All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்யா ராஜின் "கேளடி என் கண்மணி" - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

நித்யா ராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாய்ப்பளித்த ஸ்ரீ மேம்-கு நன்றிகள்...
இந்த திரிக்கு வருகை தந்த தோழமைகளை "வருக வருக" என வரவேற்கிறென். வாங்க பழகலாம்.....
என் பெயர் நித்யா. இது எனது முதல் தமிழ் நாவல். அதனால் பிழைகள் இருந்தால் மன்னித்து support பண்ணுங்க மக்களே.......
உங்கள் கருத்துக்கள் எதுவாயினும் அதை கருத்து திரியில் பகிரவும் அது கதையை மேலும் develop செய்ய உதவியாக இருக்கும்.... கதை பிடித்திருந்தால் அந்த like and share button -ய் தக தக வென தட்டுங்கள் ..... ;););):geek:
"கேளடி என் கண்மணி" -ன் முன்னொட்டம் கதை திரியில் இன்று பகிர்கிறென்....
 

நித்யா ராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கேளடி என் கண்மணி

முன்னோட்டம்
................................................​

மீண்டும் பிறக்கும் வரம் ஒன்று கிடைக்கட்டும்
சேர்வது உனைமட்டுமே என்றால்!!!!!​

................................................

மெல்ல கரையும் இரவு... தென்றலில் மென்மையான தீண்டல்... மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்ட அந்த தோட்டம், என எங்கும் மகிழ்ச்சியின் பிம்பம் விரிந்த்துகிடக்க அவன் மனம் மட்டும் ஆர்பரிக்கும் கடலென கொதித்துகொண்டிருந்தது...
நேற்றுவரை குளிர்ந்த வெண்நிலவின் ஒளி இன்று சூரியனின் கனலாய் சுட்டெரிக்க அவன் கண்களொ மூடியிருந்த அவளின் பால்கனி கதவையே வெறித்து பார்த்துகொண்டிருந்தன...

“இந்ந நேரம் தூங்க்கிறுப்பாளா??” நீ செஞ்ச காரியத்துக்கு நல்லா தூக்கம் வரும், போடா Fool. என மனசாட்சி சவுக்கால் அடிக்க அங்கிருந்து புறபட்டவனுக்கு மேலும் ஒரு இடி...

மெல்லிய நீல வண்ண உடையில் கார்க்கூந்தல் காற்றில் தவழ, எதுவும் நடகாதது பொல் முகத்தில் புன்னகையுடன் முழு பவுர்ணமியாய் நடந்துவந்த அவளை பார்த்து இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. அந்த அதிர்ச்சி உடைவதற்குள் தன் கையில் இருந்த காகிதத்தை அவனிடம் நீட்டினாள்.

“என்ன இது?”
“உங்களுக்கு தான். படிங்க.” அதை படித்தவனுக்கு ரத்தம் நாடி நரம்பு என அனைத்தும் கொதித்தது.

“இதுக்கு என்ன அர்த்தம்?” என நெருப்புப்பந்தாய் பாய்ந்தான். நெற்றிக்கண் மட்டும் இருந்திருந்தால் அவளை எரித்தே இருப்பான்.

“அதுல என்ன இருக்கோ அதான் அர்த்தம்.” என்று கூறி கோபத்தின் விளிம்பில் நின்ற அவனை சலனமற்று கூலாக பார்த்தாள். “யார் யாரோ... எதேதோ குடுத்து சொல்லுவாங்க. நான் இத குடுத்து சொல்றேன். என்னை கல்யாணம் பண்ணிகங்க. Just Marry me.”

******************************************************
Teaser எப்படி இருக்கு????? மறக்காம comment ல சொல்லுக மக்களே... நாளைக்கு தமிழ் முதல் நாள் முதல் பகுதியோட உங்கள மீட் பண்றென்.... டாட்டா....
 

நித்யா ராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கேளடி என் கண்மணி
அத்தியாயம் – 1
.........................................................

இன்று ஒன்றாய் இணைந்தது நம் பெயர் மட்டும் அல்ல நம் உயிரும் தான்”

..........................................................

“நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் என் மனம் இதுக்கு சம்மதிக்கலைங்க.” என சிவகாசி பட்டாசாய் வெடித்தாள், சுஜாதா.

ஆள் அறவமற்ற திருமண மண்டபம் போல் இருந்த அந்த வீட்டின் பெரிய ஹாலில் அவள் குறல் நாளாபுறமும் எதிரொலித்தது. எதிரெ சிவப்பு நிற மென்பட்டு சொபாவில் தனக்கே உரிய அமைதியான பாணீயில் மாலை தேனீரை சுவைத்தபடியே தன் மனைவியை கண்டு புன்னகைத்து கொண்டிறிருந்தார் ரகுராம்.

“கொஞ்சம் நான் சொல்றதை பொறுமையாய் கேள், சுஜா.”
“நீங்க எதும் சொல்ல வேண்டாம். சொன்ன வர பொதும் இதுக்கே தல சுத்திறுச்சு.”
“பொறுப்பா ஒரு அப்பாவா நம்ம மகனுக்கு பொண்ணு செலெக்ட் பண்ணது தப்பா?

“இல்லங்க். ஆனா யாரோ முன்ன பின்ன தெரியத ஒரு பொண்ண இவ தான் உன் மருமகள் நா என் நண்பருக்கு வாக்கு குடுத்துடெனு சொன்ன அதுதாங்க தப்பு. அதுவும் மதுர பக்கம் உள்ள கிராமமாம்... எப்பிடி உங்களால இப்டி ஒரு துரோகத்த செய்ய முடிஞ்சது...”

