரு வருஷம் ஆகிட்டு மா..." என கூற இப்போது மரகதத்தின் முகமும் வாடி போய் விட்டது.....

"அம்மா, நீ சாப்டியா மா .......". என தன் அன்னையை உற்று நோக்கி கேட்டாள் மங்கை.

"நீ வராம நான் என்னைக்கு கண்ணு சாப்ட்டு இருக்கேன்" என்று மரகதம் சொல்லி முடிப்பதற்குள், அவள் வாயில் ஒரு உருண்டை சாதத்தை உள்ளே திணித்தாள் மங்கை....

பின் மரகதமும் தன்மகளுக்கு ஊட்ட இருவரும் சாப்பிட்டு எழுந்தனர்.....

மரகதம், சமையல் கட்டை சுத்தம் செய்ய போக,

மங்கையும்,தன் அறைக்கு சென்றாள்...

அறைக்கு சென்றவள், ஏதோ ஒன்றை பரப்பரப்பாக தேட , அது அவள் கையில் சிக்கவில்லை....

எனக்கு தெரியும், இந்த கோமு தான் எங்கையாவது தூக்கி வைத்திருப்பாள், என தன் தங்கை யை செல்லமாக, மனதிற்குள் திட்டி விட்டு மீண்டும் தேடினாள்.

கடைசியாக , தான் தேடியது , தன் தங்கையின் பள்ளி புத்தங்கள் அடுக்கி வைத்திருக்கும் செல்பில் இருந்தது......

ஆம் கோமதி தான் அந்த வேலையை பார்த்தது,

கோமதி வீட்டை சுத்தப்படுத்துவதில், கில்லாடி, கை தேர்ந்தவள்......

ஆனால், மங்கையிடம் அது கிடையாது என்பதல்ல, நேரமின்மை என்பதே சரியாக இருக்கும்.....

ஒரு வழியாக எடுத்து விட்டாள், தான் படித்து கொண்டிருந்த நாவலை,
ஆம் , மங்கைக்கு நாவல்கள் என்றால் மிகவும் பிடிக்கும்......

புத்தகங்களே ஆத்ம திருப்தியின் வழி என்பாள்....

ஏதோ ஒரு விலைமதிக்க முடியாத, பொக்கிஷம், கிடைத்தது போல் அதை பார்த்தவுடன் மங்கைக்கு அவ்வளவு மகிழ்ச்சி....

கட்டிலில் படுத்தவள், கையில் அகிலனின் நாவலான சித்திரப்பாவையை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாள்...

மரகதம் அனைத்து வேலையையும் முடித்து விட்டு, அறையினுள் நுழைய...
மங்கையின் நிலை கண்டு சிரித்துவிட்டாள் .....

ஆம் மங்கை வாசித்து கொண்டு இருந்த புத்தகம் அவள் முகத்தில் கிடக்க, கைகள் இரண்டும் அப்படி யே இருந்தது.

மரகதம் , புத்தகத்தை, எடுத்து விட்டு, போர்வையை மூடி விட்டு, தானும் படுத்துக் கொண்டாள் ,

சாரலும் , குளிர் காற்றும், இவர்களுடன் இணைந்து
உறங்கி போனது.....

மங்கை தொடர்வாள்........🙏
 
Last edited:

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 2​

இரவு தூவிய சாரல் , குளிர் காற்று , அனைத்தும் அடித்து ஓய்ந்து விட்டது.

இரவும் கடந்து விட, காலை உதய மானது.

மங்கை, எப்போதும் காலை யிலேயே எழும்பும் பழக்கம் உடையவள், எந்த அலாரமும்,
அவளுக்கு தேவையில்லை, அவள் மனதே அவளுக்கு அலாரம்.

எழுந்தவுடன், முருகன் படத்தை பார்க்கும் பழக்கம் கொண்டவள்.....

முருகன் தான் அவளுடைய இஷ்ட தெய்வம்,
அதுவும் ,குழந்தை முருகன் படம், குழந்தை முருகன் சிரிப்பில் அவள் மனம் ஒவ்வொரு நாளும் புதிதாய், பிறந்தது போல் எந்த கவலையும்,சலனமும் இன்றி இருக்கும்.

காலை எழுந்து தன் காலை கடமைகளை, முடித்து விட்டு ,வீட்டின் பின்புறம் வந்தாள்,

வீட்டின் பின்புறம், ஒரு அழகிய குட்டி தோட்டத்தை உருவாக்கி வைத்திருந்தாள்,
ஒரு பக்கமாக காய்கள் இருக்கும் ,மற்றொரு பக்கம் பூஞ்செடிகள் இருக்கும், ஒருபக்கம் வாழை மரம் மற்றும், புதியதாய் அவள் வைத்திருந்த மாஞ்செடி இருக்கும், நான்காவது புறத்தில் ஒரு கிணர் அமைந்து மிக அழகாக காட்சியும்,நிம்மதியும் தரக்கூடிய ஒரே இடமாக அது திகழ்ந்தது.....

காலை கடனை முடித்தவள்,தன் கார்முகிலை சுருட்டி ஒரு கொண்டை போட்டுக் கொண்டு, தோட்டத்திற்கு வந்தாள்...

இரவு விழுந்த சாரலில் அனைத்தும், குளித்து முடித்து, மங்கை தயவு தேவையில்லை என்பது போல் ,அவளை பார்த்தது.

பின் வாசலை தாண்டியவளை தீண்ட
எப்போது வருவாள் என காத்துக்கொண்டிருந்த குளிர் காற்று அவள் உடம்பில் பட ,உடல் சிலிர்த்து,

உனக்கு நான் என்ன சலைத்தவளா என்று போட்டி போட்டுக் கொண்டு மூக்கை அடைந்தது மண் வாசனை.....

இயற்கை க்கு தான் அவள் மேல் எவ்வளவு காதல்......

அவளுடைய அன்புக்கு, இவைகளாவது மரியாதை அளிக்குமா.......

அனைத்தையும், நுகர்ந்தவள்,உணர்ந்தவள் , தனக்கு இன்று தோட்டத்தில் வேலை இல்லை என்பதை அறிந்து, பூக்களை பார்த்து புன்னகையித்தாள், பூக்களும் அவளுக்கு பதில் அளித்தது, காற்றில் தலையாட்டி...

உள்ளே சென்றவள், நேராக சமையல் கட்டிற்கு செல்ல,அங்கு மரகதம், காப்பி தயாரித்து ரெடியாக வைத்து இருந்தாள்,மங்கை க்கு டீ பிடிக்காது என்பதால்.....

ஏண்டி, மங்கா உன் தங்கச்சி எந்திச்சுட்டாளா, ம்ம்ம்.....எந்திச்சுட்டான்னு நினைக்கேன் மா...
என கூறி முடிப்பதற்குள்......

அம்மா, எனக்கு டீ என கோமு வந்தாள்

டீ எல்லாம் இல்ல இன்னிக்கு காப்பி தான் குடி..... என மரகதம் கூற..

ஆமா உன் பெரிய பொண்ணுக்கு டீ பிடிக்காது ன்னு டீயே மோட்டுறாத போம்மா, நானும் இந்த வீட்டில தான் இருக்க என்ன மறந்துடாத மரகதம் என மரகதத்தை இடித்து விட்டு சொன்னாள் கோமதி....

இதை பார்த்து, சிரித்துக் கொண்டே, குளியல் அறை சென்று, குளித்து விட்டு , வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் மங்கை,

தன் அக்கா, குளியல் அறை விட்டு ,வெளியே வந்ததில் இருந்து அவள் பின் குட்டி போட்ட பூனை போல் அவள் பின்னாடி யே அலைந்து கொண்டிருந்தாள் கோமதி......

இதைப் பார்த்துக் கொண்டிருந்த, மரகதம்....
என்னடி குட்டி போட்ட பூனை மாதிரி வேலைக்கு கிளம்புறவ பின்னாடி யே திரிஞ்சுகிட்டு இருக்க என கேட்க....

ஒண்ணும் இல்லமா, போ சமையல் கட்டுல உனக்கு வேலை இருக்கும் போய் அத பாரு என கூறிவிட்டு மீண்டும் தன் அக்கா வையே துரத்திக் கொண்டிருந்தாள்.....

ஏண்டி, என்னாங்கடி நடக்குது இங்க மங்கா நீ சொல்லுமா,சோலியும்,குடுமியும் சும்மா ஆடாது, என்ன நடக்குது உங்க இரண்டு பேருக்கும் .

அது ஒண்ணும் இல்லமா ,எனக்கு தோசை ரெடியா...எனக்கு லேட் ஆகுது....என மங்கை கேட்க,

இதோ எடுத்துட்டு வறேன் மா என சமையல் கட்டிற்குல் வேகமாக நுழைந்தார் மரகதம்...

மங்கை, காலில் உள்ள மர சோபாவில் உட்கார.....

அவள் முகத்தை பார்த்துவிட்டு..... இனியும் பொறுமையாக இருக்காத கோமு என கோமதி அவள் மனதிற்குள் சொல்லி விட்டு நேராக தன் அக்கா வின் முன் வந்து நின்றாள்.....

அக்கா... என வாய் எடுக்கும் முன் .....அவளை தன் கை சைகை காட்டி நிறுத்தியவள்......

போய் ,உன்னோட செல்ப்ல பாரு என மங்கை கூற ,துள்ளி குதித்து கொண்டு உள்ளே சென்றாள் கோமதி..

அதற்குள் ,மரகதம் தோசை கொண்டு வந்து விட, அதை சாப்பிட ஆரம்பித்தாள் மங்கை....

அக்கா... என கத்திக்கொண்டே வெளியே வந்த,கோமதி தன் அக்கா வை கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தாள்..
நீ தான் என் செல்ல அக்கா, பட்டு அக்கா, என கொஞ்சி கொண்டிருக்க ...

மற்றொரு தோசையுடன் வெளியே வந்தவள் ,இவர்கள் பாசத்தை கண்டு, மெய்மறந்து விட்டாள்.....

ஏன்னடி, என்ன உன் அக்கா வ இப்படி கொஞ்சி கிட்டு இருக்க,அப்படி உன் அக்கா என்னதான் பண்ணா என்டயும் கொஞ்சம் சொல்லுங்கடி என மரகதம் கூற....

அம்மா, அக்கா எனக்கு பரீட்சை க்காக புது ஜாமன்டரி பாக்ஸ், கீரோ பெண் எல்லாம் வாங்கிட்டு வந்துருக்காமா......

உனக்கு ஒண்ணு தெரியுமாமா, அந்த முக்கு வீட்டு சுமதி இருக்கால்ல மா, .....

ஆமா அந்த பொண்ணும் உன் கூட தான படிக்குது......

ஆமாம்மா,முந்தானேத்து என் தோழி லெட்சுமி,வரலமா,கணக்கு வகுப்பில், ஜாமன்ட்ரி நடத்துனாங்கன்னு ,அவட்ட கேட்டா குடுக்கமாட்டேன்னு சொல்லி ட்டாமா...

