All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலா ஶ்ரீதரின் "என் காதல் பொய்யும் இல்லை" - கதை திரி

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ ப்ரண்ட்ஸ்,
எல்லோருக்கும் என் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் புது கதையுடன் வந்துவிட்டேன்.

கதையின் பெயர் - என் காதல் பொய்யும் இல்லை
நாயகர்கள் - கௌதம், விக்ரம்
நாயகி - சந்தியா

இக்கதையை பற்றி பெரிதாக எதுவும் சொல்ல போவதில்லை. இளமை எப்படி அழகோ அதுபோல் நரை பருவமும் அழகு. காதல் எப்படி அழகோ அதுபோல் ஊடலும் அழகு. எத்தனை சண்டைகள், சச்சரவுகள், போராட்டங்கள் வந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் அதே காதலோடு வாழ்வதே வாழ்க்கை. அப்படியொரு கதை தான் என் காதல் பொய்யும் இல்லை.

புது முயற்சியாக இரண்டு பாகங்களாக எழுதியுள்ளேன். அத்தோடு முந்தைய கதையோடு சில பல ஒற்றுமைகளை இக்கதையில் காணலாம். ஒற்றுமையை கொடுத்து தான் எழுதியுள்ளேன். அதற்காக விடையை கதையின் இறுதியில் சொல்கிறேன்.

மற்றதை கதையில் காணலாம். வாரம் இரண்டு அல்லது மூன்று அத்தியாயங்கள் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். முந்தைய இரண்டு கதைகளை போல் இந்த கதையிலும் உங்களது ஆதாரவை தாருங்கள் ப்ரண்ட்ஸ்.


34891

34892
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் காதல் பொய்யும் இல்லை - பாகம் 1

34893

காதல் - 1

சென்னையில் இருக்கும் அந்த மென்பொருள் அலுவலகத்தில் மிகவும் பரபரப்பாக வேலைகள் நடந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் அமெரிக்க உச்சரிப்பில் யாரோ ஒருவர் பேசி கொண்டிருக்க அதை ஒவ்வொருவரும் அவரவர் இடத்தில் இருந்த தொலைபேசியின் வழியாக சத்தமாக ஒலிக்க விட்டு கேட்டு கொண்டு இருந்தனர். இன்னொரு பக்கம் அந்த கருப்பு வண்ண திரையில் இருக்கும் வெள்ளை நிற எழுத்துக்களை(கோட்) காட்டி ஒருவர் சந்தேகம் கேட்டுக் கொண்டிருக்க சுற்றி இருந்தவர்கள் அதிலிருக்கும் பிழையை எப்படி சரி செய்யலாம் என்று ஆலோசித்து கொண்டிருந்தனர். இன்னும் சிலர் சற்று தள்ளியிருந்த பேன்ட்ரிக்கு வெளியே காப்பி கோப்பையை கையில் வைத்து கொண்டு காப்பி குடித்தப்படியே அளவலாவி கொண்டிருந்தனர்.

அதற்கு பக்கத்தில் இருந்த அறையில் அதே அமெரிக்க அழைப்பில் பேசி கொண்டிருந்தாள் அவள். இல்லையில்லை சமாளித்து கொண்டிருந்தாள்.

“சாரி டென், சேன்ஞஸ் வேர் ரிவெர்டெட் ஃப்ரெம் புரொடக்‌ஷன் அஃப்டர் தி அவுட்டேஜ் தட் ஹேப்பென்ட் இன் தி ஏர்லி மார்னிங் டுடே. தி டீம் இஸ் ஒர்கிங் ஆன் தி பிக்ஸ். வி வில் ஷிப் இட் டூ எஸ்டி பை இஓடி. மோஸ்ட் லைக்லி இட் வில் பீ இன்க்ளுடேட் இன் திஸ் வீக்எண்ட்’ஸ் டெப்லாய்மென்ட்” அவள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவளது கைபேசி அதிர்ந்தது. அவள் மீட்டிங்கில் இருந்ததால் கைபேசியை சைலண்ட்டில் வைத்திருந்தாள். கைபேசியை பார்த்தவள் அதில் ‘சாவித்ரி’ என்று திரையில் காட்ட அந்த அழைப்பை நிராகரித்து ‘ஐ எம் இன் மீட்டிங் நவ். ஐ வில் கால் யு பேக் லேட்டர்’ என்ற குறுஞ்செய்தியை அனுப்பியவள், தனது அலுவலக அழைப்பில் மூழ்கினாள்.

இரவு மணி ஏழரை இருக்கும். அந்த அறையின் கதவை தட்டிவிட்டு திறந்தான் ஒருவன்.

“யெஸ் விஷால், கோட் பிக்ஸ் ஆகிடுச்சா”

“இல்ல அந்த இஸ்யூவ ரெசால்வ் பண்ணா, புது இஸ்யூ வருது. இப்ப டேட்டாபேஸ்ல சரியா அப்டேட் ஆகமாட்டேங்கிது. அதான் உங்க ஹெல்ப் கேட்கலாம்னு வந்தேன். நீங்க கொஞ்சம் கோட் வந்து பார்க்கறீங்களா” அவளுக்கு கீழ் பணிபுரியும் விஷால் கேட்க

“ஒய் நாட்” என்று கையில் தனது ஐ-ஃபோனை எடுத்துக்கொண்டு எழுந்து வந்தவள் அந்த டீமின் ஏ.டீ.எம் எனப்படும் அசிஸ்டன்ட் டெலிவரி மேனேஜர். பால் வண்ணநிறத்தில் இருந்தவள் அவளது நிறத்திற்கு ஏற்றாற்போல் பேன்ட் மற்றும் பார்மல் ஷர்ட் டக் இன் செய்து அணிந்திருந்தாள். கூந்தலை இடை வரை லேயர் கட் செய்து லூசாக விரித்து விட்டிருந்தாள். கழுத்தில் மிகவும் மெல்லியதாக தங்க சங்கிலியும் அதில் ஒரு சிறிய பெண்டண்டும் இருந்தது. காதிலும் கண்ணை பறிக்காத சிறிய தோடு அணிந்திருந்தாள். வலது கையில் ஆப்பிள் ஐ-வாட்ச் அணிந்திருந்தாள். மற்றபடி வேறெந்த ஆபரணமோ அலங்காரமோ இல்லாமல் மேனேஜருக்கு ஏற்ற மிடுக்குடன் இருந்தாள். ஐ.டி பேட்ஜ் ஹோல்டர் மூலம் ஐ.டி கார்ட்டை பேண்ட் பாக்கெட்டில் மாட்டியிருந்தாள். அது திரும்பியிருந்ததால் அவளது பெயர் தெரியவில்லை. நடுத்தர உயரமாக இருந்தாலும் அவளது தோற்றத்தின் வாயிலாக உயர்ந்தே தெரிந்தாள். மிகவும் தைரியமான பெண்ணாக, எதையும் சாதிக்கக் கூடியவளாகவும் தெரிந்தாள். அவள் அந்த பார்மல் ஷூ அணிந்து நடந்து வரும்போது அழகும் கம்பீரமும் ஒன்றற கலந்திருந்தது.

ஒருமணி நேரத்திற்கும் மேல் அவர்களோடு அமர்ந்து போராடி பிரச்சனையை எல்லாம் சரி செய்தவள்,

“தேங்க் காட். எவேரிதிங் இஸ் ஃபைன் நவ். வீணா, அஃப்டர் டூயிங் யூனிட் டெஸ்டிங், ப்ளீஸ் ஷிப் இட் டூ எஸ்.டி. ஆல்சோ இன்பார்ம் தெம் அபௌட் தி ஷிப்மென்ட், சோ தட் தே கேன் ஸ்டார்ட் வித் தி டெஸ்டிங். ஐ வில் பீ ஆன் தி ரோட், சோ ஒன்ஸ் தி கோட் இஸ் ஷிப்ட், ப்ளீஸ் ட்ராப் மீ எ மெசேஜ் ஆர் கிவ் மீ ரிங். சோ தட் ஐ கேன் பர்சனலி டாக் டூ தி டெஸ்ட் டீம்’ஸ் மேனேஜர்” சொல்லிவிட்டு தன்னுடைய மடிக்கணினி மற்றும் பிறசாமான்களை பையில் எடுத்து வைத்துகொண்டு பணியிடத்தை விட்டு வெளியே வந்தவள் கீழ் அடித்தளத்திற்கு செல்ல மின்தூக்கியின் பொத்தானை அழுத்தினாள். அவளது முகத்திலேயே அவள் மிகவும் சோர்ந்து இருக்கிறாள் என்று நன்கு புலப்பட்டது.

கீழே சென்றவள் அந்த ஆள் நடமாட்டம் இல்லாத வண்டிகள் நிறுத்துமிடத்தில் அங்கொன்று இங்கொன்றுமாய் நிற்கும் கார்களுக்கு இடையில் நடந்து அவள் காலையில் நிறுத்திவிட்டு வந்த அவளது காரை நோக்கிச் சென்றாள். அதை தொலைவில் இருந்தே ப்ளூடூத் மூலம் திறக்கச் செய்தவள் கதவை திறந்து காரின் பின்பக்க இருக்கையில் தன்னுடைய மடிக்கணினி பையை பத்திரமாக வைத்துவிட்டு ஓட்டுனர் இருக்கையில் வந்தமர்ந்தாள். கைபேசியை எடுத்து சாவித்ரியின் எண்ணுக்கு ‘ப்ளீஸ் லேட் மீ நோ வென் யு ஆர் ஃப்ரீ. ஐ வில் கால் யூ’ என்றொரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு காரை இயக்க தொடங்கினாள். பின்னணியில் ‘முன்பே வா என் அன்பே வா.. ஊனே வா உயிரே வா..’ பாடல் மிதமான சத்தத்தில் ஒலித்து கொண்டிருந்தது. அவளது மனம் அந்த பாடலை உள்வாங்கி கேட்டு கொண்டிருந்தது. ஏனோ அந்த பாடல் அவளுக்கு மிகவும் பிடித்தமான பாடல். இன்பம் துன்பம் இரண்டையும் அவளுக்கு அந்த பாடல் கொடுக்கும். ஒருவேளை அந்த பாடல் இடம்பெற்றிருக்கும் படத்திற்கும் அவள் வாழ்க்கைக்கும் இருக்கும் ஒற்றுமையே அவளுக்கு அந்த பாடலை பிடிக்க செய்ததோ..? அதை கேட்கும் போதெல்லாம் அவளுக்கு இன்பம் துன்பம் இரண்டையும் தருமளவிற்கு அவளது வாழ்க்கையில் என்ன நடந்ததென்பதை அவள் மட்டுமே அறிவாள். அவள் மறக்க நினைக்கும் கருப்பு பக்கங்கள் அவை. அதை மறக்கமுடியாது என்பதையும் அவள் அறியாததல்ல. அவளால் முடிந்ததெல்லாம் அதை மறைத்து வைப்பது மட்டுமே.

சிறிது தூரம் சென்றிருந்த போது அவளது கைபேசிக்கு அழைப்பு.

“யெஸ் வீணா” என்றதும் அம்முனையில் இருந்த வீணா அவள் சொல்லிய வேலையை முடிந்துவிட்டதாக உறுதிப்படுத்தினாள். “தேங்க் யூ சோ மச் வீணா. ப்ளீஸ் ரீச் ஹோம் ஸ்செப்லி அண்ட் டெக்ஸ்ட் மீ” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவள் டெஸ்ட் மேனேஜரிடமும் பேசிவிட்டு அடுத்தடுத்து வந்த பாடல்களோடு கலந்து வண்டியை ஓட்டி கொண்டிருந்தாள்.

மறுபடியும் அவளது கைபேசி ஒலித்தது. இம்முறை அழைப்பது சாவித்ரி. அந்த அழைப்பை ஏற்றவள் ‘ஹலோ’ என்று இவள் சொல்வதற்குள் அவள் பேச தொடங்கினாள்.

“ஹலோ சந்தியா. எப்படிடி இருக்க” உற்சாக குரலில் கேட்டாள்.

“சாவி.. நான் நல்லாருக்கேன். நீ எப்படி இருக்க” சாவித்ரி அவளுடைய கல்லூரி வகுப்பு தோழி. வகுப்பு தோழி மட்டுமல்ல அவளுடன் ஒன்றாக கல்லூரி பேருந்திலும் பயணித்தவள்.

“நல்லாருக்கேன் சந்தியா” ஆரவாரமாக சொன்னாள்.

“சரி சொல்லு. என்ன ரொம்ப வருஷம் கழிச்சு கால் பண்ணிருக்க”

“நானாவது ரெண்டு மூணு வருஷம் கழிச்சாவது கால் பண்றேன். மேடம் அது கூட பண்றதில்ல” சாவித்ரி கேட்க அவளுக்கும் புரிந்தது, அவள் அனைவரிடமும் பேசுவதை குறைத்து பலவருடங்கள் ஆனது என்றும் அதை தான் சாவித்ரி சுட்டிக் காட்டுகிறாள் என்றும்.

சந்தியா முதலில் இருந்தே அதிகம் பேசுபவள் இல்லை. அளவாகவே பேசுவாள். தேவையில்லாமல் வாயை திறக்கமாட்டாள். பேருந்திலும் சாவித்ரி தான் வளவளவென பேசிக் கொண்டு வருவாள். இவளோ பொறுமையாக கேட்டுக்கொண்டு மட்டுமே வருவாள்.

பேச்சை மாற்றும் வகையாக “வீட்ல எல்லாரும் எப்படிடி இருக்காங்க. ஹஸ்பெண்ட் அப்புறம் உன் குட்டி பையன் எல்லாம் எப்படி இருக்காங்க” என்று சந்தியா கேட்டதும்.

“என்னது, குட்டி பையனா. அவன் இப்போ பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் போயிட்டான்டி. என் பொண்ணுக்கே ஒன்றரை வயசு ஆகுது”

“ஓ அப்படியா. சூப்பர்டி. சாரி, பேசி ரொம்ப நாளாச்சா அதான்”

“நில்லு நான் ஃபோன் பண்ண விஷயத்தை சொல்லிடுறேன். அப்புறம் என் பொண்ணு முழிச்சிட்டானா அவ்ளோதான் பேசவே விடாது” என்று சாவித்ரி சொல்ல “சரி சொல்லு” என்றாள் சந்தியா.

“நெக்ஸ்ட் மன்த் பிஃப்டீன்த் நம்ம கிளாஸ்ல இருக்க எல்லாரையும் கூப்பிட்டு ஒரு கெட் டுகெதர் வைக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம். அதான் நானும், நம்ம கிளாஸ் பிரபுவும் சேர்ந்து எல்லாரையும் கால் பண்ணி கூப்பிட்டுட்டு இருக்கோம்” சாவித்ரி சொன்ன உடனே சந்தியாவிற்கு முகம் வாடி போனது.

“எதுக்குடி திடீர்னு இதெல்லாம்” அவளுக்கு தான் இப்போது யாரையும் சந்திக்க விருப்பம் இல்லையே. அதை மனதில் கொண்டே கேட்டாள்.

“எதுக்கு திடீர்னா. என்னடி விளையாடுறீயா. நம்ம காலேஜ் முடிச்ச அடுத்த வருஷம் மீட் பண்ணோம். அத்தோட எட்டு வருஷம் கழிச்சு இப்ப தான் பிளான் பண்ணிருக்கோம்” அவள் சொன்னதற்கு சந்தியாவிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் போக “என்னடி யோசிக்கற. லாஸ்ட் டைம் மாதிரி இந்த டைமும் ப்ரண்ட்ஸ் அண்ட் பேமலிய கூட்டிட்டு வரலாம். நீ வேணும்னா கௌதமை கூட்டிட்டு வா. லாஸ்ட் டைம் கௌதம் கூட தான வந்த” ‘கௌதம்’ அந்த பெயரை கேட்டதும் ஓட்டி கொண்டிருந்த காரை பிரேக் அடித்து நிறுத்தினாள்.

இதையறியாத சாவித்ரி “கேக்க மறந்துட்டேன். கௌதம் எப்படி இருக்காங்க. ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால இருக்கீங்களா, இல்ல இப்பவும் லவ் பண்ணிக்கிட்டே தான் சுத்திக்கிட்டு இருக்கீங்களா. ஒருவேளை எங்களுக்கெல்லாம் சொல்லாம கல்யாணம் பண்ணி குழந்தை குட்டினு செட்டில் ஆகிட்டிங்களா” அவள் சொல்ல சொல்ல சந்தியாவின் முகத்தில் எந்த உணர்வும் இன்றி வெறுமையாக இருந்தது. அந்நேரத்தில் சாவித்ரியின் குழந்தை அழ “பாப்பா எழுந்துட்டா. சரிடி நீ ஃப்ரீயா இருக்கப்போ கூப்பிடு. கெட் டுகெதர் எங்க, எத்தனை மணிக்குனு எல்லாம் உனக்கு மெசேஜ் பண்றேன் ஓகேவா. நான் ஃபோனை வச்சிடுறேன்டி. அவங்கள கேட்டதா சொல்லு” என்றுவிட்டு அழைப்பை துண்டிக்க, கௌதமிற்கு பிறகு அவள் சொன்ன எதுவும் இவளது காதில் விழவில்லை. காரை நிறுத்திய இடத்திலேயே அப்படியே உறைந்திருந்தாள்.

அந்த தெரு ஆள் நடமாட்டம் இல்லாமல், வண்டிகள் எதுவும் வராமல் இருந்ததால் வண்டியை நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறோம் என்பதை உணர்த்த யாருமில்லை.

அப்படியே பித்து பிடித்தவள் போல் இறுகி போய் அமர்ந்திருந்தாள். அப்போது அந்த பக்கம் வந்த காரில் இருந்தவர் அவளை முன்செல்ல சொல்லி ஒலியை எழுப்பினார். கண்ணாடி வழியாக பார்த்தவளுக்கு தான் காரை தெருவின் நடுவே நிறுத்தி இருப்பது புரிந்து வண்டியை முன்நோக்கி இயக்கினாள்.

இருந்தும் அவளது மனம் வண்டியை ஓட்டும் நிலையில் இல்லை. ஓரு ஓரமாக வண்டியை நிறுத்தியவள் ஸ்டேரிங் வீலின் மீது தெம்பில்லாமல் முகம் புதைத்தாள். எதைப் பற்றியும் யோசிக்கக்கூடாது என்று முடிவு எடுத்திருந்தாலும் அவள் மனம் அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக இல்லை. அவள் வேண்டாமென்று தூக்கி எறிந்ததை அது விட்டு கொடுக்கமாட்டேன் என்று பிடித்து வைத்திருந்தது. ஆம் பிடித்து தான் வைத்திருந்தது. அவனின் நினைவை. அவளின் அவனின் நினைவை.

அதை இப்போது அலைபாயவிடவும் தொடங்கிற்று.

‘கௌதம்’

‘அத்லெடிக்ஸ் இண்டிவியூஜுவல் சாம்பியன்ஷிப் – பாய்ஸ் - கௌதம் செல்வராஜ்’

‘டேய் ரௌடி’

‘ஐ லவ் யு பேபி’

‘ஐ லவ் யு டூ கௌதம்’

‘போகாத கௌதம். ப்ளீஸ் கௌதம் போகாத. என்னால இங்க எதையுமே தனியா சமாளிக்க முடியாது. ப்ளீஸ் போகாத. கௌதம்ம்ம்’

‘நான் உன்னை விட்டுடமாட்டேன் சனு. நான் எங்கடா போறேன் இன்னும் கொஞ்சநாள்ல திரும்ப வந்திடுவேன். அதுவரைக்கும் நாம ஃபோன்ல பேசி, வீடியோ கால்ல பார்த்து லவ் பண்ணிக்கிட்டே இருப்போமாம். ஓகேவா சனு, கொஞ்சம் சிரி’ அவள் மனதிலிருந்து அவள் வேண்டாமென்று புறக்கணித்த ஏகப்பட்ட நினைவுகள் வெளியே வர தொடங்கியது. அது தந்த வலியில் வெடுக்கென்று எழுந்தவள் பாரம் தாங்காமல் தலையை அழுந்த பிடித்துக்கொண்டாள். கண்களிலிருந்து தன்னை மீறி வழிந்து வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு அந்த குரல் மட்டும் தான் தன்னை ஆசுவாசப்படுத்தும் என்று ஏதோ ஒரு எண்ணிற்கு அழைத்தாள். மறுமுனையில் அழைப்பை ஏற்காத காரணத்தால் கைபேசியை தூக்கி பக்கத்து இருக்கையில் வீசிவிட்டு வண்டியை எடுத்து புறப்பட்டாள்.

வீட்டிற்கு வந்தவள் அங்கே அமர்ந்திருந்த தாய் மீனாட்சியையும் தம்பி சக்தியையும் முகம் கொடுத்து பார்க்காமல் நேராக உள்ளே செல்ல முற்பட்டாள்.

மீனாவோ அவளை தடுத்து நிறுத்தியவர் “சந்தியாம்மா. என்னடா முகமே வாட்டமா இருக்கு. இன்னைக்கு என்ன வேலை அதிகமோ. சரி, நீ போயிட்டு பிரெஷ் ஆகிட்டு வா. சாப்பிடலாம்” மகளது முகத்தை பார்த்ததும் மனமுடைந்து போனவர் வெளியே காட்டிக் கொள்ளாமல் அனுசரனையாக அவள் கன்னத்தை தாங்கி சொன்னார்.

“இல்லம்மா எனக்கு எதுவும் வேண்டாம். வொர்க் லேட் ஆனதால நாங்க ஆபீஸ்லயே ஆர்டர் செஞ்சி சாப்பிட்டுட்டோம்” சாப்பிட பிடிக்காததால், சாப்பாடு இறங்காது என்பதால் பொய் சொன்னவள் “நீங்களும் சக்தியும் சாப்பிட்டீங்களா” குரலில் எந்த உணர்வும் இல்லாமல் கேட்டாள்.

“இல்லம்மா இன்னும் இல்ல. நீ வரணும் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்” அவர் சொல்லி முடிப்பதற்கும்

“சந்தியாக்கா. உடம்பு முடியலையா என்ன. டல்லா இருக்க. அழுதமாதிரி வேற இருக்கு” தம்பியவன் நடந்ததை நேரில் பார்த்தவன் போல் கேட்டான்.

“அதெல்லாம் இல்ல சக்தி. ரொம்ப நேரம் சிஸ்டம் பார்த்துட்டு இருந்தேன்ல, அதான் கண்ணெல்லாம் சிவந்திருக்கு. வேற ஒண்ணுமில்ல. நான் மேல போறேன்ம்மா. நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க” தெள்ள தெளிவாக பொய் சொன்னாள். அவளுக்கு தான் அவர்களிடம் உண்மையை மறைப்பதும் பொய் கூறுவதும் கை தேர்ந்த ஒன்றாயிற்றே. அதையும் தான் அவள் பல வருடங்களாக செய்துக் கொண்டு தானே இருக்கிறாள்.

“கொண்டு போன லஞ்ச் பேக் எங்கம்மா” மீனா கேட்க

“அது.. கார்லயே வச்சிட்டு வந்துட்டேன்ம்மா. இரு நான் போய் எடுத்துட்டு வந்துறேன்” மாடிப்படி ஏறியவள் கீழே இறங்கி வர

“இல்லக்கா நீ போய் ரெஸ்ட் எடு. நான் போய் எடுத்துட்டு வந்து தரேன்” சக்தி அவளது சோர்வை உணர்ந்தவனாக சொன்னான். அவனுக்கு என்ன தெரியும், அது உடல் சோர்வல்ல மன சோர்வென்று.

“நான் வேணா பால் கொண்டு வரட்டுமா சந்தியாம்மா” தாயவர் மனம் எதையோ ஏற்றுக்கொள்ள மறுக்க மறுபடியும் கேட்டார்.

அதை புரிந்தவளாய் “அம்மா, அதெல்லாம் ஒண்ணுமில்ல. இப்ப எனக்கு போய் படுத்தா போதும்னு இருக்கு. நான் போய் தூங்கறேன். நீங்க ரெண்டுபேரும் சாப்பிடுங்க. இன்னொரு தடவை எனக்காக இப்படி சாப்பிடாம காத்திட்டு இருக்காதீங்க” அதட்டும் குரலிலேயே சொன்னாள்.

தந்தை தவறியபின் அவள்தானே ஆண் மகனாய் அந்த குடும்பத்தை பார்த்துக் கொண்டாள். முத்துகிருஷ்ணன் தவறியபோது, சக்தி பண்ணிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். சந்தியாவோ வேலைக்கு சேர்ந்து ஒரே மாதம் தான் ஆகி இருந்தது. அதுவும் அப்போது அவளுக்கு அது பயிற்சி காலம். இந்த எட்டு வருடத்தில் அவளும் தான் எத்தனை கடினமான பாதையை கடந்து வந்திருக்கிறாள். இருந்ததோ தந்தை வேலை செய்யும் இடத்தில் கொடுத்த வீட்டில். தந்தையோ மாத சம்பளத்திற்கு பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்த கார் ஓட்டுநர். இவளோ அப்போதே வேலையில் சேர்ந்தவள். திடீரென்று ஒருநாள், முத்துகிருஷ்ணன் இவர்களை விட்டு பிரிந்து செல்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அவள் அதற்கு முன் வரை தைரியமான பெண் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. தந்தையின் கையை பற்றியே வாழ்பவள். அவர் சென்றதும் குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம். காலம் தைரியத்தை கையில் திணித்துவிட்டு சென்றது. அவளும் அதை விடாமல் பற்றி கொண்டாள். அவளுக்கு தான் வேறு வழி என்ன இருந்தது. எட்டு வருடங்கள் ஓடியே விட்டது. இன்று இவளது பேச்சிற்கு மறுபேச்சு கூட மீனாட்சியும் சக்தியும் பேசமாட்டார்கள். அது பயத்தினால் அல்ல. குடும்பத்திற்காக மெழுகாய் கரையும் அவளின் மீதுள்ள மரியாதையால்.

தாயும் தம்பியும் அவளை அவள் போக்கிலேயே விட்டுவிட, மாடிபடி ஏறி தன் அறையை அடைந்தவள் உள்ளே வந்து கதவை அடைத்தாள்.

படுக்கையில் போய் விழுந்தவள் அழக்கூடாது என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள். தன்னை தானே தேற்றியும் கொண்டிருந்தாள். உறக்கம் வராமல் நினைவுகளின் பாரம் தாங்காமல் வெகுநேரம் புரண்டு கொண்டிருந்தாள் இவள்.

அந்த விடியற்காலை வேளையில் தன்னுடைய மடிக்கணினி அவன் எதிரே இருந்த மேசையில் இருக்க, அதற்கு நேராக சுழலும் நாற்காலியில் அமர்ந்திருந்தவன் விசைப்பலகையை தடதடவென தட்டி கொண்டிருந்தான். அவனது வேகத்துக்கு ஈடு கொடுத்து எழுத்துக்களும் அந்த திரையில் வந்து கொண்டிருந்தது. அவனுக்கு தான் என்ன வலியோ வேதனையோ. இப்படி ஊரே கண்ணயர்ந்திருக்கும் நேரத்தில் இவன் மட்டும் ஏன் இப்படி உறக்கம் தொலைத்து இல்லையில்லை உறக்கம் மறந்து மனதின் வேகத்தை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில், யார்மேலும் காட்டிவிட முடியாத கோபத்தை அந்த விசைப்பலகையிடம் காட்டி கொண்டிருந்தான்.

அதே வேகத்தில் திரையின் கீழிருந்த செய்தி அனுப்பும் செயலியை திறந்து ‘ஹாய்! ஷிப்மென்ட் இஸ் டன். ப்ளீஸ் ப்ரோசீட் வித் எஸ்.டி’ என்று அனுப்பிய குறுஞ்செய்திக்கு நேராக அவனது பெயர் கௌதம் செல்வராஜ் என்றிருந்தது. அப்போது தான் சைலண்ட்டில் இருந்த தன் கைபேசியை பார்த்தான். அதில் அவன் தவறவிட்ட அழைப்பு இருந்தது. நேரத்தை பார்த்தவன் முக்கியமானதாக இருக்கக்கூடும் என்று திரும்ப காணொலி அழைப்பாகவே அழைத்தான்.

அவள் அழைப்பை ஏற்றதும் “ஹலோ குட்டி” என்றான் இம்முனையில் கௌதம்

“பேபி” என்றாள் அம்முனையில் சந்தியா

“என்ன குட்டி திடீர்னு நைட்ல கால் பண்ணியிருக்க” பதற்றமும் வேதனையும் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

“எனக்கு உன்னை பார்க்கணும், உங்கிட்ட பேசனும் போல இருந்துச்சு” சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்து வந்தது. திரையில் தெரிந்த அவனது முகத்தை தடவியவள் நெற்றியில் முத்தமிட்டாள்.

“என்னாச்சு.. ஏன் அழற. அழாத குட்டிம்மா. நீ அழுதா மாமாவால தாங்க முடியாதுனு தெரியும்ல. இப்ப என்ன, மாமா அங்க வரலைனா என்ன. டிக்கெட் போடறேன். நீ இங்க கிளம்பி வந்திடு” சமாதானப் படுத்தும் விதத்தில் சொன்னாலும் அவளின் அழுகை அவனது மனதை பிசைந்தது. அவனால் தான் இந்தியா வர முடியாதே. அப்படி வருவதையும் அவன் விரும்பவில்லையே. அவனாக தானே கட்டுண்டு ஆஸ்திரேலியாவில் வந்து அமர்ந்திருக்கிறான். அவனால் முடிந்ததெல்லாம் அழும் அவளது முகத்தை பார்த்து வலியில் துடிப்பது.

இவள் அழுவதை பார்த்து அவன் பதறுவதையும் துடித்து போவதையும் கண்டவள் அவ்வளவு தூரத்தில் இருப்பவன் முன் அழுதால் அவன் பயந்துவிடுவான், அது அவனுக்கு நல்லதல்ல. அதுவுமில்லாமல் தற்போது இவளால் உடனே சென்று அவனை பார்க்கவும் முடியாது. அவனாலும் இவளை வந்து பார்க்கமுடியாது என்பதை புரிந்து, கண்களை துடைத்துக்கொண்டே கடிகாரத்தில் நேரத்தை பார்த்தாள். இவ்வளவு நேரம் உறங்காமல் விழித்திருக்கிறான் என்பது அப்போதே அவளது புத்திக்கு எட்டியது. “என்ன பேபி. நான் உன்னை சீக்கிரமா தூங்கணும்னு சொல்லிருக்கேனா இல்லையா. நீ ஏன் இவ்ளோ நேரம் முழிச்சிட்டு இருக்க. திஸ் இஸ் நாட் குட் ஃபார் யுவர் ஹெல்த். பேசினது போதும் போய் படுத்து தூங்கு” அவனை அதட்டி சொன்னாள். அப்போது தான் அவளுக்கு நேரம் தாழ்ந்து அவனுக்கு அழைத்து எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்தோம் என்பது புரிந்தது.

“இப்ப என் செல்லகுட்டி சரி ஆகிட்டாங்களா. சிரி பார்ப்போம்” மறுபடியும் உறுதிப்படுத்தி கொள்ள கேட்டான்.

சிரித்துக்கொண்டே “லவ் யு பேபி. போய் தூங்கு போ” என்று சொன்னாள்.

“லவ் யு டூ குட்டி. நீயும் இப்ப போய் தூங்கணும். காலைல நீ தூங்கினியானு செக் பண்ணுவேன்” திரையில் தெரிந்த அவளுக்கு அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

அழைப்பை துண்டித்த சந்தியா அவனிடம் பேசியதில் மனம் லேசாகியதை உணர்ந்து புன்னகைத்து “ஐ லவ் யு பேபி” என்று அவனை மனதில் எண்ணி உள்ளம் குளிர்ந்தாள்.

அழைப்பில் தொடர்ந்து இருந்தான் கௌதம். அவனிடம் பேசிய அவனது அக்காவின் மகள் தொலைபேசியை தன் அன்னையிடம் தர, அவள் அதை வாங்கி பேசினாள்.

“சாரி கௌதம். இந்த டைம்ல கால் பண்ணிட்டேன். இவ நல்லா தூங்கிட்டு இருந்தா. திடீர்னு என்ன நினைச்சானு தெரியல தூக்கத்துல இருந்து எழுந்து கௌதம் மாமா.. கௌதம் மாமானு ஒரே அழுகை. நானும் இளனும் எவ்வளவோ சமாதானப்படுத்தி பார்த்துட்டோம் சமாதானமே ஆகல. இவர் கூட உனக்கு அங்க விடிஞ்சி கூட இருக்காது, தூங்கிட்டு இருப்பனு சொன்னாரு. எனக்கு தான் இவளை எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல. இப்படி அழுதானா அவளுக்கு பிட்ஸ் வந்திடும். அதான் வேற வழி தெரியாம கால் பண்ணிட்டேன். ஐ ஆம் சாரி தம்பி, உன் தூக்கத்தை கெடுத்துட்டேன்” தம்பியை இந்த நேரத்தில் எழுப்பிவிட்டோமே என்ற வருத்தத்தில் வார்த்தைகளை தேடி தேடி பேசி கொண்டிருந்தாள் அவனின் அக்கா தமயந்தி. தமயந்தி அவளது இரண்டு பிள்ளைகளோடு ஒரு மாதத்திற்கு முன் தான் விடுமுறைக்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிட்னிக்கு சென்று தம்பியுடன் தங்கிவிட்டு வந்தாள். அந்த ஞாபகம் வந்துவிட்டது போல் அவனது அன்பு மருமகளுக்கு. தமயந்தி சென்னையில் மிக பெரிய மகப்பேறு மருத்துவர். அவளுக்கு ஆறரை வயதில் ஒரு மகனும் மூணே முக்கால் வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். மகள் தான் தன் மாமனின் நினைவில் இந்த இரவில் படுத்தி எடுத்துவிட்டாள். இங்கே இந்தியாவில் அவ்வளவு நேரமாகவில்லை என்றாலும் அங்கே கௌதமிற்கு அது உறங்கும் நேரம் என்பதை நன்கு அறிந்த தமயந்தி முதலில் தயங்கினாள். கடைசியில் மகள் வென்றுவிட்டாள்.

“என்ன தமை, இதுக்கு போய் இவ்ளோ எக்ஸ்ப்லனேஷன் தேவை தானா. என் மருமக எங்கிட்ட எப்ப வேணும்னாலும் பேசலாம். நீ இதை இடைஞ்சல்னு எல்லாம் நினைக்காத. சரி, நீ எப்படி இருக்க” என்று கேட்க, அதற்கு அவள் ‘ஹ்ம்ம்’ என்று சொல்லவும் “சரி அத்தானை கேட்டதா சொல்லு. நான் உங்கிட்ட நாளைக்கு பேசறேன். லேட்டாகுது பாரு. போய் படுங்க” என்று அழைப்பை துண்டிக்க போனவனை

“நீயும் போய் தூங்கு கௌதம். இன்னும் விடிய நிறைய டைம் இருக்கு” தம்பி மேல் கொண்ட பாசத்தாலும் அக்கா அவளுக்குள் அவனுக்கென ஓர் அன்னையும் இருப்பதாலும் சொன்னாள்.

“இனி எங்க தூங்கறது. நீ போய் தூங்கு. இது நான் ஜாகிங் போற டைம்” சிரித்த முகத்துடனே சொன்னான். அவனுக்கு மட்டுமே தெரியும், அவனே உறக்கம் வராமல் பொழுதை போக்கிக்கொண்டு இருந்தான் என்று. அதை அவளிடம் சொல்லி அவளையும் வேதனைப்படுத்த அவன் விரும்பவில்லை. அதற்கு பொய் கூறுவது மேல் என்றுணர்ந்தான். அவனுக்கும் தான் அவர்களிடம் உண்மையை மறைப்பதும் பொய் கூறுவதும் கை தேர்ந்த ஒன்றாயிற்றே. அதையும் தான் அவன் பல வருடங்களாக செய்துக் கொண்டு தானே இருக்கிறான்.

அழைப்பை துண்டித்தவன் இந்த எட்டு வருடத்தில் அவன் கடந்து வந்த வலிகளும் வேதனைகளும் அவனை ஆட்கொள்ளும் முன், தன்னுடைய நாற்காலில் சாய்ந்தமர்ந்து கையை தலைக்கு கொடுத்து கண்களை மூடி முட்டுக்கட்டை போடப்பார்த்தான்.

ஆனால், அவனுக்கும் தெரியாதா என்ன. கண்களை மூடி கொள்வதால் எதையும் விலக்கி வைக்கமுடியாது அந்த வலிகளை அவன் அனுபவித்தே தீரவேண்டும் என்று.

விடிந்தும் விடியாமலும் இருந்த அந்த காலை நேரத்தில், பாதசாரிகள் நடந்துப்போகும் பாதையில் ஓடி கொண்டிருந்தான். காதில் ஏர்பாட்ஸ் அணிந்திருந்தவன் வலிகளை விரட்டி தன்னை பாடல்களுக்குள் மூழ்கடிக்க பார்த்தான். ஆனால், எப்போதும் அவனை துரத்தும் அந்த குரல் இன்றும் துரத்தியதால், அவனால் பாடலில் கவனம் செலுத்த முடியவில்லை. தன்னுடைய இயலாமை தந்த வலியிலிருந்து தன்னை காப்பாற்றி கொள்ளமுடியாத கோபத்தை ஓட்டத்தில் காட்டினான். வேகத்தை கூட்டியவன் பறக்க தொடங்கினான். அவனது ஆறடிக்கும் மேற்பட்ட உயரத்திற்கு, அடிகள் ஒவ்வொன்றும் இடியாய் தரையில் பதிந்தன. புயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தவனை பார்த்து அவனது மனசாட்சி கைக்கொட்டி சிரித்தது.

‘என்ன கௌதம். எதுக்காக இந்த ஓட்டம். நீ எவ்ளோ ஓடினாலும், உன்னால உண்மைய விட்டு ஓட முடியாது. நிஜத்தை விட்டு ஓட முடியாது. நீ நிஜத்தை சந்திச்சே ஆகணும்’ மனசாட்சி அவனிடம் கேள்விக்கு மேல் கேள்வியை கூர்அம்பாய் தொடுத்து கொண்டிருந்தது. அது அவனது மனதை குறிபார்த்து தைக்க, அவனது கால்கள் தளர்ந்து வேகம் குறைந்தது. ஒரு கட்டத்தில் அப்படியே நின்றுவிட்டான். நின்ற கணத்தில் அவனை மறுபடியும் துரத்த தொடங்கியது அந்த குரல். அதன் பிடியில் அவன் சிக்கி தினம் தினம் மரணித்து கொண்டிருந்தான். இன்றும் அதே நிலை தான். அக்குரலிடமிருந்து தப்பிக்க மீண்டும் ஓடினான்.

எந்த குரல் அவனை இப்படி தினம் தினம் குத்தி கூறுப்போட்டு கொண்டிருக்கிறது. எந்த குரலின் பிடியிலிருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்துக் கொண்டிருக்கிறான். எந்த குரல் கௌதமை ஆட்கொள்வது. விடையை அவன் மட்டுமே அறிவான்.

இங்கே சந்தியா தன்னை மறந்து ஒரு குழந்தைப் போல் உறங்கிக் கொண்டிருந்தாள். எந்த குரல் அவளையும், அவளது கவலையையும் மறக்க செய்து உறங்க வைத்தது. எந்த குரல் அவளை ஆசுவாசப்படுத்தியது. சந்தியா கௌதமிடம் பேசவில்லை என்றால் வேறு யாரிடம் பேசினாள். விடையை அவள் மட்டுமே அறிவாள்.


உண்மையாகும்..


ஹலோ ப்ரண்ட்ஸ்,
முதல் அத்தியாயம் எப்படி இருந்ததென்று உங்களுடைய கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 2

கௌதம், ஆறடிக்கும் மேல் உயரம். அந்த உயரத்திற்கு ஏற்ற கட்டுக்கோப்பான உடல் தோற்றத்திலேயே நடைபயிற்சி, உடற்பயிற்சி என அனைத்தும் மேற்கொள்பவன் என்று நன்கு தெரிந்தது. மாநிறத்திற்கும் மேலான நிறம். ட்ரிம் செய்த மீசையும் தாடியும். பார்ப்பவர்கள் அவனுக்கு முப்பத்தியொரு வயது என்று சொன்னால் நம்பமாட்டார்கள். அவ்வளவு இளமையாக தெரிந்தான். பெண்களை மயக்கும் வசீகர தோற்றம் கொண்ட ஆணழகனே அவன்.

தன்னுடைய காலை ஓட்டத்தை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவனை ஹாலிலேயே அமர்ந்திருந்த அவனது தாய் செல்வராணி நிறுத்தினார்.

“நில்லு கௌதம். நீ வந்த வழியில மழையா என்ன” அவர் கண்களில் மகனின் மீது அக்கறையும் பதற்றமும் நிறைந்திருந்தது. இவனோ அவரது கேள்விக்கு காரணம் புரியாமல் குழம்பிப் போனவனாய்

“இல்லையேம்மா. ஏன் என்னாச்சு” புரியாத பார்வையோடு கேட்டான்

“அப்புறம் ஏன் இப்படி நனைஞ்சு வந்திருக்க” அப்போது தான், குனிந்து தன்னை முழுதாக பார்த்தான். அவன் அணிந்திருந்த ட்ராக்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஹூடி முழுவதுமாக நனைந்திருந்தது.

“அது வந்தும்மா. ஜாக் போயிட்டு வரேன்”

“ஏன் தம்பி இப்படி பண்ற. யாராவது இந்த குளிர்காலத்துல இந்த காலைல எழுந்து ஜாக் போவாங்களா. அதுவும் இப்படி தொப்பலா நனைஞ்சிட்டு வந்திருக்க. உடம்புக்கு எதாவது வந்தா என்ன பண்றது. இப்படி வியர்த்து ஊத்துற அளவுக்கு என்னப்பா அப்படி ஒரு ஓட்டம்” மகனை அந்த கோலத்தில் பார்க்க பார்க்க செல்வராணிக்கு மனம் பதைத்தது.

“அது வந்தும்மா..” அவரை சமாதானம் செய்யும் பொருட்டு அவரருகில் செல்லப் போனான். அவரோ மகன் மீது கொண்ட அக்கறையில் அவனது உடைகளை காட்டி அதை மாற்றிவிட்டு வரும்படி சொல்ல அதை புரிந்தவன் உள்ளே சென்று உடை மாற்றி வந்து அன்னையிடம் பேசத் தொடங்கினான்.