“துரோகமா?? இந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்?? அழகா லட்சணமா தான இருக்கா. ஏன் கிராமாத்து பொண்ணுனா அன்பு பாசம் இருக்காதா என்ன??”

“அச்சோ... அப்டி சொல்லலைங்க. நானும் கிராமாத்து பொண்ணு தான். ஆனா சென்னை-லயே Best young Businessman award வாங்குன நம்ம பையனுக்கு எப்படிங்க இந்த பொண்ணு எப்படி பொருத்தமா இருப்பா, அதுவும் லவ் மேரேஜ் பன்ற இந்த காலத்துல...”

“பொருத்தமா??? ஒ... அதான் உன் பிரச்சனையா??” என ஒன்றும் தெரியாததுபொல கேட்டார் ரகுராம். “பொண்ணு பிறந்தது தான் இங்க வளர்ந்தது படிச்சது எல்லாமே லண்டண் Priston University.”
சுஜாத்தாவிற்கு ஒரு கணம் தூக்கி வாரி போட்டது.

“அது மட்டும் இல்ல. பொண்ணு Archery அதான் வில்வித்தைல University Champion. MS படிச்சுகிட்டே Ellite School ல கோச்சாவும் இருக்கா.” என ரகுராம் சொல்லி முடிக்க சுஜாத்தாவின் தலை இப்போ நிஜமாவே சுத்தியது. கண்ணாடி மேஜைமேல் சிதறிருந்த புகைப்படத்தை எட்டி பார்த்தாள்.

ஒன்றில் Blue Jeans, White shirt, Hoodie, dark frame sunglass and Layer hair cut என அனைத்திலும் லண்டண் வாசம் வீசியது. ஆனால் முகத்திலொ, குளிர்ந்த பார்வை, மெல்லிய புன்னகை, ஆயிரம் நிலவில் பிரகாசம் என காலண்டரில் பார்க்கும் பரிட்சயமான மஹாலட்சுமின் கடாஷ்ம் தாதும்பியது.

மட்ற்றொரு படத்தில் சிவப்பு நிற உடை, கையில் வில்-அம்பு, கண்களில் நெருப்பு, இலக்கின் மேல் கழுகின் பார்வை என கம்பிரமாக நின்றிருந்த அவள் அந்த அர்ஜுனனின் சாயலாகவே தோன்றினாள்.

இதுக்கு மேல ஒரு பொண்ணு நம்ம தெடுனாலும் கிடைகாதுடா சாமி. என நினைத்தவாறு தன் கணவணை பார்த்து திருதிருவென விழித்தாள்.

“அதான் ஒருதர் சொல்றத முழுசா கேக்காமா நம்ம பேசகூடாதுங்கிறது. இதுக்கே தல சுத்திட்டா எப்படி. இன்னும் இருக்கு சுஜா டார்லிங்க்.”

“என்னங்க கல்யாண வயசுல ரெண்டு பசங்க் இருக்காக இப்ப பொய் டார்லிங்க் அது இது சொல்லிட்டு.”
“என் wife எனக்கு எப்பொவுமே டார்லிங்க் தான்.” என அசட்டு சிரிப்பு சிரித்து சுஜாவிண் கன்னத்தில் செல்லமாக தட்டினார் ரகுராம்.

“சரி, பொண்ணு பேர சொல்ல மாட்டிங்கலா?” சூப்பர் இப்ப தான் கதை சூடு பிடிச்சுருக்கு. இவ மயக்கமே போட்டாலும் ஆச்சர்யபட்ற்க்கில்ல என நினைத்தவாறே அந்த பெயரை அழுத்தமாக உச்சரித்தார்.

“நிதிலருத்ரா.... என் நண்பண் சிங்கபுரி ராஜசேகர பூபதி பொண்ணு.” அதிர்ந்த சுஜாவிற்க்கு அதுவரை திடமாய் இருந்த மார்பில் தரை இப்பொது காற்றில் ஊஞ்சலாய் தள்ளாடியது.

“நம்ம... நம்ம பூபதி அண்ணன் பொண்ணா??” பூபதி என்னும் ஒட்றை சொல்லில் சுஜாவின் நினைவுகள் 17 வருடங்கள் பின்னொக்கி நகர்ந்தது. நித்யாவின் பரிட்சயமான முகம் யாருடையது என உணர்ந்துகொண்ட அவளின் கால்கள் வலுவிழந்தது; தடுமாறிய மனைவியை தாங்கிபிடித்தார் ரகுராம்.

“இப்போ சொல்லு சுஜா. பூபதிக்கு வாக்கு குடுத்திருகொம்ல.” என புன்னகைத்த கணவனை ‘என்னங்க இது விளையாட்டு’ என்பது பொல் பார்த்தாள்.

“ஆனா அது 17 வருசத்துக்கு முன்னாடி. அடுத்த வருசமே பூபதி அண்ணே பொனப்பிறகு எல்லாம் முடிஞ்சு போசே...”
“நானும் அப்படி தான் நினசிருந்தேன். ஆனா... ஒரு முடிவில தான் இன்னொரு தொடக்கம் இருக்கும்னு சொல்லுவாங்கலே. அதுபொல அப்பொ செஞ்ச நிச்சயத்துக்கு இப்ப அச்சாரம் வந்திருக்கு.”

“என்னங்க சொல்றிங்க?” என்றவளிடம் அந்த பையிலை நீட்டினார். அதை படித்தவள் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தில் திகைத்தாள்.