கணக்கு செய்யாமல் நான் உட்கார்ந்து ட்டு இருந்தேன்னு மிஸ் நல்லா திட்டிட்டாங்க, எல்லார் முன்னாடியும், அத அக்கா ட்ட சொன்னேன், அதான் அக்கா எனக்கு எல்லாம் வாங்கிட்டு வந்துட்டா என் செல்ல அக்கா......

ஏண்டி இத மொதல்லயே சொல்லி இருந்தா ,அவ எப்போதோ வாங்கி கொடுத்து இருப்பாள்ள.... என்றார் மரகதம்...

இல்லமா, அக்கா இந்த வீட்டு மொத்த செலவையும் பார்க்கா, அவளுக்கு ஏன் மேலும் சொல்லனும், அது ம் ஜாமன்டரி வாரத்துல ஒரு நாள் தான் எடுப்பாங்க,அதனால லெட்சுமி மிட்ட வாங்கி சமாளித்து விடலாம்னு தான் மா ,சொல்லல....

மரகதம் தன் இரு பிள்ளை களின் பாசத்தை கண்டு, ஆனந்த கண்ணீர் வடித்தாள்......

கோமு வீட்டு செலவு,அதெல்லாம் பத்தி நீ ஏன் கவலைப்படுற, எதப்பத்தியும் யோசிக்காம உனக்கு என்ன வேண்டுமோ அத மட்டும் அக்கா கிட்ட கேளு..... எனக்கு வேற யாருடி இருக்கா, உன்னையும் அம்மா வையும் விட்டா எனகூறி தன் தங்கை யின் நெற்றியில் முத்தம் மிட்டாள் மங்கை

ஆண்டவா, என் காலத்துக்கு பிறகும்,இதுகல இப்படி யே சந்தோஷமா,ஒத்துமையா வைச்சுக்கப்பா,என கடவுளை வேண்டிக்கொண்டார்....

சரிம்மா, நான் கிளம்புறேன்....என மங்கை கூற ..

பேசிக்கிட்டே மதிய சாப்பாட மறந்துட்டு போற...என ஓடி வந்து மதிய சாப்பாடு பாக்ஸை மங்கை யிடம் கொடுக்க....

அதை வாங்கி, தன் ஹேண்ட் பேக்கில் வைத்து கொண்டு, வேகமாக பஸ்டாப்பை நோக்கி நடந்தாள்.....

போகும் வழியில் வழக்கம் போல டீ கடையில் ஒரு பன் வாங்கி, அதை அங்கு குப்பை தொட்டிக்கு அருகில் இருக்கும் ஒரு வயதான நாய்க்கு போட்டு விட்டு,

நேராக தெரு முச்சந்தியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்று, அவரையும் கும்பிடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தாள்......

இவ்வளவும், அவளின் தினம் தினம் வாடிக்கையாக செய்யும் செயல்கள்......

வேகமாக பஸ் நிறுத்தத்திற்குன வந்தவள்,பஸ்க்காக காத்திருந்தாள்....

இன்றும் ஆண் துணை அற்ற நடுத்தர குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள் தான், அவர்களின் ஒரு சின்ன சின்ன தேவைகளும் அவர்களுக்கு ஒரு பெரிய விஷமாக தோன்றும்,அதற்காக அவர்கள் சில நாட்கள், அல்லது மாதங்கள் கூட காத்திருக்கும் நிகழ்வுகளும் நடக்கும்........




மயிலிறகு மங்கை 3​


தன் தங்கையின் ஆசை அனைத்தையும், நிறவேற்ற வேண்டும், தன் அம்மா வை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்பதே
மங்கை யின் வேண்டுதலே தவிர தனக்கென எந்த ஒரு ஆசையும் அற்றவளாய் வாழ்ந்து வந்தாள்,
பேருந்து நிறுத்தத்தில், தான் ஏறும் பஸ்க்காக காத்திருந்தாள்..

பஸ் வந்து விட்டது, என்று நினைப்பதை விட அதில் எப்படி பயணம் செய்ய போகிறோம் என்பதே மங்கை யின் பெரிய கவலை யாக இருந்தது...

காரணம் பஸ்ஸில் ஆணும், பெண்ணுமாக, கூட்டம் நிரம்பி வழிந்தது.....

நாட்டில் வேற பேருந்தே இல்லை என்பது போல் கூட்டம் ......
தேன் கூட்டில், தேனீக்கள் போல் இருந்த மக்களுக்குல், மங்கையும் ஒரு தேனீ ஆனால்....
மேல் உள்ள கம்பியை பிடித்து கொண்டு நிற்கமுடியாமல் நின்றாள்......

இதில் இலவசமாக கிடைக்கும் சில இடிப்புகளும் , சில தடவல்களும், அவளை அந்த சிறு இடத்திலும் நிற்க விடாமல் செய்து....கொண்டிருந்தது..

என்ன பண்ண , நடுத்தர குடும்பத்து பெண் வேலைக்கு செல்வது என்பதே பெரிய சவாலான ஒரு விஷயம், அதிலும், பேருந்தில் பயணம் செய்வது என்பது அவர்கள் தினம் தினம் ஏறும் இமயமலை மாதிரி.....

கொஞ்சம் அசெளகர்யம் பார்த்தாலும் , வேலைக்கு செல்லும் இடத்திற்கு லேட் ஆகிடும்......
அதானலேயே பல பெண்கள் அதை கண்டும் காணாதவாறு கடந்து விடுவார்கள்.....

ஆனால் மங்கை அவ்வாறு இல்லை, அவள் தன் கையில் கேர்பின் ஒன்றை எப்போதும் வைத்திருப்பாள், எதாவது தோள் இடித்தாலோ, இல்லை, தடவினாலோ, அது அவர்களை ஒரு பதம் பார்த்து விடும்....

இவள் ஏறும் பேருந்து நிறுத்ததிற்கு அடுத்த நிறுத்தத்தில் , இவள் தோழி உஷா ஏறுவாள்,..
உஷாவும், மங்கை போன்ற நிலையில் தான் உள்ளால், அவளுக்கு ஒரு தங்கை ஒரு தம்பி,,

தன் தம்பி நாளை படித்து நல்ல வேலைக்கு சென்று தன்னை இளைப்பாற வைப்பான் என்பதே உஷாவின் கனவு, .....

உஷாவும் பேருந்தில் ஏறிவிட்டாள், தோழிகள் இருவரும் தங்கள் பாதுகாப்பு ஆயுதங்களுடன், பயணம் செய்தனர்......

அந்த இடிபாடுகள், கூட்ட நெரிசல் மத்தியிலும், பேசி சிரிப்பதற்கு என்று தோழிகளுக்கு விஷயம் இருக்கும்.......
அவர்கள் இறங்கும் இடமும் வந்தது..........

அருணாசலம் கார்மென்ட்ஸ்,.....
அந்த ஊரிலே,மிகப் பெரிய கார்மென்ட்ஸ்....

அங்கு கிட்டத்தட்ட 200 பெண்களுக்கு மேல் வேலை செய்கிறார்கள்,
ஓவ்வொரு யூனிட் க்கு 50பெண்கள் வீதம் நான்கு யூனிட் அந்த காரமென்ட்ஸ் உள்ளேயும் இருக்கும், 4 யூனிட் க்கும் 4சூப்பர்வேசர், ஒரே ஒரு மேனேஜர், ஒரு டசைனர் என்ஜினீயர் என அங்கு வேலை செய்கின்றனர்.
இருவரும், வாசலில் இறங்கி வேக வேகமாக, கார்மென்ட்ஸ்க்குள் நூழைந்தனர்.....

வாங்க மா முதலாளிகளா, வர்ற நேரமா இது என ரங்கசாமி நக்கலாக இருவரையும் பார்த்து கேட்க, ....
சூப்பர்வேசரே... என்ன நக்கலா இரண்டு நிமிடம் தான லேட்டு.....என உஷா கூற....

இரண்டு நிமிடம் உங்களுக்கு நிமிடம் இல்லையா.... வாங்க வந்து இந்த லேட் ரிஜிஸ்டர் ல கையெழுத்து போடுங்கள்....

என்ன சார் பஸ்ல ஒரு கூட்டம், இறங்கி வர்றதுக்குள்ள இரண்டு நிமிடம் ஆகிட்டு இன்னைக்கு ஒரு நாள் விடுங்க சார் என மங்கை கேட்க..
இந்தா பாரு மங்கை நீ எவ்வளவு பவ்வியமா கேட்க, இந்த ராங்கிய பாரு... மங்கை க்காக எதனாலும் விடலாம் என பல் இழிக்க....

அந்த இடத்திலேயே அவன் பல்லை
உடைக்கும் அளவுக்கு, இருவருக்கும் கோபம் வந்தது....

ஆனால் அவனிடம் அதை காட்ட முடியாது, காட்டினால், ரங்கசாமி, ராட்சசனா மாறிடுவான், அவர்கள் தைக்கும் துணி சரியாக இல்லாமல் போய்விடும், ஒரு வேலைக்கு இருவேலை செய்ய வைத்து விடுவான்...

நேற்று மங்கை, வீட்டிற்க்கு லேட் ஆ போனதும் அதனால தான்......

அடியே மங்கா, இவன் பல்லு என்னால தான் ஒரு நாள் உடையும் பாரு என ஆத்திரத்துடன் சொன்னாள் உஷா....
சரி டீ நீ ஏன் நேத்து வீட்டுக்கு லேட் ஆ போன அம்மா எனக்கு பக்கத்து கடைக்கு போன் பண்ணி கேட்டாங்க......

அமாடீ, இந்த ரங்கசாமி நேத்து, நம்ம சுப்புக்காவ உட்கார வைச்சுட்டான்.. அது ரொம்ப பயந்துட்டு, நேத்து வேற நீ லீவா...
அதான் அதுக்கு துணைக்கு நான் உட்கார்ந்துட்டேன்...

ரங்கசாமி என்ன பண்ணன்னு தெரியாமல், இங்கே யே சுத்திட்டு இருந்தான் ..... அதான் வீட்டுக்கு போக லேட் ஆகிட்டு.......

அட சண்டாளப்பாவி, அவன் நல்லா வே இருக்க மாட்டான், கொள்ளையில போறவன் , விளங்குவானா .....
அந்த அக்கா வே ,இரண்டு புள்ளைங்க, உடம்பு சரியில்லாத புருஷன வைச்சுக்கிட்டு, வேலைக்கு வருது,, இதுல இந்த படுபாவி
தொல்லவேற என ஏசிக்கொண்டே இருவரும் தங்கள் இருக்கையில் வந்து அமர்ந்தனர்...

வீட்டின் ஏழ்மைக்காக வேலைக்கு வரும் பெண்கள் படும் கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல, அதை சொல்லி மாளாது......

