All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலாவின் "உன்னில் நான் தோழியே...!!!" - கதை திரி

Status
Not open for further replies.

vigneshwari ganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்புக்களே...
இதோ அடுத்த 10வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்..முந்தைய அத்தியாயத்திற்க்கு உங்கள் அன்பையும் கருத்தையும் கூறியதற்கு ரொம்ப நன்றி....இந்த அத்தியாயத்திற்க்கும் உங்கள் அன்பையும் கருத்தையும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கேன்..:):)
6.jpg

அத்தியாயம்-10

கதவு தட்டப்பட்ட விதத்தில் அதிர்ந்துதான் போனார்க்கள் முவரும்..கிருஷ்ணா கதவை திறந்து பார்க்க..அங்கு வெற்றியும் லட்சுமியும் கல்யாணம் கோலத்தில் நின்றனர்.

அதை பார்த்து வசந்தாவும் ஜாணவியும் அதிர்ந்தனர்.

என்னடா இது இப்படி சொல்லாமல் கொள்ளாமல் பண்ணிட்டு வந்திருக்க..-கிருஷ்ணன்

இல்லடா அது வந்து -வெற்றி

சரி முதல உள்ள வாங்க –வசந்தா

அங்கயே நில்லுங்க முதல என சொல்லிவிட்டு ஆரத்தி தட்டுடன் வந்தாள் ஜாணவி

ரொம்ப முக்கியம் இப்ப இது- கிருஷ்ணன்

ஆரத்தி எடுத்து முடித்து அவர்களை உள்ளே போக விட்டாள் ஜாணவி

அண்ணா இது எல்லாம் எப்பயாவது தான் கிடைக்கும்...அதுமட்டும் இல்ல நாளைக்கு லட்சுமி வந்து என்கிட்ட நான் உன் தோழிதான் கல்யாணம் முடிச்சு வந்த எங்களுக்கு ஒரு ஆராத்தி எடுத்துறருக்கலாம்ல அப்படினுகேட்டானு வை நான் அப்ப என்ன பண்ணுவேன்...அதான் இப்ப அத பண்ணுனேன்....-ஜாணவி

அதை கேட்ட கிருஷ்ணன் தலையில் அடித்துக்கொண்டாடன்.,”.நீ இந்த மாதிரி பண்ணிடு வந்தாலும் நான் உனக்கும் ஆராத்தி எடுப்பேன் கவலைப்படாதா” என சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் ஜாணவி

அய்யோ என தலையில் அடித்துக்கொண்டு தன் நண்பனை காண உள்ளே சென்றான் கிருஷணன்

என்னடா நீ இப்படி பண்ணி வச்சுறுக்கா சொன்னா நாங்க எதாவது பண்ணிருப்போம்லா அதுக்குள்ள என்னாடா வந்துச்சு உனக்கு -கிருஷ்ணன்

அவரு மேல எந்த தப்பும் இல்ல அண்ணா நான் தான் –லட்சுமி

என்னமா இரண்டு பேரும் இப்படி பண்ணிருக்கிங்க நாளைக்கு காலைல உங்க அண்ணனுக்கு விசியம் தெரிச்சா என்ன ஆகும் நினைச்சு பார்த்தியாம்மா என பெரியவராக வசந்தா வருத்தப்பட்டார்..

என்னம்மா நீ இப்படி பேசிக்கிட்டு இருக்க அவங்க அண்ணனுக்குதான் இவங்க காதல் தெரியும்ல ஒழுங்க சேர்த்து வைச்சுருக்கனும் –ஜாணவி

அப்படி இல்லாம்மா ஒரு பெண் அதுவும் இந்த ராத்திரில அவங்க வீட்டை வந்து கல்யாணம் பண்ணிருக்கா. அவங்க அண்ணா என்ன பண்ணுவாரோ - வசந்தா கவலையுடன் சொன்னார்

அம்மா எனக்கு அதலாம் எதுவும் நினைவு இல்லை. இவரு கூட சேரனும் அது மட்டும் தான் தோனுச்சி –லட்சுமி

மறுபடியும் கதவு தட்டப்பட்டது,ஒரு வேளை அவங்க அண்ணாக்கு தெரிஞ்சுடுச்சோ –ஜாணவி

எனக்கு பயமா இருக்கு வெற்றி –லட்சுமி

ஆறுதலாக அவள் கையை அழுத்திப்பிடித்துக்கொண்டான் வெற்றி...

