All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலாவின் "உன்னில் நான் தோழியே...!!!" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

vigneshwari ganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்புக்களே,
எனக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்ரீ அக்காக்கு நன்றிகள்..............
நான் புதிதாக கதை எழுத ஆரம்பிக்கும் சிறிய குழந்தை...என்னுடைய கதையில் உள்ள நிறை மற்றும் குறைகளை கூறி என்னை ஊக்கப்படுத்துங்கள் தோழைமைகளே.......
Lovers-Best-Friends-Female-Ladies-Girls-Lesbians-839809-446x297.jpg



அத்தியாயம் -1
வானத்தில் அழகாக காட்சியளித்துக்கொண்டிருந்த நிலாவை பார்த்து கிளம்பு கிளம்பு .....நான் போய்த்தான் அனைவரையும் எழுப்பனும் என்று சூரியன் சொல்லுவதை கேட்ட நிலா, சரிதான் பூமில நிறைய தூங்குமூஞ்சிகள் இருக்கு....அதனால் நீங்கள் போனாதான் அவர்கள் கண்ணை திறப்பார்கள் அதனால நான் என் இடத்தை காலிபண்ணுறேன் என்று சொல்லிக்கொண்டு மறைய சூரியன் தனது வெப்பதையும் ஒளியையும் பூமாதேவிக்கு அள்ளி கொடுக்க கிழக்கில் தனது அரியாசனத்தில் அமர்ந்தது...

கம்பீரமாக இருக்கும் மதுரை மாநகரில் ஒரு இரண்டுமாடிக்கட்டிட வீட்டில்…..மணி 5:3௦ ஆச்சு ஒரு பொம்பள பிள்ளை இன்னும் தூங்குற எழுத்து வாசல் தொளிச்சு கோலம் போடனும் அப்படில இல்ல...என்று பார்வதி கத்த ஐயோ டைம் ஆகிடுச்சா நம்மா கதை வேற படிக்கனும்..அப்புறம் காலேஜ் க்கு வேற கிளம்பனும்..இன்று தூக்கத்தில் கனவு கண்டு கொண்டிருந்த நித்தியாவை, பாப்பா எழுந்திரி உங்க அம்மா திடுற பாரு என்று தட்டி எழுப்பிய ராஜனிடம் அப்பா இன்னும் ஒரு 10 நிமிடம் என்று சொல்லி விட்டு போர்வையை இழுத்து கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.
சரியாக 10 நிமிடத்தில் எழுந்தவள் அம்மா நான் ப்ரைஸ் ஆகிட்டு வரேன் எனக்கு காபி போட்டு வைங்க என்று சொல்லிவிட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில குளித்து முட்டித்துவிட்டு வந்து அம்மா காபி கொடுங்க என்று சொன்ன நித்தியாவைப் பார்த்து ஒரு பொண்ணு குளிக்க எவ்வளவு நேரம் இன்னும் தலைய வேறா பின்னல் போட ஒரு அரைமணி நேரம் உனக்கு என்று திட்டிக்கொண்டு காபியையும் கொண்டு வந்த பார்வதியை பார்த்து அம்மா எப்படினாலும் சரியான நேரத்துக்கு கிளம்பிருவா இந்த நித்தியா, அதான் நேற்று பஸ்சை விட்டியா என்ற பார்வதியை பார்த்து அம்மா நான் சரியான நேரத்துக்குத்தான் போனான் ஆனால் அந்த ரைவர் அண்ணா தான் சீக்கிரம் வந்துட்டாங்க அதுமட்டும் இல்லை அம்மா நேத்து எல்லாரும் பஸ்சை விட்டுடாங்க…… என்று சொன்ன நித்தியாவை பார்த்து பஸ் என்ன சும்மாவா போச்சு என்று கேட்டாக இல்ல அம்மா என்று சொன்னவளை பார்த்து சரி அள்ளிபோடாத போ சாமியை கும்பிட்டு வந்து கிளம்புற வழிய பாரு என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்கு சென்று விட்டார்.
நித்தி சாமி அறைக்கு சென்று தனக்கு மிகவும் பிடித்தமான பிள்ளையாரைப்பார்த்து

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே
என்று பாடி முடித்து விட்டு,சாமி எனக்கு எவ்வளவு பிரச்சனை வேண்டும்னாலும் குடுங்க ஆனால் அந்த பிரச்சனையில் இருந்து வெளில வர தைரியத்தை கொடுங்கள், எப்பவும் எல்லாருக்கூடயும் இருக்கனும் நீங்கள்...என்று சொல்லி விட்டு படிக்கட்டுகளை வேகமாக தாவித்தாவி வந்தவளை பார்த்து அவளுடைய தம்பி மித்திரன் "பார்த்து வா கட்டிடம் இடிந்து விழுந்துவிட போது" என்று சொன்னவனை பார்த்து," ஹாஹா சிரிச்சுட்டேன் நீ சொன்ன ஜோக்க்கு" என்று சொல்லிக்கொண்டு தாவியவள்," தொப் என்று விழ ஐயோ...! அம்மா" என்று கத்த சமையல் அறையில் இருந்து வந்த பார்வதி," இன்னும் சின்ன பிள்ளை என்று நினைப்பு நடத்துவரமுடியாது" என்று திட்ட பாவமா முகத்தை வைத்து கொண்டு எழுந்தவளை பார்த்து மித்திரன் பழிப்பு கட்டி விட்டு குளியல் அறையில் நுழைய பார்வதி முறைத்துவிட்டு சமயல் அறையில் நுழைய அவளுடைய மனசாட்ச்சி எல்லாரும் போனதுக்கு அப்புறம் வந்து, "அட லூசு நித்தி எப்படியா விழுந்து என் மானத்தை வாங்குவ பாவி" என்று திட்டிய மனசாட்சியை பார்த்து" உனக்கு கூட என்மேல கருணை இல்ல..போ போய் அமைதியா தியானம் பண்ணுற வேளைய பாரு நான் காலேஜ் கிளம்பனும்" என்று சொல்லிவிட்டு காலேஜ் கிளம்பி சென்றாள்
ஹாய்...நித்தி...என்று தேன்மொழி பஸ்ல இருந்து இறங்கி தங்களுடைய இடத்திற்க்கு வந்த நித்தியை பார்த்து கூற, "இதற்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை" என்று கூறி விட்டு முறைத்து கொண்டு வந்தாள் நித்தியா ....இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தேவி,சுதா,ஸ்ரீ,ரம்யா அனைவரும் உங்களுக்கு வேற வேலையே இல்லை என்று கூறிக்கொண்டு வகுப்பிற்கு சென்றனர்.....அவர்களுக்குள் அப்படி என்ன சண்டை என்று பார்ப்பதற்க்கு முன்னாடி அவங்கள பத்தி ஒரு சின்ன அறிமுகம் ......

ஹாய் நான் நித்தியா...நான் மதுரையில் உள்ள பிரபலமான காலேஜ்யில் இரண்டம் வருடம் பி.டேக் கெமிக்கல் என்ஜினீயரிங்...படிக்கிறேன்....எனக்கு ஒரு தம்பி அவன் பெயர்: மித்திரன், பார்வதி எங்கள் அம்மா,ராஜன் எங்கள் அப்பா....அப்புறம்..... நான் நல்லா பேசுவேன். எந்த கதை புத்தகங்ளை படிச்சாலும் தூங்கமாட்டேன்,... அவ்வளவுதான்.. என்னயை பற்றி கதையில் தெரிச்சுக்கோங்க.........ஏன்னென்றால்... சொல்லுற அளவுக்கு ஏதும் இல்லை....
ஹேய் நான் தேன்மொழி .....நானும் இதே காலேஜ்ல கெமிக்கல் என்ஜினீயரிங் இரண்டம் வருடம் தான் படிக்கிறேன்...எனக்கு ஒரு தங்கச்சி,அவள் பெயர்:சுபா ; ஒரு அண்ணா,அவன் பெயர்: விஸ்வா, அம்மா பெயர்: சுமதி, அப்பா பெயர்:சிவா ........ அப்புறம் இந்த நித்தி ஓட உயிரை வாங்க பிறந்தவள்...அவளும்தான்..... நான் வகுப்பில் தூங்கமாட்டேன் நான் ரொம்ப அமைதியான பொண்ணுகங்க.....!!!!!


இவங்களை பத்தி நான் சொல்லுறேன்....ரெண்டு பேரும் ரொம்ப பாசக்காரங்க ....யாரையும் யாருக்கும் விட்டு தரமாட்டாங்க.....ஆனா ரெண்டும் பெரும் ரொம்ப சண்டை போடுவாங்க.....ரெண்டு பேரும் நல்ல படிப்பாங்க....இவங்கள பாக்குறவங்க இவங்கள ரொம்ப அமைதியான பொண்ணுங்கனுதான் சொல்லுவாங்க....ஆனா பாவம் கூட இருக்குற...ஸ்ரீ,சுதா, தேவி,ரம்யா, புவனா க்கு தான் இவங்கள பத்தி தெரியும்.
அடுத்த எபிசோடுல இருந்து இவங்களோட சண்டை...பாசத்தையும், இவங்களோட வாழ்க்கைல நடக்கும் ஸ்வாரசியமான பிரச்சனைகளையும் பார்ப்போம்.......
 

vigneshwari ganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்புக்களே,
இதோ அடுத்த 2வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....
படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...
two-girls-hugging-in-a-field-by-Sally-Kate-Photography.jpg


அந்த பிரபலமான காலேஜில் உள்ளே நுழையும் போது வந்த தூக்கத்தை போ என்று விரட்டி அடித்து விட்டு பஸ்ல இருந்து இறங்கி தங்களுடைய அரட்டை அடிக்கும் இடத்தில் வந்து அமர்ந்தால் தேன்மொழி..அப்படியும் நான் போகமாட்டேன் என்று வந்த கொட்டாவியை கையால் அடித்துக்கொண்டிருந்த தேன்மொழியை பார்த்துக்கொண்டு வந்த தேவி ,காலங்காத்தால என்னடி உனக்கு தூக்கம் இரவு முழுவதும் என்ன உன் ஆளுக்கூட கடலை போட்டியா” என்றவளை பார்த்து “ஆமா அப்படியே 20 பேரு லைன்ல நிக்கிறாங்க என்ன லவ் பண்ண ஏன்? காலங்காத்தால வந்து இல்லாத ஆளுகூட வச்சு ஓடுற” என்று முறைத்துக்கொண்டு சொன்னாள் ஹனி.சரிமா ஓட்டலமா தாயே...

நேற்று என்ன சொன்னாங்க நம்ம மும்பை பயணத்தை பற்றி உங்க ஹ.ச்.ஓடி என்ற ரம்யாவை பார்த்த ஹனி அது என்ன உங்க ஹ.ச்.ஓடி...அவரு உனக்கு ஹ.ச்.ஓடி தான் மறந்துவிடாதே மகளே என்ற ஹனியை பார்த்து...அட போடி...உனக்கு தெரியாது...ஒரே ஒரு நாள் சொல்லாம லீவு போட்டுட்டேன்...அதுக்கு அவரு ஏன் சொல்லாம லீவு போட்டிங்க ஒரு டிஸிப்ளின் இல்லையானு சொன்னாரு அதுக்கு நான் சாரி சார்னு சொன்னேன்..ஹனி,சரி அதுக்கு என்ன இப்ப என்றவளை பார்த்து ரம்யா முதலா முழுசா சொல்லுறத கேளு. ஹனி, சரி சொல்லு. ரம்யா,”என்னோட ஸ்டுடென்ட் சாரி சொல்லுறது எனக்கு பிடிக்காது...உங்களோட சாரி எனக்கு தேவையும் இல்லை..இந்த சேர்ல வந்து உக்காந்து பாருங்க அப்பதான் தெரியும்,ப்ளீஸ் அண்டர்ஸ்டென்ட் மீ”னு சொல்லிட்டு சரி “உங்களுக்கு நான் புனிஷ்மென்ட்ல கொடுக்கல சரியா, உங்க அறிவை வளர்த்துக்கிறதுக்காக நாளைக்கு நம்ம பாடத்துல இருந்து ஏதாவது ஒரு பகுதியை மட்டும் நீங்கள் உங்க ப்ரெண்ட்ஸ்க்காக சொல்லிதரனும் ஓகே என்று சொல்ல, நானும் சரினு சொல்லிட்டேன்”...”ஒருநாள் லீவு போட்டதுக்கு இன்னிக்கு 1 மணி நேரம் க்ளாஸ் எடுக்கணும்” என்றவளை பார்த்து ஹனி, ஏண்டி அப்பவே அவர எந்திரிக்க சொல்லி நீ அந்த சேர்ல உக்காந்து பார்த்துருக்கலாம்ல என்றவளை பார்த்து நான் ஏதும் பேசாம இருந்ததுக்கே அவரு 2 மணி நேரம் க்ளாஸ் எடுத்தாரு இதுல நான் ஏதாவது பேசிருதா என்ன ஆகியிருக்கும் என்னுடைய நிலைமை என்றவளை பார்த்து சிரிக்க அப்பொழுது ஸ்ரீ, தேவி, சுதா அனைவரும் வர,ஹைய் ஹனி,ரம்யா என்றவங்களை பார்த்து ஹாய் பிரெண்ட்ஸ் இன்னிக்கு உங்களுக்கு ஒரு குட் நியூஸ் என்ற ஹனியை பார்த்து,என்ன ஹனி நாம்ம மும்பை போறதுக்கு ஓகே சொல்லிட்டாங்களா காலேஜ்ல என்றவளை பார்த்து,அதலாம் இல்ல அதுக்கு பர்மிஸ்சன் கிடைக்க டைம் ஆகும் என்றால் ஹனி.


அப்புறம் என்ன குட் நியூஸ்னு சொல்லு என்றாள் புவனா. அது இன்னிக்கு நம்ம ரம்யா 1 மணி நேரம் க்ளாஸ் எடுக்க போறாலாம்.ஏண்டி ரம்யா உனக்கு இந்த ஆசை என்ற தேவியை பார்த்து ஆமா எனக்கு ஆசை உங்களுக்கு கிளாஸ் எடுக்கணும்னு அந்த வளர்ந்த கெட்ட ஹ.ச்.ஓடி சார் தான் எடுக்க சொன்னார் என்று கடுப்புடன் சொன்னவளை பார்த்து அப்ப நாங்களாம் நல்லா என்ஜாய் பண்ணலாம் அப்படித்தான என்ற ஹனியை பார்த்து, ரம்யா,கொன்னுடுவேன் மரியாதையா நான் நடத்துற வகுப்பை கவனிக்கணும் இல்லைனுவை கேள்வி கேட்பேன் பார்த்துக்கோ என்று மிரட்டலாக சொல்ல அதே சமயம் நித்தி வந்தாள்.

ஹாய்...நித்தி...என்று தேன்மொழி பஸ்ல இருந்து இறங்கி தங்களுடைய இடத்திற்க்கு வந்த நித்தியை பார்த்து கூற, இதற்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று கூறி விட்டு முறைத்து கொண்டு வந்தாள் நித்தியா ....இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தேவி,சுதா,ஸ்ரீ,ரம்யா அனைவரும் உங்களுக்கு வேற வேலையே இல்லை என்று கூறிக்கொண்டு வகுப்பிற்கு சென்றனர்..... என்ன அங்க முணுமுணுப்பு எதுவாக இருந்தாலும் என் முகத்தை பார்த்து பேசு என்ற ஹனியை பார்த்து ஆமா நாங்க பேசிட்டாலும் நீங்கா பேசுவிங்களாக்கும் என்று முறைத்துக்கொண்டு கொண்டு சொன்னாள் நித்தி.

நித்தியா முறைப்பதை பார்த்த தேன்மொழி காலைல எழுந்து குளிச்சு பஸ்ல ஏறி ஒரு மணி நேரம் பயணம் பண்ணி இங்க காலேஜ்க்கு என் கூட சண்டை போடாத வாரியா..? என்று கேட்டவளைப்பார்த்த நித்தியா...அதற்கும் முறைக்க... தேன்மொழி, என்னை பார்த்த மட்டும் எப்படிதான் உனக்கு தெரியுமோ..... என்றவளை பார்த்த நித்தி உனக்கு என்ன பார்த்த எப்படிதா தெரியுமோ...என்று சண்டைய போடுக்கொண்டே க்ளாஸ்க்கு வந்தனர்....


இதனை பார்த்த மத்த ப்ரெண்ட்ஸ் இவங்களை முறைக்க....காலங்காத்தால ஆரம்பிச்சுட்டீங்களா என்று சொன்ன தேவியை பார்த்து நாங்க என்ன பண்ணோம் என்று ரெண்டு பேரும் சொல்ல... எல்லாரும் தலையில் அடித்து கொண்டனர்...எல்லாரும் அவங்க அவங்க இடத்தில் வந்து உக்கார்ந்தனர். முதல் வகுப்பிற்கு வந்த வீராசாமி சார்ரா பார்த்து இந்த சிடுமூச்சி சித்தப்பாவை யாரு இங்க கூப்பிட்டது... என்று சுதா சொல்ல....வந்த வீராசாமி போன கிளாஸ்ல என்ன பார்த்தோம் என்று கேள்வியா கேட்க....நாம பயபுள்ளைங்க நோட் திருப்ப ஆரம்பிச்சுட்டாங்க(ஆனா அந்த நோட்ல ஒன்னு இல்ல..ஏன்னா நாம்ம வீரா எப்பயும் வாய்ல வடை சுடுற ஆளு...நோட்ஸ் ல தரமாட்டாரு)…. நித்தியாவா எழுப்பி கேள்வி கேட்க அவள் பின்னால் திரும்பி பதில் கேட்க எங்களுக்கு தெரியாது என்று சொல்ல...பக்கத்தில் இருந்த ஹனி சிரிக்க.... இதை பார்த்த வீரா தேன்மொழி அக்கா எழுந்து பதில் சொல்லுங்க என்று சொல்ல...தேன்மொழி நிற்க...அடுத்தடுத்து சுதா,தேவி,புவனா, ரம்யா..என்று அனைவரையும் நிற்க வைத்து விட்டு வீரா சாரில் உக்கார்ந்து கொண்டார்....


நித்தி காலைல விட சண்டைய மறுபடியும் துவங்கினால்...உனக்கு என்னதான் பிரச்சனை என்ற நித்தியை பார்த்து தேனு உனக்கு என்னதான் பிரச்சனை என்று கேட்க.. நேற்று ஏன் எனக்கு வாட்ஸாப்ல லேட்டா பதில் அனுப்புற என்று கேட்க ...நான் தூங்கிட்டேன்ல...என்று சொன்னால் ஆனால் நித்தி என கூட பேசணும் என்றாள் மட்டும் உனக்கு தூக்கம் வரும்....காய்ச்சல் கத்திரிக்காய் எல்லாம் வரும் என்றால்(அடச்சீ இதல்லாம் ஒரு ப்ரோப்லேம் அப்படின்னு நீங்க சொல்லுறது எனக்கு கேட்கிறது இத விடவும் இவங்க பிரச்சனை பண்ணுவாங்க அத பின்னாடி பார்ப்போம்) ஹனி, என்ன பார்த்தா மட்டும் சண்டை போடு..மத்த யாரை பார்த்தாலும் 32 பல்லையும் காட்டு என்று சொன்னால்... அங்க என்ன சத்தம் நிக்கிறது பனிஷ்மெண்ட்ல இதுல பேச்சு வேறயா...ம்ரெண்டு பேரும் வெளில போங்க என்று வீரா சொல்ல விட்டா போதும் என்றுசெல்ல. ஒண்ணுமே தெரியாத பச்சை பிள்ளைங்க மாதிரி போறத பாரு ரெண்டும் என்று தேவி சொல்ல,ஆனால் நம்ம க்ளோஸ்க்கு வர யாருக்கும் நாம பேசுறதுல கண்ணுக்கு தெரியாது. இன்னும் 20 நிமிடம் நிக்கணுமா என்று சுதா அழுதுகொண்டு நின்றாள்.,


நித்தி மற்றும் ஹனி அவர்கள் வகுப்பிற்கு இரண்டு வகுப்புகள் தள்ளி உள்ள படிக்கட்டில் அமர்ந்து எப்படா வெளில வருவோம் இருந்துச்சு என்று சொன்ன நித்தியை பார்த்து ஹனி,அப்ப நீ என்கூட பேசுனது அந்த ஆளு நம்மளா வெளிய போக சொல்லனும் னு தான்..,நித்தி,இல்ல பேபி...நிஜமாவேதான் அப்ப கேட்டேன்.ஹனி,பொய் சொல்லாத போதும் நிறுத்து.நித்தி, ஆமா இப்ப நான்தான உன்கூட சண்டை போட்டுக்கிட்டு இருத்தேன்,என்ன அபப்டியே என் பக்கம் திருப்புர.ஹனி, எங்க உரிமை இருக்கோ அங்க தான சண்டை போடா முடியும் என்றுசொல்ல இத சொல்லியே எவ்வளவு வருசத்துக்கு என்ன ஏமாற்ற போற என்ற நித்தியை பார்த்து ஹனி,நான்ல யாரயும் ஏமாற்றல அதுதான் உண்மை என்று சொல்ல.பெல் அடித்தது. போகலாம் வா நித்தி என்று சொல்லி விட்டு ஹனி முன்னால் செல்ல,சில அடிகள் எடுத்து வைத்தவள் என்னடா இவளை காணும் என்று பார்க்க அவள் அதே இடத்தில் அமர்ந்திருக்க , நித்தி வா அடம்பிடிக்காத என்று சொல்லி அவளை இழுத்துக்கொண்டு போனாள். இதுல வீராசாமி கிளஸ்ஸா ம் முடிச்சுட்டுச்சு……


அடுத்தடுத்த வகுப்புகள் முடிய ,கடைசி 3 வகுப்புகள் நித்தியா தூங்கி கொண்டு இருக்க தேன்மொழி, நித்தியாவுக்கும் சேர்த்து நோட்ஸ் எடுத்து கொண்டிருந்தால், அப்பொழுது தடபுடலன எழுந்த நிந்தி ரம்யாவை பொலந்து கொண்டிருப்பதை பார்த்த ஹனி ஏன் அவளை அடிக்கிற என்று கேட்க நித்தி, இந்த புல்டோஸ்சர் என் மேல தண்ணியை உத்திருச்சு என்று கத்த அனைவரும் சிரிக்க,கடைசியில் ரம்யா நித்தியாவை அடிக்க.. ஹனி நித்தியவைஅணைத்து கொண்டால்..... பெல் ரிங் சத்தத்தில் அனைவரும் கிளம்ப...சுதா கூட பேசிக் கொண்டே நித்தி டாடா சொல்லாம்ல் போக...,இங்க வேதாளம் முருங்கை மரம் ஏறியது.
வீட்டிற்க்கு வந்த ஹனி நித்திக்கு போன் போட,அங்கு நித்தி மித்திரன் கூட சண்டை போட அங்கு வந்த பார்வதி,அடிகழுதைகளா இது என்ன வீடா இல்ல சத்திரமா,போய் அமைதியா படிக்கிற வேளையை பாருங்க என்று கோவமாக சொல்ல இல்ல அம்மா மித்திரன் என்று சொல்ல வந்த நித்தியை பார்வதி முறைக்க இருவரும் அமைதியாகி விட்டனர்.