இருவரும் தங்கள் இருக்கையில் அமர அவர்களுக்கான துணிகள் வந்தது,
தைக்க ஆரம்பித்தனர் .................

மதிய இடைவெளியும் வந்தது,, கார்மென்ட்ஸ் க்கு பின்னாடி ஒவ்வொரு யூனிட் க்கும் தனியாக செட் அமைத்து கொடுத்திருப்பார்கள்...
அனைவரும் அதில் உட்கார்ந்து தான் சாப்பிடு வார்கள்......

மங்கை சாம்பார் மற்றும் காய் கூட்டு கொண்டு வந்திருந்தாள் , இன்று உஷா வெறும் பழையதும் ஊர்காவும் மட்டுமே .....

என்னடி உஷா, இன்னிக்கு பழையது,என மங்கை கேட்க...
அதுவாடீ நேத்து, என் தம்பி சாப்பிட வேண்டிய சோறு, நாயி நேத்து அவன் பிரண்டு வீட்ல சாப்பிட்டு வந்துட்டு,
அதான் அம்மாவ காலையில சோறு ஆக்காத மா, நான் இதயே கொண்டு போறேன், உங்களுக்கு மட்டும் மதியம் ஆக்கிக்கோங்க ன்னு சொல்லிட்டேன்..........

அரிசி விக்குற விலைக்கு, சோற வீணாக்கலாமா ........என உஷா கூற
சரி வா ,இரண்டு பேரும், இரண்டையும் ஷேர் பண்ணி சாப்பிடுவோம் என மங்கை கூற...

வேண்டாம் டி என உஷா கூறியும் கேட்காது ,இருவரும் இரு வீட்டு சாதத்தையும் பகிர்ந்து சாப்பிட்டனர்.........

ஆம் சில இடங்களில் உணவின் அருமை தெரியாமல் சிலர் இருக்க....
ஒரு சோற்று பருக்கையை கூட வீணடிக்காமல் ,பல பேர் இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்....

அன்றைய நாள் நல்லபடியாக முடிய, இன்று ரங்கசாமி யிடம் யாரும் சிக்க வில்லை.....

வீட்டிற்க்கு கிளம்பும் நேரம் வரவும், அனைவரும் வரிசையில் நின்றனர்...
இது அனைத்து பெண்களுக்கும் மற்றும் ஒர் அக்னி வாசல்...
ஆம் இதே ரங்கசாமி தான் அனைவரது பையையும் , சோதனை இடுவான்.....
அவன் தொடுவது பை மட்டும் அல்ல ,பெண்களின் கைகளையும் தான்....
ஆனால் அவனது ,கை மங்கை மேலும் , அவள் தோழி மேலும் பட மிகவும் யோசிக்கும்...

அதற்கும் ஒரு காரணம் உண்டு......
அதற்கு ரங்கசாமி கையே சாட்சி....
அப்படி என்ன காரணம்,,,, சாட்சி பொறுத்து இருந்து பார்ப்போம் நடக்கும் வேடிக்கை யை...... ......😊😊😊😊😊😊

மங்கை வருவாள்
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 4

எவ்வளவு பெரிய இடத்தில் வேலை செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை,
அங்கு எந்த விதத்தில் நடத்தப்படுகிறோம்,
என்பது தான் நிதர்சனமான உண்மை..

ஆம் அவ்வளவு பெரிய தொழிற் சாலையின் முன்னேற்றத்திற்காக உழைத்தாலும், அந்த உழியர்கள் வீடு செல்லும் போது சோதனை செய்யப்படுகிறார்கள்.......

தங்கள் உழியர்களை, தாங்களே சோதிப்பது தான் பணத்தின் குணம்.....

ஏய் ,அங்க பாரு அந்த ரங்கசாமி பரதேசி, எங்க புடிக்கான் பாரு , பையோட கைப்பிடி எங்க இருக்கு, அந்த பக்கி, எங்க புடிக்குது பாரு..
அவன.....என உஷா கொந்தளிக்க......

அடுத்து, மங்கை, மங்கை பையை மட்டும் பிடித்து வாங்கி சோதனை பண்ணிட்டு கொடுத்துட்டான், அதே மாதிரி உஷாக்கும் தான்.

மொகரையப் பாரு, ஒரு நாள் அந்த கையையும் உடைக்க போறேன் என உஷா திட்ட....

அதான் அவன் கைக்கு ஏற்கனவே பரிசு கொடுத்தாச்சே........என மங்கை கூற

என்னடி சொல்லுற.....

அவன் கைல தழும்பு இருக்குள்ள பாத்துருக்கியா.....

என்னடி........

ஆமாடி உஷா , பின்ன உன்கிட்டயும், என்கிட்டயும்,கம்மியா வாலாட்டுறானே அது எதானல ......என மங்கை கூற....

அடியே ,மங்கா இதென்ன புது கதை ,

புதுசுலாம், இல்லை பழசுதான், உன்கிட்ட சொன்னா நீ டென்ஷன் ஆகிடுவ... அதான்...

அடியே மங்கா இப்ப வாட்டும், சொல்லு....

அது வந்து, ஒரு நாள் ரங்கசாமி என்ன மாற்றி கட்டிங் யூனிட்ல போட்டான்ல.....

ஆமா...........

அப்போ நான் கட்டிங் மிசின் கிட்ட நின்னு கட் பண்ணிட்டு இருக்கும் போது,

அந்த நாயி
போன் பேசுறமாதிரி, நான் கவனிக்காத நேரமா பாத்து ....

பாத்து சொல்லுடீ என்னாச்சு..........

என் இடுப்பு கிட்ட, கை கொண்டு
வந்தான்....எனக்கு ஏதோ உணர்வு தோன்ற சட்டுனு விலகிட்டேன்.........

ஆம் பெண்களுக்கு என்றே இறைவன் கொடுத்த அற்புத முன்னெச்சரிக்கை உணர்வு, தப்பாக பார்த்தாலோ, பழகினாலோ அதை அவர்கள் உள்ளுனர்வு உணர்த்தி விடும்.

எனக்கு அவ்வளவு கோபம்,கட்டிங் மிசின்க்கு சைடுல சூடாஇருக்கும்,
அந்த நாய் கையை மறுபடியும் கொண்டு வர மிஷின அந்த பக்கத்தை திருப்பிட்டேன் ,நாய்க்கு சூடு பட்டு கொப்பளமாகிட்டு.....
அந்த நாய், என்ன ஒண்ணும் சொல்லாம , அப்படி யே பார்த்துட்டே போயிட்டான்,

குத்தம் உள்ள நெஞ்சுல எப்படி கேட்பான்....

அதுகப்புறம் தான் அந்த நாயி என்கிட்ட வாலாட்டாது ...

என் தோழிங்கிறதால உன் கிட்டயும் கொஞ்சம் பம்முது......

அதான பார்த்தேன், என் மங்காவா யாரு...

கடவுள் ஆவது லேட்டா தான் தண்டனை தருவாறு, என் மங்கா உடனுக்குடன் அதிரடி....

ஆமா உடனுக்குடன் தண்டனை தான் என மெதுவாக சொல்லி கொண்டிருக்கும் போதே அவள் முகம் வெளுத்து போனது லேசாக நெற்றியில் வியர்த்தது, உஷா, அவளை கண்டு கொண்டாள்....

அடியேய் மங்கா, ஏன்டி இப்படி அடிக்கடி ஆப் ஆகிடுற....

என தன் தோழியினை உலுக்கி கேட்க
நிகழ்வுக்கு வந்தவள்...

சரி சரி வா பஸ்க்கு லேட் ஆகிடப்போது....

இருவரும் பஸ் வர அதில், ஏறிக்கொண்டார்....

இன்று என்னமோ, கூட்டம் இல்லை, இருவருக்கும் அமர சீட் கிடைத்தது.........

உஷா ஏதேதோ, பேசி வர , அது எதுவும் மங்கை காதில் விழுந்ததாய் தெரியவில்லை...

ஜன்னல் வழியாக ரோட்டை வெறித்து பார்த்த படியே வந்திருந்தாள்......

அவள் வாழ்க்கை இன்னும் அவளுக்கு என்ன என்ன ஆச்சரியம், புதிர்,வைத்து இருக்கின்றதோ என்பதை எண்ணி அவள் எண்ண ஓட்டம் ஓடியது......

மரக்கடை ஸ்டாப் என கன்டெக்டர் கூறவும்...

உஷா , எழுந்து, ஏய் மங்கா, மங்கா என அழைக்க...

ஆ.....ஆ... சொல்லுடி...

நான் இறங்குறேன் என் ஸ்டாப் வந்துட்டு..ஏன்டி கிளம்புனதில் இருந்து ஒரு மாதிரி இருக்க..நீ வீட்டுக்கு பாத்து போ என கூறிவிட்டு மனமே இல்லாமல் இறங்கினாள் .

அடுத்த நிறுத்தத்தில் , மங்கையும் இறங்கி நடக்க, அதே டீ கடையில் பன் வாங்கி இரவு உணவாக அந்த வயதான நாய்க்கு போட்டு விட்டு வந்தாள்...

வீட்டிற்க்கு வந்தவள், வழக்கம் போல் அனைத்து வேலைகளையும் முடித்து, உறங்க சென்றாள்.....

அம்மாடி மங்கா , சாப்பிடாம படுக்கப் போற,என மரகதம் கேட்க

இல்லமா இன்னிக்கு பசிக்கல, ஒரே தலைவலியா இருக்குமா, என சொல்லி விட்டு அறையினுள் நுழைந்தாள்.......

இதை பார்த்து கொண்டிருந்த கோமு , தைலத்தை எடுத்துக் கொண்டு தன் அக்கா பின்னே சென்றாள்...

அக்கா திரும்பு......

ஏன்டி......

உனக்கு தைலம் தேச்சு விடுறேன்... என்றவள் தன் அக்காவை தன் மடியில் படுக்க வைத்து,தைலம் தேய்து விட்டு அவள் அருகில் வந்து படுத்துக் கொண்டாள்......

தைலம் தேய்த்து விட்டவள் உறங்கி விட...

மங்கைக்கு தான் உறக்கம் வர வில்லை, அந்த தண்டனை என்ற வார்த்தை மட்டும் அவள் காதில் ஒழித்து கொண்டிருந்தது......

மீண்டும், மீண்டும் அந்த வார்த்தை அவளை துரத்த, அப்படியே அயர்ந்து விட்டாள்...

உறக்கத்துடன், நிம்மதியும் அவள் கண்களை தழுவட்டும்.........

மீண்டும் கதிரவன் , தன் ஒளி கதிர்களை பூமியின் மீது வீச.....
மங்கை விழித்து கொண்டாள்,

வழக்கம் போல் காலை கடன் களை முடித்து விட்டு , தோட்டத்திற்கு செல்ல, என்றும் வரவேற்க்கும் மலர்கள் இன்று ஒன்று கூட காணவில்லை....