பயப்புடாதிங்க நான் போய் பார்க்குறேன் – வசந்தா

வசந்தா கதவை திறக்க அங்கு நின்றுக்கொண்டிருந்தது ராகவன்....ராகவனை பார்த்த வசந்தா,” வாப்பா என்ன இந்த ராத்திரியில வந்திருக்க எதாவது பிரச்சனைய்யா “

அதலாம் இல்லை அம்மா கிருஷ்ணா தான் இப்ப போன் போட்டு வீட்டிற்க்கு வர சொன்னான் எதாவது பிரச்சனையா அம்மா –ராகவன்

வெளியில் நின்றுதான் இருவரும் பேசக்கொண்டிருந்தனர் . உள்ளிருந்த ஜாணவி ,லட்சுமி, வெற்றிக்குமே யாராக இருக்கும்,விசியம் தெரிச்சிடுச்சோ அவங்க அண்ணாக்கு என்ற பயமே இருந்தது.

சரிய்யா உள்ள வா நீயே வந்து பாருய்யா – வசந்தா

ராகவன் உள்ள வந்ததும்தான் முவருக்கு இழுத்து பிடித்து வைத்திருந்த உயிரே வந்துச்சி ஆனால் லட்சுமி வெற்றியை பார்த்து ராகவனுக்கோ உயிர் போய்தான் வந்தது ஒரு நிமிடம்.

என்னடா நடக்குது இங்க நீங்க எப்படா கல்யாணம் பண்ணிங்க -ராகவன்

அது வந்துடா இப்பதான் –வெற்றி

.....................

டேய் அந்த பெண் யாரயோ வெற்றி ஒருத்தன காதலிக்குதாம் –மாப்பிள்ளை நண்பன்

டேய் அது தெரிச்சு தான் நம்ம எங்க வந்துருக்கோம் –மாப்பிள்ளை

என்னடா சொல்லூற அதுக்கு எதுக்கு நம்ம இங்க வரனும் உங்க அப்பா கிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டியதுதான -நண்பன்

அது முடிச்சா நான் ஏன் உன்ன கூப்பிட்டு இங்க வந்து சுவர் ஏறிகிட்டு இருக்க போறேன் -மாப்பிள்ளை

ம்ம்ம்ம் சரிடா இப்ப என்ன பண்ண போறோம் –நண்பன்

பெண்ணா கடத்த போறோம் –மாப்பிள்ளை

எதுக்குடா –நண்பன்

இப்ப அவங்க இரண்டு பேரையும் சேர்த்து வைச்சா நான் ஹீரோ..இதுவுவே நாளைக்கு அந்த வெற்றி வந்து கல்யாணத்தை நிறுத்துனா அவன் ஹீரோ நான் காமெடிபீஸ் ஆகிடுவேன்ல அதான் எப்படி நம்ம யோசனை -மாப்பிளை

நீ எல்லாம் இங்க இருக்க வேண்டியவனே இல்லடா மாப்பிளை –நண்பன்

அதுமட்டும்இல்ல ஊருக்குள்ள கேட்டபோது அவன பத்தி நல்ல விதமா சொன்னாங்க அதான் மனசு கேக்கல –மாப்பிளை

டேய் பெண் ரூம் வந்துருச்சி அங்க படுத்துருக்கு பாரு அதுதான் பெண் நினைக்கிறேன் –நண்பன்

இவள எப்படி எழுப்புறது ரூம்ல வேற யாரும் இல்லை... அவள கூப்பிடலாம்டா – மாப்பிள்ளை

ஏய் இந்தாம்மா லட்சுமிமிமிமி - நண்பன்

டேய் என்னடா நாயே பண்ணுற சத்தம் கேட்டு அவள் அண்ணன் வந்துருவான் என சொல்லி அவன் முதுகில் இலவசமா இரண்டு அடிகளை கொடுத்தான் மாப்பிள்ளை

அப்பறம் எப்படிடா அந்த பிள்ளைய எழுப்புறது -நண்பன்

அதே சமயம் தூக்கம் வராமல் புரண்டு படுத்த லட்சுமின் கண்ணில் இவர்கள் பட,” அய்யோ பேய் பேய் “ என கத்தினாள்.