“தமை ஃபோன் பண்ணிருந்தாம்மா. அதான் சீக்கிரம் எழுந்துட்டேன். அப்புறம் தூக்கம் வரல. சரி ஜாகிங்காவது போகலாமேனு கிளம்பிட்டேன். இன்னைக்கு கொஞ்சம் ஹெவியா பண்ணிட்டேன் போல, அதான் ஸ்வெட் அதிகமா ஆகிருக்கு” அவரிடம் விளக்கி கொண்டிருக்க இப்போது மகனது கவலையோடு மகளது கவலையும் சேர்ந்துக் கொள்ள

“ஏன் தமையா இந்த காலைல போன் பண்ணா. புருஷன் பொண்டாட்டிக்குள்ள எதுவும் பிரச்சனை இல்லயே” தாயவர் துடித்து போய் நெஞ்சம் படபடத்து கேட்டார்.

“அதெல்லாம் இல்லம்மா. நம்ப கொற்றவை குட்டி தான் திடீர்னு என் ஞாபகம் வந்து தூக்கத்துல அழ ஆரம்பிச்சிட்டாளாம். அதான் குட்டிய எங்கிட்ட ஃபோன்ல பேச வைக்கலாம்னு தமை கால் பண்ணா. நம்ப கொற்றவையோட ஹெல்த் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே, அவ ரொம்ப நேரம் அழுதா அவளுக்கு பிட்ஸ் வந்திடும். அதுக்கு தான் தமையும் பயந்துப் போய் எனக்கு ஃபோன் பண்ணிட்டா” அவன் சொல்ல சொல்ல அவருக்கு பழைய நினைவுகள் தானாக அவரது நெஞ்சத்தை ஆட்கொண்டது.

“டாக்டர்னு தான் பேரு. இவங்க புருஷன் பொண்டாட்டி சண்டைல கொற்றவைய வாயும் வயிறுமா இருந்தப்போ செக்அப் போகல, சரியா சாப்பிடல, எதுவும் பண்ணல. அப்பவே அந்த குழந்தைக்கு சத்தான உணவும், கவனிப்பும் இருந்திருந்தா இன்னைக்கு இப்படி சிரமப்பட தேவையில்லயே” பேத்தியின் கவலையில் மூழ்கியவர் மகளின் வாழ்க்கையை பற்றியும் வருத்தப்பட்டார் “கல்யாணம் ஆன நாளுல இருந்தே ஒண்ணு இல்லனா இன்னொரு பிரச்சனை. மாப்பிள்ளை கட்டினா இவளை தான் கட்டுவேன், இல்ல கல்யாணமே பண்ணிக்க மாட்டேன், செத்துருவேன்னு சொல்லி வம்பு பண்ணி கட்டிக்கிட்டார். அப்படி இருந்தப்போ ரெண்டுபேருக்கும் இடையில என்ன பிரச்சனைனே தெரியல. கல்யாணம் ஆன ஐஞ்சே மாசத்துல திரும்ப வந்துட்டா. வாழ்ந்தாங்களா வாழலயானு கூட தெரியல. ஒன்றரை மாசம் கழிச்சு சமாதானம் பண்ணி உங்க அப்பா தான் விட்டுட்டு வந்தார். அப்புறம் பத்து மாசம் எல்லாம் ஒழுங்கா இருந்துச்சு. நம்ப அமுதனையும் உண்டாகிருந்தா. திரும்ப வீட்டுக்கு வந்துட்டவ அமுதனுக்கே ஒரு வயசு இருக்கப்போ தான் மாப்பிள்ளை வந்து கூட்டிட்டு போனார்”

“திரும்ப நம்ப கொற்றவை மாசமா இருந்தப்போ பிரச்சனை” என்று கண்களிலிருந்து வழிந்த வந்த கண்ணீரை துடைத்தார். பெற்றவர்களுக்கு பிள்ளைகளின் சந்தோசமே பெரியது. மிகவும் தேவையானதும் கூட. அவர்கள் வேதனையில் வாடும் போது பெற்றவர்களால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும். ஒருபுறம் மகன் இப்படி இருக்கிறான் என்ற வேதனை, அது போதாதென்று மகளின் கவலை வேறு. கடந்த முறை கொற்றவைக்கு உடம்பு முடியாமல் போன போது அவளை ஹாஸ்ப்பிடலில் வைத்து படாத பாடுபட்டு காப்பாற்றினர். கிட்டத்தட்ட அவளை இழந்து விடுவோமோ என்று அனைவரும் பயந்தே விட்டனர். அப்போது தான் கௌதமும் கடைசியாக சென்னை வந்து இரண்டு நாட்களுக்கு மேல் தங்கினான். இல்லையென்றால் தந்தையின் திதிக்கு முந்தைய நாள் வருவான். மகனாக திதியன்று செய்ய வேண்டிய காரியங்களை செய்வான். அடுத்தநாள் விடியற்காலையிலேயே கிளம்பிவிடுவான். செல்வராணிக்கு, எதையும் சரி செய்யமுடியாத ஆற்றாமை பல சமயம் அவரின் மீதே அவருக்கு கோபத்தை வரச்செய்யும். கணவர் இருந்தவரை அவர் அனைத்தையும் பார்த்து கொள்ள செல்வராணி வெறும் பார்வையாளரே. அதிலும் பாதி விபரம் அவருக்கு தெரிந்தும் கூட இருக்காது. இப்போது அனைத்தையும் பார்த்து வேதனையுற்று தவிப்பதும், மனம் தாளாமல் புலம்புவதுமே அவருக்கு இருக்கும் ஒரே வழியாகி போனது.

“இப்படி புருஷன் வீட்டுல இருந்ததை விட நம்ம வீட்டுல இருந்தது தான் அதிகம். கொற்றவை பிறந்த நேரம் தான், அப்பாவையும் அம்மாவையும் ஒண்ணா சேர்ந்து வச்சுச்சு. சரி, இனி நிம்மதியா வாழ்வானு பார்த்தா குட்டிம்மாக்கு உடம்புக்கு எதாவது ஒரு பிரச்சனை வந்து அவளை அலைகழிக்குது. என் பொண்ணு என்ன வரம் வாங்கிட்டு வந்தாளோ” அவர் வேதனையில் வதைய இவனோ அந்த வேதனையில் பாதி தன்னால் நிகழ்ந்தது என்றெண்ணி மனம் குமைந்தான். அவனுக்காகவும் அவனது வாழ்க்கைக்காகவும் தமயந்தி அவளது கணவரிடம் எவ்வளவு சண்டையிட்டிருப்பாள். இன்றும் அவளை ராணி போல் பார்த்து கொள்ளும் கணவரிடம் மனக்கசப்பு என்று ஒன்று இருப்பதென்றால், அது கணவரின் தலையீட்டால் தம்பியின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டதே என்பதற்காக மட்டும் தானே. இவையனைத்தும் கௌதமும் அறிந்ததே. சொல்லப்போனால் தாயைக் காட்டிலும் அவன் அதிகம் அறிந்ததே. அக்காவிற்காக அவன் நேசித்தவர்களுக்காக அவன் எடுத்த முடிவுகளோ ஏராளம். அந்த முடிவுகள் இன்றும் அவனை தூங்கவிடாமல் செய்துக் கொண்டிருக்கிறது.

நினைவுகளில் மூழ்கியவன் தன்னை தானே மீட்டு கொண்டு, தாயை சமாதானம் செய்ய அவரது கையை பிடித்து “வருத்தப்படாதீங்கம்மா. அதான், இப்ப எல்லாம் சரி ஆகிடுச்சுல. கொற்றவை சின்ன குழந்தை அதான் அவளுக்கு உடம்புக்கு இப்படியெல்லாம் பண்ணுது. இன்னும் கொஞ்சம் வளர்ந்துட்டானா இது எதுவுமே ஒண்ணுமில்லாம போயிடும். நம்ப தமை, இன்னும் நல்லா வாழறத நீங்களும் நானும் பார்க்க தான் போறோம்” தன்னுடைய எதிர்பார்ப்பையும் சேர்த்து சொன்னான்.

“சரி தமயந்திகிட்ட மட்டும் பேசினா போதுமா. அங்க உனக்கு நிறைய உறவுகள் இருக்குங்கறத மறந்துறாத கௌதம்” அவர் சொன்னதிலேயே அவர் யாரையெல்லாம் குறிப்பிடுகிறார் என்பதை புரிந்தவன்

“நான் யாரையும் மறக்கலம்மா. நான் எல்லாரோடயும் தான் பேசறேன். அரு, நிரா, நித்தினு எல்லார்கிட்டயும் தான் பேசிட்டு இருக்கேன். அவங்க எப்படி இருக்காங்க, என்ன பண்றாங்க, அவங்க வாழ்க்கைல என்ன நடந்துகிட்டு இருக்குன்னு எல்லாமே தான் தெரிஞ்சி வச்சிருக்கேன். அது என் கடமையும் கூட. நான் அவங்க பக்கத்துல வேணும்னா இல்லாம இருக்கலாம். அவங்களை போய் பார்க்காம இருக்கலாம். ஆனா, அவங்களுக்கு பக்கப்பலமா தான் இருக்கேன். அவங்களுக்கு ஒண்ணுன்னா தாங்கி பிடிக்கிற முதல் கை என் கையா தான் இருக்கும். அவங்களுக்கு செய்யறது என் பொறுப்புங்கறத நான் என்னைக்குமே மறக்கமாட்டேன் ம்மா” என்றான்.

“அவ்ளோ தானா கௌதம்” அன்னையவர் வேதனையுற்று கேட்க

“அவ்ளோ தானானா” புரிந்தும் புரியாதது போல் கேட்டான்.

“அவகிட்ட பேசவே கூடாதுனு முடிவு பண்ணிட்டியா. பேர் சொன்னப்போ கூட அவ பேரை சொல்லலையே” அவன் சொல்லாத பெயருக்கு உரிய நபரை எண்ணி அவர் மனம் பதைத்தது.

“எனக்கு சில பேர்கிட்ட எந்த தொடர்பும் வச்சிக்க விருப்பம் இல்லம்மா. முடிஞ்சிப்போனது முடிஞ்சி போனதாவே இருக்கட்டும்” தீர்க்கமாக சொல்லிவிட்டு அவனது அறைக்கு சென்றவனை விழியகற்றாமல் பார்த்திருந்தார். எதையும் செய்யமுடியாத இயலாமை அந்த தாயின் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது. மனம் வருந்துவதையும், கண்ணீர் வடிப்பதையும், கடவுளை துணைக்கு அழைப்பதையும் தவிர அவரால் வேறென்ன செய்யமுடியும்.

இந்தியாவில் காலை பொழுது அழகாக விடிந்திருந்தது. சிட்னியில் தான் இப்போது குளிர்காலம். இந்தியாவிலோ ஜூன் மாதம் என்பதை உணர்ந்து கதிரவன் செவ்வென தன் வேலையை செய்துக்கொண்டு இருந்தார். அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருக்கும் சந்தியாவிற்கு காலை சிற்றுண்டியும், மதிய உணவும் தயார் செய்து கொண்டிருந்தார் மீனாட்சி. சக்தி ஹாலில் அமர்ந்து நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, அவன் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தான். அவன் எப்போது வந்தாலும் வீட்டையே கலகலவென மாற்றிவிடுவான். ஆறடிக்கு சற்று குறைந்த உயரம், சிவந்த தேகம், கட்டுக்கோப்பான உடல் தோற்றம் கொண்டிருந்தான். அவன் வருவதை கவனித்த சக்தி “விக்ரம் அண்ணா. அம்மா இங்க வாயேன், விக்ரம் அண்ணா வந்திருக்காரு” அமர்ந்த இடத்திலிருந்தே தாய்க்கும் செய்தியை தெரிவித்துவிட்டான்.

“டேய் போதும். ஒரு வாரம் பார்க்காததுக்கு இவ்ளோ பில்ட்அப்பா” சக்தியிடம் பேசி கொண்டே அவனது அருகில் வந்தமர்ந்து, அவன் தோளில் கைப்போட்டவன் “ஹவ் வாஸ் யுவர் ப்ளைட்” என்று கேட்டான்.

“இட் வாஸ் குட்” மனதிலிருந்து மகிழ்ந்து சொன்னான். இருக்காதா என்ன. அவன் ஆசைப்பட்டு சேர்ந்த வேலையாயிற்றே. சிறுவயதில் தந்தை கார் ஓட்டும் போது, அந்த காரில் அமர்ந்து ஜன்னல் வழியாக அண்ணார்ந்து வானத்தை பார்த்து விமானம் ஓட்டவேண்டும் என்று ஆசைப்பட்டவனாயிற்றே. ஆசைப்பட்டதோடு அல்லாமல் அதை சாதித்தும் காட்டி இருக்கிறான். ஆம், சக்தி ஒரு விமானி. பறக்க ஆசைப்பட்டு பறந்து கொண்டும் இருப்பவன்.

“குட். நெக்ஸ்ட் எப்ப போகனும்” தந்தையை சிறுவயதில் இழந்தவன் என்பதால் சக்தியின் மீது விக்ரமுக்கு எப்போதும் தனி அன்பும், அக்கறையும் உண்டு. சக்திக்கும் விக்ரம் மீது மரியாதை அதிகம். சந்தியாவை எப்படி பார்க்கிறானோ, அப்படி தான் விக்ரமையும் பார்ப்பான்.

“நாளைக்கு எர்லி மார்னிங் போறேன்ண்ணா. சென்னை டூ துபாய். அங்க இருந்து ரிடர்ன். அது துபாய் டூ டெல்லி. தென் டெல்லி டூ கோழிக்கோடு, கோழிக்கோடு டூ ஹைதராபாத் அப்புறம் அங்க இருந்து திரும்ப சென்னைனு நாளன்னைக்கு தான்ண்ணா வருவேன்” ஆர்வமாகவும் பெருமிதத்தோடும் சொன்னான்.

“சூப்பர். கீப் கோய்ங் டா” விக்ரம் பேசிக்கொண்டிருந்த வேளையில் மீனாட்சி சமையல் அறையிலிருந்து வெளியே வந்தார்.

“அடாடா. வா விக்ரம். என்னடா பொங்கல் செய்யறோமே, இன்னைக்குனு பார்த்து விக்ரம் ஊர்ல இல்லயேனு வருத்தப்பட்டேன். கரெக்ட்டா நீ ஆஜர் ஆகிட்ட” என்றார். அவனை அவர் சிறுவயதிலிருந்து பார்த்தவராயிற்றே. அவன் மேல் ஒரு தனி பாசம் தான் மீனாட்சிக்கு.

“கவலையே படாதீங்கம்மா. அட்வகேட்னா சும்மாவா அதெல்லாம் கரெக்ட்டா அப்பியர் ஆகிடுவேன். வாசல்ல கால் வச்சப்பயே மோப்பம் பிடிச்சிட்டேன். அதுமட்டுமா, இங்க சக்திகிட்ட பேசிட்டு இருந்தது என் வாய் மட்டும் தான். என் காதுக்கு நீங்க முந்திரி பருப்பெல்லாம் போட்டு பொங்கலை நெய்ல தாளிச்சது, சட்னி அரைச்சது எல்லாம் கேட்டுட்டிச்சு. கூட நோஸ் விட்னஸா மூக்கையும் சேர்த்துகிட்டேன்” விக்ரம் சொல்ல அங்கே ஒரே சிரிப்பும் சத்தமுமாக இருந்தது.

“இங்க இவ்ளோ கலாட்டா நடந்துக்கிட்டு இருக்கு. என்ன சக்தி, நம்ப எம்.எம் இன்னும் அப்பியர் ஆகாம இருக்காங்க” மறவாமல் சந்தியாவையும் வம்பிழுத்தான்.

“இப்ப தானண்ணா ‘முன்பே வா என் அன்பே வா’ சாங் ப்லே ஆக ஆரம்பிச்சிருக்கு. இன் டென் மினிட்ஸ் நம்ப எம்.எம் ப்ளைட் டேக் ஆப் ஆகிடும்” சிரித்தபடியே சக்தியும் பதிலளித்தான்.

“இது மட்டும் அவ காதுல விழுந்துச்சு நம்ப ரெண்டுபேருக்கும் பொங்கல் கிடைக்காது, ஞாபகம் வச்சிக்கோ சக்தி” உண்மையிலேயே அவளுக்கு பயப்படுவது போல் சொல்லிச் சிரித்தான்.

“அக்காவால ஒண்ணும் செய்யமுடியாது. இன்னைக்கு என் சைடு ஸ்ட்ராங்கா இருக்கு” விக்ரமின் புஜத்தை காட்டிச் சொன்னான்.

“அப்படிலாம் உன் சைடு சாஞ்சிடமாட்டேன் சக்தி. உன் அக்காவும் அதை ஏத்துக்கமாட்டா, நானும் அப்படி செய்யமாட்டேன்” என்றான். விக்ரமுக்கு சந்தியா அவ்வளவு முக்கியமானவள். ஊரே ஒருபுறம் நின்று சந்தியா தனியாக நின்றாலும், இவன் சிறிதும் யோசிக்காது சந்தியா பக்கம் நிற்பானே தவிர, சந்தியாவை விட்டு செல்லமாட்டான்.

“அது சரி. அப்ப கேஸ் டிஸ்மிஸ்ட்” என்று சக்தி சொல்ல

“ஆமா இது என் டயலாக்ல” வடிவேலு பாணியில் விக்ரமும் சொல்லவும், மறுபடியும் இருவரும் சிரிக்க, சிரிப்பு சத்தம் மேலிருந்த சந்தியா வரை சென்றடைந்தது.

“நேத்து துபாய்ல தான இருந்தீங்க. இன்னைக்கு எப்படி காலைலயே இங்க இருக்கீங்க. வேலை முடிஞ்சிடுச்சாண்ணா” சக்தி புரியாமல் கேட்க

“அது நேத்து நைட் சந்தியா கால் பண்ணிருந்தா. அப்ப என்னால எடுக்க முடியல. க்ளையன்ட் கூட மீட்டிங்ல இருந்தேன். அப்புறம் லேட் நைட் தான் கால் பண்ணினேன். அவ முகமும் குரலும் சரியே இல்ல. எதோ சரியில்லனு தோணுச்சு. பார்த்தா டிக்கெட் இருந்துச்சு. உடனே அந்த ப்ளைட்ட பிடிச்சி ஓடி வந்துட்டேன்” விக்ரம் சொல்லி முடிப்பதற்கும்

“நான் சொல்லல சக்தி, அவ நேத்து சரியே இல்லனு” மகனிடம் சொன்னவர் திரும்பி விக்ரமை பார்த்து “நீ சொல்றது கரெக்ட் விக்ரம். என்ன பிரச்சனைனே தெரியல. முகம் வாட்டமா இருந்துச்சு. சாப்பிட கூட இல்ல. கேட்டா ஆபீஸ்லயே ஆர்டர் பண்ணி சாப்பிட்டுட்டேன்னு சொல்லிட்டா. சக்தி கூட அவ கண்ணை பார்த்துட்டு அழுதமாதிரி இருக்குனு கேட்டான். எதையோ சொல்லி சமாளிச்சிட்டா. இந்த பொண்ணு ஏன் இப்படி இருக்கானே தெரியலப்பா. எனக்கு இவ கஷ்டமே பெருசா இருக்கு” அவர் பேசும்போதே அவரது கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.

“ஹலோ ஹலோ.. மீனு டார்லிங். இப்படிலாம் எமோஷனல் ஆகக்கூடாது. அப்புறம் முத்தண்ணனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன். அவர் மேல இருந்து விக்ரம் நம்ப பொண்டாட்டிய ஒழுங்கா பார்த்துக்கறானானு செக் பண்ணிட்டே இருப்பார். புரியுதா மீனு. கண்ணை தொட” விக்ரமுக்கு தெரியாதா என்ன, மீனாட்சி எவ்வளவு வலி வேதனையில் உள்ளார் என்று. அவரை திசை திரும்ப இவ்வாறு பேசுவதை தவிர அவனால் வேறு என்ன செய்யமுடியும். விதி பலவருடங்களுக்கு முன் விளையாடி சென்றதை இன்னமும் சரி செய்யமுடியாமல் போராடி கொண்டிருப்பவன் தானே அவன். அந்த நாட்களுக்குள் செல்ல போனவனை செல்லவிடாமல் தடுத்தது சக்தியின் குரல்.

“அண்ணா.. அண்ணா.. எம்.எம் ஆன் தி வே” அவனுக்கு மட்டும் கேட்கும்படி அவனது காதருகே சொன்னான்.

இறங்கி வந்த சந்தியாவிற்கோ அது கேட்டுவிட்டது. நேராக வந்தவள் சக்தியின் காதை திருகி “யாரு சக்தி எம்.எம். நீ என்ன இவன் கூட கூட்டா” என்று இன்னும் அழுத்தமாக திருகினாள்.

“அக்க்க்கா க்க்ககா. விட்டிடுக்க்கா. வலிக்குது” அவன் அலற

“எம்.எம்ன்னா என்னனு தெரியுமா” பிடித்த காதை விடாமல் கேட்டாள்.

“என்ன, மேனேஜர் மேடம் தான” சக்தி சாதாரணமாக சொல்ல

“அப்படினு நீ நினைச்சிட்டு இருக்க. ஆனா அது இல்ல. எம்.எம்ன்னா மேட் மங்கினு அர்த்தம். அப்படி தான் இவன் என்னை கொஞ்சநாளா கூப்பிட்டுட்டு இருக்கான். இது தெரியாம நீயும் ஒத்து ஊதிக்கிட்டிருக்க. நான் மேட் மங்கினா, என் தம்பி நீ என்ன. நீயும் மேட் மங்கி தான” அவள் சக்திக்கு பாடம் நடத்த, அவன் விக்ரமை ஏன் அண்ணா என்று பாவமாக பார்த்தான். விக்ரமுக்கோ அடுத்து அந்த எம்.எம் அவனை நோக்கி வரபோகிறது என்பதை உணர்ந்து பயம் தொற்றிக் கொண்டது.

அதே போல் அவள் அடுத்து அவனிடம் செல்ல “இங்க பாரு நான் ஒண்ணும் சக்தி மாதிரி

சின்ன பையன் இல்ல. இந்த காதை பிடிச்சி திருகுறதெல்லாம் வச்சிக்க கூடாது. நான் உன்னைவிட வயசுல பெரியவன்” அவளிடம் கெஞ்சி கொண்டிருப்பவனை பார்த்து மீனாட்சியும் சக்தியும் சிரித்தனர்.

“நான் எம்.எம்னா, என் ப்ரண்ட் நீ என்ன. நீ எம்.டி. ஐ மீன் மேட் டாங்கி. புரியுதா மிஸ்டர்.விக்ரம்” அவன் தலையில் ஒரு குட்டு வைத்து சொன்னாள்.

“சரி சரண்டர். இனி சொல்லல. அதுக்காக இப்படி கொட்டாதடி. ரொம்ப வலிக்குது” அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு சொன்ன விக்ரமை பார்த்து, அவன் எப்படி சந்தியாவிற்கு விட்டுக்கொடுத்து நடந்து கொள்கிறான் என்று பார்வையாலேயே மீனாட்சியும் சக்தியும் மெச்சிக்கொண்டனர்.

“சரி கிளம்பு. வெளில டிரைவர் வெயிட் பண்றாரு. நானும் ஆபீஸ் போகனும்” என்று அவனை கிளப்பப் பார்த்தாள்.

“நோ, எனக்காக பொங்கல் வைட்டிங். நான் சாப்பிட்டுட்டு தான் கிளம்புவேன்” விடாப்பிடியாய் அவன் சொன்னதில் அங்கிருந்த மூவருக்குமே சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

“சரி வாய மூடிட்டு சாப்பிட்டுட்டு இடத்தை காலி பண்ணு. தேவை இல்லாததெல்லாம் பேசக்கூடாது” அவளும் தான் நேற்று அவனிடம் அழுதுவிட்டாளே. அவள் கண்ணீரில் பதறிப்போய் தானே அவன் துபாயிலிருந்து கிளம்பி வந்திருக்கிறான். அவனை அங்கிருந்து கிளப்பாவிட்டால் நேற்றைய விசயங்களை பற்றி கேட்பான் என்று அவளுக்கு நன்கு தெரியும். அதனாலே விடாப்பிடியாக விரட்டினாள்.

“வாய மூடிட்டு சாப்பிட முடியாது ஏ.டீ.ம் சந்தியா” சொல்லி சிரித்தவன் மறுபடியும் ஒரு குட்டு வாங்கினான்.

இந்த எட்டு வருடத்தில் சந்தியா சென்னையில் இருந்து, விக்ரமும் சென்னையில் இருந்தால் அவன் அவளது வீட்டிற்கு வந்து அவளை பார்க்காத நாளே இல்லை என்று சொல்லலாம். வேலை இருந்து வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும் ஒரு ஐந்து நிமிடமாவது வந்து பார்க்காமல் இருக்கமாட்டான். நாள் முழுவதும் அவளை சந்திக்க இயலாமல் போனால் அதே தெருவில் தான் அவனது வீடும் இருப்பதால் சிலநேரங்களில் நள்ளிரவில் வந்தும் கதவை தட்டி இருக்கிறான். அந்நேரத்தில் அவள் விழித்து இருந்தால் பேசிவிட்டு போவான் தூங்கியிருந்தால் அவள் அன்னையிடம் இல்லை தம்பியிடம் அவளை பற்றி விசாரித்து விட்டு செல்வான். அவனை எண்ணி சந்தியா மெச்சி இருக்கிறாள். எப்படி ஒருவனால் இவ்வளவு உன்னதமான நட்பு கொண்டிருக்க முடிகிறது என்று வியந்தும் இருக்கிறாள்.

அவளது முகத்தில் ஏற்படும் மாற்றம், கண்ணில் துளிர்க்கும் கண்ணீர், மனதை அறுக்கும் வலி, இவையனைத்தும் மீனாட்சி மற்றும் சக்தியின் கண்களில் இருந்து கூட தப்பலாம். ஆனால், விக்ரமின் கண்ணில் இருந்து தப்பவே முடியாது. அதனால் தான் என்னவோ, விக்ரமை காட்டிலும் சந்தியா இன்னும் கவனமாக இருந்தாள். அவளது உணர்வுகளை, வலிகளை விக்ரமிற்கு காட்டாமல் மறைக்க தொடங்கினாள். அவளது வாழ்வின் மிக முக்கிய பக்கங்களை விக்ரமிடம் சொல்லாமலே இருந்துவிட்டாள். அது அவனது நட்பை அவமதிக்க செய்ததில்லை. அவன் நட்பிற்கு செய்த துரோகமும் இல்லை. முதலில் அவள் மறைத்தது வேறு சிலர் மீது கொண்ட உண்மை அன்பால் இருக்கலாம், அதன் பிறகு அவள் மறைத்தது முழுக்க முழுக்க விக்ரமுக்காக. அவள் வாழ்வில் நிகழ்ந்த விசயங்கள் அவள் கைப்பிடியிலேயே இல்லாமல் போனபோது அதை விக்ரமிடம் சொல்லி அவன் நிம்மதியை குலைக்க அவள் விரும்பவில்லை.

ஒருநாள் விக்ரமிற்கு அது தெரியவந்தால் அவன் கோபப்படுவான், வருத்தப்படுவான் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் அவளை புரிந்துக்கொண்ட அவளது நண்பனால் அவளை வெறுக்கமுடியாது என்பதையும் நன்கறிந்தவள் நெஞ்சை கல்லாகி கொண்டு நண்பனிடம் இருந்து உண்மையை மறைத்து, தான் நன்றாக இருப்பதாக காட்டிக்கொண்டாள். இருப்பினும் அவளுக்கு இருப்பதும் மனது தானே அந்த மனதால் எவ்வளவு தான் தாங்க முடியும். அது சிலநேரத்தில் தன் நண்பனின் அரவணைப்பை தேட முயற்சிக்கும் போது, இப்படி மாட்டிக்கொள்வாள். அதை சமாளிக்கும் வழி தெரியாது அவனை இது போல் விரட்டியும் விடுவாள்.

எதுவாயினும் அவர்களது நட்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் இவர்களுக்கு கிடைத்தது போல் ஒர் நட்பு என்று பொறாமைப்படும் அளவிற்கு அழகிய பந்தமே. விக்ரம் சந்தியாவின் நட்பு ஓர் அழகிய ஓவியம். அதன் நிறம் மங்காமல் இருவரும் பாதுகாத்து வருகின்றனர்.

“சரி சக்தி, சாப்பிட்டாச்சு. மீனு டார்லிங் நாளைக்கு வரப்போ இந்த கைக்கு வளையலோட வரேன்” கண்ணடித்து சொல்லிவிட்டு “இதுக்கு மேல இருந்தா யாரோ என்னை கழுத்த பிடிச்சு வெளில தள்ளிடுவாங்க. நான் கிளம்பறேன் சக்தி. அப்புறம் கோ-பைலட் அம்மாவ கேட்டதா சொல்லு” அவனையும் விடாது கேலி செய்தான் விக்ரம். அவன் அவ்வாறு சொன்னதில் சக்தியின் முகத்தில் ஏற்பட்ட வெட்கத்தை மறைக்க வழி தெரியாமல் தலையை திரும்பிக்கொண்டான். சந்தியாவும், மீனாட்சியும் விக்ரமுடன் சேர்ந்து குறும்பாக சிரித்தனர். சக்தி ஒரு பெண்ணை விரும்புகிறான். அவளும் விமானி தான். அதனால் தான் விக்ரம் அவ்வாறு கேலி செய்தான். பெண் வீட்டிலும் இவ்விசயம் தெரிந்து பெண்ணின் விருப்பத்திற்காக தலையாட்டினர். இவனுக்கு திருமண வயது இல்லை என்றாலும் பெண் வீட்டில் திருமணத்திற்கு வற்புறுத்துவதால், இந்த வாரத்தின் இறுதியில் பேசி முடிக்க மீனாட்சியும் சந்தியாவும் செல்கின்றனர்.

அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கௌதம் எதுவும் பேசாமல் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டான். இரவு நேரம் வந்தும் மகன் வெளியே வராததால் உணவருந்த அழைக்க அவன் அறை கதவை திறந்த செல்வராணி அதிர்ந்து போனார். தன்னுடைய உயரத்தை பாதியாக குறுக்கி, சுருண்டு போர்வைக்குள் ஒடுங்கி கிடந்தான்.

பதறியடித்து கொண்டு உள்ளே வந்தவர் “கௌதம் என்னப்பா ஆச்சு” மகனது தலை, கழுத்தை தொட்டு பார்த்தவர் “என்ன தம்பி உடம்பு இப்படி நெருப்பா கொதிக்குது. உடம்பு முடியலைனு சொல்லமாட்டியா. இப்படி நீ பாட்டுக்கு உள்ள வந்து படுத்துக்கிட்டு இருக்க. எழுந்திரு டாக்டர்கிட்ட போலாம்” தாயவள் நெஞ்சம் பதறி தவித்தது.

“ஆபீஸ்ல திடீர்னு உடம்பு முடியாம போயிடுச்சும்மா. நீங்க பயப்படுற மாதிரி வேற ஒண்ணுமில்ல. நான் வரப்பயே டாக்டர்கிட்ட போயிட்டு தான்ம்மா வந்தேன்”

“போயிட்டு வந்தா போதுமா. சாப்பிட்டிட்டு மாத்திரையை போட்டா தான சரி ஆகும்” அவனிடம் பேசிவிட்டு சமையறைக்குள் நுழைந்தவர் கஞ்சி செய்து எடுத்து வந்தார்.

“எழுந்திருப்பா. அரிசி உடைச்சி கஞ்சி பண்ணிருக்கேன். இதை சாப்பிட்டிட்டு மாத்திரையை போட்டுக்கிட்டு படு. அப்போ தான குணமாகும்” அவர் சொல்படி எழுந்து அந்த கஞ்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அன்னையவர் அவன் அருகிலேயே அமர்ந்திருந்தார்.

“நான் சொல்றத கேட்டா தான. குளிருல ஜாக் போறது. நேரங்கெட்ட நேரத்துல சாப்பிடறது. சிலநேரங்கள்ல சாப்பிடறது கூட இல்ல. எடுத்து வச்சது காலைல பார்த்தா அப்படியே இருக்கு. ரூம்ல எப்ப பார்த்தாலும் லைட் எரியுது. நீ எப்ப தூங்கற, எப்ப சாப்பிடுற, என்ன பண்றனு எதுவும் புரியமாட்டேங்கிது. ஆனா ஒண்ணு மட்டும் தெளிவா புரியுது, எதுக்காகவோ உன்னையே நீ கஷ்டப்படுத்திக்கிறப்பா. சின்ன குழந்தையா அடிச்சி திருத்த. நீயா புரிஞ்சி நடந்துக்கிட்டா தான் உண்டு” அவர் பேச எதுவும் பதிலளிக்காமல் கஞ்சியை குடித்துவிட்டு மாத்திரை சாப்பிட்டு படுத்தான்.

இரவு நன்றாக உறங்கி கொண்டிருந்த சந்தியாவின் ஆழ்மனதை ஏதோ ஒன்று பிடித்து வைத்திருந்தது. அது அவளின் தூக்கத்தை பதம் பார்க்கும் நோக்கத்தில் தொந்திரவு செய்யவும் தொடங்கியது. அதன் வலிமை தாங்கமுடியாது அவள் தவித்துக் கொண்டிருந்தது உறக்கத்திலேயே அடுத்தடுத்து மாறிக் கொண்டிருந்த அவளது முகபாவனையில் தெரிந்தது.

‘மிஸ்டர். கௌதமுக்கு மிஸஸ். கௌதம்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு’

‘அதேமாதிரி மிஸஸ். கௌதமுக்கும் மிஸ்டர். கௌதம்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு’ அந்த கசப்பான கனவு அவளை தீண்ட, அதிலிருந்து தப்பிக்கும் பொருட்டு வெடுக்கென்று விழித்தாள்.

“கௌதம். கௌதம்.. கௌதமுக்கு என்னாச்சு. அவன் நல்ல இருக்கான்ல. கௌதம்..” தன்னை மறந்து அவன்மீது கொண்ட காதல் அவனுக்காக பதைக்க சொல்லியது. இவள் எப்படி அறிந்தாள், அவன் அங்கே உடல்நலம் குன்றி இருக்கிறான் என்று. இது ஒன்றும் அவளுக்கு புதிதல்ல. இதுபோல் அவன் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும்போதும், உடைந்துபோகும் போதும் அவனை இவள் தானாக உணர்வாள்.

சிறிது நேரத்தில் நிஜம் நினைவிற்கு வர எழுந்து, தன்னுடைய கைபேசியை எடுத்து நேரத்தை பார்த்தாள். மணி நான்கு பதினைந்து ஆகி கொண்டிருந்தது. முகத்தை அழுந்த துடைத்தவள்

“ஏன் சந்தியா. ஏன் இப்படி உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கற. இதோ இப்ப இந்த கனவுல வந்த மாதிரி ஒண்ணு உன் வாழ்க்கைல எக்காலத்துலயும் நடக்க போறதில்ல. அதை எப்ப நீ புரிஞ்சிக்க போற. அவன் உன்னை விட்டுட்டு போயிட்டான். போனவன் போனவன் தான், திரும்ப வர போறதே இல்ல. இதுவே உன் புத்திக்கு ரொம்ப ரொம்ப லேட்டா தான் புரிஞ்சுது. இன்னமும் ஏன் அவனுக்காக துடிச்சிக்கிட்டு இருக்க” அந்த விடியற்காலை பொழுதில் சத்தம் போட்டு அழுதால் அடுத்தவர்களுக்கு கேட்டுவிடுமோ என்று வாயை பொத்திக்கொண்டு அழுதாள்.

“அன்னைக்கு ஏர்போர்ட்ல என்ன சொன்ன கௌதம். சொல்லாம போகணும் தான் நினைச்சேன், மனசு வரல அதான் சொல்லிட்டுப் போறேன்னு சொன்னல. முதல்ல என்னை விட்டு போகணும்ங்கற எண்ணம் உனக்கு எப்படி வந்துச்சு. போகாதனு எவ்ளோ கெஞ்சிருப்பேன். கொஞ்சமாவது தயவு தாட்சன்யம் பார்த்தியா. எதுக்காக என்னை விட்டுப்போன. எட்டு வருஷம் ஆகப்போகுது, இன்னும் இந்த கேள்விக்கு விடைக் கிடைக்காம தினம் தினம் புழுங்கிட்டு இருக்கேன். ஏன் கௌதம் இப்படி என்னை ஏமாத்தின. உன்னை நம்பினேன். முழுசா நம்பினேன். ஏன் என்னை ஏமாத்தின. உனக்கு என்மேல அன்புனு ஒண்ணு இருந்திருந்தா, என்னை பார்க்க முயற்சி செய்திருப்ப. ஆனா நீ செய்யலையே. அப்போ என் நம்பிக்கை பொய்யா. நீயும் பொய்யா. சொல்லுடா நீ பொய்யா. நான் தான் உன்னை உண்மைனு நம்பி ஏமாந்துட்டேனா” இல்லாத அவனிடம் கோபத்தை, ஆத்திரத்தை காட்டி புலம்பிக் கொண்டிருந்தாள்.

சத்தம் வெளியே வராமல் கதறி அழுதாள். அழுது அழுது தெம்பிழந்து படுக்கையில் விழுந்து கிடந்தாள். சட்டென்று தன்னை மீட்டு கண்களை துடைத்தவள்

“அழமாட்டேன் கௌதம். நீ நினைச்சத சாதிச்சிக்கிட்டு என்னை தூக்கி எறிஞ்சிருக்கலாம். என்னை, என் லைஃப்ல தோற்கடிச்சதா நீ நினைக்கலாம். ஆனா, நான் தோற்கமாட்டேன். நான் உன் விஷயத்துல வேணும்னா தோத்திருக்கலாம். உன் மேல வச்ச நம்பிக்கைல வேணும்னா தோத்திருக்கலாம். வேற எந்த விஷயத்துலயும் தோற்கமாட்டேன். நீ கொடுத்த அடி இன்னும் என் மனசுல ஆறாம அப்படியே இருக்கு. அது என்னை நிக்கவிடாம ஓட வச்சிட்டே இருக்கும். நானும் வின் பண்ணிக்கிட்டே இருப்பேன். ஆனா இது எல்லாத்துக்கும் காரணமான உன்னை, ஒருநாளும் மன்னிக்கமாட்டேன். ஐ ஹேட் யு கௌதம். ஐ ஹேட் யு” பலவருட காயம் இன்றும் ஆறாமல் அவளுக்குள் அப்படியே இருந்தது. அவன் துரோகம் செய்தான் என்ற வலி ஒருபக்கம் இருந்தாலும், எதற்காக துரோகம் செய்ய துணிந்தான் என்ற கேள்வியே அவளை அதிகமாக வதைத்தது.

அந்த ஏமாற்றம், அந்த துரோகம், அந்த கேள்வி, இவையனைத்தும் மென்மையான பூவாக இருந்தவளை எரிமலையாக மாற்றி இருந்தது. ஒரு காலத்தில் உருகி உருகி நேசித்தவனை இன்று வெறுத்து கொண்டிருக்கிறாள். ஒரு காலத்தில் அவனை தேடிய விழிகள், அவனிடம் செல்ல துடித்த கால்கள், இன்று அவனை காணவே கூடாது அவனிருக்கும் திசைப்பக்கம் தலைவைக்க கூட கூடாது என்று முடிவு செய்திருந்தது.

காதலில் கசிந்து நேசித்தவனை இன்று பார்க்கக்கூடாது, அவனிருக்கும் இடத்தில் தன் நிழல்கூட படக்கூடாது என்று எண்ணும் அளவிற்கு அவர்கள் வாழ்வில் என்ன நடந்தது. இந்த கேள்விக்கு பதில் அவர்களிடம் மட்டுமே.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.

 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 3

இரண்டு நாட்கள் கழித்து காய்ச்சலில் வாடி வதங்கி எழுந்து அமர்ந்திருந்தான் கௌதம்.

“நான் எவ்ளோ சொன்னாலும் கேட்காம உடம்பை என்ன பண்ணிக்கிட்ட பார்த்தியா. இது என்ன ஊரு. அக்கம் பக்கம் இருக்கிறவன் பேசலனா கூட பரவாயில்ல. பக்கத்து வீட்டுல யார் இருக்காங்கனு கூட தெரிஞ்சிக்க மாட்டாங்க போல.

நீ என்னனா இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்க. அங்க அவ்ளோ பெரிய வீடு, மக்க மனுஷங்க எல்லாம் இருக்காங்க. அது விட்டுட்டு எல்லாத்தையும் எல்லாரையும் விட்டுட்டு இங்க இருக்கறதுக்கு என்ன அவசியம் வந்துச்சு கௌதம்” அருகில் அமர்ந்து அவனுக்கு புத்திமதி சொல்லும் வகையில் கொதித்த தொனியில் பேசி கொண்டிருந்தார் செல்வராணி. அவர் பேச பேச வாய் திறக்காமல் அமர்ந்திருந்தான்.

“எத்தனையோ தடவை இந்த கேள்விகளை கேட்டுட்டேன். ஒரு தடவை வாய திறக்கறீயா. ஏன்ப்பா இப்படி மூர்க்கம் பிடிச்சிட்டு உட்கார்ந்துட்டு இருக்க. வாப்பா திரும்ப நம்ப ஊருக்கே போயிடலாம்” மென்மையாகவும் சொல்லி பார்த்தார் அதற்கும் அமைதியாகவே இருந்தான்.

“என்னமோ நீ பண்றது எதுவுமே எனக்கு புரியலப்பா” எல்லா விதத்திலும் சொல்லி பார்த்து சலித்தே போய்விட்டார்.

கௌதம், சிறுவயதில் இருந்தே மூர்க்கம் பிடித்தவன். பிடிவாதம் அதிகம். அவனுக்கு ஒன்று வேண்டும் என்றால் வேண்டும். அதை எப்படியாவது பெற்றே தீருவான். அவனுக்கு வேண்டியதற்காக உலகத்தையே எதிர்த்து நிற்கவும் தயங்கமாட்டான்.

அதேபோல் வேண்டாம் என்றாலும் வேண்டாம். அவன் ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது. மொத்த உலகமும் ஒன்றுக்கூடி புத்திமதி சொல்லி அவன் முடிவை மாற்ற பார்த்தாலும் மாறமாட்டான்.

அந்நேரத்தில் இந்தியாவிலிருந்து அந்த அழைப்பு வந்தது.