இப்படி நடக்க வாய்ப்பில்லையே ,என எண்ணி கொண்டு அனைத்து செடிகளுக்கும் நீர் பாய்ச்சி விட்டு, மீண்டும் வீட்டிற்க்குள் நுழைந்தாள்,

அப்போது தான் அவளுக்கு புரிந்து, செடியில் அசைத்து ஆட வேண்டிய மலர்கள், இங்கு சாமி போட்டோக்கு அருகில் அழகாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்ததே தவிர அவற்றின் முகத்தில் துளி அளவு சந்தோஷம் இல்லை....

அம்மா ஏம்மா இப்படி பண்ணி வச்சுருக்க ...

பூவ பறிக்காதேன்னு சொன்னா கேட்கியா...

பாவமா அதுக...

அது சரிடி, ஒரு நல்ல நாள்ல கூட சாமிக்கு அலங்காரம் பண்ண விட மாட்டீக்க.....

அப்படி என்ன இன்னைக்கு நல்ல நாள் என கேட்க.....

பின்னாடி இருந்து கோமதி முத்தம் கொடுத்து, வாழ்த்துக்கள் சொன்னாள்..

ஆம் இன்று மங்கையோட பிறந்த நாள்....

போ குளித்து விட்டு வா கண்ணு இனைக்கு உனக்கு பிடிச்சத யெல்லாம் அம்மா செய்து வைச்சுருக்கேன்.....

மங்கை அவள் பிறந்த நாளை கூட மறந்து இருந்தாள்...

மங்கை குளிக்க சென்றவுடன், அறையில் தன் பரிசான புடவையை வைத்து கொண்டு காத்திருந்தாள் கோமதி...,

மங்கையும் வெளியே வந்ததாகி விட்டது....

அக்கா கண்ண மூடு என கோமு கூற ஆசையா ஆசையா கண்ணை மூடியவளுக்கு,அது பரிசு இல்லை அதிர்ச்சி என தெரிய வில்லை..

அவள் முன் புடவையை நீட்டியவள், அக்கா கண்ணதொற என்று சொன்ன அடுத்த நொடி
கண்ணை திறந்தாள் ,

அவள் கண்முன்னே சிவப்பு நிற புடவை.... .

அதை பார்த்தவுடன் அதிர்ச்சியில் .... கண்கள் சிவக்க அப்படி யே கட்டிலில் மயங்கி சரிந்தாள்
மங்கை.....

ஏன் அப்படி அந்த சிவப்பு புடவை யில் என்ன தான் நடந்து இருக்கும்....🤔🤔🤔🤔
பொறுத்திருந்து பார்ப்போம்.

மயிலிறகு மங்கை வருடுவாள்
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 5​

காலங்கள், காயம் ஆற்றும், அதே போல், அதே காலம் தான் சில நினைவுகளை உண்டு பண்ணி, நம்மை காயப்படுத்தவும் செய்யும்.

கோமு, தன் அன்னைக்கு கூட தெரியாமல், தன் அக்காக்கு தான் சேர்த்து வைத்திருந்த , பணத்தில் , ஒரு புடவையை, தன் தோழியின் அம்மாவிடம் சொல்லி எடுத்து வைத்திருந்தாள்.

ஆனால் , தான் எடுத்த புடவையே தன் அக்கா மயக்கத்திற்கு காரணம் என அவள் அறியவில்லை...

அம்மா, அம்மா இங்க வா அக்கா மயங்கி விழுந்துட்டா,என கோமு கத்த,

மரகதம் பதறி அடித்து கொண்டு, ஓடி வந்து, அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டாள்.....

"அம்மாடி, ஏன் மா என்னாச்சு", என மரகதம் கேட்க......

ஒண்ணும் இல்லை மா , நேத்து சாப்பிடலல அதான் காலையில் இருந்தே தலை சுற்றி கொண்டே இருந்தது, அதான் என மங்கை கூற..

இல்லை அக்கா நீ இந்த புடவை பார்த்து தான் விழுந்த, சொல்லுக்கா... என கோமதி கேட்க....

அடிப்போடி, பைத்தியம் புடவை பார்த்து யாராவது மயங்குவாங்களா என தன் தங்கையிடம் கூறினாள்......

அப்படியா ,அப்போ போய் கட்டிட்டு வாக்கா உனக்காக நான் சேர்த்து வைச்ச காசுல வாங்குனது, விலை கொஞ்சம் கம்மிதான் 300 ரூபாய், தான் , என கோமு கூற.

அடி செல்லகுட்டி விலைல என்ன இருக்கு , என் தங்கச்சி பாசம் தான் எல்லாத்தையும் விட பெருசு என தன் தங்கையை அனைத்து ஒரு முத்தம் இட்டாள்.

மரகதம் திகைப்பாகி அப்படியே , பார்த்து கொண்டிருந்தாள்.

கோமு சிரித்துக் கொண்டே வெளியே போனவுடன்.

மங்கை தன் அன்னையை கட்டி கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அம்மாடி மங்கா, அழாதம்மா ,எனக்கு தெரியாது மா எனக்கு தெரிந்திருந்தால், அவள சிவப்பு கலர் எடுக்க விட்டுருக்க மாட்டேன் .

அம்மா நான் எத மறக்கனும்ன்னு நினைக்கனோ, அது மறுபடியும் என் கண்முன்னாடி வருது மா, என சத்தம் வராமல் தன் அன்னையை கட்டி கொண்டு அழுதாள்.

சரிம்மா, இன்னிக்கு பிறந்த நாள், நீ ஆழக்கூடாது, எத்தனனால் அந்த நினைவு கண்டு பயந்து ஓடுவ, உன் தங்கச்சி தெரிந்தோ, தெரியாமலோ , வாங்கி வந்துட்டா,அவளுக்காக நீ இத கட்டிக்கிட்டு, அந்த நினைவோட போராடி தான் பாறேன்,
என மரகதம் கூறினார்.

ஆமாம், ஒன்றை நினைத்து பயந்து பயந்து ஒடுங்கி போவதை விட, அதனை தைரியமாக எதிர் கொண்டால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும், என முடிவெடுத்து அந்த புடவை உடுத்தி கொண்டாள்.

உடுத்தும் போதே , அவள் உடல் நடுங்கியது , இருப்பினும், உடுத்திக்கொண்டு, வேலைக்கு கிளம்பினாள்.

வழக்கம் போல் அவள் செய்யும் அனைத்து நற்செயலையும் செய்து விட்டு , பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல, அங்கு பேருந்தும் வந்தது.

பேருந்தில் ஏறியவுடன், அனைவரின் கண்களும் அவளை நோக்குவது போல் மாயை கொண்டாள்.

பயத்துடனே,இருக்கையில் அமர்தாள்,பேருந்தும் நகர்ந்தது, அவளை சுற்றி பல கண்கள் பறப்பது போல் தோற்றம் கொண்டாள் மங்கை அவள்.

பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நிற்க, தன் தோழிக்கு வாழ்த்து கூற ஆவலுடன் பேருந்தில் ஏறினாள்..உஷா

தன் தோழியை தேடிய ,உஷா அவளை கண்டதும் உஷாவிற்கு ஆச்சரியம், இவள் எப்படி சிவப்பு நிற புடவையில்,என யோசித்து கொண்டே அவள் அருகில் சென்று அமர்ந்தாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மங்கா, என கூறி அவளை கட்டி அனைக்க மங்கை ஒரு சிறிய சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு, மெளனம் காத்தாள்.

என்னடி மங்கா சிவப்பு நிறம் எதில இருந்தாலும் ரசிக்கிறவ, அதை புடவைல பார்த்தா மட்டும் என்னவோ பேரை பார்த்த மாதிரி பயப்படுவ, இப்போ எப்படி டி, அத உடுத்தின என உஷா கேட்க.

பயத்துடன் கொஞ்சம் மோதி பார்க்கலாம் தான். என மங்கை பதில் கூறினாள்.

ஏன்டி மங்கா, காஞ்சனா படம் பார்த்து அதனால் சிவப்பு புடவைய பார்த்து பயப்படுறீயோ என உஷா கிண்டல் அடிக்க.

அவளை முறைப்பது போல் ஒரு பார்வை பார்த்தாள் மங்கா .

அவள் முகம் , தைரியமாக இருந்தாலும் அவள் உடல் இன்னும் நடுக்கத்துடனே இருந்தது.

மங்கா,நான் உன்ன ஒண்ணு கேட்கட்டா, கோபபப்படமாட்டில்ல, நீ கோபப்பட்டாலும் பரவாயில்லை, அப்படி அந்த சிவப்பு புடவையின் ரகசியம் தான் என்ன?என்கிட்டயாவது சொல்லுடி......

நீ நினைக்கிற, பார்க்கிற மங்கை இல்ல நா,என மனதில் நினைத்து கொண்டு, காலம் வரட்டும் உஷா தானா தெரியும் என்பதோடு முடித்து கொண்டாள் மங்கை.

தன் தோழியை மேலும் வற்புறுத்த விரும்பாமல், உஷாவும் மேற்கொண்டு ஏதும் கேட்க வில்லை.

கம்பெனிக்கு வந்து, வேலையும் ஆரம்பித்து விட்டனர்.

மங்கா,உன்ன டிசைனர் என்ஜினீயர் கூப்பிடுறார் என ரங்கசாமி வந்து அழைக்க.

மங்கை எழுந்து அவன் கூட சென்றாள்.

அந்த கம்பெனி டிசைனர் என்ஜினீயர் கார்மேகம் அவருக்கு ஒரு 50வயது இருக்கும், அவர் முறையாக டிசைனிங் படிக்காதவர் , கம்பெனி ஆரம்பித்தில் இருந்து இருக்கிறார்.
அவர் அனுபவத்தில் உருவாக்கும் டிசைனை முதலில் மங்கையிடம் தான் காட்டுவார்.

மங்கையை தன் மகள் போல் பாவித்து அவள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம். அவளது ஆர்வம்.

ஆம் டிசைன் சம்பந்தமாக புது புது ஐடியாக்களை, அவருக்கு மங்கை கொடுப்பாள்.மங்கை தன் தந்தைக்கு தருவது போல் அனைத்து மரியாதையையும் கார்மேகத்திற்கு கொடுத்து, அவர் முகத்தில் தன் தந்தையை பார்த்தாள்.

ஆனால் இந்த உறவு கம்பெனியில் சிலபேர் கண்ணுக்கு தவறாக பட்டாலும், பலர்பேர் புரிந்து கொண்டனர்.

மங்கை யாரைப்பற்றியும், எவரை பற்றியும் , கவலை பட்டதில்லை.

ஆம் அடுத்தவர் கற்பனை பேச்சக்கெல்லாம் செவி சாய்த்தால், நாம் நம் வாழ்க்கையை எப்போதும் வாழ முடியாது என அவளது அனுபவத்தில் கண்டு கொண்டாள்.