“நிதிலா இந்த ரத்தினகடவூர் ரகுராம் வீட்டு மருமகளாதான் ஆகனும்னு அவன் சாகுறத்துக்கு 1 வருசத்துக்கு முன்னாடியே உயில் எழுதி வச்சிருகான். என் பூபதி என்மேல வச்சிருகுற நட்பை பாத்தியா சுஜா.” என பெருமிதத்தில் மார்தட்டினார் ரகுராம்.

நிதிலருத்ரா – கார்த்திக்சிவா. பேர் பொருத்தம் நல்ல இருக்குல்ல.” என்றவனை கண்ணீர் பொங்க பார்த்த சுஜா அவர் கையில் மறைத்து வைத்திருந்த மீதி file பேப்பரை பார்க்க தவறிவிட்டாள்.

“இது இப்ப வேணாம் சுஜா... இன்னொரு நாள்...” என்று எண்ணியவாறே பைய்யில் திணித்துக்கொண்டார்....

******************************************************
முதல் அத்தியாயம் பிடிச்சிருக்கும் நினைக்குறேன். பிடிச்சிருந்தால் like, comment and share பண்ணுங்கோ...
 
Last edited:

நித்யா ராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கேளடி என் கண்மணி
அத்தியாயம் – 2
**********************************************


“Hello everyone... It’s my pleasure to welcome you all to 68th Intercollege sports meet. This is your host Shasha. After a short break, Target Archery is ready to feast your eyes. All the Archers are requested to assemble in Ingrid Arena, precisely in 10 minutes” என நுனிநாவில் லண்டண் ஆங்கிலம் பிறழ அந்நிகழ்ச்சியை தொகுத்துக்கொண்டிருந்தார் அந்த இங்கிலாந்து பெண்மணி.

அனைவரும் பரபரப்பாய் போட்டி களத்தை நோக்கி ஓட, அந்த ஓய்வு அறையில் ஒலிப்பெருக்கியில் வந்த அழைப்பிற்கு சிறிதும் தடுமாறாது மெல்ல தன் முகத்தை மூடியிருந்த Archery Nithi 07 Priston University என பொறிக்கப்பட்டிருந்த சிவப்புநிற ஜெர்கினை மெல்ல விலக்கி சோம்பல்முறித்தபடியே எழுந்தாள், நிதினருத்ரா. அருகில் இருந்த ஆரஞ்சு பழரசத்தை ஒரே மடக்கில் விழுங்கி கப்பை தான் பின் பின்னால் ஒரத்தில் இருந்த குப்பை தொட்டியில் எரிய அதுவும் சரியாக விழுந்தது.

“வாவ்... நைஸ் ஷாட்!!!!!” என்று கைகள் தட்டியபடியே உள்ளே வந்த நபரை நிமிர்ந்து பார்த்தாள். நல்ல உயரம், இளம் பச்சை கண்கள், பொன்னிற தலைமுடி, உடற்பயிற்சி செய்த தேகம், கையில் உயர்ரக வில், சிக்கென இருந்த நீலநிற Elite Society institute –இன் போட்டி உடை என இங்கிலாந்து இளவரசரின் தூரத்து சொந்தம் போல் காட்சியளித்தான் அந்த மாணவன். இவன் மாநில போட்டியில் ஆடவர் பிரிவில் வென்றவன். நிதினா மகளிர் பிரிவு. இன்று கல்லூரிகளுக்கு இடயே நடக்கும் வில்வித்தை போட்டியில் இருவரும் பங்கேற்கிறார்கள்.

"ஹே ஜான், வாட் எ சர்பிரைஸ்???" என்று கேட்டவளின் கரத்தை பற்றி விரல்களில் லேசாக முத்தமிட்டு "ஹல்லோ சாம்பியன். Just came to wish you good luck." என்று கூறி கன்னத்தில் முத்தமிட, இவளும்

“Aww... That’s so sweet of you, John. Good luck for you too...” என்று அன்பாக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு போட்டி தளத்தை நோக்கி விரைந்தாள்.
இதை பார்த்துகொண்டிருந்த ஜானின் நண்பர் என்னடா இது நேத்துவர அவளை எப்படி போட்டியில் இருந்து நீக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தவன் இன்னைக்கு இப்படி பாசத்தை கொட்டுரான் என குழம்பிவிழிக்க அதை பார்த்த ஜான் “என் நடிப்பு எப்படி” என்று குபிர்ரென சிரித்தான்.
அவனின் வலது பையில் மீதி இருந்த போதை மாத்திரையை எடுத்து நண்பணிடம் பேருமையாக காட்டி” “Just 2 tablets. Problem solved.” என கூறி குப்பையில் கிடாசினான். இது அவனுக்கு முதுகலை இறுதி வருடம் என்பதால் Merit Placement கடைசி வாய்ப்பு இதில் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற வெறி. தனக்கு கடும்போட்டியாக இருந்த சிலரை எப்படியொ சரிகட்டிய இவனுக்கு நிதினா ஒரு பெரிய தலைவலியாகவே இருக்க அவளை ஒழிக்கத்தான் அவள் எப்பொதும் பருகும் பழரசத்தில் இந்த மாத்திரையை கலக்க ஏற்பாடு.