அதை ஏற்றவன் “ஹலோ அத்தான். எப்படி இருக்கீங்க” என்றான். அம்முனையில் இருந்த அவனது அக்காவின் கணவர் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. அதற்கு இவன் “இப்ப உடம்பு பரவாயில்ல அத்தான். ஒரு ஹாஃப் அன் ஹார் டைம் கொடுங்க. நான் காலைலயிருந்து குளிக்கல. குளிச்சிட்டு நானே வீடியோ கால் பண்றேன். நாம எல்லாம் பேசிடலாம்” என்று சொல்ல, செல்வராணியோ எதுவும் புரியாமல் மகன் பேசுவதையே பார்த்து கொண்டிருந்தார். அவருக்கு புரிந்ததெல்லாம் மகன் மருமகனிடம் பேசுகிறான் என்பது மட்டுமே.

“அத்தான்ம்மா. ஆடி வருதுல அதான் கடைல என்ன பண்ணலாம். என்ன மாதிரி சரக்கு கொண்டு வரலாம்ங்கறது பத்தி பேசி முடிவு பண்ண இன்னைக்கு ஒரு மீட்டிங் இருக்காம். அப்புறம் வைரத் திருவிழா வேற நடத்தனும். அத பத்தியெல்லாம் சொல்ல தான்ம்மா கூப்பிட்டிருந்தாரு” அவர் கேட்காமலே, அவர் அதை தான் கேட்க போகிறார் என்பதை புரிந்து சொன்னான்.

செல்வராணியோ தெரிந்தும் தெரியாதது போல் “எந்த அத்தான். உனக்கென்ன ஒரு அத்தானா இருக்கார்” பொடி வைத்து கேட்டார்.

அதை புரிந்த மகனும் “எல்லாம் உங்க மூத்த மவளோட வீட்டுகாரர் தான்” முகத்தை சுளித்துக் கொண்டு பதிலளித்தான்.

“என்னது, என் மூத்த மவளா. அப்ப அவ உன் அக்கா இல்லயா” மகனை கண்டித்தார்.

அதற்கு “இல்ல” என்று சற்றும் யோசிக்காது பதிலளித்தவனை பார்த்து அதிர்ந்தார். அத்துடன் மகளுக்கும் மகனுக்கும் இடையில் இப்படி ஒரு பிளவா என்றெண்ணி மனமுடைந்தார்.

“நானும் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன், நீ இப்படி தான் பண்ற. அன்னைக்கு கூட அருந்ததி, தமயந்தி, நிரஞ்சனா, நித்திலாவுக்கு நான் இருப்பேன்னு சொல்ற. அப்ப, கார்த்தியாயினிக்கு யார் இருப்பா கௌதம். அவ இந்த வீட்டோட மூத்தமக. என்னையும் உங்க அப்பாவையும் முதல் முதல்ல அம்மா அப்பானு கூப்பிட்டவ. அவளை இப்படி ஒதுக்கி வச்சிட்டு நீ என்னப்பா பண்ண போற. அக்கா தம்பிக்குள்ள பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதுக்காக அவகிட்ட ஒரேயடியா பேசாம விட்டிடுவியா. இது ஒரு வாழ்க்கைப்பா திரும்ப நீயும், அவளும் ஒரு தாய் வயித்து பிள்ளையா பிறக்க போறதில்ல. அவகிட்ட பேசாம இருக்காத. பேசுப்பா” அவனின் பிடிவாத குணத்திடம் மிஞ்சியும் விட்டார் கெஞ்சியும் விட்டார்.

“அம்மா சிலதை மன்னிச்சிடலாம். சில விஷயங்களை மன்னிக்க முடியாது. அதுக்கு தண்டனை பிரிவு தான்ங்கற போது அதையும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும். அதுக்குன்னு அவளுக்கு செய்ய வேண்டியதை செய்யாம இருக்கமாட்டேன். அத்தான் கிட்ட பேசத்தான் செய்யறேன். இனியன், நளின்கிட்ட கூட பேசி அவங்க கேக்கறதெல்லாம் செஞ்சி கொடுத்துட்டு தான் இருக்கேன். என்ன, மத்தவங்ககிட்ட பேசி விசாரிக்கற மாதிரி அக்காகிட்ட செய்யறதில்ல. அது மட்டும் தான்ம்மா வித்தியாசம்” சொன்னபின் தான் தன்னை மறந்து ‘அக்கா’ என்று சொன்னதை உணர்ந்தான். எப்படி சொல்லாமல் இருப்பான். அவனுக்கும் கார்த்தியாயினி பிடித்த அக்காவாயிற்றே.

அவன் அக்காவென்று அழைப்பது அவளை மட்டும் தானே. அருந்ததியையும் தமயந்தியையும் பெயர் சொல்லி தான் அழைப்பான். நிரஞ்சனாவும் நித்திலாவும் அவனைவிட சிறியவர்கள். கார்த்தியாயினிக்கும் இவன்மேல் தனி பாசம். அவனுக்கும் அவளுக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்தும் அவன் அவளிடம் ஒருமையில் தான் பேசுவான். செல்வராணி பலமுறை கண்டித்தும் இருக்கிறார். அப்போதெல்லாம் தாய் தந்தையை பிள்ளைகள் ஒருமையில் கூப்பிடுவது இல்லையா. அதுபோல் தம்பி தன்னை அழைக்கிறான் என்று சப்பைக்கட்டு கட்டுவாள். அவனுக்கு ஏதாவது வேண்டுமென்றால் கார்த்தியாயினியிடம் தான் சொல்லுவான். அவளும் தாய் தந்தையிடம் பேசி சம்மதிக்க வைத்து வாங்கிக்கொடுத்து விடுவாள். ஒருவேளை அன்றும் அவளிடம் முதலில் பேசியிருந்தால், இன்று அவன் இருக்கும் நிலையில் இருந்திருக்க வேண்டாமோ என்னவோ? ஒருவேளை அவன் இருக்கும் நிலைக்கே அவள் தான் காரணமோ?

சண்டை காரணமாக கடந்த மூன்று வருடங்களாக இருவரும் பேசிக் கொள்வதில்லை. அவன் அக்கா என்று சொன்னதை செல்வராணியும் கவனித்து தான் இருந்தார். உள்ளுக்குள் இன்னும் பாசம் இருக்கிறது, எல்லாம் கூடியவிரைவில் சரி ஆகிவிடும் என்று தனக்கு தானே நம்பிக்கை சொல்லி சமாதானம் செய்துக்கொண்டார். அதே நம்பிக்கையுடன் பேச்சையும் ஆரம்பித்தார்.

“அத்தான் பேசினப்போ கடைல இருந்தாரா வீட்டுல இருந்தாரா” மறுபடியும் எங்கு சுற்றி எங்கு வருகிறார் என்பதை நன்கு அறிந்தவன்

“வீட்ல இருந்து தான் பேசினார். என்னனு தெரியல இன்னைக்கு காலேஜ்க்கு போகல போல. வீட்ல தான் இருக்கா. குரல் கேட்குது” அவன் சொல்ல, மகளின் ஏக்கம் அவரை தொற்றிக்கொண்டது. என்ன இருந்தாலும் மூத்த மகள் அல்லவா. அதிலும் அவள் வீட்டிற்கு சகஜமாக வந்து போய் வருடங்கள் ஆயின. கௌதம், கார்த்தியாயினி இருவரும் வீட்டிற்கு வருவதே தந்தையின் திதிக்கு மட்டுமே. அப்போதும் இருவரும் பார்த்தும் பார்க்காதது போல் இருந்துவிடுவர்.

“ஆனா உடம்பு எதோ சரியில்லனு நினைக்கறேன். குரல் தான் ஒருமாதிரி இருந்துச்சு” அவன் சொல்ல, செல்வராணிக்கு ஒரு பக்கம் மகளுக்கு உடம்பிற்கு என்ன என்ற பரிதவிப்பு இருந்தாலும், இன்னொரு பக்கம் மகன் மகளின் குரலை வைத்தே அவளை பற்றி அறிகிறான் என்ற மகிழ்ச்சியும் இருந்தது.

“என்னனு அப்புறம் ஃபோன்ல பேசிக்கோங்கம்மா” அவன் சொன்னதில் இருந்த உண்மை அக்கறையை உணர்ந்தவர், இந்த வார்த்தைகள் இப்போதைக்கு போதுமென்ற மனநிம்மதி கொண்டார்.

“நான் பேசிக்கிறேன். இன்னைக்கு இந்த மீட்டிங் எல்லாம் வேண்டாம். ஆடி என்ன நாளைக்கேவா வரப்போகுது. அதுக்கு இன்னும் ஒரு மாசத்துக்கு மேல இருக்கு. இப்ப தான் உன் முகத்துல தெளிவே வந்திருக்கு. இன்னும் ரெண்டு மூணு நாள் போகட்டும் தம்பி. நல்லா ரெஸ்ட் எடுத்ததுக்கு அப்புறம் நீ என்ன வேலைனாலும் பார்த்துக்கோ. கார்த்திக்கிட்ட பேசறப்போ நான் மாப்ளகிட்ட சொல்ல சொல்லிடுறேன். உடம்பு இன்னும் கொஞ்சம் சரி ஆகட்டும்ப்பா”

“ஐயோ அம்மா, இன்னும் ரெண்டு மூணு நாளா. சாதாரண காய்ச்சலுக்கு போய் ஒரு வாரம் ரெஸ்ட் எடுப்பாங்களா. எனக்கு உடம்பு சரியாகிடுச்சும்மா. நான் இன்னைக்கு ஆபீஸ்க்கே போகலாம்னு இருந்தேன், நீங்க எதாவது சொல்லப் போறீங்க தான் போகல” அவன் முடிவு செய்ததை மாற்றிக் கொள்ள போவதில்லை என்பதை அறிந்தவர் அவனை அவன் போக்கில் விட்டு

“சரி, நம்ம கடை வேலைய மட்டும் தான் பார்க்கணும். அதுவும் ரொம்ப நேரம் செய்யக்கூடாது. மீட்டிங் முடிஞ்சதும் படுத்து ரெஸ்ட் எடுக்கணும்” சிறுபிள்ளையை அதட்டுவது போல் அதட்டினார். அவனும் தாய் பேச்சுக்கு மறுப்பேதும் சொல்லாமல் சரியென்று தலையசைத்துவிட்டு குளிக்க சென்றான். அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவர், அப்படியே அவனது அறையை சுற்றி கண்களை சுழலவிட அவருக்கு அவனுடைய மடிக்கணினி கண்ணில்பட்டது.

எப்படி இருக்கவேண்டிய பிள்ளை. அரண்மனை போல் இருக்கும் வீட்டை விட்டு கடல் கடந்து ஏதோ ஒரு நாட்டிற்கு வந்து இந்த வீட்டில் இந்த சின்ன அறையில் யாரோ ஒருவருக்கு வேலை பார்க்க வேண்டிய தேவை என்ன வந்தது. இவனே ஐந்தாயிரம் பேருக்கும் மேல் சம்பளம் கொடுக்கும் போது இவன் ஏன் ஒருவரிடம் சம்பளத்திற்கு வேலை செய்யவேண்டும்.

அவர்கள் வீட்டை பொறுத்தவரை, சமையல் பொறுப்பை மட்டும் செல்வராணி அவர் கையிலேயே வைத்திருந்தார். மற்றதனைத்தையும் செய்ய, அங்கே வீட்டை சுற்றி ஆட்கள் இருப்பார்கள். இங்கோ அனைத்து வேலைகளையும் மகனே பார்க்கிறான். அவனை தானும் கணவரும் எப்படி தாலாட்டி சீராட்டி வளர்த்தோம். அவன் பேச்சிற்கு அந்த வீட்டில் மறுபேச்சு இருந்ததுண்டோ. அவன் தானே அந்த வீட்டின் முடிசூடா இளவரசன். பிறகு ஏன் இந்த வனவாசம், யாருக்காக இந்த சந்நியாசி வாழ்வு. தாயவர் நெஞ்சம் குமைந்தது. கணவரை பற்றி, மகனை பற்றி, அவர்கள் குடும்பம் வாழ்ந்த அந்த அழகிய வாழ்வை பற்றி எண்ணத் தொடங்கினார்.

கௌதம் செல்வராஜ், இங்கே ஆஸ்திரேலியாவில் மாத சம்பளத்திற்கு வேலைபார்த்து கொண்டிருப்பனுக்கு அங்கே ஏழு எட்டு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்தும் வசதியும் உள்ளது. இவர்களுக்கு ஜவுளி வியாபாரம், பரம்பரை தொழில். இவனது பாட்டன் முப்பாட்டன் காலத்து தொழில். வீடு வீடாக சென்று பட்டுப்புடவை விற்றுக் கொண்டிருந்தனர் இவனது பாட்டனாரும் முப்பாட்டனாரும். அதை பெரிதுப்படுத்த வேண்டும் என்ற லட்சியதுடன் அவனது பாட்டனாருக்கு மூத்த மகனாக பிறந்தவர் இவனது தந்தை செல்வராஜ். இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர். ஆனால் தொழிலில் இவரை வெல்ல யாருண்டு. பதினைந்து வயதில் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு துணிக்கடையில் வேலைப்பார்த்து தொழில் கற்று, காசும் சேர்த்து இங்கே சிறியதாக பட்டுப்புடவைகள் மற்றும் பெண்கள் ஆடைகள் வைத்து ஆரம்பித்ததே இன்று பல்வேறு மாவட்டங்களிலும், மாநிலங்களிலும், தமிழர்கள் வாழும் நாடுகளிலும் கிட்டத்தட்ட முப்பத்திற்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட செல்வராணி சில்க்ஸ் மற்றும் வேணி பொன்மாளிகை.

அனைவராலும் செல்வம் என்று அன்பாக அழைக்கப்படும் செல்வராஜ் தங்கமான மனிதர். மனைவி செல்வராணி மீது உயிரையே வைத்திருந்தவர். கார்த்தியாயினி அவர்களது மூத்தமகள். மகள் பிறந்த மகிழ்ச்சியை முழுவதுமாக அனுபவித்தவர்கள், அடுத்து மகன் பிறப்பான் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகளாக அருந்ததியும் தமயந்தியும் வந்து பிறந்தனர். பெண்பிள்ளைகள் பிறந்துவிட்டார்களே என்ற வருத்தம் இல்லை என்றாலும், தங்களுக்கென ஒரு ஆண்பிள்ளை இல்லையே என்று மனமுடைந்துப் போனார்கள். தங்களுக்கு ஒரு ஆண் வாரிசு வராதா என்று தினம் தினம் வேதனை உற்றனர். தனக்கு பிறகு தன்னுடைய தொழிலை எடுத்து நடத்தவும், தான் சேர்த்து வைத்ததை கட்டி ஆளவும், தன்னையும் மனைவியையும் முதுமைக்காலத்தில் கவனித்துக்கொள்ளவும், சகோதரிகளுக்கு துணையாய் நிற்கவும், தனக்கும் மனைவிக்கும் இறுதி ஈமை காரியங்களை செய்யவும் ஒரு மகன் பிறக்கமாட்டானா என செல்வராஜும் செல்வராணியும் ஏங்காத நாளில்லை. அதற்காக இருவரும் ஏறாத கோயில் இல்லை, செய்யாத வேண்டுதல் இல்லை. அவர்களது தவத்திற்கு பலனாக அவர் சேர்த்துவைத்த சொத்தை விட மிகப்பெரிய சொத்தாக தான் கௌதம் அவர்களுக்கு நான்காவது மகனாக வந்து பிறந்தான். சொல்லப்போனால் அந்த வீட்டிற்கே ஒரே ஆண் வாரிசாக பிறந்தான்.

கௌதம் பிறந்த சிலவருடங்களிலேயே ஏற்கனவே திருமணமாகியிருந்த செல்வராஜ் அவர்களின் தம்பி தங்கராஜிற்கு ஒரு பெண்பிள்ளை பிறந்தாள். அவளுக்கு நிரஞ்சனா என்று பெயரும் சூட்டினார். துர்திஷ்டவசமாக இரண்டாவது பிரசவத்தின் போது அவரது மனைவி அமிர்தவல்லி இன்னொரு மகளை பெற்று அவர் கையில் கொடுத்துவிட்டு இறைவனடி சேர்ந்தார். மனைவி போன அதிர்ச்சியில் தங்கராஜ் புத்திப் பிசகி மனநிலை சரியில்லாமல் போனார். நித்திலா பிறந்ததிலிருந்து அவளையும் அவளது தமக்கை நிரஞ்சனாவையும் தங்களது பிள்ளைகளாகவே அவர்களது பெரியப்பாவும் பெரியம்மாவும் பார்த்துக் கொண்டனர்.

மொத்தத்தில் கௌதம், ஐந்து சகோதரிகளுக்கு ஒரே சகோதரன் ஆனான். கார்த்தியாயினிக்கும் கௌதமுக்கும் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் வித்தியாசம். அதனால் அவனுக்கு இன்னொரு அன்னையாகவே அவள் எப்போதும் திகழ்ந்தாள். அருந்ததி மற்றும் தமயந்திக்கும் கௌதமுக்கும் நான்கு வருட வித்தியாசம். அருந்ததியை காட்டிலும் தமயந்தியிடம் அவளது திருமண வாழ்க்கை பொருட்டு அதிக அக்கறை செலுத்த ஆரம்பித்தான். சித்தப்பா மகள்களானாலும் நிரஞ்சனா மற்றும் நித்திலாவிடம் அவனுக்கு தனிப்பிரியம் உண்டு. அதிலும் நித்திலா தாய்முகம் பாராதவள் என்பதால் கௌதம் உட்பட வீட்டில் இருக்கும் அனைவரும் அவளைக் கொண்டாட தவறியதே இல்லை.

செல்வராஜ் மகனின் மீது பேரன்பு கொண்டிருந்தாலும், மகள்களுக்கு செய்வதில் அவர் எந்த குறையும் வைத்ததில்லை. மனைவி, மகள் என அனைத்து பெண்களையும் மதிக்கும் மனிதர் அவர். தன்னுடைய கடைக்கு வரும் பெண்களிடம், யாராவது வாலாட்டினால் அவரது இன்னொரு முகத்தை பார்த்துவிடுவர். வேட்டி சட்டையில் அவரது உயரமும், அதற்கேற்ற உடல்வாகும், திராவிடநிறமும், அடர்ந்தமீசையும், கோல்ட் பிரேம் கண்ணாடியும் அவரை எப்போதும் கம்பீரமாகவே காட்டும். அவர் நடந்து வந்தால் கைகள் தானாக கையெடுத்து கும்பிடும் அளவிற்கு சமுதாயத்தில் மரியாதையும், அந்தஸ்தும் உள்ளவர்.

பெண்பிள்ளைகளுக்கு கல்வி கொடுப்பது அவசியம் என்று நினைப்பவர், அவரது மகள்கள், தம்பியின் மகள்கள் என ஐவருக்கும் நல்ல கல்வியைக் கொடுத்தார். பெண்பிள்ளைகள் படிப்பில் உயர்ந்து நிற்க வேண்டுமென்பது அவருடைய கருத்து.

கார்த்தியாயினியும் படித்து முடித்து தந்தைக்கு உதவியாக அவருடன் தொழிலில் ஈடுபட்டாள். அவளது கணவர் வெற்றிமாறன் சென்னை, திருநெல்வேலி மற்றும் வேறு சில மாவட்டங்களில் இருக்கும் அவர்களது கடைகளை பார்த்துக் கொள்கிறார். அவர்களுக்கு இனியன், நளின் என்று இரண்டு மகன்கள். இடையில் தம்பியுடனான சண்டைக்கு பிறகு கடைக்கு வருவதை நிறுத்தியவள் இப்போது திருநெல்வேலியில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாள். அவளது கணவர் மட்டும் கௌதமை சிறுவயதில் இருந்து பார்த்தவரானதாலும், அவன்மீது கொண்ட தனி அன்பாலும், மனைவிக்கும் அவனுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையை எடுத்துக்கொண்டு அவனை தனியாக, அதுவும் மாமனார் உயிரோடு இல்லாத நேரத்தில் அவனை தன்னந்தனியாக விடமாட்டேன் என்று சொல்லி, தொடர்ந்து செல்வராணி சில்க்ஸ் மற்றும் வேணி பொன்மாளிகையை பார்த்துக் கொள்கிறார்.

அருந்ததி வழக்கறிஞர். அவர்களின் தொழிலுக்கே லீகல் அட்வைசராக இருக்கிறாள். இவளது கணவர் கவியரசனும் இவர்களது தொழிலுக்கு ஆடிட்டராக இருக்கிறார். இவர்களுக்கு பூமகள் என்ற மகளும், கோவேந்தன் என்ற மகனும் இருக்கின்றனர்.

தமயந்தி மகப்பேறு மருத்துவர். இவளது கணவர் இளமாறன், கார்த்தியாயினியின் கணவர் வெற்றிமாறனின் உடன்பிறந்த தம்பி. கட்டினால் அவளை தான் கட்டுவேன் என்று பலவருடம் காத்திருந்து திருமணம் செய்து கொண்டவர். இவரும் அண்ணனை போல் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருக்கும் செல்வராணி சில்க்ஸ் மற்றும் வேணி பொன்மாளிகையை பார்த்துக் கொள்கிறார். அமுதனும் கொற்றவையும் இவர்களது செல்லப்பிள்ளைகள்.

நிரஞ்சனா தற்போது சேலம் மாவட்டத்து ஆட்சியர். அவளது கணவர் கௌதம், செல்வராஜ் மற்றும் தங்கராஜின் ஒரே தங்கையான அம்சவேணியின் மூத்தமகன். அம்சவேணியை திருநெல்வேலியிலேயே கட்டிக் கொடுத்திருந்தார்கள். செல்வராஜ் துணிக்கடையை மனைவி செல்வராணியின் பெயரில் ஆரம்பித்திருந்தாலும், நகைக்கடையை அவரது அன்பு தங்கை வேணியின் பெயரிலேயே ஆரம்பித்திருந்தார். வேணிக்கு கௌதம், கௌசிக் என்று இரண்டு மகன்கள் மட்டும். அண்ணன் மகனை தூக்கி கொஞ்சியே மகன்கள் பிறந்ததால் இருவருக்கும் அவ்வாறு பெயர் வைத்துவிட்டார். அண்ணன் மகள் தான் தன் வீட்டிற்கு மருமகளாக வர வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே எண்ணியவர், மூத்த அண்ணனின் மகள்கள் எல்லாம் தன் மகன்களை விட பெரியவர்கள் என்பதால் சிறிய அண்ணனின் மகளை தன் மூத்தமகன் கௌதமுக்கு மணமுடித்து கொண்டார். அவனும் மனைவியின் வேலை நிமித்தமாக அவளுடனே ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறான். தற்போது சேலத்தில் இருக்கும் இவர்களது கடையை கவனித்துக் கொள்கிறான். இன்னிலனும் இலக்கியாவும் இவர்களது மகனும் மகளும்.

கடைக்குட்டி நித்திலா ஒரு பேஷன் டிசைனர். செல்வராணி சில்க்ஸில் வியக்கவைக்கும் புதிய வடிவமைப்பில் உருவாகும் பட்டுப்புடவைகளும் ஆடைகளும் இவளது கைங்கரியத்தால் ஆனவை.

கடந்த காலத்தில் மூழ்கி இருந்தவரை மகன் குளித்து முடித்து கதவை திறந்த சத்தம் மீட்டு எடுத்தது. எழுந்து வெளியே வந்து சோபாவில் அமர்ந்தவர், தான் கண்முன்னே படமாக ஓட்டிப்பார்த்த அந்த அழகிய மகிழ்ச்சியான பழைய நாட்கள் திரும்பவராதா என்று ஏக்கம் கொண்டார். இவரது ஏக்கம் அறியாதவனாய் உள்ளே அவனது அத்தான்களுடன் காணொலியில் பேசிக் கொண்டிருந்தான் கௌதம்.

மறுபடியும் சிந்தனையில் மூழ்கினார். அவர் இன்று ஆஸ்திரேலியாவில் இருக்க காரணமே அவர்கள் வீட்டு கடைக்குட்டி நித்திலா என்று எண்ணியவர், அன்றொரு நாள் நித்திலாவின் திருமணத்தை பற்றி அவர் பேச்செடுத்தப் போது நடந்ததை நினைவு கூர்ந்தார்.

“நித்திம்மா, இங்க பாரு. இந்த பையன் எப்படி இருக்காருனு சொல்லு” செல்வராணி மகளிடம் ஆசையாக காட்டி கேட்க

“ப்ளீஸ் பெரியம்மா. எனக்கு கல்யாணமே வேண்டாம்” பட்டும்படாமல் பதிலளித்தாள்.

“அப்படிலாம் சொல்லக்கூடாது”

“இல்ல பெரியம்மா. நம்ம வீட்ல எவ்ளோ பேர் இருந்தோம். இன்னைக்கு நீங்களும் நானும் மட்டும் தான் இருக்கோம். அண்ணன் அங்க இருக்காரு. அப்பாவை ஊருல வச்சி அங்கேயே ஆள்போட்டு பார்த்துக்கறோம். இப்ப பார்த்தா நம்ப வீடே ஒண்ணுமில்லாம இருக்கு. இதுல நானும் போயிட்டேன்னா நீங்க தனியா ஆகிடுவீங்க. ஐயோ, அத நான் நினைச்சி பார்க்க கூட விரும்பல” என்றாள். ஆம் செல்வராஜ் தவறிய பின்பு கௌதமும் உடன் இல்லாததால் தங்கராஜை திருநெல்வேலியிலிருக்கும் அவர்களது பெரிய வீட்டில் ஆள் வைத்து பார்த்துக் கொள்கின்றனர். வீட்டில் பிறந்த மற்ற பெண்களோ திருமணமாகி புகுந்த வீடு சென்றுவிட்டார்கள். அவ்வளவு பெரிய வீட்டில் இப்போது செல்வராணியும் நித்திலாவும் மட்டும் தனியாக இருக்கின்றனர்.

“வேண்டாம்மா கண்டதை போட்டு யோசிக்காத. நீ உன் வாழ்க்கைய பாரு. இதெல்லாம் காலங்காலத்துல நடந்திடனும். உங்க அக்காங்க எல்லாருக்கும் இருபத்திமூணு இல்ல இருபத்திநாலுக்குள்ள பண்ணியாச்சு. நிராவுக்கு இன்னும் சீக்கிரம், இருபது வயசுலயே கல்யாணம் நடந்திடுச்சு. தமையாக்கு மட்டும் கொஞ்சம் லேட் ஆச்சு. இருபத்தாறுல பண்ணோம். அதுவும் அவளும் உன்னைமாதிரி தான், டாக்டருக்கு படிக்கிறேன் மேல படிக்கிறேன்னு லேட் பண்ணிட்டா. காலத்துல பண்ணிருந்தா அவ வாழ்க்கைல அவ்ளோ பிரச்சனை வந்திருக்காதோ என்னமோ” மகளை பற்றி சொன்னவருக்கு தானாக கண்களில் நீர் நின்றது.

தன்னை மீட்டு கொண்டு “அதனால நீ என்ன சொன்னாலும் நான் கேக்க போறதில்ல. உங்க பெரியப்பா இருந்திருந்தா இதையெல்லாம் அவரே பார்த்துப்பாரு. அண்ணன்னு ஒருத்தன் இருக்கான்னு தான் பேரு. எட்டு வருஷம் ஆகப்போகுது இன்னும் ஆஸ்திரேலியாவுல போய் உட்கார்ந்துகிட்டு இருக்கான். கேட்டா, நீங்க நம்ம நித்திகிட்ட பேசி கல்யாணத்துக்கு சம்மதம் மட்டும் வாங்குங்க, அப்புறம் மாப்பிள்ளை ஆளு யாரு என்னனு எல்லாம் விசாரிச்சு உங்க முன்னாடி நிறுத்தவேண்டியது என் பொறுப்புன்னு அங்க இருந்துட்டே வாய் சவடால் விட்டுட்டு இருக்கான். இதோ இந்த மாப்பிள்ளை போட்டோ கூட அவன் சொல்லிதான் ஆள் எடுத்துட்டு வந்து கொடுத்துட்டு போனாங்க” அவர் சொல்லிமுடிக்கவும் நித்திலாவிற்கு முகமே மாறியது. அண்ணன் வருவதே வருடத்திற்கு ஒரு முறை. வரும்வேளையில் பேச சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இதில் இவளது திருமணப் பேச்சை வேறு தொடங்கிவிட்டனர் என்று வருத்தம் கொண்டாள். அதுவுமில்லாமல் திருமண வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் தன் அண்ணனை பற்றிய கவலையும் அவளுக்கு இருந்தது. இது இரண்டிற்கும் தீர்வு, ஒன்றே. அண்ணனை இந்தியா வரவழைப்பது என்று முடிவுச்செய்தவள்

“பெரியம்மா அண்ணனுக்கு கல்யாணம் ஆகாம நான் பண்ணிக்கமாட்டேன்” ஒரேயடியாக சொன்னாள். அதை கேட்டு அதிர்ந்துப்போன செல்வராணி

“என்ன நித்தி நீ இப்படி சொல்ற. அவன் தான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு ஒத்தக்காலுல நிக்கறானே. கேட்டா, இனி உங்க பையன் வாழ்க்கைல கல்யாணம்னு ஒண்ணு கிடையாதுனு சொல்றான். நீ என்னனா அவனுக்கு ஆனா தான் நான் பண்ணிப்பேன்னு சொல்ற. இப்போ நான் என்ன தான் பண்றது” என்ன செய்வதென்று புரியாமல் சொன்னவரை தேற்றும் வகையாக நித்திலா பேச ஆரம்பித்தாள்.

“நான் ஒண்ணு சொல்லட்டும்மா பெரியம்மா” அவரும் சொல் என்பது போல் அவளை பார்க்க “அண்ணன் யாரையோ லவ் பண்ணிருக்காருனு தோணுது. அவங்கள இன்னும் மறக்கலனும் தோணுது. நான் பார்த்திருக்கேன் பெரியம்மா. அவர் லேப்டாப்ல ஒரு பொண்ணோட போட்டோவ நான் பார்த்திருக்கேன். சின்ன வயசுல பார்த்ததால சரியா ஞாபகம் இல்ல. ஒருவேளை அதனால தான் அண்ணன் கல்யாணம் வேண்டாம்னு சொல்றாருனு நினைக்கறேன்”

“அப்படியா சொல்ற நித்தி” ஒருபுறம் மகள் சொல்வதை கேட்கும்போது உண்மையாக இருக்குமோ என்று தோன்றினாலும் மறுபுறம் மகனை பற்றி நன்கு அறிந்தவராயிற்றே..

“ஒரு முறை உங்க பெரியப்பாவும், என் மகன் அவனுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழாதப்போ என்ன இருந்து என்னனு வருத்தப்பட்டிருக்காரு. எனக்கு ஒண்ணுதான் புரியல. நீ சொல்றமாதிரி அப்படி ஒரு பொண்ணு கௌதம் வாழ்க்கைல இருந்தா, அவன் இப்படி சும்மா இருக்கவும் மாட்டான் ஆஸ்திரேலியா போயிருக்கவும் மாட்டான். ஒருவேளை அந்த பொண்ணோட எதாவது பிரச்சனை வந்து பிரிஞ்சிட்டாங்களா. அப்படிதான் இருக்கனும் நித்தி. ஏன்னா கௌதமுக்கு ஒண்ணு வேணும்னா அதை எப்படியாவது பெற்றே தீருவான். இப்படி எதுவும் செய்யாம எதோ ஒரு நாட்டுல போய் உட்கார்ந்துக்கிட்டு இருக்கமாட்டான்”

“ஒருவேளை எதாவது காரணம் இருந்து அதுக்காக அண்ணன் கட்டுப்பட்டிருந்தா” மகள் சொன்ன வார்த்தையை ஏனோ தெய்வ வாக்காக உணர்ந்தார்.

“பெரியம்மா நீங்க முதல்ல சிட்னி கிளம்புங்க. அண்ணன் எதுக்காக இப்படி இருக்காருனு நாம கண்டுபிடிக்கனும்” அவள் சொல்ல, அவர் அவளை பார்த்தார் “என்ன பத்தி யோசிக்காதீங்க. நான் அக்காங்க வீட்டுல இல்ல அத்தை வீட்டுல இருந்துக்கிறேன்” என்றாள்.

“அது சரிப்பட்டு வராது நித்திம்மா. சம்மந்தம் பண்ண வீட்டுல உன்னை தங்க வைக்கறது முறையில்ல. அதோட வேணி வீட்டுல கௌசிக் இருக்கான். ஒரு கல்யாணம் ஆகாத பையன் இருக்க வீட்டுல உன்னை தங்கவிடுறதும் சரியில்ல” மிகவும் தெளிவாக நிதர்சனத்தை பேசினார்.

“அப்ப நான் இங்கயே இருந்துகிறேன். இங்க தான் இவ்ளோ ஆளுங்க இருக்காங்களே. நம்ம வீட்ல எனக்கென்ன பயம். நீங்க இப்போ அண்ணன்கிட்ட போறது தான் பெரியம்மா ரொம்ப அவசியம்” என்று பெரிய அன்னைக்கு நம்பிக்கை சொல்லி அனுப்பிவைத்ததன் பலன் தான் இன்று செல்வராணி ஆஸ்திரேலியாவில் இருப்பது. என்ன, அவரால் கௌதமின் வாயிலிருந்து எதையும் வரவழைக்க முடியவில்லை.

செல்வராஜ் இருந்தபோதும், தவறிய பின்னும், கௌதம் இருந்தாலும், இல்லையென்றாலும் நான்கு மருமகன்களும் அவர்களது தொழிலை நன்றாக கவனித்துக் கொண்டனர். அதிலும் வெற்றிமாறன் தான் அனைத்திற்கும் முழு பொறுப்பேற்று பார்த்துக் கொண்டார். என்றாவது கௌதம் வருவானென அவனது தந்தையின் நாற்காலி அவனுக்காக காத்துக்கொண்டே தான் இருக்கிறது. இதையெல்லாம் மகன் என்று புரிந்துக்கொள்வான் என்று கண் கலங்கினார்.

அவருக்கு என்ன தெரியும் தன் மகனை புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று வருத்தம் கொள்பவர், அதேநேரத்தில் கணவரை பற்றி அனைத்தும் தெரிந்தவர் என்ற இறுமாப்புடன் வாழ்பவருக்கு கணவருக்கும் இன்னொரு முகம் இருப்பதென்பது. அதை மகன் மட்டுமே அறிவான் என்பது. தந்தையிடம் கொள்ளை அன்பும், மரியாதையும் கொண்டவன் அந்த ஒன்றில் அவருடன் மாற்றுக்கருத்து கொண்டு விலகி வந்துவிட்டான் என்று.

அவர் எப்படி அறிவார் பெண்களை மதிப்பது, பெண்பிள்ளைகளுக்கு கல்வி கொடுப்பது அவசியம் என்று நினைப்பது, தொழிலில் நேர்மை, தன்னுடைய கடைகளில் வேலை செய்பவர்களை மதிப்புடன் நடத்துவது என்று அனைத்திலும் அவரது கணவர் முற்போக்கு சிந்தனைக்கொண்டவரே. ஒன்றை தவிர. அதில் மட்டும் அவருடைய கருத்தில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. அவரை மாற்றிக் கொள்ளவும் அவர் விரும்பவில்லை. அதற்காக அவர் என்னவும் செய்ய தயாராக இருந்தார். அந்த ஒன்று தான் கௌதமின் வாழ்வையும் அழித்து இன்றைக்கு அவனை ஆஸ்திரேலியாவில் வந்து அமரவைத்துள்ளது. இதை அறியும் நேரம் செல்வராணி என்ன முடிவு எடுப்பார்.

இப்படி பலவிடையறியா கேள்விகளோடு பயணித்துக் கொண்டிக்கும் இவர்களது சாபம்பெற்ற வாழ்விற்கு விமோசனம் கொடுக்க அவனும் தான் இருக்கிறான். ஆனால், அவன் இருக்கிறான் என்பதை இவர்கள் தான் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ராமனின் பாதம்பட்டு அகலிகை சாபம் விலகியது போல், என்று அவனது பாதம் அந்த வீட்டில் படும்? என்று அந்த வீடு பொலிவை பெரும்? என்று இவர்களது வாழ்வின் சாபம் நீங்கும்? இறைவன் ஒருவன் மட்டுமே அறிந்தது.
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மருந்தின் தாக்கத்தில் கடந்த மூன்று நாட்களாக எந்த தொந்தரவுமின்றி நன்றாக உறங்கி, நன்கு குணமாகி இருந்தவனுக்கு இன்று ஏனோ மறுபடியும் உறக்கம் வரவில்லை. முயற்சி செய்து உறங்கியவனை மறுபடியும் அந்த குரல் தட்டி எழுப்பப் பார்த்தது.

ஆம், இந்த எட்டு வருடங்களாக அவனை தினம் தினம் தொந்தரவு செய்யும் அதே குரல் ‘போகாத கௌதம். ப்ளீஸ் கௌதம் போகாத. என்னால இங்க எதையுமே தனியா சமாளிக்க முடியாது. ப்ளீஸ் போகாத. கௌதம்ம்ம்’ இன்றும் அவனை எழுப்பியே விட்டது.

“ச..னு... ஐ எம் சாரி சனு. ஐ ஆம் சாரி” எழுந்தவன் திரும்ப திரும்ப சொன்ன வார்த்தைகள் இவை.

அவன் தினம் தினம் கேட்கும் அந்த குரலுக்கும் அவனிடம் மன்றாடிய அந்த வார்த்தைகளுக்கும் சொந்தக்காரி, அவன் உருகி உருகி நேசித்த அவனுடைய சனு. ஆம், அவன் சனு என்று செல்லமாக அழைக்கும் சந்தியாவே அவள். அவனை இன்றுவரை உறங்கவிடாமல் செய்பவள் அவளே. பாரம் தாங்காமல் தலையை பிடித்துக் கொண்டான்.

எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும், அவன் இதுவரை ஒருமுறையும் நேரில் கேட்கவில்லையே. அவளை நேருக்கு நேராக அவன் கடைசியாக பார்த்தது அந்த சென்னை சர்வதேச விமானநிலையத்தில் தானே. அவன் அவளுக்கு செய்தது எவ்வளவு பெரிய துரோகம். அதுவும் நம்பிக்கை துரோகம். அவனின் அந்த செயல் இன்றும் அவனை குத்திக் கிழித்து கொண்டு தான் இருக்கிறது. அவனையே அவனால் மன்னிக்க முடியாத போது அவள் எப்படி மன்னிப்பாள் என்ற எண்ணமா? இல்லை அவளை எதிர்கொள்ள முடியாது என்ற பயமா? இல்லை எதிர்கொள்ள முடியாத வேறு சூழ்நிலையா? எது அவனை அவளிடமிருந்து தள்ளியிருக்க செய்தது? எது அவனை அவளிடம் முகம் காட்டவிடாமல் செய்தது? எது அவனை ஓட வைத்தது? எது அவனை திரும்பி வரவிடாமல் செய்தது?

அவன் தான் மரத்தின் மீதமர்ந்து கிளையை வெட்டியவனாயிற்றே. விழுந்தவள் அவள் மட்டுமா, அவனும் தானே. அவள் வதைந்து கொண்டிருக்கிறாள் என்பதில் ஐயமில்லை ஆனால், அவளைவிட பலநூறுமடங்கு அதிகமாக அவனல்லவா வதைகிறான். உண்மை காதலில் நடக்கும் அனைத்திலும் இருவருக்கும் சமபங்கு தானே. இன்பம், துன்பம், கண்ணீர், வலி, சேதாரம் என அனைத்தும் இருவருக்கும் தானே. அவளுக்கு மட்டும் தான் வலியென்று அவள் நினைத்துக் கொண்டால் அது உண்மையாகி விடுமா.

பின் சுதாரித்தவன் அந்த குரலை விட்டு ஓட.. அவன் அவளுக்கு செய்த துரோகத்தால் அவள் தினம் தினம் எவ்வாறு வதைந்து கொண்டிருக்கிறாளோ என்று தோன்றும் போதெல்லாம் அவளிடமே சென்றுவிடுவோம் என்று எண்ணும் நினைப்பை விட்டு ஓட.. அவள் வேண்டும் அவள் மட்டும்தான் வேண்டும் என்று துடிக்கும் மனதின் துடிப்பை விட்டு ஓடும் முயற்சியில் அவளை விட்டு ஓடிய அந்த கால்களை புண்படுத்தும் நோக்கத்தில் ஜாகிங் செல்ல ட்ராக்ஸ், ஸ்லீவ்லெஸ் ஹீடி மற்றும் ஷூ அணிந்து அறையை விட்டு வெளியே வந்தவன் அதிர்ந்துப் போனான்.

செல்வராணி அவரது அறையில் படுக்காமல் வரவேற்பறையிலிருந்த சோபாவிலேயே படுத்திருந்தார். அவருக்கு கேட்டிராத படி மெதுவாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து முன்சென்று கதவை சப்தம் செய்யாமல் திறக்க போனவனை “நில்லு கௌதம். எங்க போற” உறக்கத்திலிருந்து எழுந்த செல்வராணி கடுப்பான குரலில் கேட்டார்.

“அதும்மா. உடம்பு சரியாகிடுச்சு, அதான் ஜாகிங் போறேன்ம்மா” ஒன்றும் நடக்காதது போல் சாதாரணமாக சொல்ல, செல்வராணிக்கு கோபம் தலைக்கு ஏறியது. அவர் எளிதில் கோபப்படுபவரல்ல. பலநாட்களாக ஒன்றும் செய்யமுடியாத ஆற்றாமையே இன்று கோபமாக உருமாறி இருந்தது.

“நீ ஏன் கௌதம் இப்படி பண்ணிட்டிருக்க. உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க. ரெண்டு நாளா உடம்பு முடியாம படுத்துட்டு இருந்த. உன்னை அப்படி பார்த்தப்போ பெத்த வயிறு எப்படி பத்தி எரிஞ்சது தெரியுமா. இப்ப என்னனா எதுவுமே நடக்காத மாதிரி ஜாகிங் போறேன்னு சொல்ற. எதையும் கேக்க கூடாதுங்கற முடிவுல இருக்கியா”

“என்ன பிரச்சனை உனக்கு. எதனால இப்படி இருக்க. இதை கேட்டு கேட்டு என் வாயே வலிச்சு போச்சு. ஒரு நாளாவது வாய திறக்கறீயா. அப்படி என்ன அழுத்தம் உனக்கு. தப்பு பண்ணிட்டோம். ஒரே மகன்னு நானும் உங்க அப்பாவும் உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம். அதான் நாங்க என்ன சொல்றது நீ என்ன கேக்கறதுனு இருக்க. சரி எங்களை விடு நீயாவது சந்தோசமா இருக்கியா அதுவும் இல்லயே” கோபத்திலும் பொறுமையாக கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் தான் சொல்லிக் கொண்டு இருந்தார். அவனோ எதற்கும் வாய் திறவாமல் அவரை சோதித்தான்.