அப்பொழுது மறுபடியும் அடித்த போனை எடுத்து ஹலோ செல்லம் என்று நித்தி சொல்ல ஹனி,ஏய் கொய்யால,எருமைமாடு, எந்தன தடவை போன் போடுரது போனை எடுக்க மாட்ட நாயே,ஒரு டாடா கூட சொல்லாம போய்டு இப்ப வந்து செல்லம் நோல்லம் அப்படினு வந்து சொல்லிக்கிட்டு இருக்க. நித்தி,கொஞ்சம் மூச்சி விட்டு பேசு மச்சி....... ஹனி,நீ பண்ண தப்ப சொன்னா ஒவரா பேசுற....நித்தி,யாரு??? நானா நீ டாடா சொல்லாம போய்டு என்னை சொல்ரியா.. ஹனி,நீதா நான் இல்ல. நித்தி, நீதா நான் இல்ல ஹனி, நீதா நித்தி,ஆமா நான்தான் தப்பு மன்னிச்சுகோங்க போதுமா...என்று சொல்ல, ஹனி,உங்க மன்னிப்பு ஒன்னு வேண்டா..என்று சொல்லி போனை வைத்தாள்.....

நித்தி,அம்மா......... என்று கத்த , ஏன்டி கத்துற என்று கேட்டுக்கொண்டு வந்த பார்வதியை பார்த்து,அம்மா, ஐ அம் பாவம் ,எனக்கு பசிக்குது சோறு போடு அம்மா சோறு...... சோறு....... என்ற நித்தியிடம்,முதல போய் அங்க இருக்குற துணிய மடி அப்பதான் சோறு.... சோறு.... என்று பார்வதி சொல்ல ,நித்தி அங்குகிடந்த துணியை தூக்கி ஏறிய,பார்வதி தோசை கரண்டியை ஏறிய,அடியாத்தாடி என்று நினைத்துக்கொண்டு துணியை மடிக்க
ஆரம்பித்தாள்.



அனைவரையும் துயில் அழைக்க நிலா தனது ஒளியை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தது..மறுநாள்காலையில் நிலா ஓய்வு எடுக்க சூரியன் மேகங்களுக்கிடையில் பிறந்தது...
ஏய் தேணு மணி ஏழாகுது எழுந்திரிடி,ராத்திரி முழுவதும் அந்த போனையே பாக்க வேண்டியது,காலையில போர்வையை இழுத்து போட்டு தூங்க வேண்டிது,இப்ப எழுந்திரிக்க போரியா இல்லையா.....என்ற சுமதியை பார்த்து ஏன் அம்மா காலையிலே உன் திருக்குறளை ஆரம்பிச்சுட்டியா என்று ஹனி சொல்ல. அவளை பார்த்து சுமதி முறைக்க,ஹனி ,இல்ல அம்மா...... ஒரு மாறுதலுக்காக ராமாயணத்துக்கு பதிலா திருக்குறள்ணு சொன்னேன்.சுமதி,நீயொல்லாம் திருந்தவே மாட்டா,உன் கூட தான நித்தி படிக்கிறா அவள பாரு ஆறு மணிக்கு உனக்கு ஆறு தடவை போன் போட்டா நீ என்னனா இப்பதான் எழுந்து என் கூட வாய் பேசிக்கிட்டு இருக்கா ,போ முதல குளி, அப்புறம் அந்த புள்ளைக்கு போன் போட்டு என்னனு கேள் என்று சொன்னவரை பார்த்து சிரித்துக்கொண்டே காலேஜிக்கு கிளம்பி தயாராகி பேருந்தில் ஏறி காலேஜிக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது பேருந்து ஒரு இடத்தில் நின்று விட்டது.
ஏன் என்று அனைவரும் பார்க்க ரோட்டில் ஒரே கூட்டமாகவும் ,தரையில் அங்காங்கே இரத்தம் இருந்ததையும் பார்த்து கலங்கிய தனது மனதுக்கு ஆறுதல் சொன்னால் ஹனி,ஆனால் அடுத்து சில நேரத்தில் அவளுக்கு யார் ஆறுதல் சொல்வார்களோ......
 

vigneshwari ganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்புக்களே,

இதோ அடுத்த 3வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...கதையோட்டம் எப்படி உள்ளது என்று சொல்லுங்க பிரெண்ட்ஸ்.......

depositphotos_72648603-stock-photo-silhouette-of-two-friends-with.jpg

அத்தியாயம்-3

பேருந்தில் இருந்து இறங்கி வகுப்பிற்க்கு வந்த ஹனி,ஏன் இன்னும் நித்தி வரல என்று புவனாவிடம் கேக்க, இன்னுமா அந்த குட்டச்சி வரல,இந்த நேரம் வந்திருக்கனுமே என்று சொல்ல காலையில் பார்த்த விபத்து நினைவுக்கு வந்தது.

நித்திக்கு போன் போட அது நாட்ரிச்சபுல் என்று வர, குழப்பமான மனநிலையில் இருக்க அடுத்தடுத்த வகுப்புகளும் முடிய அப்பொழுது ஒரு தெரியாத நம்பரில் இருந்து போன் வந்தது ஹனிக்கு.ஹலோ யார் பேசுறது என்று கேட்க....உங்க பிரெண்ட் நித்திக்கு ஆக்ஸிடன்ட் ஆச்சு,ஹனி, எந்த ஹாஸ்பிட்டல் என்று கேட்டுக்கொண்டு போனைவைத்து விட்டு அழ ஆரம்பித்தாள். அவளின் உயிராக இருக்கும் தோழிக்கு ஒன்னு என்றாள் மனம் உடையதான் செய்தது.மற்ற தோழிகளுக்கு செய்தி தெரியவர ஹனிக்கு ஆறுதல் சொல்ல வழிதான் தெரியவில்லை.

ஹாஸ்பிட்டலுக்கு ஹனி,புவனா,சுதா,ரம்யா சென்று காலையில விபத்து நடந்துச்சினு சொல்லி ஒருத்தவங்கள இங்கு அட்மிட் பண்ணிருக்காங்கள அவங்க எங்கு என்று கேட்க்கும் போது அந்த நர்ஸ் ,அவங்களை ஐ.சி.யுல வச்சிருக்காங்க,அடுத்த நொடி அனைவரும் ஐ.சி.யூ .முன்னாடி இருந்தனர்.

ஐ.சி.யு. ரூம்மை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைய ,ஹனி மட்டும் அழுதுக்கொண்டே சேரில் அமர்ந்திருந்தாள்.ரம்யா,ஏய் ஹனி ஏன்டி அழுகுற ஐ.சி.யு வந்து பார் என்று சொல்ல ஐ.சி.யுவை பார்த்த ஹனி அதிர்ந்து திரும்ப அங்கு ஜாலியா ஜீஸ்ஸை குடித்துக்கொண்டு வந்தாள் நித்தி.

அவளை பார்த்தா சந்தோஷத்தில் அவளை வந்து அனைத்துக்கொண்டா தோழிகளை பார்த்து ஏய்,ஹனி,புல்டோஸ்சர்,இரும்புகுதிரை, ஏன்டி அழுகுறிங்க என்ன ஆச்சி என்று கேட்க,புவனா,உனக்கு ஆக்ஸிடன்ட் ஆச்சுனு சொன்னாங்க ஆனால் நீ என்னனா ஜாலியா ஜீஸ் குடிச்சுக்கிட்டு வார என்று சொல்ல,அதுவா நான்தா இப்ப அந்த ரூம்ல படுத்துகிடக்க வேண்டிது.ஆனா பாவம் எனக்கு பதிலாதா அந்த அண்ணா படுத்துக்கிடக்காரு நான் அந்த ஆக்ஸிடன்ட பார்த்து மயங்கி மட்டும்தான் விழுந்தேன் அதான் ஜீஸ் குடிச்சுக்கிட்டு இருக்கேன் என்று பாவமாக சொன்னவளை பார்த்து அனைவரும் சிரித்தனர்.

ரம்யா சரிவிடுங்க தெரியாம நடந்திருக்கும் வாங்க போலாம் என்றாள்.பாவம் இது ஹனிக்காக நித்தியா மீது வச்ச குறி என்று யாருக்கும் தெரியவில்லை...இதை அனைத்தையும் இரு கண்கள் பாசத்தோடு பார்த்துக்கொண்டிருந்ததை யாரும் பார்க்கவில்லை.., சரி ஹனி இது எங்க வீட்டுக்கு தெரிய வேண்டாம்.அப்புறம் ரொம்ப பயப்புடுவாங்க என்றாள் நித்தி கூற அனைவரும் ஏன் என்று கேக்க..ஐய்யோ அதான் ஆக்ஸிடன்ட் ஆகலைல எதுக்கு அவங்கள பயப்புடுத்தனும்.அவள் சொல்வதில் நியாயம் இருந்ததாள் .அனைவரும் ஒகே சொல்லிவிட்டனார்.



அனைவரும் காலேஜிக்கு வந்து சேர்ந்தனர்.உனக்கு ஆக்ஸிடன்ட் ஆச்சுனு யாரோ போன் பண்ணி சொன்னங்க அது யாரு என்று கேக்க.. அப்படியா யாரு சொன்னா என்று நித்தி குழப்பமாக சொல்ல,தெரில என்று ஹனி சொன்னாள். எப்படி அச்சிடேன்ட் நடந்துச்சு என்று கேட்க..நான் இன்னைக்கு பஸ்ல வராம என்னோட வண்டிலதான் வந்துகிட்டு இருந்தேன்.அப்போ ஒரு கார் ரெம்ப பாஸ்ட்டா வந்துச்சு நான் வண்டில மெதுவாதான் வந்தேன் ......தீடீரென்று எனக்கு முன்னாடி ஒரு கார் நிக்க அந்த கார் இந்த காரை இடிக்க நான் மயங்கி வீழ....அப்புறம் என்ன ஆச்சு னு தெரியல .... கடைசியா நான் கண்ணை திறக்கும் போது என் கைல ஜூஸ் இருந்துச்சு என்று சொல்ல...ஹனி, ஹ்ம்ம் அப்புறம் என்று கேக்க,கெட்டதுலயும் ஒருநல்லது என்று நித்தி கூற, ஹனி என்ன ,அது எனக்கு ஓசியா ஜூஸ் கிடைச்சது என்று சொன்ன நித்தியை ஹனி அடிக்க.என்ன ஹனி எப்ப பார்த்தாலும் என்ன அடிக்கிற என்று பாவமாக சொல்ல.


உன்னால இன்னும் இந்த உலகம் நல்லவனு நம்புது பாரு ...என்று தலையில் அடித்துக்கொண்ட ஹனியை பார்த்து...நித்தி, உன்னைய நம்பும்போது என்ன நம்புறதுல என்ன பேபி தப்பு என்று கேட்டவளை பார்த்து ஆமா நித்தி சொல்ல மறந்துட்டேன் உனக்கு அச்சிடேன்ட்னு சொன்ன உடனே உன்னோட ஆளு ரெம்போ பீல் பண்ணான்டி என்று ரம்யா சொல்ல,நித்தி, எனக்கு லேப்ல ஒரு ஒர்க் இருக்கு டாடா, நான் கிளம்புறேன். நீ இல்லாதவன் கூட வச்சு ஒட்டிக்கிட்டே இரு என்று சொல்லி சென்றவளை பார்த்து அனைவரும் சிரித்தனர்.

மும்பை போவதற்க்காக ஹ.ச்.ஒடிகிட்ட சென்று கேக்க, முத்துசாமி,எப்ப போறிங்க,எவ்வளவு நாள் ஆகும், எங்க தங்க போறிங்க. என்று பல கேள்விகளை அடுக்க,ஹனி,சார் இவங்க அண்ணா வீடு அங்க இருக்கு அங்கதான் தங்க போறோம் என்று சொல்ல.நித்தி ஹனியின் கால்லை மிதித்துக்கொண்டு ஆமா சார் ,இவங்க மாமா வீடுக்கூட அங்கதான் இருக்கு என கூற ஹனி அடிப்பாவி எப்படியா பொய் சொல்லுவ என்று நினைத்துக்கொண்டு ஆமா சார் எங்க மாமா வீடு அங்கதான் இருக்கு.ஒகே நீங்க மும்பை போறதுக்கான பார்மாலிட்டிஸ் முடிச்சுட்டுங்க..ஓகே சார்,முத்துசாமி,இரண்டு மாதம் நல்ல என்ஜாய் பண்ணுங்க அதே மாதிரி போட்டிலயும் விண் பண்ணிட்டு வாங்க என்று கூற, நன்றி சார் என்று சொல்லி விட்டு சந்தோசமாக வந்து அனைவரிடமும் சொல்லி கொண்டாடினர்.

அதன்பிறகு மதியம் உள்ள இரண்டு வகுப்புகளை கட் அடித்து விட்டு கடைசி வகுப்பை மட்டும் அட்டென்ட் செய்து விட்டு வீட்டிற்கு சென்றனர்...

வீட்டிற்க்கு வந்த நித்தி, அம்மா நாங்க மும்பை போவதற்க்கு காலேஜில் ஒகே சொல்லிட்டாங்க என்றுசொல்ல அவர் ஒரு நிமிடம் தனது கண்ணில் அதிர்ச்சியை காட்ட,மறுநிமிடம் அதை மறைத்து எனக்கு தெரியாது உங்க அப்பா விட்டால் போ என்றார் பார்வதி.நித்தி ராஜனிடம் இதை பற்றி சொல்ல அவர் வேண்டாம் என்று சொல்லுவாரு என்று எதிர்பார்த்த பார்வதி ராஜன் ஒகே சொல்ல அவர் மேலும் அதிர்ந்தார்..இதை எதையும் கவனிக்காத நித்தி,தாங்க்ஸ் அப்பா என்று சொல்லி விட்டு ஹனியின் விட்டிற்க்கு சென்றாள்.பார்வதி,மாமா ஏன்?? நித்தியை மும்பை போறதற்கு சரினு சொன்னிங்க ராஜன்,நித்தியோட சந்தோசம் தான் நமக்கு முக்கியம். எது நடக்கனும்மோ அதை அந்த ஆடவன் பார்த்துப்பான். நி எனக்கு இப்ப ஒரு டீ போட்டு எடுத்துட்டு வா என்று கூற அவரும் சரி என்று சென்றுவிட்டார்.

அங்கு நித்தி ஹனி வீட்ல சுமதியிடம் அம்மா 2 மாதம் தான் என்று ஹனி மற்றும் நித்தி கேட்டுக்கொண்டிருந்தனர்..சுமதி,மும்பை எவ்ளவு பெரிய ஊரு அங்க நீங்க எங்க என்ன பண்ணுவீங்க,ஹனி,அம்மா அங்க நாங்க போற காலேஜ்ல எங்களுக்கு எல்லா ஏற்பாடு பன்னிருவங்க. சுபா,அம்மா ஹனி மட்டுமா போற,அவள்க்கூட நித்தி அக்கா அப்புறம் அவங்க கிளாஸ்ல எல்லாரும்தான் போறாங்க,இந்த ஹனிக்கு அவ்வளவு சீன்ல இல்ல அவள அனுப்புங்க அம்மா என்று சொன்னால், சுமதி,எனக்கு இதுல உடன்பாடுஇல்லை நீங்களாச்சு உங்க அப்பாவாச்சு என்று சொல்லிட்டு விட்டு செல்ல ,சிவா எனக்கு ஓகே என்று சொல்லிக்கொண்ட வீட்டிற்க்குள் நுழைய ,ஹனி அப்பா நிஜமாவ என்று கேட்க சிவா ஆமா போய்ட்டுவாங்க நீ அங்க இருத்த அப்பா அங்க வந்து உங்கள பார்த்துட்டு அப்படியே மும்பை சுத்தி பார்பேன் என கூற ஹனி தாங்க்யூ அப்பா என கூறி விட்டுஅடுத்து இருவரும் இருந்த இடம் டிக்கெட் எடுக்கும் இடம்.

டிக்கெட் எடுத்து வெளியில் வந்த நித்தி வண்டியை ஓட்ட போக ஹனி, எவ்வளவு நேரம் நீதான் ஒட்டுன இப்ப நான் ஓட்டுவேன் என கூறி சாவியை வாங்கினாள்.நித்தி,தெய்வமே என்னுடைய உயிர்க்கு எந்த ஆபத்தும் வராம கொண்டு போய் எங்க வீட்டில் விட்டுவிடு என கூற வாய் முடிக்கிட்டு வா இல்லைனு பார்த்துக்கோ வண்டியை உன் மேல ஏத்துவேன்.நித்தி,தனது வலதுகையை வாய்யின் மீது வைத்து அமைதியாக வண்டியின் பின்னால் அமர்ந்தாள்.ஹனி அது என்று ஒரு பார்வை பார்த்து விட்டு வண்டியை ஓட்ட ஆரம்பித்தாள்.மிதமான வேகத்தில் சென்றவள்.பின்னால் ஒரு கார் தங்களை பாலொவ் பன்னி வருவதை பார்த்து வண்டியின் வேகத்தை அதிகரிக்க,நித்தி என்னடி வேகமாக ஓட்டுற மெதுவ ஓட்டு நான் போன் யூஸ் பண்ணுறேன்ல என கூற அட..!! ஆறிவு கெட்டவளே..!! நம்மளா ஒரு கார் இரயில்வே நிலையத்தில் இருத்து பாலொவ் பண்ணிக்கிட்டு வருது.ஐய்யோ ஒகே சிக்கிரமாக போ என்று கூறிவிட்டு முன்கண்ணாடி வழியாக பின்னால் வரும் காரை பார்த்தாள்.ஹனி வண்டியை ஒரு சந்தில் விட்டு ஓட்ட.அந்த காரில் இருந்த நபர்கள் வண்டி செல்வதை பார்த்து விட்டு சென்று விட்டனர்.


வண்டியை ஹனி அவள் வீட்டில் நிறுத்தி விட்டு நித்தி நீ இன்னைக்கு எங்க வீட்டில் தங்கு என கூற என்ன ஹனி புரியாம பேசுற நான் பத்திரமதான் போவேன்.நீ இதை யாருடையும் சொல்லாத அப்பறம் எல்லாரும் பயந்துடுவாங்க.அதுக்கு இத எப்படி சொல்லாம இருக்குறது நாளைக்கு எதாவது பிரச்சனை வந்தால் எல்லாரும் ஏண் சொல்லலானு கேப்பாங்க என் கூற ஏய் நான் என்ன சொல்லவே வேண்டாம் அப்படி சொல்லலா இப்ப வேண்டாம்னு தான் சொல்லுறேன்.புரியாம பார்த்த ஹனியை பார்த்து அதிகம யோசிக்காத நான் கிளம்புறேன் என்ற நித்தியை பார்த்து ஏய் இரு ஒரு நிமிடம் என்றவள் வீட்டிற்க்குள் சென்று விஸ்வா அழைத்து வந்தாள்.

நித்தி அவளை பார்த்து ஏண் ஹனி எப்படி பன்னுற அண்ணாவ ஏண் தொந்தரவு பண்ணுற என கூற,விஸ்வா, ஏய் வாயாடி என் தங்கச்சியை ஏன திட்டுற என கூற நித்தி,எங்க உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க அண்ணா நான் அவளை திட்டுவேனா இல்ல அவள் என்னை திட்டுவளா என்று கேக்க ,கை எடுத்து கும்பிட்டு சாமி தெரியாம கேட்டுடேன் ஆள விடு என் கூற வேட்டியா பேசாம போய் அவள வீட்டுல விடு என்று ஹனி கூற இவளுக்காகவ என்ன பாடிகாடா போக சொன்ன என்று தலையில் அடிக்க,நித்தி, அண்ணா நீ எப்ப வாரிய இல்ல நான் போகவா என கூற ஐய்யோ சும்மா சொன்னேன்டா வா போகலாம் என்று கூறி வண்டியை எடுத்து கிளம்பினர். நித்தி வீடு வரவும் நித்தி விஸ்வாவை பார்த்து நீ கிளம்பு அண்ணா என கூற நித்தி எதாவது பிரச்சனையா என கூற நித்தி இல்லை அண்ணா அதலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல என்றாள்.எதாவது பிரச்சனை நா சொல்லுமா.ஐய்யோ அண்ணா எதுவ்வும் இப்ப பிரச்சனை இல்ல,ஒருவேளை பிரச்சனை வந்தா உங்ககிட்ட சொல்லுறேன் என கூற,ஒகே டா டாடா என கூறி விட்டு சென்று விட்டான்..

வீட்டிற்க்குள் நித்தி செல்ல,மித்திரன், எருமை மாடு மாதிரி வளர்ந்துருக்கேள சிக்கிரம் வீட்டுக்கு வரனும்னு தெரியது,ஏய் என்னை விஸ்வா அண்ணாதான் எப்ப வந்து விட்டாங்க.அண்ணா அப்பவே எனக்கு போன் போட்டு சொல்லிட்டங்க லேட் ஆகும் அப்படி தெரிந்தா எனக்கு போன் போட வேண்டிதான என கூற ஒகே அடுத்த டைம் லேட் ஆனது அப்படினா உன்னை கூப்புடுறேன் என கூறி விட்டு அம்மா எனக்கு சாப்பாடு வேண்டம் நான் தூங்க போறேன் என்று கூறிக்கொண்டே தனது ரூம்க்குள் நுழைந்துக்கொண்டாள்.மித்திரன் மற்றும் விஸ்வா இவள் முகமே சரியில்லை என்று யோசித்துவிட்டு அவர் அவர் வேளை பார்க்க சென்று விட்டனார்.

வீட்டிற்க்குள் சென்ற ஹனியின் முகம் சரியில்லை என்பதை பார்த்த சுபா,ஹனி எதாவது பிரச்சனையா என்று கேக்க,இல்லை அது நித்தி கூட சண்டை அதான் என்று கூறி விட்டு தூங்க சென்றாள்.ஆனால் தூக்கம்தான் இருவரிடமும் நெருங்கவில்லை.காலையில் இருந்து நடந்ததை நினைத்து யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே காலையில் தான் தூங்கினார்.....



 

vigneshwari ganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்புக்களே,

இதோ அடுத்த 4 வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
images (2).jpg
அத்தியாயம்-4

அடுத்து வந்த 2 மாதங்களும் முடிவடைய மும்பை போவதற்க்கான நாளும் வந்தது.டிக்கெட் எடுத்து வந்த நாளில் இருந்து இந்த 2 மாதங்ளும் விஸ்வா இருவரையும் கண்காணித்துக்கொண்டு இருந்ததில் இருந்து அவனுக்கு மும்பை இருவருக்கும் பாதுகாப்பு இல்லை என்று தெரிந்தது.அதனால் இருரையும் காலேஜில் உள்ள ஹாஸ்டலில் தங்க வேண்டாம் என்று சொல்லி அவனுக்கு தெரிந்த, கார்த்திக் ஐ.பி.ஸ் அவர்களின் வீட்டில் தங்க ஏற்ப்பாடு செய்திருந்தான்.

இதனால் மற்றவர்கள் அனைவரும் இருவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நிம்மதியுடன் இருந்தார்கள்.ஹனி மற்றும் நித்திக்கு அது சுத்தமாக பிடிக்கவிலை.என்னென்றால் மும்பையை நன்றாக சுத்த வேண்டும் என்று ப்லான் போட்டு வைத்திருந்தனர். ஆனால் கார்த்திக் ஐ.பி.ஸ் ரெம்போ ஸ்ட்ரிக்ட் ஆனா ஆபிஸ்சர் நம்மளாள இங்கயும் போக முடியாது என்று நினைத்து கவலையில் இருந்தனர்.



அனைத்தையும் பேக் செய்து விட்டு அனைவரும் இரயில் நிலையத்திற்க்கு வந்தனர்.பார்வதியும் சுமதியும்,நித்தி மற்றும் ஹனியிடம் அங்க போய் எங்கயும் சுத்தக்கூடாது. அது ஒன்னும் மதுரை கிடையாது.எதுனாலும் கார்த்திக் சார் கிட்ட சொல்லிட்டுதான் போகனும் புரியுத என்று கூற ஹனி.ஐய்யோ இதையே எத்தனை தடவை சொலுவிங்க.நித்தி,கவலைப் படாதிங்க.நாங்க எங்க போனாலும் அந்த தாத்தாகிட்ட சொல்லிட்டுதான் போவோம் போதுமா என்றுசொல்ல.