“Next, our favorite player, 30-second champion, Nithi, is on the arena.” கரகொஷங்கள் இடையே தன் விருப்ப வில்லான ‘Erwin’,-னை (அதான் அவள் வில்லிற்கு இட்ட பெயர்.) கையில் ஏந்தி, சிறுவயதுமுதலே அவளுடன் இருக்கும் சிங்க உருவம் கொண்ட தங்க கைகாப்பிற்கு முத்தமிட்டு “Let’s do this baby” என்றவாறே அம்பை பூட்ட, Timer ஒட தொடங்கியது. அவளின் காந்த விழியும் தாழிட்டது. எப்பொழுதும் 30 வினாடிக்குள் “Bull’s Eye” இலக்கை துளைக்கும் அவளின் அம்பு இன்று அவள் கையில் உறைந்து நிற்பதை கண்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சி. ஜானின் முகத்திலோ மாத்திரை வேலையை காட்ட ஆரம்பிச்சிடுசு’ என்ற கபடப்புன்னகை.

கூச்சலுக்கும் குழப்பதிற்கும் இடையே நேரமோ நீரில்லிட்ட உப்பாய் கரைய....
7....6....5..... விழி மலர்ந்தாள்; சட்யென அம்பு பாய்ந்தது, தன் இலக்கை துல்லியமக துளைத்து, அவனின் சிரிப்பயும் தகர்த்தது. மேலும் 2 அம்புகளும் அவளின் பிரத்யோக “30 வினாடி”-குள் “Bull’s Eye” இலக்கை அடைந்தது.
“Wow... That was a nail biting moment. Next our handsome player, female charmer John.” ச்ச.. இவ எப்படி ஜெயிச்சா... இன்னும் ரெண்டு மாத்திரை சேர்த்து போட்டுருக்கனுமொ... என யோசித்தவாறே அம்பை எய்ய அது சரியாக Bull’s Eye-யில் குத்தி நின்றது. அடுத்த அம்பை எடுத்தவனுக்கு திடிர்ரென கைகால்கள் நடுக்கம் கண்டது. வியர்வை கொட்ட கண்களும் மங்கின... இலக்கும் தவறியது அடுத்த அம்பிற்க்கும் இதே நிலைதான்.

“And the winner is.... Ms.Nithinaruthra @ Nithi!!!! Congratulations...” Score board-ல் முதல் இடத்தில் அவள் பெயர் மின்னியது. வெற்றிப்படியில் நின்று தன் வில்லை மேலே 3 முறை உயர்த்தி நன்றி என்றால் அதை பார்த்த ஜான் மயங்கியே விழுந்துவிட்டான்.
ஜானின் நண்பண், நடுவர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் சூழ, அவசர மருத்துவர் ஜானை சொதித்து குழம்பியவாறே அவனின் பேன்ட் பையை சொதிக்க இடது பையில் 2 போதை மத்திரை காலி உறை இருந்தது.
“Oh my god, its drugs. Call the Police.” என்று நடுவர் ஒருவர் கூற அரங்கமே சலசலப்பானது.
ஜானின் நண்பனுக்கோ பேய் அறைதார்போல் இருந்தது. நித்தி-க்கு குடுத்த மாத்திரை ஏன் வேலைசெய்யல மேலும் இவன் காலைல இருந்து எதும் சாப்பிடல அப்பறம் எப்படி போதை மாத்திரை இவன் உடம்புல மேலும் காலி கவர் இவனிடம் அப்படி என்று அதிர்ந்தவனுக்கு நித்தி-யின் முகத்தில் மலர்ந்த ஒர் தந்திரச்சிரிப்பிலும், நடுவர் மேஜையில் இருந்த ஸ்ராபெரி கேக்கிளும் அனைத்தம் புரிந்தது.


கொஞ்ச நேரம் முன்னாடி பிரெக்கில் ஒர் அழகிய பெண் ஜானின் ரசிகை என கண்சிமிட்டி வந்து அவனின் விருப்பமான ஸ்ராபெரி கேக் தர இவனும் அசடுவழிந்து தின்றான். காலி கவரை நித்தியும் ஜானும் கட்டிபுரண்டு வாழ்த்து சொன்னங்களே அப்போ தான் நித்தி அவன் பையில் போட்டிருக்கனும்...

சிரிச்சுகிட்டே எவ்லொ Terror-ah plan பண்ணிருக்கா... எல்லாம் தெரிந்தும் எதும் தெரியாத மாதிரி ஜான் டயும், அம்பை விடாம எதோ மயக்கம் வர்ரமாதிரியும் குடுத்தாளே ஒரு Acting... அப்பபா... எல்லாரும் சொன்ன மாதிரி இவ ஒர் Mysterious women தான்... என ஒர் முடிவிற்கு வர “ஜானின் நண்பரிடம் போதை மாத்திரை பத்தி கேட்களாமே?” என்று நிதினா அவன் தலையில் அடுத்த இடியை இறக்கினாள். ஐய்யோ இவ என்ன என் வாழ்க்கைக்கு சங்கு ஊதப்பாக்குரா.... எனக்கு எதும் தெரியாது என் Ice Hockey போட்டிக்கு நேரம் ஆச்சு... நான் எஸ்கேப்... என அவன் கழன்றுவிட நித்தியின் தோழி பதறியவண்ணம் வந்தாள்.

“நித்தி... என்னசு?? ஆர் யூ ஓகே??”
“ஐயம் பைன், மித்து டார்லிங்க்.... பட் ஜான் தான் பாவம். அவன் அடிச்ச பந்து அவனுக்கே திரும்பிடுச்சு..” என முகத்தை பாவாமாக வைத்த நிதினாவை சற்று நம்பியே விட்டாள் மித்ரா. பின் நித்தி நடந்தவைகளை சொல்ல அதிர்ந்து போனாள். “அப்படியா செஞ்சான் அந்த படுபாவி அவனுக்கு நல்லா வேணூம்.”

“அதுசரி உனக்கு எப்படி அவன் மேல சந்தெகம் வந்தது?”