“ரெண்டுநாளா எப்படி கிடந்த. இன்னைக்கு காலைல அதுவும் இந்த குளிர்ல கிளம்பற. திரும்ப உடம்புக்கு எதாவது வந்தா, நான் என்ன பண்ணுவேன். ஒத்த பிள்ளைய பெத்து வச்சிருக்கேன். அதை பொத்தி பொத்தி வளர்த்தது இப்படி பார்க்கவா. சொல்லு, என்ன பிரச்சனை உனக்கு. எதனால இப்படி கடல் கடந்து வந்து, இதோ எதோ ஒரு ஊருல உட்கார்ந்துட்டு இருக்க. உங்க அப்பாவோட எதாவது பிரச்சனையா. அன்னைக்கு நீயும் அவரும் தனியா எதையோ பேசினீங்களே அதுல எதாவது பிரச்சனையா. அதனால தான் நீ இங்க வந்துட்டியா. கடைசியா நீ வீட்டை வீட்டு கிளம்பறதுக்கு முன்னாடி அவரோட தான எதோ கோவமா பேசிட்டு கிளம்பின. அதுதான் இது எல்லாத்துக்கும் காரணமா. சொல்லுப்பா அம்மா கேக்கறேன்ல” மௌன ஆசாமியாக அப்படியே சிலை போல் நின்றவனை பார்த்து கோபப்படுவதா அழுவதா என்று அவருக்கு புரியவில்லை. இருந்தும் இன்று ஒரு முடிவெடுத்தே தீரவேண்டும் என்ற உறுதியோடு கோபத்தை விடாது தொடர்ந்து பேசினார்.

“நான் கவனிக்கலைனு நினைச்சிட்டியா. அம்மா படிக்காதவளா இருக்கலாம், அதுக்காக அறிவில்லாதவனு நினைச்சிட்டியா. இதோ இந்த கையில பச்சைகுத்திருக்கியே” கை இல்லாத அவனது ஹீடியில் மிக தெளிவாக தெரிந்ததை காட்டிச் சொன்னவர்

“இது என்னப்பா ஜி.எஸ். இதுக்கு என்ன அர்த்தம். ‘ஜி’ நீ ‘எஸ்’ யாரு சந்தியாவா” அந்த பச்சையின் நடுவில் மறைந்திருந்த அந்த ஜி.எஸ்ஸை கவனித்து அவர் கேட்ட கேள்வியில் அவன் அதிர்ந்துப்போனான். முழுக்கை சட்டை, அரை கை சட்டை என எந்த உடையிலும் அந்த பச்சை தெரியாது. அதனால் யாரும் அவனை இதுவரை எந்த கேள்வியும் கேட்டதில்லை. அவன் அணியும் இந்த கை இல்லாத ஹீடியில் மட்டும் தான் அது தெரியும். அதுவும் தமயந்தி வந்தபோது அதை மறைக்கவேண்டிய அவசியம் அவனுக்கு இருக்கவில்லை. ஏனென்றால், இவனது காதல் விவகாரம் அவளுக்கு தெரியும். அன்னை இதை கவனிப்பார் என்று அவன் யோசிக்கவே இல்லை. அவரோ கவனித்தே விட்டார். அதுமட்டுமா அந்த பெயரையும் அவரால் எப்படி சரியாக சொல்ல முடிந்தது. கௌதம் ஆடிப்போயிருந்தான்.

“அப்புறம் நான் பார்க்கலைனு நினைக்காத. உன் நெஞ்சுல அவ பேரை பச்சைக்குத்தி வச்சிருக்கறதும் எனக்கு தெரியும். எனக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு சாதாரணமா எடுத்துக்கிட்டல. எனக்கு படிக்க தெரியாது தான்ப்பா அதுக்காக ஏபிசிடி கூடவா தெரியாது. நளின்கிட்ட அதுல இருந்த எழுத்துக்களை சொல்லி கேட்டப்போ அது சந்தியான்னு சொன்னான். யாரு கௌதம் அந்த சந்தியா” என்று கேட்டார்.

மூர்க்கம் தான் அவன். அன்னை இவ்வளவு பேசியும் அவன் வாய் திறக்கவில்லை. முதலில் பேசாமல் இருந்தான். இப்போதோ பேச முடியாமல் இருந்தான். சந்தியா யாரென்று இப்போது சொல்லி என்ன ஆகப்போகிறது. அது புரியாத செல்வராணியின் கோபம் மகனின் மௌனத்தில் வெகுவாக உயர்ந்து இருந்தது.

“சொல்லு கௌதம், யாரு அந்த சந்தியா. நீயும் அவளும் காதலிச்சிங்களா. அப்பா ஒத்துக்கலையா. அதான் அவர் தான் இப்ப இல்லயே. உன் விருப்பப்படி அவளையே கல்யாணம் பண்ணிக்கோப்பா. நான் தடை சொல்லமாட்டேன். ஒத்த பிள்ளை இப்படி தனியாக நிக்கறதுக்கு உன் விருப்பப்படி நீ யாரை ஆசைப்படுறயோ அவளையே கல்யாணம் பண்ணிக்கோ. ஒருவேளை அவங்க வீட்டுல ஒத்துக்கலையா, என்னை கூட்டிட்டு போ நான் போய் பேசறேன். என் மகனுக்காக நான் போய் பேசறேன். இல்ல, இப்போ உனக்கும் அவளுக்கும் சண்டையா, அதுக்கும் நான் வந்து பேசறேன். எனக்கு நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்டாட்டி குழந்தைனு வாழ்ந்தா போதும். நீ இப்படி தனியா நிக்கவா கோயில் கோயிலா சுத்தி நாங்க உன்னை பெத்தெடுத்தோம். சொல்லுப்பா. எதாவது சொன்னா தான எனக்கு தெரியும்” என்று ஆவேசப்பட்டார். எதற்கும் வாய் திறக்காமல் நின்றவனை பார்த்தவரது கோபம் அடுத்தடுத்த நிலைக்கு சென்றது. இதுவரை செல்வராஜும் சரி அவரும் சரி அவனை அடித்ததில்லை எங்கே அடித்துவிடுவோமோ என்ற அளவிற்கு கோபத்தை தூண்டிக் கொண்டிருந்தான்.

அவருக்கு கோபம் ஏற ஏற குரலை உயர்த்தி பேச ஆரம்பித்தார் “அப்பாகிட்ட என்ன பிரச்சனைனு தெரியல, வீட்டுக்கு வரல, அவர்கிட்ட பேசல, அவரை வந்து பார்க்கல. அவர் போய்யும் சேர்ந்துட்டாரு. அக்காகிட்ட என்ன சண்டைனு தெரியல, கேட்டா முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்னு சொல்ற. கூடப் பிறந்தவங்களாம் ஒரு வயசு வரைக்கும் தான். அப்புறம் அது அது அவங்க அவங்க வாழ்க்கைய பார்க்க போறீங்க. என்ன, என் பொண்ணும் பையனும் இப்படி இருக்காங்களேன்னு எனக்கு வருத்தம் இருக்கும். ஆனா, உன் வாழ்க்கை அப்படி இல்லயே. அந்த பொண்ணு சந்தியா கூட என்ன பிரச்சனை. நீ சண்டை போட்டுட்டு வந்துட்டியா, இல்ல அவ சண்டை போட்டுட்டு போயிட்டதால நீ இங்க கிளம்பி வந்துட்டியா. இப்ப அவ எங்க இருக்கா, என்ன பண்றா” இடைவேளை விட்டவர் “ஒருவேளை அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சா. அதனால தான் இப்படி ஆகிட்டீயா. எதாவது சொல்லுப்பா, சொன்னா தான தெரியும்” மறுபடியும் அழும் குரலுக்கு மாறினார்.

கல் போல் நிற்பவனை கண்டு பிரம்மித்துப் போனார். என்ன ஒரு பிடிவாதம். தனக்கு பிடிவாதம் என்றால் என்னவென்றே தெரியாது. கணவருக்கு கொஞ்சம் பிடிவாத குணம் இருக்கதான் செய்தது. ஆனாலும் இவன் அளவிற்கு இல்லையே. சொல்லப்போனால் இவன் அளவிற்கு யாருக்குமே இல்லையே. அவன் இப்படி நிற்பதை பார்க்கும் போது கோபம் இருந்தாலும் அழுகை தான் பீறிட்டு வந்தது. மகனுடைய வாழ்வை சரியாக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதை நினைவுக் கூர்ந்தவர் இன்று விட்டுக்கொடுக்கும் எண்ணத்தில் இல்லை. அழுகையை விட்டொழித்து கோபத்தை விடாது பிடிக்கப் பார்த்தார்.

மகனோ அந்த சிரமத்தை கூட தராமல் அவனது மௌனத்தின் வாயிலாக அவரது கோபத்தை உச்சக்கட்ட நிலைக்கு சென்றடைய செய்ததில் அவர் உச்சக்குரலில் கத்தினார் “என்ன தான் பிரச்சனை உங்க ரெண்டுபேருக்கும் நடுவுல. ரெண்டுபேரும் பிரிஞ்சிட்டிங்களா. உன்னால அவளை மறக்க முடியலையா. இப்படி வாய திறக்காம இருந்து என்ன சாதிக்கப்போற. சொல்லு கௌதம். வாய திற” என்று ஆத்திரத்தில் கத்த

“அம்மா கத்தாதீங்க. இது காலைல நேரம். எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க. ப்ளீஸ் கத்தாதீங்க. இங்க இந்தமாதிரி கத்தினா என்னமோ ஏதோனு நினைச்சிடுவாங்க. அப்புறம் நான் தான் உங்களை எதோ பண்ணிட்டேன்னு நினைச்சிப்பாங்க” இவ்வளவு நேரம் பேசியதில் இப்போது தான் அவன் வாயை திறந்தான் அதுவும் அவர் கேட்ட கேள்விகான பதில் இல்லை.

“இந்த ஊர் தான் இப்படினு தெரியுதுல, அப்புறம் எதுக்கு இங்க வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்க. அங்க அவ்ளோ பெரிய வீடு, தொழில், பெத்தவங்க, அக்கா தங்கச்சிங்கனு எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வந்து உட்கார என்ன அவசியம் வந்துச்சு. அங்க ஒரு ரூம் பூட்டியே இருக்கு. அப்பப்போ அதுக்குள்ள போய் உட்கார்ந்துக்கிற. நீ உள்ள என்ன பண்ற, ஏது பண்ற எதுவும் புரியமாட்டேங்கிது. ரொம்ப நேரம் கழிச்சி வெளில வர. என்னன்னு கேட்டா வாயையும் திறக்கமாட்டற. நான் என்னனு எடுத்துக்கறது” கண்களில் வழிந்து வந்த கண்ணீரை துடைத்தவர் முகத்தையும் முந்தானையால் துடைத்தார்.

“இல்லல்ல இது சரிப்பட்டு வராது. நீ முதல்ல கிளம்பு” அவர் சொல்ல, அவன் எங்கே என்று பார்க்க “என் கூட இந்தியா வர. நீ இங்க இருந்தது போதும். இருக்க இருக்க மூர்க்கமா தான் ஆகிட்டு வர. இதுக்கு அப்புறமும் உன்னை தனியா விட எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அதேநேரத்துல உன் கூடவும் என்னால இருக்க முடியாது. அங்க நான் வயசு பொண்ண விட்டுட்டு வந்திருக்கேன். அவர் போயிட்டாரு நாளைக்கு நானும் போயிட்டா செய்ய வேண்டியதை செஞ்சி எடுத்து போட்டுட்டு நீ இங்க வந்துக்கோ. இல்ல வேற எதாவது நாட்டுக்கு போகணும்னாலும் போய்க்கோ. ஆனா இப்ப நான் கிளம்பறப்போ நீயும் என் கூட கிளம்பற”

“அதெல்லாம் முடியாதும்மா. நான் எங்கயும் வர்றதா இல்ல” மறுத்தவனை ஏற இறங்க பார்த்தவர்

“நீ வரலைனா நான் உன்னை அங்க வர வைப்பேன். நான் செத்தா வருவல, இல்ல நான் எங்கயாவது காணாம போயிட்டா தேட வருவல. உன் அம்மால, நானும் உன்னை மாதிரி வீம்பா மாறினா தான் வேலைக்கு ஆகும்"

“ப்ளீஸ் ம்மா. நான் ஏற்கனவே நிறைய குற்றஉணர்ச்சில நிம்மதி, தூக்கம் எல்லாத்தையும் இழந்துட்டு இருக்கேன். நீங்களும் உங்க பங்குக்கு என்னை குற்றவுணர்ச்சிக்கு தள்ளாதீங்க. அதையும் மீறி உங்க வேதனையிலயும் தூக்கத்தை இழந்து நான் அலையனும் நினைச்சீங்கனா, உங்க விருப்பத்துக்கு செய்யுங்க” தாயவர் மகனுக்கு செக் வைக்க அதை அவன் அவருக்கே திரும்பினான்.

அத்துடன் விடாமல் “இப்ப என்ன. இந்த காலைல நான் ஜாக் போறதுல தான உங்க பிரச்சனை. போகல போதுமா” கோபமாக சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.

எதனால் இந்த பிடிவாதம், எதற்கு இந்த வீம்பு, எதற்கு இவ்வளவு கோபம், எதனால் இந்த வனவாசம் என்று மேசை மீதிருந்த கணவரின் புகைப்படத்தை எடுத்து மடியில் வைத்து வேதனையுடன் பார்த்தவர்

“முக்கால் மணிநேரமா பேசறேன், நின்ன இடத்துலயே வாய திறக்காம எப்படி கல்லு மாதிரி நின்னான்னு பார்த்தீங்களா. எதுக்குங்க இவ்ளோ பிடிவாதம். எல்லாரை மாதிரியும் இவன் உடம்புலையும் இரத்தமும் சதையும் தானங்க இருக்கு. இந்த பிள்ளை எதனால ஆனான்னு பெத்த எனக்கே புரியலையேங்க. நான் என்ன பண்ணி இவனை சரி பண்றது” பெற்றவர் மனம் பிள்ளையின் வேதனையால் துடித்து கொண்டிருந்தது.

சிறுவயதில் அவனது பிடிவாதத்திற்கு துணைப் போன தாயால் இன்றைய அவனது செயலை ஜீரணித்து கொள்ள முடியவில்லை. அதிலும் அவனது மௌனம் அவரை மிகவும் அலைகழித்தது. சாந்தஸ்வரூபிணியையும் இவனது மௌனம் எரிமலை ஆக்கிவிடும் என்றெண்ணினார்.

இப்படியே வெளியே அவர் பற்பல சிந்தனையில் மூழ்கியிருக்க சிறிது நேரம் கழித்து அறை கதவை திறந்தவன் அவர் சொன்ன அந்த பூட்டப்பட்ட அறையின் கதவை திறந்து தாயவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டான். அந்த அறையில் தானே அவள் வேண்டாமென்று நினைக்கும், அவன் வேண்டுமென்று போற்றி பாதுகாக்கும் பல உணர்வுகளும் உடமைகளும் உள்ளது. அவன் வாழும் அர்த்தத்தை அங்கிருக்கும் பொருட்கள் தானே அவனுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. அது தந்த மகிழ்ச்சியில் அவளை பலவருடங்களுக்கு முன் அவன் முதன்முதலில் பார்த்ததை, அந்த நாளை, அந்த நிகழ்வை நினைத்து பார்க்க தொடங்கினான்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 4

கெளதமை தங்க தாம்பாளத்தில் தாங்க அவனது குடும்பமே இருந்தாலும் அவன் தந்தையை போலவே தன்னிடம் வேலை செய்பவர்களை வேலையாளாக எண்ணாமல் அனைவரையும் சக மனிதர்களாவே பார்த்தான். தந்தைக்கு பிறகு அவன் தான் அவர்கள் நிறுவனத்தினை எடுத்து நடந்தப்போகிறான் என்றிருந்தாலும் அப்படி நேராக முதலாளி நாற்காலியில் அமர்ந்து தந்தை சேர்த்து வைத்ததை கவனித்து கொள்ள அவன் விரும்பவில்லை. தந்தை எவ்வாறு சிறியக்கடையில் கடைநிலை ஊழியராக ஆரம்பித்து வேலைகளை கற்றுக் கொண்டு அவர்களது நிறுவனத்தினை நிறுவினாரோ அதுபோல் தானும் அடிமட்டத்தில் இருந்து வேலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்றெண்ணினான். அதையே வீட்டிலும் சொன்னான். கேட்டால், தனக்கு தன் கடையில் நடக்கும் ஒவ்வொரு வேலையும் தெரிந்திருக்க வேண்டும், அப்போது தான் வேலையாட்களின் சிரமமும் புரியும் அவர்களை மேற்பார்வை பார்த்து வேலை வாங்கவும் சரியாக இருக்கும் என்று சொல்லுவான். இதை அவன் சொன்னபோது அவனுக்கு வயது வெறும் பதினைந்து. அந்த வயதிலேயே அவ்வளவு திறனானவன்.

அதை தவிர அவனுக்கு பெரிய மென்பொறியாளர் ஆகவேண்டும் என்ற லட்சியமும் இருந்தது. அதற்கான திறனும் அவனிடம் இருந்தது. பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிபெண்கள் எடுத்து சிறந்த பொறியியல் கல்லூரியில் சேர வேண்டும் என்ற கனவுடன் பத்தாம் வகுப்பு பொது தேர்வெழுதி முடிவிற்காக காத்திருந்தான்.

அவன் சொன்னபடியே அடுத்த மாதம் பதினாறு வயதை எட்ட போகும் அந்த இளங்கன்று அவர்களது கடையிலேயே ஒரு ஊழியனாக பணியில் சேர்ந்தான். அவரிடம் இருந்த அதே துடிப்பை மகனிடமும் பார்த்த செல்வராஜுக்கு அப்படி ஓர் பெருமை. அவன் வாடிக்கையாளர்களிடம் லாவகமாக பேசுவது, துணிகளை சலிக்காமல் காட்டுவது, எப்போதும் முகத்தில் புன்னகையுடன் வருபவர்களை அணுகுவதென்று மகன் செய்யும் ஒவ்வொன்றையும் அவர் தூரத்திலிருந்து மெச்சிக் கொண்டிருந்தார். இவன் வேலை செய்யும் அழகை பார்க்க ஒருநாள் மொத்த குடும்பமும் கடைக்கு வந்து அந்த கண்கொள்ளாக் காட்சியை பார்த்து ரசித்தனர். மகனாயினும் அவன் செய்த வேலைக்கு ஊதியத்தை கொடுக்க எண்ணிய தந்தை, சொந்தக்கடையாக இருந்தாலும் வேலை செய்யும் நேரத்தில் அதற்கான உடையில் தான் இருக்கவேண்டும் என்று எண்ணிய மகன் என இருவரையும் அவர்கள் வீட்டு மூத்த மருமகன் வெற்றிமாறன் பிரம்மிப்பாக பார்த்தார். ஆம், கார்த்தியாயனிக்கு திருமணமாகி நான்கு மாதங்கள் இருக்கும். மருமகன் அவர்களது நிறுவனத்தை கவனித்துக் கொள்ளவும் தொடங்கி இருந்தார். தூரத்து சொந்தம் என்பதால் கௌதமை வெற்றிமாறனுக்கு சிறுவயதிலிருந்தே தெரியும். அவன் மீது அவருக்கு தனி அன்பும் உண்டு. இப்போதோ இந்த சிறிய வயதில் அவனுக்கு இருக்கும் பொறுப்பை கண்டு அவனை பற்றி உயர்வாகவும் எண்ணி அவர் மனதில் அவனுக்கென்று ஒரு தனி இடமே கொடுத்துவிட்டார். இதுதான் கௌதமின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமா?

இப்படியே கெளதம் வேலையில் சேர்ந்து இருபது நாட்களுக்கும் மேலாகி இருந்தது. வேலைக்கு தினமும் அவனது விலையுயர்ந்த டுகாட்டி பைக்கில் வருவான். தேவையில்லாத பேச்சு, கைபேசியில் நேரத்தை செலவிடுவது என்று எதுவும் வைத்து கொள்ளமாட்டான். ஒவ்வொரு வேலையையும் ஆர்வமாக கற்று தெரிவான்.

அன்றொரு நாள் அவனை பட்டுப்புடவை பிரிவில் போட்டிருந்தனர். அங்கு தான் முதன்முதலில் அவளை பார்த்தான். சந்தியா தன் தாயுடன் பட்டுப்புடவை எடுக்க வந்திருந்தாள்.

“அம்மா, நான் காசு வச்சிருக்கேன். உனக்கு பிடிச்ச கலரா பார்த்து எடுத்துக்கோம்மா” அந்த குரலை கேட்டு தான் அவர்களுக்கு முன்பு வந்தவருக்கு காட்டிய புடவைகளையெல்லாம் திரும்பி நின்று மடித்து அடுக்கி கொண்டிருந்தவன் திரும்பினான். முதலில் மீனாட்சிக்கு சந்தியா பார்த்து பார்த்து புடவை எடுத்தாள். அதை அவன் வைத்து பார்க்க ஏதுவாக மடித்துத் தர, அவளும் ஆர்வமாக அன்னைக்கு நன்றாக இருக்கிறதா என்று அவர் தோள்மீது வைத்துப் பார்த்தாள்.

அவள் அதிகமாக பேசவில்லை, அளவாகவே பேசினாள். ஆனால் அம்மாவின் மீது கொண்ட அன்பு அவனுக்கு நன்றாக புலப்பட்டது.

இவன் திரும்பி புடவை எடுக்கும் நேரத்தில் தாயை தன் பக்கம் இழுத்து “அம்மா இந்த பையனை பார்த்தா ரொம்ப சின்ன வயசு மாதிரி இல்ல” அவர் காதை கடிக்க, கௌதமிற்கு பாம்பு காது அவள் சொன்னது கேட்டுவிட்டது. ஆனால் கவனிக்காதது போல் இரண்டு மூன்று புடவைகளை எடுத்துக் கொண்டு திரும்பினான். அவளும் தாயை விட்டு தள்ளி வந்தாள்.

மறுபடியும் வேறொரு புடவையை எடுக்கச் சொல்ல அவனும் திரும்ப “பாவம்மா.. படிக்க வேண்டிய வயசுல இப்படி வேலை செய்யறான். வீட்ல என்ன கஷ்டமோ. அச்சாவும் இப்படி தான சின்ன வயசுல இருந்தே வேலைக்கு போயிட்டு இருக்காருனு சொன்ன” அவனை பார்த்து பரிதாபப்பட்டவளுக்கு என்ன தெரியும் இந்த செல்வராணி சில்க்ஸ்ஸே அவனுடையது என்று. பிடித்து இருந்தது. யாரென்று தெரியாத ஒருவனது படிப்பின் மீது அவள் கொண்ட அக்கறை அவனுக்கு பிடித்து இருந்தது. இருந்தும் அதை காட்டிக் கொள்ளாமல் கண்ணும் கருத்துமாக தன் வேலையை செய்துக் கொண்டிருந்தான்.

“எங்க திரும்பு” மீனாட்சி அவருக்கு எடுத்த புடவையை மகளுக்கும் நன்றாக இருக்குமா என்று வைத்து பார்க்க, அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கௌதமிற்கு சந்தியாவின் வயது தெரியாது. ஆனால், அவளை பார்க்கும்போது அவன் அன்னையின் நினைவு வந்தது. கிட்டதட்ட இதே வயதில் தான் செல்வராஜ் அவரை திருமணம் செய்திருந்தார். செல்வராஜ், நல்ல உயரம், அதற்கேற்ற உடலோடும் இருப்பார். செல்வராணிக்கோ அப்போது வயது வெறும் பதினைந்து. மெலிதாக அவரது தோளுக்கு கீழ் சிறுப்பெண் போல் தான் இருப்பார். இவளை பார்த்தவனுக்கு அன்னையை பார்த்தது போல் இருந்தது. அந்த கல்யாண கூரைப்பட்டில் அவரும் இவளைப் போல் தான் இருப்பார்.

அவள் அவர்களுக்கு நேராக இருந்த கண்ணாடியில் புடவை எப்படி இருக்கிறது என்று பார்க்கப் போனாள். அந்நேரத்தில் அந்த தளத்தில் மெல்லிய ஓசையில் இசைத்துக் கொண்டிருந்த பாடல் அவனது காதுகளில் தேடி வந்து விழுந்தது.

‘பெண்ணல்ல
பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல
கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ


சிறு கைவளை
கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல்
ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ

சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ’


தந்தை, தன் கடைக்கு வரும் பெண்களிடம் யாராவது வாலாட்டினாலே தொலைத்து விடுவார். இவனோ கண்ணாடியில் தன்னை பார்த்து கொண்டிருந்தவளை தன்னை மறந்து ரசித்து கொண்டிருந்தான். அவள் திரும்பி நடந்துவர அந்த பாடலில் வரும் ஒவ்வொரு வரியின் அர்த்தத்தையும் அவளிடத்தில் தேடிக் கொண்டிருந்தான். தான் செய்வது தவறென்று புத்தி எவ்வளவோ எடுத்துரைத்தது. மனமோ அதற்கு மாறாக அவளை பார் பார் என்று சொல்லியது.

அவளது தோளில் நிறைந்திருந்த அந்த வாடாமல்லி நிறப் பட்டுப்புடவை, அவளது பால்நிற கொழு கொழு கன்னங்கள், அவனை அவள் வசம் இழுக்கும் அவளது கூர்மையான காந்த கண்கள், கைகள், கைவிரல்கள், கால்கள், நடை, நளினமென ஒவ்வொன்றையும் பரவசமாக பார்த்துக் கொண்டிருந்தான். இந்த பாடலே அவளுக்காக தான் எழுதியிருக்கிறார்கள் என்று உருகினான்.

அவள் அருகில் வர வர சொல்லமுடியாத இன்பம் அவனை தொற்றிக் கொண்டது. அது அவனுக்கு புதிதாக இருந்தது. இதுவரை அவன் இது போன்ற உணர்வை அனுபவித்ததில்லை. அதற்கான வயதும் அவனுக்கு இருந்ததில்லை. இப்போதோ மீசையும் ஆசையும் ஒன்றாக முளைத்திருந்தது.

அவன் அருகில் வந்தவள் “இந்த சாரீய எடுத்துக்கறோம்” என்று மெல்லிய குரலில் சொல்ல, அவன் பேச்சிழந்தவன் போல் தலையை மட்டுமே அசைத்தான்.

இப்படி அவளது இருப்பில் மனம் லயித்து எங்கோ ஒரு உலகத்தில் இருந்தவனை மீனாட்சியின் குரல் மீண்டும் செல்வராணி சில்க்ஸ்க்கு அழைத்து வந்தது.

“தம்பி. அதை வைப்பா. அடுத்து பொண்ணுக்கு புடவை பார்க்கணும். மூவாயிரத்து ஐநூறு ரூபாய்குள்ள புடவை காட்டுங்க” என்றார். இப்போது இன்னும் ஆர்வமாக காட்ட தொடங்கினான். ஏனென்றால் இது அவளுக்கு எடுக்கப்போகும் புடவையாயிற்றே.

ஏனோ அவளுக்கு பிடிக்கவில்லையோ இல்லை அன்னைக்கு பிடிக்கவில்லையோ இல்லை அவளை கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருக்கும் கௌதமிற்கு பிடிக்கவில்லை என்பதை அவள் மனமும் உணர்ந்ததோ.. எது என்னவோ எந்த புடவையும் சந்தியாவிற்கு திருப்தியை தரவில்லை.

“இன்னைக்கு காலைல தான் லேட்டஸ்ட் டிஸைன்ஸ்ல புடவைங்க வந்திருக்கு. இருங்க அதை கொண்டு வரேன். அதுல எதாவது பிடிக்குதான்னு பார்ப்போம்” புடவை அமையாத வருத்தத்தில் அவள் முகம் சுருங்குவதை கண்டவனின் மனம் வாடிப்போக சொன்னான்.

“நீங்க டீ, காஃபி எதாவது சாப்பிடுறீங்களா” அவன் கேட்டதும், அம்மாவும் பெண்ணும் இந்த மாதிரி உபசரிப்பெல்லாம் அதிக விலைக்கு துணி வாங்குபவர்களுக்கு தானே தருவார்கள் என சந்தேக பார்வையை பார்த்துக் கொள்ள, அதற்கு மேல் அங்கிருந்தால் மாட்டிக் கொள்வோம் என்று நகர்ந்தான்.

நேராக தரைத்தளத்தில் இருந்த கிடங்கிற்கு சென்றவன் புதிதாக வந்த புடவைகளை பார்த்தான். ஒவ்வொரு புடவையை பார்க்கும் போதும், கண்களை மூடி தன் மனக்கண்ணில் அவளுக்கு அந்த புடவையை வைத்து நன்றாக இருக்கிறதா என்று அழகு பார்த்து நான்கு புடவைகளை தேர்வு செய்தான். அங்கிருந்த சூப்பர்வைஸரும் வேலையாலும் முதலாளி மகன் என்பதால் எதுவும் பேசமுடியாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.

“இந்த நாலு புடவைய மட்டும் எடுத்துக்கறேன். ஆமா, இதெல்லாம் என்ன விலை” என்று விலையை கேட்க, அவர் சொன்னதில் ஆடிப்போனான். ஆம், அவையனைத்தும் முகூர்த்தப்பட்டு. ஒவ்வொன்றின் விலையும் இருபதாயிரம், இருபத்தைந்தாயிரம் என்று இருந்தது. அதற்கு மேலும் கூட இருந்தது.

அவன் அதிர்ந்ததெல்லாம் சில நொடிகளே “சரி இந்த நாலு புடவைலயும் ரெண்டாயிரத்துல இருந்து மூவாயிரத்துல ஒரு விலைய டேக்ல போட்டு கொடுங்க” அவன் கௌதமாயிற்றே மிக மிக சர்வ சாதாரணமாக சொன்னான். இப்போதோ அதிர்ச்சியடைவது சூப்பர்வைஸரின் முறையாகிப் போனது.

“விலைய மாத்தனுமா. தம்பி இதுமட்டும் ஐயாக்கோ இல்ல மாப்ள சாருக்கோ தெரிஞ்சா எங்க வேலையே போயிடும்” பயத்தில் சூப்பர்வைஸர் சொல்ல, உடனிருந்த வேலையாளுக்கோ கைகள் எல்லாம் நடுங்கியது.

“அதெல்லாம் தெரியவராது. தெரிஞ்சாலும் நான் பார்த்துக்கறேன். தெரிஞ்சவங்களா போயிட்டாங்க. அது எப்படி கறார்ரா விலை சொல்றது. நம்ப கடைல டிஸ்கௌவுண்ட் கொடுக்கறதில்ல, அந்த மாதிரி தான். அப்புறம் நீங்க போய் சில்க் சாரீ செக்‌ஷன் பில்லிங்ல இருக்கிறவர்கிட்ட சொல்லிடுங்க. நான் எடுத்துட்டு வர புடவைக்கு எதுவும் சொல்லாம ப்ரைஸ் டேக்ல இருக்க அதே விலைக்கே பில் போட்டு தரணும்னு” தந்தையை போலவே கம்பீர குரலிலேயே சொன்னான்.

“தம்பி” அவர் மறுபடியும் குறுக்கிட

“இருங்க நான் இன்னும் முடிக்கல”

“மீதி பணத்துக்கு இன்னொரு பில் போட சொல்லுங்க. நாம ஒண்ணும் பணம் தர்றாம ஏமாத்த போறதில்ல. அவங்களுக்கு பில் தர அமௌன்ட் போக மீதி பில் அமௌன்ட்டை நான் செட்டில் பண்றேன். இந்த விஷயம் அப்பாவுக்கோ, அத்தானுக்கோ தெரியக்கூடாது” சொன்னவன் அவர் சம்மதத்திற்கு கூட காத்திராது புடவைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

அன்னை மகளிடம் வந்தவன் அந்த புடவைகளை அவர்கள் முன் வைத்தான். இப்போது கௌதமிற்கு இருந்ததெல்லாம் ஒரே ஒரு பதற்றம் தான். நான்கு புடவையை எடுத்து வந்தாலும் அதில் ஒன்று தான் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அது தான் சந்தியாவிற்கு பாந்தமாக பொருந்தும் என்று அதீத நம்பிக்கை கொண்டிருந்தான். அதையே அவளும் எண்ண வேண்டுமே. அதுதான் அவனது பதற்றத்திற்கு காரணம்.

ஒவ்வொரு புடவையையும் அவள் எடுத்து பார்க்கும் போது அவன் இதயம் வேகமாக துடித்தது. கண்களாலேயே இது வேண்டாம் அதை எடுத்துக்கொள் என்று கெஞ்சினான். இதுதான் முதல் முறை, கெளதம் அவன் வாழ்வில் ஒருவரிடம் கெஞ்சுவது. கேட்டதற்கு மேல் கிடைக்கும் அவன் வாழ்வில் அப்படி ஏதாவது வேண்டும் என்றாலும் அடம்பிடித்து வாங்கியே பழக்கப்பட்டவனே தவிர கெஞ்சியதில்லை. இன்றோ அவனுக்கே தெரியாமல் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

நான்கு புடவையையும் மாற்றி மாற்றி வைத்து பார்த்தவள் கடைசியாக அவன் நினைத்த அந்த புடவையை தேர்வு செய்ய இது கடையாக இல்லாமல் அவன் எதிரில் சந்தியாவும் அவள் அன்னையும் இல்லாமல் இருந்திருந்தால் ஒரு குத்தாட்டாமே போட்டிருப்பான்.

அவர்கள் வாங்கிய இரண்டு புடவைகளையும் எடுத்து வந்து பணம் செலுத்தும் இடத்தில் கொடுத்து அருகில் நின்றிருந்தான்.

அதை பார்த்த அந்த காசாளரோ “நீங்க ஏன் தம்பி நிக்கறீங்க. நீங்க போங்க. நான் பில் போட்டு தரேன்” என்று சொல்ல, அதை கேட்டு தாயும் மகளும் புரியாத பார்வை பார்க்க

‘ம்ச்ச் இவரு வேற நேரங்கெட்ட நேரத்துல’ மனதிற்குள் எண்ணி மிச்சிக் கொட்டியவன் வெளியே “இல்ல சார் நான் நிக்கறேன்” என்று சொல்ல அவருக்கு ஒன்றும் புரியவில்லை. புரிந்ததெல்லாம் முதலாளி மகனை கோபப்படுத்தி தனக்கு தானே சூனியம் வைத்து கொள்ளக்கூடாது என்பது மட்டுமே.

ஏற்கனவே சூப்பர்வைஸர் வந்து சொல்லி இருந்ததால் சந்தியாவிற்கு எடுத்த புடவைக்கு மூவாயிரத்திற்கு பில்லை போட்டு அவர்களிடம் தந்தார். அவர்களும் பணத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பினர். மீதம் இருபத்திரெண்டாயிரத்திற்கு இன்னொரு பில்லை போட்டு அவசர அவசரமாக வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் கௌதம்.

தாயும் மகளும் டி.நகரில் ஓங்கி உயர்ந்து நிற்கும் செல்வராணி சில்க்ஸ் இருக்கும் சாலையில் நடந்துபோக கெளதம் தன்னுடைய டுகாட்டியில் அவர்களை பின் தொடர்ந்தான்.

அவர்கள் வழியில் எதையாவது பார்த்தால் நின்று பேரம் பேசி வாங்கி போட்டுக் கொண்டு நடக்க இவனும் வண்டியை அவர்களுக்கு தெரியாமல் நிறுத்தி நிறுத்தி பின் சென்றான். ஒரு கட்டத்தில் அவர்கள் பேருந்து நிலையத்திற்குள் நுழைய இவன் என்ன செய்வதென்று புரியாமல் தன்னுடைய பைக்கை பார்க்க அதுவும் அவனை பாவமாக பார்த்தது. அதற்கு முன்னரே தெரிந்துவிட்டது போல், இவன் அதை நடுத்தெருவில் விட்டு விட்டு செல்லப் போகிறான் என்று. அது இவனை ஏக்கப்பார்வை பார்க்க, இவனோ அவள் செல்வதை ஆசை பார்வை பார்த்துக் கொண்டே வண்டியை இருந்த இடத்திலேயே விட்டுவிட்டு அவர்கள் இருவரும் ஏறிய பேருந்தில் ஏறினான்.

கூட்டமாக இருந்த பேருந்தில் மீனாட்சிக்கு மட்டுமே இடம் கிடைத்தது. சந்தியா அவரை ஒட்டி நின்றிருந்தாள். சற்று தள்ளி அவளிடம் பார்வையை அகற்றாது நின்றிருந்தான் கெளதம். அத்தனை கூட்டத்திலும் அவளும் அவனும் மட்டும் இருப்பதாக கனவு கண்டுக் கொண்டிருந்தவனை நடத்துனர் நிஜத்திற்கு கொண்டு வந்தார். அவர் என்ன பேசினார் என்பது அவன் காதில் விழுந்திருக்கவில்லை. அதனால் என்னவென்று தலை அசைத்து கேட்க

அவர் “டிக்கெட்ஸ். எங்க போகணும்” என்றார். அப்போது தான் அவன் எங்கே செல்லவேண்டும் என்பது அவனுக்கே தெரியாது என்பது அவனது புத்திக்கு எட்டியது.

மென்று விழுங்கி “இந்த பஸ் எங்க போகுது” என்றான்.

அவனை ஏற இறங்க பார்த்தவர் ஒன்றும் பேசவில்லை. கூட்டத்தில் அவரே தத்தளித்து அவன் இருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறார். இதில் திட்டவோ எரிச்சல் படவோ அவர் தயாராக இல்லை.

“மயிலாப்பூர் டேங்” என்று கடுகடுப்பாக சொல்ல

“அதுக்கு ஒரு டிக்கெட்” பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்சில் இருந்து காசை எடுத்துத் தந்தான். பின் மறுபடியும் கனவிற்கு சென்றான்.

அவர்கள் இறங்க இவனும் இறங்கினான். முன் நடந்தவர்களுக்கு சந்தேகம் வராதபடி நன்கு இடைவெளி விட்டு நடந்துக் கொண்டிருந்தான். இதுவரை அவளை பார்த்தவனுக்கு தன்னை விழுங்கும் அவளது கூர்மையான காந்த கண்களே அதிகம் ஈர்த்திருந்தது. இப்போதோ முன்னால் நடந்து சென்றுக் கொண்டிருப்பவள் அவளது நீள கூந்தலால் அவனை கவர்ந்திருந்தாள். இதை தான் எப்படி கவனிக்க தவறினோம் என்று தன்னை தானே கடிந்துக் கொண்டான். பின்னலிட்டிருந்த அவளது கூந்தல் கனுக்காலை தொட்டுக் கொண்டிருந்தது. விரித்துவிட்டால் அது அருவிபோல் அவளது பின்னங்காலை தழுவும். அவள் நடைக்கு ஏற்றார்போல் அதுவும் நடனமாடிக் கொண்டிருந்தது. அவள் தன் கூந்தலால் இழுக்க இவனோ தன்னை தொலைத்து பின்னால் சென்றுக் கொண்டிருந்தான். அந்நேரத்தில் அவனது கைபேசி ஒலித்தது. அவனது அக்காவின் கணவர் வெற்றிமாறன் தான் அழைத்திருந்தார்.

அவன் “அத்தான்” என்றது தான் தாமதம் “கெளதம், எங்க இருக்க நீ. கடைல ஆள் இல்லாம எங்க போன. பைக்கை வேற நோ பார்க்கிங்ல விட்டுட்டு போயிருக்க. ட்ராபிக் போலீஸ் வண்டிய எடுத்துக்கிட்டு போயிருப்பாங்க. நல்ல வேலை நம்ப கடை பையன் தான் பார்த்துட்டு வந்து சொன்னான்” என்றார்.

என்ன சொல்லுவான். நான் ஒரு பதின்வயது பெண்ணை பார்த்தேன். அவள் பின்னால் செல்ல பைக் தடையாக இருந்தது. அதனால் அதை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டேன் என்றா சொல்லமுடியும். பதில் சொல்லாமலாவது இருந்திருக்கலாம். அவன் சொன்னது தான் அவருக்கு குழப்பத்தை வரவழைத்தது.

“அது அத்தான்.. அது என் பைக்கே இல்ல. அவர் எதாவது தப்பா சொல்லிருப்பாரு” என்றானே. அந்த பெண் அவ்வளவு முக்கியமானவளா. தன்னுடைய பைக் இல்லாமல் வீட்டிற்கு சென்றால் கேள்வி எழாதா. இருந்தும் இப்போது அவனுக்கு அவளை பின்தொடர்வதே முதன்மையாகப்பட்டது.