சுபா, மும்பையில் இருந்துவரும் போது எனக்கு எதாவது வாங்கிட்டுவங்க என கூற ஒகே என்றாள் ஹனி.. விஸ்வா,நித்தி இங்க வா இந்த லக்கேஜ்ல சரியா இருக்கானு பாரு என கூற அண்ணா எல்லா லக்கேஜ்யும் சாரியாதான் இருக்கு அண்ணா என்று கூற அங்க போய் அமைதியா இருக்கனும்.அவங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்ககூடாது.எதாவது பிரச்சனைனா கார்த்திக் சார்கிட்ட சொலுங்க புரியுதா என்று கேக்க, புரியுது அண்ணா என்று சொல்ல,ஒகே நித்தி செல்லம் என்று விஸ்வா கூற நித்தி மற்றம் ஹனி அனைவரிடமும் விடைபெற்று இரயிலில் ஏறி தங்களது மும்பை பயணத்தை தொடர்ந்தனர்.



இரண்டு நாள் பயணம் முடிந்து மும்பைக்கு வந்து சேர்ந்தனர்.ஹனி,கார்த்திக் சார் வருவங்கனு அண்ணா சொன்னாங்க.ஆனால் இங்க யாரும் இல்லை என்று கூற எங்கயாவது நடக்கமுடியாம சிட் பண்ணிருக்காரானு பாரு அப்படியும் யாரும் இல்லைனா வா அப்படியே ஹாஸ்ட்டால் போய்ருவோம் என்று நித்தி கூறியதை பார்த்த ஹனி ,இந்த அண்ணாக்கு அறிவு இல்லை அவரு எப்படி இருப்பாருனு ஒரு போட்டோ அனுப்பி இருந்துருக்கலாம்.



நமக்கும் கண்டுபிடிக்க ஈசியா இருந்துருக்கும்.நித்தி, ஏய் ஹனி நீ என்ன அவர கல்யாணமா பண்ண போற உன் கிட்ட போட்டோ காட்ட என கூற, ஏய் எருமமாடு வாய் பேசாத கொண்ணுடுவேன் என கூறி ஹனி முறைக்க நித்தி, அமைதியாக சிரிக்க,எப்ப எதுக்கு சிரிக்கிற என்று கூறிய ஹனியை பார்த்து அது ஒன்னும் இல்லை செல்லம் உனக்கும் அந்த கார்த்திக் தாத்தாக்கும் கல்யாணம் நடந்த எப்படி இருக்கும்னு நினைத்து பார்த்தேன்.வாயை மூடிக்கிட்டு வா இல்லைனுவை சேவுலு பிஞ்சுரும் என்ற ஹனியை பார்த்து ஐய்யோ டார்லிங் கோவப்படதிங்க என்று நித்தி கூற இரண்டு பேரும் சிரித்துக்கொண்டே இரயில் நிலையத்திற்க்கு வெளியில்வந்து ஆட்டோவை கூப்பிட நின்றனர்.



அவர்கள் முன் ஒரு கார் வந்து நின்றது.காரில் இருந்து இறங்கிஆறடி உயரத்தில் கம்பிரமாக வந்தவன்.வண்டில ஏறுங்க என்று கூற ஹனி,நீ யாரு கார்த்திக் சாரோட ட்ரைவரா என்று கூற, ஆமா மேடம் வண்டில ஏறுங்க என்று சீற,நித்தியும்,ஹனியும் ட்ரைவரே எப்படி சிடுபெஸ்ஸா இருக்கான்.வீட்டில இருக்குற கார்த்திக் சார் எப்படி இருப்பாரோ என்று நினைத்துக்கொண்டுக் காரில் அமர்ந்தனர்.



அவர்கள் அமர்ந்தவுடன் கார் வேகமாக சென்றது.ஹனி, டிரைவர் மெதுவா போங்க இல்லைனா நாங்க கார்த்திக் சார் கிட்ட சொல்லிடுவோம் என்றாள்.ஆனால் அவள் சொல்வதை காதில் வாங்காம வண்டியை ஒட்டினான்.



கார் ஒரு பெரிய வீட்டின் முன் வந்து நின்றது. அந்த வீடே அவர்களின் செல்வாக்கை சொன்னது.கார் வரவும்,முத்தையா வேகமாக வந்து கேட்டை திறந்துவிட்டார்.காரை நிறுத்தி விட்டு இருங்குங்க என்று சொல்லி விட்டு சென்றவனை பார்த்து ட்ரைவர் லக்கேஜ்ல யாரு எடுப்பா என்று கூறி நித்தி அவனை சீண்ட.மதுலா உள்ளே இருந்து ஆராத்தி தட்டுடன் வந்தாள்.



ராமசாமி இங்க வந்து கார்லஇருக்குற லக்கேஜ்ல எடுத்துட்டு வாங்க என்று கூற அவர் அனைத்தையும் உள்ளே எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்ல.மதுலாஆராத்தி எடுக்க ஹனியிடம் நித்தி,கண்பாம் என்று கூற ஹனி, அவளை உள்ள வாடி உனக்கு இருக்கு என்று கண்ணால் மிரட்ட. மதுலா, என்ன தேன்மொழி நித்தியாவை ஏண் முறைக்கிற என்று கூற அதலாம் ஒன்னும் இல்லை சும்மா என்று கூறி சிரித்தனார் இருவரும்.



ஆராத்தி எடுத்து முடித்து இருவரையும் உள்ளே அழைத்து சென்றாள் மதுலா.உள்ளே சென்று அந்த வீட்டை பார்க்க அது மிகவும் அழகாகவும் பிரம்பாண்டமாகவும் இருந்தது.சோபாவில் சூரியா மடியில் கவிநாயா இருக்க ஹனி மற்றும் நித்தி சூரியாவை பார்த்துவணக்கம் கார்த்திக் சார் என்று சொல்ல அங்கு வந்த வசந்தா பாட்டி சிரித்துக்கொண்டு நித்தியாம்மா கார்த்திக் இப்பதான் மேலே போனான்.இவன் சூரியா கார்த்திக் ஒட அண்ணண் என்று சொல்ல சாரி சார் என்று ஹனி சொல்ல, சூரியா ,சார்ல வேண்டாம் அண்ணண்னு சொல்லுங்க என்று சொல்ல,மேலே இருந்து கார்த்திக் யுனிப்பாம்மில் வர இருவரும் ஐய்யோ இவர்தான் கார்த்திக்கா நம்மா ட்ரைவர் நினைத்து நிறைய திட்டிடோமே.இப்ப என்ன பண்ணுறது என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, திடிரென்று இருவரும் சூரியா பின்னால் சென்று நின்றுகொண்டானர்.அதை பார்த்த கார்த்திக் சாய்ங்காலம் வந்து உங்கள பார்த்துக்கிறேன் என்ற ஒரு பார்வையை பார்த்தான்.



கார்த்திக் சூரியாவை பார்த்து அண்ணா நான் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு செல்ல மதுலா கார்த்திக் சாப்பிடு போ என்று கூற, அண்ணி ஆல் ரெடி டைம் அகிடுச்சு நான் கிளம்புறேன் என்று சொல்லிக்கொண்டு போனவனை பார்த்து அமைதியாக அமர்ந்திருந்த கௌதம் , டேய் கார்த்தி சித்து அம்மா தான் சொல்லுறங்கள வா சாப்பிட அப்பதான் நானும் சாப்பிடுவேன் .கார்த்தி அடிங்க என்று கூறிக்கொண்டு அடிக்க கையை ஓங்க கௌதம் ஒடி சென்று நித்தி பக்கத்தில் நின்று கொண்டான்.



நித்தி கௌதமுடன் சேர்ந்துக்கொண்டு அதான் அண்ணி சொல்லுறாங்கல கார்த்திக் சாப்புட வா என்று சொல்ல கார்த்திக் அவளை முறைக்க,இல்லை சாப்புடவாங்க அண்ணானு சொல்ல வந்தேன் என்று சொல்ல,ஹனி சும்மா இரு நித்தி என்று சொல்ல.அண்ணி என்க்கு டைம் இல்ல நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு வண்டியில் பறந்தான்.சூரியா, ஹனி மற்றும் நித்தியை பார்த்து இது உங்க வீடு நீங்க எத செய்யனும்னாலும், எங்க போனும்னாலும் காரை எடுத்துக்கிட்டு போங்க.தனியா எங்கயும் போகாதிங்க டா என்றார்



கவி போய் ஆண்டிக்கு ரூம் காட்டு என்று கூற கௌதம் நானும்போவேன் என்று சொல்லி பெரிய மனுசனாக முன்னால் செல்ல,கவி உக்கு என்று மழழை மொழியில் சொல்ல ஹனி அவளை தூக்கிக்ககொண்டு மாடி ஏறினாள்.வசந்தா, சூரியா இப்பதான் இந்த வீடு அழகா இருக்குப்பா. சூரியா, ஆமா பாட்டி இப்ப நான் ரெம்போ சந்தோஷமா இருகேன்.நான் போய் விருந்துக்கு ஏற்ப்பாடு பண்ணுறேன் என்று சொல்லிக்கொண்டு சென்ற மதுவை பார்த்து நிறையா வேலை பார்க்கத மது என்று சொன்ன சூரியாவை பார்த்து சாரிங்க என்று சொல்லிவிட்டு சென்றாள்.சூரியாயும் கம்பெனிக்கு சென்று விட்டான்.



கவியை பார்த்த ஹனி,நித்தி கவிநயா உன்னமாதிரி இருக்கலா,நித்தி ஆமா அப்படியே என்னை மாதிரி அழகா என்று சொல்ல ஹனி, தெரியாம சொல்லிடேன்.கவி உன்னை விட அழகு என்று சொல்ல, இல்ல கவி எங்க ஜோதி பாட்டி மாதிரி னு அப்பா அடிகடி சொல்லுவாங்க என்றான் கௌதம்.நித்தி, ஆமா கீழ இருந்தாங்களே அவங்கதான் உங்க ஜோதி பாட்டியா என்று கேக்க ,இல்லை அவங்க வசந்தா பாட்டி,எங்க ஜோதி பாட்டி சாமிக்கிட்ட இருக்காங்க என்றான் கௌதம்.அதன்பிறகுநித்தி, பயங்கர யோசனையில் இருப்பதை பார்த்த ஹனி, என்ன ஆச்சு நித்தி எதாவது பிரச்சனையா என்று கேக்க,இல்லை உன்ன பத்திதான் யோசிக்கிறேன் என நித்தி கூற,என்னை பத்தி என்ன யோசிக்க வேண்டிக்கிடக்கு,அது ஒன்னும்இல்லை ஹனி என்று சொல்ல போனவளை கௌதமும்,கவியும் பார்க்க,நித்தி ஹனியின் காதில் சொல்ல அடுத்த நொடி ஹனி காளி அவதாரம் எடுத்திருந்தாள்.......



ஜோதி- கிருஷ்ணன்க்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள்.முதல் மகன் சூரியா,2வது மகன் கார்த்திக்.சூரியா கிருஷ்ணனின் தொழிலை பார்த்து வருகிறார்.வளர்ந்து வரும் தொழிலதிபர்களுக்கு சூரியா முன் உதாரணம்.சூரியா அவனுடைய எதிரிகளை யாரையும் சாதாரணமாக விட்டதில்லை.



கார்த்திக், எவ்வளவு சொத்து இருந்தாலும் தனக்குனு ஒரு அடையாளம் வேண்டும் என்றும்,சமுதாயத்திற்க்கு எதாவது செய்யனும் என்று சூரியாவிடம் கூறி ஐ.பி.ஸ்.க்கு படித்து முதல் தடவையில் பாஸ் செய்து ஐ.பி.ஸ். ஆனான். பார்க்கும் பார்வையில் அனைவரையும்அடக்குபவன்.குற்றவாளிகளை பார்க்கும் இடத்தில் சுட்டுதள்ளுபவன்.

ஜோதி-கிருஷ்ணன் இறந்தபிறகு கிருஷ்ணனின் அம்மா வசந்தா சூரியாவையும கார்த்திக்கையும் பார்த்துக்கொள்கிறார்.அம்மா இல்லை என்ற குறை இல்லாமல்,நல்லது,கெட்டதை சொல்லி வளர்த்தவர்.



மதுலா சூரியாவின் அன்பு மனைவி,அனைவரிடமும் பாசத்தையும் சமமாக காட்டுபவள்.சூரியாவை காதலித்து மணந்துக்கொண்டவர்.மிகவும் அமைதியானவர்.கௌதம், சூரியா-மதுலாவின் முதல் மகன். 7வயது இளவரசன் பயங்கரமான புத்திசாலி.படிப்பில் படுசுட்டி.அப்பவை போல் கோவம் டண் கணக்கில் வரும். கவிநயா இந்த வீட்டின் செல்ல இளவரசி.3 வயது தேவதை.ஜோதியை போல் இருப்பதால் அந்த வீட்டின் கண்மணி.





 

vigneshwari ganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்புக்களே,

இதோ அடுத்த 5 வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...ஒரு இரண்டு வரிலயாவது கதைய பத்தி சொல்லுங்கப்பா.....

download (5).jpg






ஹனி காதில் நித்தி வீட்டுக்குள்ள வரும்பொது வலது கால் எடுத்து வைச்சி வந்தியா இல்ல இடது கால் எடுத்து வைச்சசி வந்தியானு யோசிக்கிறேன் என கூற,நித்தி ஏதோ சொல்கிறாள் என்பதை பார்த்த கௌதம் எனக்கும் ஆண்டி என்று கூற ,என்ன ஆண்டியா டேய் எனக்கு ஒன்னும் 50 கிடையாது ஜஸ்ட் 2௦ தான் புரியதா என்று கூறினாள்.



சரி சரி நித்தி அக்கா எனக்கு சொல்லு என்றவனை பார்த்து போய் அந்த கதவை நல்ல திறந்து வை அப்பதான் சொல்லுவேன் என்றால்.கௌதமும் ஏதோ ரகசியம் தெரிச்சுக்க போறம் னு நினைத்து நித்தி சொன்னதை செய்தான்.



நித்தி அவனை பக்கத்தில் உக்காரவைத்து அவன் தோள் மேல கையை போட்டு அது என்னனா கௌதம் என்றவளை இடைமறித்த கௌதம் நித்தி அக்கா கையை எடு என்று சொல்ல ,நித்தி அவனிடம் டேய் நான் உன் ப்ரெண்டுடா நான் கை போட்டுதான் பேசுவேன் என்று கூற நான் எப்பதான் குளிச்சு ப்ரெஸ்ஸா இருகேன்.நீ என் மேல கைய போட்டா ட்ரெஸ் கசங்கிறும் என்று கௌதம் சொன்னான்.



அட பக்கி பயபுல்ல என்று நினைத்துக்கொண்டு கௌதம் எனக்கு தோள்லகைய போட்டதான் சொல்லவரும் எப்படி வசதி என்று அவனை பார்த்து சொல்ல.சரி போட்டுகோ ஆனால் என் ட்ரெஸ்க்கு ஏதும் ஆகக்கூடாது……சரி நித்தி அக்கா சொல்லு என்று கௌதம்கூறினான்.



ஒரு கண்டிசன்..நான் எங்க இருக்கு வரைக்கும் நீ என்னோட பேச்சை தான் கேக்கனும் டில் ஒகே அப்பிடினா நான் சொல்லுவேன் என்றாள் நித்தி.



கவிக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை ஆனால் மீ கைக்கு கைக்கு என்று தனது மழலை மொழியில் சொல்ல சரி நானும் கேக்குறேன்,நீ முதல ரகசியத்தை சொல்லு என்று கௌதம் கூற நித்தி, அது என்னன்னா கௌதம் ,ஐய்யோ எவன் கிட்ட என்ன சொல்ல, விட்டமாட்டிக்கானே...என்று நினைக்க....



ஐடியா,கௌதம் நீ என்ன மட்டும் தான் நித்தினு கூப்பிடனும்,ஆனால் ஹனியை நீ ஹனி னு கூப்பிடக்கூடாது அவளை நீ மரியாதைத்தான் கூப்பிடனும் எக்சாம்ப்ல்.... சித்தி இல்லனா அக்கானு ஓகே என்று சொல்ல எவ்வளவு நேரமா முறைத்துக்கொண்டு இருந்த ஹனி,எடு அந்த செருப்பை என்று சொல்ல நித்தி வேகமா கீழே ஓடினாள், ஹனி அவளை துரத்த கவியும் கௌதமும் அவர்கள் பின்னால் ஓட....



நித்தி,ஹனி வேண்டாம் ப்ளீஸ் மீ பாவமா தெரியல.ஹனி நீயெல்லாம் பாவம் இல்லடி என்று அவளை கையில் கிடைத்த பொருள்களை கொண்டு ஏறிய கவியும் கௌதமும் சேர்ந்து கொண்டு நித்தியை அடிக்க, அம்மா............ என்று அவள் காத்த உள்ளே வேளையில் இருந்த மதுலா மற்றும் வசந்த பாட்டி வந்தனர்.



இவர்களை பார்த்த ஹனி அப்படியே நிறுத்தி விட ஐய்யோ இவங்க கேட்ட நம்ம என்ன சொல்லுறது ஹனி என்று யோசிக்க,கௌதம்,ஜாலியா இருக்கு ஏன் அடிக்குறத நிறுத்துன ஹனி அக்கா. அடப்பாவி அவள் என்னுடைய நித்திய அடிக்கிறது உனக்கு ஜாலியா இருக்க.. உனக்கு இருக்குடா அப்பறம் என்று நித்தியின் மனசாட்சி சொன்னது.



வசந்தா, ஏன் எல்லாரும் நித்தியாவ அடிக்கிறீங்க என்று கேக்க, கவி, க்ராண்ட்மா நைத்து ஹனிய திட்டினா என்று காம்ப்லின்ட் பண்ணினாள்.நித்தி இல்ல பாட்டிமா இவங்க எல்லாரும் பொய்க்காறவங்க என்று சொல்லியவளை பார்த்து சரி விடுடா தங்கம் என்று அணைத்து கொண்டார்.



அதை பார்த்த கவியும் கௌதமும் ஒடிச்சென்று பாட்டி நானும் நானும் என்று சொல்ல அவர்களையும் அனைத்துக்கொண்டார் இதை பார்த்துக்கொண்டு இருந்த ஹனியையும் வசந்தா கூப்பிட ஹனி ஒடிச்சென்று அவரை அனைத்துக்கொண்டாள்.



கம்பனியில் உள்ளே நுழைந்த சூர்யாவை பார்த்து வழியில் வந்த அனைவரும் குட் மார்னிங் சார் என்று சொல்ல சிறு தலையசைப்புடன் குட் மார்னிங் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றார். சூர்யாவின் பி.எ. ரம்மும் அவன் பின்னால் சென்றான்



.சூரியா, ராம் உங்களுக்கு நான் எதுக்கு சம்பளம் தாரேன் எப்பவுமே என் பின்னாடியே வரதுக்கா .ஒரு வேலைய உருப்படியா செய்ய தெரியல என்று கூற ராம் பயந்து இல்ல சார் என்று எதோ கூற வர வாயை மூடுங்க ராம் ரிசன் சொல்லுறதுக்கு நான் உங்கள வேலைக்கு வைக்கல.



போங்க போய் அந்த சங்கரை கூப்பிடுவாங்க என்று காத்த விட்டால் போதும் என்று நினைத்து ஓகே சார் என்று வேகமா சென்றார்.மே ஐ கம் இன் சார் என்று சொல்லிக்கொண்டு உள்ளே செல்ல.சூரிய அவனை பார்த்த பார்வையில்...சார் அவங்க மும்பைனு மட்டும்தான் கண்டுபிடிச்சுருக்ககோம். எங்களால வேர ஏதும் கண்டுபிடிக்க முடியல சார்.



இன்னும் ஒரு வாரம் டைம் தாங்க சார் என்ற சொல்ல இத சொல்ல நான் உங்கள வேலைக்கு வைக்கல இன்னும் 2 நாள் டைம் தரேன் அதுக்குள்ள அந்த நாய் யாருனு கண்டு பிடிச்சு சொல்லனும் என்று கூற கண்டிப்பா சார் என்று சொல்லி விட்டு சென்றான் சங்கர். மும்பையா யாரா இருக்கும்.ஒருவேளை அவனா இருக்குமா ஆனால் அவனுக்கு எப்படி தெரியும் என்று யோசித்தார்.



கார்த்திக் உள்ளே நுழையவும், நேத்து பிடிச்ச அந்த தறுதலை நல்ல சாப்பிடானா என்று கேட்டுக்கொண்ட லாக்ப்க்குள் நுழைந்து அங்க படுத்து தூக்கிக்கிட்டு இருந்தவானை லந்தியால் அடிக்க ஆரம்பிக்க,அவன் ஐய்யோ சார் வேண்டாம் விட்டுருங்க இனிமே எப்படி பண்ணமாட்டேன் எங்க அம்மாவையும் அப்பாவையும் இனிமே நல்ல பார்த்துக்குவேன் சார்.



விட்டுருங்க சார் வலிக்கு என்று சொன்னான்.ஆனால் அவன் சொல்லுவதை கேக்காமல் அடிவெளுத்தி எடுக்க...அய்யோ அம்மா என்று கத்தியவானை பார்த்து இதுக்கு மட்டும் உனக்கு அம்மா வேண்டுமா என்று கூறிக்கு கொண்டு லந்தி உடையும் வரை அடித்து நீ சம்பாதிச்ச பெரிய லாடு லபக்கா...பெத்தவங்கள வச்சு கஞ்சி ஊத்த தெரியல நீயல்லாம் சம்பாதிச்சு எதுக்குடா வெங்காயம்...



சார் இனிமே எங்க அம்மாவையும் அப்பாவையும் நல்ல பார்த்துப்பேன் என்ன விட்டுருங்க சார் என்று சொன்னவனை பார்த்து.. போய் மரியாதையா அவங்க இரண்டு பேரையும் நல்லா பார்த்துக்கனும் இன்னொரு தடவை இந்த மாதிரி பண்ண வாழ்நாள் முழுக்க உனக்கு கம்பி தான் யாபகத்துல வச்சுக்கோ..



கண்ஸ்டாப்பில் இந்த நாய் கிட்ட கையொழுத்து வங்கிட்டு அனுப்பி விட்டுங்க என்று சொல்லி விட்டு தனது இடத்தில் அமர்ந்தவன்.இப்படிதான் எப்படிலாம் எந்த உலகத்துல இருக்கங்கலோ என்று நினைத்துக்கொண்டு தனது வேளையில் முழ்கினான்.



இந்த ஆளு வேற டென்ஷனா இருக்கார இல்ல நார்மலா இருக்காரானு தெரியல..அந்த கவுன்சிலர் வேற பேச சொன்னான்.அவன்கிட்ட வேற பெரிய பில்டப் குடுத்துருக்கோம் என்று யோசனைல இருக்கும் போது,கார்த்திக்,என்ன பழனியப்பன் என்ன யோசனை சொல்லுங்க அந்த கவுன்சிலர் என்ன சொன்னான்.



சார் நீங்க பெரிய ஆளு சார் எப்படி சார் கண்டுபிடிச்சிங்க என்று கேட்டவரை பார்த்து மிஸ்டர்.பழனி நான் ஒரு ஐ.பி.ஸ் ஆபிஸ்ர் மறந்துறாதிங்க.. இல்ல சார் அவங்க ஆளுங்க 2 பேர பிடிச்சு வைச்சிருக்கீங்களா அவங்கள ரிலீஸ் பண்ணனுமா 2இலட்சம் தரேன் னு சொன்னாரு என்றவரை தீப்பார்வை பார்க்க,



ஐயோ சார் அப்படி பாக்காதீங்க நான் நீங்க அப்படிலாம் விடமாட்டிங்கனு அவரு கிட்ட சொல்லிட்டேன் சார்.போங்க பழனி போய் வேலைய பாருங்க என்று தனது வேலையில் மூழ்கினான்.