“டாப் 5 ல இருக்குற ஆஷிஷ் கை உடைந்தது, மேத்தியூஸ் விபத்து, ஹாரி போலிஸ் கேஸ்-ல மாட்டுனது. மிச்சம் நானும் ஜானும்... சொ நான் தான் அடுத்துனு புரிஞ்சது அதான் நான் முந்திகிட்டேன்.”

“ஹ்ம்ம்.... பட் தண்டனை தான் கொஞ்சம் ஓவர்.”

“இல்ல மித்து இப்படி தப்புபன்றவங்க அந்த தொழிலையே அவமானபடுதுரமாதிரி. அவனுக்கு இந்த புனிதமான வில்லை தொட எந்த தகுதியும் இல்ல... மேலும் ஒருத்தர் நம்மள எப்படி அழிக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கும்பொதே நம்ம அவங்கள அடியொடஅழிச்சு முடிச்சிரனும். இல்லனா நம்ம நிம்மதியா வாழ முடியாது.”

“Nice Philosophy. You are my inspiration.”
“இது என் அம்மா சொல்லிகுடுத்தது... she is my inspiration and my strength.”

“ஹ்ம்ம்.... ஒரு சின்ன டவுட். உன் ஜூஸ்ல இருந்த மாத்திரை எப்படி மாறுச்சு.” என கேட்டு தோளில் கை போட்ட மித்ராவை புன்னகைத்த வண்ணம் பார்த்தாள் நித்தி,

“மித்து டார்லிங்க்.... எதிர்த்து நிக்கிற எதிரியை கூட நம்பலாம் ஆன தோளில் கை போடுறவங்ககிட்ட தான் கவனமா இருக்கனும். அவங்க தான் நம்ம முதுகுல குத்துற வாய்ப்பு நிறையா இருக்கு.” விருட்டென தன் கைகளை எடுத்த மித்ராவிர்க்கு நா வறன்டது.

“என்ன.... என்ன... சொல்ற...” என்றவளின் கைபேசி ஒலிக்க மறுமுனையில் பூகம்பம். “ப்ரின்சிபால் ரூம்பிற்க்கா... நானா... போதை மாத்திரை விக்கிறெனா... என்ன... என் லாக்கர்லயா.....நொ....”

“நன்றி மித்து டார்லிங்க்... It’s very interesting and tasty. நான் நீ குடுத்த ஜூஸ சொல்லல நான் எடுத்திகிட்ட ரீவெஞ்ச சொன்னென்.” என்று அங்கிருந்து நகர்ந்தவளின் கழுத்தில் தங்கமும் நெஞ்சில் செறுக்கும் பதக்கங்களாய் மின்னியது....
**********************************************
நிதினாருத்ரா@நித்தி Intro எப்படி இருந்தது Friends. நான் hero and Heroine entry ஒரே Chapterல சொல்லானுதான் நினைச்சேன் இந்த ஜான் பய குறுக்க வந்து ஒரு Chapter fullah வாங்கிட்டான். நம்ம Hero கார்த்திக்சிவா intro அடுத்த அத்தியாயாத்தில்!!! உங்கள் கருத்துக்களை கருத்துத்திரியில் பதிவிடுங்கள்!!! நன்றி மக்கா!!!!
 

நித்யா ராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கேளடி என் கண்மணி
அத்தியாயம் – 3
**********************************************

“டெண்டெர் நம்பர் 25!!!” வீல் என்ற கீச்சளுடன் ஸ்பீகெர் சப்தம் காதை கிழிக்க மன்னிப்பு கேட்டுக்கொண்டெ ப்ரொஜெக்டெரையும் ஸ்பீகெரயும் நடுக்கத்துடனெ சரிசெய்தாள் அந்த பெண். அந்த குளிருட்டப்பட ஹை-டெக் மீடிங்க் அரையிலும் அவளது முகம் பயத்தில் வெளிரியும் வியர்த்தும் இருந்தது.


பின்னெ இன்று மிகவும் முக்கியமன நாளாயிற்றே.சூரியனையும் மரற்க்கும் அந்த வானலாவிய கண்ணாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் இயங்கும் K.S Group of Companies-ன் அடுத்த வெற்றிப்படிதான் இந்த construction டெண்டெர். கொடெசன் அனுப்பட்டு அதன் முடிவு Live ஆக அந்த அந்த company-இல் ஒளிபரப்பகிக்கொண்டிருந்தது.

இதற்காக K.S Group of Companies-ன் மீடிங்க் ஹாலில் Managers, Directors, Board Members என அனைவரும் காத்திருக்க அதன் கதாநாயகனும் K.S Group of Companies-ன் MD-யுமான கார்த்திக்க்ஷிவா மட்டும் காலை முதல் காணவில்லை.
எப்பொழுதும் நேரம் தவறாமல் வரும் நம்ம MD க்கு என்னாச்சு என்ற பதத்ததுடன் அவ்வப்பொது அந்த கண்ணாடி கதவையும், Board Member’s-ன் எரிச்சல்தொய்ந்த முகத்தயும் பார்த்த வண்ணம் தன் வியர்வையை மெல்ல துடைத்து கொண்டு இருந்தால் கார்த்திக் ஷிவாவின் PA ரதி.

“மிஸ்.ரதி, where is your MD??? Is he showing his arrogancy? are we fools to gather here this early to wait for him?” என அவளை ஆங்கிலத்தில் வறுத்கெடுக்க அந்த அறையின் கதவு படாரென திறந்தது.