மங்கை, உன்ன பாக்கம டிசைனர் ஐயாவால இருக்க முடியல போல,
ம்.. ம்..... கொடுத்து வைத்த மனுஷன் இந்த வயதிலும் அனுபவிக்கார்.

ஏம்மா என்கிட்ட இல்லாதது அந்த வயசான மனுசன்ட்ட என்னமா இருக்கு என கேட்ட அடுத்த கணம்,

ரங்க சாமி ,கன்னம் பழுத்து இருந்தது.

இந்த வேலையெல்லாம், வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ, இனி இன்னொரு தடவை என்கிட்ட வச்சுக்கிட்ட,கொன்னுடுவேன் கொன்னு, என தீ பார்வை பார்க்க,

ஏய் என் மேலயே கை வச்சுட்டில்ல, உனக்கு இருக்குடி.

என்ன பண்ணமுடியுமோ, பண்ணிக்கோ, என்ன வேலையில் இருந்து தானே தூக்க முடியும், இந்த வேலை இல்லனா எனக்கு வேற வேலை .

ஆனா , நீ இப்படியே பேசிட்டு திரிஞ்ச
உன்ன கொன்னுட்டு ஜெயிலுக்கு போக தயங்க மாட்டேன்.

நியாபகத்தில இருக்கட்டும் , என அவனிடம் கர்ஜித்து விட்டு உள்ள சென்றாள்.

அவளது கோபம் ஒட்டுமொத்த பெண்களின் உள்ள குமுறலின் வெளிபாடக இருந்தது.

ரங்கசாமி தான் நரி ஆயிற்றே, ... எனக்கும் நேரம் வரும்டி பாத்துக்கிறேன் என பதுங்கி விட்டான்.

ஐயா உள்ளே வரலாமா, என மங்கை கேட்க....

வாமா.... கார்மேகம் கூற

என்ன ஐயா , கூப்பிட்டிங்களாம்....

ஆமாம், மங்கை, நான் வேலையில் இருந்து ஓய்வெடுக்க போறேன். இனி இந்த சீட்டில் படித்த ஒரு நபர் வர போகிறார்.

நான் அவரை மீட் பண்ணும் போது உன்ன பத்தி கண்டிப்பாக பேசுறேன்.

ஏற்கனவே உன்ன இந்த யூனிட்க்கு சூப்பர்வேசராக்க முதலாளியிடம் பேசி இருக்கேன், கூடிய சீக்கிரம் அதும் நடக்கும், ஆனா அதுவரைக்கும் என்னால தொடர முடியாத நிலையில் என் உடல்நிலை இருக்கு.மன்னிக்கவும் மா என கார்மேகம் கூற.

ஐயா என்ன வார்த்தை சொல்லிட்டீங்க, நான் எனக்குன்னு எதுவும் எதிர்பார்க்கவில்லை, நான் சூப்பர் வேசர் ஆன இங்க பெண்கள் நிம்மதியா வேலை பார்க்க முடியுமென நீங்க சொன்னதுனால சரின்னு சொன்னேன்.

அது நடக்கலனாலும் ,பரவவில்லை நீங்கள் இப்படி பேசாதீங்க ஐயா. என கண்ணீர் மல்க கூற.

கார்மேகம் கலங்கி விட்டார்.

நாம் நமக்கு என்று சிந்திக்காமல், பிறருக்கு என்று சிந்திக்கும் போது, அது ஒருநாளும், தோழ்வியை சந்திக்காது.

இதுவே தர்மம்.

தர்மம் வென்றதா வரப்போகும் அத்தியாயத்தில் பார்ப்போம் 😊😊😊
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 6

காலச்சக்கரம் சுற்றும் போது, நாம் நினைக்காதது மிகவும் நல்லபடியாக நடக்கும்.

அதே போல் எதிர்பாராத சில நினைவுகளையும், சில நபர்களையும் நாம் சந்திக்கலாம்.......

சில நேரம் அந்த சந்திப்பு வசந்த கால பூங்காற்று போல நம்மை வருடலாம்,இல்லை மழை கால இடி ,மின்னல் போல் சில அதிர்வுகளை நம்முல் விதைக்கலாம்.
கார்மேகம், மங்கை யை கூப்பிட்டு அனைத்தையும் கூறினார், பின் அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறி அவளை ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார்...

ஐயா , நீங்க கவலைப்படாதீங்க, உங்களுக்கு பதிலா உங்க இடத்துக்கு வர்றவங்களும் உங்கள மாதிரி நல்லவங்கலா தான் இருப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு ஐயா நீங்க கவைப்படாம உங்க உடம்பை மட்டும் பத்திரமா பாத்துக்கோங்க ஐயா....

சரி மா, உன் நினைப்பு போலவே இங்கு எல்லாம் நல்லபடியாக நடக்கனும்....

மங்கை, எல்லாரையும், ஒரு இடத்தில கூட்டி வை நான் கொஞ்சம் பேசனும்....
சரி ஐயா, என மங்கை வெளியே சென்று அனைவரையும், மீட்டிங் இடத்தில் ஒன்று சேர்தாள்......
அங்கு கார்மேகம் வர,

என் அருமை, தொழிலாளர்,தொழிலாளிகளே, நான் என் உடல்நிலை காரணமாக, என்னுடைய பொறுப்பில் இருந்து இன்னும் இரண்டு நாட்களில் ஓய்வுபெற உள்ளேன்...

இத்துனை வருடம், இங்கு பணியாற்றியதற்கு நான் பெருமை படுகிறேன், உங்கள் ஒத்துழைப்பு,இல்லை என்றால் நான் இங்கு இல்லை. உங்கள் அனைவருக்கும் என் நன்றி...
என கண்ணீர் மல்க கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார் கார்மேகம்....

என்னடி மங்கா ஐயா ,இப்படி சொல்லுறாரு, இந்த ரங்கசாமி யை அடக்க ஐயா ஒருத்தர் தான் இருந்தார் இப்போ அவரும் போகப்போறாரா என உஷா கூற.....

சரி விடு டி, அவருக்கும் வயசாகுது இல்ல, அவரும் ஓய்வெடுக்க நினைப்பார்ல, அது மட்டுமல்ல புதுசா, முறையாக படிச்ச ஒரு ஆபிசர் தான வர்றாரு என மங்கை கூற...
அது சரி, அவர் எப்படியோ, என்ன குணமோ, ஏதோ ஒரு படம் வந்துச்சே,ஆ.... மகளிர் மட்டும் நாசர் மாதிரி ஒரு ஆபிசர் வந்தா என்ன பன்ன,

ஏற்கனவே ஒருத்தன் ரங்கசாமி ங்கிற பேர்ல அப்படி தான் இருக்கான்,
அவனையே சமாளிக்க நமக்கு நாக்கு தள்ளுது, இதுல உயர்ந்த பதவில இன்னொருவர் வந்தா அவ்ளோதான் என உஷா கூற..

அந்த முகம் தெரியா நபர் பற்றி இவள் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கை யும் ,பயமாக மாறியது...
இப்போது சிறிது, சிவப்பு சேலை மீது இருந்த பயம் குறைந்து, இப்போது புது பயம் ஆரம்பித்து விட்டது......

நாட்கள் இரண்டு கழிந்தன......
இன்று தான் அந்த புதிய நபர், பதவி ஏற்க உள்ளார்.....

அன்று கம்பெனி அனைத்து யூனிட் ம் சற்று பரப்பாகவும், எதிர் பார்ப்புடனும் காத்திருந்தது.....

என்னா உஷா இன்னிக்கு, உன்னோட பாடிகாட், எங்க புது ஆபிசர் வர்ற அன்னைக்கே
லேட்டா வந்து திட்டு வாங்க போறாளா,,, எனக்கு நல்லதுதான்,இந்த புது ஆபிசர வைத்து, அவ கொட்டத அடக்கப்போறேனா இல்லை யான்னு பாரு.... இருங்கடி உங்கள
கவனிச்சுகிடுறேன்....

இதோ பாரு மங்கா இல்லைன்னு ஓவரா ஊழையிடாத , போ எப்போதும் போல உன் ஜால்றா வேலையை ஆரம்பிச்சு, என்னவென்னாலும் செஞ்சிக்கோ போ ச்சே போ என உஷா பேசிய வார்த்தையில் அசிங்கப்பட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான் ரங்கசாமி.....

ஐயோ , இந்த மங்கா ,இன்னைக்கு பார்த்து ஏன் வரலன்னு தெரியலயே என உஷா புலம்பி கொண்டிருந்த நேரத்தில்,
அனைவரையும், மீட்டிங் நடக்கும் இடத்திற்கு வரச்சொன்னான் ரங்கு.....
அனைத்து யூனிட் தொழிலாளர்களும் அங்கு கூடி இருக்க.....
கூட்டம், சிறிது சல சலப்புடன் எந்திரிக்க, உஷாவும் எழுந்து கொண்டாள்.....

அங்கு கார்மேகம் ஐயா ,பின்னாடி, நல்லா ஆறடி உயரத்தில், ஜிம்பாடி போன்று கட்டுகோப்பான உடம்புடன், சிறிது டிரீம் செய்யப்பட்ட தாடி முகத்தில் இருந்தும் இல்லாதது போல் இருக்க, நடக்கையில் அலைபாயும் கூந்தளை கோதி விட்டு கொண்டே

ஒரு இளைஞர் வசிகரிக்கும் தோற்றத்தில் வர .... உஷா அப்படியே சிலை போல் உருகி நின்றாள்....
உடன் இருக்கும் தோழிமார்கள், என்னடி உஷா, கார்மேகம் ஐயா மாதிரி வயதான நபர் இவ்வளவு பெரிய பதவிக்கு வருவார்ன்னு பார்த்தா..

இவர் என்னடி இப்படி இருக்காரு என கூற ....

உஷா, ஆமாடி நானும் அத தான் யோசிக்கேன்...

ஏன்டி இப்போ மட்டும் மங்கா இருந்திருந்தான்னா.... என அதில் ஒருத்தி கூற...

அ....... அவ இருந்திருந்தானா நாம பேசுன பேச்சுக்கு, நம்ம மூஞ்சி மேலேயே இரண்டு விட்டுருப்பா......
அவ தான் ஒரு பொம்பள சன்னியாசி ன்னு உனக்கு தெரியும்ள....
இன்னிக்கு பார்த்தியா, ரசிச்சியா,ன்னு அப்படி யே இருங்கடி, நாளைக்கு அவ முன்னாடி ஏதாட்டு உளறி வாங்கி கட்டி க்காதீங்க .... என மற்ற தோழிகளை உஷா எச்சரிக்க.....