டேய் கழுதைகளா ஒரு வேலை கூடுத்த ஒழுங்கா செய்யமாட்டிங்களா..அவளை போட்டு தள்ளிட்டு வாங்கனு சொன்ன என் கிட்ட வந்து கதையா சொல்லுற என்று பளார்னு அடியாளை அடித்தார். ஐயா எதோ ஒரு தடவை தெரியாம நடந்துடுச்சு எங்களை மன்னிச்சுடுங்க ஐயா.



அப்பா, அப்பா என்று அந்த வீடே அதிரும் அளவு கத்திக்கொண்டு வந்த ராக்கியை பார்த்து என்னடா என்ன ஆச்சு ஏன் கத்திகிட்டே வார என்று கூறிக்கொண்டு அங்கு இருந்த அடியாள்களை வெளியில் போக சொல்ல அவர்கள் வெளியேறவும் ,அப்பா ஹனியும் அவ ப்ரெண்டு நித்தியாவும் மும்பை வந்துருக்காங்க. அப்பா அதுமட்டும் இல்ல அவங்க 2 பேரும் அந்த கார்த்திக் ஒட கார்ல போனாங்க அப்பா.



என்னடா சொல்லுற நல்ல பார்த்தியா என்று கேக்க ஐய்யோ அப்பா நான் நல்ல பார்த்தேன் அது கார்த்திக் தான்.அவங்களுக்கு இவங்களுக்கு என்ன சம்மதம் என்று கிரண் யோசிக்க. அவங்க 2 பேரும் அவங்க வீட்டுக்குதான் போனாங்கனு பார்த்தியா ராக்கி.



இல்ல அப்பா என்றவனை பார்த்து லவ் பண்ண மட்டும் போதாது கூட அறிவு இருக்கணும். வெளியில் நின்ற அடியாளை கூப்பிட்டு அவங்க 2 பேரும் மும்பைக்கு வந்துருக்காங்க என்று சொல்ல,ஐயா நம்மா ஊருல தான் இருக்காங்க ஈசியா போடுறலாம் ஐயா கவலை படாதீங்க என்று சொல்லி விட்டு சென்றனர்.



கிரண் யோசனைல அமர்த்திருந்தான். ராக்கி,எவவ்ளவு தைரியம் இருக்கணும் அவனுக்கு என் செல்லதை அவன் கார்ல கூப்பிடு போறான்.என் செல்லம் கூட கல்யாணம் மட்டும் நடக்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு.



ஹலோ இந்தப்பக்கம் ஹனி ,அந்த பக்கம் யாரு என்று கேக்க பாண்டிய நாட்டு மன்னன் என்று சொன்னால் ரம்யா....ஒஒ என்று ஹனி சொல்ல.....மும்பை போனா ஒரு கால் பண்ணி சொல்லனும்னு இல்ல..ரொம்ப பண்ணாதீங்க 2 நாய்களும் என்று ரம்யா சொல்ல...சாரி சொரிநாய் நாங்க வந்த அலுப்புல தூங்கிட்டோம் என்று சொன்னாள் ஹனி...



உன்னலாம் திருத்தவே முடியாது என்று ரம்யா சொல்ல அந்த பக்கம் சுதா,ஏய் ரம்யா போனை குடு என்று போனை பிடிங்கி,ஹனி அங்க போனது ரேஸ்ட் எடுக்க இல்ல படிங்க.. நாங்க எல்லாரும் இன்னும் ஒரு வாரத்துல வந்துருவோம் என்றாள்.ஒகே சுதா நாங்க பாத்துக்கிறோம் என்று சொல்லி விட்டு போனை வைத்தாள்.



நித்தி,யாரு போன்ல என்று கேக்க,அது நம்ம சுதாவும் ரம்யாவும் என்று ஹனி கூறினாள். என்னவாம் என்று நித்தி கேட்க,நம்மள ஒழுங்க ஆடாம படிக்க சொன்னாள் என்று ஹனி கூறினாள். நித்தி,ஆமா இப்ப வாராங்களாம் இங்க என்று கேக்க, இன்னும் ஒரு வாரத்துல வருவாங்களாம் என்றாள் ஹனி.



கௌதம்,ஹனி நித்தி கீழ வருவிங்களா நம்ம மாலுக்கு போறோமா சீக்கிரம் கிளம்பி வாங்க என்று சொல்லிவிட்டு சென்றவனை, ஏய் இங்கவாடா என்று நித்தி சொல்ல.முடியாது போ நான் கீழ போய் கிளம்பனும் என்று சொல்லிவிட்டு சென்றான்.



நித்தியும் ஹனியும் தங்களது ஏடிஎம்கார்டை எடுத்துக்கொண்டு ஆடம்பரமாக இல்லாமல் சிம்பிலாக இரண்டு பேரும் ஓரே கலரில் சுடிதார் அணிந்து கிளம்பி கீழே வந்தனர். இவர்கள் இருவரையும்பார்த்த வசந்தா இரண்டு பேரும் அப்படியே வானத்தில் இருந்து வந்த தேவதை மாதிரி இருக்கங்க என்று நினைக்கும்போது இருவரும் வசந்தா பக்கத்தில் வந்தனார்.



நித்தி,என்ன பாட்டிமா எங்களை சைட் அடிக்கிறிங்களா அடி பின்னிடுவேன் என்று சொல்ல,அட போடி கழுதை என்று வசந்த கூறினார்.மதுலா,கவி கௌதம் ஹாலுக்கு வந்தனர்.



ஹனி , மதுலா அக்கா அழகா இருக்கிங்க என்று சொல்ல வசந்த, அடி போட்டேனா என்று கையை ஓங்க..நித்தி பாட்டி இப்ப என்னாச்சினு திட்டுறிங்க என்று கூறினாள்.



உங்களுக்கு சூரியா… அண்ணன் மது உங்களுக்கு அக்காவா ஒழுங்கா அண்ணினு கூப்பிடுங்க என்று வசந்தா சொல்ல இருவரும் சரிங்க பாட்டிமா என்றனார்.நித்தியும் ஹனியும், அண்ணி நீங்க அழகா இருக்கிங்க என்று சொல்ல.



கவி,அப்ப நான் புட்டிபுல்லா இல்லயா என்று கேக்க.நித்தி யாரு சொன்னா நீங்க ஹனி மாதிரி கேவலமா இல்லம அப்படியே என்னை மாதிரி அழகா இருக்க என்று கூறி அவள் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்தாள்.ஹனி நித்தியை பார்த்து கொண்ணுடுவேன் என்று மிரட்டினாள்.



ஹனி,கௌதம் நீ இன்னைக்குஎன் கையை பிடிச்சுகிட்டு தான் நடந்துவரனும் என்று கூற கௌதம் ஏன் என்று பார்க்க.இல்ல நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க யாரவது உன்னை சைட்அடிச்சுட்டா.



நான் உன்னை யாரும்சைட் அடிக்காம பார்த்து பத்திரமா கூப்பிட்டு போய் கூப்பிட்டுவாரேன் என்றாள்.கௌதம் நீ என்னை பத்திரமா என்று சொல்ல ஆமாடா என்று ஹனி கூற அனைவரும் சிரித்தனர்.



எவங்க எப்படியேதான் பேசிக்கிட்டே இருப்பாங்க நம்ம போவோம் என்று நினைத்து கவி நான் பாஸ்ட் போவேன் என்று ஓட,நித்தி அவள் பின்னால் நான் தான் பஸ்ட் என்று போவேன் என்று ஓடினான்.



வேகமாகநான் தான் முதல போவேன் என்று ஹனிக்கு பழிப்பு காட்டிகிட்டே பின்னால் பார்த்துக் கொண்டே ஓடி சென்ற நித்தி,கடவுளே இப்படியா முட்டுவேன் வலிக்குதே என்று மனதில் நினைக்கொண்டு நிமிர அங்கு நின்ற கார்த்திக்கை பார்த்து சாரி தெரியாம..



கொஞ்சமாவது மூளை இருக்க கண்ணை பின்னாடி வச்சுக்கிட்டு வந்த இப்படிதான் எல்லாருமேலயும் இடிப்ப.பொண்ணா ஒழுங்க நடந்து வரனும்னு இல்ல.இப்பபார்த்தாலும் ஆடிக்கிட்டே இருக்க.இது ஓன்னும் உன் வீடு இல்ல.இங்க ஒழுங்க இருக்கிறதா இருந்த இரு இல்ல.உன் மூட்டமூடிச்சியைலா எடுத்துட்டுகிளம்பு.



கார்த்திக்...என்று வெவ்வேறுதிசையில் இருந்து ஹனி,பாட்டி,மதுலா கூற..ஹனி,மிஸ்டர் கார்த்திக் வார்த்தையை பார்த்து பேசுங்க.எங்களுக்கு ஓண்ணும் இங்க இருக்கனும்னு ஆசைலாம் இல்ல.எங்க அண்ணன் விஸ்வா சொன்னதாலதான் இங்க தங்க சம்மதிச்சோம்.



ஹலோ என்று கார்த்திக் கூற.தன் கையை மேலே உயர்த்தி நான் இன்னும்பேசி முடிக்கலை மிஸ்டர் கார்த்திக் என்று கார்த்திகை ஒரு தீப்பார்வ்வை பார்த்தாள் ஹனி.உங்க வீட்டுல இருந்த நீங்க எதுவேண்டும்னாலும் பேசலாம் என்று நினைக்காதிங்க.



இப்ப நீங்க நித்திக்கிட்ட மன்னிப்பு கேக்கனும்.அப்படி இல்லைனா நங்க இந்த வீட்டை விட்டு போய்ருவோம் என்றாள் ஹனி.வசந்தா,அம்மாடி ஹனி ஏன்மா இப்படிலா பேசுற அவன் நித்தி கிட்ட கண்டிப்பா மன்னிப்பு கேட்பான் என்றார்.



கார்த்திக்,யார் யாருகிட்ட மன்னிப்பு கேக்கிறது என்னால் யாருக்கிட்டயும் மன்னிப்பு கேக்கமுடியாது யாரையும் இங்க இருங்க னு யாரும் யாரு கால்லையும் பிடிக்கல என்று ஹனியை பார்த்து சொல்ல.ஹனியும் நீ மன்னிப்பு கேட்டே ஆகனும் என்பதை போல் பார்த்தாள்.



மதுலா,கார்த்திக் என்ன இது பிடிவாதம். நித்தி உன்ன விட சின்ன பிள்ளை நீ பெரியவன் தான மன்னிப்பு கேளு என்றாள்.நித்தி,மதுலாஅண்ணி அதலாம் வேண்டாம், தெரியம நடந்துருச்சி ஆதனால் யாரும் யாருகிட்டயும் மன்னிப்பு கேக்க வேண்டாம் என்று கண்ணில் இருந்து இதோ வந்துவிடுவேன் என்ற என்ற கண்ணிரை வராதே என்று கூறிக்கொண்டு சொல்லி முடித்தாள்.



நித்தி,ஹனி வா நம்ம மேல போலாம்.ஹனி,ஏய் என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க அவன் உன்ன திட்டுவான் நான்பார்த்துக்கிட்டுஇருக்கணும்மா.ஐய்யோ இத இதோட விடு முதல என்கூட வா என்று ஹனியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்.



கார்த்திக், தன்னை மன்னிப்பு கேக்க சொன்ன மதுலா மற்றும் வசந்த பாட்டியை பார்த்து முறைத்து விட்டு தனது அறைக்கு சென்றுவிட்டான்.மதுலாமற்றும் வசந்த ஒருவரை ஒருவர் கவலையுடன் பார்த்து கொள்ள.மதுலா, பாட்டிமா எல்லாம் சரியாகிடும் கவலைபடாதிங்க என்று கூறினாள்.



வீட்டில் யாரும் யாரிடமும் பேசாமல் அவர் அவர் வேளையை செய்ய.நித்தியும் ஹனியும் அவங்க அறையில் இருந்து வெளியில் சாயங்காலத்துல இருந்து வரவே இல்லை.கார்த்திக்கும் அவனுடைய அறையில் இன்று நடந்ததை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தான்.



நம்ம மேல என்ன தப்பு இருக்கு காலையிலே அவங்க 2 பேரும் என்னை ட்ரைவர்னு சொன்னதுக்கு 2 அரையை விட்டுருக்கனும். சும்மா விட்டேன்ல அதான் 2 பேரும் ரொம்ப பண்ணுறாங்க.பயம் இல்லாம போச்சு என்று யோசிக்கதான்.



ஆனால் ஒரு மனம்,கோவத்துல என்ன பேசுறோம்னு தெரியம ரொம்ப பேசிட்டோம் என்று கோவம் மறைந்து அமைதிநிலையில் இருக்கும்போது உரைக்க..இன்னோரு மனம் நீ கார்த்திக் ஐ.பி.ஸ் நீ போய் மன்னிப்பு கேக்கனுமா என்று முரண்டு பிடித்தது...........:):):):):)









 

vigneshwari ganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்புக்களே,

இதோ அடுத்த 6வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...
nRjNTLtt4IA.jpg


அத்தியாயம் -6

மும்பை ஏர்போட்டில் இருந்து ஆறடி உயரத்தில் மிகவும் கம்பிரமாக பார்க்கும் அனைவரையும் ஈர்க்கும் அளவு அழகாக வந்து கொண்டு இருந்தான் ஜீவா.அவனை ரிசிவ் செய்ய ராக்கி வந்திருந்தான்.ராக்கி,ஹாய் ஜீவா என்ன தீடிரென்று மும்பை வந்திருக்க என கூற, ஏன் ராக்கி நான் உன்க்கிட்ட சொல்லிட்டுதான் வரனும்னு எதாவது இருக்க..?? என்று கேட்டுக்கொண்டுமுன்னே நடந்தான் ஜீவா.

ராக்கி,ஏன்டா இங்க வந்த.... எல்லாரும் இவனைத்தான் தலையில் தூக்கி வைச்சி கொண்டாடுவாங்க,என்னோட முதல் எதிரி நீதான் 2வது அந்த கார்த்திக் என நினைத்துக்கொண்டு மெதுவாக செல்ல..ஜீவா,ராக்கி சீக்கிரம் வா என கூற,இதோ வந்துவிட்டேன் என்று காரில் அமர வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

ஜீவா,ரொம்ப ஜாலியானவன் ஆனால் அது சில வருடங்களுக்குமுன் இப்பபோ இல்ல.ராக்கியின் பெரியப்பா பையன் தான் ஜீவா.அவன் அம்மா ஜாணவி இறந்த பிறகு அவன் யாரிடமும் பேசபிடிக்காமல் யு.எஸ்.ஏ சென்று விட்டான் தனது எம்.பி.ஏ. படிப்பிற்க்காக.இப்பொழுது இங்கு வந்தற்க்குகாரணம்.அவன் அப்பா அம்மா இறந்ததில் அவனுக்கு ஏற்ப்பட்ட சந்தேகமே.....

கார், ஜீவாவின் வீட்டின் முன் வரவும்,காரில் இருந்து இறங்கிய ஜீவாவை பார்த்து கிரண்,வாடா தங்கம் வா எப்படி இருக்க உன்ன பார்த்து எவ்வளவு நாளாச்சி.உங்க அம்மா போனதுக்கு அப்பறம் எங்களுக்கு எல்லாமே நீதான்ப்பா.இப்படி எங்கள விட்டுடு ரொம்ப தூரத்துல போய் இருக்க.இனிமே நான் உன்ன எங்கயும் விடமாட்டேன் ஜீவா என்று கிரண் கூற சிறு புன்னகையுடன் கிரண் கால்லில் விழுந்துஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு தனது தாத்தா ராஜ லிங்கத்தை பார்க்க அவர் அறைக்கு சென்றான்.

ராஜலிங்கம் ஜீவா இந்த வீட்டை விட்டு சென்றதில் இருந்து வெளியில் செல்வதை நிருத்திகொண்டார்.ஆனால் வீட்டில் நடப்பதை அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார்.ராஜலிங்கம் ஜீவாவின் முகத்தை பார்த்து கண்ணீர் விட்டுகரைய,தாத்தா நான்தான் வந்துடேன்ல ஏன் அழுறிங்க,இனிமே நான் உங்கள விட்டு எங்கயும் போகமாட்டேன் அழுகாதிங்க என ஜீவா கூற நீ எப்பவும் சந்தோஷ்மா இருந்தா அதுவே எனக்கு போதும் ராசா என்று சொல்ல.சரி தாத்தா நான் போய் ப்ரெஸ்ஸா ஆகிட்டுவாரேன் என்று கூறி விட்டு தனது அறைக்கு சென்றான்.

தனது அறைக்கு சென்ற ஜீவா அந்த அறையில் எந்த பொருள்களும் மாறாமல் அப்படியே இருந்தது போல் அவனது தாயின் நினைவும் அப்படியே இருப்பது போல் தோன்ற கட்டிலில் படுத்து கண்ணைமூடி அதை ரசித்து கொண்டு அப்படியே தூங்கியும் போனான்.

காலையில் சூரியன் நிலாவை வழி அனுப்பி வைத்து விட்டு அழகாக உதயாமாகியது.ஹனியும் நித்தியும் மும்பை வந்து ஒரு வாரம் ஆகிருந்தது.நித்தி அன்று ஹனியிடம் இந்த வீட்டிற்க்கு விஸ்வா அண்ணன் சொன்னதாலதான் நம்ம இரண்டு பேரும் இங்க வந்தோம் இப்ப இங்க நம்ம பிரச்சனை பண்ணி வெளில போய்ட்டோம் தெரிஞ்சா அங்க யாரும் நிம்மதியா இருக்கமாட்டாங்க.கார்த்திக் எப்படிதான் நமக்கு தெரிச்சிடுச்சு.ஆனால் மத்தவங்க நம்ம மேல பாசமாதான் இருக்கங்க.இல்ல நித்தி என்று கூற வந்த ஹனியை,ஹனி செல்லம் விடுங்க இதற்க்கு மேலயும் இத பத்தி பேச வேண்டாம் என்று கூறினால் நித்தி.

அதன் பிறகு வந்த நாள்களில் ஹனியும் நித்தியும் கார்த்திக்கை தவிர அனைவரிடமும் நன்றாக சிரித்து பேசிக்கொண்டுதான் இருந்தனர்.சூரியா, கீழே அமர்ந்து பேப்பரை படித்துக்கொண்டுஇருக்கும் போது நித்தியும்ஹனியும் கீழே வந்தனர்.சூரியா இரண்டு பேரையும் கூப்பிட்டு, இங்க வந்து 1வாரம் ஆச்சு ஆனால் 2 பேரும் எங்கயும் வெளில போய் சுத்தி பார்த்த மாதிரி தெரியல அதனால 2 பேரும் இன்னைக்கு மால்க்கு போய்டுவாங்க என்று கூறினார்.நித்தி சரி அண்ணனா இன்று சொல்ல ஹனி அவளைமுறைத்து பார்த்தாள்.

சூரியா, ஏன் ஹனி உனக்கு போக பிடிக்கலையா என்று கூற,அதலாம் ஒன்றும் இல்லை அண்ணனா போய்டுவாரோம் என்று கூறினாள் ஹனி.நித்தி மதுலாவை பார்க்க சென்றாள் அங்கு மதுலா, எந்த நித்தி காபி என்று இரண்டு கப்களை கொடுத்து இத ஹனிக்கிட்ட குடு என்று சொல்லிவிட்டு சென்றாள்.நித்தி,ஹனி இந்த காபி என்றுநீட்டினாள்.ஹனி,உன் காபி வேண்டாம் நீயே வச்சுக்கோ என்று சொல்ல,ஹனி என்னால 2 கப் காபியையும் குடிக்க முடியாது என்றாள் நித்தி.

எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு ஹனி அந்த இடத்தை விட்டு போக,அவள் கையை பிடித்து ,ஏய் ஏன் எப்ப கோவம இருக்க நான் என்ன பண்ணுனேன் என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள் நித்தி.நீ என்ன பண்ணல என்று கூறிய ஹனியை பார்த்து முதல நான் என்ன பண்ணுனேன் சொல்லு என்று நித்தி கூறினாள்.கௌதம் அட லூசுகளா முதல அந்த காபியை என்கிட்டயாவது குடுத்துடு நீங்க உங்க சண்டைய போடுங்க.

சூரியா,ஹனி அப்படி நித்தி என்ன பண்ணுனா என்று கேக்க,ஹனி இல்ல அண்ணனா இன்னைக்கு நீங்க வெளில போய்டுவாங்கனு சொன்னதும் இவ சரினு சொல்லிட்ட அத நான் தப்பு சொல்லல ஆனா நான் இரண்டு நாளா கூப்பிடுறேன் வரமாட்டேன் சொல்லிட்ட இந்த குரங்கு. சூரியா சிரிக்க, இல்லஹனி நான் இன்னைக்குபோலாம்னு உன்கிட்ட சொல்லலாம்னுதான் இருந்தேன் அதுக்குள்ள அண்ணனா சொலிட்டங்களா அதான் சரி னு சொல்லிட்டேன் என்று சொன்னாள் நித்தி.நம்பிட்டேன் என்று சொன்னா ஹனியை பார்த்து நம்பிதான் ஆகனும் என்று நித்தி கூறினாள்.

அதன் பிறகு அனைவரும் கிளம்பி சாப்பிட வந்தனர்.சூரியா,கார்த்திக்கை பார்த்து கார்த்திக் இன்னைக்கு எதாவது வேளை இருக்க சாய்ங்காலம் என்று கேக்க இல்லை அண்ணா என்று கார்த்திக் கூறினான்.அப்ப சாய்ங்காலம் நம்ம நித்தியையும் ஹனியையும் ஷாப்பிங் கூப்பிடு போ என்று சூரியா கூறியதை மறுக்க முடியாமல் சரி என்று சொன்னான்.ஆனால் ஹனி, இல்லை அண்ணா எதுக்கு எல்லாருக்கும் சீரமம் நாங்க காலேஜ்ல இருந்து அப்படியே முத்து அண்ணா கூட போய்டுவாரோம் என்றவளை பார்த்து கார்த்திக் ஏன் எங்க கூட வந்தா இவங்க அழகு குறைஞ்சு போய்டுமோ என்று மனதில் திட்டினான்.

சூரியா,இல்லம்மா இதுக்கு முன்னாடி நீங்க இரண்டு பேரும் வெளில எங்கயும் போனது இல்ல அதுனால இன்னைக்கு மட்டும் அவன் கூட போங்க என்று சொன்னார்.நித்தி,இல்லஅண்ணா என்று சொல்ல வர.... கார்த்திக் இரண்டு பேரையும் பார்த்து சாய்ங்காலம் காலேஜ்ல இருங்க நான் வந்து உங்களை கூப்பிடுக்கிறேன் என்று முறைத்து கொண்டு சொல்லி விட்டு சென்று விட்டான்.ஹனி, இவரு பெரிய துரை இவரு முறைத்ததும் நாங்க பயந்துடனுமா என்று நினைத்து கொண்டாள்.

அதன் பிறகு சூரியா கம்பெனிக்கு சென்றுவிட நித்தியும் ஹனி காலேஜ்க்கு சென்றுவிட்டனர்.சூரியா அறையில் சங்கர் ,சார் அவனை நம்ம இடத்துலதான் வச்சிருகோம் சார்.ஆனால் அவன் வாய்யை திறக்கமாட்டிக்கான் சார் என்று கூற சூரியா நம்ம ஸ்டைல்ல விசாரனைய ஆரம்பிங்க நான் இன்னும் ஒரு ஒரு மணி நேரத்துல வந்துரேன் என்று சூரியா கூற சங்கர் ஒகே சார் என்று சொல்லி விட்டு சென்றான்.