“குட் மார்னிங்க் ஜெண்டின்மென்!!” ஆரடி உயரம், சுருண்டு கலைந்த கெசம், ட்ரிம் செய்த தாடி, slim fit-இல் ராயல்ப்புளூ நிற waist-coat, அரைவெள்ளை நிற shirt, கருப்பு bussiness shoes, கையில் உயர்ரக watch, முகத்தில் மென்சிரிப்பு என அறையில் நுழைந்த கார்த்திக்க்ஷிவாவை கண்டு “ஊஃப்... தாங்க் காட்.” என தன்னை ஆசுவாசபடுத்தி கொண்டாள் ரதி.

“ஹல்லொ, ராஜிவ். அவங்கல ஏன் திட்றீங்க. ஜஸ்ட் ஸ்கொல்டு மீ ஃபொர் மை ஆப்சென்ஸ்.” என்று சிரித்துகொண்டெ தன் இருக்கயில் கார்த்திக் அமர்ந்தாலும் அவன் கண்களில் ‘முடிஞ்ஜா என்ன திட்டிபார்’ என்று அப்பட்டமாய் தெரிய எதும் பேசாமல் அமர்ந்து விட்டான் ராஜிவ். பின்ன, Senior Board Members கூட எதிர்த்து பேச யோசிக்கும் கார்த்திக்க்ஷிவாவை அவனால் என்ன செய்ய முடியும்.

“யாருக்க வேய்டிங்க். மீடிங்க் ஸ்டர்ட் பன்னுக, ரதி.” கார்த்திகின் அழுத்தமான குரலும் அவன் ஆதிக்கம் செலுத்தும் பார்வையும் அனைவரையும் வாய்யடைக்க மீடிங்க் தொடங்கியது. ஒவ்வொரு கொட்டெசன் தொகையும் கம்பனியின் பெயருடன் Live telecast ஆகிகொண்டிருந்தது. அனைவரின் பார்வையும் Projecter-ல் பதிந்திருக்க கார்த்திக்ஷிவா-வின் கண்களும் மனமும் எங்கொ இருப்பதை அவன் விரல்கள் மேஜை மேல் போடும் மெல்லிய தாளத்தை வைத்து ரதியால் கணிக்கமுடிந்தது.

நொடிக்கு நொடி பதட்டம் அதிகரிக்க “அடுத்ததாக K.S Group of Companies’ன் கொட்டேசன் டீடைல்ஸ்.” என்று அந்த தொகையை அறிவித்த மறு நிமிடம் கைதட்டல் ஆரவாரம் அந்த அறையே நிரப்பியது.

“Congrats, Boss. எல்லரையும் விட நம்ம கொடெசன் தான் அவங்க எதிர்பார்த்த price-க்கு இருக்கு.” என அதுவரை தன்னை அரியாமல் பிடித்துவைத்திருந்த மூச்சை விட்டு மெல்ல வெளியெ விட்டால் ரதி.
“எஸ் கார்த்திக் சார். இந்த வருடமும் டெண்டெர் நம்மக்குதான்.”

“எனக்கு தான் இது எப்பவொ தெரியுமே. கொடெசன் ரெடி பண்ணது நம்ம மாஸ்டர் மைடு கார்த்திக்க்ஷிவா வாச்சே.” என ஆளாளுக்குக்கொரு வாழ்த்துக்களை அள்ளித்தெளிக்க எந்த சலனமும் இல்லமல் அவன் விரல்கள் தாளம் பொட்டுகொண்டிருக்கும் விதத்தை கண்ட ரதிக்கு ஏதோ சரியாக இல்லை என்று மட்டும் தோன்றியது.

“அடுத்ததாக ஸுர்ய பில்டெர்ஸ்-ன் கொட்டேசன் டீடைல்ஸ்!”

ஒரு நொடியில் அணைத்தும் அசைவற்று போனது. கார்திக்கின் செய்கைக்கும் ரதிக்கு அர்த்தம் புரிய அங்ங்கே வெறும் 10000ரூபாய் வித்தியாசத்தில் பலகொடி ரூபாய் கான்டிராக்ட் கை நழுவியது. மகிழ்ச்சியின் உச்சியில் இருந்த அனைவரின் முகனும் அதிர்ச்சியின் விளிம்பில் நின்றது.

“கார்த்திக் வாட் ஸ் திஸ்??”

“நம்ம கொட்டெசன் தொகை தெரியம இப்படி பண்ண வாய்பே இல்ல.”

“எப்படி நம்ம தொகை ஸுர்ய பில்டெர்ஸ்-கு தெரிந்தது.”

“இனி எதுக்கு இந்த ஸ்க்ரீன பாக்கனும் அத ஆஃப் பன்னுக மேம்.”

“ஜஸ்ட் 10000. ஐ கான்ட் பிலிவ் திஸ்.”

“கார்த்திக், இங்க இவ்ளோ பிரச்சனை பொய்ட்டு இருக்கு நீங்க கூலா என்ன யோசிச்சிட்டி இருக்கிங்க. ஆன்சர் மீ.” எந்த புயலுக்கும் அசையாத இமயமலைபோல கூலாக அவன் நீண்ட விரல்கள் இப்பொது வேற்றொரு தாளத்தை போட அணைவர் மண்டையும் ஆங்கில படத்தில் வரும் Ghost rider மண்டைபோல் கோபத்தில் தகதகவென எரிந்தே விட்டது.

“சார் சார் சார் இத கேளுங்க.” என ரதி அனைவரின் கவனத்தயும் ஸ்க்ரீன் பக்கம் லாவகமாக திருப்ப, அங்கே டெண்டர் முடிந்தது.