கார்மேகம் பேச தொடங்கினார்...
எல்லாருக்கும் வணக்கம்,
இவர் பெயர் அஜய் குமார், இவர் டிசைனிங் என்ஜினீயர் படித்து, வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு, இப்போது நம்ம நாட்டிலேயே செட்டில் ஆகலாம் என்று இங்கு நம்ம கம்பெனி ல வேலைக்கு சேர்ந்து இருக்காரு......
அது மட்டுமல்ல, இவர் நம்ம முதலாளி மகனோட,நல்ல நண்பர் ,அவர் சொல்லி தான் இவர் இங்க வந்து இருக்காரு.....என கார்மேகம் கூற
அடேங்கப்பா இவ்வளவு பெரிய இடமா இவரு, எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதை யா இருப்போம் என ரங்கு நினைத்து கொண்டான்...

அதன் பின் அஜய், பேச தொடங்கினார், ஹாய் கைஸ், குட் மார்னிங் வெல்... எனக்கு சார் மாதிரி எல்லாம் பேச தெரியாது, நான் இங்க வெறும் டிசைனிங் என்ஜினீயர் மட்டும் கிடையாது உங்க யூனியன் வெல்பர் அசோசியேசன் ஹெட் டும் நான் சோ , எந்த பிரட்சனை தேவை இருந்தாலும், உங்கள் யுனியன் லீடர் மூலம் நீங்க என்ன வந்து பார்க்க லாம்...
ம்ம்ம்....... இங்கே தானே இருக்கப்போறாம் மெல்ல உங்க எல்லார் பத்தியும் தெரிஞ்சுகிடுறேன் என சொல்லி விட்டு, அமர்ந்து கொண்டான் அஜய்......

உஷா அவன் பேசும் விதத்திலே ஐஸ்கிரீம் போல உருகி இருந்தாள்...
மீட்டீங், முடிந்து அனைவரும், கலைந்து அவரவர் வேலையை பார்க்க சென்றனர்...

கார்மேகம் மற்றும் அஜய் தங்கள் அறையில் பேசிக்கொண்டிருந்தனர்,,,
அப்போது அங்கு நடந்த பேச்சுகள் அனைத்தும் , மங்கை யை பற்றியே இருக்க..

யூனியன் லீடரும் அந்த மங்கை தான் என தெரிந்து ஆச்சர்யப்பட்டான்....

யாரு சார் அவங்க, எனக்கே அவங்கள பார்க்கனும் போல இருக்கே என கூற...

கார்மேகம் ரங்கசாமி யை அழைத்து மங்கை யை கூப்பிட்டு வரச்சொல்ல அப்போது தான் அவள் வரவில்லை என கார்மேகத்திற் தெரியவந்தது.

பரவாயில்லை சார் , நான் இங்கு தானே இருக்க போறேன், நாளைக்கு பார்த்துகிறேன் என அஜய் கூறி விட்டான்.....

மங்கையை காண ஆவலாக காத்திருக்கும் அஜய்.....

பார்த்த பின் என்ன நடக்கும், அவ்வாறு நடக்கும் என்பது காலத்தின் நியதி...
பார்ப்போம் அதையும் நாம் பொறுத்திருந்து பார்ப்போம்...😊😊😊😊
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 7


காலம் யாரை எங்கு கொண்டு நிற்க வைக்கும்,

யாரை சந்திக்க வைக்கும் என யாரும் அறியாததே , நாம் பார்க்க வேண்டும், பழகவேண்டும் என நினைக்கும் உறவை நம்மிடமிருந்து வேறேங்கோ கொண்டு சென்று விடும், நாம் பார்க்க வே கூடாது எனும் என்னும் உறவை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும்......

அன்று, கார்மேகம் மங்கை பற்றிய கருத்துகளையும்,அவளைபற்றியும், அஜய் இடம் ,அவன் ஆர்வத்தை தூண்டும் வகையில் சற்று அதிகமாக தான் பேசி விட்டார்.



அஜய்யும் அந்த மங்கை யை கான ஆவலுடன் காத்திருந்தான் ,அவன் வாழ்க்கை ஏற்படப்போகும், சூறாவளி தெரியாமல்.....

வேலை முடிந்து , உஷா நேராக தன் தோழி மங்கையை காண சென்றிருந்தாள்......

அங்கு சென்றவுடன் தான் தெரிந்தது, மங்கைக்கு, காய்ச்சல் என்று...

வாமா உஷா, என்ன மா இந்த நேரம்...

அம்மா, மங்கையை பார்க்க தான் வந்தேன், அவ ஏன் இன்னிக்கு வேலைக்கு வரல, இன்னிக்கு புது ஆபிசர் வந்தார்..... கார்மேகம் ஐயா மங்கை யை அறிமுகப்படுத்த தேடினாரு ம்மா..... . என உஷா கூற

இல்லமா , அவளும் இத தான் சொன்னா, அம்மா கம்பெனிக்கு புதுசா ஒரு ஆபிசர் வர்றாரு, யூனியன் லீடர் ஆ நான் அங்க இருக்கனும் என்று.....

ஆனா அவளுக்கு காய்ச்சல் அதிகமா இருந்துச்சு ஒரு தாயா என்னால பஸ்ல அவ்ளோ தூரம் எம் புள்ள ய எப்படிம்மா அனுப்ப நீயே சொல்லுமா.....

அதுவும் சரி தான் மா, இப்போ ,மங்கை எங்கமா, எப்படி இருக்கா......

போமா நீயே போய் பாரு.........

சரிம்மா........

மங்கை அங்கு அறையில் கட்டிலில் சுருண்டு படுத்து கிடந்தாள்.....

அடியே மங்கா, உலகத்திலேயே சிவப்பு சேலை கட்டி காய்ச்சல் வந்த முதல் ஆள் நீதாண்டி.....

அப்படி அதுல என்ன தான் இருக்கோ ஈஸ்வரா........

ஏய் ஏற்கனவே முடியாமல் இருக்கேன், ஏதாட்டு பேசுன அப்படி யே எட்டி மிதிச்சுடுவேன் ,...

சரி டீ இதெல்லாம் வக்கனையா பேசு,இருந்தாலும் நீ இன்னிக்கு வராதது நல்லது தான்.

ஏன்டி, இப்படி சொல்லுற.....

ஆமா அதனால தானே எங்களால ,நிம்மதியா அவர பார்த்து ரசிக்க முடிந்தது,என உஷா சிரிக்க.

ஏய் எனக்கே உடம்பு சரியில்லை என்ன படுத்தாம, சொல்ல வந்த விஷயத்தை சொல்லுடி.

அது வந்து மங்கை நம்ம புது டிசைனிங் ஆபிசர்க்கு ரொம்ப சின்ன வைசு தெரியுமா, ஆளு சும்மா மாதவன் மாதிரி சூப்பரா இருந்தாரு.

நல்ல வளர்த்தி , அழகான கேசம், கட்டுடல்,ஏன்டி சிரிச்சா தான சிலருக்கு குழி விழும், இந்த மனுசனுக்கு பேசுனாலே இரண்டு கன்னத்திலும் குழி விழுகுது டி,எனக் கூறிக்கொண்டே தன் தோழியை பார்க்க....

அவள் முறைத்துக் கொண்டு இருப்பதை கண்டு, ஐயயோ, ரொம்ப ஓவரா தான் வர்ணிச்சூட்டமோ ,என முழிக்க....
மேல சொல்லும், என மங்கை கூற..

வேற என்ன , கார்மேகம் ஐயா உன்ன தேடுனாரு , புது ஆபிசர்ட்ட அறிமுகம் படுத்தி வைக்க, உன்ன பத்தி ரொம்ப பெருமையா சொல்லி ட்டு இருந்தாரு அவர்ட்ட.....

அவ்ளோதான் யூனியன் லீடர் அம்மா 🙂🙂

என அனைத்தையும் கூறி முடித்தாள் உஷா.

அனைத்தும் கேட்டு விட்டு அமைதியாக இருந்தாள் மங்கை.....

சரி மங்கா, நாளைக்கு நல்ல ஒரு புடவையா கட்டிட்டு வா சரியா.....

ஏன் எதுக்கு என ,மங்கை கேட்க

ஏய் ,ஐயா உன்ன பத்தி சொன்னத வைச்சு, அவரும் உன்ன பார்க்க எதிர் பார்ப்போடு இருப்பார்ல,அதான்.

ஏன்டி, அவர் என்ன என்ன பொண்ணு பார்க்க வா வர்றாரு , நான் எப்பொழுதும் போல தான் வருவேன்.

சரி என்னனமோ சொன்னியே அவரை பத்தி, அவரு பேர சொன்னியா ?

அட ஆமால... மங்கா அவரு பேரு.....அ...........அ........அவரு பேரு..அதான் நாளைக்கு நேர்லயே பார்க்க போறியே அவரே சொல்லுவாரு, சரி எதுக்கு நாளைக்கு நல்லா சாமி கும்பிட்டுட்டு வா ,

எதுக்குடி, நல்லா சாமி கும்பிடனும் என்று மங்கை கேட்க...

என்னமோ , தெரியல டி அவரால தான் உன் வாழ்க்கையே மாறப்போகுதுன்னு
நினைக்கேன்,சரி மங்கா நான் வீட்டுக்கு கிளம்புறேன் , லேட் ஆகிட்டு அம்மா தேடும் வர்றேன்,

என சொல்லி விட்டு உஷா சென்று விட.

எதையும் யோசிக்காதவளாய், அன்று இரவு

உறங்கி விட்டாள்.

காலை புலர்ந்து, கதிரவன் உதித்து, நடக்க வேண்டிய அனைத்தும் நல்லபடியாக நடக்க,

அடியே மங்கா இரு, அம்மா கொல்லையில சுடுதண்ணீர் போட்டு வச்சுருக்கேன் வெலாவி தாறேன் அதுக்குப்புறம் குளி , என மரகதம் சொல்லி முடிப்பதற்குள் , மங்கை குளித்து முடித்து வெளியே வந்தாள் .

அடியே, நேத்து பூராவும் காய்ச்சல்ல கிடந்துட்டு இன்னிக்கு குளிர் தண்ணீர் ல குளிச்சு இருக்க.... உனக்கு ஏதாவது கூறு இருக்கா என மரகதம் திட்டி தீர்த்து விட்டாள்...

அம்மா, எனக்கு எல்லாம் சரியாயிட்டுமா , நீ போ சாப்பாடு எடுத்து வை,என கூறி விட்டு, செல்பில் இருக்கும் உடையை தேர்வு செய்தாள், அதில் ஒரு நீல நிற புது எம்பிராய்டரி புடவையை எடுத்தாள் பின்பு, உஷா சொன்னது நினைவுக்கு வர ,

ஒரு பச்சை நிற காட்டன் புடவை , அது கொஞ்சம் பழைய புடவை தான்.. அதை எடுத்து உடுத்தினாள்....

வழக்கம் போல் அவள் தெருவில் செய்யும் அனைத்து கடமைகளையும் செய்து விட்டு, பஸ் ஏறினாள்.

ஏன்டி எவ்வளவு சொன்னேன் ஒரு நல்ல புடவையா கட்டிட்டு வான்னு...என உஷா கேட்க...