அய்யோ மாப்பிள்ளை கத்தி ஊரே கூப்பிடுறாடா,வாடா ஒடிறலாம் வாடா வா –நண்பன்

ஆமாடா வா வா இல்லைனா அவங்க அண்ணா வந்து நம்ம மூச்சை நிறுத்திற போறான் –மாப்பிள்ளை

சிறுதுநேரம் யோசித்த லட்சுமி விறுவிறுவென்று சென்று கதவை திறந்து மொட்டைமாடியில் இருந்து குழாய் வழியாக இறங்கிக்கொண்டிருந்தவர்களை பார்த்து,” ஒருநிமிடம் நீங்கதான் அந்த மாப்பிள்ளை” என்று கூற திருதிரு என முழித்தனர் இருவரும்.

பீலிஸ் உங்ககிட்ட ஒரு 5 நிமிசம் பேசனும்-லட்சுமி

உடனே இருவரும் மேலே ஏறி வந்தனர்.

அவர்களை பார்த்து லட்சுமி,” தனது காதல்கதை பற்றி முழுவதும்சொல்லி இந்த கல்யாணத்தை தயவு செய்து நிறுத்திடுங்க”என்றுகூறினாள்.

அய்யோ அததான் நானும் சொல்லவந்தேன்.அதுக்குள்ள நீங்களே சொல்லிட்டிங்க – மாப்பிள்ளை

ஏன் நீங்க யாரயாவது விரும்புறீங்களா..?? –லட்சுமி

அய்யோ இல்ல உங்க காதல்கதை கேள்விபட்டு உங்ககிட்ட பேச வந்தேன் –மாப்பிள்ளை

ஓஓஓ சரி இப்ப என்ன பண்ணலாம் – லட்சுமி

அப்படியே இங்க ஒரு பாய விரிச்சி தூங்கலாம் - நண்பன்

டேய் சும்மா இருடா என்று நண்பனை பார்த்து கூறிவிட்டு..சரிங்க வாங்க இங்க இருந்து நம்ம ஓடி போய்டலாம் என்றான்

“என்னது”என்று தனது இரு கருவிழியும் வெளியில் வரும் அளவு முழித்தாள் லட்சுமி.

அய்யோ நான் எதும் தப்பா சொல்லல என்கூட இப்ப வாங்க உங்கள வெற்றி கூட நான் சேர்த்து வைக்கிறேன் சொல்லவந்தேன் –மாப்பிள்ளை

சிறிது யோசித்த லட்சுமியை பார்த்த மாப்பிள்ளை,”நம்புங்க,என்ன நம்பி வரலாம் நீங்க”.

ஆமா ஏன்னா அப்படின்னாதான் நாளைக்கு காமெடிபீஸ் ஆகாம தப்பிக்கலாம்னு என் நண்பனுக்கு ஒரு சின்ன ஆசை அதனால நீங்க நம்பி வரலாம் –நண்பன்

டேய் இப்ப அவங்க கேட்டாங்களா ஏன்டா மானத்தை வாங்குற.? – மாப்பிள்ளை

இல்லை மாப்பிள்ளை உன் பெருமைய அவங்க தெரிச்சுக்கனும்ல அதான் சொன்னேன் –நண்பன்

நீ எதுவும் பண்ண வேண்டாம் சும்மா இருந்தாலே போதும் புரியுதா –மாப்பிள்ளை

இவர்கள் பேச்சு எதையும் கவனிக்காமல் யோசிச்ச லட்சுமி,”சரி நான் வாரேன்” என கூறினாள்.

