அன்பு வணக்கம் தோழமைகளே,
நான் நிலா ஶ்ரீதர். நல்ல கருத்துக்களையும் கதைகளையும் சொல்லும் ஆர்வத்தோடு இருந்த எனக்கு ஒன்றரை வருடத்திற்கு முன் பிறந்தது தான் கதையெழுதும் ஆர்வம். அதை எவ்வழி உங்களிடம் கொண்டு வருவதென்று தெரியாதிருந்த எனக்கு இத்தளத்தை பற்றி தெரியவர ஶ்ரீ மேடமிடம் கேட்க அவரும் எழுத சொன்னார். இதோ என் அம்மாவின் உந்துதலாலும் ஶ்ரீ மேடம் கொடுத்த உத்வேகத்தாலும் இக்கதையை எழுதியுள்ளேன்.
கதையின் பெயர் – காகித பூக்களின் வாசம் தேடி
நாயகன்– சிவேஷ்
நாயகி – ப்ரீத்தி
இரண்டு மாதமாக இவர்களுடன் வாழ்ந்திருக்கிறேன் நீங்களும் அவர்களின் வாழ்வை ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடனும் கடவுள் மற்றும் என் தாய் தந்தையின் ஆசீர்வாதத்துடனும் என் தங்கையின் அன்புடனும் என் முதல் கதையை உங்களுக்கு மகிழ்ச்சியாக படைக்கிறேன். உங்கள் கருத்துகளை இக்கதையின் கருத்து திரியில் பகிர்ந்து எனக்கு ஆதரவளியுங்கள்.
முதல் கதை என்பதால் தினமும் ஒரு எபிசோட் தரலாம் என்று முடிவு செய்துள்ளேன். என்றேனும் தரமுடியாமல் போனால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
இதோ கதையின் சிறு முன்னோட்டம்;
ப்ரீத்தி கல்லூரியின் இறுதி ஆண்டில் இருந்தாள். அவளது அண்ணன் ப்ரதீப் அவள் விரும்பி கேட்ட ஐ-ஃபோனை அவளுக்கு வாங்கி கொடுத்திருக்க அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ஸ்டேட்டஸ் போடுவதும் ரீல்ஸ் பதிவிடுவதும் என அவைகளில் அதிக பயன்பாட்டில் இருந்தாள். அப்படி ஒருநாள் ஒரு ரீலை செய்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றமும் செய்துவிட்டு எத்தனை பேர் அதை பார்க்கிறார்கள் எவ்வளவு லைக்ஸ் வருகிறது என்று அந்த நாள் முழுவதும் ஆவலாக பார்த்துக் கொண்டே இருந்தாள் ப்ரீத்தி.
அப்போது அவளது ரீலுக்கு ‘பிரம்மனின் அழகிய படைப்பே’ என்று ஒருவன் கமெண்ட் செய்தான். அதை இவளும் லைக் செய்ய அவன் இவளது அக்கௌன்டிற்கு ‘ஹய்ய்’ என்று குறுஞ்செய்தி அனுப்பி தொடர்பு கொண்டான். அந்த நோட்டிஃபிகேஷன் ப்ரீத்தியுடைய கைபேசிக்கு ‘சிவேஷ்’ என்ற பெயரில் வந்தது. ஏனோ அந்த பெயர் அவளை உந்த அந்த குறுஞ்செய்தியை அக்ஸ்செப்ட் செய்தாள். அதேசமயம் ஏதோ ஒன்று அவளை தடுக்க அந்த குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பாமல் இருந்தாள்.
இப்படி தொடங்கிய இவர்களது உரையாடல் ஒருநாள் நட்பாகவும் மாறியது. அதுமட்டுமா ப்ரீத்தி எடுக்கும் புகைப்படங்களை சிவாவிற்கும் அவன் எடுக்கும் புகைப்படங்களை அவளுக்கும் பரிமாறி கொள்ளவும் தொடங்கினர். சின்ன ஆரம்பம் நட்பாகி அது ஒருநாள் காதலாகவும் மாற செய்தது.
‘ப்ரீத்து.. என்னமோ தெரியல. இப்போலாம் என்னால எந்த வேலையிலயும் கான்சென்ரேட் பண்ணி வொர்க் பண்ணமுடியல. எப்பவும் உன் ஞாபகமாவே இருக்கு. ஐ திங்க் ஐ ஆம் இன் லவ் வித் யூ ஹனி’ சிவா அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.
முதலில் அதை பார்த்த ப்ரீத்தி அதிர்ந்தாலும் அவள் மனதை ஆராய்ந்த போது அவள் மனதிலும் இவன் தனக்கானவன் என்றே தோன்ற ‘எனக்கும் நிறைய பேர் இந்த மாதிரி மெசேஜ் பண்ணுவாங்க. நான் ரிப்ளை கூட பண்ணமாட்டேன். உங்க நேம் பார்த்ததும் தான் மெசேஜ் ரிக்வஸ்ட்ட அக்ஸ்செப்ட் பண்ணேன். அப்புறம் உங்க போட்டோ பார்த்ததும் என்னமோ ரொம்ப வருஷம் பழகின ஒரு ஃபீல் சிவா. அப்போ புரியல இது காதல்னு. ஆனா இப்போ ஐ லவ் யூ டூ சிவா’ அவளும் அவனது காதலை ஏற்றுக் கொண்டாள்.
இப்படியே நான்கு மாதம் அழகாக சென்றிருக்க ஒருநாள்,
‘உனக்கு கல்யாணத்துக்கு அவசரம்னா நாம பிரேக்அப் பண்ணிக்கலாம். என்னை மறந்துட்டு நீ உங்க வீட்டுல பார்க்கற பையனை கல்யாணம் பண்ணிக்கோ’ என்று அடுத்த குறுஞ்செய்தியை அனுப்பிய சிவா அவளை ப்ளாக்கும் செய்தான். அவனது பதிலையும் அவன் செயலையும் கண்ட ப்ரீத்தி சுக்கு நூறாக உடைந்துப் போனாள்.
மற்றதை கதையில் காணலாம் தோழமைகளே....
நன்றி,
நிலா ஶ்ரீதர்.