ஏன் இதுக்கென்ன, நான் வேலைக்கு தான் வாரேன் புரியுதா.... என கொஞ்சம் முறைப்பாக கூறவும் உஷா அமைதி யானாள்......

இருவரும், கம்பெனி வந்து அவரவர் இருக்கையில் அமரவும்,

ரங்கசாமி வந்தான்...ஏய் மங்கா புது ஆபிசர் உன்ன கூப்பிடுறாரு வா என கூப்பிட....

உஷா சிரிப்புடன் தலை ஆட்ட.

மங்கை எந்திரிச்சு புது ஆபிசர் அறையை தட்ட,

உள்ளே வரலாம் என்ற குரல் கேட்டு, மங்கை உள்ளே நுழைய,

அஜய் , சுவர் நோக்கி திரும்பி பையிலை பார்த்து கொண்டு இருக்க...

சார் , என் பேரு மங்கை சார்,வணக்கம் என கை கூப்பி நிற்க,

வாங்க, மிஸ்,மங்கை என திரும்ப........

இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ந்து விட்டனர், மங்கை மனதிற்குள்ளும்,

அஜய் வெளிப்படையாகவும்.....

மயூரி...... நீயா என கூற..........

அதிர்ச்சி யில் இருந்து மீளாதவனாய் ,நின்று கொண்டிருந்தான் அஜய்...

மயூரா வா ?
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 8

காத்திருந்து, பார்க்க நினைத்தவன்
பார்த்தவுடன் அதிர்ந்தது ஏனோ
அவன் பார்வையின் தவறோ
இல்லை அந்த பாவையின் தவறோ


ரங்கசாமி வந்தான்...ஏய் மங்கா புது ஆபிசர் உன்ன கூப்பிடுறாரு வா என கூப்பிட....


உஷா சிரிப்புன் தலை ஆட்ட...


உடனே மங்கை செல்ல, அவள் போவதையே பார்த்த ரங்கசாமி, அந்த வயசான மனுசனே வலையில் விழுந்தான் , இந்த ஆபிசர் இளவட்டம் வேற இவன மடக்குறது எல்லாம் இவளுக்கு கஷ்டமா என கீழ்த்தரமாக தன் மனதிற்குள் சொல்லி கொண்டான்....


பின்ன வெளியே இப்படி கீழ்தரமா பேசுனா என்ன நடக்கும் என்று அவனுக்கு நல்லா வே அன்று மங்கை புரியவைத்தாளே, அந்த பயம் இருக்க தானே செய்யும்.....


ஆனால் அவன் ஒன்றும் லேசுபட்டவன் கிடையாது, அவன் வாய்ப்புக்காக கழுகு போல் காத்துக் கொண்டிருக்கிறான்......


உள்ளே வரலாம் என்ற குரல் கேட்டு, மங்கை உள்ளே நுழைய,

அஜய் , சுவர் நோக்கி திரும்பி பையிலை பார்த்து கொண்டு இருக்க...


சார் , என் பேரு மங்கை சார்,வணக்கம் என கை கூப்பி நிற்க,


வாங்க, மிஸ்,மங்கை என திரும்ப........


இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ந்து விட்டனர், மங்கை மனதிற்குள்ளும்,
அஜய் வெளிப்படையாகவும்.....


மயூரி...... நீயா என கூற..........


அதிர்ச்சியில் இருந்து மீளாதவனாய் ,நின்று கொண்டிருந்தான் அஜய்...


மயூரி,..... என கூறி மறுபடியும் தன் கண்களை துடைத்து விட்டு பார்த்தான்.


அவளே தான் மயூரி ....நீ எப்படி இங்கே....


சார், என்ன சொல்லுரீங்க......
என அவனை பார்த்து மங்கை கூற.....
அஜய்க்கு தான் ஒன்றும் புரியவில்லை..


சார் என் பெயர் மங்கை, யூனியன் லீடர்,..நீங்கள் பார்க்கனும் என்று சொன்னீர்களாம்.......


என்ன மயூரி, என்னை உனக்கு தெரியலயா......


என அஜய் கண்களை சுருக்கி, அவளை பார்த்து கேட்க....


சார் முதல்ல நீங்க என்ன பேசுரீங்கன்னே புரியவில்லை சார்.. உங்களையே நான் இப்போது தான் பார்க்கேன் பின் எப்படி தெரியும் என மங்கை சாதாரணமாக பேச....


அப்போ என்ன பார்த்தவுடன் ஏன் அதிர்ச்சி ஆன .... என அஜய் கேட்க..


சார் அது வந்து நேத்து என் தோழி உஷா உங்களை ரொம்ப வர்ணித்து பேசுனா, அத நினைத்து ஒரு உருவ பிரம்மையில் வந்தேன், அதான் உங்களை பார்த்த உடன் உங்களுக்கு அப்படி அதிர்ச்சி ஆன மாதிரி தெரிந்து இருக்கும் என சாதாரணமாக கூறி முடித்து விட்டாள்....


அஜய் இப்பொழுதும் குழம்பிய மனநிலையில் இருக்க, அதை அவன் முகமும் வெளிபடுத்தியது....


சரி சார், நீங்க, பைல் அ பார்த்து கொஞ்சம் குழம்பி போய் இருக்கிற மாதிரி இருக்கு,
ஒரு லெமன் டீ குடிங்க கொஞ்சம் நல்லா இருக்கும் சார் நான் ரங்கசாமிட்ட சொல்லுறேன்..... இப்போ நான் போறேன்
சார் நிறைய வேலை இருக்கு .....


என கூறிவிட்டு மங்கை ,ரங்கசாமி யை கூப்பிட்டு சாருக்கு லெமன் டீ கேட்டார்
என சொல்லி விட்டு...... தன் வேலையை தொடர்ந்தாள்......


அஜய் அவள் சென்ற பின்பும் குழப்பத்தில் இருந்து வெளிவராதவனாய் அமர்ந்து இருக்க...


சார்..... உள்ளே வரலாமா என்ற குரல் கேட்டு சற்று நிகழ் உலகிற்கு வந்தான்..


ஆங்..... உள்ளே வரலாம்.....


சார்... லெமன் டீ கேட்டீங்களாமே... மங்கை சொன்னா... இந்தாங்க சார்.......


ஆங்.... அத டேபிள் அ வைங்க ரங்கசாமி......


சரி, சார்.... வேற எதும் வேண்டும் மா சார்.....ஏன்னா இங்க பியூன், சூப்பர்வைசர் எல்லாம் நான் தான் ,நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் என் கிட்ட கேட்கலாம்....


ம்ம்ம்ம்.......


சரி சார் நான் வரேன்......


ஆங் .... ரங்கசாமி...என அஜய் அழைக்க


என்னா சார் சொல்லுங்க...


இந்த மங்கை, இங்கே எத்தனை வருஷமா, வேலை பார்க்கா, அவ குடும்பம் இத பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?


என்ன இந்த ஆள் வந்தன்னைக்கே மங்கைய பத்தி விசாரிக்கிறாரு....அது சரி அவள பார்த்தா யாருக்கு தான் ஆசை வராது... என மனதில் நினைத்து கொண்டிருக்க....

ஹலோ , மிஸ்டர் ரங்கசாமி.... ரங்கசாமி சாமி... என்னாச்சு....

சார் அத ஏன் நீங்கள் கேட்குறீங்கன்னு ,நான் உங்கள கேட்க முடியாது ஏன்னா நீங்க ஆபிசர்....... நான் வெறும் சூப்பர் வைசர்.........என இழுக்க

லுக், மிஸ்டர், நான் கேட்டா ,கேட்ட கேள்விக்கு பதில் வரனும், அத விட்டுட்டு இப்படி அதிகப்பிரசங்கி தனமா பேச கூடாது புரியுதா......

சரி சரி சார்...... அவ பெயர் மங்கை, அவளுக்கு ஒரு தங்கச்சியும், அம்மாவும் தான் இருக்காங்க, இங்கே ஒரு வருஷமா வேலைபார்க்கா , அவ தோழி உஷா, அதுக்கு மேல எனக்கு ஒண்ணும் தெரியாது சார்...

சரி நீங்கள் போகலாம், ஏதாவது தேவைபட்டா கூப்பிடுறேன்....

ரங்கசாமி, அஜய் அ பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தபடி வெளியே சென்று விட்டான்..

அஜய் தன் செல்பில், உழியர் சுய விவர பட்டியல் பைல் எடுத்து பார்த்தான், அதில் ரங்கசாமி சொன்ன தகவலை தாண்டி இன்னொன்றும் இருந்தது, அதில் அவள் செல்வி மங்கை என இருந்தது....

அஜய் பைலை தன் டேபிள் மேல் போட்டு விட்டு, அப்படி யே உட்கார்ந்து விட்டான்...

இல்லை, அவள், மங்கை இல்லை, அவள் மயூரி தான், மயூரி மட்டும் தான்.....

ஆனால் ஆதாரம் எல்லாம் மங்கை யாகவே இருக்கிறதே.....

ஆதாரம், மங்கை யாக இருந்தாலும், அந்த கண்கள் மயூரி தான்.....

என அவன் மனம் இருவேறாக சிந்தித்து கொண்டிருந்தது .......

சட்டென, எழுந்து, கம்பெனி பார்வையிடுவது போல் மீண்டும் ஒரு முறை மங்கை யை காண சென்றான் அஜய்.....

மொத்த கம்பெனி யையும் பார்த்து கொண்டு இருந்தவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை, அப்படி யே மங்கை இடத்திற்கு
வேகமாக வந்தவன் அங்கு வேலை முடிந்து அனைவரும் சென்று இருக்க சற்று ஏமாற்றம் அடைந்தான்......

இங்கே பேருந்தில் ,மங்கை யிடம் நடந்த வற்றை கேட்டு கொண்டிருந்தாள் உஷா......

என்னது சார் உன்ன எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு சொன்னாரா .....என உஷா கேட்க

அப்படி சொல்லி இருந்தா தான் பரவாயில்லை யே...
என்ன யாருன்னு தெரியலயா ன்னு கேட்காரு...

ஹேய் , முதல்ல பார்க்குறவங்க எல்லாரும் பொண்ணுங்கள் கிட்ட கேட்கிற கேள்வி தான்டி இது,
அவரு உன்கூட பழகனும்னு நினைக்கார் போல.....

அடியே உன் கற்பனை குதிரைய கொஞ்சம் கெட்டி போடு.. அவரு என்ன பார்த்தவுடன் மயுரி என்று தான் அழைத்தார்....

மயூரியா அது யாரு....

எனக்கு என்ன தெரியும்......

ஒரு வேளை காதலியா இருக்குமோ, அந்த புள்ள உன்ன மாதிரி இருக்குமோ என்னவோ.....என உஷா கூற ...

அதை எதையும் கவனிக்காதது போல் மங்கை இருந்தாள்.....