ஜீவா,காலையில் எழுந்து குளித்து விட்டு ஜாணவி படத்தின் முன் சென்று அம்மா,நீங்களும் அப்பாவும் சேர்ந்து உருவாக்குனா கம்பெனிக்கு நான் இன்னைக்கு போறேன் அம்மா என்னை ஆசிர்வாதம் பண்ணி அனுப்புங்க அம்மா என்று சொல்லிவிட்டு கீழே சென்றான்.

கிரண்,என்ன ஜீவா அதுக்குள்ள கிளம்பிட்ட எங்க போற என்று கேக்க,இன்னைல இருந்து ஆபிஸ்ஸ பார்க்கலாம்னு இருக்கேன் சித்தப்பா என்று கூறினான் ஜீவா.அதைக்கேட்டு ஆதிர்ச்சியடைந்த கிரணை பார்த்து ஏன் சித்தப்பா என்ன ஆச்சு என ஜீவா கூற அதலாம் ஒன்னும் இல்லை ஜீவா தீடிரென்று சொன்னியா அதான்,நீ போறது முதல தெரிஞ்சு இருந்தா பெரிய விழாவே வச்சுருப்பேன்ல ஜீவா என கிரண் கூறினான்.

ஜீவா,அதாலம் ஒன்னும்வேண்டாம் சித்தப்பா அது எங்க அப்பா உருவாக்குன கம்பெனி அதுக்கு போறதுக்கு இதலாம் தேவை இல்ல சித்தப்பா.இது என்னோட கடமை சித்தப்பா.நான் போய்டுவாரேன்.என்று சொல்லிவிட்டு சென்றான்.கிரண்,என்ன சொன்னா.... உன் கடமையா அது என் பையன் ராக்கிக்குடா அந்த கம்பெனி.உங்க அப்பாதான் அதை உருவாக்குனான். ஆனால் அவன் தான் செத்துபோய்டான்ல அப்பறம் என்னா...நீ உறவு வச்சுக்கலாம் னு வந்தியா விடமாட்டேன்டா விடமாட்டேன்.என்று புலம்பிக்கொண்டு இருந்தான்.

ஆபிஸ்க்கு சென்ற ஜீவா, மனோகரை கூப்பிட்ட,குட் மார்னிங் சார் என்ற மனோகரை பார்த்து குட்மார்னிங்,எனக்கு இன்னும் 15 நிமிடத்தில் கம்பெனியின் அத்தனை விவரங்களும் எனக்கு வந்துருக்கனும்.இன்னும் 1 மணி நேரத்துல நம்ம கம்பெனி எம்லாய்ஸ்லாம் நான் மீட் பண்ணணும் அதுக்கு அரேஞ் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு நீங்க கிளம்பலாம் என்பதை போல் பார்க்க மனோகர் சரி சார் என்றுசொல்லி விட்டு கிளம்பினான். அடுத்த அரை மணி நேரத்தில் எல்லா பைல்களையும் பார்த்தவனுக்கு எந்த பைலும் சரியாக இல்லை என்றும் எதுவரை தனக்கு கம்பெனியை பற்றி அனுப்பிய அனைத்து தகவல்களும் பொய் என்பதை தெரிந்துக்கொண்டான்.

மீட்டிங்கில் அனைவரும் ஜீவாக்காக காத்துக்கொண்டும் மிகவும் குழப்பத்திலும் இருக்க. கதவை படார் என்று திறந்துக்கொண்டு வந்த ஜீவாவை பார்த்து அனைவரும் பயத்தில் இருந்தனர். அவனின் பார்வையை வைத்துநமக்கு பெரிய ஆப்பு காத்துகிட்டு இருக்கு என்பதையும் தெரிந்துகொண்டனர்.அவனை பார்த்து குட் மார்னிங் சார் என்று அனைவரும் கூற ,பாரவயில்லை குட் மார்னிங்ல நல்லதான் சொல்லுறிங்க ஆனால் என்ன கம்பெனியோட பைல்ஸ்யும் கம்பெனியையும் தான் ஒழுங்க ரன் பண்ண தெரியல உங்களுக்கு என்று நக்கலாக சொன்னான் ஜீவா.

சாரி முதல் நான் என்னைபத்தி சொல்லிறேன்.என் பெயர் ஜீவா ராகவன். இந்த கம்பெனியோட எம்.பி.எதாவது தப்புனு தெரிஞ்சுனா இரக்கமே பார்க்கமாட்டேன்.நான் போடுற ருல்ஸ பாலோ பண்ணுறதா இருந்தா இந்த கம்பெனில இருங்க இல்லைனா இப்பவே இந்த கம்பெனிய விட்டு போலாம். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சீக்கிரம் முடிவை எடுங்க,மீட்டிங்க் முடிசிருச்சு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

நித்தியும் ஹனியும் காலேஜ்ற்க்கு வந்திருந்தனர்.ஏய் ஹனி நம்ம ப்ராஜட் பண்ணி விண் பண்ணிருவோம்னு நினைக்கிறியா என்று கேட்ட நித்தியை பார்த்து ஏய் லூசு நம்ம அதுக்கு தான் மதுரையில இருந்து இங்க வந்துருக்கோம்.நீ தான் இதை பண்ணியே ஆகனும்னு சொன்ன இப்ப என்னனா இப்படி பேசுற என்ன ஆச்சி உனக்கு என கூறினால் ஹனி.இல்ல செல்லம் பாதி பேரு இந்த ப்ராஜட் கண்டிப்பா விண் பண்ணும்னு சொல்லுறாங்க ஆனால் சில பேரு நம்ம முன்னாடி சொல்லலேனாலும் பின்னாடி இது சக்ஸஸ் ஆகாதுனுசொல்லுறாங்க அதான் ஒரு மாதிரி இருக்கு என்றவளை கையில் இருந்த நோட்டை வைத்து நித்தியின் தலையிலே அடித்தாள் ஹனி.ஐய்யோ வலிக்கு ஹனி என்று கூறினால் நித்தி,

அடுத்தவங்க என்ன சொல்லுறதலாம் எப்ப இருந்து கேக்க ஆரம்பிச்ச எவன் என்ன சொன்னால் என்ன நம்ம பெஸ்ட்ட நம்ம குடுப்போம் சரியா வா என்று சொன்னா ஹனியை பார்த்து நித்தி, நீ எனக்கு கிடைச்சதுக்கு நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கனும் என்று அவளை அனைத்துக்கொண்டாள் .அடச்சி முதல வா என்று அவளை கூப்பிட்டுக்கொண்டு கைடை பார்க்க சென்றாள் ஹனி.

சூரியா, என்ன சங்கர் சொல்லுறானா இல்லயா..என்று கேக்க. இல்லை சார் என்றான் சங்கர். அவர்கள் பிடித்து வைத்திருந்தவனின் முன் சேரை இழுத்து போட்டு அமர்ந்தான் சூரியா.

அவனை பார்த்து உனக்கு இரண்டு சான்ஸ் தாரேன் அதுக்குள்ள உண்மையை சொல்லு.இல்லைனு வை பட்டுனு போட்டு போட்டுனு தள்ளிட்டு போய்கிட்டே இருப்பேன் புரியுதா என்று சூரியா கூற, அவன், இங்க பாருங்க எனக்கு காசு குடுத்தாங்க நான் அந்த பிள்ளையை ஆஸிடண்ட் பண்ணுனேன்.ஆனால் அந்த பிள்ளை தான் தப்பிருச்சுலா அப்பறம் ஏன் என்னை அடிக்கிறிங்க.பாருய்யா ரொம்ப புத்திசாலியா பேசுறோம் நினைப்பு சரி சொல்லு யாரு காசு குடுத்தா சொல்லு என்று சூரியாகேக்க அவன் எனக்கு தெரியது என்று கூறினான்.

சூரியா சரி இவன போட்டுறு என்று சொல்ல அவனது அடியாள் அவனது கால்லிலும் கையிலும் சுட்டான். இவனை எதாவது ஒரு ஹாஸ்பிட்டல யாருக்கும் தெரியம வெளில போட்டு வந்துடுங்க என்று சொல்லிவிட்டு சென்றான் சூரியா. இதை பார்த்த சங்கர் .இவருக்கு இன்னைக்கு என்ன ஆச்சு நம்ம இவனை கஸ்டப்பட்டு அதுவும் மதுரையில் இருந்து கண்டுபிடிச்சுருக்கோம்.இவரு என்னனா எப்படி பண்ணிட்டு போறாரு என்று யோசித்துக்கொண்டு சூரியாவின் பின்னால் சென்றான்.

காலேஜில் கார்த்திக்காக ஹனியும் நித்தியும் காத்துக்கொண்டு இருக்க.ஹனி, இவன்லா பேருக்குதான் கார்த்திக் ஐ.பி.எஸ்.ஒரு பண்சுவாலட்டி இருக்கனு பாரு.இவன்லா எப்படிதான் படிச்சி பாஸ் பண்ணானோ தெரியல என கூற ,அவன் வேணும்னுதான் நம்மல வெய்ட் பண்ண வைக்கிறான்னு நினைக்கிறேன் என்றாள் நித்தி.ஆமாஆமா அவன் பண்ணாலும் பண்ணுவான் என்று கூறினாள் ஹனி.

மேடம் இங்க தேன்மொழி,நித்தியா யாரு மேடம் என்று கேக்க இருவரும் அவனை சந்தேகமாக பார்க்க.ஐய்யோ மேடம் அப்படிலா பார்க்கதிங்க கார்த்திக் சார் கூப்பிட்டு வர சொன்னாரு என்று பழனி கூறினார்.ஓஓ என்று இருவரும் ஒன்றாக சொல்ல யெஸ் மேடம் என்றார் பழனி.ஆமா நீங்க யாரு என்று நித்தி கேக்க, நானும் போலிஸ்தான் மேடம் என பழனி கூற,பார்த்த அப்படி தெரியலயே எதோ கடத்தல் கும்பல்ல உள்ளவன் மாதிரில தெரியுது என ஹனி கேட்டாள். 20 வருஷமா...... இந்த போலிஸ் வேளையில் இருக்கேன் இதுவரைக்கு என்ன பார்த்து யாரும் எப்படி கேட்டது இல்ல முருகா..... இது என்ன எனக்கு வந்த சோதனை முருகா..... என்று கதற அப்பொழுது பழனியின் போன் அடித்தது.

போனை எடுத்து பார்த்தவன் கார்த்திக் சார்தான் போன் போடுறாரு என்று போனை காட்டி விட்டு அட்டண் செய்தார்.கார்த்திக் இன்னும் என்ன பண்ணுறிங்க பழனி அவங்கள பார்த்திங்களா இல்லையா என்று கேக்க..சார்ர்ர்ர்ர்ர்ர் பார்த்துடேன் சார் ஆனால் என்று இழுக்க. கார்த்திக், என்ன ஆனா உனா னு சொல்லிகிட்டு இருக்கிங்க பார்த்தாச்சுனா கூப்பிடுவர வேண்டியாதுதானஎன கூற சார் இவங்க என்ன பார்த்து போலிஸ் மாதிரி தெரியலனு சொல்லிட்டாங்க சார் என்று நடந்ததை கூற கார்த்தி சிரித்துக்கொண்டே போனை அவங்க கிட்ட குடுங்க என்று சொல்ல பழனி போனை நித்தியிடம் குடுக்க. கார்த்திக் நான்தான் அவரை அனுப்புனேன்.அவருக்கூட வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

என்ன மேடம் இப்பயாவது நம்புறிங்களா என்று பழனி கேக்க.ஹனி, சார் உண்மையவே நீங்க அப்படிதான் இருக்கிறிங்க என்று சொல்லிகொண்டே காரில் ஏறினார்.அடுத்த 15 நிமிடத்தில் கார் நின்றது மும்பையில் உள்ள பெரிய மாலில் அங்கு ஏற்கனவே இவர்களுக்காக காத்துக்கொண்டு இருந்தான் கார்த்திக்.இருவரையும் பார்த்து அவங்க போலாம் என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான்.

இருவரையும் சுடிதார் செக்சனில் கூட்டி சென்றான்.அவனை பார்த்து கடையின் ஓணர் வந்து வாங்க சார் வாங்க சூரியா சார் வரலையா என்று நலம் விசாரிக்க. இவங்களுக்கு சுடிதார் காட்டுங்க என்று கூற,கடையின் ஓணர் ,வாங்க மேடம் வாங்க என்று கூற கார்த்தி இருவரையும் பார்த்து எவ்வளவு வேண்டும்னாலும் எடுத்துக்கோங்க ஆனால் 15 நிமிடத்தில் வந்துரனும் என்று ஆடர் போட...இருவரும் சரி என்று தலையாட்டினர். நா ன் வெளியில் வெய்ட் பண்ணுறேன் என்று சொல்லிவிட்டு சென்றான்.

ஹனி, எவரு சொன்னா நம்ம கேக்கனுமா பெரிய அப்படக்கரு இவன் நமக்கே ஆடர் போடுறான்.நித்தி, விடு மச்சி நம்ம இன்னைக்கு இவன கதற விடுறோம் ஒகே என்று சொல்லி கைபைவ் அடித்துக்கொண்டனர்.15 நிமிடம் அரை மணி நேரமாகியது..அரை மணி ஒரு மணியாகியது.கார்த்தி,எவ்வளவு நேரம் சுடிதார் எடுக்க இவங்களுக்கு நம்மல டென்சன் ஏத்தவே மதுரையில இருந்து வந்துருப்பாங்க போல.சூரியா அண்ணா வேற இவங்களுக்கு சப்போட்டு என்று திட்டிக்கொண்டே உள்ளே சென்றவன்.

அவர்கள் இருவரையும் பார்த்து அனல் பறக்கும் பார்வையை பார்தான்.வந்ததுலஇருந்து ஒரு மணி நேரமாகிடுச்சி ஆனால் இன்னும் ஒரு சுடிதார் கூட இரண்டு பேரும் எடுக்கலை என்று திட்ட வந்தவன் தங்கள் நிற்க்கும் இடம் கருதி ஒரு 5 நிமிடத்தில் 20 சுடிதாரை எடுத்து பில் போட குடுத்தான்.அவனுடைய கோவத்தை பார்த்து இரண்டு பேரும் ஜாலி ஜாலி டென்சன் ஆகிடான் என்று கைபைவ் அடித்துக்கொண்டனார். இதை பக்கத்தில் உள்ள கண்ணாடி வழியாக கார்த்திக் பார்த்து விட்டு பின்னால் திரும்பி இரண்டு பேரையும் பார்த்து இப்படில எப்படி ரூம் போட்டு யோசிப்பிங்களா இல்ல எப்பவும்மே எப்படிதான என்று கேக்க இரண்டு பேரும் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டனர்.கார்த்திக், அப்பப்பா என்ன ஒரு நடிப்பு என்று சொல்லிவிட்டு செல்ல...ஏய் போடா என்று இருவரும் கூறினர்.

இருவரும் பின்னால் நடக்க கார்த்திக் முன்னால் நடந்தான்...அப்பொழுதுதுரத்தில்வந்த ஜீவாவும் கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்து கொண்டு கடந்து சென்றனர்.ஜீவா, பின்னால் வந்த இருவரையும் யாரு இவங்க என்று பார்த்து விட்டுசென்றான்.அதை பார்த்த நித்தி அப்பப்பா என்ன ஒரு பார்வை இரண்டு பேரும் பார்க்குற பார்வையிலே நம்ம சமையல் பண்ணிறலாம் போல ஹனி அப்படி ஒரு தீ பார்வை என்று கூற இல்ல நித்தி துரத்துல இருந்து வரும் போது இரண்டு பேரும் பாசமாதான் பார்த்துகிட்டாங்க என்று ஹனி கூறினாள்.அப்ப எதோ இருக்குனு சொல்லுற என நித்தி கூற ஆமா சம்திங் ராங் என்று ஹனி சொன்னால். நம்ம இரண்டு பேரும் இன்னிமே அதை கண்டுப்பிடிக்கிறோம் சாரியா என்றுநித்தி சொல்ல.ஹனி, ஏய் லூசு வந்த வேளையை பார்க்குறதவிட்டு சி.ஐ.டி. பாக்குறேன் சொல்லுறா என கூற,,,மச்சி பாட்டைம்ஜாப் டா அது என்றவளை பார்த்து கொண்ணுடுவேன் வாயமூடிக்கிட்டுவா என்று ஹனி கூற இருவரும் காரை நோக்கி சென்றனர்............
 
Last edited:

vigneshwari ganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்புக்களே,

இதோ அடுத்த 7வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...லேட்டா வந்ததற்க்காக பனிஸ்மென்ட்டா ..நிறையா லைக் ,கமென்ட்ஸ் போடவும்........;);)
girlfriends-338449__340.jpg
அத்தியாயம்-7

ஹாய்,’வாடா ஜீவா’ என்று ராம் ஜீவாவை அழைத்தான்.ஜீவா,’ஹாய் டா மாப்பிளை’ என் சலிப்புடன் கூற”’என்ன ஆச்சி மச்சி தீடிரென்று மும்பை வந்துருக்க எதாவது பிரச்சனையாட “ என ராம் கூற,”ஆமாட பிரச்சனை தான்,ஆனால் அதை எப்படி சரிப்பண்ணுறதுனு தெரியலாட அதுக்கு தான் உன்னோட உதவி வேண்டும்டா” என்றும், நீ உதவி பண்ணித்தான் ஆகனும் என்று பார்த்தான் ஜீவா.

ராம் ஜீவாவின் பள்ளி தோழன்.ராம் இப்ப பெரிய வக்கீலாக மும்பையில் வசித்துவருகிறான்.ராம்,ஜீவா,கார்த்திக் முன்று பேரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.மண்ணிக்கவும் சுத்தியவர்கள்.

ராம்.” என்னடா சொல்லு நான் இப்ப என்ன பண்ணணும்” என கேக்க. ஜீவா,”நான் யு.எஸ்.ஏ ல இருக்கும் போது எனக்கு ஒரு போன் கால் வந்துச்சு”என கூறி பழைய நினைவுக்களுக்குள் சென்றான்.

போன் ரிங் அடித்துக்கொண்டே இருக்க,” யாரு இது எவ்வளவு டைம் கால் பன்னுறாங்க அது இந்தியால இருந்து போன் வருது” என்ற யோசனையோடு போனை எடுத்து பேச அரம்பிக்க,”ஹலோ ஜீவா ஸ்ப்பிக்கிங் “,தம்பி நான் யாரு பேசுறேன் முக்கியம் இல்லை. இப்ப நான் சொல்லுவதை மட்டும் நல்ல கேளுங்க..உங்க அப்பா ஆக்ஸிடண்டுக்கு காரணம் உங்க மாமா இல்ல அது மட்டும் இல்ல தப்பி உங்க அம்மா மரணம் இயற்கையானது இல்ல...இப்பதைக்கு என்னால இத மட்டும் தான் சொல்ல முடியும்ஆனால் நான் சொல்லுறது உண்மை தம்பி. உங்க அப்பா,அம்மா சாவுக்கு காரணம்னு கண்டுபிடிங்க தம்பி .சரி தம்பி யாரோ வராங்க நான் வைக்கிறேன் தம்பி. என்று கூற போன் கட் ஆனது.

அந்த நொடி,”யாரோ தன்னை கத்தியால் குத்தியதை போல் உணர்தவான்”, “எவ்வளவுயோசிச்சும்யோசிச்சும் யார் போன் பண்ணது என்று தெரியலயே...அவன் சொன்னாது உண்மையா இருக்குமோ இல்லை பொய் யாதான் இருக்கும்.அவன் ஏன் எப்படி சொல்லனும்,இவ்வளவு நாள் இல்லாம இப்ப ஏன் சொன்னான்..ஐய்யோ மண்டை வெடிச்சுரும் போல அம்மா. உண்மைய சொல்லுங்க அம்மா.உங்கள யாராவது கொண்ணுட்டாங்களா அம்மா”.என கதறியவன். சிறிது நேரம் கழித்து,”இங்கயே இருந்தா ஓண்ணும் பண்ண முடியாதுஉடனே நம்ம மும்பை போகனும்” என்ற முடிவை எடுத்து கிளம்பினான் ஜீவா.

ராம்,”என்ன மச்சி சொல்லுறா உங்க அப்பா சாவுக்கு காரணம் உங்க மாமா இல்லையா ??.அப்ப உங்க அப்பா அம்மா ரெண்டு பேருயும்கொண்ணுருக்கவங்க ஒரே ஆள்ளாதான் இருப்பாங்கனு நான் நீனைக்கிறேன்.ஜீவா,”ஆமாட எனக்கு அப்படிதான் தோனுது ஆனால் எங்க அப்பா,அம்மா க்கு எதிரினு யாரும் இல்லைடா ,அவங்க யாரையும்அப்படி பார்த்ததும் இல்ல”என்றுகூறினான்.

ராம்,”மச்சி நம்ம ஏன் கார்த்திக் கிட்ட உதவி கேக்க கூடாது” என்றவனை பார்த்து ஜீவா முறைக்க,”இல்லடா கார்த்திக்க நீ நம்ம பிரெண்டா நினைச்சு பேச வேண்டாம்,ஒரு போலிஸ்ஸா நினைச்சு பேசு.உனக்கே அவன பத்தி தெரியும்.நான் சொல்லவேண்டியது இல்ல அதுனாலதான் சொல்லுறேன்டா.யோசிச்சு சொல்லு” என்று கூறி விட்டு சென்றான்.

நித்தி,”நான் ரூம்க்கு போறேன் ஹனி எனக்கு டையாட இருக்கு” என கூறி விட்டு மாடி ஏறி சென்றாள். ரூம்க்கு சென்று கட்டிலில் படுத்துகண்ணை மூட கண்ணில் அவன் முகம் வந்து தோன்ற,”என்னடா இது இவன் முகம் ஏன் நமக்கு நியாபகம் வருது அவன எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே”.” ஏய் நித்தி உனக்கே ஒவரா தெரியல அவன நீ தூரத்துலதான பார்த்த அதுக்குள்ள லவ்வா கொண்ணுடுவேன் பார்த்துகோ” என அவள் மனசாட்சி கேக்க,” ஏய் விட்ட நீ கல்யாணமே பண்ணி வச்சுருவ போல நான் எங்கயோ பார்த்த மாதிரி தான் இருக்குனு சொன்னேன் அதுக்குள்ள லவ்வுகிவ்வுனு பேசுற போ போய் உன் வேளைய பாரு” என கூறிவிட்டு கண் மூடி தூங்க ஆரம்பித்தாள்.