“ருத்ரன் Construction ஸுர்ய பில்டெர்ஸ் விட 10000 ரூபாய் குறைவாக கொடெசன் அனுப்பி இந்த டெண்டெர் வின் பன்னிருக்கங்க. வாழ்த்துக்கள்.”

“அடக்கடவுளெ, சும்மவே ஏகபட்ட காம்படிசன் இதுல இந்த புது எதிராளி வேரயா சரியாபொச்சு.”

“அட விடுங்கா விஜயன் சார். அந்த ஸுர்ய பில்டெர்ஸ்க்கு டெண்டெர் கிடைகலை அதுவே பெரிய ஆருதல்.”

“சரி வாங்க போகலாம். இனி இங்க இருந்து நம்ம என்ன செய்ய.” அவர்கள் ஒருமித்த கருத்துடன் எழும்முன் மீடிங்க் ரூம்பின் கதவு திறந்தது. அதே கனம் கார்திக்கின் தாளமும் நின்றது.

“Congrats கார்த்திக். இந்த வருடமும் டெண்டெர் நமக்கே கிடைச்சுருக்கு.” அறை வாயிலில் நிறைந்த சிரிப்புடன் ஒரு கைய்யில் பச்சை நிர பையில், மறு கைய்யில் கருப்பு கோட் என நின்றிருந்தார் சுப்ரமணியம், K.S Group of Companies’ன் லீகல் லாயர், கார்த்திக் ஷிவாவின் அப்பா ரகுராமின் ஆருயிர் நண்பர் மற்றும் குடும்ப வக்கில்.

“என்ன லாயர் சார். விஷயம் தெரியாதா? டெண்டெர் அமவுன்ட் லீக் ஆகி டெண்டெர் நம்ம கைய்ய விட்டு ஸுர்ய பில்டெர்ஸ்க்கு பொயி ஸ்லிப் ஆகி ஏதோ ருத்ரன் Constructionஆம் அதுக்கு கிடைச்சுருக்கு அந்த கம்பெனி MDக்கு தான் வாழ்த்து சொல்லனும்.” என போர்ட் டிரெக்டெர் ராஜிவ் ஏளனமாய் சொல்ல சுப்ரமணியத்தின் கல கல சிரிப்பு காற்றில் நிறைந்தது.

“அந்த கம்பெனி MDக்கு தான் வாழ்த்து சொல்லிட்டு இருக்கென். ருத்ரன் Construction நம்ம K.S Group of Companies’ன் கிளை கம்பெனி. ஐ மீன் டெண்டெர் அமவுன்ட் லீக் ஆன விஷயம் தெரிஞ்சு இரவொட இரவா நம்ம கார்த்திக் அவங்க அப்பா, ரகுராம் பேர்ல கிரியெட் பன்ன பேப்பர் கம்பெனி தான் ருத்ரன் Construction. சொ.... வாழ்த்துக்கள் கார்த்திக்.” என கண்ணடிக்க, அதுவரை மீசைக்குள் ஒளிந்திருந்த கார்த்திக்கின் கோரல் நிற இதள்கள் வெற்றிப்புன்னைகை ஒன்றை பூத்தது.

“தாங்ஸ் அங்கிள். உங்களுக்கும் அப்பாக்கும் என் விஷ்சஸ்.” ருத்ரன் Construction பையிலை குடுத்துவிட்டு செல்லும்வரை அங்கே புல் பூண்டு கூட அசையாமல் கார்த்திகையே ஆ-வென பார்த்துகொன்டிருந்தது. “ஹாம்... விஜயன் சார்... நா என்ன யொசிச்கிட்டு இருந்தெனு கேட்டிங்கல்ல... நம்ம சக்சஸ் பார்ட்டி எங்க வைக்கலனுதான் யொசிச்கிட்டு இருந்தென். இப்பொ டிசெய்ட் பண்ணிட்டேன். மிஸ் ரதி. இந்த கிளப்ல காபின்.5வ புக் பண்ணிடுங்க.” தன் கோட் பாக்கெட்டில் இருந்த 3 கார்டில் ஒன்றை ரதியிடம் நீட்டினான்.

“அண்ட் இந்த நல்ல நாள்ல இன்னொரு குட் நியூஸ். ஜெனெரல் மேனேஜர் ராஜிவ, நம்ம கானாங்க்குளத்து சைட்க்கு சூப்பர்வைச்செரா அப்பான்ட்.. இல்ல.. இல்ல.. டீமொட் பன்றென்.”

“என்னது நானா?? சூப்பர்வைச்செரா???? கானாங்க்குளத்துகா??” ராஜிவிர்க்கு ஒருகனம் துக்கிவாரி போட்டது

“யெஸ் சார். டெண்டெர் கொட்டெசன் ஸுர்ய பில்டெர்ஸ்க்கு லீக் பன்னதுக்காக,”

அடகடவுளெ இது எப்படி இவனுக்கு தெரிஞ்சது.

“கார்திக்.... சார்ர்.... அதுவந்து....” இரெண்டெ எட்டில் ராஜிவின் முன்னால் அந்த ருத்திரனாவே நின்றவனை கண்டு வந்த வார்த்தை தொண்டையில்லெ சமாதி ஆனது.