அதன்பிறகு மூவரும் நின்ற இடம் வெற்றியின் முன்னால்தான்.

எதிர்பார்க்காத நேரத்தில் இவர்கள் வந்ததால், “ ஏன் இங்க வந்த அதுவும் இந்த இராத்திரியில் “என்பதை போல் லட்சுமியை பார்த்தான் வெற்றி.

அவளோ,”என்னால் உன்னை பிரிஞ்சி வாழ முடியாது” என்பதை போல் பார்த்தாள்.

டேய் மாப்பிள்ளை இவனுங்க என்னடா நேரம்காலம் தெரியாமல் கண்ணாலே பேசுறாங்க விட்டா இவங்க அண்ணா வந்து நமக்கு இங்கயே சமாதி கட்டிருவாங்க போல –நண்பன்

“டேய் சும்மா இருடா நீ வேற ஏன் பயத்த உண்டாக்குற” என்று நண்பனை பார்த்து கூறிவிட்டு,இருமல் ஒன்றை விட்டு நாங்களும் இங்கதான் இருக்கோம் என்பதை போல் பார்த்தான் மாப்பிள்ளை

அதன் பிறகு வெற்றி அவர்களை பார்த்து,” நீங்க யாரு” என்று கேக்க, ”அப்படி இப்பயாவது கேட்டியே என் இராசா” என மாப்பிள்ளையின் நண்பன் கூற அவனைப்பார்த்து முறைத்தான் மாப்பிள்ளை.

சாரி உங்கள நான் கவனிக்கல என வெற்றி சொல்லும்போது நம்ம மாப்பிள்ளை சார் வெற்றியின் காலில் விழுந்துட்டான்.

பதறி போன வெற்றி அவனை எழுப்ப முயல,ஆனால் மாப்பிள்ளையோ,” நீங்க லட்சுமிய கல்யாணம் பண்ணாதான் நான் எழுந்திருப்பேன்.இல்லைனா இப்படியே தான் நான் இருப்பேன் வெற்றி” என்று கூறினான்.

இவன் என்ன லூசா என்று யோசித்த வெற்றி,”அய்யோ முதல எழுந்திரிங்க” என்று கூற, இல்லை நான் மாட்டேன் என்பதை போல தலையை ஆட்டினான் மாப்பிள்ளை.

சரி நான் பண்ணிக்கிறேன் முதல் எழுந்திரிங்க சார் –வெற்றி

உடனே அவர்களின் அருகில் நின்ற மாப்பிள்ளையின் நண்பன்,” இந்தா அப்படினா தாலியை கட்டு லட்சுமி கழுத்தில் அப்பதான் என் நண்பன் எழுந்திருப்பான்” என்று சாதாரணமாக சொன்னான்.

ஆனால் வெற்றிக்குத்தான்,”என்ன்டா இவனுங்க வேற இப்படி பண்ணுறாங்க யாருடா நீங்க” என மனதில் நினைக்க,மறுபடியும் ,”பிடி இந்தா கட்டு நேரம் ஆகுது “ என அவசரப்படுத்தினான்...

வெற்றி லட்சுமியைப்பார்க்க, அவளும் பிலிஸ் என்பதை போல பார்த்தாள்.

சாமி இனிமே நடப்பதை நீதான் பார்த்துக்கன்னும் என்று நினைத்து விட்டு தாலியை வாங்கி கட்டினான்.

அதன்பிறகு கீழே கிடந்தவன் எழுந்து,” ஏன் வெற்றி இவ்வளவு நேரம் ஆக்குனிங்க நான் பாவம் இல்லையா எவ்வளவு நேரம் தான் உங்க கால்லையே பார்ப்பேன் “ என கூறினான்.

சிறிதாக சிரித்த வெற்றி, “இப்பயாவது நீங்க யாருனுசொல்லுங்க.?”- வெற்றி

“நான்தான் முன்னால் மாப்பிள்ளை” என ரஜினி ஸ்டைலில் சொன்னான்.