“என்ன சொல்ற கெளதம். அது எப்படி மாத்தி சொல்லுவான். நம்ப கெளதம் சார் பைக் என்ன நூத்துல ஒண்ணா அடையாளம் தெரியாம போகறதுக்கு, அவருது எவ்ளோ காஸ்ட்லி பைக்னு சொல்றான். அதுமட்டுமில்ல மாமாக்கு தெரியாம நான் தான் போலீஸ்கிட்ட பேசி நிறுத்தி வச்சிருக்கேன். பைக்கை எடுத்துட்டு வர வீட்ல இருந்து சாவியும் கொண்டு வர சொல்லிருக்கேன்” அவர் சொல்ல அவன் ஏன் வண்டியை அங்கு விட்டான், இப்போது எங்கு இருக்கிறான் இது போன்ற எந்த தகவலையும் சொல்லாமல்

“அத்தான்னா அத்தான் தான். தேங்க்ஸ் அத்தான். அப்புறம் அத்தான் எனக்கு தெரிஞ்சவங்க, என் ப்ரண்ட்டோட அம்மா. அவங்க வீட்ல வீட்டுகாரர்கிட்ட காட்டணும்னு இருபத்தைஞ்சாயிரம் புடவைய மூவாயிரத்துக்கு ஒரு பில் இருபத்திரெண்டாயிரத்துக்கு இன்னொரு பில்னு தரச் சொல்லி கேட்டாங்க. நான் தான் கிட்ட இருந்து போட்டு தந்தேன். காசையும் கொஞ்ச கொஞ்சமா பொறுமையா தரேன்னு சொல்லிருக்காங்க. அதனால நீங்க இப்போதைக்கு பில் அமௌன்ட்டை செட்டில் பண்ணிடுறீங்களா. இந்த மாசம், அடுத்த மாசம் என்னோட சம்பளம் வரும்ல அதுபோக மீதி காசை நான் உங்களுக்கு கொடுத்திடுறேன். அப்புறம் அவங்ககிட்ட இருந்து வாங்கிக்கறேன்” முதலில் இரண்டு பில் போட்டது பற்றி யாருக்கும் தெரியவேண்டாம் என்று எண்ணியவன் பிறகு சொல்வது தான் இந்த பிரச்சனையை இத்தோடு முடிக்கும் என்று வெற்றிமாறனிடம் சொன்னான். அவர் யார் என்ன என்று விபரம் கேட்கும் முன் அவரை பேசவிடாமல்

“எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அத்தான். அதான் வெளில வந்திருக்கேன். இன்னைக்கு ஒருநாள் ஹாஃப் டே ஆப்சென்ட் மார்க் பண்ணிக்கோங்க. நான் நாளைக்கு வந்திடுவேன். இப்ப ஃபோனை வச்சிடுறேன்” என்றான். என்ன கண்டான் அவளிடம், தன் இரண்டு மாத உழைப்பிற்கு கிடைக்கபோகும் சம்பளத்தை முழுவதுமாக அவளது புடவைக்கு தந்துவிட்டானே. அந்த பணத்தை அவன் கண்ணால் கூட பார்க்கமுடியாது. அது நேராக அவளது புடவைக்கு கொடுக்கவேண்டிய பணத்திற்கு சென்றுவிடும். ஆனால் கௌதமிற்கு அதைபற்றியெல்லாம் கவலை இல்லை. பேசிக்கொண்டே நடந்ததில் அவள் வீடே வந்திருந்தது. அவள் வீட்டிற்குள் நுழைய இவன் அவள் வீட்டை பார்த்துக் கொண்டான். அவனது அறையை விட சற்று பெரிதாக இருக்கும் அந்த வீடு. அதையெல்லாம் அவன் யோசிக்கவில்லை. திரும்ப வெளியே வரமாட்டாளா, ஒரு தரம் அவளை பார்க்கமாட்டோமா என்று ஏங்கி நின்றிருந்தான்.

அவனை ஏமாற்றாமல் வெளியே வந்தவள் கையில் அவர்கள் கடைப்பை. ஒருவேளை அது விலையுயர்ந்த புடவை என்பதை கண்டுபிடித்து விட்டாளோ? புடவையை திருப்பி தர கிளம்புகிறாளோ? எங்கே அவளது அன்னையை காணவில்லை என்று எண்ணற்ற பயத்தோடு நின்றிருந்தான்.

அவனுக்கு கெஞ்ச கற்றுக் கொடுத்தவள் இப்போது பயத்தை காட்டினாள். யாருக்கும் பயப்படாத கெளதம் பயந்தே போனான். அவளோ பக்கத்தில் இருந்த அந்த பெரிய வீட்டிற்குள் நுழைய போனாள். அந்த வீட்டு காவலாளியும் இவளை பார்த்ததும் சிரித்துக் கொண்டே கதவை திறந்தார். இது யார் வீடு உள்ளே செல்கிறாள் என்று யோசித்தவன் கண்ணில், அப்போதே பட்டது அந்த வீடு. அது அவனுக்கு தெரியாத இடமல்ல. தெரிந்த அவனது நண்பனின் வீடே.

உடனே இவனும் காவலாளியிடம் சென்று விக்ரம் தனது நண்பன், அவனை பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான்.

அவனுக்கு முன் வீட்டிற்குள் நுழைந்தவளோ, நேராக கீழ்தளத்தில் ஒரு அறைக்குள் சென்று அந்த பெண்மணியிடம் அதாவது விக்ரமின் அன்னையிடம் புடவைகளை காட்டிக் கொண்டிருந்தாள். அவளது குரலை வாசலில் இருந்தே கேட்டவன் தன் கைபேசியில் விக்ரமிற்கு அழைத்து தான் வாசலில் நிற்பதாக சொன்னான்.

மேலிருந்து கீழிறங்கி வந்த விக்ரமுக்கு, இவனை பார்த்ததும் பெரும் அதிர்ச்சி.

“டேய் என்னடா இப்படி வந்திருக்க” விக்ரம் சொன்னபோது தான் தன்னை குனிந்து பார்த்தான். கடையில் அனைவரும் அணியும் சீருடையில் இருந்தவன் அப்படியே விக்ரம் வீடு வரை வந்திருக்கிறான். காவலாளி அவனை ஒருவிதமாக பார்த்தப்போது கூட அவனுக்கு அது புலப்படவில்லை. இப்போது புரிந்தவனும் வருத்தம் கொள்ளவில்லை. அந்த உடையை அவன் மதிப்பவன், அதில் எந்த கௌரவ குறைவும் இல்லை என்றே எண்ணினான்.

“அது ஒண்ணுமில்லடா. கடைல வேலை செய்யறப்போ போடுவேன். வெளில வரப்போ கழட்டி வச்சிட்டு வேற டிரஸ் மாத்திப்பேன். இன்னைக்கு அப்படியே வந்துட்டேன்” என்றான்.

இடையில் அவளது புடவையை பார்த்து என்ன விலை குறைத்து சொல்கிறாய் பார்த்தால் அப்படி தெரியவில்லையே, விலை அதிகமாக இருக்கும் போல் தெரிகிறதே என்று விக்ரமின் அம்மா கேட்க அதற்கு இவளும் “பார்க்க அப்படி தான் தெரியுமாம்மா, ஆனா ஒரிஜினல் பட்டு இல்லயாம். இப்ப இப்படி வருதாம். அந்த கடைல இருந்தவர் சொன்னாரு” அவன் சொன்னதை அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘ஐயோ அம்மா என்னை மாட்டி விட்டுருவாங்க போலயே. நல்ல வேளை அவங்க சொன்னத அவ நம்பல. இல்லனா, நீ மாட்டிருப்ப கெளதம்’ மனதிற்குள்ளேயே எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டான். ஆம், அவன் சொல்வது உண்மை தான். அவன் யாரென்று தெரியாத காலத்திலேயே அவளுக்கே தெரியாமல் அவனை நம்பினாள். இதுதான் அனைத்திற்கும் ஆரம்ப புள்ளியா?

‘அவ என்ன அவங்கள அம்மானு சொல்றா. ஒருவேளை விக்கியோட சொந்தகார பொண்ணா’ கௌதம் சிந்தனையில் எங்கெங்கோ போக

“சரி உள்ள வா கௌதி. மேல என் ரூமுக்கு போகலாம்” என்றான் விக்ரம்.

விக்ரமும் கௌதமும் ஒருவரை ஒருவர் செல்லமாக அழைத்துக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமான நண்பர்கள். விக்ரம் அவனை மேல் தளத்தில் உள்ள தன்னறைக்கு அழைத்து செல்ல, கெளதமின் கண்களோ கீழ் அறையில் இருக்கும் சந்தியாவையே பார்க்க துடித்தது. அவளது குரலை கேட்டபடியே படிகள் ஏறி விக்ரமின் அறைக்கு சென்றான்.

உள்ளே விக்ரமும், அவனது தம்பி விஷாந்தும் பிலே ஸ்டேஷனில் விளையாடி கொண்டிருந்த நேரத்தில் தான் கெளதம் அவனுக்கு அழைத்திருக்கிறான். அது அறைக்குள் நுழைந்த கௌதமுக்கு நன்கு புரிந்தது. அங்கே போடப்பட்டிருந்த பீன் பேக்கில் போய் சரிந்தவன் ஜாய் ஸ்டிக்கை எடுத்து விளையாட ஆரம்பித்தான்.

இடையில் தன்னுடைய கடை சீருடையை கழற்றி ஒரு ஓரமாக மடித்து வைத்தான். அவன் எப்போதும் டீ-ஷர்ட்டின் மேலே தான் அந்த சீருடையை அணிவான். அதனால் அவன் அதை கழற்றினாலும் வெறும் உடம்பொடு இல்லாமல் வேறு உடையில் வேறு ஆளாகவே தெரிந்தான். விஷாந்தும் கௌதமும் விளையாடிக் கொண்டிருக்க அப்போது சந்தியா அங்கே வந்தாள்.

கௌதமின் பின்புறத்தை பார்த்தவள் உள்ளே யாரோ இருக்கிறார் என்றுணர்ந்து அறைக்குள் செல்லாமல் வெளியே நின்றே விக்ரமை அழைத்தாள். அவனும் அவர்களை விளையாட சொல்லிவிட்டு அறைக்கு வெளியே வந்தான்.

“சாரீ எடுக்க போயிருந்தோம்டா. இதோ பாரு. இது அம்மாக்கு. அப்புறம் இது எனக்கு. நல்லாருக்கா இதான் பர்ஸ்ட் டைம் சாரீ கட்டப்போறேன். எனக்கு நல்லாருக்கும் தான” அவள் கேட்க, அவனோ அவளை கேலி செய்யும் எண்ணத்தில் இருந்தான்.

“என்னடி புடவையெல்லாம் வாங்கியிருக்க. ஏற்கனவே நீ பயங்கரமா இருப்ப. இதுல புடவை வேற கட்டினா அதிபயங்கரமா இருப்பியே” சொல்லிவிட்டு அவன் சிரிக்க, உள்ளே அமர்ந்து கேட்டு கொண்டிருந்த கௌதமிற்கு கோபம் கோபமாய் வந்தது. அவள் செல்லட்டும் இவனை ஒரு கை பார்த்து விடலாம் என்றிருந்தான்.

“ச்சீ போடா. உங்கிட்ட காட்ட வந்தேன் பாரு” அவள் வாடிய முகத்தோடு அங்கிருந்து செல்ல பார்க்க

“நில்லுடி. உடனே கோச்சுக்கிட்டியா. சும்மா உன்னை ஓட்டலாம்னு பார்த்தா, இப்படி கோச்சுக்கிட்டு போற. உனக்கு இந்த சாரீ செமையா இருக்கும். துணி கடையில இருக்குற பொம்மையே தோத்திடும்” அவன் வெளியே சொல்ல ‘டேய் அவ பொம்மை மாதிரி தான் இருக்கா. அதுக்காக உயிரில்லாத பொம்மை கூடவா கம்பேர் பண்ணுவ. அவ அந்த சாரீல தேவதை மாதிரி இருப்பாடா’ தன் மனதிற்குள் எண்ணி சிரித்துக் கொண்டான்.

“போடா எப்பவும் உனக்கு இதே வேலை தான்” வெளியே சந்தியா சிணுங்க

“ஐ ஆம் சாரி. சாரிடி. உண்மையிலேயே இந்த சாரீல நீ ரொம்ப அழகா இருப்ப” என்று விக்ரம் சொல்ல.

உள்ளிருந்தவனோ ‘செலக்ட் பண்ணது யாரு, நானாச்சே. என் தேவதைக்காக தேடி தேடி எடுத்ததாச்சே’ சொன்னபிறகு தான் உணர்ந்தான், தன் தேவதையா அவள். சிரித்துக் கொண்டே தன் பின்னந்தலையில் தட்டிக் கொண்டான். அந்த வயதில் அவனுக்கு அவளை பார்த்ததும் பிடித்திருந்தது. ஆனால், அதற்கு பெயர் தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் வயதிலும் அவனில்லை. அவனுக்கு பிடித்த அவளுக்கு அவன் புடவை தேர்வு செய்துக் கொடுத்தான் என்று மனதிற்கு சொல்லிக் கொண்டான்.

எது எப்படியோ அவனது தேவதை அவள் தான் என்பது மட்டும் அவனுக்கு உறுதியானது. அந்த தேவதை, அவனது தோழியா, காதலியா, வேறேன்ன உறவு என்பதை பற்றியெல்லாம் அவன் யோசிக்கவில்லை. தெரியாத உறவிற்கு இவ்வளவு செய்வானா என்று தனக்கு தானே கேள்வியை எழுப்பியவனுக்கு, தெரியவில்லை என்பது தான் பதிலாக கிடைத்தது. எது எப்படியோ, அவளது அருகாமை அவனுக்கு பிடித்திருந்தது. அவளுடன் எப்போதும் இருக்கவேண்டும் என்று எண்ணினான்.

விக்ரமிடம் பேசிவிட்டு சந்தியா அவளது வீட்டிற்கு கிளம்பிவிட, அப்போது தான் தன் முகத்தையே திருப்பினான் கௌதம்.

“யாருடா அது இவ்ளோ நேரமா மொக்க போட்டுக்கிட்டு இருக்க. என்ன உன் ஆளா” சாதாரணமாக கேட்டாலும் அந்த கேள்வியை கேட்க அவன் செத்து பிழைத்தது அவன் மட்டுமே அறிவான். வேறு வழியில்லை, விக்ரமுக்கு சந்தியா என்ன உறவு என்று தெரிந்துக் கொண்டே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருந்தான். அதே நேரத்தில் ‘ஆளெல்லாம் இல்லடா’ என்று அவன் சொல்ல வேண்டும் என்று மனதார வேண்டினான்.

“ஆளெல்லாம் இல்லடா. சின்ன வயசுல இருந்தே என்னோட பெஸ்ட் ப்ரண்ட். பக்கத்து வீடு தான். ஒரே கிளாஸ்லயும் ஒண்ணா படிச்சோம்” அவன் கேட்க எண்ணிய பதிலை நண்பன் சொன்னபோது கெளதம் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான்.

“ஓ.. அப்ப அவளும் டென்த் முடிச்சிட்டு ரிசல்ட்க்கு தான் வெயிட் பண்றாளா” ஒரு நிம்மதி அவளும் அவனும் சமவயதில் உள்ளவர்கள் என்பதில். அடுத்த கேள்வியையும் கேட்கவேண்டிய கட்டாயம். அதுதானே மிக முக்கியமான கேள்வி.

“அப்புறம் லெவன்த்தும் ஒரே கிளாஸா”

“அதான் இல்லடா. நான் மேத்ஸ் வித் பயோ. அவ மேத்ஸ் வித் கம்ப்யூட்டர் சயின்ஸ். நீ படிச்சா, ஒண்ணு எம்.பி.பி.எஸ் படி இல்ல எங்கள மாதிரி லாயர் ஆயிடுன்னு நானா(அப்பா) சொல்லிட்டாருடா” அவனது வருத்தம் இவனுக்கு சந்தோசம். ஏனென்றால் கௌதமும் மேத்ஸ் வித் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை தானே அவனது பள்ளியில் கேட்டிருக்கிறான்.
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அங்கிருந்து கிளம்பியவன், வீட்டிற்கு வந்தான். செல்வராஜ் அன்று சீக்கிரமே வீட்டிற்கு வந்ததால் அனைவரும் ஒன்றாக சாப்பிட உணவு மேசையில் அமர்ந்திருந்தனர். கெளதம் மட்டும் யாருக்கோ காத்திருப்பது போல் இங்கும் அங்குமாய் நடந்துக் கொண்டிருந்தான். ஆம், அவள் வந்தால் தானே தான் நினைத்ததை சாதிக்கமுடியும்.

அதை பார்த்த செல்வராணி அவனை சாப்பிட அழைக்க “கொஞ்சம் நேரம் ஆகட்டும்மா” என்றான்.

“எல்லாரும் வந்து உட்கார்ந்துட்டாங்க தம்பி. வா, நீயும் வந்து உட்காரு” மகனிடம் கனிவாக சொல்லிக் கொள்ள, அவனும் வேறு வழியின்றி சென்று அமரவும் அவள் வரவும் சரியாக இருந்தது.

“வா கார்த்தி. என்னம்மா இந்த நேரத்துல வந்திருக்க. சாயந்திரம் பேசினப்போ கூட வீட்டுக்கு வரேன்னு சொல்லலையே” அவளை பார்த்து செல்வராணி கேட்க, செல்வராஜும் அதையே தான் கேட்க இருந்தது போல் மகளை பார்த்தார்.

“ஒண்ணுமில்லம்மா. உங்கள எல்லாம் பார்க்கணும் போல இருந்துச்சு. அதான் கிளம்பி வந்துட்டேன். அவர் வீட்டுக்கு போறப்போ என்னை கூப்பிட்டுக்கறேன்னு சொல்லிருக்காருப்பா” தாய் தந்தை இருவரின் தவிப்பையும் உணர்ந்தவள் இருவருக்கும் சேர்த்தே பதிலளித்தாள்.

“அதுவும் இல்லாம எனக்கு தம்பிய பார்க்கணும் போல இருந்துச்சு” அவள் சொன்னதும், அவன் நடந்துக் கொண்டிருந்தது இருவரின் நினைவிற்கும் வர, மகளின் வருகைக்கு மகனே காரணம் என்று புரிந்து கொண்டனர்.

செல்வராஜோ ஒரு படி மேல் சென்று “சொல்லும்மா. உன் தம்பி உங்கிட்ட என்ன சொல்லிவிட்டான். அவனுக்கு எதோ காரியம் நடக்கணும், அப்படி தான” சரியாக நாடி பிடிக்க, கார்த்தியாயினி மற்றும் கெளதம் இருவரும் திருதிருவென்று விழித்தனர். அவர் சொல்வதும் உண்மை தானே. கெளதம் கார்த்தியாயனிக்கு அழைத்து “நான் இப்ப நம்ப வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்க்கா. நீ உடனே கிளம்பி அங்க வர. வீட்டுக்கு போறப்போ அத்தானை உன்னை கூப்பிட்டுக்க சொல்லு” என்று சொல்லிவிட்டு தானே வீட்டிற்கே வந்தான்.

தாயும் தந்தையும் அவன் அவளிடத்தில் அனைத்தையும் சொல்லி அவளை வரசொல்லி இருக்கிறான் என்று எண்ணினர். அவளுக்கு மட்டுமே தெரியும் அவன் எதுவும் சொல்லாமல் தான் ஓவ்வொரு முறையும் அவளை அழைப்பான் என்று. அவள் இங்கு வந்ததும் அனைவர் முன்பும் கேட்டு காரியத்தை சாதிப்பான். அப்படி வந்தது தானே, அவன் வைத்திருக்கும் டுகாட்டி. இல்லையென்றால் செல்வராஜுக்கு சிறுவயதில் மகனுக்கு வண்டி வாங்கி தருவதில் விருப்பம் இல்லையே. இன்றும் என்ன கேட்கப் போகிறான் என்பது அவளுக்கே தெரியாத போது என்ன சொல்வாள். சிரிப்பையே பதிலாக தந்தாள்.

“அவன் கேட்டு நானும் உங்க அம்மாவும் எதையும் இல்லனு சொன்னதே இல்ல. அதையும் மீறி உன்னை வர சொல்லிருக்கான்னா, விஷயம் ரொம்ப பெருசா இருக்கும் போலயே” மகனை நன்கு அறிந்த செல்வராஜ் சொன்னார். அவர் பேசியிருந்த நேரத்தில் கௌதம் முன்பு தட்டை வைத்து அதில் உணவை பரிமாறிக் கொண்டே என்னவென்று சொல் என்று கண்ணை காட்டினாள் கார்த்தியாயினி.

“அப்பா எனக்கு ஸ்கூல் மாறணும்” பட்டென்று போட்டு உடைத்தான்.

“என்ன சொல்ற கெளதம். ஸ்கூல் மாறணுமா. ஏன் இவ்ளோ நாளா படிச்சிக்கிட்டு இருந்த ஸ்கூலுக்கு என்ன குறை” வார்த்தையில் இருந்த கடுமை அவர் முகத்தில் இல்லை. என்னவாயினும் செல்லமாக வளர்க்கும் பிள்ளையாயிற்றே.

“எனக்கு அந்த ஸ்கூல் பிடிக்கல. அதுமட்டுமில்ல, நீங்க இப்ப என்னை நான் சொல்ற ஸ்கூல்ல தான் சேர்க்கணும்”

“என்ன கெளதம் விளையாடுறீயா. திடீர்னு சொன்னா எப்படி ஸ்கூல் மாத்தமுடியும்” இப்போது சற்று அதட்டும் தொனியில் கேட்டார்.

“எனக்கு மந்தவெளில இருக்குற செயின்ட் பேட்டரிக் ஸ்கூல்ல சேரணும்” பிடிவாதம், எதையும் காது கொடுத்து கேட்டிராத பிடிவாததுடனே சொன்னான்.

“இப்ப எதுக்கு நீ ஸ்கூல் மாறணும்னு சொல்ற” தமயந்தி இடைப்புக

“ஆமா அதை முதல்ல சொல்லு” அருந்ததியும் உடன் சேர்ந்தாள்.

“ஹலோ டாக்டர், லாயர்.. என்ன கிராஸ் எக்ஸாமின் பண்றீங்களா. எனக்கு அந்த ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ்க்கு நிறைய இம்பார்ட்டன்ஸ் தராங்கனு என் ப்ரண்ட் சொன்னான். அதான் சேரணும்னு சொல்றேன். போதுமா எக்ஸ்ப்லனேஷன்” ஆணித்தரமாக சொன்னாலும் சகோதரிகள் கேட்ட கேள்விக்கு மரியாதை தரும் வகையிலேயே சொன்னான்.

“அண்ணன் எதோ பிளான் பண்ணிட்டான்க்கா” ஒன்பதாம் வகுப்பு போக போகும் நிரஞ்சனா அருந்ததியின் காதில் கிசுகிசுத்தாள். இது எதுவும் புரியாத கடைக்குட்டி நித்திலா தட்டில் வைத்ததை உண்டு கொண்டிருந்தாள். சிறுமி அல்லவா, நான்காவது தானே போக போகிறாள், அண்ணனின் விஷமம் அவளுக்கு இன்னும் புரியவில்லை.

“அக்கா, நீ என்ன சும்மா இருக்க. இதுக்கா நான் உன்னை கூப்பிட்டேன். எனக்கு தெரியாது. நான் லெவன்த், டுவெல்த் அந்த ஸ்கூல்ல தான் படிப்பேன். இல்ல, கஷ்டம், சேர்க்கமுடியாதுனு எதாவது சொன்னீங்கன்னா நான் இதோட என் படிப்பை நிறுத்திக்கறேன். நம்ப கடைக்கே வேலைக்கு போயிடுறேன்” பெயர் கூட தெரியாத ஒருத்திக்காக எவ்வளவு பெரிய முடிவை எடுத்துவிட்டான். அதை கேட்ட அனைவரும் ஆடிப் போயினர்.

“ஐயோ.. என்ன கெளதம் நீ, இப்படி சொல்ற. படிப்பு ரொம்ப முக்கியம் தம்பி. அப்படிலாம் சொல்லக்கூடாது. நான் எதுக்கு இருக்கேன் நான் அப்பாகிட்ட பேசறேன்” அவள் அவனை தன் குழந்தையாகவே தான் எப்போதும் பாவிப்பாள்.

“தம்பி படிப்பு முக்கியம்ப்பா. ப்ளீஸ் ட்ரை பண்ணுங்க. நானும் கேள்வி பட்டிருக்கேன், அந்த ஸ்கூலோட அட்மிஷன்ஸ் எல்லாம் பிப்ரவரிலேயே முடிஞ்சிடும்னு. நாம நமக்கு தெரிஞ்சவங்கள வச்சி ரெகமெண்டெஷன்ல முயற்சி பண்ணலாம்ப்பா. பாருங்க அவன் ஸ்கூல் போகலனு சொல்றான். நாம தான்ப்பா எதாவது பண்ணனும்” தந்தையிடம் கார்த்தி கெஞ்சிக் கொண்டிருக்க, இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லாதது போல் சாப்பிட்டு கொண்டிருந்தான் கௌதம்.

“நீ தான் அவனுக்காக வருத்தப்படற. அவனை பாரு எவ்ளோ சாதாரணமா ஸ்கூலை விட்டு நின்னுடறேன்னு சொல்லிட்டு சாப்பிட்டுட்டு இருக்கான்” தந்தை மகள் வாயை அடைக்க முயற்சி செய்ய

“அதெல்லாம் இல்லப்பா. அவனுக்கு படிப்புனா ரொம்ப இஷ்டம். பெரிய இன்ஜினீயர் ஆகணும் சொல்லிட்டு இருக்கான். நம்மளோட பிடிவாதத்துனால பாவம் அவன் லைஃப் அழிஞ்சிடக்கூடாது” தம்பிக்காக என்னவெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறாள். யார் பிடிவாதம் பிடித்து வாழ்க்கையை அழித்து கொள்ள பார்ப்பது என்று அவளுக்கும் தெரியாதா என்ன.

“கௌதமுக்காக அக்கா எப்படி முட்டு கொடுத்துட்டு இருக்கா பார்த்தியா அரு” இப்போது தமயந்தி அருந்ததி காதை கடித்தாள். ஐந்து சகோதரிகளில் கௌதமுக்கும் தமயந்திக்கும் தான் எப்போதும் ஒத்துப் போகாது. சண்டை வந்து கொண்டே இருக்கும். பின்னாளில் அவர்கள் இருவரும் தான் ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக நிற்க போகின்றனர் என்பதை அறியாது மாற்றி மாற்றி காலை வாரி கொண்ட காலம் அது.

“ஆமாங்க. கார்த்தி சொல்றதும் சரி தான். புள்ள படிப்பு முக்கியம். உங்களுக்கு தெரியாத ஆளா. என்னனு பார்த்து தம்பிய அவன் சொல்ற ஸ்கூல்லயே சேர்த்து விட்டுடுங்க” செல்வராணியும் மகனுக்காக பேசினார்.

செல்வராஜும் யோசித்துப் பார்த்து அந்த பள்ளியில் போய் பேசினார். கார்த்தியாயினி சொன்னது போல் ஆள் வைத்து பேசிப் பார்க்கவும் தயாராக இருந்தார்.

கெளதம் பத்தாம் வகுப்பு முழுவதும் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தான். பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து பள்ளிக்கு பெருமை தேடித் தருவான் என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் தான் இவன் பள்ளிமாற மாற்று சான்றிதழ் கேட்டான். அத்தோடு அவன் திறமையான கால்பந்தாட்ட வீரன். தற்போது இருக்கும் பள்ளியின் கால்பந்து அணியை தலைமை தாங்கி சேரவிருக்கும் பள்ளிக்கு எதிராகவே பலமுறை நன்கு விளையாடி வெற்றிபெற்றும் இருக்கிறான். இதெல்லாம் புது பள்ளியில் அவனை சேர்த்துக் கொள்ள மிக உதவியாக இருந்தாலும் அவனுக்கு அங்கே சீட் உறுதியானதிற்கு மிக முக்கிய காரணம், அவனுக்கு யாரென்றே தெரியாத அந்த மாணவன் தான். ஆம், கடைசி நேரத்தில் போட்ட அட்மிஷனை ரத்து செய்து பணத்தை அவன் திருப்பி பெறவும் தான் கௌதமிற்கு அந்த இடத்தை உறுதிசெய்து தந்தார்கள். புது பள்ளியில் சீட் வாங்குவதை விட பழைய பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழ் வாங்கவே போதும் போதுமென்று ஆனது.

எது எப்படியோ, வாழ்வில் தான் நினைத்ததை சாதித்தே பழகியவன் இம்முறையும் சாதித்தான். புது பள்ளியில் முதல் நாள் அப்பள்ளி சீருடையுடன் அவனது வகுப்பின் வாசலில் நின்றவனின் கண்கள் அவளையே தேடியது. அவளும் உள்ளே அமர்ந்திருந்தாள். இது போதாதா, தன்னுடைய தேவதையை தேடி அவளிருக்கும் இடத்திற்கே வந்து விட்டான். சாதித்தேவிட்டான் என்ற பெருமிதம் அவன் கண்களில் தெரிந்தது.

அதே கண்களில் இன்று வலி நிறைந்திருந்தது. எவ்வளவு அழகான நாட்கள் அவை. அவனது வாழ்வின் ஒவ்வொரு தருவாயிலும் அவன் நினைத்தது நடந்திருந்தால், இன்று இந்த ஊரில், இந்த அறையில் இப்படியா இருந்திருப்பான். விதி எங்கே யார் ரூபத்திலெல்லாம் விளையாடியது என்றென்னி பார்த்தவனுக்கு ஒருவரா அவனது இவ்வாழ்விற்கு காரணம். அவன் தன்னுடையவர்களாக நினைத்த ஒவ்வொருவரும் தானே காரணம். கர்ணனின் உயிரை அர்ஜூனின் அம்பு எடுத்திருந்தாலும் உண்மை அதுவல்லவே. அதன் பின்னே தான் எத்தனை பேர். அது போல் கௌதமின் இந்நிலைக்கு பின்னாலும் பலர் இருக்கின்றனர்.

தன்னை தேற்றிக் கொண்டு கசப்பானவற்றை விடுத்து அவனுக்கு மகிழ்ச்சி தரும் அவளது நல்ல நினைவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவன், நேராக தன் அறைக்கு சென்று கதவடைத்தான்.

அவள் பெயர் கூட தெரியாத போதே அவளுக்காக அத்தனை செய்தவன், அவள் அருகாமையை வேண்டியவன் இன்று ஏன் அவளை விட்டு இவ்வளவு தூரம் தள்ளி இருக்கிறான். விடை, அவனே அறிவான்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 5

காலை அலுவலகத்திற்கு செல்ல தயாராகி அறையை விட்டு வெளியே வந்தான் கௌதம். செல்வராணி வெளியே சோபாவில் அமர்ந்திருந்தார்.

“அம்மா எழுந்து நில்லுங்களேன்” அவன் சொல்ல, மகன் எதற்கு சொல்கிறான் என்பது புரிந்து அவரும் எழுந்து நின்றார்.

“இன்னைக்கு உங்க கல்யாண நாள். அப்பா தான் இல்ல. நான் இப்ப அப்பாவையும் உங்கள்ல தான்ம்மா பார்க்கறேன். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று காலில் விழுந்தான்.

“உன் வாழ்க்கைல நீ ஆசைபட்டதெல்லாம் கிடைக்கணும் கௌதம்” அவர் ஆசீர்வாதம் செய்ய, அவன் முகத்தில் எந்த உணர்வும் இன்றி வெறுமை தெரிந்தது.

“நான் ஆபீஸ் கிளம்பறேன்ம்மா. ஈவ்னிங் சீக்கிரம் வந்திடுறேன். நாம கோயிலுக்கு போயிட்டு அப்படியே டின்னரையும் வெளில முடிச்சிக்கிட்டு வந்திடலாம்” என்றுவிட்டு கிளம்ப பார்த்தான்.

“நில்லுப்பா. ரொம்ப வருஷம் கழிச்சி கல்யாண நாளுக்கு நீ என் கூட இருக்க. அப்பா இருந்தப்பவே நீ வர்றத நிறுத்திட்ட. அப்புறம் அவரும் போயிட்டாரு. ஒரு அம்மாவா எனக்கு உன்னை பத்தி நிறைய ஆசை இருக்கு. உங்கிட்ட ஒண்ணு கேட்கட்டுமாப்பா” என்றார். அவர் எதை கேட்க போகிறார் என்று அவனுக்கும் தெரியும். இருந்தும் கேட்காதீர்கள் என்றா சொல்லமுடியும். அமைதியாக இருக்க அந்த அமைதியை சம்மதமாக எடுத்து கொண்டு

“இப்படி தனியாவே கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கறீயே, எப்போப்பா பொண்டாட்டியோட சேர்ந்து ஆசீர்வாதம் வாங்க போற. அடுத்த வருஷமாவது அது நடக்கும்னு நான் எதிர்பார்ப்பு வைக்கலாமா” என்று ஆதங்கமாய் கேட்க

“அம்ம்ம்மா” அவனுக்கு எரிச்சல் வந்தது. இருந்தும் ஏற்கனவே அப்பா இல்லை என்ற வருத்தத்தில் இருப்பார். அதில் அவரை இன்னும் காயப்படுத்த விரும்பாமல்

“அது என்னைக்குமே நடக்க போறதில்லம்மா. என் வாழ்க்கைல இனி கல்யாணம்னு ஒண்ணு கிடையாது. அது முடிஞ்சி போன ஒண்ணு. நான் வரேன்ம்மா” என்றவன் தன் மடிக்கணினி பையை மாட்டிக் கொண்டு அங்கிருந்து விடுவிடுவென கிளம்பினான். அவரோ வேதனையோடு அவனை பார்த்தபடியே நின்றுவிட்டார்.

தன் அலுவலகத்திற்கு வந்த கௌதமிற்கு மனதே சரியில்லை. தன்னால் தாய்க்கு எந்தவித மகிழ்ச்சியையும் கொடுக்கமுடியாத நிலையில் தான் இருப்பதை எண்ணி மனம் வெம்பினான். அவனால் வேலையில் முழுதாக ஈடுபட முடியவில்லை. உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான். தன் காரை எடுத்துக் கொண்டு எங்கு செல்வதென்று தெரியாமல் வண்டியை நிறுத்தவும் மனமில்லாமல் ஒரு நீண்ட வழி பாதையில் சென்றுக் கொண்டிருந்தான்.

கடந்த பத்து நாட்களாக சந்தியாவின் வாழ்விலும் புயலே அடித்துக் கொண்டிருக்கிறது. அவளும் அதிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, தினமும் காலை நேரத்திலேயே அலுவலகத்திற்கு சென்றுவிடுவதும், இரவு நேரம் தாழ்ந்தே வீட்டிற்கு வருவதுமாக இருந்தாள். மகளின் செயலில் கோபமுற்ற மீனாட்சி, முந்தைய நாள் அவளை கடுமையாக திட்டியதில் இன்று காலை நேரத்தில் அலுவலகம் கிளம்பாமல் வீட்டிலேயே இருந்தாள். ஒருவேளை நடப்பதை சமாளிப்பதற்கு தயாராகி விட்டாளோ?

சந்தியா காலை சிற்றுண்டிக்கு உணவு மேசையில் வந்து அமரவும் விக்ரம் அங்கே வரவும் சரியாக இருந்தது. சந்தியாவிற்கு தெரிந்ததெல்லாம் விக்ரம் எதேர்ச்சையாக அங்கே வந்தான் என்று. அவளுக்கு தெரியாதது மீனாட்சி தான், இன்று ஒரு முடிவெடுத்தே தீரவேண்டுமென்று அவள் கீழே வருவதை பார்த்து அவனையும் அங்கே வரச்சொன்னது.

“என்ன முடிவு பண்ணிருக்க” உணவு மேசையில் அமர்ந்து தன் கைபேசியில் தனக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களை பார்வையிட்டு கொண்டிருந்தவள் தாய் மீனாட்சி கேட்கவும், எதுவும் புரியாமல் அவரை நிமிர்ந்து “என்ன முடிவு பண்ணிருக்கேன்னா” என்றாள்.

“சக்திக்கு பொண்ணு கேட்டு போன இடத்துல என்ன நடந்துச்சுனு மறந்துட்டியா. அதைப்பத்தி பேசலாம் பார்த்தா, கண்ணமூச்சி ஆட்டமா ஆடுற. நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். ஒருநாளை போல யார் கண்ணுலயும் படாம காலைல சீக்கிரம் ஆபீஸ் போய்டறது, நைட் நாங்க படுத்ததுக்கு அப்புறம் வர்றது. இதெல்லாம் எனக்கு புரியலைனு நினைச்சிட்டு இருக்கியா. நேத்து அப்படி தான், நைட் பத்தரை மணி வரைக்கும் ஆபீஸ்ல இருக்க. அப்படி அங்க உனக்கு என்ன வேலை. எல்லாரும் உன்னை மாதிரியா ஆபீஸ்ஸே கதின்னு இருக்காங்க. இப்படி நேரங்கெட்ட நேரத்துல வர்றது போறது என்ன வேலை. பேசாம நீ வேலைய விட்டிடு”

“என்ன வேலைய விடணுமா” அதிர்ந்துப் போய் கேட்டாள்.

“ஆமா. வயசாகிட்டே போகுது. இதுக்கு மேலயும் தள்ளிப்போட கூடாது. நீ வேலைய விட்டுடு சந்தியா. நாங்க உனக்கு நல்ல பையனா பார்த்து கட்டி கொடுத்திடறோம். அப்புறம் வேலைக்கு போறதும் போகாததும் உன் பிரச்சனை அவன் பிரச்சனை. நாங்க தலையிடமாட்டோம். ஆனா, இப்ப எங்களுக்கு கடமை இருக்கு”

“முடியாதும்மா. நீங்க சொல்றிங்கனுலாம் என்னால விட முடியாது. இந்த வேலை எனக்கு முக்கியம். என்னால யாருக்காகவும் எதுக்காகவும் வேலைய விட முடியாது. எனக்கு தேவை இருக்கு” ஆணித்தரமாக சொன்னாள்

“அதான் சக்தி சம்பாதிக்கறான்ல. முன்னாடி நீ மட்டும் தான் இந்த குடும்பத்துக்காக ஓடிக்கிட்டு இருந்த. இப்ப அப்படி இல்ல. சக்தி நல்லா சம்பாதிக்கறான். இந்த வீட்டு லோனை அவன் கட்டட்டும். நீ வீட்டுல இருந்து எந்த டென்ஷனும் இல்லாம கல்யாணம் பண்ணிட்டு போ”

“சக்தி சம்பாதிக்கறது அவனுக்கு, உங்களுக்கு, இந்த குடும்பத்துக்கு. ஆனா, நான் சம்பாதிக்கறது என்னோட தேவைக்கு. எனக்கு என்னோட வேலை ரொம்ப முக்கியம். அதை நான் எப்பவும் விடமாட்டேன்”

“இவ என்ன விக்ரம் இப்படி பேசறா. அப்படி என்ன இவளுக்கு தேவை வந்துச்சு” மீனாட்சி எரிச்சலுற, விக்ரமும் அவளிடம் அதை தான் கேட்க வந்தான். அவனுக்கு தெரியாமல் அவளுக்கென்ன தேவையுள்ளது. அதையவன் பேச முற்பட, பேசவேண்டாம் என்று அவனுக்கு நேராக கைகளை நீட்டி தடுத்தாள்.

பின் மீனாட்சியே அந்த பொறுப்பை கையில் எடுத்து “கல்யாணம் ஆகாத இவளுக்கு என்ன தேவை இருந்திட போகுது. முன்னாடி நீ உழைச்சா தான் இந்த வீட்டுல அடுப்பு எரியும்னு இருந்துச்சு. உன் சம்பளத்துல தான் நாங்க சாப்பிட்டோம். உங்க அச்சா இருந்திருந்தா, கடனை உடனை வாங்கியாவது இந்நேரத்துக்கு உன் கல்யாணத்தை முடிச்சிருப்பாரு. நான் தான் ஒண்ணுத்துக்கும் பிரயோஜனம் இல்லாத அம்மாவா இருக்கேன். எனக்கு உறுத்தலா இருக்கு, எங்க தேவைக்கு உன் வாழ்க்கைய அழிச்சிட்டோமோனு” என்று வருத்தம் கொண்டார்.

“யாரும் என் வாழ்க்கைய அழிக்கல. இனி கல்யாணத்தை பத்தி பேசாதீங்க. அது என் வாழ்க்கைல முடிஞ்சுப் போன ஒண்ணு. ப்ளீஸ், என்ன நிம்மதியா என் போக்குல போகவிடு ம்மா”

“நீ சரிப்பட்டு வரமாட்ட. உனக்கு மாப்பிள்ளை பார்க்கத் தான் போறேன். நீ அவனுக்கு கழுத்தை நீட்டித்தான் ஆகணும்” மீனாட்சியின் பேச்சு சந்தியாவிற்கு எரிச்சலை தந்தது.

“முடியாது. அப்படியெல்லாம் நீ யாரோ ஒருத்தனுக்கு என்னை கட்டி வச்சிட முடியாதும்மா. அபிநயா வீட்டுல பேசினத நான் ஒண்ணும் யோசிக்காம இல்ல. கல்யாணம் ஆகாத பொண்ணு இருக்கற வீட்டுல அவங்க பொண்ணு தரமாட்டனு சொல்லிட்டாங்க. அவங்க சொல்றதும் கரெக்ட் தான. நான் முடிவு பண்ணிட்டேன். சக்தி கல்யாணம் முடிஞ்சதும் இங்க இருந்து கிளம்பிடுவேன். அதுக்காக ஆபீஸ்ல லொகேஷன் சேன்ஞ் கேட்டிருக்கேன். ஏன், எனக்கு திரும்ப ஆன்சைட் கிடைச்சா கூட போய்டுவேன். அதுக்கு அப்புறம் நீங்க, உங்க மகன், உங்க மருமகள் மட்டும் தான். நான் இருந்தா தான தொந்தரவு. நான் இங்க இருக்கவே போறதில்ல. என்னால சக்தி கல்யாணத்துலயோ, அவன் வாழ்க்கைலயோ எந்த இடைஞ்சலும் எப்பவும் இருக்காது. உங்க பிரச்சனையெல்லாம் இத்தோட தீர்ந்துச்சா. முடிவை சொல்லிட்டேன், திரும்ப இதப்பத்தி பேசவேண்டாம். நான் ஆபீஸ் கிளம்பறேன்”

“பார்த்தியா சக்தி எப்படி பேசறானு. நான் என்ன என் மகன் கல்யாணம் நடக்கணும்னு இவளுக்கு கல்யாணம் கழிச்சு துரத்த பார்க்கறேனா. இதை ஒரு சாக்கா வச்சு என் மகளுக்கு ஒரு நல்லது செஞ்சு பார்க்க மாட்டோமானு தவிச்சி பேசிட்டு இருக்கேன். இவ என்னனா..”

“என்னை துரத்த பார்க்கலைனா, எதுக்கு எனக்கு கல்யாணம் பண்ண பார்க்கற” அவள் மீனாட்சியை பேச, அதில் கோபம் கொண்ட விக்ரம் ‘சந்தியா’ என்று குரல் கொடுக்க, அவள் அதற்கு செவிசாய்க்க தயாராக இல்லை.

“நீ குடும்பம், குழந்தைனு நல்லா இருக்கணும்டி. அதுக்கு தான சொல்றேன்” சொல்லும்போதே மீனாட்சியின் கண்களில் நீர் நிறைந்து நின்றது.

“நான் நல்லா இருக்க கல்யாணம் தான் சல்லுஷன்னு உங்கிட்ட யாரு சொன்னது” மனதில் எதையோ நினைத்தவள் வெளியே அலட்சிய சிரிப்பை மட்டுமே உதிர்த்தாள்.