“இன்னும் ஒரு நிமிஷம் இங்க இருந்தாலும் ஜெயில் கம்பி என்ன வேண்டியிருக்கும்... Take the offer and leave or rot in jail. The choice is your’s.” மறுஷனம் பின்னங்கால் புடதியில் பட ஒடியவனை கார்க்திகின் ஒட்றை சொடுக்கு break அடித்து நிற்க வைத்தது. “அந்த ஸுர்ய பில்டெர்ஸ் லஞ்சமா குடுத்த வீட்டை நந்தன் அனாதை ஆசிரமதுக்கு உங்க பேர்லயே டொனேட் பன்னிடுங்க. Understand??” தாலையாட்டி பொம்மை போல் டிங்கு டிங்கு என தலையாட்டிவிட்டு ஓடிய ராஜிவை பார்த்து அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பை ரதி சிதறவும் அதுவரை கற்சிலையாய் உறைந்திருந்த Board Members காலில் சுடுதண்ணி கொட்டியது போல் விருட்டென எழுந்தனர்.

“என்ன கார்திக் இவ்ளோ பெரிய திரொகம் பன்னிருக்கான் அவன நாலு சாத்து சாத்தி ஜெயிலுக்கு அனுப்பாம இப்படி பன்னிட்டிகளெ.”

“Cool down sir. Everyone please be seated. முகுந்தன் சார். தப்பு பண்ணாத மனுஷன் இல்ல. தண்டிக்குறது என் பாலிசி இல்ல எல்லாருக்கும் ஒரு செகண்டு சான்ஸ் வெனும். அதான் குடுதென்.”

“இப்படியே போனா நாளைக்கு எல்லாருக்கும் எலக்காரமால்ல பொய்ரும்”

“தப்பு பண்றவங்கலை எல்லம் தண்டிக்கனுமுனா நேத்து பிறந்த குழந்த இன்னைக்கு செத்த மனுஷன் தவிர எல்லர்க்கும் தண்டன குடுக்கனும். அவ்ளோ ஏன் உங்களயும் தான் பனிஷ் பண்ணனும். 2 வருஷம் முன்னாடி நம்மக்கு கிடைச லாபதுல 5% பொய் கணக்கு எழுதி அதுல OMR la guest house வாங்கினீங்களே அத என்ன சொல்ல. இல்ல நம்ம சந்துரு சார் லாஸ்ட் மந்த் கமிசன் ல ஒரு BMW Car வாங்கிருக்கார். இப்படி கார், வீடு, நகை, பணம்.. etc.. etc..” என ஒவ்வொன்றாய் கண்கலில் கூர் ஈட்டியும் இதலில் மெல்லிய சிரிப்புமாய் கார்த்திக் புட்டு புட்டு வைக்க, ‘அடப்பாவி இதெல்லம் எப்ப டா தெரியும் உனக்கு என மனதில் எண்ணியவாறே ஒருவரை ஒருவை பெய்ந்து பாக்க அப்போ ரதிக்கு வியர்த்த வேர்வை இப்பொழுது அணைவருக்கும் தாரை தாரையை கொட்டிக்கொண்டிருந்தது.

“இப்படி எல்லத்தயும் நா ஃப்ரீயா விடலயா அது மாதிரிதான் இதுவும். So chill sir. ஓகெ ஜென்டல்மென், நம்ம ப்ரொஜெக்ட் கிடைச்சதுகாக கோவில்ல என் மாம் ஸ்பெசல் பூஜை அரெஞ்ஜ் பண்ணிருகாங்க நான் போலைனா எப்படி.. சொ... சீ யூ ஆல் லேட்டர்.” கண்ணாடி கதவை திரிந்துது பரபரப்பாய் வந்த அதே தோரணையோடு வெளியெ செல்ல. இவனுக்கு இந்த பட்டை பெயர் வச்சது தப்பே இல்ல என்று அனைவரிரும் கொரஸாக முனுமுனுத்தனர் அந்த பட்டை பெயரை.

“Smart Devil.”


**********************************************

Heroine நிதினருத்ரா:

ஒருத்தர் நம்மள அழிக்கலாமானு யோசிச்சிட்டு இருக்கும்பொதே நம்ம அவங்கள அடியொடஅழிச்சு முடிச்சிரனும்.

Hero கார்த்கிக்க்ஷிவா:

நம்மள அழிக்கநினைக்குறவனக்கூட அன்பா தான் பார்க்கனும். எல்லர்க்கும் திருந்த ஒரு வாய்ப்பு குடுக்கனும்.

**********************************************

ஷப்பா.... நம்ம நித்தி இன்றோ ரேஞ்ச்க்கு கார்த்திக் இன்றொ குடுக்க தான் ரொம்ப கஸ்டமா போச்சு!!! எப்படியோ Hero Heroine இன்றோ குடுத்தாசு. உங்களக்கு பிடிச்சுருக்கும்னு நினைக்குறேன் எப்படி இருந்ததுனு கருத்துத்திரில சொல்லுங்க பிரன்ஸ்!!!

நித்யா ராஜின் "கேளடி என் கண்மணி" - கருத்துத் திரி

hayat muraat.jpgMurat and Hayat Heart Touching Song Bollywood Songs (1).png
 

நித்யா ராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரென்ட்ஸ் அண்ட் சிஸ்டேர்ஸ். இத்தனை நாள் அப்டேட் இல்லாததுக்கு ஒரு பெரிய மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சில பர்சனல் ரீசன் காரணமாய் மேலும் எழுத முடியாமல் இருக்கின்றேன். எதோ அப்டேட் கொடுக்கவேண்டும் என்பதற்காக இல்லாமல் நல்ல பதிவு மட்டுமே கொடுக்கவேண்டும் என்பதால் சில நாள் இந்த கதை hold செய்து வைத்திருக்கிறேன். விரைவில் கதை தொடர்வேன் அதுவரை உங்கள் ஆதரவை எனக்கும் கேளடி என் கண்மணிக்கும் தந்துகொண்டேஇருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
 
Status
Not open for further replies.
Top