வசந்தா,” என்னடிமா ஷாப்பிங் நல்ல பண்ணிங்களா,உங்களுக்கு பிடிச்சத எல்லாம் எடுத்தாச்சா”என கூற..ஹனி.,”அட ஏன் பாட்டிமா உன் பேரன் எடுக்கவே விடல எல்லாத்தையும் உன் அருமை பேரனே எடுத்துட்டாரு” வசந்தா,”என்னது கார்த்திக் எடுத்தானா நம்பவே முடியலடிம்மா...”இந்தா பாட்டிமா உன் பேரன் எடுத்தத பாருங்க என ஹனி கூற,வசந்தா,” இங்க பாரு மதுலாம்மா இந்த போலிஸ்காரன் கூட எவ்வளவு நல்ல எடுத்துருக்கான்.”என்ன பாட்டிம்மா உன் பேரனுக்குசப்போட்டா” என்று கிண்டலாக ஹனி கேக்க, அந்த சமயம் கார்த்திக் உள்ள வந்த கார்த்திக்,” என் பாட்டி எனக்கு சப்போட் உன்ன மாதிரி அடாங்கபிடாரிக்க சப்போட் பண்ணுவாங்க”

ஹனி,”யாரு நான்னா உனக்கு தான் திமிர் போலிஸ்னு திமிர்

அதான் இப்படில பண்ணுறடா நீ”,”ஏய் யார பார்த்து டானு சொல்லுற பல்ல ஓடச்சுறுவேண் பார்த்துக்கோ”என கார்த்திக் சீண்ட,”ஆமா அப்படித்தான் பேசுவேன். இந்த அடிக்கிற வேளைய எல்லாம் உங்க ஸ்டேசன் ல வச்சுக்கோங்க.நீ அடிச்சா நானும் திருப்பி அடிப்பேன்.”, எங்க அடிச்சுருவியா அடி பார்க்கலாம் “ என கூறி ஹனியின் பக்கத்தில் வர ,பளார் என்று கார்த்திக் கண்ணத்தில் ஒன்று வைக்க ,இதை பார்த்த வசந்தா,” ஹனி என்ன இது”,பாட்டி விடுங்க நான் தான அடிக்க சொன்னேன்” என கார்த்திக் கூறி விட்டு “என்ன மேலே வச்சுட்டேல உனக்கு இருக்கு” என கூற,”ஆண் என்ற ஆணவத்தில இருக்கதா” என அவனுக்கு மட்டும் கேக்கும் மாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்..

கார்த்திக்,” திமிர் திமிர் அடங்காபிடாரி”” என மனதில் அவளை வறுத்தெடுத்தான். வசந்தா.,”என்னமா எப்படி எலியும் பூனையுமா சண்டை போடுறாங்க”,பாட்டிம்மா விடுங்க அதலாம் சரியா போய்டும் “ என மதுலாகூறி விட்டு சென்றுவிட்டாள்..

அனைவரும் சாப்பிட அமர, கார்த்திக் அப்பொழுது தான் கீழே இறங்கி வர ஹனியின் பக்கத்தில் தான் ஒரு இடம் காலியாக இருக்க அமராமல் நிற்க,சூரியா,”என்ன கார்த்திக் நிக்கிற வா வந்து உக்காரு “இல்ல அண்ணா நீங்க சாப்புடுங்க நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன் “ ஏன்டா எதாவது பிரச்சனையா “, இல்ல அண்ணா”,என கார்த்திக் கூற,” அப்புறம் என்ன வந்து உக்காரு” என சூரியா கூறினான்.

சூரியா,”இவ பக்கத்தில் உக்கர்ந்து சாப்பிடனும் எல்லாம் என் நேரம்” என நினைத்துக்கொண்டு அமர,” டேய் அந்த புள்ள என்னாடா பண்ணுச்சி நீ அடிக்க சொன்ன அந்த புள்ள அடிச்சுசு அந்த புள்ள மேல தப்பு இல்ல” என கூறிய மனசாட்சியை பார்த்து கார்த்திக் முறைக்க,”நான் எஸ்கேப் “ என்று சொல்லி விட்டு அவன் மனசாட்சி சென்று விட்டது.

ஹனி,”என் பக்கத்தில உக்கார உனக்கு அவ்வளவு சீன்னா இருடா இரு உனக்கு இருக்கு இப்ப” ஏய் ஹனி நீ அவன அடிச்சதுக்கு தான் அவன் இங்க உக்கார எவ்வளவு பயபடுறான் போல” என ஹனி காதில் நித்தி கூற,”இவன் பயப்புடுறானாக்கும்.கிழிச்சான். அவனுக்கு இதலாம் பத்தாது நம்மள அன்னைக்கு எவ்வளவு பேசுனான்.நானா அவன அடிக்கல அவன் தான் அடிக்க சொன்னான்.”,இல்ல செல்லம் அவன் போலிஸ் அதான் யோசிக்கிறேன்.” என்றாள் நித்தி.

கார்த்திக்கு புறைஏற ,மதுலா,”ஐய்யோ கார்த்திக் மெதுவா சாப்பிடு என்ன அவசரம் தண்ணியை குடி” தண்ணியை ஊற்றி கொடுத்தாள்..நித்தி,” கார்த்திக் சார் உங்க தட்டுல இருந்து யாரும் சாப்பாட எடுத்து சாப்பிடமாட்டோம் அதுனால மெதுவா சாப்பிடுங்க”, “உன் பிரெண்டு எடுத்துசாப்பிட்டா நான் என்னா பண்ணுவேன் அதான் சீக்கிரம் சாப்புடுறேன் .” கௌதம், “ஐய்யோ சித்தா ஹனியா பார்த்தா உன் கிட்ட பிடிங்கி சாப்புடுற மாதிரி தெரியல, நீ தான் ஹனிகிட்ட இருந்து பிடிங்கி சாப்புடுற மாதிரி இருக்கு” என கூற கார்த்திக்,”ஏய் “என அரட்ட நான் எதுவும் சொல்லல என்பது போல் சாப்பிட ஆரம்பித்தான்.

கார்த்திக்,”இதுங்க கூட சேர்ந்து இவணும் வாய் பேச ஆரம்பிச்சுட்டான் இதுங்களளே அடக்க முடியால” என மனதில் பேசுவதாக நினைத்து வெளியில் பேச அதைக்கேட்ட,” நாங்க என்ன உனக்கு ஆடா இல்ல மாட அதுங்கனு சொல்லுற”என கூறிஹனி சீண்ட,”ஏய் போடி உன்னால என்ன பண்ண முடியுமே அத பண்ணு என்பது போல் பார்த்து விட்டு சாப்பிட்டுமுடித்தான்.

சாப்பிட்டு முடித்து விட்டு அனைவரும் ரூம்க்கு செல்ல,மதுலா”சூரியா ஏன் நீங்க கார்த்திக் கிட்ட இன்னும் உண்மைய சொல்லம இருக்கிங்க, அவன் இன்னும் சின்ன பையன் இல்லைங்க” எனக்கு புரியுதுமா அவன் கிட்ட சொன்னா அவன் சந்தோஷம் படுவான் தான் ஆனால் அவனுக்கு அவங்கள பார்த்த உடனே எதுவும் நியாபகம் இல்ல ,அதுமட்டுமில்லாம அவன் இந்த வயசில நம்ம ஊருல உள்ள பிரச்ச்னை எல்லாதையும் பார்துக்கிறான் இதுல நம்மளும் அவனுக்கு எந்த தொந்தரவும் குடுக்க வேண்டாம்.சொல்ல வேண்டிய நேரம் வரும் போது சொல்லலாம்”.அதுக்குள்ள அது யாரு என்னானு கண்டுபிடிக்கிறேன்” என கூறிவிட்டு தூங்க சென்றான்.முதலிலே சொல்லி இருந்துருக்கலாம் என தாம் நினைக்க போவது தெரியாமல்.

நித்தி,”ஏய் ஹனி இந்த கார்த்திக் நல்லவனா இல்ல கெட்டவனா”.ஏன் உனக்கு இந்த சந்தேகம் நல்லவன் தான்”என கூறிய ஹனியை பார்த்து .”ஆமா ஆனால் நம்மல பார்த்தா ஏன் டென்சன் ஆகுறான் அவன நம்ம என்ன பண்ணோம்” என நித்தி கூறினாள்.ஹனி,”நம்ம படிச்சது கேட்டது வச்சி பார்த்த அவன் நல்லவன் தான்,ஆனாலும் அவனுக்கு திமிர் “ என்ற சொன்னாள்.

ஹனி,”ஆமா உனக்கு ஏன் இந்த சந்தேகம் வந்துச்சி”,இல்லடா பேபி அவன பார்த்த ஒரு அண்ணன் பீல் வருது ஆனா அவன் நம்மல எதோ எதிரிய பார்க்குற மாதிரி பார்க்கிறான்” என நித்தி கூற,”அப்படியா மேடம், அவன நான் அடிச்சதுக்கு அவன் உன்னையும் என்னையும் வீட்ட விட்டு வெளியில தள்ளிருக்கனும் அப்படி அவன் பண்ணல அப்ப அவனுக்கு நம்ம மேல கோவம் இல்லனு தான் அர்த்தம் புரியுதா ,நீ பீல் பண்ணாத இனிமே நான் அவன் கூட சண்டைபோட மாட்டேன் போதுமா “என ஹனி கூற,நித்தி சிரித்தாள்.

ஹனி,”ஏன் சிரிக்கிற” என கேக்க.,” இல்ல நீ சும்மாஇருந்தாலும் அவன் சும்மா இருக்கமாட்டான்” என கூற,”ஆமா அதுவும்உண்மைதான்..நித்தி என கூறினாள் ஹனி.

ஜீவா, “நாளை கார்த்திக் சந்தித்து என்ன பேசுவது அவன் கூட பேசி பல வருடம் ஆச்சி என்ன பண்ணுறது என்ற யோசனையோடு ராஜலிங்கத்தை பார்க்க சென்றவனை கிரண்,”ஜீவா எங்க போற” என கேக்க,”இல்ல சித்தப்பா,தாத்தா பார்க்க போறேன்”,”ஜீவா தாத்தா எப்ப தூங்குற டைம் அவர தொந்தரவு பண்ணாதப்பா வா வந்து இங்க உக்காரு உன் கூட கொஞ்சம் பேசனும்"," சொல்லுங்க சித்தப்பா" என ஜீவா கூற, "இன்னைக்கு ஆபிஸ்ல "என ஆரம்பித்த கிரணை பார்த்து, "ஆபிஸ் பத்தினா எதுவும் நீங்க சொல்லதிங்க நான் எல்லாதையும் பார்த்துகிறேன் சித்தப்பா,அப்பா உருவக்குன ஆபிஸ்ஸ நான் நல்லபடியா கொண்டுவருவேன்" என சொல்லி விட்டு சென்று விட்டான்..கிரண்," போடா போ நீ எப்படி கீழிக்க போறேன்னு பார்க்கத்தான போறேன்".

காலையில் அழகாக சூரியன் உதிக்க....அனைவரும் தங்கள் வாழ்க்கை அடியோடு மாற போவது தெரியாமல் அவரவர் வேளையை பார்த்து கிளம்பினார்கள்..

பழனி,”சார் உங்கள பார்க்க ராம் சாரும் ஜீவாசாரும் வந்துருக்காங்க உள்ள வர சொல்லவா சார்.”,”உள்ள வர சொல்லுங்க பழனி”,என கார்த்திக் கூற ,”ஒகே சார்”,என பழனி கூறிவிட்டு சென்றான்.

ராம்,”மே கம் இன் சார்”.,”எஸ் கம் இன்”,என கார்த்திக் கூற இருவரும் உள்ளே வந்து அமர்ந்தனர்.ஜீவா,என்ன பேசுவதுனுதெரியாமல் அமர்ந்திருக்க,”நாங்கஉங்க கிட்ட ஒரு முக்கியமான் விசியம் பேசனும் சார் என ராம் கூறினான்”.,”சொல்லுங்க ஜீவா”நீங்கதான் எதோ பேசனும் சொன்னிங்க ஆனா ராம் தான் பேசுறாரு சொல்லுங்க என்ன விஷியம்னு” என கார்த்திக் கூறினான்.

ஜீவா,கார்த்திக்யிடம் தனக்கு வந்த போன் கால்ஸ் பற்றியும்தனது ஆபிஸ்ல இருந்து தனக்கு வந்த பொய்யான கணக்குக்ளையும் கூறினான்.கார்த்திக்,”உங்க அப்பா அம்மா விஷியத்தில உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்க”.,”இல்ல சார்”,கார்த்திக்.” உங்க அப்பா இறந்து 10 வருசம் ஆயிருக்கும், உங்க அம்மா இறந்து 3 வருசம் ஆகுது,ஆனால் நீங்க உங்க அப்பா இறந்தப்ப ,கிருஷ்ணன் சார் மேல கேஸ் போடுறிக்கிங்க ஐ ஆம் கரக்ட்” என கேக்க,”ஆமா சார்” என்று ஜீவா கூறினான்.

கார்த்திக்,”அப்பறம் அவங்களும் ஒரு கார் ஆஸிடண்ட்ல இறந்துடாங்க அப்படிதான ஜீவா சார்” என கேக்க,”ஆமா சார்” என ஜீவா பதில் அளித்தான்..”அப்படிபார்த்தாஒருத்தர் தான் 5 கொலைய பண்ணிருக்காங்க அப்படினு கூட சந்தேகம் படலம் நம்ம சரி ஒரு கம்பெளைண்ட் எழுதி கொடுத்துடு போங்க நான் பார்த்து சொல்லுறேன்.” ,”இல்ல இது யாருக்கும் தெரிய வேண்டாம் நீ சாரி நீங்க கொஞ்சம் சிக்கிரட் பண்ண முடியுமா” என ஜீவா கேக்க, கார்த்திக், ஜீவாவை பார்த்து சிரித்து விட்டு “இது நம்ம சாரி எங்க குடும்ப விஷியம் நான் பார்த்துக்க மாட்டேனா” என கேக்க, “ ஒகே சார் நங்க கிளம்புறோம்” என சொல்லிவிட்டுசென்றவனை பார்த்து,”ஒரு நிமிடம் ஜீவா” என கார்த்திக் கூற என்ன என்பது போல் ஜீவா பார்க்க,”அந்த நம்பர் எனக்கு அனுப்பிடு மற்றத நான் பார்த்துக்கிறேன்” என கார்த்திக் கூற ,”சரி” என கூறிவிட்டு ஜீவா சென்றான்.

ராம் ஜீவாவை பார்த்து, “இருந்தாலும் நீங்க இரண்டு பேரும் பண்ணுறது தாங் க முடியலடா சாமி” என கூற “எல்லாம் தெரிஞ்ச நீ எப்படில கேக்கலாமா ராம்” என ஜீவா கேக்க,” “இதுல யாருமேலயும் தப்பு இல்லனு வரனும் மறுபடியும் நீயும் கார்த்திக் நல்லா பேசனும் இது நடந்தா அந்த திருப்பதிக்கு போய் உனக்கு,கார்த்திக்கும் மொட்டை போடுறதா வேண்டிக்கிறேன்.”என ராம் கூற,”வாடாவா உனக்குமொட்டைய போடுறோம் என இலகுவாக பேசினான். ஜீவா.

இதை அனைத்தையும் ஜன்னல் வழியாக பார்த்த கார்த்திக்,” அது சீக்கிரமே நடக்கும் ஜீவா,நம்மல பிரிச்சவனையும் நம்ம அம்மாவையும்,அப்பாவையும் நம்ம கிட்ட இருந்து பிரிச்சவனையும் கண்டு பிடிக்கிறேன்” என கூறினான்.ஜீவா ராமிடம்,”கார்த்திகிட்ட பேசுனது மனசுக்கு சந்தோஷமா இருக்குடா.எனக்கு நம்பிக்கை இருக்கு எல்லா பிரச்சனையும் சரியா போய்டும் என்று” கூற,” கண்டிப்பா சாரியா போகும் ஆனா அதுக்கு நீயும் கார்த்திக்கும் ஒன்னா இருக்கனும்” என்ற ராம் கூற அவனை பார்த்து சிரித்து விட்டுசென்றான்.

சங்கர்,”சார் பாப்பாங்கள பாலோ பண்ண சொன்னிங்கள”.ஆமா ஏன் அந்த வேளையை கூட உங்களால செய்யமுடியலயா சங்கர்” என கம்பியூட்டரை பார்த்துக்கொண்டே சூரியா கேக்க,” ஐய்யோ சார் நான் அப்படி சொல்ல வரல அவங்கள ஒரு இரண்டு பேரு ப்லோ பண்ணுறாங்க ஆனால் அவங்க யாருனு கண்டுபிடிக்க முடியல சார்” என சங்கர் கூற,”என்னது கண்டுபிடிக்க முடியலையா இத சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்லை முதல போய் யாருனு கண்டுபிடிங்க” என்று கர்ஜித்தன் சூரியா.

ஹனி, “நித்தி இன்னைக்கு தேவி ,ரம்யா,சுதா எல்லாரும் வராங்க நம்ம போய் பிக்கப் பண்ணலாம்” சரி ஹனி அப்படியே எதாவது ஒரு ஹேட்டல போய் சாப்பிட்டு வீட்டுக்குபோலாம்”என்று நித்தி கூறினாள்.

சூரியா, “என்ன மனோகர் சார் ஆபிஸ்ஸ விட்டு எத்தனை பேர் வெளில போய்ருக்காங்க போனவங்கள தவிர மத்த எல்லாருக்கும் மீட்டிங் அரேஞ் பண்ணுங்க”,” சார் யாரும் வெளில போகல சார்” என்ற மனோகரை பார்த்து,”ஏன் கவலை படுறிங்க எதோ நான் வெளில அனுப்புறேன்” என்று கூறி விட்டுதனது வேளையில் மூழ்கினான்.

மனோகர்,”என்னதுஇது இதை முதல அண்ணாச்சிக்கு சொல்லனும் என நினைத்து விட்டு வெளியேறினான்..வெளியில் வந்த மனோகர் போனை எடுத்து .”அண்ணாச்சி ஜீவா எல்லாரையும் வெளில ஏற்ற போவதசொல்லுறான் அண்ணாச்சி”அந்த பக்கம் என்ன சொன்னாங்களோ,”சரி அண்ணாச்சி “ என்று கூறி விட்டு போனை வைத்தான்.

சூரியா மீட்டிங்கில் ஒவ்வொரு பெயராக வாசிச்சு வேளையில் இருந்து தூக்கினான்.கடைசியாக மனோகர் பெயரையும்வாசித்து இன்னையில் இருந்து நீங்க யாரும் என்னோட கம்பெனிக்கு தேவை இல்லை என்று கூறி விட்டு மீட்டிங் கேன்சல் பண்ணினான்.

ஹனியும் நித்தியும் இரயில் நிலையத்திற்க்கு சென்றனர்.சூரியா,ஹனிக்கு நித்திக்கு போன் பண்ண இருவரும் போனை எடுக்கவில்லை.சூரியா,” இரண்டு பேரும் ஏன் போனை எடுக்கல என்ன ஆச்சினு தெரியலயே” என்று நினைக்கும் போது அங்கு அவர்களை சுத்தி வளைத்திருந்தனர்.

நித்தி,”ஹலோ கொஞ்சம் வழிய விடுங்க வழியில் நிக்கிறிங்க” என கேக்க,அதில் ஒருத்தன்,”டேய் பாப்பாக்கு வழி விடனுமாடா,பாப்பா எங்க போக உங்களுக்குவழி விடனும் சொல்லுங்க சொர்க்கதுக்கா இல்ல நரகத்துக்கா??” என நக்கலாக கேக்க, ஹனி நித்தி கையை பிடித்துக்கொண்டு,”உங்களுக்கு நாங்க வழிய காட்டுறோம் நரகத்துக்கு” என்ற அதோ நக்கலுடன் சொல்ல,”ஐய்யோ மேடம் நாங்க உங்கள சொல்ல மேடம் உங்கள போய் அப்படி சொல்லுவோமா” என்று பணிவுடன் ஹனியிடம் சொன்னான்.

ஹனி அவர்களை பார்த்து முறைக்க,” மேடம் நீங்க கவலை படாதிங்க நீங்க போய் கார் உக்காருங்க நாங்க இவளை போட்டு தள்ளிட்டு வாரோம்” என அதில் ஒருத்தன் கூற, அப்பொழுதுதான் பிரச்சனையின் வீரியம் இரண்டு பேருக்கும் புரியா,தனது பையில் எப்போதும் வைத்திற்க்கும் மிளகா பொடியை எடுத்தாள் நித்தி.மிளகாபொடியை அவங்க மேல தூக்கி போட்டுவிட்டு இரண்டு பேரும் ஓட தொடங்கினர்.

தலைவன்,”டேய் புடிங்கடா அவங்கள நமக்கே தண்ணிக்காட்டிடு போறாங்க “,(தம்பி அது தண்ணியில்லை மிளகாப்பொடி) வேகமாக இரண்டுபேரும் ஓட சூரியாவின் போனை எடுக்கவில்லை.

சூரியா கார்த்திக்கு போனைப் போட்டு,”கார்த்திக் நித்தியும் ஹனியும் போனை எடுக்கல கொஞ்சம் என்னனு பாருப்ப”என கூற,”சார் கார்த்திக் சார் ஒரு மீட்டிங்ல இருக்காரு 30 நிமிடம் ஆகும்” என பழனி கார்த்திக் போனில் இருந்து பேசினான். போனை வைத்து விட்டு டேபிள் குத்தினான் சூரியா.சங்கருக்கு போன் போடு,”என்ன வேளை பார்க்கிறிங்க,நித்தியும் ஹனியும் எங்க இருக்காங்கனு” கேக்க.” சார் இது அவங்களுக்கு காலேஜ் டைம் சார் அவங்களுக்கு காலேஜ் முடிய10 நிமிடம் இருக்கு” என கூறினான்.பாவம் அவனுக்கு தெரியல அவங்க இரண்டு பேரும் வெளியில் போனது.

வேகமாக ஓடிய இரண்டு பேரும் ஒரு காரில் மோத காரில் இருந்தவன், “ஏய் சாவ என் கார்தான் கிடச்சுசா”என கேட்டவன் இருவரையும் பார்த்து ஆதிர்ந்து போனான்.தூரத்தில் தூரத்திக்கொண்டு வந்தவர்கள் காரை பார்த்து நின்றுவிட்டனர்.அந்த கூட்டத்தின் தலைவன்,போனை எடுத்து யாரிடமோ கேக்க,அந்த பக்கத்தில் இருந்தவன்,”அவனையும் சேர்த்து போட்டு தள்ளு ஒரே கல்லில் 3 மாங்காய் போட்டுறு என கூறிவிட்டு போனை வைத்தான்.

இருவரும் காலேஜில் இருந்து வெளியில் வராததால்,காலேஜ முழுவது தேட ஆரம்பித்தான் சங்கர்.அவர்கள் இருவரும் காலேஜில் இல்லை என்பதை அப்பொழுதுதான் கண்டுபிடித்தான்.(டேய் நீ எப்பதான் கண்டுபிடிக்கிற ஆனால் அவங்க அப்பவே எஸ்கேப் ஆகிட்டாங்க போ போய் வேர வேளையை பாரு).சூரியாக்கு கால் பண்ணி சொல்ல,சூரியா,”சரி நீ ஆபிஸ்க்கு வா பார்த்துக்கலாம்” என்று போனை வைத்தவன்.சூரியா,”கோவம் பட்டு யாரையும் நம்ம இழந்துறக்கூடாது”என நிதானமாக யோசித்தான்.

போன் ரிங் அடிக்க அதில் கார்த்திக் நம்பரை பார்த்து,போனை எடுத்து பேசினான்.,”கார்த்திக் நம்ம நித்தியையும் ஹனியையும் காணும்” என்று கூற,கார்த்திக்,நான் என்னானு பார்க்கிறேன் அண்ணா” என்றுகூறி விட்டு போனை வைத்தான்.கார்த்திக்,”இவங்க இரண்டு பேருக்கு வேற வேளை இல்ல எங்கயாவது சொல்லாமல் போக வேண்டியது.வரவர இதுங்க அலப்பறை தாங்க முடியல” என இரண்டு பேரையும் வறுத்து எடுத்தான்”........