“அப்ப தனியாவே இருந்துக்குவியா”

“ஆமா தனியாவே இருந்துப்பேன்”

“அதுக்கு நான் விட்டா தான. நீ கல்யாணம் பண்ணித் தான் ஆகணும். உனக்கு எவனையாவது பிடிச்சா சொல்லு, சந்தோசமா அவனையே கட்டி வைக்கறேன். இல்லனாலும் விடறதா இல்ல. புரோக்கர்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். நான் பையனை பார்த்துகிட்டே இருப்பேன். என் மனசுக்கு திருப்தியா இருந்து, பையன் வீட்டுல பேசி எல்லாம் சரியா இருந்துச்சுன்னா பொண்ணு பார்க்க வருவாங்க. ஒழுங்கா கல்யாணத்துக்கு தயாராகுற வழிய பாரு. இந்த டிசம்பர் வந்தா முப்பத்தியொரு வயசு ஆகப் போகுது. கல்யாணம், குழந்தை எல்லாம் வேண்டாமா. இதுக்குமேலயும் உன் பேச்சை கேட்டுட்டு ஆடுவேன்னு மட்டும் நினைக்காத. உனக்கு பையன் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கறதே சரி” அவரும் விடுவதாக இல்லை.

அவர் சொன்னதில் சந்தியாவின் மனமும் உடலும் நடுங்கி சில்லிட்டு போனது. அதேநேரம் கோபமும் ஆத்திரமும் மூளைக்கேறி அவளை சூடாக்கியது “நீ அப்படி பையனை கூட்டிட்டு வந்த, நான் மனுஷியா இருக்க மாட்டேன்ம்மா. நீ எப்படி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறனு நானும் பார்க்கறேன். எனக்கு வேண்டாம்ன்னா வேண்டாம் தான். என்னை என் போக்குல விட வேண்டி தான. அதை விட்டுட்டு நொய் நொய்னு நச்சரிச்சுட்டு இருக்க. கடைசியா சொல்றேன்ம்மா, என்னை மீறி எதாவது பண்ண, இதுவரைக்கும் பார்க்காத சந்தியாவ நீ பார்ப்ப” பேசி முடித்தவள் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு வந்தது. அதே கண்களில் கோபமும் ஆத்திரமும் உடனிருந்தது.

அவள் பேசியதை பார்த்த விக்ரமுக்கு கௌதமே பேசியது போல் இருந்தது. அச்சுப்பிசகாமல் அப்படியே அவனது வார்த்தைகள். இன்னமும் கெளதம் இவளை ஆட்கொண்டுதான் இருக்கிறானா? அவனை இவள் மனதில் சுமந்து தான் இருக்கிறாளா? என்றெல்லாம் தோன்ற சிலநொடிகள் உறைந்து போயிருந்தாலும் எதிர்வாதம் புரிய மீனா தயாரானதை பார்த்தவன் பேச்சு எல்லைமீறி சென்றுக் கொண்டிருப்பதை உணர்ந்து சக்தியிடம் கண்ணை காட்ட, அவன் அவனது தாயை அவரது அறைக்கு இழுத்துச் சென்றான்.

கண்ணீரோடு நின்றிருந்த சந்தியாவை ஆசுவாசப்படுத்த அருகிலிருந்த பூங்காவிற்கு அழைத்து வந்தான் விக்ரம்.

“பார்த்தியா விக்ரம், எங்கம்மா பார்க்கற வேலைய. இவங்க பையனை கூட்டிட்டு வருவங்களாம், நான் போய் டீ காஃபி தந்து பிடிச்சிருக்குனு சொல்லி கல்யாணம் பண்ணிக்கனுமாம். முடியவே முடியாது. என்னால மேரேஜ் பண்ணிக்க முடியாது” கோபமும் ஆற்றாமையும் சேர்ந்து அவள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து வந்தது.

“இதுல ஆத்திரப்பட ஒண்ணுமில்ல சந்து. அவங்க சொன்னதுல என்ன தப்பிருக்கு. மீனாம்மா சொல்ற மாதிரி நீ கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கும் அதான் ஆசை” விக்ரம் இப்படி சொல்வான் என அவள் கனவிலும் நினைக்கவில்லை. முதலிலிருந்தே அவளது காதலுக்கு அவன் தானே முழு ஆதரவு கொடுத்தவன். இன்றோ அவனே இப்படி சொன்னால் அவள் என்ன செய்வாள். அதிர்ந்துப் போனாள்.

“நான் எப்படி விக்ரம்” அதே அதிர்வோடு பரிதாபமாக அவனிடம் கேட்டாள்.

“எப்படின்னா”

“அவங்க எதுவும் தெரியாம சொல்றாங்க. எல்லா தெரிஞ்ச நீயுமா”

“என்ன ஊர் உலகத்துல யாருமே லவ் பண்ணலையா. எல்லாரும் லவ் பண்ணவங்களேவா கல்யாணம் பண்ணிக்கறாங்க. இல்லல. அதேமாதிரி நீயும் பண்ணிக்கோ”

“நான் எப்படி விக்ரம்”

“சும்மா சொன்னதையே சொல்லாத சந்து. நீ கல்யாணம் பண்ணிக்கோ”

“நான் எப்படி விக்ரம். என்னால எப்படி முடியும். நோ.. நெவர். என்னால முடியாது”

“சின்ன குழந்தை மாதிரி பேசாத சந்து. அவன் எனக்கும் ப்ரண்ட் தான். அதுக்காக இவ்ளோ வருஷமா இங்க வராம, உன்னை பார்க்காம இருக்கறவன நம்பி உன் வாழ்க்கைய வீண் பண்ணிக்கோனு சொல்ல சொல்றியா. அவனுக்கெல்லாம் இழந்தா தான் அதோட அருமை தெரியும். நான் பாரு, போனவன் என்ன உன்னை நெனச்சு வருத்தமா படப்போறான். இதோ பாரு சந்து, எனக்கு உன் லைஃப் முக்கியம். அதை நீ இப்படி அழிச்சிக்கறத என்னால கைய கட்டிக்கிட்டு வேடிக்கை பார்க்க முடியாது. உன் லைஃப்ப நீ வாழ்ந்து தான் ஆகணும். எதுவும் யோசிக்காம வீட்ல மாப்ள பார்க்க சரின்னு சொல்லு. அந்த பையன்கிட்ட பேசிப் பாரு. ஒருவேளை உனக்கு பிடிச்சிருக்கலாம்ல. அப்படி உனக்கு பிடிச்சிருந்தா மட்டும் தான் மேல ப்ரோசீட் பண்ணுவோம். அதுக்கு நான் கேரண்டி”

“உன்னால அப்படி முடிஞ்சதா விக்ரம்”

“என் கதையே வேற. அதப்பத்தி இப்ப பேசவேணாம். நீயும் அவனும் தான் லவ் பண்ணிங்க. என்னோடது வெறும் ஒன்சைட் லவ். அதுக்கு நிறையபேர் மத்தில மதிப்பே கிடையாது. மத்தவங்கள விடு, எப்ப அவ இன்னொருத்தனோட லவ்வர்னு தெரிஞ்சிதோ அன்னைக்கே எனக்கு அவமேல இருந்த எண்ணத்தை தூக்கியெறிஞ்சிட்டேன். நான் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறது அவளை மறக்க முடியாம ஒண்ணுமில்ல. அதனால என்னை பத்தி விடு. நான் எப்பவோ அவளை அழிச்சிட்டேன். இப்ப அழிக்க வேண்டியது நீ தான்” என்றவன்

“அவனை தூக்கிப்போடு. அவன் நினைப்ப தூக்கிப்போடு. அவன் ஞாபகமா உங்கிட்ட இருக்குற பொருட்களை குப்பைனு நினைச்சி தூக்கிப்போடு. நீ உன் வாழ்க்கைய பத்தி மட்டும் யோசி” என்று சொல்ல

“ஐய்யோ நான் எப்படி விக்ரம். நான் எப்படி பண்ணுவேன். என்னால எப்படி பண்ணமுடியும்” கைகளில் முகத்தை புதைத்து கதறி அழுதாள். விக்ரம் சொன்னது போல் அவன் அவளுக்கு கொடுத்ததை எப்படி குப்பையென தூக்கி எறிய முடியும்.

“என்னால கண்டிப்பா அது முடியாது. நிச்சயமா முடியாது. என்ன நடந்தாலும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். என்னால அது முடியாது” சொல்லிவிட்டு அழுதுக்கொண்டே அங்கிருந்து ஓடியவளை தேற்ற வழி தெரியாமல், அவள் பின்னே ஓடினான்.

வீட்டை அடைந்தவள் உள்ளே வந்து வேகமாக படியேறி தன் அறைக்குள் சென்று கதவை அடைக்கப்போகும் நேரத்தில், விக்ரம் அவளை சாற்றவிடாமல் தன் பலம் கொண்டு கதவை நிறுத்திப் பிடித்திருந்தான்.

“தப்பான முடிவெல்லாம் எடுக்கமாட்டேன். ப்ளீஸ் என்னை தனியாவிடு” என்றதும் அவன் கையை எடுக்க, அவளோ கதவை அறைந்து சாற்ற செய்வதறியாது அங்கேயே நின்றுவிட்டான் விக்ரம். வெகுநேரம் நின்றவன், பின் அமைதியாக கீழே இறங்கிச் சென்றான்.

இந்நேரம் பார்த்து எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் சாவித்ரி அவளது கைபேசிக்கு அழைத்தாள். இவள் அழைப்பை நிராகரிக்க, அவள் திரும்ப திரும்ப விடாமல் அழைக்க அதில் எரிச்சலுற்றவள் தான் வேலையாக இருப்பதால் பின்னர் அழைக்கிறேன் என்று சொல்ல அழைப்பை ஏற்க அவளோ ஏற்றதுமே

“என்னடி ஃபோன் பண்ணா எடுக்கவே மாட்ற. கெட் டூகெதர்க்கு வர்றத பத்தி கன்பார்ம் பண்றேனு தான சொன்ன. பிரபு என்னை கேட்டுட்டே இருக்கான்டி. சீக்கிரம் சொல்லு, நான் அவனுக்கு ஹெட்கௌண்ட் தரணும்” என்று படபடத்தாள்.

“நான் வரல சாவி” தழுதழுக்கும் குரலை செருமி கண்ணீரை அடக்கி சொன்னாள்.

“ஏன் வரல”

“ப்ளீஸ் நான் வரல. அப்புறமா பேசறேன்” அழைப்பை துண்டிக்க போனவளை

“ஹேய் ஒரு நிமிஷம். என்ன உன் ஆளு போகாதனு சொல்லிட்டாரா. அவர் கிழிச்ச கோட்டை நீ தான் தாண்டவே மாட்டீயே. என் பொண்ண வச்சிட்டு, உங்கிட்ட சரியா கூட பேச முடியல. சரி, இப்ப அவர் எங்க இருக்காரு. இன்னும் பெங்களூருல தான் இருக்காரா, இல்ல சென்னைக்கு மாறிட்டாரா. உங்க ரெண்டுபேரை பார்த்தா எனக்கு எப்பவும் பொறாமையா இருக்கும். அவர் உன்னை பார்த்துக்கற விதம், அதோட நீ அவர் சொல்றத மீறி எதாவது செய்வ.. வாய்ப்பே இல்ல. நானெல்லாம் என் புருஷன் பேச்சை கூட கேக்கறதில்ல. நீயெல்லாம் லவ் பண்றப்பயே அப்படியாச்சே. சரி சொல்லு, அவர் இப்ப எங்க இருக்காரு. எப்ப தான்டி கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கீங்க” தோழி சொல்ல சொல்ல சந்தியாவிற்கு கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து வந்தது. கௌதம் அவளை அப்படி தங்குவான், இவளும் அவன் சொல்வதை மீறவே மாட்டாள். அதை எண்ணியவளுக்கு தன் முட்டாள் தனத்தை எண்ணி தன் மீதே கோபம் வந்தது.

அவள் புத்தி இப்போது மறந்தது ஒன்றைத்தான். அவன் சொல்வதை இவள் மட்டுமா தட்டாமல் செய்வாள். இவள் சொன்னதை எத்தனை முறை அவன் தட்டாமல் செய்திருக்கிறான். சொல்லப்போனால் அவளை விட அதிகமாக. பல முக்கிய முடிவுகளை, பிடிவாதத்திற்கே பெயர் போனவன் இவளது பிடிவாதத்தால் தடுமாறி தவறாகவும் எடுத்திருக்கிறான். அவன் அடங்கிப்போகும் ஒருத்தி அவள் மட்டுமே. அதை அவன் மீது கொண்ட கோபம் அவளை பார்க்கவிடாமல் செய்தது.

சாவித்ரியின் பேச்சு அவளுக்கு எரிச்சலை, கோபத்தை, ஆற்றாமையை தந்தது. அதை அவளிடம் காட்டி என்ன பயன், அவள் மேலே பேச வருவதை உணர்ந்து “சாவி, ப்ளீஸ் நான் உங்கிட்ட அப்புறம் பேசறேன். மீட்டிங் நடுவுல இருக்கேன்” பொறுமையாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள் சந்தியா. அத்தோடு கைபேசியை அணைத்து தூக்கி மெத்தை மீது வீசினாள்.

கோபத்தில் எரிமலை ஆனவள் மேசை மேலிருந்த பொருட்களை தள்ளி விட்டாள். கட்டிலில் இருந்த தலையணைகளை தூக்கி வீசினாள். பெட்ஷீட்டை இழுத்து போட்டாள். அத்தோடு சேர்ந்து அவளது கைபேசியும் தூரப்போய் விழுந்தது. அப்போதும் ஆத்திரம் தீரவில்லை. இந்த நிமிடம் தன்னையே அழித்துக் கொண்டாலும் அந்த கோபம் அவளுக்கு தீர்ந்திருக்காது. அப்படி ஒரு ஆத்திரம். ஆனால் அவளால் தன்னை அழித்து கொள்ளமுடியாது. அவளுக்கென்று சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அவள் தேவை என்பதை எந்நேரத்திலும் அவள் மறந்ததில்லை. இன்றும் மறக்கவில்லை. அதே நேரம் வலியை போக்கும் வழியும் தெரியாமல் மெத்தையில் போய் விழுந்தாள். தன் கையை மடக்கி மெத்தையை குத்து குத்தென்று குத்தினாள். துக்கம் தாளாமல் துடி துடித்து அழுதாள்.

அன்னை திருமணம் செய்துக் கொள்ள சொல்ல, அதை வேண்டாம் என்று மறுக்கமுடியாத இயலாமை. விக்ரம் அவனை கடந்துச்செல்ல சொல்ல, அது அவளால் முடியாதென்ற ஆற்றாமை. சாவித்ரி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத வேதனை. இவையனைத்தும் அவளை சித்திரவதை செய்துக் கொண்டிருந்தது.

அன்றொரு நாள், இப்படி தான் கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் சாவித்ரி கேட்ட கேள்வி இன்றும் நினைவிற்கு வந்தது. யாரிடமும் அதிகம் பேசாத அமைதியான கல்லூரி பெண்ணான சந்தியாவை பார்த்து நீ யாரையேனும் காதலிக்கிறாயா என்று சாவித்ரி கேட்டாள். அன்றும் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமுடியாத நிலையில் தான் கௌதம் அவளை வைத்திருந்தான். இன்றும் அதே நிலையை தான் அவளுக்கு அவன் கொடுத்திருக்கிறான். இது அவனுடைய தவறில்லை, ஓவ்வொரு முறையும் அவனை நம்பி ஏமாந்த தன்னுடைய தவறே என்று எண்ணியவளுக்கு இப்போது கோபம் தன்பக்கம் திரும்பியது. இப்படியொரு கோபம் அவளுக்கு அவள் மேலே வருவது ஒன்றும் புதிதல்ல. அவளது கடமைகள் மட்டும் அவளை பிடித்து வைக்கவில்லையென்றால் என்றோ அவளை அவளே தண்டிக்கும் பொருட்டு உயிரை விட்டிருப்பாள்.

அவன் விளையாடினான். ஆனால், விளையாடும் வாய்ப்பை அவனுக்கு தான் தானே வழங்கியது என்றெண்ணி தன்னை தானே அவள் நொந்து கொள்ளாத நாளில்லை. போக போக அவளுடைய இந்த நிலைக்கு காரணமான அவனையும் அவனை தன் வாழ்வில் விளையாட அனுமதித்த அவளையும் வெறுத்தே விட்டாள். பிறரை அல்ல முதலில் தன்னை நேசிக்கவேண்டும். தன்னை நேசிக்காவிட்டால் பின் வாழும் வாழ்க்கைக்கு என்ன பிடிப்பு இருந்துவிடும். அப்படி இருந்தும் வாழ்கிறாள், நடைப்பிணமாக. அப்படி யாருக்காக வாழ்கிறாள் அவள் மட்டுமே அறிந்த ஒன்று.

இப்படி பல்வேறு எண்ணங்களோடு கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு, புலம்பி, அழுது ஒருவழியாகி இருந்தாள் சந்தியா. இப்போது கீழிருக்கும் அன்னை, தம்பியோ இல்லை விக்ரமோ அவள் முகத்தை பார்த்தால் பயந்தேவிடுவார்கள். அந்த அளவிற்கு கண்கள் சிவந்து கண்களுக்கு கீழே கறுத்து முகம் வீங்கி சோர்வுடன் காணப்பட்டாள். எழுவதற்கு கூட தெம்பில்லாதவளுக்கு ஏதோ ஒரு கடமை துரத்த அதற்கு உத்யோகம் முக்கியம் என்பது நினைவிற்கு வர எழ முயற்சித்தாள். இன்று ஏனோ அவளுக்கு மனம், உடல் இரண்டிலும் தெம்பில்லை. அவை எழ மறுத்தது. அலுவலகத்திற்கு அழைத்து வரவில்லை என்றாவது சொல்லவேண்டும் என்றெழுந்து, தன் கைபேசியை தேடி அது கிடைத்ததும் மேலாளருக்கு அழைத்து, விடுப்பு சொல்லிவிட்டு மீண்டும் மெத்தையில் விழ போனாள். ஆனால் அவள் கால்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் நொடிந்து போய் தரையில் விழுந்தாள்.

தரையில் தெம்பில்லாமல் கிடந்த இவளும் இதற்கு மேல் எங்கு செல்வதென்று புரியாத அவனும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் ஒன்றாக அவர்களது இன்றைய நிலைக்கு காரணமான கடந்த காலத்தை நினைக்கத் தொடங்கினர்.

வாசலில் நின்று பெயர் கூட தெரியாத அவனது தேவதையை பார்த்தவனுக்கு அளவற்ற மகிழ்ச்சி. அதே மகிழ்ச்சியுடன் உள்ளே நுழைந்தான். பத்து நாட்களுக்கு முன்பு தான் பதினாறு வயதை எட்டியிருந்தான். சந்தியா அழகி தான். விக்ரமும் கௌதமும் சொன்னது போல் பொம்மை போல் தான் இருப்பாள். ஆனால் கௌதம் அவளையே மிஞ்சும் அழகு. நல்ல உயரம், மாநிறத்திற்கும் மேல் நிறம், அழகு தேகம் என ஆணழகனே அவன். அதை அவன் உள்ளே நுழைந்தபோது அவனை நிமிர்ந்து பார்த்த மாணவிகளின் பார்வைகள் சொல்லியது. ஆனால், யார் பார்க்கவேண்டுமோ அவள் மட்டும் பார்க்கவில்லை. அவன் கண்களோ அவளை மட்டுமே பார்த்துக்கொண்டு அவளை கடந்துச் சென்றது. நேராக உள்ளே வந்தவன் அவளுக்கு பின் வரிசையில், அதாவது அவள் கடைசி வரிசைக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்தாள், இவன் அவளுக்கு பின் வரிசையில் அவளுக்கு நேர்பின்னால் அமராமல் அவளை பார்க்கும்படி அதற்கு பக்கத்து நாற்காலியில் அமர்ந்தான்.

ஆச்சர்யம் என்னவென்றால் இந்த நிமிடம் வரை அவனுக்கு அவள் பெயர் தெரியாது. திரும்ப திரும்ப விக்ரமிடம் அவளை பற்றி விசாரிக்க அவன் விரும்பவில்லை. அவள் அருகில் இருக்கவேண்டும் என்று எண்ணினான், அதை நடத்தியும் விட்டான். பின்னால் அமர்ந்தவனை தேடி வந்து சிலர் பேசினர். கௌதமிற்கு இந்த பள்ளி புதிதாக இருக்கலாம். ஆனால் இங்கே படிக்கும் நிறைய மாணவர்களை அவன் பத்தாம் வகுப்பில் ட்யூஷன் சென்றபோது, மைதானத்தில் ஒன்றாக புட்பால் மற்றும் கிரிக்கெட் விளையாடிய போது, புட்பால், பாக்ஸிங், ஸ்கேட்டிங் கோச்சிங் சென்றபோது என பலரை பார்த்தும், தெரிந்தும், நட்பு பாராட்டியும் இருக்கிறான். அப்படி அவனை தெரிந்த ஒருவனே அவனருகில் அமர்ந்திருந்த சரவணன்.

“என்னடா திடீர்னு ஸ்கூல் மாறி வந்து ஷாக் கொடுக்கற” என்பதே அவனது கூற்றாக இருந்தது.

“இந்த ஸ்கூல்ல அகடெமிக்ஸ்க்கு ரொம்ப இம்பார்ட்டன்ஸ் தர்றாங்க அதான்” வீட்டில் சொன்னது என்னவோ விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவதால் தான் இங்கே சேரப் போகிறேன் என்று. அதே பொய்யை இங்கும் சொன்னால் மாட்டிக் கொள்வான். ஏனென்றால் அவனது பழைய பள்ளியே கல்வி, விளையாட்டு என அனைத்திலும் சிறந்து விளங்கியது. அதுமட்டுமா அவனது பழைய பள்ளியில் படிக்கும் அனைவரும் இவனை போல் அதிக வசதிப் பெற்றவர்கள். தலை சிறந்த பள்ளியிலேயே செல்வராஜ் மகனை சேர்த்திருந்தார். ஆனால் அவனோ படித்தால் இந்த பள்ளியில் தான் படிப்பேன் என்று வந்திருக்கிறான். இந்த பள்ளியிலும் வசதியான பிள்ளைகள் படிக்கிறார்கள் தான். இருந்தும் இப்பள்ளி முந்தைய பள்ளியை விட சற்று குறைவே. அதேபோல் இந்த பள்ளியிலிருக்கும் விளையாட்டு அணிகளும் கொஞ்சம் மந்தமே. அதை பற்றி இவனுக்கு என்ன கவலை, இவன் அதற்காகவா வந்திருக்கிறான். அப்படி இவன் கவலைப்படாத அளவிற்கு அவள் முக்கியமானவளா?

“நீ அவ்ளோ நல்லவனாடா. எப்போதிலிருந்து நீ படிப்ப பத்தியெல்லாம் பேச ஆரம்பிச்ச”

“டேய் நான் ஸ்கூல் செகண்ட்டா. என்னையெல்லாம் விடவே முடியாதுனு டிசி கொடுக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க. நான் தான் நீங்க கொடுக்கலனா நீங்களே வச்சிக்கோங்க. வேற ஸ்கூலுக்கு போறதுக்கு தான டிசி வேணும், நான் படிப்ப நிறுத்திட்டு எங்க கடைய பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டேன். அப்புறம் பிரின்சிபெல் தான் பாவம் நல்லா படிக்கிற பையன் லைஃப் வீணாகிட கூடாதேனு ரொம்ப வருத்தபட்டு டிசிய கொடுத்துவிட்டார்”

“உன் படிப்புக்கு அவர் வருத்தப்பட்டாரா. அப்ப, நீ படல. ஏன்டா நீயெல்லாம் திருந்தவே மாட்டியா. எப்ப தான் இந்த திமிரு உன்னைவிட்டு போகுமோ. இன்னமும் ஞாபகம் இருக்கு நம்ம டியூஷன் சாரை நீ எப்படி ஓடவிட்டனு”

“பின்ன என்னடா. டிசி கேட்டா கொடுக்க வேண்டியது தான” அதற்கும் அலட்டாமல் பதில் சொன்னான். பள்ளியின் முதல் நாள் என்பதால் வகுப்பே விடுமுறையில் நடந்த கதையே பேசிக் கொண்டிருந்ததால் சத்தமாக இருந்தது. அதனால் இவர்களின் பேச்சு சந்தியாவின் காதில் விழவில்லை என்பதைவிட அவள் அதை காதில் போட்டு கொள்ளவில்லை. அது தான் சந்தியா. தனக்கு தேவையில்லாத விசயத்தை செவிக்கு கொண்டும் போகமாட்டாள்.

ஆனால் கௌதமின் பார்வை முழுவதும் சந்தியாவின் மேலே. திருத்தம் சந்தியாவென்று பெயர் தெரியாத அவனது தேவதையின் மேலே இருந்தது.

பேசிக் கொண்டிருந்த நேரத்தில் ஆசிரியை வகுப்பிற்குள் நுழைந்து காலை பிராத்தனையும் முடிந்து வருகை பதிவு எடுத்த போது கௌதமின் பெயர் முன்பே வந்துவிட்டது. ஆனால் சந்தியாவின் பெயர் வரவில்லை. ஒவ்வொரு மாணவியின் பெயரை அழைக்கும் போதும் அதுதான் அவள் பெயரா என்ற ஆவலில் அவளை பார்ப்பான். இல்லை, அது அவள் பெயர் இல்லை என்ற ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

இதை கவனித்த சரவணன் “ஆமா உன் முகம் ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்கு” என்று கேட்க

“அட்டெண்டன்ஸ் எடுக்கறாங்கடா” கௌதம் பதில் சொல்ல

“டேய் அட்டெண்டன்ஸ் தான எடுக்கறாங்க. அது டெய்லி தான் எடுப்பாங்க. என்னமோ ஆன்ஸர் பேப்பர் தர்ற மாதிரி முகத்தை இப்படி வச்சிருக்க” அவன் சொல்ல அதெல்லாம் உனக்கு சொன்னால் புரியாது என்பது போல் ஒரு சிரிப்பை சிரித்தான் கௌதம். அவன் கவலை அவனுக்கு.

கடைசியாக ஆசிரியை ‘சந்தியாலஷ்மி’ என்றார்.

இவளும் கைதூக்கி “யெஸ் மேம்” என்றாள். சந்தியா எனப்படும் சந்தியாலட்சுமியே அவள். முத்துகிருஷ்ணனுக்கு முதல் குழந்தை மகளாக பிறந்ததும் அவருக்கு சொல்லமுடியாத மகிழ்ச்சி. லட்சுமியே வீட்டிற்கு மகளாக வந்து பிறந்திருக்கிறாள் என்ற எண்ணம். அவள் பார்க்கவும் அப்படி தான் இருந்தாள். குண்டு குண்டு கன்னங்கள் கூரிய காந்த விழிகள் பிஞ்சு கைகளும் கால்களும் என அவரின் வாழ்வில் வந்த முதல் சொத்து அவள். அதனால் மகளுக்கு சந்தியாலஷ்மி என்று பெயர் சூட்டினார். முத்துகிருஷ்ணன் செல்லமாக லட்சும்மா என்று அழைப்பார். அப்பாவின் லட்சும்மா, அம்மாவின் சந்தியாம்மா, விக்ரமின் சந்து, பின்னாளில் அவளின் கௌதமின் சனு எல்லாம் அவள் ஒருத்தியே. இன்று அவள் பெயர் கூட தெரியாமல் அவளை தேடி வந்தவன் ஒருநாள் அவளது பெயருக்கு வலப்பக்கம் அவன் பெயர் சேரப்போவதை அறிந்திருக்கவில்லை.

எது எப்படியோ, இப்போது ‘சந்தியாலஷ்மி’ ‘சந்தியா லஷ்மி’ ‘லஷ்மி’ ‘சந்தியா’ என்று அவள் பெயரை பலவாறாக மனதிற்குள் சொல்லிப் பார்த்தான். கடைசியில் அன்று முழுதும் அவளை உடனிருந்த மாணவிகள் சந்தியாவென்று அழைப்பதை கவனித்து இவனும் சந்தியாவிலேயே நின்றுக் கொண்டான்.

அவள் அருகில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே கௌதம் போட்ட கணக்கு. அதன்பின் அவள் எப்போது அவனுக்கு சனுவாக மாறினாள், எப்போது அவர்கள் சேர்ந்தார்கள், எப்போது பிரிந்தார்கள் இதுவெல்லாம் கடவுள் போட்ட கணக்கு.

இப்படியே இரண்டு நாட்கள் ஓடியது. கௌதம் விக்ரமிடம் தான் அவனுடைய பள்ளியில் சேர்ந்திருப்பதாக சொல்லவில்லை. அவன் சொல்லவில்லையென்றால் விக்ரமுக்கு தெரியாமலா போகும். நடந்து செல்லும் வழியில் நண்பனை பார்த்தான். முதலில் இவன் யாரடா கௌதம் போன்றே இருக்கிறான் என்றே எண்ணினான். இல்லை, அது கௌதமே, அவன் எப்படி இங்கே என்ற எண்ணம் மேலோங்க அவனை நோக்கி சென்றான். கௌதமும் விக்ரமை தூரத்தில் பார்த்தும் அவனிடத்தில் வந்தான்.

கௌதமே முதலில் பேச்சையும் ஆரம்பித்து “டேய் என்னடா அப்படி பார்க்கற” என்றான்

“என்னடா எங்க ஸ்கூல்ல எங்க ஸ்கூல் யூனிபார்ம்ல நிக்கற” இவன் இங்கே அவன் பள்ளி சார்பாக ஏதாவது வேலையாக வந்திருக்கிறானா அப்படியிருந்தால் எதற்கு நம் பள்ளி சீருடையில் இருக்க வேண்டும் என்று விக்ரமுக்கு பல குழப்பம். கடைசியில் கேட்டேவிட்டான். விக்ரமுக்கு தெரியாது அவன் இங்கே நிற்க அவனும் ஒரு காரணமென்று. அன்று அவன் வீட்டை பார்த்திராமல் இருந்திருந்தால் கௌதம் எப்படி சந்தியாவின் பள்ளியில் சேர்ந்திருப்பான்.

“இந்த ஸ்கூல்ல சேர்ந்தா இந்த ஸ்கூல் யூனிபார்ம் தான போடணும். பை தி வே இது உன்னோட ஸ்கூல் இல்ல நம்மளோட ஸ்கூல். இங்க தான் லெவன்த் ஸ்டாண்டர்ட் சேர்ந்திருக்கேன். லெவன் – ‘டி’ மேத்ஸ் வித் கம்ப்யூட்டர் சயின்ஸ்” என்றான்.

“எப்படிடா கௌதி. திடீர்னு சேர்ந்து சர்ப்ரைஸ் பண்ற” உற்சாக குரலில் சொன்னான்.

“அதேதான். எங்கிட்டயும் நீ எதுவும் சொல்லல” அருகிலிருந்த பீட்டர் கேட்டான். கௌதம், விக்ரம் விளையாடும் கால்பந்து அணியில் அவனும் ஒருவன். இருவருக்கும் நல்ல நண்பனும் கூட. காமர்ஸ் பிரிவு எடுத்திருக்கிறான்.

“சாரி விக்கி, சாரிடா பீட்டர், நானே ரெண்டுநாளா உங்கள வந்து பார்க்கணும் தான் இருந்தேன். வேற வேலைல இருந்துட்டேன். வர முடியல” நண்பர்களிடம் பொய் உரைப்பது கௌதமிற்கு வருத்தம் தான். இருந்தும் வேறு வழி தெரியவில்லை.

“கௌதி நீ லெவன் – ‘டி’னா அப்ப நீ சந்தியாவோட கிளாஸ்ஸா. அப்புறம் சரவணன் பி.விக்கி (விக்னேஷ்) எல்லாரையும் பார்த்தியா” விக்ரம் அடுக்கிக்கொண்டே போக ‘ஆமா. சந்தியா கிளாஸ் தான். அவ கூட இருக்க தான ஸ்கூல் மாத்திக்கிட்டே வந்தேன்’ தன் மனதிற்குள் எண்ணி சிரித்துக் கொண்டவன்

“சரவணன் என் பக்கத்துல தான் உட்கார்ந்துட்டு இருக்கான். பி.விக்கி இவ்ளோ படிப்ஸ்னு நான் எதிர்ப்பார்க்கல, எப்படிடா தேர்ட் ரோல உட்கார்ந்துட்டு இருக்கான். நம்ப தினேஷ் தான் எங்கனு தெரில. பையனை கண்லயே பார்க்க முடியல” என்றான். தினேஷ் மற்றுமொரு நண்பன். அவனும் கால்பந்து அணியில் இருக்கிறான். ஒரே டியூஷனும் கூட. விக்ரம், பீட்டர், தினேஷ், சரவணன் மற்றும் விக்னேஷ் ஐவரும் கௌதமின் வாழ்வில் இறுதிவரை வரப்போகும் நண்பர்கள். நிகழ்காலத்திலோ கௌதம் மீது ஆறாத கோபத்தில் சந்தியா பக்கம் நிற்கிறார்கள்.

“தினேஷ் நெக்ஸ்ட் வீக் தான் வருவான். ஊர்ல பாட்டி இறந்துட்டாங்களாம்” அதைக்கேட்டு கௌதமின் முகம் வருத்தத்தை வெளிப்படுத்த “அப்புறம், நீ எங்க இங்க. அத முதல்ல சொல்லு” விக்ரம் விசயத்திற்கு வந்தான்.

கௌதம் அதற்கெல்லாம் பயப்படுபவனா. “நீ தானடா பேசாம எங்க ஸ்கூல்லயே சேர்ந்திடுன்னு சொன்ன. அதான் சேர்ந்துட்டேன்” என்று சர்வசாதாரணமாக சொன்னான்.

“எனக்காக சேர்ந்த. இத நான் நம்பனும். கௌதி நீ யார், என்னனு எனக்கு தெரியும்டா. ஒழுங்கா உண்மைய சொல்லு”

“இல்லடா அங்க ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்னு கெட்டு போறேனாம். அதான் இங்க சேரச் சொல்லி அக்கா சொல்லிட்டா டா” அவன் அக்கா பெயரை சொன்னதும் நண்பர்களும் அதை உண்மையென நம்பினர். அவளை பார்த்ததிலிருந்து எத்தனை பொய். கௌதமுக்கே மனதிற்கு கஷ்டமாக தான் இருந்தது. இருந்தும் வேறென்ன செய்யமுடியும் பொய் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று தன்னை தானே சமாதானப் படுத்திக்கொண்டான்.

பள்ளியிலிருக்கும் மாணவிகளில் பலர் கௌதமின் விசிறிகள். அவனழகில் மயங்கியே இருந்தனர். அவனிடம் பேச முயற்சியும் செய்வார்கள். சிலர் அவனிடம் குழையவும் செய்வார்கள். அவனோ அவர்களை அருகில் கூட அண்ட விடமாட்டான். என் கடன் பணி செய்வதே என்பது போல் கௌதம் அவன் பாட்டென்று சந்தியாவை பார்த்திருந்தான். அவளை பார்ப்பான், ரசிப்பான் அதை தாண்டி அவளிடம் கூட பேசியதில்லை. அவர்களுக்கு அதற்கான தேவையும் இருந்ததில்லை, சந்தர்ப்பமும் அமைந்ததில்லை.

இப்படியே பள்ளி திறந்து ஒரு மாதம் ஆகியிருந்தது.

கௌதமுக்கு சவால் என்றால் சக்கரைபொங்கல் சாப்பிடுவது போல். யாராவது அவனிடம் வந்து இதை செய்துக்காட்டு என்று சொன்னால் போதும், அது எப்பேர்பட்ட கடினமான சவாலாக இருந்தாலும் செய்தே காட்டுவான். பள்ளியிலும் ஒரு மாணவக் கூட்டம் இருந்தது. அவர்களுக்கு வேலையே டேர் எனப்படும் தைரியத்தை பரிசோதிக்கும் விளையாட்டுகளை அவர்களுக்குள்ளேயே சொல்லி அதை செய்கிறார்களா என்று பார்ப்பார்கள். விக்ரமுக்கோ இல்லை பீட்டர், தினேஷ், விக்னேஷ், சரவணனுக்கோ அந்த கூட்டத்தோடு எந்த தொடர்பும் கிடையாது. ஆனால், கௌதம் தொடர்பில் இல்லாத கூட்டமே இல்லை. அந்த ‘டேர் பாய்ஸ்’ கூட்டத்திலும் அவனிருந்தான். அவர்கள் சொல்லும் டேர்களையும் தைரியமாக செய்து முடிப்பான். அப்படி தான் அவர்கள் சொன்னார்கள் என பைக்கில் அதிவேகத்தில் பறந்து குறிப்பிட்ட தூரத்தை குறைந்தபட்ச நேரத்தில் கடந்து ஒரு டேரில் வெற்றிப் பெற்றான்.

அப்படி ஒருநாளும் வந்தது. விக்ரம் அன்று பள்ளிக்கு வரவில்லை. அந்த டேர் பாய்ஸ் கூட்டத்துடன் கௌதம் பேசிக் கொண்டிருந்தான். அதில் ஒருவனுக்கு கௌதம் மீது எல்லையற்ற கோபமும், வெறுப்பும் இருந்தது. அவன் ஒருதலையாக நேசிக்கும் பெண் தனக்கு புதிதாக சேர்ந்திருக்கும் கௌதமை தான் பிடித்திருக்கிறது என்று அவனை வெறுப்பேற்றும் பொருட்டு சொல்லியிருக்கிறாள். அதில் கௌதம் மீது வெறுப்புக் கொண்டவன் அவனை எதிலாவது வசமாக சிக்க வைக்க முடிவு செய்து, அன்றைய வீர விளையாட்டை அவனே கௌதமுக்கு சொன்னான். போதாததற்கு சொல்வதற்கு முன்னே இதை உன்னால் நிச்சயம் செய்யமுடியாது என்று தூண்டியும் விட, கௌதமும் செய்துக் காட்டுகிறேன் பாரென்று சவாலும் விட்டான். பாவம் கௌதமிற்கு அவனுடைய திட்டம் தெரியாது. இவனை மாட்டிவிட்டு பள்ளியை விட்டு அனுப்புவதே அவனது திட்டம். அப்படி இல்லையென்றாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அளவிற்காவது கொண்டு போய் விடவேண்டும் என்று எண்ணியிருந்தான்.

“மச்சான் உனக்கு இன்னைக்கு நான் தான் டேர் தரப் போறேன். ஆனா பாவம் உன்னால கண்டிப்பா செய்ய முடியாது” அவன் வம்பிழுக்க

“ஏன் செய்யமுடியாது. நிச்சயமா செய்வேன். நீ முதல்ல சொல்லு நான் செஞ்சிக் காட்டறேனா இல்லயானு பாரு” கௌதமும் தெரியாமல் வலையில் விழுந்தான். அவனும் பலமுறை உன்னால் முடியாது முடியாதென்று உசுப்பேற்ற இவனும் ஒன்று செய்கிறேன் இல்லை இந்த பள்ளியை விட்டே செல்கிறேன் என்று சொல்லிவிட்டான்.

“அப்படியா அப்ப சரி. சொல்றேன் கேட்டுக்கோ. இப்போ டைம் பன்னிரெண்டு இருபது. லஞ்ச் ஹவர் முடிய இன்னும் டென் மினிட்ஸ் இருக்கு. இந்த காரிடர்ல வர முதல் பொண்ணுக்கு நீ ப்ரொபோஸ் பண்ணனும்” கேட்டதும் கௌதம் அதிர்ந்துப் போனான். ஆனால் அதை சிறிதும் முகத்தில் காட்டவில்லை.

அந்த மாணவனும் விவரமாக தான் காயை நகர்த்தி இருந்தான். வேறு சிலவற்றையும் யோசித்து வைத்திருந்தான். அது கௌதமின் மானத்தை வாங்குவது போல இருந்தது. அதற்கு அவனுடன் இருக்கும் வேறு மாணவர்களே ஒற்று கொள்ள மாட்டார்கள். அதுவே காதலை சொல்வதென்றால் ஒன்று இவன் சொல்லி அதை அந்த மாணவி தவறாக புரித்துகொண்டு புகார் கொடுத்தால் குறைந்தபட்சம் இவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள் அதிகபட்சம் இவனை பள்ளியை விட்டு நீக்குவார்கள். ஒருவேளை இவன் செய்யமாட்டேன் என்றால் இவனே பள்ளியை விட்டு சென்றுவிடுவதாக வீரவசனம் வேறு பேசி இருக்கிறான். எது எப்படியோ அந்த மாணவனுக்கு வெற்றி தான்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.
நிலா ஶ்ரீதரின் "என் காதல் பொய்யும் இல்லை" - கருத்து திரி
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 6

அந்த மாணவன் சொன்னதை கேட்ட கௌதம் யார் வரப்போகிறார்கள், என்ன செய்வதென்று ஒரு சில நிமிடம் படபடத்தான். அதைவிட தன் முட்டாள் தனத்தை எண்ணி தன்னை தானே நொந்துக் கொண்டான். தான் இங்கே சிரமப்பட்டு எதற்காக வந்தோம் இப்போது தான் செய்து கொண்டிருக்கும் காரியம் தான் என்ன. அத்தோடு வீட்டில் தெரிந்தால் அதுவும் தந்தைக்கு தான் இப்படி ஒரு பெண்ணிடம் நடந்துக் கொண்டது தெரிந்தால் அவ்வளவே. அவர் கோபத்திற்கு ஆளாக வேண்டியது தான். செல்லமெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அவர் இதையெல்லாம் ஊக்கப்படுத்த மாட்டார். அவருக்கு ஒழுக்கம் மிக முக்கியம்.

பல எண்ணங்களோடு கண்களை மூடி ‘கடவுளே தப்பு தான். விக்கி சொன்னமாதிரி இவனுங்க கூட சேர்ந்திருக்க கூடாது. இன்னைக்கு என்னை காப்பாத்த அவனும் இல்ல. நீ தான் என்னை இந்த பிரச்சனைல இருந்து காப்பாத்தணும்’ மனதிற்குள் எண்ணிக் கொண்டே கண்களை திறந்தான். சாச்சாத் அந்த லஷ்மி தேவியே சந்தியாலஷ்மியாக அவன் எதிரே நடந்து வந்தாள்.