அங்கு, குழப்பத்துடன் வீட்டிற்க்கு சென்ற அஜய்... உடை மாற்றி விட்டு கட்டிலில்
படுத்தவனுக்கு, அந்த முகம், அந்த பார்வை மயூரி தான் மயூரியே தான்....

என புலம்பி கொண்டே தூங்கி போனான், ஆணவன்........

கண்களால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்

அதுவும் பொய்த்து போனதே.......

மயுரியா? மங்கை யா?


காலம் பதில் சொல்லும்... 😁😁😁😁😁
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 9

வேண்டாம் என்று வீசிய
பொருளின் நிலைபாடை
அறிய முனைய மாட்டோம்


அது தான் இயற்கை , வேண்டாம் என்றால் அது வேண்டாதது தானே.


வாமா, மங்கா, இன்னிக்கு கம்பெனில என்ன நடந்தது, புது ஆபிசர் என்ன சொன்னார், மரகதம் கேட்க.


எல்லாம் , நல்ல படியா போச்சுமா, அவரும் நல்லா பேசுனார், நல்ல குணமாக தெரியுது,
என கூறிவிட்டு வழக்கம் போல தனது வேலைகளை முடித்து விட்டு,நாவலை எடுத்து கொண்டு படுத்து விட்டாள்.


அங்கு அஜய், புரண்டு, புரண்டு படுத்தும் கண்களில் துயில் சிறிதும் இல்லை.


அது எப்படி முடியும், ஒரே மாதிரி எப்படி இருக்க முடியும், அதே கண்கள், ஆனால் அவள் மயூரி இல்லை என்கிறாள்.


என்ன அஜய், அப்படியே அவள் மயூரியா இருந்தாள் உனக்கென்ன , உன்னை வேண்டாம் என ஒதுக்கியவளை பற்றி நீ ஏன்டா யோசிக்க, என அவன் அவனுக்குள்ளே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான்.


ஒரு வழியாக தன் அழைபாயும் மனதை, கட்டி இழுத்து உறங்கியும் போனான்.


பொழுது விடிந்தது,


டேய், அஜய், எந்திரிடா, என அஜய்ன் அம்மா ரேவதி அவனை எழுப்பினார்.


மிகவும் கஷ்டப்பட்டு எழுந்தவன் கண்கள் சிவந்து போய் இருந்தது.


என்னபா, நைட் முழுதும் தூங்கலயாப்பா,
என ரேவதி கேட்க .


இல்லை மா, புது இடம், அதனால கொஞ்சம் தூக்கம் வரல மா.


சரிப்பா, போய் பிரஷ் ஆகிட்டு வா , அம்மா, இஞ்சி போட்டு டீ தாறேன்,தலைவலி சோர்வு எல்லாம் சரியாகிவிடும்.


அம்மா, அப்படின்னா நல்ல இஞ்சி காப்பி போடுங்கள்.


ஆங்..... என்னப்பா இஞ்சி காப்பி யா,என ரேவதி தலையில் அடிக்க.


பின்ன என்ன மா, எனக்கு காப்பி தானே பிடிக்கும், என அஜய் கூற...


நேத்து கம்பெனியில் தந்த லெமன் டீய கூட நான் குடிக்கல மா.


நீ இருக்கியே! என தன் மகனின் காதை பிடித்து திருக, கத்திக்கொண்டே சிறுபிள்ளை போல் பாத்ரூம்க்கு ஓடிப்போனான்.

ஒரு தாய்க்கு தன் குழந்தைகள் எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும், அவருக்கு மட்டும் குழந்தையாகவே தெரிவார்கள்.


பின் தான் கிளம்பி, தன் அன்னை கையால் காலை உணவு சாப்பிட்டு விட்டு, கம்பெனிக்கு கிளம்பினான், அவனுக்காக வாசலில் கம்பெனி கார் நின்று கொண்டிருந்தது.


கார் , கம்பெனியை வந்தடைந்தது.


காரில் இருந்து அஜய் கீழிறங்க, மெயின் கேட்டில் இருந்து மங்கையும்,உஷாவும் வந்து கொண்டிருந்தனர்.


அதே நடை, அதே முகம், அதே கண்கள் மயூரி, என தன் மனதிற்குள் கூறி முடிப்பதற்குள் மங்கை உள்ளே சென்றிருந்தாள்,அவளை பார்த்து கொண்டே, உள்ளே சென்றவன் தன் இருக்கையில் அமர்ந்தான்,


அவன் அங்கு தான் இருந்தான் அவன் நினைவுகள் மயூரி யை தேடி சென்றது.


டிசைனிங் கல்லூரி முதல் வருடம்,


அஜய் தன் நண்பர்கள்களுடன் முதல்நிலை மாணவர்களை கலாய்ப்பதற்காக நின்று கொண்டிருந்தான் .


அபொழுது தான் அவள் வந்தாள் , ஒரு சாதாரணமான சல்வாரில், தோளில் ஒரு பை, ஆர்பாட்டம் இல்லாத முகம், பயந்து கொண்டும் ,தயங்கி கொண்டும் மெல்ல நடந்து வந்தாள்.


அவள் தயக்கத்திற்கும் காரணம் உள்ளது.


யாராக இருந்தாலும் அஜய் இருக்கும், பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்,


அவர்களை நெருங்கி அவள் வந்து கொண்டிருந்தாள்.

அவள் தோற்றமே, அங்குள்ள மாணவர்களிடம் இருந்து அவளை விலக்கி காட்டியது.


மேடம் , நில்லுங்கள் சீனியர்ஸ் இங்கு இருக்கோம், எங்களை மதிக்காமல் போய்ட்டு இருக்க என அஜய் கூற.


உடன் இருந்த நண்பன் ஒருவன், டேய் அவ அட்டு பீஸ் டா அவள விடுடா மச்சி, இங்க பாரு மச்சி , ஐஸ்கிரீம் மாதிரி வராலுவ என கூற.


அவளது கண்கள் தரை நோக்கியது, கால்கள் நடக்கத்துவங்கியது.


அவ்வளவு பெரிய வார்த்தை அவளை ஒன்றும் செய்ய வில்லை, முகம் கலவரப்பட வில்லை, அவள் கோபப்பட வில்லை, ஏன் பயந்தவளா இருப்பின் கண்ணீராவது வரும்,


ஆனால் அவளிடத்தில் எந்த ஒரு மாற்றமும் இன்றி சாதாரணமாக கடந்து விட்டாள்.


அந்த நிகழ்வு தான் ,அஜய்க்கு பெரிய அவமானமாக இருந்தது.


அவள் கண்கள் அஜய்யை பார்த்த போது, பெண்களை தரக்குறைவாக எண்ணும் நீங்கள் அனைவரும் ஆண்களாடா என்ற வார்த்தை பேசியது.


அஜய் நண்பர்கள்களோடு சாதாரணமாக கிண்டல், கேலி செய்வானே தவிர எந்த ஒரு பெண்ணையும் தரக்குறைவாக பேசியது கிடையாது.ஆனால் இன்று அவன் உடனிருந்தவன் பேச்சும், அவளின் பார்வையும்,அவனை கூனிகுறுக வைத்தது.


அமைதியாக நின்றவனை, மச்சான் என்ன பன்ற என ஒரு குரல் கேட்க, அது ராஜா.


ராஜா, அஜய்யின் உயிர் தோழன், அஜய் போலவே மிகவும் அழகானவன் , ஆனால் வசதி ஆனவன்.


அஜய் நடுத்தர குடும்பம் தான் ஆனால், அருமையான படிப்பிற்கும், அறிவிற்க்கும் , சொந்தகாரன்.


தன் நண்பன் வந்ததும் தன் நண்பன் ராஜா விடம் நடந்த அனைத்தையும் கூறினான் அஜய்.


விட்றா, மச்சான் காலேஜ் லைப்ல இதெல்லாம் சாதாரணம்.


சார் ..... சார்......


என்ற குரல் கேட்டு நிகழ்வு க்கு வந்தான்.


ஆங்.... என்ன ? யாரு?



சார் நான் மங்கை சார்,உள்ளே வரலாமா சார்.

ஆங்... வாங்க ம.யூ..........ஆ..மங்கை..... என தன் பேச்சை சரிசெய்து கொண்டான்.

சொல்லுங்க மங்கை....

இல்லை சார்....... நம்ம யூனியன் மெம்பர் ராமலெட்சுமி அம்மா மகள் கல்யாண லோன் பத்தி, கார்மேகம் ஐயாட்ட சொல்லி இருந்தோம்,அவரும் உங்க கிட்ட சொல்லி இருந்ததா சொன்னாரு,

ஆமாம்....... அந்த பைல் அ பார்த்தேன் அவங்க ஏற்கனவே இரண்டு மூன்று தடவை சின்ன சின்னதா லோன் வாங்கி இருக்காங்க போல.


சார் அதெல்லாம் அடைச்சுட்டாங்க சார்,சார் அவங்க இந்த கம்பெனில 10 வருஷத்துக்கும் மேல வேலை செய்றதா , கார்மேகம் ஐயா, சொல்லியிருப்பாரே.

சரி சீக்கிரம் பார்த்து ஏற்பாடு பண்றேன் மயுரி.........இல்லை மங்கை என மறுபடியும் அவன் பேச்சு தடுமாறியது.

சார் என் பேர் மங்கை அதுல உங்களுக்கு ஏன் இவ்வளவு குழப்பம், ஏன் சார் உங்களுக்கு தெரிஞ்சுவங்க யாராட்டும் என்ன மாதிரி இருப்பார்களா.

ஆமாம்.... மங்கை.....ஆமாம் என பல்லை கடித்து கொண்டு கூற....

அதுக்கு ஏன் சார் இவ்வளவு கோபம் வருது,என கூறிவிட்டு வெளியே சென்று விட்டாள்.

அதே முகம்,அதே கண்கள் அவள் என்று சொன்னாலும் , மங்கை யின் பட பட பேச்சு மயூரியிடம் கிடையாது.

மயூரி.... என் வாழ்நாளில் உன்ன பார்க்க கூடாதுன்னு நினைச்சேன்... ஆனா உன் உருவத்தில இங்க ஒருத்தி என் கண்ணு முன்னாடி யே இருக்கா.

அவள் செய்த துரோகத்திற்கு அவளை,

மயூரி, ஐ கேட் யூ.........யூ ஆர் செல்பிஸ்......... யூ ஆர் அ லேயர்......... என டேபிலில் தன் கையை குத்தி விட்டு தலையை பிடித்து உட்கார்ந்து கொண்டான்.

மயூரி,....எனும் உருவம் கடந்தகால வெறுப்பாகவும்,

மங்கை .... எனும் உருவம் நிகழ் கால நிஜமாக கண்முண்ணே.....

அஜய், மயூரி, வாழ்க்கை மர்மம் தான் என்னவோ.....🤔🤔🤔🤔🤔😊😊😊😊
 
Status
Not open for further replies.
Top