“என்ன, ஏன்,இப்படி” என்று பலவிதமாக வெற்றி அவனை பார்க்க...,” இங்க பாருங்க வெற்றி என்ன பத்தி சொல்லுற அளவுக்கு நான் அவ்வளவு பெரிய ஆளு இல்ல”.(ஆல்ரெடி நீ ஏன் வந்தனு வாசிக்கிறவங்க கேக்குறாங்க.அப்பறம் இன்னும் ஒரு இரண்டு அத்தியாயத்திற்க்கு வந்தேன் வைங்க அடிபின்னிடுவாங்க)

அடுத்து என்ன பண்ண என்று வெற்றியை லட்சுமிபார்க்க,”வா நம்ம வீட்டிற்க்கு போலாம்” என்றான் வெற்றி.

நண்பா நம்ம வந்த வேளை முடிஞ்சிறுச்சி வாடா நம்மளும் நம்ம ஊர பார்த்து போலாம் என்று கிளம்பினர் இருவரும்.

அடுத்து வெற்றியும் லட்சுமியும் நின்ற இடம் ஜாணவியின் வீடுதான்

...................

பாருடா அந்த மாப்பிள்ளை ரொம்ப நல்லவருதான் போல லட்சுமி நான் ஒரு நாள் பார்க்கனும் -ஜாணவி

அம்மா தாயே நீ சும்மா இரும்மா இங்க ஒருத்தவங்களுக்கு வயிறு, காது, வாய்ல இருந்து புகையா வருது –கிருஷ்ணன்

என்ன..யாருக்கு..எதுக்கு புகை ? –ஜாணவி

அதுஒண்ணும் இல்ல ஜாணவி அவன் பயத்துல எதோ ஒலறுறான் வேற ஒண்ணும் இல்லை -ராகவன்

அவனை பார்த்து சிரித்துக்கொண்டே,” மாப்பிளை ராகவா நான் ஒலறுறேனா”- கிருஷ்ணன்

டேய் நீ என்ன அப்பா கிட்ட பேச சொன்னில நான் பேசிட்டு வரேன்.-ராகவன்

கிருஷ்ணன்,”வெற்றி இனிமே உங்களுக்கு இந்த ஊரு வேண்டாம்..எந்த பிரச்சனை வந்தாளும் நாங்க பார்த்துக்கிறோம்”உங்க வாழ்க்கையையும் படிப்பையும் மட்டும் பாருங்க சரியா என கூறினான்.

டேய் அப்பா கிட்ட பேசிட்டேன்..அப்பா இவங்கள இப்ப 4 மணிக்கு ஒரு விமானம் இருக்காம் அதுலா அனுப்பி வைக்க சொல்லுறாரு...அங்க எல்லாத்தையும் அப்பாவே பார்த்துக்குவாரு.-ராகவன்

அப்ப இப்பவே கிளம்புனாதான் சரியா இருக்கும் –கிருஷ்ணன்

ஆமாடா சீக்கிரம் இரண்டுபேரும் கிளம்புங்க -ராகவன்

இரண்டு பேருக்கு இந்த ஊரை விட்டு செல்ல மனமே வரவில்லை இருந்தாலும் வேறு வழியில்லை என்பதால் மும்பை செல்ல தயாரகினர்.

அழுகையுடன் ஜாணவியின் அருகில் வந்த லட்சுமியை பார்த்து,”எனக்கு என்ன சொல்லுறதுனு தெரில லட்சு ஆனால் நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்மா.ஆனால் நீ சந்தோஷமா இருக்கனும் எங்கள பத்தியோ இல்ல உங்க அண்ணா பத்தியோ கவலை படாதா பத்திரமா போய்டுவா”.

சரி ஜாணவி நான் பத்திரமா இருப்பேன்.நீ கவலை படாதா.-லட்சுமி.

இருவரும் வசந்தா அருகில் வந்து,வசந்தாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்..”100 வருசம் சந்தோஷமா இருக்கனும்” என்று ஆசிர்வாதம் பண்ணினார் வசந்தா.