ஒருபுறம் சந்தோசத்தில் பறந்தாலும் மறுபுறம் பயத்தில் மனம் படப்படத்தது. வேறு பெண்ணாக இருந்தால் கூட பரவாயில்லை, சொல்லி சமாளித்து கொள்ளலாம். சந்தியாவிடம் சொல்லி அவள் தவறாக எடுத்து கொண்டு அவளுக்கு தன்மீது தவறான அபிப்ராயம் வந்துவிட்டால் என்ன செய்வதென்று யோசித்தான். என்ன யோசித்து என்ன பயன். புலி வாலை பிடித்தாயிற்று. சந்தியாவும் எதிரில் வந்து கொண்டிருக்கிறாள், இவர்களும் இவன் செய்கிறானா என்று தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அடுத்து ஆக வேண்டியதை பார்த்துத்தானே ஆகவேண்டும். விக்ரம் இல்லாததால் தனியாக நடந்து வந்ததன் பலனை அவளும் இன்று அனுபவிக்க வேண்டியதாயிற்று.

மனம் படப்படத்தது. இருந்தும் கால்கள் நடந்தது. அவள் அருகில் செல்லச் செல்ல அவள் முகத்தை பார்த்தவனுக்கு எதுவும் தவறாக நடக்காதென்று ஓர் உள்ளுணர்வு தோன்றியது. அதே நம்பிக்கையுடன் அவள் முன் நின்றான். எதிரில் நடந்துவரும் சந்தியாவிற்கும் இவன் தன் வகுப்பு மாணவன் கௌதம் என்பது தெரியும். அவ்வளவு மட்டுமே அவனை பற்றி தெரியும். அதற்கு மேல் தெரிந்துக் கொள்ளவும் அவள் விருப்பப் பட்டத்தில்லை. தன்னை மறித்து நின்றவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு அவனை கடந்து செல்ல முயன்றவளை “ஒரு நிமிஷம். ஐ லவ் யு” அவள் கண்களை பார்த்து அழகாக சொன்னான். அதை கேட்டவள் கண்களில் கண்ணீர் நின்றது. அவளது கண்களையே பார்த்து கொண்டிருந்தவன் அவள் கண்ணீரை பார்த்ததும் நொறுங்கிப் போனான். அவள் சுற்றிலும் பார்த்தாள். சற்றுத் தொலைவில் மாணவர்கள் நின்று “சூப்பர்டா, வேற லெவல்” என்று சொல்லி கைத்தட்டிச் சிரித்தனர். நிமிர்ந்து அவனை பார்த்துவிட்டு அவ்விடத்தை விட்டு வேகமாக நடந்துச் சென்றுவிட்டாள்.

திரும்பி சவால் விட்டவனை ஒரு கர்வ பார்வை பார்த்தான். ஆனால், கௌதமால் அதை வெற்றியாக ஏற்க முடியவில்லை. அவன் இதை தோல்வியாகவே கருதினான். சந்தியாவிடம் மட்டுமில்லை யாரிடத்திலும் அவன் அப்படி நடந்துக்கொள்ள விரும்பவில்லை. அப்படி அவன் சூழ்நிலை காரணமாக நடந்திருந்தாலும் அதற்கு எதிர் செயலாக அந்த முதலில் வரும் மாணவி அவனை அடித்திருந்தாலும் வாங்கியிருப்பான். ஆனால் சந்தியா அப்படி எதுவும் செய்யவில்லை. மாறாக அவள் கண்களில் கண்ட நீர் அவனை அசைத்திருந்தது.

அடுத்த நிமிடம் அவள் போன திசையில் ஓடி இடப்புறமும் வலப்புறமும் பார்த்தான். அவள் தூரத்தில் கண்ணை துடைத்துக் கொண்டே முன் நடந்து சென்றுக் கொண்டிருந்தாள். அவள் அழுவது அவனுக்கு தெரியவில்லை என்றாலும் அவனால் உணர முடிந்தது.

சந்தியா அவன் உயரத்திற்கு தோள் அளவே இருப்பாள். இவன் தன் நீள கால்களால் இங்கும் அங்குமாய் அடிகளை வைத்தோடி அவளருகில் சென்றான். அதன் பின் தானாக அவன் கால்கள் வேரூன்றி நின்றது. எப்படி அவளை எதிர்கொள்வது என்று புரியவில்லை. அதே நேரத்தில் அவள் கைகளை கண்ணுக்கு கொண்டுப் போய் கண்ணீரை துடைப்பதை பார்த்தவனுக்கு மனது வலித்தது.

மூச்சை உள்வாங்கி வெளியேவிட்டவன் “சந்தியாலக்ஷ்மி” என்று அவளை முதல்முறையாக அழைத்தான். தன்னை மீறி திரும்பிப் பார்த்தாள் கண்களில் நீரோடு.

அவளது கண்ணீரை பார்த்தவனுக்கு தன் மீதே அத்தனை கோபம் வந்தது. அவனை அவனே வெறுத்த நொடி அது. எவ்வளவு கேவலமாக நடந்துக் கொண்டோம் என்ற எண்ணத்தில் “ப்ளீஸ் தப்பா எடுத்துக்காத. பசங்களுக்குள்ள டேர் நடக்கும். இன்னைக்கு பொசுக்குன்னு கெமிஸ்ட்ரி லாப்ல இருந்து கிளாஸ்க்கு போற காரிடர்ல வர பர்ஸ்ட் பொண்ணுக்கு ப்ரொபோஸ் பண்ணனும் சொல்லிட்டாங்க. பண்ணலனா நான் இந்த ஸ்கூலை விட்டு போகற மாதிரி ஆயிடும். எனக்கு இங்க இருக்கணும். அதனால தான்” அவனுக்கு அங்கே அவளுக்காக இருக்க வேண்டும். சவாலை செய்து முடிக்காவிட்டால் பள்ளியை விட்டுப் போகிறேன் என்று சொல்லிவிட்டான். பிறகு சந்தியாவை எப்படி பார்ப்பான். சந்தியாவை இழக்கக்கூடாது என்பதற்காக சந்தியாவிடமே அப்படி நடந்துக் கொண்டான் என்பது தான் உண்மை. அதை எப்படி அவளிடம் வெளிப்படையாக சொல்வான்.

“ஐ ஆம் சாரி ஃபார் வாட் ஹேட் ஹாப்பென்ட் ஜஸ்ட் பிஃபோர். தப்பு தான், ஆனா ப்ளீஸ் இதை பெருசு பண்ணிடாத. ஐ நோ யு ஆர் விக்ரம்’ஸ் கிளோஸ் ப்ரண்ட். ஐ சா யு வித் ஹிம் செவரல் டைம்ஸ். அவன்கிட்டயும் சொல்லிடாத. என் மேல கோபப்படுவான் அண்ட் ப்ளீஸ் அழாத. எனக்கு என்னால தான்னு கஷ்டமா இருக்கு. வேணும்னா ஒரு அடி அடிச்சிக்கோ” கௌதமா பேசியது அதுவும் தன்னை அடித்து கொள்ளென்று. அவன் சொன்னதில் ஆச்சர்யம் அவளுக்கில்லை அவனுக்கே. அவன் இப்படி பேசுபவனில்லை. அவள் கண்ணீர் அவனை அவ்வாறு பேச வைத்தது. அவளிடத்திலும் ஆச்சர்யத்திற்கு குறைவில்லை என்றாலும் ஒன்றும் பேசவில்லை. அமைதியாக அங்கிருந்து சென்றாள். அவள் பின்னாலே கௌதமும் வகுப்பிற்கு சென்றான்.

அடுத்தநாள் வகுப்பில் அமர்ந்திருந்தான் கௌதம். சந்தியாவும் இருந்தாள். அவள் வகுப்பிலும் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. விக்ரமிடமும் சொல்லவில்லை, ஆசிரியரிடமும் சொல்லி புகாரேதும் கொடுக்கவில்லை. நடந்த விசயத்தை அப்படியே மறைத்து அவளுக்கு தெரியாமலே அவள் அவனை வெற்றிப்பெற செய்திருந்தாள். அவனுக்கு அது பிடித்திருந்தது.

சந்தியா அப்போது தான் எழுந்து தன் தோழியோடு வெளியே சென்றாள். “இருந்தாலும் நீ வேற லெவல். இந்த தைரியமெல்லாம் யாருக்கு வரும். சந்தியாகிட்ட யாரும் தேவையில்லாம பேசமாட்டோம். ஏன்னா அவ விக்கி கூடவே தான் எப்பவும் இருப்பா. அவனும் அவளுக்கு பாடிகார்ட் மாதிரி சுத்துவான். ஐ திங்க் ரெண்டுபேரும் லவ் பண்றாங்க” அதுவரை நிதானமாக கேட்டுக் கொண்டிருந்த கௌதமின் முகம் மாறியது “நீ அந்த பொண்ணுக்கே ப்ரொபோஸ் பண்ணியிருக்க. டேய் ஒழுங்கு மரியாதையா சொல்லு. இதுக்கு தான் நீ ஸ்கூல் மாத்திக்கிட்டு வந்தியா” சரவணன் விடாமல் கௌதமிடம் குறுக்கு விசாரணை செய்துக் கொண்டிருக்க, சந்தியா உள்ளே வந்தமர்ந்தாள். கௌதம் இன்று அவளை நிமிர்ந்துக்கூட பார்க்கவில்லை. நேற்றிலிருந்து அவனால் அவளை எதிர்கொள்ளவே முடியவில்லை.

“டேய் அன்னைக்கே சொன்னேன்ல. படிக்கத்தான்டா”

“பார்த்தா அப்படி தெரியலையே” அவன் கௌதமை ஏற இறங்க பார்த்து கேட்க

“நான் பார்க்கறதுலாமா உனக்கு தெரியுது” கௌதம் நக்கலாக கேட்டாலும் உள்ளுக்குள் அவன் அவளை பார்ப்பது மற்றவர்களுக்கு தெரிகிறதா என்ற பயமும் இருந்தது.

அந்நேரத்தில் ஒரு கை ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தது. ஆத்திரத்தில் கைகளை ஓங்கிக் கொண்டு எழுந்தவனுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் அது விக்ரமின் கை. விக்ரம் தான் நேற்று நடந்ததைப் பற்றி அறிந்து, அவனை அறைந்திருந்தான். சொல்லப்போனால் கௌதமிடம் அவன் நினைத்தது நடக்காததால் அந்த மாணவன் தான் கௌதமை பற்றி விக்ரமிடம் சொல்லியிருக்கிறான். அதை கேட்டதும் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விக்ரம் அடிப்பது நண்பனை என்றுக் கூட யோசிக்காமல் அறைந்தான். விக்ரம் வருகிறான் என்று அவனை பார்த்துக் கொண்டிருந்த சந்தியா, அவன் நேராக கௌதமிடம் சென்று அவனை அறைந்ததை பார்த்ததும் அவளும் அதிர்ந்து தான் போனாள்.

விக்ரமை பார்த்தவன் கையை கீழே இறக்கியது தான் தாமதம். ஒரு கையால் அவன் சட்டையை பிடித்த விக்ரம் “உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா சந்தியாக்கு ப்ரொபோஸ் பண்ணிருப்ப” மற்றுமொரு கையால் அடுத்த அறையை கொடுத்தான். கௌதமிற்கு சுதாரிக்க சிலநொடிகள் தேவைப்பட்டது.

“விக்கி நான் சொல்றத கேளுடா. அது ஒரு..” என்று சொல்ல வந்தவனை சொல்லவிடாமல் அடுத்த அறையை விட

அருகில் இருந்த சரவணன் கோபத்தில் விக்ரமை பிடித்து ஒரு தள்ளு தள்ளி “டேய் என்னடா பண்ற. இப்படி போட்டு அடிக்கற. உனக்கு என்ன பைத்தியமா” கௌதமிற்கு பரிந்தும் பேசினான்.

“எனக்கில்லடா, இவனுக்கு தான். நேத்து சந்தியாகிட்ட ப்ரொபோஸ் பண்ணிருக்கான்” சொல்லிக் கொண்டே கௌதமின் பக்கம் திரும்பியவன் “சொல்லுடா, இதுக்கு தான் ஸ்கூல் மாத்திக்கிட்டு வந்தியா. படிக்கணும் ஸ்டெடிஸ்ல கான்சென்ரேட் பண்ணனும்னு சொன்னதுலாம் பொய்யா. ச்சீ எவ்ளோ பெரிய வேலைய பார்த்திருக்க. அதுவும் நான் இல்லாதப்போ” விக்ரம் பேச அமைதியாக நின்ற கௌதமை சரவணன் ஆச்சர்யமாகப் பார்த்தான். சந்தியாவிற்கு அதைவிட ஆச்சர்யம். ஏன் இவன் தன்னை காத்துக் கொள்ள முயலாமல் அடி வாங்கிக்கொண்டு அமைதியாக நிற்கிறான் என்ற ஆச்சர்யமே அது.

விக்ரம் விடாது அவனது சட்டையை பற்றி கேள்வி கேட்டிருக்க அந்த குரல் அவனை சுக்கு நூறாக உடைத்தது “முதல்ல அவன் சட்டைல இருந்து கைய எடு விக்ரம்” சந்தியா தான் கௌதமுக்கு ஆதரவாக விக்ரமிடம் சொன்னாள். அவளது வார்த்தையில் அவனது பிடி தளர்ந்தது.

அவள் பக்கம் திரும்பி “என்ன சொன்ன. இவன் நேத்து உங்கிட்ட மிஸ்பிகேவ் பண்ணிருக்கான். நீயும் அதை எங்கிட்ட இருந்து மறைச்சிட்டல” என்று அவளிடமும் கேள்விக் கேட்டான்.

“நீ முதல்ல இங்க இருந்து போ விக்ரம். எதுவா இருந்தாலும் நாம வீட்டுல போய் பேசிக்கலாம், ப்ளீஸ்” அவனுக்கு பொறுமையாக புரியவைக்க பார்த்தாள்.

“நான் எதுக்கு இங்க இருந்து போகணும். எனக்கு வர ஆத்திரத்துக்கு இவனை இங்கயே அடிச்சி கொல்லனும் போல இருக்கு” என்று மீண்டும் அவனை அறைய கை ஓங்க

“போதும் நிறுத்து விக்ரம். என்ன இங்க வந்து பிரச்சனை பண்றீயா. இது எங்க கிளாஸ். இவன் என் கிளாஸ்மேட். எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். நீ எதுக்கு குறுக்க வர. முதல்ல எங்க கிளாஸ் ரூமை விட்டு வெளிய போ. லஞ்ச் பிரேக் முடியற டைம் ஆச்சு” சந்தியா சொல்ல, கௌதம், விக்ரம் இருவரும் அவளை அதிர்ந்து பார்த்தனர். அவள் அவ்வளவு தீர்க்கமான பார்வையோடு அழுத்தமான குரலில் சொன்னாள்.

“என்ன, உங்களுக்குள்ள ஆயிரம் இருக்குமா” விக்ரம் ஆதங்கமாய் கேட்டான். அவன் முகமே சொல்லியது அவன் இதை எதிர்பார்க்கவில்லை என்றும் அவளது வார்த்தைகள் அவனுக்கு எவ்வளவு வலிக்க செய்ததென்றும்.

அதை சந்தியாவும் கௌதமும் உணர தான் செய்தார்கள். ஆனால் சந்தியாவிற்கு வேறுவழி தெரியவில்லை. இன்னும் சில நிமிடங்களில் உணவு நேரம் முடியப் போகிறது. அப்போது உள்ளே வரும் ஆசிரியர், விக்ரம் கௌதமை அடிப்பதை பார்த்தால் பிரச்சனை விக்ரமிற்கு தான். அதனால் அவனை கிளப்பும் பொருட்டே அவ்வாறு பேசினாள்.

“ஆமா ஆயிரம் இருக்கும். நீ முதல்ல வெளிய போ” கையை வாசலுக்கு காட்டினாள். அந்த நொடி கௌதமின் மனதிற்குள் பட்டாம்பூச்சிக்கள் பறந்தது. அடுத்த நொடி இப்படிப்பட்டவளிடம் தான் நடந்துக் கொண்ட விதத்தை எண்ணி வெட்கி தலைக் குனிந்தான். விக்ரம் மனதிலோ புயலே அடித்தது. இதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காமல் அவ்விடத்திலிருந்து கிளம்பினான். கௌதம் அப்படியே நிற்க, சந்தியா தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டாள். விக்ரம், சந்தியா இருவரும் ஒன்றாக சுற்றுவதை பார்த்து ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் என்று எண்ணியவர்களும் இன்று அதிர்ந்து தான் போயினர்.

சந்தியா அவனை எதிர்த்துப் பேசிய அதிர்ச்சியில் வாசலை தாண்டியவனுக்கு கால்கள் இடறியது. இதுவே முதல்முறை அவள் அவனை விட்டுக் கொடுத்து பேசுவது. அதுவும் கௌதமிற்காக. இது அவனுக்கு தெரிந்தது. ஆனால், அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இனிவரும் ஓவ்வொரு காலங்களிலும் சந்தியா கௌதமிற்கு ஆதரவாக அவன் பக்கமே நிற்கப் போகிறாள் என்று. அது விக்ரமின் வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை அவர்கள் மூவருமே அறியாதது.

அன்று முழுவதுமே கௌதம் யாரிடமும் பேசவில்லை. சந்தியாவின் முகத்தை நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை. ஏற்கனவே அவன் நேற்றிலிருந்து அவளை எதிர்கொள்ள முடியாமல் இருந்தான். இன்று நிலைமை இன்னும் மோசமாக மாறியிருந்தது. விக்ரம் அடித்ததை பற்றி அவனுக்கு கோபம் இல்லை. அது, அவன் செய்த தவறிற்கு நண்பன் கொடுத்தத் தண்டனை என்றே நினைத்தான். அதனால் தான் அவன் அத்தனை அடி அடித்தும் இவன் அசையாமல் நின்றான். ஒரே நாளில் அனைத்தையும் இழந்தது போன்ற ஒரு உணர்வு கௌதமிற்கு. அவன் உயிர்த்தோழன் அவனை தவறாக எண்ணி அடித்து விட்டு சென்று விட்டான். அவன், யார் மனதில் நல்ல அபிப்ராயத்தை உண்டுச் செய்ய எண்ணினானோ அவள் முன்பு குற்றவாளியாக நின்றான். அந்த குற்றவாளியை காப்பாற்ற அவள் நண்பனிடமே வாதாடி அவளும் நட்பை இழக்கும் நிலை.

இவையனைத்திற்கும் ஒட்டுமொத்த காரணமான அந்த மாணவனை உண்டுயில்லை என்று ஆக்கிவிடும் கோபமும் அவனுக்கு வந்தது. கௌதமிற்கு தெரியாத ஒன்று, அவன் தான் விக்ரமிடமும் அவனைப் பற்றி போட்டு தந்ததென்று. அதுவும் அவன் விக்ரமிடம் சவாலை பற்றி மொத்தமாக மறைத்து தான் அந்த பக்கம் சென்றபோது கௌதம் சந்தியாவிடம் காதலை சொல்லிக் கொண்டிருந்தான் என்றே சொன்னான். சந்தியா பதிலேதும் சொல்லாமல் நகர்ந்துவிட்டாள் என்றும் சொன்னான். இதுதான் விக்ரமின் வெறியாட்டத்திற்கு காரணம்.

இவன் ஒருபக்கம் புரியாமல் இருக்க, சந்தியா இன்னொரு பக்கம் நொறுங்கிப் போயிருந்தாள். விக்ரமை அவள் இவ்வாறு பேசியதே இல்லை. அவனை எப்படி சமாதானம் செய்வதென்று புரியாமல் அமர்ந்திருந்தாள். இந்த விசயத்தை விக்ரமிடம் சொன்னவனை மனதாரத் திட்டினாள். அதைவிட அதிகமாக கௌதம் மீது கோபம் வந்தது. என்ன யோசித்து என்ன பயன், அனைத்தும் நடந்துவிட்டதே. இனி இதை எப்படி சரி செய்யவேண்டும் என்பதை பற்றி மட்டும் தான் யோசிக்க வேண்டுமென்று தனக்கு தானே சொல்லியும் கொண்டாள்.

விக்ரமும் அவன் வகுப்பறையில் அதே மனநிலையில் தான் இருந்தான். கௌதம் மீது அவனது கோபம் சிறிதும் குறையவில்லை. விட்டிருந்தால், அவன் முகத்தை உடைத்திருப்பான். அந்தளவு கோபமும் ஆத்திரமும் அவன் கண்களில் தெரிந்தது. அத்தோடு சந்தியா எடுத்தெறிந்து பேசியது அப்போது வருத்தத்தை தந்திருந்தாலும் இப்போது கௌதமோடு சேர்த்து சந்தியா மீதும் விக்ரமுக்கு கோபமே வந்தது. இவள் எப்படி அவனுக்காக தன்னை தூக்கியெறிந்து பேசலாம், அந்தளவிற்கு அவன் இவளுக்கு ஒரே நாளில் முக்கியமானவன் ஆகிவிட்டானா? இப்படி பல எண்ணங்கள் அவனது கோபத்தை குறைக்க செய்யவில்லை, பலமடங்கு ஏற்றியே விட்டது.

இப்படியே மூவரும் கோபம், ஆத்திரம், வருத்தம், வேதனையென அனைத்து உணர்வுகளையும் மனதில் அடக்கிக் கொண்டு வகுப்பில் அமர்ந்திருந்தனர். அவர்களது வேதனைக்கு விடிவு தரும் வகையில் வீட்டிற்கு செல்லும் பள்ளி மணி அடித்தது.

எப்போதும் சந்தியாவை விக்ரம் தான் தன்னுடைய யமஹா எஃப்.சி1 பைக்கில் பள்ளிக்கு கூட்டி வருவான், திரும்ப அழைத்தும் செல்வான். இன்று நடந்த களேபரத்தில் சந்தியா விக்ரம் தன்னை அழைத்துக் செல்வானா என்ற சந்தேகத்தில் பள்ளி வாசலில் நின்றிருந்தாள். ஆனால், விக்ரம் மனதில் ஆயிரம் கோபதாபங்கள் இருந்தாலும் அவன் அவளை அழைத்துச் செல்லவே எண்ணினான். தினமும் சந்தியாவை விக்ரம் அவனது பைக்கில் அழைத்துச் செல்வதை கௌதமும் பார்த்திருக்கிறான். இன்று ஒருவேளை கோபத்தில் அவளை விட்டுச் சென்று விடுவானோ? அப்படி விட்டு சென்றுவிட்டால் அவள் வீடு தான் அவனுக்கு தெரியுமே, வெகுதூரம் இல்லையென்றாலும் நடந்து செல்லும் தூரத்திலும் இல்லை, அவள் எப்படி வீட்டிற்கு தனியாக செல்வாள் என்று யோசித்தான். இவையனைத்தும் தன் செயலால் நிகழ்ந்தவையாயிற்றே என்ற எண்ணம் மேலோங்கி இருக்க அவனால் வீட்டிற்கு புறப்பட முடியவில்லை. சற்று தள்ளி தன்னுடைய பைக்கில் அமர்ந்தபடியே என்ன நடக்க போகிறது என்று பதற்றமாக பார்த்திருந்தான்.

சந்தியாவின் அருகில் வந்து ஒன்றும் பேசாமல் பைக்கை நிறுத்திய விக்ரம், அவள் ஏறப்போகும் நேரத்தில் எதிரில் இருந்த கௌதமை பார்த்துவிட, கோபத்தில் வண்டியை முறுக்கிவிட்டு கிளம்பினான்.

“டேய்ய்ய்ய்ய்ய்” தன்னை கடந்து போனவனை கௌதம் தன் கை நீட்டி தடுக்க, அவன் மின்னல் வேகத்தில் அவனை கடந்திருந்தான். ‘சரியான பைத்தியக்காரன். என்ன சொல்ல வரோம்னே கேக்காம அவளை இப்படி அம்போனு விட்டுட்டுப் போறான். அவ இப்ப எப்படி வீட்டுக்கு போவா’ என்று அவன் பதைக்க

விக்ரமின் செயலை பார்த்தவளுக்கு கண்ணீர் தாரை தாரையாக வழிந்து வந்தது. அதை பார்க்க பொறுக்காமல் தன் வண்டியை கொண்டுப் போய் அவளுக்கு அருகில் நிறுத்தி

“ப்ளீஸ் ஏறு” அவள் முகத்தை கூட பார்க்காமல் அந்த வார்த்தைகளை கூறினான். அவளிடமிருந்து எந்த பதிலும் வராததை கவனித்தவன் நிமிர்ந்து அவளை பார்த்தான். நேற்றைக்கு பிறகு ‘எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். நீ எதுக்கு குறுக்க வரன்னு’ மதியம் அவள் விக்ரமிடம் சொன்னபோது அவளை பார்த்தான். அதன்பிறகு மறுபடியும் அவளை அவன் பார்க்கவே இல்லை. அதோடு இப்போது தான் பார்க்கிறான்.

“அவன் எதோ என்னை அடிச்சிட்டு போறான். நீ எதுக்கு குறுக்க வந்த. இப்ப பாரு உன் மேலயும் கோவமா இருக்கான். சரி ப்ளீஸ் ஏறு நான் உன்னை வீட்ல ட்ராப் பண்ணிடுறேன்” என்றவனை பொருட்படுத்தாதவளாய் முன்னோக்கி நடந்தாள். கௌதமிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு அவளோடு நடந்தான்.

தெருமுனைக்கு வந்தபோது ஒரு ஆட்டோ எதிரில் வந்தது. கைபோட்டு நிறுத்தியவன் “என் கூட வரவேண்டாம். அட்லீஸ்ட், ஆட்டோல போலாம்ல. ப்ளீஸ் ஆட்டோல ஏறு” என்று சொல்லிக் கொண்டே ஆட்டோ ஓட்டுனரிடம் எங்கே இறக்க வேண்டும் என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தாள். அவள் பக்கம் திரும்பாமல் “தெரியும் நீ விக்ரம் வீட்டுக்கு பக்கத்து வீட்ல தான் இருக்கனு. ஒருநாள் அவன் வீட்டுக்கு வந்தப்போ பார்த்திருக்கேன்” என்று பொய் சொன்னான். உண்மையில் அவளை பின்தொடர்ந்து அவள் வீடுவரை வந்தபோது தான் பக்கத்தில் விக்ரம் வீடு இருப்பதையே பார்த்தான். அதுவும் அவள் அந்த வீட்டினுள் நுழைந்தபொழுதே நண்பனின் வீட்டை கண்டான். இதையெல்லாம் இப்போது அவளிடம் சொல்லி என்னவாக போகிறது. இருவருக்கும் இடையில் நாளை விதி என்ன வைத்திருக்கிறது என்றே தெரியவில்லையே. அப்படி ஒரு சூழலில் தானே இருவரும் இன்று இருக்கிறார்கள்.

சந்தியாவும் தெம்பிழந்து இருந்ததால் மறுப்பேதும் சொல்லாமல் ஆட்டோவில் ஏறினாள். அவள் ஏறியதும் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி “அண்ணா ஒரு நிமிஷம், நான் பைக்கை எடுத்துட்டு வந்திடுறேன். நீங்க முன்னாடி போங்க நான் பைக்ல பின்னாடியே வரேன்” அவளை தனியாக அனுப்ப அவனுக்கு மனமில்லை. புயல் வேகத்தில் ஓடி தன்னுடைய டுகாட்டியை எடுத்து வந்து ஆட்டோவை மெதுவாக பின் தொடர்ந்தான். சந்தியாவும் வீடு வந்து சேர்ந்தாள். அவள் வீடிருக்கும் தெருவை நெருங்கிய போதே “பணம் நான் தருகிறேன் நீ உள்ளே செல்” என்று சொன்னான். அவளும் தயங்கியப் படியே வீட்டுவாசலில் இறங்கி உள்ளே செல்ல, ஓட்டுநரை தெரு இறுதிவரை அழைத்துச் சென்று அதன்பின்னே ஆட்டோவை கட் செய்து பணத்தைக் கொடுத்துவிட்டு தன் வீட்டிற்கு சென்றான்.

வீட்டிற்கு வந்த சந்தியா உடைமாற்றி தயாராகி விக்ரமை பார்க்க அவன் வீட்டிற்கு வந்தாள். அவன் பள்ளி சீருடையை கூட மாற்றாமல் படுக்கையில் விழுந்து கிடந்தான். ஒவ்வொரு இடமாக அவனை தேடிக் கொண்டே அவன் அறைக்குள் நுழைந்தாள்.

“என்ன விக்ரம் நான் உனக்கு அவ்ளோ வேண்டாதவ ஆகிட்டேன்ல. அப்படி விட்டுட்டு போற” அவள் பேசியதற்கு எந்த பதிலும் இல்லை.

“சாரி விக்ரம். இன்னைக்கு நான் அப்படி பேசியிருக்க கூடாது. அதுக்காக நீ செஞ்சதும் கரெக்ட் கிடையாது. என்ன உனக்கு அப்படி ஒரு கோபம். அவனை அந்த அடி அடிக்கற” அவள் பேச, மறுபடியும் அவனுக்கு வக்காலத்து வாங்குகிறாளே என்ற கோபம் தான் விக்ரமுக்கு வந்தது.

“முதல்ல எழுந்திரு. யூனிபார்ம்மை மாத்து. வீட்டுக்கு வந்ததும் யூனிபார்ம் மாத்தனும்னு உங்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன்” சொல்லிக் கொண்டே அவனது அறையில் அங்குமிங்கும் இருந்த பொருட்களை எடுத்து அந்தந்த இடத்தில் வைத்துவிட்டு சமையலறைக்கு சென்றவள் மீண்டும் விக்ரம் அறைக்கு வந்தபோது அவள் கையில் பூஸ்ட் இருந்தது.

“ம்ச். நான் உன்னை டிரஸ் தான மாத்த சொன்னேன். சரி அப்புறம் மாத்திக்கோ. இந்தா இந்த பூஸ்ட்டை குடி, மத்ததை அப்புறம் பேசிக்கலாம்” ஒரு நாள் இரண்டு நாள் பழக்கமா பலவருடங்களாக அதுதானே நடந்து கொண்டிருக்கிறது.

விக்ரமின் தாயும் தந்தையும் பெயர் போன வழக்கறிஞர்கள். வீட்டில் இருப்பதே அதிசயம். தந்தை ரவிபிரகாஷ் மிகப்பெரிய கிரிமினல் லாயர். மாதத்தில் பாதி நாட்கள் வீட்டிலேயே இருக்கமாட்டார். வழக்கு விசயமாக ஊர் ஊராக சுற்றுவார். ரவிபிரகாஷ் அசோஸியேட்ஸ் இவருடைய நிறுவனம். இவர் தான் வாதாட வேண்டும் என்று பலர் பெட்டி பெட்டியாக பணத்தை வைத்துக் கொண்டு வாசலில் காத்திருப்பர். இவர் வழக்கை கையிலெடுத்தால் அது தோற்க வாய்ப்பே இல்லை. அந்தளவிற்கு சட்டத்தில் இருக்கும் அனைத்து சந்து பொந்துகளையும் அறிந்து கை தேர்ந்தவர். அன்னை வரலட்சுமிக்கு உள்ளூர் வழக்குகளை பார்க்கவே சரியாக இருக்கும். தம்பி விஷாந்தை சிறுவயதிலேயே பார்த்துக் கொள்ள ஆளில்லாமல் போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டனர். முழு ஆண்டு தேர்வு விடுமுறையில் தான் இரண்டு மகன்களும் வீட்டில் இருப்பார்கள் என்பதால், அந்த ஒரு மாதம் வரலட்சுமி மகன்களுடனே செலவிடுவார். மற்றநேரங்களில் பள்ளிமுடிந்து வீட்டிற்கு வந்தால் வெறும் வீட்டை தான் விக்ரம் பார்ப்பான்.

அதனால் எப்போதும் அவனுக்கு சந்தியா தான் பூஸ்ட் கலந்து தருவாள். அதன்பின் ஏதாவது சாப்பிடவும் செய்துக் கொடுப்பாள். அதை இருவரும் ஒன்றாக சாப்பிட்டு முடித்து, வீட்டுப்பாடம் செய்வது, படிப்பது, விளையாடுவது என அனைத்தும் இங்கே தான்.

இன்றும் அவ்வளவு பிரச்சனையிலும் அவன் பசியோடு இருப்பான் என்பதை நன்கு அறிந்தவள் அங்கு வந்தாள். அவள் கையிலிருந்து இன்னும் அந்த கோப்பையை வாங்காமல் முறைத்துக் கொண்டிருந்தான் விக்ரம்.

“நீ எங்கிட்ட சண்டைபோடு விக்ரம். நான் ரெடியா இருக்கேன். இல்ல கௌதமை அறைஞ்ச மாதிரி, என்னையும் நாலு அறை அறையணுமா, அறைஞ்சிக்கோ. ஆனா பூஸ்ட்டை குடிச்சிட்டு செய்” அவளும் கோபமாகவே சொன்னாள்.

இதுவரை வாய் மூடி அமைதியாக இருந்தவன் “என்ன உனக்கு என்மேல திடீர் அக்கறை. நீ தான் அக்கறைப்பட வேற ஆள் வந்துட்டான் போலயே” சிரித்துக் கொண்டு நக்கலாக சொன்னான்.

“இந்த மாதிரி பேசின, எனக்கு செம கோவம் வரும் விக்ரம். எனக்கும் கேக்க வேண்டியது நிறைய இருக்கு. நீ பசியோட இருக்கக் கூடாதுனு தான் சைலண்டா இருக்கேன்”

“கேக்க வந்துட்டு ஏன் கேக்காம இருக்க, கேளு”

“இன்னைக்கு ஏன் என்னை விட்டுட்டு வந்த. நான் உனக்காக தான வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” அவன் அவளை விட்டுச் சென்றது அவளுக்கு மனதாறவில்லை.

“ஓ.. நீ எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தீயா. அதான் அவன் தான் உனக்காக பைக்ல வெயிட் பண்ணிட்டு இருந்தானே, அப்புறம் என்ன உனக்கு. அவன் கூட தான வந்த” என்றதும், அவள் எப்படி வந்தாள் என்பது அவளுக்கு நினைவு வர

“வேண்டாம். இப்ப அதப்பத்தி பேச நான் வரல” பேச்சை மாற்றும் பொருட்டு சொன்னாள்.

“ஓ.. சரி சரி.. அது உங்க பர்சனல் விஷயம். உங்களுக்குள்ள ஆயிரம் இருக்குமே. எங்கிட்ட அதப்பத்தி பேச விருப்பப்பட மாட்ட. சரி வேற எதப்பத்தி பேசணும்” விக்ரம் அலட்சியமாக கேட்டான். அவனின் அந்த அலட்சியம் அவளுக்கு கோபத்தை வரவழைக்கவில்லை, மாறாக கண்ணீரை வரவழைத்தது. இருந்தும் பேசினாள்.

“நீ இன்னைக்கு கிளாஸ்ல நடந்துக்கிட்ட விதம் ரொம்ப தப்பு விக்ரம். அவனை நீ அடிச்சிருக்க கூடாது. அவன் எதையும் வேணும்னு பண்ணல”

“ஓ.. அவ்ளோ தொலைவு வந்துட்டீங்களா”

“எவ்ளோ தொலைவு. நீ அவனை அந்த அடி அடிச்சியே, அவன் திரும்ப ஒரு அடி அடிச்சானா. இல்லயே. அப்படியே அமைதியா தான நின்னான்”

“அவன் என்ன அடிக்க தெரியாமயா நின்னான். அவனை பார்த்த தான, என்னை விட ஹயிட், என்னை விட நல்ல பிட். அப்படியிருந்தும் ஏன் சைலண்டா எல்லாம் அடியையும் வாங்கினான் தெரியுமா. உனக்காக. அப்ப தான உன் முன்னாடி ஹீரோ ஆக முடியும். அடி வாங்கறவன் தான ஹீரோ. அதான் அவன் ஹீரோ ஆக என்னை வில்லனாக்கிட்டான். இப்போ நானும் உனக்கு வில்லனா தெரியறேன்” இப்படி பேசும் விக்ரமை இன்று தான் முதல் முறையாக சந்தியா பார்க்கிறாள். அவன் மட்டும் என்ன, தன்னிடத்தில் இன்னொருவனுக்காக சண்டையிடும் சந்தியாவை இப்போது தான் முதல் முறை பார்க்கிறான். அவன் மறந்தது ஒன்றே ஒன்றை தான். அந்த ஒருவன் எவனோ தெருவில் போகிறவன் அல்ல. அவனும் இவனது நண்பனே. அது இவனது புத்திக்கு எட்டியிருந்தால் கௌதமை அந்த வெளு வெளுத்திருக்க மாட்டானே.

“அப்படி என்னடி ஒரே நாளுல உனக்கு அவன் மேல அப்படி ஒரு லவ். அப்படி என்னத்த தான் பேசினான். எனக்கு தெரியும் அவன் இந்த ஸ்கூலுக்கு வர வாய்ப்பே இல்ல. எத்தனையோ தடவை நானே கூப்பிட்டிருக்கேன். அப்போ எல்லாம் வராதவன், இப்ப ஏன் வரணும். இத்தனைக்கும் அவன் இங்க வீட்டுக்கு வந்தப்போ கூட உன்னை அவன் பார்க்கலை. நீயும் அவனை பார்க்கலை. ஜஸ்ட் நீ இங்க தான் இருக்கனு மட்டும் தான் அவனுக்கு தெரியும். அதையும் நான் தான் சொன்னேன். அப்படியிருந்தும் என்ன லவ்வுப்பா உங்க ரெண்டுபேருக்குள்ள” விக்ரம் சொல்லவும், கௌதம் ஆட்டோ ஏற்றிவிட்ட போது அவளது வீடு அவனுக்கு தெரியும் என்று சொன்னது அவள் நினைவிற்கு வந்தது. அவன் மீது அவளுக்கு இருந்த சிலபல சந்தேகங்களும், தவறான எண்ணங்களும் விலகியது. பின் திடமாக அவனுக்கு பரிந்து பேசினாள்.

“நீ என்னையும் அவனையும் பத்தி ரொம்ப ரொம்ப தப்பா பேசுற விக்ரம்” அவளுக்கும் கோபம் வர தொடங்கியது.

“ஓ.. என்ன சந்தியா. உனக்கும் அவனை பிடிச்சிருந்துச்சா. அதான் அவன் ப்ரொபோஸ் பண்ணதும் என்னை கூட தூக்கிப் போட்டுட்டியா. உங்களுக்குள்ள தான் ஆயிரம் இருக்குமே. அதை போய் பார்க்க வேண்டியது தான. எதுக்கு இங்க வந்து டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க” தெனாவட்டு, திமிரு எல்லாம் கலந்து வந்தது அவனது வார்த்தைகள். அதிலும் அவனது உதட்டில் ஒட்டியிருந்த கேலிப் புன்னகை அவன் முகத்தில் தெரிந்த அலட்சியம் அவளுக்கு எரிச்சலை தந்தது.

“ஏன்டா இப்படி பேசுற. முதல்ல உனக்கு யார் சொன்னா அவன் எனக்கு ப்ரொபோஸ் பண்ணான்னு”

“ஏன் அதை தெரிஞ்சிக்கிட்டு போய் உன் ஆளுகிட்ட சொல்லனுமா. அவன் அவனை வெளு வெளுன்னு வெளுப்பானா. அவ்ளோ காதல்ல அவன் மேல. அப்படி என்ன சந்தியா பண்ணான். இப்படி உன்னை டோட்டலா மாத்தி வச்சிருக்கான். ஒருவேளை நீ சொல்லித்தான் அவன் இந்த ஸ்கூல்லயே சேர்ந்தானா”

“டேய்.. யாருடா.. யாரு என் ஆளு. அவனும் உனக்கு ப்ரண்ட் தான. இப்படி உன்னோட ரெண்டு ப்ரண்ட்ஸ்ஸ பத்தி அசிங்கமா பேசறியே, உனக்கே இது அசிங்கமா இல்லயா விக்ரம்”

“லவ்வை சொன்ன அவனுக்கு இல்லாத அசிங்கம், அதை அக்ஸ்செப்ட் பண்ணிக்கிட்ட உனக்கில்லாத அசிங்கம் எனக்கு எதுக்கு வரப்போகுது” கௌதமை கையால் அடித்தான், சந்தியாவை வார்த்தையால் அடித்துக் கொண்டிருக்கிறான்.

“நீ பார்த்தியா சந்தியா, ஒரு இடத்துலயாவது அவனை விட்டுத் தந்தியானு. ஸ்கூல்லயா இருக்கட்டும் இப்ப இங்கயா இருக்கட்டும், நீ அவனுக்காக அப்படி ஆர்கியூ பண்ற. எனக்கு பீவர் வந்து நான் நேத்து வராதப்போ, உனக்கு லவ் பீவர் வந்து அவன் பக்கம் மொத்தமா சாஞ்சிட்டியா. அவன் டேலென்டட்னு தெரியும் ஆனா இவ்ளோ டேலென்டட்னு தெரியாம போச்சு. இப்போ உன்னை பார்க்கறப்போ தெரியுது அவனால என்னென்ன முடியும்னு. இதோ என்னோட சந்துவ ஒரே நாள்ல டாப் டூ பாட்டம் மாத்தி வச்சிருக்கான். அவ்ளோவா சந்தியா அவனை பிடிச்சிடுச்சு. அவன் மேல அவ்ளோ உருகிட்டியா” அவன் சொல்ல சொல்ல அவளுக்கு உடபெல்லாம் கூசியது.

“போதும் விக்ரம். இதுக்கு மேல ஒரு வார்த்தை தப்பா வந்துச்சு மரியாதை இருக்காது” அவள் கை நீட்டி சீற, இதுவரை பேசியவன் இப்போது வாயை மூடி கொண்டான்.