 

vigneshwari ganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்புக்களே,



இதோ அடுத்த 8வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

(பி.கு:அடுத்த அத்தியாயம் நவம்பர் 24 தேதி தருகிறேன்...எனக்கு செம்மஸ்டர் ஆதனால என்னால் தரமுடியாது பிரெண்ஸ் ...நவம்பர்24 க்கு மேல் வாரத்திற்க்கு 2 அத்தியாயம் தருகிறேன்.......)எபியை படித்துவிட்டு என்னை யாரும் அடிக்க வரகூடாது நான் சின்னபிள்ளை.........
View attachment 37499669764_6d500e0a11_b.jpg

டேய், யாருடா நீ வண்டியை எப்படி வந்து நிப்பாடுறா அறிவில்லை ஒடி வாறோம்ல விலகி போனும்னு தெரியதா –நித்தி

ஏய்,நீ வந்து மோதிட்டு என்னை சொல்லுறியா வாயை ஒடச்சுருவேன், வழிய விட்டு முதல –ஜீவா

சார் சார் பீலிஸ் சார் அவ பேசுனதுக்கு நான் மண்ணிப்பு கேக்குறேன்,ஏய் அமைதியா இரு நித்தி,எங்கள காப்பாதுங்க சார் –ஹனி

சில நொடிகள் யோசித்தவன் ,இருவரையும் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என யோசித்தவன் வண்டில ஏறுங்க பார்த்துக்கலாம் என ஜீவா கூற அடுத்த நொடி வண்டியில் இருந்தனர் இருவரும்.

சார் சீக்கிரம் போங்க,அவங்க நம்ம பின்னாடி தான் வாராங்க-ஹனி

ஆமா சார் ஆமா –நித்தி

இந்தாமா இது ஒன்னும் ராக்கெட் இல்ல பறக்குறதுக்கு –ஜீவா

முன் கண்ணாடி வழியாக பின்னால் யாராவது வாராங்கள என பார்த்தான்.தங்களை 2 கார் துரத்திக்கொண்டு வருவதை பார்த்த்வன் வண்டியின் வேவகத்தை இன்னும் அதிகரிக்க வண்டி நிஜமாவே ராக்கெட் வேகத்தில் பறந்தது...யார் மேலயும் மோதிவிடக் கூடாது என ஜீவா நினைத்து வண்டியை சிட்டிக்கு வெளியில் விட்டான்.

ஏய் ஏன்டா வண்டியை எப்படி ஒட்டுற,சிட்டியை விட்டு வெளில வேற ஒட்டுற நீ எங்கள கடத்துன கும்பலோட தலைவனா என்ன ?? ஒழுங்க வண்டியை சிட்டிக்குள்ள விடுடா-நித்தி

ஏய் குள்ள மிளகாய் வாய முடுடி முதல. வேகம ஒட்டுனா ஏன்? வேகமா ஒடுறனு கேக்குற மெதுவா ஓட்டுனா ஏன் மெதுவா ஒட்டுறனு கேக்குற வண்டியை நிருத்துற வரைக்கும் அமைதியா வா இல்ல வண்டியை நிப்பாடிட்டு நான் பாட்டுக்கு போய்ருவேன் –ஜீவா

ஐய்யோ சார் அப்படில எதும் பண்ணிடாதிங்க,அவள் அமைதியா வருவா நீங்க சீக்கிரம் வண்டியை வேகம ஓட்டுங்க சார் – ஹனி

நீ ஏன்டி அவன் கால விழுக்குற மாதிரி பேசுற அவன் நம்மல கடத்திட்டு போறான் உனக்கு தெரியல –நித்தி

ஏய் குள்ள மிளக்காய் சிட்டிக்குள்ள போனா ராபிக்கா இருக்கும் அவங்க நம்மள பிடிச்சுருவாங்க,ஆளு தான் வளரலனு பார்த்தா முளையும் வளரல உனக்கு –ஜீவா

யார பார்த்து முளை இல்லை சொல்லுற...உன்க்கு இல்லை உன் லவர்க்கு இல்ல...உன் பிரெண்டுக்கு இல்ல....-நித்தி

ஐய்யோ நித்தி அமைதியா இரு யாருக்கூட சண்டை போடனும்னு இல்லையா,பீலிஸ் எனக்காக...-ஹனி

அதன் பின் அமைதியாக வந்தாள் நித்தி..ஜீவா,வண்டியை வேகமாக ஒட்ட பின்னால் வந்த வண்டியும் வேகமாக துரத்தா ஒரு கட்டத்தில் கட்டத்தில் ஜீவாவின் வண்டி அவனது கட்டுப்பாட்டை இழந்து சென்றது.

டேய் மெதுவாடா வண்டி எங்கயோ போது நிறுத்துடா –நித்தி

வண்டி என் கண்ரோலே இல்ல செல்லம், அதுவா ஓடுது..-ஜீவா

போச்சு போச்சு நான் என் குடும்பதை விட்டு போக போறேன் ஐய்யோ கடவுளே என்னை காப்பாத்துங்க –நித்தி

சார் எதாவது பண்ணுங்க –ஹனி

கார் பிரேக்கை ஜீவா மிதிக்க,வண்டி நிக்காமல் சென்றது,பின் வந்த வாகனங்கள் இன்னும் அதிகமான வேகத்துடன் வருவதை பார்த்த ஜீவா,என்ன ஆனாலும் பாரவாயில்லை என நினைத்து காரை முழு வேகத்தை காட்டினான்.

மெதுவா போங்க யாரு மேலயாவது மோதிட போறிங்க –ஹனி சொல்லி முடிக்கவில்லை கார் ரேட்டில்இருந்து விலகி மண்சரிவில் சரிகி ஒரு மரத்தில் மீது மோதி நின்றது

அம்மா,அம்மா.....- நித்தி வலியில் கத்த அது தெரியாமல் ஜீவா அவளை முறைத்து பார்த்தான்.

உனக்கு அமைதினா என்னானு தெரியாதா..வாயை முடுடி முதல –ஜீவா

ஜீவா –ஹனி எதோ கூற வருமுன் நித்தி ஹனியின் கையை இறுக்கி பிடித்தாள்.

அவளின் கண்ணிரை பார்த்தவள்,”ஐய்யோ நித்தி “-ஹனி

வலதுகையின் ஒரு விரலை வாயின் மேல் வைத்து ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் –ஜீவா கூறும்போது அடி ஆட்களின் கார் அவர்களை நெருங்கி இருந்தது.

இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா நம்மள அவங்க பிடிச்சுருவாங்க அதனால முதல இங்க இருந்து கிளம்பலாம் –ஜீவா

சரி –ஹனி

ஹனி,ஜீவா காரில் இருந்து வெளியில் வர நித்தி உள்ளே அமர்ந்திருந்தாள்.கால்லை எவ்வளவு வெளியில் எடுக்க நினைத்தாலும் நித்தியால் முடியவில்லை.

ஹலோ மேடம் கொஞ்சம் வெளில வாங்க –ஜீவா

முடிஞ்ச வரமாட்டோமா பெரிய இவனாட்டம் பேசுறான்-நித்தி முனங்கினாள்

என்ன ஆச்சி நித்திமா –ஹனி

என்னால கால வெளில எடுக்க முடியல..நீ போ...அவன் கூட நான் பார்த்துக்கிறேன்-நித்தி

அறைஞ்சேனா நான் ஒன்ன விட்டு போகனுமா உனக்கு என்ன பைத்தியமா –ஹனி கண்ணிருடன்

ஏய் ரெண்டு பேரும் உங்க பாசத்தைல அப்பறமா வச்சிகோங்க.முதல நீ வழிய விடு-ஜீவா ஹனியை பார்த்து சொல்ல அவளும் விலகி நின்றாள்.

ஜீவா நித்தியன் கால்லை பிடித்து வெளியில் எடுக்க முயற்ச்சி செய்ய.நித்தி ஐய்யோ நம்ம கால்லை யாருனு தெரியாத எவன் போய் பிடிக்கிறான்.நமக்காக எவ்வளவு பண்ணுறான். இவனுக்கு எதாவது பிரச்சனை வந்தா என்ன பண்ணுவான்.பிள்ளையார்ப்பா பிலிஸ் இவனுக்காகவது என் கால்லை எடுத்து விடு.....

“காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்


காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்


காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்


ம்ம்ம்…
கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ -மனசாட்சி


ஏய் நீ அடங்கவே மாட்டியா நேரம் கட்ட நேரத்தில வந்து பாடிகிட்டு இருக்க போ முதல –நித்தி

நாங்கள பாடிடக்கூடாதே உடனே வந்துருவா இவ, ச்சீ போடி போ உனக்கு வர போற லவ்வர் உன்ன பாடியே கொல்லுவான் பாரு...அப்ப தெரியும் என்னோட அருமை பெருமைலாம் –மனசாட்சி

நீ முதல போ..அதலாம் நாங்க பார்த்துக்கிறோம் –நித்தி

ஜீவாவும் அவள் கால்லை எடுத்து விட்டான்.நித்தி கீழே இறங்க..முவரும் அந்த அடர்ந்த காட்டில் தங்களது பயணத்தை தொடங்கினார்.

அவர் அந்த இடத்தை விட்டு சென்று ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து பார்க்க.....அந்த கொலைகார கும்பல் அந்த இடத்தை அடைந்தனர்.

டேய் கார் இங்கதான் இருக்கு அவங்க உள்ள உயிருடன் இருக்காங்களா இல்ல செத்துட்டாங்களானு பாருங்க –தலைவன்

கூட்டத்தில் ஒருத்தன் காரின் அருகில் சென்று பார்த்து விட்டு, அண்ணா உள்ளே யாரும் இல்லை.,ஒடிட்டாங்க போல அண்ணா.

சரி போய் தேட ஆரம்பிங்க –தலைவன்

அண்ணா இப்பவே இருட்டிடுச்சு இப்ப காடுக்குள்ள போய் தேடுறது கஷ்டம் அண்ணா – அடியாள்.

எப்ப என்ன பண்ண சொல்லுற,நல்லா சாப்படு ஒரு ரும் போட்டு நல்லா தண்ணிய போட்டு தூங்குவோமா..?? – தலைவன் கடுப்புடன்

ஐய்யோ அண்ணா நான் அப்படி சொல்லல எப்படியும் அவங்க எங்கதான் பக்கத்தில இருப்பாங்க நம்ம கொஞ்சம் விடியும் போது தேடுவோம் அண்ணா நம்மல இங்ககேயே இருப்போம் காரிலே –அடியாள்

சரிடா ஆனால் அவங்க இங்க இருந்து தப்பிக்க கூடாது...அப்படி தப்பிசாங்க அப்பறம் நம்ம உயிர்க்கு உத்திரவாதம் இல்ல பார்த்துக்கோங்க –தலைவன்..

சரி அண்ணா –அடியாள்

காரில் அமர்ந்து விடியும்வரை அங்கே காத்திருந்தனர்......

ஜீவா, ஹனி ,நித்தி முவரும் மெதுவாக யாரு கண்ணிலும் படாமல் மெதுவாக காட்டை விட்டு வெளியேரும் வழியை தேடிச்சென்றனர்.

கார்த்திகின் வீட்டில்,

இந்த 2 பிள்ளைக்களை கானுமே பார்வதிக்கு சுமதிக்கு என்ன பதில் சொல்லுறது..தெரியலயே - அழுகையுடன்வசந்தா பாட்டி

கண்டிப்பா நம்ம ஹனியும் நிலாவும் சீக்கிரம் வந்துருவாங்க பாட்டிமா,அழாதிங்க –மது

அப்பொழுது போனில் பேசிக்கொண்டே வீட்டில் நுழைந்தான் ......

எந்த நாய் நித்தியும் ஹனியையும் கடத்திச்சுனு நாளைக்கு காலைல எனக்கு நீ சொல்லுற –சூரியா

------

எவன் மேல சந்தேகம் வந்தாலும் அவன நம்ம இடத்துக்கு கொண்டு வா –சூரியா

------

உங்களுக்கு இன்னும் 8 மணிநேரம்தான் டைம் காலையில சூரியன் வரதுக்குள்ள எங்க வீட்டு இளவரசிங்க இரண்டு பேரும் வீட்டுக்கு வந்திருக்கனும் –சூரியா

------

போனை வைத்து விட்டு பாட்டியை பார்த்தவன்,வசந்தாவின் அழுகையை பார்க்க முடியாமல் ரூம்க்குள் சென்று விட்டான்...மதுவும் அவனை காண ரூம்க்குள் சென்று அவன் அருகில் அமர்ந்தாள்.

சூரியா- மது சூரியாவின் தோலில் கையை வைக்க,கதறி அழ ஆரம்பித்தான் சூரியா.

சூரியா என்ன இது சின்னபிள்ளை மாதிரி – மது

எங்க தங்கச்சி இன்னிமே எங்க கூடவே இருப்பானு நினைச்சேன்- சூரியா

கண்டிப்பா உங்க தங்கச்சி சீக்கிரம் கிடைச்சுருவா.நீங்க வருத்தப்படாத்திங்க –மது

அவளை யாரு கடத்தினானு ஒன்னும் தெரியல,பாப்பா சாப்பிடாங்களா,எங்க இருக்காங்கனும் தெரியல மதும்மா –சூரியா

யாருக்கும் ஏதுவும் ஆகாது சூரியா,நீங்க தைரியமா இருந்தால்தான் எங்களால தைரியமா இருக்க முடியும் –மது

நான் இன்னிமே அழமாட்டேன் –சூரியா

இதை வெளியில் இருந்து கேட்ட கார்த்திக் வந்த வேகத்திலே சென்றுவிட்டான்.

கார்த்தி,கார்த்தி –வசந்தா குப்பிடுவதை கூட காதில் வாங்காமல் சென்றான்.வெளியில் வசந்தாவின் குரலை கேட்டு மதுவும் சூரியாவும் பார்க்க.என்னப்பா கார்த்திக் என்ன ஆச்சி வந்த வேகத்திலே போறான் என வசந்தா பாட்டி கேட்க மதுவும் சூரியாவும் ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டனர்.

சூரியா நீங்க கார்த்திக்கு போன் போடுங்க- மது

சூரியா போனை போட கார்த்திக் போனை எடுக்கவே இல்லை.பல தடவை போன் போட்டும் கார்த்திக் போனை எடுக்காத்தால்,என்ன ஆச்சி ஏன் கார்த்திக் போனை எடுக்க மாட்டிக்கான்-மது.

அண்ணா ஏன் எப்படி பீல் பண்ணுறாரு.அவங்க 2 பேரும் நமக்கு அவ்வளவு நெருக்கமானவங்களா??- கார்த்திக்

ஆமாடா அவங்கள ஒருத்தி உனக்கு ரெம்பா நெருக்கமானவங்கதான் ,அதான் அவங்கள காணும்னு சூரியா அண்ணா கிட்ட இருந்து போன் வந்தது நீ நாய் மாதிரி எல்லா இடத்திலயும் தேடுன-மனசாட்சி

ஆமா அவங்க 2 பேருமே எனக்கு முக்கியம்தான்.....எனக்காக இல்லைனாலும் அண்ணணுக்காகயாவது அவங்கள நான் கண்டு பிடிச்சுட்டுத்தான் வீட்டுக்கு போவேன்.சூரியா அண்ணாவையும் பார்ப்பேன் –கார்த்திக்

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு


என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்




காட்டில்....

முவரும் அந்த கொலைகார கும்பலின் கண்ணில் படாமல் தப்பித்து காட்டில் நடந்து வந்துக்கொண்டிருந்தனர்

ஐய்யோ எதுக்கு மேல என்னால ஒரு அடிக்கூட வைக்க முடியாது எனக்கு கால்ல வலிக்கு –நித்தி

நித்தி கொஞ்ச தூரம்தான் பிலிஸ்டா –ஹனி

ஆமா உன் முழு பெயரு நித்தி தானா??உங்க பெயர் என்ன???- ஜீவா

இல்ல இவ பெயர் நித்தியா ,என்னோட பெயர் தேன்மொழி –ஹனி

ஐ ஆம் ஜீவா –ஜீவா கையை ஹனியின் புறம் நீட்ட ,கையை தட்டிவிட்டாள் நித்தி உடனே ஜீவா முறைக்க....

என்ன முறைக்கிற நான் இங்க கால் வலிக்குனு கதறிக்கிட்டு இருக்கேன் நீ என்னனா ஹாய்யா ஐ ஆம் ஜீவா நோவா னு சொல்லிக்கிட்டு இருக்க –நித்தி

ஜீவாவும் ஹனியும் சிரிக்க...நித்தி ஹனியை முறைத்துப்பார்த்தாள்

சாரி செல்லம் –ஹனி நித்தியின் தாடையை பிடிக்க அவள் கையை தட்டி விட்டு முன்னால் நடந்தாள் நித்தி

நான் கால் வலிக்குனு சொல்லுறேன் நீ என்னனா எந்த வளர்ந்த குரங்குகூட சேர்ந்து சிரிக்கிற –நித்தி

ஜீவா அவளை அப்படியே தூக்கினான்...அடே அடே என்ன இறக்கி விடுடா குரங்கு என நித்தி அவனை அடிக்க..சிறிது தூரம் நடந்தவன் அவளை அதன் பிறகுதான் கீழே இறக்கி விட்டான்.ஹனி அவளை பார்த்து சிரித்தாள்.

குரங்கு திமிர் பிடிச்ச குரங்கு,ஜீவா குரங்கு உனக்கு வால் மட்டும் தான் இல்ல-நித்தி

ஏய் யார பார்த்து குரங்குனு சொல்லுற அறைஞ்சிடுவேன்-ஜீவா

உன்ன பார்த்துதான் சொல்லுறேன் வளர்ந்த குரங்கு, வளர்ந்த குரங்கு-நித்தி கடுப்புடன் அவனை பார்த்து சொல்லிவிட்டு ஹனியை முறைக்க

நித்தி நான் சும்மாதான் சிரிச்சேன் உடனே சண்டையை போடத-ஹனி

ஆமா நான் தான் சண்டை போடுறேன்...என் மேலதான் தப்பு போதுமா- நித்தி

எப்ப என்ன செய்யனும் நான் –ஹனி

நான் எதுவும் சொல்லலமா –நித்தி

ஹனி முறுக்கிக்கொண்டு முன்னே நடந்தாள்..என்னடா நடக்குது இங்க எதுக்குபோய் யாராவது சண்டை போடுவாங்களாஏய் நித்து நீ என்ன லூசா-ஜீவா

பாரு உன் கூட சண்டை போட்ட இவன் என் கூட சண்டைக்கு வரான்.எனக்கு உன் கூட சண்டை போடகூட உரிமை இல்லையா?-நித்தி

அடபாவி எரியுற தீய்ல எண்ணெய்யா ஊத்திட்டியே ஜீவா-ஜீவாவின் மனசாட்சி

நான் அப்படி சொல்லலை நித்தி அவன் பண்ணதுக்கு நான் என்ன பண்ணுவேன்.சும்மா சும்மா என் மேலயே கோவம் படாதா –ஹனி

எங்க உரிமை இருக்கோ அங்கதான் கோவம் படமுடியும்-நித்தி

உடனே இதையே சொல்லி என்னை கவுக்காத –ஹனி

ஆமா உண்மையதான் சொல்லுறேன்- நித்தி ஹனியை கொஞ்சினாள்

என்னடா இதுங்க இவ்வளவு நேரம சண்டைய போட்டாங்க அதுக்குள்ள சேர்ந்துட்டாங்க.நம்மசேர்த்து வைக்கலாம் பார்த்தா நம்மலே கடைசியா வில்லனா மாதிருவாங்க போலே,ஜீவா நீ இவங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும்-ஜீவா மனத்திற்க்குள்

எல்லாம் இவணால வந்தது –நித்தி

என்னா நானா பாவமேனு உங்கள காப்பத்தலாம்னு நினைச்சி உங்கள காப்பத்த நான் வந்தா நீ என்னவே சொல்லுவிய்யா –ஜீவா

ஆமடா உன்ன யாரு காரை காட்டுக்குள்ள விட சொன்னது.ஒழுங்க ஊருக்குள்ளே ஓட்டிருக்கலாம்ல...-நித்தி

ஆமா டி பாவம் உங்கள காப்பாத்தலாம்னு நினைச்சி உங்க கூட வந்து நானும் எப்ப மாட்டிருக்கேன்லா நீ எதுவும் பேசுவா இன்னும்பேசுவா –ஜீவா

2 பேரும் முதல சண்டைய நிருத்திட்டு இங்க இருந்து போறதுக்கு வழிய கண்டுபிடிங்க-ஹனி

ஹனி நீ ஏன் கவலை படுற நம்ம காணோம்னு இந்த நேரம் கார்த்திக் அண்ணாக்கு தெரிஞ்சுருக்கும் –நித்தி

இப்ப நீ என்ன சொன்ன கார்த்திக் கா......-ஜீவா

ஆமா இப்ப என்ன அதுக்கு –நித்தி

கார்த்திக் உனக்கு அண்ணண்ணா......ஜீவா குழப்பத்துடன்

சொந்த அண்ணா இல்ல ஆனால் எனக்கு ஒரு அண்ணா இருந்தா எப்படி பார்த்திருப்பாங்ளோ அப்படி பார்த்திருப்பாங்க –நித்தி

ஓஓஓஓஓஓ –ஜீவா

உனக்கு அவங்கள தெரியுமா-நித்தி

ம்ம்ம்---தெரியும்-ஜீவா

ஆமா ஆமா அவரு போலிஸ் உனக்கு தெரிச்சுருக்கும் கண்டிப்பா-நித்தி

அவன் போலிஸ் ஆகுறதுக்கு முன்னாடி அவன் என்க்கு பிரெண்டு-ஜீவா

எப்ப என்ன சொன்னிங்க –ஹனி

பாவி பாவி எந்த நாதாரிபையன் பண்ண சதியோ நாங்க பிரிஞ்சு கிடக்கோம்.இதுல இவங்க கிட்ட என்ன சொல்லுறது –ஜீவா மனதில் முணங்கினான்

ஹலோ என்ன யோசனை அங்க...-நித்தி

அது ஒன்னுமில்லை...அவரு ரெம்பா பெரிய போலிஸ்ல.....-ஜீவா

ஆமா ஆமா..ரொம்ப நல்லவர் ...அப்பறம் என்னோட ஹனிக்கு அவரு ரொம்ப ஸ்பெசல் –நித்தி

ஏய் நித்தி என்ன ஒட்டுறியா.....கொண்ணுடுவேன்-ஹனி

ஹாஹாஹா,,,-நித்தி

எனக்கு பசிக்குது –நித்தி

இந்தா இதை சாப்பிடு- கிழே கிடந்த இலையை எடுத்துக்கொடுத்து சொன்னான்

அதை நீ சாப்பிடுவவெங்காயம் நான் ஏன் சாப்பிடனும்-நித்தி

ஏய் குள்ள மிளகா...-ஜீவா

ஆமா நீதான் வளர்ந்த குரங்கு –நித்தி

இருவரும் பேசியத்தில் கவனத்தை வைத்து நடந்த ஹனி அருகில் இருந்த பள்ளத்தை பார்க்கமல் சென்று அதில் விழுந்தாள்

நித்திதிதிதிதி......................-ஹனி கத்த அவளை பார்க்க அவள் விழுந்திருந்தாள்

ஹனினினினி...........-நித்தி

ஹனி....ஜீவா................

மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என் உயிர் தோழா. பழசெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாடா.
வான் என்று உன்னை நினைத்தேன்
வானவில்லாய் மறைந்தாயே.
திருக்குறளாய் வந்து என் வாழ்வில் இரு வரியில் முடிந்தாயே.
கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்.
நான் பேசினால் மொழியாகத் தானே வருகிறாய்.


எதற்காக பிறந்தாய் பின் ஏனோ பிரிந்தாய் உன்னாலே நினைவுகள் அலை மோதி விடுகின்றதே. உயிராய் நீ இருந்தாய் கனவிலும் சிரித்தாய் நண்பா உன் நினைவால் நடை பிணம் ஆகிறேன்……….



















 

vigneshwari ganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
UNT -9


ஹாய் நட்புக்களே....