கிளம்ப தயாரனவர்களை பார்த்து,” ஒருநிமிடம் இருய்யா வெற்றி” என்றுசொல்லிவிட்டு உள்ளே சென்றார் வசந்தா.

இந்த அம்மா எங்க போது நேரம் காலம் தெரியாம..இவங்களுக்கு வேற டைம் ஆகுதுல”,என ஜாணவி நினைக்கும் போது உள்ளிருந்து வந்தார் வசந்தா.

கையில் வைத்திருந்த பையை லட்சுமியிடம் குடுத்தார்.ஆனால் அதில் பணம் இருப்பதை பார்த்த லட்சுமி அதை வாங்க மறுத்தாள்.

அம்மா உங்க அன்பு மட்டும் எங்களுக்கு போதும் –வெற்றி

என் அன்பு எப்பவும் உங்களுக்கு இருக்கும்.ஆனால் இந்த பணத்தை உங்க கல்யாணத்திற்க்கு பயன்படுத்தனும்னுதான் வச்சிருந்தேன் அதனால் மறுக்காமா வாங்கிக்கோ வெற்றி.

வெற்றி சரினு ஒத்துக்கொண்டு பணத்தை வாங்கிகொண்டு வச்ந்தாவை பார்த்து “சொந்த அம்மா இருந்தா இதலாம் பண்ணிருப்பாங்கலானு தெரியலா அம்மா..ரொம்ப நன்றி அம்மா..என்று நெகிழ்ச்சியுடன்கூறினான்

என்ன நீ நன்றி எல்லாம் சொல்லுற எனக்கு கிருஷ்ணா எப்படியோ அப்படிதான்ய்யா நீயும் சந்தோஷமா இருங்க இரண்டு பேரும்...-வசந்தா.

சரி அம்மா நாங்க கிளம்புறோம்- வெற்றி.

“சரிய்யா பத்திரமா போய்டுவாங்க” என கண்கலங்கி பேசினார் வசந்தா...

இரண்டு பேரும் காரில் ஏறி அமர்ந்தனர். அவர்கள் கூட கிருஷ்ணனும் ராகவனும் சென்றனர்.

அவர்கள் கார் மறையும் வரை கையை ஆட்டி (டாடா) அவர்களை வழி அனுப்பி வைத்தனர்..ஜாணவியும் வசந்தாவும்....

...............

விமானநிலையத்தில்,

டேய் வெற்றி தங்கச்சியா நல்லா பார்த்துக்கோ..அப்புறம் உங்க படிப்பையும் நல்லாப்படியா முடிங்க...பத்திரமா இருங்க...அது மதுரை மாதிரி இருக்காது...தங்கச்சிய தணியா எங்கயும் அனுப்பிடாத புரியுதா....-கிருஷ்ணன்.

டிக்கெட்டை உறுதிப்படுத்திவிட்டு வந்த ராகவன்,”டேய் போதும்டா அதான் அங்க அப்பா இருக்காருல அவரு எல்லாம் பார்த்துப்பார் நீ அவங்க பயமுறுத்தாம இருடா...-ராகவன்.

ரொம்ப நன்றி இந்த உதவிய நாங்க எப்பவும் மறக்கமாட்டோம்...எனக்கு இப்படி நல்ல நண்பர்கள்,அம்மா,தங்கச்சி, நல்ல மனைவி னு கடவுள் எல்லாத்தையும் கொடுத்துருக்காருடா அதுக்கு காரணம் நீங்கதான்...ரொம்ப நன்றிடா....-வெற்றி

டேய் ரொம்ப பேசாத டைம் ஆகிடுச்சி கிளம்புங்க...அப்புறம்அங்க உங்கள கூப்பிட ஆள் வந்துருவாங்கா....சந்தோசமா இருங்கடா –ராகவன்

சரிடா போய்டுவாரோம் –வெற்றி

போய்டு வாரோம் அண்ணா என இருவரையும் பார்த்து கூறினாள் லட்சுமி...

அவர்களின் விமான பயணம் தொடங்கியது..

விதியின் பயணமும் அவர்களை தொடர்ந்தே சென்றது........








 
Status
Not open for further replies.
Top