“நேத்து என்ன நடந்துச்சுனு தெரியுமா உனக்கு. நான் எவ்ளோ டிஸ்டர்ப் ஆனேன்னு தெரியுமாடா. ஆனா ஒண்ணு மட்டும் உண்மை விக்ரம். அவன் ப்ரொபோஸ் பண்ண மாதிரி நடிச்சப்போ, அங்க ஒரு பத்து பசங்க இருந்தாங்க. மத்தவங்களுக்கு அவன் என்ன சொன்னான்னு கூட கேட்டிருக்காது. அந்த விஷயம் அதோட போகட்டும்னு பெருசு பண்ணாம விட்டுட்டேன். ஆனா நீ என்ன பண்ண, அவனை கிளாஸ் புகுந்து அடிச்சி ஊருக்கே சொல்லிட்ட. மொத்த கிளாஸ் முன்னாடியும் அவனை அடிச்சியே, அவனால எப்படி விக்ரம் வெளில தலைகாட்ட முடியும். இல்ல நாளைக்கு நான் தான் எந்த முகத்தை வச்சிட்டு ஸ்கூலுக்கு போவேன். அவன் என்னை அசிங்கப்படுத்தல விக்ரம். நீ தான் என்னை அசிங்கப்படுத்திட்ட”

“என்ன சொன்ன. நான் அவன்மேல உருகிட்டேனா. உனக்கு ஒண்ணு தெரியுமா. உன் ப்ரண்ட் ஒரு ட்ராப்ல மாட்டிகிட்டான். அதுல இருந்து தப்பிக்கணும்னா அந்த காரிடர்ல வர பர்ஸ்ட் பொண்ணுகிட்ட ப்ரொபோஸ் பண்ணனும்னு டேர் தந்திருக்காங்க. என் கெட்ட நேரம் நான் அந்த பக்கம் போயிட்டேன். என் எதிர்க்க வந்தவன் சட்டுனு ‘ஒரு நிமிஷம் ஐ லவ் யூ’னு சொல்லிட்டான். நான் அதை கொஞ்சமும் எதிர்பார்க்கல. அவன் சொன்னப்போ எனக்கு அழுகை தான் வந்துச்சி. அழுதுகிட்டே அங்க இருந்து கிளம்பிட்டேன். அவன் உன் ப்ரண்ட் தான, இதை உங்கிட்ட சொல்லி அவனை என்னனு கேக்க வைக்கனும்னு நினைச்சேன். ஆனா, அதுக்கு முன்னாடியே அவன் என்ன தேடி வந்தான். எதனால அப்படி நடந்துக்கிட்டான்னும் சொன்னான். அப்படி பண்ணலைனா ஸ்கூலை விட்டு போற நிலைமை ஆகிடும்னு சொன்னான். அதுக்கு மேல அவனை மாட்டி விடற எண்ணம் இல்ல. ஏன் தெரியுமா அவன் கண்ணுல உண்மை தெரிஞ்சிச்சு”

“அவன் உங்கிட்ட சொல்ல வேணாம், நீ கோவப்படுவனு பயந்தான். அதுக்காக எல்லாம் உங்கிட்ட சொல்லாம இருந்திருக்க மாட்டேன். கண்டிப்பா சொல்லிருப்பேன். அதோட உன் ப்ரண்ட் எதோ ஒரு பிரச்சனைல மாட்டிருக்கான், அது என்னனு பாருனும் சொல்லிருப்பேன். ஆனா, அதுக்கு தான் நீ வாய்ப்பே தரலையே. நீ என்னைப் பத்தி என்ன நினைச்ச, யாராவது வந்து ப்ரொபோஸ் பண்ணா நானும் பல்லை இளிச்சிட்டு போய்டுவேன்னு நினைச்சியா. நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல விக்ரம். இதோ ஸ்கூல் திறந்து ஒன் மன்த் மேல ஆகுது. நானும் அவனும் ஒரு வார்த்தை பேசிக்கிட்டது இல்ல. அவன் உன் ப்ரண்ட்ங்கறது கூட, நீ சொல்லித் தான் எனக்கு தெரியும். அவனா எங்கிட்ட சொல்லலை. ஆனா, நான் என்னமோ உருகிட்டேன்னு சொல்ற. அவன் அப்படி என்ன பண்ணனான்னு கேக்கற. என்ன விக்ரம் இதெல்லாம். நீயா இப்படியெல்லாம் பேசுறது”

“இன்னைக்கு ஸ்கூல்ல உன்னை சத்தம் போட்டேன். அதுதான எல்லா பிரச்சனைக்கும் காரணம். அது நான் அவனுக்காக பண்ணேன்னு நினைச்சியா. இல்ல. கிளாஸ்ல நீ சண்டைப் போடுறத ஸ்டாஃப் யாருனா பார்த்துட்டா. நீ அவனை அடிக்கறத பார்த்து உனக்கு எதாவது பிரச்சனை ஆகிட போகுதுனு தான் உன்னை அங்க இருந்து கிளம்பச் சொன்னேன். அதை பொறுமையா சொன்னா உனக்கு புரியல. அதான் ஹார்ஷா சொல்ல வேண்டியதா போய்டுச்சு. அதே மாதிரி நேத்து அவன் பண்ணத நான் பெருசுப்படுத்தாம போனதுக்கு இன்னொரு ரீசன் அவன் உன் ப்ரண்ட்ங்கறதுனால தான். மொத்தத்துல என் ப்ரண்டுக்காகவும், உன் ப்ரண்டுக்காகவும் தான் எல்லாத்தையும் பொறுத்துப் போனேன். இதுல கௌதமுக்கும் எனக்கும் நடுவுல என்ன உறவு விக்ரம். ஒண்ணுமே இல்ல” கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள்.

“என் கண்ணுக்கு தெரிஞ்சதெல்லாம் நீ, உன்னோட ப்ரண்ட்ஷிப் மட்டும் தான் விக்ரம். எப்போ நீ இவ்ளோ பேசிட்டியோ, இனி நான் இங்க வரமாட்டேன்” என்றதும் அவன் அதிர்ந்துப் பார்க்க “ஆமா இங்க வரமாட்டேன் உன் கூட பேசமாட்டேன், பைக்ல ஏறமாட்டேன், எதுவும் செய்யமாட்டேன். உடனே அவன்கிட்ட பேசறதுக்காக தான் உங்கிட்ட நிறுத்திட்டேன்னு உன் மூளைய தப்பா யோசிக்க விடாத. இதுவரைக்கும் நானும் அவனும் பேசிக்கிட்டது இல்ல. இனி நான் அவன் கூட எப்பவும் பேசமாட்டேன் விக்ரம். போதுமா” என்றுவிட்டு அங்கிருந்து விடுவிடுவென நடந்து சென்றவளை வேடிக்கை மட்டுமே விக்ரமால் பார்க்க முடிந்தது. சந்தியா எந்த தவறும் செய்யவில்லை என்று அவனுக்கு புரிந்துவிட்டது. இது என்ன நட்பு, புரிய வைத்தால் தான் புரியுமா என்று சந்தியா கேட்காமல் கேட்டுவிட்டு சென்ற பிறகும் அவன் எப்படி அவளை அணுகுவான். அப்படியே நின்றான்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் -7


அடுத்தநாள் காலை, தன் பைக்குடன் சந்தியாவை அழைத்து செல்லக் காத்திருந்தான் விக்ரம். அவள் அவனை கடந்து பேருந்து நிலையத்திற்கு சென்று நின்றுக் கொண்டாள். அங்கேயும் வந்து அழைத்தான், அவள் திரும்பி கூட பார்க்கவில்லை. வந்த பேருந்தில் ஏறி கொண்டாள். விக்ரமும் பேருந்தின் பின்னாலே வந்தான். பின் அவள் நடந்த சென்ற வழியெங்கும் அவளை பின் தொடர்ந்தே வந்தான். இவ்வாறு இருவரும் பள்ளியை வந்தடைந்தனர்.



கௌதம், வாகன நிறுத்துமிடத்தில் காத்திருந்தான். முதலில் சந்தியா அவனை கடந்துச் சென்றாள். அவன் நிற்பது தெரிந்தும், அவனை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவளுக்கு பின்னால் விக்ரம் போனான். அவன் மட்டும் இவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றான்.



பிற்காலத்தில் சந்தியாவின் வாழ்வில் விக்ரமும் கௌதமும் மிகசிறந்த நண்பர்களாகவும் பாதுகாவலர்களாகவும் இருக்க போகின்றனர். இந்த நிமிடமோ, அவளுக்கு அதிக வலியை கொடுத்தது அவர்கள் இருவரே. இரண்டு நாட்களாக அவர்களது செயல்களால் அதிகம் பாதிக்கப்பட்டது அவளே. இன்றோ அவர்கள் இருவரையும் பதம் பார்க்கும் முடிவோடு தான் அவளது ஒவ்வொரு செயலும் இருந்தது. முதலில் விக்ரமின் பைக்கில் ஏறவில்லை, அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை, அடுத்து கௌதமிடம் வந்தாள்.



மதிய உணவு நேரத்தில் வகுப்பில் அங்கும் இங்குமாகவே ஆட்கள் இருந்தனர். கௌதம் எழுந்து எங்கோ செல்லப் போனான். அவன் செல்வதை பார்த்தவள் “ஒரு நிமிஷம்” என்று அவனை நிறுத்தினாள்.



அவள் குரலிற்கு அவன் திரும்ப, சட்டென்று தன் ஸ்கர்ட் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் ஒன்றும் புரியாமல் என்ன என்பது போல் அவளை பார்க்க



“நேத்து ஆட்டோக்கு குடுத்தது” என்றாள்.



“இதெல்லாம் எதுக்கு சந்தியா. வேண்டாம்” அவளிடம் பேசக்கூடாது என்று தான் முடிவு செய்திருந்தான். அவள் பணம் கொடுத்த அதிர்ச்சியில் தானாக கேட்டுவிட்டான்.



“ம்ச்ச். வாங்கிக்கோ. நேத்து நான் நடுத்தெருவுல நின்னேன். நீ ஹெல்ப் பண்ண. அப்பவே எங்கிட்ட காசு இருந்திருந்தா உன்னை கொடுக்க விட்டிருக்க மாட்டேன். அதான் வீட்ல கேட்டு வாங்கிட்டு வந்தேன். கைய நீட்டு. இந்தா வாங்கிக்கோ”



“வேண்டாம் சந்தியா. இப்படி பணம் தந்து கஷ்டப்படுத்தாத. நான் தான கொடுத்தேன். அதை ஏன் பெருசு பண்ற” நான் செய்த தவறுக்கு தானே கொடுத்தேன் என்று சொல்லவந்தவன் அப்படி சொல்லிவிட அவளுக்கு கோபம் தலைக்கு ஏறியது.



“என்ன நான் தான கொடுத்தேன். எனக்கு கொடுக்க நீ யாரு. எனக்காக யாரும் பணம் தர்றத நான் விருப்பப்படல” என்று எரிந்து விழுந்தாள். அவள் அவ்வாறு யாரிடத்திலும் பேசுபவள் இல்லை. கௌதமிடம் பேசினாள். இது அவன் செய்த செயலினால் ஏற்பட்ட கோபமா, இல்லை நேற்று அவனையும் அவளையும் சேர்த்து வைத்து சாய்ந்துவிட்டாயா உருகிவிட்டாயா என்று விக்ரம் பேசிய வார்த்தைகள் அவளை பெரிதும் பாதித்திருந்ததால் வந்த கோபமா என்று தெரியவில்லை. மொத்தத்தில் அவனிடம் கோபத்தை காட்டினாள்.



அவன் அப்போதும் வாங்கி கொள்ளாமல் நிற்க, அவனுக்கு அருகிலிருந்த நாற்காலியின் ரைட்டிங் பேடின் மீது வைத்துவிட்டு அவள் இடத்தில் போய் அமர்ந்து கொண்டாள். ஆட்டோவிற்கு கொடுத்த எண்பது ரூபாயையே திருப்பிக் கொடுத்துவிட்டாள். அவளுக்கு மட்டும் அவளது புடவைக்கு இருபத்திரெண்டாயிரம் அவன் தான் கொடுத்திருக்கிறான் என்று தெரியவந்தால் என்ன முடிவு எடுப்பாளோ என்று எண்ணியவனுக்கு நெஞ்சம் பதறியது. அது என்றுமே அவளுக்கு தெரியக்கூடாதென்று முடிவுச் செய்தான். அத்தோடு அவளையும் அழைத்தான்.



“ஒரு நிமிஷம்” இப்போது அவன் குரலிற்கு அவள் எழ “ரொம்ப தேங்க்ஸ். நேத்து எனக்காக சப்போர்ட் பண்ணி பேசினதுக்கு. நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணல. விக்ரம் உன் ப்ரண்ட். எனக்காக நீ அவன்கிட்ட சண்டைப் போட்டது எனக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு. நான் அவன்கிட்ட பேசி எப்படியாவது உங்கிட்ட பழையமாதிரி பேச வைக்கறேன்” சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டவன் திரும்பினான்.



“ஒரு நிமிஷம்” இப்போது அவள் சொல்ல அவன் திரும்ப “விக்ரம்கிட்ட நீ எதுக்கு எனக்காக பேசணும். நீ யார் எனக்கு இதெல்லாம் செய்ய. சொல்லப்போனா எல்லா பிரச்சனைக்கும் காரணமே நீ தான். நீ எங்கிட்ட ஐ லவ் யுனு சொன்னத கூட நான் மன்னிச்சிடுவேன். ஏன்னா அது உண்மை இல்ல. வெறும் விளையாட்டு. ஆனா, அந்த விளையாட்ட ஒரு பொண்ணுகிட்ட விளையாடனும் நினைச்சத என்னால மன்னிக்கவே முடியாது”



“உனக்கு என்ன வயசு ஆகுது” அவள் கேட்டதில், அவன் அவளை விழித்து பார்க்க “சொல்லு பொண்ணுங்ககிட்ட தான் கேட்கக் கூடாது. பசங்ககிட்ட கேக்கலாம்” திடமாக கேட்டாள்.



“பதி.. பதினாறு” அவன் தான் எதற்கு கேட்கிறாள் என்று புரியாமல் தடுமாறி போனான்.



“பதினாறு வயசானா பெரிய டீனேஜர், என்னவேனா செய்யலாம்ங்கற நினைப்பா. இது என்ன டேர். ஒரு பொண்ணுகிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணி அவ மனசை உடைக்கறதுக்கு பேரு டேரா. இது டேர் கிடையாது. ஒண்ணு தப்புனு படறப்போ அதை செய்யமாட்டேன்னு சொல்றது தான் உண்மையான டேர். அப்பா அம்மா படிக்க தான ஸ்கூல்ல சேர்த்துவிட்டாங்க. அதை தவிர எப்படி மத்தது எல்லாம் பண்ண சொல்லுது. இந்த வயசுல படிப்புல கான்சென்ரேட் பண்ணி, படிச்சி நல்ல காலேஜ்ல சேரு. அதை டேரா எடுத்துக்கோ. அதவிட்டுட்டு ப்ரொபோஸ் பண்ணனும், பையனும் பொண்ணும் ஒண்ணா கைய பிடிச்சிக்கிட்டு ஒரு ரவுண்டு வரணும், பக்கத்து பக்கத்துல உட்கார்ந்துக்கிட்டு லவ் டயலாக் பேசணும்.. இதெல்லாம் என்ன டேர்” இதுவரை அவளை எதிர்கொள்ள முடியாமல் தலைக் குனித்தவன் அவள் என்னென்ன நடக்கிறது என்று சொன்ன நொடி அவளை சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தான்.



“என்ன பார்க்கற. இதெல்லாம் இங்க நடக்குதுன்னு தெரியாதுனு நினைச்சியா. எனக்கு எல்லாம் தெரியும். வாழ்க்கைல நம்மளால எல்லாத்தையும் பண்ணிட முடியாது. சிலதை செய்ய முடியாம கூட போகலாம். அதுக்கு காரணம் அந்த விஷயம் முறையில்லாததா இருக்கலாம், இல்ல நம்மளயோ நம்மள சுத்தி இருக்கவங்களயோ காயப்படுத்துறதா இருக்கலாம். அப்படிபட்ட ஒரு விஷயத்தை செய்யக்கூடாது. அதவிட்டுட்டு யார் என்ன கஷ்டப்பட்டாலும் சரி, நான் அதை செஞ்சி ஜெயிப்பேன்னு நினைக்கறது தப்பான மனநிலை. சிலநேரங்கள்ல வெற்றியோட அருமைய தோத்து தான் தெரிஞ்சிக்கணும். இதை புரிஞ்சிக்கிட்டா இப்படி அடுத்தவங்கள ஹர்ட் பண்ற முட்டாள் தனமான காரியத்தை எல்லாம் பண்ணமாட்டாங்க” இந்த ஒரு மாதத்தில் வகுப்பிலிருந்த பலர் அவள் வாயை திறக்கமாட்டாள் திறந்தாலும் அதிகம் பேசமாட்டாள் என்று சொல்லித்தான் கேள்வியுற்றிருக்கிறான். இன்றோ இவ்வளவு பேசுபவளை மலைத்துப் பார்த்தான்.



“அது என்ன, எனக்கும் விக்ரமுக்கும் இருக்க ப்ராப்ளம் சால்வ் பண்ணி என்னை அவன் கூட பழைய மாதிரி பேச வைக்க போறியா? நேத்து அவனுக்கு சொன்னது தான் உனக்கும். எனக்கும் அவனுக்கும் நடுவுல ஆயிரம் இருக்கும். நீ ஏன் குறுக்க வர. நான் அவன்கிட்ட சத்தம் போட்டது உனக்காக மட்டும் இல்ல. நீ அந்த பசங்ககிட்ட மாட்டிக்கிட்டது உண்மையாவே இருக்கட்டும் அது நீயா தேடிக்கிட்டது. அதுக்கு யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது. நான் உன்னை மன்னிச்சது, அந்த மூணு வார்த்தைய நீ உண்மையா சொல்லிருக்க மாட்டங்கற நம்பிக்கைல தான். மத்தபடி நான் நேத்து அவன்கிட்ட சத்தம் போட்டது அவனுக்காக. அவன் அப்படி உன் சட்டைய பிடிச்சிக்கிட்டு நிக்கறத ஸ்டாஃப் பார்த்துட்டாங்கன்னா அவனுக்கு எவ்ளோ பெரிய ப்ராப்ளம் ஆகும்”



“நேத்து அவன் எங்கிட்ட பேசாம இருந்தது உண்மை தான். இன்னைக்கு நான் தான் அவன் மேல கோவமா இருக்கேன். அது எங்க பிரச்சனை, நாங்க பார்த்துக்கிறோம். நீ தலையிட வேண்டாம்” அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவனது அங்கத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் சென்று வலிக்கச் செய்தது. அவள் அத்தோடு விடவில்லை. இன்னும் வலிக்கும் வார்த்தைகளை சொன்னாள்.



“இது தான் நான் உங்கிட்ட பேசறது கடைசியா இருக்கும். இனி எப்பவும் நான் உன் கூட பேசமாட்டேன் கௌதம்” என்று அவள் சொன்ன நொடி அவன் நொறுங்கிவிட்டான். அவனது தேவதையின் வாயால் அப்படி ஒரு வார்த்தையை கேட்கவா வீட்டில் அடம்பிடித்து பள்ளி மாறி வந்தான். அத்தோடும் அவள் விடவில்லை. அவனை இன்னும் அதிகமாக துடிக்க செய்யும் பொருட்டு



“நீயும் நானும் இதுவரைக்கும் பேசிக்கிட்டதே இல்ல. அப்படி இருக்கப்பவே என் லைஃப்ல உன்னால இவ்ளோ பிரச்சனை வந்திடுச்சு. இன்னும் நீயும் நானும் பேசிக்கிட்டோம்னா என்னென்ன நடக்கும்னு நினைச்சாலே பயமா இருக்கு. இனி எப்பவும் எங்கிட்ட பேச முயற்சி பண்ணாத கௌதம்” சொல்லிவிட்டு போய் அமர்ந்துக் கொண்டாள்.



அவள் தந்த வலியோடு தன் இடத்தில் வந்து அமர்ந்தவன் காலையில் நடந்ததை நினைவுக் கூற தொடங்கினான்.



விக்ரமிடம் நடந்ததைச் சொல்லி சமாதானம் செய்ய தான், காலை வண்டிகள் நிறுத்துமிடத்தில் காத்திருந்தான் கௌதம். அந்நேரத்தில் முதலில் சந்தியா அவனை பார்க்காமல் கடந்துச் சென்றாள். விக்ரமோ பார்த்தும் எதுவும் பேசாமல் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றான். அதை பார்த்தவனும் தன் வண்டியை நிறுத்திவிட்டு அவன் பின்னால் ஓடினான்.



“விக்கி நில்லுடா. இன்னும் என்மேல கோவம் குறையலையா. ப்ளீஸ்டா நான் சொல்றத கேளு. நான் எதையும் வேணும்னு செய்யல” அவனை பொருட்படுத்தாமல் விக்ரம் நடந்தான்.



“ப்ளீஸ் விக்கி, நான் என்ன சொல்றேன்னு கேளு. அப்புறம் இன்னும் நாலு அடிக்கூட அடிச்சிக்கோ” பேசியவனை விக்ரம் திரும்ப கூட பார்க்கவில்லை.



அவனை மறித்து அவன் முன்னின்று அவனது தோளை பிடித்து நிறுத்தினான்.



“இப்ப என்ன, என்மேல கோவத்துல இருக்கியா, சரி இரு. நான் தான தப்பு பண்ணேன். வெயிட் பண்றேன். உன் கோவம் குறையற வரைக்கும் வெயிட் பண்றேன். ஆனா, அவளை ஏன்டா இப்படி நடத்துற” அவனுக்கு என்ன தெரியும் இன்று விக்ரம் அல்ல சந்தியா தான் விக்ரம் மீது கோபமாக இருக்கிறாள் என்று.



“பாவம் அவ. நேத்தும் விட்டுட்டு போயிட்ட. இன்னைக்கு காலைல பார்த்தா, அவ தனியா நடந்து வர்றா, நீ தனியா பைக்ல வர. இதுல அவ மேல எந்த தப்பும் இல்லடா. நேத்து உன்னை அவ அப்படி பேசினது கூட உன் மேல இருக்குற அக்கறையா இருக்கலாம்ல. ப்ளீஸ், அவகிட்ட பேசுடா” கௌதம் பேச அவனை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தவன் தன் தோளை குலுக்கி அவன் கையை உதறிவிட்டு நடந்தான்.



அதில் மனமுடைந்துப் போனான் கௌதம். விக்ரம் அவனுக்கு சிறுவயதில் இருந்தே நண்பன். ஒரே பள்ளியில் படிக்கவில்லை என்றாலும் அவர்களுக்குள் அழகான நட்பு இருந்தது. தன் பிற நண்பர்களை விட கௌதமுக்கு விக்ரம் அவ்வளவு முக்கியமானவன். நண்பன் கோபத்தில் இருக்கிறான், இரண்டு மூன்று நாட்களில் சரி ஆகிவிடுவான் என்றிருந்தான். நேற்று அவன் அடித்தப்போது கூட வாங்கிக் கொண்டான். இன்றோ அந்த நண்பன் தன்னை உதறித் தள்ளிவிட்டு சென்றதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.



அந்த நொடி அவனுக்கு விக்ரமின் நட்பே மேலோங்கி தெரிந்தது. மற்றது அனைத்தும் பின்னுக்கு சென்றது. சந்தியாவும் கூட. எந்த சூழ்நிலையிலும் அவனுக்கு விக்ரம் முக்கியம். அவன் நட்பு முக்கியம். அதை இழக்க அவன் தயாராக இல்லை. அதுமட்டுமா விக்ரம், சந்தியா நட்பை சரி செய்தாக வேண்டிய பொறுப்பும், அவனுடையதாயிற்றே.



“டேய் நில்லுடா. இப்போ நான் அவகிட்ட ப்ரொபோஸ் பண்ணதும், அவ எனக்காக உங்கிட்ட சண்டை போட்டதும் தான உன் ஒட்டுமொத்த கோபத்துக்கும் காரணம். இனி நான் எப்பவும் அவகிட்ட பேசமாட்டேன்டா. எனக்கு அவ முக்கியம் இல்ல, நீ தான் முக்கியம். நீயும் உன் ப்ரண்ட்ஷிப்பும் மட்டும் தான் முக்கியம். இப்படி என்னை அவாய்டு பண்ணாதடா எனக்கு கஷ்டமா இருக்கு” அவள் சொன்ன அதே வார்த்தைகளை அவனும் சொல்லிவிட்டான். அப்போதும் விக்ரம் எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்.



நிஜத்திற்கு வந்தவனுக்கு மனதே சரியில்லை. அவனும் அவளோடு பேசப் போவதில்லை என்று சொல்லித்தான் இருக்கிறான். ஆனால், அதையே அவள் வாயால் கேட்ட போது மரித்துப் போனான். தன் வாழ்வில் சாதித்தே பழகியவனுக்கு இது தான் முதல் சறுக்கல். அதுவும் அது பொருள் இழப்பல்ல, மறுபடியும் வாங்கிக் கொள்ள. காலத்திற்கும் வலியை தரும் உறவுகளில், உணர்வுகளில் இழப்பு. எப்படியோ ஆரம்பித்து எப்படியோ முடிந்துவிட்டது.



விக்ரமிற்காக ஒருவர் இன்னொருவரிடம் பேசிக் கொள்ளவே தயாராக இல்லாத போது எப்படி சேர்ந்தார்கள், எப்படி பிரிந்தார்கள். அதை அவர்களுக்கும் தான் முழுதாக அறிவார்களா. தெரிந்திருந்தால் நிகழ்காலத்தில் ஏன் நிம்மதியை இழந்து தூக்கத்தை துறந்து தவிக்கிறார்கள்.



ஒருவாரத்திற்கும் மேல் ஓடியது. சில நேரங்களில் இந்த பள்ளியை விட்டே சென்றுவிடலாம் என்ற எண்ணமெல்லாம் கௌதமுக்கு தோன்றி மறையும். வீட்டில் என்ன சொல்லி பள்ளியை விட்டு நிற்பான். ஏற்கனவே பல நாடகங்களை அரங்கேற்றி தானே இந்த பள்ளியில் சேர்ந்தான். இப்போது மறுபடியும் பழைய பள்ளியிலேயே சேர்ந்துவிடுகிறேன் என்பானா? இல்லை வேறு பள்ளியில் சேர்த்துவிட சொல்வானா? அப்படி கேட்டால் இம்முறை செல்வராஜே படிப்பை நிறுத்திவிட்டு வந்து கடையை கவனி என்று சொல்லிவிடுவார். எதற்கும் ஒரு அளவு உள்ளதே. அதனால் அங்கேயே இருந்தான். சந்தியா முகம் காணாது, அவளிடம் பேசாது அவள் பின் அமர்ந்திருந்தான்.



விக்ரம் மனமிறங்கி வருவான், பேசுவான் என்று தினமும் எதிர்பார்த்து அதிலும் ஏமாற்றமே. சந்தியாவும் விக்ரமும் பேசிக் கொள்வதும், ஒன்றாக பள்ளிக்கு வருவதும் போவதுமே இல்லை என்பதையும் கவனித்தான்.



அன்றும் தன்னுடைய வண்டியை நிறுத்திவிட்டு திரும்பியபோது விக்ரம் தனியாக வந்திருந்தான். அவன் பேசாமல் அவனிடம் என்ன பேசுவது. ஒரு சங்கடம் கலந்த சிரிப்பை மட்டும் தந்துவிட்டு அங்கிருந்து நகர்த்தவனை



“கௌதி நில்லு” என்ற விக்ரமின் குரல் நிறுத்தியது. கௌதமுக்கு இப்போதிருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நண்பன் தன் பெயர் சொல்லி அழைத்துவிட்டான். அப்படியென்றால் சரியாகிவிட்டான். வேறென்ன வேண்டும் அவனுக்கு.



“விக்..கி.. உனக்கு என் மேல கோவம் போயிடுச்சா டா. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உன்னை எப்படி சரி பண்றதுனே புரியலை. ஸ்கூலை விட்டுட்டு நின்னுடலாம்னு கூட யோசிச்சிட்டேன்” அவனை மேலே பேசவிடாமல் இவன் தன் மனதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.



“டேய் பைத்தியகாரா. அந்தமாதிரி எதுவும் பண்ணி வைக்காத” கௌதம் சொன்னதை கேட்டு முறைத்துக் கொண்டே சொன்னான் விக்ரம்.



“சாரிடா. இனி நான் எப்பவும் அப்படி நடந்துக்க மாட்டேன். அன்னைக்கு சொன்ன மாதிரி நான் அவகிட்ட பேசறதே இல்லடா. இப்ப என்மேல எந்த கோவமும் இல்லயே” மறுபடியும் உறுதி செய்துக் கொள்ள கௌதம் கேட்க



“முதல் நாள் உன்னை அடிச்சப்போ தான் அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணிட்டியேனு கோவம் இருந்துச்சு. அன்னைக்கு ஈவ்னிங் சந்தியாகிட்ட பேசினப்பவே கோவம் போய்டுச்சு. உங்க ரெண்டுபேர் மேலயும் எந்த தப்பும் இல்லனு புரிஞ்சிடுச்சிடா. ஆனா உன்மேல வேற ஒண்ணுக்கு செம கோபம். அதான் அன்னைக்கு நீ அத்தனை சாரி கேட்டும் பேசல”



“வேற ஒண்ணுக்கா. அது என்னதுடா” புரியாமல் புருவத்தை சுருக்கிக் கேட்டான்.



“எத்தனை தடவை அந்த பசங்ககூட பிரண்ட்ஷிப் வேண்டாம், இந்தமாதிரி எதாவது பிரச்சனை வரும்னு சொல்லிருக்கேன். கேட்டீயா. இப்ப பாரு, எவ்ளோ பெரிய பிரச்சனையெல்லாம் வந்திடுச்சி. சந்தியா, நீ ட்ராப்ல மாட்டிட்டு தான் இப்படி பண்ணிட்டனு சொன்னப்போ எனக்கு உன்மேல அவ்ளோ கோபம். நான் சொன்னத கேக்காம எப்படி போய் மாட்டியிருக்கங்கற ஆத்திரம். அதான் உங்கிட்ட பேசல” விக்ரம் சொன்னான்.



“அவ தெரியாம சொல்லிருக்காடா. ட்ராப்பெல்லாம் ஒண்ணுமில்ல. எப்பவும் பண்ற டேர் கேம் தான். என்ன, இந்த தடவை புதுசா அரவிந்த் டேர் தந்தான். அவன் டேர் சொல்றதுக்கு முன்னாடியே நான் தான் இன்னைக்கு டேர் கொடுக்கப் போறேன். ஆனா, உன்னால கண்டிப்பா பண்ணமுடியாதுனு சொன்னான். நான் வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாம நீ சொல்றத செய்யறேன் இல்ல ஸ்கூலை விட்டு போயிடுறேன்னு வீரவசனம் பேசிட்டேன். அதான் மொத்த பிரச்சனைக்கும் காரணம். மத்தபடி ட்ராப்பெல்லாம் ஒண்ணுமில்லடா. நான் சொன்னத அவ தப்பா புரிஞ்சிக்கிட்டா போல” நடந்த அனைத்தையும் முதல் முறையாக நண்பனிடம் சொன்னான்.



“அரவிந்த்னா யாரு கௌதி. லெவன் – ‘சி’ல இருப்பானே அவனா. மீடியம் ஹயிட், கொஞ்சம் ஸ்டௌவுட்டா ஸ்பெக்ஸ் போட்டிருப்பானே அவன் தான” சந்தேகத்துடன் விக்ரம் கேட்க



“ஆமான்டா அவனே தான். நம்ப தினேஷ் கிளாஸ் பையன். ஏன்டா” கௌதம் புரியாதவனாய் பதிலளித்தான்.



“அப்ப சந்தியா எதேர்ச்சையா சொன்னாலும் அதான் உண்மை. நீ அவனோட ட்ராப்ல தான் மாட்டியிருக்க”



“என்னடா சொல்ற”



“ஆமா உங்கிட்ட டேர் கொடுத்தவனும் அவன் தான். எங்கிட்ட வந்து கௌதம் சந்தியாக்கு ப்ரொபோஸ் பண்ணத நான் பார்த்தேன்னு சொன்னதும் அவன் தான். சந்தியாவும் அதை கேட்டுட்டு எதுவும் சொல்லாம அழுதிட்டே போயிட்டானு வேற சொன்னான். அதை கேட்டு தான் நீ அவகிட்ட மிஸ்பிகேவ் பண்ணிருக்க, அதை பார்த்து அவ பயந்துப் போயிட்டானு நினைச்சி உன்னை அடிச்சிட்டேன். நீ சந்தியாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டனு அவனுக்கு தெரியாம பிளே பண்ணிருக்கான். ஐ ஆம் சாரி டா” விக்ரம் சொன்னது கௌதமின் கோபத்தை கிளறியிருந்தது.



“டேய் நீ என்னை அடிக்கறதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. ப்ரண்ட்ஸ்குள்ள இதுக்குலாமா சாரி கேப்பாங்க. இப்ப எனக்கு அரவிந்த ஒருவழி பண்ணனும்னு தோணுது. அவனால எவ்ளோ ப்ராப்ளம்ஸ்ஸ ஃபேஸ் பண்ணிட்டேன். சரி என்னை விடு. நீ.. சந்தியா.. எனக்கு வர கோவத்துக்கு அவனை..” கடுமையாக சொல்லிவிட்டு கிளம்பியவனின் கண்களில் அப்படி ஒரு ஆவேசத்தை பார்த்த விக்ரம்



“நில்லு கௌதி. அவன் எப்படினு தெரிஞ்சிடுச்சுல. இனி அந்த கேங் கூட சேராம தள்ளி இரு. அது போதும். இப்படி மேல மேல பிரச்சனை வேண்டாம். முதல்ல எல்லாரையும் பிரண்ட்ஸ்னு நம்பறத நிறுத்து. எங்கிட்ட பேசறியா, அதோட பீட்டர், தினேஷ் அவ்ளோ தான். உன் கிளாஸ் சரவணனை பார்த்தியா, நான் உன்னை அடிச்சதும், அவன் என்னை எப்படி பிடிச்சி தள்ளிவிட்டான். நல்ல பையன்டா அவன். அப்புறம் பி.விக்கி, செல்வம், ஹரிஷ் இவங்கள தவிர மத்தவங்ககிட்ட பார்த்து பழகு” அவனை தடுத்து குழந்தைக்கு சொல்வது போல் நண்பனுக்கு யாரிடமெல்லாம் பழக்கவேண்டும் என்று பாடம் எடுத்தான். அதை கேட்டு கௌதமும் சிறுப்பிள்ளை போல் தலையை ஆட்டினான்.



“சரி, இனி சரியா நடத்துக்கறேன்டா. சந்தியா கூட எல்லாம் சரி ஆகிடிச்சா” தன்னால் தான் அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டது என்ற குற்றவுணர்ச்சி அவனை அக்கேள்வியை கேட்க வைத்தது.



“நான் எங்க கோவமா இருக்கேன். சந்தியா தான் என் மேல கோவமா இருக்கா” என்றான். இது கௌதமுக்கு முன்னமே தெரியும். அதை காட்டிக் கொண்டால் அவளிடம் அவன் பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டு பேசியதாக நண்பன் நினைத்துவிட்டால், அதனால் புது தகவலாகவே கேட்டுக் கொண்டவன் “சந்தியாவா” என்று கேட்டான்.



“சந்தியாவே தான். அவ இன்னும் எங்கிட்ட பேசல. ஒருவாரமா எங்க வீட்டுக்கும் வராம தான் இருந்தா. இப்ப ரெண்டுநாளா பழையமாதிரி பூஸ்ட்டும் ஈவ்னிங் ஸ்னாக்ஸும் வருது. என்ன முன்னயெல்லாம் சிரிச்சிட்டு செஞ்சி தருவா. இப்ப முறைச்சிட்டே கார சாரமா செஞ்சி தர்றா. சரியாகிடுவா தான் நினைக்கறேன். என்மேல தான் தப்பு. நான் தான் ரொம்ப தப்பா பேசிட்டேன்” என்றவனை, அப்படி என்ன பேசினாய் என்று கௌதம் கேள்வியாய் பார்க்க



“உனக்கும் அவனை பிடிச்சியிருந்துச்சா அதான் அவன் ப்ரொபோஸ் பண்ணதும் என்னை கூட தூக்கிப் போட்டுட்டியா. அவன் பக்கம் சாஞ்சிட்டியா. அவன் மேல அவ்ளோ உருகிட்டியானு என்னென்னமோ ஃபூல் மாதிரி பேசிட்டேன்டா” என்று வேதனைபட்டான்.



நண்பன் குறிப்பிட்ட அந்த ‘அவன்’ அவனாயிற்றே. விக்ரம் பேசிய வார்த்தைகள் ஆண்மகனான அவனுக்கே அருவருப்பை தந்தபோது அவளுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்தவனுக்கு எரிச்சலாக இருந்தது.



“ஏன்டா” அதே எரிச்சலை விக்ரமிடமும் காட்டினான்.



“ஐ ஆம் சாரிடா. நான் உங்க ரெண்டுபேரையும் அப்படி பேசியிருக்க கூடாது”



“டேய் விக்கி, நமக்குள்ள ஒண்ணுமில்லடா. நீ எங்கிட்ட சாரி கேக்க வேண்டிய எந்த அவசியமும் இல்ல. ஆனா சந்தியாகிட்ட நீ யோசிச்சு பேசியிருக்கணும். சரி இப்ப எதையும் மாத்தமுடியாது. சீக்கிரம் அவ கூட சரியாகிடுடா. என்னால தான்னு தோணிக்கிட்டே இருக்கு” என்றான். அதற்கு மேல் அவன் வேறெதுவும் எதிர்பார்க்கவும் இல்லை.



கௌதமும் விக்ரமும் ஒன்றாயினர். ஒன்றாகவே வகுப்பறை வரையும் வந்தனர். கௌதம், சந்தியாவின் வகுப்பை தாண்டியே விக்ரம் தனது வகுப்பிற்கு செல்லவேண்டும். இவர்கள் இருவரும் ஒன்றாக வந்து விக்ரமிடம் விடைப்பெற்று கௌதம் வகுப்பிற்குள் நுழைவதை ஜன்னல் வழியாக பார்த்திருந்தாள் சந்தியா. ஏனோ அவள் மனதிலும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.



ஆனால், அந்த மகிழ்ச்சி வெகுநாட்கள் நிலைக்கவில்லை. அடுத்த நாளிலிருந்து கௌதம் பள்ளிக்கு வரவில்லை. ஒருநாள் பார்த்தாள், இரண்டுநாள் பார்த்தாள், மூன்றாவது நாளும் அவன் வரவில்லை. அடுத்து சனி ஞாயிறு விடுமுறை வேறு வந்துவிட்டது. திங்கட்கிழமை வருவான் என்று எதிர்பார்த்தே பள்ளிக்கு வந்தாள். அன்றும் வரவில்லை. ஒருவேளை பள்ளியை விட்டு சென்றுவிட்டானா?



இந்த இடைப்பட்ட காலத்தில் விக்ரமும் அவளிடம் பேசி சரியாகி இருந்தான். இப்போது கௌதம் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்பதே அவளுக்கிருந்த ஒரே குழப்பம். அன்று வீட்டிற்கு சென்றவுடன் கை, கால், முகம் கழுவி தயாராகி விக்ரம் வீட்டிற்கு வந்தாள். வழக்கம் போல் பள்ளி சீருடையில் இருந்தவனை கடிந்து உடைமாற்ற அனுப்பி வைத்தவள் அவன் தயாராகி வந்ததும் பூஸ்ட்டும் மாலைநேர சிற்றுண்டியும் கொடுத்துவிட்டு கட்டிலில் அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.



அவனும் மடிக்கணினியை நோண்டி கொண்டே பூஸ்ட்டை குடித்துக் கொண்டிருந்தான்.



“விக்ரம்ம்” அவள் அவனிடம் எதையோ கேட்கும் தோரனையில் மென்குரலில் அழைத்தாள். அவனோ அவளை திரும்பிக் கூட பார்க்காமல் மடிக்கணினியில் எதையோ பார்த்துக் கொண்டே ‘ஹ்ம்ம்’ என்றான். அதில் கோபமடைத்தவள் அவன் மடியில் இருந்த மடிக்கணினியை எடுத்து தூரம் வைத்தாள்.



“இப்ப எதுக்குடி லேப்டாப்பை பிடுங்கி தூரம் போட்ட”



“நான் பேசிக்கிட்டு இருக்கேன் தான. உனக்கு என்னைவிட இந்த லேப்டாப்ல, இதோ இதை பார்க்கறது முக்கியமா போச்சுல” கோபமாக சொன்னாள். அவள் இவ்வளவு கோபப்படும் அளவிற்கு என்ன நடந்ததென்று தான் அவனுக்கு புரியவில்லை.



“அது அடுத்து என்ன பைக் வாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தேன். சரி சொல்லு, என்ன பேசனும்” கேட்டுவிட்டு அவளையே பார்த்திருந்தான். இப்போது அவளுக்கு தான் கேள்வியை கேட்க நேரம் எடுத்தது. அவனும் அவள் முகத்தையே பார்த்திருந்தான். அவளுக்கும் என்னவென்று தெரிந்தாக வேண்டுமே அதனால் கடைசியாக கேட்டேவிட்டாள்.



“அவன் ஏன் ஸ்கூலுக்கு வரல” கேட்டுவிட்டு விக்ரமிடம் இருந்து பார்வையை விலக்கி வேறெங்கோ பார்த்திருந்தாள். அவளால் ஏனோ அவனை பார்க்க முடியவில்லை.



“எவன்” உண்மையில் அவனுக்கு யாரென்று தெரியவில்லை.



“அவன் தான் உன் ப்ரண்ட்”



“எனக்கு ஸ்கூல்ல நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க. நீ எந்த ப்ரண்ட்ட சொல்ற” இம்முறை அவனுக்கு புரிந்துத் தான் இருந்தது, இருந்தும் அவள் வாயிலிருந்து வார்த்தையை வர வைக்க கேட்டான்.



பெயர் சொல்லாமல் விக்ரமிடமிருந்து விசயத்தை வாங்க முடியாதென்று “கௌதம்” என்றாள்.



“அவன் ஸ்கூலுக்கு வரமாட்டான்” கேட்டதும் அவளுக்கு பெரும் அதிர்ச்சி.



அந்த அதிர்ச்சி முகத்திலிருந்து அகலும் முன்னே “ஏன்” என்றாள்.



“சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க. ஒன் வீக். டிசிப்ளனரி ஆக்‌ஷன்” என்ற விக்ரமை இன்னும் அதிர்ந்துப் பார்த்தாள்.



அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இவனை எதற்கு இப்போது பள்ளியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளார்கள். இவ்வளவு பெரிய தண்டனையை பெறும் அளவிற்கு அப்படி என்ன செய்தான் என்று தனக்குள்ளேயே பல எண்ணங்கள். அந்த எண்ணங்கள் அவளை ஆட்கொண்டிருக்க சிலைபோல் அமர்ந்திருந்தாள் அவள்.



உண்மையாகும்..



உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 
Top