வந்துவிட்டேன்......சொன்ன மாதிரி வந்துடேன்.....இவ்வளவு நாள் காத்திருந்தற்க்கு ரொம்ப நன்றி...அப்பறம் இன்னைக்கு நான் நித்தியையும் ஹனியையும் கூட்டிடு வரல...வேறவங்கள கூட்டி வந்துருக்கேன்.......படிச்சிட்டு மறக்காம உங்க உங்கள் அன்பையும் கருத்தையும் சொல்லுங்கோ.........
download (6).jpg


அத்தியாயம்-9

கண்ணை மூடி ஸ்டேசனில் அமர்ந்திருந்த கார்த்திக்கைப் பார்த்து,” கார்த்திக்” என கூறினான் சூரியா.

சூரியாவின் குரலை கேட்டு,”அண்ணா”என கூறி கண்ணை திறந்து பார்த்தான்..

அண்ணா என்ன ஆச்சி ஏன் உங்க கண் கலங்கிருக்கு....ஹனியும் நித்தியும் கண்டிப்பா கிடச்சுருவாங்கஅண்ணா-கார்த்திக்

எனக்கு தெரியும் கார்த்திக் அவங்க கண்டிப்பா கிடச்சுருவாங்க ஆனால் அதுக்கு முன்னாடி நான் உன் கிட்ட சில விஷயம் சொல்லனும்ப்பா-சூரியா

சொல்லுங்க அண்ணா-கார்த்திக் கலக்கத்துடன் சூரியாவை பார்த்துக் கேட்டான்

இங்க வேணாம் கார்த்திக் வெளில போலாம் வா –சூரியா

சரி அண்ணா ஜீப்லே போலாம் வாங்க –கார்த்திக்

இருவரும் ஜீப்பில் அமைதியா வந்தனர்..கார்த்திக்,”என்ன சொல்ல போறாரு அண்ணா” என்ற கலக்கத்துடனும்.சூரியா,”.நம்ம சொல்ல போறத கார்த்திக் எப்படி எடுத்துக்குவன்” என்ற பயத்துடனும் பயணித்தனர்

ஜீப் வந்து நின்றது...ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத ரோட்டில்.....அங்கு இருவரும் இறக்கி நடந்தனர்.இருவரும் எதுவும் பேசமல் அதே அமைதியை தொடர ஒரு கட்டத்தில் அந்த அமைதியை களைத்தான் கார்த்திக்

அண்ணா ஏதோ சொல்லனும் சொன்னிங்க ஆனா அமைதியா வாரிங்க –கார்த்திக்

ஒரு பெருமூச்சை விட்டு,கார்த்திக் நீ இப்ப வளர்த்துட்டா..ஒரு ஊரை கண்ரோல் பண்ணுற அளவுக்குபெரியவனா ஆகிட்ட ஆனாலும் நீ இப்பவும் எனக்கு சின்ன பையனா தான் தெரியுறா...சூரியா

சிரித்துக்கொண்டு, அண்ணா எப்பவுமே நான் உங்க குழந்தை தான்-கார்த்திக்

கார்த்தி இப்ப நான் சொல்லுறத நீ பொறுமையா கேளு..இதை நீ தெரிஞ்ச்சிக்க வேண்டியதும் கூட...-சூரியா

சொல்லுங்க அண்ணா என ஒரு சந்தோக பார்வையுடன் சூரியாவை பார்த்தான் கார்த்திக்.

சிறு யோசனையுடன் ஆரம்பித்தான் –சூரியா

அவங்க நம்மலும் பின்னாடி போலாம்.......

அழகிற்க்கு மறுவார்த்தை அவளே என்று சொல்லும் மீனாட்ச்சி அம்மன் ஆட்சி நடத்தும் மதுரையில் அன்றயை பொழுது யாருக்கும் நான் காத்திருக்கமாட்டேன் என அழகாக விடிந்தது.....

இந்தா அய்யா கிருஷ்ணா எழுந்திரு..உன் கூட படிக்கிற வெற்றி தம்பி வந்திருக்கு –வசந்தா

போம்மா தூக்கம் வருது –கிருஷ்ண்ன்

எழுந்திரிய்யா உனக்காக காத்திருக்கு அந்த தம்பி –வசந்தா சொல்லிவிட்டு வெற்றிக்கு காப்பி எடுக்க சென்றுவிட்டார்

கொட்டாவியை விட்டுக்கொண்டு ரூமை விட்டு வெளியில் வந்து,என்னடா காலங்கத்தாலே வீட்டு பக்கம் தலையகாட்டுற என்ன விசியம் –கிருஷ்ணன்

அது வந்துடா –வெற்றிவேல்

என்னடா மறுபடியும் என் தங்கச்சி கூட சண்டை போட்டியா??-கிருஷ்ணன்

அண்ணா,அண்ணா.......என்று வேகமாக ஓடிவந்தா ஜாணவியை பார்த்து,ஏய் ஜாணு கால்லை ஓடிக்க போறேன் பாரு எத்தனை தடவை சொல்லுறது ஓடாத ஓடாதனு அப்பறம் இங்க வலிக்கு அங்க வலிக்குனு சொல்ல வேண்டியது.. –கிருஷ்ணன்

ஐய்யோ அதவிடு அண்ணா அதவிட முக்கியமான விசியம் –ஜாணவி

என்னா என்று இருவரும் பார்க்க,நம்ம லட்சுமிக்கு இப்ப நிச்சியதார்த்தம் நாளைக்கு கல்யாணம் –ஜாணவி

என்ன சொல்லுற நேற்றுதான் மாப்பிளை பார்க்குறாங்கனு சொன்னா அதுக்குள்ளயும் நிச்சியதார்த்தமா..?-கிருஷ்ணன்

ஆமா அண்ணா ஆனால் இதுல அவளுக்கு சம்மதம் இல்ல அவங்க பெரிய அண்ணாவோட ஏற்ப்பாடு இது,பாவம் அந்த புள்ள அழுகுது –ஜாணவி

என்னடா வெற்றி, இதலாம் உனக்கு தெரியுமா தெரியாதா..??-கிருஷ்ணன்

ம்ம்ம்ம் –வெற்றிவேல் தலையை ஆட்டினான்

என்னடா தலையை ஆட்டுற அவள் நீ காதலிச்ச பொண்ணுடா –கிருஷ்ணன்

அதலாம் துரைக்கு நியாபகம் இல்ல.....-ஜாணவி

நான் என்னடா பண்ணறது அவங்க அண்ணன் வந்து பேசுனாங்க....அவங்க சொல்லுறதும் சரின்னு தோன்னுச்சி-வெற்றிவேல்

அப்படி அவங்க அண்ணன் சொல்லுறத கேட்டு தான் நீ லட்சுமியை காதலிச்ச ?? –ஜாணவி

ஜாணவி என்ன பேசுற,அவன் உன்னவிட வயசுல மூத்தவன் மரியாதையா பேசு-வசந்தா

முவரும் அப்பொழுது தான் வசந்தா அங்கு இருப்பதை கவனித்தனார்

ஆமா மூத்தவன் பண்ணுற வேளையா இது..?? –ஜாணவி சலித்து கொண்டாள்

அடிகழுதை வாயைமூடு –வசந்தா

ஜாணவி வசந்தாவை முறைக்க,இங்கப்பாருய்யா வெற்றி, “ அவங்க அண்ணன் சொன்னாருனு நீ லட்சுமியை மறந்துடிய்ய....இல்லா வேற எதாவது இருக்கா....???-வசந்தா

இல்லை அம்மா வேற இதுவும் இ....இல்....இல்லை –வெற்றிவேல்

இங்க பாருய்யா நான் உன்ன பெத்து எடுக்கலேனாலும் உன்னயும் என்னோட பிள்ளையாதான் பார்க்கிறேன்..நீ எங்க கிட்ட ஏன் மறைக்கிற சொல்லுய்யா..?? –வசந்தா

அம்மா நான் நல்லாதான் இருக்கேன் –வெற்றி

ஆமா இவரு நல்லாதான் இருப்பாரு,இவரால தான் பலபேரு அழுதுக்கிட்டு கிடக்காங்க –ஜாணவி

என்டி வந்ததுல இருந்து அவனையே கரிச்சிக்கொட்டிகிட்டே இருக்க கொஞ்ச நேரம் வாய முடிகிட்டு அமைதியா இரு – வசந்தா

அப்பொழுது வெற்றியின் நண்பன் ராகவன் உள்ளே நுழைந்தான்,” அவள ஏன் திட்டுறிங்க அம்மா அவள் சொன்னதில் எதுவும் தவறு இல்லை..இவனால தான் அங்க ஒரு பெண் அழுதுகிட்டு இருக்கா..”

ஏன்டா நீயும் அவன திட்டுற...-கிருஷ்ணன்

இவன திட்டாம வேற என்ன கிருஷ்ணா பண்ண சொல்லுற,சாருக்கு மனசுல பெரிய தியாகினு நினைப்பு...லட்சுமி நல்ல வசதியா வாழனுமா அதுனால அவங்க அண்ணா சிவா சொன்னதும் சரினு சொல்லிட்டு வந்துட்டாரு – ராகவன்

என்னப்பா நடக்குது..?? –வசந்தா

ஆமா அம்மா, அவங்க சொந்தகாரங்கள யாரோ மாப்பிளையாம், நல்ல வசதியானவங்கதான் – கிருஷ்ணன்

ஏப்பா வெற்றி வசதியா முக்கியம்..வசதி இன்னைக்கு இருக்கும் நாளைக்கு போய்டும்...ஆனால் லட்சுமிக்கு உன்னாதான்ய்யா பிடிச்சுருக்கு..நீ அவள கல்யாணம் பண்ணுறதுதான் சரி..-வசந்தா

இல்லாம அவ வசதியா வாழ்ந்தவள்..ஆனால் நமக்கு அதுக்கும் தான் ஏனி வைச்சா கூட ஏட்டாதே...படிச்சு முடிச்சு ஒரு வேலைல நான் இருந்தா கூட தெரியாது ஆனால் நான் இன்னும் படிச்சி முடிக்க 6 மாதம் ஆகும்..என்னால எப்படிம்மா அவள நல்லா பார்த்துக்க முடியும் –வெற்றி

ஏன் அண்ணா அதலாம் காதலிக்கும் போது தெரியலையா என ஜணாவி கூற,வெற்றி அமைதியாவே இருந்தான்

இப்பா அவன குத்தம் சொல்லுறத விட்டுட்டு இப்ப என்ன பண்ணலாம்னு சொல்லுங்க -கிருஷ்ணன்

யாரும் ஒண்ணும்பண்ண வேண்டாம்..என்னை இப்படியே விட்டுறுங்க – வெற்றி

ஆமா அப்படியே இவரு சொன்னது அப்பிடியே கேட்டுக்கோங்க 2 பேரும் என ஜாணவி கோபமாக சொல்லிவிட்டு அவளுடைய அறைக்குசென்று விட்டாள்

“நான் போய்டு வாரேன் அம்மா” ,என்று சொல்லிவிட்டு வெற்றி செல்ல, “என்னடா இவன் நம்ம இவ்வளவு சொல்லியும் கேக்காம போறான்” –ராகவன்

சரிடா அவன விட்டுதான் பிடிக்கனும் வா நம்மளும் போலாம் –கிருஷ்ணன்

ஆண்டவா ஏன் இப்படி சோதிக்கிற அந்த பிள்ளைகளை ஒன்னா சேர்த்து வைச்சிடு என அவரால் கடவுளிடம் வேண்டதான் முடிந்தது...



கிருஷ்ணன்,ராகவன் வெற்றிவேல் முவரும் கல்லூரியில் இருந்து நண்பர்களாகினர்....

கிருஷ்ணன், ஜாணவியின் அம்மா தான் வசந்தா...வசந்தாவின் கணவர் ஒரு ஆக்ஸிடன்டில் இறந்துவிட்டர்..அதன் பிறகு குடும்பதையும் வழி நடத்தி, தனியாளாக நின்று இருவரையும் படிக்க வைத்து ஆளாக்கினார்..

கிருஷ்ணன் பி.காம் 3வது வருடம் படிக்கிறான்.ஜாணவியும் கிருஷ்ணன் படிக்கும் அதே கல்லூரியில் முதல் வருடம் பி.ஸ்சி கணிதம் படிக்கிறாள்..

இப்போது வசந்தா தன்னுடைய மகன் மற்றும் மகளுக்கு எந்த வேறுபாடும் பார்த்தது இல்லை...அவர்களின் ஆசை எப்போது தடை விதித்ததும் இல்லை..

ராகவன் மும்பையில் பிறந்து வளர்ந்து தன்னுடைய பள்ளி படிப்பை முடித்தான்..அதான் பிறகு அவனுடைய தாத்தா பாட்டியுடன் தங்க வேண்டும் என ஆசை பட்டு மதுரைக்கு வந்து தன்னுடைய கல்லூரி படிப்பை தொடர்கிறான்...அவனுடைய அப்பா ராஜலிங்கம் பிஸ்னஸ் பண்ணுவதற்காக மும்பையில் வந்து செட்டில் ஆகிவிட்டார்...

என்னதான் மும்பையில் இருந்தாலும் தமிழ் கலாச்சாரம் தன் பையன்க்கும் தெரிய வேண்டும் என்றும்,தன் பையன் ஆசை பட்டதாலும்,ராகவனை மதுரையில் போய் படிக்க அனுமதித்தார்..

வெற்றிவேல்...சிறுவயதில் இருந்து தன்னுடைய தாத்தா மற்றும் பாட்டியிடம் வளர்ந்தான்..அவனுடைய அப்பாவும் அம்மாவும் வசதியான வாழ்க்கை இல்லை என்று கூறி விவாகரத்து வாங்கி அவரவர் வாழ்க்கையில் பயணத்தை தொடர யாரும் இல்லாமல் நின்ற வெற்றியை அவருடைய தாத்தா,பாட்டித்தான் வள்ர்த்தனர்...

படித்து நல்ல நிலமைக்கு வர வேண்டும் என சொல்லி சொல்லி வளர்த்தார் அவருடைய தாத்தா..ஆதனாலோ என்னவோ வெற்றி படிப்பில் படுசுட்டியாக இருந்தான்..அவன் கெட்டநேரம் தான் சொல்ல வேண்டும், அவனுடைய பாட்டி இறந்த ஒரு வருடத்தில் அவனுடைய தாத்தவும் அவனுடைய 18 வயதில் இறந்து விட்டனர்..

யாரும் இல்லாமல் மறுபடியும் நிற்க ....அவனுடைய படிப்பு அவனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது...ஆம்,அவன் 12வது வகுப்பில் அதிக மதிபெண் எடுத்ததால் பணஉதவி செய்து படிக்க வைத்தார் அவருடைய தாத்தாவின் நண்பர் ஒருவர்..அவன் கல்லூரிக்குள் அடிஎடுத்தும் வைத்தான்.....வசந்தாவின் செல்லபிள்ளை என்று கூட சொல்லலாம்

லட்சுமி ஜாணவியின் சிறு வயது தோழி...கல்லூரியிலும் அவர்கள் நட்பு தொடர்ந்தது....

லட்சுமிக்கு இரு அண்ணன்கள்.....வசதியான குடுபத்து பெண்.....லட்சுமியும் அதே கல்லூரியில் பி.ஸ்சி கணிதம் தான் படிக்கிறாள்...

ஜாணவியின் மூலம்தான் வெற்றிக்கு லட்சுமியை தெரியும்...

அதன் பிறகு நண்பர்களாகி காதலர்களாக மாறி இப்பொழுது தங்களின் பிரிவை எண்ணி வருந்த்திக்கொண்டு இருக்கிறனர்...

.......................

லட்சுமியின் வீட்டில்,

இங்க பாரு ஒழுங்க அழுகாம நாளைக்கு கல்யாணமேடைக்கு வர …இல்லை வரனும் இல்லைனுவை அந்த வெற்றியை தடையமே இல்லாமல் ஆகிடுவேன் பிரியுதா என அதிகார தோரனையில் வந்தது சிவாவின் குரல்...

அதைக்கேட்டு அதிர்ந்துதான் நின்றாள் லட்சுமி.....

என்ன அப்படி பார்க்கிற நான் சொன்னத செய்வேன் தெரியும்ல....வேற எதாவது செய்யனும் நினைச்ச தொலைச்சுறுவேன் என சொல்லிவிட்டு சென்ற அண்ணனை கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தாள்..அப்பொழுது சரியாக உள்ளே வந்தாள் ஜாணவி

வாமா ஜாணவி உன் தோழிய பார்க்க வந்திய உள்ளதான் இருக்க போய் பார் –சிவா

சரி அண்ணா –ஜாணவி

ஒரு நிமிசம் என்று சிவா கூற அதே இடத்தில் நின்றாள் ஜாணவி

இங்க லட்சுமியோட தோழியா வந்தியா இல்ல தூது சொல்ல வந்தியா –சிவா

அய்யோ அண்ணா என்ன இப்படி சொல்லிடிங்க..நான் அப்படிலாம் செய்வேனா என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னால் ஜாணவி

அப்படி எதுவும் இல்லைனா சந்தோஷம் தான் ....போ போய் உன் தோழிய பாரு என சிவா சொன்னவுடன் விட்டால் போதும்டா சாமி என்று அந்த இடத்தை காலி செய்து லட்சுமியை பார்க்க சென்றாள்..

ஏய் லட்சுமி ஏன் இப்படி உக்கார்ந்துருக்கா...முதல அழுகுறத நிறுத்து.இப்படி அழுத எதுவும் சரியாகது... ஜாணவி

எனக்கு அழுகுறத தவிர என்ன பண்ணுறதுனு தெரியல....-லட்சுமி

சரி நீ அழுதுகிட்டே இரு...எல்லாம் சரியாகிடும் சரியா நான் வரேன்..-ஜாணவி

ஏய் என்ன நீயும் என்ன விட்டு போற.... போங்க எனக்கு யாரும் வேண்டாம் போங்க...-லட்சுமி

அப்படிலாம் இல்லமா...-ஜாணவி

இல்ல நீ போ நான் என்ன பார்த்துகிறேன் –லட்சுமி

அதே இடத்தில் ஜாணவி நிற்பதை பார்த்த லட்சுமி, போனு சொல்லுறேன்ல போ இங்க இருந்து என கத்த,ஜாணவி சென்றுவிட்டாள்.

வீட்டை விட்டு வெளியில் வந்து ஜாணவி, ரொம்பதான் பண்ணுறாங்க இரண்டு பேரும்...நல்லதுக்கு இங்க காலம் இல்லை..எல்லாம் எப்ப பார்த்தாலும் நம்மலே திட்டுறாங்க ...கடவுளே யாரு என்ன திட்டுனாலும் பாரவாயில்லை இவங்க இரண்டு பேரையும் ஒண்ணா சேர்த்து வைச்சுடு நான் அந்த வெற்றிக்கு மொட்டை போடுறேன் சரிய்யா என தனியா அந்த ஆண்டவனிடம் சொல்லிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்..

அந்த பக்கம் வந்த ராகவன்,என்ன இவ தனியா பேசிகிட்டு போறா இல்ல யாரவது பக்கத்தில இருங்களா என்ன என்று நன்றாக ஒரு தடவை பார்த்து விட்டு ஜாணவியின் அருகில் சென்றான்

ஹாய் ஜாணவி குழந்தை என்ன தனியா போய்கிட்டு இருக்க அதுவும் தனியா பேசிக்கிட்டு வேற என்ன பிரச்சனை – ராகவன்

ஏய் நான் ஒன்னும் குழந்தை இல்லைனு எத்தனை தடவை சொல்லுவேன் –ஜாணவி

ஆதலாம் தெரியாது நீ குழந்தைதான் என்று சொன்ன ராகவனை பார்த்து முறைத்தாள் ஜாணவி

சரி முறைக்கதா ஏன் தனியா பேசிக்கிட்டு போற எதாவது பிரச்சனையா உனக்கு....ஐ மீன் எதாவது லவ் கிவ் – ராகவன்

உனக்கு என்ன பார்த்தா எப்படி தெரியுது -ஜாணவி

அதான் இப்பதான சொன்னேன் அதுக்குள்ள மறந்துட்டியா –ராகவன்

ஏய் எங்க இருந்துடா வருவிங்க என்ன வம்பிழுக்கனும்னு மரியாதையா போய்டு அப்பறம் கோவத்தில் என்ன பண்ணுவேன் தெரியாது –ஜாணவி

நீ எதுவும் பண்ண வேண்டாம் உங்க வீடு வந்துருச்சி வீட்டுக்குள்ள போ...அப்பறம் தனியா பேசிகிட்டு இனிமே நடந்து போகத..புள்ள பிடிக்கிறவன் வந்து பிடிச்சுடு போய்ற போறான் –ராகவன்

அவள் அடிக்க கல்லை தேடும் போது அவன் அந்த இடதை காலி செய்திருந்தான்

“ஒடி போய்டியா ஒரு நாள் சிக்குவ என் கிட்ட அப்ப இருக்கு உனக்கு”, என ஜாணவி சொல்லிவிட்டு வீட்டிற்க்குள் நுழைந்தாள்

வெற்றிக்கு மொட்டை போடுறதுக்கு பதிலா இந்த ராகவனுக்கு போடுறேன் கடவுளே அவங்கள சேர்த்து வைச்சுடு.....

ஏய் இந்த இராத்திரில தனியா போய்டு வார .எங்க போனாலும் சீக்கிரம் வரனும்னு தெரியாதா..?? –வசந்தா

“அம்மா உனக்கு இப்ப என்ன பிரச்சனை” என பொரிய ஆரம்பித்தாள் ஜாணவி

சின்ன பிள்ளை தனியா போய்டு வாரனு சொன்னேன் அதுஒரு குத்தமா –வசந்தா

என்ன சின்ன பிள்ளையா எருமை மாடு மாதிரி வள்ர்ந்திர்க்க அறிவில்லையானு காலைல தான சொன்னா அதுக்குள்ள நான் உனக்கு குழந்தையா...என்ன நினைச்சிகிட்டு இருக்கிங்க எல்லாரும் –ஜாணவி

நான் என்ன சொல்லிட்டேன் இப்படி குதிக்கிற... –வசந்தா

இவங்க பேசுறதுல சரியா நம்ம பேசுறது மட்டும் தப்பாம் –ஜாணவி

ஏய் ஜாணவி ஏன் இப்ப கடுகு போட பொரிஞ்சி தள்ளுற மாதிரி பேசுற...வா வந்து சாப்ட்டு தூங்க போ –வசந்தா

எனக்கு சாப்படு வேண்டாம் எதுவும் வேண்டாம் நான் தூங்க போறேன் போ –ஜாணவி

தீடிர் தீடிர்னு இந்த பிள்ளைக்கு என்னதான் ஆகுமோ –வசந்தா

அதன் பிறகு வந்த கிருஷ்ணாக்கு சாப்பாடு போட்டு விட்டு அனைவரும் தூங்க சென்று விட்டனர்....

இரவு 1 மணி ஜாணவியின் வீட்டு கதவு படபட என தட்ட பட்டது

“யாரு இந்த நேரத்தில தட்டுறது” என மனதில் நினைத்துக்கொண்டிருக்கும் போது மறுபடியும் கதவு தட்டப்பட்டது

அய்யோ இருங்க வாரேன் என சொல்லிக்கொண்டு வசந்தா வருவதற்க்குள் கதவு தட்டபட்டுக்கொண்டுதான் இருந்தது.

ஜாணவி,கிருஷ்ணன் கூட யாரு இந்த நேரத்தில் தட்டுறது என எண்ணி தங்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து விட்டனர்

வசந்தா கதவை திறக்க போக,”அம்மா இங்க வாங்க யாருனு நான் பார்க்கிறேன் என கிருஷ்ணா கூற வசந்தா விலக கிருஷ்ணன் கதவை திறந்தான்....

கதவை திறந்த கிருஷ்ணா அதிர்ச்சி அடைந்தான்.....அவன் மட்டும் இல்ல வசந்தா, ஜாணவியும் பயத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தனர்.......











 
Status
Not open for further replies.
Top